சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 31 ஜனவரி, 2012

திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு

திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும்“ கனவு” இலக்கிய இதழுக்கு 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு நடைபெற்றது. பேராசிரியை புவனேசுவரி கனவின் செயப்பாடுகள் பற்றிப் பேசினார். முன்னதாக சுப்ரபாரதிமணியன் இரண்டு புதிய நூல்கள் “ நீர்த்துளி’ நாவல், வேட்டை “ சிறுகதைத்தொகுப்பு “ ( இரண்டும் வெளியீடு: உயிர்மைப்பதிப்பகம், சென்னை ) ஆகியவை வெளியிடப்பட்டன.வடஅமெரிக்க தமிழ்சங்கப்பேரவைதலைவர் முனைவர் பழனி சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மு. வரதராசனார் நூற்றாண்டுக்கருத்தரங்கில் மு.வ.வின் ” இலட்சியவாதம்’ என்ற தலைப்பில் திருப்பூர் கிருஸ்ணனும், மு.வ. படைப்புகள் பற்றி சிவதாசன், நீறணிப்பவளக்குன்றன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரும் உரையாற்றினர். “பருத்தி நகரம் “ தொகுப்பில் சுப்ரபாரதிமணியன், சிவதாசன்.,சாமக்கோடாங்கி ரவி, மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், உட்பட 30 படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.. சபரி பரசுராம், சின்னராமலிங்கம், லிங்க் சவுகத் அலி, மக்கள் மாமன்றம் சுப்ரமணீயன் ,கம்பன் கழகம் செயலாளர் சோ.ராமகிருஸ்ணன் உட்படபலர் முன்னணி வகித்தனர். இறுதியாக ரவிக்குமாரின் பசி, ஜீரோ கி.மீ, தாண்டவக்கோனின் அமளி துமளி ஆகிய மூன்று குறும்படங்கள் வெளியிடப்பட்டன. “பருத்தி நகரம் “பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்.பக்கங்கள் பக்கங்கள் 170 ரூ70 ( கனவு, 8/2635 பாண்டியன் நக்ர், திருப்பூர் 641602)
பருத்திநகரம் – திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2012 : பங்கு பெற்றப் படைப்பாளிகள்:
சிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/
மகுடேஸ்வரன்/ / குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/
தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/ வெங்குட்டுவன்/குணசேகர்,
கிரிஜா சுப்ரமணியம்/ / காட்டான் மூர்த்தி/ டாக்டர் செலவராஜ்/ டாக்டர் முத்துசாமி/நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/
விலை ரூ 70/
பிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.

வியாழன், 26 ஜனவரி, 2012

9வது புத்தக கண்காட்சி திருப்பூரில்
















புகைப்பட உதவி


பாரதிவாசன்

புதன், 25 ஜனவரி, 2012

நீர்த்துளி புத்தக வெளியீடு















நன்றி !!!

