சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கோத்தகிரியில் 2026 ஆம் ஆண்டில் ஜீன் மாதம் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பை ஓசை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது அப்போது கோத்தகிரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்த ராஜு அவர்கள் அயல் தாவரங்கள் நீலகிரி பகுதியில் பல பாதகங்களைச் செய்து கொண்டிருப்பதும் அதை தடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் அரசுக்கும் தோட்டக்கலை துறைக்கும் பலமுறை எழுதியிருப்பதாகச் சொன்னார். அதன் தொடர் நடவடிக்கையாக சிலர் இடங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கருநொச்சி நீர் நொச்சி போன்றவை வேர்களில் பிடிமானம் கொள்ள மிகச்சிறந்த புது செடிகள் வழங்கப்பட்டு வருவதை பற்றி சொன்னார். ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் நீங்கள் நீண்ட காலம் நிலைத்து கரையில் பாதுகாக்கும் நீர்மருது நடப்பட்டிருப்பதை சொன்னார். இந்தப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது என்பதாலும் வெண் மருது போன்றவை நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இவை எல்லாம் நீலகிரி பகுதியில் அங்கேயே வழங்கப்படுகின்றன என்ற தகவலையும் சொன்னார். மலைச்சரிவுகள் மற்றும் பாறைகள் நிறைந்த வறண்ட காடுகளை மீட்டெடுக்க புரசை என்ற ஒரு அபூர்வமான மரம் பயன்படுகிறது. இதன் பவள ஆரஞ்சு நிற குழாய் வடிவ மலர்கள் காடுகளில் நீர்ச் சுழற்சியை காக்கின்றன என்று சொன்னார். அதேபோல இயற்கையான பூச்சிக்கொல்லி பண்பைக் கொண்ட வேம்பு மரம் மிக வேகமாக வளர்ந்து பசுமை பாரத்தை உருவாக்கி அழகாக காட்சியளிக்கும் என்று சொன்னார் இவை எல்லாம் அயல் தாவரங்களின் பாதிப்பை பற்றி சொல்லும் போது அவர் குறிப்பிட்டதாகும். அயல் தாவரங்களை எதிர்த்து ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்திருப்பதையும் சொன்னார், ஆயுதம் தாவரங்கள் இந்தியாவிற்கு ஆரம்ப போர்ச்சுக்கீசியர்கள் மூலமாக வந்திருக்கிறது. மிளகாய், முந்திரி, அன்னாசி போன்றவை அவர்களால் இங்கு கொண்டு வந்து நடப்பட்டிருக்கின்றன காகிதக்கூழ் உற்பத்திக்காகவும் பிறகு தேவைக்காகவும் அப்படி பல மரங்கள் நடப்பட்டிருக்கின்றன அப்படித்தான் சீமைக் கருவேலம், யூகாலிப்டஸ் அறிமுகமாகியுள்ளன மண்ணரிப்பை தடுக்க நிழல் தருவதற்காக தங்கநிறப் பூக்களுக்காக குல்முகர், ரெயின் ட்ரீ தூங்குமூஞ்சிமரம் போன்றவை நடப்பட்டு இருக்கின்றன.அந்த வகை மரங்களும் புதுச்செடிகளும் காடுகளை அழிக்கும் முக்கிய நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக இன்று மாறிவிட்டன முன்பு சிறு தேவைகளுக்காக நடப்பட்ட இந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சவும் பயன்படுத்தப்படுவதால் கிணறுகளின் நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்று விடுகிறது. உள்ளூர் விலங்குகளுக்கு உணவு தேவைக்காக இவை எந்த வகையிலும் பயன்படாது.. மண்ணில் விழும் அவற்றின் இலைகள் பக்குவமடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் .