சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 29 டிசம்பர், 2020

- சுப்ரபாரதிமணியன் காலடித்தடங்கள் நதித்தடத்தில் சில கூரிய கற்கள் “ - சுப்ரபாரதிமணியன் காலடித்தடங்கள் : நாமக்கல் நாதன் காலடித்தடங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் நாதன் அவர்கள் தன் வாழ்க்கையின் சில பகுதிகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே என்பது இந்த மண்ணின் மரபு ..அதனால் எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப் படுத்தும் விதமாய் பதிவுகளை நூல்களில் கொண்டிருக்கலாம் என்பது தேவையாகத்தான் இருக்கிறது .அந்த வகையில்தான் நாமக்கல் நாதன் அவர்களும் தன் வாழ்க்கையில் சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவம் தழும்புகளை, படிப்பினைகளை ,வாழ்க்கையின் சிரமங்களை சுருக்கமாக இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார் , கடுகளவு கவலை என்றால் கண்ணீர் குணமாகிறது கண்கள் ,அதுவே மழை அளவு வந்தால் மனம் கூட மறந்து விடுகிறது என்ற கண்ணதாசன் வரிகளை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார் ,அப்படித்தான் மழையளவு சிரமங்கள் என்னுடைய வாழ்க்கையில் வந்து இருக்கிறது, அதனால் மனம் மரத்துப் போய்விட்டது என்கிறார் ,அந்த அனுபவங்களை எல்லாம் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார் .இவ்வகை அனுபவங்கள் இன்றைய தலைமுறையில் உள்ள எழுத்தாளனுக்கு வாய்க்காது ஆனால் நாமக்கல் நாதன் வாழ்க்கையில் அந்த கால சூழல் அப்படி அமைந்துவிட்டன அதை தவிர்க்க முடியாது .தன் தந்தை பற்றியும் தன் திருமணம் பற்றியும் தன்னுடைய உறவுகள் பற்றியும் பலவற்றை இதில் பதிவு செய்துகொண்டிருக்கிறார் பெரும்பாலும் இலக்கிய நண்பர்கள் பற்றியெல்லாம் அதிகமாகவே சொல்லியிருக்கிறார் என்று கூட சொல்லலாம் .இந்த நூலில் இவ்வகை அனுபவங்கள் மட்டுமில்லாமல் நாமக்கல் நாதனுடைய பல நூல்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதியக் கட்டுரைகள் ,அவர்கள் எழுதிய கடிதங்கள் இணைத்திருக்கிறார் .அது இவரைப்பற்றி புது வாசகன் சரியாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. அதே போல இந்த நூலில் இடம் பெற்ற நேர்காணல்கள் அவனுடைய இன்னொரு முகத்தை சரியாகக் காட்டுகின்றன. திராவிட சார்பாக இருந்தது இலக்கியத் துறைச் சார்ந்தவர்கள் அவரோடு நட்பு கொண்டிருந்தது போன்றவைதான் இவருடைய இலக்கிய வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. ஒரு சிறந்த படைப்பாளி நல்ல வாசிப்பவனாக இருத்தல் வேண்டும் என்பதை தொடர்ந்து நேர்காணல்களில் அவர் வலியுறுத்தி இருக்கிறார் மரபுக் கவிஞர் என்ற வகையில் தொடர்ந்து அவ்வகையிலேயே பயணித்திருக்கிறார் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறர் தொல் மரபுகளை பொன்னேபோல் போற்றி வருபவன் அதற்காக மரபுக்கு மனம் வைத்தான் அது ஏதுவாக இருந்தது அது மூச்சுக்காற்று .புதுக்கவிதை மோகம் வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது .அது முதுகை தடவிச் செல்லும் சாதாரண காற்று என்கிறார் . சமூகத்தில் இவருடைய என் ஆசான் சுரதா என்ற நூலில் கூட இலக்கிய நண்பர்கள் பற்றி விரிவான அனுபவங்களை அளித்திருக்கிறார் பூமிக்குள்ளே வேறு ஒன்றாமல் எந்த தாவரமும் புதுவசந்தம் பரப்பியது இல்லை. தமிழன் மட்டும்தான் அற்ப சந்தோஷம் மட்டும் அடிமையாகி போனான் .உணவு உடை உணர்வுகள் யாவும் ஆங்கில கலாச்சாரத்தின் கூறுகளாகிவிட்டன. மொழிதான் ஒரு இனத்தின் முதல் அடையாளம் .அந்த இனத்தின் கலாச்சார மரபுகளை அடுத்து அடையாளங்கள் இவை இரண்டும் இழந்த பிறகு அந்த இனம் தனது நாட்டை கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது .இதில் எச்சரிக்கை இல்லாத தமிழகம் ஒரு நாளும் மேம்பட போவதில்லை அறிவு சார்ந்த உறவுகள், உணர்வுகள் வளர்ந்தால் மட்டும் போதா, பண்பு சார்ந்த கல்விதான் மிக அவசியமாகத் தேவை என்று அவர் குறிப்பிட்டார் ஒரு நேர்காணலில் . அதுதான் அவருடைய இன்றைய செய்தியாக இருக்கிறது .தன் வாழ்க்கையின் செய்திகளை ஒரு நூலில் திறம்பட எழுதி இருக்கிறார் நாமக்கல் நாதன் ஒவ்வொரு படைப்பாளியும் தன் அனுபவங்களை இந்த வகையில் எழுதி பதிவு செய்ய வேண்டும் என்பதுகூட அவசியம் . ( Rs 160 ., 150 பக்கங்கள் . காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு )
On 1098 மலைப் பூக்கள் ~ அகிலா.. இந்தியாவில் இருக்கும் 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 2007ல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கின்றது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் மனரீதியான பாதிப்புகள் போன்றவை குழந்தைகள் சந்திக்கின்ற சில வகையான பிரச்சனைகளாகும். இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, 50 சதவீத பாலியல் வன்முறைகள் குழந்தைகளின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வகுப்புத்தோழர்கள் ஆகியோரால் நிகழ்த்தப்படுகிறது. அரசின் POCSO (போக்சோ - பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டமானது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது. அக்குழந்தைகளைப் பாதுகாக்க பல விதிகளை நடைமுறைபடுத்துகிறது. அவ்வாறு பதியப்பட்ட வழக்குகளின் போதோ அதன்பிறகோ சம்பந்தப்பட்ட குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது, குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர் போன்றோர்அமர்த்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098 தான், இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. ‘மிருகங்கள்: சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோர், பாலியல் வன்முறையாளர்கள், மற்றும் பிற பாலியல் குற்றவாளிகள்’ (Predators: Paedophiles, Rapists, And Other Sex Offenders) என்ற நூலில், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான அன்னா சால்டர் (Anna Salter) அவர்கள், “குற்றம் செய்பவர்கள் நாம் கற்பனை செய்திருக்கும் அரக்கர்களைப்போல் ஒருபோதும் இருப்பதில்லை. பெரும்பாலும், அவர்கள் பிறரின் பார்வையில் ‘அழகான மற்றும் நன்கு விரும்பப்படும்’ ஆண்கள் மற்றும் பெண்களாக உள்ளனர். சிலநேரங்களில், அவர்கள் பொதுவில் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையான மனப்பாங்கினையும் காட்டலாம், இதனால் எல்லாரும் அவர்களை மதிக்கத்தொடங்குகிறார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் குழந்தைகளுடன் ஒத்துணர்வை உருவாக்க நேரத்தைச் செலவிடுகின்றனர், மேலும் அவர்களைத் துன்புறுத்துமுன் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறுகின்றனர்.” என்கிறார். இது ஓர் எச்சரிக்கை மணியாக பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள உதவும். சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது. ‘நேத்து ரொம்ப சிரமப்பட்ட போல இருக்கே வா நான் வந்து எப்படின்னு காமிக்கிறேன் அப்படின்னு ஒரு ஆணை கூட்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு பெண் பிளக்ஸ்பேனருக்கு பின்னால் சென்றார். எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன அப்படியே உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது .எங்காவது ஓடினால் நல்லது என்று தோன்றியது..’ என்ற அந்த சிறுமியை விபச்சாரத்துக்கு உட்படுத்தும் நிலையில் சுட்டப்படும் காட்சி மனதை நெருடுகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்கை கொள்ளவும் சமூகம், அதன் கட்டமைப்புகள் இட்டுச்செல்லவே விழைகின்றன. ‘இனிமேல் குளிக்கிற போது உடைகளை கழட்ட போதும் தன் பெண்குறியில் பக்கமிருந்து விசுவரூபமாய் ஏதாவது ஆவி வந்து தன்னை முகத்தில் அறையக் கூடும் என்று விநோதமாய் அவள் நினைத்தாள். அப்படி ஒரு ஆவி அவளை அறைவதற்குள் இதுபோன்ற உயரமான ஒரு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து விடுவது தான் ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்கும் .நிரந்தர நிவாரணமாகக் கூட இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தாள்..’ என்னும் வரிகளும் சிறுமியின் மன உளைச்சலை எடுத்தியம்புகின்றன. உடல் குறித்த பெரிய அறிவொன்றும் ஏற்பட்டிராத வயதில், தன் உடலின் மீது கொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களின் வலியும் உளவியல் சார்ந்த பாதிப்பும் அச்சிறுமியின் உணர்வுகளில் வாழ்க்கைக் குறித்த அருவெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தி தற்கொலை சிந்தனையை உரக்க படிப்பிக்கிறது. இந்த நாவலில், வழக்காடு மன்றத்துக்கு சாட்சியங்கள் எத்தனை முக்கியம் என்பதையும் அவை வழக்கு விசாரணைக்கு வரும் கால அவகாசம் வரை அப்படியே இருப்பதில்லை என்பதையும் மனிதர்களின் ஞாபக அடுக்குகளில் இருந்து அந்த நினைவுகள் கலைந்துவிடுவதையும், கால ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையே வளரிளம் பருவத்தைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிடுவதையும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்நாவல் சிறுமியிலிருந்து அனுபவித்த துன்பம் கடந்து, வளரிளம் பெண்ணாய் குளிர்பிரதேசம் ஒன்றில் தேயிலை தோட்டத்து வேலைக்குச் சென்று புதுவாழ்வைத் தொடங்கும் சூழலை விவரிக்கும் வகையிலும், அங்கேயும் சாராயம் அருந்திய ஒருவனைக் காட்டி முடிக்கும்போது, சமூகத்தின் நிதர்சனமான முகம் என்பது சற்றும் வேறுபடவில்லை என்பதையே உணரமுடிகிறது. இருந்தும், பெண்ணின் மீள்தலும், அதன்பின் அவளின் நிலைகொள்ளுதலும் அவளிடமே இருப்பதாய், பெண்களாகிய அவர்கள் ‘மலையில் பூக்கும் பூக்கள்’ என இறுதியில் இயம்புகின்றன,கனம் நிறைந்த இப்படைப்பின் வரிகள். எழுத்தாளரும் நண்பருமான சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துமுறை, அனைவருக்கும் பரிச்சயமானதே.‘கனவு’ சிற்றிதழை கடந்த 36 வருடங்களாகத் திறம்பட நடத்திவருபவர். திருப்பூர் மற்றும் அதன் பின்னலாடை தொழில், கலாஸ் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள், நொய்யலில் கலக்கும் சாயத்தண்ணீர், தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக் கழிவுகள் போன்ற சமூக பிரச்சனைகளைக் களம் கண்டு எழுதிக்கொண்டிருப்பவர். அவரின் நாவல்களான சாயத்திரை, நெசவு, சாயத்திரை, கோமணம், வேட்டை, சுடுமணல் என்பதான எழுத்துகள் அனைத்தும், பதினேழு நாவல்களும் சிறுகதைகளும், கட்டுரைகளும் சமூக சீரமைப்பின் மீதான அவரின் பார்வை, சகமனிதர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்ட தன்மை போன்றவற்றை சத்தமிட்டுச் சொல்லத் தவறியதில்லை. ‘1098’ என்ற இந்த நாவலும் அவரின் முந்தைய நாவல்களைப் போன்றதே. குழந்தைகளின் பாலியல் வன்முறைகள் சார்ந்த சமூக அவலநிலையை எடுத்தியம்பத் தவறவில்லை. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கொடுக்கப்படும் போக்சோ சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் நலச்சங்கங்களின் சீரிய பணியும், மகிளா வழக்காடு மன்றங்கள் குறித்தும் அதிகமான விழிப்புணர்வு நம் சமூகத்துக்குத் தேவையான ஒன்றாய் இருக்கிறது. அதை இந்த நாவல் பூர்த்தி செய்திருக்கிறது. நண்பர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துகளால் சுற்றியிருக்கும் சமூகம் மேன்மேலும் பயனடைய என் வாழ்த்துகள். ~ அகிலா.. எழுத்தாளர், மனநல ஆலோசகர், கோவை. artahila@gmail.com
கூட்டு நனவிலி மனம் செயல்படும் போக்குகள் 1967 தாளடி நாவல் : சீனிவாசன் நடராஜன் சுப்ரபாரதிமணியன் பின் நவீனத்துவ படைப்பில் சிதறல்களும் அதன் மூலம் கட்டமைக்கப்படும் கதை அமைப்பும் முக்கியமானது. கட்டுடைத்தலின் இன்னொரு பரிமாணமாய் இதைக்கொள்ளலாம். ஒருவகையில் மையம் இல்லாதது, விளிம்பு நிலை சிதறல்களைக்கொண்டது என்றாலும் ஒருவகை வாசிப்பு அனுபத்தைத்தூண்டும நான் இவ்வகையில் சாயத்திரை நாவல் முதல் புத்துமண் நாவல் வரை பலவற்றில் முயற்சித்திருக்கிறேன். தொடர்ச்சியின்மை அல்லது துண்டுகளின் பரிமாணங்களால் இவ்வகைப்படைப்புகள் நிறைந்திருக்கும் . அதுவும் புத்துமண் நாவலில் இவ்வகை சிதறல்களே கட்டமைக்கப்பட்டிருக்கும் சீனிவாசன் நடராஜனின் இந்த நாவலில் இவ்வகையில் சொற்சித்திரங்கள், மக்கள் மொழி, எழுத்தாளர் மொழி, எழுத்தாளரின் நினைவுகள் ஆகியவை அலைந்து திரிந்து ஒரு வடிவத்துள் வந்துள்ளன. பொதுவுடமை, திராவிட இயக்கங்கள் பற்றிய பல வரலாற்றுக்குறிப்புகள், நிகழ்வுகள் நிறைந்துள்ளன. அந்த இயக்கங்களின் போதாமை பற்றிய ஏக்கங்களையும் அவர்களின் சிதைந்த கனவுகளையும் காட்டுகின்றன. அதிலும் பொதுவுடமை இயக்கத்தின் இன்றைய நிலை அதன் தியாயம், நெடிய சரித்திரம் எல்லாம் உறுத்தக்கூடியதுதான். தியாகங்களைப் புரிந்து கொள்ளாத தமிழ்ச்சமூகம் பற்றியச் சாபங்களையும் அது உள்ளடக்கியது. அதிலும் நிலசீர்திருத்தம் சார்ந்த பொதுவுடமை இயக்கத்தின் போராட்டங்கள் இப்போதும் உறுத்துபவை.நீடிக்காமல் போய்விட்ட, இன்னும் முழுமையாகப் பலனளிக்காமல் போய் விட்ட அதன் பாகங்கள் உண்டல்லவா. தஞ்சை வட்டாரமக்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டவை அவை. 60/70 என்று இந்த நாவலின் தன்மை முடிந்து போயிருந்தால் நன்று. அதைத் தாண்டி 50 ஆண்டுக்குத் தாவி திராவிட இயக்க முதல் அமைச்சர்கள் பற்றியக்குறிப்புகள் தனித்து விடப்பட்டுள்ளன.சமீபத்தில் படித்த இரா.கவியரசிவின் கவிதை நூலில்( நாளை காணாமல் போகிறவர் ) கடலின் அமைதி என்ற கவிதையில் “ ஒரு “ அ “எழுதினால் போதாதா இவ்வள்வு பெரிய கவிதைகள் தேவைதானா என்றன கப்பல்களும் படகுகளூம் “ என்கிறார். அதேபோல் இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் விரித்துக் கொண்டு போய் ஆயிரக்கணக்கானப் பக்கங்களில் ஒரு மெகா நாவலை எழுதிவிடமுடிகிறதோது நடராஜன் எடுத்துக்கொண்டுள்ள இவ்வடிவம் இப்படி சுருக்கியிருப்பது புதுத்த்ன்மையுடன் உள்ளது லூசியன் பிராய்ட், ஆழ்ந்த உறக்க்கம் நிர்வாணம், லண்டலிலிருது வரும் ராமாநாயுடு. செல்வியின் ஆடுமாடுகள். பாப்பாகோவில் கிராமத்து மாரியம்மாள், ராமையாவின் கட்சி பணி, காளியம்மாளின் கருவாட்டுக்கூடை , அல்லி பெண்ணீன் அழகும் தஞ்சை காபி கிளப்பின் தனி மணம் , கோபாலகிருஷ்ணநாயுடுவின் போக்குகள், கீழ்வெண்மணி , சோமசுந்தரம் சாமியாரின் லீலைகள், அண்ணாவின் கொள்கையும்ம் உடல் நிலையும் என்று பல சித்திரங்கள் உருவாக்கிய கூட்டு நனவிலி மனம் தொடர்ந்து நாவலில் இயங்கிக்கொண்டே இருக்கிறது இதன் தொடர்ச்சியான இரண்டாம் புத்தகதையும் எதிர்பார்க்க வைக்கிறது 208 பக்கங்கள் , 230 ரூ பாய் விலை தேனீர் பதிப்ப்கம், ஜோலார்பேட்டை 9080909600
