சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கிய ஆ.மாதவன் நினைவு இலக்கிய விருது ஏற்புரை
..சுப்ரபாரதிமணியன்
ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது
பின்னால் நான் எழுத ஆரம்பித்தபோது அவர் தொடர்ந்து என் கதைகளை பற்றிக் குறிப்பிட்டு எழுதினார்.. தீபம் இதழில் இருவரும் நிறைய எழுதினோம். எழுத்தாள நண்பர் ஆனார். தொடர்ந்து தொடர்பில் இருந்தபடி அவரை வாசித்துக் கொண்டிருந்தேன்.. திருவனந்தபுரம் வரும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். சாலை பஜாரில் உள்ள அவரின் செல்வி ஸ்டோரில் பாத்திரங்கள் மத்தியில் அவரையும் பார்ப்பேன். இலக்கியம் சார்ந்த பல நல்ல உரையாடல்களை கண்டு கொண்டிருக்கிறேன். வழக்கமாக ஊடவே நகுலன், நீலபத்மநாபன் ஆகியோரைச் சந்திப்பதும் வழக்கம்.
திருவனந்தபுரம் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் என்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது கனவு இதழ் நாற்பது ஆண்டுகளாக வருவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.. அந்த கனவு இதழில் சில சிறுகதைகளை ஆ மாதவன் எழுதினார். முதல் 25 ஆண்டுகளில் வந்த கனவுப் படைப்புகளை காவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் அவரின் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது
பின்னால் அவர் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் நடத்தும் கேரள தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது பல சிறுகதைகளையும் நான் எழுதி இருக்கிறேன். அப்போது தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் கேரளா தமிழ் இதழில் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கான அங்கீகாரம் வாசகப்பரப்பும் குறைவாகவே இருந்தது. அந்த காலத்தில் ஜெயமோகன் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதை நிறுவிய போது முதல் விருதை ஆ.மாதவன் அவர்களுக்கு அளித்தார். .அதற்கு முன்னால் திருப்பூர் தமிழ்ச்சங்கம் அவருக்கு விருது அளித்த போது அவர் வரவில்லை .அவர் சார்பாக நான் விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினேன். அவர் படைப்புகளைப் பற்றி… . பின்னால் திருப்பூர் வந்த திருவனந்தபுரம் பேராசிரியர் நயினார் அவர்கள் வசம் ஆமாதவன் அவர்களின் விருதுக் கேடயத்தை தந்தேன்க் பேச்சில் பேராசிரியர் நயினார் அவர்கள் ஆமாதவனுக்கு திருப்பூர் விருது தந்ததையும் இப்போது அவர் பெயரிலான விருது எனக்குத்தரப்படுவது பற்றியும் சொன்னார்.
ஆ மாதவன் படைப்புகளை புதுமைப்பித்தனுக்கும், ஜீ நாகரானுக்கும் இடைப்பட்ட எதார்த்தவாதப் படைப்பாளி என்று சொல்வார்கள். திருவனந்தபுரம் வாழ் தமிழர்களின் குறிப்பாக விளிம்பு நிலை மக்களையும் பற்றி அதிகம் எழுதினார் மொழிபெயர்ப்புகளையும் செய்தார். ஜி நாகராஜன் அவர்களைப்பற்றி அசோகமித்திரன் அவர்கள் விரல் என்ற ஒரு கதையை எழுதி இருக்கிறார். அந்த கதையில் ஜி நாகராஜன் முழு ஆளுமையை காட்டி இருக்கிறார் அப்படித்தான் அவர்களுடைய முழு ஆளுமையை ஒரு மலையாள சிறுகதையில் கண்டு கொண்டேன்..
