சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் கிளை.
.மாதக்கூட்டம் 

.3/9/17 மாலை.5 மணி..
பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு
(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்

* நூல் வெளியீடு “ பசுமை அரசியல் “  –சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொகுப்பு


வெளியிடுபவர்: கே.சுப்பராயன்.          ( மேனாள் பாராளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூ.கட்சி மாநில துணைச் செயலாளர் )

* நூல்  அறிமுகம்..: தா.பாண்டியனின் “ பொதுவுடமையரின் வருங்காலம் “  - ப.பா.ரமணி, ஓடை துரையரசன்


* மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்
வருக..


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488





புதன், 16 ஆகஸ்ட், 2017

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி  மொழிபெயர்ப்பில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் - இந்தி  மொழிபெயர்ப்பில் -
திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில்  வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன்  தலைமை தாங்கினார்.

சப்பரம் :இந்தியில் Swargrath :      
(  Hastaksaran Prakasam,Newdelhi  110 094 ரூ 300 )  நூலைக் கல்வியாளர் குமரன் வெளியிட கவிஞர் ஜோதி பெற்றுக்கொண்டார் .

மாலு : இந்தியில் Lekehan :நூலை பேரா.சுந்தரம் வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார்.
( Radharani Hastaksaran Prakasam,New delhi  110 032., ரூ 300 )

சுப்ரபாரதிமணியன் பேசுகையில் “ மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பிலக்கியமே. அண்டை வீடாய் வேறு இந்திய மொழி மாநிலமோ, வெளிநாடோ இருந்து கொண்டு  நமக்கு புது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றின் வேறுபாட்டுடன் அந்த மனிதர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துவது,  பிற மனிதர்களை அறிமுகப்படுத்தும் அனுபவமாகும் “ என்றார். அவரின் “ சாயத்திரை “ நாவல் முன்பே இந்தியில் 2005ல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுப்ரபாரதிமணியனின் இரு  ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்களை கவிஞர் அம்சப்ரியா வெளியிட்டார்.1. The hunt –Shortstories ( Trans. Ramgopal )
2. The lower shadow –Poems (Trans. Rm .Shanmugam )
Releasing & Talks : Prof Dharini / Prithvraj/ Pro. Balakrishnan/ Chandrakumar
சப்பரம்"  நாவல் பற்றி  " கே. ஜோதி
                                  ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு..கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் கூட நெசவில் ஈடுபட்டிருந்தனர். அது நசிந்து விட்டது. அந்த நெசவாள சமூகம் பற்றிய ஒரு நாவலை திருப்பூரை மையமாக வைத்து  எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்நெசவாள சமூகம் பற்றிய   இன்னொரு  நாவலை முன்பே எழுதியிருக்கிறார். தறிநாடா என்ற பெயரில். எழுதியிருக்கிறார். அதுவும் திருப்பூரை மையமாகக் கொண்டதே. இந்த நாவலில் திருமணமாகாத ஒரு முதிர்கன்னிப் பெண்  தன் குடும்பத்திற்காக தானே நெய்து பிழைக்கிறாள். அப்பா குடிகாரன். சிறுவயது  சின்னம்மிணி அவளுக்குத் தோழி. பகிர்ந்து கொள்ள சிறு ஜீவன். அவள் வேதகாரனான, கிறிஸ்துவனான ஜெயராஜிடம் நட்பு கொண்டிருக்கிறாள். ஆனால் கல்யாணம் என்று வரும் போது மதமாற்றம் அவசியமாகிறது . அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள்.அவளின் திருமணத்திற்காய் தானே பட்டு சேலை நெய்கிறாள். குடிகார அப்பா அதை விற்று விடுகிறார். அதைத் தேடி ஜவுளி வியாபாரிகளிடம் செல்கிறாள். கிடைக்கவில்லை. அவள் நெய்த சேலையின் ஒரு பாகத்தை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். சப்பரம் கடவுள் சிலைகளை கொண்டு செல்லும் வாகனம். இப்போது அவளின் பிணத்தை கொண்டு செல்வதையும் சப்பரம் என்றே சொல்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால்  அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவல நிலை என்பதை நாவல் சொல்கிறது. பட்டு சேலை, நூல் சேலைக்கும் இடையிலான சில குழப்பங்கள் இதில் உள்ளன. நெசவுத் தொழில் பற்றிய  பிரத்யேக வார்த்தைகளுக்கு  விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நாவலின் வெகு எளிமையான கதை சொல்லும்  முறை வசீகரமாயிருக்கிறது.. சில வர்ணனைகள் மனதை வெகுவாக்க் கவர்கின்றனபாவு -மயில் தோகை போல் விரிந்து கிடந்த்து.கருவேலா மரத்து பிசின்  பெண்ணின் கழுத்து நகை  போல் மின்னியது.பூசப்படாத கல் சுவற்றில் நீட்டிக் கொண்டிருந்த கற்கள் இளம் வயது ஆணின் முகப்பரு போல இருந்தது. மீனின் செதில் போல் வீட்டின் ஓடுகள் இருந்தன,வீட்டு கேட் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப்போல் நிற்கிறது. இது போல் பலதைச் சொல்லலாம். ஒரு திரைப்பட்த்திற்காக நாவலாக எழுதப்பட்டு பின் அது வேறொரு படமாக வெளிவந்த திருட்டு அனுபவத்தை முன்னுரையில் வேதனையுடன் சொல்கிறார். நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.சவுண்டியம்மன் கோவில் விசேசங்கள், .அண்ணன்மார்சுவாமிகதை, நாட்டுப்புற வழக்குகள் மனதைக் கவர்கின்றன. நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோவில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் சப்பரம் மனதில்  பாரமாய் கிடக்கிறது.
 :





