சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 19 டிசம்பர், 2019

மனதை உருக்கிய ஒரு சமீபத்திய கட்டுரை

இரண்டு தீபாவளிகள். . பொன்னுசாமி

மூன்று வாரங்களுக்கு முன்னால் ஒரு நாள் நான் திருச்சியிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு மகிழுந்தில்  முன் இருக்கையில் அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டே பயணித்துக் கொண்டிருந்தேன்.  வேகம் காட்டும் முள் 80 கி.மீ. அருகில் இருந்தது. எதிரில் வேகமாகப் பறந்துவந்த ஒரு வண்ணத்துப் பூச்சி முன்புறக் கண்ணாடியில் படார் என்று மோதிக் கீழே உருண்டு  நீர்-துடைப்பான் (வைப்பர்) இடுக்கில் சிக்கிக் கொண்டது.  கண்களை அது உறுத்தியால்  துடைப்பானைச் சிறிது  இயக்குமாறு ஓட்டுநரைக் கேட்டுக் கொண்டேன். மேலும் கீழும் துடைப்பான் நகர்ந்தும் சிக்குண்ட வண்ணத்துப் பூச்சி அதிலிருந்து விடுபடவில்லை. `செத்துப் போச்சுங்க,’ சொல்லிக்கொண்டே ஓட்டுநர் துடைப்பானை நிறுத்தினார். அந்தப் பூச்சி மீண்டும் என் கண்களை உறுத்த, மகிழுந்தைச் சாலை ஓரமாக நிறுத்தச் சொன்னேன். ஓட்டுநர் காரை நிறுத்தித் துடைப்பான் இடுக்கில் சிக்கியிருந்த  பூச்சியைக் கையில் எடுத்து உற்றுப் பார்த்திவிட்டு,  `உயிர் இருக்குங்க,’என்று அதை மண்ணில் வீசினார். `அத எடுத்து ஒரு செடிமேல உக்கார வைஎன்றேன். அடிபட்ட நிலையில் பூச்சி கிழே இருந்தால் ஓணான் போன்றவை அதைத் தின்றுவிடும் என்று நினைத்து அப்படிச் சொன்னேன். செடியில் அமர்ந்த அது மெதுவாக இறகுகளை  அசைத்தது. `ஓர் உயிரைக் காப்பாற்றி விட்டோம்என்ற மகிழ்ச்சியில் பயணத்தைத் தொடர்ந்தேன். சாலையின் வலது புறத்தில் `மணப்பாறைஎன்று நடுகல் காட்டியது.
என் சிந்தனையை மீண்டும் அந்த வண்ணத்துப் பூச்சி பற்றிக் கொண்டது. `துடைப்பானில் சிக்குண்ட நிலையில் இன்னும் சிறிது  நேரம் இருந்து,  சிறு தூறல் விழுந்து  துடைப்பான் வேகமாக வேலை செய்திருந்தால், அப்பூச்சி கொடுந்துன்புற்று இறந்து போயிருக்கும்மரணத்தையும்விட, மரணச் சித்தரவதையிலிருந்து அதைக் காப்பாற்றி விட்டோம்; இந்நேரம் அது தன் அழகான பட்டை வண்ண இறகுகளை ஒய்யாரமாக அசைத்துப் பறந்து கொண்டிருக்கும்,’   மனத்திரையில் ஒரு காட்சி நிழலாடியது.
அப்படிக் கண்கள் மூடியிருக்க, மனம் குளிர்ந்திருந்த நிலையில் இன்னுமொரு நிகழ்வு கனவாகப் படர்ந்தது.
அன்றைய நெடிய விமானப் பயணம் முடிந்ததும் இரவு குடும்பத்தோடு கூடி மகிழ்வோம் என்ற நினைவு; பிறகு ஆடும் நாற்காலியில் அமர்ந்து காலைக் காப்பி உருஞ்சலுக்கும், நாளிதழின் வரிகளுக்கும் தலை மெதுவாக மேலும் கீழும் நகரும் நினைவு; அந்த நாளிதழ் பத்தியொன்றில் `40 வயது மதிக்கத் தக்க ஒரு மனித உடல் பேருந்தின் இருக்கைக்கு அடியில் கண்டுபிடிக்கப் பட்டது,’ என்ற செய்தியைப் படிக்கும் நினைவு! அந்த மனிதருக்குக் காப்பி உருஞ்சலும், நாளிதழ்ப் படிப்பும் நின்று போகின்றன.
