சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 13 மார்ச், 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம்
* ஏப்ரல் மாதக்கூட்டம் 1/4/18.ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,
முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,பிஆர் நடராசன்
சிறப்பு விருந்தினர்கள்:
 கீதாஞ்சலி எஸ். கோவிந்தப்பன்., மூர்த்தி நிட்டிங் என். மூர்த்தி i

  நூல்கள் வெளியீடு :
     2 மொழிபெயர்ப்பு நூல்கள்
1.* சுப்ரபாரதிமணியன்- ஒடியக்கவிதைகள்   கான்சிபூரின் நிலவு 
2.* ரமேஷ்குமார் இந்திக்கதைகள் ரஜியா
பிர்தவுஸ் இராஜகுமாரன் நாவல் – “ ரணங்கள்
* நெசவதிகாரம் –  கவிதைகள் -சே. சீனிவாசன்


உரைகள் : படைப்பு அனுபவம்
* நொய்யல் இன்று கட்டுரைநூல் -கோவை கா.சு. வேலாயுதம்
* முத்தன் பள்ளம் நாவல் -கந்தர்வக்கோட்டை அண்டனூர் சுரா
* நூல்கள் அறிமுகம் .:  கா.ஜோதி
“:மதுமிதா ( வேமனமாலை, மொழிபெயர்ப்பு), தமிழோசை விசயகுமார் (திருவாங்கூர் தமிழர் உரிமைப்போராட்டம் , மொழிபெயர்ப்பு), அருண்பிரகாஷ் ( செவ்வானமும், நீலக்கடலும்-நாவல் ) த.தமிழரசி (சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளில் வாழ்வியல் -ஆய்வு நூல் )

* உரைகள் : முதல் நாவல் அனுபவம்
திருப்பூர்  சம்சதீன் ஹீரா
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் :
அம்ருதா, உயிர் எழுத்து, கல்வெட்டு பேசுகிறது
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488




புதன், 7 மார்ச், 2018

 மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம்
* மார்ச்  மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,
* மலேசியா எழுத்தாளர்கள் விமலா ரெட்டி, சந்திரா குப்பன், செல்வம் ஆகியோர் கல்ந்து கொண்டு மலேசியா தமிழர்கள் வாழ்வும் பல்வேறு இலக்கியப்பணிகளும் பற்றிப் பேசினர்
* 3 நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின்  மறைந்து வரும் மரங்கள்  -“ முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) வெளியிட சசிகலா, பிரணிதா, பிஆர்நடராஜன் பெற்றுக்கொண்டனர்.

 * செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “-
-செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “ நூலை ( எதிர் பதிப்பகம் , பொள்ளாச்சி) தமுஎக சங்க ஈஸ்வரன் வெளியிட , பிஆர்கணேஷ், பொன்னுலகம் குணா பெற்றுக்கொண்டனர்

* ம. நடராசன்  - நாவல் “ விசக்கடி “முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) ம. நடராசன்  - நாவல் “விசக்கடி “ வெளியிட, கே.தங்கவேல்    ( Ex MLA), பெற்றுக் கொண்டார்

முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) உரையில்.. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏழாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் பள்ளிகளின் கட்டமைப்பிலும் ஆசிரியர்களின் குறைபாட்டிலும் பள்ளிகள் அப்படியே ஏகதேசம் உள்ளன..குழந்தைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய் செயல்வழிக்கற்றல் முறை குறித்து கூடுதல் கவனம் இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு கல்வி சாராத, பள்ளி சாராதாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவ்ர்கள் மேல் பனி அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. குழந்தைகளின் கலவிக்காகப் பெற்றோர் உழைத்துச் சேமித்த தொகை முழுவதும் செலவு செய்யவேண்டியுள்ளது. கலவிக்கடன்க்காக்க் கிடைத்த சம்பளத்தில் படித்து முடித்தபின் குழந்தைகள் வேலை செய்ய வேண்டியுள்ளது. தரமான கல்வி கிடைப்பதில்லை. குறைந்த சம்பளத்தில் தரமற்ற ஆசிரியர்களைக் கொண்டு நட்த்துவதால் இப்படி நேர்கிறது.  தாய்மொழி வழியில் கற்பது தலைசிறந்த கல்வியாக அடிப்படை சிந்தனையை வளர்க்கும் கல்வியாகும். பிறமொழிகள் தேவை கருதி ஆர்வம் கருதி கற்கலாம் . திணிப்பு வேண்டாமே.  சமச்சீர் கல்வி அரசு ஏற்று நடத்துவது, அருகமைபள்ளிகள், சேவை நோக்கிலான கல்வியை அனைவருக்கும் தரும் நோக்கத்தை அரசுகள் கைக் கொள்ளவேண்டும்.
 காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருவதில் உள்ள சிக்கல்கள்  மாணவர்களை தற்கொலைக்குத் தள்ளுகிறது .

