சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 18 டிசம்பர், 2021

மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன் சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்... கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார். வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது. ( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )
தோழர் தேனரசன்: சுப்ரபாரதிமணியன் ” வாசலிலே மரண நெடி வாழ்ந்ததை மனத்திரையில்…. தன்னை இழந்துலகு பெறும் தத்துவத்தின் ஞானம்.. ..ஓ” தோழர் தேனரசன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருந்தபோது பல சமயங்களில் அவரின் இந்த கவிதை வரிகளை மனதில் கொண்டுவந்திருக்கிறேன் சென்ற ஆண்டு இரண்டு வானம்பாடி இயக்கக் கவிஞர்களைச் சந்தித்தேன் .ஒருவர் சக்திக் கனல். மெலிந்த உடல் ஆனால் திடமான மன பலம் . உடல்நலக்குறைவு எதுவுமில்லை உற்சாகமாக இருந்தார். சந்தித்த இன்னொருவர் தோழர் தேனரசன் .அவரின் உடல்நலக்குறைவு மனதில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது “ இந்த மழை போதாது இன்னுமிது பொழியட்டும் “ என்று கவிதை காட்டும் வாழ்க்கையாகட்டும், வாழ்க்கை அனுபவம் ஆகட்டும் எல்லாவற்றையும் வரவேற்றவர் உடல்நலக்குறைவால் தொடர்ந்து இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது தமிழ் கவிதையில் அந்நிய உலோக வாசனை கமழும் சூழலில் நம் மண் வாசனையை முழுக்க “ மண் வாசலில் ”கொண்டுவந்தவர் . ” மழை விழுந்தால் சேறாகும் அது மண்வாசனை ” என்று சொன்னவர் ஆனால் நோய் விழுந்து அவருடைய உடல் சேறாகி விட்டது என்பதை பல சமயங்களில் கண்டிருக்கிறேன் “ நான் எந்த நான்” என்று அவர் கவிதையில் கேட்பார் அந்த தத்துவ விசாரத்தை அவர் என்றும் மனதில் கொண்டிருந்தார் ஆனால் மனிதநேயத்துடன் கவிதையையோ மனிதர்களையோ அணுகுவதுதான் அவருடைய சிறந்த பாதையாக இருந்திருக்கிறது .அதுவே அவரின் “ நானாக ”விளங்கியிருக்கிறது “ வியப்புகளின் விளிம்பு எல்லை ஆனந்தங்களின் பரிபூரணம் அனுபவங்களின் மகோன்னதம் “ என்று கவிதையை வரித்துக் கொண்டவர் தொடர்ந்து நாங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பதை பற்றிச் சொல்லுகிற போது ஆனந்தம் கொள்வார் .அப்படி அவர் ஆனந்தம் கொள்வதற்கே நிறைய எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றும். “ நில்லும் எனக்கினி நேரமில்லை நீண்ட வழி போக வேண்டும் அம்மா ”என்ற அவரின் ஒரு கவிதை சொல்வது எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது . அந்த நீண்ட வழியை காட்டியவராகத்தான் தோழர் தேனரசன் இருந்தார், “ காலம் என்னைக் கவிஞனாய் சமைத்தது கவிதைகளால் நான் ஒரு காலத்தை விதைத்துவிட்டேன் “ என்று சொன்னவர். புதிய எழுத்தாளர்களின் தலைமுறையில பலர் கவிதை வித்துக்களை தூது விட்டு சென்றிருக்கிறார் . பொள்ளாச்சி இளம் கவிஞர்கள் பட்டாளமே அதற்கு அடையாளம் “வந்துபோகும் சுகதுக்கங்கள் அலை போல வாழ்க்கைக் சத்தியமாய் நிற்கும் கடல் போல” என்று கவிதையில் சொன்ன தோழர் தேனரசன் ”காணும் இயற்கையை கேட்கப் பழகியதால் கணக்கில்லாத ஞானம் கைவசமாகும் ” என்று வழி காட்டியவர் .அந்த ஞானத்தை கவிதை இயக்கம், பள்ளி செயல்பாடுகள், சமூக அக்கறைகளில் தொடர்ந்து காட்டியவர் மரண பிச்சை என்ற அவர்களுடைய கவிதை ஒன்றில் இடம் பெற்றிருக்கிற எலும்புக்கூடு தோற்றம்தான் அவரைப் பற்றிய நினைக்கிற கடந்தப் பல ஆண்டுகளில் மனதில் வந்து நின்றது ”பச்சை அரும்புக்கு பாடம் ஆகிறதே “ என்று மரணத்தைப்பற்றி சொல்லியிருப்பார். கொரானா தொற்று காலத்தில் அப்படி ஒரு மரணம் அவருக்கு வாய்த்தது என்பது நினைத்துப் பார்க்கையில் சங்கடம் தருவதாக இருக்கிறது ”இந்த மழை போதாது இன்னும் இது பொழியட்டும் ” என்ற ஆசையை நாம் இலக்கிய தளத்தில் விதைத்துக் கொண்டு இருப்போம். அது அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்
பொன் சண்முகசுந்தரம் / கனவு கல்வி விருது மனிதன் இயற்கை இவர்களுக்கிடையிலான நெருக்கமான உலகம் மீதான நேசமே கவிதையின் ஊற்று எனவேதான் கவிதை எழுதுவதில் மனிதர்களுக்கு இன்பம் இருக்கிறது என்பார்கள். இயற்கை ஜீவியாக இருந்து கொண்டு மனிதன் செயல்படுவதில் அவனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது அந்த அர்த்தத்தை கவிதையின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் திருப்பூர் பொன் சண்முகசுந்தரம் அவர்கள் . வகுப்பறை என்றத் தொகுப்பின் மூலம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியலான உறவை அருமையான கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் இப்போது இந்தக்குறுங்கவிதைகள் மூலம் அதையே மீண்டும் நினைவுறுத்துகிறார் நம்மைச்சுற்றி உள்ள மனிதர்களையும் பிற உயிர்கள் குறித்த அக்கறையுடனான தொடர்பு மொழியே கவிதை என்பதை மீண்டும் நிருப்பித்திருக்கிறார் பொன் சண்முகசுந்தரம் . அதை வட்டெடுத்து, பிராமி எழுத்துப்பிரதிகளுடனும் வடிவமைத்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பம்சம் சுப்ரபாரதிமணியன் கனவு கல்வி விருது கனவு கல்வி விருது கல்வித்துறையைச் சார்ந்த படைப்பிலக்கியத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கு மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிறு நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டது. எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி விருதை அளித்தார். நாமக்கல் நாதன் , பேரா பிரவிணா, கணிதம் பழனிவேல், பொன் சண்முகசுந்தரம், ஜெரோஷா, பேரா . கோமளசெல்லி உட்பட பலர் விருது பெற்றனர், விழாவுக்கு சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார், சுப்ரபாரதிமணீயன், ஆழ்வைக்கண்ணன், துசோ பிரபாகர், அழகுபாண்டி அரசப்பன், செம்பருத்தி விஸ்வாஸ் உட்பட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். கவிதைகள் வாசிப்பும் உரைகளும் நிகழ்ந்தன. இந்த விருதிதைனை கனவு இலக்கிய வட்டம் அளித்தது FB Thanjavur Harani வணக்கம். இன்று என் வாழ்வில் ஓர் இனிய நாள். எழுத்தாளர் திருமிகு சுப்ரபாரதிமணியன் அவர்கள் தன் கனவு மெய்நிகர் சந்திப்பினைத் தொடர்ந்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இன்று அதில் என் படைப்பு அனுபவம் குறித்துப் பேசுவதற்கு நாலைந்து வாரங்களுக்கு முன்பே கேட்டார். மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னேன். அடுத்து உங்களின் படைப்புகள் பற்றி அவற்றின் அட்டைப் படங்களை அனுப்பச்சொன்னார். செய்தேன். சந்திப்பு நிகழும் விவரத்தைச் சொல்லி கூகுள் மீட் விவரங்களைத் தந்தார். எல்லாவற்றையும் அவர் முறையாக செய்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் இப்படித்தான் ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டால் அதைப் பார்த்துப்பார்த்து ஒழுங்காகச் செய்வேன். சொன்னபடி நிகழ்வு இன்று 6 மணிக்குத் தொடங்கிவிட்டது. இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த (தற்போது சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றும்) கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள், நான், மற்றும் சுபசெல்வி (நாவலாசிரியை) பேசுவதாக இருந்த வரிசையில் என்னை முதலில் பேசச் சொன்னார்கள். மனந்திறந்து என் படைப்பு அனுபவம் பற்றிப் பேசினேன். மன நிறைவாக இருந்தது எனக்கு. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களைப் பற்றிப் பல்லாண்டுகளாகக் கேள்விப்பட்டிருந்தாலும் இன்றுதான் இந்த இணைய நிகழ்வில்தான் நேரில் பார்த்தேன். அருமையான குரல். அருமையான கவிதைகள். அருமையான வாசிப்பு. அத்தனை ஆர்வமுடன் தன் கவிதைக்கான அனுபவத்தைப் பகிர்ந்தார். இன்னொரு வியப்பான செய்தி என் புகைப்படக்கவிதைப்போட்டியில் வெளியாகும் சில கவிதைகளைத் தன் மக்கள் மனம் இதழில் அவ்வப்போது பிரசுரம் செய்த ரகசியத்தைச் சொன்னார். தொடர்ந்து புகைப்படக்கவிதைகளை அனுப்பச்சொன்னார் தன் இதழில் பிரசுரம் செய்வதாகக் கூறியுள்ளார். எத்தனை மகிழ்ச்சியானது இது. FB Thanjavur Harani சுபசெல்வியின் படைப்பு அனுபவம் எளிமையாகக் குழந்தையின் அசைவுகளைப்போல அழகாக அமைந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தூரிகை சின்னராஜ் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அழகாகத் தொகுத்துப் பாராட்டினார் FB Thanjavur Harani நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தூரிகை சின்னராஜ் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அழகாகத் தொகுத்துப் பாராட்டினார் FB Thanjavur Harani . நல்ல குரல். அப்புறம் இடையில் நல்ல கருத்துரைகள் பரிமாறப்பட்டன. ஒரு மனநிறைவான நிகழ்வு. அன்பின் நன்றிகள் சுப்ரபாரதிமணியன் சார்.
