சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014


இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில் சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி நாடா “சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பிற நூல்களுக்கானப் பரிசு பெற்றவர்களில் சிலர்: ஆட்டனத்தி,  க.ப அறவாணன்,( சிறுகதை ),     யூமா வாசுகி            ( மொழிபெயர்ப்பு ), தஞ்சாவூர் கவிராயர் ( கவிதை ), தேவி நாச்சியப்பன் ( சிறுவர் இலக்கியம் ), இரா. மோகன் ( இலக்கிய ஆய்வு ) வீரநாதன் ( அறிவியல் ), மதுரை கர்ணன்.( பொது ) மற்றும் இலக்கிய இதழ்கள்  முகம், தொடரும், ஆலம்பொழில் . சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் தலைமையிலான் குழு விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சுப்ரபாரதிமணியனின்  நாவல்  “  தறிநாடா “  பற்றி…
நெசவாளர்  வாழ்க்கை சார்ந்த இலக்கிய பதிவுகள்  தமிழில் குறைவாகவே இருக்கின்றன.  சோசலிச யதார்த்தவாதம் என்ற முத்திரையுடன்  தொ.மு.சி இரகுநாதனின் “ பஞ்சும் பசியும் ‘  முன் நிற்கிறது. திருப்பூரில் நடைபெற்ற  நாற்பதாண்டுகளும் முந்திய நெசவாளர் போராட்டம் ஒன்றினை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது. கூலி உயர்விற்காக கூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரிதான் அப்போராட்டம் நடைபெற்றது. தொழிற்சஙக ரீதியாக நெசவாளர்கள் போராடினார்கள் என்பதை விட ஜாதிய ரீதியில் ஒன்றுபட்டது அந்தப்  போராட்டத்தின் பலவீனமாகும். நெசவாளர் சமூகம் சார்ந்த   தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொனம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ் காலத்தில் விரிகிறது. ஜாதீய வன்முறைகளைக் கண்டு  ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கட்த்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் மாறுவதை இந்நாவல் சித்தரிக்கிறது.     “     இதென்ன் எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்த்தும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித்தட்டிதா   செழுமையாக்க முடியும். தானே செழுமையாகும் “ என்ற இயங்கியல் அவனின் வாழ்க்கையில் வித்தாகிறது.போராட்டமும் பொதுவுடமை இயக்க வாழ்வும் அவன் ஏற்றுக் கொள்கிறதாகிறது.
உலகமயமாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையிலும், இளைஞர்களின் கவனம்  அரசியலுக்கு மாறாத நுகர்வுச் சூழலிலும் இந்நாவலுக்கு  முக்கியத்துவம்  இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்கங்கள் செயல்பட முடியாது. தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியாது. பொருளாதார இயல்பில் எல்லாம் மாறும், வளரும். ஒடுக்குமுறை,  ஏற்றத்தாழ்வுகளின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவது புதிய சமூகத்தை நிர்ணிக்கும் என்பதை  வழ்வியல் மூலம் இந்நாவல் முன்வைக்கிறது.
தறிநாடா பக். 240, விலை ரூ 185 /  என்சிபிஎச் வெளியீடு, சென்னை )

சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்

சுப்ரபாரதிமணியன்இவ்வாண்டில்  வெ. இறையன்புவின் இரு நூல்களை  நியூசென்சரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள்


