சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 31 மே, 2021

ஜோர்டான் நாட்டுக்குறும்படம் : ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் ஒரு தோள் பையைச் சுமந்து கொண்டு அவர் இறங்கி நடந்து வருகிறார். விஸ்தாரணமான வீதியை பார்த்தபடி நடந்து செல்கிறார். புதிதாய் மணமானவர்கள் போன்ற உடைத் தோற்றத்தில் இருக்கும் இருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்கள். மகிழ்ச்சியுடன் பலர் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடை அவரின் கண்ணில் படுகிறது. பழங்களும் வெவ்வேறு மளிகைச் சாமான்களும் விற்கும்கடை. அவர் கடையின் மூலையில் கிடக்கும் ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வைத்து தோள்பையிலிருக்கும் பொருட்களை எடுத்துப் பரப்புகிறார். கடைக்காரப் பெண்மணியும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன இது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு குழந்தை நடந்து போய் அவர் பரப்பி வைத்திருக்கும் பொருட்களில் இருக்கும் பொம்மை ஒன்றை எடுத்துக் கொள்கிறது. அதன் தகப்பனார் விலை கேட்கிறார். விலையெதுவும் இல்லை என்கிறார். “ இதில் காமரா ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்குமா. குண்டு இருக்குமா “ அடுத்து வருகிற ஒருவர் மோதிரம் ஒன்றை எடுத்துப் பார்த்து விலை கேட்கிறார். விலையெதுவும் சொல்லாமல் உதட்டைப்பிதுக்கி இலவசம் என்கிறார். அவர் முன் கிடக்கும் பொருட்களைத் தேர்வு செய்து பலர் எடுத்துப்போகிறார்கள் .” எங்கள் கடையுள் வந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ பொருட்களை விற்பனை செய்கிறாய். நீ யார்” கடைக்காரப் பெண்மணியும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன இது என்று சப்தமிட்டு களேபரம் செய்து அவரைத் தாக்கத் தொடங்கிறார்கள் . காவல்துறையினர் வருகிறார்கள். அவர் தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி நடந்து போகிறார். பொம்மையை வாங்கிய குழந்தை நடந்து போய் வெளியில் இருக்கும் ஏக்கத்துடன் பொம்மையைப் பார்க்கும் ஒரு சிறுவனுக்கு அந்த பொம்மையைக் கொடுத்து விட்டு நடந்து போகிறாள். . துருக்கி நாட்டுக்குறும்படம் : அக்ரி அண்ட் தி மவுண்டன் பள்ளிக்குப் போகும் அந்த இளம் பெண் தூங்கி எழுந்ததும் தான் படுத்த படுக்கையை, ரஜாயை மடக்கிப் போடுகிறாள். அடுப்பிற்கு தேவையான விறகுக் கட்டைகளை எடுத்துப்போய் அடுப்பில் போடுகிறாள். சாம்பலை வெளியே எடுத்து போட்டு விட்டு தயார் படுத்துகிறாள். குடும்ப மனிதர்கள் மற்றும் நாய். “ நான் ஸ்கூலுக்கு போகணும் அம்மா “ “ இருக்கற வேலைகளை முடிச்சுட்டுப் போ ..” வீட்டில் இருக்கும் படுக்கைகளை மடித்துப்போடுவது போன்ற வேலைகளைச் செய்கிறாள். பெரியவர்கள் தேனீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். “புது ஷீ தேவைப்படுதம்மா “ “இருக்கறதெ போட்டுக்க “ “ அப்பா வாங்கித்தர்றதா சொல்லியிருக்கர் அம்மா “ குளிரைத் தாங்கிக் கொள்ளும் விதமாய் ஒன்றுக்கும் மேற்பட்ட காலுறைகளை அணிகிறாள். ”வழக்கமா வர்ற பாதி வழிக்குத்தா நான் வருவேன். மீதி வழியிலெ நீயே போய்க்கணும் “ பள்ளிக்கு அம்மாவுடன் புறப்பட்டுப் போகிறாள். பாட்டி “ ஸ்கூலுக்கு எதுக்குப் போறே . மசூதிக்குப் போ . போதும்“ என்கிறாள். வெளியே பனி படர்ந்த மலைகள். நோக்கும் திசையெல்லாம் பனி படர்ந்து கிடக்கிறது. “ சீக்கரமா போ மகளே. நிலச்சரிவும் பனிச்சரிவு ஏற்படலாம்..” பாதி வழியில் கழுதை மேய்த்துக் கொண்டு வருபவர் அவளுடன் இணைந்து கொள்கிறார்.கால் புதைப்பனியில் அமிழ்கிறது. கழுதையின் காலே ஒரு அடிக்கு மேல் பனியில் அமிழ்கிறது. மெல்ல கால்களை வைத்து நடக்கிறார்கள். கழுதை குளிரிலும், ஆழமான பனியில் இருந்து கால்களை எடுக்கவும் சிரமப்படுகிறாள். அந்தப் பெண்ணும், கழுதையை ஓட்டி வரும் மாமாவும் சிரமப்படுகிறார்கள்.நதிகளும் குறுக்கிடுகின்றன. உடம்பைப் போர்த்திக் கொண்டிருக்கும் அடர்த்தியான ஆடைகளை மீறி பனியின் தாக்கம் மோசமாக இருக்கிறது. பள்ளி தென்படுகிறது.வெகு சிரமத்துடன் பள்ளி போய் சேருகிறாள். அவள் பள்ளி வகுப்பறைக்குள் சென்ற பின் பின்னணியில் கேட்டுகும் குரல் : “ விறகுக்கட்டையைக் கொண்டுட்டு வர்லியா . பள்ளியும் நம்ம வீடுதானே “ ஆசிரியர் உள்ளே இருக்கும் குளிரைத் தாங்காமல் சொல்கிறார். படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அந்தச் சிறுமியை இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் அவளைப் பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. பள்ளி முடிகிறது. “இருட்டுவதற்கு முன்பு சென்று விட வேண்டும். இருட்டில் நதியைக் கடப்பது சிரமம் “ மூன்று குழந்தைகளுடன் அவள் கிளம்புகிறாள். காலையை விட அடர்த்தியான பனி இன்னும் இம்சிக்கிறது. நதியை , புதைப்பனியைக்கடந்து ரொம்ப தூரம் நடந்து வீட்டிற்கு வந்து சேருகிறாள். அம்மா வீட்டின் வெளிபுறத்தில் கோழிகளுக்கு தானியம் இரைத்துக் கொண்டிருக்கிறாள். தாத்தா சவுகரியமாக உட்கார்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறார். படுக்கையில் சாய்ந்து அந்தச் சிறுமி உறங்க்த் தொடங்குகிறாள். களைப்பில் தூங்கி விடுகிறாள். ” இன்னொரு கப் டீ கொண்டு வா “ தாத்தா சப்தம் போடுகிறார். ஜோர்டான் நாட்டுக்குறும்படம் : ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம்/ சுப்ரபாரதி மணியன் ஒரு தோள் பையைச் சுமந்து கொண்டு அவர் இறங்கி நடந்து வருகிறார். விஸ்தாரணமான வீதியை பார்த்தபடி நடந்து செல்கிறார். புதிதாய் மணமானவர்கள் போன்ற உடைத் தோற்றத்தில் இருக்கும் இருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்கள். மகிழ்ச்சியுடன் பலர் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடை அவரின் கண்ணில் படுகிறது. பழங்களும் வெவ்வேறு மளிகைச் சாமான்களும் விற்கும்கடை. அவர் கடையின் மூலையில் கிடக்கும் ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வைத்து தோள்பையிலிருக்கும் பொருட்களை எடுத்துப் பரப்புகிறார். கடைக்காரப் பெண்மணியும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன இது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு குழந்தை நடந்து போய் அவர் பரப்பி வைத்திருக்கும் பொருட்களில் இருக்கும் பொம்மை ஒன்றை எடுத்துக் கொள்கிறது. அதன் தகப்பனார் விலை கேட்கிறார். விலையெதுவும் இல்லை என்கிறார். “ இதில் காமரா ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்குமா. குண்டு இருக்குமா “ அடுத்து வருகிற ஒருவர் மோதிரம் ஒன்றை எடுத்துப் பார்த்து விலை கேட்கிறார். விலையெதுவும் சொல்லாமல் உதட்டைப்பிதுக்கி இலவசம் என்கிறார். அவர் முன் கிடக்கும் பொருட்களைத் தேர்வு செய்து பலர் எடுத்துப்போகிறார்கள் .” எங்கள் கடையுள் வந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ பொருட்களை விற்பனை செய்கிறாய். நீ யார்” கடைக்காரப் பெண்மணியும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன இது என்று சப்தமிட்டு களேபரம் செய்து அவரைத் தாக்கத் தொடங்கிறார்கள் . காவல்துறையினர் வருகிறார்கள். அவர் தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி நடந்து போகிறார். பொம்மையை வாங்கிய குழந்தை நடந்து போய் வெளியில் இருக்கும் ஏக்கத்துடன் பொம்மையைப் பார்க்கும் ஒரு சிறுவனுக்கு அந்த பொம்மையைக் கொடுத்து விட்டு நடந்து போகிறாள். .
அழகுபாண்டி அரசப்பனின் நீண்ட பயணம் : சுப்ரபாரதி மணியன் அழகுபாண்டி அரசப்பனின் கவிதைகளில் இருந்த கதையம்சங்கள் அவரை ஒரு சிறுகதையாளாரகக் காட்டிய போது மகிழ்ச்சியாக இருந்தது. கதை என்ற வடிவம் அவருக்கு சரியாகக் கூடி வரும் என்றுத் தோன்றியது. கொரானா பெருந்தொற்று காலத்தில் அவர் முக நூலில் எழுதியக்கதைகள் அதை மெய்ப்பித்தன. என் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றே சொல்லலாம் . அவரின் சொந்த ஊரில் கிராம வாழ்க்கையில், வேலை அனுபவ இடங்களில், திருப்பூரில் அவர் கண்டு கொண்ட மனிதர்களின் சித்திரங்களாக அவை இருந்தன. ரத்தமும் சதையுமான மனிதர்களைச் சிறுகதைகளுக்குள் கொண்டு வந்திருந்தார். பல கதைகளில் அவரை அடையாளம் காட்டினார். பலவற்றில் அவரோடு பழகிய நூற்றுக்கணக்கான மனிதர்களின் சித்திரங்களை வரைவதில் அவரின் உணர்ச்சிப்பெருக்கெடுப்பு இருந்தது. அவரின் பீறிடும் எண்ணங்களின் வடிகால்கள் தென்பட்டன. தேனி பிரதேச மனிதர்களின் நினைவுக்குவியல்களாக அவை நின்றன. இதெல்லாம் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்த பாக்கியவான்களுக்கே நிகழும். அந்த பாக்கியவான்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கிற பாகிர்வுத்தன்மையில் அவரின் புதிய தடம் இக்கதைகளில் உள்ளன. மனிதர்களோடு குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களோடு அவர் பயணப்படுவது என்பது சமகாலத்து எல்லாவகை நிகழ்வுகளோடும் பயணப்படுவதுதான் அழகுபாண்டி அரசப்பனின் பயணத்தில் நாமும் கூட இருந்து அவரின் விளிம்பு நிலை மனிதர்களோடும் அவரோடும் கைக்குலுக்கி மகிழ்ச்சி கொள்ளுவோம். கே பொன்னுசாமி என்ற கலாச்சாரத் தூண் : பொன்னீலன் 1990களின் பிற்பகுதியில் கலை இலக்கியப்பெருமன்றம் ஒரு பண்பாட்டுப் பேரியக்கமாக்கத் தமிழகம் முழுவதும் பரவி வளர்ச்சியடைந்தது. கே. பொன்னுசாமி , எஸ் ஏ . பாலகிருஷ்ணன் போன்றோர் கோவை மாவட்டத்தில் திருப்பூர் மையத்திலிருந்து துடிப்பாகச் செயல்பட்டனர். அவர்களின் முயற்சியால் அக்காலத்தில் திருப்பூரில் ஆண்டுதோறும் கலை இலக்கியப்பெருமன்ற முகாம் நடைபெற்றது . எத்தனையோ இடஞ்சல்கள், அதை மீறித் தொடர்ந்து நடைபெற்றது முகாம். திருப்பூர் வட்டாரத்தில் பணம் வசூலித்தும் முகாம் பங்கேற்பாளர்கள் செலுத்தும் கட்டணத்தைக் கொண்டும் மூன்று நாளும் நல்ல முறையில் உணவு, தங்குமிடம் மற்றபடியான தங்கும் வசதிகள் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டன இது திருப்பூர் முகாமாக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 300-400 தோழர்கள் கலந்து கொண்டார்கள். ஆய்வாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் எனப்பலதரப்பட்டவர்க்ளும் பங்கெடுத்தனர் 1998 ம ஆண்டு முகாம் பற்றியக்குறிப்புகள் என்னிடம் உள்ளன. தோழர் இரா. நல்லக்கண்ணு, கே சுப்பராயன், தனுஷ்கோடி ராமசாமி, டாக்டர் எஸ் ஸ்ரீகுமார், தஞ்சை இரா இளங்கோவன், கவிஞர் ரவீச்திரபாரதி, அ ப பாலையன், வழக்கறிஞர் ரங்கநாதன், இரா. காமராசு. எஸ். தோத்தாதிரி, , எஸ் கே கங்கா, ஆய்வாளர் பூங்குன்றன், டாக்டர் பா ஆனந்த குமார், டாகடர் திசு நடராசன், எஸ் பாலச்சந்திரன், கவிஞர் முருகேஷ், வாய்மைநாதன் , டாக்டர் ந.