சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 27 மார்ச், 2024

முத்துக்கள் பத்து : சுப்ரபாரதிமணியன் கதைகள் அறிமுகம் மதுராந்தகம் சிறுகதை எழுத ஆசைப்படுபவர்கள் முதலில் முத்துக்கள் பத்து என்ற சுப்ரபாரதி மணியனின் இக்கதைகளை விருப்பத்துடன் படித்துப் பாருங்கள். 10 கதைகள் 10 மாதிரி. ஒன்று போல் ஒன்றில்லை ஒவ்வொரு கதையிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது முதற்கதை ; ஒவ்வொரு ராஜகுமாரி கொள்ளும் என்ற கதை கறி சாப்பிடுவதைப் பற்றிய சுவாரஸ்யம். முஸ்லிம் வீட்டுக்கறி எப்போதும் ருசியோடு தான் இருக்கும் என்பதோடு வேகம் ஆரம்பிக்கும் கதை .கறி சமைப்பது, கோழிகளை கொன்று சுத்தம் செய்து அதற்கு தேவையான பொருட்கள் எப்படி சேர்க்க வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்பதை அருமையான் பாஷையில் நாவில் நீர் சொட்ட சொட்ட சொல்லுகிறார். இந்த கதை பற்றி சுஜாதா சமையல் கதை என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதில் சமையல் மட்டுமா இருக்கிறது சாப்பிடுவது என்ற அம்சம் தாண்டி நம்முடைய கலாச்சார அம்சங்கள் இதில் இருப்பதை சுஜாதா தவற விட்டு இருக்கிறார் .சுப்ரபாரதி மணியனின் அப்பா தொகுப்பில் சுஜாதா எழுதிய நீண்ட முன்னுரையில் இந்த கதை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். இந்த கதை ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.. இரண்டாவது கதையில் ” இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் “ என்ற கதையில் டர்பன் கட்டுகிற தொழில் செய்கிற ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல் பற்றியும் எதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு எழுதி இருக்கிறார் கவனமாக எழுதி இருக்கிறார் இந்த கதை சிறந்த கதைக்கான ஆண்டின் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.. இவரின் கதைகளில் மிக முக்கியமான கதை.. இனி என்ற பத்திரிகையில் வந்தது அதன் ஆசிரியராக எஸ் வி ராஜதுரை அவர்கள் இருந்தார். மூன்றாவது கதை விமோசனம் வெளிநாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்களை, அங்கே பாஸ்போர்ட் விஷயங்கள், வேலை சம்பந்தமான விஷயங்கள் என சுவாரஸ்யமாக அந்த நிகழ்வுகளை வரிசையாக சொல்லி வருகிறார். பொதுவாக ஒரு சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறார்.லண்டனை மையமாகக் கொண்டு இந்த கதை எழுதபட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கை, லண்டன் போய் திரும்ப முடியாமல் இருக்கும் ஒரு தமிழனின் வாழ்க்கையை இந்த கதையைச் சொல்லுகிறார். நாலாவது கதை புதைந்த காற்று: இந்த கதை புற்றுநோய் பற்றியும் பட்டாசு வகையையும் தீவிரவாதிகளின் கதை போலவும் சொல்லுகிறது. ஒரு விதமான திகில் கதை போல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல்வாதிசார்ந்த நடவடிக்கைகள் உள்ளன ஐந்தாவது கதை தொலைந்து போன கோப்புகள் இது ஒரு வித்தியாசமான கதை வாசகர்களின் தோள் மீது கை போட்டு அழைத்துச் செல்லும்போது நடக்கும் கதை போல எழுத்தாளர் கூடச் செல்வார். ராணுவத்தின் கொடுமைகள் பற்றியது காஷ்மீரின் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் உள்ளன. மனித உரிமை மீறல் பற்றிய கதை . ஆறாவது கதை மிச்சம் என்ற தலைப்புக் கதை. வாசகனை பிரமிப்பில் அழ வைக்கும். இதுல உள்ள விவரங்கள் சாதாரணமாக இருக்க நினைத்தால் ஏமாந்து போவீர்கள் கோவில் விழாவிற்குள் இத்தனை விசயங்களா. நிகழ்வுகளுக்கு செல்கிறான் ஆச்சரியப்பட வைக்கும் அணுகுமுறைகைகள், அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் அளவில்லாது இத்தனை விவரங்களை கண்டு கேட்டு வரிசைப்படுத்தி சுவாரஸ்யமாக எழுத வேண்டும் இந்த கதையில் உரையாடல்களையும் சூழ்நிலையையும் கவனியுங்கள். நாகரீக உலகம் , கடவுளை மறந்த மனிதர்கள். பூசாரி கோபித்துக் கொள்வது என்றெல்லாம் சென்று முடிகிறது வாக்கு. இதுவும் பாராட்ட கதை. இந்த கதையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அவள் சமையல் செய்தே அலுத்துப்போகிறதும் மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. சிவசங்கரி தொகுத்த சிறந்த கதைகளில் இந்த கதை உள்ளது. எட்டாவது கதை நீலப்படமும் சுசித்ராவும். ஒரு குடும்பஸ்தன் நீலப்படம் பார்க்க ஆசைப்பட்டான். அதற்கு எத்தனை தண்டனைகள் போட்டி தினத்தில் இருப்பவன். நயமாக எடுத்துரைப்பார். இந்த நீலப் படத்தில் காதலர்கள் வருகிறார்கள் அவர்கள் மாறி போகிறார்கள். சில காட்சிகளுக்கு பிறகு வருகின்ற திடீர் திருப்பமாக வரும் காட்சிகள் நிஜத்தை குறைத்து சொல்லியிருக்கிறார். ஒன்பதாவது கதை கழிப்பறைகள் இந்த கதை படிக்கும் போது நமக்கு ஒரு விதமான அசீச உணர்வுகள் ஏற்படும். இதைப் பற்றி சொல்வதென்றால் இதைக் கூட நயமாக எழுதியிருப்பார் கழிப்பறை இல்லாமல் கஷ்டப்படும் சாதாரண மக்களின் பிரச்சினைகளில் இக்கதை உள்ளது. இதில் உள்ள உரையாடல் கவனித்துக் நினைவு கூறத்தக்கது பத்தாவது கதை ஈரம் இது சுற்றுப்புற சூழல் பற்றியது. சாயக் கழிவுகள் தேங்கி நிற்கும் ஒரு அணை. அங்கு பக்கத்தில் உள்ள மனித வாழ்க்கை எவ்வளவு சீரழிவுக்கு உள்ளாகிறது என்பதை சொல்லி இருக்கிறார். அவருடைய சுற்றுப்புற சூழல் சார்ந்த கதைகள் இது ஒரு முக்கியமான கதை பொதுவாக இந்த கதைகள் மற்றும் சுப்ரபாரதிமணியன் அனுபவங்கள் எதை எடுத்தாலும் சுவாரஸ்யம் சொல்கிறது படித்து பாருங்கள் 10 கதைகளும் முத்துக்கள்தான் என்று பாராட்ட தோன்றும். இதை அமிர்தா பதிப்பகம் சென்னை வெளியிட்டிருக்கிறது
