சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 31 டிசம்பர், 2015

வடகிழக்கு இந்தியக் கதை: கைசம் பிரியோகுமார்
தமிழில்: சுப்ரபாரதிமணியன்

ஓர் இரவு

         கைசம் பிரியோகுமார்(பி. 1949) சிவில் என்ஜினியர். நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். அவர் “ நங்கி தரக் கிராதேசிறுகதைத் தொகுப்பிற்கு ஜந்து இலக்கியப் பரிசுகள் பெற்றவர். 1998ல் சாகித்ய அகாதெமி பரிசு உட்பட. அவர் இரக்கோல், வஹ்ஹால், மற்றும் சாகித்ய என்ற மூன்று இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர்.
         தூங்கும்போதும் தலைக்குள் ஏதாவது நிகழ்ந்தால் என்னாவது? அல்லது பலமான கத்தியொன்று அறியாமல் குத்தினால்? ஸ்டீபனுக்கு அந்த எண்ணம் அதிர்ச்சியாக இருந்தது. தூக்கத்திலிருந்து விடுபடும் வகையில் அவனின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. எதிர் திசைப் படுக்கையை கூர்ந்து பார்த்தான். லிங்க்பெள கால்களை நீடியபடி படுத்திருந்தான். அவன் அசையவேயில்லை. ஆனால் அவன் எண்ணினான்: ஒவ்வொரு இரவிலும் நான் பெருத்த குறட்டைச் சப்தம் கேட்பது வழக்கம். இப்போது தனியாக குறட்டை வரட்டும். அவன் மூச்சுகூட விடவில்லை என்பது போலிருந்தது. அவன் விழித்திருக்கானா? ஸ்டீபன் மறுபடியும் கண்களை மூட முடியவில்லை. மெல்லிய வெளிச்சம் மின்சார பல்பின் வெளிச்சத்தில் சின்ன அறையின் வெளிறித் தெரிந்த பொருட்களை ஊடுருவியது. சிறிய கட்டில், ஸ்டவ், சில பாட்டில்கள், ஒரு கூடை, பிளேட்டுகள், மற்றும் பாத்திரங்கள் சுவறின் அருகில் ஒன்றாய் குவிந்திருந்ததை காண முடிந்தது. கத்தி எங்கே? சுவற்றில் சாய்ந்திருப்பதா? குழப்பத்தில் மூழ்கினான். கவனமாகப் பார்த்தான். லிங்க்பெள முதுகை சுவற்றுக்குத் திருppiப்பியபடி படுத்திருந்தான். ஸ்டீபன் முழுமையாக எழுந்திருக்கவில்லை. கத்தியை படுக்கை அடியில் வைத்ததாக நினைப்பிலிருந்தது அவனுக்கு. கழுத்தை நீட்டிச் சாய்த்து படுக்கையின் அடியில் பார்த்தான். கத்தி தரையில் கொஞ்ச தூரம் தள்ளிக் கிடந்தது. கொஞ்சம் பெருமூச்சு விட்டான். ஆனால் அவன் கண்கள் மூடவில்லை.
         இரவு நீண்டது. எந்த ஒரு மனிதக் குரலும் கேட்கவில்லை, ஒன்றிரண்டு நாய்களின் அவ்வப்போதானக் குரைப்பைத் தவிர. இந்தச் சப்தங்களால் வேறு இரவுகளில் இந்த நேரத்தில் அவன் ஓரிரு முறை எழுந்திருப்பான். இன்று தூக்கம் சாத்தியமில்லையா?  நினைப்பால் எழுந்த பயத்தை தவிர்க்க நினைத்தான். அவன் எதிரில் படுத்திருந்த லிங்கபெளவை மறுபடியும் பார்த்தான். இப்போதும் அவன் அசையாமல் படுத்துக் கிடந்தான். உண்மையாகவே தூங்குகிறானா? விடியும் வரை குரலில் கொஞ்சம் தூங்காமல் காத்திருக்க வேண்டுமா. ஸ்டீபன் மீண்டும் நினைத்தான்.
         குறுக்குவாகு அலுவலகக் கட்டிடத்தின் தூரமூஅலி சின்ன அறையில் அவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கிறார்கள். இன்றைப்போல் குரோதமாய் எண்ணங்கள் அவனை அழைக்கழித்ததில்லை.
          ” “நீ இன்னும் இருவரும் சேர்ந்து இருக்க விருப்பமா?
         இன்று காலை இருவரையும் அழைத்த அலுவலர் கேட்டார். இந்தக் கேள்வியை முன்பு கேட்டதில்லை. அவர்கள் நேராக பதில் சொல்ல முடியவில்லை. இது போல் கேள்விகள் கேட்கப்படும் நிலை இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. சில நொடிகள். பிறகு தலைகளைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தனர்.