தலைமைப்பண்பு பற்றி பேசுகிறபோதெல்லாம் அது பரம்பரையாக வந்தது போல் சொல்லும் பண்பு இருந்து கொண்டே இருக்கிறது. பிறப்பு தலைமைப்பண்பை தீர்மானிப்பதாய் இருப்பதாய் இருந்த மாயைகளும், கட்டமைப்புகளெல்லாம் தகர்ந்து விட்டன. தொடர்ந்த உழைப்பு, தன்னலமற்றத் தன்மை  தலைமைப்பண்பிற்கு வழிகோலுகிறது. அவ்வகையில் தலைமைப்பண்பிற்கான விசயங்களாய் விழிப்புணர்வுடன் இருத்தல், பேச்சில் கவனம கொள்ளுதல், துணிவுடன் தொடங்குதல், உடனடியாக முடிவெடுத்தல்., முடியும் வரை காத்திருத்தல், நேரமே உயிர் மூச்சாகக் கொல்லுதல் , இயல்பாக இருத்தல், அவமானங்களை எதிர் கொள்ளுதல், உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுதல், ஆபத்துடன் வாழ்தல்  ஆகியவற்றை முதன்மையானப் பண்பாக எடுத்துக் கொண்டு இந்நூலில் விவரிக்கிறார். எதற்குப்பிரச்சினை என்று நினைப்பவர்கள் மத்தியில்  தலைமைப்பண்பு பற்றிய விழிப்புணர்வையும், அதன் அம்சங்களையும் பற்றியத் தெளிவையும் ஏற்படுத்தவே இக்குறுநூல் என்றும் குறிப்பிடுகிறார்.குழுவை ஒருங்கிணைக்க வைப்பதற்காக எப்போதும் ஆபத்துடன் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அன்பினால் ஒன்று சேர்ப்பதை விட வெறுப்பினால் வென்று சேர்ப்பது எளிது எனபதை அவர்கள் அறிவார்கள் என்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளை பெரிதாக்கும் மனிதர்களின் பண்பு பற்றிய அலசல் நுணுக்கமானதாகும். சமூகம் எப்போதும் ஒத்துக் கொள்கிற போர் புரிய வீரம் அவசியம் என்பதை விடுத்து சமூகம் முன் வைத்தவற்றை எதிர்ப்பதற்கும், அவற்றை மறுதலிப்பதற்கும் அதிகமான துணிச்சல் தேவை என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். இவ்வளவு சிரமப்பட்டு சிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்பது பற்றியும் அக்கறையை வெவ்வேறு கோணங்களில் காட்டுகிறார்.சிம்மாசனங்களை கைப்பற்றி உட்கார்ந்திருப்பதை விவும், சிம்மாசனங்களை விட நாம் மேன்மையானவர்களாக் இருக்க வேண்டும் . அப்போதுதான் நம்க்கும் பெருமை , சிம்மாசன நாற்காலிக்கும் பெருமை என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.ஒரு படைப்பிலக்கிய வாதியாகவும், மேடைப்பேச்சு மூலமும் லட்சக்கணக்கான மாணவர்களை, மக்களைச் சந்திக்கிறவராயும் இருக்கிற காரணத்தால் சமூக நுண்ணறிவு என்பது தலைமைக்குத் தேவையான முக்கியமான பக்குவம் என்பதை கூறுகிறார். சமூக நுண்ணறிவு பற்றி இவ்வளவு நுணுக்கமாகவும், அதன் தேவை கருதியும் ஒரு படைப்பிலக்கியவாதியால் தான் எடுத்துரைக்க முடியும் என்பது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம் எனலாம்.   ஒவ்வொரு பக்கத்திலும் சிம்மாசனங்களைத் தொட்டவர்களின் படங்கள் நிறைந்து ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது.
