சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 ஜூலை, 2022

கொரானா தடுப்பூசி சிறுவர்களுக்குப் பிடித்தமான தடுப்பூசியிது...சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நாவல் பற்றி - மு.முருகேஷ் குழந்தைகளின் மனவுலகம் கதைகளால் ஆனது. கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் குழந்தைகளின் கதையுலகைக் கட்டமைக்கின்றன. முதலில் கேள்விகளிலிருந்தே எதையும் கேட்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள். தன்னருகே இருக்கும் சக உயிரிடம் (அது மனிதராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை) பேசுவதென்றால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலென்ன... கையில் வைத்திருக்கும் பர்பி பொம்மையொன்று போதும், குழந்தைகள் பேசுவதற்கு. யாருமில்லா சூழலிலும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளால் முடியும். பல நேரங்களில் அவர்களுக்குப் பதில்கள்கூட தேவையில்லை. அவர்கள் பேசுவதை யாராவது கேட்டுக் கொண்டிருந்தால்கூடப் போதும். எதுவும் பேசாமல் வெறுமனே ‘சும்மா’ உட்கார்ந்திருக்க குழந்தைகள் ஒன்றும் பொம்மைகள் அல்லவே! குழந்தைகள் பேசுகிறார்கள் என்றால் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தம். கேள்விகள் கேட்கிறார்கள் என்றால் கற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள். எந்தக் குழந்தைக்கும் யாரும் தாய்மொழியைப் பேசுவதற்கு கற்றுத் தருவதேயில்லை. நாம் பேசுவதைக் கவனிக்கும் குழந்தை, அதுவாகவே பேசக் கற்றுக்கொள்கிறது. தட்டுத் தடுமாறி குழந்தைகள் பேசப் பேச, ஒவ்வொரு நாளும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். எப்போதும் கற்றுக்கொள்வதில் குழந்தைகள் பெரியவர்களை விடவும் வேகமானவர்கள், ஆர்வமானவர்கள். நாம் தான் வளர வளர கற்றுக்கொள்வதிலிருந்து மெல்ல விலகி விடுகின்றோம். ‘நாம் வளர்ந்தவர்கள், நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலை கற்றுக்கொள்வதற்குப் பெரும் தடையாக இருந்து விடுகிறது. குழந்தைகள் இருக்குமிடத்தில் குதூகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆடுவதும், ஓடுவதும், குதிப்பதும், பேசுவதும், கேட்பதும் குழந்தைகளுக்கே உரித்தான இயல்பான செயல்பாடுகள். ஒரே இடத்தில் உட்கார்ந்தேயிருக்கும் குழந்தைகள் ‘சவலைப்பிள்ளை’களாகி விடுவார்கள். கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தெழும் குழந்தைகளே, அடுத்த முறை அந்தப் பள்ளத்தில் விழாதிருக்க கற்றுக் கொள்கிறார்கள். ‘இடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள் விழுந்து எழட்டும்... குழந்தைகள்’ - என்றெழுதிய கவிஞனை நிச்சயம் குழந்தைகள் கொண்டாடவே செய்வார்கள். “ஏம்பா, இந்தக் குருவிகளெல்லாம் எங்கேயிருந்து வந்துச்சு..?” “ஏம்மா, நெருப்பைத் தொட்டா சுடுது..?” “தூங்கும்போது மட்டும் ஏன் காது கேட்க மாட்டேங்கிது..?” என்று குழந்தைகள் கேட்கும் பல கோடி கேள்விகளுக்கு நமக்குப் பதிலே தெரியாது. ஆனாலும் சாமர்த்தியமாய், “சும்மா தொண தொணன்னு பேசாம, அமைதியா கவனி..!” என்று குழந்தைகளின் வாயை அடக்கி விடுகின்றோம். குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக நாம் அனுப்பும் பள்ளிக்கூடங்களும்கூட இதையே தான் சொல்கின்றன. “கையைக் கட்டு; வாயைப் பொத்து..!” தன்போக்கில் இயல்பாய், வெகு சுதந்திரமாய்ப் பேசிக் கொண்டிருந்த குழந்தை, பள்ளியில் சேர்த்த சில தினங்களிலேயே வாய் மூடி மெளனியாவதை எந்த எதிர்விளைவுமின்றிச் சகித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை என்ன செய்வது..? குழந்தைகளோடு உரையாடவும், குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வரவும் நமக்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் குறுக்கீடின்றிக் கேட்பதற்கு பெரிய காதுகளும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை மனம் வேண்டும். குழந்தைகளோடு பேசவும், பழகவும், குழந்தைகளுக்கென்று எழுதவும் குழந்தை மனம் வாய்க்க வேண்டும். அவ்வாறான மனம் படைத்த மனிதர்களாலேயே குழந்தை இலக்கியங்களைப் படைக்க முடியும். நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே, 1847-ஆம் ஆண்டு வங்க எழுத்தாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி’ எனும் நூலே குழந்தைகளுக்கான முதல் இந்திய படைப்பென அறியப்பட்டுள்ளது. இவர் குழந்தைகளுக்கென பல கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தந்துள்ளார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கென்று எழுதியிருக்கிறார்கள். ‘போரும் அமைதியும்’ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், குழந்தைகளுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ளார். நம் நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய இரவீந்திர நாத் தாகூர், மகாகவி பாரதியார் என பலரும் குழந்தைகளுக்காகவும் எழுதி இருக்கின்றனர். ’குழந்தைக் கவிஞர்’ என அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பாவால் 1950-இல் தொடங்கப்பட்ட ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’, குழந்தை இலக்கியப் படைப்புகள் மிகுதியாக வெளிவர வழி வகுத்தது. ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி, சிறந்த சிறுவர் பாடல்கள், கதைகள், நாவல்கள், நாடகங்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தது. கையெழுத்துப் படிகளைப் பெற்று, நூல்களாக்கி வெளியிட்டது. ஆர்.வி என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் சிறார்களுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பா, பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தமிழ்வாணன், பூவண்ணன், கொ.மா.கோதண்டம், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம். ஆயிஷா இரா.நடராஜன் எனப் பலரும் சிறுவர்களுக்கான காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது போதிய அளவில் எழுதப்படவில்லை என்பதே சமூக எதார்த்தமாக உள்ளது. சிறுவர்களுக்கென்றே வெளியான இதழ்கள் பலவும் நின்றுவிட்ட காலமிது. சிறுவர்களுக்கு எழுதுவதென்பது, தன்னைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் என்கிற எண்ணமும் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்தாளர்களின் மனதில் உறைந்துபோய் கிடக்கிறது. இந்தச் சூழலிலிருந்து மீண்டு, சிறுவர் இலக்கியங்களைப் படைத்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத் தளத்தில் தனது காத்திரமான பங்களிப்பினைத் தொடர்ந்து ஆற்றி வருபவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைப்படம் என பல விரிந்த தளத்தில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியப் படைப்புகளையும் ஆர்வத்தோடு எழுதி வருகிறார். இவர் எழுதிய ‘சாயத்திரை’ நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றதோடு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த கதைகளுக்கு வழங்கப்படும் ‘கதா விருதினை’யும் பெற்றுள்ளார். எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் செயல்படும் ஆர்வமிக்க சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார். திருப்பூரிலுள்ள குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புப் பணியிலும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பதிலும், நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். எழுபதுக்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ எனும் இலக்கிய இதழையும் 35 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். எய்டு-இந்தியா குழந்தைகளுக்காக வெளியிட்ட சிறு நூல்களில் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பள்ளி மறுதிறப்பு’ எனும் கதை நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. சமீபத்தில் சாகித்திய அகாதெமிக்காக நான் தொகுத்த ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ தொகுப்பில், இந்தக் கதையின் நாடக வடிவத்தைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன். சமூக அக்கறையும், சமூக அநீதிகளுக்கு எதிரான கோபமும் சேர்ந்த கலவையே சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரும் ஊரடங்கினால் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடந்தோம். கோவிட் - 19 வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவம் பல்லாயிரம் உயிர்களைச் சூறையாடிச் சென்றுள்ளது. தற்போதுதான் ஊரடங்கிலிருந்து ஒவ்வொன்றாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலச்சூழலை அப்படியே நம் மனதில் நிறுத்தும் வண்ணமாக ;கொரோனா தடுப்பூசி’ எனும் சிறார்களுக்கான நாவலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். இந்த நாவலை கையிலெடுத்தால் போதும்; கடகடவென எழுத்தோட்டம் நம்மைத் தள்ளிக்கொண்டு போகிறது... தெளிந்த நீரோடையாக. சிறுவர்களுக்கே பிடித்த முழுக்க முழுக்க உரையாடல் போக்கிலான இந்த நாவலில் எல்லாவற்றையும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்... இல்லையில்லை... இந்த நாவலில் வரும் குழந்தைகள். பேசிக்கொண்டேயிருப்பதால் இந்த உயிர்ப்பான குழந்தைகள் நமக்கும் பிடித்துப் போகிறார்கள். “மாடியிலே போய் கைத்தட்டுறாங்க. மாடி இல்லாதவங்க என்ன செய்வாங்க..?” என்கிற அர்த்தம் செறிந்த கேள்விகளோடு தொடங்கும் நாவலில் வரும் புகழ், செல்வி, மீரான், பால், ஆர்த்தி, நிர்மலா என எல்லாக் குழந்தைகளும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல நம் மனசுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நிஜமான கதாபாத்திரமான திருப்பூர் பாண்டியன் நகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் கிரிஜா அக்காவும் வருகிறார். குழந்தைகளின் கற்றலுக்குத் தடைகள் இல்லாத போது, அவர்கள் தங்களை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாவலின் எல்லா இடங்களிலும் நடைபெறுகிற உரையாடல்கள் வழி உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். முகக்கவசம் போடணும், ஏ.