புதியநூல் வெளியீடு ” சிலைகள் என்பது காக்கைகள் எச்சமிட இருக்கும் இடம் போலில்லாமல் அந்த சிலைகளில் இருக்கும் மகான்களின் சிந்தனைகள் , எண்ணங்கள் நட்டைமுறைப்படுத்தலில் அவர்களுக்கு கவுரவம் கிடைக்கும்.திருப்பூரில் அமைய உள்ள தமிழன்னை சிலைக்கு என்னாலான முயற்சிகளையும் உதவியையும் செய்வேன்” என்று திரு . க. செல்வராஜ் ( திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்- தெற்கு ) சுப்ரபாரதிமணியனின் புதியநூல் ” தொலைக்காட்சி ரிமோட் “ சிறுவர் கதைகள் வெளியீட்டுப் பேசும்போது குறிப்பிட்டார்,. நூலை தனியார் காப்பீட்டுக்கழக அதிகாரி குமார் , எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ஆகியோர் பெற்றுக்னொண்டனர் 29/10/21 மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு அருகில், திருப்பூர் தலைமை : திரு .சி சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்) தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ( ஓய்வு ) குமார் சிறப்புரை ஆற்றினார் : “ ஆட்சிமொழியிலும் தமிழ் இங்கு தொடர்ந்து அலுவலக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுவது இப்போது தமிழ் நாட்டில் ஆரோக்யமானது . எழுத்தாளர்களை கவுரவப்படுத்த பல விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழில் அர்ச்சனைக்கான ஆணை அமல்படுத்தப்படுகிறது. எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை நடைமுறைப்படுத்தப்படுவது சமூக சீர்திருத்த நடவடிக்கையாகும், நீதிமன்ற மொழியாக தமிழ் அமல்படுத்தப்பட வேண்டும் “ என்றார் மக்கள் மாமன்றம் நிர்வாகிகள் ராஜா, பாண்டியராஜன், மற்றும் லயன் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்கள் என பலர் திரண்டு கலந்து கொண்டனர் / சுப்ரபாரதிமணியன் 94861 01003 ) தொலைக்காட்சி ரிமோட் சிறுவர் கதைகள் சுப்ரபாரதிமணியன் வாழ்த்துக்கள் அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. வழக்கம் போல் இந்தாண்டும் பிறந்த நாள் என்று எதுவும் கொண்டாடவில்லை. நேத்து வைத்த மீன் குழம்பு , தபால் அலுவலகம், கூரியர் அலுவலகம், நணபர்கள் சந்திப்பு, எங்கள் வீதிக்குழந்தைகளுடன் சந்திப்பு, ஒரு மராத்தியப்படம், வெள்ளாமை நாவல் என்று பொழுது போனது. நன்றி நண்பர்களே

Kanavu publication new book

என்னுரை…… மகிழ்ச்சி துயரம்..…….சோர்வு உற்சாகம்..……பணிச் சுமை ஓய்வு நேரம்….....என அனைத்துத் தருணங்களிலும் வாழ்வியலின் அதி முக்கிய அம்சமாய் ஆகிவிட்டிருக்கும் ஃபில்டர் காப்பி போன்றது தான் எந்த நேரத்திலும் வாசிக்க உவப்பாக இருக்கும் சிறுகதை!! நறு மணம் நாசியை எட்டும் போதே நாவின் சுவை மொட்டுகள் ஆர்ப்பரித்தெழுந்து ஆவலைக் கிளப்பி விடும் நல்ல ஃபில்டர் காப்பி தயாரிக்க உதவும் தரமான காப்பித்தூள்…….நீர் சேர்க்காத பால்…..அளவான சர்க்கரை……..பதமான சூடு ஆகியவற்றின் நேர்த்தியான இணைப்பு போன்றது தான் சிறுகதை வடிவம்! கதையின் துவக்கம்…..முடிவு… ..கதை நடக்கும் கால அளவு……களம்….உரையாடல் நேர்த்தி…..கதைக் கரு….இவற்றின் பக்குவமான சேர்க்கை ஒரு அழகான சிறுகதையாய் வடிவம் பெறும். . வ.வே.சு ஐயரின் “ குளத்தங்கரை அரச மரம் “ எனும் முதல் தமிழ் சிறுகதைக் காலம் துவங்கி இன்றைய தேதி வரை நவீனத்துவம்…பின் நவீனத்துவம்…யதார்த்தம்….மாய யதார்த்தம்…என இன்னும் ஏதேதோ தன்மைகளுடன் கட்டமைப்பு அநேகநேக மாற்றங்கள் கண்டாலும் அனைத்தும் வந்துடையும் மையப் புள்ளி ஒன்று தான்! சிறுகதை என்பது ஒரு சிறந்த குறும் படம் பார்க்கும் நிறைவைத் தர வேண்டுமென்பது என் பணிவான கருத்து, குறும் படம் என்றதன் காரணம் கதையின் காலப் பிரக்ஞை! கதை நடக்கும் கால இடைவெளி மிகக் குறுகியதாய் இருக்க வேண்டும். கதைப் போக்கில் ஒரு முப்பதாண்டுகள் உருண்டோடின எனக் காலச் சக்கரத்தை விண்வெளி ராக்கெட் வேகத்தில் ஓட்டி விடக் கூடாது. தேவையெனில் அந்த முப்பதாண்டுகள் FLASH BACK ஆக வரலம். ஆனால் கதை துவங்கி முடியும் கால அளவு எவ்வளவு குறுகலோ அவ்வளவு சுவாரசியம்! அடுத்தது கதைக் களம்..! கதை நடக்கும் இடம் குறித்த விவரணை மிக மிக முக்கியம்….அது வீடாக இருந்தாலும்!! அப்படியின்றி வெறும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்திச் சென்றால் அது ஒரு நாடகம் போல் ஆகி விடும். மேடை நாடகம் கூட அல்ல…..அங்காவது பின்னணியில் காட்சிகளுக்கேற்ப திரைகள் மாற்றப்படும். வானொலி நாடகங்கள் போல் என வைத்துக் கொள்வோமே! மேலும் கதைக் களத்துக்கு முக்கியத்துவம் தருவது வாசகர்களைக் கதையுடன் ஒன்றச் செய்து அவர்களும் அவ்விடத்தில் இருக்கும் பிரமை ஏற்படுத்தும்.. இவையெல்லாம் என் கருத்துகளேயன்றி ஏதோ சிறுகதை வகுப்பறையாக என்னுரை அமைவதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம். மேற்சொன்ன அம்சங்கள் குறித்து கூடுமானவரை என். சிறுகதைகளில் கவனம் கொள்கிறேன். இது என் ஐந்தாம் சிறுகதைத் தொகுப்பு.. மனித உணர்வுகள்..உறவுகள்….அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் இடையறா நிகழ்வுகளினூடே நாம் தரிசிக்கும் அல்லது பெறும் அனுபவச் சிதறல்களின் குவிப்பு தான் சிறுகதையாய் உருப் பெறுகிறது.. என் நான்காம் தொகுப்பான “ வாழ்க்கைக் காடு “ எனும் நூலில் பல கதைகள் .அக் காலக்கட்டத்தில் வெகு மும்மரமாய் நடந்த தெலங்கானாப் போராட்ட விளைவாய் ஆந்திரா…தெலங்கானா இரு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல்களின் பின்னணியில் அமைந்தவை. தவிர சில கதைகள் நான் பயணித்த சில இடங்கள் சார்ந்தவையும்..! இப் புதிய தொகுப்பிலும் தெலங்கானாப் பிரதேசம் சார்ந்த சில கதைகள் இடம் பெற்றுள்ளன…..முற்றிலும் வேறு பின்புலத்துடன்! இதிலும் பயணக் கதைகள் சில உண்டு.. ஒரு கூடுதல் அம்சம்….……இரண்டு மூன்றாண்டுகளாய் முதல் அலை…இரண்டாம் அலை என ஒட்டு மொத்த உலகையும் சுனாமிப் பேரலைகளாய் புரட்டிப் போட்டு அனைத்து நிலைகளிலும் மக்களின் ஜீவாதாரத்தையே கேள்விக் குறியாக்கியபடி நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டுள்ள கொடும் கொரோனா நாம் எழுதும் சமீபப் படைப்புகளில் நம்மையுமறிமால் இணைந்து கொள்வது நிகழ்ந்து வருகிறது.. அவ்வகையில் என் இந் நூலிலும் சில கொரோனாக் கதைகள்! ரயில் தடத்தின் இரு தண்டவாளங்கள் போல் சுய படைப்பு……மொழியாக்கம் என இரு தளங்களிலும் என் படைப்புத் தளம் பயணித்து வருவதால் மொழியாக்கக் கதைகள் குறித்து இங்கு குறிப்பிட வேண்டிய கடமையும் எனக்குள்ளது. எழுத ஆரம்பித்து ஏறக்குறைய இருபதாண்டுகள் ஆகியிருந்த நேரம்….. அப்போது இங்கு பணியிலிருந்த மிகச் சிறந்த படைப்பாளர் திரு.சுப்ரபாரதிமணியன் அவர்கள்..ஒரு நாள்…. “” நீ ஏன் மொழியாக்கப் பணி செய்யக் கூடாது…? தமிழ் தெலுங்கு இரு மொழிகளும் நன்கு அறிந்திருப்பதால் மூன்றாம் மொழியின் அவசியமின்றி தெலுங்கினின்று தமிழுக்கு உன்னால் நேரடி மொழியாக்கம் செய்ய முடியும். அதுவுமன்றி நீயே ஒரு படைப்பாளியாக இருப்பதால் மேற்கொண்ட கதைகளின் மூலக் கூறுகளை அத் தன்மையிலேயே உன்னால் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்..” எனப் பலவும் எடுத்துச் சொல்லி வெகுவாய் தயங்கிய என்னை வற்புறுத்தி இப் பணியில் ஈடுபடுத்தினார்.. இவ்வளவு வற்புறுத்துகிறாரே என அப்போது சற்றே கடுப்பாக இருந்தாலும் பின்னர் எனக்கே சுயமாய் ஏற்பட்ட ஈடுபாடு……தொடர்ந்து என் மொழியாக்கப் படைப்புகளுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்…இவையெல்லாம் மிகுந்த மன நிறைவளிக்க இப்போது நன்றியுடன்அவரை நினைக்காத நாளில்லை. இது வரை நான்கு மொழியாக்கச் சிறுகதை நூல்கள் வெளி வந்துள்ளன. கதைக் களங்கள்.. மொழி…..கலாச்சாரம்….வாழ்க்கை முறை முதலானவை முற்றிலும் வேறானாலும் எம் மொழியாயினும் மனிதர்களும் ஊர்களும் உறவுகளும் உணர்வுகளும் பிரச்னைகளும்..சமூகக் கூறுகளும் அவை சார்ந்த அனுபவங்களுமான வாழ்வியலின் கண்ணாடிப் பிம்பங்கள் தாமே சிறுகதைகள்! தெலுங்குச் சிறுகதைகளும் அவ்வகையில் தானே அமையும்! ஆனால்….. சொல்லும் உத்திகள்…வடிவ நுணுக்கங்கள் ஒரு குறிப்பிட்ட மொழியிலேயே படைப்பாளருக்குப் படைப்பாளர் வேறுபட்டு தொனிக்கும் போது தெலுங்குப் படைப்பாளர் அணுகு முறையிலும் அந்த வித்தியாசம் இருக்கத் தானே செய்யும்! . குறிப்பாகக் சிறு கதைகளின் அளவு..! தெலுங்கில் கவிதைகளே நீள நீளமாய் இருக்கும். கதைகள் குறுநாவல் போல் பத்து பன்னிரண்டு பக்கங்கள் வரை நீளும். தமிழில் பத்திரிகைப் பிரசுரம் என்று வரும் போது நான்கு அல்லது ஐந்து பக்க அளவிலேயே சிறுகதைகளின் கட்டமைப்பு அமைவதால்..அநேக நல்ல தெலுங்குச் சிறுகதைகள் விட்டுப் போகும் நிலைமை.! ஆனாலும் இயன்றளவில் தரமான சின்னக் கதைகளைத் தேர்வு செய்வதில் முனைப்பு கொள்கிறேன்..அநேகமாக என் ஐந்தாம் மொழியாக்கச் சிறுகதை நூல் அடுத்த ஆண்டில் வெளிவரலாம். துவக்கத்தில் நான் குறிப்பிட்டது போல் ஒரு சிறுகதையின் தாக்கம் சுவையான ஃபில்டர் காப்பியின் ததும்பும் நுரை போல் நினைவுகளில் ததும்பிக் கொண்டே இருக்க வேண்டும். பிரபல எழுத்தாளர் ஆர.