சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 25 மார்ச், 2020

சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களீன் 16 கதைகள் கொண்ட
காரிகாவனம்  தொகுப்பு தொகுப்பாசிரியர்: சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர் 1

 காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு ரூ180/ பக்கங்கள் 162


� வலியும் சுலபமாக பிடிபட்டிருக்கிறது. மழை என்ற படிமம் எல்லாவற்றிலும் ஊடாகி நிற்கிறது . அது ஒரு தனிச் சிறப்பு.                    அ. முத்துலிங்கமும், வண்ணதாசனும் இவற்றை ரசித்து முன் மொழிந்திருப்பது நல்ல விசயம். ரூ 150 தமிழி பதிப்பகம், இராஜபாளையம்.95 பக்கங்கள் 
நீயே முளைப்பாய்.. கவிதா ஜவஹரின் கவிதை அனுபவத்தில்,….. சுப்ரபாரதிமணியன்

         

பட்டிமன்றப்பேச்சாளர்கள் , கைதட்டலுக்காகப் பேசுபவர்கள் நுணுக்கமான விசயங்களை எழுத்தில் இழந்து விடுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.  ஆனால் கவிதா ஜவஹரின் கவிதை அனுபவத்தில் நுணுக்கமான வியங்களை கூர்ந்து தேர்ச்சியாக வடிவமைத்திருப்பதில் அந்த வகைப் பொதுப்புத்தி விசயங்கள் தகர்ந்து போயிருக்கின்றன. காதல் அனுபவங்களில் துயரமும் வலியும் சுலபமாக பிடிபட்டிருக்கிறது. மழை என்ற படிமம் எல்லாவற்றிலும் ஊடாகி நிற்கிறது . அது ஒரு தனிச் சிறப்பு.                    அ. முத்துலிங்கமும், வண்ணதாசனும் இவற்றை ரசித்து முன் மொழிந்திருப்பது நல்ல விசயம். ரூ 150 தமிழி பதிப்பகம், இராஜபாளையம்.95 பக்கங்கள் 
திக்குத் தெரியாத உலகில்-- சுப்ரபாரதிமணியன்
* பாலின பேத வன்முறை ( Gender Based Violence  )-6
சுப்ரபாரதிமணியன்
பாலின பேதத்தின் இன்னொரு முகம் :  பெண் குழந்தைத் திருமணம் ( இரண்டாம் பகுதி )

