நீயே
முளைப்பாய்.. கவிதா
ஜவஹரின் கவிதை அனுபவத்தில்,….. சுப்ரபாரதிமணியன்
பட்டிமன்றப்பேச்சாளர்கள்
, கைதட்டலுக்காகப் பேசுபவர்கள் நுணுக்கமான விசயங்களை எழுத்தில் இழந்து விடுவார்கள்
என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் கவிதா
ஜவஹரின் கவிதை அனுபவத்தில் நுணுக்கமான வியங்களை கூர்ந்து தேர்ச்சியாக வடிவமைத்திருப்பதில்
அந்த வகைப் பொதுப்புத்தி விசயங்கள் தகர்ந்து போயிருக்கின்றன. காதல் அனுபவங்களில்
துயரமும் வலியும் சுலபமாக பிடிபட்டிருக்கிறது. மழை என்ற படிமம் எல்லாவற்றிலும்
ஊடாகி நிற்கிறது . அது ஒரு தனிச் சிறப்பு. அ. முத்துலிங்கமும்,
வண்ணதாசனும் இவற்றை ரசித்து முன் மொழிந்திருப்பது நல்ல விசயம். ரூ 150 தமிழி
பதிப்பகம், இராஜபாளையம்.95 பக்கங்கள்