திரைப்பட விழா பற்றிய நாவலும் சில திரைப்பட விழா அனுபவங்களும் : சுப்ரபாரதிமணியன் திருப்பூர் வீ ட்டி. சுப்ரமணியன் தென்னிந்திய திரைப்பட சங்கங்களில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருந்தார் அவருடன் நான் முதன் முதலாக பம்பாய் திரைப்பட விழாவிற்கு சென்றேன் .அப்போது எம்.கோபாலகிருஷ்ணன் கூட வந்திருந்தார் அது 92 ஆக இருக்கும். அப்போதெல்லாம் திரைப்பட விழா படங்கள் பார்ப்பது என்பது மிக முக்கியமான அபூர்வமான விஷயமாக இருந்தது. குறுந்தகடுகள் கூட கிடைக்காத காலம். ஆனாலும் இப்போது இருக்கிற அளவில் பிரதிநிதிகள் வரமாட்டார்கள் .பம்பாய் திரைப்பட விழாவில் நான் கலந்து கொண்ட போது கிஸ் லோஸ்கியின் த்ரி கலர்ஸ் படம் ஒரு நாள் திரையிடப்பட்டது அப்போது பால்கனியில் எங்களுடைய வரிசையில் கமல்ஹாசன் அவர்கள் இருந்தார். ஒரு படம் முடிந்த பின்னால் ( த்ரி கலர்ஸ்ல் ஒரு படம் )அடுத்த படத்திற்கு எடுத்து சென்றால் இருக்கை கிடைக்காது என்பதால் இருக்கையை விட்டு நகராமல் உட்கார்ந்து இருப்போம். அப்படித்தான் கிஸ் லோஸ்கியின் இரண்டாவது படம் தொடங்கின போது அந்த இருக்கை கையை விட்டு போய்விடக்கூடாது என்று கமலஹாசன் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஞாபகம் வருகிறது. வி ட்டி சுப்பிரமணியம் அவர்கள் அரசு பணியில் இருந்ததால் அவர் பதவி காலத்தில் இலக்கிய விழாக்கள், திரைப்பட விழாக்கள், மற்றும் மாதந்தோறும் திரைப்பட காட்சிகளை சிறப்பாக நடத்தினார். என் சாயத்திரை நாவலுக்கு ஜெயகாந்தன் திலகவதி போன்றவரை வைத்துக்கொண்டு வெளியீட்டு விழா நடத்தினார் பல திரைப்பட விழாக்களை நடத்தினார் அதில் ஒரு திரைப்பட விழாவில் பாலு மகேந்திரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எங்களுடன் நிறைய பேசினார். நியூலுக்ஸ் பிலிம் சொசைட்டி என்பதை அவர் தொடர்ந்து நடத்தினார் அது சார்பாக ஒரு மாத இதழும் கொண்டு வந்தார். அவர் தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பில் சிறப்பாக பணியாற்றினார் இப்போது அந்த கூட்டமைப்பின் பிராந்தியைக் குழு உறுப்பினராக நானும் இருக்கிறேன். அவர் தொடர்ந்து பல திரைப்பட விழாக்களுக்கு செல்வார் செல்கிறபோது திருப்பூர் பனியன், டீசர்ட் பலவற்றை கையில் கொண்டு செல்வார். திரைப்பட விழாவில் பார்க்கிற முக்கிய பிரபலங்களுக்கு டி ஷர்ட், பனியன் இவற்றை அன்பளிப்பாக வழங்குவார். அவரிடம் திரைப்பட விழாக்களின் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். அவருக்கு பின்னால் கனவு திரைப்பட இயக்கம் திருப்பூரில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பில் கனவு திரைப்பட இயக்கமும் உள்ளது 0 இந்த திரைக்கதைகள் நூல் வெளியாவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் . அவர் உலக சினிமா பாஸ்கரன் அவர்கள் உலக சினிமா பாஸ்கரன். பல திரைப்பட விழாக்களில் இவருடன் கலந்து கொண்டிருக்கிறேன் கோவா திரைப்பட விழாக்களில் ஒரே அறையை பல வருடங்கள் நானும் அவரும், பகிர்ந்து கொண்டிருக்கிறோம் முன்பு கோவையில் குறுந்தகடுகள் நிற்கிற கடையை வைத்திருந்தார் திரைப்பட. விழாக்களை நிறைய நடத்தினார். பிறகு சென்னைக்கு கிளம்பிவிட்டார். இன்ஷா அல்லா என்ற திரைப்படத்தையும் பல குறும்படங்களையும் இயக்கித் தயாரித்தார். நான் திரைக்கதைகள் நூல் எழுதுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் பாஸ்கரன் அவர்கள் ஒருமுறை வெளிநாட்டை மையமாக வைத்து ஒரு திரைக்கதை உருவாக்க படைப்பு தேவை என்றார். நான் மலேசிய பின்னணியில் எழுதி உள்ள என் நாவல்கள் கடவுச்சீட்டு, மாலு ஆகிய நாவல்களை தந்தேன். அவர் அந்த தயாரிப்பாளர் லண்டனைச் சார்ந்தவர் என்பதால் லண்டன் மையமான ஏதாவது கதை இருந்தால் நல்லது என்றார். லண்டன் கதை என்றால் அங்கு நிறைய வசதிகள் உண்டு நிதி வசதியும் கிடைக்கும் என்றார் அப்படித்தான் நான் விமோசனம் என்ற என் லண்டன் அனுபவ கதையை முழுக்கதையாக்கி அவரிடம் கொடுத்தேன் பிறகு அவர் தொடர்ந்து விரிவாக்கிக் கொடுக்கச் சொன்னார் அதையும் செய்தேன். ஆனால் அந்த லண்டன் தயாரிப்பாளர் அவருடன் ஒத்து வரவில்லை. இந்தத் திரைக்கதையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன் அப்போதுதான் அந்த திரைக்கதையும் இன்னும் நாலைந்து நாவல்களை அடிப்படையாகக் கொண்டு நான் அதன் பின்னால் தயாரித்த திரைக்கதைகளும் சேர்ந்து ஆறு திரைக்கதைகள் என்ற பெயரில் என் முதல் நூலை கொண்டு வந்தேன் இப்போது ஏழு திரைக்கதை நூல்கள் வந்துவிட்டன அவற்றில் 55 திரைக்கதைகள் அமைந்துள்ளன. இந்த திரைக்கதைகள் நூல் வெளியாவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் . அவர் உலக