வி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்---- -“ வாசகனை குறைந்த பட்சம் ஒரு நாளாவது ஒரு சிறுகதை பாதிக்க வேண்டும்...பாதிப்பு ஏற்படுத்தாத கதையில் ஜீவனே இல்லை என்றாகிறது” . .கதைகளில் அவர் குறிப்பிட்ட அந்த உயிர்ப்புக்காக என்னால் இயன்றவரை முயன்றுள்ளேன்.இனி வரும் படைப்புகளில் இன்னும் முயல்வேன். இந்த என் ஐந்தாம் சிறுகதை நூல் படைப்புப் பேராளுமை சுப்ரபாரதிமணியன் அவர்கள் மூலம் “ கனவு “ வெளியீடாய் வருவதில் பேருவகை எனக்கு,! அவருக்கு என் நெஞ்சு நிறை நன்றி மீண்டும் மீண்டும்! கதைகளைப் படிக்கும் வாசிப்புப் ப்ரியர்களுக்கு அன்புடன்……….வாழ்த்துகளுடன்…------------ சாந்தா தத், ============== சாந்தா தத் பிறந்த ஊர்.,. காஞ்சிபுரம்.. வசிப்பிடம் ஹைதராபாத். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்துப்பணி. தமிழில் சுய படைப்புகள். இருபதாண்டுகளாய் மொழியாக்கப் படைப்புகள்.. (தெலுங்கினின்று தமிழுக்கு) சுய படைப்பு விவரங்கள்---- தமிழில் முதன்மைப் பணி சிறுகதைகள். முன்னூறு கதைகள் வரை பிரசுரம். சமீபமாய் அதிகளவில் கட்டுரைகளும். அவ்வப்போது நேர்காணல்... நூல் திறனாய்வு.!வெகுஜனப் பத்திரிகைகள் இலக்கிய இதழ்கள் இரு பிரிவுகளிலும் படைப்புகள் பிரசுரம். இது வரை வெளிவந்த சுய படைப்பு நூல்கள்.. 6. சிறுகதை நூல்கள்.. 4 கட்டுரை நூல்கள்... 2 மொழியாக்கப் படைப்பு விவரங்கள்... இருநூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகள். ஏறக்குறைய முன்னூறு கவிதைகள். மொழியாக்க நூல்கள்------ நாவல் சிறுகதை... கவிதைகள் என மொத்தம் பன்னிரண்டு நூல்கள்.! இவற்றில் நான்கு சாகித்திய அகாடமி நூல்கள். சுய படிபபுகளுக்கான பரிசுகள்.. விருதுகள்--- லில்லி தேவசிகாமணி விருது.{கோவை) இராஜாஜி அறக்கட்டளை விருது (சென்னை ) பகவதி அறக்கட்டளை விருது (திண்டுக்கல் ) திருப்பூர் தமிழ் சங்க விருதுகள். . இலக்கியச் சாரல் விருது.. லேடீஸ் ஸ்பெஷல் விருது... உரத்த சிந்தனை விருது,. நியூ செஞ்சுரி புத்தக நிலைய விருது.. (எட்டயபுரம்).. கோதராஜு விருது (ஹைதராபாத் ) தாரைப்புள்ளிக்காரர் விருது (சேலம்) சக்தி விருது (திருப்பூர்) தவிர பல்வேறு பத்திரிகைகப் போட்டிகளில் பரிசுகள்,, நிறை இலக்கிய அமைப்பின் அசோகமித்திரன் விருது சாரபாய் " எழுத்தரசி " பட்டம்... " கோடை மழை " எனும் சிறுகதை அமுதசுரபி இதழ் போட்டியில் பரிசு.. ..அம் மாதச் சிறந்த சிறுகதை என இலக்கியச் சாரல் அமைப்பின் தேர்வு... தமிழ்நாடு கல்வித் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் பாடநூலில் இடம் பெற்றது.., ... கல்லூரிப் பேராசிரியர் ஒருவரால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது... கலைஞர் பதிப்பகம் வெளியிட்ட 2020-21 சிறந்த படைப்புகள் தொகுப்பு க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.. எனப் பல சிறப்புகள் பெற்றுள்ளது. மொழியாக்கப் படைப்புகளுக்கான விருதுகள்.. பரிசுகள் விவரங்கள்---- தாஸ்னா விருது (கோவை) திருப்பூர் தமிழ் சங்க விருது.. மொழிபெயர்ப்பாளர் சங்க விருது (சென்னை) நல்லி-திசைஎட்டும் விருது... தமிழ் இலக்கியப் பெருமன்ற விருது (சேலம்) தமிழ்நாடு சிற்றிதழ் சங்க விருது.. அறந்தாங்கி நாராயணன் விருது.. மற்றும் ஹைதராபாத் தமிழ்.. தெலுங்கு அமைப்புகளின் விருதுகள் பிர விவரங்கள்..... ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் தமிழ் காலாண்டிதழ் "நிறை" யின் ஆசிரியர். " திசை எட்டும்" மொழியாக்க இலக்கிய காலாண்டிதழ் இணை ஆசிரியர் குழுவில் தெலுங்குப் பிரிவுக்காக..... "கதைசொல்லி" இதழ் ஆலோசகர் குழுவில் ஒருவர். .. பிரபல எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி அவர்களின் " இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு " எனும் மா பெரும் திட்டத்தின் லுங்குப் பிரிவுக்காக மொழியாக்கப் பணி. ----------+-----------
திருமூர்த்தி மண் ( படுகளம் 2 ) நாவல் வரலாறுகள் தொன்மங்களாகும் திருமூர்த்தி மண் ( படுகளம் 2 ) நாவல் / சுப்ரபாரதி மணியன் வரலாறுகள் தொன்மங்களாகும். தொன்மங்களும் வரலாறாகும்.திருமூர்த்தி மலைப் பிரதேசம் சார்ந்த இரண்டு தொன்மங்கள் இந்நாவலில் உள்ளடங்கி அந்தத் தொன்மக் கதாபாத்திரங்கள் இன்றைய யதார்த்த வாழ்விலும் தென்படுவதை இந்நாவல் சொல்கிறது. திருமூர்த்தி மலையின் நாயகர்களும், உச்சி மாகாளியும் அந்த வகை தொன்மங்களில் நிறைந்திருக்கிறார்கள் தொன்மங்களைப்போலவே பெண்கதாபாத்திரங்களும் தொன்மங்களாகி படிமங்களாகி நிலைத்து நிற்பவை. அந்த வகையில் இந்த நாவலில் தென்படும் பெண்கள் தாய்மையின் அடையாளமாக இருக்கிறார்கள். உழைப்பின் சிகரங்களாக இருக்கிறார்கள். கல்வி குறித்த உரிமைகளை நிலைநாட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து விலகிச் செல்பவர்களாக இருக்கிறார்கள் விவசாயமும் பஞ்சாலையும் திருமூர்த்தி மண்ணின், உடுமலை மண்ணின் அடையாளங்களாக இருந்து பல்வேறு மாறுதல்களை அடைகின்றன. நவீன யுத்திகளும் வியாபாரப்போக்குகளும் விவசாயத்தை விட்டு விவசாயிகளை விலகச் செய்கின்றன். பனியன் உற்பத்தி, பவர்லூம் -– விசைத்தறி நெசவில் ஈடுபடச்செய்கின்றன. நுகர்வு சார்ந்த எண்ணங்கள் பாசப்பிணைப்புகளைத் தவிர்த்து விட்டு உறவுகளிலேயே எதிரிகளாக்கிவிடுகின்றன குடும்ப ஆடம்பரச் செலவுகளால் சில குடும்பங்கள் சிதைகின்றன. சாதிகள் சார்ந்த சார்பும் வேற்றுமையும் மனிதர்களைப்பிரித்துப் போடுகிறது. மதுரை, திருப்பூர், உடுமலை மக்களின் வாழ்க்கைகளால் இந்த நாவல் நிரம்பி வழிகிறது. தலித்சமூகம் சார்ந்தவர்களின் எழுச்சியும் ஆதிக்கசாதி சார்ந்தவர்கள் கல்வி பெற்று விளங்குவதும், ஆலை சொந்தக்கார்ர்கள் இந்த சாதிய அடுக்குகளில் நிறைந்திருப்பதும் காட்டப்பட்டுள்ளன. . 50 வருட உடுமலைப்பிரதேசத்தைச் சார்ந்த சுமார் 40 கதாபாத்திரங்களின் வாழ்வியல் அனுபவங்கள் ஊடுபாவாக இந்த நாவலில் விளங்குகின்றன . ( அந்தக்கதாபாத்திரங்களின் கோட்டுருவங்களைகொண்டு அவர்களை உயிர்பித்திருக்கிறார் ஓவியர் ஜீவா )பள்ளிபுரத்தில் கூத்தம் பூண்டி ஆத்தாளின் கூட்டுக்குடும்பம் இதன் மையம். கவுண்டர்களின் விவசாய பின்னணி ஆலைக்குச் சொந்தமான சோமுத்தேவரின் குடும்ப தடங்கள் , எளிய மக்களாய் கிண்று வெட்டுவதிலிருந்து கரும்புவெட்டு வேலை வரைக்கும் பல தரப்பட்ட சாதாரண மனிதர்களின் அனுபவங்கள் இதிலுள்ளன. ஜீவனுள்ள , மிகை எதுவும் இல்லாத அனுபவங்கள். அவை சொல்லப்பட்ட முறையில் எந்த இலக்கியச் சொக்கட்டான் விளையாட்டும் இல்லாமல் யதார்த்த பாணியின் உச்ச எழுச்சியைத் தொடுபவை வில் அம்பு எடுத்து ஆடும் படுகள நிகழ்ச்சி போல் பல பழிவாங்கல்கள். நாவலின் இறுதியில் அப்படியானப் பழி வாங்குமெண்ணத்தில் கொலை செய்து விடுகிறவன் நல்லவன்தான் . ஆனல் சூழலும் பழிவாங்கும் எண்ணங்களும் அவனைச் சிறைக்கு அனுப்பிவிடுகிறது .கனகவேல் போன்ற மக்களுக்காகப்பாடுபடும் நல்லவர்கள் எதிர்பாராத வித்ததில் உடல் நலிவடைந்து மக்களிடமிருந்து மறைந்து போகிறார்க்ள் பங்காளிகளின் உறவும் பகைமையும் கண்ணாமூச்சி ஆடும் வித்தைகளை பல சம்பவங்கள் மூலம் சொல்கிறார் . இந்த விதத்தில் அவை ஊர் சனியன்கள் . இதைத் தவிர ஊர் சனியன்களாக பல விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது . முரடுத்தனத்தில் ஒவொரு சாதியும் ஒன்றை மிஞ்சிக்கொள்ளும் சம்பவங்கள். கிணறு வெட்டு போன்றவை மிக முக்கியத்திருப்பங்களாக அமைகின்றன. கிணற்று விவசாயம் போய் போரிங் போட்டு தண்னீர் எடுப்பதும் முக்கியமாகி விடுகிறது , திருமூர்த்தி அணை மக்களின் பாசம் சார்ந்த நடவடிக்கைகள் சில சமயங்களில் பொய்த்துப் போகின்றன, திருமணத்திற்குள்ளேயே பெண்களை முடக்கிப்போடுவது சாதாரணமாக அமைந்து விசித்திரமானதாகத் தென்படுகிறது..குழந்தை பாக்யம் இல்லாத பொன்னி வரதனை சகித்துக்கொண்டு வாழ்கிறாள்.தென்னை மரம் பட்டுப்போவதைப்போல் ராஜேஸ்வரி, வெங்கிட்டம்மாள் போன்றோரின் காதலும் திருமணமும் தடைபடுகின்றது. படித்துக்காதலித்து தோல்லியில் மயங்குகிறவர்கள். படிக்காமலும் தோல்வியில் மயங்குகிறவர்கள் என்று விதவிதமாய் மனிதர்கள் . ராஜி மற்றும் வெங்கிட்டாம்மாவை எங்காவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று பலரும் துடித்து பல முயற்சிகளை எடுக்கிறார்கள். பழனியம்மாள் கருப்பாயம்மாள் போன்ற முதியவர்கள் குடும்பப் பெருமையையும் பெண்களையும் காப்பாற்றும் முயற்சியில் படிமச் சித்திரங்களாகுகிறார்கள்.மனச்சிதைவுக்குள் சாதாரணமாக்ஆளாகக் கூடிய சூழல்கள் .இந்நிலையில் அரங்கன் போன்ற மன நல மருத்துவர்கள் உலாவும் முன்மாதிரியாக இருக்கும் மன நல மருத்துமனைகள் நல்லச் சித்திரங்களாக இந்நாவலில் கண் முன்னால் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. வறண்டு போகும் திருமூர்த்தி அணை கூட ஒரு படிமமாக நிலைபெறுகிறது அது நிலம் சார்ந்த படிமமாக இல்லாமல் மனிதர்கள் சார்ந்த உருவவியலாக அமைகின்றன. அணை சுருங்கி ஏழைகளின் குளம் குட்டை சிறுத்துப்போகிறது. கிராமமக்களுக்கு குடி நீர் வேண்டும். விவசாயத்திற்கு அணைத்தண்ணீர் விவசாயத்திற்கு வேண்டும்.. இதெல்லாம் கிராமத்தின் இளைய தலைமுறையினரை திருப்பூர் பனியன் தொழிலுக்கும், விசைத்தறிக்கும் துரத்தும் விசயம் முக்கியமானதாக உள்ளது. மீசையும் தோள்த்துண்டும் கொங்கு மனிதர்களின் நல்ல பெருமைகுரிய அடையாளங்கள்.