இருமல் : சுப்ரபாரதிமணியன் தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்து கொண்டிருந்தது ... அந்த இரண்டு வார இருமலை இன்றைக்கு தொடர்வண்டிப்பயணத்தில் தீர்த்துவிட வேண்டும் என்று அவனின் தீர்மானமாக இருந்தது .. அது எப்படி என்று அவன் கண்டுபிடித்து விட்டான். மியூசியத்தை ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வந்தபோது அவர் எதிரில் டாஸ்மாக் என்ற பலகை தெரிந்தது .அந்த வேறு உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்ணில் பட்டது .வேறு எங்கேயும் போய் தேட வேண்டாம் இங்கேயே இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் . தொடர் வண்டி மியூசியம் ஒன்றை எங்கோ பார்த்த்தாக ஞாபகம் வந்தது. எங்கு என்பது சட்டென ஞாபகம் வரவில்லை. உள்நாட்டிலா.. வெளிநாட்டிலா.. யோசித்தால் தெரிந்து விடும். ஞாபகம் வரும் . .அவனுக்கு அன்றையப் பயணத்தில் ஒரு அரை நாள் வாய்த்திருந்தது. பக்கமிருந்த மியூசியத்திற்கு செல்லலாம் என்று ஆசைப்பட்டான் .பல நாட்கள் அந்த உலகத்துக்கு வந்தவன். ரொம்பவும் பிடித்தமானது அந்த இடம். பல நவீன நாடகங்கள் அங்கு நடக்கும் அப்போதெல்லாம் போயிருக்கிறான் .ஆனால் மியூசியம் மானுடவியல் கண்காட்சி, நவீன ஓவியக் கண்காட்சி என்று ஐந்து அடுக்குகளுடன் இருப்பதை அவன் கவனித்ததில்லை ..பல சமயங்களில் தன்னை நவீன ஓவியத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள நவீன ஓவியங்கள் இருக்கும் ஒரு கட்டிடத்திற்குச் சென்று பார்த்திருக்கிறான். மற்றபடி அந்த வளாகத்தில் இருக்கும் மற்றக் கண்காட்சிகளை பார்க்க அவனுக்கு வாய்த்ததில்லை .அவன் வாங்கியிருந்த அந்த சீட்டில் 6 கட்டடங்களுக்கான மொத்தமான தொகை 15 ரூபாய் என்று இருந்தது .ரொம்பவும் குறைவு தான் . ஆனால் வெயில் உரத்து தன் பார்வையை சொல்லிக்கொண்டிருந்தது .சாயங்காலத்தில் அல்லது இரவு நேரத்தில் மழை வந்துவிடும் என்று சூசகமாக சொல்லிக்கொண்டிருந்தது .நவீன ஓவியக் கண்காட்சிச் சென்றபோது அவனுக்குப் பரிச்சயமான பலபேர் ஓவியங்கள் அங்கிருந்தன தனபால் ஆதிமூலம் நந்தகோபால் விஸ்வம் என்று ஆச்சரியமாக இருந்தது இவர்களெல்லாம் உயிருடன் இருந்தபோது அவர்களை எப்படியாவது ஒரு முறையாவது அவன் சந்தித்திருக்கிறான். அது முக்கியமான விஷயமாக இப்போது பட்டது .அவர்கள் எல்லாம் எவ்வளோ பெரிய ஆளுமைகள் அவர்களை சந்தித்து இருக்கிறோம் .இதுபோன்ற ஒரு நிரந்தர ஓவியக் கண்காட்சியில் அவர்கள் இடம்பெற்றிருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது .அதற்கு பக்கத்திலிருந்த சிறுவர் அரங்கில் சென்ற பொழுது எங்கும் தூசியாக இருந்தது .ஆனால் பரவாயில்லை ..இன்னும் பல நாட்டு நாகரிகங்கள் பற்றிய தகவல்கள் ..படங்கள் தென்பட்டன .இரண்டாவது மாடியை அவன் கடந்து வந்த போதே இது அவ்வளவுதான் போங்க என்றார் அங்கிருந்த ஒரு காவலாளி ....அவர் “ தோண்ட முடியல நிறைய பாறைகள். உள்ள போயி மாட்டிட்டான் . எல்லாம் முடிஞ்சு போச்சுது ” என்று உட்கார்ந்த வாக்கில் இருந்த வயதான பெண்மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் .அனேகமாக அவர்கள் சுர்ஜித் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவனின் ஞாபகத்தில் வந்தது சுர்ஜித் வில்சன் என்று கோடிட்டு சில பத்திரிகைகள் செய்திகளை போட்டிருந்தார்கள் .ஆழ்குழாய் கிண்ற்றில் விழுந்து செத்த குழந்தை . ஸ்பெசல் மியூசியம் என்று காணப்பட்ட பகுதிக்கு சென்றபோது எல்லாம் குப்பையாக ஒருவகையில் முகம் சுளிக்க கூடியதாக இருந்தது . மரச்சிற்பங்கள் நிறைய இருந்தன.அவனுக்கு பின்னால் வந்த வெளிநாட்டு யாத்திரிகர்கள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களின் நேர்த்தி மற்றும் அழகிற்குத் தொந்தரவாக அந்தக்குப்பைகாட்சி இருந்தது. வெளிநாடுகளில் இருக்கிற இது போன்ற மியூசியம்களை அவன் பார்த்திருக்கிறான் .எவ்வளவு சரியாக பராமரிக்கப்பட்டு குறிப்பாக குளிர்சாதன அறைக்குள் அவை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன ..ஆனால் இவையெல்லாம் ...இங்கு சிற்பங்களும் ஓவியங்களும் தூசு கிடைக்கப் பெற்றிருந்த்து பாக்யம் போலிருந்தது. சென்னை நகரின் வளர்ச்சி பற்றிய பல விவரங்கள் அந்த கண்காட்சியில் இருந்தன வெவ்வேறு காலகட்டத்தில் ஊர் பற்றிய சித்திரங்கள் .குறிப்பாக ஆங்கிலேயர் பற்றிய ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களை பற்றிய சிற்பங்கள் அவை மிகுந்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .அதை எல்லாம் அவன் தவறவிட்டிருந்தால் வருத்தம் ஏற்பட்டிருக்கும் இந்த பகுதிக்கு பல முறை அவன் வந்திருக்கிறான். ஆனால் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது அடுத்திருந்த மானுடவியல் சம்பந்தமான கட்டத்தை தாண்டி தான் அவன் வந்திருந்தான். ஆனால் தேங்கியிருந்த மழை நீர் அதன் முகப்பைத் தாண்டி செல்ல அவனுக்கு எந்த உற்சாகம் தரவில்லை. மழைநீர் தங்கியிருக்கும் இடத்தைத் தாண்டியபோது தொண்டை கமறல் அதிகரித்தது. ஒருவகை மூச்சிரைச்சல் வந்தது. தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்தது.. ஆனால் அதை மட்டும் விட்டு வைப்பானேன் என்று அந்த பகுதிக்குள் நுழைந்த போது முகப்பு இருட்டாகத்தான் இருந்தது. எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவனிடம் டிக்கட்டைக் காட்டினான் .அவன் அங்கு ஒரு பொம்பள கருப்பா இருக்கு பாருங்க அங்க போய் கொடுங்க என்றான். அந்தப் பெண் உட்கார்ந்திருந்த இடம் சற்று இருட்டாகத்தான் இருந்தது. ஏன் இவ்வளவு குறைந்த மின் ஒளியில் அவள் உட்கார்ந்திருக்கிறாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் கையிலிருந்த கைபேசி ஒலித்து கொண்டு இருந்தது. அந்த இடத்தில் மின்ஒளியை சற்று கூட்டியிருக்கலாம். யாரும் அக்கறை கொள்ளாதது அவனுக்கு வியப்பளித்தது .அந்த கட்ட்டிம் இரண்டு மூன்று என்ற மாடிகளுக்கு உட்பட்டது என்பதால் அந்த கட்டிட எண் இடத்தில் சீட்டில் ஓட்டை போட்டு அந்த பெண் உள்ளே அனுப்பினாள். அவனுக்கு அந்த அரங்கம் ஆச்சரியம் ஊட்டியது. பல போர் தந்திரங்களை கொண்ட ஆயுதங்கள் இருந்தன .சிந்துவெளி நாகரிகம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகளை பற்றிய பல மண்பாண்டங்கள், பிற பொருட்களும் இருந்தன .2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆதிச்சநல்லூர் என்ற குறிப்புகள் அவனுக்கு ஆச்சரியம் ஊட்டியது. இப்போது கீழடி 2500 ஆண்டுகள்தான் ஆதிச்சநல்லூர் அதற்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் அதற்கு முற்பட்ட எல்லாம் ....குழப்பங்கள் இருந்தன .பிறகு ஆதிவாசிகள் பற்றி பகுதிக்குச் சென்றான். பலியிடும் ஆயர்கள் நீலகிரி வாழ் மக்களும் பற்றிய பல சித்திரங்கள் இருந்தன. குறிப்பாக அவர்கள் வாழும் வீடுகள் அவர்கள் அணியும் பொருட்கள் பற்றிய விவரங்கள் அந்த புகைப்படங்கள் எல்லாம் ஆச்சரியம் ஊட்டின. இரண்டு நாளாய் கொஞ்சம் மழை பெய்திருக்கிறது .அந்த மழை சாரல் உள்ளே புகுந்து இருக்கவேண்டும் பல இடங்களில் தரையில் நீர்கோர்த்து இருந்தது அல்லது மேல் பகுதியிலிருந்து நீர் சொட்டி அங்கு நீர் வந்திருக்கலாம் என்று நினைத்தான். அவனுக்கு அந்த இடம் பிடித்திருந்தது .15 ரூபாயில் நவீன ஓவியங்களும் தேர் சிற்பங்களின் சிறப்பு கண்காட்சியும் போர்க்கால ஆயுதங்களும் மானுடவியல் கண்காட்சியும் சென்னை நகரம் பற்றிய கண்காட்சியும் என்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.ஆனால் ஆறுதலாக இருமல் குறையவில்லை. சட்டென கண்களில் நீர் கோர்க்க இருமிக் கொண்டான். தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் என்று சொல்லிக் கொண்டான்... அவன் வெளியே வரும்போது பூம்புகார் சார்ந்த ஒரு அரங்கம் தென்பட்டது சில பொருட்கள் இருக்கலாம் தூரத்திலிருந்தே அதை பார்த்துவிட்டு அவன் மெல்ல வெளி பகுதிக்கு நகர்ந்து விட்டான். எங்கும் படம் எடுக்க அனுமதியில்லை என்பதால் கூர்ந்து பார்க்க ஏதுவாக இருந்தது. இல்லாவிட்டால் படம் எடுப்பதிலேயே பொழுது போயிருக்கும். கவனமும் சிதறியிருக்கும். இப்போது கவனம் முழுக்க இருமல் மீது வந்து விட்டது சாலை உள்ளே வந்து பார்த்தபோது தென்பட்ட மதுபான கடை எங்கிருக்கிறது என்று தேடுவதற்காக அவன் கண்கள் வலதுபுறமாக அலைந்தன . வலது பக்கம் செல்லலாம் என்று அவன் சென்ற போது இருந்த விலை உயர்ந்த விடுதிகள் தென்பட்டன. நிச்சயமாக சாதாரண மக்கள் குடிக்கிற மதுபானக்கடை இந்த பக்கம் இருக்காது என்று எதிர் பக்கம் போகச் செய்தது ..எதிர்ப்பக்கம். இரண்டு நிமிட நடைக்கு பின்னால் அந்த மதுபான கடையை அவன் தெரிந்து கொண்டான் வழக்கமாக ரொம்ப அபூர்வமாக அவன் குடிக்கிறதைக் கொண்டிருந்தான். எங்காவது வெளியூர் போகிறபோது மட்டும்தான் வாய்த்தது..உள்ளூரில் வாய்ப்பதில்லை அதுவும் வாகன தடைச் சட்டங்கள் வந்த பின்னால் வாகன ஓட்டிகள் குடித்துவிட்டு ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் வந்தபின் அவனுக்கு நிறைய எச்சரிக்கைகள் இருந்தன அந்த எச்சரிக்கைகள் உள் மனதிலேயே தோன்றியிருந்தன .மற்றும் பல குடிக்கிற நண்பர்களும் எச்சரித்திருந்தார்கள் பத்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும் என்று பலரும் எச்சரிக்கையாக .பத்தாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை என்பது மனதில் பயத்தை கொண்டு வந்திருந்தது .அதனால் அப்படி ஏதாவது நிகழ்ந்து விடக் கூடாது என்று அவனும் ஜாக்கிரதையாக இருந்தான். பத்தாயிரம் அப்படி எல்லாம் ஒன்னுமில்ல அடுத்த நாளு போலீஸ் ஸ்டேஷன் போனா இரண்டாயிரம் மூவாயிரம்லெ முடிச்சிடலாம். பதிவு பண்ணி இருந்த்தெ அவங்களே அழிச்சிருவாங்க ..காசெ வாங்கிட்டு ..... போலீஸ்காரங்க வருமானத்துக்கு இது ஒரு வழியாய் இருக்கு. அவ்வளவுதான் ஆனாலும் அவன் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருந்தான் இதெல்லாம் தேவையில்லை என்றுதான் நினைத்திருந்தான். மனைவியின் அறிவுரைகள் எப்போதும் மனதில் வந்து கொண்டிருந்தன. நேற்று இரவு வந்த பேருந்து அவனின் தூக்கத்தை கலைத்திருந்தது. தொடர்வண்டியில் வந்தால் மூத்தோர் சலுகையில் 120 ரூபாய் தான் ஆகும் ஆனால் வேறு வகையில் ,எந்த வகையிலும் டிக்கெட் கிடைக்கவில்லை . பேருந்து குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் 1600 ரூபாய் என்றார்கள். மிகவும் அதிகமாகத்தான் இருந்தது .ஆனால் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பதிவு செய்திருந்தான். அதுவும் தீபாவளிக்கு அடுத்த நாள் எந்த வகையிலும் டிக்கெட் கிடைக்க வழி இல்லை .வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு வந்தான் ஆனால் அந்த வண்டியில் குளிர்சாதனம் அவ்வளவு சரியாக வேலை செய்யவில்லை உள்ளே ஒருவகை புழுக்கமாக இருந்தது .வெளியிலிருந்த மழையும் குளிர் காற்றும் உள்ளே வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் குளிர்சாதனம் செய்யப்பட்ட வசதியால் ஜன்னல் கதவைத் திறக்க முடியவில்லை ,ஒருவகையில் எரிச்சல் தான் வந்தது .அந்த பேருந்தில் இருந்த தூங்கும் வசதி அசவுகரியமானது. படுக்கைகள் இரட்டையாக இருந்தன பக்கத்தில் இருந்தவன் இளைஞனாக தான் இருந்தாலும் .40 வயது கூட இருக்காது ஆனால் அவன் தூங்க ஆரம்பித்த பின்னால் வெளியிட்ட குறட்டை அவனைத் தூங்க விடவில்லை .மதியம் கூட அவன் பகல் தூக்கம் எதுவும் மேற்கொள்ளவில்லை . ஆனால் தூக்கம் வரவில்லை அவனுக்கு தெரிந்த பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டான் பிறகு 300 ஆம் என்னில் இருந்து ஒவ்வொன்றாக கூட்டி 500 ஒருவரை சொன்னான். பிறகு அதிலிருந்து ஒவ்வொன்றாக கீழே இறங்கி வந்து மெல்ல மெல்ல 100க்கு வந்தான். அதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது 100லிருந்து மறுபடியும் கீழேப் பிடித்துக் கொண்டு வந்து பூஜியத்துக்கு வந்து விட்டான். ஆனால் தூக்க நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தூக்கம் வரவில்லை என்றால் அவன் பெரும்பாலும் ஹீலர் பாஸ்கரின் வார்த்தைகளை மனதில் கொள்வான். படுக்கையிலேயே உட்கார்ந்து கொள்வான்..தூக்கம் வருகிற போது அப்படியே படுக்கையில் சாய்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .ஆனால் இப்போது தன் படுக்கையை ஒருவன் பகிர்ந்து கொண்டு இருக்கிறான் .அதனால் அப்படி உட்கார சாத்தியம் இல்லை .அவனும் தூங்க முயன்று குறட்டை சப்தம் பிடிக்கிறபோது தூக்கம் வரும் என்று நினைத்தான் .நல்ல வேலை இருமலை அடக்கிக் கொள்ளும்விதமாய் இருந்தது பெரிய ஆறுதல் தந்தது. ஆனால் விடியலின் வெளிச்சம் தென்பட்ட போது கொஞ்ச நேரம் தூங்கி இருப்பது அவனுக்கு தெரிந்தது .தூக்கமில்லாமல் இந்த இரவைக் கழிப்பதில் எப்படி சிரமம் இருந்தது இந்த நாளை எப்படி கடத்தப் போகிறோம் என்ற பயம் வந்தது . இன்றைய நாள்...... மியூசியத்தில் எங்காவது ஒரு மூலையில் உட்கார்ந்து தூங்கவேண்டும் என்று கூட நினைத்திருந்தான் .ஆனால் வாய்க்கவில்லை டாஸ்மாக் கடையை அவன் இடது புறம் சென்று தேடியபோது அவன் கண் பார்வையில் பட்டது அட்டைப் பெட்டிகள் .முகப்பில் இருந்த பெரிய பெரிய பிளாஸ்டிக் அட்டைப் பெட்டிகள் அவனைப் பயமுறுத்தின .ஒருஆள் சென்றதற்கான சென்று வருவதற்கான இடைவெளி போல் இருந்தது .அங்கு சென்ற போது வழக்கமான ஜன்னல் கம்பிகள் ஊடே மதுபாட்டில்களை வைத்திருந்தார்கள் .வரிசையில் நாலைந்து பேர்கள் இருந்தார்கள் அவர்கள் செல்லட்டும் என்று காத்திருந்தான் பிறகு 200 ரூபாயை நீட்டி ஏதாவது விஸ்கி என்றான் .அவன் இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னான் அது ஏதோ எதுவும் அவனுக்கு தெரியவில்லை .ஏதாவது ஒரு நல்லது என்றால் போதும். அவன் ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஒரு விஸ்கி பாட்டிலை கொடுத்தான் இருமல் வேறு ஒரு வாரமாய் துரத்திக் கொண்டிருந்தது பிராண்டி குடித்தால் அது குளிர்ச்சி.. நிவாரணம் தருமா என்பது சந்தேகமாக இருந்தது. விஸ்கி சூடு என்று கேள்விப்பட்டு இருந்தான். அது ஏதாவது நிவாரணம் அளிக்கும்என்று தான் அவன் நினைப்பில் இருந்தது. பக்காடியா சாப்பிடு என்று ஒரு நண்பர் சிபாரிசு செய்திருந்தார். செவன் அப்புடன் சேர்த்து சாப்பிடச் சொன்னார். அது பிராண்டியா, விஸ்கியா என்று கேட்டான் .அவருக்குத் தெரியவில்லை. நல்ல சரக்கு என்றார், . அங்கேயே நின்றபடி விஸ்கி பாட்டில் மூடியைத் திறக்க முற்பட்டான் அதைச் சாதாரணமாக திறக்க முடியவில்லை .பையில் தேடி போது இருந்த பெட்டிச் சாவியை எடுத்து அதன் முனைகளை கீறி அந்த லேபிள்களை சிதைத்தான். அப்போதும் அந்த மூடி சுலமாக வரவில்லை .மறுபடியும் சிரமப்பட்டு அந்த சாவியைக் கொண்டு அந்த சீல் போடப்பட்ட பாகத்தை கிழித்தெறிந்து விட்டு இருந்த ஒரு இடத்தை பிடிக்க மூடி கையோடு வந்தது .கையிலிருந்த ஒரு நூறு மில்லி தண்ணீர் இருந்த பாட்டிலை எடுத்து அதனுள் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் கொண்டான். விஸ்கி தொண்டையில் இறங்கும் போது ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது . இதமாகவும். சாப்பிடுவதற்கு முன் இது போதும் .