சினிமா பாஸ்கரன் அவர்கள் 0 திரைப்பட விழா 3 ஹைதராபாத்தில் இருக்கும் போது ஒரு முறை நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசோகமித்திரன் அவர்களை ராமோஜீராவ் என்ற பத்திரிகையாளர் அழைத்து இருந்தார் அவர் அப்போது வெற்றிகரமாக ஈநாடு பத்திரிகையை தெலுங்கில் நடத்திக் கொண்டிருந்தார். நியூஸ் டைம் என்ற பத்திரிகையை ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.. சர்வதேச திரைப்பட விழாவில் தினமும் ஒரு இலவச இணைப்பாக 8 பக்கங்களில் திரைப்பட விழாக்கள் பற்றிய கட்டுரைகள் கொண்டு வந்தார். அதில் எழுதுவதற்கு தான் அசோகமித்திரன் அவர்களை அழைத்து இருந்தார். அவருக்கு நட்சத்திர விடுதி தரப்பட்டது. அவர் அதை பார்த்து கொஞ்சம் பதறிவிட்டார். இவ்வளவு செலவு செய்து அறையை ஒதுக்கி இருப்பதற்கு பதிலாக இந்த பணத்தை எனக்கு கொடுத்தால் கூட சௌரியமாக இருக்கும் என்று சொல்ல ஆரம்பித்தார். அந்த சமயத்தில் அவருடைய அப்பாவின் இறந்தநாள் வந்தது. அப்போது அவருக்கு திவசம் செய்ய வேண்டும். ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் செகந்திராபாத் ராஷ்டிரபதி பவன் சாலையில் பிராமணர்கள் இதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவரை அழைத்தேன். செகந்திராபாத் அருகில் உள்ள ரயில் நிலையம் பிள்ளையார் கோவிலில் அந்த திவச பூஜையை அவர் நடத்தினார் நடுங்கும் குளிர். அசோகமித்திரனின் மெல்லிய பூஞ்சையான உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது குளிரால் .அந்த திவசக்காரியங்களை செய்தார். திருப்தியாக இருப்பதாக சொன்னார். இதை செய்யாமல் போயிருந்தால் மிகுந்த சிரமத்திற்கு உண்டாகி இருப்பேன். உறுத்தலாக இருக்கும் என்றார். பின்னால் சென்னையில் அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் மனைவியிடம் என்னை இவர் தான் செகந்திராபாத்தில் என் அப்பாவின் திவச காரியத்துக்கு உதவியவர் என்று அறிமுகப்படுத்தினார். எழுத்தாளர் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தபின் எழுத்தாளர் என்று சொல்லி இருக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தையை சொன்னார் ஹைதராபாத் திரைப்பட விழா தினமும் ஐந்தாறு காட்சிகள் நடக்கும். ஆனால் அவர் ஒரு திரைப்படத்தை மட்டும் தான் பார்த்துவிட்டு எழுதுவா.ர் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று ஓய்வு எடுத்தார். அந்த கட்டுரைகள் பெருத்த வரவேற்பை பெற்றன என்பதை அந்த பத்திரிகையில் பின்னால் வந்த கடிதங்கள் நிரூபித்தன. திரைப்பட விழாக்கள் பற்றிய பல கட்டுரைகளை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நான் செகந்திராபாத்தில் இருந்த போது தமிழ்ப்புத்தக்கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்தினேன். சுஜாதா, நா.பார்த்தசாரதி., சுபா உட்பட பலரும் வந்து பேசியிருக்கிறார்கள். அதை ஆரம்பித்து வைத்தவர் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள். முதல் ஆண்டு நான்கு பேருடனும் புத்தகமூட்டைகளுடனும் வந்து புத்தகக்கண்காட்சியை துவக்கினார். இரண்டாம் ஆண்டிலிருந்து நாங்களே பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் பெற்று நடத்தினோம் ஆந்திர மாநிலத் தமிழ்ப் பேரவை நண்பர்களுடன். ஒரு முறை அப்படித்தான் அசோக மித்திரன் அவர்கள் வந்தபோது அவர் படித்த மெகபூப் கல்லூரியில் அந்தக்கண்காட்சியில் நடந்ததால், அக்கல்லூரியில் அவர் படித்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் ரொம்ப நேரம் பேசினார். அசோக மித்திரன் ரொம்ப நேரம் பேசினார் என்பது பலருக்கு ஆச்சர்யமான தகவலாய் இருக்கலாம். அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால்ய காலத்தை செகந்திரபாத்தில் கழித்தவர் . அவருக்கு ஏதாவது வாங்கித்தரலாம் என்று கேட்டபோது அவர் சொன்னது: "எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி வாங்கித் தந்தா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மேண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “ ஜெயமோகனும் நானும் தயாரித்த கனவு ” அசோகமித்திரன் சிறப்பிதழினை” கொண்டு வந்தோம் . அந்த இதழ் பின்னால் அவரின் 77 ம் வயதில் “அசோகமித்திரன் 77 “ என்ற பெயரில் இன்னும் சில கட்டுரைகளை இணைத்து அம்ருதா பதிப்பகம் மூலம் ஒரு தொகுப்பாக திருமதி திலகவதி அவர்கள் கொண்டு வந்தார். -சுப்ரபாரதி மணியன் .. Thirai novel..Subrabharathimanian .,Rs 300 Zero degree publication , Chennai ..Page 198 0 திரை நாவல் : யுவராஜ்சம்பத் பொதுவா உங்க நாவல் எல்லாமே ஏதாவது ஒரு பொது பிரச்சனையே மையமாக வைத்து அதை சுற்றி பின்னப்பட்டிருக்கும்.. ஆனா இது கொஞ்சம் அப்படி இல்லையோ? எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது கந்துவட்டி கொடுமை பொருந்தாக் காதல் இந்த இரண்டைப் பற்றியும் ஒரு சின்ன லீடு இருந்தது. நான் கூட அதை விவரித்து பின்னாடி நாவல் பயணிக்கும் அப்படீன்னு நினைச்சேன் ஆனா நீங்க செய்யல. ஏன்? போதும் அப்படிங்கிற ஒரு மனநிலையா? எவ்வளவு சொன்னாலும் இந்த சமுதாயம் கேட்காது