செய்தி தினமலர்

சனி, 21 ஜனவரி, 2012

அழைப்பிதழ்







திங்கள், 9 ஜனவரி, 2012

ஜெயமோகனுக்கு “முகம் “ விருது

சுப்ரபாரதிமணியன்


கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் குக்கூ இயக்கம் சார்பில் “முகம்” விருது ஜெயமோகனுக்கு 27/12/11 அன்று அளிக்கப்பட்டது திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி முருங்கப்பாளையும், கோதாபாளையம் பகுதிகளில் 300 மாணவர்களைக்கொண்டு 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் நிர்வாகி முருகசாமியும் காது கேளாத விளிம்பு நிலை மனிதரே.குக்கூ இயக்கம் குழந்தைகளின் மத்தியில் கல்வி, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக சிவராஜின் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் சார்பில் “ முகம் “ விருது இயற்கைவேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், பழங்குடியினமக்கள் தலைவர் விபி குணசேகரன்., ,ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட மரங்கள் நாகராஜ் போன்றோருக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு ஜெயமோகனின் “ அறம் “ சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது. ”””””””’””” வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமில்லை. அறம் சார்ந்த விழுமியங்களுடன் வெற்றி பெறுவதே சிறந்தது. அதையே அறம் தொகுப்புக்கதைகள் வலியுறுத்துகின்றன. தன் நலனுக்காக தர்மத்தை கைவிடாத மனிதர்களின் கதையே அறம். ” என்றார் ஜெயமோகன் விருதைப்பெற்றுக் கொண்டு பேசும்போது.. அவர் பேச்சு மகா .பாரதத்துக் கதையொன்றில் பாண்டவர்கள் சொர்க்கம் புகும் வாய்ப்பை முன் வைத்து அமைந்திருந்தது.” ஒவ்வொரு மனிதனும் பணம், புகழ் சம்பாதித்து பெறுவது வெற்றியல்ல. கடைசிவரை தர்மத்தின் வழி நடப்பவனே வெற்றி பெற்றவன் “ ஜெயமோகனின் “யானை டாக்டர்”””’” “ கதையை மையமாகக் கொண்டு அப்பள்ளி மாணவமாணவியர் 30 ஓவியங்களைத் தீட்டியிருந்தது கண்காட்சியாகியிருந்தது. புகைப்படக்கலையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பார்வையிழந்தோர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி, குக்கூ குழந்தைகளுக்கான 1500 நூல்கள் கொண்ட நூலகம் ஆகியவை திறக்கப்பட்டன. பாரம்பரியமான 10 ஆயிரம் விதைகள் பயிரிடப்பட்ட நாற்றுப்பண்ணை துவங்கப்பட்டது.குழந்தைகளின் ஆரவாரமும், உற்சாகமும் வினோதமான ஓசையாய் வெளிப்பட்டு மனதை நெகிழச்செய்தது.அப்பள்ளி பற்றிய ஒரு குறும்படம் அவர்களுக்கான கல்வி கற்பித்தலில் இருக்கும் அர்ப்பணிப்பையும், பள்ளிச் சூழலையும் நேர்த்தியாக, வருடும் இசைப் பின்னணியில் வெளிப்படுத்தியது. இயக்குனர் கும்பகோணம் சரவணன். பன்னாட்டு நிறுவன எதிர்ப்பில் பலியான கென்சரோவிவாவின் புகைப்படம் மட்டுமே இருந்தமேடை இலைகளாலும், புற்களாலும் வெள்ளைத்துணியின் பரப்பில் விசேசமானதாக அமைந்திருந்தது. அக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் அவர்களின் உடல் குறையை மீறிய அற்புத அசைவுகளில் திறமை வெளிப்பட்டது. தாளம், அசைவுகளின் மூலமும், அதிர்வுகளின் மூலமும் பயிற்சி பெற்ற பாரம்பரிய கிராமியக்கலை அம்சங்களை அவை கொண்டிருந்தன. மேடையைச்சுற்றி இருந்த இடங்களில் நெய்விளக்கு தீபங்கள், ஈர விதைகள் நிரம்பிய மண் கலயங்கள், அழகான மரங்கள், கட்டிடங்களில் அபூர்வமான வர்ண புகைப்படங்கள் அச்சூழலை ரம்மியமாக்கியிருந்தது.குக்கூ இயக்கம் சார்பில் வழியெங்கும் நடப்பட்ட புதிய 2000 மரங்கள், வருகையாளர்களைக் கொண்டு நடப்பட்ட பல்வேறு தானியங்களின் ஈர விதைகளின் மணம், லேசான பனி சூழ்ந்த சூழல் இவ்விருது வழங்க உரிய இடமாக்கியிருந்தது காதுகேளாதோர் பள்ளியை..விழாவில் தென்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களின் செயல்பாடு ஒருமித்ததாய் அமைந்ததால் .நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகியிருந்தது. ( அறம் தொகுப்பு வெளியீடு: வம்சி பதிப்பகம், 19 டிஎம் சாரோன், திருவண்ணாமலை .விலை ரூ 250) . காது கேளாதோர் பள்ளி , முருகம்பாளையம், திருப்பூர் 641687 . தொலைபேசி: 0421-2261201, 5533962. subrabharathi@gmail.com