பிறகு இரவில் இது பயன்படும் என்று நினைத்தபடி கீழே இறங்கிய போது ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் தென்பட்டது .நல்ல ஓட்டலில் சாப்பிட வேண்டும் என்பதுதான் அவனின் முற்பகல் ஆசையாக இருந்தது ஆனால் ஆம்பூர் பிரியாணி ஓட்டலில் என்ன விசேஷமாக இருக்கும் என்று யோசித்தான். உள்ளே நுழைந்தான் .சிக்கன் பிரியாணி என்று சொன்னபோது 110 ரூபாய் வாங்கிக்கொண்டு ஒரு டோக்கனை கொடுத்தான் ஒரு தாடிக்காரன். குறுந்தாடிதான். அழுக்கு பனியன் போட்டிருந்தான்..இன்னொரு இடத்தில் கொடுத்தபோது ஒரு முட்டையுடன் கொஞ்சம் சாதம் கிடைத்தது. அவனும் அழுக்கு பனியன் அணிந்திருந்தான்.நின்று கொண்டே சாப்பிட வேண்டும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பலகையை தான் சாப்பாட்டு மேஜை .அவன் இடம் தேடினான். ஒருவன் நின்று சாப்பிட்டு விட்டு கிளம்பிய நேரத்தில் தன்னை பொருத்திக் கொள்ளலாம் என நினைத்தான். ஆனால் அவன் சாப்பாட்டு தட்டில் நிறைய சாதம் மிச்சம் வைத்திருந்த்தைக் கண்டுபிடித்தான் .இவ்வளவு சாதத்தை வீணாக்கிறவன் ...அதிகமா குடித்திருப்பான். சாப்பிடும் மனநிலை இல்லாமல் இருப்பான் .ஏன் இவ்வளவு சாப்பாட்டை வீணாக்கினான் . அவனுக்கு சந்தேகமாகத் தான் இருந்த்து அடுத்து வந்தவன் அழுக்குச் சட்டையுடன் இருந்தான் ..அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு கையை காட்டினான். முழு முட்டையும் மூன்று நான்கு கோழித்துண்டுக்களும் அவனுக்கு ஆறுதலாக இருந்தன அந்த அரிசி நீளமாக இருந்தது ஆம்பூர் பிரியாணி என்பதற்கான அடையாளம் இதுதானா. பக்கம் அறிந்தவன் அருகிலிருந்த சிறு பக்கெட்டிலிலிருந்து தயிர் பச்சடியை நிரம்பப் போட்டுக்கொண்டான். அதில் வெங்காயம் அதிகமிருந்தது அவனும் எட்டிப் பார்த்துவிட்டு சாம்பாரையும் மட்டும் போட்டுக்கொண்டான் .இருமல் அடிக்கடி வரும் நேரத்தில் தயிர்பச்சடி எதற்கு என்று தவிர்த்தான். அவன் அது சிக்கன் குழம்பு ஆக இருக்கும் என்று நினைத்தேன் .ஆனால் அது சாதாரணமாக இருப்பது தெரிந்தது. நிறைய கத்தரிக்காய் துண்டுகள் இருந்தன ஆம்பூர் பிரியாணிக்கு கறிக்குழம்பு தர மாட்டார்கள் போலிருக்கிறது .வெறும் கத்தரிக்காய் குழம்பு தான் என்பது தெரிந்துவிட்டது .அதன் பெயர் மறந்து விட்டது. வயதாகிவிட்டது. தொடர்வண்டியில் சலுகை வாங்கும் வயதாகிவிட்டது. நிறைய மறதி. ஐந்து நிமிடம் முன்னால் ஊத்தி கொண்ட விஸ்கி தலைக்குள் ஒரு வகை போதையை கிளப்பி விட்டது தெரிந்தது . கசகசவென்று மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தார்கள்.தொடர்வண்டி வழக்கமாய் அறிவிக்கப்பட்ட நடைமேடையில் வரவில்லை .கடைசி நேரத்தில் பத்து நிமிடம் இருக்கும்போது அறிவிப்புப் பலகையில் நடைமேடை எண் போடாமல் பலகையில் காட்டிக் கொண்டு இருந்தார்கள் .அப்போது அவனுக்கு திக்கென்றது . ஆறாவது மேடையில் வருமென்று முன்னர் அறிவித்தபடி அவன் கையிலிருந்த மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாnன் 4-வது மாடியிலிருந்து 5-வது மாடி தாண்டி மாடிப் படிக்கட்டுகளில் மேலேறி வந்திருந்தான் .இப்போது அரைமணிநேரம் ஆனபின்னால் நடைமேடை பற்றிய அறிவிப்பு வரும் என்று காத்திருந்தான் காரணம் அந்த அறிவிப்பு பலகையில் நடைமேடை என்ற இடத்தில் முன்பு ஆறு என்று போட்டிருந்தது இப்போது மாற்றிவிட்டு எதுவும் காட்டாமல் இடைவெளியோடு அந்த பலகை இருந்தது. அது பயம் ஊட்டியது .தூத்துக்குடி செல்லும் தொடர்வண்டி ஐந்தாவது நடைமேடையில் இருந்தது அது சென்ற பின் தான் எடுப்பார்களா அவன் கைபேசி எடுத்து தொடர்வண்டி என்னை போட்டான் அது இன்னும் தாம்பரத்திற்கு வரவில்லை கொஞ்சம் தாமதம் என்று தெரிந்தது. 15 நிமிடத்திற்கு பிறகு நடைமேடை மாற்றப்பட்டு இருப்பதை அறிவித்தனர். கையிலிருந்த பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி கீழே இறங்குவது சிரமமாக இருந்தது. மூச்சிரைத்தது. .அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ஏழைப்பெண் தெலுங்கில் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தாள் . இறுதியில் அந்த கேள்விகள் அப்படியே இருந்தன அவர்கள் என்னவாகி இருப்பார்கள் ஏழாம் நடை மேடைக்கு வண்டி வருவது உனக்கு தெரியுமா பெண்ணே .... பலர் அவசரகதியில் ஓடிவந்தார்கள் அவனின் இருக்கை சுகமாகத்தான் இருந்தது இடையில் வாங்கிய புளிசாதம் ஒரு வகையில் ஆறுதல் தருகிற மாதிரி விதமாகத்தான் இருந்தது. நேற்று இரவு சரியாக தூங்கவில்லை இன்றைக்கு நன்றாக தூங்கவேண்டும் கழிப்பறைக்கு சென்று அவன் கையில் இருந்த பாட்டிலையும் கையில் இருந்த நீர் பாட்டிலையும் கொண்டு ஒரு புது திரவத்தை உருவாக்கிக் கொண்டான். மதுவும் சாதாரண குடிநீரும் கலந்தன. இதை ஊற்றிக் கொள்ள கழிப்பறைதானா கிடைத்தது. சற்று அருவருப்பாக உணர்ந்தான். இந்த பாட்டில் திரவம் தீரும் வரை அந்த அருவருப்பு இருக்கலாம் அவன் இருக்கையில் வந்து உட்கார்ந்து பாட்டில் மீது ஒரு துண்டை சுற்றியபடி மெல்ல தொண்டையை நனைக்க ஆரம்பித்தான. இதமாக இருந்தது ஆறுதலாக இருந்தது. இன்றைக்கு நன்றாக தூங்கி விடலாம் என்றுதான் அவன் நினைத்தான் ஒரு பெரிய கொடுங்கனவாக நேற்று தூக்கம் இல்லாமல் போய்விட்டது இன்றைக்கு இரவு நன்றாக தூங்க வேண்டும். யாராவது சாப்பாட்டுக்கு ஆர்டர் கேட்டு வருவார்களா என்று காத்திருந்தான் நல்லவேளை வந்தவனிடம் வெஜிடபிள் பிரியாணி என்று தேர்வு செய்துகொண்டான், ஒரு துண்டு சுற்றப்பட்ட அந்த போத்தலை மெல்ல மெல்ல தொண்டைக்குள் இறக்க அவனுக்கு இதமாக இருந்தது ..போதை வந்திருந்தது .அவனுக்கு பிடித்திருந்தது . யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தான். கையில் இருந்த போத்தலை ஒரு கைக்குடையில் சற்றே மறைத்திருந்தான்.துண்டு காணாமல் போய் விட்ட்து போல் இருந்தது. எழுத்தாளர் ஜே .கே தொடர்வண்டியில் போகும் போது குளிசாதனப்பெட்டி ( ஏசி ) பயணத்தைத் தவிர்ப்பாராம். அதில் உட்கார்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது அந்த வாசத்தை பரப்பி விடும். மற்றவர்களுக்கு தொந்தரவாகிவிடும் என்பதால் . தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்து கொண்டிருந்தது இப்போது குறைந்து விட்டது. ஆல்கஹாலுக்கு நன்றி சொல்லிக் கொண்டான் ... ” அடிக்கொரு முறை தும்மும் சளி பிடித்த டீசல் என்ஜின் ” என்று யாரோ கவிஞர் சொன்னது ஞாபகம் வந்தது. அப்படித்தான் தன் உடம்பு ஆகிவிட்டதாக நினைத்தான் . ஹைதராபாத் சென்ற ஒரு தரம் கடும் கோடை. உடம்பு நசநசத்து சிரமம் தந்தது. குளித்தே ஆக வேண்டிய நிலை. பெட்டியின் கழிப்பறைக்குச் சென்று தண்ணீர் போத்தலை சிதைத்து சிறு குவளை போலாக்கி தண்ணீர் சேகரித்து குளித்துவிட்டான். அதை கவனித்த ஒருவர் இதெல்லாம் பண்ணக்கூடாது.தவறு..யாராவது புகார் தந்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று சொன்னபோது உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது.அதற்கப்புறம் அப்படியானக் குளியலுக்கு அவன் ஆசைப்பட்ட்தில்லை. ........வழக்கமாய் .11 மணிக்கு தான் தூக்கம் வரும் ஆனால் நேரத்தைப் பார்த்தான் 8 தான் ஆகியிருந்தது தொடர்வண்டி வந்தபோது 5 மணி .. இப்போது எட்டு மணி அந்தப் பக்கத்து இருக்கைகளில் ஆக்கிரமித்து கொண்டவர்கள் சாப்பிட்டு தூங்க ஆரம்பித்தார்கள் .பேச எதுவும் இல்லை என்பது போல் அந்த மூன்று பேரும் முடங்கி விட்டார்கள் .மற்ற இரு இடங்கள் காலியாக இருந்தன.அவனுடையது பக்கவாட்டு இருக்கை . தொடர்வண்டியின் சத்தம் தாலாட்டாகி தூங்கி விட்டார்களா . இல்லை .ஓய்வு கிடைத்தது என்று சவமாகி விட்டார்களா அவனுக்கு போதை சுகமாய் இருந்தது. அவன் அந்த விஸ்கி பாட்டில் பாதியை தீர்த்து இருந்ததால் சீக்கிரம் தூக்கம் வந்து விடும் என நினைத்தான் ., . போத்தல் திரவத்தை விழுங்கும் போது கழிப்பறை ஞாபகம் வந்தது. சிறுநீரும் மலமும் கலந்த வாடை திரவத்துள் இருந்து வந்தது. அவனுக்கு வழக்கமாய் 11 மணிக்கு தான் தூங்குவான். அன்றைக்கு எட்டு மணிக்கே போதையில் தூக்கம் வந்து விட்டது .தடக்தடக் சப்தத்தை உருவகித்துக் கொண்டே படுத்து விட்டான் காலையில் எழுந்தபோது அவன் விளக்கை போட்டான் எதிர்த்த இருக்கைகளில் இருந்தவர்கள் இடம் மாறி இருந்தார்கள் அல்லது அவர்கள் கீழே இறங்கி விட்டார்கள் முன்பு ஒரு தம்பதி கூட இருந்தார்கள் .40 வயதில். மிகவும் இணக்கமாக தான் இருந்தனர். அவனுக்குப் பார்க்கப் பிடித்திருந்தது இரவில் அவர்கள் தயிர்சாதம் சாப்பிட்டார்கள் காலையில் கூட இடையில் விழிப்பு வந்தபோது அவர்களை பார்த்த ஞாபகம் இருந்தது .ஆனால் இப்போது அவர்கள் இல்லாதது போலத் தோன்றியது வேறு இரண்டு ஆண்கள் அந்த இருக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் இனிமேல் தூக்கம் வராது என்று தோன்றியபோது எழுந்து உட்கார்ந்துகொண்டாள் பற்பசையை பற்களில் இட்டுக் கொண்டான் அது கொஞ்சம் உயர்ந்த விலையுள்ள பற்பசை தான் .தொடர்ந்து வந்த பல்வலி அவளை அந்தப் பசையை வாங்கச் செய்திருந்தது .பல்துலக்கி விட்டு வந்து விளக்கை போட்ட போது எதிர்த்த இருக்கையில் இருந்தவன் உனக்கு லைட் எதுக்கு எனக் கேட்டார். .அவர் தெலுங்கில் தோரணையில் இருப்பது போல் சொன்னார் எதற்கு சிரமம் என்று அவனும் அணைத்துவிட்டு முகநூலில் ஏதாவது செய்தி இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தான்.ஏதாவது கெட்ட வார்த்தையை தெலுங்குக்காரன் விளக்கை அணைக்காமல் இருந்தால் உதிர்ப்பான் என்ற பயம் தொடர்வண்டி சட்டெனக் கிறிச்சிட்டு நிற்பது போல் மனதில் ஏறியிருந்தது. பல தொடர்வண்டிப்பயணங்களில் நடக்கும் இடத்தில் கூட பலர் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.கழிப்பறைக்குச் செல்ல முடியாது. பெரும்பாலும் வடக்கத்தியத் தொழிலாளர்களாக அவர்கள் இருப்பார்கள். அதிகாரிகளிடம் புகார் செய்தும் எதுவும் நிகழாது. பதிவு செய்தப் பெட்டிகளில் இப்படி பலர் ஏறுவது இறங்குவதும் தூங்குவதும் கட்டுப்படுத்த முடியாதது போல ஆகிவிட்டது . இம்முறை அப்படி எந்தக்கூட்டமும் இல்லை என்பது ஆறுதல் தந்தது. ஆறுதல் தருவதற்கே இப்பயணம் என்பதாய் நினைத்துக் கொண்டான்.இப்போதைய ஆறுதலுக்கு மது வேறு துணையாக இருந்தது . இந்த ஆறுதல் நீடித்தால் நன்றாக இருக்கும் .இருமலைக்கூட விரட்டி விடும். அவனின் நண்பர் ஒருவர் இரவில் குடிப்பார். வேலைக்கு போகிற நாளாக இல்லாமல் இருந்தால் காலையில் குடிக்க ஆரம்பித்து விடுவார். பனியன் கம்பனி வேலை . இன்னைக்கு தான் வேலை இல்லையே என்பதைச் சொல்வார். அப்படி ஒரு பரிசோதனையாக இப்போதைக்கு மீதியிருக்கும் பாதி பாட்டிலைத் தீர்த்துவிடலாம் என்று அவன் நினைத்தான் .இதுவரைக்கும் இப்படி செய்தது இல்லை. காலையில் குடித்ததில்லை. அபூர்வமாய் இன்றைக்கு காலையில் அதை குடித்துவிட்டு ஒரு புது அனுபவமாக எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்தான்.. புது இடம் . இது எப்போதும் வாய்க்காது. தொடர்ச்சியாக வந்தது இருமல். இதை தவிர்ப்பதற்காகவே வேறு வழியில்லாமல் குடிக்க வேண்டுமென்று தோன்றியது இந்த விஸ்கி சூடு உள்ளே போய் இந்த கொலை இருமலை, சளியை கரைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அப்படித்தான் அவன் வாங்கியபோது வேண்டும் என்று விரும்பி வாங்கி வந்தான். பிராண்டி குளிர்ச்சி .விஸ்கி சூடு அது இருமலை கரைத்து விடும் என நம்பியிருந்தான். அவை இப்போதைக்கு இருமலை கரைக்கத் தான் தனக்கு தேவை என்று பட்டது . தேனீர் சாப்பிடவில்லை பல்துலக்கி ஆகிவிட்டது கொஞ்சம் தண்ணீர் குடித்தாகி விட்டது இனி அடுத்த நடவடிக்கையை இந்த வேலையை செய்ய வேண்டும் அதற்காக புது முயற்சியாக காலையிலேயே அதை குடிப்பது என்று முடிவெடுத்தான்.தொடர்வண்டி கூட இப்படி ஏதாவதைக் குடித்து விட்டுதான் தலைதெறிக்க ஓடுவதாகத் தோன்றியது. இது ஒரு புது அனுபவம் இது போல் எப்போதும் இருந்ததில்லை அடுத்து என்ன அனுபவம் நிகழப்போகிறது என்று அவனுக்கு தெரியாது ஆனால் இப்போதைக்கு காலையில் குடிக்கிற புது முதல் அனுபவம் . அனுபவத்தை உள்வாங்கத் தயாராகி தண்ணீர் பாட்டிலில் அந்த விஸ்கி துளிகளை கலக்க ஆரம்பித்தான். காபி, தேனீர் விற்றுச்சென்றவர்கள் அவனைப் பார்த்தப்டியேச் சென்றார்கள், காபி, தேனீர் வாசம் மீறி மது வாசம் அவர்களை எட்டியிருக்குமா .. தண்ணீர் இல்லாமல் தொடர்வண்டியில் முகம் கழுவ, கழிப்பறைக்குச் செல்ல அவஸ்திப்பட்டது எப்போதும் பயமுறுத்தும் அவனை. கழிப்பறையில் கழுவிக்கொள்ள சிறு மக்கு , அல்லது அடிப்பாகம் நீக்கப்பட்ட போத்திலை உபயோகப்படுத்த தயாராக பல சமயம் பயணங்களில் இருந்திருக்கிறான். இப்போது இலாகா வாடிக்கையார்களைத் திருப்திப் படுத்தும் விதமாய் நல்ல பாத்திரங்களை இரும்புச் செயினில் கட்டி வைத்திருப்பது ஆறுதல் அளித்திருக்கிறது.அவனைக்கூட இருமல் செயின்தான் கட்டிப் போட்டிருக்கிறது. மனைவியிடம் சொன்னால் அதைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்வார். அப்படி சொல்லி மூன்று நாட்கள் இரவில் பால் சாப்பிட்டான். நண்பர் ஒருவர் அது எதுக்கு. பாலை ரொம்பவும் அவாய்டு பண்னு என்று அறிவுரை சொன்னார். ஆகா ...மறுபடியும் ஒரு தூக்கம் வாய்த்ததை குறித்து ஆகா என்று சொல்லிக் கொண்டு எழுந்தான், தொடர் வண்டி ஒரு மணி நேரத் தாமதம் என்பதை முன்னர் கைபேசி காட்டியது. இப்போது என்னவாகியிருக்கும் பக்கமிருந்த இருக்கைகள் காலியாக இருந்தன டயம் ஆயிந்தா . ஸ்டேசன் ஒச்ச்சிந்தி. பரபரவெனப் போர்வையையும் மற்ற பொருட்களையும் சுருட்டி பையுள் திணீத்தான். நெஞ்சு படபடக்க இறங்க முற்பட்ட போது வண்டி நின்றது. நடை மேடையில் உட்கார்ந்து கையில் இருந்தவைகளைச் சரிசெய்து கொண்டான். கைபேசியின் மின்னேற்றியை மறந்து விட்டது ஞாபகம் வந்தது. வண்டியின் பெட்டிகளை அடைத்துக்கொண்டிருந்த சப்தம் கேட்டது, அவன் வந்த பெட்டி இறுக்கமாக உள்ளிலிருந்து மூடப்பட்டு விட்டது. எழுந்து சென்று பலம் கொண்ட மட்டும் தட்டினான். இப்படி தண்ணி அடிக்கிற நாளில் ஏதாவது உறுத்தலாய் நடந்து விடும். இப்போது கைபேசியின் மின்னேற்றி தொலைந்து விட்டது. ஒரிஜினல், அறுநூறு ரூபாயாவது ஆகும். உறுத்தலாய் ஏதோ போதை மாதிரி உடம்பில் ஏறுவது அவனுக்குப் பிடிக்காததாக இருந்தது. இன்னொரு தூக்கத்தைற்குத் தயாராவது பாக்யம் என்று பட்டது. கதவை திறக்கச் சொல்லி தொடர்வண்டிக்குள் சென்று கால்களை நீட்டி கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று பட்ட்து அவனுக்கு. குறுகிய இடமாக இருந்தாலும் கால்களை நீட்டிப்படுக்க தொடர்வண்டிபயணம் ஏதுவாகி வருவது ஞாபகம் வந்தது.. குறுகிய இடத்துள் தூங்கப் பழக்கப்படுத்திய தொடர்வண்டிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது போல் நினைத்தான் அவன். இருமலுடன் தூங்க பழக்கப்பட்டு போயிருப்பதையும் நினைத்தான் .