அவை தரும் கற்பிதங்களை பல இடங்களில் பலப் பிரச்சினைகளின் அலைசலாகக் காணலாம் நல்ல சாப்பாட்டைச் சொல்லும் போது கொங்கு பிரதேசத்தில் “ ஒணத்தியானப் பலகாரம் “ என்பார்கள். அது போல் நல்ல இலக்கிய விருந்தாய் ஒணத்தியானப் பலகாரமாய் இந்நாவல் அமைந்துள்ளது . எல்லோருக்கும் பெயர் இருக்கும் போது திராவிடக்கட்சித்தலைவருக்கு மட்டு இல்லாமல் இருக்கிறது பகுத்தறிவு சார்ந்த இயக்கங்களின் ஊடுருவல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு பல அடையாளங்களாய் பல சுவடுகள் உள்ளன. அவை திராவிட அரசியலின் பங்காய் விளங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது. விதைக்குள் மரம் ஒளிந்திருப்பதை நாம் நம்பியாக வேண்டும். அது போலத்தான் பள்ளிபுரம் என்னும் சிறு கிராமத்தில் ஒளிந்தும் வெளிப்படையாகவும் நடைபெறும் நிகழ்வுகளையும் நாம் நம்பியாக வேண்டும் என்ற ஆசிரியரின் கூற்று நாவலின் ஆசிரியரால் ஓர் இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி நம்பியாக வேண்டிய அல்லது நம்பும் வகையிலான சம்பவங்களின் தொகுப்பாகவே இந்த நாவல் அமைந்துள்ளது . ” அயலார் படையெடுப்பால் வெல்லக்கட்டித்தமிழின் பல் பிடுங்கப்ப்ட்டு தமிழ் அவியல் தழைக்கிறது. கூட்டு வழிபாடுகள் போய்ச் சாதி வழிபாடுகள் செவிப்பறைக் கிழிக்கின்றன “ என்றக் குர்றை நினைவுபடுத்த பல செய்திகளை இந்த நாவல் உள்ளடக்கியிருக்கிறது. நவீன இலக்கிய சார்ந்த வறட்சி கொண்டது உடுமலைப்பகுதி . ஆனால் உடுமலைப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையை முந்தைய படுகளம் நாவலின் தொடர்ச்சியாகக் கொண்டு வந்திருப்பதில் அம்மண்ணின் வளமையான அனுபவங்களைப் பதிவு செய்ததில் முக்கியப் பங்கு ப. க. பொன்னுசாமி அவர்களுக்கு இந்த இரு நாவல்கள் மூலம் நிரைவேறுகிறது . நெடுஞ்சாலை விளக்குகள் போன்ற பிற களங்களைச் சார்ந்த அவரின் நாவல்கள் இன்னும் வேறு திசைகளில் கலங்கரை விளக்காய் வெளிச்சம் காட்டுபவை என்பதையும் குறிப்பிட வேண்டும்.கொங்கு இலக்கியத்தின் இன்னுமொரு மணிமகுடன் எனலாம் ( Rs 500/ pages 620 > NCBH Chennai ) ReplyForward
40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும் இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள் வெளியீட்டில் கலந்து கொண்டனர். ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அரபிமொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.. அதை கேரளாவைச் சார்ந்த லிலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது அவர் கலந்து கொள்ள இயலவில்லை. சுமார் 60 மலையாள பதிப்பக அரங்குகள் இருந்தன இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவே . தமிழில் டிஸவரி புத்தகநிலையம் சென்னை சில பதிப்பகப்புத்தகங்களுடன் கலந்து கொண்டது மேட்டுப்பாளையம் ஓவியர் தூரிகை சின்ராஜ் அவர்கள் வரைந்த 25 அமீரகத்தில் வாழும் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சியில் ரைட்டர்ஸ் பாரம் அரங்கில் கவனம் பெற்றன . ஓவியர் தூரிகை சின்ராஜ் அவர்களும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களும் புக்கிஷ் பாரட்டு விருது பெற்றனர் துபாய் எக்ஸ்போ கண்காட்சி ஆண்டு தோறும் ஒரு நாட்டில் நடைபெறுவது. இவ்வாண்டு துபாயில் நடைபெற்று வருகிறது. 1100 ஏக்கர் பரப்பில் பெரிய இக்கண்காட்சியில் இந்தியா உட்பட 200 நாடுகளின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அமீரகத்தில் நடைறும் மனித உரிமை மீறல், இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பும் புறக்கணிப்பும் செய்தன . துபாய் எக்ஸ்போவில் மாமல்லபுரம் சிற்பங்கள் , தஞ்சை பெரிய கோவில் குறித்த வீடியோக்களும் படங்களும் இடம்பெற்றிருந்தன. கலைப்பிரிவில் அடூர் கோபால கிருஷ்ணன் குறித்த சிறப்புக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சுப்ரபாரதிமணியன்,
ஸ்னேஹி எனும் நாய் : சிவமணி கதைகள் சிவமணியின் உரைநடை கவிதைப்போக்கிலிருந்து மாறுபட்டு சாதாரண குடும்ப நபர்களையே மையமாகக் கொண்டது. லவுகீக வாழ்க்கையின் நுணுக்கமானத் தருணங்களை சொல்வது.அன்பிற்குறிய ஒரு நாய் வெளிநாடு போவதில் உள்ள சிரமங்களைச் சொல்லும் கதை அபாரம். அப்படித்தான் வேற்று மண்ணில் தமிழை, தமிழ்ப்புத்தகங்களைக் கொண்டு போவதும் ஒரு கதையில் . நொண்டி வீடு போன்றக்கதைகளில் பழகிப்போய்விட்ட மனித இயல்புகள் கதைகளாகியுள்ளன. ஆட்டிடம் பாதித்தக் குழந்தைகளைப் பற்றி சொல்கிற கதைகள் விசேசமானவை. புலம் பெயர்ந்த மண்ணில் மணல் பாறைகளாய் மாறி விட்ட மனிதர்களைப் பற்றியக் குறிப்புகள் பல கதைகளில் காணக்கிடைக்கிறது.நாவலாக்கவேண்டிய அந்தத் தளங்களில் அவர் இனி பயணப்படவேண்டும் ( ரூ 150 ஓவியா பதிப்பகம், வத்தலகுண்டு ) சுப்ரபாரதிமணியன்,, திருப்பூர் 9486101003
அந்நிய மனிதர்களும், அந்நியமாதலுமான சாந்தாதத்தின் மனிதர்கள் சாந்தா தத் அவர்களின் சிறுகதைகளின் உலகம் மத்தியதர வர்க்க மனிதர்கள் மற்றும் கொஞ்சம் விளிம்பு நிலை மனிதர்கள் என்று இருக்கும். மத்திய வர்க்கத்து மனிதர்களின் வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களும் பகிர்வுகளும் அவரின் படைப்புகளில் பெரும்பான்மையான கதைகளின் மையமாக இருக்கிறது அவர் பயணங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கிறார் வெவ்வேறு சூழ்நிலைக்கு செல்கிற போது அங்கு இருக்கிற நிலவியல் சார்ந்த விஷயங்களையும் சுற்றுலா அம்சங்களையும் அனுபவங்களையும் பல கதைகளில் முன்பே பதிவு செய்திருக்கிறார் .அவ்வகை பதிவுகளை இந்த கதைகளில் கூட வாரணாசியை, டார்ஜிலிங் முதற்கொண்டு பல ஊர்கள் பற்றிய விவரங்களோடு நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது காதல் பற்றி ஓரிரு கதைகளாவது இவரின் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கும் .அந்த வகையில் இந்த தொகுப்பில் இரண்டு காதல் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன.ஹலீம் என்ற நிஜாம் கால ஸ்பெஷல் பற்றிய சுவை முதல் கதையில் நிறைந்திருக்கிறது நானும் அதைச் சுவைத்திருக்கிறேன். அந்த சுவை போலவே அவரின் அந்த கதையும் சுவாரஸ்யமாக இருக்கிறது .அதில் மின்சார குழம்பு என்று ஒரு வார்த்தையை மின் வெளிச்சத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார் .அது புதிதாக இருந்தது அது போல பல புதிய வார்த்தைகளை அவரின் கதைகளில் இடையில் காணமுடியும். இன்னொரு கதையில் காசியில் எதையாவது விடனும் என்று காதலை விட வேண்டி இருக்கிற சூழ்நிலை உள்ள சிலரை காட்டுகிறார். சாந்தா த்த்திற்கு கிரிக்கெட்டின் மீது பைத்தியம் உண்டு அந்த பைத்தியத்தை அவர் அதற்காக செலவிடும் நேரம் மற்றும் முகநூல் போன்றவற்றில் அவற்றைப் பற்றி எழுதுகிற வேகம் இவற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .அந்த கிரிக்கெட் அனுபவங்கள் இதில் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது . பண்டிகைகள், தொன்மங்கள் போன்றவற்றில் உள்ளார்ந்த அர்த்தங்களும் சமகால தேடல்களும் அவருடைய கதைகளில் இருந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் போனாலு , பத்கmமா போன்ற பண்டிகைகள், தொன்மங்கள் அமைந்திருக்கின்றன . அவற்றின் நீட்சியாய் மனிதர்களையும் இக்கதைகளிலும், இங்கும் பார்க்கிறோம் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் எப்போதும் நம்மை பயப்பட வைக்கும் அல்லது குறுகுறுக்க வைக்கும் அப்படித்தான் வேலைக்காரிக்கு ஏன் தனி பிளேட் என்று வெள்ளந்தியாய் குழந்தை கேட்கிறது. குழந்தைகளின் மனநிலை சார்ந்த பல்வேறு கதைகள் இவற்றின் ஊடாக தெரிகின்றன. கொரானாகாலத்தில் உறவுகளின் பிணங்களை நடுத் தெருவில் விட்டுவிட்டும் கைவிட்டு செல்கிறவர்கள் பற்றிய கதை இருக்கிறது இதைத் தவிர சாதாரண காலங்களில் தங்களால் கைவிடப்பட்டு அனாதைகள் ஆனோர் , ., திக்கற்றவர்கள் போன்ற பல மனிதர்களை இங்கே சந்திக்கிறோம். சாந்தாத்தின் கதைகளில் உறவினரும் நண்பர்களும் சந்திப்பது அதிகம் இருக்கும் அந்த சந்திப்பின்போது நடைபெறும் உரையாடல் மற்றும் பரிமாறிக்கொள்ளும் உணவு வகைகள் பற்றிய பல செய்திகள் இருக்கும் . சங்கிலி பறிப்பு போன்றவற்றில் மனதை இழக்கும் பெண்கள் நல்ல காலம் செய்யும் வாய்ப்பு நம்மை தேடி வராது நாம்தான் உருவாக்க வேண்டும் என்று சொல்லிக்கொள்வதில் ஆறுதல் அடைகிறார்கள் .அதுவும் அந்த கோதுமை சங்கிலி சிறப்புடையதாகும் வீடுகளில் செய்யப்படும் உணவு வகைகள் பற்றிய பல்வேறு குறிப்புகள் இந்த கதைகளில் பல பகுதிகளில் இருக்கின்றன .உணவு சமைக்கும் முறைகள் பற்றியும் ஆந்திரா தெலுங்கானா பகுதியில் சமையல் முறைகள் பற்றியும் பல்வேறு விவரங்களை இந்த கதைகளில் இருந்து நாம் பெற முடியும் .நோய் என்பதும் இந்த கதைகளில் பெரும்பாலும் பேசப்படுகிற அம்சமாக இருக்கிறது. ஒலி ஒளியாய் உடல்வலி என்று ஒரு வரி கூட இந்த கதைகளில் தென்பட்டது. பலவகையான மாந்தர்கள் நோயான உடலுடன் அலைகிறார்கள் இந்த நோய் தன்மையை பல கதைகளை நாம் கண்டு கொள்கிறோம் .அதுவும் கொரான சார்ந்த நோய் பல மனிதர்களை சிதைக்கிறது .ஆம்புலன்ஸ் கிடைக்காமல் செத்துப் போனவர்கள் பற்றிய மனைவிகளின் சோகம் இருக்கிறது. வேலை இல்லாத நிலையில் பசியால் செத்தவர்களை எண்ணி நொந்து போகிறார்கள் சிலர் கொரானா வைரஸ் காலத்தில் மக்கள் முடங்கிக் கிடந்தாலும் கிரிக்கெட் டிக்கெட் விற்றுப் போகிற விஷயமும் நடக்கிறது. எளிமையான வரிகளில் நோய்க்கூறுகள் தன்மையை பல கதைகள் விரித்துக் கொண்டு போகின்றன. வேற்று மாநில சூழல் சார்ந்த விவரிப்பும் அந்த மனிதர்களின் அந்நியமாதலும் இந்த தொகுப்பில் முக்கிய விஷயங்களாக இடம்பெற்றிருக்கின்றன ஆறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் சாந்தா தத். இந்த தொகுப்பின் மூலம் அவற்றின் தொடர்ச்சியான அனுபவங்களை சிறுகதைகளாக முன்வைத்திருக்கிறார் .பாராட்டுக்கள் சுப்ரபாரதிணியன் 9486101003