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

வெள்ளைக் காக்கைகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறையில் நடந்த எழுத்தாளர் சந்திப்பு பற்றி பல புலனாய்வு இதழ்களிலும் , வெகுஜன இதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் செய்திகள் வந்தன. புலனாய்வு இதழ்களில் பெண் எழுத்தாளர்களை மையமாகக் கொண்ட கிசுகிசுக்கள் இடம்பெற்றன. அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளை கேலி செய்திருந்தன. இம்மாதம் பிரபல தினசரியொன்றின் வாரப்பதிப்பு அச்சந்திப்பை பகடி செய்து மூன்று வாரக் கதையை வெளியிட்டுள்ளது. இலக்கிய இதழ்களை, பெண் எழுத்தாளர்களை பகடி செய்வது அதன் நோக்கம். அதை ஒர் இலக்கிய எழுத்தாளரை வைத்து நிகழ்த்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளில் வால்பாறை இப்படி அடிபடுகிறது: யானைகளால் ரேசன் கடை நாசம், துவசம். எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாம், மனிதர்களுக்கு மாறியது முகம். ஆறுதல் சொல்லும் கும்கி வீரர்கள்..

குளிரும், மழையும், பனியும் என்று சென்றாண்டு தங்கலில் வால்பாறை புது அழகுடன் இருப்பதை கண்டு கொண்டேன். உடுமலைக்கு வேலை மாற்றலாகிற வரைக்கும் வால்பாறை போனதில்லை. அங்கு போன பின்பு அலுவலக நிமித்தமாக வால்பாறைக்குப் போவது சாதாரணமாகி விட்டது.இந்த முறை கைபேசி நுட்பக்கோளாறு காரணமான வேலையில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஆசியாவின் மிகச்சிறந்த தூய்மைப்பகுதிகள் என்று கணிக்கப்படுகிற டாப்சிலிப்பும், அக்காமலையும், மிகப்பெரிய அணையான சோலையார் அணையும், காடம்பாறை மின் நிலையமும், மிக உயரமான கவர்க்கல் பகுதியும், பாலாஜி கோவிலும் முக்கியமானவை.

வால்பாறையில் சுற்றுலா இடங்கள் என்று அதிகம் இல்லாவிட்டாலும் மடிப்புகளான மலைகளும், இயற்கை சூழலும், ரம்மியமானவை. தேயிலைக்கு விலையில்லாமல் போவது பற்றி சமீப ஆண்டுகளில் தொடர்ந்து செய்திகள் வருவது தேயிலைத்தொழிலாளர்களின் நிலையைச் சொல்லி வருகிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு மலைப்பபகுதி மக்கள் இடம் பெயர்வது சமீபத்தில் சாதாரணமாகிவிட்டது. தொழிற்சஙக உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தொழிற்சங்கங்கள் என்ற நிலை இல்லாமல் அதிகாரத்துடனான நெருக்கமான உறவுக்கும், தலைவர்களின் சுயலாபத்திற்கும் தொழிற்சங்கங்கள் என்றாகி விட்டன. இரட்டை, மூன்று உறுப்பினர் நிலை என்று கணக்கு காண்பிப்பதற்காக ஒரே தொழிலாளரே மூன்று தொழிற்சங்கங்களில் உறுப்பினராக தலைவர்களே சந்தா செலுத்தி தங்கள் சங்கங்களை காத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள், கொத்தடிமை நிலை பற்றி “எரியும் பனிக்காடு “ என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு விரிவாகச் சொல்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்து 40 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த “ ரெட் டீ “ தமிழ் வடிவம் பெற்றுள்ளது. விடியல் பதிப்பகம், கோவை அதை முருகவேளின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது.இனறைய தோட்டத்தொழிலாளி மலின உழைப்பை முன் நிறுத்தி மீண்டும் நவீன கொத்தடிமை ஆகிக்கொண்டிருப்பதை அவர்களின் நிலை பற்றி அறிகிற போது தெரிந்து கொள்ள முடிகிறது.

அறையில் குளிரில் முடங்கிக் கிடந்த போது வெங்கடேசனின் “ தாண்டவராயன் கதை” நாவலைப்படித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த விடுதி ஊழியர் ஒருவர் ” என்ன நீங்க எழுத்தாளரா.. கொஞ்ச நாளைக்கு முந்தி இங்க கவிஞர்கள் கூட்டம் ஒண்ணு நடந்தது. எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. கவிஞர்கள்ன்னா சிடுமூஞ்சியா இருப்பாங்க. ஆனா அவங்கெல்லா ஜாலியா இருந்தாங்க. கவிதைன்னா சந்தோசம்தாங்களே..” என்றார். அவரின் கவிஞர்கள் பற்றிய ப்ரமைகட்டுடைப்பிற்கு குறிப்பாக கவிதாயினிகள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள்.