சி.யினால் வைரஸ் தொற்று சீக்கிரமாகப் பரவும், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும், ஊரடங்கினால் இயற்கைச் சீரழிவு குறைந்துபோனது, மாடித் தோட்டத்தின் பயன்கள், பாம்பு சட்டையுரித்தல், மத நல்லிணக்கம் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டைச் சொடுக்குகளும் சரியான இடத்தில் கையாளப்பட்டுள்ளன. கரோனாவின் துயரம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் துயருறும் மக்களுக்காக எந்தப் பயனளிக்கும் திட்டங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. பெருமுதலாளிகளின் கல்லாக்களை நிரப்புவது பற்றியே கவலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். 2020 ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் தலா 2 விலையில்லா முகக் கவசங்களை வழங்குவதாக முடிவெடுத்தது தமிழக அரசு. முதல்கட்டமாக, ஜூலை-27-ஆம் தேதி தமிழக முதல்வர் விலையில்லா முகக் கவசங்களை வழங்கி, இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை (அக்டோபர்-1) இன்னும் பல கோடி பேர்களுக்கு விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படவில்லை. இவர்கள் வழங்குவதற்குள் கரோனாவே விடைபெற்றுச் சென்றுவிடும் போலும். இதைப் பற்றிய கேள்வியும் இந்த நாவலினூடே எழுப்பப்பட்டுள்ளது. எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரியும் உரையாடல், ‘அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்துடன் முடிகிறது. இந்த நேரத்தில், கரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் வீட்டில் இல்லாமல், குழந்தைகளுக்கான கல்விப் பணியை வீடு தேடிச்சென்று செய்த பல நூறு ஆசிரியர்களின் அக்கறையான கல்விப் பணியை நெகிழ்ச்சியோடு நினைவுகூற வைக்கிறது. ’கொரானா தடுப்பூசி’ சிறுவர் நாவல், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தடுப்பூசி. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; மூட நம்பிக்கைகள் சமூகத் தொற்றாகப் பரவாமலிருக்க நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையறிந்த தடுப்பூசி. வாருங்கள்... நாம் அனைவருமே வாசிக்கலாம். சிறப்பானதொரு சிறுவர் நாவலைத் தந்திருக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு என் அன்பின் தோழமை கனிந்த வாழ்த்துகள். இன்னும் இன்னுமாய் சிறுவர் இலக்கியங்களைப் படையுங்கள். தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கு உங்கள் எழுத்துகளும் படிக்கட்டுகளாக அமையட்டும். 1.10.2020 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மு.முருகேஷ் முதுநிலை உதவி ஆசிரியர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், 124, வாலாசா சாலை, சென்னை – 600 002. செல் : 94443 60421 / 74013 29364 மின்னஞ்சல் : haiku.mumu@gmail.com 0
சுப்ரபாரதிமணியனின் ” கடவுச்சீட்டு “. மலேசியப்பின்னணி நாவல்: பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது. ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. அந்தப்பெண் இங்கு வருவதற்கு முன்பே பெண் பார்க்க்கும் படலத்தின் போதே இந்நாட்டைப்பற்றி வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். இங்கு தமிழர்கள் எவ்விதம் இருகிறார்கள். கோவிலகள் உண்டா . முஸ்லீம் நாடென்றால் சட்டதிட்டங்கள் கடுபிடியா. மதுப்பழக்கம் ஆண்களிடம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இங்கு வந்த பின்பு அவள் கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். இந்த நாட்டு நடைமுறையில் இருக்கும் சுகாதாரமும், மருத்துவமனைகளில் இல்லாத லஞ்சம் போன்றவை அவளை மகிழ்விக்கின்றன.ஆனால் அவளின் வாழ்க்கை யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் என்பார்கள் இங்கு இனிப்பு நீர் வியாதி என்கிறோம். இது போன்ற சிறுசிறு விசயங்களையும் கவனமாகக்குறிப்பிட்டிருக்கிறார். லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை இவரின் எழுத்துப் பார்வையில் படாதவர்கள் இல்லை. மஜாஜ் சமாச்சாரம் முதல் மலேசியா பற்றிய பல விபரங்களை இந்நாவலில் கொட்டி விட வேண்டும் என்ற ஆவல் இதில் தென்படுகிறது .அவற்றை பலஇடங்களில் விபரங்களாகவும் சில இடங்களில் உரைநடைமூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.தோட்டப்புறத்தில் பங்களாதேஷ்காரர்கள், இந்தோனிசியாக்காரர்கள் அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகியும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை இதில் பதிவாகியிருக்கின்றன. தமிழ் இளைஞர்களின் வன்முறைக்கலாச்சாரத்தில் கட்டை, சரக்கு போன்றவை ஆக்கிரமித்திருப்பதைச் சொல்கிறார். சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனிசியப்புகையால் பாதிப்பு போன்றவையும் தப்பவில்லை. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் போது மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக இருக்கும் போது உணவு விடுதிகளை அதிகம் நாடாததையும் சொல்கிறார். இலக்கியம் வேதனையை , சோதனையை மட்டுமா சொல்லவேண்டும் என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும் முக்கியப் படைப்பு என்ற வகையில் சிறப்பு பெறுகிறது - பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்
ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் : பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன. சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது. அதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல் போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்படுவதும், சமூக விடயங்களை நாடகப்படைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது. கணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வேலையாலும் தொடர்வது புதிய சமூக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பையா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேருவது கூட அவ்வகையில் சிறு வெளிச்சம் தான். இழிவாக கருதப்படும் சோதிடம் பார்க்கும் சாதி . ஆனால் பண மதிப்பால் உயர்வதும் காட்டப்படுவது இன்னொரு கோணம்..அமலா என்ற் பூக்காரி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக்கல்வியில் ஈடுபடுவது ஆங்கிலமோகம் பற்றியதை சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிரான செயல்களில் ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளைக்கொண்டாடுவதும் சிறந்த சித்தரிப்புகள். . முதல் அத்யாயத்தில் மர நாற்காலியும் பிளாஸ்டிக் நாற்காலியுமான தீச்சம்பவமே அதிர்ச்சி தரகூடியது. சாதி சார்ந்த வன்முறையைச் சொல்லிப்போகிறது.இயற்கை விவசாயம், தமிழ்க்கல்வி சார்ந்த கதாபாத்திரங்கள் சொல்லும் செய்திகள் அபாரமானவை. அவை சமூகத்தில் வாழும் மனிதர்களின் முன் மாதிரிகளைக்கொண்டே அவற்றை அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு புதினம் சமூகம் சார்ந்த நிறைய அனுபவங்களை, மனிதர்களை உள்ளடக்க முடியும் என்ற ஆச்சர்யத்தையும் இந்த ரேகை தருகிறது. ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ( பேரா.க இராமபாண்டி, மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக்க் கல்லூரி, சங்கரன் கோவில் 627754( ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 70104 84465 ) ) ரேகை - சுப்ரபாரதிமணியனின் நாவல்- / ஆயிஷா இரா நடராசன் இன்றும் புதினங்கள் நெடுங்கதைகள் சிறுகதைகள் என கதைகளை பிரிக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் குமுதினி 300 பக்கம் என்றாலும் உலகம் அதை நாவல் என்று அழைப்பது இல்லை. ஆங்கில நாவலாசிரியர் ஹென்றி ஹட்சன் உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் எதுவும் நாவல் கிடையாது என்கிறார் .