சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
பெறுநர்
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர். சென்னை
0
13/6/26
வணக்கம் கோவையில் பதினொன்றாம் தேதி 11/6/26 தங்களை சந்தித்தது மகிழ்ச்சி தந்தது
எழுத்தாளருடைய குறையை கேட்பதற்காக தாங்கள் நேரம் ஒதுக்கியது மகிழ்ச்சிக்கு தந்தது
நான் அது சார்ந்து முகநூலில் எழுதிய குறிப்பை கீழே தந்துள்ளேன்.
நான் குறிப்பிட மறந்த ஒரு விஷயம் : எழுத்தாளர்கள் தமிழறிஞர்களுக்கு தமிழக அரசு முன்பு கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் நகர மேம்பாட்டு வாரியத்துள் உள்ள வீடுகளை எழுத்தாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை மீண்டும் இந்த அரசை கைக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் நன்றி சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
முகநூலில் எழுதியது :
தமிழக கல்வி அமைச்சரும் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருமான திரு ராஜ்மோகன் அவர்களின் அழைப்பு..
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து என்னை தமிழக கல்வி அமைச்சர் சந்திக்க விரும்புவதாக தகவல் தந்தார்கள் அவர்களே வண்டியனுப்பி கோவைக்கு அழைத்துச் சென்றார்கள் .
கோவையில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்தேன் .
போக்குவரத்து துறைக்கு நான் எழுதிய புகார் சம்பந்தமாக சரியான அறிவுறுத்தல்களும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றன.. எழுத்தாளர்கள் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் இந்த அரசு காப்பாற்றும் என்றார்
தமிழக வளர்ச்சித் துறையின் சென்ற ஆட்சிகாலத்தில் நடந்த சாதனைகள். திட்டங்கள் ஆகியவை தொடர வேண்டும் .புத்தக கண்காட்சிகள் மாவட்டந்தோறும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.. எழுத்தாளர்கள் நலத்திட்டங்கள் முறையாக தொடர்பு பட வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன் .
புத்தக கண்காட்சிகளை வேறு வடிவத்தில் சிறப்பாக நடத்த யோசனைகளை முன் வைத்திருக்கிறேன். நூலக ஆணை உட்பட அனைத்தும் சரியாக கவனிக்கப்படும் எழுத்தாளர்கள் கௌரவம் காக்கும் இந்த அரசு..
திருவள்ளுவர் கபிலர் மட்டும்தான் நமக்கான எழுத்தாளர்கள் இல்லை .இந்த காலத்து நவீன எழுத்தாளர்களும் நம் எழுத்தாளர்கள் தான் அவர்களின் போற்றுவோம் என்று குறிப்பிட்டார்
பேருந்துகளில்
தமிழறிஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தெரிவித்தேன். நகரப்பேருந்துகளில் தமிழறிஞர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழறிஞர்கள் பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு போக்குவரத்துத் துறைக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டு விட்டதால், எந்தவொரு பயணச்சீட்டு வழங்க வேண்டியதில்லை என்பதைப் போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தச் சொல்லுங்கள். இதனை, அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினால் கூட, அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கும் தெரிந்துவிடும்.செய்யுங்கள் என்றேன்.
துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.என்றார்
அவரே பொன்னாடை தேடி எடுத்துப் போட்டு வாழ்த்துக்கள் சொன்னார்..
முதன்முதலாக ஒரு அமைச்சரை நான் சந்திப்பது இதுதான் முதல் தடவை