தன்னம்பிக்கை பற்றி எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் பெரும்பாலும் எதிர்மறை அம்சங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். நம்பிக்கையையே மூன்று வேளை உணவாகக் கொள்ளும்படி அறிவுறுத்துவர். .துரோகர்கள் நிறைந்த சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி விட்டு, நேர்மறை அம்சங்களைத் தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டு போய் வெற்றிக்கனி பறிக்க ஏணியைப் போடுவார்கள். அந்நிலையில் ஒரு நூலின் தலைப்பே      “ துரோகச் சுவடுகள் “ என்று தலைப்பிட்டு இறையன்பு அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருப்பது மாறுதலாயும் எதிர்மறை அம்சங்களிலிருந்து நேர் மறை அம்சங்களுக்கு போகும் பாதையைக்  காட்டுவதாகவும் இருக்கிறது.
வரலாற்றின் பல பக்கங்களிலும்   துரோகங்கள் சிம்மாசனங்களை எட்ட வைத்திருப்பதைக் காட்டுகிறார்.அதுவும் தற்கால அரசியல் சமூக சூழல்களில் துரோகங்களின் நிழல்கள் படிந்திருபதை இந்திராகாந்தியின் கொலை முதல் அரசியல் கட்சிகளின் கூட்டணி வரை சுட்டிக்காண்பிக்கிறார். துரோகங்களால் இழந்து போன சிம்மாசனங்களைப் பற்றிப் பேசும் போது  அவற்றால் வெவ்வேறு துறைகளின் நிகழ்ந்த குறைபாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார். உதாரணம் இந்திய மருத்துவ முறை பற்றியது.. சீடர்கள் முழுமையாக அறிந்தால் துஷ்பிரயோகம் செய்து விடுவார்களே என்ற அச்சத்தில்தான் இந்திய மருத்துவ முறைகள் முழுமையும் அடுத்தத் தலைமுறைகளை அடையாமல் போய் விட்டன. குறுகிய உள்ளம் படைத்தவர்கள் கையில் அரிய மருத்துவ முறைகள் அகப்பட்டு விட்ட்தால் அவை குணப்படுத்துவதை விட ரணப்படுத்துவதற்கு அதிகம் உபயோகப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சமும் அதற்குக் காரணம் என்கிறார்.  துரோகிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் இந்த நூலிலே அடங்கியிருக்கிறது. விரக்தியை  ஏற்படுத்துவது இந்நூலின் நோக்கமில்லை என்று எச்சரிக்கை செய்வதற்கான குரலாக அமைந்திருக்கிறது.
வழக்கமாய் நாம் கோடிட்டுக் கொள்கிற வரிசையில் இப்புத்தகத்தின் சில வரிகளைப் பார்க்கலாம்.:
* விசுவாசிகள் குறிஞ்சியைப் போலவும், துரோகிகள் நெருஞ்சியைப் போலவும் இருக்கிறர்கள்.
* வரலாற்றில் மகான்களும் இறைத்தூதர்களும் அருகில் கூட துரோகிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்கிற செய்தி நம்மை தொய்வடையச் செய்வதற்காக அல்ல. இன்னும் நாம் கூடுதலான எச்சரிகையாய் நடந்து கொள்வதற்காகவே..
* நம்பிக்கையை கைக்குட்டையாக்க் கையாள வேண்டுமே தவிர கால் சட்டையாக அணிய முடியாது. சந்தேகமும் சாப்பாட்டுடன் கலந்திருந்தால்தான் வாழ்க்கையில் சம்த்தன்மை ஏற்படும் என்பது சரித்திரம் உணர்த்தும் பாடம்.
* உழைத்தவர்களுக்குபோய்ச் சேர வேண்டிய அடையாளத்தை மறைத்து விட்டு தொடர்பில்லாத    நபருக்குப் பெருமைகளை அள்ளி வீசுவது வியர்வைச் சிந்தியவர்களுக்கு அயர்வைத்தருகிற அற்பச் செயல்.
*துரோகம் எப்போதும் நிகழ்வுகளின் தொடர்ச்சி. அது தலைமுறைகளை தாண்டியும் நீடிக்கும் வன்மம்.


