சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 20 பிப்ரவரி, 2019

சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் நூல்கள்
நாவல்கள் : சாயத்திரை, புத்துமண்,
கட்டுரைகள்: தண்ணீர்யுத்தம், மேகவெடிப்பு, சூழல் அறம், நீர்ப்பாலை, சிவப்புப் பட்டியல், அழியும் மரங்கள், பசுமை அரசியல், வேட்டையாடிகள் ( உயிர்மை, எதிர் , வைகறை, என்சிபிஎச் வெளியிடுகள்  பெருமளவில் மறுபதிப்பாய் என்சிபிஎச்சில் கிடைக்கும் )

மொழிபெயர்ப்பு
1.         சாயத்திரை நாவல்               ஆங்கில மொழியில்             2000
                                                            (The coloured curtain)               
2.         சாயத்திரை நாவல்               இந்திமொழியில்                    2005
                                                            (ரங் ரங்கிலி சாதர்மெய்லி)
3.         சாயத்திரை நாவல்               மலையாளத்தில்
                                                            (சாயம் புரண்ட திர)
4.         சாயத்திரை நாவல்               கன்னடத்தில்
                                                            (பண்ணத் திர)
5.      சாயத்திரை நாவல்         வங்காளத்தில்  2016
5.         குறுநாவலும்                         ஆங்கிலத்தில்                                    2006
            சிறுகதைகளும்                      (The Unwritten Letters)
6.         பிணங்களின் முகங்கள்       ஆங்கிலத்தில்                                    2008
            நாவல்                                                (The Faces of Dead)
7.         சில கவிதைகள்                    ஆங்கிலத்தில்
                                                            (The Lost symphany.

சுப்ரபாரதிமணியனின் பிற சுற்றுச்சூழல் நூல்கள்
நாவல்கள் : சாயத்திரை, புத்துமண்,
கட்டுரைகள்: தண்ணீர்யுத்தம், மேகவெடிப்பு, சூழல் அறம், நீர்ப்பாலை, சிவப்புப் பட்டியல், அழியும் மரங்கள், பசுமை அரசியல், வேட்டையாடிகள் ( உயிர்மை, எதிர் , வைகறை, என்சிபிஎச்சில் பெருமளவில் மறுபதிப்பாய் கிடைக்கும் )



கா. ஜோதியின் கவிதைகள்:
நான் முன்னுரையில் கா. ஜோதியின் கவிதைகள் குறித்து எழுதவில்லை. அதில் உவப்பில்லை. ஆனால் அவர் முன்னுரையைக்  கட்டாயப்படுத்தியதால் மேடைப்பாடல்களை முன்னிருத்தி அந்த முன்னுரையை எழுதினேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒப்பிடாமல் அவதூறாய், தாறுமாறாய் எழுதுவது நியாயமல்ல. நான் பின்னர் எழுதிய கீழ்க்கண்டக் குறிப்புகளை முன்பே அவரிடம் சொல்லியுள்ளேன். அவர் பாணியை மாற்றச் சொல்லி வலியுறுத்தியுள்ளேன். எனக்கு அவ்வகை கவிதைப்பாணி தேய்ந்து போனத் தடமாக இருந்ததால் என் கருத்தை தெரிவித்துள்ளேன். ஆரோக்யமான , அவ்ருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையே வழங்கியுள்ளேன் இதுபோல் தேரிலும். கவிதை குறித்த என் கருத்தில் உடன்பட  பிறரை நான் கட்டாய்ப்படுத்தவில்லையே ..


அதிருப்தியாளர்களுக்கு..
கா. ஜோதியின் “ ஒரு  சாமானியனின் கவிதைகள்  “ நூலின் கவிதைகள் வெகு சாதாரணமானவை. உங்கள் சிபாரிசும், பல தொலைக்காட்சிகளில் வந்த அவரின் சிறு பேட்டிகளும் அந்தத் தொகுப்பு பற்றிய அதீத நம்பிக்கையைத் தோற்றுவித்த பின்  வாங்கிப் படிக்கையில் அதிருப்தியடைந்தோம் “ என்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் அதை வாங்கி ஆவலுடன் படித்த சிலர் என்னிடம் கருத்துத் தெரிவித்தார்கள் .