அப்படிங்கிற ஒரு வெறுப்புணர்வா?? .. உங்க நாவலை படிக்கிற எல்லாருக்கும் இந்த வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாகவே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன்... கதை இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டு இடங்களில்.. திருவனந்தபுரத்திலும் கோவாவிலும். சாதாரண மனிதன் திரைப்பட திருவிழாக்களை எப்படிப் பார்க்கிறான் என்கிற ஒரு மாறுபட்ட பார்வை. திரைப்பட விழாக்களுக்கு தவறாமல் செல்கிற அறிவுஜீவிகளின் பார்வையில் இந்தியத் திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன ,சர்வதேச திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் தரத்தில், கதையில், காட்சிகளில், ஒப்பு நோக்குதல் போன்றவை மிக சிறப்பாகவே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். சினிமாத்துறையில் திருப்பூரைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு கடந்த 50 வருடங்களாக சிறப்பாகவே இருக்கிறது என்பதை உங்கள் நாவலைப் படித்து ,அதற்குப்பின்னால் தெரிந்துகொண்டேன். எனக்கெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது .நாமும் ஏதாவது ஒரு நாள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று அந்த விழாக்களை ஏன் அறிவு ஜீவிகள் பெரிதாக கொண்டாடுகிறார்கள், அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது . ஆனால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்லும்பொழுது எப்படியெல்லம் சிரமப்பட வேண்டும். பயணம் முதல் உணவு வரை 4,5 தியேட்டர்களுக்கு நடுவே ஓடுகிற ஓட்டம். இந்த திரைப்படத்தை பார்க்க முடியுமா முடியாதா என்கிற ஏக்கம் .அதை பார்ப்பதற்கு இரவு 12 மணிக்கு எழுந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவலம். இதையெல்லாம் மீறி மொழி தெரியாத சக மனிதர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த நாவல் . வெறுமனே திரைப்பட விழாக்களை மட்டும் முன்னிறுத்தாமல் அந்தப் பகுதி மக்களின் உணவு வகைகள்,, கலாச்சாரம் ,மொழி ,சிறப்பு போன்ற எல்லாவற்றையும் உங்களுடைய பாணியிலேயே மிக அழகாக, இயல்பாக, நாவலைப் படிக்க வாசகனின் மனதில் பதியும்படி எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள். இது உங்களுடைய வழமையான உத்தி என்றாலும்கூட, முழு நாவலையும் படித்து முடித்த பிறகு எத்தனையோ புது வித உணவுகளையும் ,அந்த மாநில மக்களின் கலை ,பண்பாடு போன்றவற்றயும், சினிமா சம்மந்தபட்ட தொழில்நுட்ப வார்த்தைகளையும் தெரிந்து கொண்டேன். அந்த விழாவிற்கு நானே சென்று வந்து அவதிப்பட்ட, பிரபுவாக என்னை உணர்ந்து கொண்டேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இது. உங்களின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வாசகனுக்கும் உலக சினிமா பற்றி பொது அறிவு கொடுத்து இருக்கிறீர்கள். * தமிழ் நாவல் களத்தில் புதிது இது.நாவல்களின் வகைமைகளில், களங்களில் புதிது புதிதாக எடுத்துக் கொள்ளும் உங்களின் முயற்சியில் திரைப்படவிழாக்களின் கோலாகலம் இதில் Thirai novel..Subrabharathimanian .,Rs 300 Zero degree publication , Chennai ..Page 198 0
*நீர்த்துளி* 0 நாவல் நிகழும் காலக்கட்டத்தையொட்டி திருப்பூரில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் ஐயா. தவணை விலைப் பண்டக்காரர்கள் முதல் தவணைப் பரிவர்தகர்கள் வரை. மறுகரை தெரியாத தவிப்பில். தொழிலாளர்களும் சிறு முதலாளிகளும் ஒப்பந்தக் கம்பெணிக்கார்களும். குடிநோயும் விபத்துகளும் தப்பி ஓட முடியாது நிலத்தோடு விலங்கிட்டுக் கொண்டவர்களும். ஆறுதலைத் தவிர வேறெதையும் பங்கிட்டுக் கொள்ள முடியாத காலக்கட்டம். அதே சமயம் ஒரத்துப்பாளையமும் விவசாயமும் மாசுக்கட்டுப்பாட்டுக் கோடுகளுக்கு எதிர்ப்புறமும் உட்புறமும். சிக்கிக்கொண்டு மூச்சுப்பாடும் விளையாட்டு . எதனால் யாரால்? வரலாற்றுச் சோகம்... ஐயா. 0 *நீர்த்துளி* சாயப்பட்டறைகள் மூடப்பட்டு. அவை தொழில் மாநகரின் . நீள் சரிவுக்கட்டமாக அமைந்த காலத்தின் யதார்த்தப் பிண்ணனி யோடு. வெளியூர் தொழிலாளர்களின் அன்றாட நெருக்கடிகளையும். அத்தோடு தனித்திருக்கும். ஆண்_ பெண் தொழிலாளிகளின் சிக்கல்களையும். பாலியல் தேவைகளையும். அதை ஆற்றுப்படுத்தப் போராடும் சூழல்களும். துல்லியமான எண்ணவோட்டங்களாக நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன. கலா - லிங்கம் என்ற மையப் பாத்திரங்களின் வாழ்க்கைப் போராட்டமானது. மலரும் முள்ளும் கலந்து நகரும் பொழுதுகளைக் கொண்டது. லைன் வீடானது. வசிக்கும்வீட்டை ஒட்டிய இரண்டு தடுப்புச்சுவர்களும் இரு காதுகளைக் கொண்டது‌‌.. இரகசியங்களுக்காவும் அவசியங்களுக்காகவும் காத்திருப்பவை அவை. எவ்வளவு வேடங்களைப் போட்டுக்கொண்டாலும். அனுபவப் பார்வைகளால் அரிதாரம் கலைத்து மெய் உணரக்கூடிய வை. எதிர் வீடு பக்கத்து வீடுகளெல்லாம் காரணங்களைத் தெரிந்து கொண்டாலும் காயங்களுக்கு மருந்திடும் சொற்கள் கொண்டவை. பொதுவான வீடாக உடைமைக்குரிய வீடாக இருக்கும் போது மேற்கண்டவைகள் சாத்தியமில்லை. வாடகை வீடுகளின் பரஸ்பர