சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
தீபா சரவணன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
மொழிபெயர்ப்பாளர்களுக்கு படைப்பிலக்கியம் செய்வதில் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் ..ஆனால் பல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு செய்வதும் அது உடனே ஏதாவது பத்திரிக்கையில் பிரசுரம்ம் ஆகிவிடுவதும் தங்கள் பெயர் வந்து விடுவதும் என்று ஆறுதல் படுகிறார்கள் .ஆனால் மொழிபெயர்ப்பு என்பது படைப்பு இலக்கியம் போலவே சிரமம் தரக்கூடிய ஒரு முயற்சியாகும்
மொழி பெயர்பாபாளர்களில் பலர் அவர்களின் மொழிபெயர்ப்பு படைப்புகள் பிரசுர வாய்ப்புகள் கருதி அங்கேயே தங்கி விடுகிறார்கள் .அவர்கள் படைப்பிலைக்கியத்தில்அக்கறை கொண்டவராக இருந்தாலும் அந்த மதில் சுவரைத் தாண்டி வருவதில்லை அப்படி பல மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் படைப்பிலக்கிய முயற்சிகளை மறந்து விட்டு தொடர்ந்து அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்படி ஈடுபடுபவர்களை பார்க்கிற போது அவர்களின் முந்தைய படைப்பிலக்கிய முயற்சிகள் சிறப்பான வகைப்படும். அதிலிருந்து மீள வேண்டும் என்று நானும் சிலருக்கு அறிவுரை சொல்லி இருக்கிறேன்
தீபா சரவணன் அவர்கள் அப்படி மொழிபெயர்ப்பு பணிகளை தொடர்ந்து செய்பவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கும் நிறைய செய்திருக்கிறார் அதேபோல அவரது முனைவர் பட்ட ஆய்வு கூட இரு மொழி சார்ந்த படப்பிலக்கிய ஒப்பீடாக இருந்திருக்கிறது
அவர் இந்த மொழிபெயர்ப்பு பணியை மீறி படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவரின் இந்த தொகுப்பில் காணலாம் .அவர்களின் படைப்பு இலக்கிய முயற்சிகளை காணலாம்
இந்த கதைகளில் சொல்லும் போது சில வடிவ மாற்றங்களை எடுத்துக் கொள்கிறார் வாரத்தின் எல்லா நாட்களிலும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளிலும் நடக்கும் நிகழ்வுகளை கதையாக்கி அந்த வார கடைசியில் அது முற்றுப்பெறுகிறது
இன்னும் சில கதைகளில் நாடகப் பாணி போல காட்சி ஒன்று இரண்டு என்று அமைத்திருக்கிறார்
இவை எல்லாம் வித்தியாசமான முயற்சிகளாக இருக்கின்றன. இக்கதைகளில் பெரும்பாலும் கல்வித் துறை சார்ந்தவர்களுடைய ணரர்பயணங்களும் அனுபவங்களும் இடம்பெறுகின்றன அப்படி அவர்கள் பயணம் செய்கிறபோது அது ண்பள்ளிக்கு.. கல்லூரிக்கு.. இருக்கலாம் வெளி ஊரிக இருக்கலாம் அப்படித்தான் எல்லை தாண்டி குஜராத் வரைக்கும் அவருடைய பயணம் நீட்டி செல்கிறது அனுபவங்களோட வரும் ஆறுதலை பெரிதாக எடுத்துப் பயணங்களும் இளைஞருடைய மனப்போக்கு கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் ..இவை ரமாணவர்களின் நோக்கில் .பெற்றோர் நோக்கில் பல கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்வித் துறை சார்ந்தவர் என்ற முறையில் அந்த அனுபவங்களை பல கதைகளில் விதைத்திருக்கிறார்.. எந்த பத்திரிகையில் வருவது என்று பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான பத்திரிகையிலே எழுதுகிறார் .தன் கதைகள் எளிமையாக இருந்தாலும் தீவிரமாக இருக்கிறதா என்பதில் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை இந்தக்கதைகள் சொல்கின்றன
அவரின் முயற்சிகள் அவரின் மொழிபெயர்ப்பை தாண்டி அவருக்கு பலமாக அமைந்திருப்பதை இந்த தொகுப்பிலும் காண முடிகிறது
0
தீபா அவர்கள் கதை சொல்லும் உத்தியில் விரைவில் கதையை முடித்து விட முடியும் .ஆனால் அவர் அப்படி செய்யாமல் அவருடைய உத்தியில் அதை சில அடுக்குகள் கொண்டதாகவும் சில முடிச்சுகள் கொண்டதாகவும் மாற்றுவது விசேஷமாக இருக்கிறது
குறிப்பாக சைக்கிள் கதை யைஎடுத்துக் கொண்டால் அதை சமீப விஷயங்களை மட்டுமே நிறைத்து முடித்திருக்க முடியும் ஆனால் பழைய காலத்து சைக்கிளில் இருந்து சைக்கிள் கடை வைத்திருந்த சித்தப்பாவிலிருந்து
. பழைய சைக்கிள் அனுபவங்களை எல்லாம் கொட்டி அதை நல்ல வாசிப்புக்கு உள்ளாக்குவதும் நல்ல காட்சி ரூபமாக கொண்டு வருவதும் அந்த கதையை வேறு தளத்துக்கு கொண்டு போய் விடுகிறது இந்த சைக்கிள் கதையை அனுபவத்தை வேறு கதைகளும் நாம் காணலாம்.
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்