( நியூசென்சரி பதிப்பகம், சென்னை 98  வெளியீடு.
1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள் இரண்டும் தலா ரூ 60 விலை )

வயிற்றின் குரல்

திருப்பூரில் வந்திறங்கும் அதிநவீன பின்னலாடை இயந்திரங்களை அவ்வப்போது நடக்கும் உலக பின்னலாடைப் பொருட்கள் கண்காட்சியில் பார்க்கிற போது வருத்தமே மேலிடும். அவ்வகை இயந்திரங்கள் மனித உழைப்பை நிராகரித்து மனித உழைப்பை குறைத்து மதிப்பிட்டு தொழிற்சாலைகளுக்கு வெளியில் மனிதர்களைத் தள்ளுபவை. சாயப்பட்டறையின் ஜீரோ டிஸ்சார்ஜ் சம்பந்தமான அதி நவீன இயந்திரங்களும், தொழில் நுட்பத்தைக் காட்டிப் பணம் பறிப்போகும் குறைந்த பாடில்லை. ஆனால் சாயப்பட்டறை கழிவு ஆற்றில் தொடர்ந்து ஓடுவதும், ஆழ் குழாய்கள் மூலம் நிலத்தடியில் அவை பீய்ச்சப்படுவதும் குறைந்தபாடில்லை.
பொருளாதாரத் தத்துவங்கள் பணம் பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. பின்னலாடை தொழில் இன்று அதிகம் புழக்கத்திலிருக்கும் பங்களாதேஷ், பாக்கிஸ்தான், கொரியா, சீன நாடுகளிலும் இது சம்பந்தமான நிலைமைகள் மாறவில்லை. மொழியோ, பிரதேசமோ கணக்கில் வராது. பணக் கடவுளைத் தேடாது போகிறவர்களுக்கு எல்லா பாதைகளும் அடைபட்டிருப்பது உபதேசமாய் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சக மனிதன் உண்மையிலிருந்து தூரமாகிக் கொண்டே போய் பூமியில் பொருளைச் சேர்க்காதவர்கள் எந்த சாம்ராஜ்யத்தில் இடமில்லாமல் போகக் கடவது என்ற சாபத்திற்கு உள்ளாகிறார்கள். சக மனிதனின் படைப்பாற்றலிலும், தேடலிலும் பணத்தைத் தேடுவது என்பது பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்படுகிற வரை இவ்வகை தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். தொடர்ந்த உற்பத்திக்கான நியாயங்கள் வலுத்துக் கொண்டே போகும். அறம் என்பது உண்மை, மனிதம், உள்ளத்து நல்லது, நேர்மை ஆகியவற்றோடு தொடர்புடையது என்று நம்புகிறவர்கள் மனச்சிக்கலுக்கு தொடர்ந்து ஆளாக வேண்டியிருக்கிறது. பின்னலாடை தரும் அந்நிய செலவாணியை மனதில் கொண்டு மட்டும் மக்களின் வாழ்க்கை மூலாதாரங்களை நிலைக்கச் செய்ய முடியாது என்பதை உணரும் சந்தர்ப்பங்களும் சில ஏற்படுகின்றன.
powerloom
பொருளாதார வளர்ச்சியோ, பணப் பெருக்கமோ பணத்தை விட மேலாக அதன் மூலங்களாக கல்வி, நம் சமூக அமைப்பு முறை, நியாயம், அரசியல் சுதந்திரம், சுய தேசிய உணர்வு ஆகியவற்றிலும் அடங்கியிருக்கிறது.
அழிக்கப்பட்ட ஆற்றையோ, நிலத்தடி நீர்ச்சூழலையோ மீண்டும் உண்டாக்க எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது மனதில் பெரும் கேள்விகளை எழுப்பும். அவற்றை மீட்டெடுக்க இயலாத சூழலில் வெவ்வேறு வழிகளில் பணத்தைச் செலவு செய்து தீர்வுகளைத் தேடும் மனிதன் தன் இனத்திற்கே துரோகம் செய்வதை மெதுவாகவே உணர்ந்து கொள்வான். அதி நவீன தொழில் இயந்திரங்கள் மனித உழைப்பையும் பயன்பாட்டையும் குறைத்து மனித இன நியாயங்களுக்கு வஞ்சகம் செய்து மனிதனின் படைப்புத் திறனைக் குறைத்து சமூகச் சூழலை சோம்பலானதாக்குகிறது. அனைத்தும் பொது விஷயங்களாவதால் பின்னர் விளையும் நன்மைகள் மனித குலத்திற்கு பல சமயங்களில் நேரிடையாகவும் அமைகிறது.