நான் அத்தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒரு வரி கூட அவரின் கவித்துவத்தை பற்றி எழுதவில்லை. அவரின் மேடைப்பாடல்களைப் பற்றி சிலாகித்து எழுதியுள்ளேன். அவரின் இயல்புகள், பல்வேறு தளங்களில் தொடர்ந்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவரின் கவிதைகளின்  மையம் பலரும் எழுதித் தேய்ந்தவை. தேய்ந்த தடத்தில் பயணிப்பவை. அவ்வப்போது எழும் பிரச்சினைகள், சம்பவங்களையே பெரும்பாலும் மையமாகக் கொண்டவை.  பலரும் எழுதித்தீர்த்த பாணியில் உருவாக்கப்பட்டவை  என்பதால் அதில் எனக்கு உடன்பாடில்லாததால் அத்தொகுப்பின் கவித்துவம் பற்றியெல்லாம்  அதில் எழுதவில்லை. அவரின் தொடர்ந்த முயற்சிகள், எளிமையான செயல்பாடுகள் பற்றியே எழுதியுள்ளேன்.
பாத்திர வியாபாரி,  நெசவு, பனியன் தொழில், குழந்தைத் தொழிலாளி, வறுமையான குடும்பச்சூழல்( இப்போது அவர் வறுமையில் இல்லை. தொடர்ந்த உழைப்பு அவரை உயர்த்தி விட்டது )  ஆகியவை குறித்த அனுதாபங்களும் அவரின் முயற்சிகளுக்கான பாராட்டுதல்களுமே பலரால் வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளன..  அவரின் வாழ்நிலை அனுபவங்கள், தொழில் சார்ந்த அனுபவங்கள், சமூக அவதானிப்புகள் பற்றி கூரிய பார்வையில் அவர் கவிதைகள்  தெரிவித்ததில்லை.  அதையெல்லாம் எழுதும் முயற்சி அவரிடம் இல்லை. மேடை பாடல்களும், அந்த தரத்திற்கு இணையான கவியரங்கக் கவிதைப்பாணியில் நீண்ட கவிதைகளுமே அவருக்கு உவப்பாக இருந்திருக்கிறது.இறுக்கமான செறிவான கவிதைகளில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக   . அவரிடம் பல நவீன் கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறேன். அவற்றைப்படித்து விட்டு தீவிரமாக, நுணுக்கமான விசயங்களைத் தெரிவித்திருக்கிறார்.   ஆனால் வழக்கமான தன் கவிதைப்பாணியிலிருந்து விலகி நவீன,  இறுக்கமான கவிதைகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டதேயில்லை...அவருக்கு அதில் ஆர்வம் இல்லை என்பதும் தெரிந்து விட்டது. வழக்கமான தேய்ந்து போன மையங்கள், தேய்ந்து போன சொற்களை வைத்து பெரும்பாலும் நீண்ட கவிதைகளை மைக், மேடைத் தொனிக்காக எழுதுவதே அவரின் பாணியாகி விட்டது.அதில் அவர் சுயமோகியாகி அமிழ்ந்திருக்கிரார் என்பது தெரிந்து விட்டது.