     இது மாதிரி திருமணங்கள் வடநாட்டில் தான் அதிகம் நடக்கின்றன .ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒன்றரைக் கோடி பெண் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை திருமணம் எப்படி நடக்கிறது இந்தியாவில் .இது அதிகம் இருப்பது சமூகவியலாளர்கள் பாதிக்கிறது இந்தியா  15 ஆவது இடத்தில் இந்த வகையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10-15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று 20 லட்சம் பேர் குழந்தை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 
குழந்தை திருமணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பாலியல் ரீதியான வன்முறையாகவும் சமூகம் அங்கீகரிக்கும் விஷயமாகவும் மாறிவிட்டது. மதம் சார்ந்த கலாச்சார நடவடிக்கைகள்.. அதற்கு நாம் மரியாதை தரவேண்டும் ..அடிபணிய வேண்டும் என்று பல சமயங்களில் இந்த வகைத் திருமணங்களின் போது வலியுறுத்தப்படுகின்றன.. இளம் பெண்களும் ஆண்களும் இணைவது  என்பது பல நாடுகளில் சாதாரணமாகிவிட்டது .முஸ்லிம்களில்   வெளிநாடுகளில் வேலை செய்கிற வயதான ஆண்களுக்கு  சுலபமாக நடக்கிறது. இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என்ற ஒரு பிரிவு அதை மதிக்கிறார்கள் .இதுக்கெல்லாம் காரணம் பொம்பளையா சாதிக்கு உள்ள நடக்கிற இந்த விஷயங்களை கேக்குற,, கேளு ..கேக்குறதுக்கு மத்தவங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ,,
ஒருவகையில் குழந்தை திருமணத்தின் மூலம் கொத்தடிமைத்தனம் உருவாக்கப்படுகிறது ,திருமணத்திற்கு பிறகு குடும்ப காரியங்கள் அந்தக் குழந்தையின் மேல் சுமத்தப்படுகின்றன கட்டாயமாக்கப்பட்ட திருமணம் குடும்ப வேலைகளிலும் கட்டாயப் படுத்தப் படுகிறது ,சாதாரணமாகவே மோசமான விமர்சனங்களும் மிரட்டல்களும் விமர்சனங்களும் வாய்மொழி வன்முறையாக மாறிவிட்டன, அப்படி நடைபெறுகின்ற திருமணங்களில் இருந்து பெண் சுலபமாக தப்பித்துவிட முடியாது ,யாரோ ஒருவருடன் தங்களை விடுவித்துக் கொள்வது என்பது சிரமமாக இருக்கிறது ,குடும்பப் பொறுப்பு இல்லாமல் இப்படி போகிறாள் என்ற விமர்சனமும் உள்ளது ,அதற்கு பெரிய அளவில் விமர்சனங்களும் உள்ளன பெரிய அளவில் ஆதரவும் இல்லை.
 பெண் குழந்தைகளுக்கான முறையான கல்வி , அவர்களுடைய உரிமையைச்  சமைத்தல், அவரவர் சூழலில்  அவர்களின் சரியான எதிர்காலத்தை நினைவூட்டி வழிநடத்துவது என்பதுதான் இதிலிருந்து அவர்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களுக்கு சரியான இடம் தராத வரும் கல்வி அறிவு பொது அறிவு தேவையான அளவு இல்லாத சமூகம் தரும் பாலியல் தொல்லையிலிருந்து திருமணமே பாதுகாப்பு என்ற பொது புத்தியும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் உடல் மனம் உணர்வு ரீதியான பிரச்சினைகள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததும் இந்த வகை காரணங்களாக குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடக்க ஏதுவாகின்றன இதனால் குழந்தைகளின் இளம்பருவம் பாதிக்கப்படுகிறது.படிப்பைத் தொடர முடிவதில்லை உடல் ஆரோக்கியம் கெடுகிறது .ஊட்டச்சத்து கிடைப்பதில்லை .சிசு மரணம் கருணைக் கொலைகள் போன்றவையும் சாதாரணமாகி விட்டன .மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறக்க விஞ்ஞான ரீதியாகவே நிறைய வாய்ப்பு உள்ளது .இளமையிலேயே முதுமை புதுமையாய் அடைவது சாதாரணமாகிவிட்டது. இவ்வகை குற்றங்களுக்கு ஏழு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை உள்ளது .அது ஆயுள் தண்டனையாக்கூட  விதிக்கப்படலாம் .பாலியல் தாக்குதலுக்கு 10 வருடங்களுக்கு குறையாத கடுங்காவல் தண்டனையும் கூட .அது ஆயுள் தண்டனையாக விதிக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பதை அறியாமல் இவ்வகை செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
         நான் என்ன செய்ய முடியும் என்று வறுமையிலும் சிரமங்களும் கை விரிக்கும் பெற்றோர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் சமூக மன நிலையை மாற்ற  பல நடவடிக்கைகளை செயல்பாடுகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது குழந்தை திருமணங்களில் இருந்து குழந்தைகளை மீட்பது மட்டுமல்ல அவர்களின் மறுவாழ்வுக்கு என உதவும். பாலின பேத வன்முறை இப்படி சிறுவயதிலேயே பெண்கள் விசயத்தில் நிகழ்ந்து விடுகிறது.
  கொசுறு 1
மார்ச் 8  உலக மகளிர் தினத்தை முன்னிட்டுபாலின சமத்துவத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க உறுதியேற்போம் என்று பலரும் முன்மொழிந்திருக்கிறார்கள்  
மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒருஉலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிசபாரம்பரியமும் உண்டு. .உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகவும் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்தும்  மகத்தான போராட்டங்கள் முத்திரையை பதித்துக் கொண்டுள்ளன.  இந்தியாவிலும் பொது வேலை நிறுத்தங்கள், விவசாய-விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள், எல்.ஐ.சி.,பி.எஸ்.என்.எல். போன்றவற்றில் நடந்த தனியார்மயத்துக்கு எதிரான போராட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம்/என்.பி.ஆர்./என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்கள், பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாக வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், ஜி.எஸ்.டி., உயர் பணமதிப்பு நீக்கம்,சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார்மயம், அரசின் அடிப்படை சேவைகள் தனியார்மயம், சீரழிந்து வரும் பொது விநியோக முறை போன்றவை ஒரு புறம் க்குகின்றன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களாக பெண்கள் உள்ளனர். மேலும் வேலையின்மை, பணிச்சுமை, சமவேலைக்கு சமஊதியமின்மை என பெரும் பகுதிப் பெண்கள் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். மறு புறம், ஒரு நாளைக்கு 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் கொடுமை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான வன்முறை 250 சதவீதம் அதிகரிப்பு என்ற நிலைமையும் பெண்கள் மீது பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.  தலித், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிற்காமல் தொடர்கின்றன. அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மாற்றுத்திறனாளி பெண்களும் பாதுகாப்பற்றச் சூழலில் தான் வாழ்கின்றனர்.
இணையதளக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சுயமாகக் கருத்து கூறும் பெண்கள் வலைத்தளத்தில் படுமோசமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சாதி, மத வெறியர்கள் இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அறிவியல்  விரோதபிற்போக்குக் கருத்துக்கள், பெண்ணடிமைத்தனத்தை கெட்டிப்படுத்துகின்றன. சங் பரிவார அமைப்புகள், தலைவர்கள் இதில் தங்கு தடையின்றிப் பங்காற்றுகிறார்கள். பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக முன்வைக்கிறார்கள். அரசியலில் கிரிமினல்மயமும், சமத்துவத்துக்கு எதிரான வலதுசாரி நிலைபாடும் அதிகரித்து வருவது பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் கேடாய் மாறி நிற்கிறது. நீதி வழங்கும் இடங்களில் இருப்பவர்களில் ஒரு பகுதி இத்தகைய சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையைப் பற்றி நிற்கும் அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதற்கான முயற்சிகள், குறிப்பாகப் பெண்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும். ஆணுக்கு பெண் நிகரென்றுகொட்டு முரசே”  என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான  முயற்சிகளை, போராட்டங்களை    தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் ( தீக்கதிர் )

கொசுறு 2
பாலின பாகுபாட்டு மொழியில் ஆக்ஸ்போர்டு  அக்கறை எடுக்கிற செய்தி புதிது.  ஆக்ஸ்போர்டு அகராதி யில் பெண் ( வுமன்) என்பதற்கு வேலைக்காரி, ஆண் ( மேன் ) என்பதற்கு  துணிவு , உத்வேகம், உறுதி போன்றவற்றைக்கொண்டிருக்கும் மனிதன் என்ற அர்த்தங்கள் பொதிந்த காலம் உண்டு.  பெண்களின் எழுச்சிக்கும், பெண்ணியத்தின்  தீவிரத்தனத்தையும்  மனதில் கொண்டு  பலர் இவ்வகை அர்த்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்க  ஆக்ஸ்போர்டு அவர்களின் குரலை ஆமோதித்திருக்கிறது






திக்குத் தெரியாத உலகில்-- சுப்ரபாரதிமணியன்
பசுமை வியாபாரம் : சுப்ரபாரதிமணியன்
கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது.
கொஞ்ச தூரம் சென்று பசுமைக்காய்கறிக்கடைக்குள் நுழைந்தேன்.
இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம் “
வெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார்.
“ விசகாய்கறியெ  சாப்புடறம்ன்னுதானே இங்க  வர்ரம் . இது என்ன புதுசா “ என்றேன்
“ இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு  விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு.அதுதா அப்பிடிச் சொல்லிட்டன்.நியாயமா கூட எனக்குத் தோணலே
உம்..
“ தெரியாமெச் சொல்லிட்ட மாதிரிதா இருக்கு ..
“ ஏதோ வேகத்திலெ சொல்ல வேற மாதிரி அர்த்தம் வந்திரும். அதுக்கு ஆளாகக் கூடாது “
அவரும் ஆமோதித்தபடி மறுபடியும் கடைக்குள் சென்று காய்கறிகளை தேடத் தொடங்கியது  ஆறுதலாக இருந்தது.