         “உங்கள் இருவருக்குமிடையில் எதுவும் நடந்து விடாது. ஆனால் யாருக்குத் தெரியும்? ஏதாவது மோசமாக நடந்து விட்டால்,எங்களையும் இழுப்பார்கள்
         இருவரும் மெளனமாகக் கேட்டார்கள். “ எனவே காவலாளி வேலை, சுத்தம் செய்யும் வேலை இரண்டையும் ஒருவரே சேர்ந்து செய்ய வேண்டும். அல்லது, குடியிருக்க இடம் தராத காரணத்தால் ஒருவர் வாடகை ரூம் எடுத்து இருக்கலாம். நாளை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
         இந்த முறையும் அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை. மெளனமாக அறையை விட்டு வெளியேறினர். ஒன்றாக வாழ்ந்தும், நெடுநாள் நண்பர்களாக இருந்தும் இருவரும் திடீரென ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்துவிட்டது போலத் தோன்றியது. நேருக்கு நேராக இனி இருவரும் பேச முடியாது.
           “குக்கி ஒருவனும், நாகா ஒருவனும் ஒரே அறையில் தங்கியிருந்து இரவில் ஒருவனை ஒருவர் கொலை செய்து கொண்டால் இந்த ஆபீஸ்க்கு கெட்டபேர் ஆகாதா
         அது அடுத்த அறையின் பேச்சின் பொது அர்த்தமாக இருந்தது. தலைமை எழுத்தர் குலாபிது அலுவலகத்தில் மற்றவர்களிடம் என்ன சொன்னார் என்பதைத் தெளிவாகக் கேட்டிருந்தான். லிங்கபவும் அதைக் கேட்டிருப்பான் என்று ஸ்டீபனுக்கு தெரியும். இது முன்பே வந்திருந்தால் அவன்  ஓதுக்கியிருப்பான். சில ஆண்டுகளில் இதுபோல பல கொலைகள் நடந்திருந்தால் தீவிரவாதிகள், அரசியல்வாதிகள் மீது பழி விழுமே தவிர சாதாரணமானவர்கள் மீதல்ல. ஸ்டீபன்  உடன்படாதவனாக இருந்திருப்பான். ஆனால் இருவரும் நகைச்சுவையான் பேச்சில் ஈடுபட இன்று வாய்ப்பிருந்தும் சேரவில்லை. ஒருவரைவிட்டு ஒருவர் விலகி எங்கோ ஓடுவது போலிருந்தனர்.
          “லிங்க்பெள, பசாங்க் என்பது உன் கிராமம் என்று சொல்லியிருக்கிறாய் அல்லவா? பத்திரிக்கையைப் பார்.. யரோ சாங்குபெலி சொன்ங்லோய், அவன் மனைவி, மூன்று வயது மகன் ஆகியோர் இஹாங் ஆற்றின் அருகிலான வயலில் சுட்டு கொல்லப்பட்டார்கள் என்று இந்தப் பத்திரிக்கை சொல்கிறது.
         டைப்பிஸ்ட் தொம்பி தினசரி செய்தித்தாளைக் காட்டியபடி ஒரே சமயத்தில் படித்தும், பேசியும்படி சொன்னான். ஸ்டீபன் வாழ்க்கையின் பெரும் அதிர்ச்சியை அடைந்தான். லிங்க்பெள ஏறத்தாழ பிடுங்கி, செய்தித்தாளுடன் சண்டையிட்டு கைகளில் பிடித்து வாசித்தான். அவனின் கை மோசமாக நடுங்கியது. அவன் கண்கள் சிவப்பாக மாறுவது போலிருந்தது. திருப்பித் தரும்போது, எதுவும் பேசாமல் தினசரி செய்தித்தாளை ஏகதேசம் தூக்கி எறிந்தான். ஸ்டீபன் தூணைப்போல் எதுவுமில்லாமல் நின்றான். அவனுக்கு அது கெட்ட கனவு... சாங்யுபெள, லிங்க்பெளவின் இளைய சகோதரன் என்பது அவனுக்குத் தெரியும்.
         உங்கள் ஆட்களைக் கொல்வது, அடிப்பது, இருவரின் வீடுகளை மாறிமாறி கொளுத்துவது இவையெல்லாம் இதுபோல முடிந்துவிடாது. இன்னும் பலர் இறப்பர். மோல்நோமில் சில நாட்களுக்கு முன்நடந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கை இது. லிங்க்பெள ஏன் எதுவும் சொல்லாமல் சென்றான்
         ஸ்டீபனைப் பார்த்து தோம்பி கேட்டான். “ எனக்குத் தெரியாது