இதிலிருந்து அவர் மீண்டு அவரின் வாழ்நிலை, சமூக அனுபவ்ங்களை எழுதுகிற போதே அவருக்கான பாராட்டு இடத்தைத் தக்க வைத்துக் கொல்ளமுடியும். பாத்திர வியாபாரி, 5 ம் வகுப்பே படித்தவர் , குடும்பச்சூழல் தந்த் நெருக்கடிகளிகளால் சிரமப்பட்டவர் போன்ற  அவர் மீது எழுப்பபடும் அனுதாபமும், பாராட்டும்  அவரின் தொடர்ந்த கவிதை முயற்சிக்கு முட்டு கொடுக்காது.  அவரின் வாழ்நிலைப்பின்னணி போன்றே  நகைப்பட்டறை தொழிலாளி, நெசவாளி,பலூன் விற்பவர் , படிக்காத விவசாயி போன்ற தளங்களிலிருந்து கவிதை அனுபவ்ங்களை கூர்மையாக வெளிப்படுத்தியவர்களின் தனித்துவ கவிதை முயற்சியில் சிறு பங்கு கூட ஜோதியிடம் இல்லை.. உதாரணம் சுயம்புலிங்கம் கவிதைகள்...  திருப்பூரிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் கவிஞர்கள் கனல், துசோ பிரபாகர் போன்றோரின் ஒரு நல்ல கவிதை தரும் கூர்மையையும் நுணுக்கத்தையும் கூட ஜோதியின்  முழு கவிதைத் தொகுப்பு பெறவில்லை என்பது  முக்கியம். அவரே இயற்றிப்  பாடும் மேடைக்கவிதைகளிளேயே அவர் முடங்காமல், அந்த வகையில் நீண்ட கவிதைகளை எழுதாமல்  புதுப்புழுவாய் வெளியே வரவேண்டும்.LileeyeeLLileeyee   அதற்கு தொடர்ந்த  சரியான கவிதை வாசிப்பும்,-- கைதட்டலை, சுயமோகத்தைத் தவிர்த்த -  அவருள் கொட்டிக்கிடக்கும் வாழ்நிலை அனுபவங்களை கூர்மையானத் தொனியில் கவிதைக்குள்  கொண்டு வருவதுமே அவருக்குச் சிறப்பு செய்வதாக அமையும்.  





ஒரு செய்தி :
நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறேன்

கா. ஜோதியின் கவிதைகள்:
நான் முன்னுரையில் கா. ஜோதியின் கவிதைகள் குறித்து எழுதவில்லை. அதில் உவப்பில்லை. ஆனால் அவர் முன்னுரையைக் கட்டாயப்படுத்தியதால் மேடைப்பாடல்களை முன்னிருத்தி அந்த முன்னுரையை எழுதினேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒப்பிடாமல் அவதூறாய், தாறுமாறாய் எழுதுவது நியாயமல்ல. நான் பின்னர் எழுதிய கீழ்க்கண்டக் குறிப்புகளை முன்பே அவரிடம் சொல்லியுள்ளேன். அவர் பாணியை மாற்றச் சொல்லி வலியுறுத்தியுள்ளேன். எனக்கு அவ்வகை கவிதைப்பாணி தேய்ந்து போனத் தடமாக இருந்ததால் என் கருத்தை தெரிவித்துள்ளேன். ஆரோக்யமான முறையில் , அவருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையே வழங்கியுள்ளேன் இதுபோல்ெ நேரிலும் சொல்லியுள்ளேன் . வெளியீட்டு விழாவிலும் அவரின் கவிதை குறித்து நான் பேசவில்லை. அவரின் முயற்சிகள் பற்றியே பேசியுள்ளேன் .கவிதை குறித்த என் கருத்தில் உடன்பட பிறரை நான் கட்டாய்ப்படுத்தவில்லையே .......
அதிருப்தியாளர்களுக்கு..
கா. ஜோதியின் ஒரு சாமானியனின் கவிதைகள் நூலின் கவிதைகள் வெகு சாதாரணமானவை. உங்கள் சிபாரிசும், பல தொலைக்காட்சிகளில் வந்த அவரின் சிறு பேட்டிகளும் அந்தத் தொகுப்பு பற்றிய அதீத நம்பிக்கையைத் தோற்றுவித்த பின் வாங்கிப் படிக்கையில் அதிருப்தியடைந்தோம் என்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் அதை வாங்கி ஆவலுடன் படித்த சிலர் என்னிடம் கருத்துத் தெரிவித்தார்கள் .