   பசுமை வியாபாரம் இப்போது பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரோக்யம் தேடும் மக்கள் விலை அதிகம் என்றாலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள் .
        இயற்கை வேளாண் விளை பொருள்கள் அதிகமான அளவில் சந்தைக்கு வரும் காலங்களில் க்ரீன் மார்க்கெட்டிங் என்ற வார்த்தை வெகு சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது.  இயற்கை விளை பொருட்களை வாங்குவதாகச் சொல்வது,  உபயோகிப்பது பேசனாக மாறிவிட்டது 
அவை சுகாதார அளவில் பாதுகாப்பானவை  செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை  அதனால் அவற்றின் மீதான வசீகரத்தையும்  தந்திருக்கின்றன
 பசுமைச்  சூழல் , அவற்றை மேம்படுத்தும்  நடவடிக்கைகள் என்பவை  உடனடியாக நினைவுக்கு வரும் . இது சார்ந்த வார்த்தைகள் சமீபமாய்   அதிகப் புழக்கத்தில் இருந்தாலும்  90கள்  முதலே அதிகம்  பிரயோகிக்கப்பட்டன . கார்ப்பரேட் சமூகம்  பொறுப்புணர்வு பற்றிய பிரஸ்தாபங்களின் போது   பசுமை வியாபாரமும்  புழக்கத்தில் வந்துவிட்டது  எதிர்காலத்  தலைமுறையினரை  மனதில் கொண்டு இந்த வார்த்தை உச்சரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது.
பசுமை நுகர்வு   என்பது பல நாடுகளில்  ஓர்  இயக்கமாகவே  நடைபெற்று வருகிறது.  உலகில் வெப்பமாதல் பற்றிய   விவாதங்களின்போது இந்த வார்த்தையும் சூடாகிவிட்டது.  இந்த பூமியைச்  சுத்தமானதாக  வெப்பம் குறைக்கும் முயற்சியில் இவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது 

4 P கள்   இதனூடே விவாதிக்கப்படுகின்றன. Product , Price , Place , Promotion   என்பவை அவை.    பொருள்  எனப்படும்போது  சுற்றுச்சூழலுக்கு  அபாயம்  தராதது என்ற பொருளிலும்  விலை என்கிற போது சாதாரணப் பொருட்களுக்கு தரும் விலையைக் காட்டிலும்  கொஞ்சம் அதிகமானதாக இருக்கிறது . ,  இதை விற்க  தனி இடங்கள்  என்பதாகவும்,     தனி வியாபாரம்  எண்ணங்கள்,   செயல்கள் என்பதாகவும்  உணரப்பட்டிருக்கிறது 
    எல்லாவற்றிலும்  பிராண்ட்  அவசியமாகிவிட்டது  நிலைத்துவிட்ட பிராண்ட்டுகள்  லாபத்தை  அள்ளிக் கொடுக்கின்றன. பிராண்ட் இருக்கிறதா  என்று பார்த்து பொருட்களை   வாங்குவது  பேஷன்  என்று நிலை வந்து  விட்டது . வியாபார தந்திரங்களில்,  விளம்பரங்களில் பிராண்ட்டை நிலைநிறுத்துவதும் முக்கியமாகிவிட்டது  விளம்பர யுகத்தில்   இந்த பிராண்டட்  மோகத்தை  மீறி  இயற்கை விளைபொருள்களை  விற்பனை செய்வதும்  ஒரு சாசகமே .
 பின்னலாடை தரப்படுத்தலில்  பிராண்ட் அமைப்பில்  SA 8000, SA 14000 போன்றவை  பிரபலமானவை ,  இதுபோல்  iso14040   என்பது  சுற்றுச்சூழல் குறித்து வரும்  போது  வாழ்நாள் சூழலில் மதிப்பீடுகள்  திட்டம் பற்றி பேசப்பட்டது.  விளைந்து சந்தைக்கு வர இருக்கும்  பொருளின் சூழல், சக்தி,    சிக்கனமும்  வலியுறுத்தப்பட்டது
 இவையெல்லாம்  பசுமைப் புரட்சியின் பின் விளைவுகளாகவும்  பார்க்கப்பட்டது .

 வேளாண்மை  உற்பத்தியைப் பெருக்க பயிர்செய்கை நுட்பங்கள்  இந்திய சுதந்திரத்திற்கு பின் வெகுவாக நடைமுறைக்கு வந்தன. அது சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களில் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தது. பல மூன்றாம் உலக நாடுகளில் வறுமை, பட்டினி சாவு நாட்களில் புதுமைப் புரட்சி முன்நின்றது .
உயர் மகசூல் வகைகள் உருவாயின . தீவிர விவசாய முறைகளில் பூச்சிக்கொல்லிகள் தந்த உபாயம் பூச்சி மேலாண்மை வரைக்கும் சென்றது . பசுமைப் புரட்சி,  பூச்சிக்கொல்லி,  கலப்பு நைட்ரஜன் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு  பாரங்களை ஏற்றின ஐம்பெரும் பூதங்களும் கேடுகள் என  வந்துவிட்டன.இயகை விவசாய் இடுபொருட்கள், உரங்கள் போன்றவை ரசாயன உரங்களை விட விலையில் குறைவே . ஆனால் உழைப்பு சற்று அதிகமே. சரியான இயற்கை  வேளாண்மை சார்ந்த புரிதல் இருந்தால் வேளாண்மைத் தொழிலில் இருந்து அதிகளவில் மக்கள் வெளியேறுவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்.. பல விவசாயிகள் இரசாயனஉரங்களால் வரும்  புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டே அத்தொழிலைச் செய்வதும் ஒரு முக்கிய கோணம்
 நுகர்வோர் அணுகுமுறைக்குச் சவாலாய் தினப்படி வாழ்க்கை அமைந்துவிட்டது.  நுகர்வோரின் வாங்கும் சக்தி என்பது அவரின் பொ ருளாதார நிலை,  சமூகநிலை,  அவரின் மனநிலை சார்ந்த விவசாயிகளால் கட்டமைக்கப்பட்டது.
 பசுமை வியாபாரம் என்பது இன்று உலக அளவிலான  ஒரு விசயமாகி ஆகிவிட்டது. இதை  வற்புறுத்தும்,  கடைபிடிக்கும் நாடுகளில் இந்தியா,  இங்கிலாந்து,  தாய்லாந்து ஆஸ்திரேலியா,  கனடா,  சீனா போன்றவை முன்னிலையில் உள்ளன .
.அவை முத்திரையிடப்படுதல்  அல்லது எக்கோ லேபிளிங்கில்  கவனம் செலுத்துகின்றன.
 இந்த முத்திரை பசுமை வியாபாரத்திற்கு முக்கியம் தவறாத்தாகிவிட்டது .முத்திரைகள் மூலம் பலரின் கவனத்தைக் கவர வேண்டியிருக்கிறது.  சுற்றுச்சூழல்,  உடல்நிலை, இயற்கை விடயங்களை கவனத்தில் கொண்டு பசுமை வியாபாரம் நுகர்வோருக்கும் முக்கியமானதாகி விட்டது.
மாடி வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீட்டில் உள்ள காலி இடங்களில் காய்கறிகளை விளைவித்தல் என்பது எளிமையான இதன் செயல் வடிவங்கள்தான்.. நேரம் வசதி உள்ளவர்களுக்கு இவையெல்லாம் கை கூடும்.
கொங்குப்பகுதியில்தான் இப்போது அதிக அளவிலான புற்று நோய் மருத்துவமனைகள் இருக்கின்றன என்பது பழைய செய்தியாகி விட்டது.
ஏழைகளுக்கு இருக்கவே இருக்கிறது ரசாயன விளைபொருட்களும் அதிலுள்ள கொஞ்சம் விஷமும் என்பது விரக்தியில் வரும் வார்த்தைகளாகி விட்டன.
 எங்கள் வீட்டு மாடிவீட்டுத்தோட்டக்காய்கறிகள் இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரு மாற்றாக பலரின் பார்வையில் படுவது குறித்த மகிழ்ச்சி எனக்குண்டு.
கறி திங்கறது சைனாக்காரன்
கைகழுவறது நாம “
 என்று வசவு பாடி நழுவாமல் மாடி வீட்டுத்தோட்டம் பற்றி விசாலமாய் நினைத்துப் பார்க்கலாம்.

