சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 18 ஜனவரி, 2011

”கனவு” இலக்கிய கூட்டம்

திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம்

9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை

தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவலின் மொழிபெயர்ப்பு

நூல்கள் அறிமுகம் நடந்தது.

சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை” நாவலை 1998ல் காவ்யா பதிப்பகம்

வெளியிட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ( ஆங்கிலத்தில்

பாண்டிச்சேரி ராஜ்ஜா, THE COLOURED CURTAIN ,வெளியீடு; BRPC, NEW DELHI )

மலையாள மொழிபெயர்ப்பு, “ சாயம் புரண்ட திர “ (மலையாளத்தில்

மொழிபெயர்ப்பு ஸ்டான்லி, சிந்த

பதிப்பகம், திருவனந்தபுரம் ), கன்னட மொழிபெயர்ப்பு “ பண்ணத்திர “

( கன்னடத்தில் தமிழ்ச்செல்வி, வெளியிடு நவயுக பெங்களூரு ) ,இந்தி

மொழிபெயர்ப்பு “ ரங் ரங்கிலி சாதர் மெஹெலி “ ( இந்தியில் மீனாட்சி புரி ,

வெளியிடு நீலகணட் பிரகாசன், மொளர்லி , புது தில்லி ) ஆகியவை

அறிமுகப்படுத்தப்பட்டன.


“ சாரு நிவேதிதாவின் கலகக்குரல்” என்றத்தலைப்பில் சுந்தர்

அர்ணவா, “ பிரகடனமாகாத வாக்குமூலங்கள்= வாசந்தியின் சிறுகதைகளை

முன்வைத்து வாசந்தியின் படைப்புலகம்” என்ற தலைப்பில்

சுப்ரபாரதிமணியன், “ அம்பேத்கார் திரைப்படம் எழுப்பும் காந்தி மீதான

கேள்விகள் “ என்ற தலைப்பில் முத்துசரவணன் ஆகியோர் உரையாற்றினர்.

ஜோதி கவிதைகள் வாசித்தார். ரவி மகேஸ் நன்றி கூறினார்.

பிப்ரவரியில் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பட

உள்ள திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியப் படைப்புகளின் தொகுப்பான

” பருத்திக்காடு ” பற்றி சி ரவி அறிமுகப்படுத்தினார்.


” கனவு “ இலக்கிய வட்டத்தின் மாதாந்திர கூட்டச் செய்திகளுக்கு ;

ரவி 9994079600., முத்து சரவணன் 7200733728.

செய்தி: முத்து சரவணன்

ஒரு கவிதை & ஒரு நூல்

1.ஒரு கவிதை:

==========================

”பங்கரி’லிருந்து வந்த மனிதனை

வரவேற்றேன்.

தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன்

ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்.

அலுவலக நேரத்தில்

அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)

ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது

சாமான்யக் காரியமல்ல

( மெமொ-விளக்கம் தரவேண்டியிருக்கும்

அலுவலத்தண்ணீர்க் குழாயிலிருந்து

இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை

என்மேல் இன்னும் இருக்கிறது)

“பங்கரி”ல் கடவுளையும், சாத்தானையும்

சந்தித்ததாகச் சொன்னார்.

கடவுள் நீங்குகையில் சாத்தானும்

சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாகக்

கற்பனை செய்து கேட்டேன்..

இருவரும் ஒரே நேரத்தில்

“ பங்கர்” குழிக்குள்

அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.

எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்த்திருந்த்து.

கடவுளும், சாத்தானும் “ பங்கரில் “ தூங்குவதில்லை என்பது

வருத்தமாக இருந்தது.

முடிகிறபோது வாருங்கள் என்றார்.

அவரின் அழைப்பு அபரிமிதமானதாகத் தோன்றியது.

ஆனாலும் தலையசைத்தேன்.

எனது அலுவலகப்பகுதியோ

எந்து வீடுள்ள பகுதியோ

நான் காலை நடை போகும் பகுதியோ

இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்.

சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது

வருத்தம் தருகிற விசயமாக இருந்தது.

கடவுளும், சாத்தானும்

என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி

அவ்வப்போது வந்து போகிறது.

2. ஒரு நூல்

” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல”

திரைப்படக்கட்டுரைகள் நூல்:

பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்

படாதக் குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.(ரூ 60/= உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு )


செய்தி :
issundarakannan7@gmail.com

வியாழன், 13 ஜனவரி, 2011

கிடுகிடு கட்டிடங்கள்

2008ல் டாக்கா அதிர்வுக்குள்ளான நிலநடுக்கம் காரணமாக நிகழ்ந்த சேதத்தின்போது இன்னுமொரு அதிர்ச்சியான நிலநடுக்கம் டாக்காவில் நிகழுமானால் டாக்கா நகரத்தின் பெரும்பான்மையான கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிடும் என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சானல்களும் சொல்லிக் கொண்டிருந்தன. மோசமான கட்டிட அமைப்புகள் இதற்குக் காரணம். சிமெண்ட் பூசப்படாத செங்கற்கள் வைத்து கட்டப்பட்ட மூளிக்கட்டிடங்களைப் பார்க்கும் போது அவற்றின் உயரமும், விஸ்தாரணமும், அவை நிறுத்தப்பட்டிருக்கும் Ôபில்லர்Õ அமைப்புகளும் பயமுறுத்தவே செய்கின்றன.