`என்னுங்க, தம்பி நேத்தே வாரம்னா, இன்னும் வல்லீங்களே?’ மனைவி கேட்கிறாள். `போன் பண்ற,’ அவர் சொல்கிறார்.
`கல்லூரியிலும் விடுதியிலும் இல்லை, ஊருக்குப் புறப்பட்டிருக்க வேண்டும்செய்தி கிடைக்கிறது.
`தம்பியோட கூட்டாளிக்குப் போன் பண்ணுங்க,’ மனைவியிடம் பதட்டம். `நா அவன ரெண்டு நாளாப் பாக்குலீங்க,’ கிடைத்த பதில் வீட்டில் அனவரையும் பதட்டத்தில் ஆழ்த்துகிறது.
பல விசாரிப்புகளுக்குப் பிறகு, காவல் நிலையத்துக்குத் தகவல். `காணவில்லைவிளம்பரம். இரயில் பாதையோரம் துண்டிக்கப்பட்ட கைகள், கால்கள்நாளிதழ் செய்தி. `குளத்தில் தலையொன்று கிடைத்தது,’ காவல்துறைச் செய்தி. தலை, உடல்பகுதி, கைகால் பகுதிகள், மேலும் அடையாளங்கள் சிலயார் என்று அடையாளம் காட்டுகின்றன.
சந்தேகத்தில் சக மாணவனிடம் காவல் விசாரணை. `ஆம், இப்படிச் செய்தேன்,’ ஒப்புக் கொள்கிறான்.
`பின்னால தலையில பலமாகக் கட்டையில   அடிச்ச.  ரத்தத்தில கெடந்தா. என்ன செய்யறதுன்னு தெரியில. தப்பிக்க வழி பாத்த. வெட்டிக்  கூறுபோட்டு ஒவ்வொரு உறுப்பா மறைச்ச...’  
அந்தக் கொடும் மரணத்துக்கு மேலும் விவரிப்புத் தேவையில்லை.
எல்லாம் முடிந்த பிறகு சில நாட்கள் கழித்து மனைவி கேட்கிறாள்:  `அடிச்சதும் உயிர் போயிருக்குமா, ரெம்ப நேரத்திக்கிப் பெறகு போயிருக்குமா?’
            அவர் தனலில் வீழ்கிறார். `அப்படிக் கொஞ்ச  நேரம் துடிச்சுக் கெடந்தப்ப, யாரேனும் பாத்து - அடிச்சவனே கூட - தண்ணி குடுத்து, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தாப் பொழச்சிருப்பானோ?’ தாய் சொல்லச்சொல்ல, இருவருக்கும் நெஞ்சம் வெடிக்கிறது. அந்த உயிர்காக்கும் அருமை நேரம் அங்கு அப்படிக் கடக்கவில்லை! கொடுந்துயர்  கொடுத்து  உயிரைப் பறித்து விட்டது.
·                     
கல்லில் கண்ட `மணப்பாறைஊர்ப்பெயர் இப்போது நினைவில்ஓடி விளையாடப்போன குழந்தையின் கீச்சழுகைக் குரல் கேட்கிறது. குரல் வந்த திசையில் தாய் ஓடுகிறாள். காப்பாற்ற முடியாத நிலையில் கூக்குரலிடுகிறாள். கூட்டம் கூடுகிறது. காவல்துறை வந்து, தீயணைப்புத்துறை வந்து, அதிகாரிகள் வந்து, அமைச்சர்கள் வந்து, பெரும்பெரும் எந்திரங்கள் வந்து, சிற்றிடர், பேரிடர் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் வரிசையாக வந்து – `இதோ, அதோ காப்பாற்றி விட்டோம்அறிவிப்புகள் வந்து ஐந்து நாட்கள் இடைவிடா அசுர வேலைகள்!