கைபேசி கோபுரம் தொழில் நுட்பக்கோளாறு சின்கோனாபகுதியினை முடக்கியிருந்தது.அங்கு தோட்டத்தொழிலாளர்களின் பழைய மருத்துவ மனையை சீர்திருத்தி பாரதியார் பல்கலைக்கழக அரசு கலைக் கல்லூரியை நிறுவி இருக்கிறார்கள். வால்பாறையில் இருக்கும் சுமார் 60 தேயிலைத் தோட்டப்பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் படிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப்பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது அக்கல்லூரி. பனியும், மழையும், ஸ்வெட்டரும் , குடையும் அவர்களின் உடம்போடு ஒட்டிக்கொண்டவை. சிறு குழுவாய் உட்கார்ந்திருந்த மாணவர்களிடம் கேட்டேன்: “ என்ன கடலையா... “

“ இல்லீங்க .. கவிதைங்க “ என்றார்கள் . “ நெசமாலுமுங்க ..”


கவிதாயினிகள் தங்குவதற்காக சின்கோனாபகுதியில் நான் சிபாரிசு செய்யும் இடம் “ உட்டன் ஹைவுஸ் “. 1720ல் வெள்ளையர்களால் முழுக்க மரத்தால் வடிவமைக்கப்பட்ட வெயிலுக்கும், மழைக்கும் இதமாக இருக்கும் விடுதி . சின்கோனா சின்ன சொர்க்கம்.

subrabharathi@gmail.com

வெள்ளி, 6 ஜனவரி, 2012

கதை சொல்லி நிகழ்ச்சியில் பெருமாநல்லூர் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு

கதை சொல்லி நிகழ்ச்சியில் பெருமாநல்லூர் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு




” கனவு “ ஆண்டுதோறும் பள்ளி மாணவமாணவியருக்கான ” கதை சொல்லி...” போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டு இப்போட்டிக்கு தமிழகம் முழுக்க இருந்து 430 கதைகள் வந்திருந்தன. அதில் 25 கதைகள் பரிசுக்குறியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ5,000 பரிசு பகிர்ந்தளிக்க்கப்பட்டது. அதில் 110 கதைகள் பெருமாநல்லூர் பாலசமுத்திரம் விக்னேஸ்வரா பள்ளிமாணவர்கள் எழுதியிருந்தனர். அதில் 7 கதைகள் பரிசிற்குறியதாக தேர்வு பெற்று பரிசளிப்பு விழா விக்னேஸ்வரா பள்ளியில் வெள்ளியன்று நடைபெற்றது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசையும், சான்றிதழ்களையும், புத்தகங்களையும் பரிசளித்துப் பேசுகையில் , “ கதை சொல்லும் மரபு பாட்டிகள், பெரியவர்கள், புத்தகங்கள் என்றிருந்தது. இப்போது அதை தொலைக்காட்சி வரிசைகள் எடுத்துக்கொண்டுவிட்டன. கதை சொல்வதிலிருந்து மாறுபட்டு எழுதிப்பார்க்கும் முயற்சியும் முக்கியமானது. அது குழந்தைகளிடம் எழுத்துப்பயிற்சியையும், கற்பனையையும் வளர்க்கிறது. பாடத்திட்டங்களிலும் தனி கவனமும், தீவிரமும் பெறற் இந்த கதை எழுதும் பயிற்சி ஒரு வகையில் பயன்படும் “ என்றார், விழாவுக்கு பள்ளி தாளாளர் முருகசாமி தலைமை தாங்கினார். கவிஞர் சுந்தரக்கண்ணன் முன்னிலை வகித்தார். கதைகளை கவிஞர் சுபமுகி, வழக்கறிஞர் சி.ரவி, பொறியாளர் பழ.விசுவநாதன், கவிஞர் மதுராந்தகன் ஆகியோர் பரிசிலித்து தேர்வு செய்திருநதனர்.


செய்தி: சுந்தரக்கண்ணன்


-