         ஸ்டீபன் இவைகளையேப் பேசினான். வேறு சமூகத்தைச் சார்ந்தவனுடன் இதை கலந்தாலோசிக்க அவன் விரும்பவில்லை. அவன் அதுபற்றி யாரிடமும் பேச விரும்பவில்லை. ஸ்டீபனும் அறையிலிருந்து வெளியேறினான். அலுவல் கேட்டிற்க்கு நேராகச் சென்றான்.
     ஸ்டீபன் மீண்டும் லிங்க்பெளவை நோக்கத்துடன் பார்த்தான். முன்புபோல லிங்க்பெள அசையவேயில்லை. அவனைப் போல தூங்க முடியுமா? அவனால் அப்படித் தூங்க முடியாது. ஆனால் எப்படித் தூங்குவது? அவனின் முப்பது வயது இளைய சகோதரன் மனைவியுடனும், குழந்தையுடனும் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிந்த போது.  அந்த இரவில் அவன் தாமதமாக மது குடித்து கண்கள் சிவந்த நிலையில் திரும்பினான். துணிகளைக் கூட மாற்றாமல் நேராக படுக்கைக்குச் சென்றான். இரவு உணவும் சாப்பிடவில்லை. ஸ்டீபனுக்கு அவனுடன் பேசத் தைரியமில்லை. அவனுக்கு உணவும் பரிமாறவில்லை. லிங்க்பெளவும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இரவு வெகு நேரமாகியும் அவன் திரும்பாததால், லிங்க்பெள பாஸ்ஹோங்கிற்கு சென்றிருப்பான் என்று ஸ்டீபன் நினைத்தான். சாங்குபெளவின் சாவு குறித்து வருத்தம் தெரிவித்துப் பேச விரும்பினான். ஆனால் லிங்க்பெளவின் நிலை பார்த்து அவனுக்குத் தைரியம் வரவில்லை. இரவின் மிக அமைதியான சூழலில் அவன் மனதில் பயம் கிளம்புவதை உணர்ந்தான். தனியாகப் பேசலாம். ஸ்டீபன் முதுகைத் திருப்பி மேலே பார்த்தான். பிய்ந்து போன இடங்களின் ஒட்டவைத்தவற்றை அவன் கண்கள் பார்க்கவில்லை. அவனின் மனதில், இஹாங் நதியின் பக்கத்திலான மலைகளின் இடையில் சானாகைதில் கிராமத்தினை பார்க்க ஆரம்பித்தான். குக்கி கிராமம், பாசாங், வெகு தூரத்தில் இல்லை.சாமா கெய்திலின்  சிறிய சந்தையில்  பஸாங் கிராமத்தினர் அவர்களின் பொருட்களை விற்பர். அங்கிருந்து வாங்குவதும் விற்பதும் செய்வர். இஹாங் நதிக்கரையில் உள்ள அகலமான வயல்வெளிகள் இரண்டு கிராமத்தினருக்கும் சொந்தமானவை. இருவரும் நெல்லை ஒன்றாக பயிரிடுவர். இருவரும் ஒன்றாக ஆற்றில் மீன் பிடிப்பர். இப்போது? இப்போது என்ன நடந்தது. அவர்களின் கிராமங்களை காப்பாற்ற ஆயுதங்களை ஏந்துகிறார்கள். கிராமங்களில் தனியே வெளியே வர பயப்படுகிறார்கள். ஸ்டீபன் திடீரென நீளமான பெருமூச்சுவிட்டான்.
     ஸ்டீபன் சானா கைத் தேயின் சாங்குப் போவ் வழக்கமாக கறி விற்பான். ஸ்டீபன் அவனின் மூத்த சகோதரனுடன் நட்பாக இருப்பதால் சாங்கு போவ் திரும்புவதற்கு முன்னால் அடிக்கடி நல்ல கறியை ஸ்டீபனுக்கு கொடுப்பான். அவ்வப்போது அதை  தின்று அவன் சானகெய் தேனப்பில் இரவு தங்குவான். தாங்குல் இளைஞர்கள் பெரும்பாலும் அவன் நண்பர்கள். சேர்ந்து உட்கார்ந்திருந்த ஒரு மாலையில் ஸ்டீபம் சாங்குபோவிடம்,
      ” “சாங்கு போவ், அவர்கள் நமது ஆற்றில் ஒரு அணை அட்டுகிறார்கள் என கேள்விப்பட்டேன். கிராமங்களிலிருந்து சொவ்கிதார், கலாசி வேலைகளுக்கு ஆட்களை எடுக்கப் போகிறார்கள். நீ ஏன் சேர்ந்து கொள்ளக் கூடாதுஎன்றான்.
     சாங்குபோவ் உடனே பதிலளித்தான்,நான் போக விரும்பவில்லை. அரசாங்க வேலையை சமாளிக்க என்னால் முடியாது. படிப்பறிவில்லாத என்னைப் போன்ற ஒருவனால் என்ன செய்ய முடியும்? அதற்கு பதிலாக காட்டில் மிருகங்களை வேட்டையாடுவேன், ஆற்றில் மீன் பிடிப்பேன், மரங்களை வெட்டுவேன். ’’
     ’’ சரி, பரவாயில்லை. கறி விற்பனையை தொடர். அதன் ரத்தத்தில் உன் உடல்  ஊறியபடி’.
ஸ்டீபனும் சிரித்தபடியே உடனே பதிலளித்தான்.
