சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 29 நவம்பர், 2019

மஞ்சி சினிமாலு:
செகந்திராபாத்தும் தமிழ்த்திரைபடங்களும்: சுப்ரபாரதிமணியன்
     சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை.  தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி ,லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை நேரத் திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன் அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள்,  தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன்.ஞாயிறுகளில் வார விடுமுறை வந்தால் சவுகரியமாகப் போய்விடும், பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே,  மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி  திரையரங்கில் பார்த்தேன் .அது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது ,எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட  வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை திரையரங்கின்  காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் டிவோலியில் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை. ஆனால்  பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி  திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவுச்சீட்டு  பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவ வீரர்கள், தமிழ்க் குடும்பங்களில் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள். பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையை இரட்டை நகர தமிழர்கள் அவசரகதியில் தான் புரட்டுவார்கள் .எட்டாம் அல்லது ஒன்பதாம் பக்கத்தில் கொசகொசவென வரி விளம்பரங்கள் மத்தியிலும் சிறு சிறு பெட்டி விளம்பரங்கள் மத்தியிலும் தமிழ் திரைப்படம் திரையிடல் செய்தி இருக்கும். கோணல்மாணலாக எழுதப்பட்டபடி காட்சி நேரமும் திரைப்படத்தின் பெயரும் பிளாக் செய்யப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும் அல்லது ஆங்கிலத்தில் தமிழ் திரைப்படத்தின் பெயர் அச்சாகி அடைப்புக்குறிகளுக்குள் தமிழ் சினிமா என்ற குறிப்பும் இருக்கும். எந்த தரத்திலான படம் எந்த வருடத்தில் ஆனது என்பதை மீறி ஞாயிற்றுக்கிழமை காலை காட்சி தமிழர்கள் திரண்டு வருவார்கள். மலையாளிகள் கன்னடர்கள் குஜராத்திகள் அவரவர் மொழிப்படங்கள் எங்காவது நகரின் மையத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் ஞாயிறின் ஒரு பகல் காட்சிக்கு மேலான காட்சிகளும் அந்த படங்களுக்கு வாய்க்கும். தமிழ் படங்களுக்கு இது போல் பெரிய வாய்ப்புகள் இல்லை. செகந்திராபாத் பேடேடுக்ரவுண்டை தாண்டி ஒரு நடை போட்டால் திவோலி திரையரங்கம் வந்துவிடும். மரங்கள் அடர்ந்த பகுதிகள்  சுவாரசியமானவை. செம்மண் கட்டிடம் போல பல இருக்கும். திரையரங்கை சுற்றிலும் பச்சையாய் செடிகளில் மரங்களும் நடப்பட்டு  ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கு ஒரு சிறு பயணம் போவது போல இருக்கும். தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் நண்பர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த திரையரங்கு காட்சிகள் அமையும் .சிறு சிறு குழுக்களாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது முன்பும் இடைவேளையிலும் பின்னும் என்றிருக்கும். உரையாடலில் முக்கிய கருப்பொருளாக அன்றைக்கானத் தமிழ் திரைப்படம் பற்றி தவறாமல் இருக்கும். செகந்திராபாத்தை விட்டு தமிழ்நாட்டிற்கு கடைசியாய் போய்வந்தது தமிழ்நாட்டின் அரசியல் நிலை, பரஸ்பரம் உடல்நலம் பற்றிய விசாரிப்புகள் ஆகவும் அமைந்திருக்கும். கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் கொஞ்சம் தென்படுவர். கன்டோன்மென்ட் முகாம்களிலேயே அவர்களுக்குத் தமிழ் திரைப்படங்கள் போட  பெரிய இடம் வசதி இருப்பதால் அவர்களை அதிக அளவில் காண முடியாது. தமிழ் காதலர்கள் கலந்து பேசி உறவாட வாய்ப்பாகவும் அந்த திரையரங்கம் இருந்தது .இளம் காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகளை பார்க்க முடியும் .தமிழ் திரைப்படத்தை பார்ப்பதில் சாபவிமோசனம் கிடைத்துவிடும் என்பது போல் வியந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றைக்கு ஒருநாள் 16 வயதினிலே என டெக்கான் கிரானிக்கல் விளம்பரம் பார்த்தேன். நான் போன போது திரை அரங்கின் முகப்பில் இருந்த கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. நான் அங்கு செல்லும்போது படப்பெட்டி வராமல் இருந்திருக்கும் என நினைத்தேன். திரையரங்கு வாசலில் ஆங்கிலப்பட சுவரொட்டி இருந்தது .16 வயதினிலே படம் இல்லை என்பதால் வழக்கமாய் மற்ற காட்சிகளுக்கான படமாய் இருக்கும் ஆங்கில படமே அந்த காலை காட்சிக்கும் என்று ஆகியிருந்தது. பாரதிராஜாவின் தம்பி ஒருவர் அன்றைக்கு செகந்திராபாத் வந்து இருக்கிறார். அவர்தான் அந்தப்படத்தின்பிற மாநிலங்களுக்கான விநியோகஸ்தர். அவர்தான் படம் பிற மாநிலங்களுக்குச்  செல்வதை கண்காணிப்பவர். பெரும்பாலும் அங்கு  வரும் தமிழ் படங்களை யாரோ பெட்டியைக் கொண்டுவந்து ஒரு காட்சிக்கு திரையிட்டு விட்டு கையோடு எடுத்துக் கொண்டு போவதுதான் வழக்கமாக நடைபெறுவது விநியோகஸ்தரின் அனுமதியும் தகவலும் இன்றி 16 வயதினிலே பெட்டி வந்திருக்கிறது .காவல்துறையில் வழக்கு என்று பாரதிராஜா சம்பந்தப்பட்டவர்கள் திரையரங்குகளை மிரட்டி இருக்கிறார்கள். எனவே 16 வயதினிலே காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது பெரும்பாலும் கூட்டம் கலைந்து போயிருந்தது. ஆங்கில திரைப்படத்திற்கு சொற்ப கூட்டம் இருந்தது .செகந்தராபாத்தில் சங்கீதா ரம்பா போன்ற திரையரங்குகளில் புதிய ஆங்கில படங்கள் திரையிடும் போது இந்த திவோலி திரையரங்கில் மிகவும் பழைய படங்கள் திரையிடப்படும் . அப்படித்தான் மூன்றாம்தர மலையாள படங்களுக்கான திரையிடலுக்கான இடமாகும் அவை இருக்கும் . பல சமயங்களில் ஞாயிறு மாலைகளில் ரவீந்திர பாரதியில் ஹைதராபாத் திரைப்பட சங்கங்களின் திரையிடலுக்கு சென்றிருக்கிறேன். ஞாயிறு மாலைகளில் பப்ளிக் கார்டன் பிர்லா மந்திர் டேங்ட் பேண்ட் என்று திரிந்த ஒரு நாளில் ஹைதராபாத் பிலிம் கிளப் அறிமுகமானது.மினி ஆடிட்டோரியத்தில் அல்லது  ரவீந்திர பாரதியில் ஏதாவது நிகழ்ச்சியில் இருந்து கொண்டே இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ரவீந்திர பாரதி என்ற பெயரில் ஆடிட்டோரியம் உண்டு .தமிழகத்தில் கிடையாது. அதற்காக அப்போது வந்த நிதியை செலவழித்து விட்டதால் அரசாங்க பொது ஆடிட்டோரியம் ஒன்றை தலைநகரங்களில் நாம் இழந்து விட்டிருக்கிறோம் என்று பரிக்சா ஞானி அவர்கள் ஒருமுறை பேச்சின்போது சொன்னார் .ஒரு ஞாயிறு மாலையில் ரவீந்திர பாரதியின் மாடியில் மினி  ஆடிட்டோரியத்தில் சிறு கூட்டம் தென்பட்டது அங்கே நுழைய முற்பட்ட தடுக்கப்பட்டேன். திரைப்பட உறுப்பினர்களுக்கு மட்டும் தான் என்றார் வாசலில் இருந்த ஒருவர் .அங்கு தென்பட்ட ஓவியர் வைகுந்தன் நீ ஏன் பிலிம் கிளப்பில் சேரக் கூடாது என்றார். செகந்திராபாத்தில் இயக்குநர் பி நரசிம்மராவின் பட அலுவலகத்திற்கு செல்கிறபோது  ஓவியர் வைகுந்தனைச் சந்தித்து இருக்கிறேன், பிறகு வெவ்வேறு ஓவிய கண்காட்சிகளிலும் அவரை சந்தித்து இருக்கிறேன், அவரின் ஓவியங்களில் ஆந்திரா கிராம மக்களில், பெரும்பாலும் பெண்கள் பற்றிய சித்தரிப்புகள் விசேஷமாக இருக்கும், ,மார்புகள், திமிரும் உடம்பு ,பெருத்த தொப்புள், நெற்றிப் பொட்டுகள் உள்ள உருவமாய் இருக்கும் . அழுத்தமான வண்ணங்களில் தென்படுவார்கள். அங்கு  பி நரசிங்கராவ் வந்து செல்வார்.  