முன்னிலை: தோழர்கள் எம்.இரவி..,பிஆர் நடராசன்
சிறப்பு விருந்தினர்கள்: எஸ். விசுவநாதன் ( ட்வின் ஸ்டார் ),  எஸ். விசுவநாதன்  சிறப்புரை :  கண .குறிஞ்சி ( PUC L ) , கே.தங்கவேல்    ( Ex MLA), பேரா.சுந்தரம்
நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின்  மறைந்து வரும் மரங்கள் “
 * செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “
* ம. நடராசன்  - நாவல் “ விசக்கடி “
* கவிதை நூல்கள்   அறிமுகம்..:  துருவன் பாலா *
:மதிவதனன்( தாழ்ப் பறக்கும் வானம் ) மகாராசன் ( சொல்நிலம் ), வெள்ளை வானவில் ( ஊ.வ.கணேசன்)
* உரைகள் : முதல் நாவல் அனுபவம்
திருப்பூர் படைப்பாளி :, முத்துபாரதி
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : குறி, புதிய கோடாங்கி, படச்சுருள்
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன்.
.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488




ஞாயிறு, 4 மார்ச், 2018

உலக காட்டுயீர் தினம்
----------------------
உலக காட்டுயீர் தினம் ( மார்ச் 3 ) தாய்த்தமிழ்ப் பள்ளி பாண்டியன் நகரில் கொண்டாடப்பட்டது. திருப்பூர் இயற்கைக் கழகம் அமைப்பின் தலைவர் இரவீந்திரன் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார் . மருத்துவர்  முத்துச்சாமி ,கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை பங்கு பெற்றனர் .

திருப்பூர் இயற்கைக் கழகம் அமைப்பின் தலைவர் இரவீந்திரன் சிறப்புரை :

பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்! பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப் பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.. நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும் அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.
 நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில் பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத் தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நல்லது..
 ( செய்தி: கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை
 பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )



வெள்ளி, 2 மார்ச், 2018

வயிற்றின் குரல்
                                                                                                   சுப்ரபாரதிமணியன்.,  
      