8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003




செவ்வாய், 10 மார்ச், 2020

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ திருப்பூர்
* ஆனந்த விகடனில் வெளிவந்த  என் ஒரு கேலிச்சித்திரத்தை சுப்ரபாரதிமணீயனிடம் காட்டினேன். அவர் பிற கார்டூன்களையும் கொண்டுவரச்சொல்லி மத்திய அரிமா சங்கத்தில் ஒரு வாரம் ஒரு கண்காட்சி நட்த்திய போது பலர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அங்கு சுப்ரபாரதிமணியன் குறும்படங்கள், உலக்த்திரைப்படங்கள் திரையிட்டு வந்ததைத் தொடர்ந்தேன்.  என் கலைப்பயணம் திருப்பூர் சபாபதி புரம் மத்திய  அரிமா சங்கத்தில் தொடங்கியது
முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார் உரையில்

* நொய்யலில் உப்பு அளவு 17000 ஆக இருந்தது ,முன்பு . இப்போது 900 க்கு குறைந்து விட்டது. திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களின் இவ்வகை சேவை சிறப்பானது. சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உரையில்
*
திருப்பூர் நொய்யல் சீராகுமா.. கவலை குறைந்தது. திருப்பூர் ஏற்றுமதி யாளர்களின் சமீபத்தில் நடவடிக்கைகளால் என்றார் ராம்குமார்

* தொழில் வளர்ச்சியில் அறியமையால்தான் சுற்றுச்சூழல் கேடும் நொய்யல் மாசுபாடும் ஏற்பட்டது. அதை சீர்செய்து வருகிறோம்.. கிளாசிக் போலோ சிவராமன் உரை.
* ..சுற்றுச்சூழலா. வளர்ச்சியா. . என் உரை...வனத்துக்குள் திருப்பூர் அமைப்பிற்கு விருதை வழங்கினேன்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி தொழில் நகரமான திருப்பூரில் 27/12 /19 lநடைபெற்றது. ஐ.கே.எப்.ஏ அரங்கில் .
இதில் பாப்பீஸ் நிறுவனத் தலைவர் சக்திவேல், திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், கிளாஸிக் போலோ இயக்குநர் சிவராம், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திருப்பூரின் முன்னோடிகள் உரையாற்றினர் .
மேலும், திருப்பூருக்கு பல்வேறு வகைகளில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், ’’வனத்திற்குள் திருப்பூர்’’ என்கிற சூழலியல் அமைப்பு, லக்ஸ் பின்னலாடை நிறுவன இயக்குநர் ராகுல் டோடி, முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார், தடகள வீரர் தருண் அய்யாசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன..
இந்த நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது..
Reply
Forward


சுற்றுச் சூழல் சார்ந்த கட்டுரைகள்

2020 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சி                                      சுப்ரபாரதிமணியன் புதிய வெளியீடுகள்

* சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பாகம் 2 -
160 சிறுகதைகள் கொண்ட பெரிய தொகுப்பொன்றை காவ்யா பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது இது இரண்டாம் பாகமான மொத்த சிறுகதைகள் கொண்டத் தொகுப்பு.  .தொடர்ந்து சிறுகதைகளிலும் நவீனமான விசயங்களைக் கொண்டு சுப்ரபாரதிமணீயன் தீவிரமாக இயங்கி வருவதை இந்த இரண்டாம் பெரிய தொகுப்பு காட்டுகிறது..(  ரூ 650 , காவ்யா  )

* மாலு :  நாவல்
மரண தண்டனக்கு எதிரானக் குரலை - இடம்பெயர்ந்து சிரமங்களையும், மரண தண்டனையை எதிர் கொள்ளும் மலேசியாவிற்குச் சென்ற தமிழ் இளைஞர்களை - மையமாகக் கொண்டுள்ளது இந்த நாவல்,.  * இந்தியிலும் ஆங்கிலத்திலும் கூட  வெளியாகியிருக்கிறது .சுப்ரபாரதிமணியனின் 16 நாவல்களில் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உள்ளது. திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியனின் இன்னுமொரு குறிப்பிடத்தக்க நாவல் “ ரேகை “(  ரூ  140 பொன்னுலகம் பதிப்பகம் )
*             பூமிக்கு மனிதன் தலைவனா? – சுற்றுச்சூழல் கட்டுரைகள்