ரங்குல்கலா , மாபூமி போன்ற பல கலை படங்களை எடுத்தவர். அன்றைக்கு வைகுந்தன் ஹைதராபாத் பிலிம் கிளப் செகரட்டரி பிரகாஷ் ரெட்டியிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார் .. அதன்பின் நான் அங்கு சென்றேன். அன்றைக்கு பிலிம் கிளப்பில் சிந்துபாத் என்ற படம் திரையிடல் இருந்தது. தினத்தந்தி லைலாவை மனதில் கொண்டு நான் அப்படத்தில் அவளைத் தேடினேன். சிந்துபாத் பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனாக இருந்ததால் பல பெண்களிடம் உறவு கொள்வதாக  காட்சிகள் இருந்ததால் மிகவும் கிளர்ச்சி தரத்தக்க படமாக அது இருந்தது. ஹைதராபாத் பிலிம் கிளப்பை போல் வேறு திரைப்பட சங்கங்கள் இரண்டும் இருந்தன அவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு .பின்னர் ஹைதராபாத் திரைப்பட சங்கம் மட்டும் நிலைத்தது .அதன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நகரின் ஒதுக்குப்புறமான சாரதா ஸ்டூடியோவில் நடக்கும்.  சாரதி ஸ்டுடியோ அமீர் பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து போகும் தொலைவில் இருந்த்து  அலுவலகம் வேறு பக்கம் . செகந்திராபாத்தில் வீடு. இவற்றிற்கும் அது தொலைவானதாக  இருந்தது. திரைப்பட சங்க நிகழ்ச்சிகளில் அங்கு தொடர்ந்து நடந்தன, அங்கு இருந்த சாரதி ஸ்டுடியோவில் பட நிகழ்ச்சி என்றால் தூரத்தை மீறி உற்சாகம் வந்துவிடும் எனக்கு . காரணம் அங்கு தொடர்ச்சியாக ஏதாவது படப்பிடிப்பு இருந்து கொண்டே இருக்கும் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முட்டி தள்ளி கொண்டிருக்க திரைப்பட சங்க உறுப்பினர் என்ற வகையிலும் எழுத்தாளர் என்ற வகையிலும் அன்றைய திரைப்பட நிகழ்ச்சியைச் சொல்லியும் சுலபமாக உள்ளே போய் விடலாம். திரைப்பட நிகழ்ச்சி கூட்டம் சேர்வதற்காக காத்திருக்கும் போது படப்பிடிப்பினை வேடிக்கை பார்ப்பேன். அங்கு பெரும்பாலும் ஹிந்தி தெலுங்கு படப்பிடிப்பில் இருக்கும் அபூர்வமாய் தமிழ் மற்றும் கன்னட படப்பிடிப்புகளும் நடைபெறும் வேடிக்கை பார்க்கவும் திரைப்பட கலைஞர்களுடன் பேசவும் வாய்ப்பாக இருக்கும். சிலர்  பேச்சை சிறு பேட்டிகள் ஆகும் செய்ய வாய்ப்பு இருந்தது. கமல்ஹாசன், குஷ்பூ என சந்தித்துள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அப்போது இருந்த இரட்டை நகரங்களில் நாலைந்து தமிழர்களே திரைப்பட சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் ஒருவர் அமிர்தன் .ராசி சிமெண்ட் கம்பனியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவருக்கு உலகத்திரைப்படங்களில் தென்படும் பாலியில் காட்சிகளில் ஈடுபாடு உண்டு. அது இல்லாத படங்கள் அவருக்கு அலுப்பூட்டும் .படத்தின் கதையை புரிந்து கொள்ள முயல்வார். பாலியல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் படமென்றால் உட்காருவார்.இல்லையெனில் கிளம்புவார் . அவர் போல் கிளம்புவதற்கு ஒரு பெரிய கோஷ்டியே இருந்தது .அவர் கிளம்பியபின் பாலியல் படுக்கை காட்சிகள் ஏதாவது இருந்து விட்டால் பின்னர் தொலைபேசியில் தகவல் கேட்டு விட்டு மனம் உடைந்து போவார். .திரைப்பட சங்கத்தின் திரையிடல்கள் மீது எப்போதும் அதில் துக்கம் கொள்வார் .அங்கங்க ஊர்ல அவங்கவங்க ஓடாத படங்கள் தான் இங்கே கொண்டு வந்து காட்றாங்க போல என்பதுதான் அவரின் தீர்மானமான விமர்சனமாக இருந்தது. நல்ல படங்கள் நல்ல இயக்குனர்கள் படங்கள் என்று குறிப்பிடப்படுபவை பற்றி கேட்டுக்கொண்டு இருப்பார்.ஆனால் தவறாமல் திரைப்பட சங்கத்தின் நிகழ்ச்சிக்கு வருவார் அபூர்வமாக மணி வருவார் .அவர் ராமா நாயுடுஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராகவும் பொறியாளராக இருந்தார் வேலை இல்லாத சமயங்களில் திரைப்பட சங்கம் நிகழ்ச்சிகளுக்கு வருவார் .நவீன இலக்கியம் பற்றிப் பேச தகுதியான நபர் என்ற அளவில்  இருந்தார். நல்ல திரைப்படங்கள் பற்றிய அக்கறை அவருக்கு இருந்தது .இரட்டையர்களாக திரிந்து கொண்டிருந்தோம் உள்ளூரின் முக்கிய கலை இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களில்- தில்லி ரிஷிகேஷ் வரையிலான பயணம் செய்தபோது கூட இருந்தார் .சாகித்ய அகாதமியின் பயண நிதி பெற்று சென்றபோது கோவாவில் ஒரு வார பயணம் என்று சேர்ந்து இருந்தோம்.ரிஷிகேஷ் என்று  பல பயணங்களில் கூட இருந்தார். முன்பு நான் கதிர்வேலன் உடன் இரட்டையர்கள் போல திரிந்து கொண்டிருந்தோம் .. கதிர்வேலன் சென்னைக்கு சென்ற பின்பு மணி அந்த இடத்தை பிடித்துக்கொண்டார் .கதிர்வேலன் தற்போது குங்குமம் பத்திரிகையின் தலைமையாளராக இருக்கிறார்.மணி பெருங்குன்றூர் கிழார் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார் ..தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
 ஒருமுறை கோல்கொண்டா குறுக்கு  வீதியில் உள்ள ராமகிருஷ்ணா திரைப்பட அரங்கில் ஒரு திரைப்பட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ராமகிருஷ்ணா ஸ்டுடியோ பெரிய கட்டிடமாக இருந்தது .வேறு இடம் கிடைக்காத அவசரத்தில்தான் அங்கு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது என்றார்கள் ஸ்டுடியோ என்டி ராமராவ்க்குச் சொந்த இடம் என்று கேள்விப்பட்டிருந்தேன். ராமகிருஷ்ணன் என்பவர் அவரின் மகன்களில் ஒருவர். ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில்தான் ஆரோக்கியராஜ் பார்த்தேன் தமிழ் பேசிக் கொண்டிருந்தவர்களிடம்  வந்து கலந்துகொண்டு தெலுங்கானாவின் தெலுங்கின் பாதிப்பில் தமிழில் பேசினார். பின்னர் இன்னொரு முறை ஆஸ்திரேலிய  நாட்டுத் திரைப்பட விழா என்று 5 திரைப்படங்கள் அங்கு திரையிட்ட போதும் ஆரோக்கியராஜ் இருந்தார். அங்கு பணிபுரிபவர் என்ற முறையில் அவர் மீது என் கவனம் இருந்தது. ஆஸ்திரேலியா படங்களில் படுக்கையறை காட்சிகளும் நிர்வாண கோலங்களும் நிறைய இருந்தன. அந்த திரைப்பட விழாவிற்கு அமிர்தன் தென்படவில்லை. ஏதோ ஒரு வேலையாக தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார். ஆஸ்திரேலிய படங்களில் பாலியில் ரீதியான காட்சிகள், அதன் மகாத்மியம் பற்றி பின்னர் கேள்விப்பட்டு  மனம் உடைந்து போய் இருந்தார். அப்படி ஒரு வாய்ப்பை இழந்தது பற்றின உறுத்தலை எல்லோரிடமும் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் பிரகாஷ் ரெட்டி அது போன்ற படங்கள் வந்தால் நினைவுபடுத்துவதாக வாக்குறுதி தந்தது அவருக்கு ஆறுதல் தந்தது. ஆனால் பிரகாஷ் ரெட்டையால் பின்னர் அமிர்தனைத் திருப்திப்படுத்த முடியவில்லை அமிர்தன் திரைப்பட சங்கத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையை இழந்திருந்தார் .ஆரோக்கியராஜ் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் ஒருவரைத்  திரைப்பட்திரையிடலில்   அறிமுகப்படுத்தினார். அவரை டேபிளில் ஒரு அங்கம் என்றார். எடிட்டிங் டேபிள் என்ற வாசகம் என்னை தொந்தரவு படுத்தியது .அவர் நோய்வாய்ப்பட்டும்  களை இழந்தும் இருந்தார். அவரின் ஒல்லியானத் தோற்றம் சங்கடம் தந்தது. காரணம் எடிட்டிங் டேபிளில் வேலை செய்தவர்களுடைய தொடர்ந்த வேலையும் அந்த படச்சுருள் தருகிறார் வாசனையும் ரசாயன காற்றும் உடம்பை பாதித்திருப்பதை நான் தெரிந்து கொண்டேன்.