நகுலன் நூற்றாண்டு சாகித்ய அகாதமி நிகழ்ச்சி , கும்பகோணம் குறைகள் 1. நானும் திரைப்பட இயக்குனர் அருண்மொழி அவர்களும் பதிவு செய்த நகுலனின் நேர்காணல் பிரதியைப் பெற்றுத் திரையிட முயன்றது முடியவில்லை 2. நானும் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரனும் அவருடன் பல புகைப்படங்கள் எடுத்தோம். 5 ஆண்டுகளுக்கு முன் கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கண்காட்சியாக வைத்தோம். அவற்றை மீண்டும் இங்கு கண்காட்சியாக வைக்க முயன்று வெற்றி பெற வில்லை 3. மழையின் காரணமாக கும்பகோணம் கல்லூரிகள், பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தாலும் கணிசமாக மாணவர்கள், பேராசிரியர்கள், இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். நாள் முழுக்க மழை வரவேயில்லை .ஆறுதல் 4, தோழர் ஜமாலனைச்சந்திக்க இயலவில்லை. தாழ்வாரம் பாரதி மோகன் , கவிஞர்கள் செந்தில், வலங்கையூரான் மற்றும் இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி 5. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 20 பக்க கட்டுரையை நகுலன் கவிதைகள் பற்றி அனுப்பியிருந்த அழகிய சிங்கரின் கட்டுரையை படிக்க இயலவில்லை 6. சென்னைவாசிகள் காவியா சண்முகசுந்தரம், பாட்டழகன் , அழகிய சிங்கர் மழையின் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை அந்நியர்கள் நாவல் வெளியீட்டில்: ப. சிதம்பரம் : அந்நியர்கள் நாவல் இன்னும் எடிட்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும் பாரதி ( நடுவர் ): அந்நியர்கள் நாவல் இன்னும் எடிட்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும் சுப்ரபாரதிமணீயன் பதில்: என் நாவல்களில் பின்நவீனத்துவ வடிவம், போக்கு இருக்கும். தொடர்ச்சியின்மை.. நான் லீனியரில் சொல்வது. மையம் இழப்பு, சிதறலாய் துண்டு துண்டாய் சில அம்சங்கள் ஆகிய பின் நவீனத்துவ வடிவில் சிலருக்கு எடிட்டிங் தேவை என்ற குழப்பம் தருவது இயற்கையே “ சாந்த தத் நூலின் முன்னுரை இதை முதலில் சேர்த்தால் புத்தகம் வேலை ஓவர் என்னுரையில் சாந்தாத்த என்னுமிடத்தில் அவரின் கைபேசி எண்ணையும் போடவும் 9985117105 சுப்ரபாரதிமணியன்
நகுலன் நாவல்கள் ; சுப்ரபாரதிமணியன் சாகித்ய அகாதமி கருத்தரங்கம் நகுலன் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன் மிகவும் தனிமைப்பட்ட மனிதராகத்தான் நகுலன் அவர்களை பல சமயங்களில் அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன் தனிப்பட்ட மனிதனின் எண்ண உணர்வுகளை தான் அவரின் எழுத்துக்கள் . பிரதிபலித்தன .எழுத்தாளனின் எண்ணங்கள் கூட நவீனன் அல்லது நகுலன் என்ற பெயரில் அனுபவப் பகிர்வுகள். , புத்தகங்கள் படிப்பது அந்தப் புத்தகங்களைப் பற்றி உள்நோக்கி யோசிப்பது, தனிமையில் ஆழந்து போவது அதைப்பற்றி திரும்ப திரும்ப திரும்ப எழுதுவதிலும் சந்திக்கிற மனிதர்களிடம் பேசுவது தான் அவரின் பழக்கமாக இருந்திருக்கிறது அவருடனான சந்திப்பு மற்றும் உரையாடல்கள் எனக்குப் பல முறை நிகழ்ந்திருக்கின்றது திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு செல்கின்ற போதெல்லாம் திருவனந்தபுரத்தின் மும்மூர்த்திகளை சென்று பார்ப்பது வழக்கம் நீலபத்மநாபன் ஆ மாதவன் , நகுலன் என. மற்ற இருவரை சந்திக்கிற வாய்ப்பு குறைந்து போனாலும் நகுலனைச் சந்திக்கிற வாய்ப்பு எல்லா சமயங்களிலும் நிகழும். காரணம் நகுலனின் எழுத்துக்கள் மற்றும் தனிமை பற்றி அக்கறை கொள்ளும் எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் திரைப்பட ரசிகர்களும் என்று இருக்கும் நண்பர்களில் சில பேராவது அவர் வீட்டுக்கு செல்லலாம் என்ற கருத்தை முன் வைப்பார்கள் .அப்படித்தான் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று அவருடனான உரையாடல்கள் எல்லாம் நான் பதிவு செய்ததில்லை அவை பின்நவீனத்துவ பாணியில் அமைக்கப்பட்டது போல் இருக்கும் அந்த உரையாடல்களில் மையமான விஷயம் இருக்காது. சிதறுண்டு போன பல பகுதிகள் இருக்கும். பல சிதறியக் கருத்துக்கள் இருக்கும் .படித்த சில விஷயங்கள் இருக்கும். ஞாபக மறதியாய் திரும்பத் திரும்ப சிலவற்றை சொல்லிக்கொண்டே இருப்பார் .கேட்டுக்கொண்டே இருப்பார். சாதாரண மனிதனின் இயல்பில் அப்படி திரும்ப திரும்ப சொல்வது குடிகாரர்களின் இயல்பு என்று தோன்றும் .அந்த உரையாடல்களின் அம்சங்களை இன்றைக்கு தொகுத்துப் பார்த்தால் பின்நவீனத்துவ பாணியில் ஒரு பிரதி கிடைத்துவிடும் ஒரே முறை அந்த உரையாடலை பதிவு செய்தேன். திருமதி திலகவதி, பெருமாள் முருகன் போன்றோருடன் சாகித்ய அகாடமியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தபோது அது . அவர் வீட்டிற்கு சென்று சந்தித்த உரையாடல்கள் அந்த உரையாடலில் அவர் தெரிவித்த பல கருத்துக்களை பலர் ஏற்றுக் கொள்ள மறுத்த போது அவை பிரசுர வாய்ப்பை இழந்தன. என்னுடைய எழுத்துக்கள் பைத்திய நிழல்கள் என்று அவரே சொல்வர் அதே சமயம் அவருக்கு பிடித்த சுசீலா என்ற கதாபாத்திரம் அவர் மனதின் பைத்திய நிழல் தான் என்று கூட சொல்லுவார். அவர் எப்போதும் கொண்டாட்ட மனப்பாங்கில் இருந்ததில்லை எழுத்துக்கள் பிரசுரமாகாத சூழல்,. புத்தக வடிவம் எடுக்க இயலாத சூழல் இதெல்லாம் அவரை ஒரு தோல்வியுற்ற மனிதராகவே காட்டி கொண்டிருப்பதில் அவர் வார்த்தைகள் இருந்திருக்கின்றன, என்னைப் போன்ற சமூக நிகழ்வுகளையும் சமூகவியல் விஷயங்களையும் எழுதும் ஒருவருக்கு சமூகத்தில் இருந்து தப்பித்து ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு திரும்பத் திரும்ப சில நண்பர்களைப் பற்றி பேசிக் கொண்டும் சில புத்தகங்களைப் பற்றி பேசிக் கொண்டும் இருப்பது வேறுபட்டு தான் தெரிந்திருக்கிறது. .சமூகம் என்பது சமரசங்களின் கூடாரம். ஆகவே அதனுடன் தொடர்பு வேண்டாம் என்று தன்னைத்தானே சுருக்கி கொண்டவர் . அவர் அப்படி சுருக்கிக் கொண்டதை அவர் எழுத்தில் வடித்திருக்கிறார் அவரின் நிழல்கள் நாவலில் நவீனன் நகுலனுடன் மத்தியிலான உரையாடலாக அமைத்திருக்கிறார். சுசீலா என் மனதின் பைத்திய நிழல். இருபதாம் நூற்றாண்டில் பிரம்மனால் சபிக்கப்பட்டவள் என்று அவரைப் பற்றிய நிறைய சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. குழந்தை பெற்றுவிட்டாள் அவளோடு இருந்த கணங்கள் மிகக் குறைவு .ஆனாலும் அவளை மறக்க முடியவில்லை வாக்குமூலம் நாவலில் சாரதி என்ற நண்பனின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் வாக்குமூலம் என்ற தலைப்பில் நாவலாக யாரும் படிக்கவில்லை படிக்கப் போவதில்லை என்ற நோக்கத்துடனேயே எழுதியிருக்கிறேன் என்று சொல்லுகிறார் ஒரு உரையாடலை கவனியுங்கள் அருளப்பர்: “ கர்த்தர் உங்கள் உடல் நிலை சீக்கிரம் குணமடைய அருள்புரிவாராக” நவீன்ன் : “ இந்த வியாதி வந்ததே கர்த்தரின் அருளால்தான்” நினைவுப்பாதை நாவலில் இதேபோன்ற வடிவம்தான் ., நகுலன் நவீனன் இருவரும் ஒன்று தானா .இல்லை வேறு வேறு r தான் என்று இரண்டு பக்கமும் சொல்லுவார் .நாவல் எழுதுவது அது பிரசுரம் ஆகாமல் போய் விடுவது என்பது பற்றிய ஆதங்கங்கள் .அவன் இஷ்டப்படி அப்படி ஆவானோ இல்லையோ அவன் மனம் சலித்து கொண்டே தான் இருக்கும் ,அவன் சாதனைக்கு அதுதான் காரணம் ,மனதை அப்படி அடக்கி வைத்திருந்தால் மனதை அடக்கினால் ஒளிய ஒன்றுமே சாத்தியமில்லை என்று சொல்லிக் கொள்வார் இலக்கியம் உரையாடல்களில் புதுமைப்பித்தன், புதுக்கவிதை ,புதுக்குரல் போன்ற விஷயங்கள் திரும்பத் திரும்ப இந்த நாவலில் இருக்கின்றன, சரியான தாடியில் தான் பிரபஞ்ச ரகசியம் ஒளிந்துகொண்டிருக்கும் என்பார் ,,சுசீலா என்ற பெண் தொல்லை தருகிறார் ,,பேய் தொல்லை தருகிறது பைத்தியம் அடிப்படை. எந்த மனிதனும் தன்னை காதலிப்பது போல் வேறு ஒருவரை காதலிப்பது இல்லை ,எழுத்தாளர்கள் இல்லை ,நாம் எல்லோரும் பைத்தியங்கள் ,பைத்தியங்கள் பலவிதம் எழுத்தைப் பற்றி எழுதுவதை நீங்கள் ஒரு முதல் தரமான எழுத்தாளராக இருந்தால் என்ன லாவகமாக கயிறு திரித்து இருக்கிறீர்கள். ,ஒவ்வொரு நாவலையும் எழுதி முடித்த பிறகு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவது போல் தான் என்று ஒரு உணர்ச்சி தோன்றியது என்று இந்த நாவலில் கடைசி வரிகளில் எழுதியிருக்கிறார். நவீனன் டைரி நாவலில் . , யாத்திரை குறுநாவலில் அந்த அனுபவம் இப்படி : நாலணாவுக்குக் கிடைக்கும் பகவத் கீதையைப் போல் இந்த இந்த நாய் விவகாரம்தான் அவனைத் தொடர்ந்து வந்தது என்கிறார். இது நாயா . நாவலா என்ற கேள்வியும் வருகிறது சாவைப்பற்றிஅதிகம்பேசுபவர் ரோகிகள் குறுநாவலில் மருத்துவமனை அனுபவத்தை விரித்திருக்கிறார். சாவுக்குப்பின் என்ன நடக்கப்போகிறது என்ற பயத்தைச் சொல்லிக் கொண்டே போகிறார் அவர் இல்லாத காலத்திலும் என் வாழ்வில் இருந்திருக்கிறார் என்பது போல் சில பாத்திரங்கள் ஹரிகரன் சுப்பிரமணிய ஐயர், , சிவன் என கேசவ மாதவன் , சுசீலா போன்றோர் இந்த நாவலில் அதிகம் இடம் பெறுகிறார்கள். விடுபடுவது சாபமோ என்று தோன்றும். பிரதிபலிப்பின் வசீகரத்தில் இருந்து விடுபட முடிவதில்லை .