முத்து மோகன், டாக்டர் நா. ராமச்சந்திரன், மு.சிவராமன், அ ரேணுகாதேவி, ஹெச் ஜீ ரசூல், செந்தமிழ்க்கொதை, எம் எஸ் ராதாகிருஷ்ணன், தேவ பேரின்பன், ஹாமீம் முஸ்தாபா,இளசை மணியன் என்று பெரும் படை திரண்டது. ஏழாவது முகாமில் மூன்றாம் நாளில் பிரமாண்டமான கலை விழா நடைபெற்றது. பின்நவீனத்துவமும் உலகாயதமும் பற்றி சி சொக்கலிங்கம் . ,பின்நவீனத்துவமும் சாதிய எழுச்சியும் பற்றி ஆழமாக விளக்கினார். அடித்தள மக்கள் ஆய்வில் . பின்நவீனத்துவம் பற்றி புலவர் சிவம் விளக்கினார். பின்நவீனத்துவம் நேற்றும் இன்றும் என்னும் தலைப்பில் பேரா. எஸ். தோத்தாத்ரி பின்நவீனத்துவக் கோட்பாடுகள் என்றத் தலைப்பில் திசு நடராசன், மார்க்சீயமும் . பின்நவீனத்துவமும் பற்றி ந.முத்து மோகன் , நாட்டார் வழக்காற்று ஆய்வியலில் . பின்நவீனத்துவம் பற்றியும் ஆய்வுரைகள் தந்தனர். . செந்தமிழ்க்கோதை அறிவியலும் பின்நவீனத்துவமும் பற்றிப் பேசினார். பொருளாதாரமும் . பின்நவீனத்துவமும் பற்றி தேவப்பேரின்பன் பேசினார், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இந்த முகாம் சாட்சியாகும் இதைபற்றி நினைக்கும் போது இப்போது ஏக்கமே ஏற்படுகிறது. நம்புவோம் மீண்டும் ஒரு காலம் வரும் இவ்வகை முகாம்கள் இவ்வகை எழுச்சியோடு நடைபெறும் . ஜீவா கனவு கண்ட பண்பாட்டு எழுச்சி ஏற்படும் இந்த முகாம்களின் பின்னணியில் முக்கியதூணாக இருந்தவர் கே. பொன்னுசாமி என்பதால் என்றும் நினைக்கப்படும் நம் தோழர் கே. பொன்னுசாமி பல விதங்களில் முன்னோடியானவர்.. *
அறக்கயிறு: . டி.கே சந்திரனின் வாழ்வியல் அனுபவங்கள்/ சுப்ரபாரதிமணியன் இந்த அனுபவப்பதிவுகளைப்படித்தபோது . டி.கே சந்திரனுடன் இணையாகப் பயணித்திருப்பதைத் தெரிந்து கொள்ளுமளவு ஏகப்பட்ட ஒற்றுமைகள் என்னுள்ளூம் இருந்தன முதலில் நானும் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் ( பள்ளிக் கோடை விடுமுறை காலங்களின் நெய்திருக்கிறேன் ) டெலிகாம் துறையில் பணியில் நுழைந்தவன் டெலிகாம் பயிற்சி அவர் பயிற்சி எடுத்த இடத்தில்தான் நானும் பயிற்சி எடுத்தேன் பியூசி அவர் படித்தது. நானும் பியூசியில்கடைசி செட் மாணவன்.. பியூசியில் வேதியில் பரிசோதனைகளில் நானும் உப்பு என்ன என்பதைக்கண்டுபிடிப்பதில் திணறியிருக்கிறேன் நான் மறந்து போன observation unit - தொலைபேசித்துறைக்குள் இருந்த அனுபவங்களை கிளறி விட்டிருக்கிறார். துறை சார்ந்த சலுகையாய் LTC எல் டி சி யில் காசி போனேன் அவரைப் போலவே தீப்பெட்டியில் தொலைபேசி விளையாட்டினை விளையாடாதோர் யார் இருக்கிறார். அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. பாரதி கிருஷ்ணகுமார் முதர்கொண்டு உஸ்மான் அலி வரை எனக்கும் நணபர்கள் அவர்கள் . நானும் டெலிகாம் துறையிலிருந்து பணி முழுமையடையாமல் விலகினேன். நான் விட்டது 2 ஆண்டு அனுபவங்கள்தான். அவர் நட்பு கொண்டிருந்தப் பலருடன் நானும் நட்பும் பிரியமும் கொண்டிருந்தேன். உதாரணம் ..நம்மாழ்வார் அய்யாவுக்கு என் சாயத்திரை நாவலின் ஆங்கிலப் பதிப்பைச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார், அவரின் இறுதி காலம் வரை தொடர்ந்த நட்பு இருந்ததை பலக் கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறேன் கொஞ்சம் வாழ்க்கை அனுபவங்கள்., குடும்பச்சூழல் பிறகு அவரை பாதித்தப்புத்தகங்கள், பாதித்த நண்பர்கள்,, அவருக்கு ஆதர்சமாய் இருந்த நண்பர்கள் என்று இந்த நூலை வடிவமைத்திருப்பது சிறப்பு. நெசவில் பார்டரும், முந்தானை டிசைனும் முக்கியம் என்பது போல் இந்த நூலின் அபூர்வமானப்புகைப்படங்கள் முக்கியமாக அமைந்துள்ளன சாந்தி கியர்ஸ் சுப்மணியன் முதல் உமாபிரேமன் வரை ( உமா பிரேமனின் கதை கேட்கும் சுவர்கள் நூல் வெளியீடு சார்ஜா புத்தகக் கணகாட்சியில் நடைபெற்ற விழாவுக்கும் சென்றிருக்கிறேன். கோவையில் அவர் நூல் வெளியீட்டுக்கும் ) பல சாதனை மனிதர்கள் பற்றியச் சித்திரங்கள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். வாசிப்பில் வழிகாட்டியாய் பலரை அடையாளம் காட்டுகிறார். வியாபாரிகள், செல்வந்தர்களின் வாழ்க்கை நூல்கள் சுருக்கமாய் சுக்கு டீ போல் /காபி டேபிள் புக் போல் அமைந்திருக்கும் ஆனால் இது வாழை இலை போட்டு கொங்கு நாட்டின் “ ஒணத்தியான பலகாரம்” சாப்பிட்ட உணர்வைத் தந்தது என்பது குறிப்பிடத்தக்க விசயம். தேங்காய் எண்ணைய் ஊற்றி அரிசி பருப்பு சாதம் சாப்பிட்ட அனுபவம்தான் .( அதற்கு நெய்யெல்லாம் ஆடம்பரம். தேங்காய் எண்ணைய் அதன் அற்புத ருசிக்கு போதும் ) வியாபாரம் சார்ந்த அணுகுமுறைகளையும் அனுபவங்களையும் அவர் பதிவு செய்வது புதிய தலைமுறையினருக்கும் வியாபாரத்தில் நுழைகிற, இப்போது இருக்கிற பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும் அடுத்த முயற்சியாய் வியாபார அனுபவங்களை விரிவாய்- தொழில் சார்ந்த அறம்., தொழில் நுட்ப அனுபவங்களையும் அவர் பதிவு செய்ய வேண்டும் சமரசம் செய்யாத அவரின் தந்தையின் வியபாரம், மற்றும் அம்மத்தாவின் முயற்சிகளைச் சொல்கிற போது செல்வம் சேர்ந்தால் அதனைக் கையாள வேண்டிய அடிப்படை விழுமியங்களை கற்றுத் தரும் அனுபவங்களை இந்த நூல் உள்ளடக்கியிருப்பது மிக முக்கியமானதாகும் . இன்றைய வியாபார நியதியில் அதுதான் முக்கியம் கூட . சுப்ரபாரதிமணியன் ( 150 ரூ விலை / 176 பக்கங்கள் / வம்சி புக்ஸ் வெளியீடு )
காலடித்தடங்கள் நதித்தடத்தில் சில கூரிய கற்கள் “ - சுப்ரபாரதிமணியன் காலடித்தடங்கள் : நாமக்கல் நாதன் காலடித்தடங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் நாதன் அவர்கள் தன் வாழ்க்கையின் சில பகுதிகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே என்பது இந்த மண்ணின் மரபு ..அதனால் எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப் படுத்தும் விதமாய் பதிவுகளை நூல்களில் கொண்டிருக்கலாம் என்பது தேவையாகத்தான் இருக்கிறது .அந்த வகையில்தான் நாமக்கல் நாதன் அவர்களும் தன் வாழ்க்கையில் சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவம் தழும்புகளை, படிப்பினைகளை ,வாழ்க்கையின் சிரமங்களை சுருக்கமாக இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார் , கடுகளவு கவலை என்றால் கண்ணீர் குணமாகிறது கண்கள் ,அதுவே மழை அளவு வந்தால் மனம் கூட மறந்து விடுகிறது என்ற கண்ணதாசன் வரிகளை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார் ,அப்படித்தான் மழையளவு சிரமங்கள் என்னுடைய வாழ்க்கையில் வந்து இருக்கிறது, அதனால் மனம் மரத்துப் போய்விட்டது என்கிறார் ,அந்த அனுபவங்களை எல்லாம் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார் .இவ்வகை அனுபவங்கள் இன்றைய தலைமுறையில் உள்ள எழுத்தாளனுக்கு வாய்க்காது ஆனால் நாமக்கல் நாதன் வாழ்க்கையில் அந்த கால சூழல் அப்படி அமைந்துவிட்டன அதை தவிர்க்க முடியாது .தன் தந்தை பற்றியும் தன் திருமணம் பற்றியும் தன்னுடைய உறவுகள் பற்றியும் பலவற்றை இதில் பதிவு செய்துகொண்டிருக்கிறார் பெரும்பாலும் இலக்கிய நண்பர்கள் பற்றியெல்லாம் அதிகமாகவே சொல்லியிருக்கிறார் என்று கூட சொல்லலாம் .இந்த நூலில் இவ்வகை அனுபவங்கள் மட்டுமில்லாமல் நாமக்கல் நாதனுடைய பல நூல்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதியக் கட்டுரைகள் ,அவர்கள் எழுதிய கடிதங்கள் இணைத்திருக்கிறார் .அது இவரைப்பற்றி புது வாசகன் சரியாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. அதே போல இந்த நூலில் இடம் பெற்ற நேர்காணல்கள் அவனுடைய இன்னொரு முகத்தை சரியாகக் காட்டுகின்றன. திராவிட சார்பாக இருந்தது இலக்கியத் துறைச் சார்ந்தவர்கள் அவரோடு நட்பு கொண்டிருந்தது போன்றவைதான் இவருடைய இலக்கிய வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. ஒரு சிறந்த படைப்பாளி நல்ல வாசிப்பவனாக இருத்தல் வேண்டும் என்பதை தொடர்ந்து நேர்காணல்களில் அவர் வலியுறுத்தி இருக்கிறார் மரபுக் கவிஞர் என்ற வகையில் தொடர்ந்து அவ்வகையிலேயே பயணித்திருக்கிறார் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறர் தொல் மரபுகளை பொன்னேபோல் போற்றி வருபவன் அதற்காக மரபுக்கு மனம் வைத்தான் அது ஏதுவாக இருந்தது அது மூச்சுக்காற்று .புதுக்கவிதை மோகம் வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது .அது முதுகை தடவிச் செல்லும் சாதாரண காற்று என்கிறார் . சமூகத்தில் இவருடைய என் ஆசான் சுரதா என்ற நூலில் கூட இலக்கிய நண்பர்கள் பற்றி விரிவான அனுபவங்களை அளித்திருக்கிறார் பூமிக்குள்ளே வேறு ஒன்றாமல் எந்த தாவரமும் புதுவசந்தம் பரப்பியது இல்லை. தமிழன் மட்டும்தான் அற்ப சந்தோஷம் மட்டும் அடிமையாகி போனான் .உணவு உடை உணர்வுகள் யாவும் ஆங்கில கலாச்சாரத்தின் கூறுகளாகிவிட்டன. மொழிதான் ஒரு இனத்தின் முதல் அடையாளம் .அந்த இனத்தின் கலாச்சார மரபுகளை அடுத்து அடையாளங்கள் இவை இரண்டும் இழந்த பிறகு அந்த இனம் தனது நாட்டை கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது .இதில் எச்சரிக்கை இல்லாத தமிழகம் ஒரு நாளும் மேம்பட போவதில்லை அறிவு சார்ந்த உறவுகள், உணர்வுகள் வளர்ந்தால் மட்டும் போதா, பண்பு சார்ந்த கல்விதான் மிக அவசியமாகத் தேவை என்று அவர் குறிப்பிட்டார் ஒரு நேர்காணலில் . அதுதான் அவருடைய இன்றைய செய்தியாக இருக்கிறது .தன் வாழ்க்கையின் செய்திகளை ஒரு நூலில் திறம்பட எழுதி இருக்கிறார் நாமக்கல் நாதன் ஒவ்வொரு படைப்பாளியும் தன் அனுபவங்களை இந்த வகையில் எழுதி பதிவு செய்ய வேண்டும் என்பதுகூட அவசியம் .