நான் அத்தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒரு வரி கூட அவரின் கவித்துவத்தை பற்றி எழுதவில்லை. அவரின் மேடைப்பாடல்களைப் பற்றி சிலாகித்து எழுதியுள்ளேன். அவரின் இயல்புகள், பல்வேறு தளங்களில் தொடர்ந்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவரின் கவிதைகளின் மையம் பலரும் எழுதித் தேய்ந்தவை. தேய்ந்த தடத்தில் பயணிப்பவை. அவ்வப்போது எழும் பிரச்சினைகள், சம்பவங்களையே பெரும்பாலும் மையமாகக் கொண்டவை. பலரும் எழுதித்தீர்த்த பாணியில் உருவாக்கப்பட்டவை என்பதால் அதில் எனக்கு உடன்பாடில்லாததால் அத்தொகுப்பின் கவித்துவம் பற்றியெல்லாம் அதில் எழுதவில்லை. அவரின் தொடர்ந்த முயற்சிகள், எளிமையான செயல்பாடுகள் பற்றியே எழுதியுள்ளேன்.
பாத்திர வியாபாரி, நெசவு, பனியன் தொழில், குழந்தைத் தொழிலாளி, வறுமையான குடும்பச்சூழல்( இப்போது அவர் வறுமையில் இல்லை. தொடர்ந்த உழைப்பு அவரை உயர்த்தி விட்டது ) ஆகியவை குறித்த அனுதாபங்களும் அவரின் முயற்சிகளுக்கான பாராட்டுதல்களுமே பலரால் வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளன.. அவரின் வாழ்நிலை அனுபவங்கள், தொழில் சார்ந்த அனுபவங்கள், சமூக அவதானிப்புகள் பற்றி கூரிய பார்வையில் அவர் கவிதைகள் தெரிவித்ததில்லை. அதையெல்லாம் எழுதும் முயற்சி அவரிடம் இல்லை. மேடை பாடல்களும், அந்த தரத்திற்கு இணையான கவியரங்கக் கவிதைப்பாணியில் நீண்ட கவிதைகளுமே அவருக்கு உவப்பாக இருந்திருக்கிறது.இறுக்கமான செறிவான கவிதைகளில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக . அவரிடம் பல நவீன் கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறேன். அவற்றைப்படித்து விட்டு தீவிரமாக, நுணுக்கமான விசயங்களைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் வழக்கமான தன் கவிதைப்பாணியிலிருந்து விலகி நவீன, இறுக்கமான கவிதைகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டதேயில்லை...அவருக்கு அதில் ஆர்வம் இல்லை என்பதும் தெரிந்து விட்டது. வழக்கமான தேய்ந்து போன மையங்கள், தேய்ந்து போன சொற்களை வைத்து பெரும்பாலும் நீண்ட கவிதைகளை மைக், மேடைத் தொனிக்காக எழுதுவதே அவரின் பாணியாகி விட்டது.அதில் அவர் சுயமோகியாகி அமிழ்ந்திருக்கிரார் என்பது தெரிந்து விட்டது.
இதிலிருந்து அவர் மீண்டு அவரின் வாழ்நிலை, சமூக அனுபவ்ங்களை எழுதுகிற போதே அவருக்கான பாராட்டு இடத்தைத் தக்க வைத்துக் கொல்ளமுடியும். பாத்திர வியாபாரி, 5 ம் வகுப்பே படித்தவர் , குடும்பச்சூழல் தந்த் நெருக்கடிகளிகளால் சிரமப்பட்டவர் போன்ற அவர் மீது எழுப்பபடும் அனுதாபமும், பாராட்டும் அவரின் தொடர்ந்த கவிதை முயற்சிக்கு முட்டு கொடுக்காது. அவரின் வாழ்நிலைப்பின்னணி போன்றே நகைப்பட்டறை தொழிலாளி, நெசவாளி,பலூன் விற்பவர் , படிக்காத விவசாயி போன்ற தளங்களிலிருந்து கவிதை அனுபவ்ங்களை கூர்மையாக வெளிப்படுத்தியவர்களின் தனித்துவ கவிதை முயற்சியில் சிறு பங்கு கூட ஜோதியிடம் இல்லை.. உதாரணம் சுயம்புலிங்கம் கவிதைகள்... திருப்பூரிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் கவிஞர்கள் கனல், துசோ பிரபாகர் போன்றோரின் ஒரு நல்ல கவிதை தரும் கூர்மையையும் நுணுக்கத்தையும் கூட ஜோதியின் முழு கவிதைத் தொகுப்பு பெறவில்லை என்பது முக்கியம். அவரே இயற்றிப் பாடும் மேடைக்கவிதைகளிளேயே அவர் முடங்காமல், அந்த வகையில் நீண்ட கவிதைகளை எழுதாமல் புதுப்புழுவாய் வெளியே வரவேண்டும். அதற்கு தொடர்ந்த சரியான கவிதை வாசிப்பும்,-- கைதட்டலை, சுயமோகத்தைத் தவிர்த்த - அவருள் கொட்டிக்கிடக்கும் வாழ்நிலை அனுபவங்களை கூர்மையானத் தொனியில் கவிதைக்குள் கொண்டு வருவதுமே அவருக்குச் சிறப்பு செய்வதாக அமையும்.