கலைப்பட இயக்குனர் பி நரசிங்க ராவ் அவர்களின் திரைப்பட அலுவலகம் செகந்தராபாத் பகுதியில் இருந்தது. நானும் செகந்திராபாத்தில் குடியிருந்ததால் அந்த அலுவலகத்திற்கு செல்வது சுலபமாக இருந்தது அங்கு தான் நான் புரட்சிகர பாடகர் கத்தார் அவர்களை சந்தித்தேன். அப்போது நரசிம்மராவ் ரங்குல கலா என்ற ஒரு படத்தை எடுத்து இருந்தார் ரங்குல கலாவின் கதாநாயகன் ஓர் ஓவியன் அவனின் நவீன ஓவியங்களை வீதியில் மக்கள் பார்வைக்கு வைக்கிறான் .அதன் மூலம் மக்களை அரசியல் விடுதலைக்கு இட்டுச் செல்வது அவனின் குறிக்கோளாக இருந்தது. நவீன ஓவியம் வரைபவன்  என்பதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறான். அதே சமயம் அவளின் இன்னொரு ஓவிய  நண்பன் பேனர்கள், விளம்பர பலகைகள் வரைந்து நிறைய சம்பாதிக்கிறான், இந்த முரண்பாடு கதாநாயகியை வெகுவாகப் பாதிக்கிறது நவீன உணவு விடுதிகளுக்கு கொண்டுபோய் ஓவியங்களை விற்கும் அனுபவத்தில் அவமானம் அடைகிறான். ஒரு நவீன ஓவியனின் வாழ்க்கை அனுபவங்களை சொல்லும் படம் அது .அப்படம் வெளியானதை ஒட்டி ஒரு வித்தியாசமான கண்காட்சி ரவீந்திர பவன் கலா பவனில் நடைபெற்றது. அந்த கண்காட்சியில் அரங்கு மற்றும்  படத்தில் இடம்பெற்ற கலைப் பொருட்கள், உடைகள், செட் பொருட்கள், பிலிம் சுருள்கள், கேமரா உட்பட பல முக்கியமான கருவிகள் எல்லாம் கண்காட்சியில் வைத்திருந்தார்கள் .அந்த படத்தில் ஒரு பாடலில் போது  கத்தார்  தோன்றுவார். அந்த படத்தில் பயன்படுத்திய அவரின் தோளில் கிடக்கிற கருப்பு சிவப்பு வர்ணப் போர்வை இந்த கண்காட்சியில் இடம் பெறாதது பலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் .அவர் ஒரு போராளி என்ற வகையில் ஆந்திர மக்களிடம் பெருத்த செல்வாக்குப் பெற்றிருந்தார், அப்படத்தில் கர்த்தர் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவதே முக்கி ய அம்சமாக இருந்தது. மக்கள் யுத்தக் குழு இயக்கத்தைச் சேர்ந்த அவர் தெருவில் நடத்தும் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு பாடல் பாடுவதாக காட்சி ஒன்று அப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அவர் ஒரு போராளி என்ற வகையில் ஆந்திர மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். சாதாரணமாய் காவல்துறையின் அடக்குமுறை ஆதிவாசிகள் மீதான வன்முறை போன்றவற்றை எதிர்த்து புரட்சிகர செய்திகளையும், ஆயுதம் ஏந்தி போராடுவது மையமாக கொண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்த காலம். கத்தார் ஒரு பாடல் காட்சியில் நடிக்கிறார் என்பதே ஒரு திரைப்படத்திற்கு பெருமை அளிப்பதாகும். அவர் இடம்பெறும் பொதுக் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் செல்வர் என்பதை நிசாம் கல்லூரி மைதானத்தில் கண்டிருக்கிறேன். கத்தர் எப்போதும் தன் உடம்பின் மீது அந்த கருப்பு சிவப்பு போர்வையை போர்த்திக் கொண்டு இருப்பார். நரசிங்க ராவ் மார்க்சிய  இயக்கங்களில் அக்கறை கொண்டவர். அவர் உடம்பில் எப்போதும் கிடைக்கும் போர்வை எப்படி சினிமா தயாரிப்பு பொருட்களில் ஒன்றாக இருக்கும் என்றும் சிலர் கேள்வி கேட்டார்கள் .அந்தக் கண்காட்சியில் படத்தின் முழு திரைக்கதை ஸ்கிரிப்ட்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது அவற்றில் சில பிரிவுகளை நரசிங்க ராவ் ஓவியமாய் வரைந்து இருந்தார். இது மாதிரியான முறையை சத்தியஜித்ரே கையாளுவார். நரசிங்க ராவ்க்கு சத்யஜித்ரேயின் கதை சொல்லும் இயல்பில் அக்கறையும் நிதானமும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களாக  சொல்லியிருக்கிறார். பின்னால் நரசிங்க ராவ் சில படங்கள் எடுத்தார் ஆனால் சமீப ஆண்டுகளில் அவர் திரைப்படங்கள் எடுப்பதில்லை. அவருடனான பட அனுபவங்களும் அதை அவர் பகிர்ந்து கொண்டதும் அப்பட அலுவலகத்திற்கு நான் பலமுறை சென்றதும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.
அசோகமித்திரன் அவர்கள் ஹைதராபாத் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்களுக்கு வந்திருக்கிறார் அங்கு ஈநாடு என்ற தெலுங்கு தினசரி பத்திரிக்கை இருந்தது அவர்கள் ஆங்கிலத்தில் நியூஸ்லேண்ட் என்று  ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள் .அந்த சமயத்தில் நடந்த திரைப்பட விழாவிற்கு அசோகமித்திரன் வந்திருந்தார் .அவர் முன்பே எனக்கு அறிமுகமானவர். செகந்திராபாத்தில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரின் இளமை காலம் செகந்திராபாத்தில் கழிந்திருக்கிறது அவர் குடியிருந்த கண்டோன்மென்ட் ரயில்வே க்வாட்டர்ஸ், செகண்ட் பஜார்  போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார் .அசோகமித்திரன் அந்த திரைப்பட விழாவில் தினசரி திரையிடப்படும் 5,6 திரைப்படங்களை ஒரு நாளில் பார்க்க விருப்பப்படவில்லை. ஓரிரண்டு படங்களை மட்டும் பார்க்க விருப்பப்பட்டார் பிறகு அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு அந்த விமர்சனங்களை எழுதி உடனே அந்த ஆங்கிலப்பத்திரிக்கை தரும் வேலையாக இருந்தார், அவருக்கு ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டலில் அறை வாடகையும் செல்வ செழிப்பும்  ஆடம்பரமும் அவரை சிரமப்படுத்தின . என்ன இவ்வளவு வாடகை கொடுத்து இருப்பதற்கு பதிலாக அந்த பணத்தை சன்மானமாக கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். அப்போதுதான் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தது அந்த படம் அந்த உலகத்திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் காட்டப்படுவதாக இருந்த ஞாபகம். அவரின் உதவியாளராக இருந்த ராஜா சந்திரசேகர் வந்திருந்தார் அவரை சந்தித்தேன் அப்போது வந்திருந்த குங்குமத்தின் வண்ணக்கதிர் இதழில் என் கவுண்டர் கிளப் குறு  நாவலில் இருந்து இந்த படம் கதை எடுக்கப்பட்டிருப்பது பற்றிய கட்டுரையை தந்திருந்தேன். முதல் மரியாதை திரைக்கதை உருவாக்கத்தில் ராஜா சந்திரசேகர் பெரும் பணி புரிந்தவர் என்ற வகையில் அவருக்கு என் பேச்சு எரிச்சில் தந்தது. இதைக் கேட்டு அவர் என்னை பின்னர் சந்திப்பதைத்  தவிர்த்தார். சந்தித்த பின்னாலும் என்னைத் தவிர்த்து விட்டு விலகிச் சென்றார். அசோகமித்திரனிடம்  இதை பற்றி சொன்ன போது ( அவர் அப்போது கணையாழியில் ஆசிரியராக இருந்தார் கணையாழிக்கு இது குறித்து வந்த ஒரு கடிதம் பற்றி சொன்னார்) அது தான் குங்குமம் வண்ணத்திரை இதழில் கூட வந்திருந்தது அந்த படத்தில் கி ராஜநாராயணன் கோபல்லகிராமம் கதையின் ஒரு பகுதியை பயன்படுத்தி இருக்கிறார்கள். வல்லிக்கண்ணன் மூலமாக அணுகி சிறு தொகை கொடுத்திருக்கிறார்கள். நீங்கள்  வேண்டுமானால் வல்லிக்கண்ணனை  அணுகுங்கள் என்று சொன்னார் .நான் அதற்கு உடன்படவில்லை. தொடர்ந்து அந்த திரைப்பட விழா படங்களைப் பற்றி பத்து நாட்களும் அசோகமித்திரன்  அவர்கள் எழுதிய கட்டுரைகள் முக்கிய கட்டுரைகளாக இடம் பெற்றிருந்தன. பின்னால் அவர் அந்த கட்டுரைகளை ஏதாவது தொகுப்பாக்கினாரா என்பது தெரியவில்லை. தொடர்ந்து ஹைதராபாத் செகந்திராபாத் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி உருது திரைப்படங்கள் பற்றி அசோகமித்திரன் அவர்கள் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.அவரின் பேச்சில் பழைய படங்கள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். கன்னட்த்தில் நடிகர் ராஜ் குமார் பற்றி சுஜாதா சொன்னபின்புதான் அவரை சரியாக புரிந்து கன்னடப்படங்களைப் பார்த்ததாகச் சொன்னார்.