கோமணம்-சுப்ரபாரதி மணியன் முன்னேற்றப் பதிப்பகம்-முதல் பதிப்பு 2016 விலை-80/ பக்கங்கள்- 112 வகை: நாவல் தைப்பூசத்திற்காக பழநிக்குச் செல்லும் ஒரு பாதயாத்திரைக் குழுவில் உள்ள கதாப்பாத்திரங்களின் வேறுபட்ட சிந்தனையோட்டத்தோடு சமகாலச் சமாச்சாரங்களையும் நாவலாசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். அளவில் சிறிய, வாசிப்பதற்கு எளிய நாவல். உரையாடல் மொழிகளும் சரி, விவரணைகளும் சரி மிக நேரடியாக உள்ளன. கொங்கு வட்டார மொழி கதாப்பாத்திரங்களின் உரையாலில் உள்ளது. அதுவும் கதாப்பாத்திரங்கள் திருப்பூர்வாசிகள் என்பதால் வட்டார வழக்கோடு நகர வழக்கும் கலந்துள்ளன என்பதையும் நாம் கவனிக்கலாம். கோமணம் என்ற தலைப்பு முருகனின் ஆண்டிக் கோலத்திற்கான குறிப்பு. அதை ஏலம் கூட விடுவார்கள். முருகனின் கோவணத்தை வைத்திருந்தால் அது நன்மை தரும் என்பது பக்த நம்பிக்கை. நெசவாளிகள், பனியன் உற்பத்தியாயாளர்கள், தொழிலாளர்கள் என்று ஒரு அய்ம்பது பேர் கொண்ட சிறு குழு அப்பகுதியிலுள்ள பூசாரி ஒருவரின் ஒருங்கிணைப்பில் பழநிக்கு யாத்திரை செல்கிறது. அவர்கள் நடந்தும், களைப்புறும்போது வாகனங்களிலும் தங்கள் வழியைக் கடக்கின்றனர். இடையில் அங்கங்கே தோட்டங்களிலும், வீடுகளிலும் ஓய்வெடுத்துச் செல்கின்றனர். அப்போது அதற்காக இடத்தின் உரிமையாளர்களுக்குத் தொகை செலுத்தும்படி காலம் மாறிப்போனதையும், பக்தர்களைவிட குடிகாரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்ற கவலையுடனும் பூசாரி ஜெகந்நாதன் இருக்கிறார். தோட்டத்தின் உரிமையாளர் சாயப்படட்டறை எப்படித் தன் நிலத்தை மலடாக்கி, நீரை நஞ்சாக்கியிருக்கிறது என்று நகரத்தின் மக்கள் பொருளுற்பத்தியில் கொண்டுள்ள பற்றுதான் இந்தத் தொழில்களை வரைமுறையின்றிச் செய்ய வைக்கிறது என்று ஆதங்கிக்கிறார்.தமிழத்தின் இரசாயன உரப் பயன்பாட்டைப் பற்றிய விவரணைகள் ஒரு கதாப்பாத்திரம் வாசிக்கிற கட்டுரையில் வருகிறது. இந்த பக்தர் கூட்டத்தில் இரண்டு நாத்திகவாதிகள் இணைந்து பயணிக்கிறார்கள்; ஒரு அனுபவத்திற்காக. எவ்வளவு நாள் இவர்களுடன் இருக்க முடிகிறது என்று முயன்று பார்க்கிறார்கள். தங்கள் அடையாளம் வெளிப்பட்டுவிடாமலும் அதேநேரம் தங்கள் கொள்கைகளுக்கு விரோதமில்லாமலும் தாமரையிலைமேல் நீர்போல அவர்கள் செல்கிறார்கள்; ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டால் கிளம்பிவிடலாம் என்ற முடிவோடு. ஒருநாள் இரவு தங்கியிருக்குமிடத்தில் இருவரு.கும் பூசாரி விபூதி இடுகிறார். மறுக்கமுடியாது என்பதால் பேசாமல் இருக்கிறார்கள். அடுத்தநாள் நாராயணன் மட்டும் யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்குக் கிளம்பிவிடுகிறான். பிறகு இராவணன் என்கிற மணியைத் தொடர்பு கொண்டு அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வந்துகொள்ளச் சொல்கிறான். கழகவாசியான மணி தன்னையும் மீறி ஓரிரு இடங்களில் கடவுள்மீதான ஐய்யப்பாட்டை லேசாக வெளிப்படுத்திவிடுகிறார். அதோடு பக்தர்களான அவர்கள் எவ்வாறெல்லாம் தங்கள் கருத்திலேயே முரண்படுகிறார்கள், சமரசமடைகிறார்கள் என்பதை கவனித்து.கொண்டேயிருக்கிறார். வழியில் ஒரு யாத்ரீகர் வாகனம் மோதி இறக்கும்போது கடவுளைப் பார்க்கப் போகிறவர்களைக்கூட கடவுள் கைவிட்டால் எப்படி என்ற சதாரண அவநம்பிக்கைதான் அவருக்கும் குழுவுக்குமான முரண்பாடே. அதில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்.தரிசனம் முடிந்தபிறகு ஊரில் நடந்த சில விபரீதங்களும், பிரச்சினைகளும் பக்தியால் தீர்த்துவிடாதவை என்ற யதார்த்தத்தை உரைத்தாலும் அவர்கள் முருகன் இதையெல்லாம் தீர்த்திடுவான் என்று வணங்குகிறார்கள். அந்த விடாப்பிடியான நம்பிக்கைதான் அவர்களை யாத்திரைக்கு ஊக்கப்படுத்துகிறது போல. ஆனால் கண்மூடித்தனமான பக்தி என்பதும் கண்டிக்கத்தக்கதே. விரும்பு கருத்துத் தெரிவி பகிர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வரை திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் (1)தி பிளேக்(தமிழாக்கம்-கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்) (2)அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ) (3)வெண் முரசு(ஜெய மோகன்) (4)புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்) (5)அழகர் கோவில் (தொ.பரமசிவன்) (6)அடிமையின் காதல் (ரா.கி ரங்கராஜன்) (7)மிர்தாதின் புத்தகம் (புவியரசு) (8)எஸ்தர்-சிறுகதை (வண்ண நிலவன்) (9)தொடுவானம் தேடி(தில்லைராஜன்,அருண்குமார்,சஜி மேத்யூ) (10)கோபல்லபுரத்து மக்கள்(கி.ராஜநாராயணன்) (11)நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்) (12)ஜே.ஜே:சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி) (13)கரைந்த நிழல்கள்(அசோகமித்திரன்) (14)கூள மாதாரி (பெருமாள் முருகன்) (15)நிறங்களின் மொழி (தேனி சீருடையான் ) (16) வாசிப்பது எப்படி? (செல்வேந்திரன்)
Konrai –kumudam : குமுதம் கதை . காவியத் தலைவனும் காலி வீடும் : சுப்ரபாரதிமணியன் இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு. பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள் .முகத்துச் சோர்வு அவளின் வயதைக்க்கூட்டியிருந்த்து. உனக்கு புடிச்ச பட்டம் வுடறது இங்க வைச்சுக்க முடியுமா. இங்கிருந்து .பட்டமெல்லா வுட முடியுமா இல்ல நிலத்திலிருந்து உடறது நல்லா இருக்கும். ஆமால்ல .. எனக்கு சந்தேகம் வருது .இங்கிருந்து பட்டம் வுட முடியுமான்னு. ஆம்பள பசங்க பண்ற வேலை அது எப்படி உனக்கு சூட்டாச்சு ன்னு தெரியல எனக்கும் தெரியல.. என்னமோ பட்டம் வுட ஆரம்பிச்சுது ஒரு பழக்கமா ப்போயிடுச்சு .பசங்க போடுற பட்டத்தையும் மாஞ்சா அடித்து கீழே தள்ளி விடுவேன். பட்டம் மேலே பறக்க பறக்க நானும் மேலெ பறக்குற மாதிரி இருக்கும். அதனாலதான் இந்த கட்டடத்தில் கடைசி மாடிக்கு வீடு பிடித்து இருக்கியா அப்படி சொல்லலாம்னு நினைக்கிறேன் ஆனால் அது உண்மையில்லை. கடைசி மாடியில் தான் வெலை கம்மியா இருக்கு ..கிரவுண்ட் ஃப்ளோர் ஒண்ணாவது இரண்டாவது புளோரிலே வெலை ஜாஸ்தி ..இங்கே கம்மியா இருக்கு. அதுதான் வந்து இதை வாங்கலாம்ன்னு னெநச்சுட்டு இருக்கேன் லிப்ட் ன்னு ஒன்னு இல்லாமல் போச்சுன்னா ஆமாம் ..நீ ரொம்பவும் விபரீதமா கற்பனை பண்றே பிரவினா இல்ல யோசிச்சு பாரு அப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கு .பலநாட்கள் கரண்ட் கட் ஏதாவது பிரச்சினை இல்லை லிப்ட் போடாம இருக்க வாய்ப்பு இருக்கு ..அப்ப எல்லாம் இந்த பத்தாவது மாடிக்கு ஏறி வருவது சுலபமா அதுக்கு ஏதாவது வழி பிறக்கும் .இப்படி பெரிய கட்டிடத்தைக் கட்டறவங்க அது பத்தி யோசிக்காம இருப்பாங்களா . சரி உன் புருஷனுக்கு இந்த பத்தாவது மாடி பிடிக்குமா . எத்தனாவது மாடின்னு சொல்ல லே. வெலையைச் சொல்லிட்டேன் . அப்போ அவர ஏமாற்ற.மாதரி தானே அப்படி இல்ல பத்தாவது மாடியில்ன்னு சொன்னா ஏதாவது வேண்டாம்னு சொல்லி இருப்பாரோன்னு ஒரு பயம். அப்புறம் எதுக்கு பத்தாவது மாடியில செலக்ட் பண்ணின . அதுதான் ..பட்டம் விடுவோம்ன்னா இப்பதான் நீ கேள்வி கேட்ட பிறகு யோசித்துப் பார்க்கிறேன் ..இங்கிருந்தும் பட்டம் விடுவாங்களா அப்படின்னு பிரவீனா மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டாள் .கைகளை பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அவளின் சீரான மூச்சு குறைந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனம் போலிருந்தது வானம் லேசான நீலத்தைக் கக்கியபடி இருந்தது .மழை வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.எல்லாம் சட்டுனு போயிடும் . ஆமாம் வீடு என்கிற கனவு நிறை வேறும். வீட்டுக்குள்ள பத்து பேர் இருக்கிறது .ஓயாம எதுவும் சண்டை மாதிரி. எதுவும் மீன்கடை மாதிரி பேசிட்டு ...பேச்சு இருந்துட்டே இருக்கிறது எல்லாம் காணாமப் போயிடும். வெயில்ல காஞ்சி கருவாடா போறது சாதாரணமாயிரும். .சாயங்காலம் வீசும் காத்துல வந்து இருந்து பாரு .புடிக்கும் அதுதான் எதார்த்தம் . சாந்தியின் கணவன் சார்ஜாவில் இருந்தான். அலுவலகம் துபாய் என்றாலும் அவன் தங்கியிருக்கிற இடம் சார்ஜா .துபாயில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது .கிடைத்தாலும் அதிகமாக இருந்தது .அதனால் காரில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஊர்ந்து வந்து சார்ஜா வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் ரமேஷிற்கு உக்கிரமான வெயில் அவன் உடம்பை உருக்கி படுக்கையில் சாய்ந்து விட்டால் சீக்கிரம் தூக்கம் வந்துவிடும். ஆனால் சாந்திக்கு அப்படி இல்லை தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாள் . வீட்டில் காற்றில் அலைந்து கொண்டிருந்தாலும் மின்விசிறிக் காற்றை துழாவிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு தூக்கம் வராது .நடுராத்திரியில் தூக்கம் வரும் .அது எப்போது முழிப்பைக் கொண்டு செல்லும் என்பது தெரியாது. இரண்டு மணிக்கு கூட விழிப்பு வந்துவிடும். அந்த சமயங்களில் கழிப்பறைக்கு சிறுநீர் கழிப்பதற்காக செல்லும் வேலை தவிர வேறு எதையும் செய்துவிட முடியாது .இருக்கும் இரண்டு அறைகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சிரமமாகிவிடும் தொலைக்காட்சியைப் பார்த்து கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் முடியாது. வெறுமனே தான் படுக்கையில் கிடக்க வேண்டி இருக்கும் .படுக்கையில் கிடப்பதை விட படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பது சிரமமானது என்று கூட அவள் உணர்ந்தாள் .ஆனால் அவள் சென்ற ஒரு பயிற்சியில் தூக்கம் வராவிட்டால் படுக்கையில் உட்கார்ந்து இருக்கும்படி சொன்னார்கள். முந்நூற்றிலிருந்து ஒவ்வொன்றாக கீழே இறங்கி வரும் எண்களை நினைத்துக் கொண்டே வந்து பூஜ்ஜியத்தை தொட வேண்டும். அதற்குள் தூக்கம் வந்துவிடும் என்றார்கள் சா.ந்திக்கு அப்படியெல்லாம் தூக்கம் வரவில்லை. மீண்டும் 500 லிருந்து கீழே வர ஆரம்பிப்பாள் .உட்கார்ந்து இப்படி எண்களை எண்ணிக் கொண்டிருப்பதும் கண்களை மூடிக் கொண்டிருப்பதும் தூக்கத்தை கொண்டு வந்து விடும் என்று அவள் பல சமயங்களில் நினைப்பாள் . ஆனால் அது நிறைவேறாது. அப்படியே சாய்ந்து படுக்கையின் ஓரமாக தன் உடம்பினை ஒட்டிக் கொள்வாள் . ரமேஷ் அப்படித்தான் அங்கே கிடப்பானா என்று யோசிப்பாள். ஆனால் வெயிலில் அலைந்து மணல் உடம்பு முழுக்க தடவி விட்டது போல் ஆகியிருக்கும் . இரவு நேரத்தில் அவனுக்கு தூக்கம் சாதாரணமாக வந்து விடுவது பற்றி அவன் பல சமயங்களில் சொல்லியிருக்கிறான். நான் இங்கே தூக்கம் வராமல் கிடப்பேன் நீங்க அங்க நல்லா தூங்குங்க .ஆம. எவ கூட தூங்குவீங்க . அதுதான் சித்ராதேவி . நாள் முழுக்க வெயில் அலைகிறது. கறுத்து சூடான உடம்பை பார்க்கிறோம் ஓஹோ என்னெத் தவிர உங்களுக்கு அங்கு ஒருத்தி இருக்காளா .. அந்த நிலையிலதான் சொகமா தூங்குறீங்க . ஆமா சொன்னேனே நித்திரா தேவி .அவதான் கைய புடிச்சு கால புடிச்சு தூங்கு தூங்கு ன்னு சொல்லுவா.. எனக்கு எந்த விதமான தேவையும் வந்து கைய பிடிக்கல்லை .கால பிடிக்கிறது க்கு யாரும் இல்லை தூங்குவதில்லை.. சிரமப்படுகிறேன் சரியாயிடும் ..எல்லாம் சரியாயிடும் எப்ப சரியாகும் நீங்க அங்க வேலைக்கு போயாச்சுன்னா இதோ ஒரு வீடு கட்டப் பணம் பயன்படும் .அவ்வளவுதான் ..கொள்ளை கொள்ளையாக பணம் வர்ற மாதிரி ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு ஆசை கூட கிடையாது .உங்களுக்கு... இப்படியே போயிட முடியுமா. வேற என்ன பண்ண முடியும் நீ சொல்ற மாதிரி எப்பவாச்சும் காசு மிச்சமாகும் ..வீடு வாங்கலாம் .இன்னும் கொஞ்ச வருஷம் போயிட்டு ஏதாவது மிச்சமாச்சுன்னா இங்க வந்து ஏதாவது தொழில் பண்ணலாம் . ஆமா என்ன தொழில் பண்ண முடியும் .கோடி கோடியா போட்டவன் எல்லாம் தலையில் துண்டை போட்டுக்கொண்டு நிக்கிறாங்க. ஜிஎஸ்டி ,வரி என்னமோ சொல்லிட்டு எல்லாம் ஒதுங்கிப் போறாங்க. நமக்கெல்லாம் பிசினஸ் ஒத்து வருமா ..