கலாப்ரியாவின் நாவல் வேனல்   
கோவை வாசக சாலை இலக்கியச்சந்திப்பில் நான் பங்கு பெற்ற கலாப்ரியாவின் நாவல் வேனல்  பற்றிய என் கட்டுரை இந்த் வாரம் புதிய தலைமுறை இதழில் சுருக்கப்பட்டு வெளிவந்திருக்கிறாது. முழு கட்டுரையை என் இணைய தளத்தில்



கலாப்ரியாவின் வேனல் நாவல்: சுப்ரபாரதிமணியன்

மிக நுணுக்கமான வாசிப்பைக்கோரும் இந்நாவலில் கலாப்ரியாவின் கை தேர்ந்ததாய் மிளிர்கிறது. கவிஞர்கள்  உரைநடையாளர்களாக மாறும் போது ஏற்படும் நடையில் காணப்படும் மிகை மினுக்கம் இந்நாவலில் இல்லை. காரணம்  முன்பே கலாப்ரியா எழுதிய கட்டுரை நூல்களும் சசிப்ரியா என்ற பெயரில் எழுதிய கதைகளும் அவரின் பயிற்சிக்களங்களக இருந்துள்ளன. திருனெல்வேலி பிள்ளைமார் சமூகம் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இந்நாவல் பல சிரமங்களைக் கொண்டிருக்கும். ஆண் பெண் கதாபாத்திரங்களின் பெயர்களே ஆரம்பத்தில் மிரட்சி கொள்ளச் செய்யும். உதாரணமாய் குளத்து, திரவியம், வேயண்ணா போன்றவை ஆண் பெயரா, பெண் பெயரா என்றக் குழப்பம் எனக்கு முதலில் வந்தது, நாவலில் கால அளவை தெரிந்து கொள்ளவும் நுணுக்கமான வாசிப்பு அவசியமானது. காமராஜ் முதல்மைச்சர், சென்னை பெயர் மாற்ற, என்னெஸ் கிருஷ்ணன் படங்கள், கலைஞரின் கதைகள், பெரியாரின் பேச்சு , படகோட்டிப் படம் வெளியானது, திமுகவின் எழுச்சி போன்றவையே நாவலின் காலம் பற்றி யூகிக்க முடிகிற களங்கள்.உரையாடலில் கொட்டேசன் போன்றவை பயன்படுத்தப்படாமல் வரிசையாக சொல்லப்படுவதும் வாசிப்பை நுணுக்கமாக்குகிறது. பல சமயங்களில் குழப்பமாக்குகிறது..அதிலும் பிளாஸ்பேக் எது, நிகழ் காலம் எது என்று தெளிய நேரம் அக்ப்படும் வரை சிரமம்தான் .  திருனெல்வேலியைச் சார்ந்த நாலைந்து வீதி மக்களின் வாழ்க்கை சொல்லப்பட்டதில்  நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். அதிலும் பெரும்பான்மை பெண்கள்.  என்னை பாதித்த இரு பெண்கள் மீனாவும், சாந்தாவும். மீனா மனநல பாதிப்புற்று சிரமப்படுவதால் குடுமபம் அல்லல்படுகிறது. சாந்தாவின் அலைக்கழிப்புகள் நாவல் முழுக்க நிரம்பியுள்ளது.கேரளப் பெண் நாடகம் போடுவது . நடிக்க ஆர்வம் உள்ளவள். கைவைத்தியம் சமையலில் தேர்ந்தவள். ஒரு நிலையில் குழந்தை இல்லாமல் போவது அவளை வெகுவாக பாதிக்கிறது.