      நான் முதல் பக்கத்தில் எழுதிய துணிமூட்டை வியாபாரிகளுக்கு மீண்டும் வருகிறேன் அதுபோல் அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களைப் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவளின் உடம்பு  சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்கு பகுதியில் அந்நியனாக  ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய மற்றும் சிலர் இந்த மற்றும் சிலர் நாவலிலும் பல சிறுகதைகளிலும் என் திரைப்படங்களுக்கு நான் சென்ற அனுபவங்கள் கலவையாக வந்திருக்கின்றன.பல பகுதிகளில் அக்காலத் திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.( மற்றும் சிலர் நாவலின் மூன்றாம் பதிப்பை டிஸ்கவ்ரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது
 செகந்திராபாத் அனுபவங்களை நினைக்கிறபோது திரைப்பட ரசிப்புத் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது.அசோகமித்திரனின் பல படைப்புகளில் செகந்திராபாத்தில் திரைப்படங்கள் பார்த்த அனுபவங்கள் ஊடாடி நிற்கும். என இரட்டை நகரம் சார்ந்த பல படைப்புகளில் அவை இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் படித்துணரலாம்.குறிப்பாக மற்றும் சிலர், நகரம் 90, சுடுமணல் போன்ற நாவல்களிலும் 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளிலும். சமீபத்தில் திருப்பூர் 100 ஆம் ஆண்டை எட்டியதை ஒட்டி திருப்பூர் 100 என்ற தலைப்பில்  20 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டேன் ( கலை இலக்கியப் பெருமன்றம்  திருப்பூர் வெளியீடு ). அதே போல்  திருப்பூரை மையமாகக் கொண்ட   15 சிறுகதைகளை திருப்பூர் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன் ..( நிவேதிதா பதிப்பகம், சென்னை வெளியீடு ). அ.ராமசாமி அவர்கள் இது போல் நக்ரம் சார்ந்த கதைகள் தொகுக்கப்படவேண்டிய அவசியத்தை அத்தொகுப்பு உணர்த்துவதாக எழுதியிருந்தார்.  ஓ.. செகந்திராபாத் என்ற தலைப்பில்  அந்நகரம் பற்றிய பல அனுபவக்கட்டுரைகள் உயிர்மை.காமில் முன்பு பிரசுரமாகி  என்சிபிஎச் வெளியீடாக பின்னர் நூலாக வந்துள்ளது. அதேபோல் செகந்திராபாத், ஹைதராபாத் இரட்டை   நகரங்கள் பற்றியப் படைப்புகள் தொகுக்கப்படுகிறபோது அந்நகர்களின் திரைப்பட அம்சங்கள் அதில் பொதிந்திருப்பது தெரியும்.