மூளை சிலந்தி வலை பின்னுவது போல் அவர் சொல்லிக்கொண்டே போகிறார் ஒரே தளத்தில் ஒரே நாவலின அத்தியாயங்களாக அவரின் நாவல்களைப் பார்க்கலாம் சமூகத்திலிருந்து விலகி இருக்கிறார் .அது பற்றிய குறிப்புகளையும் சம்பவங்களும் சில இடங்களில் தென்படுகின்றன .பெரும்பாலும் வெறுமை அவரை ஆக்கிரமிக்கிறது .மற்றவர்கள் மீது அது வெறுப்பைத் தருகிறது. படைப்பு மனதை கொண்டுவருகிறது . பைத்தியம் என்று நினைக்கத் தோன்றுகிறது . தன் எழுத்துப் பாணி முன்னோடியாக சிலரை அவர் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார் . வர்ஜீனியா வுல்ப், ஜேம்ஸ் ஜாய்ஸ் ஹைடெக்கர் போன்றவர்களின் இருப்பு குறித்த சிந்தனைகள் அவருடைய நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றன .நவீனன் ஒரு எழுத்தாளன் .நகுலன் ஒரு மனிதனின் புனைப்பெயர் என்று திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறார் ..நோய் வசப்படுத்தும் பெருமை சில சமயங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .சில சமயங்களில் ஆசிர்வாதம் தருகிறது.. இந்த உரையாடலில் ஜே கிருஷ்ணமூர்த்தி, பேய், சாவு பற்றிய விஷயங்களை திரும்பத் திரும்ப வருகின்றன வாழ்க்கையை சாட்சி பூதமாக விசயங்களுக்கு ஈடுபடாமல் பார்ப்பதனால் தான் நான் எழுத்தாளன் போலும் என்று சொல்கிறார் ..சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்ப்பது என்பது தத்துவமாகிறது அவருக்கான இடம் என்று எது என்பது பற்றிய பிரகடனமாகும் செய்திகளும் இதில் உண்டு. தனி மனிதனின் வாழ்வில் பிறப்பு மனம் சாவு என்ற மூன்று அறியாத பருவங்களும் மாறாத புதுமையாகவும் இருக்குது, இருக்கின்றன என்கிறார் . அவரே ஒரு புத்தகம் என்பதை அவர் சொல்லிக் கொள்வதிலும் பேசிக் கொள்வதிலும் வெளிப்படுத்துகிறார். .அவரின் சமூகம் சார்ந்த உணர்வுகள் மாபெரும் உலகம் சார்ந்த விஷயங்களை கூட நிராகரிக்க வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு நவீனன் டைரி நாவலில் ” எதிர்வீட்டில் ஒரு அரசியல் பேராசிரியர் என்னமோ வியட்நாம் பத்தி பேசினா தலை போற விஷயம் மாதிரி தவிக்கிறார் .எனக்கு சிரிப்பு தான் வருது “ என்று குறிப்பிடுவதில் அவரின் அந்த வகை உணர்வுகளின் நோக்கம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.. எதிலும் நம்பிக்கை இல்லை பார்த்துக் கொண்டிருப்பதால் ஞானம் என்கிற அவருக்கு இதுதான் அரசியல் சார்ந்த கருத்த கருத்தாகிறது .வெள்ளை பேப்பரை கருப்பாக்கியதிலிருந்து நான் எழுத்தாளர் ஆகிவிட்டேன் என்று சொல்ல முடியாது என்றும் சொல்லிக் கொள்கிறார் தமிழைக் கொல்லும் மொழிக்கலப்பு என்று அவர் ஒரு இடத்தில் சொல்கிறார் அந்த அந்த கலப்பை நாவல்கள் முழுவதும் வைத்திருக்கிறார் அவர் பயன்படுத்தும் ஷைக்கிள், சம்பாஷணை , பிராப்தம் போன்ற வார்த்தைகள் நாவல் முழுவதும் நிறைந்து இருப்பதால் இந்த கலப்பை நாமும் தெரிந்து கொள்ளலாம். சில அத்தியாயங்கள் என்ற தலைப்பிட்டு ஒரு இருபது பக்கங்களில் ஒரு நாவல் நிற்கிறது .மனம் நிற்கிறது மரம் நிற்கிறது என்ற உப தலைப்புகளில் பல உரையாடல்களை பதிவு செய்கிறார் யோசிக்கோணும் என்ற தலைப்பில் இவ்வகை உரையாடல்கள் இருக்கின்றன ஒருவகையான எழுத்தும் சில சமயம் பிராமணப் பேச்சும் இந்த நாவல்களில் நிறைந்திருக்கின்றன ஒரே தளத்தில் என்று பல நாவல்கள் அல்லது தனிப்பட்ட ஒருவனின் வெவ்வேறு அத்தியாய வழிபாடுகள் என்று இந்த நாவல்களை எல்லாம் சொல்லிக் கொள்ளலாம் .அலங்காரம் நீக்கி .அலங்கரித்து போகாமல் அலங்காரம் செய்து அவஸ்தையை எடுத்தல் பதிவு செய்வது என்பது மாதிரி இல்லாமல் இயல்பாக சொல்வது…இப்படி பக்கங்களில் நிரப்பி இருப்பதாய் தோன்றுகிறது மரணம் குறித்த சிந்தனைகள் நவீனன் டைரி இன்னும் பிற குறிப்புகளும காணக் கிடைக்கின்றன . எழுத்தாளர்களை பாத்திரங்களாக வைத்து நாவல் எழுதினார் என்பதுதான் சிறப்பு. அவருடைய படைப்புகள் பிரச்சுரம் பெறுவதில் சிரமப்பட்டார் . .பலவற்றை அவரே பிரசுரிக்க வேண்டியிருந்தது அதனால் ஏற்பட்ட மன சோர்வும் தனிமையும் அவருடைய எழுத்துக்கு பெரிய காரணங்கள் . நான் லீனியர் போஸ்ட்மாடர்னிஸம் என்ற முத்திரையில் ஒட்ட வைத்துப் பார்க்க முடியும் .இலக்கிய விசாரம் வாழ்க்கையின் சாரமே வாழ்வின் ஒரே லட்சியம் என்றும் கொண்டு வாழ்ந்த சில மனிதர்களின் பட்டியில் நகுலனும் இடம் பெறுகிறார் .தமிழ் நாவல் வடிவங்களில் எந்த வகைக்கும் அடங்காமல் இருந்தாலும் நான் மேலே குறிப்பிட்டது போல் சில விசயங்களைக் கொண்டு பின் நவீனத்துவ நாவல் வடிவத்தில் ஒருவகையில் இதை கண்டு கொள்ளலாம் ..கதை சொல்லும் முறையிலும் பேசுவதுபோல் விடைகொண்டு போவதும் அதன் மூலமாக வெளியாகும் ஆசிரியரின் இயல்பான கட்டுப்பாடற்ற கதை சொல்லும் முறையும் ஒரு அழகான வடிவத்தில் கூட கொண்டு வந்து விட முடியும்.. அவருடைய கதாபாத்திரங்களில் சுசிலா போன்றவை அவரே சொல்லுவது போல் அவள் உறுதி பெற்றவள் . நான் உருட்டும் ஜெபமாலை நான் கண்ட தெய்வம் என்று ஆகிறாள். அவரின் தனிமை வெளியில் எல்லாமும் உள்ளது. சுசீலாவும் இருக்கிறாள் நகுலனும் இருக்கிறார் .நாமும் போய் வந்து கொண்டிருக்கிறோம் அந்த மர்மமான அர்த்தமுள்ள தனிமையை இந்த நாவல்கள்வெளிப்படுத்துகின்றன. நகுலன் என்ற புனைப்பயரில் உள்ள மனிதனுக்கும் நவீனன் என்ற படைப்பாளிக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்களின் தொகுப்பாக இவை அமைந்திருக்கின்றன .தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை விளம்பர மாயமானதாக நினைத்தார் . அ.ந்த விளம்பர உலகத்தில் தனக்கு இடம் தேவை இல்லை என்பதையும் அவர் கண்டுகொண்டார் .அதைத்தான் வெளிப்படுத்தினார் நாவல் கள் என்ற வடிவத்தில் . அது ஒரு வகையான நாவல் போக்காகவும் தமிழில் நிலை நின்று விட்டிருக்கிறது SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003 ReplyReply allForward
12/21 கடந்து போய் விட்டது . வருத்தமே திருப்பூர் இலக்கிய விருதுகள் வணக்கம். திருப்பூர் இலக்கிய விருதுகள் இவ்வாண்டு சென்னைப்பகுதி எழுத்தாளர்களுக்காக 5/12/21 அன்று சென்னையில் நடத்தும் எண்ணத்தில் ஒரு மாதம் முன்பே இடம் தீர்மானிக்கப்பட்டு , இடம் பதிவு செய்யப்பட்டு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பெருமழை காரணமாக 5/12/21ம் தேதிய நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பிற பகுதி சார்ந்த எழுத்தாளர்களுக்கான விழா திருப்பூரில் நடத்துவதும் கொரானா, மழை, ஒமிக்ரான் சூழல்கள் காரணமாகத் தடைபட்டு வருகிறது. சூழல் சரியாக அமையவில்லை. சூழல் சரியாகி இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்புவோம். விழாவில் சந்திப்போம்.பொறுத்துக்கொள்ளுங்கள் +சாமக்கோடாங்கி ரவி ( 99940 79600) = திருப்பூர் இலக்கிய விருதுகள் ஒருங்கிணைப்பாளர்