         . .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டி வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதையும்  மறுக்கும்  சூழலியல்  கோட்பாட்டை  இயற்கையாளர்கள்  முன்வைத்து  எழுதியும்  போராட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகைப்போராட்டங்களை தொடர்ந்து பிரதிபலிப்பவை சுப்ரபாரதிமணியனின் சூழலியல் வகை எழுத்து. .aaஅவரின் புனைவிலக்கியப்பட்டியலில் இருக்கும் 17 நாவல்கள் உட்பட 70 நூல்களில் சூழலியல் சார்ந்த  போராட்டத்தை  “  சாயத்திரை  “ நாவல் முதற்கொண்டு புத்து மண் “ உட்பட நாவல்களும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.  அதன் இன்னொரு அடையாளம் இந்த நூல் .
உயிர்மை பதிப்பகம் வெளியீடுரூ 150
* புத்துமண் நாவல் : 

பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையே
நவீன சூழலியம் ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது.  . நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவே அதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள் திணறுகின்றன.புத்துமண் என்ற இந்தநாவலில் சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும் மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும் கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சி வேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்கு அந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, பற்றி இந்நாவல் பேசுகிறது ..வெளியீடு;  என்சிபிஎச் ரூ 125










பின் வருவது  உங்கள் வாசிப்பிற்காக : 
யக்குனர்  ஞான ராஜசேகரன் ( பாரதி, பெரியார் திரைப்படங்கள் )

சுப்ரபாரதிமணியனின்  மாலு

நான் இரு முறை மலேசியா சென்றிருக்கிறேன். அந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்திருக்கிறேன்.மலேசியாவைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இந்த நாவல் அமைந்துள்ளது என்பது இந்நாவலின் வெற்றி..மலேசிய தமிழர்கள் பற்றிய கூரிய பார்வையாக இது பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படத்தை ஒரு பண்பாடாக ஏற்றுக் கொண்ட சமூகம் அவர்களில் ஒரு பகுதியினர். அதுவும் பாமரத்தனமான தமிழ் திரைப்படத்தை.
    அப்பாசாமி என்ற பெரியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அலைவதுதன் மகன் திருச்செல்வத்திற்கு மலேசியாவில் வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை விலக்கக் கோரிநாவல் முழுக்க ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இன்னொரு பகுதி சுற்றுலா விசாவில் அங்கு சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் தங்கி அந்நாட்டு காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பித்து ரப்பர் தோட்டமொன்றில் அடைக்கலமாகிற விக்னேஷ் என்ற இளைஞனின் மனப்போராட்டங்களும் ஆகும். திருச்செல்வமும், விக்னேஷும் நண்பர்கள் .மலேசியாவிற்கு செல்ல ஆசைப்படும் குணசேகரன் என்ற இளைஞன் மலேசியா பற்றிய நூல்களைப் படிப்பதில் அவனுக்குப் பிடித்ததாய் குறிப்பிடப்படும் பகுதிகள் இன்னொரு பகுதியாகும்.மலேசிய தமிழர்களின் வாழ்க்கை, மலேசிய நாட்டு வரலாறு,தமிழர்களின் மனக்குமறல்கள் என்பதன் இலக்கியச் சாட்சியாக அப்பகுதிகள் அமைந்துள்ளன..ரப்பர் தோட்ட வீட்டிற்குள்  அடைபட்ட விக்னேஷின் இயங்காதத் தன்மை அவனை மன நோயாளியாக்கும் தனமையில் அலைக்கழிக்கிறது.கனவும், எண்ணங்களும் சிதிலமாக்குகிறது.சரியான பதிவேடுகள் இல்லாமல் சிறையில் அடைபட்ட தமிழர்களை அந்நாட்டுச் சிறையில் பார்த்திருக்கிறேன். அடையாளமற்ற மனிதர்கள் அவர்கள். அந்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் உழைத்திருந்தாலும் தமிழர்கள் அடையாளம் மறுக்கப்படுகிறவர்களாக இருப்பதை இந்நாவல் காட்டுகிறது.
இதில் அப்பாசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு தரவே முடிவதில்லை. மனு தர முடிவது சிரமமானதல்ல. பெற்றபின் காரியங்கள் நடக்குமா என்பது சந்தேகமான வேறு விசயம்.இலக்கியப்பிரதிகள் மூலம் குணசேகரன் கண்டடைவது எதிர்மறையான விசயங்களாய் இங்கு பதிவாகியிருக்கும் போது அவன் அங்கு செல்ல ஆசைப்படுவதாய் முடிவது குறையாகச் சொல்லலாம். மலேசிய தமிழர்களின் வாழ்க்கை இலக்கியப் பிரதிகளில் தமிழகத்தில் காணக் கிடைப்பது அபூர்வமாகி விட்ட சூழலில் இந்நாவல்  கூரிய  சமகாலப் பதிவாகும்.

 * பொன்னுலகம் பதிப்பகம் முதல் பதிப்பு 2019
1. ” சுப்ரபாரதிமணியன் படைப்புக்கலை
என்ற ஒருநாள் கருத்தரங்க கட்டுரை தொகுப்பு திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றிய கருத்தரங்க  விழாவில் வெளியிடப்பட்டது. .அதில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
 இந்நூலில் சிங்கப்பூர் சீனா மலேசியா கனடா இலங்கை போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் ஆய்வாளர்கள் என ஏழு பேரின் கட்டுரைகள் சிறப்பம்சமாக இடம்பெற்றுள்ளன. தமிழகத்திற்கு வெளியே டெல்லி ஆந்திரா புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து நான்கு பேராசிரியர்களின்  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு பரந்த நிலப்பரப்பில் இருந்து கட்டுரையாளர்கள் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளை வெவ்வேறு கோணத்தில் திறம்பட அணுகியிருக்கிறார்கள் .நெசவாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், புலம்பெயர் தமிழர்கள் நகரமயமாதல் உலகமயமாதல் சுற்றுச்சூழல் கேடு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டம், முதிர்கன்னி போன்ற பெண்ணியச் சிந்தனைகள், மணல் கொள்ளை கனிமக் கொள்ளை போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் ஆய்வு தளங்களாக அமைந்துள்ளன
சுப்ரபாரதிமணியன் என்ற ஒரு படைப்பாளியின் பன்முகப் பரிமாணங்களை ஒரே இடத்தில் காண்பதற்கான வாய்ப்பை தந்த ஒரு சிறந்த நூலாக இது விளங்குகிறது .பேராசிரியர் ராமபாண்டி அவர்கள் தொகுத்திருக்கிறார்