ஆனால் இது பழைய கருத்து இந்த வாட்ஸப் யுகத்தில் வாசிப்பு ஒரே மூச்சில் முடிப்பது மட்டுமல்ல நறுக்கு தெறித்தார் போல் உண்மையை வெளியிடுவது. வாசிக்கும் மனங்களை பாதிப்பது என மாறிவிட்டது . சுப்ரபாரதிமணியனின் எழுத்து நெஞ்சை தொடும் சுடும் என்ற வகைப்பாட்டை சேர்ந்தது ரேகை :திருப்பூர் நாவல் ரத்தமும் சதையும் கலந்த மற்றொரு படைப்பு . ஜாதகம் சோதிடம் பார்க்கும் பரம்பரை குடும்பத்தில் சிதையோடு தொடங்கும் கதை நவீன நாடகக்காரர் சுப்பையா முதல் விலைமகள் பரமேஸ்வரி கடும் உழைப்பாளியான அமலம், . கிறிஸ்துவ போதகர் , கள்ளநோட்டு கோபால் என விரியும் யதார்த்த உலகம் புதிய திருப்பூரை டாலர் நகரமாக நம்முன் விரிய வைக்கிறது. கலை இரவில் வரும் தங்கர்பச்சானும் பாலாஜி சக்திவேலும் கூட பாரதி வேசம் சுப்பையாவை பாராட்டுகிறார்கள். ஆனால் அவருடைய குறும்பட டைரக்ஷன் கனவு பலிப்பதே இல்லை .எம்பில் பிராஜெக்ட் செய்யும் ரத்தினவேல் உட்பட நாம் அனைவரும் நாவலோடு எளிதில் இறுதியில் ஐக்கியமாகி விடுகிறோம். கேம் கூலி முறை பற்றியும் அதன் ஒழிப்பு பற்றியும் விவரிக்கும்போது பீகார் நேபாள கூலிகள் குறித்த தனிப்பதிவு இந்த நாவலில் உள்ளது அழுத்தமான ரேகை இது - ஆயிஷா இரா நடராசன் ( ரூபாய் 125 பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர் பக்கம் 142). –
சுப்ரபாரதிமணியனின் நாவல் 1098 ? Zero degree publications 0 மலை பூக்கள் ~ அகிலா.. (எழுத்தாளர், மனநல ஆலோசகர், ) இந்தியாவில் இருக்கும் 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 2007ல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கின்றது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் மனரீதியான பாதிப்புகள் போன்றவை குழந்தைகள் சந்திக்கின்ற சில வகையான பிரச்சனைகளாகும். இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, 50 சதவீத பாலியல் வன்முறைகள் குழந்தைகளின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வகுப்புத்தோழர்கள் ஆகியோரால் நிகழ்த்தப்படுகிறது. அரசின் POCSO (போக்சோ - பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டமானது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது. அக்குழந்தைகளைப் பாதுகாக்க பல விதிகளை நடைமுறைபடுத்துகிறது. அவ்வாறு பதியப்பட்ட வழக்குகளின் போதோ அதன்பிறகோ சம்பந்தப்பட்ட குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது, குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர் போன்றோர்அமர்த்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098 தான், இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. ‘மிருகங்கள்: சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோர், பாலியல் வன்முறையாளர்கள், மற்றும் பிற பாலியல் குற்றவாளிகள்’ (Predators: Paedophiles, Rapists, And Other Sex Offenders) என்ற நூலில், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான அன்னா சால்டர் (Anna Salter) அவர்கள், “குற்றம் செய்பவர்கள் நாம் கற்பனை செய்திருக்கும் அரக்கர்களைப்போல் ஒருபோதும் இருப்பதில்லை. பெரும்பாலும், அவர்கள் பிறரின் பார்வையில் ‘அழகான மற்றும் நன்கு விரும்பப்படும்’ ஆண்கள் மற்றும் பெண்களாக உள்ளனர். சிலநேரங்களில், அவர்கள் பொதுவில் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையான மனப்பாங்கினையும் காட்டலாம், இதனால் எல்லாரும் அவர்களை மதிக்கத்தொடங்குகிறார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் குழந்தைகளுடன் ஒத்துணர்வை உருவாக்க நேரத்தைச் செலவிடுகின்றனர், மேலும் அவர்களைத் துன்புறுத்துமுன் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறுகின்றனர்.” என்கிறார். இது ஓர் எச்சரிக்கை மணியாக பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள உதவும். சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது. ‘நேத்து ரொம்ப சிரமப்பட்ட போல இருக்கே வா நான் வந்து எப்படின்னு காமிக்கிறேன் அப்படின்னு ஒரு ஆணை கூட்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு பெண் பேனருக்கு பின்னால் சென்றார். எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன அப்படியே உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது .எங்காவது ஓடினால் நல்லது என்று தோன்றியது..’ என்ற அந்த சிறுமியை விபச்சாரத்துக்கு உட்படுத்தும் நிலையில் சுட்டப்படும் காட்சி மனதை நெருடுகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்கை கொள்ளவும் சமூகம், அதன் கட்டமைப்புகள் இட்டுச்செல்லவே விழைகின்றன. ‘இனிமேல் குளிக்கிற போது உடைகளை கழட்ட போதும் தன் பெண்குறியில் பக்கமிருந்து விசுவரூபமாய் ஏதாவது ஆவி வந்து தன்னை முகத்தில் அறையக் கூடும் என்று விநோதமாய் அவள் நினைத்தாள். அப்படி ஒரு ஆவி அவளை அறைவதற்குள் இதுபோன்ற உயரமான ஒரு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து விடுவது தான் ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்கும் .நிரந்தர நிவாரணமாக்க் கூட இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தாள்..’ என்னும் வரிகளும் சிறுமியின் மன உளைச்சலை எடுத்தியம்புகின்றன. உடல் குறித்த பெரிய அறிவொன்றும் ஏற்பட்டிராத வயதில், தன் உடலின் மீது கொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களின் வலியும் உளவியல் சார்ந்த பாதிப்பும் அச்சிறுமியின் உணர்வுகளில் வாழ்க்கைக் குறித்த அருவெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தி தற்கொலை சிந்தனையை உரக்க படிப்பிக்கிறது. இந்த நாவலில், வழக்காடு மன்றத்துக்கு சாட்சியங்கள் எத்தனை முக்கியம் என்பதையும் அவை வழக்கு விசாரணைக்கு வரும் கால அவகாசம் வரை அப்படியே இருப்பதில்லை என்பதையும் மனிதர்களின் ஞாபக அடுக்குகளில் இருந்து அந்த நினைவுகள் கலைந்துவிடுவதையும், கால ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையே வளரிளம் பருவத்தைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிடுவதையும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்நாவல் சிறுமியிலிருந்து அனுபவித்த துன்பம் கடந்து, வளரிளம் பெண்ணாய் குளிர்பிரதேசம் ஒன்றில் தேயிலை தோட்டத்து வேலைக்குச் சென்று புதுவாழ்வைத் தொடங்கும் சூழலை விவரிக்கும் வகையிலும், அங்கேயும் சாராயம் அருந்திய ஒருவனைக் காட்டி முடிக்கும்போது, சமூகத்தின் நிதர்சனமான முகம் என்பது சற்றும் வேறுபடவில்லை என்பதையே உணரமுடிகிறது. இருந்தும், பெண்ணின் மீள்தலும், அதன்பின் அவளின் நிலைகொள்ளுதலும் அவளிடமே இருப்பதாய், பெண்களாகிய அவர்கள் ‘மலையில் பூக்கும் பூக்கள்’ என இறுதியில் இயம்புகின்றன,கனம் நிறைந்த இப்படைப்பின் வரிகள். எழுத்தாளரும் நண்பருமான சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துமுறை, அனைவருக்கும் பரிச்சயமானதே.‘கனவு’ சிற்றிதழை கடந்த 34 வருடங்களாகத் திறம்பட நடத்திவருபவர். திருப்பூர் மற்றும் அதன் பின்னலாடை தொழில், கலாஸ் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள், நொய்யலில் கலக்கும் சாயத்தண்ணீர், தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக் கழிவுகள் போன்ற சமூக பிரச்சனைகளைக் களம் கண்டு எழுதிக்கொண்டிருப்பவர். அவரின் நாவல்களான நெசவு, சாயத்திரை, கோமணம், வேட்டை, சுடுமணல் என்பதான எழுத்துகள் அனைத்தும் சமூக சீரமைப்பின் மீதான அவரின் பார்வை, சகமனிதர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்ட தன்மை போன்றவற்றை சத்தமிட்டுச் சொல்லத் தவறியதில்லை. ‘1098’ என்ற இந்த நாவலும் அவரின் முந்தைய நாவல்களைப் போன்றதே. குழந்தைகளின் பாலியல் வன்முறைகள் சார்ந்த சமூக அவலநிலையை எடுத்தியம்பத் தவறவில்லை. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கொடுக்கப்படும் போக்சோ சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் நலச்சங்கங்களின் சீரிய பணியும், மகிளா வழக்காடு மன்றங்கள் குறித்தும் அதிகமான விழிப்புணர்வு நம் சமூகத்துக்குத் தேவையான ஒன்றாய் இருக்கிறது. அதை இந்த நாவல் பூர்த்தி செய்திருக்கிறது. நண்பர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துகளால் சுற்றியிருக்கும் சமூகம் மேன்மேலும் பயனடைய என் வாழ்த்துகள். ~ அகிலா..எழுத்தாளர், மனநல ஆலோசகர், கோவை. சுப்ரபாரதிமணியனின் நாவல் 1098 , ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியீடு ரூ 160