இயற்கை மூலதனங்களாய் அமையும் நீரும், எரிபொருட்களும் வருமானம் தரக்கூடியவையாக மாற்றப்பட்டு விட்டன. ஆனால் அவற்றை மூலதனம் என்று மனதில் கொண்டால் அவை பற்றிய பாதுகாப்பும் மனதில் இருக்கும். அவற்றை குரலாக சுரண்டுவது என்பதும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். அல்லாமல் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது மிக முக்கியத்துவம் பெருவதற்காக காரணங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இயற்கையாகவே இல்லாதவற்றை உருவாக்குவதில் நமது விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் நிறைய கற்றுக் கொண்டும், ஆராய்ந்தும் செயலில் இறங்குகின்றனர். இவை தரும் அபாயமான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது கூடச் சிரமம்தான். உதாரணம் அணுமின் சக்தி.
வளம் என்பதை மனதில் கொண்டு மனிதன் தொடர்ந்து செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது அறம் சார்ந்த பண்புகளின் வளர்ச்சி என்பதை வெறும் தத்துவமாகப் பார்க்கிறவர்கள் சமூகவியலில் அதிகரித்து விட்டார்கள்.மனிதனின் சூழலியலுடன் தொடர்பு கொண்ட பொருளாதாரம் மனிதனைப் பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் இரு கண்களால் இயங்க வேண்டியிருக்கிறது. இருக்கும் கண்களை அழுகிய பின் பிய்த்தெறிந்து விட்டு பணத்தைச் செலவழித்து புதிய கண்களைப் பொருத்திக் கொள்வது தனி மனித சுதந்திரத்தை பொருளுக்கு அடிமைப்படுத்துவதாகும்.
பெரும் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாக, ஆடம்பரமான மனைகளாக நிற்பது பலருக்கு ஆச்சர்யம் தரும் விசயமாக இருக்கும். ஆனால் விவசாய நிலம் அழிந்து போனது என்பது இயற்கையை மனிதன் தன்னோடு வைத்திருப்பது, மனித தன்மையோடு இருப்பது, விவசாயப் பொருட்களை வாழ்க்கையின் ஒன்றாக மாற்றி மனிதனோடு இருக்கச் செய்கிற ஆயத்தங்களை இல்லாமல் செய்து விடுகிறது. வெற்று நிலங்கள், விவசாய நிலங்கள் சாயப்பட்டறைகளாக நிற்கலாம். அவை பணம் காய்ச்சி மரங்களாக ஆச்சர்யப்படுத்தலாம். ஆனால் இயற்கையோடு இணைந்து வாழும் மனிதனின் உயிர்ப்புத் தேவை என்ற நிலைக்கு கொண்டு வருவது எல்லாவற்றையும் சமப்படுத்தி விடமுடியாது.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் வளர்ந்துள்ள கேட்டைக் கட்டுப்படுத்த உயர் வளர்ச்சி தேவை என்பதை புதிய இயந்திரங்களின் உற்பத்தியாளர்கள் சுட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகளே இப்போதடைந்திருக்கும் வளர்ச்சியால் வந்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தொழில் நுட்பமும், இயந்திரங்களும் வேலைப் பளுவைக் குறைக்கின்றது. உடல் உழைப்பு இல்லாத மனிதன் நரம்பு நிறைய வேதனைகளைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. வருங்கால அபாயம் என்ற வெடிகுண்டு இச்செயல்களால் தொடர்ந்து தயாராகிக் கொண்டே இருக்கிறது.
இயற்கை சூறையாடப்பட்டு, உற்பத்தியும், பொருளாதாரமும் புள்ளி விபரங்களால் பெரிது படுத்தப்பட்ட சூழல் உழைப்பு மனிதனை ஊனமாக்கி புதிய நவீன மனிதனை சோம்பலான இயந்திரமாக, அரசின் இலவசத் திட்ட கொப்பரைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்பவனாக இருக்கச் செய்கிறது.
சமூகத்தின் ஒரு பகுதியோ, நாடோ வளர்ச்சி பெறுவது என்பது மக்களின் வளர்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியாததாகிறது. சிறுபான்மையை மனதில் கொண்டு வளர்ச்சியற்றதை ஒரு பெரும் சமூகமாக்குவதன் மூலம் அவர்களை வளர்ச்சி பெற்றவர்களை மாற்றுவது பொய்யாகவே நிலை பெறும். அந்நிய செலவாணித் தொகையை குறிப்பிட்டு பெருமை கொண்டே வயிற்றின் குரலை நிராகரிக்க முடியாது.
- See more at: http://solvanam.com/?p=34975#sthash.OZYRTRGJ.dpuf