2.
புதினங்கள் கோட்பாட்டியல் அணுகுமுறை எனும் பேராசிரியர்  ராம பாண்டி அவர்களிண் நூலில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் சடங்கியல் கோட்பாடு ,ஆவியுலக கோட்பாடு கலவர கோட்பாடு போன்ற கோட்பாடுகளை கொண்டு விரிவாக ஆராய்ந்துள்ளார்.
 இது ஒரு புதிய ஆய்வு முறையை தமிழ் இலக்கிய தளத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது, கோட்பாட்டு அணுகுமுறையில் ஆய்வு மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் பயன்தரக்கூடிய ஒரு சிறந்த நூலாகும், பேராசிரியர் அவர்களின் இலக்கிய முயற்சிகளில் இது முக்கியமான நூலாகும்
சுப்ரபாரதிமணியன்
                                

     
காப்பியக்களன்கள் கருத்தரங்கு : கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் 3/2020

சிலப்பதிகாரம் முதல் சேக்கிழார்  வரை அருமையான சில உரைகள். உயர்நிலைப்பள்ளி/கல்லூரிப் பாட்த்திட்டங்களில் காப்பியங்களின் சிறுபகுதிகளைப் படித்து மறந்து விட்டாச்சு.  காப்பியக்களன்கள் கருத்தரங்கு அக்காப்பியங்களை நினைவு கொள்ள நல்ல வாய்ப்பு .

தெ. ஞான சுந்தரம் : வால்மீகியை  கடந்த கம்பன்... அருமையான உரை . தமிழ்ப்பண்பாடு சார்ந்து வால்மீயின் பிரதியிலிருந்து மாற்றம் செய்த கம்பனின் போக்குகள் பற்றி விவரித்தார். அருமை.


ராணுவப்பயிற்சியும் கட்டாய ராணுவ சேவையும் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது ஓன்று சேக்கிழார் காலத்தில் இருந்ததை பெரிய புராணம் பேசுகிறது என்றார்  பழ .முத்தப்பன்
அரசியலில் மதத் தலைவர்களுக்கு இருந்த அதிகார முக்கியத்துவம் பற்றிப் பெரிய புராணம் பேசுகிறது என்றார்  பழ .முத்தப்பன்… அப்படியா  சேக்கிழார் அய்யன்மீர் .

ராணுவப்பயிற்சியும் கட்டாய ராணுவ சேவையும் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது ஓன்று சேக்கிழார் காலத்தில் இருந்ததை பெரிய புராணம் பேசுகிறது என்றார்  பழ .முத்தப்பன்
சீவகனின் யாத்திரை : சீவகசிந்தாமணி பற்றி பாண்டி  சேதுபதியின் 15 நிமிடத்துக்குள்ளான அருமையான உரை.  சீவகசிந்தாமணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இருக்கும் பல விசயங்களைச் சொன்னார். தீயிலிருந்து யானைகளைக் காப்பாற்றல்.  பயணக்குறியீடாய் பல சுற்றுச்சூழல் பற்றிய குறிப்புகள் அருமை
ஆனந்த குமார். மொழிபெயர்ப்பு செயல்பாடு பண்பாட்டுப் பனுவல். மறு உற்பத்தியாக்கம், அரசியல் அதிகாரம் உட்பட பல உள்ளுறை செயல்பாடுகள் பற்றிய நல்ல உரை.
சிற்பி: கா. செல்லப்பனார் அவர்களின் சேக்ஸ்பியர்  இளங்கோ ஒப்பீட்டு ஆய்வு நூல் அவரின் முனைவர் பட்டக் கையேடு தமிழில் ஒரு சாதனை..ஒப்பிட்டு இலக்கியத்தில் பெரிய மைல் கல் அது
கா.செல்லப்பன் : சிலப்பதிகாரம் பெரும் காப்பியம் அல்ல  என்போர் சிலர் .அறம் , பொருள் இன்பம் பற்றி பேசி, வீடு பற்றிப் பேசாததால்  அப்படியொரு நிராகரிப்பு உண்டு
கண்ணகி: தமிழ் இலக்கிய மரபில் ஒரு சாதனை. தமிழ் தேசியக்காப்பியம் சிலப்பதிகாரம்.. .கண்ணகி..Domestic heroin , political  warrior ,  not regional god.. national symbol
இன்றைய பெண்ணியவாதிகள் கொண்டாடும் பெண் தன் உடலால் பேசுகிறாள் என்பதற்கு கண்னகி ஒரு உதாரணம், கண்ணகி மார்பை அறுத்து உடலால் பேசினாள். அடிமைப்படுத்தப்பட்ட  பெண் உடல் பேசியது. கண்ணகியின் உடல் மொழிக்கு முக்கியத்துவம் தந்தவர் இளங்கோ அடிகள்.
டாக்டர் நல்லா பழனிச்சாமி: KMCH director கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்
கம்பனின் கல்லறையைப் புதுப்பித்து சீராக்கும் வேலையில் ஈடுபடப்போகிறேன்., சேக்ஸ்பியரின் கல்லறையப் போலாக்க வேண்டும் என்பது ஆசை. 

முனைவர் குப்புசாமி( தமிழ்த்துறைத் தலைவர் ) கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்: காதலிக்க சீவகசிந்தாமணீ படியுங்கள் . அதனை உணர அதைப் படிக்கலாம். காதலிக்காமல் இருக்கவும் அதைப்படிக்கலாம்




சாகித்ய அகாதமி கருத்தரங்கில் படித்தது>>

இடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும் : சுப்ரபாரதிமணீயன்

                       நானும் இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது          எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை  என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் )
செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள்தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரேமிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி  திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட  வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால்  பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி  திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர்         ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு  சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக  ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய  முதல் நாவல்மற்றும் சிலர் “.