கவிஞர் சுரதா நூற்றாண்டு.. சிறப்புக் கூட்டம் சனிக்கிழமைக் காலையில் மக்கள் மாமன்ற நூலகம், மங்கலம் சாலை திருப்பூரில் கவிஞர் சுரதா நூற்றாண்டு.. சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் நாமக்கல் நாதனின் ” சுரதா என் ஆசான் “ நூல் வெளியீட்டுடன்.மற்றும் அவரின் உரையும் இடம்பெற்றது மற்றும் நாமக்கல் நாதனின்புதிய நூல் “ என் காலடித்தடங்கள் ” “ ( அவரின் இலக்கிய அனுபவக்கட்டுரைகள் )வெளியீடும் நடந்தது. நூல்களை பத்திரிக்கையாளரும் தமிழக அரசின் தமிழறிஞர் உதவித்தொகை பெறுபவருமான வின்சென்ட் வெளியிட திருக்குறள் மணியம் பெற்றுக்கொண்டார் . மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர் சி.சுப்ரமணீயம் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாமக்கல் நாதன் உரையில் : உலகின் 93 மொழிகளுக்குத் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது அம்மொழிகளில் தமிழ்ச்சொற்களும் பாதிப்புகளும் உள்ளன. சுமார் 4000 வருட தமிழ் இலக்கியப்பாரம்பரியத்தில் செழுமையான இலக்கிய பங்களிப்பு இன்றைய நவீன தமிழ் இலக்கியம் வரை தழிழில்தொடர்கிறது. கவிதையோ இலக்கியப்படைப்போ எழுதுவது நல்ல மொழிப்பயிற்சியாகும். வாழ்க்கையின் தொழில்சார்ந்த கல்விக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் மொழிப்பயிற்சியும் பயன்பாடும் மிகவும் அவசியமென்பதை இளையத்லைமுறையினர் உணர்ந்து தமிழில் நல்லபயிற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும். கவிஞர் சுரதாவின் கவிதையும் திரைப்படப்பாடல்களும் நூற்றாண்டைக்கடந்து தமிழுக்கு உரம் சேர்ப்பவை ( இந்த இரு நூல்களும் காவ்யா பதிப்பகம் சென்னை வெளியீடு ) மக்கள் மாமன்ற நூலகம், மங்கலம் சாலை திருப்பூர் . நிகழ்ச்சியை மக்கள் மாமன்றம் ஏற்பாடு செய்திருந்தது. நூலகர் ஆறுமுகம், மாமன்ற நிர்வாகி பாலமுருகன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர் நிகழ்ச்சி ஏற்பாடு : மக்கள் மாமன்ற நூலகம் திருப்பூர் (திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் நாமக்கல் நாதன் இதுவரி 35 நூல்களை வெளியிட்டுள்ளார் . தமிழக அரசின் மூதறிஞர் உதவித்தொகை பெற்று வருகிறார் . 74 வயதுள்ள அவர் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார் ) உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தன் ஆசிரியரைப் போலவே ஆசிரியரின் தாசனாகத் தன்னை அறிவித்துக்கொண்டதற்காக அல்ல, அவரைப் போலவே தானும் ஆசிரியரின் பாதையிலிருந்து விலகி தனிப் பாதை வகுத்துக்கொண்டதற்காகவே சுரதா என்கிற சுப்புரத்தினதாசன் நினைவுகூரப்படுகிறார். அவரது நூற்றாண்டு இப்போது தொடங்கியிருக்கிறது. இலக்கிய வெளியில் மரபுக் கவிதை தனது செல்வாக்கை இழந்துநிற்கும் இன்றைய நிலையில், மரபுக் கவிஞர்கள் மட்டுமின்றி, நவீனக் கவிஞர்களும் சுரதாவிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. காவிரிக் கரையின் புதல்வராகவே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் சுரதா. கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஊரான நரிமணத்துக்கு அருகே உள்ள பழையனூரில் 1921-ல் பிறந்தவர். இயற்பெயர் ராஜகோபாலன். சுத்தானந்த பாரதியின் தாக்கம் பெற்றவராக, பள்ளி நாட்களிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கியவர். குத்தூசி குருசாமி பதிப்பித்த பாரதிதாசன் கவிதைகளின் முதல் தொகுப்பை, பழையனூரில் டீக்கடை நடத்திவந்த அழகப்பன் படிக்கக் கொடுக்க அன்றிலிருந்து சுத்தானந்த பாரதியை மறந்துவிட்டு பாரதிதாசனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமானது திராவிட இயக்கத்தின் பிரதான மையம் என்பதால் இயல்பாகவே அவரும் திராவிட இயக்கச் சார்பாளராக இருந்தார். இராஜாமடம், ஒரத்தநாடு பள்ளிகளில் படித்ததும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அவருடன் பயின்ற மற்ற மாணவர்களும் பின்னாட்களில் திராவிட இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவெடுத்தனர். பாரதிதாசனின் தாசன் புதுவைக்குச் சென்று பாரதிதாசனைச் சந்திக்க முடிவெடுத்த அவர், வழிச்செலவுக்குப் பணமின்றி, கோயில் ஒன்றில் எட்டு நாட்கள் வெள்ளையடித்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு புதுவை கிளம்பினார். 1943 முதற்கொண்டு பாரதிதாசனிடத்தில் இரண்டு ஆண்டுகள் உதவியாளராக, மாதம் இருபது ரூபாய் ஊதியத்துக்குப் பணிபுரிந்தார். கவிதைகளைப் படியெடுக்கும் அந்தப் பணியே சுரதாவின் பயிற்சிக் களமாகவும் அமைந்தது. பாரதியைப் பரப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரிலோக சீதாராம் தனது ‘சிவாஜி’ இதழில் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு அவரைக் கவனப்படுத்தினார். பாரதியைவிட பாரதிதாசனே அறிவும் திறனும் அதிகம் வாய்க்கப்பெற்றவர் என்பது சுரதாவின் கருத்து. சிந்துக்குத் தந்தை பாரதி என்ற தனது ஆசிரியரின் கருத்தை மறுத்து அண்ணாமலை ரெட்டியாரே அந்தப் பெருமைக்குரியவர் என்ற சுரதா, அதுபோல தேசியக் கவி என்ற சிறப்பும் ராமசாமிராஜுவுக்கு உரியது என்றார். சுரதாவைப் பின்பற்றி உருவான பாரதிதாசனின் பரம்பரையும் பாரதியில் ஆர்வம் காட்டாது பாரதிதாசனையே முன்மாதிரியாகக் கொண்டது. அரசியலில் பெரியாரையும் கவிதையில் பாரதிதாசனையுமே சுரதா வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தனது எழுத்தியக்கத்தில் உள்ளடக்கம், வடிவம் என எதிலும் அந்தத் தாக்கம் வந்துவிடாதவாறு கவனமாகவும் இருந்தார். பாரதிதாசனிடமிருந்து சுரதா விலகி நிற்கும் புள்ளியும் அதுவே. பாரதிதாசனின் ‘புரட்சிக் கவி’ நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த சுரதா, அங்கிருந்து புதுக்கோட்டை சென்று சில காலம் தங்கினார். புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தாய்நாடு’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அந்தக் காலத்தில் பி.யு.சின்னப்பாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் நடித்த ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1945-ல் திரைக்கதை, வசனம் எழுதினார். தமிழில் புத்தகமாக வெளியிடப்பட்ட முதல் திரைக்கதை அதுவே. திரைப் பாடல்களும் இலக்கியமே திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலேயே படங்களுக்குத் தொடர்ந்து திரைக்கதை, வசனம் எழுதினார் என்றாலும் ‘ஜெனோவா’, ‘அமரகவி’, ‘புதுவாழ்வு’ உள்ளிட்ட மிகச் சில படங்களே வெளியாயின. பாரதிதாசனைப் போலவே அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த திரைப்படக் கலை வடிவத்தை மிகவும் நேசித்தார் சுரதா. திரைப் பாடல்களையும் இலக்கிய வடிவங்களில் ஒன்றாகவே அவர் கருதினார். தகுதியானவர்களும் திறமையானவர்களும் திரைப்படப் பாடல்களை எழுதுகிறபட்சத்தில், அந்தப் பாடல்கள் இலக்கியத் தகுதியைப் பெறும் என்று அவரது கடைசி நாட்கள் வரையில் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பி.யு.சின்னப்பாவின் படத்துக்கு வசனம் எழுதிய அதே காலகட்டத்தில் தியாகராஜ பாகவதரின் படத்துக்கும் வசனம், பாடல்களை எழுதினார். பாகவதரின் ‘அமரகவி’ படத்துக்காக அவர் எழுதிய ‘யானைத்தந்தம் போலே பிறைநிலா’ பாகவதரின் பாடல்களிலேயே மிகவும் வேறுபட்டுத் தெரிவது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்துக்கு எழுதிய ‘அமுதும் தேனும் எதற்கு’ பாடல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. திரைப்படம் மட்டுமல்லாது இதழியல் பணிகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ‘இலக்கியம்’, ‘காவியம்’, ‘ஊர்வலம்’ என்று பல்வேறு கவிதை இதழ்களை நடத்தியவர். காமராசன், இன்குலாப், அப்துல் ரகுமான் உள்ளிட்ட தமிழின் பிரபலக் கவிஞர்கள் பலரும் இந்த ஏடுகளின் வழியே அறிமுகமானார்கள். கவிஞர் பெருமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். அவரது தலைமையில் நடந்த கவியரங்கங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவிதைகளை வாசித்திருக்கிறார்கள். சுரதாவின் இந்த இடைவிடாத இயக்கமே தமிழில் இன்றளவும் மரபுக் கவிதை மரணிக்காமல் இருப்பதற்கான காரணம். தனது பெயரிலேயே பதிப்பகம் ஒன்றையும் தொடங்கி நடத்தினார் சுரதா. ‘அமுதும் தேனும்’, ‘தேன்மழை’ உள்ளிட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் மட்டுமின்றி, முக்கியமான சொற்பொழிவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்து வெளியிட்டார். ‘வெட்டவெளிச்சம்’ என்ற தலைப்பில் அவர் தொகுத்து வெளியிட்ட தகவல்கள், முகிலின் ‘அகம் புறம் அந்தப்புரம்’ புத்தகத்துக்கெல்லாம் முன்னோடி முயற்சி. தமிழ்ச் சொல்லாக்கம் குறித்த அவரது குறிப்புகளின் தொகுப்பு அகராதியியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் நல்லதொரு ஆவணம். அவர் தொகுத்து வெளியிட்ட குறிப்புகளின் வழியே, அவருடைய பல்துறை ஆர்வத்தையும் பரந்துபட்ட வாசிப்பையும் புரிந்துகொள்ள முடியும். கவிஞன் பிறக்கிறான், கவிதையெழுத கலைமகளின் அருள்பார்வை கிட்ட வேண்டும் என்பதுபோன்ற நம்பிக்கைகளைக் கேலிசெய்த சுரதா, கடின உழைப்பும் தொடர்ந்த பயிற்சியும் கவிஞனை உருவாக்கும் என்றார். தேடித் தேடி வாசிக்காதவன் கவிதை எழுத முயலக் கூடாது என்பது அவரது கருத்து. எது கவிதை? திரைப் பாடல்களைப் போலவே புதுக்கவிதைகளையும் இலக்கிய வடிவங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டார் சுரதா. ஆனால், மரபிலிருந்து விலகி நின்ற உரைவடிவத்தைக் கவிதை என்று ஏற்கத் தயங்கினார். கவிதைக்கு உள்ளடக்கம் மட்டுமின்றி வடிவமும் அவசியம் என்று வலிறுத்திய சுரதா, வடிவத்தைப் பின்பற்றுவது மட்டுமே கவிதையாகிவிடாது என்று மரபுக் கவிஞர்களையும் எச்சரித்தார். 3,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதிய சுரதா, அவையனைத்தும் கவிதையாகிவிடாது, கொஞ்சம் தேறும் என்று கறாரான சுயமதிப்பீட்டையும் வெளியிட்டார். மரபுக் கவிதைகளின் உள்ளடக்கம் சார்ந்து தொடர்ந்து கட்டுடைப்புகளைச் செய்தவர் அவர். பிரபல நடிகைகளைப் பற்றிய ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு பரபரப்பை உண்டாக்கியது. இத்தகைய அதிர்ச்சி மதிப்பீடுகள் அவரது முதல் தொகுப்பிலிருந்தே தொடர்ந்தன. முதல் தொகுப்புக்கு அவர் வைத்த தலைப்பு ‘சாவின் முத்தம்’.the hindu tamil
1098 Released The Author Subrabharatai Manian was born in Sekadanthali, a small village near Coimbatore. When he was ten years old the family moved to Thirupur, where he had his early education. After having worked in the telecom services which took him to many places including Hyderabad, he is now settled in Thirupur after retirement. He started writing when he was doing M.Sc. in Mathematics in P.S.G. Arts College, Coimbatore. His short stories in Tamil were published in many reputed journals. He wrote novels, novelettes and essays. So far he has authored 65 books. Many of his novels and short stories have been translated into English and many Indian languages. While some of his works relate to the life of weavers in Thirupur, a few works focus on environmental issues. Notable among his works translated into English are: Faces of the Dead, Unwritten Letters, The Coloured Curtain and Migration 2.0. Subrabharati Manian has received many awards including the ‘Kadha Prize’ from the President of India for the best short story in 1993 and ‘Thamizh Chemmal Award’ for his novel Chayathirai from the Government of Tamil Nadu. He has been the member of the Sahitya Akedemi Consultative Committee. Translators Dr. S. Vincent retired as Professor and head of the Department of English, Arul Anandar College, Karumathur. . He has translated more than twenty books from English to Tamil, including Jonathan Lear’s Freud, Kitty Ferguson’s Stephen Hawking, Rachel Carson’s The Silent Spring Dostoevsky’s The Idiot and the autobiography of Wangari Maathai.. .He has translated many books from Tamil to English, including Va. Raa. a monograph for Sahitya Akademi and Thiruavurutpa in the Perspective of Comparative Religion. With Dr. Lawrence he has translated Veeramamunivar’s Paramartha Guruvin Kathai and Mayuram Vedanayakam Pillai’s Prathaba Mudaliar Charithiram (the first novel n Tamil) into English. Dr. M. Lawrence is an Associate Professor of English, The American College, Madurai. He has co-authored six books on Spoken English and Soft Skills. He has also translated books from Tamil to English in collaboration with S. Vincent, including Pale Twilight, a collection of short stories by Kumaraarananthan and Bleeding Blossoms on Bodhi Trees, a collection of poems by Thamizh Uthaya. He is a renowned soft skills trainer. He has conducted training programmes for teachers, company executives, lawyers and doctors. Dedicated to Mr. Srinivasa Rao Secretary, Sahitya Akademy , New Delhi Authourspress : subrabharathimanian’s another book 1098 A Novel Subrabharati Manian Translated by S. Vincent M. Lawrence 1098 A Novel Subrabharati Manian In Post-modernism, if the story progresses without giving the impression to the reader that it progresses, then that technique is known as ‘Spatial form’. Anecdotal in nature, they don’t seem to be inter-related. But as the curves and the lines join together to make a picture, the experiences of several characters put together make the reader read the mind of the writer. Since Subrabharati Manian has deftly handled such a technique, the novel touches us personally too and awakens our responsibilities. From Prema Nandakumar’s Review of Subabharati Manian’s The Coloured Curtain (Chayathirai) The POCSO ( Protection of Children against Sexual Offences) Act makes it compulsory to register cases of crime against children… the contact number for registering such cases of violence against children is 1098. It is the title of this novel. ..the sexual atrocity committed against a sixteen year old girl, her consequent traumatic experience and mental and physical stress, the unrewarding efforts of children’s welfare organizations to help the victims and the arguments of lawyers whose only concern is money –all these perversions and tragic shame of today’s society are portrayed with stark reality in this novel. The POCSO ( Protection of Children against Sexual Offences) Act makes it compulsory to register cases of crime against children… the contact number for registering such cases of violence against children is 1098. It is the title of this novel. …may the society benefit more and more from Subrabharati Manian’s writings which explore social issues.. My Best wishes .Akila.,Writer and Psychologist
கவிஞர் ஆழ்வைக்கண்ணனின் நல்ல முயற்சி கவிதை 2021 கவிதை 2021 என்றத்தலைப்பில் பல கவிஞர்களின் கூட்டுக்கவிதைத் தொகுப்பிற்காக கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஒரு பக்க அளவில் வருமாறு ( 20 வரிகளுக்குள் ) அனுப்பலாம். தங்களின் புகைப்படம், தங்களைப்பற்றிய நாலு வரிக்குறிப்பையும் அனுப்பவேண்டுகிறோம். தபாலிலோ, மின்னஞ்சலிலோ அனுப்பிவைக்கவும். மின்னஞ்சலில் அனுப்புவது நல்லது. ஜனவரி 31, 2021க்குள் அனுப்பி உதவுங்கள் கவிஞர் ஆழ்வைக்கண்ணன் 18/27 அய்யன் நகர் 8வது வீதி., கேடிசி பள்ளி எதிரில் , கருவம்பாளையம்,, திருப்பூர் 641 604 ( 75503 16500 ) மின்னஞ்சல் : alwaikannan656@gmail.com