      ‘கண்டிப்பாக. நான் கிராமத்திலேயே இருந்து விடுவேன். கொஞ்ச காலத்திற்கு பிறகு, அவர்கள் என்னை இம்பாலில் தங்கிவிட கேட்பார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை.’ ‘
      நிலவொளியில் உட்கார்ந்து இருவரும் சிரித்தார்கள். உக்ருலின் மலை மடுவுகள், சிறிய கிராம வீடுகள், கால்நடை மேய்ச்சல் புல் பகுதிகள் அங்கும் இங்கும் ஆகியவை நிலவொளியில் தெளிவாகத் தெரிந்தன. சர்ச்சிலிருந்து வேதவாக்குகள் கேட்டன. முதலில் குரல்கள் பலத்து இருக்கவில்லை. பிறகு அவை வளர்ந்தன. பள்ளத்தாக்குகளில் அவை எதிரொலித்தன. பாடல்களை நுணுக்கமாகக் கேட்க முடிந்தது.
      “ சர்ச் பூசையில் கலந்து கொள்ளலாம்
சாங்குபெள கேட்டபின் உடனேநீ போவதானால் போஎன்றான்.
      “ ஆமாம். மிருகங்களக் கொல்கிற என் பாவம் கழுவப்படட்டும். சரி. டங்குவில் மொழியிலும் நான் பாடுவேன்.
     ஸ்டீபன் நினைத்துப் பார்த்தான். கிராம சர்ச்சில் எப்படி சாங்குபெள வழக்கமாக இதயத்திலிருந்து வருகிற மாதிரி ஸ்லோகங்களைப் பாட பழகியிருக்கிறான் என்பதை. இயல்பாக சில சொட்டு கண்ணீர் ஸ்டீபனின் கண்களிலிருந்து விழுந்தது. அவற்றை அவன் துடைத்துக் கொள்ளவில்லை.
     இரவு எவ்வளவு அமைதியாக இருக்கிறது. இதுவரைக்கும் அவன் மனதில் வளர்ந்த பயம். இப்போது மெல்ல வடிவதாகவிருந்தது. லிங்க்பெள குறட்டை விடுவதைக் கேட்டான். மேலே வெறித்திருந்த அவன் கண்கள் மெல்ல மூடின.
      “ விடிவதற்க்கு இன்னும் எத்தனை நேரமிருக்கிறது.
     நேற்று காலையிலிருந்து லிங்க்பெளவின் உதடுகளிலிருந்து வந்து அவன் கேட்ட முதல் ஒலி அது. ஸ்டீபன் திடுமென  எழுந்தான். வெளியே பார்த்து படுக்கையின் அருகிலிருந்த ஜன்னலைத் திறந்தான். இன்னும் வெளியில் இருட்டாக இருந்தது. பக்கமிருந்த லாம்பெல் வறண்ட நில அலுவலகங்கள், மரங்கள் மற்றும் மூங்கில்கள் ஆகியவை இருளில் மூழ்கியிருந்தன. ஜன்னலை மூடினான்.
      “கொஞ்சநேரம் போனது. தூங்க முடியவில்லை.
      “ எனக்கு மட்டும் ?
 இந்த இரு வார்த்தைகளை மட்டும் சொல்ல, அவனின் இதயம் உணர்வுகளால் தத்தளித்தது.
      “ இன்று அப்புறம் கிராமத்திற்கு செல்கிறாயா?
கொஞ்ச நேரம் மெளனமாக இருந்துவிட்டு ஸ்டீபன் கேட்டான்.
      “ எனக்குத் தெரியவில்லை. பாதுகாப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை”.
ராணுவ பாதுகாப்பு இல்லாமல் இம்பாலிலிருந்து அந்த கிராமத்திற்கு நீண்ட நாட்களாக பேருந்துகள் செல்வதில்லை.
      “ நேற்று பாதுகாப்பு தந்தார்கள் . இல்லையா
     இல்லை. இன்று எப்படியும் அங்கு போவது பற்றி யோசிக்கிறேன். சாங்க்பவை சந்திக்க வேண்டும். என் மைத்துனி, மருமகள் ஆகியோரை புதைப்பிற்கு முன் பார்க்க வேண்டும். நாளை பிணங்களைப் புதைக்கிறார்கள்
     அவன் தொடரவில்லை. எழுந்து மூலையிலிருந்த விளக்குமாரை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியில் சென்றான். பின் கதவை மூடினான். பக்கத்து அறைகளில் பூட்டுகள் போடப்படும் சப்தம் கேட்டது. மீண்டும் கண்களை மூடிய ஸ்டீபன்   தூங்க முயற்சித்தான். எழுந்து சுவற்றில் சாய்ந்து தெரியுமாறு வைத்திருந்த கத்தியை படுக்கைக்கு அடியில் இருந்து எடுத்தான். மின்சார ஓளியில் அது பிரகாசமாக மின்னுவதாகத் தோன்றியது. இரவில் முடியாமல் போல தூக்கத்தைத் தூங்கும் முயற்சியில் அவன் கண்களை மூடினான்.