ப க பொன்னுசாமியின் படைப்புலகம் ஏன், எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும் அடங்கும். கொங்கு வாழ்வியலின் அறம் சார்ந்த கேள்விகளை பூடகமாய் கொங்கு பேச்சுப் படிமங்களின் மூலம் பல பதிவுகள் செய்த திரு ப.க.பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமானப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது. ஒரு படைப்பாளியின் சில படைப்புகள் சிலரை சென்றடைந்திருக்கும். படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள இது போன்ற தொகுப்புகள் தேவை .அவை கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் பயன்படக்கூடியவை அந்த வகையில் “ ரீடர் “ எனும் வகையில் இத்தொகுப்பை எடுத்துக் கொள்ளலாம். திரு பொன்னுசாமி அவர்களின் பல்வேறு படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலரும் தங்கள் அபிப்பிராயங்களை கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை இத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகள், வட்டார இலக்கியம், தொழில்நுட்ப சாதனைகள் , இசைக்கூறுகள் என்று திரு பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் சார்ந்து எல்லாவிதப்படைப்புகளின் ஆய்வு சார்ந்த கட்டுரைகளாக இவை அமைந்திருக்கின்றன. இலக்கியப்படைப்புகள் பற்றி பெரும்பான்மை பேசினாலும் விஞ்ஞானக்கூறுகளும் அறிவியலும் முதன்மை பெறும் இட்த்தில் இருக்கிறது.. மீரா, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் எளிமையானக் கட்டுரைகள் ஒரு புறம்.இன்னொரு புறம் விஞ்ஞானச்சிந்தனைகள் சார்ந்த வியப்புகள் கூடி நிற்கின்றன.. பிரேமாந்ந்தகுமார், மருதநாயகம், மாலன் , திருப்பூர் கிருஷ்ணன் என்று பலர் பல்கோணங்களில் எழுதியுள்ளனர்நாவலின் சில பகுதிகள் பெரும் மலையின் துணுக்கை காட்டுகின்றன. அவற்றை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கல்லூரிக்காலக்கவிதைகள், நாடகங்கள் என்பவை ஆரம்பகாலப்படைப்புகளின் தன்மையைக்காட்டுகின்றன.சுமார் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இவர் இருந்து வருவதின் அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம் ஒரு இலக்கியப் படைப்பாளியின் மொத்தப் படைப்புகள் பற்றிய ஒரு பருந்துப்பார்வைக்கானத் தளமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. முன்பு வெளியான படைப்புகளை சம்பந்தப்பட்டப் படைப்பாளிகளின் ஆசீர்வாத்தோடு இங்கே தொகுத்திருக்கிறேன். கலைடாஸ்கோப் வெளிப்படுத்தும் சித்திரம் போல் அவை ஒரு முழுமையைக் காட்டுகின்றன. முழுமையைத் தேடும் முழுமையற்றப் புள்ளிகளாய் அவை இதில் கோலமிட்டிருக்கின்றன, இக்கட்டுரைகளை எழுதிய படைப்பாளிகளுக்கு நன்றி.இவற்றைத் தொகுப்பாகப் பார்க்கையில் ஒரு படைப்பாளியின் இமாலய பலம் தெரிகிறது இதை வெளியிடும் என் சி பி எச் நிறுவனத்திற்கும் நன்றி சுப்ரபாரதிமணியன்
தேத்தண்ணி – முன்னுரை / சுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘காரிகாவனம்’ என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டு இருக்கிறேன். அதேபோல மலேசிய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘பெண்மை’ என்ற சிறுகதை நூலாகவும் தொகுத்துள்ளேன்.‘காரிகாவனம்’ சிறுகதைத் தொகுப்பிற்கான கதைகளைச் சேகரிக்கும்போது, மணிமாலா மதியழகனுடைய சிறுகதைகளின் தனித்தன்மையைத் தெரிந்துகொண்டேன். அங்குள்ள பிற பெண் எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து அவை மாறுபடும் விதமாய், விரிந்த எல்லைகளும் வேகமான எழுத்து முயற்சிகளும்கொண்டவையாகஎனக்குப்பட்டன. மருது பாண்டியர் யார் என்று கேட்கும் சீன முதியவர், அவர் ஏன் தமிழ் நூல் மேல் அவ்வளவு ஈடுபாட்டுடன் பேசுகிறார் என்பதை ஒரு சிறுகதை சொல்கிறது. சிங்கப்பூர், ஜப்பானியரின் ஆதிக்கத்தில் இருந்தபோது சீனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போராட்டத்தைக் கொரோனா போராட்டத்தோடு ஒப்பிட்டு கதாசிரியர் எழுதியுள்ளார். அம்முதியவரின் அகச்சிக்கலை காலச் சூழலுடன் பொருத்தியதன் வழியாக இச்சிறுகதை நம் கண்முன் காட்சியாக விரிகிறது. நான் சமீபத்தில் ஷார்ஜாவுக்குச் சென்றிருந்தபோது பெரும் வணிக கடைத்தொகுதியில் இதுபோன்ற ஒரு மனிதரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது. வேகம் வேகமென எந்நேரமும் அவசரகதியில் இயங்குவது, தற்கால வாழ்வில் கட்டாயமாகிப் போன ஒன்றாகிவிட்டது. காரியம் முடிந்த கையோடு சம்பந்தப்பட்டவரது சொல்லைக் காற்றில் பறக்கவிடுவதை ஓர் எழுத்தாளரைப்பற்றியக் கதை உணர்த்தியது. தன் மனைவிமேல் ஒருவர் கொண்டுள்ள மிதமிஞ்சிய பிரியத்தை ஒரு கதையில் காண முடிகிறது. அக்கதையிலும் சீன முதியவர்தான் கதையின் நாயகனாக வருகிறார். இக்கதையில் மீன்களைப்பற்றியப் பல சுவாரசியமானத் தகவல்கள் கதையோட்டத்தோடு ரசிக்கும்படி இருக்கின்றன.இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா கிருமி உற்பத்தியான ‘வூஹானை’ குறிப்பிட்டது கதையின் நம்பகத் தன்மைக்குச்சான்றாகிறது. நூலாசிரியர் தன்னுடைய கதைகளில் சிங்கப்பூர் கல்வி பற்றிப் பல விஷயங்களை எழுதியுள்ளார். இத்தொகுப்பிலும், அப்படிக் கல்வி சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. ‘அஞ்சனா’ என்னும் கதையில் வரும் சிறுமியின் அம்மா தமிழர், அப்பா மேலைநாட்டவர்.ஏதோ காரணத்தால் குடும்பத்தை விட்டுவிட்டு அப்பா பிரிந்துவிடுகிறார். பள்ளியில் தமிழ்ப் பாடம் என்றாலே அச்சிறுமிக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. அவள் அப்பாவின்மேல் கொண்டுள்ள பிரியம் கதையில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுமியின் உளச் சிக்கலை வாசகர்களும் உணரும்படிச் செய்தது மிகவும் சிறப்பு. செய்யாத தவறுக்கு ஒருவர் தண்டனை அனுபவிப்பது மிகப்பெரிய கொடுமையாகும். அதுவும் காலங்கடந்து, தான் தண்டனை அளித்தது தவறு என ஒருவர் அறிய வரும்போது அவரது நிலை இன்னும் மோசமாகும். இதை நூலின் தலைப்புக் கதை சொல்லாமல் சொல்கிறது. பணி நிமித்தமாகக் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் கதாமாந்தர்கள், இரட்டை உலகங்களில் வாழும் வாழ்வியல் சிக்கல்கள்; வாடகை வீட்டில் குடி வந்த ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்;சூம் மீட்டிங்கில் நடக்கும் சுவாரசியங்கள்; இன்றைய வாழ்க்கையில் ஓர் அங்கமாகிப்போன சமூக வலைத்தளங்களைச் சிலர் அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதால் நேரும் அவலம்; சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதை நகைச்சுவையோடு சொன்னவிதம் என ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. மணிமாலா மதியழகனின் கதைகள் கொடூரமான விஷயங்களைத் தவிர்த்து மிக மென்மையாக விஷயங்களைச் சொல்லும் இயல்புடையவை. இத்தன்மையிலிருந்து ஒரு கதை மாறுபட்டுள்ளது. கணவன், மனைவி உறவில் உண்டாகும் விரிசலைப் பேசும் கதையில் ‘திருப்பி அடிக்கிறேன்’ என்பது அதிர்ச்சி தரக்கூடியதாய் உள்ளது. தவறு செய்பவர்களின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லவும் வேண்டியுள்ளது. சிங்கப்பூர் வாழ்க்கையில்உள்ள வேலைப்பளுவும் சிக்கல்களும் வெளியில் இருப்பவர்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சிங்கப்பூரில் வாழ்பவர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவே ஒரு கருத்தை மற்றவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அங்கு, இரவு பகல் பாராது உழைத்துச் சிரமப்பட்டு வாழ்கின்ற தமிழர்களின் வாழ்க்கையை இக்கதைகள் துல்லியமாகச் சொல்லியுள்ளன. சமகால வாழ்வின் சிக்கல்களைப் பேசுகிற கதைக் கருக்களேஇத்தொகுப்பில் ஆக்கிரமித்திருக்கின்றன. அந்தந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய இதுபோன்ற படைப்புகள் அவசியமாகின்றன. வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றியப் புரிதல் ஏற்பட இவை வழி வகுக்கும். எழுத்தாளர் ஒரே சீரான நடையில் பிரச்சினைகளை முன்வைக்கிறார். இதேபோல, தமிழகச் சூழலிலுள்ள கதைகளை அவர் எழுதினாலும் இந்த நுணுக்கமும் கூர்மையும் அவருக்குக் கிடைத்துவிடுகிறது. இவை, அவரது தொடர்ந்த எழுத்துப் பயிற்சியாலும் உழைப்பாலும் சமூக நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பதாலும் நிகழ்பவையாகும். மணிமாலா மதியழகன்தனது படைப்புகளை இன்னும் விரிந்த தளத்தில் நாவலாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்த்துகள்! அன்புடன், சுப்ரபாரதிமணியன், திருப்பூர். 10.12.2021
டாலர்பவுண்ட்ரூப்பியா : முன்னுரை கி.நாச்சிமுத்து( மேனாள் சாகித்ய அகாதமி தமிழ் ஒருங்கிணைப்பாளர் ) சிற்றூர்வாழக்கைமுதல்பேரூர்வாழ்க்கைவரைபலவற்றைஅச்சுஅசலானஅனுபவச்செறிவோடுபலபடைப்புக்களைத்தந்தசுப்ரபாரதிமணியன்அண்மைக்காலத்தில்சுற்றுச்சூழல்பற்றியஅக்கறைகொண்டபடைப்பாளியாகமுத்திரைபதித்துவருகிறார்.தமிழின்சிறந்தஇலக்கியப்படைப்பாளியாகவும்இதழாசிரியருமாகவும்திகழும்இவர்உலகமயமாதல்என்றஇராட்சதன்திருப்பூர்என்றநடுத்தரநகரைஅனைத்துலகஅழுக்குபுரியாகஉருமாற்றியநரகத்தின்மனசாட்சியாகவலம்வருபவர் .அதன்சொல்லோவியராகத்தனித்துநிற்கும்இலக்கியச்சிற்பியாகத்தன்னைச்செதுக்கிக்கொண்டவர். சமுகப்போராளியாகவிளங்கிவரும்எழுத்தாளரானசுப்ரபாரதிமணியனுடையஇலக்கியப்பணிஅரைநூற்றாண்டைஎட்டிக்கொண்டிருக்கிறது.அவருடையகைத்துணைபோன்றுஅவர்கொண்டுவரும்கனவுஎன்றதமிழ்ச்சிற்றிதழ்அவர்ஆற்றிவரும்இலக்கியப்பணியின்வரலாற்றுப்ஆவணம்.மறைந்தஅவர்துணைவிசுகந்திசுப்பிரமணியன்நல்லகவிஞராகத்தடம்பதித்தவர்.அவர்எதிர்பாராதமறைவுதனக்குத்தந்ததுன்பத்தைக்கடந்துஇன்னும்தீவிரத்தோடுதன்இலக்கியப்பணியில்முனைந்திருக்கும்சுப்ரபாரதிமணியன்அண்மைக்காலத்தில்பலபடைப்புக்களைத்தந்துவருகிறார். இப்போதுசுப்ரபாரதிமணியன்நமக்குத்தரும்படைப்புத்தான்டாலர்பவுண்டுரூப்பியாஎன்றஇந்தநாவல்.இதற்குஒருஅணிந்துரைவேண்டும்என்றுஅவர்கேட்டுப்பலமாதங்கள்ஆகின்றன.காலம்தாழ்த்துக்கொண்டேவந்ததுஎனக்கேபொறுக்கமுடியவில்லை.அதற்குக்காரணம்உண்டு.சுப்ரபாரதிமணியன்படைப்புக்களைஎல்லாம்மறுபடியும்வாசித்துஒருவிரிவானதிறனாய்வுக்கட்டுரையாகஎழுதிவிடவேண்டும்என்றுநினைத்துக்கொண்டுஅவர்படைப்புக்களைஎல்லாம்திரட்டிஅலமாரியில்அடுக்கிக்கொண்டுவந்தபோதுஅலமாரித்தட்டுக்களில்இடம்போதவில்லை.அத்தனைநூல்கள் .மலைப்பாகஇருந்தது.இவற்றையெல்லாம்படித்துமொத்தமாகஎழுதத்தொடங்கினால்ஆண்டுகள்சிலவாகும்போலிருந்தது.