சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
வாழ்த்துக்கள் ; பொள்ளாச்சி ஜெயகுமார்
கடைசி பகுதி ஆரம்பத்தில் வந்திருந்தால் ஒரு சிறுகதையாக சீக்கிரம் முடிந்திருக்கும். ஆனால் பண்டிகை விசேஷங்களை அடுக்கிக் கொண்டு போய் கடைசியில் பூ கேட்பதை வைப்பது சிறப்பாக இருக்கிறது
ஏழைகளின் சாமி
கைகொடுக்கவில்லை .
தாடிக்கொம்பு தீர்த்தம் எந்த பயனும் இல்லை சப்பரம் வழியில் எல்லோரும் கூடுகிறார்கள் சாமிநல்லா தெரியனும் என்று ஒதுங்குகிறார்கள் .வேப்பிலை தண்ணீர் தெளிக்கும் உரிமை சில குடும்பங்களுக்கு வாய்க்கிறது. ஓலை பட்டாசு இன்னும் மகிழ்ச்சிக்கு சென்றுக்கொண்டே இருக்கிறது. கலாச்சாரம் பட்டாசு போன்ற வடிவங்களில் இன்னும் மிச்சம் இருக்கிறது ஆத்துப்பாறையும் வண்ணார்களும் ஆறு நிலமையும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது .பெரு நெருப்பாக இருக்கிற பல விஷயங்கள் முடிந்து கொண்டிருக்கிறன ..
பூசாரியின் அன்பு மகளின் காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
ரொம்ப சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் ஒரு முழு பண்டிகையைப் பார்த்த நல்ல அனுபவம் அந்த மனிதர்களுடன் பேசிய அனுபவம் ..விளிம்பு மக்களுக்கான ஒரு சாய்வு எல்லாம் இந்த கதையை சிறப்பாக ஆக்கி இருக்கின்றன
பாராட்டுக்கள்
சிறப்பு குறுநாவல் இது.
இப்படித்தான் அவரின் சமீபத்தியக் குறுநாவலைப் படித்து விட்டு ஜெயக்குமார் அவர்களுக்கு எழுதியிருந்தேன்.
2
ஒரு ரோஜாவின் முள் குத்திவிட்டது என்பதற்காக எல்லா ரோஜாக்களையும் வெறுப்பதும், ஒரு கனவு நனவாகவில்லை என்பதற்காக எல்லா கனவுகளையும் கைவிடுவதும், ஒரு முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக எல்லா முயற்சிகளையும் கைவிடுவதும் பைத்தியக்காரத்தனம்.
ஒரு நண்பன் துரோகம் செய்துவிட்டான் என்பதற்காக எல்லா நண்பர்களையும் தண்டிப்பதும், யாரோ ஒருவர் உண்மையாக இல்லை அல்லது உங்களின் காதலை மதிக்கவில்லை என்பதற்காக காதலின் மீதான நம்பிக்கையையே இழப்பதும், ஏதோவொன்று தவறாக நிகழ்ந்துவிட்டது என்பதற்காக மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் தூக்கியெறிவதும் முட்டாள்தனம்.
எப்பொழுதும் இன்னொரு வாய்ப்பு, இன்னொரு நண்பன், இன்னொரு காதல், ஒரு புதிய பலம் உங்களுக்குக் கிடைக்கும். எப்பொழுதும் ஒவ்வொரு முடிவுக்கும், ஒரு புதிய தொடக்கம் இருக்கிறது.
இதோ என் ரகசியம், மிக எளிமையான ரகசியம்: இதயத்தால் மட்டுமே ஒருவரால் சரியாகப் பார்க்க முடியும்; முக்கியமானவை எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
3
பொள்ளாச்சி ஜெயக்குமார் அவர்களுடைய சமீபத்திய படைப்புகளை படித்த போது மேற்கண்ட ஒரு மேற்கோள்தான் ஞாபகம் வந்தது
அப்படித்தான் அவர் இதயத்தால் எல்லாவற்றையும் அணுகுகிறார் .அப்படி இதயத்தால் அணுகி விளிம்பு நிலை மக்களைப் பற்றி பார்த்த பார்வையில் அவருடைய சிறுகதை ஒன்றை குமுதத்தில் படித்தேன் .அதை முன்பே கனவு இதழுக்கு அனுப்பி இருந்தார் கனவு மின்னிதழில் வெளிவரும் என்று தெரிவித்திருந்தேன் ஆனால் இடைவெளியில் குமுதத்தில் வெளிவந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது காரணம் இன்னும் அதிகமானவர்களை சென்றடைய ஒரு வழி என்று தோன்றியது மேலும் அப்படி விளிம்பநிலை மனிதர்களை பற்றி அவருடைய குரல் அதிகமான வாசகர்களைச்சென்றடைகிறது என்பது
இன்னும் நல்ல செய்தியாக இருந்தது அந்த விஷயத்தில் அவர் தொடர்ந்து இதை செய்து கொண்டிருக்கிறார் அவர் முயற்சிகள் வெல்லும்
அதன் பிரதிபலிப்பாக தான் அவருடைய இந்த குறுநாவலையயும் பார்க்கிறேன்.இனி உரை நடை படைப்புகளில் உச்சத்தை அவர் அடைவார்.
அவர் அப்படியே அடைந்த உச்சத்தின் வெளிப்பாடாகத்தான் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் உயர்ந்த விருது சென்ற ஆண்டு அவருக்கு கிடைத்தது
அவர் பணி தொடரும்
வாழ்த்துக்கள் ஜெயக்குமார்
அன்புடன்
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003