-   மணிப்பூரியிலிருந்து மொழிபெயர்ப்பு – ராபின். எஸ். நக்னகோம். 





    மீள் பதிவு : பங்களா தேஸ் பயணம்: சுப்ரபாரதிமணியன் ( திருப்பூர்)
==============================================================

    திருப்பூர்   சாயப்பட்டறைப் பிரச்சினைக்குப் பின்  சற்றே நிலை குலைந்து போயிருக்கிறது. சாய்ப்பட்டறை பிரச்சினை தீராததால் , திருப்பூருக்கு வரும் ஆர்டர்கள் வங்கதேசம், சீனா, கொரியாவிற்குச் சென்று கொண்டிருக்கின்றது. வங்கதேசத்தில் கூலியும், செலவும் குறைவு.  திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது.  திருப்பூர். 50 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சி அங்கு 5 ஆண்டுகளில்நடந்திருக்கிறது.. வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.
தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், சேவ் தன்னார்வத்தொண்டு நிறுவன  இயக்குனர் அலோசியஸ் உட்பட்டோர் அதில் இருந்தனர்.
   வங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம் தரும் அபரிமிதமான  சலுகைகள், தொழிலாளர்களின் கடுமையான  உழைப்பு, ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த உழைப்புக்கூலியும்  பின்னலாடை ஏற்றுமதிக்கு  துணையாக இருக்கின்றன. நிதி உதவி, வரிச்சலுகையும் கூட,  டாக்காவின் 5000 பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 80 சதம் பெண்கள்.
      டாக்காவின் பிரபலமான  இந்துக்களின் கோவில்  டாக்கீஸ்வரியம்மன் கோவில்.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து  அந்த அம்மன் பெயர் அப்படி வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல்  ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப்போரில்  பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு  இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது.அது.  அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. கோவிலின் முக்கிய இடங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும்  ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.
தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த  ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது.  11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால்  கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு  டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன.     ஈஸ்வரி அம்மன்  கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உள்ளதாம்..
     டாக்காவிலிருந்து 29கி.மீ தொலைவிஇ இருக்கிறது பழைய பானம் நகர்.      பானம் நகரம் 13ம் நூற்றாண்டு  வரை  இந்துக்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன் பின் முகலாயரின் ஆட்சிக்கு வந்த பின் நிகழ்ந்த வியாபாரப் பரிமாற்றங்கள் அதைத் தலைநகராக்கியிருக்கிறது.துணிகளுக்குப்