சிவசுப்ரமணியம் என்ற ரிஜிஸ்தார் குடும்பம் முக்கியமாகிறது  நெல்லையப்பர் கோவிலைச் சுற்றியிருக்கும்   பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்த சிலகுடும்பங்கள். தெய்வு சாந்தா ஒருதம்பதி. திரவியம் மீனா இன்னொரு தம்பதி. சாந்தா மீது சிலருக்கு சபலம் திரவியம் போன்றோருக்கு வெளியிலும் பெண் சகவாசம்.செலவாளி .கடன். சொத்து விற்று ஜப்தியாகும் நிலை கூட.கணவன் பெயரைக் கூட வெளிப்படையாகச் சொல்லத்தயங்கும் பெண்கள்.  . காங்கிரஸ் முக்கியக்  கட்சியாக இருந்த காலம். திமுக எழுச்சி பெற்று வந்த நிலைகள். இளைஞர்கள் திமுகவில்.சிறுகடைகள் வைத்திருப்போர். அதில் வேலை செய்பவர்களுக்கும் முதலாளிக்கும் தொழிலாளி முதலாளி உறவு இல்லை. நெருக்கமாகவே இருக்கிறார்கள். விசாசம் என்றால் தெருவில் உள்ளவர்கள் கூடுவது, திருவிழா விசேசங்கள் முக்கியமானவை. உறவுச்சிக்கலகள் . குடும்பங்களில் பாலியல் வெளிப்டையாக இல்லாமை. தகாத உறவில் பிறந்து பெண்ணை திருமணம் செய்ய நிணைக்கும் ஒருவன். சீர்திருத்தக் கல்யாண எழுச்சி.பிள்ளை வளர்ப்பு முறை , ஜாதகம் அலைக்கழிப்பு  . சபலப்புத்தி கொண்ட ஆண்கள். அன்பின் வெளிப்பாடு இல்லாத்தும், புரிதல் இல்லாத்தும் பலரை சிக்கலாக்குகிறது. மரியாதை மூதவர்களுக்கு.. அம்மா மகள் , மாமியார் மருமகள் ஒரே சமயத்தில் கர்ப்பிணிகளாகும் விசயங்கள், திருனெல்வேலி மக்களின் கேலி, கிண்டல், நக்கல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தெய்வு சிறு ஜவுளிக்கடை  வைத்திருப்பவன். அவனின்பிறருடனான நெருக்கமான உரையாடல்கள். மனைவி சாந்தா நாடாகக்கிறுக்கு. கைவைத்தியம்( மலையாள வைத்தியர் கெட்டான் போங்கள்) , கைச் சமையலில் நேர்ச்சியானவள். ஏற்றிய விளக்கின் சுடர் போன்றவள். ஆனால் குழந்தையில்லை, கணவனுடன் நெருக்கமாக இல்லை என்பது பிரதானமாக இருக்கிறது. சபலப்புத்தி கொண்ட பல ஆண்களில்  மந்திரம் முக்கியமானவன். அவன் சாந்தாவின் மேல் மையல் கொண்டு நெருங்குகையில்  அவளே ஆடையை களைந்து விட்டு உக்கிரமாகி அவனை எதிர்க் கொண்டு அவனை நடுங்கச் செய்கிறாள் ( அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலில் சந்திரசேகர் மதக்கலவரச் சூழலில் எதிர்க் கொள்ளும் ஒரு முஸ்லீம் பெண் தன் ஆடைகளைக்களைந்து விட்டு நிர்வாணமாக்கிக் கொண்டு  தன் உயிரைக்காப்பாற்ற நிற்பாள்.) அதுவே தெய்வுடனான உறவை பல நாட்கள் பாதிக்கிறது.