அவை உள்ளூர் தாவரங்களை விதைகளை முளைக்க விடாமல் தடுத்து மண்ணின் தன்மையை மாற்றி விடுகின்றன. ஆகவே இதைமாற்றிக் கொள்ள நாவல் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பலர் சொல்லி இருக்கிறார்கள் காடு வளர்ப்பில் ஒரே வகையான மரங்களை நடுவது சாதகமானது அல்ல. காட்டின் வெவ்வேறு அடுக்குகளுக்கு வெவ்வேறு மரங்கள் தேவை. அப்போதுதான் சரியான சுற்றுச்சூழல் உருவாகும் முன்பு நாம் வளர்த்த மருதம் நாவல் கடம்பு பூவரசு புன்னை மரம் ஆகிவை ஆற்றுக் கரைகளில் நடப்பட்டு மண்ணையும் பூமியும் இறுக வைக்கும் தன்மை கொண்டவதால் இப்போதும் தேவையாக இருக்கின்றன நீரின் கரைகளில் அதன் அமைப்புகளை மாற்றக்கூடிய மற்றும் கரைகளை பலமாக ஆக்கக்கூடிய பல தாவரங்கள் இருக்கின்றன அவை நீரை சுத்திகரிப்பது மட்டுமில்லாமல் மீன்கள், தவளை போன்ற உயிரினங்களையும் வாழ வைக்கின்றன பாதுகாப்பான இனப்பெருக்க சூழலை உருவாக்கவும் இயற்கை ரீதியான பாதுகாப்பை உருவாக்கவும் நம் பழமையான மரங்கள் தாவரங்கள் இன்னும் உதவியாக இருக்கின்றன . அவை அயல் தாவரங்களின் பாதிப்பைச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. க் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பின் விவரங்களைப் பற்றி நீரியல் பொறியாளர் லீலா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிற ஒரு பகுதி மேலேங்கே தரப்பட்டிருக்கிறது. கீழே சென்றாண்டின் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பு பற்றிய என் குறிப்புகள் இப்படி உள்ளன, 0 திணைக்கோட்பாடு பற்றிய இரண்டு நாள் வால்பாறை கருத்துப் பட்டறை சுப்ரபாரதிமணியன் என் மொழிபெயர்ப்பிலான “ சுற்றுச்சூழல் பிரார்த்தனை “ சிறு நூல் வெளியீடு/ அறிமுகம் நடைபெற்றது. பூவுலகின் நண்பர்கள்அமைப்பின் சென்னை வெற்றிச்செல்வன், தாளாண்மை ஆசிரியர் பாமயன், ஓசை காளிதாஸ், அவை நாயகன் போன்றோர் பிரதிகளைப் பெற்றனர் ( கனவு வெளியீடு ரூ20 / 9486101003) திணையியல் கோட்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் முதல்படியாக அமைந்தது இந்த சந்திப்பு . என் உரையில்: 1 வால்பாறை காடம்பாறை பகுதி மின் உலகம் பற்றிய அமரர் திருப்பூர் குழந்தைவேலு நாவல் மின்சார வேர்கள் பற்றி 2. என் 14/40 கொண்டை ஊசி வளைவு அட்டகட்டி நாவல் பற்றிய அனுபவம் 3.வளர்ச்சி என்னும் மாயை..பாமயன் குறிப்பிட்டதையொட்டி என் சாயத்திரை நாவல் அனுபவம் 4. சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட சுற்றுச்சூழல் மரணங்கள், கொலைகள் சார்பான என் அனுபவங்களைக் கொண்ட ”புத்துமண்” இரு பதிப்புகள் வந்துள்ளன. ( உயிர்மைபதிப்பகம்., என் சி பி எச் ) பற்றியும் . 5. வெப்பம் முதலான என் நாவல்களை முன்வைத்து சூழலியல் நூல்களின் அறிமுகம் இருந்தது. நாள்: செப்டம்பர் - 27, 28 (சனி. ஞாயிறு) இடம்: கானுயிர் பயிற்சி நிலையம், வால்பாறையில் நிகழ்வுகள் நடைபெற்றன,அது பற்றிய ஓசைக்குறிப்பு : இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட ஏமாற்றம், மனக் கலக்கம் ஆகியவற்றால் ‘உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது’ என்ற பார்வை அனைவருக்கும் ஏற்பட்டது. குறிப்பாக சிந்தனையாளர்களிடமும் ஏற்பட்டது. இதன் விளைவாக