பெயர் பெற்ற நகரமாகியிருக்கிறது. இப்போது கூட அங்கு செல்லும் யாத்திரிகர்களை வழிகாட்டிகள் துணிக்கடைக்குத்தான் அதிகம் கூட்டிச்  செல்கிறார்கள்.வங்கதேசத்த்ன் நாராயண கஞ்ச் மாவட்ட்த்தில் சிட்டகாங்க் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. இங்கு வசித்து வந்த இந்துக்கள் 1965ல் இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்தின்  போது  இந்தியாவிற்குச் சென்று விட்டதால்    வேறு யாரும் குடியேறாமல் பிரமாண்டமான 50க்கும் மேற்பட்டக் கட்டிடங்கள் அவற்றின் 500 வருட பாரம்பரியத்தையும், பழமையையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்து  போய்  சிதிலங்களாக நிற்கின்றன. பழம் மசூதியொன்றும், நாட்டுப்புறவியல் அம்சங்கள் கொண்ட கண்காட்சியும் ,  நடந்து சென்று இளைப்பாறக்கூடிய  தோட்டங்களும் முக்கியமானவை.            டாக்காவின் வாகன நெரிசலுக்குக் காரணமாக  பலவற்றைச் சொல்லலாம்.ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதான  சாலையின் “ பேபி டாக்ஸிஎன்ப்படும் இரட்டை என்ஜின்  குட்டி வாகனங்கள்.iஇவை தரும்  புழுதியும் அபரிதமானது. ஒரு பேபி  டாக்ஸி  30 சாதாரணக் கார்களுக்குச் சமம்.  அவ்வளவு சுற்றுசூழல்  சிரமம் தருபவை.  அவற்றை மாற்றும் திட்ட்த்தில் பச்சை டாக்ஸிகள் சூற்றுச்சூழல் கேடற்றவை என்று சிலதை அரசும் வீதிகளில் ஓட விட்டிருக்கிறது. கால்களில் மிதித்துச் செல்லும்  ஏழு லட்சம் ரிக்சாக்கள் நகரில் ஓடுகின்றன. இவற்றில் அய்ம்பது சதவீத்த்திற்கு மேற்பட்டவை அனுமதி பெறாதவை. இவை பெரும்பாலும் ஆண்களால் ஓட்டப்படுபவை.
    டாக்கா மருத்துவக் கல்லூரி அதன் கல்வித்தரத்திற்கும், மாணவர்களின் போராட்ட்த்திற்கும் பெயர் பெற்றதாகும் . ரபிந்திரநாத் தாகூரின் சிலையும் காணப்படுகிறது.
ì£‚è£ ñ¼ˆ¶õ‚ è™ÖK  Ü¼A™ ܬñ‚èŠð†®¼‚Aø ªñ£N G¬ù¾„C¡ù‹ ðôº¬ø ÜN‚èŠð†´ è†ìŠð†ì‹. ²î‰FóˆFŸ°Š Hø° Aö‚° ð£Avî£ù£è ñô˜‰îF™ ༶ «îCò ªñ£Nò£è ÜPM‚èŠð†ì¶ 21 HŠóõK, 1952™ ì£‚è£ ð™è¬ô‚èöè ñ£íõ˜èœ ïìˆFò ªî£ì£‰î «ð£ó£†ìˆF™ õƒè£÷ ªñ£N‚° 1956™ ܃Wè£ó‹ A¬ìˆî¶.  2000‹ ݇®Ÿ°Š Hø° »ùv«è£ 21 HŠóõK¬ò àôè ªñ£N Fùñ£è ÜPMˆî¶.          
            1948™ Þ¶ °Pˆ¶ ªð¼‹ «ð£ó£†ì‹ G蛉F¼‚Aø¶. ì£‚è£ ð™è¬ô‚èöè ñ£íõ˜èœ ïìˆFò «ð£ó£†ìƒèœ ì£‚è£ ïè¬ó G¬ô°¬ôò ¬õˆî¶. ÜóH ⿈¶ õ®M™ õƒè£÷ ªñ£N¬ò Üóê£ƒè ªñ£Nò£èŠ ðò¡ð´ˆî Üó² ºò¡ø¶. ÜóCŸ° âFó£ù ñ£íõ˜èO¡ «ð£ó£†ìˆî£™ î¬ì àˆîó¾èÀ‹, «ð£hv ¶Šð£‚A„ Å´‹ G蛉îù. ªð£¶ñ‚èÀ‹ Üó² áNò˜èÀ‹ «ð£ó£†ìˆF™ ðƒ° ªðŸÁ ܽõôèƒè¬÷Š ¹ø‚èEˆîù˜. ÜF™ Þø‰îõ˜èÀ‚° G¬ùõ£è ªñ£NŠ«ð£˜ G¬ùM숬î 23 HŠóõKJ™ è†ì Ýó‹Hˆ¶ Ü´ˆî ÷ º®ˆîù˜. Ýù£™ 26‹ «îF Üó꣙ ܶ Þ®‚èŠð†ì¶. 1954ìô ï¬ìªðŸø «ð£ó£†ì‹ ê†ì Y˜F¼ˆîˆ¬î‚ ªè£‡´ õ‰î¶. Þó‡ì£õ¶ ݆C ªñ£Nò£è õƒè£÷ªñ£N ãŸÁ‚ªè£œ÷Šð†ì¶. ªñ£NŠ«ð£˜ G¬ùMì‹ Ü¬ó õ†ìõ®M™ à¼õI™ô£îî£è ܬñ‚èŠð†´, àJKö‰î ñè¬ù ã‰F‚ªè£‡®¼‚Aø î£J¡ à¼õ‚ °Pf†¬ì‚ ªè£‡®¼‰î¶. 1958™ ãŸð†ì ó£µõ ݆CJ¡ «ð£¶ G¬ùMì‹ ÜN‚èŠð†ì¶. 1963™ ñ£íõ˜èœ e‡´‹ Ü¬î‚ è†®ˆ Fø‰î£˜èœ. 1971™ Þ‰Fò£ 制¬öˆ¶ ï¬ìªðŸø M´î¬ôŠ «ð£K¡«ð£¶ ð£Av ó£µõ‹ ܬî î¬óñ†ìñ£‚Aù˜. 1973™ eí´‹ G¬ù¾„C¡ù‹ è†ìŠð†ì¶. ªð˜Cò Üó£Hò‚ èô£„êê£óõ£FèÀ‹, ºvh‹ Ü®Šð¬ìõ£FèÀ‹ ༶ ñ†´‹î£¡ â¡ø G¬ôŠð£†®™ Þ¼‰î¶‹, ªñ£N G¬ù¾„ C¡ù‹ ðôº¬ø Þ®‚èŠð†ì¶‹, «ð£ó£†ìƒè¬÷ âF˜ªè£‡ì¶‹ ïì‰î¶. இதைப் பார்க்கும் போது தமிழகத்தில் காணப்பட்ட மொழிப்போர் தியாகிகள் சிலைகள் ஞாபகம் வந்தது. திருப்பூரில் சென்ற ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்காக ஒரு நினைவுச் சின்னம் நகரின் மத்திய பகுதியில் டவுன் ஹால் எதிரில் அமைக்கப்பட்டிருப்பது ஞாபகம் வந்தது.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641602 (9486101003 )
   