கனவு வெளியீட்டு நூல் வெளியீடு ஷார்ஜாவில் மலையாள எழுத்தாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதி சுப்ரபாரதிமணீயன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'புலம்பெயர் மணற்துகள்கள்' என்ற கவிதை நூல் நூல் வெளியீட்டு ஷார்ஜாவில் நாள் : 03 ஜூலை 2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : சரியாக காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இடம் : ஷார்ஜா பேலஸ் ஓட்டல், ரோலா, ஷார்ஜா தலைமை முஹிப்புல் உலமா அல்ஹாஜ் ஏ. முஹம்மது மஃஹ்ரூப் பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய் முன்னிலை முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிறுவன தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை, துபாய் நூல் வெளியிட்டு சிறப்புரை முனைவர் பேரா. பீ. மு. மன்சூர் முன்னாள் துணை முதல்வர், ஜமால் முஹம்மது கல்லூரி திருச்சி வாழ்த்துரை : இளையான்குடி அபுதாஹிர் மேலாண்மை இயக்குநர், அல் ரீம் குழுமம், துபாய் சசி. S. குமார் எழுத்தாளர், நாடக, குறும்பட இயக்குநர், துபாய் வழுத்தூர் ஜா. முஹையதீன் பாட்சா, துபாய் மௌலவி சுபையிர் அஹில் முஹம்மது ஊடகவியலாளர், செம்மொழி எப்.எம்., இலங்கை கவிஞர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா ராசல் கைமா இலக்கிய ஆர்வலர்கள் ஏற்புரை : திரு. இஸ்மாயில் மேலடி, நூலாசிரியர், துபாய் ReplyForward
தூரிகை சின்னராஜ் / சுப்ரபாதிமணியன் திருப்பூர் ” தமிழ் புகுந்த நெஞ்சில் தளர்வில்லை உடலுக்கும் முதுமையில்லை” என்று பாவலரேறு கூறிய வார்த்தைகள் தான் நண்பர் தூரிகை சின்னராஜ் அவர்களை பார்க்கிற போதெல்லாம் தோன்றும். தொடர்ந்து பல்வேறு துறைகளில் பயணப்பட்டு வருபவர் .பன்முகப் பார்வை கொண்ட படைப்பாளி .அடிப்படையில் ஓவியமும் கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் குழந்தை இலக்கியமும் இவரின் அக்கறையாய் இருந்தாலும். பறவைவியல் கல்வியியல், கல்வியாளர்கள் ஓவியர்கள் இவர்களை ஒருங்கிணைத்தல் கண்காட்சிகளை நடத்துதல் என்று பல்வேறு பணிகளில் தொடர்ந்து ஈடுபவர். பத்திரிக்கைத்துறையில் சின்ன ராஜ் அவர்கள் பல்வேறு இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். ஆனால் அப்போது எல்லாம் அவர் எழுதிய கட்டுரைகள் புத்தகங்களாகப் படாமல் போய்விட்டன.. அவ்வாறு தொகுக்கப்படாமல் புத்தக வடிவமாக வெளிவராமல் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரிடம் உள்ள.ன அவர் நல்ல பேச்சாளர் கூட. சுவாரஸ்யமாகவும் விரைவாகவும் எல்லா விஷயங்களையும் கொட்டித் தீர்க்கக் கூடியவர். ஆனால் அவ்வளவு விஷயங்களையும் அவர் எழுத்தில் கொண்டு வரவில்லை அல்லது எழுத்தில் கொண்டு வந்தவற்றை புத்தகம் வடிவமாக்கவில்லை என்பது பெரிய குறையாக தான் இருக்கிறது. இந்த குறையை தீர்க்க அவர் முயற்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக அவரைக் கேட்டுக் கொண்டேன் இப்போதுதான் அவர் அதற்கான முயற்சிகளில் எடுத்திருக்கிறார். காரணம் தொடர்ந்த செயல்பாடுகளில் அவருக்கு நேரமின்மை, பிறகு எழுதிய விஷயங்களைத் தாண்டி இன்னும் எழுதப்பட வேண்டிய விஷயங்கள், இன்னும் பேசப்பட வேண்டிய விஷயங்கள் என்று மனதில் தொடர்ந்து வைர சுரங்கம் ஒன்றை கட்டமைத்துக் கொண்டிருக்கிறவர். அவர் பேசுகிற விஷயங்களை எல்லாம் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்றால் நூறு புத்தகங்கள் வெளிவர வேண்டி இருக்கும். இந்த காரணங்களால் அவரிடம் ஏற்பட்ட சுணக்கம் புத்தக வடிவில் அவருடைய படைப்புகளை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. கல்வித்துறை சார்ந்த தொடர்ந்து செயல்படுபவர் என்ற வகையில் கல்வித் துறையில் இருந்து தரப்படும் வேலைப்பளுவும் மன அழுத்தமும் கூட இப்படி புத்தகங்கள் கொண்டு வரும் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தன. அவருக்கு கல்வித்துறையில் இருந்து கொண்டு வேறு முயற்சிகளில் ஈடுபடுவது தான் உவப்பாக இருந்திருக்கிறது காரணம் குழந்தைகளோடு பழகுதல் கல்வித்துறை சார்ந்த சிந்தனைகளோடு தன் மனதை வைத்துக் கொண்டு செயல்படுதல் என்பது தான் அவருக்கு லட்சியமாக இருந்திருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் அவர்களிடமிருந்து சிறந்த ஓவியர்களை, சிறந்த எழுத்தாளர்களை, சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவது தான் அவரின் முதல் நிலை அக்கறையாக இருக்கிறது என்பதால் தான் இந்த புத்தகம் முயற்சிகள் எல்லாம் மிகத் தாமதமாகிவிட்டன. ஆனால் அவரின் முயற்சிகள் காற்றில் கலந்த பேரோசையாக இருந்தாலும் அதை எழுத்து வடிவில், புத்தக நோக்கில்தொகுக்கப்பட வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப நான் வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். அதன் சில முயற்சிகளாக இவ்வாண்டில் சில தொகுப்புகள் வெளி வருகின்றன .அவருடைய ஓவிய உலகம் சம்பந்தமாகவும், உலக ஓவியர்கள் சம்பந்தமாகவும்., புகைப்படக்கலை சம்பந்தமாகவும் ,பறவையில் சம்பந்தமாகவும் என்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த புத்தக வரிசை இப்படி இருக்கப் போகிறது என்ற யோசிப்பில் அப்படித்தான் இந்த “ மண்ணும் மாண்பும் ”என்ற கட்டுரை தோப்பில் தொகுப்பில் பல மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு ஆளுமைகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். வெறும் செய்திகளாக அவர்கள் விரிவதில்லை அந்த ஆளுமைகள் சார்ந்த இடங்களுக்கும் வாழ்ந்த இடத்திற்ம் சென்று அனுபவங்களை திரட்டி தந்திருக்கிறார். அவற்றோடு தன்னுடைய சுயமான சிந்தனைகள் அந்த ஆளுமைகளை விமர்சிக்க நோக்கத்திலும் அறிமுகப்படுத்துகிற நோக்கிலும் வெளிபட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது வெறும் தகவல்கள், தரவுகள் என்பது மூன்றாம் நான்காம் பட்சமாகி அனுபவ ரீதியாக அந்த ஆளுமைகளை பற்றிய, அந்த இடங்களைப் பற்றிய செய்திகளை விரிவாக சொல்வதில் அக்கறை கொண்டிருக்கிறார் தூரிகை சின்ன ராஜ் அவர்களது . இந்த வகை எழுத்து என்பது பத்திரிகைகளுக்காக எழுதப்பட்டதாக இருந்தாலும், எளிமையான வெகுஜன மொழியில் இருந்தாலும் அதைத் தாண்டி இலக்கிய அம்சமான தெறிப்புகள் கட்டுரைகள் முழுவதும் காணக் கிடைக்கின்றன. தொடர்ந்து தமிழோடு இணைந்து இணங்கி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனின் சொல்லாடலிலும் உரையாடலிலும் தெறிக்கும் இலக்கிய அனுபவங்கள் இந்த கட்டுரைகளில் வந்திருக்கின்றன .இந்த கட்டுரைளை வெறுமனே தட்டையாகவும் ஒரு துறை சார்ந்த விஷயமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பன்முகத்தன்மையும் பல துறையில் சார்ந்த தரவுகளின் சேகரிப்பும் அனுபவ ரீதியான மொழியிலும் இந்த கட்டுரைகளுக்குள் இருக்கின்றன பலாப்பழத்தை சுத்தம் செய்து தேனில் முக்கி சாப்பிடுவதைப் போன்ற அருமையான அனுபவம் இது அல்லது நிலத்துக்கடியில் பல அடிகள் தோண்டி நல்ல கனிமவளத்தை கண்டுபிடிப்பது போலவும், வைர தங்க சுரங்குகளில் இருந்து துணுக்குகளை பெறுவது போலவும் சிறந்த முயற்சிகள் இவை, இந்த முயற்சிகளுக்கு ஈடாக அவரையே கூடச் சொல்லலாம், அவரது உரைகளைச் சொல்லலாம். அந்த வகை உரைகள் காற்றில் கலந்த பேரோசையாக கலந்து விட்டன. அவற்றையெல்லாம் கூட இப்படி நூலாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவையெல்லாம் பல சமயங்களில் காற்றில் கலந்து சாதாரணமாகி விடும் அல்லது தொலைந்து போய்விடும். புத்தகங்கள் போன்ற பதிவுகள் மூலமாக அவை கல் மீது எழுதப்படும் அல்லது பொறிக்கப்படும் எழுத்து என்றாகிவிடும் .அந்த வகையில் பல துறைகள் சார்ந்த தன் அனுபவங்களை தூரிகை சின்னராஜ் அவர்கள் இன்னும் தாமதம் செய்யாமல் புத்தக வடிவமாகி பதிவு செய்ய வேண்டும் அப்போதுதான் அவருடைய ஆளுமையின் முழு தன்மை வெளிப்படும். அவருடைய ஆளுமையின் முழு தன்மை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கும் ஓவிய உலகிற்கும் கல்வித்துறைக்கும் அவசியமாகிறது. புதிய தலைமுறைகளுக்கு கலங்கரை விளக்கமாகவும் வழிகாட்டியாகவும் அந்த நூல்கள் அமையும் அந்த வகையில் இதன் முதல் படியாக சில நூல்கள் இந்த ஆண்டில் வருவது மகிழ்ச்சி தருகிறது. நண்பர் தன்னுடைய முயற்சிகளின் வெளிப்பாடாக இந்த நூல்களை தொடர்ந்து கொண்டு வர வேண்டும் வணிகம் தவிர்த்த மனிதம் நோக்கிப் பயணப்பட்டு தன் வாழ்க்கையை லட்சியப் பாதையென நகர்த்தும் நண்பருக்காக நான் பெருமைப்படுகிறேன் சுப்ரபாதிமணியன் திருப்பூர்