மீநடப்பியல் (சர்ரியலிசம்) முதலிய சிந்தனை இயக்கங்கள் தோன்றியன. பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிரான கருத்துக்களை மீநடப்பியல் சிந்தனை கொண்டிருந்தது. மனோவியல் முறையில் தீர்வுகளைத் தேடத் தொடங்கினர். ஒட்டு மொத்தத்தில் நிலையற்ற உலகத்தில் வாழ்வது கடினம் என்பதும், நம்பிக்கையற்ற வாழ்க்கை என்ற கருத்தும் வேரூன்றி வளர்ந்தன. அதேபோன்றதொரு மனநிலை இன்றைய சமூகத்தில் காணப்படுகிறது. காலநிலை மாற்றம், சூழல் சீர்கேடுகள், கோப்பெரு நிறுவனங்களின் பொருளியல் முற்றாளுமை. விளிப்பு நிலைக்குத் தள்ளப்படும் பெருந்திரள் மக்கள், போர்களால் அழியும் காஜா, உக்ரைன் உயிர்களைக் காப்பாற்ற வழியில்லாமல் கைபிசையும் நிலை என்று வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் கோட்பாட்டு அறிவியல் போதுமான தகவல்களோடு பூவுலகின் நெருக்கடிநிலையை விளக்கி வருகிறது. உலகின் பண்பாட்டு மரபுகளுக்கும் நவீனமயமாக்கத்திற்கும் இடையிலான மோதல் பெருகி வருகிறது. பெரும்பான்மை மக்களின் விழுமியங்களும், சமூகத்தில் அவர்களின் பங்கும் குறைமதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவர்களை ஏதிலிகளாக மாற்றுகின்றன பொருளியலை மட்டும் முன்வைத்து வளர்ந்து வரும் சமூகம் கிட்டத்தட்ட வாழ்வின் ஒவ்வொரு கூறுகளையும் நிலையற்றதாக மாற்றுவதற்கான சான்றுகளும், தகவல்களும் வெள்ளம்போல் பாய்கின்றன. குறிப்பாக பெருகிவரும் சூழலியல் அச்சுறுத்தல்கள், அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியுமா? அடுத்த தலைமுறைகளுக்கான இடம் இருக்குமா? என்ற அச்சத்தை உருவாக்குகின்றன. எல்லை மீறிய தொழில்நுட்பத்தின் விரிவாக்கம், அதற்கு ஆதரவான கூக்குரல்கள் யாவும் மனித குலத்தின் இருப்பிற்கான வழிகளையும் பண்பாட்டு வாழ்வுரிமைகளையும் முன்னர் கற்பனை செய்ய முடியாத எல்லைகளுக்கு அப்பால் நெருக்கித் தள்ளுகின்றன. அறத்திற்குப் புறம்பான பாதையை வகுத்துச் செல்லும் இந்த பொருள்மய உலகத்திற்கான மாற்றாக, இயற்கையைச் சுரண்டி உயிர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த மாந்தர் முதன்மைப் போக்கிற்கு மாற்றாக திணைக் கோட்பாடு எழுந்து நிற்கிறது. இது புதிய கருத்தோ, சிக்கலான கருத்தோ அல்ல, பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடாக வகுத்தளித்து வைக்கப்பட்டுள்ள தொல்காப்பிய நெறிகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் நிலத்தில் வாழ்ந்த தொல்லறிஞர்களின் முன்வைப்பாக இருந்த அறவியல் சிந்தனைகளை இன்றைய புரிதல்களோடு முன்னெடுக்கும் முயற்சிதான் ‘திணையியம்’ என்ற மெய்யியல் கோட்பாடு. இது சூழலியல், பொருளியல், அரசியல், பண்பாட்டியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் தன் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இன்றைய வளர்ச்சி என்னும் பெரும் வேட்டை, இந்த உலகின் கடைசி மரமும் அழிக்கப்பட்ட பின்பும் அதன் வேர்களைச் சுரண்ட முனையப் போகிறது. கடைசிச் சொட்டு நீரும் உறிஞ்சப்பட்ட பிறகும் நீரின் மீதான வேட்டை நிற்கப்போவதில்லை. ஆக மனிதர்களின் இருப்பு மட்டுமல்ல மற்ற