சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

என் கோமணம் நாவலும், மறைந்த இயக்குனர் செழியன் அவர்களும் சுப்ரபாரதிமணியன் செழியன் அவர்களை தில்லி கதா விருது நிகழ்வில் சந்தித்தேன் முதல் முறை. அதற்கு முந்தைய ஆண்டு சுப்ரபாரதி மணியன் ஜெயமோகன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களும் எம்டி வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் போன்ற மலையாள எழுத்தாளர்களும் தில்லியில் கதா விருது பெற்றார்கள் செழியன் உடன் இருந்த மூன்று நாட்கள் தில்லியின் சில பகுதிகளுக்கு சென்றபோது அவரின் புகைப்படங்களின் தீவிர தன்மையை தெரிந்து கொண்டேன். என்னையும் புகைப்படங்கள் எடுக்கும்படி அவரை கேட்டுக் கொண்டேன். ஆனால் தில்லியின் குளிருக்கு பாதுகாப்பாக நான் போட்டிருந்த கனத்த சொட்ட என்னை பெரும் குண்டனாகக் காட்டுவதால் சென்னைக்கு சென்ற பின்னால் தனியாக எடுத்துத் தருகிறேன் என்றார் ஆனால் சென்னையில் சந்திக்க இயலவில்லை. அந்த போட்டோஷீட் நடக்காமல் போனதை ஒரு முறை அவரே ஞாபகம் படுத்தினார். என் வழித்துணைகள் சிறுகதைத் தொகுப்பிற்கு ( அன்னம் மீரா வெளியீடு : ) நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார் அப்போது அவர் அன்னம் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்று அறிந்தேன். அந்த முன்னுரை யார் எழுதியது என்று அன்னம் மீராவின் புதல்வர் கதிரிடம் கேட்டபோது அவர் ஒரு வாசகர் என்று சொன்னார். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எப்போதாவது ஒரு நாள் அவரை சந்திப்போம் என்று அவரிடம் சொல்லி வைத்தேன். அதுதான் தில்லியில் நடந்தது. அந்த முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஊக்கமான வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. என் திரைப்படக் கட்டுரைகள் கொண்ட நூல் திரைவெளி ( அம்ருதா பதிப்பகம் வெளியீடு ) பற்றி அவர் எழுதியிருந்த விமர்சனம் இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளியானது. அதை நான் பல சமயங்களில் முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என் திரைக்கதை நூல்களை விரும்பிக் கேட்டுப் படித்தார் அதில் சிலவற்றை குறிப்பிட்டுச் சொன்னார் ஒருமுறை. என் கோமணம் நாவலை திரைக்கதையைப் படித்துவிட்டு அதன் மூல நாவலை படிக்க வேண்டும் என்றார். நான் அவருக்கு அதை அனுப்பி வைத்தேன். கோமணம் திரைக்கதை/ நாவல் பழனி பாதயாத்திரையை மையமாகக் கொண்டது அந்த பழனி பாதயாத்திரை கதையில் சில காட்சிகளில் வருகிற வீட்டிலிருந்து ஓடிப்போன காதலர்களை எடுத்து மையமாக்கி என் திரைக்கதையை அமைத்திருந்தேன். நாவலைப் படித்த பலரும் அந்த காதலர்கள் நாவலில் எங்கே வருகிறார்கள் என்று கேட்டு ஆச்சர்யப்பட்டார்கள் அந்த காதலர்களை எடுத்து அவர்களை துரத்தும் சாதி வெறி கொண்டப் பெற்றோர்களும் பாதையாத்திரையின் பயணங்களும் என்று திரைக்கதை அமைத்திருந்தேன் அது செழியன் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாவலின் ஒரு சிறு பகுதியை எடுத்து இப்படி ஒரு காதல் போராட்டம் ஆக்கி இருப்பது அவருக்குப் பிடித்திருந்தது ஆனால் அதற்கு பெரிய பட்ஜெட் ஆகும் என்று சொன்னார். இந்த ஆண்டில் அவரை அவரின் திரைப்படப் பள்ளி இயக்கும் குறைந்த செலவான படங்களின் பெயர் பட்டியலை மற்றும் அந்த இளம் இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்ட போது அதில் என் திரைக்கதைகள் ஏதாவது இடம்பெறும் என்ற நற்பாசை எனக்கு இருந்தது. அவரிடமும் தெரிவித்திருந்தேன். சென்றாண்டு சென்னைக்குப் போயிருந்த ஒருமுறை தகவல் சொன்னபோது சந்திப்புக்காக நேரமும் இடமும் குறிப்பிட்டு வரச்சொன்னார். கடைசி நேரத்தில் மருத்த்வமனைக்குச் செல்லும் வேலையால் ஒத்தி வைத்தார். அவருடனான சந்திப்பு நிகழவில்லை. அவர் சொன்ன என்னைப் புகைப்படங்கள் அடுக்கும் போட்டோ ஷீட் நடைபெறவேயில்லை. முன்பு கோவா திரைப்பட விழாவில் அவரின் டூ லெட் படத்தைப் பார்த்து ரசித்தேன். அவருக்கும் சிறந்தப் பாராட்டுகள் அந்த கோவா திரைப்ப்ட விழாவில் நிகழ்ந்தது. அவர் அதைப் பற்றிய ஒரு கடிதம் எழுதச் சொன்னார் எழுதினேன். அது பிரசுரமும் ஆனது ஒரு கட்டுரையாக. தொடர்ந்து என் படைப்புகளோடு- வழித்துணைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் முதல் இப்போதைய திரைக்கதை நூல்கள் வரை தொடர்ந்து கொண்டிருந்தார் நவீன இலக்கிய எழுத்தாளர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பதை ஆறுதலான விஷயம். அஞ்சலி... 0