பிறகு அவனுடன்  நெருக்கமாகி தாய்மையை அடைகிறாள். இந்திய மரபில் தீர்த்த யாத்திரை, சமயம் சார்ந்த சடங்குகள், லவுகீக வாழ்க்கையின் சாதரணத்தன்மையோடு நாவல் முழுக்க கட்டமைக்கப்பட்டிருக்கிறது.வீரலட்சுமி என்ற பெண் கணவன் இல்லாதவன்  மகள் இருப்பது வெளியில் தெரியாமலே வாழ்கிறவள்.. சாந்தாவின் மலையாளச் சூழல் பல இடங்களி சொல்லப்பட்டிருக்கிறது.  என்ன விசயமானாலும் சத்தம் பற்றிக்க மாட்டான், மலையாளப் பெண் சொல்லாமலே பறையாமலே போயிட்டா போன்ற சொல்லாட்சிகள் புரியவில்லை.
  நுணுக்கமான விவரிப்பில் கலாப்ரியா கை தேர்ந்தவராக இருக்கிறார், பனைநார்  ஈச்சம் சேரில் முடையிட்ட கொசுக்கள். பேச்சில் எஙழ்ழா போனே , தோசை வார்த்தல். லட்டு பிடிப்பு, சடங்குகளின் விஸ்தாரம் எல்லம் பிரமிப்பூட்டுபவை.. சாதி சமூக நிலைகள் தெளிவாகச் சொல்லப்பட்டாலும் அதன்  முரன்பாடுகள்  அதிகம் சொல்லப்படவில்லை. சமூக வாழ்வியலில் தென்படும் மனிதர்கள் சுலபமான லவுகிக வாழ்க்கைச் சிமிழுக்குள் அடைபட்டுப் போகிறார்கள். இவர்களின் மறுபக்கமாய் ஜாதிய முரண், கீழ்மேல் படிநிலை, திராவிட அரசியல் தந்த மாயமோ,விசித்திரமோ, அப்பகுதியின் வெவ்வேறு போராட்ட நிலைகளோ சொல்லப்படவில்லை.  கலைடாஸ் ஸ்கோப் போன்று விதவிதமான மனிதர்கள் ..மைக்றாஸ்கோப் பார்வையில் அவர்களின் வாழ்க்கை நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருகிறது . பழைய துணி தானா தொலைஞ்சா சனியன் விட்டது போன்ற பழைய மனிதர்கள் தொலைந்து போகிறார்கள். மிக நுணுக்கமான வாசிப்பைக்கோரும் இந்நாவலில் கலாப்ரியாவின் கை தேர்ந்ததாய் மிளிர்கிறது
( கோவை வாசக சந்திப்பு நிகழ்ச்சியில் டிசம்பர் மாதம் பேசியது )
( ரூ350 சந்தியா பதிப்பகம் ., சென்னை வெளியீடு )

கோவை இலக்கியச்சந்திப்பு 100 -இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சாந்தன் 24/2/19 கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர்
ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கினார்.

