திக்குத் தெரியாத உலகில்-- சுப்ரபாரதிமணியன்
* பாலின பேத வன்முறை ( Gender Based Violence )-6
சுப்ரபாரதிமணியன்
பாலின பேதத்தின்
இன்னொரு முகம் : பெண் குழந்தைத் திருமணம் ( இரண்டாம் பகுதி )
இது மாதிரி திருமணங்கள் வடநாட்டில் தான் அதிகம் நடக்கின்றன .ஒவ்வொரு
ஆண்டிற்கும் ஒன்றரைக் கோடி பெண் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன ஒவ்வொரு இரண்டு
நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை திருமணம் எப்படி நடக்கிறது இந்தியாவில் .இது
அதிகம் இருப்பது சமூகவியலாளர்கள் பாதிக்கிறது இந்தியா 15 ஆவது இடத்தில் இந்த வகையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10-15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று 20 லட்சம் பேர் குழந்தை திருமணம் செய்து
கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை திருமணம்
என்பது அங்கீகரிக்கப்பட்ட பாலியல் ரீதியான வன்முறையாகவும் சமூகம் அங்கீகரிக்கும்
விஷயமாகவும் மாறிவிட்டது. மதம் சார்ந்த கலாச்சார நடவடிக்கைகள்.. அதற்கு நாம்
மரியாதை தரவேண்டும் ..அடிபணிய வேண்டும் என்று பல சமயங்களில் இந்த வகைத்
திருமணங்களின் போது வலியுறுத்தப்படுகின்றன.. இளம் பெண்களும் ஆண்களும் இணைவது என்பது பல நாடுகளில் சாதாரணமாகிவிட்டது
.முஸ்லிம்களில் வெளிநாடுகளில் வேலை
செய்கிற வயதான ஆண்களுக்கு சுலபமாக
நடக்கிறது. இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என்ற ஒரு பிரிவு அதை
மதிக்கிறார்கள் .இதுக்கெல்லாம் காரணம் பொம்பளையா சாதிக்கு உள்ள நடக்கிற இந்த
விஷயங்களை கேக்குற,, கேளு ..கேக்குறதுக்கு
மத்தவங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ,,
ஒருவகையில் குழந்தை
திருமணத்தின் மூலம் கொத்தடிமைத்தனம் உருவாக்கப்படுகிறது ,திருமணத்திற்கு பிறகு குடும்ப காரியங்கள் அந்தக்
குழந்தையின் மேல் சுமத்தப்படுகின்றன கட்டாயமாக்கப்பட்ட திருமணம் குடும்ப
வேலைகளிலும் கட்டாயப் படுத்தப் படுகிறது ,சாதாரணமாகவே மோசமான விமர்சனங்களும் மிரட்டல்களும் விமர்சனங்களும் வாய்மொழி
வன்முறையாக மாறிவிட்டன, அப்படி
நடைபெறுகின்ற திருமணங்களில் இருந்து பெண் சுலபமாக தப்பித்துவிட முடியாது ,யாரோ ஒருவருடன் தங்களை விடுவித்துக் கொள்வது
என்பது சிரமமாக இருக்கிறது ,குடும்பப்
பொறுப்பு இல்லாமல் இப்படி போகிறாள் என்ற விமர்சனமும் உள்ளது ,அதற்கு பெரிய அளவில் விமர்சனங்களும் உள்ளன
பெரிய அளவில் ஆதரவும் இல்லை.
பெண் குழந்தைகளுக்கான முறையான கல்வி , அவர்களுடைய உரிமையைச் சமைத்தல், அவரவர் சூழலில்
அவர்களின் சரியான எதிர்காலத்தை நினைவூட்டி வழிநடத்துவது என்பதுதான்
இதிலிருந்து அவர்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களுக்கு சரியான இடம் தராத
வரும் கல்வி அறிவு பொது அறிவு தேவையான அளவு இல்லாத சமூகம் தரும் பாலியல்
தொல்லையிலிருந்து திருமணமே பாதுகாப்பு என்ற பொது புத்தியும் குழந்தை திருமணத்தால்
ஏற்படும் உடல் மனம் உணர்வு ரீதியான பிரச்சினைகள் பற்றிய சரியான விழிப்புணர்வு
இல்லாததும் இந்த வகை காரணங்களாக குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடக்க ஏதுவாகின்றன
இதனால் குழந்தைகளின் இளம்பருவம் பாதிக்கப்படுகிறது.படிப்பைத் தொடர முடிவதில்லை
உடல் ஆரோக்கியம் கெடுகிறது .ஊட்டச்சத்து கிடைப்பதில்லை .சிசு மரணம் கருணைக்
கொலைகள் போன்றவையும் சாதாரணமாகி விட்டன .மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறக்க
விஞ்ஞான ரீதியாகவே நிறைய வாய்ப்பு உள்ளது .இளமையிலேயே முதுமை புதுமையாய் அடைவது
சாதாரணமாகிவிட்டது. இவ்வகை குற்றங்களுக்கு ஏழு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை
உள்ளது .அது ஆயுள் தண்டனையாக்கூட
விதிக்கப்படலாம் .பாலியல் தாக்குதலுக்கு 10 வருடங்களுக்கு குறையாத கடுங்காவல் தண்டனையும் கூட .அது
ஆயுள் தண்டனையாக விதிக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பதை அறியாமல்
இவ்வகை செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
நான் என்ன செய்ய முடியும் என்று
வறுமையிலும் சிரமங்களும் கை விரிக்கும் பெற்றோர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில்
சமூக மன நிலையை மாற்ற பல நடவடிக்கைகளை
செயல்பாடுகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது குழந்தை திருமணங்களில் இருந்து
குழந்தைகளை மீட்பது மட்டுமல்ல அவர்களின் மறுவாழ்வுக்கு என உதவும். பாலின பேத
வன்முறை இப்படி சிறுவயதிலேயே பெண்கள் விசயத்தில் நிகழ்ந்து விடுகிறது.