சொத்து சேருமா நீ அதையும் சொல்றே.. இதையும் சொல்ற நான் என்ன பண்ணட்டும் ஒரு வீடு வாங்கி விட்டால் ஆசுவாசமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறாள்..கணவன் வரும் சமயங்களில் தனித்து இருக்க உதவும் .தனித்திருக்கையில் நேரம் போக என்ன செய்யலாம் என்றுகூட யோசிப்பாள். யோசித்துப் பார்த்தால் இப்போது அத்தை மாமா கொழுந்தியா கணவனின் தம்பி என்று இருக்கும் குடும்பத்தில் சமைக்கவும் வீட்டை பராமரிக்கும் அவளுக்கு நேரம் போதவில்லை. இதில் ஜிஎஸ்டி கவலையோ ,துபாய் வெயில் கவலையோ அவளுக்கு வந்ததில்லை .ஆனால் இப்படி ஒரு வீடு வாங்குகிற போதே அவள் ரமேஷிடம் சொல்லி இருந்தாள் வீடு வாங்கணும் நான் இங்கே இருக்க மாட்டேன் .நிரந்தரமா .நாம வாங்குற வீட்டுக்குத்தான் நான் போவேன் . அப்ப அவங்க எல்லாம் அவங்க அவங்களா இருக்கட்டும் ..எனக்கான வாழ்க்கையை நான் வாழனும் . தனியா இருக்கறது .வாழ்க்கையா .நான் ஆறு மாசத்துக்கு ஒரு டைம் வர்றேன் .ஒரு மாசம் தாங்கும் .அப்புறம் போறேன் ஒரு வருஷத்துல ஒரு மாசம் உன்னோடு இருக்கன். அவ்வளவுதான் அதுக்குள்ள ஒரு குழந்தை ஆகாமிய போகும் ஓ நீ அப்படி வர்றியா ஆமா குழந்தையை வைத்து காப்பாற்றுவது பத்திரமா பாத்துக்கொள்வது தனது உலகம் என நினைத்தாள் குழந்தை ஆகற வரைக்கும் ஏதாவது வேலைக்கு போகலாம்னு இருக்கேன் உனக்கெல்லாம் வேலை ஒத்து வருமா ஒத்துவராமல் இருந்தாலும் போய்த்தான் ஆகணும் . .ஏதோ ஒரு வேலை அமையும் அவள் அப்படித்தான் தீர்மானித்திருந்தாள். இப்படி துபாய் சார்ஜா என்று போகிற ஆட்கள் எல்லாம் ஏன் பெண்டாட்டியை விட்டு விட்டு போகிறார்கள் என்பதற்கு பல சாட்சியங்கள் இருந்தன. திருமணம் செய்கின்ற போது அவன் கூட்டிக்கொண்டு போவான் என்றுதான் நினைத்திருந்தாள். டூரிஸ்ட் மாதிரியாச்சும் கூட்டி போயி காமிச்சிட்டு அனுப்பலாம் இல்ல. அதுக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்கு ஒன்னும் சிரமமில்லை இப்படித்தா வருஷக்கணக்கில் சொல்லிட்டு இருக்கீங்க இந்த வீடு வாங்குற செலவும் முடியட்டும் .அப்புறம் உன்ன டூரில் கூட்டிட்டு போறேன் அப்போ என்னவா இருந்தாலும் அங்க என்னோட குடும்பம் என்னோட ந டத்த மாட்டேங்க அதெல்லாம் சிரமம். ரொம்ப செலவு அதிகம் வீடு .வாடகை எடுக்கிறது ஒரு வீட்டுக்கான செலவு எல்லாம் ரொம்ப ஜாஸ்தி ...அப்புறம் சேமிக்க முடியாது . அங்க நாம கூட இருந்த அது போதுமே முடியலெ.. அப்புறம் என்ன விஷயம் இப்போ அதுதான் எல்லா துபாய் காரர்களும் பொண்டாட்டி இங்கேயே விட்டுட்டு போடுறாங்க . போற ரகசியமா அப்படி கூட நீ வச்சுக்கலாம் . என்னமோ ஏமாந்துட்டேன்னு தோணுது ..ஏமாற்றம்தான் ஏமாந்துட்டேன்ன்னு நெனைக்காதே இல்ல மனசுக்குள்ள அப்படி ஒரு பக்கம் இருந்துட்டே இருக்கு . இந்த அடுக்கு மாடி வீட்டை வீட்டின் ஒரு பகுதியை வாங்க திட்டமிட்டு இருந்தபோது அவளுக்கு மலைப்பாக தான் இருந்தது. முதலில் இதற்கான கடனையெல்லாம் கட்டியாக வேண்டும் .அதற்காக வேலைக்கு போக வேண்டும் என்பதை அவள் மனதில் இருந்தது அந்த குடியிருப்பு மெல்ல வளர்ந்து கொண்டிருப்பதை அவள் கண்ணாலேயே ரசித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது .அ.வ்வப்போது பிரவினாவைக் கூட்டிக்கொண்டு வந்து பார்த்துவிட்டு செல்வாள் .இப்படி மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இப்போது உயரத்தில் கட்டடம் நின்றுகொண்டு எதைஎதையோ மறப்பது மறைப்பது போல் இருந்தது. அந்த வளர்ந்து வரும் குடியிருப்பின் முகப்புப் பகுதியில் காவலாளியாக முன்பு தென்பட்ட ரமேஷ் நாயர் உடம்பு முடியாமல் கீழ்தளத்தில் ஒரு இடத்தில் படுத்துக் கிடப்பதை அவள் கவனித்திருக்கிறாள் . அவரைப்பற்றி அவள் விசாரித்தாள். குவைத் நாட்டில் வேலை செய்து பணம் ஈட்டி வீட்டிற்கு தந்திருக்கிறார். பிறகு வயதான காலத்தில் எதற்கு இருக்கும் நிலமும்இடமும் என்று மகன்கள் பாசத்துடன் கேட்க அதை பிரித்து எழுதிக் கொடுத்துவிட்டார் .அதன் பின்னால் ரமேஷ் நாயர் யாருடன் இருப்பது என்பது பிரச்சினை ஆகிவிட்டது .மனைவி இறந்த பின்னால் மனைவி பால மணியம்மையை நினைத்துக்கொண்டு காலம் தள்ளினார். மகன்கள் காப்பாற்றுவார்கள் என்று கூறிக்கொண்டிருந்தார் .அவர்களை யாரும் கவலைப்படவில்லை. புதிதாக எழுப்பப்படும் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு ஏதோ ஒருவகையில் காவலாளியாக இருப்பது என்பதுதான் நான்கு ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது. அவருக்கு. அவ்வப்போது மகன்கள் வந்து கையில் கொண்டு வந்திருக்கும் பிரியாணியும் மிச்சர் பொட்டலத்தையும் கொடுத்து விட்டுச் செல்வார்கள் .உடம்பு முடியாமல் நடக்கின்ற போதும் அப்படித்தான் அதில் மாறுதல் இல்லை .ஆனால் யாரும் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக வில்லை. குவைத்தில் அவர் சம்பாதித்த பணம் வீடுகளாக மகன்கள் பெயரில் இருந்தன. யாராச்சும் கூட்டிட்டு போயி வீட்டில் வையுங்கள் என்று கூட கதறி இருக்கிறார் .அப்போதுதான் அவருக்கு தெரிந்த முத்துசாமி இறந்தது கூட ஞாபகம் வந்தது. அவரின் சொத்தையெல்லாம் மகன்களுக்கும் மகள்களுக்கும் எழுதிவைத்த பின்னால் பெரிய மகன் வீட்டில் ஒரு அறையில் இருந்தார் .மருத்துவச் செலவு என்று வருகிறபோது அவர் திண்டாடினார். யாரும் உதவவில்லை .கையில் வைத்திருந்த வீட்டுமனைப் பத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உறவினர்களிடம் போய் பசங்கள சும்மா விடக்கூடாது கேஸ் போட போறேன்.. இப்படி பண்ணிட்டாங்களே என்று புலம்பிக் கொண்டு வந்தார்..பிறகு ஒருநாள் இரவில் தொடர்வண்டி பாதையில் தலை நசுங்கி இருக்க தொடர் வண்டியில் விழுந்து இறந்துவிட்டார் .அவரின் பக்கம் இருந்த பையில் வீட்டு மனைகளின் பத்திரங்களின் நகல்களும் இருந்தன.தன் சாவுக்கு மகன்கள் தான் காரணம் தன் மருத்துவச் செலவுக்கு கூட அவர்கள் பணம் தர வில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இருந்தது. ஆனால் அதை மறைப்பதற்காக மகன்கள் நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தது .முத்துசாமியின் மருத்துவ செலவிற்காக பணம் தராதவர்கள் அவர்கள் முத்துசாமியின் மரணம் தந்த கசப்பை நீக்க நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது. வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏதேதோ அவர்கள் செய்ய வேண்டியிருந்தது . அப்படி ஏதாவது ஒரு முடிவை மாவட்ட ஆட்சியரின் மனுதாரர் நாளில் சென்று மகன்களை குற்றம்சாட்டி மனு தருவது என்பது கூட அவருடைய மனதில் இருந்தது .அதை வெளியில் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார்.ஆனால் எதற்கும் பலன் தராமல் உடம்பு சீரழிந்து விட்டது. இன்னைக்கு அந்த மலையாளத்து க்கார்ரைப் பார்க்க முடியலையே .எங்காச்சும் ஒரு ஓரமா படுத்துக் கிடப்பார் .அப்பார்ட்மெண்ட் வேலையெல்லாம் முடிஞ்சது இல்லயா.. என்ன அபசகுணமா அவரு ..அவர வைத்திருப்பார்களா.. நல்ல கருவேப்பிலையே தூக்கி எடுத்துட்டு போயிட்டு இருப்பாங்க ...காஞ்ச கருவேப்பிலை எதற்கு பயன்படும் ..எங்க தூக்கி போட்டு இருப்பாங்க ளோ.. செத்துப் போய் இருப்பாரா..தெரிஞ்சா நாம போன் பண்னீ விசாரிக்கலாம் போறப்போ விசாரிக்கலாம் ..ஆமா செத்துப்போய் இருந்தாலும் நாம என்ன பண்ண முடியும் .என்னமோ பொழப்பு வெளிநாடு போவது சம்பாதிக்கிறது.. அப்புறம் யார் கண்ணிலும் படாமல் செத்துப்போறது இது எல்லாருக்கும் பொதுவா சொல்லாதே கதவின் உள்புறம் கோலம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது . என்ன கோலம் எல்லாம் வாசல்ல தான் போடுவாங்க இந்த கோலம் கதவுக்கு இந்த பக்கம் வந்துருச்சு இதெல்லாம் ஸ்டிக்கர் தானே எங்க வேணா ஒட்ட வைக்கலாம் ..வெளியே ஒண்ணு ஓட்டி இருக்கேன் அப்போ கோலம் போடுற வேலையெல்லாம் இல்லாமெப்போச்சு. நிஜமா போடணும் அப்படி போட்டும் என்ன பண்ண போறோம் அதுவும் போடணும் ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் எங்கிருந்தோ ஒரு மெல்லிய பாடலாக அது பறந்து வந்தது சாந்தி ரமேஷ் தோளில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தான் . உத்தமர் அப்படி உங்களுக்கு பெயர் வைத்திருக்கலாம் . ரொம்ப மரியாதையா இருக்கு எப்படி ..உத்தமன்னு தான் பேர் வெச்சு இருப்பாங்க, நீ உத்தமர் ன்னு சொல்றே. மரியாதையா இருக்கு. அப்படியே வந்து நெனச்சா நெனச்சா நல்ல விஷயம்தான் .ரமேஷின் தொண்டையிலிருந்து பரபரப்பாய் குரல் கரகரவென்று மாறிக்கொண்டிருந்தது . கடுக்காய் சீரகம் பெருஞ்சீரகம் பனங்கற்கண்டு போட்டு கசாயம் வைத்து தரட்டுமா பரவால்ல பாட்டி வைத்தியம் கூட உனக்கு தெரிஞ்சிருக்கு இது பாட்டி வைத்தியம் .கை வைத்தியம் பாட்டி எல்லாம் போயி ரொம்ப நாளாச்சு இல்ல ரமேஷ் துபாயிலிருந்து வந்தபின் பத்தாவது மாடிக்கு குடியேற்றமும் நடந்துவிட்டது ஒருவகை நெகிழ்ச்சியுடன் தான் அவனும் இருந்தான் .தனக்கென ஒரு வீடு ஆகி இருப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தது .ஆனால் வாங்கியிருந்த கடனை கட்டுவதற்கு வேலை ஒத்துழைக்க வேண்டும் என்பது அவளுடைய மனதில் இருந்தது . இந்த டீமானிட்டேசேஷன் வந்தது .எங்க போனாலும் அதைக் காரணம் காட்டி இந்திய பணத்தில் தான் சம்பளம் தருகிறார்கள் .அங்க வேலை செய்வதற்கு கூட ஆளு நிறைய வந்துட்டாங்க .அவங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு .அந்த ஊர்ல எல்லாம் கட்டட வேலைதான் எப்போதும் இருக்கும் ...குறையாது .அதிலேயே கூட சிரமம் வந்துட்டு இருக்கு . அவன் தொண்டை மறுபடியும் கரகரத்தது . ஏதாவது கசாயம் போட்டுத்தான் ஆகவேண்டும் இல்லல்ல நாலு நாளா தொடர்ச்சியா இங்கேயே உன்கிட்ட விழுந்து கெடக்குறன் பாரு அதனால் வந்த பலவீனமா இருக்கலாம் .விழுந்து கிடக்கிறேன். ஆமா பின்ன என்ன எங்கேயும் போகாமல் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகாம கூட இருக்கன். சரி அது நல்லதுக்கு தான் இருக்கும் .என் கூட இருக்கற மாதிரி இருக்கும் எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை .ஆயிரம் திறமைகள் இருந்தாலும் அங்கீகாரம் ஒரு பெரிய விஷயம். இல்லையா ..பொறுப்பான வாழ்க்கை அதுதான் அங்கீகாரம் .அப்புறம் என்ன தோழியாப் பார்க்கிறது. ஒரு தோழியை ஒரு மனுஷனா அனுபவித்து பார்க்க முடிஞ்சா அதுதான் நல்ல வாழ்க்கை. துணை .. ஓகே இருமல் சத்தம் வந்து ஒளிந்தது போல இருந்தது. அன்பு செலுத்த எதுவுமே தொலைந்து போகாது மறுபடியும் தத்துவமா நல்லாதான் இருக்கு அப்புறம் அந்த இடத்துல அதிகாரத்துக்கு இடம் இல்ல அப்புறம் என்ன நான் தத்துவமா படிச்சிட்டு சொல்லிட்டு இருக்கேன் சரி சத்தம் வேண்டாம் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க சினிமாவுக்கு போகலாம் . சரி பக்கத்துத் தியேட்டர்ல என்ன படம் ஓடுது காவியத்தலைவன் .. உங்க அப்பா காலத்து படமா இல்ல இல்ல இல்ல உங்க காலத்துப் புதுப்படம் .பாட்டுல எப்படி ரீமிக்ஸ் பண்றாங்க.அதுமாதிரி இப்பல்லாம் டைட்டில் வந்து ரீ மிக்சிங் பண்ணிக்கறாங்க சரி காவியத்தலைவன் நல்லாதான் இருக்கு போகலாம் நீங்கதான் காவியத்தலைவன்.. அப்படியே நான் காவியத்தலைவி சரி போலாம் சரி ஆனால் தலைவன் எப்ப இங்க வருவான்னு பார்த்துட்டு இருக்க வேண்டி இருக்கு வரப்ப எல்லாம் மடியில் போட்டு வேண்டியிருக்கு அது சுவாரசியமா இல்லையா அந்த ஏக்கம் பெரிய எரிமலையா மாறுதே.. அது எப்படித் திரும்பி பார்க்கக் கூட பயமா இருக்கு நான் உன் கூட இருப்பேன் பொய் சொல்றீங்க சினிமா தியேட்டர் போறப்போ ய் இரண்டு மணி நேரம் கூடவே இருப்பீங்க. அது தெரியும் . அது மட்டும் வேண்டாம்ன்னு இல்லெ .அப்புறம் எப்பவும் இது மாதிரி இருக்கணும் அதுதான் ஏதாச்சும் சம்பாதித்து வந்துட்டு இங்க ஒரு சின்னதா பிசினஸ் பண்ணலாமே அதுகூட பார்க்கலாம் ஆனா இப்போ ஜிஎஸ்டி , வரி இனி இந்த மாதிரிப் பிரச்சனை இருக்கிற மனுஷன ஓடிட்டே இருக்கான் . அப்போ தலைவி வந்து தலைவனுக்காக காத்திருக்கும் காலம் முடியாதா ..இருக்கலாம்.. அது மாறுவது கூட சீக்கிரம் வரலாம். காத்துக்கொண்டிருப்பது தலைவனுக்கு தானே பெருமை இல்லையா பெருமையா இருக்கு அந்த பாதுகாப்பு இல்லாத மாதிரி தோணுது சரியா .நாம நம்ம பாதுகாப்பு பண்ணிக்குவோம் ரமேஷ் சாந்தி அணைத்துக் கொண்டபோது அவளின் உடம்பில் ஈரத்தன்மை சரியாக உணர்ந்து கொண்டான்.வெதுவெதுப்பு மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தது இப்போ தலைவனும் தலைவியும் இல்லை. ஒரே ஆள்தா .ஒரு கதை சொல்லுங்க கதை வேண்டாம் ..கணக்கு பொதுவானக் கணக்கிலெ ஒன் பிளஸ் ஒன் டூ .. புருசன் ஒன்னு.. பொண்டாட்டி ஒன்னு . குடும்பத்தை கணக்குல ஒன் பிளஸ் ஒன்னு .. ஒண்ணுதான் ஒண்ணா ஆடியடறதிலெ.. தலைவன் தலைவி மறஞ்து போனாங்க தலைவனுக்கு உள்ளே தலைவி இருக்கா அதுதான். தூரமா இருந்தாலும் பக்கமா இருக்கறதா நெனச்சுக்க வேண்டியிருக்கு அடுத்த பிறவியிலும் இதுமாதிரி நீங்களும் ஒன்னு, நானும் ஒன்னா , சேர்ந்தும் ஒன்னா இருக்கணும் . அப்பப்போ பிரிவு இருந்தாலும் .அது போதும் ---------------------------------------------------------------------------- SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com
பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும் சுப்ரபாரதிமணீயனின் கட்டுரைத் தொகுப்பு #நியூ_செஞ்சுரி_புத்தக_நிறுவனம் ------அம்பிகா குமரன் புத்தகங்களோடு புழங்குவது என்பதும் தேசாந்திரியாக இருப்பதும் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் இரண்டு முக்கியமான சூத்திரங்களாக இருக்கின்றன. எழுத்து ஒரு சமுதாயத்தை இந்த அளவுக்கு பக்குவப்படுத்த முடியுமா? மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?! என்ற வியப்பு சமீபமாக மேலெழுகிறது. குறிப்பாக சமகால எழுத்துகளில் சூழலியல் சார்ந்த எழுத்துகள் அதிகம் கவனம் பெறுகிறது. இயற்கையின் மொழியை,விளிம்பு நிலை மக்களின் மொழிகளைக் கற்றுக் கொண்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தங்கள் எழுத்துகளால் சிலவற்றை இந்த சமூகத்திற்கு கற்பிக்கவும் விட்டுச்செல்லவும் நினைக்கிறார்கள்.அப்படியான எழுத்துகளில் ஒன்றுதான் தோழர் சுப்ரபாரதி மணியன் அவர்களுடையது. ஒரு கூட்டத்தில் பேசும்போது எழுத்து என்றாலும் எழுத்தாளர்கள் என்றாலும் ஒன்றுதான் என்றார் கவிஞர் சுகிர்தராணி. அப்படி எழுத்தாகவே வாழும் சுப்ரபாரதி மணியன் அவர்களின் சமீபத்திய தொகுப்பான #பால்_பேத_வன்முறையும்_பங்களாதேஷ்_அனுபவமும் என்ற கட்டுரைத் தொகுப்பு இத்தொகுப்பை #நியூ_செஞ்சுரி_புத்தக_நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் டாக்கா நகர பயணத்தினூடான தனது அனுபவங்களை விளிம்பு நிலை மக்களோடு தொடர்புபடுத்தி கட்டுரைகளாகக் கொடுத்துள்ளார் பத்து கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெண்களின் மீதான நேரடியான மற்றும் மறைமுகமான வன்முறைகளைப் பேசுகிறது. பாலியல் வன்முறை என்பது நேரடியான பலாத்காரமாக இல்லாமல் எப்படியெல்லாம் பால்பேத வன்முறையாக நிகழ்கிறது என்ற கோணத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. டாக்காவின் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட செய்திகளில் வெளியான சில சம்பவங்களான சிலவற்றை முன்வைக்கிறார் ஜம்காரா பகுதியின் பின்னலாடைத் தொழிலாளியான 20 வயது இளம்பெண் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் அவளது கணவன் ஓட்டுனராகப் பணியாற்றுகிறார் வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பணத்திற்காக கணவணின் முன்பே இந்த வன்முறை நடந்திருக்கிறது. இதே போல் ராஜாமணி என்ற பெண்ணின் மருத்துவப் பாலிசியில் தன் கணவர் குழந்தைகள் இடம்பெறவில்லை கேட்டால் கணவரின் பாலிசியில் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடமளிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. மேலும் மேரி என்பவருக்கு அவர் வேலை பின்என்றலாடை நிறுவனத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படவில்லை . இன்னும் ஒரு பெண்ணுக்குத் தன் குடும்ப சூழலுக்காக அதிக நேரம் பணி செய்ய நினைக்கிறாள் பெண் என்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. என்ற இந்தச் செய்திகளை பாலின பேத வன்முறைக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார். வேலையிடத்து பாலியல் வன்முறை என்ற கட்டுரையில் கால்சென்டரில் பணியாற்றும் பெண்கள், களப்பணியில் ஈடுபடும் நீதித்துறை சார்ந்த பெண்கள் கார்பன் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் ,சமையல் பணியில் ஈடுபடும் பெண்கள்,இந்தியப் படையில் இருக்கும் பெண்கள், மீடியா துறை சார்ந்த பெண்கள் என்று அந்தந்த துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை சார்ந்த அவலங்களையும்,பாலியல் நெருக்கடிகளையும் பட்டியலிட்டு பணியிடங்களில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத பெண்களின் ஆரோக்யம் சார்ந்த கழிப்பறை வசதி, புகார் மையங்கள் குறித்து வேதனைக் குரல் எழுப்புகிறார். டாக்காவின் பெண்கள் வன்முறை எதிர்ப்புக் கமிட்டியின் பயன்களை அறியாதவர்களாக,முறை சாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாழ்க்கையை டாக்காவில் கழிக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்.அதை நிறுவும்படியான நஸ்லிமா நஸ்ஸீர் என்ற கவிஞரின் ” டாக்கா இது என் நகரம் இல்லை என்னுடையது என ஒரு போதும் நான் சொல்லிக் கொண்ட மாதிரிலியான நகரம் இல்லை இது குள்ளத்தனமான அரசியல்வாதிகளுடையது இந்த நகரம் “ என்று தொடங்கும் கவிதையைக் குறிப்பிடுகிறார். வங்கதேசத் தொழிலாளர் ஐக்கிய அமைப்பின் இயக்குனராக உள்ள கல்போனா அக்டர் என்பவரைப் பற்றிய கட்டுரையில் பின்னாலாடை தொழில் சார்ந்த பெண்களுக்காக போராட்டங்களின் தேவை மற்றும் தொடரும் அவலங்களைக் குறித்துப் பேசியுள்ளார்.இத்தொகுப்பில் உரைநடையோடு சில கட்டுரைகளை கவிதையாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் கொரோனா கால பணி இழப்பு. விபத்திற்கு பிறகு தொழிலாளியின் நிலை ,மதுவிற்கு எதிரான பெண்களின் போராட்டம் என டாக்காவின் பெண்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொகுப்பில் ஓரிடத்தில் டாக்கா மட்டுமல்ல இந்நிலை இந்தியப் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் என்ற வலிமிகுந்த உண்மையைப் பதிவுசெய்வதன் மூலம் பெண்களுக்கான குரலாக இத்தொகுப்பு கவனம் பெறும் . தொகுப்பின் பெயர் : பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும் #நியூ_சென்சுரி_புத்தக_நிறுவனம் ரூ 65
பறந்து கொண்டிருக்கும் கழுகு : கட்டுரைகள் தொகுப்பு சுப்ரபாரதிமணியன் எழுதி பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் முதல் பகுதி இது.விரிவான தளங்களில் நூல்கள் அறிமுகம், உலகமயமாக்கல் சூழலில் மனிதர்களின் அனுபவங்கள், நண்பர்களுடனான பகிர்வுகள் என்று பல தளங்களில் அவரின் படைப்பிலக்கிய மையங்கள் போலவே எல்லா திசைக் கோணங்களையும் இந்நூல் கொண்டிருப்பது சிறப்பாகும். 17 நாவல்கள் உட்பட 75 நூல்கள் வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியனின் தீவிரமான கட்டுரைகளின் பரிமாணம் இத்தொகுப்பில் ( காவ்யா சென்னை வெளியீடு ரூ 300 )
சுப்ரபாரதிமணியன் குரு அரவிந்தனின் நான்கு கதைகளை … குரு அரவிந்தனின் நான்கு கதைகளை தேர்வு செய்ய இணைய தளத்தைத் தேடியபோது எதேச்சையாகப் பட்ட நான்கு கதைகளை எடுத்துக்கொண்டேன் .அவை நான்கும் வெகுஜன இதழ்களில் வெளியானவை என்பதால் அதன் பக்க அளவு பலவீனங்களும் எடுத்துக்கொண்ட கதைகளின் களமும் முக்கியமாகப்படுகின்றன. அவற்றையெல்லாம் பல லட்சம் பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது பலம் கூட . நம் கூட்டுக்குடும்பங்கள் அவற்றின் சிறப்புகள் அதிலிருந்து எழும் பிரச்சினைகளோ சலசலப்புகளோ கதைகளின் மையங்களாகி உள்ளன குடும்ப அமைப்பில் அம்மாவும் அப்பாவும் முக்யமானவர்கள் அவர்களைத் தவிர்த்து கதைகள் எழுதி விட முடியுமா .. சிங்கங்கள் உறுமும். வேட்டைக்காக அவை ஒரு உயிரினை மட்டும் எடுத்துக்கொள்ளும் , ஆனால் புலிகள் பிய்த்துக் குதறும். வாழ்க்கை இப்படித்தான் சிங்கமாய் நின்று சில சமயம் கர்ஜிக்கும். புலியாய் குதறும். அப்படி குடும்ப வாழ்க்கையில் சிங்கமாயும் புலியாயும் நின்று கர்ஜித்தும் வேடிக்கை காட்டியும் நடக்கும் பல சம்பங்களைப் பதிவு செய்திருக்கிறார் குரு அரவிந்தன் . அப்பாவையோ அம்மாவையோ நிராகரிக்கும் பிள்ளைகள் இருக்கத்தான் மாட்டார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி பிள்ளைகளைக் கொண்டு போய் நிறுத்துகிறது. அவர்கள் அதற்காய் எவ்வளவு வலியை உணர்ந்திருப்பார்கள் 'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல" என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. 'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க…" இந்த நிலைமையில் ஒரு பெண் தன்னைத்தக்கவைத்துக்கொள்ளுவதோ பொருத்திக்கொள்வதோ இம்சைதான் . அதை அரவிந்தன் சரியாகவேச் சொல்லியிருக்கிறார். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான் என்று வருகிற சூழல்களை வாசிக்கிற வாசகர்களும் உணர்வார்கள் வாழ்க்கை பலரை காலடியில் நசுக்கி வீசப்பட்ட சிகரெட் துண்டுகளைப் போலத்தான் ஆக்கி வைத்திருக்கிறது அரவிந்தன் பார்வையில் இப்படி ” அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது “ மாணவர்களின் உல்கத்தில் இருக்கும்பிரச்சினைகள் என்று காதல், கேளிக்கை சார்ந்த பொறாமை என்று பல எழுத்தாளர்கள் கண்களில் பல விசயங்கள் தட்டுப்படும்போது குரு அரவிந்தனின் பார்வையில் படும் விசயங்கள் அப்படித்தான அபூர்வமாக இருப்பதை புல்லுக்கு இறைத்த நீர் கதையில் கண்டு கொண்டேன் . சுமை என்ற கதையில் சிறையில் இருந்து வெளிவரும் இளைஞன் தான் காணும் உலகம் அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கிறது . இந்தக்கதை உலகம் முழுவதும் இன்றைக்கு இருக்கும் இனவாத பிரச்சினையின் அடிநாதமாக விளங்கி பொதுமையான உலக மையமாக விளங்குவது ஒரு முக்கிய கதையாக்குகிறது.தன் பிரியமானவர்கள் எப்படியெல்லாம் சிதைந்து போய் காணப்படுகிறார்கள் என்பது முக்கியமாகும். உலகெங்கும் இருக்கும் இனவாதம் மனிதர்களைப்பியத்துப் போட்டு வேடிக்கை காட்டும் அவலத்தை ஒரு கதையில் சொல்லிவிடுகிறார். ரோசக்காரி கதையில் பெண்ணை வீட்டில் முடமாக்கி வைத்திருக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் அவளை வெளியே பிரகாசிக்க வைக்க அவள் கணவன் செய்ய்யும் ஒரு சிறு நாடகம் வெளிப்படுகிறது. அந்த வகையில் அவன் உயர்ந்தவனாகிறான். நேர் மறை எண்ணங்கள் அவனை கபட நாடகம் ஆடச் செய்கிறது . அது வெற்றிகரமான விளைவுகளைக்கொண்டிருப்பதும் நல்ல விசயம்தானே. பல எழுத்தாளர்களின் கதைகளில் நிகழ்கால, யதார்த்த வாதப் போக்குகள் ஒரே மாதிரியானக் கதைகளை உதிர்க்கும் போது நேர் மறை எண்ணங்கள் கொண்ட கதைகள் தென்படுவது அபூர்வம்தான். ஆனால் இந்த ஆசிரியர் அந்த வகையிலும் எழுத்துலகச் சிந்தனைகளை விதைத்திருக்கிறார் எனபது ஆரோக்யமானதாக உள்ளது எழுத்தாளன் மனம் நல்ல சிந்தனைகளுக்கும் ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் செல்வது வாசிப்போர் மத்தியிலுண்டாக்கும் இலக்கிய அனுபவம் தவிர்த்த மனநிலைகள் இன்னும் தொடர்ந்து நடக்கச் செய்யும். அந்த வகையில் குரு அரவிந்தன் வாசகர்களை தன்னோடு அழைத்துச் சென்று நேர் மறை எண்ணங்களை உருவாக்குவதும் கூட பல சமயங்களில் படைப்பாளியின் பொறுப்பாக அமைவதை இது போன்ற அவரின் கதைகள் தெரிவிக்கின்றன. எல்லா மனிதர்களுக்குள்ளும் கசடுகள் இருக்கின்றன. அந்தக்கசடுகளைப் பலர் கொட்டித் தீர்த்துகொள்கிறார்கள் .எல்லா மனிதர்களும் அப்படிக்கொட்டித்தீர்ப்பதில்லை. சிலர் கொட்டித்தீர்ப்பதால் மனபாரம் குறையும் என்று எண்ணுகிறார்கள். நேர்மறை எண்ணங்கள் தரும் சிந்தனைகளும் அவற்றின் அடிநாதங்களும் மந்திற்கு ஆறுதல் தருபவை. அந்த வகை ஆறுதல் எண்ணங்களை குரு அரவிந்தன் விதைத்துக் கொண்டே இருக்கிறார். TAMIL WRITER SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003 * Got “ katha award “ fro best short story writer from President of India-1993.