குழந்தையின் கூக்குரல் எப்போது நின்றது? ஆழ, ஆழ எப்படிப் பூமித்தாயைக் குடைந்த துளையில் அனிச்சைச் செயலால்கூட கை, கால், தலை அசைக்க முடியாத ஒரு ஒழுங்கற்ற உருவாகிக் குழந்தை கீழே சரிந்தது?
அந்த உருவில் முடங்கி, மூக்கிலும், கண்ணிலும், காதிலும் வாயிலும்  உதிரி மண் விழுந்துஎப்போது, எப்படி நடந்தது? யார் கண்டது, ஊகித்தது?
ராட்சத எந்திரங்களின் பூமிப் பிளப்பும், பாறைக் குடையலும், இடையறாப் பேரோசையும் உண்டாக்கிய அதிர்வுகளால் அந்தச் சரிவு நடந்திருந்தால்? ஏன் அது நடக்காது?
உயிரற்ற ஓர் உடல் பிணநாற்றம் அடிக்க எவ்வளவு காலம்  தேவை? சில மணிகளா? சில நாட்களா?
`மரத்தில் மறைந்தது மதயானை’ - கேள்விப் பட்டிருக்கிறோம். யானையைக் கடைந்த ஈட்டிமரம் நினைவில் நிற்கும்போது, யானை நினைவு வராது! யானை நினைவு வரும்போது ஈட்டிமரம் நினைவுக்கு வராது!
எந்திரங்களின் நினைவில் குழந்தையின் நினைவு மறைந்து போயிற்று! எந்திரங்கள் தோற்றபோது, மூடிமறைத்துக் காட்டச் சிதைந்துபோன பிண்டம் கிடைத்தது!
`தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் உயிர் வாழலாம்,’ ஒரு மருத்துவரின் கூற்று! குழந்தை இருந்த சூழலில் அது இயலுமா? முடிந்த அளவுக்குக் கத்தித் தொண்டை வறண்டு மூச்சுத் திணறிய நிலையில் அப்படி எதிர்பார்க்கலாமா?
ஆமாம், ஒன்று நடந்தது: பூனைக்கு யார் மணிகட்டுவது? `இந்தச் சூழ்நிலையில் இந்தக் கால இடைவெளியில் சிறுகுழந்தை உயிருடன் இருக்காதுஎன்று முன்னின்று செயல்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அறிக்கைகள் கொடுத்தவர்களுக்கும் -சத்தியமாகத் தெரிந்திருந்தாலும், யார் அதை வெளியில் சொல்வது? அப்படியொரு முடிவை அரிதியிட்டுச் சொல்ல வழிமுறைகள் இல்லையா? இருக்க வேண்டும்கருணைக் கொலை உள்ளிட்டு.
அந்தக் குழந்தை விடுபடாச் சிக்கலில் சிக்கி, உயிர் பிரியும் வரை எவ்வளவு துயருற்றிருக்கும்? கைவசமிருக்கும் அறிவியல்-தொழில்நுட்பம் அந்த நேர அளவைக் கணக்கிட உதவி செய்யாதா? அதுதான்  கேள்வி. உயிருடன் குழந்தையைக் கொண்டுவர அல்லாமல், ஒரு தொல்லியல் புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியாகத்தானே செயல்பாடு இருந்தது?
1996-ஆம் ஆண்டுத் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் நாவரசு என்ற 18 வயது மாணவனுக்குகுற்றுயிர் முற்றுயிர் ஆகக் கூடிய சிறிது நேரம் துணை செய்யாமல் போக,  சொல்லொணாத் துயரில் உயிர்விட்டான். 2019-ஆம் ஆண்டுத் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் சுஜித் என்ற இரண்டு வயதுச் சிறுவன் ஆழ்துளையில்  27 அடி ஆழத்தில் உயிர்பிழைக்கும் வாய்ப்பை இழந்து,  உயிருடனோ, பிணமாகவோ 120 அடி ஆழம் போய்ச் சிதைந்து போனான்.
·                     
வண்ணத்துப் பூச்சிக்குக் கிடைத்த புத்துயிர் நாவரசுக்கும் சுஜித்துக்கும் கிடைக்கவில்லை!
·                     
சமூகம் கண்விழிக்க வேண்டும்.
( ப. . பொன்னுசாமி: முன்னாள் துணை வேந்தர், மதுரை, சென்னை  )