புன்னகைக்குள் வஞ்சங்கள் பெரும்பாலும் தஞ்சம் கொள்வதில்லை. நிரந்தரத் தைப் போல் அந்தரத்து மனவோட்டங்கள் அங்கில்லை. அருமையான உரையாடல்களும் காட்சிகளும். லைன் வீடுகளை துல்லியமாக காட்டுகிறது. நீர்ப் பிடிப்பில் இருந்து. வெக்கைக்கு நீர்க் கொடியாக ஈரத்துணி களை இரவில் கட்டி உறங்க முயலும் பொழுதுகளும். சிறப்பான பதிவுகள். வேலை நிலைக்காது இடப்பெயர்ச்சி யாவதும். தேர்தல் சமயங்களும் விபத்துகளும். ஊர் நோக்கி பண்டங்களோடு நகரும் கெடுபொழுதுகளும். மாநகரின் வரலாற்றுத் தடயங்களாக பதிவாகியுள்ளது. குடும்பம் மீறிய உறவுச் சிக்கல்கள். அதைத் தொடர்ந்த உளவியல் சிதைவுகள். எல்லாவற்றையும் மீறி வாழத்துடிக்கின்ற கனவுகள். அந்தக் கனவுகளே காலச் சுழற்சியைக் கழற்றி அலசிக் காயப்போடும் துணிவைத் தருகிறது. கலா , கலாச்சாரங்களைத் தேடியல்ல கனவின் சாரல்களைத் தேடிப் பயணிக்கும் சக்ரவாகம். லிங்கம் மகாலிங்க கனவுகள் பலிக்க வேண்டியல்ல பலியிடப்படுவதிலிருந்து விலகிக் கொள்ளும் பீடம். நீர்த்துளி அருமையான வாழ்வென்று சொல்ல முடியாவிட்டாலும். வாழ்வெனும் பெருந்துகள் வெடிப்பின் உப்புப் பரல்களையும். மாணிக்கப் பரல்களையும் தரிசிக்க முடிந்தது. Selvaprakash N.
ஹைதராபாத் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன் அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள் மூலம்தான் ஹைதராபாத் பற்றி நான் அறிந்திருந்தேன். ” பதினெட்டாவது அட்சக்கோடு “ நாவல் மற்றும் நூறு சிறுகதைகளில் அவர் எழுதிய சித்தரிப்புகளையும் ஹைதராபாத் மக்கள் வாழ்க்கையையும் அறிந்திருந்தேன். இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் ) செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . . தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் . இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “. என் முதல் நாவலை நர்மதா ராமலிங்கமும், அடுத்து வந்த பதிப்புகளை மருதாவும், டிஸ்கவரி புக் பேல்ஸ் வேடியப்பனும் வெளியிட்டார்கள். 0அந்த நாவல் பற்றி ஜெயந்தன், ஜெயமோகன், நகுலன் போன்றோரின் கீழே உள்ள குறிப்புகள் அந்நாவல் வாசிப்பிற்கு உதவும் 1 ஜெயந்தன் : ” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி ) 2 ஜெயமோகன் நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87 3. நகுலன் சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”. இந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று. 0 என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம் ” சுடுமணல் ”நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை. 0 சுடுமணல் பற்றி சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தோப்பில் மீரான் அவர்களின் குறிப்புகள் கீழே உள்ளன. சுப்ரபாரதிமணியன் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாளி. கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து ‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர். தமிழ் இலக்கிய உலகில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள இவர் இதுவரை பதினைந்து நாவல்களையும் பதினைந்து சிறுகதைத் தொகுதிகளையும் உள்ளடக்கிச் சுமார் அய்ம்பது படைப்புகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவருடைய இலக்கிய படைப்பாக்க முயற்சி நாவல்கள், சிறுகதைகள் என்று நின்று விடாமல் கவிதையிலும், விமர்சனத்திலும் கூட விரிவடைந்து தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளன. இந்த நாவலாசிரியருடைய ‘சாயத்திரை’ என்ற நாவல் ‘சாயம் புரண்ட திரா’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அதனுடைய வங்காள, ஆங்கில, இந்தி, கன்னட மொழிபெயர்ப்புகளும் வெளி வந்துள்ளன. ‘தேநீர் இடைவேளை’ என்ற (சாய இடவேளெ) , பிணங்களின் முகங்கள் ( பிரேதங்களின் முகங்கள்) ஆகிய இவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சுப்ரபாரதிமணியனுடைய பிறந்த ஊர் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூராக இருந்த போதிலும் தொடக்க கால நாவல்கள் இரண்டும் அய்தராபாத் பின்னணியில் எழுதப்பட்டவை. தொடக்க காலத்தில் இவர் அங்கு பணியாற்றியதன் காரணமாக அதைப் பின்புலமாக்கி இவர் எழுதியுள்ளார். அதன் பிறகு, வெளியிடப்பட்டவை திருப்பூர் என்ற தொழில் நகரத்தைப் பின்புலமாக்கி எழுதப்பட்டவை. சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பிற இலக்கியப் படைப்புகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது சிறிதளவு திறனும், மாறுபட்டதுமாக உள்ள ஒரு பின்புலத்தில் படைக்கப்பட்ட ‘ஓடும் நதி’ விமர்சகர்களுடைய கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.. கூரிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய மிக நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது.இது என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது. இவருடைய இலக்கியப் படைப்புகள் முழுவதும், வாழ்க்கையில் காணப்படுகின்ற மாற்றங்களையும், தகர்வுதலையும், நிராசைகளையும், அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து வருகின்ற மனிதர்களுக்குரிய நியாயங்களை முன் நிறுத்திக் கூடியவையாக உள்ளன. உலகமயமாதல் சூழ்நிலைமையில் தொழில் நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுடைய நரக வேதனை மிகுந்த வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கக் கூடியவையாக இவரது படைப்புகளின் நோக்கமாகும். தொழிலாளர்கள் கொடுமையான முறையில் சுரண்டலுக்கு உள்ளாகும் நவீன முதலாளித்துவத்திற்கு, புதிய அடிமைத் தனத்திற்கு எதிராக நின்று, தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டி உரத்த குரல் எழுப்புவது இவருடைய படைப்புகளின் வாயிலாக இவர் மக்களுக்குச் செய்யும் பணியாக உள்ளது. இந்த வகையில் இவர் ஒரு தீவிரமான இலக்கியப்படைப்பாளியாக விளங்குகிறார். மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள உழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படும் நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும் விதத்தில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன.நதிநீர்பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “ சுடுமணல்”. .. 0 நகரம் 90 : ஹைதராபாத் பற்றிய என் மூன்றாம் நாவல் * சுஜாதா தேர்வு செய்து பரிசளித்தது * குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைத் தந்த படைப்பு . அந்த அனுபவம் “ மண்புதிது “ என்ற தலைப்பில் காவ்யா பயண நூலாகவும் வந்தது. * குமுதம் இதழில் தொடராக வந்தது * மதவாதத்தை அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்தும் போக்கையும் மதக்கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் பற்றியுமான நாவல். * மதவாதத்திற்கு எதிரான முக்கிய இலக்கியப் பதிவு இந்நாவல் 0
14/ 40 கொண்டை ஊசி வளைவு நாவல் சுப்ரபாரதி மணியன் அறிமுகம் : மதுராந்தகன் தலைப்பை பார்த்தால் ஏதோ மர்ம கதையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும் ஆனால் வாசகனை ஏமாற்றி வைத்த பெயர் என்று அறிந்து கொள்வீர்கள். கதையில் நாயகன் ராஜகுமாரன் ஒரு நடுத்தர குடும்பஸ்தன். சிந்தனையாளன் வாழ்க்கை ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பறளியாற்றின் கரையில் உள்ள ஆசிரமத்திற்கு ஆன்மீக பயிற்சி முகாமுக்கு செல்கிறான். அங்கு சந்திக்கும் மனிதர்கள் பெண்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் அவர்களோடு பழகுவதும் நாவல் முழுக்க சொல்லியிருக்கிறார். பொதுவாக நான்கு நாட்கள் பயிற்சி முகாமில் இருந்த ராஜகுமாரன் அழகிய பெண்களோடு பேச வேண்டும், பழக வேண்டும் என்னும் ஆசையில் வள்ளி என்ற பெண்ணை நயன்தாரா என்ற பெயர் மாற்றி ஆவளோடு பேசுவது அவனுக்கு நிறைவு தருகிறது .பயிற்சி முகாமின் சூழ்நிலைகளை பற்றி மிக அழகாக சொல்கிறார். வாசகன் அந்த இடத்திலேயே இருப்பது போல் அந்த உலகம் பற்றி எழுதியுள்ளார். பயிற்சி முகாமில் உள்ள கட்டுப்பாடுகள் பணியாளர்களில் நடைமுறைகள் என்ற அனைத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார். நயனதாராோடு பேசுவது பழகுவதின் எல்லை வரை நாகரீகமாகச் சொல்லி இருக்கிறார் தலைப்பான 14/40க்கு என்ன அர்த்தம் என்பதை வாசகர்களுக்கு இறுதியில் ஒரு திருப்பம் ஏற்படுவதால் சொல்லியிருக்கிறார். பொதுவாக அந்த பயிற்சி முகாமில் தங்கி உள்ளவர்கள் தன் குடும்ப சிக்கலிலிருந்து தப்பிக்கு வந்து இந்த பயிற்சி முகாமில் தங்கி இருப்பது , சொர்க்கத்தில் இருப்பதாக சொல்வார்கள். ஆண்களும் பெண்களும் பலமுறை வந்தவர்களும் உண்டு பிரதேச சூழ்நிலையை வர்ணனையில் எழுதியிருப்பது எழுத்தாளரின் புறக்கண்ணோட்டத்தை தெளிவாக காட்டுகிறது இவர் ஒரு பயண ஆர்வலராக இருப்பதால் வாசகனுக்கு தெளிவாக சொல்லிச் உள்ளார்., வாசகன் அந்த இடத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்கும் நாவலை கொண்டு செல்வதில் ஒரு சரளமாக நடையை கையாண்டு உள்ளார். வாசகனுக்கு சிரமம் இல்லாமல் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது நயனதாரா தன் பெயர் அல்ல, அதுவா நான் பேசியது எல்லாம் பொய் என்று என்று சொல்லிவிட்டு வால்பாறை செல்லும் பஸ்ஸில் ஏறி சென்றுவிட கதையின் நாயகன் பிரம்மை பிடித்தவாறு நின்று கொடுப்பதுவுடன் நாவலை நிறைவு செய்கிறார். அவள் வந்து போகும் அனுபவம் எல்லாம் மாயை என்று சொல்லி செல்வதோடு கதை முடிகிறது இந்த நாவலில் எழுத்தாளர் சுப்ரபாரதிம்ணியன் நான்கு நாள் பயிற்சி முகாமுக்கு சென்றதை நாவலாக்கி இருப்பது நீ ஒரு கோடு போடு நான் அதை ரோடு போட்டு காட்டுகிறேன் என்று சொல்வது போல் உள்ளது. அவர் எழுதிய நாவலில் மிக எதார்த்தமான நாவல் இது அவர் பயணத்தை மேற்கொள்வது, அந்த பயணத்தைப் பற்றி நூல்கள் எழுதுவது இதைத் தவிர அந்த பயணத்தை நாவலாக எழுதுவது என்றெல்லாம் செய்து வருகிறார், அப்படி இருந்தால் இது ஒரு பயண நாவலாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த கதையின் தலைப்பு திரில்லர் கதை போல இருக்கிறது என்று சொன்னேன் இதை திரைக்கதையாக்கும் முயற்சியில் திரில்லர் திரைக் கதைஎன்றுதான் அவர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம் .