என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம்     ” சுடுமணல்நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள்  படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர்  பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு  நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற  கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.
என்நீர்த்துளிநாவலில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு சம்பந்தமாக நீதிமன்றம் தந்த ஒரு தீர்ப்பை ஒட்டி சுமார் 700 சாயப்பட்டறைகள் மூடியபோது அந்த சாயப்பட்டறைகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியர் அல்லது சேர்ந்து வாழும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த பொருளாதார சிரமத்தினால் பெரும் அலைச்சலுக்குள்ளாக்குவது  தங்களை வேறுபடுத்திக் கொள்வதும் என்றானது .அதை அந்த நாவலில் பதிவு செய்திருந்தேன்.
உலகமயமாக்களில் வியாபாரம் என்பது பொதுவாக விட்டது .உலகமே ஒரு சந்தை என்றாகிவிட்டது இந்த சூழலில் வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டிற்கு வரும் போதும் அல்லது அவரவர் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும் சாதாரணமாகிவிட்டது அப்படித்தான் வியாபாரம் பொருட்டு எண்பதுகளில் வடமாநிலத்தில் இருந்து முதலீடு செய்வதற்காக வட இந்தியர்கள்மார்வாடிகள் திருப்பூருக்கு வந்தார்கள் தங்களின் பொருளாதார முதலீடு காரணமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். பனியன் தொழிலில் வேரூன்றிய மரபான பல சாதி சார்ந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு பொருளாதாரரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள். இந்த அம்சங்களை நான்சாயத்திரைநாவலில் சொல்லியிருக்கிறேன். உலகமயமாக்கலில் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சூழல் சகஜமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நைஜீரியர்கள் திருப்பூருக்கு வந்து செல்கிறார்கள். திருப்பூருக்கு வந்து பனியன். பிற பின்னலாடைகளை எடுத்துச் செல்வது, வியாபாரம் செய்வது என்ற ரீதியில் சுற்றுலா விசாவில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் விடுதிகளில் தங்குவார்கள் சில நாட்கள் தங்கியிருந்து தங்கள் வியாபாரத்தை பார்த்து விட்டு செல்வார்கள் ,இவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல கூட ஆரம்பிக்கும்போது இவர்கள் விடுதிகளில் மட்டுமல்ல வாடகை வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார்கள் ,அதுவும் சாதாரண விளிம்புநிலை மக்கள் உள்ள பகுதிகளில் வீடு எடுத்து தங்கும் போது அந்த பகுதி இளம் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதும் அதிக வாடகை கொடுத்து உள்ளூர்காரர்கள் கவர்வதும் என்பதும் சாதாரணமாகிவிட்டது .இவர்களுடைய நடமாட்டமும் கலாச்சார பின்னணிகளும் உணவு பழக்கவழக்கங்களும் உள்ளூர் மக்களுக்கு பல வகைகளில் அதிர்ச்சியை தந்தன. இந்த அனுபவங்கள் பாரம்பரிய மதம் சாதி சார்ந்த உள்ளூர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை நகரின் மத்திய பகுதியில் இருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களுக்கு வீடு தரக்கூடாது என்ற கட்டாயங்கள் பலரை நகரைவிட்டு திருப்பூருக்கு அருகில் இருந்த பல கிராமங்களுக்கு இடம்பெயரச் செய்தது. அவர்களில் பலர் தமிழ் பெண்களையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .காதலித்து தமிழ் பெண்களை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய குணம்  இயல்பில் இருந்த நல்ல விஷயங்களை தமிழ் பெண்கள் புரிந்து கொண்டு அவர்களை காதலித்திருக்கிறார்கள். காத்திருந்திருக்கிறார்கள் இந்த அம்சங்கள் உள்ளூர் கலாச்சாரத்தில் மிகுந்த பாதிப்புகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த பாதிப்புகளை நான்  ” நைராஎன்ற நாவலில் பதிவு செய்திருக்கிறேன் .அதேபோல் தேனீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து சுமங்கலி திட்டம் என்ற வகையில் வேலை செய்யும் இளம் பெண்களின் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறேன் ,ஆரம்பத்தில் கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்து இதுபோல் இளம் பெண்கள் வேலைக்கு வந்தார்கள் பின்னர் இப்போது பீகார் ஒரிசா வங்காளம் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து கூட பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்துவந்திருக்கிறார்கள் திருப்பூருக்கு வந்திருக்கிற இடம் பெயர்ந்த மக்களின் தொகை சில லட்சங்களைத் தாண்டும்.. இந்தக் இடம்பெயர்வு பொருளாதாரரீதியாக அவர்கள் மனதில்  வரவேற்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது அந்த மாநிலங்களில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு என்பதை மீறி சாதிய ரீதியாக அவர்கள் அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு இருப்பதை இன்னொரு முகமாய் காட்டுகிறது எனலாம் . என் முதல் நாவலில் இடம்பெயர்வு  என்பது ஒரு வகையில் மாநில அரசுகளின் ஒரு தாக்கமாக இருந்தது .பின்னால் என் நாவலில் இடம் பெற்ற இடம்பெயர்ந்த மக்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தங்கள் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை இழந்து  விவசாயம் போன்ற சிறு தொழில்களில் நிலைத்திருக்க முடியாமல் திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அடைக்கலமாகிறார்கள் . இந்தத் தன்மையை காட்டியிருக்கின்றனஅந்நாவல்கள்.
மாலு நாவலில் சுற்றுலா விசாவில் மலேசியா செல்லும் தமிழர்கள் அங்கேயே தங்கி சட்டவிரோதமாக விடுதிகளில், தோட்டக்காடுகளில் வேலை செய்வதும் அங்கு அவர்களின் இடம் பெயர்பு அவர்களை அந்நியர்களாக்குவதையும் அனுபவமாக்கியிருக்கிறேன்