புதன், 30 டிசம்பர், 2015


மற்றும் சிலர் : நாவல்   மறுபதிப்பு வெளிவந்துள்ளது

(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )

மற்றும் சிலர் :  ஜெயந்தன்
மற்றும் சிலர் “  படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களுக்கு  இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின்   அனுபவங்களையும்  தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே  நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )

(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )



மற்றும் சிலர் : நாவல்  ஜெயமோகன்

நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம்  உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது  தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது  நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில்  ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும்.  இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன.  ஆற்றூர் ரவிவர்மாசார் நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி.  எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்  அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே.  சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87 

(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )



மற்றும் சிலர் : நாவல் :  நகுலன்

சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக   நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.
இந்த  நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்ஒன்று.
(மற்றும் சிலர் :  டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )

( டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )










நம்மாழ்வார் நினைவு தினம்  இன்று டிச.31 
காலம் தந்த வேளாண் போராளி
எனதுசாயத்திரைநாவலின் ( திருப்பூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய நாவல்). ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்குச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு நம்மாழ்வார் அய்யாவும் வந்திருந்தார் ( ‘தி கலர்டு கர்டெய்ன்என்றத் தலைப்பில் அது ஆங்கிலத்தில் டாக்டர் ராஜ்ஜா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது). அந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோவை கூட்டமொன்றில் அவரைச் சந்தி்த்த போது அது கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்திருப்பதை அறிந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “நீங்கள் சாயத்திரை நாவலில் எழும்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன. தீர்வுகள் கிடைத்தபாடில்லைஎன்றார்.
     தீர்வு, மாற்றம் குறித்து அக்கறை கொண்டால் அந்த மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக அவர் இருந்தார். ரசாயன உரங்கள் பற்றிய பிரச்சாரம், பசுமைப் புரட்சி போன்றவற்றை தன் அரசு தொழில் சார்ந்து இயங்குதலில் முரண்பாடு கொண்டு அரசு பதவியிலிருந்து வெளியேறியவர் நம்மாழ்வார். அதன் பின் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரிந்தாலும் சுதந்திரமானப் போக்கையே மனதில் கொண்டு மனதில் கொண்டு செயல்பட்டவர்.