ஒரு கதையை திரில்லர் கதையாக்குவதில் அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் ( ,உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூபாய் 200 மதுராந்தகன் ) முத்துக்கள் பத்து : சுப்ரபாரதிமணியன் கதைகள் அறிமுகம் மதுராந்தகம் சிறுகதை எழுத ஆசைப்படுபவர்கள் முதலில் முத்துக்கள் பத்து என்ற சுப்ரபாரதி மணியனின் இக்கதைகளை விருப்பத்துடன் படித்துப் பாருங்கள். 10 கதைகள் 10 மாதிரி. ஒன்று போல் ஒன்றில்லை ஒவ்வொரு கதையிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது முதற்கதை ; ஒவ்வொரு ராஜகுமாரி கொள்ளும் என்ற கதை கறி சாப்பிடுவதைப் பற்றிய சுவாரஸ்யம். முஸ்லிம் வீட்டுக்கறி எப்போதும் ருசியோடு தான் இருக்கும் என்பதோடு வேகம் ஆரம்பிக்கும் கதை .கறி சமைப்பது, கோழிகளை கொன்று சுத்தம் செய்து அதற்கு தேவையான பொருட்கள் எப்படி சேர்க்க வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்பதை அருமையான் பாஷையில் நாவில் நீர் சொட்ட சொட்ட சொல்லுகிறார். இந்த கதை பற்றி சுஜாதா சமையல் கதை என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதில் சமையல் மட்டுமா இருக்கிறது சாப்பிடுவது என்ற அம்சம் தாண்டி நம்முடைய கலாச்சார அம்சங்கள் இதில் இருப்பதை சுஜாதா தவற விட்டு இருக்கிறார் .சுப்ரபாரதி மணியனின் அப்பா தொகுப்பில் சுஜாதா எழுதிய நீண்ட முன்னுரையில் இந்த கதை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். இந்த கதை ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.. இரண்டாவது கதையில் ” இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் “ என்ற கதையில் டர்பன் கட்டுகிற தொழில் செய்கிற ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல் பற்றியும் எதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு எழுதி இருக்கிறார் கவனமாக எழுதி இருக்கிறார் இந்த கதை சிறந்த கதைக்கான ஆண்டின் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.. இவரின் கதைகளில் மிக முக்கியமான கதை.. இனி என்ற பத்திரிகையில் வந்தது அதன் ஆசிரியராக எஸ் வி ராஜதுரை அவர்கள் இருந்தார். மூன்றாவது கதை விமோசனம் வெளிநாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்களை, அங்கே பாஸ்போர்ட் விஷயங்கள், வேலை சம்பந்தமான விஷயங்கள் என சுவாரஸ்யமாக அந்த நிகழ்வுகளை வரிசையாக சொல்லி வருகிறார். பொதுவாக ஒரு சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறார்.லண்டனை மையமாகக் கொண்டு இந்த கதை எழுதபட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கை, லண்டன் போய் திரும்ப முடியாமல் இருக்கும் ஒரு தமிழனின் வாழ்க்கையை இந்த கதையைச் சொல்லுகிறார். நாலாவது கதை புதைந்த காற்று: இந்த கதை புற்றுநோய் பற்றியும் பட்டாசு வகையையும் தீவிரவாதிகளின் கதை போலவும் சொல்லுகிறது. ஒரு விதமான திகில் கதை போல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல்வாதிசார்ந்த நடவடிக்கைகள் உள்ளன ஐந்தாவது கதை தொலைந்து போன கோப்புகள் இது ஒரு வித்தியாசமான கதை வாசகர்களின் தோள் மீது கை போட்டு அழைத்துச் செல்லும்போது நடக்கும் கதை போல எழுத்தாளர் கூடச் செல்வார். ராணுவத்தின் கொடுமைகள் பற்றியது காஷ்மீரின் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் உள்ளன. மனித உரிமை மீறல் பற்றிய கதை . ஆறாவது கதை மிச்சம் என்ற தலைப்புக் கதை. வாசகனை பிரமிப்பில் அழ வைக்கும். இதுல உள்ள விவரங்கள் சாதாரணமாக இருக்க நினைத்தால் ஏமாந்து போவீர்கள் கோவில் விழாவிற்குள் இத்தனை விசயங்களா. நிகழ்வுகளுக்கு செல்கிறான் ஆச்சரியப்பட வைக்கும் அணுகுமுறைகைகள், அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் அளவில்லாது இத்தனை விவரங்களை கண்டு கேட்டு வரிசைப்படுத்தி சுவாரஸ்யமாக எழுத வேண்டும் இந்த கதையில் உரையாடல்களையும் சூழ்நிலையையும் கவனியுங்கள். நாகரீக உலகம் , கடவுளை மறந்த மனிதர்கள். பூசாரி கோபித்துக் கொள்வது என்றெல்லாம் சென்று முடிகிறது வாக்கு. இதுவும் பாராட்ட கதை. இந்த கதையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அவள் சமையல் செய்தே அலுத்துப்போகிறதும் மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. சிவசங்கரி தொகுத்த சிறந்த கதைகளில் இந்த கதை உள்ளது. எட்டாவது கதை நீலப்படமும் சுசித்ராவும். ஒரு குடும்பஸ்தன் நீலப்படம் பார்க்க ஆசைப்பட்டான். அதற்கு எத்தனை தண்டனைகள் போட்டி தினத்தில் இருப்பவன். நயமாக எடுத்துரைப்பார். இந்த நீலப் படத்தில் காதலர்கள் வருகிறார்கள் அவர்கள் மாறி போகிறார்கள். சில காட்சிகளுக்கு பிறகு வருகின்ற திடீர் திருப்பமாக வரும் காட்சிகள் நிஜத்தை குறைத்து சொல்லியிருக்கிறார். ஒன்பதாவது கதை கழிப்பறைகள் இந்த கதை படிக்கும் போது நமக்கு ஒரு விதமான அசீச உணர்வுகள் ஏற்படும். இதைப் பற்றி சொல்வதென்றால் இதைக் கூட நயமாக எழுதியிருப்பார் கழிப்பறை இல்லாமல் கஷ்டப்படும் சாதாரண மக்களின் பிரச்சினைகளில் இக்கதை உள்ளது. இதில் உள்ள உரையாடல் கவனித்துக் நினைவு கூறத்தக்கது பத்தாவது கதை ஈரம் இது சுற்றுப்புற சூழல் பற்றியது. சாயக் கழிவுகள் தேங்கி நிற்கும் ஒரு அணை. அங்கு பக்கத்தில் உள்ள மனித வாழ்க்கை எவ்வளவு சீரழிவுக்கு உள்ளாகிறது என்பதை சொல்லி இருக்கிறார். அவருடைய சுற்றுப்புற சூழல் சார்ந்த கதைகள் இது ஒரு முக்கியமான கதை பொதுவாக இந்த கதைகள் மற்றும் சுப்ரபாரதிமணியன் அனுபவங்கள் எதை எடுத்தாலும் சுவாரஸ்யம் சொல்கிறது படித்து பாருங்கள் 10 கதைகளும் முத்துக்கள்தான் என்று பாராட்ட தோன்றும். இதை அமிர்தா பதிப்பகம் சென்னை வெளியிட்டிருக்கிறது 0