திருப்பூரில் இருப்பது போன்று தனியான பனியன் தொழிற்சாலைக் கட்டிடங்களோ, தனிப்பகுதிகளோ இல்லாமல் டாக்காவின் பிரதான வீதிகளில் பலமாடிக் கட்டிடங்களில் சிலவற்றை பனியன் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்திருப்பது நகராட்சி பலமாடிக் கட்டிடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சின் சில மாடிகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது போன்றதாகவே பனியன் தொழிற்சாலைகள் டாக்கா நகரில் தென்படுகின்றன. அவ்வப்போது உயரமான பனியன் தொழிற்சாலை செங்கல் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பனியன் தொழிலார்கள் காயமடைவதும் மரணமடைவதும் குறித்து அலோசியஸ் புள்ளி விபரங்கள் தந்தார். அதிர்ச்சிகரமான நிலநடுக்க அதிர்வாகத்தான் அது இருந்தது.


1858 முதல் 1930 வரை ஐந்து மிக முக்கியமான நிலநடுக்கங்களால் பங்களாதேஷ் நிலைகுலைந்திருக்கிறது. 1762இ 1934ல் மிகப்பிரம்மாண்டமான நிலநடுக்கங்கள் 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. அப்போதெல்லாம் இந்தியாவிலும் பாதிப்புகள் அதிகம்தான்.

250 - 300 வருடங்களுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்று ஜப்பானிய நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலர் 100 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்கின்றனர்.

வெள்ளம், புயல் காரணமாய் டாக்கா ஆண்டுகள் தோறும் பாதிக்கப்படுவதுண்டு, இதில் நிலநடுக்கம் தரும் அதிர்வும் அபாயகரமானதாக இருக்கிறது.

இந்தியாவில் 2001ல் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமான 2 லட்சம் பேர் இறந்தனர். சுனாமி 2004ல் 3 லட்சம் மக்களை பலி கொண்டது. காஷ்மீரில் 2005ல் நிகழ்ந்த நிலநடுக்கம் 80000 பேரை சாகடித்தது.
2010 செப்டம்பர் 10ல் நிகழ்ந்த நிலநடுக்கம் கூட டாக்காவை பெரிதும் பாதித்திருக்கிறது. நொடிகளில் தெருக்களின் பல கட்டிடங்கள் சாய்ந்து விட்டன. வீதியெங்கும் ஓலம். மக்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்து நெரிசலால் சாவுகள். முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீப்பிடித்து சில கட்டிடங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் நகராமல் நின்று விட்டன. சிதைந் கருகிய இடல்கள் ஆங்காங்கே தென்பட்டன. குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினர் பெண்கள். வீதிகள் சிதிலமடைந்து தாறுமாறாய் இருந்தன. நகரம் சிதைந்தது என்கிறார் சேரில் கண்ட ஒருவர்.
கடந்த பத்தாண்டுகளில் நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலப்பரப்பு பகுதியை ஒட்டி நிறைய நிகழ்ந்துள்ளன. அது வங்கதேசத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை என்பதன் பாதிப்பு அது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹிமாலயன் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கங்கள் வங்க தேசத்தைப் பாதித்திருக்கிறது. 1897ல் நிகழ்ந்த ஷில்லாங் நிலநடுக்கம் கிழக்கு வங்காளத்தை மிகவும் பாதித்தது. பிரம்மபுத்ரா நதியின் போக்கு திசை மாறியது. யாமுனா நதி புதுப்போக்கில் அமைந்தது.சிட்டகாங், டாக்கா ஆகியவை நிலநடுக்க பாதிப்புப் பகுதிகளாகவே விஞ்ஞாளிகள் கருதுகிறார்கள். டாக்காவின் பெருநகர வளர்ச்சி சென்ற பத்தாண்டில் குறிப்பிடத்தக்கது. திட்டமிடல் இல்லாமல், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிட விதிகள் மீறப்படுகின்றன. தண்ணீர் நிரம்பிய பகுதிகளில் கட்டிடங்கள் வந்துள்ளன. ஏரிகள் குளங்களில் கட்டிடங்கள் கிளம்பியுள்ளன. அவையும் பலமாடி வீட்டுக் குடியிருப்புகளாகவும், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்களாகவும் மாறியுள்ளன. பல பழைய கட்டிடங்கள் பராமரிக்கப்படுவதில்லை. பழைய அரசாங்கக கட்டிகங்கள் பராமரிப்பின் நிராகரிப்பில் உள்ளன. பழைய நகரத் தெருக்களின் குறுகிய பாதைகளும் நெரிசலும் நில அதிர்வை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 1.8 லட்சம் கட்டிடங்கள் சிட்டகாங்கில், 1 லட்சம் கட்டிடங்கள் டாக்காவில் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய அதிர்வு ஏற்படுமானால் டாக்காவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அமு பகல் என்றால் முக்கால் லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து டாக்கா கட்டிடங்களால் விரிவடைந்துகொண்டே வருகிறது. பில்லர்களைக் கொண்ட அடிமட்டங்களால் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது முதலமைச்சர் கருணாநிதி ‘ஏய்யா... ஏன்ற நாற்காலியை புடுச்சு உலுக்கறீங்க’ என்றார். நாற்காலி பயம் எப்போதும் அவருக்கு. நாற்காலிகளில் சௌகரியமாக உட்கார வேண்டுமானால் நிலநடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை கொள்வது, அப்போது மட்டும் கலக்கமடைந்து தற்கால நிவாரணங்களைத் தேடுவது நல்லதல்ல என்கிறார்கள். இயற்கை மனிதனின் செயல்கள் மீது கோபம் கொண்ட விளைவு என்பது நம்பிக்கையாய் எல்லோர் மனதிலும் புதைந்து வருகிறது.

சுப்ரபாரதிமணியன்


pls vist

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3844