எனவேஎன்பேராசையைவிட்டுவிட்டுஇந்தஅளவில்என்கருத்துக்களைஒருவாழ்த்துரையாகஎழுதிக்கொடுத்துவிடமுடிவுசெய்துஇதைஎழுதிக்கொண்டுள்ளேன். இந்தநாவல்இதற்குமுன்வந்தபுத்துமண்போன்றபாணியில்-சிறுகதைகள்போன்றநிகழ்ச்சிகள்கோத்ததுபோன்றுஅமைகிறது.கதைமாந்தர்களும்கோட்டுருவமாகத்தீட்டப்பெற்றிருக்கிறார்கள்என்றுதோன்றுகிறது.குழாய்ப்புட்டுபோலன்றிஉதிரிப்புட்டுப்போலஇருக்கிறது.இருந்தாலும்புட்டுப்புட்டுத்தான்.சுவையும்அந்தச்சுவைதான். கதைமுன்புதிருப்பூர்என்றுபடுஅப்பாவியாகஇருந்துஒருஊர்இன்றுஒருபகாசுரக்கார்ப்பரேட்டாகக்கொழுத்துப்போனதசையில்நிகழும்கூத்துக்களைஆடிக்காட்டுகிறது. இந்தக்கதைதிருப்பூர்தொழிலதிபர்தேவ்என்றதேவநாதன்.அவர்முன்னாள்மனைவிகலா.அவர்கள்மகன்சத்தியார்த்திஇவர்களைமையமிட்டுநிகழ்கிறது.அவள்தோழியானமாடல்நிஷா.இவர்கள்தொழில்சம்பந்தப்பட்டவர்கள்பத்துபேர். அவரோடநண்பர்கள்பத்துப்பேர் .சந்திரன்என்றஒருதொழிற்சங்கத்தலைவர் . தேவ்குரூப்மேனேஜேர்தூயவன். ஆர்.டி.மேனேஜர்துரை.ஒருஎன்ஜீஓ .அட்வர்டைஸ்மெண்ட்ஏஜண்ட்ராகேஷ்.அடுத்துகருணாநிதிஎன்றவாழ்கவளமுடன்அணிஅறிவுத்திருக்கோயில்பேராசிரியர். தொழிற்சங்கஉறுப்பினர்கள்முப்பதுபேர்.கலப்புமணத்தில்பிறந்தநெதர்லாந்துபெண்தன்இந்தியத்தாயைத்தேடிக்கொண்டிருக்கிறவள்இன்னொருத்தி.இன்னும்லண்டனிலிருந்துவந்தஅலைன்ஸ்டோன் , பார்பராஇன்னும்சிலர்.இவர்கள்எல்லாம்நீலகிரியில்ஒருநட்சத்திரவிடுதியில்சந்திக்கிறார்கள்.ஒருபுதுபிராண்ட்கடைசிநாளிலேஅறிமுகம்செய்யும்நிகழ்ச்சி .அதுக்குஇன்னும்சிலர்.பாஷன்பரேட்,நடனநிகழ்ச்சி.இடங்களைச்சுற்றிப்பார்க்கும்ஒருசிறுஉள்ளுர்சுற்றுலாஇப்படிக்கதைநடக்கிறது.குதிரைமலைக்குச்சென்றபழையசுற்றுலாநினைவுகளும்சேர்ந்துகொள்கின்றன. இந்தநிகழ்ச்சிக்குகம்பெனிமுதலாளிகள்வேண்டுகோளுக்குஇணங்கத்தொழிற்சங்கத்தலைவர்சந்திரன்தன்சகதொழிலாளர்கள்சிலரைஒருசுலோகம்எழுதும்போட்டிமூலம்தேர்வுசெய்துஊட்டிக்குஅழைத்துச்செல்லுகிறார். ‘நாளைராத்திரிநம்மகம்பனியோடபுதுபுராடக்ட்ஒண்ணுஅறிமுகம்இருக்கு.வழக்கமானதுதா. இந்ததரம்ஊட்டியிலெநடக்குது .அவ்வளவுதா . கலைநிகழ்ச்சிகள் , விருந்துன்னுஇருக்கும் . ராத்திரிலேட்ஆயிரும். அங்கேயேதூங்கிட்டுகாலையிலெஐந்துமணிக்குபுறப்பட்டுநாமகம்பனிக்குத்திரும்பிருவம். ஞாயிறுஊட்டியில்முழுக்க. திங்கள்காலைகம்பனிக்குவருவம். எப்படியும்ஒம்பதுபத்துமணீக்குவந்திருவம். வேலைக்குவந்திரணும் .‘ என்றுதன்தொழிற்சங்கத்தோழர்களிடம்சொல்லும்அவர்முன்கூட்டியேசென்றுகம்பெனிஏற்பாடுசெய்திருந்தநட்சத்திரவிடுதியில்தங்குகிறார்.முற்றிலும்புதிதானஅந்தஅனுபவத்தைஅவர்எப்படிஎதிர்கொள்ளுகிறார்என்பதிலிருந்துகதைதொடங்கிநகர்கிறது. இந்தக்கதையில்முடிவுறாதநிகழ்ச்சிகள்,பலமர்மமுடிச்சுகள்அவிழ்க்கப்படாமலேயேஇருக்கின்றன. இதில்வரும்தொழிற்சங்கத்தலைவர்சந்திரன்தொழிலதிபர்தேவநாதன்மகன்சத்தியார்த்திஇன்னும்சிலரும்காணாமல்போகிறார்கள்.நட்சத்திரவிடுதியில்தங்கியபெண்ஒருத்திகாணாமல்போகிறார்.இன்னொருத்திதன்குழந்தையைவிட்டுவிட்டுமாடியில்இருந்துதற்கொலைசெய்துகொள்கிறார்கள்.ஒன்றாகவேமூன்றுநாட்களாய்காணப்பட்டநிஷாவும்காலாவும்கூடக் காணப்படவில்லை. நிகழ்ச்சிதிடீரென்றுமுடிவுக்குவருகிறது.மர்மமுடிச்சுகளும்அவிழவில்லை.ஆனால்கதையும்முடிவுக்குவந்துவிடுகிறது. ‘தேவ்காணப்பட்டார். மறைந்துவிட்டார். சத்யார்த்திவந்தார்என்றார்கள்பார்க்கமுடியவில்லை. மாயமாகஇருக்கிறாரோஎன்னவோ ” ‘’ கார்ப்பட்ரேட்டுகள்மாயமானவர்கள். தூணிலும்இருப்பார் . தூசியிலும்இருப்பார்கள் . ஆட்டுவிப்பார்கள். இரவுமுடிந்துகாலைகிளம்பிவிடவேண்டும்.” ” நம்மீட்டுக்குவந்தஒருவர்காணவில்லை. இங்குதங்கியிருந்தஒருபெண்ணைக்காணவில்லை. ஒருஇளம்பெண்மாடியிலிருந்துகீழேவிழுந்துதற்கொலைசெய்துகொண்டார் . மணப்பெண்என்றார்கள். குடியாஅல்லதுவிரக்தியாதெரியவில்லை. காலையில்ஏதோகளேபரம்போலிருக்கிறது . பலர்தாறுமாறாய்அங்கும்இங்குமாய்ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்புறம்சாதாரணமாகிவிட்ட்து‘’ திருப்பூர்நகரம்உருவாக்கியிருக்கிறகார்ப்பொரேட்உலகின்இருளடைந்தபக்கங்களாஇவை.அல்லதுஅவற்றில்நடக்கும்முகமூடிவாழ்க்கையின்படிஅச்சுகளாஇவை.முடிவுறாதவாழ்க்கையின்போராட்டங்கள்அணிந்துகொள்ளும்சமகாலநாகரிகவடிவமா?யோசிக்கவைக்கிறது.விடையைநாம்தேடிக்கொள்ளவேண்டும்.அதற்கானவிளக்கங்களைநாமேஎழுதிக்கொள்ளவேண்டும்.சமகாலஇலக்கியம்படைக்கும்புதியபுராணங்களும்தொன்மங்களுமாஇவை? நான்இந்தக்கதைஆராய்ச்சிக்கெல்லாம்போகவில்லை.இந்தசிறுநாவலின்சிறப்புஎன்னவென்றால்இதில்சமகாலத்தில்உயிர்ப்போடுவிளங்கும்பலபிரச்சினைகள்பற்றியகுறிப்பும்விவாதமும்வருகின்றன.தொழிற்சங்கங்களின்வலிமை,வீழ்ச்சி,தமிழ்வழிக்கல்வி,வேதாத்ரிமகரிஷியின்மனவளக்கலை,நாத்திகவாதம் , ,தொழில்புதுமையாக்கம்,பெண்ணியம்,சுற்றுச்சூழல்கேடு,பன்னாட்டுத்தொழில்முனைவோர்கள்,அவர்களின்இரட்டைவேடம்,பொதுநன்மைப்பம்மாத்துஎன்றுஇப்படிப்பல.வாழ்க்கையின்உட்பொருளைத்தேடும்தத்துவமனஓட்டங்கள்இப்படி- “ ஊட்டிக்குவந்தம் . . இன்னொருஊர்போறம் . இப்பிடிபலஊர்களுக்குப்போறம். ரயில்லெஏறிஇறங்கிஏறிஇறங்கிவேடிக்கைபாத்துட்டுநாம்இறங்கவேண்டியஸ்டேசன்வந்ததும்நிரந்தரமாகலக்கேஜோடஇரங்கிக்கறம்.. எங்கஎறங்கறதுன்னுடிக்கட்எடுத்ததுனாலேநிச்சயம்தெரிஞ்சுஎறங்கறம். சட்டுன்னுரயில்லெஇருந்துகீழஎறங்கிரயிலைதவறவுடறம்அதுதாசாவு. சாவுகூடஅப்படித்தாநிச்சயமில்லாதது. எப்பன்னுதெரியாது . ஆனால்ஆனாயாரும்ஆள்இல்லாதஒருஸ்டேசன்லேஎறங்கணும்ன்னுரொம்பநாளாஆசை. கடைசிஸ்டேஷன்லேஇறங்கறப்போமறுபடியும்வேறஎடம்போனாநல்லாஇருக்குமுன்னுதோணும் . அப்படித்தாமரணம்வர்றபோதுஅப்பத்தாவாழத்துவங்கணமுன்னுசிலபேர்நினைப்பாங்க.‘ கதைவருணனையில்சிலநுட்பமானபார்வைகள்இப்படி- ‘காலத்தில்அடங்காதபூதம்இந்தஅயர்ச்சி. அதுகாலைநீட்டிக்கொண்டுபடுக்கையில்படுத்துசிரித்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. இவ்வளவுஅதிர்ச்சிகரமாய்அதுசிரித்துஏளனம்செய்யவேண்டாம். இயந்திரத்தனமாய்அதன்சிரிப்புஇருந்துகொண்டேயிருந்த்து. ஒருவகைகசப்புணர்வுஅவனின்வாயிலிருந்துஆரம்பித்துஉடம்புமுழுக்கப்பரவியது.அவனின்உடம்புவியர்வையில்குளித்தது. குளியல்இந்தவியர்வையைப்போக்குமாஎனப்துசந்தேகம்தான். அவன்உடம்புதளர்ந்துபடுக்கையில்கிடக்கும்பூதத்துடன்அடைக்கலமாகிவிட்டதைப்போலஉணர்ந்தான். ‘ ‘அப்பாவிற்குபானுமதியைப்பிடித்துப்போனதற்குசுத்தமானக்கால்கள்காரணமாஎன்றுநிஷாசொல்லிக்கொண்டாள், அம்மாஇறந்தபின்னால்ஆறுஆண்டுகள்கழிந்தன. அப்பாபானுமதியைஎப்படித்தேர்வுசெய்தார்என்றுசொல்லவில்லை.‘ இதில்படைப்பாளிசுற்றுலாநிகழ்ச்சிகளைவிவரித்துநம்முன்அவற்றின்வாயிலாகக்காட்சிப்படுத்தும்இயற்கைவருணனைஎடுப்பாகவெளிப்படுகிறது.அவற்றில்நான்சுவைத்தசிலவற்றைஉங்களிடம்பகிர்ந்துகொள்கிறேன். ‘பன்றிக்குட்டிகள்படுத்துக்கிடப்பதுபோல்இருந்தசிறுபாறைகளின்மேல்அவர்கள்உட்கார்ந்தார்ர்கள்.‘ நீர்அலையடித்துக்கொண்டிருந்த்து. அலையடித்துகசடுகளையும்குப்பைகளையும்மரஇலைகளையும்கரையின்ஓரநீரில்மிதக்கச்செய்தது. நீர்ஒருவகைபச்சைநிறபிரதிபலிப்பிற்குக்கொண்டுசென்றது. தூரத்தில்படகில்போட்டிபோட்டுக்கொண்டுசுற்றுலாவாசிகள்கடந்துகொண்டிருந்தார்கள்.யூஎழுத்தைதிருப்பிப்போட்டதுபோல்நீர்அடங்கியிருந்தது. உயரமானயூகலிப்டஸ்மரங்கள்வானத்தைத்தொடமுயற்சிசெய்துகொண்டிருந்தன..மனிதர்களின்கூச்சல்அலையலையாகமிதந்துகொண்டிருந்தது. தூரத்திலிருந்துகேட்டமலைரயிலின்கூவல்மெல்லஅங்கும்கேட்டது.ஆளற்றபடகுகள்வரிசையாகஅணிவகுத்துநின்றன. குட்டைகுட்டையாய்குடைகள்முளைத்துசிலர்இளைப்பாறஇடம்தந்தன.‘ ‘மலைகூடகறுப்புப்போர்வையைப்போர்த்திக்கொண்டுதூங்கஆரம்பித்துவிட்டது. நீச்சல்குளத்தின்கரைகளில்இருந்தவெவேறுவகையானநாற்காலிகள்ஆளற்றுவானம்பார்த்திருந்தன. மேலேவானம்நீலநிறத்துடன்விரிவடைந்துகொண்டிருந்தது. கீழேபார்வையைச்செலுத்தியபோதுமரங்களின்தலைகளும்செடிகொடிஎனப்பசுமைப்போர்வையும்தென்பட்டது. குட்டையாய்மரங்கள்நின்றுதங்கள்பணிவைக்காட்டிக்கொண்டிருந்தன. பச்சைநிறவர்ணத்தைஅங்கங்கேகெட்டியாயும்நீர்த்தும்போகும்படிதெளித்திருப்பதுபோல்மரங்கள் . திருப்பூர்கார்ப்பரேட்டின்சித்தாந்தத்தைஇந்தச்சூத்திரத்துக்குள்அடக்குகிறார்படைப்பாளி- “ கொஞ்சம்டாலர் . கொஞ்சம்பவுண்ட்.. இதுஇருந்தாப்போதும்எங்கபோனாலும்மாத்திக்கலாம். ரூப்பியாவாமாத்திக்கலாம் “ சுற்றுச்சூழல்ஆர்வலராகஇருப்பவர்சமுகப்போராளியாகவும்இடதுசாரிக்கொள்கையாளராகவும்நாத்திகப்பகுத்தறிவுவாதியாகவும்விடுதலைச்சிந்தனையாளராகவும்மட்டுமேஇருக்கமுடியும்என்றஉண்மையைடாலர்பவுண்டுருப்பியாஎன்றஇந்நாவல்முன்புவந்தபுத்துமண்என்றநாவல்போலநம்மைஉணரச்செய்கிறது. எழுத்தாளர்சுப்பிரபாரதிமணியன்இன்னும்பலபடைப்புக்களைத்தரவேண்டும்.பலபரிசுகளையும்பாராட்டுக்களையும்பெறவேண்டும்.அவர்நாவலைஎன்னுடன்சேர்ந்துநீங்களும்படியுங்கள்.சுவையுங்கள்.கொண்டாடுங்கள். வாகை கி.நாச்சிமுத்து கோவை 641041
சென்னை புத்தகக் கண்காட்சி உயிர்மை வெளியீடு 7 ................................... 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதி மணியன் நாவல் .......................... #45th_chennaibookfair_uyirmmai