செவ்வாய், 5 மார்ச், 2024

இலக்கிய கருத்தரங்கம் வாசகர் சிந்தனை பேரவை சார்பாக இலக்கிய கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற்றது. ஏவிபி லேஅவுட் சங்க கட்டிடம், காந்திநகரில் நடைபெற்றது பாரதி சுப்பராயன் அவர்கள் நவீன மனிதர்கள் என்ற தலைப்பில் உரையாற்றும்போது “ நவீன மனிதர் என்பவன் பகுத்தறிவாளன் கேள்வி கேட்பவன்.., மாற்றம் இல்லாதது என்றும் இல்லை எல்லாம் மாறும் ஆனால் எந்த காலத்திற்கும் மாறாத நவீனம் அன்புதான். சக மனிதன் அன்பு என்றைக்கும் நவீனமானது தான் “ என்று குறிப்பிட்டார் முத்து பாரதி தீர்த்தகிரி என்ற விடுதலைப் போராளி என்ற தலைப்பில் பேசினார் அழகு அரசப்பன் கதையாடல் என்ற தலைப்பில் மற்றும் ச. நாகராஜன் புத்தகக் கலை என்ற தலைப்பிலும் பேசினர். சுப்ரபாரதி மணியன் எழுதிய திரைப்படக் கட்டுரைகள் நூல் ” பெயர்கள் இல்லாத வீடு “ தொகுப்பை பாரதி சுப்பராயன் வெளியிட தங்க பூபதி பெற்றுக் கொண்டார் .இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பலர் கவிதை வாசித்தனர் கருத்துரைகள் வழங்கினர். குட்டி கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். வாசகர் சிந்தனை பேரவையின் தலைவர் துரை, செயலாளர் வெள்ளிங்கிரி, துணைச் செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்கு வாசகர் சிந்தனை பேரவை பாலசுப்பிரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் . வாசகர் சிந்தனை பேரவையின் 15 வது கூட்டம் இது. செய்தி : தங்கபூபதி - வாசகர் சிந்தனை பேரவையின் நிர்வாகி
கூவம் நாவல்/ காவ்யா சண்முகசுந்தரம் ( சுந்தரபாண்டியன் ) காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் நதிகளின் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் மூன்றாவது பகுதியாக அவருடைய சென்னை வாழ்க்கை கூவம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது படிப்பு சார்ந்த சென்னை வாழ்க்கை பிறகு வேலைக்காக அலைவது ஆகியவை இந்த நாவலின் மையத்தில் உள்ளன இந்த நாவலில் சென்னை வாழ்க்கையை பற்றி அனுபவங்களை விரிவாக சொல்லி இருக்கிறார். படிப்பு தாண்டி இலக்கியம், அரசியல் போன்றவற்றினுடைய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. கூவம் எப்படி நாறிக்கொண்டிருந்தது. பழகிய வாழ்க்கையில் நாற்றம் குறைந்து போய் காணப்பட்டது. இது மையமாக இருக்கிறது வழக்கமாய் அவருடைய நாவல்களில் தென்படும் கிண்டலும் கேலியும் அங்கங்கே வந்து போகிறது. பல சமகால எழுத்தாளர்களை, கல்வித்துறை சார்ந்தவர்கள் இந்த நாவலில் சந்திக்கப்படுவது நல்ல விஷயம். தமிழகத்தின் அரசியல் சூழலில் மிக முக்கியமான காலகட்டமான நெருக்கடி நிலை, எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்கள் பதிவாகியுள்ளன நாவலாசிரியர் தன் வேலைக்காக பெங்களூர் செல்லும் விடயம் கடைசி அத்தியாயத்தில் வந்து முடிகிறது.இனி பெங்களூர் அனுபவங்களை அடுத்த நாவலில் எழுதுவார் . பெங்களூர் பா .கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு நாவலை 500 பக்கம் அளவில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரின் பெங்களூர் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். அவை முழுக்க தனி மனித அனுபவங்களாய் இருக்கின்றன, பெங்களூர் வாழ்க்கையின் அரசியல், சரித்திர கலாச்சார அரசியல் சார்ந்த குறிப்புகள் எதுவும் இல்லாமல் அந்த நாவல் நிரம்பியிருந்தது. ஆனால் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் இந்த நாவலில் சென்னை வாழ்க்கையின் சரித்திர கலாச்சார அரசியல் சார்ந்த குறிப்புகள் மற்றும் இலக்கிய குறிப்புகள் விரவிக் கிடைக்கின்றன. இதை வாசகன் சுலபமாக படிக்க ஏதுவாகிறது. ஒரு நாட்குறிப்பேடு சங்கதிகளைப் புரட்டிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இந்த நாவல் தருகிறது. இது மிக எளிமையானது நாவலின் இன்னொரு பக்கத்தை மறுப்பதாகவும் இருக்கிறது. ஆனால் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் அனுபவங்கள் தமிழுக்கு தேவையாக இருக்கின்றன. இலக்கிய ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல விஷயங்களை பதிவு செய்ய இந்த வகை நாவல்கள் அவசியம். இலக்கிய மாணவர்களையும் வாசகர்களையும் குறிப்பிட்ட காலம் சார்ந்த சரித்திர ஏடுகளை புரட்டிப் பார்க்கும் அனுபவத்தை தரும் நாவலாக இது அமைந்துள்ளது. ( காவ்யா பதிப்பகம், விலை ரூபாய் 250 )-- சுப்ரபாதி மணியன்