உயிர்களின் இருப்பும் பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது. இன்றைய பொருளியல் உலகம், வரம்பற்ற வளர்ச்சி, நுகர்வு என்பதை வழிமுறையாகவும் லாபத்தை நோக்கமாகவும் கொண்டு தனது காய்களை நகர்த்துகிறது. உழைப்பின் பங்கை எந்திரங்கள் மூலம் பதிலீடு செய்ய முனைகிறது. ஈவிரக்கமற்ற போட்டிக்கு உந்தித் தள்ளுகிறது. அனைத்துத் துறைகளிலும் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. சந்தை என்பது அறநெறிகளுக்கும், அன்பிற்கும் எதிராக மாறி வருகிறது. அரசியல் என்பது கோப்பெரு நிறுவனங்களும் அரசாங்கங்களும் இணைந்து கைகோர்த்து இயக்கும் ஆட்சிமுறையாக மாற்றம் பெற்றுள்ளது. கொல்லைப்புற வழியாக கோப்பெருநிறுவனங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வது நடைமுறையாக உள்ளது. எனவே அரசியல் என்பது பெருநிறுவனம் தாங்கும் அமைப்பாக மாறிவிட்டது. இதன் விளைவாக பரந்துபட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எண்ணற்ற துயர் மிக்கதாக மாறுகிறது. குடிநீரும், மூச்சுக் காற்றும், கல்வியும், மருந்தும் அவர்களுக்கு எட்டாக்கனியாகிறது. மதம், சாதி என்று அணி திரட்டல் உருவாகி, உண்மையான சிக்கல்கள் திசை திருப்பப்பட்டு அவை பெரும் மோதல்களாக உருப்பெறுகின்றன. திறமை, கடின உழைப்பு, நேர்மை போன்ற விழுமியங்கள் கரையத் தொடங்குகின்றன. பண்பாட்டுத் தளத்தில் எடுத்துக் கொண்டால் அன்பு, தோழமை போன்ற பண்பு நலன்கள் மறைந்து போட்டியும் பொறாமையும் விரிவடைகின்றன. ஆக ஒட்டுமொத்த வாழ்வியல் பணத்திரட்டலை அடிப்படையாக மாறியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த அனைத்துச் சிக்கல்களுக்கும் வேராக இருப்பது மெய்யியல் குறைபாடு என்பதை உணர முடியும். மனிதனை மையமாக வைத்த மாந்தர் முதன்மைப் பார்வை அனைத்து வளங்களும், வசதிகளும் மனிதர்களுக்கு மட்டுமே என்ற நோக்கில் செல்நெறிகளை வகுக்கின்றனர். இயற்கையின் தாங்குதிறன், வளங்களின் போதாமை பற்றிய பார்வை இல்லை. வளர்ச்சி என்பதே விடுதலை என்று கருதுகின்றனர். ஆனால் வளர்ச்சிக்கு எல்லை உண்டு. இந்தப் பூவுலகம் தொடர்ந்து இருந்து பயன்தர வேண்டுமாயின் இயற்கைநேயச் சிந்தனை உருவாகிட வேண்டும். இயற்கை என்பது ஒரு பொருளல்ல, அஃது ஓர் உயிர், அது தாய்மை. எல்லா உயிர்களையும் ஈன்ற அன்னை. இயற்கை எப்படி நமக்குத் தருகிறோ, அதுபோல இயற்கைக்கும் நாம் திருப்பித் தருதல் வேண்டும். மனிதன் தன்னுடைய அறிவாணவத்தால் இயற்கையை அத்துமீறிச் சுரண்டி வருகிறான். அனைத்து உயிர்களுக்குமான இயற்கை மனித இனத்துக்கானதாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் மனிதன் இயற்கையிடமிருந்து தனிமைப்பட்டுள்ளான். பிறகு மனிதர்களுக்குள்ளும் தனிமைப்பட்டு அந்நியமாகியுள்ளான். தலைமுறைகளும் அந்நியமாக்கப்பட்டுள்ளனர். யாரெல்லாம் தொழில் நுட்பத்தைக் கையில் வைத்துள்ளார்களோ, அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக, இயற்கையை சுரண்டுபவர்களாக உள்ளனர். இந்த ஆதிக்கம் இயற்கையும் மனிதனையும் பிளவுபடுத்தியுள்ளது. பொருளாக்கம் என்பது லாபத்தை தருவதாக அறியப்படுகிறது, ஆனால் பொருளாக்கத்தின் உடன் விளைவாக மாசு என்பதும் உருவாகிறது. இதுவரை