To, Chief Minister, Tamilnadu அய்யா வணக்கம் என் மின்னஞ்சல் தங்களுக்கு கீழ்க்கண்டவாறு இருந்தது 15/6/22, 16/6/22 தேதிகளில் அனுப்பினேன். 0 நான் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டு விட்டதாக நண்பர்கள் தெரிவித்தார்கள் நான் சென்ற சிலமுறை நினைவகம் பூட்டிக் கிடந்ததால் பார்க்க இயலவில்லை . படைப்பிலக்கியவாதிகளையும் தமிழறிஞர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன் 0 நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் 0 பழைய மின்னஞ்சல் கீழே: திருப்பூர் குமரன் நினைவிடம் மறு சீரமைப்பு செய்து திறப்பு விழா நடத்திய போது அதில் தமிழறிஞர்கள் என்று தலைப்பிட்டு மூத்த தமிழறிஞர்கள் என்று மாத ௨தவி தொகை பெறுபவர்கள் படங்களை திறந்து வைத்திருக்கிறார்கள் . ( இவர்களில் 90 சதவீதம் போலிகள். மாதவருமானம்ரூ 6, 000 என்று போலிச் சான்றிதழ் வாங்கிகொடுத்து உதவித்தொகை பெறும் இவர்களுக்கு வருடத்திற்கு 50,000 வழங்கும் தமிழக அரசு இந்தப் போலிகளை அடையாளம் கண்டு நீக்கினால் கணிசமானத் தொகை அரசு கஜானாவில் மிஞ்சும் ) மாத ௨தவி தொகை பெறுபவர்கள் தமிழறிஞர் கள் என்று முத்திரை குத்தி திருப்பூரில் படத்திறப்பு அரசு சார்பில் நடந்துள்ளது. படைப்பிலக்கியவாதிகளை அவமானம் செய்யும் தமிழக அரசின் போக்கு வருத்தம் அளிக்கிறது. படைப்பிலக்கிய வாதிகள் தமிழறிஞர்கள் இல்லையா தமிழ்ச்செம்மல் உட்பட தமிழக அரசின் பல்வேறு விருதுகள் பெற்றாலும் அவர்கள் தமிழறிஞர்கள் இல்லையா.. தமிழ் வளர்ச்சித்துறை, தகவல் செய்தித் துறை என்று பலரிடம் தொடபு கொண்டு சொன்னேன். மாத ௨தவி தொகை பெறுபவர்கள் மட்டுமே தமிழறிஞர்களா. இதை 15, 16/6/22 தேதிகளில் மின்னஞ்சல் மூலமாக உயர்திரு தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்சித்துறை இயக்குனர் சென்னை, மாவட்ட ஆட்சியாளர் என பலருக்கு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை சிபி சி அய் டி போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் தொலைபேசியில் என்னிடம் பேசினார்: நீங்க யாரு என்ன உங்க கோரிக்கை என்று விபரங்கள் கேட்டார்,.அவ்வளவுதான் மாத ௨தவி தொகை பெறுபவர்கள் மட்டுமே தமிழறிஞர்கள் என்றால் எழுத்தாளர்கள் மற்றும் பெரிய விருதாளர்கள் கூட தமிழரிஞர்கள் இல்லையா என்ற வேதனை உள்ளது. சுப்ரபாரதிமணியன், திருப்பூர் .. subrabharathi@gmial.com/9486101003 8/7/22 Pl see my face book Kanavu subrabharathimanian tirupur 0 16/6, பிற்பகல் 2:42] subrabharathi: எல்லா மாவட்டங்களிலும் இப்படி அரசு செய்தி விளம்பரம் துறை செய்திருக்கிறார் கள். தமிழறிஞர் கள் என்று போட்டுவிட்டு மாத ௨தவித்தொகை பெறுபவர்கள் படங்கள் வைத்திருப்பது நல்லது அல்லவே அய்யா [16/6, பிற்பகல் 2:42] subrabharathi: வணக்கம். நலம் தானே. திருப்பூர் குமரன் சீரமைப்பு செய்யப்பட்ட நினைவகத்தில் தமிழறிஞர் கள் புகைப்படங்களுடன் தமிழ் ச் செம்மல் விருது பெற்ற வர்கள் படங்களும் இடம் பெற்றால் நன்றாக இருக்குமமே.கவனியுங்கள் அய்யா சுப்ரபாரதிமணியன் [16/6, பிற்பகல் 2:42] subrabharathi: வணக்கம். மாத ௨தவி தொகை பெறுபவர்கள் தமிழறிஞர் கள் என்று முத்திரை குத்தி திருப்பூரில் படத்திறப்பு நாளைக்கு அரசு சார்பில் நடக்கின்றது. படைப்பிலக்கிய வாதிகளை அவமானம் செய்யும் தமிழக அரசின் போக்கு வருத்தம் அளிக்கிறது. சுப்ரபாரதிமணியன் [16/6, பிற்பகல் 2:42] subrabharathi: படைப்பிலக்கிய வாதிகள் தமிழறிஞர்கள் இல்லை யா
SUBRABHARATHIMANIAN * Translations (5 novels in Hindi/ 5 novels in Malayalam and 15 books in English ( including essays and novels ) My sayathirai நாவல் has been translated in 5 languages – hindi, English, kannada, Malayalam, and Bengali ====================================================================== * The Last symphony - Selected poems of Subrabharathimanian; Translated by R Balakrishnan. Published by SAVE, Tiruppur * The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, Newdelhi * The Unwritten letters – Theenneer Idaivelai Novel’s Engish Translation, Tr. By Prema Nanda kumar SAVE, Tiruppur * The Faces of Dead _ English Translation of Novel Pinainkalin Mugankal Tr. By R Balakrishnan Published y Kanavu, Central Institute of Indian Languages , Mysore * Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum * Pannathiraa - Kannada Translation of Chayathirai -Tamilselvi – Navayuga, Bangalore * Reng Rengli Sadar Mehili - Hindi Translation of Chayathirai - Meenakshi Puri, Neelakant Prakashan, New delhi * 1098 – Authours press , New Delhi * Notch novel . Authours press , New Delhi * சப்பரம் :Sapparam novel in Hindi Swargrath : Hastaksaran Prakasam Newdelhi 110 094 :ரூ 300 * மாலு : Maalu . novel in Hindi Lekehan : Radharani Hastaksaran Prakasam New delhi 110 032 : ரூ 300 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
July 2022 ? uyirmme monthly சிறுகதை : சுப்ரபாரதிமணியன் பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்.. சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை நடந்ததில்லை. இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்திய போது அவன் பார்த்த பார்வையில் ஏனோ உடம்பு நடுங்கியது .அவள் கழுத்தில் இருந்த அடையாள அட்டைகயிற்றுடன் தொங்கி விளையாட்டு காட்டியது.இந்த எண்ணம் விபரீதம் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.. அவள் கைப்பையில் சமீபத்தில் சங்கு கழுத்து வடிவமைப்பில் ஒரு சின்ன பேனாக் கத்தி வைத்திருக்கிறாள் . பேனா கத்தி என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள் பேனா போல் எழுதுவதற்கு இருக்கும் .மறுபுறம் விரித்தால் கூர்மையான கத்தியை தென்படும். அதை ஏன் தன் கைக்குள் அடக்கி கொண்டாள் என்பதில் அவளுக்கு ஆச்சரியம் இருந்திருக்கிறது. தன் தன்னார்வ குழுவின் இயக்குனர் மனோகரனிடம் தற்காப்புக்காக ஒரு பெப்பர் ஸ்பிரே வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டாள். அதற்கெல்லாம் நிதி வசதி உள்ளதா என்றார். ” உனக்கு அந்த ஸ்பின்னிலிங் மில்லுக்கு போய்ட்டு வர்ற பஸ் டிக்கட் கட்டணம் கூடத் தர முடியாமெ பல சமயம் சிரமப்படறம் . இதுல.. இதெல்லாம் என்ன விபரீத கற்பனை. “ இந்த முறை அந்த பஞ்சாலைக்கு அவள் செல்வது 17ஆவது முறை .அவளின் இன்னொரு சக தோழியான ஜெபம் மேரி இன்னொரு தன்னார்வக் குழுவில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தியாகி பஞ்சமர் பஞ்சாலைக்கு முப்பதாவது முறை சென்றவள். அந்தப் பஞ்சாலையின் முதலாளியை முப்பதாவது முறைச்சென்றபோதே சந்திக்க முடிந்திருக்கிறது. அதனால் பதினேழு முறைகள் என்பதெல்லாம் மிக சாதாரணம் தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகிகளோ முதலாளியோ கண்ணில் படுவர். பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாள் அவளின் குழுவிலிருந்து சொல்லப்படுகின்ற பணி அந்த பஞ்சாலையில் உள்ள தொழிலாளருக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்த வகுப்பெடுக்கும் ஒப்பந்தத்தில் நிர்வாகத்தை உடன்பட வைப்பது. அதை நிர்வாகத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து பெறுவது தான் .அதற்குப் பின் தொடர்ச்சியாக அவள் அங்கு அந்த வகுப்புகளில் பாட எடுக்கச் செல்லலாம் என்பதை உணந்திருந்தாள் .தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை பற்றி சொல்லித் தரலாம் .அங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதில்லை என்ற ரீதியில் பிரச்சாரத்தையும் துவங்கி அந்த பஞ்சாலை பிரதேசம் பாலியல் அத்துமீறல்கள் இல்லாத பிரதேசம் என்று ஒரு பெரிய விழாவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து அவளின் அந்த பஞ்சாலை சார்ந்த விழிப்புணர்வு வேலைகள் அங்கு நடைபெறும் . அடுத்த புராஜெக்ட்டில் வேறு தன்னார்வக் குழுவில் இன்னும் சம்பள உயர்வுடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நல்ல வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும் . பஞ்சாலை முகப்பில் இருந்த காவலாளி சற்றே மாநிறத்துடன் இருந்தான். அவனுக்கு உச்சமாய் இருபத்தைந்து வயது கூட இருக்காது. இதுபோன்ற காவலாளிகள் பெரும்பாலும் வயதானவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அந்த காவலாளிக்கு இளம் வயது . ஒரு குடும்பஸ்தராக கூட இருக்க மாட்டார் என்று நினைத்தாள்.தன்னைப் போல. ஆனால் வெயிலிலும் அலைச்சலிலும் அவள் முகம் வாடி இருந்தது.அவன் கூர்ந்து அவளின் கவலை தோய்ந்த முகத்திற்கு ஆறுதல் தருவது போல் பேச ஆரம்பித்தான் . அவளின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையை கழற்றி பக்கமிருந்த நாற்காலியில் வைத்தாள். உட்காரச் சொன்னதற்காய் நன்றி சொல்லிக் கொண்டாள், பத்து தரமாச்சும் வந்துட்டீங்க.. இன்னும் நீங்க உள்ளே போய் கூட பாக்க முடியல பதினேழு தரம் ...ஆமாங்க அதுதான் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த ஒரு கம்பெனியிலிருந்து அக்ரிமெண்ட் போட்டா போதும். அது பலனளிக்கும்.....