புதன், 13 ஆகஸ்ட், 2014நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து

இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது.
இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய  பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும், அறிவுரை எண்ணத்தோடும் அவை வெளிப்பட்டுள்ளன கரையே( ற்)றுங் கருத்துக்கள் என்ற  இந்நூலில்… இந்நூலின் கடை வரி:: இன்று புதிதாய் பிறந்தோம், நாளையும் புதிதாய் பிறப்போம் என்கிறது. இந்நம்பிக்கையை இந்நூல் முழுக்க பார்க்க முடிகிற்து.

அதில் சில:
குடும்பம் என்ற பல்கலைக்கழகத்திலிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம்.தந்தையிடம் தாய்மைப்பண்பு, ஆசிரியனிடம் தாய்மைப்பண்பு, அரசாள்வோரிடம் தாய்மைப் பண்பு வளர வேண்டும்- எல்லா உயிர்லும் ஒருமைப்பாட்டை காண பயிற்சி வேண்டும்.-உலக உயிர்த்திரளிடம் ஏற்படும் சகோதரத்துவத்தின் பழுத்த நிலையே அருள்- மேல் நாடுகளில் மது அருந்துவது உனவின் ஒரு பகுதியாக அமைகிறது. ஆனால் இங்கு அப்படி அல்ல. அதற்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கச் செய்வதற்காகவும், விளம்பர உத்தியாகவும் இத்தைய காட்சிகளை திரைப்படங்களில் அடிக்கடி புகுத்துகிறார்கள். பண்பாட்டு படுகொலை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுப்பது  நாகரீகம் என்று கருதி யாராவது நஞ்சகளை உண்பார்களா-இன்றைய மனிதனைப் பாதிக்கும் சுமைகளும் ஒன்றாகச் செய்திச்சுமை என்பதைக் குறிப்பார்கள். அந்த முறையில் துள்ளித் திரிகின்ற கள்ளமற்ற குழந்தைகளின் மூளையில் இளம் பருவத்திலிருந்தே  கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையாக எண்ணற்றச் செய்திக்குப்பைகளைத் திணிக்கத்தான் வேண்டுமா-இன்றைய மாணவர்கள் மனித வாழ்வில் இலட்சிய வேகம் நிரம்பிய காலம். சமூக முன்னேற்றம், சமூக வளர்ச்சி விளையும் வயல் நிலம் சமூக மாற்ற சிற்பிகள் மாணவர்களே. இன்றைய மாணவர்கள் இலட்சிய வீரர்களாக விளங்க வேண்டும்.- எம்மதமும் சம்மதம் என்ற நெறி நாம் பின் பற்ற வேண்டிய நன்னெறி அன்பு நெறி- வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல. நாம் கடலாக இல்லை என்றாலும் ஏரியாக இருக்கலாம். வெட்கப்பட வேண்டாம். மனம் என்ற தோணி இருக்க பயம் ஏன். இன்று புதிதாய் பிறந்தோம். நாளையும் புதிதாய் பிறப்போம்  – என்கிறார். இதில் உள்ள பல்வேறு கட்டுரைகளில்..
இதில் குறிப்பிடப்படும் விசயங்களை வெளிப்படுத்த இந்திய தத்துவ மரபு, புராணங்கள், வெளிநாட்டுக்கதைகள் என்று பலவற்றை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
அதிலிருந்து ஒரு கதை;
1966ல் நோபல் பரிசு பெற்ற போலிஷ் பெண் கவிஞர் விஸ்வாவா சிம்போர்ஸ்கா  எழுதிய உருவகக் கதை:
மீனவர் சிலர் கடலிலிருது ஒரு சீசாவை கண்டெடுத்தனர். அதற்குள் ஒரு துண்டுத்தாள் இருந்த்து. அதை எடுத்து படித்துப் பார்த்தார்கள். “ யாராவது என்னைக் காப்பாற்றுங்கள். யாரும் இல்லாத் தீவில் கடல் கொண்டு வந்து என்னை ஒதுக்கி விட்ட்து. உதவி வரும் உதவி வரும் என்ரு நான் கரையில் காத்து நிற்கிறேன். விரைந்து வாருங்கள் இங்கே இருக்கிறேன் நான்”
“ இதில் தேதியொன்றையும் காணோமே. உறுதியாக இப்போதே காலங்கடந்து விட்டிருக்கும் இந்த சீசா நீண்ட காலமாகக் கடலில் மிதந்து கொண்டிருந்திருக்க வேண்டும் “ என்றான் முதலாவது பேசிய மீனவன்.
“ இதில் இடம் எங்கே என்று சொல்லவில்லையே. எந்தக் கடல் என்றும் நமக்குத் தெரியாதே “ என்றான் இரண்டாவதாகப் பேசிய மீனவன்.
” இப்போழுது ஒன்றும் காலங் கடந்து போய் விடவில்லை. அது ஒன்றும் தொலைவிலும் இல்லை.  இங்கே என்று சொல்லும் தீவும் எங்கேயும் உள்ளதுதான்”  என்றான் மூன்றாவது மீனவன்.
எல்லோருக்கும் சங்கடமாகப் போயிற்று . வாயடைத்து  நின்றார்கள். எல்லா பொது உண்மைகளின் கதையும் இதுதான்.

போலந்து மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்த பல படைப்புகள், மலையாளத்திலிருந்து பல படைப்புகள் ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சி. இராதா கிருஷ்ணனின் ஸ்பந்த மாபினிகளே நன்னி  நாவல் உட்பட)  இலக்கண ஆராய்சி நூலகள் ( உ வேசா இலக்கணப் பதிப்புகள், மலையாள் மொழியிலக்கண நூலாகிய பாஷா வ்யகரணம் உட்பட ) , சமூக நீதிப் போராட்டம் சம்பந்தமான நூலகள்  ( நாராயண குருவும் அய்யன் காளியும்  உட்பட ), தமிழ் மலையாளம் லெக்சிகோகிராபி நூல்கள் , நகுலன் கட்டுரைகள் போன்ற் தொகுப்பு நூல்களின் ஆசிரியரான பேரா. கி. நாச்சிமுத்து அவர்களின்   வெகு எளிமையான நூல் இது.
( கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
பேரா. கி. நாச்சிமுத்து   மொழி பண்பாடு ஆய்வி நிறுவனம், கோவை 30 விலை ரூ 70  )
ஈரோடு 10-ம் ஆண்டு புத்தக கண்காட்சி கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்தது.