சிறுகதை குறி : சுப்ரபாரதிமணியன் குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடமபு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு. பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள். அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான். நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான். பேருந்தில் இருக்கையை திருநங்கையொருத்தி பகிர்ந்து கொள்வது இதுதான் முதல் தடவை., அவனின் இருக்கையருகில் நின்று கொண்டு கிளர்ச்சியூட்டியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். வீதிகளில் நடக்கும் போதும் அவர்களைப் பின்தொடர்கிற அனுபவமும் அவனுக்கு வாய்த்திருக்கிறது. அவர்களின் வெகு விரைசலாக நடையைக்காணும் போது இரட்டை சக்கர வாகனம் வாங்க இயலாதது உறுத்தியிருக்கிறது.இன்னும் நிலைமை சீர்படவில்லை. ஜி எஸ் டி என்று வந்த பின் பனியன் தொழில் சீர்குலைந்து விட்டது இனியும் இரட்டைச்சக்கர வாகனம் வாங்குவது சாத்தியமில்லை என்பதாய் நினைத்தான். 3999, 4999 ரூபாய் ஆரம்பத்தில் கட்டி விட்டால் போதும் ஓர் இரட்டைச்சக்கர வண்டியை எடுத்து விடலாம். பிறகு மாதக்கட்டிணமும் வட்டியும்தான் அவனைப் பெரிதாய் உறுத்தியது. இரட்டைச்சக்கர வண்டியை வாங்கும் யோசனையைத் தள்ளிவைத்துக்கொண்டே வந்தான். குமார் நகர் நூலகத்தின் முன் இருந்த குழித்தடத்தால் பேருந்து தடை பட்டது போல் நின்றது வெகு நேரம். போக்குவரத்து சிக்னலின் விளக்குகள் வெவ்வேறு நிறத்தைக்காட்டிக் கொண்டிருந்தன. அவன் அந்த நூலகத்திற்கு அவ்வப்போது வந்து போவான். பத்திரிக்கை பகுதியில் எதையாவது புரட்டிக் கொண்டிருப்பான். புத்தகம் எடுக்க நாலைந்து முறை விண்ணப்பங்கள் வாங்கி விட்டான். ரேசன் கடை அட்டை, கெஜடட் அலுவலர் கையொப்பம் என்று விண்ணப்பத்தில் கேட்டபோது சாத்தியமில்லை என்று தள்ளியேப் போயிற்று. ஆதார் அட்டை போதுமா என கேட்க நினைத்தான். அதுவும் நழுவிப் போய் விட்டது. புதுப்புத்தக வாசனை போல் பக்கத்திலிருப்பவளிடமிருந்து வந்த வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் அறை நண்பர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஏதாவது பனியன் கம்பனிக்கு மாறிக்கொண்டே இருந்தார்கள் . வேலை குறைவு., ஒரு ஆளெ செட் பண்ணிட்டேன் தொரத்தணும்.அதுக்குப் புது கம்பனி பக்கம் , அங்கெ கூலி குறைவு, ஒப்பந்தக்கூலியெல்லா சும்மா பேருக்கு என்று ஏதாவது காரணங்கள் அவர்கள் வேறு அறை பார்ப்பதற்கென்று அவர்களுக்கிருந்தன.அவர்கள் எல்லோரும் கைபேசியில் திரைப்படங்கள், ஆபாசப் படங்களை பார்க்கிறவர்களாக இருந்தார்கள்.அல்லது வாட்ஸப்பில் உலவிக்கொண்டிருந்தார்கள்;முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட முகவரிகளைக் கொண்டிருந்தார்கள். சிலது ஆண் ,பெண் குறிகளை அடையாளப்படுத்திய முகவரிகள். அவன் பழைய மாத நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை “ பழையபப் பஞ்சாங்கமா இருக்கியே “ என்று கிண்டலடித்தார்கள் . “ இதெல்லே இதிலெ கெடைக்காததா “. என்று கைபேசியைக் காட்டினார்கள் .எப்போதும் அவனின் அறை நண்பர்களாக இருப்பவர்களும் அதே போலத்தான். அப்படித்தான் வாய்த்திருந்தார்கள். உணவகங்களில் சாப்பிட்டு அலுத்துவிடும்போதும் உடம்பு சரியில்லாமல் போகும் போதும் சமைத்துச் சாப்பிட ஆசை வந்திருருக்கிறது அவனுக்கு. அம்மாவும் பலதரம் சமைத்துப்பழகச் சொல்லியிருக்கிறாள், அம்மா பருப்புப்பொடி, ரசப்பொடி என்று வகை வகையாய் தயாரித்துத் தர தயாராகவும் இருந்தார்கள் .கூட இருப்பவர்கள் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால் அதுவும் சாத்யமில்லாமல் இருந்தது. நூலகம் அருகிலிருந்த செட்டி நாடு மெஸ்ஸிலிருந்து வந்த மெலிதான வாசம் அவனுக்குபிடித்திருந்தது. பேருந்து நகர ஆரம்பித்து போக்குவரத்துச் சிக்னலின் அடையாளத்தால் நின்ற போது திருநங்கை எழுவதைப் பார்த்துவிட்டு பாலச்சந்திரனும் எழுந்தான். பின் பக்கம் இருந்தக் கூட்டம் விலகாமல் இடித்துக் கொண்டுச் செல்ல வழி விட்டது . நூலகத்தின் இடது பக்கமிருந்த வீதியில் அவள் நடக்கத்துவங்கியது கண்ணில் பட்டது. பெரிய நகரத்தில் தான் இப்படி திருநங்கைகள் பேருந்து இருக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஞாபகம் வந்தது. ஊரும் பெரிய நகரமாகி விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை எட்டப் போகிற நகரம் பெரிய நகரமல்லவா. இபோது முதலாளியையும் தொழிலாளி ஆகிற மோச வித்தையைச் செய்யும் பெரிய நகரமல்லவா என்ற நினைப்பு வந்தது. திருநங்கை பார்வையில் படும்படி இல்லாமல் தன் முன்னால் இருந்தக்கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. பிச்சம்பாளையத்திற்கு பேருந்து டிக்கட் எடுத்திருந்தான். திருநங்கையப் பின்தொடர குமார் நகரிலேயே இறங்கிவிட்டான், நெரிசலில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவன் போல் பின்வாங்கினான்.இப்போது திருநங்கையையும் தவற விட்டு விட்டான், இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று அவன் அறை நண்பன் கோவிந்திடம் கேட்டிருக்கிறான். “ இந்த ஊர்லே எவ்வளவு வேலைக பனியன் தொழில்லே கெடக்குது. இந்தத் திருநங்கைகெல்லா அதெல்லாம் செய்யலாமில்லையா. எங்கெங்கெல்லாமிருந்து தொழிலாளிக சத்திஸ்கர், ஒடியா , பீகார் பெங்கால்லிருந்தெல்லா இங்க வந்து குவியறாங்க..இவங்களுக்கென்ன கேடு ..பிச்சையெடுக்கறாளுக” “ பிச்சையெடுக்கறானுகங்கறைதையும் சேர்த்துக்க “ “ ஆமாம. இந்தத் திருநங்கைகளும் எங்கிருந்தெல்லாமோ இங்க வந்து குவியறாங்க அவங்களுக்குப் புடிச்சது பிசையெடுக்கறதும் செக்ஸும்தான்... அதெ வுட மாட்டாங்க. சிரமப்பட்டு பிச்சையெடுத்தாலும் ஒரு தொழிலுக்குக்குன்னு போக மாட்டாங்க . அவங்க ருசி அதிலெ. அவங்களெ நானும் ருசி பாக்கணும் “ நெரிசலில் மிதிபட்டது போல் பலர் கடந்து சென்றார்கள். பருத்த சதைகளைக் கொண்ட மனிதன் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு சிக்னலைக்கடக்க முற்பட்டதில் அவன் சற்றே பின் தங்கி விட்டான். வியர்வை நாற்றம் இன்னும் கொஞ்சம் தள்ளிபோகச் செய்தது. காலுக்குப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையிலிருந்து அந்த வாசம் வந்திருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது.. தலையைத் ரேவதி மருத்துவமனை வீதியில் திருப்பிய போது முழு முதுகும் தெரிய போய்க்கொண்டிருந்தவள் ஒரு திருநங்கையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முந்தின திருநங்கையைப்போலவே பரந்த முதுகு. ஆனால் ஜாக்கெட்டின் நிறம் வேறானதாக இருந்ததை நிச்சயப்படுத்திக் கொண்டான் . வேறொரு திருநங்கைதான் .. இவ்வள்வு பெண்கள் நடமாடும் போது ஒரு திருநங்கை அவனின் கண்களில் பட்டு விட்டது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவனின் நடை விரசலானது. அந்தத் திருநங்கைக்கு இணையாக நடக்க ஆரம்பித்ததும் முகப்பூச்சின் வாசத்தை உள்ளிழுத்துக்கொண்டான். அவளின் முகத்தில் இரண்டு, மூன்றடுக்காய் பவுடர் அடர்த்தியாக இருந்த்து . அவளிடமிருந்த ஏதோவகையான செண்ட் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. அவள் குறுக்குச் சந்தொன்றில் சற்று தூரம் நடந்தவள் திரும்பி நின்றாள். “ என்ன வர்றியா “ ஒரு வகைப்படபடப்பு உடம்பை ஆக்கிரமித்துக் கொள்ள அவனும் உம் என்றான். கோவிந்த் சொன்ன ருசி பார்க்கிற ஆசை அவனுள் வந்து விட்டது. ‘’ செரி.. பின்னால வா “ அவனும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான். “ பசிக்குது ... சாப்புட்டர்லாமா “ “’ ஓ..” திருநங்கையுடன் உணவு விடுதியில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா . யாராவது கேள்வி கேட்பார்களா. தெரிந்தவர்கள் கண்களில் பட்டால் பதில் சொல்ல திணறவேண்டியிருக்கும் .மலேசியா கொத்துப் புரோட்டா குமார் நகரில் கிடைக்கும் ஒரு கடை ஞாபகம் வந்த்து. அவனுக்கு முட்டைப் பரோட்டா எப்போதும் பிடிக்கும். நாக்கில் எச்சில் ஊறியது ..முட்டைப்பரோட்டாவா, இல்லை திருநங்கையின் நெருக்கமா . ஊறும் எச்சிலுக்குக் காரணம் என்பது ஞாபகம் வந்தது. ” வேண்டா. வேலையை முடிச்சிட்டு அப்புறம் சாப்புட்டுக்கறன். அதுவரைக்கும் பசியெ ஒதுக்கிர வேண்டியதுதா “ திருநங்கையுடன் நடமாடுவதை எந்த மனிதரும் பார்த்துவிடக்கூடாது. தனக்குத் தெரிந்தவர்களாய் இருந்து விடக்கூடாது. அவனின் இஷ்டதெய்வமான வடவள்ளி பெருமாளை நினைத்துக் கொண்டான்.அப்படி தெரிந்தவர்கள் இருந்தாலும் என்னவாகிவிடப்போகிறது. உள்ளூர்காரர்கள் என்றால் சுஜுபிதான் . உறவினர்கள் யாரும் தென்பட்டு விடக்கூடாது. இவ்வளவு தூரத்தில் உறவினர்கள் யார் வரப்போகிறார்கள். கண்ணீல் பட்டாலும் என்ன பொய் சாதாரணமானதுதான். விரைசலானது அவனின் நடையும் திருநங்கையின் நடையுடன் சேர்த்து. வாகனங்களின் இரைச்சல் நிறைந்திருந்தது.. அந்தக்கட்டிடத்தின் உள்பகுதி இருட்டைக்காண்பித்துக் கொண்டிருந்தது.அவள் சற்று உள்ளே சென்றதும் அவள் இருட்டுக்குள் மறைந்து விட்டது தெரிந்தது. சற்றே சிதிலமடைந்தக் கதவு மூடிக்கொண்டிருந்தது . ” சீக்கிரம் வா.. “ ” தெரிஞ்ச் எடமா “ “ முந்தியே வந்த எடந்தா. பழைய பனியன் கம்பனி . நம்ம வசந்தமாளிகை இப்போ “ அவன் வசிக்கும் பகுதியின் பிரதான சாலையில் ஒரு பனியன் கம்பனி மூடப்பட்டுக்கிடந்து பிறகு டாஸ்மாக் பாராக மாறிவிட்டது ஞாபகம் வந்தது.இதுபோல் நிறைய பனியன் கம்பனிகள் ஜி எஸ் டி மாயத்தால் மூடப்பட்டு கிடந்தன. விரைத்துக் கொண்டிருந்த தன் குறி இன்னொரு குறியோடு மோதுவதாக இருந்தது. திருநங்கையின் கையா. அவளின் கீழ்ப்புற சேலை முழுவதும் உயர்ந்திருந்தது. இன்னொரு ஆண் குறிதான். அவன் ஓரடி பின்னால் நகர்ந்தான். “ ஒன்பதுதா நான். பயப்படாதே “ “ இல்லே ..இதென்ன ..” “ என்ன பண்ணி திருப்தி பண்றது ..” ““ இல்லே ..இதென்ன ..” “ அதிருக்கட்டும். வாய்லே வெச்சி அவுட் பண்ண்ட்டுமா. கை போடட்டுமா ..பயப்படாதே ” “ இல்லே ..இதென்ன ..” “ ஒன்பதுதா நான். பயப்படாதேன்னு சொன்னேனில்லியா “ “ இல்லே ..இதென்ன .. நீ ஆம்பளையா. பொம்பளெ வேஷம் போட்டிருக்கியா ..” “ ஒன்பதுதா நான். பயப்படாதே. ஆண் குறியெ அறுக்காமெ காலம் தள்ளிட்டிருக்கன் . எங்கள்லே இது மாதிரியும் சில பேர் இருக்கம் “ அவன் விலகுவதைப்பார்த்து அவனைப்பிடிக்க வலது கைய நீட்டினாள். அவன் அவசரமாக பேண்டில் கைவிட்டு முன்பே பர்சிலிருந்து எடுத்து மேலோட்டமாகச் செருகியிருந்த பணத்தை எடுத்து நீட்டினான். “ போறன்..” “ வேண்டா ..” “ பசிக்குதுன்னு சொன்னே ” “ பசிக்குதுதா . ஆனா வேண்டா.. தொழில் பண்ணாமெ பிச்சையெடுக்கறது எனக்குப் புடிக்காது “ சொந்தப்படைபென்று உறுதியளிக்கிறேன். வேறு எங்கும் பிரசுரமாகவில்லை. Subrabharathimanian.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003
• அல்லிக்கேணி.. ராம்ஜி _ சுப்ரபாரதிமணியன் நாவல் என்று நினைத்துப்படிக்க ஆரம்பித்தேன். வடமொழிச்சொற்கள், அதீத ஆங்கிலச் சொற்கள் அப்படியே என்ற உறுத்தல்களைத் தவிர்த்து விட்டு , எளிமையான நடை என்று வந்த போது முகநூல் குறிப்புகள்தான் என்றறிந்து குறைகளை மனதில் கொள்ளாமல் சுலபமாகப்படிக்க முடிந்தது..நாவலாக்கிக் கொள்ளலாம் என்றும் மனது சொன்னது .சுவாரஸ்யம் இருந்தது சம்பவங்களில் ..ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி சம்பவங்கள் வாய்த்து விடும் அதுவும் சென்னை திருவல்லிக்கேணிக்காரர்கள், பிராமணர்கள் என்றால் இவ்வகை சமையல், சாப்பாடு, கோயில் , சென்னை தொழில் அனுபவச் சமாச்சாரங்கள் என்றால் குறைவிருக்காது. அப்படி வாசிப்பில் குறை வைக்காத சுவாரஸ்யமான சம்பவங்கள், ஒவ்வொரு அத்யாயமுடிவிலும் கவித்துவமானதாய் ஒரு சிறு விசயம்.அல்லது சிறு சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து திருப்பூர் டு உடுமலை 2 மணி நேரப் பேருந்து பயணத்திலேயே நூலை முடிக்க முடிந்தது ஆசுவாசம் ( அருந்ததி ராயின் The ministry of Utmost Happiness- தமிழ்ப்பதிப்பு பெருமகிழ்வின் பேரவை - நூலை எடுத்து 15 நாட்களாகின்றன். அதன் இறுக்கத்தால் ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படித்து விட்டு மூடிவிடுகிறேன் . அவ்வளவு சிரமம் கூட ). டெலிபோன் முந்நாள் ஊழியர் என்ற வகையில் 78ம் பக்க வீட்டிற்கு டெலிபோன் வந்த சாமாச்சாரம், ரத்னா கபே சமாச்சாரங்கள் 228 பக்கம், துக்கங்கள் ஊசிப்பட்டாசு போல் வெடிக்காது என்றப் பட்டியல்கள் 237 ம்பக்கம் என்று பல பக்கங்கள். மனக்கோலங்கள், சித்திரங்கள், மனித மன விசித்திரங்களை பல்வேறு தொழில் அனுபவங்கள்,திரைப்பட தயாரிப்பு உட்பட பல துறை அனுபவங்களின் விவரிப்பில் சுவாரஸ்யத்துடன் அமைந்திருப்பது வாசகனுக்கு ஒரு நல் பயன்தான் அதுவும் 250 பக்க நேர்த்தியான நூலை 200 ரூபாய்க்கு பெற முடிவதும் இலக்கியப் பயன்தான் . வாழ்த்துக்கள் முதல் எழுத்து நூல் வடிவத்திற்கும். ( எழுத்துப் பிரசுரம் சென்னை )
