சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 10 ஜூலை, 2018

puthya thalaimurai -8/7/18 issue கழிவுகள் : சுப்ரபாரதிமணியன்
----------------------------------------------------------
       திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் 70 வயது சட்டையணியா சாமியப்பன் அவர்கள் ( காரணப்பெயர் அது. சட்டையில்லாத சாமியப்பன் அல்ல. சட்டையணியா சாமியப்பன் . சட்டையை அணிய மறுப்பவர். சட்டை தேவையில்லை என்பவர் . 20 ஆண்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இயறகை வேளாணமை சார்ந்த பயிற்சிகள், களப்பணிகள் செய்து விட்டு வயது காரணமா திரும்பி விட்டார் சமீபத்தில் ) இடுப்பில் ஒரு துண்டைக்கட்டியிருப்பார். வெளியில் செல்லும் போது அது வேட்டியாகும். அந்த வேட்டி கிழிந்து விட்டால் அதை துண்டாக்கி தலையில் கட்டிக் கொள்வார். கீழே உள்ளாடை அணியமாட்டார். வீட்டிலும் தோட்டத்திலும்  இருக்கும் போது கோமணம் கட்டிக்கொள்வார். வேட்டி கிழிந்து துண்டாகி துண்டு கிழிகிற போது அதைக் கோமணமாக்கிக் கொள்வார். கோமணமும் நசிந்து போகிற போது சமையலறை சுத்தம் செய்யும் துணியாகி விடும் அது.
  வேட்டி, துண்டு, கோமணம் என்று மறு உற்பத்தி, மறு உபயோகம் என்று கழிவுக்குச் செல்லும். அதைத்தான் பல பொருட்களின் விசயத்தில் நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். வேட்டி ஒரு உதாரணம். கழிவை என்ன செய்ய வேண்டும் என்று முன்னோர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
வீட்டின் முகப்பில், ஒரு மூலையில் குப்பை மேடு முன்பெல்லாம் இருக்கும். வீட்டுக்கழிவுகளைக் கொட்டி உரமாக்க.
உலகமயமாக்கலின் மாயத்தால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதை குப்பை சேர்கிறது என்று சாதாரணமாய் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நகரக் குப்பைகளை சரியாகப்பராமரிக்காமல் கிராம எல்லைகளில் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்லும் அவலம் கொங்கு மாவட்ட தொழில்சார் ஊர்களில் சாதாரணமாக நடக்கிறது. நகரத்து தொழிற்சாலைச் கழிவுகளை சிறுசிறு மூட்டையாக்கி  கிராம எல்லைகளில் கொண்டு வந்து போட்டு விட்டு மாயமாகிவிடுகிறார்கள்.( இதைத் தாண்டி கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகள், இரசாயனக் கழிவுகளைக் கொண்டு வந்து கொங்கு நாட்டு கிராமங்களில் கொட்டி விட்டுப் போகும் எல்லைதாண்டிய பயங்கரவாதமும் தொடர்ந்து நடந்து வருகிறது )
எங்கள் திருப்பூரில் தினமும் 550 டன் குப்படி சேகரமாகிறது. இதில் 70% நெகிழிக்கழிவுகளே. இந்தக் கழிவுகள் மக்காமல் மண்ணுக்குள் புதைகின்றன. இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் வீணாகிறது. கழிவுகள் சாக்கடைகள் நீர்நிலைகளில் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்துதுகிறது..
அமெரிக்காவிலும் இது தொடர்வதினை பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கில்டோரா தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறுகளில் கலக்க விட்டு சாதாரண மக்களுக்கு நோய்களைத் தருகிறார்கள்.இந்த நோய்களைச் சுமப்பவர்கள் சாதாரண மக்கள் .இந்தச் செய்லை சூழலியல் பாசிசம் என்கிறார்கள். சூழலியல் இனவெறி என்றும் இதனைச் சுட்டுகிறார்கள்.
வீட்டில் இருக்கும் குப்பையை ஒரு பாலீதீன் பையில் போட்டு ( அதைத் தரம், மக்கும் கழிவு,மக்காத கழிவு என்று பிரிக்காமல் ) அதை ஏதாவது குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு எரிச்சலில் இருந்துத் தப்பித்து  கைகழிவினால் நம் கையில் இருந்து, வீட்டிலிருந்து குப்பை வெளியே போய்விட்டது என்று பெருமூச்சுவிட்டுக் கொள்வதன் தொடர்ச்சிதான் இந்த கிராமப்புற எல்லைக் குப்பை விவகாரம்.
முந்தைய காலத்தில் வீட்டின் முன் ஒவ்வொருவரும் குப்பை கொட்ட குழி தோண்டியிருப்பார்கள். அது மக்கி உரமாகும். இன்றைய காலத்தில் அடுத்தவன் பண்ணட்டும் அப்புறம் நான் பாக்கிறேன். இருக்கவே இருக்கிறது என்று நெகிழி பைகளில் குப்பைகளை அடைத்துத் தெருவில் போட்டு விட்டால் அதிலிருந்து உற்பத்தியாகும்   தொற்றுகள் மெல்ல பரவி வீட்டிற்குள் வந்து விடுவதும் சாதாரணம்.