வெள்ளி, 8 நவம்பர், 2019

புத்துமண் நாவல் :  சுப்ரபாரதிமணியன்


பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையே
நவீன சூழலியம் ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது.  
                      நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்ற பலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டு வளர்ச்சியைபொருளீட்டுவது என்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயே கட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறது.
முதன்மைப்பாத்திரம் அரசங்கப்பத்வியிலிருந்து ஓய்வு பெற்ற  மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்                             ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவித அச்சுறுத்தல்கள்.மனைவியும் மகளும் கூட அவரிடமிருந்து விலகி நிற்பவர்கள் .பத்திரிக்கையில் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்ரி எழுதுகிறார். வழக்குப் போடுகிறார். போராடுகிர்வர்களுக்கு  ஆதரவு தருகிறார்.
நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனை அடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மை  அவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில் மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும் தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்  அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
ஒரு கிராமம்..செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டது மணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாக யார்யார்காலடியிலோ உட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டது குறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில் தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால் எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதை சமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை ச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (கேள்வியைஎழுப்புகிறார் .
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும் நாவலின் வடிவம்
.’
உலகம் நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவே அதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள் திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில் சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சி வேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்கு திருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள். இறுதியில் தனிமைப்படுகிறார். மகள் திருமணம் செய்து கொண்டு போய்விடுகிறாள். மனைவி இறந்து போகிறார். மணீயனும் ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து விட்டு இறந்து போகிறார்.அவருக்குத் தெரிந்த தன்னார்வக்குழு இளைஞன் அவருக்கு அஞ்சலிக்கூட்டம் நட்த்த எண்ணுகிறான்..சுற்றுச்சூழல் பற்ரிப் பேசிய ஒருவனின் கதை இது.
இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமே தனி உலகம்
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை.
 நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும் என்ற
மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவலின் மணியன் கதாபாத்திரம் சொல்கிறது    

         இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம்     பற்றி இந்நாவல் பேசுகிறது
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014 பக்கங்கள்; 118
விலை; ரூ. 100.00





div style='mso-element:para-border-div;border:none;border-bottom:solid windowtext 1.0pt; mso-border-bottom-alt:solid windowtext .75pt;padding:0in 0in 1.0pt 0in'>
 வியாபாரமொழியாய் தமிழ் அவனுக்கு வந்து விட்டது. சினேகித மொழி கைகூடவில்லை சக பயணிகளுக்கு.


ஒரு லட்சம் கோடி ரூபாய்
( திருப்பூர் கவிதைகள் 2019 )


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
12 வது மாநில மாநாட்டுச் சிறப்பு வெளியீடு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
திருப்பூர் மாவட்டம்

2nd page

ஒரு லட்சம் கோடி ரூபாய்
திருப்பூர் கவிதைகள் 2019
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
திருப்பூர் மாவட்டம்
* வெளியீடு :
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,
திருப்பூர் மாவட்டம்
மில் தொழிலாளர் சங்கம், பிகேஆர் இல்லம்,
326, பி எஸ் சுந்தரம் சாலை, ஊத்துக்குளி சாலை
திருப்பூர் மாவட்டம் *  0421- 2202488..விலை ரூ 30  
3rd page
முன்னுரை
திருப்பூர் பின்னலாடைத்துறை  பின்னலாடை ஏற்றுமதி மூலம்  அந்நிய செலவாணியாய் ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை 2020ல் எட்டும் என்று கடந்த அய்ந்து ஆண்டுகளாய் சொல்லப்பட்டது. .இது இப்போது சாத்தியமாகவில்லை. 2022ல் இது சாத்தியமாகும் என்று இப்போது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தொழிற் கொள்கை, ஜிஎஸ்டி விதிப்பு போன்றவை திருப்ப்பூர் தொழிற்துறையை முடக்கி உள்ளது. தொழிலாள தோழர்கள் தங்கள் அயராத உழைப்பின் மூலம் இதை சாதிப்பார்கள்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 வது மாநில மாநாட்டை ஒட்டி இத்தொகுப்பு நூல்  திருப்பூர் தோழமைக்கவிஞர்களின் கவிதைகளைக்கொண்டு  வெளியிடப்படுகிறது. திருப்பூர் 100 என்ற நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் சென்றாண்டு வெளியிட்டது . இந்த வகையான இலக்கிய முயற்சிகள் தொடரும். இணையுங்கள் . சேர்ந்து செய்வோம்.
-  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )








கே.சுப்பராயன்(பாரளுமன்ற உறுப்பினர்  “ திருப்பூர் -100 “
            திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. விடி நைட் என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
                             “ தீதும் நன்றும் நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன.
                       இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி
தங்களன்புள்ள
கே.சுப்பராயன் ( திருப்பூர் பாரளுமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
Rs 100 திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு.