உடுமலை நாராயண கவி இலக்கிய விருது இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி நாவலாசிரியர் முத்து நாகு, கீரனூர் ஜாகீர்ராஜா, கவிஞர் ஆண்டன் பென்னி, மேற்குத்தொடர்ச்சிமலை இயக்குனர் லெனின் பாரதி, பேராண்மை ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் போன்றோர் உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். உடுமலை ஆய்வு நடுவத்தைச்சார்ந்த குமாரராஜா, அருட்செல்வன், பேரா ஜெயசிங், பேரா. கிருஷ்ணன், பேரா. கற்பகவள்ளி,சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றி மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் ), கிருஷ்ணன்( முதல்வர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கலூரி), வேலுமணி ( தமிழ்த்துறைத்தலைவர் உடுமலை ஆகியோர் பேசினர். எழுத்தாளர் குமாரராஜா வரவேற்பு நல்கினார் 1 'சங்க கால வரலாற்றில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது, 'தினமலர்' ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகள்,'' என சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கல்வியாளர்கள், படைப்பாளர்கள் சார்பில், எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் மற்றும் 'உடுமலை வரலாறு' நுால் வெளியிட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.சென்னை அண்ணா பல்கலை மற்றும் மதுரை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி தலைமை வகித்து பேசியதாவது: சமூகத்தின் கண்ணாடியாக இலக்கியங்கள் அமைகின்றன. வரலாறு என்பது, பல ஆண்டுகளாக இருப்பதை உண்மையாக, ஆதாரங்களுடன் எழுத வேண்டும். எழுத்து, பொருள் மாறக்கூடாது. இலக்கியம் கற்பனையாக இருக்கலாம். தங்கத்தை கட்டியாக பயன்படுத்த முடியாது; ஆபரணமாக மாற்றினால் பயன்படுத்தலாம். அது போல், இலக்கியம் இருக்கலாம்.வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால், முதலில் அங்கீகாரம் கிடைக்காது. 'தினமலர்' ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கொடைக்கானலில் அமர்ந்து சிறிய நுால் படித்து, பழங்கால நாணயங்கள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேடி, தேடி ஆய்வு செய்து, உண்மையை வெளிக்கொண்டு வந்தார்.உலகம் முழுவதும் நாணயங்களை தேடினார். அமராவதி ஆற்றங்கரை நாகரிகத்தில் கிடைத்த நாணயங்களையும் ஆய்வு செய்துள்ளார். பாண்டியர், சேரர், சோழர் மற்றும் சங்க கால வரலாறு குறித்து பல ஆய்வுகள் மூலம்நிரூபித்தார்.நாணயவியல் ஆய்வில் துணிந்து, கடும் முயற்சியால் சிறப்பான வரலாற்றை வெளிக்கொண்டு வந்தார். முதலில் ஏற்றுக்கொள்ளாதவர்கள், நாணயவியலின் தந்தையாக ஏற்றுக்கொண்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் தனி மரியாதை கொடுத்தனர்.ஏராளமான வரலாற்றுச்சுவடுகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் சுப்ரபாரதிமணியன் அவர் வாழும் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களை இலக்கியமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருப்பவர். இந்த வெற்றியை அவரின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளுக்கான வெற்றி எனக்கொள்ளலாம் இவ்வாறு, பொன்னுசாமி பேசினார்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தலைவர் குமாரராஜா, வித்யாசாகர் கல்லுாரி முன்னாள் முதல்வர் பொன்னரசனார், முதல்வர் பிரபாகர், உடுமலை அரசுக்கல்லுாரி பேராசிரியர் வேலுமணி, பல்லடம் அரசுக்கல்லுாரி பேராசிரியர் ஜெயசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஏற்புரையாற்றினார்.
சுப்ரபாரதிமணியன் சுற்றுச்சூழல் கவிதை : இடம் இந்த இடம் பிறரின் வருகைக்கென்றிருப்பது தடை செய்யப்படலாம். தடை செய்யப்படுவதற்கு முன் வந்து விட்டுப் போங்களேன் ஒருமுறை. நதிநீரின் தூய்மையும் சாயக்கழிவுகளின் தொடக்கமும் ஒன்று சேரும் இடம் இது. இதற்கப்புறம் நதி சாயக்கழிவுகள் ஓட்டம்தான். இவ்வளவு தூய்மையாய் நீரா … இவ்வளவு சாய கலவையாய் நதியா கணிக்கத் துல்லியமாய் ஓரிடம் இது. நகரத்தில் இருந்து சற்று தொலைவில் தான் தொடங்குகிறது இவ்விடம். இவ்விடத்தில் நிலத்தடி நீரிலிருந்து கிளம்பும் சாயங்களின் வர்ணங்கள் அபரிமிதமானவை .நின்று சலிக்கும் தண்ணீர் லாரிகளின் துருப்பிடித்த தொட்டிகள் .. பிளாஸ்டிக் குடங்களின் வரிசைகளில் வானவில்லின் கலவைகள் . அழுகையாய் பலரின் மெல்லியக்குரல்கள். இதற்கு மத்தியில் புண்ணியத்தலமாய் இந்த இடம் தென்பட்டு விட்டது பலருக்கும் .. இந்த இடமும் பிறரின் வருகைக்கு என்று இருப்பது விரைவில் தடை செய்யப்பட்டு விடலாம் தடை செய்யப்படுவதற்கு முன் வந்து விட்டுப் போங்களேன் ஒருமுறை.. சுப்ரபாரதிமணியன் மந்திரச்சிமிழ் கவிதைத் தொகுப்பு , காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு 2006) .. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 சுப்ரபாரதிமணியன் அவர் வாழும் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களை இலக்கியமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருப்பவர். இந்த வெற்றியை அவரின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளுக்கான வெற்றி எனக்கொள்ளலாம் இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது
கனவு வெளியீடுகள். * மாயாறு – இரு நெடுங்கவிதைகள் ( சுப்ரபாரதிமணியன் ) ரூ 75 * புலி – மொழிபெயர்ப்புகள். ( சுப்ரபாரதிமணியன் ) ரூ75 * திருப்பூரும் கொரானாவும் – ( யுவராஜ் சம்பத் ) ரூ 100 * எனது முகவரி –மதுராந்தகன் கவிதைகள் ரூ 75 * எச்சரிக்கை செய்யும் பூமி- சிதம்பரம் ரவிச்சந்திரன் சுற்றுச்சூழல்; கட்டுரைகள் ரூ150 * பதினோழு வயதில் –சாக்கோ சிறுகதைகள் ரூ 150 * பால் டம்ளர் – 21தெலுங்கு சிறுகதைகள் ரூ150 : மொழிபெயர்ப்பு : ராஜி ரகுநாதன் * விழிகள் வீசிய வலைகள் –நாமக்கல் நாத கட்டுரைகள் ரூ100 * சேவ் -25 படிக்கற்களும் பூங்காக்களும் நட்சத்திரங்களும்- ரூ 100 * முத்தழகு கவியரசனின் பரிதவிப்பு நாவல் ரூ 125 * பிளிறல்- சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் ரூ 100 * வேலியோரத்து வெள்ளை மலர்கள் – க. ரத்னம் ரூ 75 * பாலில் சர்க்கரை பழுதாகலாமோ- ப.க. பொன்னுசாமி கட்டுரைகள் ரூ80 * நவீனத்துவமும் மார்க்சீயமும் – பி ஆர் ராமானுஜம் ரூ120 * பொய் பேசும் தேசம் – பானுமதி பாஸ்கோ கட்டுரைகள் ரூ150 * தீபனின் கவிதைத் தொகுதி ” சமூகத்தின் அரசியல் பொய்கள் – ரூ 75 * தீர்வு –கே எம் சண்முகம் சிறுகதைகள் ரூ 150 * விற்பனைக்கு: ** காரிகாவனம் தொகுப்பு : சுப்ரபாரதிமணீயன் ரூ 180 – *ஓ.செகந்திராபாத் : சுப்ரபாரதிமணீயன் ரூ 70 * சுப்ரபாரதிமணீயன் கதைகள் 1 ம்பாகம் , 2ம் பாகம் ரூ1000., ரூ 500- * கனவு தொகுப்பு காவ்யா ரூ350 , தனிஇதழ் தொகுப்பு ரூ 500 *சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள் டிஸ்கவரி ரூ350 கனவில் கிடைக்கும் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் * மற்றும் சிலர் 1987 * சுடுமணல் 1990 ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது ) * சாயத்திரை 1998 ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி , வங்காள மொழிகளில் வெளியாகியிருக்கிறது ) * பிணங்களின் முகங்கள் 2003 ( கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * சமையலறைக் கலயங்கள் 2005 -ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது ) * ஓடும் நதி 2007 ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது) * நீர்த்துளி 2011 ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு ) * சப்பரம் ( இந்தியிலும், மலையாளத்திலும் வெளிவந்துள்ளது ) * மாலு ( இந்தியிலும், ஆங்கிலத்திலும் , மலையாளத்திலும் ) * நைரா ( உயிர்மை ) * தறிநாடா ( என்சிபிஎச்) * புத்துமண் ( உயிர்மை ) * கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம், கிழக்கு ) மலையாளத்திலும் வெளிவந்துள்ளது * கடவுச்சீட்டு (முன்னேற்றப் பதிப்பகம். , பழனியப்பா ) * ரேகை ( பொன்னுலகம் ,திருப்பூர் ) ஆங்கிலத்தில் .. • Notch Rs 295 • 1098 Rs 295 • Coloured curtain Rs 300 • Sumangali Rs 200 • Migration 2.0 Rs 150
உடுமலை வரலாறு : : சுப்ரபாரதிமணியன் ” ஊரை நினைத்தாரை ஊர் இனிக்கும் “என்பார்கள் அப்படி தனது சொந்த ஊரை பற்றி மிகுந்த சிரமங்கள் உடன் வரலாற்று ஆய்வு மைய உடுமலை நண்பர்கள் இந்த நூலை சிறப்பாக தயாரித்திருக்கிறார்கள் இந்த வரலாற்று நூல் அமைய காரணமாக பல ஆளுமைகள் இருந்தாலும் இந்த சூழல் உருவாக காரணமாக இருந்த பல முக்கிய நபர்கள் பற்றிய அறிமுகங்கள் கூட சிறப்பாகவே செய்யப்பட்டிருக்கின்றன . திவான்பகதூர் ரசாக்காபாத், பெண் கல்வி தந்திட்ட கோவிந்தசாமி, சாதி சமய நல்லிணக்கத்தை போற்றி பாதுகாத்த சோழிய கவுண்டர், சமூக சேவையில் அக்கறை கொண்டு உடுமலையை வளர்த்த காமாட்சி கவுண்டர் ,பழனி கவுண்டர் குடும்பத்தினர் ,.அந்த நகருக்கு தண்ணீர் தந்து தாகம் தீர்த்த வித்யாசாகர் , பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் மூலமாக உடுமலை நகரத்துக்கு ஒரு புதிய முகத்தை ஏற்படுத்திய கெங்குசாமி நாயுடு போன்றவர்கள் இதை எழுதுவதற்கான வித்தாக இருந்திருக்கிறார்கள். உடுமலை வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த மறைந்த பேரா.இந்தரஜித் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி உடுமலைப்பேட்டை நூறு ஆண்டு நகராட்சி அளவில் முழுமை பெற்றது ஒட்டி கொண்டுவரப்பட்டது என்று கூட சொல்லலாம். .உடுமலை நகரத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பல உள்ளங்கள் இந்த தொகுப்பு முழுக்க நினைவு கூறப்படுகிறார்கள். இந்த அமைப்பினர் முன்பே உடுமலைப்பேட்டை நகராட்சி நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி “ உடுமலை 100 “என்ற நூலை கொண்டு வந்திருக்கிறார்கள். பல்வேறு கலை இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் இறங்கி தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள். .பல கலை இலக்கியவாதிகளை அவர்கள் அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு நவீன இலக்கியவாதிகள் சிலரும் நாம் குறிப்பிடலாம்.. உடுமலை நகராட்சி வரிவிதிப்பு செய்து அதை அரசுக்கு செலுத்தி வளர்த்து உடுமலைப்பேட்டை என்ற சிற்றூரை நகராட்சி அங்கீகாரம் செய்த மனிதர்கள் பலர் அவர்கள் உழைப்பில் நகரம் வளமை பெற்றிருப்பது போலவே ஆன்மீக செயல்கள் சமூக சேவை மூலம் பலர் இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் அந் நகரத்தில் இருக்கும் பல சிலைகளை பார்க்கிற போதெல்லாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள மனம் ஆவலாய் தேடும். அப்படித்தான் இங்கு உள்ள பழைய சேர்மன் கனகராசன் போன்றோர் பற்றிய தகவல்கள் மிக முக்கியமாக சிலைவடிவில் மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் உருவாகியுள்ளன. அதேபோல் சாய்ந்த தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த பல்வேறு விஷயங்களை தொகுத்துக் கொடுத்து உடுமலை நகரம் பழமையான தொல்பொருள் பொருட்களின் கிடங்காக இருப்பதை காட்டுகிறார்கள் யாரும் இந்த பணியை செய்ய முன்வராததால் நான் என் தோளில் போட்டு செய்கிறேன் என்று தந்தை பெரியார் ஒவ்வொரு பணியும் தானே எடுத்துக் கொண்டு செய்தது போல இந்த வரலாற்றை உருவாக்குவதில் அருள் செல்வன் உட்பட பல உடுமலை வரலாற்று மையம் சார்ந்த பலர் ஈடுபட்டிருந்தார்கள் சரபம் முத்துசாமிக் கவிராயர் ,உடுமலை நாராயணகவி, பெரும்புலவர் நயினார் முகமது போன்ற எழுத்துலக சிற்பிகள் வாழ்ந்த ஊரை அவரைப் பற்றி நல்ல அறிமுகம் கிடைக்கிறது ஆனால் நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது பெரிய பலவீனமாக இருக்கிறது மைக்ரோ ஹிஸ்டரி எனப்படும் நுணுக்கமான வரலாற்றை எழுதுவது ஒவ்வொரு நகரத்திலுள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கியமான பணியாக மாறி இருக்கிறது அந்தப் பணியின் அடையாளம்தான் இந்த நூல் . கரிசல்மண் விளைச்சலுக்கு ஏற்றதாகவும் வியாபாரத்திற்கு ஏற்றதாகவும் இருந்ததால் நூற்றுக்கு மேற்பட்ட பஞ்சாலைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருந்து வந்த செய்திகளை பார்க்கும்போது திருப்பூர் பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கு உடுமலை பெரும்பங்காற்றி இருப்பது தெரிகிறது தன் பெருமை நினைக்காமல் தான் வாழும் மண்ணின் பெருமையை காக்கும் உள்ளங்களை இந்த வரலாற்று மையம் அடையாளம் காட்டும் முக்கிய அம்சமாக இந்நூல் இருக்கிறது. அந்த வகையில் இதில் விடுபடும் உள்ள நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் மற்றும் சில சரித்திர பூர்வமான செய்திகளை சேர்த்து அடுத்த பதிப்பு கொண்டுவரும் என்று நம்பலாம் மணிமேகலைப் பிரசுரம் சென்னை இதை வெளியிட்டிருக்கிறது பிரதிகளை வரலாற்று ஆய்வு நடுவம் உடுமலைப்பேட்டை அமைப்பில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் ( Rs 500 ..வரலாற்று ஆய்வு மையம், உடுமலைபேட்டை 98420 91244 ) --சுப்ரபாரதிமணியன்
பச்சைப் பதிகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)- சுப்ரபாரதிமணியன் தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதிமணியன் அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழைமக்கள்தான் என்பதையும் அவரது படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விடத் துல்லியமாக வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது எனலாம்.c இயற்கையுடனும்மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப்பூர்வமான பிணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப் போய்விட்டோம். அறுந்து போன இந்தப் பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும். ஆனால் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்தப் பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும் இங்கு பெரிதாக உருவாகவில்லை (கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதிவிலக்கு) இந்தப் பின்புலத்தில்தான் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க வேண்டும். .சுற்றுச்சுழல் பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்இல்லை.- தியடோர் பாஸ்கரன் (ரூ100 வாசகசாலை , சென்னை வெளியீடு )
சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ). . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது பெரும் நகரங்களுக்கு வேலைகாரணமாக இடம் பெயர்ந்து வாழும் வடமாநிலத்தொழிலாளர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாய் ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த நாவல் 2020 ஆம் ஆண்டுக்கான எழுத்து இலக்கிய அறக்கட்டளை - திருமதி சௌந்திரா கைலாசம் இலக்கியப்பரிசு பெற்ற நாவல் ( வெளியீடு : எழுத்து & கவிதா, சென்னை ரூ 250 ) செய்தி: மதுராந்தகன் ,( கனவு இலக்கிய வட்டத்திற்காக ) மதுராந்தகன் 77089 89639 முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602
கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி சுப்ரபாரதி மணியன் கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என் கவனத்தில் வந்தன .எதார்த்தமான அனுபவங்கள், வட்டார மொழியில் சொல்வது, பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றிய வித்தை இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, அந்த காலகட்டத்தில் ஜெயந்தன், கி ராஜநாராயணன் இருவரும் என் உரைநடையின் முன்னோடிகளாக அமைந்தார்கள் ,.தொடர்ந்து அவரின் படைப்புகளை வாசித்து வந்தேன் என் முதல் சிறுகதை தொகுப்பை அவருக்கு அனுப்பி வைத்தேன். “அப்பா “ என்ற சிறுகதை தொகுப்பு பற்றி அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ” உங்கள் சிறுகதைகள் பெரும்பாலும் குடும்பத்தில் உங்களின் அனுபவங்களாய் அமைந்திருக்கின்றன. சுய அனுபவங்களை கதைகளாக எழுதுவது சிறந்த வித்தை. சிறந்த படைப்பு .ஆனால் அதை மீறி மற்றவர்களின் அனுபவங்களை வசீகரித்துக் கொண்டு எழுதுவது உங்களின் படைப்பு எல்லையை விரிவாக்கும் . இந்த தொகுப்பில் சுஜாதா முன்னுரை சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் அவர் இந்த தொகுப்பில் இருக்கும் ” ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் ”என்ற சிறுகதை, சிறுகதை வடிவத்தில் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். வழக்கமான வடிவத்தை மீறி செயல்படுவதால் எழுத்து புதுப் படைப்பாகும் .கலை என்பதே வடிவத்தை மீறுவதாகும். அந்த மீறல் அந்த சிறுகதைகள் இருக்கிறது. சுஜாதா அந்தக்கதையை ஏதோ அசைவம் சாப்பிடுவது, கோழிக்கறி சாப்பிடுவது போன்ற விஷயங்களின் தொகுப்பாக தான் பார்த்திருக்கிறார் .ஆனால் அதை மீறி அந்த இனக்குழு சார்ந்த உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் இவையெல்லாம் அதில் இருப்பதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். கலை என்பதும் இலக்கிய படைப்பு என்பதும் வடிவத்தையும் மரபையும் மீறுதலே ”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 2002 இல் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”ஆண்டுதோறும் என் பிறந்தநாள் அன்று ஒரு சிற்றிதழுக்கு பரிசு தொகை வழங்கி கௌரவிப்பது வழக்கம் இந்தாண்டு தாங்கள் நடத்திவரும் கனவு இதழுக்கு கரிசல் கட்டளை விருது அளிக்கிறோம் ” என்ற தகவலை தெரிவித்து இருந்தார். நான் அந்த விழாவின் பொருட்டு பாண்டிச்சேரி சென்ற போது அவரை முதன் முறையாக சந்தித்தேன் . ” கரிசல் கட்டளை விருது ” விழாவிற்கு முதல் நாள் இரவு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பல்வேறு விசாரிப்புகள் என் படைப்புகளைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள். கனவு இதழ் தொடக்கம் பற்றி பேசுங்கள் என்று சொன்னார். கேட்டுக்கொண்டார் உங்கள் வீட்டு மொழி என்ன கன்னடம் அப்படி என்றால் அது தானே தாய் மொழி இல்லை நான் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில் தான். தமிழ் தான் படித்தேன் வீட்டில் பேசுவது தானே தாய் மொழி இல்லை . அது வீட்டு மொழி .தாய் மொழி தமிழ் என்றேன் அது பற்றி சிறு சிறு சர்ச்சைகள்.உரையாடல்கள் சரி.. தமிழ்தான் தாய் மொழி என்பது பற்றிய உங்கள் தீர்மானம் நல்லதே என்றார். அவர் அறிந்த கன்னட நண்பர்கள், அவர்களின் வீட்டுச்சூழல் மற்றும் கன்னட மொழி சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரின் தாய்மொழியான தெலுங்கு பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றியும் அவருடைய படைப்புகளில் தெலுங்கு மக்களுடைய நிலையைப் பற்றி சொல்லி இருப்பதை நினைவுபடுத்தினார் .தொடர்ந்த அவரின் பேச்சில் தெலுங்கு மொழி சார்ந்த ஈடுபாடும் அந்த சாதி சார்ந்த அபிமானமும் தென்பட்டது . அடுத்த நாள் அவர்கள் வீட்டு மாடியில் ”கரிசல் கட்டளை விருது ”கனவு இதழுக்கு வழங்கப்பட்டது. பாண்டிச்சேரியின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் .அப்போது அவர் சிறுபத்திரிக்கை என்பது அவரின் படைப்புகளின் பெரிய கலங்கரை விளக்கம் ஆகும் . ஏணியாகவும் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். அவரின் படைப்புகள் சிற்றிதழ்களில் வந்தே கவனம் பெற்றதைச் சொன்னார்.கனவு இதழின் செயல்பாடுகள் பற்றியும் பாராட்டினார் அதன் பின்னால் பாண்டிச்சேரிக்கு செல்கிறபோது அவ்வப்போது அவரை சென்று சந்தித்தேன். அவருக்கு எழுத்தாளர்களுடன் உரையாடலும் அதற்கான சூழலும் அக்கறையும் மகிழ்ச்சி தந்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். மூன்று மாதங்களுக்கு முன்னாள் நண்பர் யுகபாரதியின் வீட்டு திருமணத்திற்கு பாண்டிச்சேரி சென்று நண்பர் பாரதி வசந்தன் அவர்களுடன் அவர் வீட்டை தேடி புறப்பட்டோம். அவர் மருத்துவமனையில் 15 நாட்களுக்கு மேலாக இருக்கிறார் ஆனால் இப்போது வீடு திரும்பி இருப்பார் என்ற நண்பர் ஒருவரின் தகவலோடு லாஸ்பேட் சென்றோம். பாரதி வசந்தன் அந்த பகுதிக்கு சமீபமாய் செல்லாததால் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அதே பகுதியைச் சார்ந்த இரண்டு இளம்பெண்களிடம் எழுத்தாளர் பற்றி சொன்னோம் ,அவர்களுக்கு தெரியவில்லை என்றார்கள்.பிறகு நாங்களே வீட்டை கண்டுபிடித்து அவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்டோம். நான் கொண்டு சென்ற புத்தகங்களை அவர் வீட்டுக்குள் போட்டுவிட்டு ஒரு கடித குறிப்பையும் இணைத்து விட்டு திரும்பினோம் .அப்போது நாங்கள் ராஜநாராயணன் என்ற எழுத்தாளர் வீடு என்று கேட்டு விசாரித்து அந்த இரு இளம்பெண்கள் தென்பட்டார்கள். தாத்தான்னு சொல்லிருந்தா எல்லாருக்குமே தெரியுமே .எங்களுக்கு எல்லாம் அவர் தாத்தாதான் என்று அந்த பெண்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். எழுத்தாளர்களுக்கு அவர் நைனா, அண்ணாச்சி, அப்பா.. இந்த இளம் பெண்களுக்கு அவர் தாத்தாவாக இருந்திருக்கிறார் .இதுபோன்ற நேசம் , அன்புப்பிணைப்பு சார்ந்த உறவுகளை அவர் எல்லோரிடமும் வைத்திருந்தார் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன் இந்த நேசத்தை அவரை சந்திக்கும் போதெல்லாம் நானும் உணர்ந்திருக்கிறேன் அந்த உணர்வை மறுபடியும் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நூறு ஆண்டுகள் இருந்து ஞானபீடம், நோபல் பரிசு போன்ற விருதுகளுடன் அவர் வாழ்க்கை நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொள்கிறதுAR T - SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003 ( AGS ( கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் ஐயா கி. ராஜநாராயணன் அவர்களுக்காக BSNL தமிழருவி குழு நண்பர்கள் இணையவழி புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசியது )
மு.முருகேசும், சுப்ரபாரதிமணியனும் ‘குரு அரவிந்தன் வாசகர்’ வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக வாசகர் வட்டத்தின் சார்பில் எமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், டென்மார்க், கனடா, அமெரிக்கா ஆகிய 14 நாடுகளில் இருந்து திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. முதற்சுற்றில் விதிமுறைகளை மீறிய கட்டுரைகள் தவிர்க்கப்பட்டு 142 கட்டுரைகள் தெரிவாகின. இரண்டாவது சுற்றில் கட்டுரையாளர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டு இலக்கமிடப்பட்டு, நடுவர்களால் தனித்தனியாகப் புள்ளிகள் இடப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில் முதல் 20 கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில் முதல் 5 கதைகளும் தெரிவு செய்யப்பட்டன. அதன்பின் ஏனைய 15 கதைகளுக்கும் பாராட்டுப் பரிசுகள் (தலா 5,000 இலங்கை ரூபாய்கள்) கிடைத்திருக்கின்றன. பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன. இதைவிட நிர்வாகக்குழுவின் ஆலோசனையின்படி இளைய தலைமுறையினர், மாணவ, மாணவிகள் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மேலதிகமாகப் 10 பாராட்டுப்பரிசுகள் (தலா 5,000 இலங்கை ரூபாய்கள்) அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இவர்களின் பெயர்களும் அகரவரிசையில் இருக்கின்றன. வாசகர் வட்டத்தின் சார்பாக பங்குபற்றிய, பரிசுபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். அடுத்த வருடம் மீண்டும் இது போன்ற ஒரு போட்டியில் சந்திப்போம். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல, காலம் பதில் சொல்லும் என்பதைப் புரிந்து கொண்டு, தயாராக இருங்கள். நன்றி. குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள். 1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை 2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை 3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள் முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு 4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள் ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை 5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள் சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு 15 ஆறுதல் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன. அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு. மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை. கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம். மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு. முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை. நளாயினி நந்தகுமார். மெல்பேர்ன், அவுஸ்ரேலியா. பூமணி. க. செஞ்சி தாலுகா, விழுப்புரம், தமிழ்நாடு. பூர்ணிமா. சா. நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு. பர்வின் பானு. எஸ். தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு. துடுப்பதி ரகுநாதன் டி. எஸ். கோயமுத்தூர்-36 தமிழ்நாடு. சக்திதாசன் கனகசபாபதி. 4390 ஏஐPPநுசுழுனுஇ டென்மார்க் சரளா முருகையன். பென்சினர் காலனி, திருச்சி-23 தமிழ்நாடு. தங்கராசா செல்வகுமார். குப்பிழான் தெற்கு, யாழ்ப்பாணம், இலங்கை. இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கான 10 பாராட்டுப் பரிசுகள் தலா 5000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன. அருச்சனா சித்திவினாயகம். ரொறன்ரோ கனடா. தேவரூபா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு. கிருத்திக்கா. எஸ். முனிச்சாலை, மதுரை தமிழ்நாடு மோனிஷா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு. நிறோஜினி வரதராஜன். வரணி வடக்கு, இலங்கை. றுவிங்கா ஸ்ரீ. மிசசாகா, கனடா. சக்தயா சாம்பவி முகுந்தன். ஸ்காபரோ, கனடா. ஸ்ரீசங்கர் அருநோதன். மட்டக்களப்பு, இலங்கை. திவாணி கந்தசாமி. தவசிக்குளம். வவுனியா, இலங்கை. றிசா ஜேசுதாசன் ரொறன்ரோ, கனடா. சர்வதேச ரீதியாகக் கனடாவில் இருந்து நடந்த முதலாவது திறனாய்வுப் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. 14 நாடுகளில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இறுதிச் சுற்றில் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், கவிஞர் சரேஸ் அகணி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெற்றவர்களுக்குக் காலக்கிரமத்தில் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பபடும். இந்தப் போட்டியை நடத்த அனுமதி தந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்ணாவிற்கும், நடுவர்களுக்கும், மிகவும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் வாசகர்வட்டத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த வருடம் இதே போன்ற ஒரு போட்டியில் மீண்டும் சந்திப்போம். தயாராக இருங்கள், நன்றி. மேலதிக விபரங்களுக்கு: சுலோச்சனா அருண் செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். Kuru Aravinthan Fanclub ...