பொருளாக்கம் பற்றிச் சிந்தித்தவர்கள் மாசுபாட்டின் பங்கைப் பற்றி விளக்கவில்லை. எனவே ஒரு புதிய பார்வை தேவையாக உள்ளது. பொருளாக்கச் செயல்பாட்டில் மாசுபாட்டின் பங்கு அளப்பரியதாக மாறியுள்ளது. பூவுலகின் பல உயிர்கள் காணாமல் போய்விட்டன. இந்த அறமற்ற போக்கு நாளை மனிதத் தலைமுறைகளையும் பூவுலகில் இருந்து அப்புறப்படுத்தலாம். இந்த அழிவைச் செய்யும் உரிமையை இன்றைய தலைமுறைக்கு யார் கொடுத்தது? எல்லாத் தலைமுறைகளும் இந்த மண்ணில் வாழ்வதற்கான அறம் பற்றி திணைக் கோட்பாடு விளக்குகிறது. பொருளாக்கத்திற்கும் நுகர்வுக்கும் அறம் அடிப்படையாக வேண்டும். அதைப் பற்றித்தான் திணை வாழ்வியல் பேசுகிறது, ‘பயன் கிடைத்தாலும் மரங்கள் சாகும்படியாக மருந்தும் எடுக்கக் மாட்டார்கள் மக்கள், உடல்வலிமை குன்றும்படியாக பெரிய தவத்தையும் செய்யமாட்டார்கள் அறிஞர்கள், நாட்டின் வளங்கள் அழியும்படியாக பொருள் திரட்ட மாட்டார்கள் ஆட்சியாளர்கள்’ ‘மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர்’ (நற்: 226) திணை வாழ்வியல் என்பது இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை உருவாக்கும் முறையியல் ஆகும். நீர், நிலம், காற்று, வானம், வெப்பம் என்ற பூதங்களனைத்தையும் ஒருங்கிணைத்து அனைத்து உயிர்களின் வாழ்க்கைக்குமான தேவைகளை நிறைவாக்கும் கோட்பாடு ஆகும். இயற்கையைச் சிதைக்காமல், மாசுபாடுகளை உருவாக்காமல், இன்றைய தலைமுறைகளுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் தலைமுறைகளுக்கான தேவைகளையும் நிறைவாக்கும் முறையிலான வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கிய நெறியாகும். இதைப் பற்றிய விரிவான உரையாடலுக்கு இந்த சந்திப்பு வழி வகுத்தது. பண்டைய தமிழர்கள் இயற்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் வாழ்வியல் உருவானது தொல்காப்பியர் முதலாக சங்க இலக்கியங்கள் வரை பல இடங்களில் திணையியல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் ஆதி மெய்யில் தான் திணையியல் என்று விளக்கப்பட்டுள்ளது. பிற பண்டை சம்பவங்களில் இல்லாத இந்த கருத்தாக்கம் உலகத்துக்கு பண்டைய தமிழர்கள் கொடுத்த கொடை .இன்றைய சமூகம் சிந்திக்கும் சித்தர்களுக்கு தீர்வு தரும் கோட்பாடாக திணையியல் கோட்பாடு இருக்கும் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு இணக்கமாக இருக்கும் அதுவரை சிக்கல் இல்லை அந்த இணக்கத்தை சிதையும் போது சிக்கல்கள் தோன்றுகிறது என்று பாமயன் குறிப்பிட்டார். சில துளிப்பாக்கள் மனதில் வந்ததை எழுதி வைத்தேன். 1 திரும்பும் வழி தீர்மானிக்க முடிவதில்லை காட்டின் பாதை 2. காட்டை அறியாமல் காடிற்குள் போகாதே விலங்குகளை அறியாமல் அவற்றை நெருங்காதே 3. அடிபட்ட இருவாச்சி உறைந்து கிடந்த வர்ணங்கள் .4. பறந்த போனது இருவாச்சி வானவில் பளிச்சிட்டு மறைந்தது பலமுறை 5. இப்படியும் போகலாம் அப்படியும் போகலாம். வழி சொன்னார் காட்டுவாசி. காட்டுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் கூடத்தான் சுலபமாகக் கடக்கலாம் பலதை. 6. கொட்டித்தீர்த்தன தேனீக்கள் பல செயற்கைச் சிந்தனைகள் மீதானத் தாக்குதல்கள் - சுப்ரபாரதிமணியன்