இத்தனை நாள் வந்ததுக்கு அக்ரிமென்ட் போட்டு கண்லே பாக்க முடியலே . பஞ்சாலையின் முக்கிய முகப்பு பகுதியிலிருந்து நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்கு பேட்டரி கார் இருக்கிறது . அவனின் எண்ணைய் பூசி தலைமயிர் பரப்பில் வெள்ளி மின்னுவது போல் இருந்தது . அவனது சம்மதம் இல்லாமல் கடக்க முடியாது. பஞ்சாலை முகப்பிலிருந்து அந்த நிர்வாக கட்டிடம் உள்ள நீளமான பாதைகளும் தூரமும் மனதில் வந்து போகும் அவளுக்கு. ஆமாம்மா நீங்க எந்த குழு.. உங்க குழு பெயர் . இமயம்.. வேற குழுவும் அப்பப்போ வந்து போறாங்க அவங்களும் பார்க்க முடியல.. இமயம்.. உங்களுக்கு தெரியுமா அம்மா, காவிரி, நொய்யல் அப்படி இப்படி எல்லாம் கூட பேர் போறாங்க. நெறையப் பேர்வந்து போறாங்க ஆமாங்க அவங்க எல்லாம் வந்து போறது தெரியும் எங்களுக்குக் கெடைக்கும்ன்னு சொல்லலாம் . நம்பிக்கை இருக்கு. அங்களுக்கும் அனுமதி கிடைக்கலெ. அதுதான் எங்களுக்கும் அனுமதி கிடைக்க மாட்டேங்குது போல அவங்களுக்கு கேட்க எல்லாம் சரியா இருக்கா தெரியல ஆமா இப்போ யாரும் இல்லையே.. முதலாளி வரும் போதும் சொல்றன் இப்படித்தான் சொல்றீங்க.. ஒவ்வொருதரமும் வரும் போது இப்படித்தான் சொல்றீங்க.. சரி போன் பண்ணிட்டு வரலாம்னு பார்த்தா போன் பண்ணுனா இமயம்ன்னு சொன்னா போது ரொம்ப பிசியா இருக்கம் அம்மா. அப்புறம் பார்க்கலாம்கீறிங்க முதலாளி, மேனேஜர் .. யாருமே இல்லை என்கிறீங்க.. வெளிநாடு போய் இருக்காங்க வெளியூர் போய் இருக்காங்க . ஒரு வாரம் கழிச்சு பேசிங்கறீங்களாம்மான்னு ஒரே பதில் அப்படி எல்லாம் பதில் சொல்லச் சொல்றாங்கம்மா. ஆனாலும் நீங்க தயவு பண்ணீ மனசு வெச்சா முடியும் சிரமம்தாம்மா. அப்ப நீயே இன்னைக்கி உட்கார்ந்து அவங்க வர்ற வரைக்கும் காத்திருந்து பாத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்களா.. ஆமாம் செரி அப்படித்தான் காத்துக்கிட்டு இருக்க முடிவு பண்ணி இருக்கன். அவங்க வந்தா சொல்றேன். நீங்க வேற எதாவது வேலை இருந்ததுன்னா போயிட்டு வாங்க இல்ல. இன்னைக்கு இங்க மட்டும் இருந்து பாத்துட்டு போலாம்னு இருக்கேன் எத்தனை நாள் வந்துவந்து போறது . பழனிசாமி பல்வேறு பஞ்சாலைகளுக்கு 30, 40 முறைகள் சென்று இருக்கிறார். அதனால் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் எந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை .ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நிலையில் மேலாளரிடம் பெறப்படும் வாக்குறுதி பல சமயங்களில் அடுத்த நாட்களில் நடைமுறைக்கு வருவதில்லை இதெல்லாம் தேவையில்லை எம்.டி சொல்லிட்டாங்க அதனால வேண்டாம். அல்லது இங்கெ முந்தியே ஒரு கமிட்டி எல்லாம் இருக்கு. அதெல்லாம் அவங்களெ பார்த்துக்குவாங்க ஆமா.. விஸ்வநாதன் வக்கீல் இருக்கிறார்.அவர் எல்லாத்தையும் பாத்துக்க்குவார் . மெல்ல வெளியில் இருந்து வீசும் வெயிலுடன் கூடிய காற்றும்., மின் விசிறி காற்றும் எல்லாம் சேர்ந்து அவள் முகத்து வியர்வையை துரத்திக் கொண்டிருந்தது. தொண்டையில் இறங்கிய குளிர்ந்த நீர் இன்னும் ஆசுவாசப்படுத்தியது. பெரிய அளவிலான உடல் வலி காணாமல் போகப் பிரயத்தனம் செய்தது. எங்கு சென்றாலும் விஸ்வநாதன் பெயரை சொல்கிறார்கள் விஸ்வநாதன் வழக்கறிஞர்.அவர் மக்கள் தொடர்பு வேலைகள் எல்லாம் எப்படி செய்கிறார் என்ற கேள்வி வந்திருக்கிறது .பாதுகாப்பாக அப்படி ஒரு வழக்கறிஞர் பெயரை சொல்லி விட்டால் போதும் என்று என்ற எண்ணம் வந்திருக்கிறது. நீங்க புதுசா வந்து கமிட்டி பாம் பண்ணி தொழிலாளர்களெப் பார்த்து பேசி கூட்டம் போட்டு.. அவரே எல்லாம் பண்ணுவாரு. அதுதா . அவளின் பார்வையில் ஒரு பர்லாங் தூரம் கடந்து போய் அந்த நிர்வாக அலுவலகத்தில் யாராவது யாரையாவது சந்திப்பது இன்றையக் குறிக்கோளாக இருந்தது.வெயில் கானல் நீரைப் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தது. பஞ்சாலை முகப்பிற்கு வரும்போது உதவி மேனேஜரை அடையாளம் கண்டு கொண்டு கொண்டாள். இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து போய்க்கொண்டு இருந்த அவரிடம் கேட்டபோது முதலாளி யாரும் இல்ல நான் என்ன பண்ணட்டும் என்றபடி வாகனத்தை முடக்கி விட்டார் . ஐயா நீங்க இந்த ஊர்க்காரரா தேனி மாவட்டம்.. அங்க வேலை இல்லை அதனாலதான் இங்க வந்துட்டேன் அங்கதான் விவசாயம் ..தண்ணீ.. கம்பம் பள்ளத்தாக்கு எல்லாம் பச்சையாக் கிடக்குமோ.. அதை தாண்டி எதுக்கு வர்றீங்க பாக்க பசுமையா நல்லா இருக்குன்னு சொல்றீங்க வேலை சரியா இருக்காது. அந்தக் கூலி கம்மி . அதெ விட இரண்டு மடங்கு சம்பளம் இங்க கிடைக்கும் . சரி வீட்டு வாடகை விலைவாசி தண்ணீக்கு காசு கொடுத்து வாங்கறப்போ இந்த சம்பளம் கட்டுபடியாகுமா அதுசெரிதா. ஆனாலும் இந்த பகுதியில் இருக்கிற பல மில்கள்லெ ஏதாச்சும் வேலை இருக்கும். அதான் வந்துடறோம் சரி இன்னிக்கு யாரையும் பார்க்க முடியுமா யாரு இல்லம்மா என்னுடைய கையிலெ எதுவும் இல்லெ.முதலாளிகமார் யாருமே இல்லை நீங்க அவங்க வர்ற நாளா பார்த்து வாங்க. செய்தியை கடிதம் மூலமாகக் கொடுத்துட்டு போங்க. அவள் தன் கைப்பையில் இருந்து எடுத்த கடிதத்தை இமயம் தன்னார்வ குழுவின் முகவரி அட்டையோடு சேர்த்து கொடுத்தாள்.கடிதத்தின் முனை மடங்கியிருந்ததை நீவி விட்டுக்கொண்டாள். கொஞ்சம் வியர்வை அந்த கடித முனையிலும் ஒட்டிக்கொண்டது.ஈரப்படுத்தியது இந்த வரலாற்றை எத்தனை தடவை கொடுத்திருப்பீங்க. நானும் கொண்டுபோய்க் கொடுத்து இருக்கேன் . சரி அப்போ நான் இன்னிக்கி காத்துட்டு இருந்து நேரடியாக குடுத்துட்டு, பேசிட்டுப் போறேன் சரிம்மா . என்னமோ பண்ணுங்கம்மா என்னை வெளியே போக சொல்லிட்டு துரத்த மாட்டீங்களே .நான் வெயிட் பண்ணி யாரையாச்சும் பாத்துட்டு போறேன் சரி நான் என்ன பண்ண முடியும். நான் உன்னை தொரத்த முடியாது. யாராவது கண்ணுல பட்டு என்னன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிருவேன். கண்டிப்பா பார்க்கணும் . காவலாளியிடம் ஒரே மாதிரி பேச்சு, உரையாடல் என்று ஒவ்வொருமுறையும் அலுப்பாகவே இருந்திருக்கிறது அவளுக்கு. இந்த வெயில், புழுதியெல்லாம் இன்னும் அலுப்பை தொடரச் செய்யும்.அவ்வளவு வலிமை இந்த வெயிலுக்கு. அந்தோணிசாமிக்கு தினகரன் மில்லில் ஒரு அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அங்குள்ள உணவு விடுதியில் மேலாளராக இருக்கும் அவரின் உறவினர்கள் சொல்லி அந்த முதலாளி வீட்டுக்கு போய் பேசி பலமுறை அந்த நிர்வாகிகள் உடன் சந்தித்துப் பேசி எப்படியோ ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து வாங்கிகொண்டார். அவர் அடுத்த வாரம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்க இருப்பதாக சொன்னார். அப்படி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தான் முதலாளியும் நிர்வாகிகளையும் அணுக முடியும் என்று தோன்றியது . போன வாரம் ஒரு பயிற்சி அவளுடைய அலுவலகத்தில் இருந்தது. எல்லாருக்கும் ஒரு பலூனை கொடுத்து ஊதி எதையாவது எழுதச் சொன்னார்கள். சரி என்று பின்னால் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இப்போதைய தன்னுடைய கனவு என்னவென்று எழுதச் சொன்னார்கள் .தங்களுடைய நோக்கம் என்னவென்று எழுதச் சொன்னார்கள். சித்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்குக் கிடைத்தது ஊதாநிற பலூன் .வயிற்றின் உள்ளிருந்து காற்று வெளியேறி அதை நிரப்பினாள் . ரொம்ப நாளாயிற்று இப்படி பலூன் ஊதி அது பெரிதாகி ஜாலம் காட்டி காற்றில் மிதக்கத் தயாரானதும் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அந்த ஊதா நிற பலூனில் கனவு மெய்ப்பட வேண்டும் என்று எழுதினாள். என்ன கனவு. கல்யாணக் கனவா என்று குழுவின் தலைவி செல்வி கேட்டாள். அதெல்லாம் இல்ல இப்போதைக்கு ஏதாவது ஸ்பின்னிங் மில்லெ அக்ரிமெண்ட் எம் ஓ யு வாங்கணும். அதுதான் முக்கியம் அதை பற்றி கனவு .வேற என்ன பண்றது ஒவ்வொரு ஸ்பின்னிங் மில்லுக்கும் நடந்து பார்த்தால் தான் தெரியும். அப்போது அந்த குழு விவாதம் சுகாதாரம் பற்றி ஒரு உப தலைப்பில் இருந்தது அவளின் கனவில் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை வாங்கி விடுவதுதான் முக்கியமான நோக்கமாக இருந்தது .பலரும் பல வண்ணங்களில் பலவித கனவுகளை பலூன்களில் எழுதினார்கள். ஆனால் யாருடைய கனவிலும், பலூனிலும் இப்படி பஞ்சாலை ஒப்பந்தம் பற்றி குறிப்பு இல்லை. எல்லோரும் ஸ்வச் பாரத், சுகாதாரமான இந்தியா, எந்தத் தெருவிலும் சாக்கடையை ஓட விடக்கூடாது, எந்த தெருவிலும் கொசு புழக்கம் இருக்கக்கூடாது, எந்த தெருவும் குப்பைகள் இல்லாமல் இருக்கிற இடமாக மாற வேண்டும் என்பது தான் கற்பனையாக இருந்தது எல்லோருக்கும் சுத்தம் சுகாதாரம் அப்புறம் நீங்க சாப்டீங்களா.. சாப்பாட்டுக்கு நேரம் இருக்கு ஆனாலும் உள்ள போனா கேண்டீன்ல சாப்பிடலாம் ஆனா நீங்க உள்ள போறதுக்கு உடமுடியாது சும்மா விடுவீங்களா. முதலாளி உள்ளே இருந்தால் விடலாம். யாரையாச்சும் நேர்ல பார்த்தா கூட போதும் அவரோட.. இல்லைங்க அவர் போன் நம்பர் கிடைக்க மாட்டேங்குது. செல்போன்.. போன்ல பண்ணிட்டு வாங்குறாங்க. சில பேரு மெயில் பண்ணிட்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வாங்குறாங்க. சரி இமெயில் நம்பர் இமெயில் அய்டி கொடுங்கன்னா கொடுக்க மாட்டேங்கிறாங்க. குடுக்குற ஈமெயிலில பதில் வர்ரதில்லை. சரி..