 பேராசிரியர் ஆனந்தகுமார், தலைவர் , தமிழ்த்துறை ( காந்தி கிராம பல்கலைக் கழகம் திண்டுக்கல் மதுரை  ) 
அவர்களின் ஒரு குறிப்பை கீழே தந்துள்ளேன்
  நைரா “ : திருப்பூரில்  நைஜீரிரியர்களின் வருகையும் தாக்கமும் பற்றிப் பேசுகிறது . தமிழ் சமூக மாற்றம் எப்படி இருக்கிறது.உலகில் பல்வேறு மாறுதல்கள் எப்படி உள்ளன .தேசியம் கூட அர்த்தமில்லாமல் போவது எப்படி. சர்வதேசத்தில் குழும முதலாளித்துவம் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அவர் கூறுகிறார் .இன்றைக்கு திருப்பூர் யார் கையில் இருக்கிறது.பூர்வீகமாக பருத்திநெசவுத் தொழிலின் நகரமாக இருந்திருக்கிறது ,பிறகு விசைத்தறிக்கு  மாறி பனியன்  நகரமாகபரிணமித்து விட்டது. அந்த பனியப்  நகரத்தில் தொண்ணூறுகளில் பல்வேறு வட இந்தியர்கள் வருகை வியாபாரத்திற்கு என்றுவந்தனர்.அது . முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது .  2000ம் ஆண்டில் தென் மாவட்ட மக்களும் பக்கத்தில் உள்ள மாநிலமக்களும் குறிப்பாய் கேரள மக்களும் அங்கு இடம் பெயர்ந்தனர் தொழிலுக்காக, அது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. பத்துஆண்டுகளுக்கு முன்னால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குடிபெயர ஆரம்பித்து இன்றைக்கு அவர்களின்ஆக்கிரமிப்பில் உள்ளது. சமீப ஆண்டுகளில் வியாபாரத்திற்கு என்று வந்து சேர்ந்த நைஜீரியர்கள் வியாபார ரீதியிலும்கலாச்சார ரீதியிலும் உள்ளூர் மக்களை பாதித்திருப்பதை அவரின் நைரா நாவல் பேசுகிறது ஒருவகையில் சிங்களக்குடியேற்றங்களுக்கு ஒப்பாக இந்த நைஜீரியன் குடியேற்றம் என மிகைப்படுத்தப்படலாம், ஈழத் தமிழருடைய பிரச்சனையைஅணுகும் போக்கில் இப்படி நைஜீரியரின்  வருகையை சற்று மிகைப்படுத்தி ஒப்பிடலாம் .நைஜீரியர்கள் பனைமரம் போல்உயரமாக இருக்கிறார்கள் .மது மாட்டுக்கறி போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் பெண்களுடன்பெண்களுடனான பாலியல் தொடர்பு அதிலும் குறிப்பாக இளம் தமிழ் பெண்களை பயன்படுத்துவது குறித்த சில குறிப்புகள்போன்றவை உள்ளூர் மக்களை அதிர்ச்சி அடையச் செய்யும். உலக முதலாளித்துவம் வட்டார முதலாளித்துவத்துடன் இணைந்துஅல்லது வட்டார முதலாளித்துவத்திற்குள் மாற்றிக் கொண்டு விட்டது அதன் குறியீடாய் பல்வேறு மக்கள் நம் தொழில்நகரங்களில் வந்து வேலை செய்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். தென் மாவட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் இருந்தும்திருப்பூருக்கு இடம்பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஒரு வகை. அங்கு வந்து சமீபகாலமாய் ஒடியா பீகார்வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளிலிருந்து வந்து குடியேறி இருக்கும் மக்கள் பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை .அந்தகணக்கெடுப்பு முறைப்படுத்துகிறது போது அதிர்ச்சி தரலாம். இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கக் கூடியமக்களில் 10 சதவீதம் மட்டும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்இருக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என்று அங்கே ஆக்கிரமித்திருக்கிறார்கள் .அதேபோலதிருப்பூரில் பல்வேறு வகையான பிரதேசங்களைச் சார்ந்த மக்கள்  இருக்கவே நில மாசு நீர் மாசு கலாச்சாரம் குறித்தமுரண்பாடுகள் போன்றவை அதிர்ச்சி தரும் வகையில் நைராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன .
அதேபோல் சமீபத்தில் வந்திருக்கும் அவர் நாவல்ரேகை “, ஒரு சாதாரண கிராமம், ஆனால் அந்த கிராமத்தில் கூடகார்ப்பரேட் தாக்கம் இருக்கிறது ,அந்த கிராமத்தில் மரபுரீதியான ஜோதிடம் பார்க்க கூறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,அந்த மரபு நம்பிக்கை உண்மையாபொய்யா என்ற கேள்விகளோடு இந்த நாவல் பயணிக்கிறது வெளியூரிலிருந்து வந்துகாத்திருந்து ,தங்கி ஜோதிடம் பார்த்து செல்பவர்கள் இருக்கிறார்கள் .ஜோதிடத்தை வியாபாரமாகி கொண்டிருக்கிறார்கள்.உள்ளூர் தொழிலாளர்கள் பக்கத்தில் இருக்கும் திருப்பூருக்கு தொழில் நிமித்தமாய் இடம் பெயர்கிறார்கள். அங்கிருக்கிறதோட்டங்களிலும் கரும்பு காடுகளிலும் வேலை செய்வதற்கு பீகார்காரர்களும் ஒடிய காரர்களும் வந்து விட்டார்கள். அப்படி ஒருகிராமம் தான் ரேகை நாவலில் இடம்பெறுகிறது . சமூக மாற்றத்தில் நம்பிக்கை கொண்ட சுப்பையா போன்ற முக்கியமானகதாபாத்திரங்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள். வீதி நாடகங்கள் திரைப்பட முயற்சிகள் மூலமாக சமூக மாற்றத்தை பதிவுசெய்ய முடியும், அதற்கான காரணங்களை விளக்க முடியும் என்பதை சுப்பையா போன்ற கதாபாத்திரங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் ,இளைய தலைமுறை இன்றைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள்ஆகியவற்றை இந்த நாவல்  காட்டுகிறது, சோதிடம், மரபு நம்பிக்கை மீதான பல கேள்விகளையும் இந்த நாவல்முன்னிறுத்துகிறது


இடம்பெயர்ந்த மக்களின் அனுபவங்களோடு என் படைப்புக்கு அனுபவங்களும் என் படைப்பிலக்கிய அனுபவங்களும் பல ஆண்டுகளாய் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.இனறைய உலகில் இடம் பெயர்வு இலக்கியம் ஒரு முக்கியப் பங்காற்றியிருப்பதை தமிழ்ச்சுழலிலும் அடையாளம் காணலாம் .