இவரது நூல்கள்[தொகு]
சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]
பார்வை - யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
கடுகு - 1975
ஒரே ஒரு ஊரிலே - சாகித்யமண்டலப் பரிசு பெற்றது - 1975
முளைகள் - என்.சி.பி.எச், சென்னை - 1982
கிருஷ்ணன் தூது - இலக்கியத்தேடல் வெளியீடு, பாளையங்கோட்டை - 1982
இன்னொரு வெண்ணிரவு - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1988
காலங்கள் - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1994
யாழ் இனிது - கோரி வெளியீடு, சென்னை - 1998
ஒரு பிடி மண் - நர்மதா, சென்னை - 1999
எழுதப்பட்ட அத்தியாயங்கள் - மல்லிகைப் பந்தல், கொழும்பு - 2001
சாந்தனின் எழுத்துலகம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2006
சிட்டுக்குருவி - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2014
என் முதல் வாத்து (மொழிபெயர்ப்புக் கதைகள்) -கொடகே பிரசுராலயம், கொழும்பு. 2016
புதினங்கள்[தொகு]
ஒட்டுமா - வரதர் வெளியீடு - 1978
ஆரைகள் (இரு நெடுங்கதைகள்) - ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் - 1985
பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2007
கட்டுரை நூல்கள்[தொகு]
ஒளி சிறந்த நாட்டிலே (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
உலக இலக்கியம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை - 2010
ஆங்கில நூல்கள்[தொகு]
The Sparks (Collection of short stories) - 1990[1]
In Their Own Worlds[1] (Collection of short stories - State literary Award winner) - Godage Bros. Colombo - 2000
Survival and Simple Things (Prose poems) - 2002
The Northern Front[1] (Collection of short stories) - Godage Bros. Colombo
The Whirlwind[1] (Novel - Gratiaen Short Listed) - VUS Pathippagam, Chennai - 2010
Rails Run Parallel (Novel - Gratiaen Short Listed, Fairway Best Novel Award & Godage Best Novel Award) - Paw Print Publishers, Colombo[2] - 2015
Minissu Saha Minissu (Stories in Sinhala Translation) - Godage Bros. Colombo - 1999
விருதுகள்[தொகு]
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - ஒரே ஒரு ஊரிலே - 1975
முதல் பரிசு - இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டி - 1982
State literary Award - In Their Own Worlds - 2000
Gratiaen (Short Listed) - The Whirlwind - 2010
Gratiaen (Short Listed) - Rails Run Parallel - 2014
Fairway Best Novel Award - Rails Run Parallel - 2015
Godage Best Novel Award - Rails Run Parallel - 2015
சாகித்திய ஸ்ரீ விருது - India Intercontinental Cultural Association - 2016
வாழ்நாள் சாதனையாளர் விருது (கொடகே தேசிய சாகித்திய விருது, 2017)



சாகித்திய அகாதமி: பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் இந்த ஆண்டு இலங்கை தமிழ் எழுத்தாளர் சாந்தன் ஐயாத்துரை அவர்களுக்கு

 சாந்தன் அய்யாதுரை அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருகின்றார். சார்க் நாடுகளில் உள்ள ஒரு எழுத்தாளருக்கு இந்த பெல்லோஷிப்  வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு  சாந்தன் அய்யாதுரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில்  வசித்து வரும் சாந்தன் அய்யாதுரை அவர்கள் ,இந்த அங்கீகாரம் கிடைத்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியோடு இருக்கிறார். இன்று காலை புதுடில்லியில் சாகித்திய அகாடமியின் இலக்கியவிழாத் தொடக்க நிகழ்வில் அவரும்  பங்கெடுத்துக் கொண்டார். காலையில்  வந்த நாதஸ்வர கலைஞர்களின் இசையோடு நிகழ்வு தொடங்கியது ‘’அந்த மெல்லிய பனியில் நாதஸ்வர இசை முழங்க , இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாட்டுப்புறக் ,கலைஞர்கள் மொழிபெயர்ப்பாளர்கள், கல்வியாளர்கள் என்று நிரம்பி இருந்த சூழலில் தான் பங்கெடுப்பது தனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை த்தந்தது என்று மிகவும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் , இந்த ஃபெல்லோஷிப் ஒரு அங்கமாக அவர் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இலக்கியவாதிகளோடு தனித்த இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் ஒரு பண்பாட்டு பகிர்வாகவும் அந்த நிகழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம்  22 ம் தேதி யில் இருந்து மார்ச் 17 வரை அவர் தமிழகத்தில் இருப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது  .நாளை நடைபெற உள்ள சாகித்ய அகாடமி  விருது வழங்கும் விழாவில் அவர் உரை நிகழ்த்த உள்ளார். thanks net services