            திருப்பூரில் வந்திறங்கும் அதிநவீன பின்னலாடை இயந்திரங்களை அவ்வப்போது நடக்கும் உலக பின்னலாடைப் பொருட்கள் கண்காட்சியில் பார்க்கிற போது வருத்தமே மேலிடும். அவ்வகை இயந்திரங்கள் மனித உழைப்பை நிராகரித்து மனித உழைப்பை குறைத்து மதிப்பிட்டு தொழிற்சாலைகளுக்கு வெளியில் மனிதர்களைத் தள்ளுபவை. சாயப்பட்டறையின் ஜீரோ டிஸ்சார்ஜ் சம்பந்தமான அதி நவீன இயந்திரங்களும், தொழில் நுட்பத்தைக் காட்டிப் பணம் பறிப்போகும் குறைந்த பாடில்லை. ஆனால் சாயப்பட்டறை கழிவு ஆற்றில் தொடர்ந்து ஓடுவதும், ஆழ் குழாய்கள் மூலம் நிலத்தடியில் அவை பீச்சப்படுவதும் குறைந்தபாடில்லை.
            பொருளாதரத்துவ தத்துவங்கள் பணம் பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. பின்னலாடை தொழில் இன்று அதிகம் புழக்கத்திலிருக்கும் பங்களாதேஷ், பாக்கிஸ்தான், கொரியா, சீன நாடுகளிலும் இது சம்பந்தமான நிலைமைகள் மாறவில்லை. மொழியோ, பிரதேசமோ கணக்கில் வராது. பணக் கடவுளைத் தேடாது போகிறவர்களுக்கு எல்லா பாதைகளும் அடைபட்டிருப்பது உபதேசமாய் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சக மனிதன் உண்மையிலிருந்து தூரமாகிக் கொண்டே போய் பூமியில் பொருளைச் சேர்க்காதவர்கள் எந்த சாம்ராஜ்யத்தில் இடமில்லாமல் போகக் கடவது என்ற சாபத்திற்கு உள்ளாகிறார்கள். சக மனிதனின் படைப்பாற்றலிலும், தேடலிலும் பணத்தைத் தேடுவது என்பது பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்படுகிற வரை இவ்வகை தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். தொடர்ந்த உற்பத்திக்கான நியாயங்கள் வலுத்துக் கொண்டே போகும். அறம் என்பது உண்மை, மனிதம், உள்ளது நல்லது, நேர்மை ஆகியவற்றோடு தொடர்புடையது என்று நம்புகிறவர்கள் மனச்சிக்கலுக்கு தொடர்ந்து ஆளாக வேண்டியிருக்கிறது. பின்னலாடை தரும் அந்நிய செலவாணியை மனதில் கொண்டு மட்டும் மக்களின் வாழ்க்கை மூலாதாரங்களை நிலைக்கச் செய்ய முடியாது என்பதை உணரும் சந்தர்ப்பங்களும் சில ஏற்படுகின்றன.
            பொருளாதார வளர்ச்சியோ, பணப் பெருக்கமே பணத்தை விட மேலாக அதன் மூலங்களாக கல்வி, நம் சமூக அமைப்பு முறை, நியாயம், அரசியல் சுதந்திரம், சுய தேசிய உணர்வு ஆகியவற்றிலும் அடங்கியிருக்கிறது.
            அழிக்கப்பட்ட ஆற்றையோ, நிலத்தடி நீர்ச்சூழலையோ மீண்டும் உண்டாக்க எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது மனதில் பெரும் கேள்விகளை எழுப்பும். அவற்றை மீட்டெடுக்க இயலாத சூழலில் வெவ்வேறு வழிகளில் பணத்தைச் செலவு செய்து தீர்வுகளைத் தேடும் மனிதன் இனத்திற்கே துரோகம் செய்வதை மெதுவாகவே உணர்ந்து கொள்வான். அதி நவீன தொழில் இயந்திரங்கள் மனித உழைப்பையும் பயன்பாட்டையும் குறைத்து மனித இன நியாயங்களுக்கு வஞ்சகம் செய்து மனிதனின் படைப்புத் திறனைக் குறைத்து சமூகச் சூழலை சோம்பலானதாக்குகிறது. அனைத்தும் பொது விஷயங்களாவதால் பின்னர் விளையும் நன்மைகள் மனித குலத்திற்கு பல சமயங்களில் நேரிடையாகவும் அமைகிறது.
            இயற்கை மூலதனங்களாய் அமையும் நீரும், எரிபொருட்களும் வருமானம் தரக்கூடியவையாக மாற்றப்பட்டு விட்டன. ஆனால் அவற்றை மூலதனம் என்று மனதில் கொண்டால் அவை பற்றிய பாதுகாப்பும் மனதில் இருக்கும். அவற்றை குரலாக சுரண்டுவது என்பதும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். அல்லாமல் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது மிக முக்யத்துவம் பெருவதற்காக காரணங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இயற்கையாகவே இல்லாதவற்றை உருவாக்குவதில் நமது விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் நிறைய கற்றுக் கொண்டும், ஆராய்ந்தும் செயலில் இறங்குகின்றனர். இவை தரும் அபாயமான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது கூட சிரமம்தான். உதாரணம் அணுமின் சக்தி.