கொசுறு 1
மார்ச்
8 உலக
மகளிர் தினத்தை முன்னிட்டுபாலின சமத்துவத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க
உறுதியேற்போம் என்று பலரும் முன்மொழிந்திருக்கிறார்கள்
மார்ச்
8 ஆம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும்
பெண்கள் தினத்துக்கு ஒருஉலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிசபாரம்பரியமும் உண்டு. .உலகம் முழுவதும் ஜனநாயக
உரிமைகளுக்காகவும்,
மக்களின் வாழ்வாதார
பிரச்சனைகளுக்காகவும் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை
எதிர்த்தும் மகத்தான போராட்டங்கள்
முத்திரையை பதித்துக் கொண்டுள்ளன.
இந்தியாவிலும் பொது வேலை நிறுத்தங்கள், விவசாய-விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள், எல்.ஐ.சி.,பி.எஸ்.என்.எல்.
போன்றவற்றில் நடந்த தனியார்மயத்துக்கு எதிரான போராட்டங்கள், குடியுரிமை திருத்தச்
சட்டம்/என்.பி.ஆர்./என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்கள், பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்கள் எனப்
பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
ஆட்சியாளர்களின்
கொள்கைகளின் விளைவாக வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், ஜி.எஸ்.டி., உயர் பணமதிப்பு நீக்கம்,சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார்மயம், அரசின் அடிப்படை சேவைகள் தனியார்மயம், சீரழிந்து வரும் பொது விநியோக முறை போன்றவை ஒரு புறம்
க்குகின்றன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகுபவர்களாக பெண்கள் உள்ளனர். மேலும் வேலையின்மை, பணிச்சுமை, சமவேலைக்கு
சமஊதியமின்மை என பெரும் பகுதிப் பெண்கள் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும்
ஆளாகின்றனர். மறு புறம், ஒரு
நாளைக்கு 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும்
கொடுமை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான வன்முறை 250 சதவீதம் அதிகரிப்பு என்ற நிலைமையும் பெண்கள் மீது
பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. தலித், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிற்காமல்
தொடர்கின்றன. அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மாற்றுத்திறனாளி
பெண்களும் பாதுகாப்பற்றச் சூழலில் தான் வாழ்கின்றனர்.
இணையதளக்
குற்றங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சுயமாகக் கருத்து கூறும் பெண்கள்
வலைத்தளத்தில் படுமோசமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சாதி, மத வெறியர்கள் இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
அறிவியல் விரோதபிற்போக்குக் கருத்துக்கள், பெண்ணடிமைத்தனத்தை கெட்டிப்படுத்துகின்றன. சங் பரிவார
அமைப்புகள், தலைவர்கள் இதில் தங்கு தடையின்றிப்
பங்காற்றுகிறார்கள். பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக முன்வைக்கிறார்கள். அரசியலில்
கிரிமினல்மயமும், சமத்துவத்துக்கு எதிரான வலதுசாரி நிலைபாடும்
அதிகரித்து வருவது பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் கேடாய் மாறி நிற்கிறது.
நீதி வழங்கும் இடங்களில் இருப்பவர்களில் ஒரு பகுதி இத்தகைய சித்தாந்தத்தைப்
பின்பற்றுபவர்களாக இருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. சமத்துவக்
கோட்பாட்டின் அடிப்படையைப் பற்றி நிற்கும் அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதற்கான முயற்சிகள், குறிப்பாகப் பெண்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
ஒன்றுபட்ட
போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும். “ஆணுக்கு பெண் நிகரென்றுகொட்டு முரசே” என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை
உருவாக்குவதற்கான முயற்சிகளை, போராட்டங்களை
தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் ( தீக்கதிர் )
கொசுறு
2
பாலின
பாகுபாட்டு மொழியில் ஆக்ஸ்போர்டு அக்கறை
எடுக்கிற செய்தி புதிது. ஆக்ஸ்போர்டு
அகராதி யில் பெண் ( வுமன்) என்பதற்கு வேலைக்காரி, ஆண் ( மேன் ) என்பதற்கு துணிவு , உத்வேகம், உறுதி
போன்றவற்றைக்கொண்டிருக்கும் மனிதன் என்ற அர்த்தங்கள் பொதிந்த காலம் உண்டு. பெண்களின் எழுச்சிக்கும், பெண்ணியத்தின் தீவிரத்தனத்தையும் மனதில் கொண்டு
பலர் இவ்வகை அர்த்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்க ஆக்ஸ்போர்டு அவர்களின் குரலை
ஆமோதித்திருக்கிறது