அப்புறம் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா ... கல்யாணத்துக்கு வகை எல்லாம் ஒன்னும் பெருசா தெரியலே இங்க . நான் இங்கே வெளியில இருக்கன் தனியாத்தா .மேனேஜருக்கு வகையான ஆளா இருக்கிறதா சொல்லிட்டு இருக்கேன். நான் இங்கே செய்யற வேலை செக்யூரிட்டி வேலை தான். செக்யூரிட்டி வேலையெச் சொல்லிட்டு கல்யாணம் பண்ண முடியாது. ஆனாலும் வேற வேலைன்னு பொய்யெல்லாம் சொல்லிட்டு பொண்ணு கேட்டு பண்ணிட்டவஙக இருக்கறாங்க . எனக்கு இஷ்டம் இல்லை .வீட்டில் அப்பா அம்மா அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க.. பொய்யா எதையாச்சும் சொல்லிட்டு. எங்க மாட்டுவம் எங்கே உதறவம்ன்னு எனக்கு தெரியாது போன வாரம் ஒரு பயிற்சியின் போது இதுபோல் ஒப்பந்தம் பெறுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி எழுதச் சொன்னார்கள். அதில் முதல் பகுதி நேர்மறையான விஷயங்களை என்று சொன்னார்கள் . .நம்மில் பலரை பல பஞ்சாலைகளில் இருக்கும் காவலாளிகள் புன்முறுவலுடன் வரவேற்கிறார்கள். முகப்பில் இருந்து நிர்வாக கட்டிடம் உள்ள ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு கூட்டிச் செல்வதற்கு பேட்டரிகார்கள் தருகிறார்கள். அல்லது சிபாரிசு செய்கிறார்கள் .குடிப்பதற்கு குளிர்ந்த நீர் தருகிறார்கள். எல்லாம் சீக்கிரம் நடக்கும். ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஆயிரம் நம்பிக்கையை காவலாளிகள் சொல்கிறார்கள். அந்த காவலாளிகளுக்கு இதைச் சொல்வதில் சோர்வு இருக்கிறது. அதை மீறி அவர்கள் ஏதாவது ஆறுதல் சொல்கிறார்கள் பெரும்பாலும் என்ன ஒப்பந்தம் ..என்ன செய்யப் போகிறோம் என்பதை தேவையில்லாமல் பல காவலாளியிடம் கொட்ட வேண்டியிருக்கிறது ஆனாலும் யாரையும் சந்திக்க முடியாத போது இப்படி யாரிடமாவது கொட்டிவிட்டு வருவது கூட ஆறுதலாகத்தான் இருந்திருக்கிறது சித்ராவிற்கு. எதிர்மறையான எண்ணங்கள் என்று வருகிறபோது முதல்ல இங்கே கமிட்டி இருக்கு நீங்க எல்லாம் போயி ஒன்னும் புதுசா போட வேண்டியது இல்லை அப்புறம் முதலாளியும் எம்டியும் எங்காவது வெளியூரில் இருப்பாங்க. பிளைட்ல பறந்துட்டு இருப்பாங்க .உங்களுக்காக அவங்க எல்லாம் இங்க உட்கார்ந்திருக்க முடியுமா. நீங்க வர்ற நேரத்துக்கு அவங்க இருக்க முடியுமா என்று விரட்டுவார்கள் முதலாளி,தன் சார்பாக என்று சொல்லி யாரையும் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவர்தான் இந்த மில்லெ எல்லாத்துக்கும்.. அவரோட பேசி சொல்லச் சொல்லுங்கள் .அவர் சொன்னா எங்களுக்கு ரொம்ப சேப்பா இருக்கும் அவள் தன்னுடைய தன்னார்வ குழு அலுவலகத்தில் அந்த வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவரிடம் பேசி சுலபமாக உள்ளே செல்வதற்கு வழி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள், அவர்களும் பேசியதாக சொன்னார்கள் .ஆனால் இன்னும் அந்த விசயம் முடியாமல் இருக்கிறது. நீங்க எல்லாம் உளவு பார்க்க வருவீங்க.. வந்து பார்த்துட்டு என்ன நடக்குதுன்னு வெளிய போய் சொல்வீங்க அதனால எதுக்கு என்று சில காவலாளிகள் சொல்கிறார்கள். வந்து போறிங்கம்மா இந்த சம்பவம் நடக்குது அந்த சம்பவம் நடக்குதுன்னு இங்க கஷ்டப்படுற கதையெ வெளியே சொல்றீங்க .. என்றும் சொல்கிறார்கள். சட்டுன்னு முடியற மாதரி அப்படி எல்லாம் வாய்ப்பு இருக்குங்களா அதை நான் என்ன சொல்றது.. உன் கிட்ட தான் கேக்கணும் ..ரகசியமா என்று சிலவற்றை எடுத்துச் சொன்னார்கள் சித்ரா பயிற்சியின் போது எழுதிய சவால்களில் முதல் சவால் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை போட்டு விடுவது. .கையெழுத்து வாங்கி விடுவது. இரண்டாவது அந்த ஆண்டில் பல பயிற்சி வகுப்புகளை தொழிலாளர்களுக்காக எடுத்து விடுவது .கரண்ட் கட்சமயத்தில் வந்து வகுப்பு எடுங்க என்று செண்பகா மில்லில் சொன்னதை வைத்துக் கொண்டு எப்போது மின்வெட்டு ஆகிறது என்று பார்த்து அந்த நேரத்தில் சென்று வருவது, அதற்கான அனுமதி பெறுவது , அவளின் அடுத்த கனவாக இருந்தது. சமீபத்தில் மின்சார இலாகாவில் பலரின் தொலைபேசி எண்களை அவள் வாங்கி வைத்து இருந்தாள் .அவ்வப்போது தொலைபேசி செய்து இந்த வாரத்தில் ஏதாவது மின்வெட்டு இருக்குமா சட்டென்று ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் இருக்குமா என்றெல்லாம் கேட்டிருக்கிறாள் என்னம்மா நல்லா போயிட்டு இருக்கிற சமயத்தில் கரண்ட் கட் எப்போ வரும் எப்போ போகும்ன்னு எங்க உயிரை வாங்குறீங்க என்று சில அதிகாரிகள் அலுத்துக் கொண்டார்கள். அவளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன தான் மின்சாரத்தடை என்றாலும் ஒப்பந்தம் போடாமல் மின்சார தடை நேரத்தில் போய்விட முடியுமா.. முடியாது ஆனால் இதற்கு எதற்கு இந்த பிரயத்தனம் எல்லாம்.. பயிற்சியில் அவள் எழுதிய குறிப்புகளை எல்லாம் படித்தபோது மற்றவர்களும் அதையே தான் சொல்லக் காத்திருப்பது தெரிந்தது .ஆனாலும் ஒரு நாள் ஒப்பந்தம் பெற்று விடுவோம் என்பது நம்பிக்கையாக இருந்தது. பஞ்சாலை நிர்வாக அலுவலகத்தில் யாராவது தலையாட்டி சரி என்று சொல்லிவிட்டால் போதும் தன் அலுவலகத்தில் சொல்லி ஒரு ஒப்பந்தத்தை தட்டச்சு செய்து கொண்டு வந்து கையெழுத்து வாங்கி விடலாம். அது போதும். அது கூட தட்ட்ச்சு செய்து தயாராக இருக்கும் . உள்ளார ஒரு தரம் போயிட்டு வந்தா என்ன இங்கே எக்ஸிபிஷனா நடக்குது வேடிக்கை பார்க்கிறதுன்னு கேப்பாங்க இல்லைங்க உள்ளார மேனேஜர் யாராவது தட்டுப்படுவாங்க. ஏதாவது வழி கிடைக்கும். எத்தனை தடவயோ வந்திட்டு இருக்கீங்க. நானுந்தா பாக்கறன் இன்னிக்கு உள்ள போயிட்டு வரலாம்மா என்னம்மா நீங்க நச்சரிக்கிறதுனாலே கேட்டன் சரி போறேன் போய் அங்க என் பெயரைச் சொல்லாதேம்மா அது எப்படிங்க சொல்லாம இருக்க முடியும் செக்யூரிட்டி இல்லாமல் உள்ளே வர முடியாது கேட்டா செரி. என்னவோ சொல்லிக்க அப்புறம் உன் இஷ்டம் அவளுக்கு ஆசுவாசம் பிறந்து விட்டது போலிருந்தது உடம்பில் பூத்திருந்த வியர்வை பூக்கள் எல்லாம் கருகி வீழ்ந்துவிட்டன காற்று ஆசுவாசப்படுத்தி அவளை புது மனுசி ஆகிவிட்டது போலிருந்தது சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள் ஸ்டிக்கர் பொட்டு நழுவி இருக்குமோ என்ற பயத்தில் எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். அது முகம் பார்க்கும் கண்ணாடியாக இல்லாமல் கருப்பு தாள் ஒட்டப்பட்டது இருந்தது. உள்ளே இருக்கிற பொருட்களை பிரதிபலிப்பதாக இருந்தது. புத்துணர்ச்சி வந்துவிட்டது போல் அவள் நினைக்கத் தொடங்கினாள் வர்ரங்க தேங்க்ஸ் ரொம்ப நன்றிங்க தேங்க்ஸ் ரொம்ப நன்றிங்க.. சரி சரி எவ்வளவு சீக்கிரம் வந்தர முடியுமா வந்திரும்மா. அந்த வரைக்கும் எனக்கு பாதுகாப்பா இருக்கும் சரிங்க சரிங்க.. ரொம்ப நன்றிங்க ..ரொம்ப நன்றி சித்ராவிற்கு அவள் அப்பாவின் ஞாபகம் வந்தது அவர் நெசவுத்தொழில் செய்து வந்தார். கால் ஆணி வலுவிழந்து போய் நெசவு மிதி பலகையை மிதிப்பதற்கு முடியாமல் போயிற்று பிறகு ஒரு புகையிலை குடோனில் காவலாளியாக வேலை செய்தார். எப்போதும் வாகனங்களும் பெரிய மனிதர்களும் வியாபாரத்திற்காக வந்து போகிற இடம். பெரும்பாலும் உட்கார இடம் கிடைக்காது நேரம் கிடைக்காது .நின்று கொண்டுதான் இருக்க வேண்டும். யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள் உட்கார்ந்துவிட்டால் என்ன மரியாதை இல்லாமல் உட்கார்ந்து இருக்கே என்று கேட்பார்கள். அவர்கள் திட்டுவதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் நினைத்துக் கொண்டு நின்று சலித்து அந்த கால்கள் தரும் வலியை இரவுகளில் வேதனையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா அப்பாவின் கால்களை தொட்டு தொட்டு அழுத்தி ஆசுவாசப்படுத்துவார்கள். வெந்நீர் கொண்டு வந்து வெந்நீர் பாத்திரத்தில் அப்பாவின் கால்களை அமிழ்த்தி வைப்பார். வெந்நீரில் துணியை நனைத்து கால்களை சுத்தப்படுத்துவார். ஆனால் அவருடைய கால் வலி குறைந்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவார். நரம்புகள் சுருண்டிருப்பதைக் காட்டியிருக்கிறார். . ஆனால் தூக்கம்தான் அவரை ஆசுவாசப்படுத்துவது என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது. அப்பாவின் தம்பி மகன் பனியன் கம்பெனியில் நின்றுகொண்டே கட்டிங் செய்கிற வேலையை பல ஆண்டுகள் செய்து வந்தார் அவருக்கு இப்படித்தான் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பதைக் காட்டியிருக்கிறார். அதை சரி செய்வதற்காக இரண்டு கால்களிலும் ஆக நாலைந்து முறை ஆபரேஷன் என்ற வகையில் சிகிச்சை செய்திருந்தார். ஆனால் எதுவும் ஒத்துழைக்கவில்லை பனியில் கம்பனியில் இருந்து ஓய்வெடுத்துக் கொள் சரியாகும் என்று மருத்துவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அவரும் சின்ன வயதில் வேறுவழியில்லாமல் இப்படி காவலாளியாக ஆகித்தான் போனார். பனியன் கம்பெனியில் நின்று கொண்டு வேலை செய்ய முடியவில்லை. வேறு என்ன வேலை செய்யத் தெரியும் என்று வேதனையும் தொடங்கி விட்டது. வேறு வழி இல்லாமல் அவர் காவலாளி வேலைக்கு தான் சென்றார். செக்யூரிட்டி என வயசானவங்க தான் வருவாங்க நீ என்ன இந்த நாப்பது வயசிலேயே வந்துட்ட என்று அவரைக் கேட்டார்கள் .