புத்தகம் பேசுது இம்மாத இதழில்; பேரிரைச்சலாய் மாறிய பறவை ஒலி:சுப்ரபாரதிமணியனின் தறி நாடா நாவல் பற்றி  ஸ்ரீநிவாஸ் பிரபு தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போலவே கொங்கு நாட்டிற்கும் தனித்த சமூக, அரசியல், பண்பாடு உண்டு. பசுமை போர்த்திய நெய்தல் நிலமும், நொய்யல் ஆறும் கொங்கு நாட்டிப் பழமையின் அடையாளங்களாக இருந்து கொண்டிருக்கிறது. கொங்கு தேசத்தின் ஒரு பகுதியான திருப்பூர் நகரம், தமிழகத்தில் தொழில் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. கூடவே ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இன்றளவும் அதனுள் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். தொழிலில் இருத்தலுக்கும் மாற்றத்திற்குமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையிலான சித்தரிப்புகள் யாவும் படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை பெருங்கதை வடிவமான சீவக சிந்தாமணி முதல் வையாபுரிப்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்கள் வரை பல பதிவுகளாக இருக்கிறது. சர்வதேசப் பிரச்சினைகளுள் ஒன்றான சூழலியலை அடிப்படையாக வைத்து சாயத்திரை நாவலை எழுதிய சுப்ரபாரதிமணியன் கைத்தறிநெசவாளர்கள் குறித்து எழுதியுள்ள நாவல் ‘தறிநாடா’. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் கொங்கு வட்டாரச் சமூகப் பண்பாடு வாழ்க்கை குறித்தான சித்திரிப்புகளுக்கு மத்தியில் முன்மையானதாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது சுப்ரபாரதிமணியனின் படைப்புகள். அவர் படைப்பில் எழுந்து நிற்கும் தறிநாடா ஒருதனித்த அழகுடன் மிளிரவே செய்கிறது. இந்நாவல் திருப்பூர் வட்டாரத்தில் கைத்தறிநெசவு நசிந்து விசைத்தறிகளும் பனியன் கம்பெனிகளும் நுழைந்த சமூக வரலாற்றுப் பின்புலத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. நெசவாளர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்திரிக்கிறது, தொழிற் சங்கம் சார்ந்த வர்க்க அரசியலைப் பேசுகின்றது. திருப்பூரில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நெசவாளர் போராட்டம் தான் இந்நாவலின மையம். கூலி உயர்விற்காகக் கூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரி நிற்பதுதான் போராட்டத்தின் அடித்தளத்தளம். நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொன்ம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ்காலத்தில் விரிகிறது. சாதிய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கடத்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்காலலட்சியமும் மாறுவதை யதார்த்தமாக சித்தரிக்கிறது நாவல். கொங்கு நாட்டின் முக்கியத் தொழில் நகரமான திருப்பூரை இந்நாவல் அதன் முழு அழகுடன் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. ‘பின்னலாடை நகரம்’ என்றும் ‘பனியன் ஊர்’ என்றும் சொல்லப்படும் திருப்பூர் நகரம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வெளிப்படுகிறது. கொங்கு நாட்டுப் படைப்பாளிகள் பலரும் கொங்கு வட்டாரத்து கிராமிய வாழ்க்கையை கதைகளாக்கும் போது, சுப்ரபாரதிமணியன் திருப்பூர் நகரை, அதன் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வாழ்க்கையை, அதன் மனிதர்களை கதைகளுக்குள் உலவ விடுகிறார். மனிதர்களின் மூலம் அறிமுகமாகிறது மண். திருப்பூர் நகரம், அதன் இயற்கை வளத்தை, மரபான நெசவுத் தொழிலை, பேரெழிலை இழந்து முதலாளித்துவத்தின் அகோரப்பசிக்கு உணவாகி, வாழ்விடமும் தொழிலிடமும் தனித்தனியே பிரிக்க முடியாத பெரும் தொழில் நகரமாக, மாசுபட்ட ஊராக மாறிய விதத்தை திருப்பூர் நகரத்தையும், அது உருமாறிய விதத்தையும், அது கொண்டிருக்கும் இன்றைய முகத்தையும் எவ்வித ஒப்பனையுமினறி விவரிக்கிறது நாவல். நவீனத்துவம் காட்டும் வாழ்க்கைச் சூழலில் அதன் இயங்கு விசையை அக்கரையுடன் கவனித்து இயல்பான மொழியின் வழியாக வடிவம் கிடைக்கிறது. திருப்பூர் வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்ட தறிநாடா’ நாவல் 1970களின் முற்பகுதியை திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. நாவல் நகரம் தொழில் மயமாதலின் விளைவாக நிலவியலிலும், மனித வாழ்வியலிலும் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கின்றன. திருப்பூர் நகரம் தொழில் மயமாதலின் பின்புலத்தில் இயற்கையின், மனித வாழ்க்கையின் சீரழிவைக் கொண்டு விவரித்தபோதும், பெருநகர வாழ்வின் இயந்திரத் தனத்தையும், ஓயாத பதற்றத்தையும், பரபரப்பையும் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்படுகிறது. நகரத்து நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை பெரும்பாலான படைப்புக்களின் பக்கங்கள் எங்கும் பார்க்க முடிகிறது. ஒரு தொழிலின் நசிவென்பது முதலில் உணரப்படுவது அதை மேற்கொள்ளும் தொழிலாளிகளால்தான். அவர்களின் குரல்களை அலட்சியப்படுத்தப்பட்டு செய்யும் எந்தச் செயலும் முழுமையற்றுப் போகும் என்பது வரலாறு. அந்த வரலாறு இங்கே புனைவுகளாக மாறி திருப்பூர் நகரத்தின் கரங்களாக சித்தரிக்கப்படுகிறது. தறிநாடா நாவலில் கொங்கு வட்டாரத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ‘தேவாங்கர் செட்டியார்’களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கை மிக நெருக்கமாக பதிவு செய்கிறது. நெசவாள மக்களின் மரபான செயலான கைத்தறி முறை விசைத்தறி முறையாக மாறுவதும், திருப்பூர் நகரத்திற்குள் நுழைவதும் அதனால் கைத்தறி நெசவு நலிவதுமே நாவலின் முக்கியப் பிரச்சினையாக முன்நிறுத்தப்படுகிறது. விசைத்தறிகளின் வருகையும் பனியன் கம்பெனிகளின் நுழைவும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் தறிநாடா நாவல் அனுதாபத்துடன் சித்திரிக்கின்றது. அது ஒரு வகையில் திருப்பூர் நகர் கண்ட மாற்றமாகவே இருக்கிறது. கைத்தறி நெசவுக்கான கூலி குறைக்கப்பட்டதை எதிர்த்து நெசவாளர்கள் நடத்திய ‘நெசவுக்கட்டு’ எனும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, அது திருப்பூர் நகரை உலுக்கிய மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. போராட்டம், தறி நெசவு செய்யும் குறிப்பிட்ட சாதியினர் நடத்திய போராட்டமாக மட்டும் அமைந்ததாலும் அது தொழிலாளர் வர்க்கப் போராட்டமாக உருவெடுக்காததால் வெற்றி பெற முடியாமல் போகிறது. போராட்டத்தினால் நெசவுத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை, உறவுகளை இழந்து உயிர்ப்பலிக்கு ஆளாகிச் சிதைந்து போகிறார்கள். அப்போராட்ட வரலாறுதான் நாவலின் மையக்கரு.‘ரங்கசாமி’ எனும் சராசரி நெசவாளியின் குடும்பத்தை மையமாக வைத்து நீள்கிறது நாவல். அவன் மனைவி ‘நாகமணி’, மகள்கள் ‘மல்லிகா’, ‘ராதிகா’, மகன் ‘பொன்னு’; தருமன், சோமன், அருணாசலம், வெள்ளியங்கிரி, நடேஷ், கோவிந்தன், ஆறுமுகம், சிவசாமி என சக நெசவாளர்கள், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தோழர் ராஜாமணி, கல்யாணசுந்தரம் ஆகியோர் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். கூலிக்குறைப்பை எதிர்த்து நெசவாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்துப் போராடியபோதும் பசியும் பட்டினியும் தடியடிகளும் சிறைவாசமும் உயிர்ப் பலிகளுமே அவர்களுக்கு எஞ்சி நற்கின்றன. இந்நாவலில் வரும் ‘அருணாசலம்’ போராட்டத்தைச் சாதியின் எழுச்சியாக செயல்படுகிறார். ஆனால், நெசவாளர் இன சமூகத்தின் பணக்கார முதலாளிகள் தங்கள் வர்க்க உணர்வை வெளிப்படுத்தி போராட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். சாதியாக அணி திரண்டு, வர்க்கமாக உருமாறியபோதும், பெறாமையும் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையுமே போராட்டத்தின் பின்னடைவுக்கும், தோல்விக்குமான காரணங்கள் என ரங்கசாமி மகன் பொன்னு எண்ணுகிறான். நாவலின் இறுதியில் அவன் கொள்கைப் பிடிப்புள்ளவனாக மாறிப்போகிறான்.காலச் சுழற்சிக்கு ஏற்ப விசைத்தறிகள் பனியன் கம்பெனிகளாக மாறுவதுதான் தொழிலாளர்களின் வாழ்க்கை இருத்தலிற்கான தீர்வு என உணர்கிறான். திருப்பூர் நகரின் பல்வேறு மட்டத்து மனிதர்களைப் போல் நாவலில் வரும் ரங்கசாமி சபிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவனாகவும் அருணாச்சலம், பொன்னு ஆகியோர் சபிக்கப்பட்ட வாழ்க்கையை எதிர்த்துப் குரல் கொடுத்து போராடுபவர்களாகவும் இருக்கிறார்கள். கைத்தறி இன நெசவாளர்களின் சமூக வாழ்க்கை மட்டுமில்லாமல் திருப்பூர் நகரத்து சமகால பண்பாட்டு வாழ்க்கையையும் நாவலில் விரிவாக முன்வைக்கிறது. நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நெசவாளியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சமூக விதியை நாவலில் வரும் பொன்னு மாற்றுகிறான். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பதும், நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் நாவல் எங்கும் விரவிக் கிடக்கின்றன. தொன்மத்தின் பிரதிநிதிகளாக வாழ்க்கை நிகழ் காலத்தில் இருக்கிறது. தறியோட்டிய நெசவாள எளிய மனிதர்கள் சாதிய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு வேறு தொழிலுக்கு போகிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் கொள்ளும் மாற்றத்தை சித்தரிக்கிறது நாவல். ‘இதென்ன எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்ததும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித்தட்டிதா செழுமையாக்க முடியும்’ என்ற வாழ்வின் யதார்த்தவியலே வாழ்க்கைக்கான வித்தாகிறது. ஒரே ஜாதி என்ற போதும், நெசவு நெய்கிறவன் கீழ் ஜாதி, நெய்யாத முதலாளி மேல்ஜாதி என்கிற உண்மையை நெசவுத்தொழிலாளர்கள் உணர்ந்து கொள்வதாக நிறைகிறது. எந்த ஒரு போராட்டமும் அரசியல் சார்பும் கருத்துச் சார்பும் கூடி நிற்கும் போதுதான் வெற்றிபெற முடியும். அதற்கு தொழிற்சங்கங்கள் வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்கள் மக்கள் மனதில்தான் முதலில் தீட்டப்பட வேண்டும் என்ற சமூக உண்மையை உழைக்கும் நெசவாளர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். தறிநாடா நாவல் முழுக்க நெசவாளர் குடியிருப்புகளைப் பற்றியதாக இருந்தாலும் அந்தச் சமூக மக்களின் வாழ்க்கையை மட்டும் தனித்துக் காட்டாமல், மற்ற சமூகப் பிரிவினருடன் அவர்கள் கொண்டிருக்கிற உறவுகளையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் திருப்பூர் நகரத்தின் உள்ளீடான மனிதர்களின் பண்பை புரிந்து கொள்ள உதவுகிறது.திருப்பூர் நகரத்து சமகால நெசவாளிகளின் வரலாறு மட்டுமில்லாமல் வெள்ளையர் காலத்து நெசவாளர் வரலாறையும் அப்போதிருந்த கூலிப் பிரச்சினையும் தெளிவாக விவரிக்கிறது நாவல். திருப்பூரின் இன்னொரு முகமான நெசவாளர்களின் போராட்டத்தை இலட்சியப்படுத்தி புனைவாக மட்டும் முன்னிருத்தாமல், தன்னெழுச்சியாக நிகழும் போராட்டத்தின் பலன்களையும், பலவீனங்களையும் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பது நல்ல சமுக பிரதிபலிப்பாகவே இருக்கிறது. கைத்தறிகள் ஓடிய வீடுகள், விசைத்தறிகளின் கிடங்குகளாக, பனியன் கம்பெனிகளாக மாறிப்போவது, கைத்தறி தொழிலும், கைத்தறி நெசவாளர்களும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வெளியிலிருந்து வந்து பனியன் கம்பெனிகளைத் தொடங்கும் புதிய மனிதர்கள் நகரத்தை ஆட்டிப்படைப்பவர்களாக, அதிகாரம் நிறைந்தவர்களாக மாறுகின்றனர். அனைவரையும் ஏற்றுக் கொள்கிறது நகரம். இயந்திரமயமும், முதலாளித்துவமும் இணைந்து இயற்கையின் மீதும், மனித உழைப்பின் மீதும், மனிதர்கள் கொண்டிருந்த அன்பை, மனித நேயப் பண்பாட்டை தொலைந்து போகச் செய்கின்றன. பனியன் தொழிற்சாலை இயந்திரங்களில் நெய்து, கசக்கி, பிழிந்து, சாயமேறிய எண்ணெய் மணத்துடன் வெளிவரும் பனியன்களைப் போல திருப்பூர் நகரத்து சமகாலத் தொழிலாளர்களும் சக்கையாய்ப்பிழிந்து வெளியே வந்து விழுகிறார்கள். தறிநாடா நாவல் தனிமனித சோகமாகக் கதையை நிறுத்தியபோதும், உலகம் அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கிறது. கூடித்திரியும் பறவைகளின் சப்தங்களைப் போல் தறிநெசவில் விசையினின்றும் எழும் ஒலிகளால் நிரம்பி வழிந்த தறிநகரான திருப்பூர் நகரம், பேரிரைச்சல் கொண்ட மின் இயந்திரங்களால் இயங்கும் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த பேட்டையாக கால மாற்றத்தில் உருமாறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. தறிக்குழிகள், தறிநாடா, பாவு இலைகள், பில்வார்கள், கஞ்சிப்பசை, பல எண்களைக் கொண்ட நூல்கள், துண்டுத் துணிகள், ஜரிகை நூல் ஆகியவற்றுடன் தறி இயங்கும் ஓசை நாவலின் வரிகளெங்கும் பின்னணி இசையாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. நாவல்களை வாசிப்பவர்கள் அவற்றை ஒரு போதும் வெறும் கதைகளாக மட்டும் வாசித்துக் கடந்து சென்று விடுவதில்லை. நாவலின் கதையை தங்கள் அனுபவத்துடன் பொருத்திப் பார்த்து, அதிலிருந்து நிறைவுகளையும், தெளிவுகளையும் சாத்தியங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கதாபாத்திரங்களைத் தங்களுடன் ஒப்பிட்டு எடை போட்டுக் கொள்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் மனிதர்களைப் புரிந்து கொள்ள சாத்தியமான, வாழ்க்கையின் நிறைவையும், தெளிவையும் தரிசிக்கத் தரும் நாவலைத் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். மனிதர்கள் வாழப்பிறந்தவர்கள். கால ஒட்டத்தில் மின்னல் கீற்றுகளாக வாழ்வு குறித்தான கேள்விகளை முன் வைத்து காணாமல் போகிறார்கள். அடக்கமும், ஆழமும், மெல்லிய பகடியும் ஒன்றிணைந்த கலை நேர்த்தியை தனக்கே உரித்தான மொழியில் வெளிப்படுத்தும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் திருப்பூரின் மண்ணும் மனிதர்களும் தனித்தன்மை கொண்டவர்களாக காணக் கிடைக்கிறார்கள். சுப்ரபாரதிமணியனின் படைப்புக்கள் எப்போதும் புதுமையையும், மாற்றத்தையும் எதிர்நோக்கி இருப்பவை. வாழ்வின் பழைய மதிப்பீடுகளை உதறி புதிய மதிப்பீடுகளைப் புகுத்த முயன்று தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை புனைவுகளின் வழியெங்கும் விரித்துக் காட்டுகிறார். அது திருப்பூர் நகரின் தனித்த வாசனையாக நுகரக் கிடைக்கிறது. நாவலை முடிக்கும் போது திருப்பூர் நகரம் ஒரு சித்திரமாய் கண் முன் உருவெடுத்து நிற்கிறது. கூடவே காலங்களில் கரைந்த தறிநாடாவின் டக்… டடக்….டக்….டடக்… என்ற அதன் ஆதார இயக்க ஒலி ஒரு பறவையின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரூ 150 என் சிபி எச் , சென்னை வெளியீடு
தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. சுப்ரபாரதிமணியன் ( நீசமாக எண்ணாதே நீச்சலடிக்க கற்றுக்கொடு : பா தென்றல் கட்டுரைகள் ரூ 150 இனிய நந்தவனம், திருச்சி வெளியீடு ) கட்டுண்டு கிடக்கிறார்கள் பெண்கள். தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறி சாதனையாளர்கள் ஆகிறார்கள் .அப்படி சாதனை புரிந்த பெண்மணிகள் கட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்ட அனுபவங்கள் இதில் . அந்த வகையில் நூற்றுக்கணக்கான பெண்களைப் பற்றிய பதிவாக இந்த நூல் இருக்கிறது இலக்கியம் சார்ந்த சில முன்னெடுப்புகளும் முயற்சிகளும் சாதனை மூலமாக தோழியர் தென்றல் அவர்களின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. தாத்தாவின் திண்ணை பள்ளியினை விரிவாக்கி 100 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணி செய்து வரும் அந்தப் பள்ளியை நிர்வகித்து அதில் ஒரு ஆசிரியையாக பணிபுரிந்து குழந்தைகளின் உலகத்தோடு எப்போதும் ஒன்றி இருப்பவர் . அதைத்தவிர பள்ளி வகுப்பறையிலேயே ஒரு நூலகம் உருவாக்கியவர். வகுப்பறை நூலகத்தை பள்ளி மாணவ-மாணவிகளின் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கூட பயன்படுத்தும் விதமாக அதை ஒரு பொது நூலகம் ஆகியிருப்பதில் அப்படி ஒரு சாதனை செய்திருக்கிறார் . சமீப காலங்களில் புதிய தலைமுறை, தினமணி, மலேசிய பத்திரிக்கைகள் மற்றும் முகநூல் களிலிருந்து அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது பெருமிதமாக இருந்தது. திருப்பூரில் இருக்கும் பாண்டி நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் நூலகத்தை இப்படி பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று பொதுவானதாக நூலகத்தை அமைக்கவேண்டும் என்று அப்பள்ளி தொடங்கப்பட்ட காலத்தில் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால் அதே முயற்சியை ஒரு பெரிய சாதனை ஆக்கிக் கொண்டிருக்கிறார் தென்றல் அவர்கள். தொடர்ந்து இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதும் நேரத்தை செலவழித்து வெளியூர் கூட்டங்களில் கலந்துகொண்டு இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் பங்கு பெறுவதும் தென்றலை ஒரு முக்கிய எழுத்துப் பணியாளர் என்ற அளவில் உயர்த்தியிருக்கிறது .அவரின் ஆதர்சமாக பலநூறு பெண்மணிகள் இருந்திருக்கிறார்கள் அந்தப் பெண்மணிகளை எல்லாம் இந்த நூலில் அடையாளம் காட்டுகிறார் . அவர்களெல்லாம் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்தவர்கள் .இலக்கியத்துறையில் சாதனையாளர்கள் பற்றி குறிப்பிடும்போது இயல்பிலேயே அவர் மனம் குதூகலித்தது விரிவாய் எழுதுகிறார். தங்களின் கூண்டுகளிலிருந்து பெண்கள் முற்படுவதையும் சாதனை புரிவதும் இந்தப் புத்தகம் சொல்கிறது. இலக்கிய நூல்களும் படைத்தவர்களும் ஒருபுறம் இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறார்கள் . தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கு இந்த நூலும் ஒரு படிக்கல்லாக அமையும் சுப்ரபாரதிமணியன் ( நீசமாக எண்ணாதே நீச்சலடிக்க கற்றுக்கொடு : பா தென்றல் கட்டுரைகள் ரூ 150 இனிய நந்தவனம், திருச்சி வெளியீடு ) thendralbala2011 Tue, Dec 22, 7:29 PM (11 hours ago) to me Tamil English Translate message
கவிதைத் திருவிழா 2021 10/01/21 காலை 10மணி கவிதைத் திருவிழா 2021 கவிதை நூல்கள் வெளியீடு/ கவிதை நூல்கள் அறிமுகம்/ கவிதை வாசிப்பு கவிதை நூல்கள் வெளியீடு • இலங்கை மாரிமகேந்திரனின் கவிதைத் தொகுதி “கடவுள் எனது சினேகிதன் “ ( கனவு வெளியீடு ) • ஹைதராபாத் அரிஸ்டாடிலின் “ இருள் காயும் பகல் “( கனவு வெளியீடு ) • • சுப்ரபாரதிமணியனின் “ மாயாறு “ “( கனவு வெளியீடு ) • • “கவிதை நூல்கள் அறிமுகம் : • • மதுராந்தகனின் “ எனது முகவரி “ ( கனவு வெளியீடு ) • ரா.தீபனின் “ சமூகத்தின் அரசியல் பொய்கள் “( கனவு வெளியீடு ) • • கவிதை வாசிப்பு / கவிதை வாசிப்பு / கவிதை வாசிப்பு/ கவிதை வாசிப்பு : கவிதை வாசிப்போர் பட்டியல் • கவிதைத் திருவிழா ஒருங்கிணைப்பு : கவிஞர் ஆழ்வைக்கண்ணன் • கவிதைத் திருவிழா ஒருங்கிணைப்பில் கனவு இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு தமிழ்ச்சங்கம், திருக்குறள் பேரவை, மற்றும் ..