திருப்பூர் -100 “--திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு

சுப்ரபாரதிமணியன்

 

 1. கல்வி உடை :
பறவைகளின் கூடுகளைப்பிய்த்தெறிந்து
நீளும் கொடுங்கனவுக்கரங்கள்
இந்தியப் பண்பாட்டு மங்கையின்
உடலை அலங்கரிக்கும் உடை அழகானது.
பல நிறங்கள் கொண்டது.
எந்தக் கோணத்திலும் அழகுதான்,
ஒரே கல்வி, ஒரே நாடு ,ஒரே மொழி என்று
முகங்களை, பெயர்களை, ரத்தவகைகளை துடைத்துத் தயாராகிறது
ஒரு காவி உடை.
கற்கும் சமூகம் நோக்கிப் பாறாங்கற்கள்
விழுந்து கொண்டே இருக்கின்றன.
திடுக்கிட்டு விழிக்கிற போதெல்லாம்
புதிய கொடுங்கனவு
நினைவிலேயே இருக்கிறது.
 கொடுங்கனவும் கனத்த வாளாகும்
 காலம்  எதிர்வாள் கசப்பை
 நிழலற்றுப் போகச் செய்யும்.

2. அந்நியன்
பலமாதங்களாக அவன் திரை விரிப்புகள் விற்பனையில்
 ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு புளிய மரத்தடியோ, வேப்பமரத்தடியோ
நிழல் தரும் ஏதாவது மரத்தடியோதான்
அவன் கடை ஸ்தலம்.
 அவன் உள்ளூர்காரனில்லை .
 இந்த மாநிலத்துக்காரனில்லை.
ஓடியா, பீகார், வங்காளம்.. ஏதோ வட மாநிலத்துக்காரன். முகமே சொல்லிவிடும்.
 பல்லாயிரம் தடவை அவனின் திரைச்சீலைக் கடையைக் கடந்து வாகனத்தில் சென்றிருக்கிறேன்.
ஒரு முறை குளிர்பானப் பொத்தலை எங்கெறிவது என்றக்குழப்பத்தில் பேருந்து சன்னல் வழியே
எறிந்த போது  அவன் அருகில் சென்று வீழந்தது.
அவன் பார்வை தந்த கேள்வியில்
தலை குனிந்து கொண்டேன்.
 என் தலை அவன் முன் பின்னர் நிமிரவேயில்லை
. புத்தக அலமாரியில் தூசு சேர்வதைத் துடைத்து
அலுத்து போனதால் மனைவி திரைச்சீலை வேண்டுமென .
வாகனத்தில் செல்லும் போது சொல்ல
வாகனத்தை நிறுத்தி அவன் தலையை நிமிர்ந்து பார்த்தேன்  இன்று ....
விலைகுறைக்கச் சொல்லிக் கேட்டபோது
காலை முதல் இன்னும் சாப்பிடவில்லை
முதல் விற்பனையில் வரும் லாபமே
சிற்றுண்டிக்கு என்றான்
தனக்குத் தெரிந்த கொச்சைத் தமிழில்....
நான் தூக்கி எறிந்த விலைஉயர்ந்த குளிர்பானப் போத்தலை தேடியது என் கண்கள் ..
 வியாபாரமொழியாய் தமிழ் அவனுக்கு வந்து விட்டது. சினேகித மொழி கைகூடவில்லை சக பயணிகளுக்கு.



பாரதியார் பல்கலைக்கழக உரை 
கதிர்பாரதியின் கவிதைகள் மனதுக்கு நெருக்கமாக.... சுப்ரபாரதிமணியன்

         சமூகம் பற்றிய அக்கறையை கொண்டிருக்கும் கவிதைகளை நல்ல கவிதைகள் என்று நான் எப்போதும் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த அக்கறை வெளிப்படையானதாக இல்லாமல் பூடகமாக,,  உள்ளீடு கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த வகையில் கவிஞனின் சமூக பொறுப்பு மிக்க எண்ணமே தீவிரமான கவிதைக்கு வித்திடும் என்று நம்புகிறவன் நான். சமகால உணர்வுகள் தரும் அனுபவங்களாக ., இன்னும்  எனக்கு நெருக்கமாக... நான் அப்படித்தான் கதிர் பாரதியின் கவிதைகள் எனக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றன

 இடதுசாரி கொள்கை பற்றும் விவசாய வாழ்வும் பின்னணியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்ற அவர் பற்றிய குறிப்புகள் எனக்கு இன்னும் உவப்பானதாக இருந்து. அவர் கவிதைகளை தொடர்ந்து வாசிக்க ஏதுவாகியிருக்கிறது .அதேசமயம் சுருக்கமாகவும் தெளிவாகவும் கவிதைக்கு அதில் இருக்கிற ஒரு வேகத்தையும் தீவிரத்தையும் அவரின் இயல்பான கவிதை மொழியும் அரசியல் பார்வையும் தந்து விடுவது ஒரு நல்ல விஷயம் .ஒரு கவிதை

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு .
அவனிடம் நெடுநாட்களாக சிரிப்பு ஒன்று இருந்து வருகிறது.
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அதை உபயோகித்து என்னவெல்லாமோ செய்துவிடுகிறான்.
முதலில் ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்தான்
அது கைவிடப்பட்ட வீடொன்றுக்கு விளக்கேற்றுவதாக அமைந்தது.
பிறகு புறாவொன்றை கூண்டிலிருந்து திறந்துவிட்டு
அதன் உரிமையாளரோடு சமாதானம் செய்வித்தான்
அது சிறுமியின் சிராய்ப்புக்கு மருந்திடுவதற்கு ஒப்புமை கூறப்பட்டது.
பூர்விகச் சொத்துக்காக ரத்தவெறிகொண்ட பங்காளிகளிடையே
மிதக்கும் இலவம்பஞ்சைப் போல நுழைந்த அவன் சிரிப்பு
வல்லூறுவிடமிருந்து கோழிக்குஞ்சை மீட்பதற்கு உவமையானது.
வலி சுமந்து பாரமிழுக்கும் வண்டிமாட்டின் கழுத்தை
ஆசுவாசப்படுத்தி அவன் சிரித்தது
கயவர்களால் வல்லாங்குக்குள்ளான காதலியைத் தோள் சாய்த்து
ஆறுதல் தரும் காதலனைப் போன்றிருந்தது.
புகை வீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடுவதாக
மூர்ச்சையுற்ற கர்ப்பிணிக்கு விசிறிவிடுவதாக
அவ்வப்போது தோற்றம் கொள்ளும் அந்தச் சிரிப்பில்
திக்கற்ற அகதிக்கு தாய்நாட்டைத் தரும் கரிசனமும்
வறிய யாசகனுக்கு விருந்துண்டு கிறங்கும் பாக்கியமும்
சுடர்ந்தபோது நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன்.
சமீபத்தில்,
இலவச வேட்டி சேலை நெரிசலில் இறந்தவனின்
மரணப் பந்தலில் இடிஇடியென அவன் சிரித்தது மட்டும்
துப்பாக்கிக்கு ரவை நிரப்பியதைப் போலானது.
(பக்கம்: 52)
அவரின் கவிதைகளில் பெரும்பாலும் எதார்த்த வாழ்க்கை சம்பவங்களில் மீது எழுப்பப்பபட்டவையாக இருக்கின்றன.  வெறும் எதார்த்தத்தை சொல்வது வெறுமையை கொண்டு வந்துவிடும். அதில் மொழிசார்ந்த ஒரு கட்டமைப்பும் அணுகுமுறையும் கவிதை வாசிப்புக்கான வசீகரத்தை கதிர்பாரதி கவிதைகள்  தருகின்றன எனச் சொல்லலாம் . புனைவின் வழியாக  கதிர்பாரதி  சமூக நடப்பியல் சொல்கிறபோது  அது பல சமயங்களில் அரசியல் கவிதையாகவும் பல சமயங்களில்  படிமங்கள் ஆகவும்  ஒரு கூடுதல்  விசயம் ஆவது உள்ளது. இசையும்  கவிஞனும் படைப்பாளியும்  ஏதாவதொரு உறவை மையமாகக் கொண்டு இருப்பதாலேயே  அவன் கவிதையிலும் வேறு படைப்பின் முயற்சியிலும்  தன்னை முன்னிறுத்தி கொள்ள முடியும் அப்படித்தான்  கதிர்பாரதி தன் கவிதைகளைக் கட்டமைக்கிறார் . இன்றைய அரசியல் சமூக நிலைமைகளை  கண்டுகொண்டு  அதில் தன்னுடைய கருத்துக்களை வைத்து சொல்கிறபோது பல சமயங்களில்  கிண்டல் வந்துவிடுகிறது . கவிதை எந்த இலக்கை நோக்கி செல்கிறது என்று அவர் தீர்மானித்து விடுவதும் கூட இப்படித்தான்  மதுக்கூடங்கள்  என்று ஒரு கவிதை