அப்துல் கலாமின் பேச்சைக்கேட்க மக்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் குவிந்தனர்.

புத்தக கண்காட்சியில் சுமார் 5 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்று தீர்ந்தன.

இதில் சுற்றுசூழல் பற்றிய புத்தகங்கள் அதிகமாக விற்றன...
எதிர் வெளியீடு, இயல்வாகை பதிப்பக நூல்கள் அதிகம் விற்றன...
அதிகம் விற்ற நூல்களில் எனது நண்பர் சுப்ரபாரதி அவர்களின் நூலான "மேக வெடிப்பு" நூலும் ஒன்று. 

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002
தொலைபேசி: 04259 226012, 98650 05084

இப்புத்தகம் தேவைப்படுவோர் "PRIVATE CHAT"-ல் தொடர்பு கொள்ளவும்.
அவருடைய BLOG >>> www.rpsubrabharathimanian.blogspot.com

(World news on tamil  Facebook - GM Selva)


சனி, 9 ஆகஸ்ட், 2014

நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்

நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்

சுப்ரபாரதிமணியன்திருப்பூரை அடுத்த  ஒரு கிராமத்தில் 5 ஏக்கர்  நிலத்தில் 10 கி.வாட் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குவைத்தில் வாழும் இளங்கோவன் பற்றி பசுமை விகடனின் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எழுதிய  ஒரு கட்டுரை பேட்டியில்  தெரிந்து கொண்டேன். திருப்பூர் பின்னலாடை தொழில் மின்சார வெட்டால் அவதிப்பட்டிருந்த காலம் அது. சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தி பற்றிய முக்கிய கட்டுரைப்பேட்டி அது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இளங்கோவனின் “  ஒரு சாமானியனின் சாதனைஎன்ற அவரின் வாழ்க்கை அனுபவங்கள் நூல் வெளியிட்டு விழாவில் கவிஞர்கள் அறிவுமதி, சிற்பி பாலசுப்ரமணியன், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபலங்கள் லேனா தமிழ்வாணன், இயகோகா சுப்ரமணியன், சிறுதுளி வனிதா மோகன், கேஜி மருத்துவமனை பக்தவச்சலம், முனைவர் இளங்கோவன் பார்க் அனுசா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர் சி. ஆர். ரவீந்திரன் போன்றோர் கலந்து கொண்டது அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள  ஆவலைத் தூண்டியது,அந்த நூல் வெளியீட்டு விழாவிலேயே அப்பா இல்லாதக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் படிப்புச் செலவிற்கு ரூ 25 இலட்சம் ரூபாயை அவர் சார்ந்தஅரவணைப்புஅமைப்பு வழங்கியது ஒரு முக்கியச் செய்தியாக இருந்தது.
சோளமோ, கம்போ, சாமையோ, அவரையோ, துவரையோ விளையும் நிலத்து விவசாயின் மகன்தான் ஒரு பட்டிக்காட்டுக்காரரான இளங்கோவன்.திராவிட கட்சியின் ஈடுபாட்டால் அறிஞர் அண்ணா தான் அவருக்கு அப்பெயர் வைத்துள்ளார்.அவரின் தந்தையின் நெஞ்சில் பெரிய அளவிற்கு ஒரு வடு இருந்திருக்கிறது. அவர் நிலத்த்தை உழுதாலோ, பாத்தி பிடித்தாலோ, வரப்பு போட்டாலோ, மண் வெட்டினாலோ  அந்தத் தழும்பு புண்ணாகிச் சீழ்வடியும். அவரால் குடும்பத்திற்குத் தேவையான அளவு உதவ முடியவில்லை.அம்மாதான் எல்லாமே..எருமை வளர்த்துப் பால் கறந்தும் விற்றும்  ஆடு மேய்த்து அவைகளை வளர்த்தும் அவரைப் படிக்க வைத்திடிருக்கிறார்.எம்.. படிப்பை சிம்னி விளக்கு வெளிச்சத்திலேயே  படித்திருக்கிறார் என்பது அவரது வறுமையின் உதாரணம். பிறகு ஆசிரியர் பணி, பியர்லஸ் முகவர், வெட்கிரைண்டர் உற்பத்தி, பின்னலாடை உற்பத்தி என்று 13 தொழில் நிறுவன்ங்களை நடத்தியிருக்கிறார்.