சனி, 14 நவம்பர், 2020

ஒரு எழுத்தாளரின் ஒரு வேண்டுகோள் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் பாண்டியன் நகர் அறிவுத்திருக்கோவிலில் சமீபத்திய உடற்பயிற்சி மற்றும் அகத்தாய்வு முதல் நிலை பயிற்சிக்குச் சென்றேன். அவர்களின் வழக்கில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள் தெரியவில்லை. அகத்தாய்வில் தரும் விளக்கங்களில் –பவர் பாயின் பிரசண்டேசனில் -PPpஏகப்பட்ட ஏகப்பட்டத் தமிழ்ப்பிழைகள். கொஞ்சம் ஆங்கிலப்பிழைகள். அதில் இடம் பெறும் படங்களில் பெரும்பாலும் காணப்படும் முகங்கள் வடநாட்டுஅய்ரோப்பிய முகங்கள். இந்திய தமிழ்நாடு முகங்கள் வெகு சொற்பம். சில செயலுக்கானப் படங்கள் பொருத்தமாக இல்லை. அறிவுத்திருக்கோவிலில் ஓரளவுக்கு விஞ்ஞான முறைகள் இருந்தன என்பது ஆறுதல். இறைத்தன்மை, சடங்குகளை என்பவற்றை நிராகரித்தே பயிற்சியில் இருந்தேன். இந்த விசயங்களை நிர்வாகிகளுக்குச் சொன்னேன். தலைமை அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன் . பலவற்றில் நல்ல தமிழ்ப்பிரயோகங்கள் இருந்தன. இவ்வளவு கலப்பாய் தமிழைக்கண்டதால் அவதியுறும் மனநிலைக்கு ஆளானேன். அறிவுத்திருக்கோவில் ஒரு சர்வதேச நிறுவனம், அதன் பாட்த்திட்டங்களில் தமிழை வளர்க்கும் முயற்சிகள், பிழையில்லாமல் தமிழில் பாடங்கள் இருந்தால் நல்லது. இவற்றைப் பரிசீலிக்கலாம் தாங்கள், --------- - சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
கோவை பேராசிரியர் ரமணி அவர்கள் : சுப்ரபாரதிமணியன் ஆங்கிலப்பேராசிரியர் . ஆனால் தமிழின் பழைய இலக்கியங்களில் , குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஆடியோ புத்தகங்கள் என்று இவற்றை வாசித்து பதிவு செய்து பல சாதனைனகளைச் செய்திருக்கிறார். அண்ணாவின் கதைகள் சமீபத்தில் கேட்டேன். அண்ணா, கலைஞர் வரை ஆங்கில மொழிபெயர்ப்புகள்,ஆடியோ புத்தகங்கள் அல்லது பதிவுகள் ஏராளம் செய்திருக்கிறார் .நல்ல முயற்சி. நவீன இலக்கியங்கள் அதிகம் தொடவில்லை .தொடுவார். இடையில் பேராசிரியர் பணி ..ஓய்வுக்குப் பின் விவசாயமும் செய்கிறார். விவசாய அனுபவத்தை பெருங்காய டப்பா பேராசிரியர் என்று அருமையாகக் கதை சொல்லியிருக்கிறார். நினைவுக்களஞ்சியமாய் விசயங்களைக் கொட்டுகிறார். மாடு , எருமை வாங்கப்போகிற அனுபவம், விவசாயக்கலப்பை அனுபவம் என்று கலவையாக வாழ்க்கை முழுவதும் வந்து விடுகிறது . இளைய தலைமுறையோடு உரையாடுகிற உத்தியும் சிறப்பு அவரின் குரலில் சிவாஜிகணேசனின் கம்பீரத்தை எப்போதும் கண்டிருக்கிறேன். பல் போனாலும் சிங்கம் சிங்கம்தானே . அந்த கம்பீர்ம் குரலில் எப்போதும் குறைவதில்லை. சொல்லிலும் சொல்லும் விசயத்தில் இருக்கும் அக்கறையும் அப்படித்தான். சிங்கம்தான் , கொங்கு நாட்டுச் சிங்கம் ரமணி பெருங்காய டப்பா அல்ல பெருங்காயத்தின் சர்வரோக நிவாரணி போல அவர். அதுவும் இந்த கொரானா தொற்று காலத்தில் நம் பாரம்பரிய உணவுகள் அது சார்ந்த சுவையூட்டிகளும் உடம்புக்கு நல்ல திடமும் எதிர்ப்புச்சக்தி தருவது போல் அவரின் தொடர்ந்த பணிகள் ஆரோக்யமானவை . 50 ஆண்டுகளுக்கு முன் அவர் திருப்பூரில் அரசு கலைக்கல்லூரியில் வேலை செய்யும் போது அப்போதே ஒரு புத்தகக்கடையை முக்கிய இடத்தில் வைத்து இன்னொரு சாதனை செய்தவர். அப்போது புத்தகக் கடையெல்லாம் அபூர்வம் நான் எம் எஸ்சி கணிதம் படித்த பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் . தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வயதை மீறி அதுவும் கொரானா காலத்தில் சோர்வு பெறாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களை ரொம்பவும் பிடிக்கிறது ஆங்கில இலக்கியம், , மேட்டிட்மை என்று இல்லாமல் தழிழோடு அவர் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கிறார் எழுத்தில், பேச்சில் வாழ்பவர் ரமணி என்ற மணியான மனிதர்.
விடுதலையை உரத்துப் பாடும் புதுமைக் கவிதைகள் **** சுப்ரபாரதிமணியன் அவர்களின் ** மாயாறு - இரு நெடுங்கவிதைகள் ; க.அம்சப்ரியா **** சுப்ரபாரதிமணியன் என்கிற பெயர் ,நாவலாசிரியராக ,சிறுகதையாளராக ,கட்டுரையாளராகவே சட்டென்று நினைவிற்கு வரும். மந்திரச் சிமிழ் என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். வாழ்தலில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் நாவலாக ,சிறுகதையாக ,கட்டுரையாக வடித்துவிட இயலாது. கவிதையாக வெளிப்படுவதற்கென்றே சில அனுபவங்கள் காத்திருக்கின்றன. கவிதையாக உருமாறிய பின்தான் அந்த அனுபவங்கள் பூர்ணத்துவம் அடைகின்றன. சுப்ரபாரதிமணியன் அவர்களின் அனுபவங்கள் ,கவிதைகளாக வெளிப்பட்டிருக்கிற சூழலிலும் கவிதைகளில் தெறிக்கிற சமூக அக்கறை ,புதுமையின் குரலாக வெளிப்படுகின்றது. இரு நெடுங்கவிதைகள் என்கிற தனித்துவத்துடன் " மாயாறு" வெளிவந்துள்ளது. அவர் அனுப்பி வைத்த " பிளிறல்"சிறுகதைத் தொகுப்பினைத்தான் முதலில் வாசித்து முடித்தேன். அதை முடித்த கையோடு கவிதைக்குள் நுழைந்தேன். கவிதைகள் முதலில் என்னை எழுது என்கிறது. நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரே பொருள் குறித்த குறுங்கவிதைகளாக்க் கூட இருக்கலாமே..என்ற வினாவோடுதான் கவிதைகள் துவங்குகின்றன. ஆதிவாசிக் கவிதைகளாக ,குறைந்தது மூன்று வரிகளிலிருந்து கவிதைகள் வெடித்துள்ளன. ஒவ்வொரு கவிதையும் ,வினாக்களை உருவாக்கும் விதமாக, கூறிய விடையை விசாரிப்பதாக ,பறிக்கப்பட்ட வாழ்வாதாரம், மக்களின் மீது செலுத்தப்படும் அதிகார அத்துமீறல், காட்டு விலங்குகளின் மீதான அக்கறை என்று கவிதைகள் விரிகிறது. சொற்களின் கட்டமைப்பு; கவிதைகளில் எழுதப்படப் போகிற கருத்திற்கென்று தனியாக வலிந்து சொற்களைத் தேடாமல் ,புதிய சொற்களின் சேர்க்கை ,கவிதையின் இயல்பிற்கேற்று தன்னைத்தானே கட்டமைத்திருக்கிறது. கவிதைக்குள் வினாக்கள் எழுகின்றன. யாரோவின் வினாக்களுக்கு விடையாகின்றன. சில கவிதைகள் பதிலைத் தேடுகின்றன. சில கவிதைகள் ,யாரிடம் விடைகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. " வெண்மையும் கறுப்பும்; சுற்றுச் சூழல் என்கிற தலைப்பில் அமைந்துள்ள கவிதைகள் இரண்டு வரிகளில் கூட சாட்டையைக் கையில் எடுக்கின்றன. இரண்டு வரிகள் கூட பேசுகின்றன. இவரின் கவிதையுலகம் ,புறக்கணிப்பட்ட மரங்களை, வனத்தை, அங்கேயே பிறந்து மடியும் பழக்கவழங்கங்களை எடுத்துச் சொல்கின்றன. மாயாறு - நெடுங்கவிதைகள் ,கவிதைகளில் மாறுபட்ட குரல்..கவிதைகளிலும் முத்திரை பதிக்கிறார் கவிஞர். வெளியீடு; கனவு, திருப்பூர். 9486101003 **** சில கவிதைகள் **" 1 ** குலதெய்வத்துக்குன்னு ஒரு இடம் காலம் காலமா இருந்துச்சு யார் யாரோ வந்து பங்களாகட்டி எல்லாம் அடச்சாச்சு குலதெய்வம் கோவிலுக்கும் போக முடியில. ஒத்தை ஆளு போறமாதிரி சின்ன எடமாச்சும் குடுங்க எங்க குலதெய்வம் நடமாடறதுக்கு நாங்க அவன் கிட்டே நடந்து போறதுக்கு *** 2 ** சிங்கம் பூனைக் குடும்பம் சிறுத்தை பூனைக்குடும்பம் அதனதன் புத்தி அதுக்கு கார்ப்பரேட் கம்பனிக என்ன குடும்பம் ** 3 ** ஒரு மரம் கல்லாக பல ஆயிரம் வருடங்கள் ஒரு மரம் விறகாக சில நொடிகள் ** 4 ** பிறகு ஒளி இருந்தது அவர்களுக்கு பிறகு = டாலர். அவர்கள்= யாவரும் *** நூல் பார்வை ; க.அம்சப்ரியா
கொரானாவும் திருப்பூரும் : யுவராஜ் சம்பத் Rs 100 kanavu kanavu திருப்பூரை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற பலதரப்பட்ட மனிதர்களுக்கும் , என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தி பாதிப்புகளைஏற்படுத்தியிருக்கிறது இந்தப் பாழும் நோய் என்பது பற்றியும் எழுதாமல் இந்த கட்டுரை முடியாது.... அவர்களிலிருந்து, ஒரு துறைக்கு ஒருவர் என்ற அளவு கூட ( அது மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ) இல்லாமல் ஒரு சிலரை மட்டும் நேரில் கண்டு அல்லது தொலைபேசியி உரையாடல் மூலம் அவருடைய கருத்துகளை கேட்டு அதையும் இங்கே பகிர்ந்து கொள்வதுதான் ஒரு நடுநிலையாலனின் செயலாக இருக்கும் என்பதால் அதயும் ... அவரவர் , அவர்களுடைய சொந்த ஊரில்,, என்னென்ன பொருள் உற்பத்தி செய்கிறார்களோ, அந்த பொருட்களை, அங்கிருக்கும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாங்கி, அதை எப்படியாவது , யாருக்காவது விற்று , வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் இது எவ்வளவு நாளைக்கு என்று யாருக்கும் தெரியாது.. புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்ல , புலம்பெயர் நிர்வாகிகளும் அதயே செய்துகொண்டிருக்கிறார்கள்.. இவர் பெயர் அர்ஜுனன் என்று வைத்துக்கொள்ளுங்கள்... திருப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பனியன் துணி உற்பத்தி இயந்திரங்கள் இல்லாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், மிகவும் சிக்கலான வடிவமைப்பை உருவாக்கக்கூடிய இயந்திரத்தை இறக்குமதி செய்தார் ..அன்றைய காலகட்டத்தில் அதுதான் லேட்டஸ்ட் அதி நவீனமானது.. ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் புதிதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் மனோபாவம் கொண்ட திருப்பூர் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் அதை வெற்றிகரமாக பயன் படுத்த முடியாமல் , அவர் ஒரு பெரிய நிறுவனத்திடம் சரணடைந்து அதனால் பல லட்சங்களை இழந்தவர்... அதற்க்கு பின்னர் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர்... ஆனால் இன்று 6 மாத காலமாக ஊட்டி காய்கறி வியாபாரம் செய்கிறார்... மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள இயலாத தொழில்கள் இன்று காணாமல் போய்விட்டது.. அடுத்து என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை யூகிக்க முடியாத ஒரு தலைமுறை திருப்பூரில் இன்னமும் இருக்கிறது .. திருப்பூர் தொழிலதிபர்கள் தங்களுடைய பார்வையை விசாலமாக்கி கொள்ளாதவரை, கொரோனாவுக்குப் பின்னரும், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ,அவர்களால் இந்த தொழிலுக்கு ஏற்படுத்தித் தர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை... இவர் பெயர் சிவசுப்பிரமணியம்.. covid-19 முன்னாள் இவர் திருப்பூரில் உள்ள பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் மிக முக்கிய பணியில் இருந்தவர் சொந்த ஊர் நீலகிரி ..இங்கு வந்து தன்னோடு பணிபுரிந்த சக தோழியை மணந்து இன்று சொந்த வீட்டில் வாழ்ந்து வருபவர்...மனைவி இல்லத்தரசியாக மட்டும் இல்லாமல் அவரும் பனியில் இருக்கிறார்.. அவரின் வாழ்வாதாரமும் இந்தக் கொடிய நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது... தற்போது வாழ்வை நகர்த்த ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார்... அதிலென்ன ஆச்சரியம என்கிறீர்களா?? அவர் வாங்கி விற்பது ஆடைகளை அல்ல.. ஊட்டி வர்க்கியை.. இந்தத் தோழியின் பெயர் கோமதி .. திண்டுக்கல்லிலிருந்து, பொறியியல் பட்டம் பெற்று திருப்பூர் வந்து, ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார் .. இவரும் இவர் கணவரும் தற்பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில், திண்டுக்கல் மதுரை சேலைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. குடும்பம் நடக்க வேண்டுமே சார் என்கிறார்கள்.. இவர் பெயர் நாகராஜன்... ஏற்றுமதியாளர்கள் துணிக்கு சாயமிடுகிற நிறுவனத்தில் வேலை செய்கிறார்.. தற்பொழுது தன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வழி சாயம் ஏற்றுதல் மூலமாக கரூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நூலில் சாயம் ஏற்றி கொடுக்கிறார்..,அவருக்கு மாற்றம் முன்னேற்றம்... இவர் பெயர் ஸ்ரீராம்... திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் துணை ஒப்பந்தக்காரர் ஆக இருக்கிறார்... தற்போதைய சூழலில் முகக் கவசம் மட்டுமே செய்து , தன்னோடு இருக்கிற மூன்று பணியாளர்களுக்கும் வேலை கொடுத்து , அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார்... இன்னும் சிலர் காய்கறி வியாபாரிகள் ஆகவும், நிரந்தரமில்லாத தெருவோரக் கடையில் , பலதரப்பட்ட பொருட்களை விற்றும், இன்னும் சிலர் வீட்டு சமையல் முறையில் சமைத்து பிரியாணி விற்பதையும் ,,இன்னும் சிலர் நிரந்தரமில்லாத எந்தெந்த தொழில்லெம்மாவோ செய்து கொண்டிருக்கிறார்கள் .. இவர்கள் அனைவரும் ஒரே ஒரு கருத்தை சொல்கிறார்கள்... அது இந்த ஊரின் அபரிமிதமான வளர்ச்சியை நிலையானது என்று எல்லோரும் நம்பி விட்டோம்.. ஆனால் இந்த ஒரு கொடிய நோய் எங்கள் எண்ணத்தை சிதைத்து விட்டது.. இனி இந்த ஊர் முன்னிருந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பது சந்தேகமே.. ஆனாலும் எங்களுக்கு உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை இந்த கொடிய நோய் தந்துள்ளது... அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்.. பார்வையற்ற ஒருவரை வழிகாட்டுபவர் என்று நம்பியதும், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதையும் இயற்கை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம்... இது எல்லோருக்கும் பொருந்தும் தானே, தோழர்களே !!!! வங்கிக் கடனும் தனி நபர் கடன்களும் மிக தாராளமாக கிடைத்து வந்த ஊரில் தற்பொழுது பணத்தட்டுப்பாடு.. ரொட்டேசன் நின்னு போச்சு சார்..ஒரு தெருவோர புரோட்டா கடை முதலாளியின் புலம்பல்... இதனால் இந்த ஊரின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்ப்படும் என்பது கண்கூடு.. உழைப்பை நம்பியே உருவான ஊர் திருப்பூர்.... உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஊர் திருப்பூர்.... ஆனால் சமீப காலத்திய வளர்ச்சி உழைப்பை பின்னுக்குத்தள்ளி வேறுவிதமான உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதனால், பாதிப்பு அதிகமாக இருக்கிறது... அந்த உத்திகள் தற்போது தோற்று விட்டன... தொழில்கள் வேறு பல நாடுகளுக்கும் சென்று விட்டன.. எங்களுக்கு இந்த ஊரை விட்டு அல்ல, இந்தியாவை விட்டே வெளிநாடுகளுக்கு சென்றால்தான், எங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கும் போல் தோன்றுகிறது... ஆகவே ஆபிரிக்க நாடுகளின் பக்கம் எங்கள் பார்வை தற்பொழுது திரும்புகிறது.. பல மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை நாங்கள் தொடர்புகொண்டு பேசி வருகிறோம் . இது பொதுவான குரலாக இருக்கிறது... இதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு... நூறு வருடங்களுக்கு முன்னரே பனியன் தொழிலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய திருப்பூர் ,, எண்பதுகளில் மிக அதிகமான வளர்ச்சியை பெற்று, இந்தியாவையே , தன்னை நோக்கி பார்க்க வைத்த திருப்பூர் , இன்றைக்கு மிகச்சிறிய நாடுகளான வியட்னாமோடு கூட போட்டி போட முடியாத நிலைமையில் இருப்பதற்கு காரணம் என்ன ...( கொரானாவும் திருப்பூரும் -யுவராஜ் சம்பத் ரூ 100 ) யுவராஜ் சம்பத்..