மதுக்கூடங்களோடு புழுங்குதல்
சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துணை லகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது.
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது
அங்கு நுரைபூத்துத் ததும்பிக் கொண்டிருக்கும் சொற்களின்மீது
இடித்துக் கொள்ளாமல் நுழைதல் வேண்டும்.
உங்கள் இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன் பின் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதி உன்னத அனுபவமல்லவே.
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே சிறந்த தொடக்கம்.
உயிர்த் திரவமெனப் பூரிக்கும் மதுவில்
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுங்கள்.
ஒவ்வொர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழலும்
எதனோடு ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை.
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பது
அடடா... எவ்வாறு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம்.
மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை குமட்டலெடுக்கத் தொடங்கும்.
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டு விட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல்... இன்றும் ஒரேயொரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிப்பெரும் விசும்பலில்
மதுக்கூடமே திரும்பத் தொடங்கிவிடும்.
..கதிர்பாரதி சொல்லும் விஷயங்களில் ஒரு தனித்துவம் இருக்கிறது அந்த சொல் முறையில்  குறிப்பிடத்தக்க திசை இருக்கிறது.  எதார்த்தமும் புனைவும்  இறுக்கமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது . துயருறும்  வசனங்களுடன்   அவை ஓடிக்கொண்டே இருக்கின்றன , ஆமாம் ஓடிக் கொண்டும் வருகிறார்கள் மனிதர்கள் .  பல கவிதைகள்  சம்பவங்களையும் கதைகளும் கொண்டு இருக்கிறது.  இவையெல்லாம் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறு சிறு இழப்பு வலியை சொல்கின்றன.  அவற்றினூடே சொல்லப்படாத வாழ்வின் பல சம்பவங்களை கதிர்பாரதி நிவைவுபடுத்திக் கொண்டே போகிறார். இந்த நினைவூட்டல் அக்கறைதான் கவிதைக்கு இன்னும் மதிப்பை சேர்க்கிறது சொற்களின் அசைவாக  இல்லாமல்  உலகில் அர்த்தம் மிக்க கணங்களை கொண்டிருப்பது  நெருக்கமான ஒரு உறவை அவருடன் வைத்துக் கொள்ள உதவுகிறது . நகர வாழ்வின் நெருக்கடிகளை ஒருபுறத்தில் காட்டுகிறார் என்றால்  அடுத்த புறம் கிராம வாழ்வின் அசலான அனுபவங்களையும் பதிவு செய்கிறார்  .அவையெல்லாம் அவரை பாதித்த விஷயங்கள்  ..கட்டாயம்   ஒரு படைப்பில் சொல்ல வேண்டும் என்பதில் கூட அவர் தீவிரமாக இருந்திருக்கிறார்.  கவிதைகளின் தலைப்பில் கூட  இந்த உள்ளார்ந்த அர்த்தங்களை  அவை கொண்டிருக்கிறார்.
 கதிர் பாரதியின் கவிதை உலகம் சக மனிதர்களின்  இயல்போடு இயங்க கூடியது என்பதால் சுலபமாக வாசிக்கிறேன் . எந்த கவிதை வாசிப்பு ஆதரவோடு தன்னை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் .அதேசமயம்  கண்ணீர் துளிகள்  வெளிப்படையாக இல்லாமல்  உள்ளடங்கிய ஒரு வழியாகவும் இந்த கவிதைகள்  ஒரு தேர்ந்த கவிஞனின் இலாவகமான மொழியை கைக்கொண்டு  அமைந்திருக்கின்றன இயல்பிலேயே அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால்  அவர் அத்தகைய அனுபவங்களையும்  வயலில் உரத்தை தூவிவிட்டு போவதுபோல தூவியும்   அடுக்கியும் விட்டு செல்கிறார் .நல்லேர் பூட்டி தானியங்களை கவிதை விவசாய மனத்தின்  வேதனையாக வழிகளாக விளைவுகளாக இவை அமைகின்றன . .நிலம்  சார்ந்த அனுபவங்களை மனிதர்களைச் சார்ந்தவர்களாகவும் பழைய சங்க இலக்கியத்தின் ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாகவும்  இருப்பது  முக்கியமானது . நிலம் சார்ந்த இயற்கை மட்டுமின்றி அதில் தொடங்குகிற சாதாரண ஆண்களும்பெண்களும் குழந்தைகளும் இந்த கவிதைகளில் விரைவி  பிரபஞ்சத்தின் அங்கங்கள் அங்கங்களாக மட்டுமன்றி கவிதையின் அம்சங்களுடன்  அமைந்துவிடுகின்றன . பல கதைகளை கவிதையாக முயன்றிருக்கிறார்  கவிதைக்கான எல்லைக்கோடு என்று எதுவுமே இல்லாத படி அவை கதைகளுக்குள்ளும் ஓடுகின்றன. ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான் என்ற கவிதை போன்றவற்றை இந்த வகையில் சொல்லலாம் .
" பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி
  கூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா
  பக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி
  அவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை
  அவன் கனவில் பரோட்டா வட்ட வட்டப் பௌர்ணமியாக
  வலம் வந்திருக்க வேண்டும்"
காலங்களைப் பற்றி   உரையாடுகிற இவரின் சொற்களில்  நவீன மொழிக்கான அக்கறை வந்து விடுகிறது . அதில்  சிறு உயிர்களின்  இயக்கத்தையும் அவற்றின் குதூகலத்தையும் கூட நாம் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. என் தாத்தாவிடம் ஒரு கதை இருந்தது என்று ஒரு கவிதை ஆரம்பிக்கிறது அதேபோல இவரிடம் சொல்வதற்கும் பல கதைகள் ஒலிக்கின்றன .அந்தக் கதைகளை உரைநடை கவிதைத் தன்மையில்  விளக்குகிறார் . இந்த நிலம்  வழமையை விலக்கிவிட்டு  பசுமை புரட்சி என்ற பெயரில் மனிதனை இடம்பெயர்ந்து அகதியாய்  மாறிக் கொண்டிருக்கும்  இந்த நூற்றாண்டின் பெரிய அவலத்தை கூட இந்த கவிதைகள் ஒருவகையில் சுட்டிக்காட்டுகின்றனர். மனிதன் மட்டுமில்லாமல் இயற்கை சார்ந்த விவரங்களும் வேறு உயிரினங்களும் இந்தக் கவிதைகளில் ஊடாடி மனித வாழ்க்கையை  அவற்றோடு இருந்தது என்பதைக் காட்டுகிறது  இந்த கவிதை  அரசியல்  விமர்சனங்களாக  சில சமயங்களில் அமைகின்றன  .சமகாலத்தின் கலாச்சார அரசியல் பற்றிய விமர்சனங்கள் ஆகவும்  அவை அமைந்துவிடுகின்றன, கவித்துவ தரிசனங்கள்  என்ற  உரையாடலில்  இந்த கவிதைகளை  அப்பொழுது பார்த்து பொருத்திப் பார்த்து கொள்ளலாம்  கிராமம் சார்ந்த ஒருவருக்கு அது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அமைகிறது  நிலங்கள் மீதான காதலும் பற்றும்  உறவுகளும்  அந்த நிலத்தில் வாழும் பொருட்டு அவற்றை எல்லாம் இழந்து விட்டு நகரும் நகர வாழ்வில் பெருத்த அவமானங்களும்  இந்தக் கவிதைகள் பேசுகின்றன,  பலசமயங்களில் அவற்றிலிருந்து  சமூக வழக்கங்களும்  நிலம் சார்ந்த அனுபவங்களும்  மனதை கண்டு கொள்ளலாம்

      அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு... அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது - கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன்.  ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த அடையாளத் தை மேம்படுத்தும் முயற்சிகள், வேறு அடையாளங்களைச் சிறுமைப்படுத்தும்  முகங்களை அவர் அதில்  தேடினார். எதையும் கண்டடையவில்லை என்பதில் எனக்கும் ஆறுதல்தான்.ஆனால் அந்தப் பேராசிரியர் போன்றோர் அதில் அடையாளம் கண்டு கொண்டதை நிச்சயப்படுத்திக் கொள்வர். ஆனால் அதை மீறி குதர்க்கமாய் எதையும் கண்டு கொள்ள முடியாது. அவையும் சங்கீத வசனங்களாய் கவிதைக்குள் வந்திருக்கும் வழக்கைதான் காண முடியும்..சாதி வேண்டாம் மதம் வேண்டாம்  என்ற உறுதியான மனநிலையில் சாதி இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு போக்கு தீவிரமாகியிருப்பது எவ்வளவு துயரம் கை நிலத்தை வாய்க்கரிசி போடுவது போல்.
கதிர்பாரதியின் தமிழ் சமூக்கதையில் - ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சமூக வழக்கு புதைந்திருப்பதையும் நிலம் சார்ந்த அநுபவங்களின் விஸ்தரிப்பும் ஒரு அழகியலாக அமைந்து வருவதையும் காணலாம்.அது உருவாக அந்நிலத்து சாரமான வாழ்வும் நிலத்தை விட்டுப் இடம் பெயர்தலில் உண்டாகும் சீர்குலைவுகளும் மூலங்களாக இருக்கின்றன. அவரின்            நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் கார்பரேட்டுகளால் சிதைக்கப்படுவதைப் பற்றிய சித்தரிப்புகள் முக்கியமானவை.                     நிலவே../மதுவே/ உனை ஒருவருக்கும் கொடேன் என்ற தீர்மானத்தில் இருப்பவர்தான். ஆனால் எல்லாம் கை நழுவிப் போகின்றன. காலடி நிலம் சரசரவென்று பாம்பு நழுவுவது போல் வேற்றாள் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து வழக்குத்தொடுப்பதிலும் அந்த உணர்வுகளைச் சங்கமிக்க வைத்து வாதாடி மனிதாபிமான சான்றுகளை எடுப்பதுரைப்பதிலும் அவரின் கவிதைகள் முன் நிற்கின்றன எனலாம். அதுவே அவர் கவிதைகளின் பொது அழகியலாவும் மிளிர்கிறது.
                         ஆனந்தியைப் பெண்ணாக நான் நினைத்துக் கொண்டு ( முதிரிளம் பருவத்து முலையுடன் ) தட்டான்கள் பெண் கவர்ச்சி சார்ந்தே தாழப்பறப்பதாக நினைத்தேன். ஆனால் ஆனந்தி நிலமாகிப் போனதில் எனக்கும் இன்னும் மகிழ்ச்சிதான். தானியக்கிடங்குகள் நிறைந்த நிலத்தின் பாடல்கள்,மெட்ரோபாலிட்டன் நிலத்தின் நாற்சந்தி, டம்ளரில் தண்ணீர் எடுத்து காடு வளர்க்கும் சிறுவன், மாநகரப்பூங்காவின் வடமேற்கு மூலை  என்று காட்டி     மெட்ரோபாலிட்டன் நிலத்தில் வேரறுந்து கிடப்பவர்களைக் கவிதைக்குள் கொண்டு வருகிறார்.ஆட்றா ராமா.. .  ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. ஆட்டங்கள் ஆடி சமரசம் செய்து கொள்பவர்களால் காணப்படும் பின் தங்கியவர்களின் உயரம் தட்டுப்பட்டு விடுகிறது. கருவாட்டு ரத்தமூறிய இட்லிகளும் இரு கரு நிற கோலாக்களும், இனும் பிறவும் பொய்யா மெய்யா என நாம் வெடித்து விளையாடு எருக்கம் மொட்டுகளாக மாறி நம்மை அலைக்கழிக்க வைக்கிறது. பகலும் இரவும் மாறி மாறி அலைக்கழிக்கின்றன. ( இத்துணை ஆதூரமானதா உன் விரல்.. இத்துணை ஆதூரமானதா உன் பகல் .,சில்லென விடியப்போகும் இரவால் அழகாகப் போகிற பகல் வெட்கமில்லா இரவு )
                        நுண்ணுயிர்கள் , பறவைகள் விலங்குகள் குறிப்பாய் வெட்டுக்கிளி, சிட்டுக்குருவி போன்றவற்றை உருவகப்படுத்திய   கவிதைகள்  ஆவணக்கொலை போன்ற சமூக நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும் இருக்கிறது. விமர்சனங்களை மீறி மோதி மிதித்து  முகத்தில் உமிழ்ந்து விடும்கோபத்தை எதிர்ப்பின் விதைகளாகவும் இக்கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். முப்பரி பின்னலிட்ட நாக சர்ப்பமாகக் கிடக்கும் ஜடையைப் போல மொழியின் இறுக்கத்திலும் அனுபவங்களின் அடர்த்தியிலும்  இக்கவிதைகள்  வாசிப்பின் போதும் பின்னாலும் யோசிக்கையில் சுழித்தபடி சிலேப்பி மீன்களைப் போல் நீந்திக்கொண்டிருக்கின்றன.இயல்பிலேயே மிகவும் நெருக்கமாகி விடுகின்றன.