பத்து ஆண்டுகளில் பின்னாலாடைத் தொழிலின்  வீழ்ச்சி அவரை நிலை குலைய வைத்து விட்டது. இரட்டை சக்கர வாகனம் உட்பட எல்லா சொத்துக்களையும் விற்று வந்த்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார். 52 இலட்சம் கடனை அடைக்க வேண்டியச் சூழலில் குவைத்திற்கு வேலை தேடிச் செல்கிறார். ( அவரின் கடன் குறித்து சிலர்  எழுதிய கடிதத்தால் விமானத்திலிருந்து  இறக்கி விடப்பட்டு ,பின் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று  தனியே விமானம் ஏறுகிறார் ) அப்போது மகனுக்கு மூன்றரை வயதுமகளுக்கு ஒன்பதரை வயதுஇளம் வயது மனைவி.குவைத்தில் இங்கே. குவைத்ஹ்டில் ஆட்டுக் கொட்டகையில் தங்கி மூன்று வேளை உணவை ஒரே சமயத்தில் சமையல் செய்து அலுவலக வேலை, குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி, சோதிடம் சொல்வது என்று சிரமப்பட்டு அந்த 52 இலட்சம் கடனை தீர்த்தபின்பே  3 ஆண்டுகள் கழித்து திருப்பூர் திரும்புகிறார். அதன்பின் சம்பாதிக்கிறத் தொகையில் 1/6 பகுதியை தானத்திற்கென்று ஒதுக்கியும்அரவணைப்பு”   என்ற அமைப்பின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார்.   கைவசம் இருந்த கல்வியை வைத்து முன்னேறியதால் ஏழை மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை அளிப்பதன் மூலம் திருப்தி கண்டு  வருகிறார்.
இவரின் சின்ன வயசு அனுபவங்கள், வறுமைநிலை,வியாபாரத்தில் வீழ்ச்சி, குவைத் நாட்டில் பணம் சம்பாதிக்கும் சிரமங்கள் என்பவையெல்லாம் ஒரு சாதாரண மணிதன் நொறுங்கிப்போய் தனிமைப்பட்டு மன நோயாளியாகும் சூழலிலிருந்து தப்பித்து மீண்டு குடும்பத்தையும் நடத்துவதையும் , சமூக அக்கறை கொண்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதையும்  இந்நூல் எடுத்துரைக்கிறது. இது சொந்த விளம்பரம் அல்லாமல்  தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னலம் கருதாமல் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்துவதில் கண்டையும் மகிழ்ச்சியை பிறர் உணர வைக்கிற அம்சங்களாய் இந்நூல் அமைந்துள்ளது. தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பது இன்பத்துள்  தலையாயது என்பதை தன் செயல்களால் நிருபித்து வருகிறார்.  ” அஹம் பிரம்மாஸ்மி தத்வமஷிஎன்று என்னவாக இருக்கிறதோ அதுவாக இருந்து மற்றவர்களுக்கு உதவும் தன்மையைக் கொண்டிருக்கிறார்.. சக்கரவர்த்தி நெப்போலியன் காந்தி போன்றோரின் வாழ்கைச்சம்பவங்களை முன்னோடியாக எடுத்துக் கொண்டு செயல்படுவதை சில சம்பவங்கள் மூலம்     ( அது அவர்களின் வாழ்விலும், இளங்கோவனின் வாழ்விலும் என்று) சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார்.
சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்களில் கானப்படும் தேற்றங்களும் கதைகளும் சம்பவங்களும் மனிதன் என்னவாக ஆசைப்படுகிறான் என்பதைச் சொன்னாலும் அதை மேற்கத்திய அனுபவங்களீலிருந்து நாம் எடுத்து உள்வாங்கிக் கொள்ள சிரமப்படும் போது சாதாரண கொங்கு  மனிதன் ஒருவனின் வெற்றிக்கதையும் அவனின் வாழ்க்கையின் அனுபவங்களும் இப்புத்தகத்தில்விரிந்து ,   முன்னேற ஆசைப்படுபவர்களுகு வெகு சமகால நிசர்சனமாக இளங்கோவனின்   ஆளுமை முன் நிற்பது  சுயமுன்னேற்ற நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.

( ரூ 65, பக்கங்கள் 102, விஜயா பதிப்பகம் , கோவை வெளியீடு )