சுப்ரபாரதிமணியன்----திருப்பூர். நவீன நாவல் இலக்கிய ஆய்வுகள் முனைவர் அனிதா பரமசிவம் நூல் சாகித்ய அகாடமி சம்பந்தப்பட்ட இரண்டு சமீபத்திய நூல்கள் எனக்கு கவனத்திற்கு உரியதாக பட்டன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது -யுவ புரஸ்கார் விருது பெற்ற அனைத்து படைப்பாளிகளையும் அழைத்து இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி அந்த கருத்தரங்கில் இடம்பெற்ற படைப்பாளிகளின் அனுபவங்களையும் படைப்பாளிகள் பற்றிய வேறு எழுத்தாளர்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு தொகுப்பு நூல். புரஸ்கார் பரிசு பெற்ற படைப்பாளிகளை கொண்டாடுவது அதன் நோக்கமாக இருந்தது. அந்த கருத்தரங்கத் தொகுப்பு அந்த வகையில் ஒரு முக்கிய நூலாகமும் அமைந்திருந்தது . அதேபோல சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல் களை எடுத்துக் கொண்டு அவற்றில் ஆய்வுசெய்த ஒருவரின் ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும்.இந்த இரண்டு நூல்களும் எனக்கு வழக்கமான பாதையில் இருந்து சற்றே விலகி புது வெளிச்சம் காட்டுபவையாக இருந்தன முனைவர் அனிதா பரமசிவம் அவர்கள் சாகித்ய அகாடமி பெற்ற சில படைப்பாளிகளின் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்த முனைவர் பட்ட ஆய்வேடு அப்படியே புத்தகம் ஆக்காமல் படைப்பிலக்கிய பார்வையில் சற்று மாறுபாடு கொண்டு இந்த தொகுப்பு நூலை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண்மணி என்ற அளவில் உளவியல் சார்ந்த கருத்துக்களையும் பெண்ணிய பார்வைகளையும் இந்த புத்தகம் கொண்டிருப்பது முக்கியமா அம்சமாக இருக்கிறது. சிறந்த ஆய்வுகள் நூல்களாக இந்த வகையில் மாற்றம் பெறுகிற போது அது இளம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் . இந்த நூலில் அனிதா அவர்கள் ஆறு நாவல்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் அவற்றில் விளிம்புநிலை மக்களில் உள்ள தொழிலாளர்களுடைய சிக்கல்கள், பெண்களுடைய சிக்கல்கள் ,முதியோர் சிக்கல்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விலாவாரியாக ஆய்வு செய்திருக்கிறார், நாவல்கள் கட்டமைக்கும் சிக்கல்களை விடுவித்துக் கொண்டு அதற்கு சமூக காரணங்களையும் தேடி போய் இருக்கிறார் ,சராசரி மனிதர்களும் சமூகத்தில் எந்த முக்கியத்துவம் பெறாத மனிதர்களும் இந்த நாவல்களில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம் ,அந்த நாவல்களில் பெண்களின் வாழ்க்கை முறைகள், அவளின் சிரமங்கள் போன்றவை முக்கிய பார்வையாக கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆறு நாவல்களை மின் மாதிரியாகக்கொண்டே சமுதாயச் சிக்கல்களை சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார். தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி .,சா கந்தசாமி விசாரணை கமிஷன் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், திலகவதியின் கல்மரம், நீல பத்மநாபனின் இலை உதிர் காலம் ,டி செல்வராஜின் தோல் ஆகியவை இந்த ஆய்வில் முக்கிய நாவல்களாக இடம்பெற்றிருக்கின்றன , இதில் ஒரு நாவல் மட்டும் பெண் எழுத்தாளர் படைப்பாக இருக்கிறது அதன் காரணமாக அது சார்ந்த கூறுகளை சரியாகவே அனிதா அவர்கள் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார் .இதுவரை சாகித்ய அகாடமியில் பரிசு பெற்ற பெண்கள் மூவர். ராஜம் கிருஷ்ணன் லட்சுமி திலகவதி. ராஜம் கிருஷ்ணன் முற்போக்கு பார்வை கொண்டவராகவும் புரட்சிகரமான கண்ணோட்டத்தைக் கொண்டவராகவும் எழுதியிருக்கிறார். ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் படைப்புகளை முன் வைத்திருக்கிறார் .லட்சுமி மரபு சார்ந்த முறையில் வாழ்க்கையைப் வேணும் பெண்களைப் பற்றி தான் நிறைய எழுதியிருக்கிறார் .அப்படி பாரம்பரிய மரபு சார்ந்த விஷயங்கள் ஒரு குடும்பச் சூழலில் எப்படி அறம் சார்ந்த விழுமியங்களை நிலை நிறுத்துகின்றன என்பதை விளக்குகிறார். அப்படித்தான் இன்னொரு எழுத்தாளர் திலகவதி அவர்கள் .கல்மரம் நாவலில் வீடு கட்ட தொடங்கிய மனிதர்கள் முதல் வீடுகள் கட்டி முடிக்க போது அந்த மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கட்டிடங்களை உருவாக்கம் தொழிலாளர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார் .கல் மரத்தை உருவாக்க தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கல்மரம் என்றால் கட்டிடங்கள். நகரங்களில் இந்த கட்டிடங்களை அதிகம் காணலாம் .அப்படி நகர வாழ்க்கையில் இம்சை படும் பெண்களை பல எழுத்து சித்திரங்கள் மூலம் தந்திருக்கிற திலகவதி அவர்கள் இந்த நாவலில் கட்டிட தொழிலாளர்கள் பக்கத்தில் சிரமப்படுகிறார்கள்.அவர்கள் பற்றிய வாழ்நிலையை விளக்கியிருக்கிறார் பெண்கள் உட்கார நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பதும் அவர்களின் உடம்பில் ஈயம் பட்டு பட்டு ரத்தத்தில் கலந்து அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதும், ஒரு நாற்காலி போடுவதற்காக ஒரு பெண் போராடுவதும் ,,,அச்சகம் சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பெண்களுக்கான பிரச்சினை பற்றிய ஒரு முக்கிய நாவலாக கூட திலகவதி அவர்கள் எழுதியிருக்கிறார் , இந்த ஆய்வில் பெண்கள் கதாபாத்திரங்களின் சிறப்பையும் பெண்ணெழுத்துப் பார்வையில் அவர்களுடைய வகையில் இருக்கும் பார்த்து ரசித்து வழங்கும் கூரிய தீவிரவாத பார்வையிலேயே அறிந்தவர்களை விளக்கியிருக்கிறார், இதுபோன்ற ஆய்வுகள் புத்தக வடிவம் பெறும்போது இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் வாசகப் பரப்பை மேலும் குறிப்பிட்ட கவனம் பெறத் தக்க வகையில் சில பகுதிகளைக் கொண்டிருக்கிறது .அப்படி ஒரு நூல்தான் அனிதா பரமசிவம் அவர்களின் இந்த நூல் விலை ரூபாய் 250 வசந்தா பதிப்பகம் சென்னை ReplyReply allForward
Congraulations sithurai மரயானை: சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி முகப்பில் குழந்தைகளுக்கான ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பவர், இந்த மூன்று பேரும் ஒரு பூ இதழின் அடிப்படை மடிப்புகளாக இந்நாவலில் இருக்கிறார்கள் .இவர்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான சிங்கப்பூரின்கள் வெவ்வேறு விதமாக இதில் பரிணமித்து ஒரு வனப்புமிக்க பூவை வடிவமைப்பது போல இந்த நாவல் அமைந்திருக்கிறது . பல்வேறு கலாச்சாரமும் மொழித் தன்மையும் வாழ்வியல் சூழலும் கொண்ட இவர்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி சிங்கப்பூரின் ஓரளவு சரித்திரத்தையும் சிங்கப்பூரின் ஒரு முக்கியப் பகுதியான புக்கிட் பஞ்சாங் பகுதியைப் பற்றியும் விரிவாக சொல்லப்பட்ட ஒரு நாவல் என்று சொல்லலாம் .இதில் வருகிற சுகவனம் கல்வியாளர் ....ஒரு தலைமுறைக்கு உதாரணம். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் முதலாய் உயர்கல்வியை பெற்றுக்கொண்டவர். .இதனால் அவர் அமைப்புகளின் சேவகர் ...அமைப்புகளும் அவற்றின் விதிகளும் அவரை எளிதில் பயமுறுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. சுகவனம் போன்றவர்கள் அந்த சமூகத்தை சமூக ஒழுக்கம் என்று அழைப்பார்கள் .சோமசுந்தரம் சுகவனத்தின் பள்ளியில் ஒன்றாக படித்த கணேசனின் தந்தை .கணேசன் இப்போது தாய்லாந்தில் தலைமையகத்தை கொண்டிருக்கும் அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் கணினி கட்டமைப்பு பொறியாளராக வேலை செய்பவர் .பள்ளிகளுக்காக சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் நன்கொடைகள் வாங்கி தருவதில் சோமசுந்தரம் சாமர்த்தியசாலி. பல இந்துக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பில் பொறுப்புகளில் இருந்தவர். சுகவனம் ஒருநாள் யாருடையதோ இப்படி வாழ்வதற்கும் மிரட்டலுக்கும் பயந்து அந்த நகரம் தன்னை விழுங்கி செரித்து விடக்கூடும் என்று ஆழமான நம்பிக்கையில் இருப்பவர். பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது சுகவனத்திற்கு டைகர் என்ற ரகசிய பட்டப்பெயர் இருந்தது உண்மையிலேயே தன்னை புரியாத தான பல விஷயங்கள் ஆக்கி வைத்திருக்கின்றன என்று அவர் நினைப்பவர். அவர் பின்னால் இளைஞர்களால் தாக்கப்படுகிறார் அது அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது உங்களுக்குள்ளேயே காட்டிக் கொடுப்பதை விட மோசமான குற்றம் வேறு எதுவும் இல்லை என்று அவரும் நிற்கிறார் .அந்த அடிபட்ட தருணங்கள் அவருக்கு பல விடயங்களை கொண்டுவருகின்றன. இதற்கு முன்னால் சில தமிழ் இளைஞர்களை சீனர்கள் அடிப்பது பற்றிய குறிப்புகளும் நாவலில் உள்ளன . இவ்வகை வன்முறைகள் முதியோர்ர்க்கு சங்கடமளிப்பவை..சுகவனத்திற்கு வெளிநாடு என்பது மலேசியா தான் .ஆனால் அவரின் மனைவி ஜெயக்கொடி புற்று நோய் காரணமாக இறந்து விடுகிற போது சோமசுந்தரம் அவரை ராமேஸ்வரம் சென்று சடங்குகள் செய்து வருமாறு வலியுறுத்துகிறார். ஆனால் அவர் செல்ல விரும்பினாலும் தாமதமாகிக் கொண்டிருக்கிறசூழல். இந்த நிலையில் சீனக் கிழவர் தான் செய்கிற ஐஸ் விற்கும் தொழிலில் எப்படி தன்னை திருப்தி படுத்திக் கொள்கிறார். வாழ்க்கையின் சதுர விதிகளை மீறிச் சுயநிறைவு , மனநிறைவு கொள்கிறார் என்பதை சுகவனம் அறிகிறார். எளிய மனிதன் கற்றுக்கொடுக்கும் பாடம். அவரின் அன்பான உலகம் கண்டுணர்ந்து ராமேஸ்வரம் சென்று சடங்கு செய்யும் கட்டாயத்தை விலக்கி வைக்கிறார் .. சுகவனத்தின் மனைவி ஜெயக்கொடி பற்றிய முழுமையான சித்திரம் அருமையாக வரையப்பட்டிருக்கிறது. கண்கள் வழியாக அவர் உயிர் போயிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் .டாக்டர் வந்து கண்களை மூடினால் போதும் என்று கூட யோசித்து வைத்துக் கொண்டிருக்கிறார் சுகவனம் . வேட்டி கட்டுவதில் கூட அவர் சிரமப்படுகிறா.ர் புத்தக வாசிப்பில் அக்கறை உள்ளவராக ஜெயக்கொடி இருக்கிறார் .அதேபோல இசை சார்ந்தும் நாட்டியம் சார்ந்தும் அக்கறை கொள்பவராக இருக்கிறார். ஆனாலும் இசை கூடங்களில் பணத்தை செலவழித்தால் கதை கந்தலாகி விடுமென்று அவர் கருத வேண்டியிருக்கிறது. ஜெயக்கொடி நடனத்திற்கு போவதில் பல சிரமங்கள். சுகவனமும் ஒரு மாதிரி தடை விதிக்கிறார். அப்படி இல்லாமல் அவரை செல்ல அனுமதித்திருக்கலாம் என்ற குற்றவுணர்வு ஜெயக்கொடி இறந்தபின் சுவ்வனத்தின் இதயத்தில் குறுகுறுக்கிறது. சக்திவாய்ந்த மருந்துகளை கொடுத்து கொஞ்சம் வாழ அனுமதிக்கிற சூழலில் அவரின் புற்றுநோய் நான்காவது கட்டத்தை தாண்டி இருக்கிற காரணத்தினால் சுகவனம் ஜெயக்கொடியைத் துன்புறுத்த விரும்பவில்லை. சிங்கப்பூர் என்ற மாபெரும் நாடு பற்றிய முழுமையான சரித்திர குறிப்புகளும் சூழலும் பல இடங்களில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன .அதுவும் சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த நாகர்கோவில் கடலூர் தமிழர்களால் கட்டப்பட்டது போன்ற விவரங்கள் முதல்கொண்டு பல விஷயங்கள் இந்த நாவலில் விரிவாக சொல்லப்படுகின்றன .ஊர்ஊராக சுற்றுலாத்தலமாகப் போய் வரலாம் என்பதை அவர் மனதில் பதிந்தாலும் அவர் வெளிநாடு எல்லாம் போகும் வாய்ப்பை அமைத்துக் கொள்ளாமல் சிங்கப்பூரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இருக்கிறார் .சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து இடம் பெயர்ந்து கதையும் சிங்கப்பூர் ராணுவப்படை உருவாக்கப்பட்டு சிங்கப்பூர் குடிமக்கள் எல்லோருக்கும் அது தேசிய சேவை கட்டாயம் ஆக்கப்படுவதும் அது சார்ந்த சில கதாபாத்திரங்களும் இந்த நாவலில் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றன, உடல்நிலை மிக சரியாக இருப்பவர்கள் பாவம் செய்யாதவர்கள் தேசிய சேவை நேரத்தில் அவர்கள் முகாமிலேயே கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ராணுவத்தில் நீ என்னவாக போகிறாய் என்ற கேள்வி அங்கு பலர் எழுப்பப்படுகிறது ,சமையல்காரன் ஓட்டுநர் எழுத்தர் என்று பலருடைய கனவுகள் அல்லது விருப்பங்கள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையையின் ஒரு வகைப் பரிமாணத்தை இந்த நாவல் சொல்கிறது. யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள முடியாது குற்ற உணர்வுக்கு ராமேஸ்வரம் தான் பதில் சொல்லக்கூடும் என்பது கூட சுகவனத்தின் கற்பனைக்குள் இருக்கிறது .பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் கலாச்சார பாதிப்பு உள்ள மக்களும் என்று எந்த ஒரு நாட்டின் தன்மையை பல கதாபாத்திரங்கள் விளக்குகின்றன உதாரணத்திற்கு சுகவனத்தின் மகளான நீலா ஒரு நைஜீரிய கணவானை மணந்து கொள்கிறாள் ஆனால் அவனுடைய நிலையும் வேலையை தக்க வைத்துக் கொள்ளாத முடிவுகளும் அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றன .இதுபோல குடும்ப உறவை சார்ந்த பல கதாபாத்திரங்கள் சிங்கப்பூர் வாழ்க்கையின் பல கலாச்சார அம்சங்கள் சார்ந்த விஷயங்களை வெளிக்கொணர பயன்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் களமாக சிங்கப்பூரின் புகிட் பஞ்சங் பகுதி இடம்பெற்று ஒரு இமாலய தன்மையுடன் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ” ரயில் கம்பியைத் தாண்டிவிட்டால் முழு பக்கம் காடுதான் .பெரும் கம்பம் .அங்க வீடு வாங்கு .இல்லைனா குழந்தை பெத்துக்கமாடேன்னு சொல்வது சுத்த முட்டாள்தனம் ” என்று கூட கட்டாயங்கள் எழுகின்றன .