முடியல அதான் வந்தன் இதென்ன அநியாயமா இருக்கு முடியலையேன்னு வர்றவங்களுக்கு எல்லாம் செக்யூரிட்டி வேலைக்கு ஆகுமா என்று கேட்டிருக்கிறார்கள் அப்பா அவரின் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பது போல் கடைசி காலங்களில் உடம்பை குறுக்கிக் கொண்டு படுக்கையில் கிடந்தார் தொடர்ந்து நின்று கொண்டிருப்பது, அதிக ஓய்வு இல்லாமல் இருப்பதை அவர் உடம்பைக் குறுக்கு வைத்துவிட்டது. உடம்பு தாறுமாறாய் சிரமப்படுத்த வைத்தது. அப்படியான சூழலில் தான் அவர் ஒரு பூச்சி சுருண்டு கிடப்பது போல தன்னை சுருக்கிக் கொண்டு கால்களையும் கைகளையும் இறுக்கிக் கொண்டு படுக்கையில் ஒருநாள் இறந்து கிடந்தார். அதை நினைக்கிற போதெல்லாம் அவளின் கண்களில் நீர் கசியும். இந்த காவலாளிகள் மேல் அவள் எந்த ஒரு வசவையும் கோபத்தில் எந்த கணத்திலும் தந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறாள்.அவள் அப்பாவும் காவலாளியாக இருந்திருக்கிறார். எத்தனை பஞ்சாலைகள்.. எத்தனை அலுவலகங்களில் .. எல்லா இடங்களிலும் காவலாளிகள் ...எல்லாவற்றிலும் அவள் நுழைகிறபோது அங்கு இருக்கிற காவலாளிகளை பார்ப்பதை தவிர்ப்பாள். ஏதோ ஒரு வகையில் அவர்கள் அப்பாவை ஞாபகத்தில் கொண்டு வந்து விடுவார்கள் அது அவளைப் படுத்திக் கொண்டே இருந்தது. அவளின் சித்தப்பாவும் இப்படித்தான் ஒரு பனியன் தொழிற்சாலையில் காவலாளியாக இருந்தார்.. இரவில் தொடர்ந்து தூக்கம் கெட முடியவில்லையென்று அந்த வேலையை விட்டு விட்டார். அவர் குருடாம்பாளையத்தில் இருந்த போது நிறைய கடன் ஆகி விட்டது. நெசவு தொழில் நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஒரு நாள் இரவில் தறிச்சாமான்களை விட்டு விட்டு கிளம்பி விட்டார். இரவில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு நடுஇரவில் கிளம்பி விட்டார். இரு தினங்கள் அந்த விளக்கு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது. வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்ற தோரணை அது.. பல நாட்கள் எரிந்து விளக்கணைந்து இருட்டானபின்புதான் வீட்டில் யாரும் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.திருப்பூருக்குப் போனவர் சொசைட்டியில் கூலி நெசவுக்கு உட்கார்ந்தார். அதுவும் குடும்பத்தை ஓட்டக் கட்டுபடியாகவில்லை. சட்டென தாகம் எடுப்பது போல் இருந்தது. கைப்பையில் சிறு பாட்டில் இருநத்து. தினந்தோறும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்லி அவள் தினமும் பார்க்கும் தினசரி வலியுறுத்திக் கொண்டே இருந்தது. . அவள் சென்றாண்டு வேலை செய்த குழு அனுபவம் ஞாபகம் வந்தது. தொழிற்சாலைகளில் தண்ணீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு என்று வலியுறுத்தி பல பிரச்சாரங்களை செய்கிற பணி அவளுக்கு... அதுவும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைக்க பிரச்சாரம் செய்ய சாயப்பட்டறைகளுக்குப் போகச் சொன்னார்கள்.அங்கு போன பின்பு < ... [Message clipped] View entire message ReplyForward
சுப்ரபாரதிமணியனின் திரைவெளி நூல் 10/7/22 அன்று திருப்பூரில் வெளியிடப்பட்டது. அதை சென்னை நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ275 நூலை ஈரோடு செந்தமிழ் முற்றம் அமைப்பின் செயலாளர் செந்தில்குமார் வெளியிட ஈரோடு உயர் கல்வி அதிகாரி அன்பழகம் பெற்றுக்கொண்டார். சுப்ரபாரதிமணியனின் திரைவெளி நூல் டூலெட்-தேசிய விருது தமிழ்ப்படம்.. இயக்குனர் / ஒளிப்பதிவாளர் செழியன் -திரைவெளி ” திரைப்பட நூல் பற்றி.. ------------------------------------------------ -உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல். ----------------------------------------------------------------------------------------------- நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம், அரசியல் சார்ந்த பின்புலங்களை அறிந்து கொள்வதற்கும் பரவலான அறிமுகம் தேவைப்படுகிறது. அந்த அக்கறையுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ஒர் பார்வையாளரின் குறிப்புகளென " திரைவெளி "வந்திருக்கிறது. செம்பேன் உஸ்மான் என்கிற ஆப்ரிக்க இயக்குநரில் இருந்து ஆலிவர்ஸ்டோன் என்கிற அமெரிக்க இயக்குனர் வரை அரிதான படங்களைப் பேசும் இந்த நூல் "ஸ்ரீ கனகலெட்சுமி ரெக்கார்ட் டான்ஸ் குரூப்" என்னும் சுவாரஸ்யமான தெலுங்கு நகைச்சுவைப் படம் குறித்த தகவலையும் தருகிறது. சோமரத்னே திசனாயக்கே எனும் இலங்கை இயக்குனரின் தேசியவாத பற்றிச் சொல்கையில், 'இலங்கையின் உயர் அதிகாரம் இன வர்க்க மேலாதிக்கமும் தமிழர்களை நிலையற்றவர்களாய் வைத்திருக்கும் துயரமும் இந்தப் படத்தில் சரியாகவே வெளிப்படுகிறது')என்று சொல்லும் இந்நூல், ஈழத் தமிழர்கள் பிரான்சில் எடுக்கும் மூன்றாந்தரமான வீடியோ படங்கள் குறித்த செய்திகளையும்('எண்பதுகளில் வெளி வந்தவற்றில் தனிப்புறா, நீதியின் சோதனை குறிப்பிடத்தக்க படங்கள்மாற்றாக ஒரு நல்ல குறும்படமான குடா என்கிற ஆதிவாசிகள் பற்றிய கேரளப்படத்தைப் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் மீது மதரீதியான அடக்குமுறையைச் சொல்லும் சப்மிஷன் என்ற வெளிநாட்டு குறும்படம் பற்றிய செய்தியையும் பதிவு செய்கிறது.(. உலகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் அதே ஆர்வத்துடன் இந்தியாவின் பிற மொழிப்படங்கள் குறித்த செய்திகளையும் இந்த நூல் பதிவு செய்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, வங்காளம், மராத்தி முதலிய மொழிகளில் நிகழ்ந்திருக்கும் திரைப்பட முயற்சிகளும் பதிவாகியிருக்கின்றன. 'ஆசுவாசம் தரும் மராத்திய திரைப்பட உலகம்", தெலுங்கு திரைப்பட உலகம் 88' போன்ற எளிய தலைப்புகளால் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் அதன் தரம் சார்ந்த விவரங்களை நூலாசிரியர் சுப்ரபாரதிமணியனின் அபிப்ராயங்களுடனும் இந்த நூல் பதிவு செய்கிறது. ஆதிவாசிகளின் இயல்பான பாடல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதாபாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது படங்கள் பற்றிய செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் தனது சந்திப்பு மற்றும் பயணஅனுபவம் சார்ந்த கட்டுரைகளாகவும் தனது வாசிப்பு சார்ந்த பதிவுகளாகவும்மாற்றுவது இந்தக் கட்டுரைகளின் பலம். பல இடங்களில் கட்டுரைகள் நேரடியான தகவல்களாகவும் அமைந்து விடுகின்றன. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட போதும் தவறாக பக்க எண்கள் குறிக்கப்பட்ட பொருளடக்கம் புத்தகத் தயாரிப்பிலிருக்கும் குறை. நேரடியான கட்டுரைகள் தவிர அயல்நாட்டு இயக்குனர்களின் சிறு பேட்டிகளும் இங்மர் பெர்க்மனின் ஒரு கடிதத்தின் மொழியாக்கமும் இந்த நூலில் உள்ளன. பலருக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், வெகுசிலரே தாங்கள் பார்த்த படங்கள் பற்றி எழுதுகிறார்கள். வெறுமனே பார்த்த படங்களின் பெயர்களை அடுக்கி பெருமை பேசுவதையும் இங்குள்ள படங்களை விமர்சிப்பதையும் விடுத்து, நல்ல திரைப்படம் மீது அக்கறை உள்ளவைகள் அது குறித்து எழுத முன்வர வேண்டும். அந்த வகையில் திரைவெளி வழங்கும் அறிமுகம் முக்கியமானது என்று குறிப்பிட்டுளார்.
இலக்கிய சங்கமம்( நாடகம்- குறும்படங்கள் ) 0 17/7/22 ஞாயிறு காலை 10 மணி மக்கள் மாமன்ற நூலகம் , மங்கலம் சாலை, திருப்பூர் 0 நாடக நிகழ்வு: வண்ணத்துப்பூச்சி – நாடகம் நிகழ்த்துபவர் : நாதன் ரகுநாதன் ( ஒரு நபர் நடிப்பில்) (வண்ணத்துப்பூச்சி –மூலம் கன்னடம்/ தமிழ் மொழிபெயர்ப்பில் ) 0 குறும்பட அனுபவம்- உரைகள்: சுப்ரபாரதிமணீயன்( திருவிழா, சோத்துப் பொட்டலம், பள்ளி மறுதிறப்பு, சுமங்கலி, இரக்கம் உட்பட) ரா.தீபன் ( ஒரு துளிரின் கதை, புத்தகப்பயணம்), து சோ பிரபாகர், சரவணகுமார்,. நாதன் ரகுநாதன்,முத்துக்குமார், மாதேஷ்,, மோகன் மற்றும் திருப்பூர் குறும்பட இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 0 கவிதைகள் வாசிப்பு / புத்தகங்கள் அறிமுகம் 0 தலைமை: சி.சுப்ரமணியம் (திருப்பூர் மக்கள் மாமன்ற நிறுவனத் தலைவர்) 0 வருக .. கனவு/ மக்கள் மாமன்றம்,