சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
Tamil hindu \t சுப்ரபாரதி மணியன்
ஒரு துண்டு ரயில்
சிறுகதைகள்
நெய்வேலி பாரதி குமார்
. பாரதிக்குமாருடைய இந்த தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் இரண்டு பிரிவுகளாக உள்ளன ஒன்று பழைய விஷயங்களை, சரித்திரக் குறிப்புகளை அல்லது பழைய அபூர்வமான தருணங்களை எடுத்துக் கொண்டு அதன் சூழலையும் வாழ்வியல் மதிப்பையும் கதைகளாக மதிப்பிடுதல்
ஒருவகை இன்னொரு வகைக் கதைகள் நிகழ்கால வாழ்வில் உள்ள அம்சங்கள்
முதல் வகை கதைகள் நிறைய இதில் உள்ளன அவை பரிசும் பெறுகின்றன பெரும் பரிசு பெற தகுதியான கதைகள் கூட. சரித்திர குறிப்புகள் சார்ந்த கதைகளை எடுக்கிற போது அந்த காலகட்டத்தின் மொழியையும் சூழலையும் பற்றி நிறைய உழைத்து எழுதுகிறார் என்பது விசேஷமாக இருக்கிறது. அதற்கான மொழியையும் அப்போதைய சூழலுக்குத் தகுந்தபடி எடுத்துக் கொள்கிறார்.. பிறகு இன்றைய வாழ்நிலை சூழ்நிலையில் தீவிரவாத அனுபவங்களை சொல்லும் போதும் இந்த களத்திற்கு அவரின் மொழி சரியாக பயன்படுகிறது
இவை எல்லாமே நிச்சயமாக அவருடைய அனுபவப் பரப்புக்குள் வந்த விஷயங்கள் அல்ல
அவர் கண்டு கொண்ட விஷயங்கள் அல்ல .அதைத் தாண்டி கற்பனை என்ற எல்லையில் பல சாகசங்களை இந்த கதைகள் தொட்டிருக்கின்றன .அந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு எழுதும் போது சிறந்த கற்பனை வளமும் மொழிவளமும் கொண்டு இதை செதுக்குகிறார் அந்தந்தக் காலகட்டத்திற்கான குறிப்புகள் அங்கங்கே மறைந்து கிடக்கின்றன. அவர் பயன்படுத்தும் அந்த கால மொழியில் ஒரு தேர்ச்சி இருப்பது போல் உரைநடை வெளிப்பட்டு விடுகிறது. அந்தந்த காலகட்ட சம்பவங்களின் பின்னணியில் உள்ள மனிதர்கள் ..மனிதர்கள் சார்ந்த சாதி மதம் இவை பற்றி எல்லாம் கூட அவர் நிறைய உழைக்கிறார் தெரிந்து கொள்கிறார். அப்படி தெரிந்து கொள்வதை இந்த கதைகளில் பயன்படுத்தி இருக்கிறார் அப்படித்தான் பனையேறும் தொழிலாளர்கள் வாழ்க்கையாகட்டும், பஞ்சாபில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையாகட்டும், அடையாளம் இழந்து போன மனிதர்களின் முகங்களாகட்டும் எல்லாவற்றையும் காட்டுகிறார் .
இந்த அனுபவப பரப்பு அவருக்கு தொடர்ந்து வாசிப்பின் மூலமும் தொடர்ந்து எழுத்தில் மூலம் தான் கைவரப்பட்டு இருக்க வேண்டும். பலர் அவரவர் சார்ந்த உலகங்களைத் தான் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.சலிப்பு தரும் சூழல் அது. ஆனால் படைப்பாளியின் சவால் அவன் வாழும் சூழலைத் தாண்டி வேறுசூழல்களை எடுத்துக் கொள்வது அதை கச்சிதமாக் காட்டுவது என்பது அரியதாக இருக்கிறது அந்த கற்பனையின் எல்லையும் மொழியின் வளமும் அது சார்ந்த நல்ல உழைப்பும் இந்த கதைகளை மேன்மையான கதைகளாக்க் காட்டுகின்றன .
சரியான, தீவிரமான எழுத்தாளர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கம் முன்னுரையில் வெளிப்படுகிறது. தமிழ் சூழலின் அவலத்தையே அது காட்டுகிறது அதையே ஒரு சிறுகதையில் ஒரு எழுத்தாளர் மரணத்தை ஒட்டி சொல்லப்பட்டிருக்கிறது மனதை நெருடுகிறது . எழுத்தாளர்கள் நிலைமை தமிழில் மாறும் காலம் எப்போதோ என்று ஏங்க வைக்கிறது
அந்த வகையில் இந்த கதைகளின் மேன்மையை யாரும் படித்து உணரலாம்
ஜீரோ டிகிரி பதிப்பகம் சென்னை ரூபாய் 300 சுப்ரபாரதி மணியன்