அப்படி இருந்த இடம் ஒரு பெரும் நகரமாக பின்னால் மாறிவிடுகிறது. அந்த மாநிலத்தின், நகரத்தின் இயல்பு பற்றி விளக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது சிங்கப்பூரின் பிரதான புக்கிட் தீமா சாலையின் பகுதிகள் உட்பட பல மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கியது சிரமப்படுவது முதற்கொண்டு அந்த பகுதியின் தன்மை உருவாக்குவது நாவலில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது ,நிலவெளி பற்றிய விஸ்தாரண்மாக அது விரிந்திருக்கிறது . சுகவனத்தின் உரையாடல்களும் நட்பும் அவருக்கு சில வழிகளை காட்டுகிற அந்த சீன கிழவனுக்கு போட்டியாக பேரனின் பள்ளிக்கூட முகப்பிலேயே ஐஸ்கிரீம் விற்க அவருக்கு ஆசை வருகிறது .அதற்கு முன் பேரனுடன் ஒரு தடவையாவது கால்பந்து விளையாடணும் என்று கூட சொல்லிக் கொள்கிறார் .நிலம் சார்ந்த அனுபவங்கள் ஒரு மனிதனை எப்படி நிர்ணயம் செய்கின்றன என்பதை பழைய புக்கிட் பஞ்சாங் பகுதியும் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளும் அவை சார்ந்த சரித்திர குறிப்புகளும் அவற்றுடன் தொடர்புடைய மனிதர்களின் முகங்களும் கதைகளும் சுகவனதுக்குள் இருக்கிற போது அதை சுமந்து கொண்டு தெரிகிறார் ,அது அவருக்கு சுகமாக இருக்கிறது ஒருவகையில் ஒரு சிறுகதை ஆரம்பிக்கிற இடம், அதுவே முடிகிற இடம் என்று ஒரே களத்தை வைத்துக்கொண்டு இந்த நாவல் முன்னும் பின்னுமாக நகர்கிறது அல்லது ஒரு குறுநாவல் தன்மையில் ஆரம்பமும் முடிவும் நிலை பெறுகின்றன. ஆனால் இவற்றுக்கு 300 பக்க நாவலில் நாவல் தன்மையை கொண்டு வந்திருப்பது சித்தராஜின் சித்து விளையாட்டாக இருக்கிறது .ஒரு நாவல் என்பது பெரிய கால அளவை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையை எல்லாம் இந்த நாவல் தகர்த்து கால அளவை மீறி மனிதர்கள் பற்றிய சித்தரிப்புகளும் அவர்களின் வாழ்வை முழுமையாகத் தரிசனமாகக் கொண்டு வந்துவிட முடியும் என்பதை இந்த நாவலில் சித்துராஜ் நிரூபித்து இருக்கிறார். ஏதோ ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டு உணர்வுகளால் நிரப்பும் எழுத்தாளன் போட்ட முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் ஏதேதோ வித்தை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வித்தையில் கொஞ்சம் மகிழ்விக்கவும் வேண்டியிருக்கிறது. அந்த முடிச்சுகள் அவிழும் பருவங்களால் இந்நாவலின் நிலம் அமைந்திருக்கிறது. எழுத்தாளனுக்குள் அமிழ்ந்து கிடக்கும் மகிழ்ச்சி, இருட்டு சோகம் என்பதெல்லாம் பிரதிபலிக்கும் பிம்பங்களாக கதாப்பாத்திரங்கள் நடமாடுகின்றன பலரின் நிழல்களாக... இதிலும் நிழலும் இருட்டும் மனித வாழ்வின் சாரம்சங்களைக் கோடிட்டுப் போகிறது. இதற்கு முந்தின இவரின் ” விளம்பர நீளத்தில் ஒரு மரணம் ”என்ற நாவலில் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார தன்மையை அடிப்படையாகக்கொண்ட மேல்தட்டு மக்களுடைய வாழ்க்கையை சொன்ன விதத்தில் சிக்கல்களும் சிடுக்கும் நவீனத்துவமும் என்று அமைந்திருந்தது .ஆனால் இந்த நாவலில் மிக எளிமையான கதைசொல்லல் மூலமாக வேறொரு இடத்தை சித்துராஜ் அடைந்திருக்கிறார் .இது திரும்பவும் . தொடர்ச்சியாகவும் எழுதி கை சுகம் காணக்கூடிய நாவலாசிரியரின் சிறப்பான இடமாக அமைந்திருக்கிறது 300 பக்கங்கள் ரூ .280 வம்சி வெளியீடு திருவண்ணாமலை
திருப்பூரில் தமிழன்னைக்குச் சிலை ..மக்கள் மாமன்றம் முயற்சி . திருப்பூரில் பொதுவெளியில் திருவள்ளுவர் சிலை வைக்க பல ஆண்டுகள் முயற்சி செய்து திருப்பூர் மக்கள் மாமன்றம் வெற்றி கண்டது சமீபத்தில் . மக்கள் மாமன்றம் நூலக முகப்பில் அந்த சிலை அமைந்துள்ளது ( டைமண்ட் திரையரங்கு முகப்பில் உள்ளது நூலகம் )சமீபத்தில் மக்கள் மாமன்றம் 25 என்ற நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது அடுத்து தமிழன்னைக்குச் சிலை வைக்க முயற்சி நடக்கிறது . அதற்கு உதவலாம் . தொடர்புக்கு சி.சுப்ரமணீயன் , அமைப்புத் தலைவர், மக்கள் மாமன்றம் 93457 20140
SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur Tirupur and Subrabharathimanian Palanaisamy : : blog: www.rpsubrabharathimanian.blogspot.com கொன்றை வாழ்த்துக்கள் : கொன்றை அறக்கட்டளையும் குமுதமும் இணைந்து நடத்திய சங்க இலக்கிய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். சங்க இலக்கியம் தமிழர்களின் பொக்கிஷம் மட்டுமல்ல. உலகமே கொண்டாட வேண்டிய ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிந்தனைகள், கொண்டாடப்பட்ட மனித உணர்ச்சிகள், கவிதை நயங்கள் நமக்கு கிடைத்ததே போன நூற்றாண்டில்தான். ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும், கம்பருக்கும் படிக்கக் கிடைத்த இந்த சங்க இலக்கியம் பாரதிக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. உ. வே. சாவின் உழைப்பால் நமக்குக் கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. உங்கள் பரிசுப் பணம் முழுவதும், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே வங்கியில் இருப்புத் தொகையாக செலுத்தப்பட்டு விட்டது. ஒரு பெரிய விழா எடுத்து பரிசுகளை வழங்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. தை மாதத்தில் இதை நடத்த இறைவன் அருள் புரியட்டும். கொன்றை அறக்கட்டளை

செவ்வாய், 21 ஜூலை, 2020

பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம்
கிராவின் வேட்டியும் பிரபஞ்சனின் அப்பாவின் வேட்டியும்
 தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் புதுவை யுகபாரதி –
சுப்ரபாரதிமணியன்
இந்த நூல் ஒருவகையில் பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம் என்று சொல்லலாம். பெரும்பாலும் இதில் உள்ள கட்டுரைகள் பாண்டிச்சேரி சார்ந்தே உள்ளன என்று சொல்லலாம். பாண்டிச்சேரியின் பண்பாட்டு அடையாளம் பாண்டிச்சேரி சார்ந்த எழுத்தாளருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள், அதிலும் மூத்த படைப்பாளிகள் என்ற வகையில் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்ஒளி வாணிதாசன், உசேன் போன்றவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள் ,,பாண்டிச்சேரி சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்புகளின்  செயல்பாடுகள் பாண்டிச்சேரி சமயங்களும் பொதுவுடமை இயக்கங்களும் பற்றியகட்டுரை போன்றவையெல்லாம் மனதில் வரும் போதே இது பாண்டிச்சேரி சார்ந்த ஒரு முக்கிய ஆவணமாக மனதில்  வந்து நிற்கிறது. அதை தவிர சில கட்டூரைகள் மட்டுமே பொதுவான அர்த்தத் தளத்தில் உள்ளன.அவையும் இந்நூலுக்கு உரம் சேர்ப்பவை
 பிரபஞ்சன் தமிழ்நாட்டில் வசித்து வந்தாலும் படிப்பும் வாழ்க்கையும் என்று அவருடைய பெரும்பான்மை காலம் பாண்டிச்சேரியில் இருந்திருக்கிறது..பண்பாடு  என்று ஒன்றுக்கொன்று இணைந்தப்  பண்பாட்டு அடையாளத்தை கொண்டிருந்தார் பிரபஞ்சன் .அப்படியே படைப்புகளில் வழியே இந்திய பிரஞ்ச் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் கொண்டிருந்தார் என்பதை புதுவை யுகபாரதி நிரூபிக்கிறார்.              கி ராஜநாராயணன் கரிசல் காட்டில் பிறந்தாலும்  வாழ்வின் பின்பகுதியை பாண்டிச்சேரியில் கழித்துக்கொண்டு கொண்டிருக்கிறார். அவருடைய வேட்டி என்ற ஒரு கதை மற்றும் பிரபஞ்சனின்  வேட்டி என்ற ஒரு கதை இரண்டையும் எடுத்துக் கொண்டு இந்த இரண்டு ஆளுமைகள் எப்படி தமிழிலக்கிய சூழலுக்கு பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் .பாரதிதாசனைப் பொருத்த அளவில் தமிழரை எவராலும் அழிக்க இயலாது என்று இறுமாந்து பாவேந்தர் தமிழ் இயக்க குறியீடாக பன்முகத்தன்மை வாய்ந்த படைப்புகளை உருவாக்கி இருப்பதை  ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
பாண்டிச்சேரியில் தனது முதுமை காலத்தை கழித்த மா. அரங்கநாதனின்  முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரத்தையும் அதன் தனித்தன்மையை பற்றிச் சொல்கிறபோது காவியா சண்முகசுந்தரம் அவர்களுடைய சிறுகதைகளில் வரும் ஆறுமுகத்தை பற்றியும் ஒரு ஒப்பீட்டு அளவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.அரங்கநாதன் முத்துக்கருப்பன் கதாபாத்திரத்தின் மூலமாக குமுகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குமுகத்தை  பார்ப்பவன் ஆனால் .காவியா சண்முகசுந்தரம் - சுந்தரபாண்டியனின் சிறு கதைகளில் காணப்படும் ஆறுமுகம் குமுகத்தோடு  ஊடாடி மனிதஉறவைப் பார்ப்பவன். முத்துக்கருப்பன் புதுகுரலில்  பேசுபவன் ஆறுமுகம் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய குரலில்  பேசுபவன் என்ற வகையில் ஒப்பீட்டுக் காண்பிக்கிறார் .இதில் மலையருவி என்னும் மயக்கும் பெயர்கொண்ட பாவலர் ,ஓடை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர் நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதித் தந்த பாவேந்தர் வழிவந்த பகுத்தறிவு பாவலர் ,.அவர் எப்படி தன்னுடைய பாட்டு உலகத்தை சிவப்புப் பாட்டை கொண்டு நிரப்பியிருக்கிறார் என்று ஒரு நல்ல கட்டுரை .அருமையாக இருக்கிறது புதுச்சேரியில் பல்வேறு சமூக மக்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் . அந்த மக்களுடைய வாழ்க்கையை அனுபவங்கள் சடங்குகள் சிந்தனைகளோடு அவர்கள் எப்படி பன்முகத்தன்மை வாய்ந்த பரிமாணத்திற்குள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஒரு கட்டுரை சொல்கிறது
 பாரதிதாசன் பரம்பரை என்று ஒன்று இருப்பதை பல கவிஞர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய பரம்பரையில் உள்ள பல்வேறு எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம்  ஒரு கட்டுரையாய் நீண்டப் பட்டியலிடப்பட்டிருக்கிறது .அது பெருமைப்படக்கூடிய பட்டியலாக இருக்கிறது புதுச்சேரி என்னுடைய மண்ணின் மைந்தனாக தமிழ் ஒளி  இருந்திருக்கிறார் அவரின் மே தின பாடல் பற்றிய ஒரு முழு கட்டுரை அவரின் பொதுவுடமை சார்ந்த ஈடுபாட்டையும் தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்வு கொடுத்து அவர் கவிதைகள் விளங்கி இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறது வாணிதாசன் ஒரு குழந்தை பாடலாசிரியராக நிறுவுவதில் ஒரு கட்டுரை வெற்றி பெற்றிருக்கிறது. பல்வேறு சிறுகதை எழுத்தாளர்கள் பாண்டிச்சேரி இருந்தாலும் அதிகம் பேசப்படாத உசேன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டை மையமாகக் கொண்டு ஒரு கட்டுரை இந்த நூலில் உள்ளது .பாரதிதாசன் வாணிதாசன் தமிழ் ஒளி  போன்ற புகழ் வாய்ந்தவர்கள்  கவிதை இலக்கியத்தைப் போன்று சிறுகதை இலக்கியத்திற்கு  படைப்புகளை அளித்துள்ளார்கள் . பாடல் இலக்கியத்தில் சிறப்பான கவனம் பெற்ற உசேன் அவர்கள் சிறுகதைகளிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார் அந்த முத்திரையை  ஒவ்வொரு கதையாக  எடுத்துக்கொண்டு விரிவாக ஒரு கட்டுரை பேசுவது சிறப்பாக இருக்கிறது. பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கட்டுரை பன்முகப்பார்வை கொண்டது .பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்துவது அந்த வகையில் அழகியல் பார்வையும் பெண்ணியப் பார்வையும் தமிழியப் பார்வையும் குமுகாயப் பார்வையும் எப்படி கொண்டிருக்கிறது என்பதை பற்றிய கட்டுரையில் பாவேந்தர் பாரதிதாசன் உடைய இன்னொரு முகத்தை காட்டுவதாக இருக்கிறது. அது அரசியல் பகுத்தறிவு சார்ந்த முகமாகவும் இருக்கிறது. தமிழில் சொல்லாட்சியும் தமிழையும் சொல்லாட்சியும் கொண்ட்தாக ஏறக்குறைய வைத்திருந்தாலும் தருகின்ற பொருள் , பாட்டின் தன்மை  வாணிதாசன் உடைய கவிதைகள் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதைப் இன்னொரு கட்டுரை சொல்கிறது.
 பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் பாண்டிச்சேரியில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. சாதனைகளை செய்கின்றன அந்த வரிசையில் உள்ள சுமார் 50 இலக்கிய அமைப்புகள் பற்றிய ஒரு கட்டுரை ஆச்சரியம் தருகிறது .காரணம் வெவ்வேறு வகையான கொள்கையும் மற்றும் இலக்கிய ஆர்வம் இருந்தாலும் அவை இலக்கியம் சார்ந்து இப்படி எல்லாம்  இருக்கின்றன என்பது அதில் காட்டப்படுகிறது இது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கிறது .அதிலும் நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பெருமை தரத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக பாண்டிச்சேரியில் தமிழ் இலக்கியம் சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்கிறது
 சுமார் இருபத்தைந்து பல்வேறு வகைப்பட்ட நூல்களையும் 5 குறும்படங்களையும் 4 ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிற புதுவை யுகபாரதி .பாண்டிச்சேரி இலக்கிய முகத்தை இந்த நூலில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

  தான் பிறந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்னும் தீராக்காதல் கொள்கையும் சிந்தனையும் கொண்டு தொடர்ந்து தனித்த தமிழில் பேசி தனித்தமிழ் எழுதிவருபவர்  யுகபாரதி என்று சுந்தரமுருகன் அவர்கள்  அணிந்துரையில் அறிமுகப்படுத்துகிறார் .எழுத்தாளர்கள் உள்ளூர் வரலாற்றை அறிந்து கொள்வது ரொம்ப முக்கியம் .பொதுவுடைமை என்பது ஏற்றத்தாழ்வற்ற எல்லோரும் ஓர் குலம் என்ற  எண்ணமும் எல்லாவற்றுக்கும் உழைப்பே மூலதனம் என்று கூறுகிற உயர்ந்த சிந்தனை என்ற விளக்கம்  புதுமொழி ரகசியம் பற்றி சொல்கிறார் .தமிழ் தேசியமும் பொதுவுடைமை இயக்கமும் அவை சார்ந்த ஆழமான புரிதலோடு யுகபாரதி இந்தக்  கட்டுரை  நூலை எழுதி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் தமிழ்மொழி, பாண்டிச்சேரி இலக்கியம் ,பாண்டிச்சேரி படைப்பாளிகள் குறித்து ஒரு முக்கிய பெரிய  ஆவணத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை சொல்கிறது இந்நூல் . ( வெளியீடு காவ்யா பதிப்பகம் ரூபாய் 230... 220 பக்கங்கள் )