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கிய ஆ.மாதவன் நினைவு இலக்கிய விருது ஏற்புரை - II
..சுப்ரபாரதிமணியன்
பரிதி பதிப்பகம்டாக்டர் ராஜிவ் குமார்
திருவனந்தபுரம் வருகை பற்றி கேட்டபோது ஆ மாதவன் இலக்கிய விருது பெற வந்திருக்கிறேன் என்று சொன்னேன் உடனே அவர் கடையில் இருந்த அவரின் சிறுகதைகளின் தொகுப்பான பெரிய நூலை ஒன்றை எடுத்து அதில் ஆ மாதவன் அவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் வேதுகலம் என்ற கதையை முழுக்க படித்துக் காண்பித்தார். நானும் கிள்ளி பாலம் சுப்பிரமணியம் என்ற திருவனந்தபுரம் எழுத்தாளரும் அவர் அந்த கதையை விவரிக்க முழுக்க்க் கேட்டோம்..( கில்லிப்பாலம் சுப்ரமணியன் தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் எழுதுபவர் இப்போது ஆங்கிலத்தில் கூட அவரின் கதைகளை வெளியிட்டு இருக்கிறார் )
அந்த வேது கலம் சிறுகதையில் டாக்டர் ராஜீவ்குமார் அவருடன் கொண்டிருந்த நட்பை பற்றிச் சொல்லுகிறார். சாலை பஜாரில் செல்வி ஸ்டோரில் பாத்திரங்களுக்கு மத்தியிலும், வியாபாரப் பொருள்களுக்கு மத்தியிலும் ஒரு இலக்கியவாதியாக அவர் தெரிந்து கொண்டிருந்தார். பாத்திரங்களுக்கும் பல பெயர்கள் இருந்தன பல கதாபாத்திரங்களை புராண ,இதிகாச விஷயங்களில் இருந்து கூட சூட்டி இருக்கிறார் .அவருடைய தொடர்பில் மனிதநேயமும் நட்பும் வெளிப்படும் விதத்தினை விவரித்திருக்கிறார். பின்னால் அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.. பின்னர் சாலை பஜார் போகும் ராஜிவ் குமார் அவர் கடை இருந்த இடத்தில் பழைய சாமான்கள் விற்கும் ஒரு கடை வந்திருப்பதைப் பார்க்கிறார். பல பழைய சாமான்கள் நிரநிது கிடக்கின்றன. உள்ளே போய் பார்த்தால் அந்த வேதுகலம் பாத்திரம் இருக்கிறது ஆமாதவன் இருந்தபோது அந்த வேதுகலம் பாத்திரம் அவரை வாங்கு வாங்கு என்று சொல்லுமாம். இப்போதும் அந்த வேதுகலம் பாத்திரம் அங்கு இருக்கிறது. பெண்களின் பிரசவ காலங்களில் சுடுநீர் வைத்து மூலிகைகளை போட்டு ஒத்தடம் கொடுக்கும் வேலைக்கு அந்த வேதுகலம் பாத்திரம் பயன்படும்.. அந்த பாத்திரத்தை அவர் பார்க்கிறார். அந்த பாத்திரத்தை முன்பு ஒரு திருடன் திருடிக் கொண்டுச் சென்றிருக்கிறான் இரவில் அதை திருடினான். தங்கமாக மினுமினுத்தது. தங்கத்தில் ஒரு பாத்திரம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக அதை வைத்திருக்கிறான். ஆனால் பகலில் அது மீண்டும் ஒரு சாதாரண பாத்திரமாக மாறிவிடுகிறது. அந்த அலுமினியைப் பாத்திரத்தால் என்ன பயன் என்று அவன் பழைய சாமான்கள் விற்கும் கடைக்குப் போட்டு விடுகிறான். அது தான் இப்போது அந்த கடையில் இருப்பதை ராஜீவ்குமார் பார்க்கிறார்.
இந்த கதை ஆ மாதவன் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே ராஜீவ்குமார் அவர்கள் எழுதியிருக்கிறார் சாதாரண மக்களுக்கு அலுமினிய பாத்திரமாக மின்ன, அவர் எழுத்தாளர்கள் மத்தியில் தங்க பாத்திரமாக மினிங்கிக் கொண்டிருப்பதை அந்த கதை சொன்னது. ஆ மாதவனுடைய முழுமையான ஆளுமையை தெரிந்து கொள்ள இந்த கதை போதுமானதாக இருக்கிறது. அவருடைய கேரள தமிழ் ஆசிரியர் காலத்தில் வெளியீடு செய்த சிறுகதைகள் கவிதைகள் போன்றவற்றை கேரள திருவனந்தபுரம் தமிழ் சங்கம் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும். அது அவர்கள் அவருக்குச் செய்யும் சரியான அஞ்சலியாகக் கூட அமையும்.
தமிழின் முக்கியமான எழுத்தாளராக விளங்கிய ஆ.மாதவன் பேரில் தரப்படும் இந்த விருதை பெறுவதில் நானும் பெருமை கொள்கிறேன்
0
சுப்ர பாரதி மணியன் திருப்பூர்