நணபர் ஒருவரின் பெரிய தொழிற்சாலையில் இருக்கும் குண்டு பல்புகளை மாற்றுவது பற்றி சொன்னால்  எதெது பீஸ் போகுதோ அதெல்லாம் மாத்தறேன் என்பார். இது பல ஆண்டுகளாகிவிடும் எல் ஈ டிக்கு அவர் மாற. அது போல். அடுத்தவன் பண்ணட்டும் அப்புறம் நான் பாக்கிறேன். மனப்பான்மை வளர்ந்து கொண்டே இருக்கிறது. முறையாக்க் குப்பைகளைப் பிரிக்காமல் அவற்றை எரிப்பதோ, குழிகளில் போட்டு மூடுவதோ தீர்வாகாது.
 தயிரை, பாலில்உறை ஊற்ற மனமில்லாமல் கடையில் வாங்கும் மனப்பான்மை  முதல் சீமார்குச்சிகளைக் கூட நெகிழி மயமாக்கி விட்டது வரை எல்லாம் உலகமயம்.
2025ல் 75% மொத்த மக்கள் தொகை கிராமங்களில் இருக்கும்போது குப்பை உலகத்துள் அமிழ்ந்து விடுமோம் என்னும்படி நகரத்து மனிதர்கள் அலுவலகம் செல்லும் போது மதிய சாப்பாட்டுப்பை, குப்பைத்தொட்டியில் போட இன்னொரு பை கொண்டு செல்வதைப் போலவே பிராண வாயு பை ஒன்றையும் கொண்டு செல்ல வேண்டிய காலம் 2025ல் வந்து விடும்.அடுத்தத் தலைமுறைக்கு இதெல்லாம் வரும் என்றிருந்தது இந்தத் தலைமுறைக்கே வந்து விடும். நீடித்த அக்கறையுடனான் செயல்பாடுகள்   மற்றும் விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள் நல்ல விளைவுகளைத் தரும். ISO 14001    SA 8000  நோக்கி உள்ளூர் தொழிற்சாலைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன,. வீடுகளும் மக்கும் கழிவு,மக்காத கழிவு என்று பிரித்து  அதை ஏதாவது குப்பைத்தொட்டியில்  போடும் செயலிலாவது சரியாக  இறங்க வேண்டும்.
சூழல் சார்ந்த நீதி என்று தனியாக தேவையில்லை. சமூக நீதிக்குள்தான் அது அடங்கும். பிரித்துப் பார்ப்பது தேவையில்லாதது, மக்கும் கழிவு,மக்காத கழிவு என்று பிரித்து  அதை விடமுடியாது அதை.
 திருப்பூர் துருவன் பாலா, கரிசல் கிருஷ்ணசாமியின் அம்மா குறித்தப்பாடல்கள் எப்போதும் நெகிழ வைக்கும். அதிலொரு பாட்டு அம்மாவின் சேலை “.
அம்மாவின் சேலை ஆற்றில் மீன்பிடிக்க, தொட்டில் கட்ட என்று பல பரிமாணங்களை அடையும். ஒரு கட்டத்தில் கிழிசலாகிறபோது  மண்ணெண்ணெய் விளக்கின் திரியாகும்.
தொட்டில் கட்டித்தூங்க
தூளீ கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க
அப்பனுக்குத்தலைத் துவட்ட
வெக்கையில விசிறியாகும்
வெயிலுக்குக் குடையாகும்
காயம்பட்ட விரலுக்கு கட்டுப்போட
வெளுத்த சேலைத்திரி
வெளக்குப் போட்டா எரியும்.
கஞ்சி கொண்டு போகையிலெ
சும்மாடா இருக்கு. 
5000 ஆண்டுகளுக்கு முந்தியக் கதையில் இது சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு நாள் புத்தர் மடாலயத்தைச் சுற்றி வந்தார்.எனக்கு புதிய போர்வை வேண்டும் சீடர் ஒருவர்.
பழைய போர்வை என ஆனது
அது நைந்து விட்டது. அதனை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்.
பழைய விரிப்பு என்ன ஆனது
விரிப்பு  - அது நைந்து விட்டது. அதனை வெட்டித் தலையணை உறையாகப்  பயன்படுத்துகிறேன்.
ஏற்கனவே இருந்த தலையணை உறை
அது ஓட்டையாகி விட்ட்து. அதைத் தரையில் கால்மிதியாகப் பயன்படுத்துகிறேன்
பழைய கால்மிதி  என்ன ஆனது
அது நைந்து நூலாகி விட்டது. அந்த நூல்களைச் சேர்த்து முறுக்கி விளக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன்..
ஒரு கூட்டத்தில் கேட்ட சில வாசகங்கள்/ கோஷங்கள்;
. Wow –wealth out of  waste

* cotton city , now garbage city
 * Namma tirupur , clean tirupur
* Making city liveable and smart
  City smart , Citizen smart
* தேவை Corporate Social Responsibility
 மட்டுமல்ல.....
  Personal  Social Responsibility  கூட ..