     இந்திய வேளாண்மை முறையில் அதிகம் பேசப்பட்டபசுமை புரட்சிஏற்படுத்திய மோசமான விளைவுகள், ரசாயனம் சார்ந்த உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் பொதுவுடைமை இயக்க வட்டாரங்களுக்கு  வெளியில்தான் பெருமளவில் நடந்தன. என்சாயத்திரைநாவல் பற்றி பொதுவுடைமை சார்ந்த எழுத்தாளர் ஒருவர் திருப்பூர் கூட்டமொன்றில் தன் கட்சி சார்ந்த இலக்கிய பிரிவின் விவாதத்தில் எடுத்துக் கொண்டுசாயத்திரைநாவல் பற்றிய மையத்தை பொதுவுடைமை  கட்சி சார்ந்த உள்ளூர் எழுத்தாளர்கள் அதற்கு முன் நாவல் என்ற அளவில் கைக் கொள்ளாததும்,அந்த நாவல் வந்த பின் அதை முன் எடுத்துப் பேசாததும் குறித்து விவாதத்தை எழுப்பியிருக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பெரிதுபடுத்தி 10,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும்,  தொழிலாளர் நலத்தையும் புறக்கணித்து முன் செல்ல முடியாது என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது. இது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சனைகளின் மீதான் பொதுவுடைமை இயக்கவாதிகளின் முன்னெடுப்புகள் இருந்தன. இந்தச் சூழலில்தான் மண்மீதும், இயற்கை வேளாண்மையை முன் வைத்தும் நம்மாழ்வார் தனது செயல்பாடுகளயும், பரப்புரைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். கிராம் அனுபவங்களும், கிராமந்தோறும் சென்று நுண்ணறிவால் சேகரித்துக் கொண்டதையும் உலக அளவில பேசப்பட்ட ஜப்பானிய புகோகோவின் ஒற்றை ஐக்கோல் புரட்சி நூலும், ரேச்சல் கார்சனின்மெளன வசந்தம் “ நூலும் அவரை முன்னெடுத்திச் செல்ல பயன்பட்டன. மரபணு மாற்றப்பயிர்கள் இந்தியாவில் வேகமாகப் புக ஆரம்பித்தபோது, தமிழகத்தில் பலரையும் முன் நிறுத்திக் கொண்டு அதைஎதிர்த்துப் போராடினார். இந்திய மக்களை பலிகடாவாக்கும் மரபணு தொழில்நுட்பம் பற்றிய பரப்புரைகளின் மூலம் பசுமை இயக்கங்களை ஒன்றிணைத்து அது பற்றிய எதிர்ப்பை சரியாகவே வெளிப்படுத்தி வெற்றி கண்டார். இயற்கை வேளாண்மை சார்ந்த பாதுகாப்பையும், சத்துணவு அவசியமும், சுத்தமான குடிநீர் உரிமை என்பதையும் வலியுறுத்தி சக மனிதனின் விடுதலை குறித்த முன்னெடுப்புகளாக அவரின் போராட்ட இயங்கு முறை இருந்தது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் முறைகளுக்கு எதிராக கடைசி காலத்தில் போராடி அங்கேயே மரணமடைந்தார். ஆயிரக் கணக்கான இளைஞர்களின் நல்லாசிரியராக இருந்து இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பாய்  முன் நின்ற போராளியாக விளங்கினார்.
     ஹைதராபாத்தில் நான் வசித்து வந்த போது கத்தாரின் நடமாட்டம் அதிகம் இருந்த செகந்திராபத் பகுதியில் அவரின் உடம்பு மீதான துப்பட்டா துப்பாக்கியைப் போல செயல்பட்டதை அறிந்திருக்கிறேன். அதே போல் தலையில் முண்டாசாகக் கட்டி கொள்ளும் வெள்ளை துண்டும், பசுமை வாழ்வை முன்னிருத்தும் பச்சை நிற சால்வையும், பற்றற்ற வாழ்க்கையின் குறியீடான காவி வேட்டியும் அவரை இயற்கை காப்புப் போராளியாக வெளிக்காட்டியிருக்கிறது.

     அவரை உசுப்பிய விடுகதை ஒன்றை பல மேடைகளில் சொல்லுவார்: “பழமாகி காயாவது எது? காயாகிப் பூவாவது எதுஅவர் பழமாகவும், காயாகவும், நெஞ்சில் நிறைந்த அற்புத மலராகவும் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க பல ஆயிரம் இளைஞர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் கண்கூடாகும். அவர் 2013 டிசம்பர் கடைசி நாளில் மறைந்து நம்மை வெகுவாக பாதித்து விடைபெற்று விட்டார்.