            வளம் என்பதை மனதில் கொண்டு மனிதன் தொடர்ந்து செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது அறம் சார்ந்த பண்புகளின் வளர்ச்சி என்பதை வெறும் தத்துவமாகப் பார்க்கிறவர்கள் சமூகவியலில் அதிகரித்து விட்டார்கள். மனிதனின் சூழலியலுடன் தொடர்பு கொண்ட பொருளாதாரம் மனிதனைப் பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் இரு கண்களால் இயங்க வேண்டியவை. இருக்கும் கண்களை அழுகிய பின் பிய்த்தெறிந்து விட்டு பணத்தைச் செலவழித்து புதிய கண்களைப் பொருத்திக் கொள்வது தனி மனித சுதந்திரத்தை பொருளுக்கு அடிமைப்படுத்துவதாகும்.
            பெரும் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாக, ஆடம்பரமான மனைகளாக நிற்பது பலருக்கு ஆச்சர்யம் தரும் விசயமாக இருக்கும். ஆனால் விவசாய நிலம் அழிந்து போனது என்பது இயற்கையை மனிதன் தன்னோடு வைத்திருப்பது, மனித தன்மையோடு இருப்பது, விவசாயப் பொருட்களை வாழ்க்கையின் ஒன்றாக மாற்றி மனிதனோடு இருக்கச் செய்கிற ஆயத்தங்களை இல்லாமல் செய்து விடுகிறது. வெற்று நிலங்கள், விவசாய நிலங்கள் சாயப்பட்டறைகளாக நிற்கலாம். அவை பணம் காச்சி மரங்களாக ஆச்சர்யப்படுத்தலாம். ஆனால் இயற்கையோடு இணைந்து வாழும் மனிதனின் உயிர்ப்பை தேவை என்ற நிலைக்கு கொண்டு வருவது எல்லாவற்றையும் சமப்படுத்தி விடமுடியாது.
            சுற்றுச்சூழல் பிரச்னைகளால் வளர்ந்துள்ள கேட்டைக் கட்டுப்படுத்த உயர் வளர்ச்சி தேவை என்பதை புதிய இயந்திரங்களின் உற்பத்தியாளர்கள் சுட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகளே இப்போதடைந்திருக்கும் வளர்ச்சியால் வந்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
            தொழில் நுட்பமும், இயந்திரங்களும் வேலைப் பளுவைக் குறைக்கின்றது. உடல் உழைப்பு இல்லாத மனிதன் நரம்பு நிறைய வேதனைகளைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. வருங்கால அபாயம் என்ற வெடிகுண்டு இச்செயல்களால் தொடர்ந்து தயாராகிக் கொண்டே இருக்கிறது.
            இயற்கை சூறையாடப்பட்டு, உற்பத்தியும், பொருளாதாரமும் புள்ளி விபரங்களால் பெரிது படுத்தப்பட்ட சூழல் உழைப்பு மனிதனை ஊனமாக்கி புதிய நவீன மனிதனை சோம்பலான இயந்திரமாக, அரசின் இலவசத் திட்ட கொப்பரைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்பவனாக இருக்கச் செய்கிறது.
            சமூகத்தின் ஒரு பகுதியோ, நாடோ வளர்ச்சி பெறுவது என்பது மக்களின் வளர்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியாததாகிறது. சிறுபான்மையை மனதில் கொண்டு வளர்ச்சியற்றதை ஒரு பெரும் சமூகமாக்குவதன் மூலம் அவர்களை வளர்ச்சி பெற்றவர்களை மாற்றுவது பொய்யாகவே நிலை பெறும். அந்நிய செலவாணித் தொகையை குறிப்பிட்டு பெருமை கொண்டே வயிற்றின் குரலை நிராகரிக்க முடியாது.

சுப்ரபாரதிமணியன்.,           8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602. 9486101003


திருப்பூர் அரிமா விருதுகள் 2018
                                     *    ரூ 25,000 பரிசு
                         திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
        ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருதுஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018.

முகவரி:
                    94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர்   641 604 .) /0421 2212210