புதன், 9 ஆகஸ்ட், 2017

கடவுச்சீட்டு “ நாவல் ; முன்னுரை



 எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும்.
         என் முன்னேற்றப்பதிப்பகம் “ வெளியிடும் “ கடவுச்சீட்டு “ என்ற இந்நாவல் மலேசியா பின்னணி நாவல் ஆகும். மலேசியா வாழ் தமிழ்மக்களின் வாழ்க்கையைச் சொல்லுவது. அமரர் அகிலன் அவர்களின்                          “ பால்மரக்காட்டினிலே “ நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர் எழுதிய நாவல் என்ற வகையில் பெருமை கொண்டது . அது போல் “ கடவுச்சீட்டு “ என்ற இந்நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்டது. அம்மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த விசயங்களின் சாரமாக இதை எழுதி உள்ளார். மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட இவரின் இன்னொரு நாவல்          “ மாலு “ ( மாலு- ரப்பர் மரத்தில் பால் எடுக்கப் போடப்படும் கோடு )வை உயிர்மை பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது.
சுப்ரபாரதிமணியனின் “கோமணம் “ என்ற நாவலை சென்றாண்டு வெளியிட்டேன். சிறந்த வரவேற்பு பெற்ற அந்நாவலை அடுத்து இந்நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
வீரபாலன் ( முன்னேற்றப்பதிப்பகம், சென்னை )




Review by Subrabharathimanian : Kadal marangal book

                                    காலத்தால் மாற்ற முடியாத புண்கள் :
வெள்ளியோடனின் “ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு

                                                         - சுப்ரபாரதிமணியன் 


வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்கள் வாசிப்பில் வெகு சுவாரஸ்யம் கொண்டதற்குக் காரணம் அந்தந்த நாடுகளின் வேறுபாடான கலாச்சார அம்சங்களும் அனுபவங்களும். மலையாள படைப்பிலக்கியத்தில் வெளிநாட்டு அனுபவக்கதைகள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது . ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்லலாம்.அதற்க்குக்காரணம், கணிசமான அளவில் கேரளத்துக்கார்ர்கள் வளைகுடா உட்பட வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமீபத்தில்         “ ஆடு ஜீவிதம் “ என்ற நாவல் 1 லட்சம் பிரதி  விற்றிருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி ( இதைத் தமிழில் உயிர்மெய் வெளியிட்டுள்ளது )
வெள்ளியோடன் கேரளத்துக்காரர். வெளிநாட்டில் வசிக்கிறார்.  வெள்ளியோடன் இலங்கை, தாய்லந்து, ஈரான், பர்மா  போன்ற நாடுகளின் களத்தில் பல சிறுகதைகளை இத்தொகுப்பில் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். கூடவே இந்தியாவில் கேரளா, பம்பாய் சார்ந்த கதைகளையும்.
இதன் தலைப்பை மையமாக்க் கொண்ட கதை ஏதோவொரு வகையில் அகதியாக்கப்பட்ட  இந்தியர்களையோ, மற்ற் நாட்டினரையோ பொதுமைப்படுத்தியிருக்கிறது எனலாம். எந்த எல்லையை அடைவது, எங்காவது அடைக்கலம் பெற வேண்டும் என்று  படகில் அலையும் மனிதர்களைப்பற்றிப் பேசுகிறது. இந்நூற்றாண்டு அகதிகளின் நூற்றாண்டாக உலகம் முழுக்க அகதிகளைக் கொண்டிருப்பதை குறியீடாக்கியிருக்கிறது. உலகளவிலான மலையாள எழுத்தாளர்களுக்கான் ஒரு போட்டியில் முக்கியப் பரிசு பெற்றது இக்கதை எனபது குறிப்பிடத்தக்கது.  ஒரு  முதிய எழுத்தாளரை மையமாகக் கொண்ட கதையில் வாழ்வு பற்றிய பல விசாரணைகள் உள்ளன. வயதான அரபு நாட்டவர்கள் இங்கு வந்து இளம் பெண்களை மணந்து விட்டு கர்ப்பம் அடைந்த பின்போ, வியாபார நிமித்தம் முடிந்த பின்போ இளம் பெண்களை கைவிட்டுப்போகிற அவலத்தை சொல்லும் முத்அ  இதெல்லாம் தமிழ் நாட்டில் இல்லையென்று சொல்வது தவறானதுதான். ஆனால் கேரளா அளவு பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் .
இதில் பலகதைகள் உலகளவிலான பல அரசியல் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றன என்பது முக்கியமானது.ஈராக், பாலஸ்தீனம், ஈழம், உட்பட பல விசயங்கள் தொடப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுக்களத்தில் சொல்லப்பட்ட மஜாஜ் கதையைச் சொல்லக்கூட  பெரும்பான்மையோருக்கு தயக்கம், கூச்சம் இருப்பதை உடைக்கிறது.  அக்கதையின் பிரதி அரசியல் சார்ந்த உரையாடலாக ஒரு பெண்ணுடன் அமைந்திருக்கிறது. அக்கதையின் இறுதியில் வெளிப்படும் மஜாஜ் செய்யும் பெண்ணின் செயற்கை மார்பகத் தகவல்கள் போல் அந்த உரையாடலில் பல அரசியல் சார்ந்த அதிர்ச்சிகள் உள்ளன.  
ஈழத்துத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் பற்றியக் கதையில் ( மரண வேர்) இது போல் ஈழம் அரசியல் பிரச்சினைகள் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அக்கதையினை கேரள அரசு சார்ந்த கிரந்த லோகம்  “என்ற இதழ் வெளியிட்டிருப்பது  மலையாளச்சூழலில் எழுத்தாளனின் சுதந்திரம் பற்றிக் கொண்டாட வைக்கிறது.. சிங்கள் இனவாதத்தின் உச்சம் பற்றி பேசும் அக்கதை போல் பல கதைகள் வெவ்வேறு நாடுகளின் எதேச்சதிகாரம் பற்றிப் பேசுகின்றன கதாபாத்திரங்களின் உரையாடல் மூலம்.
இக்கதைகளின் ஊடாகத் தென்படும் வன்முறை பல வடிவங்களில் தென்படுகிறது.  வயதான அரபு நாட்டவர்கள்  இளம் பெண்களின் மீது செலுத்தும் பாலியல் விசயம் கூட அவ்வகையில் வன்முறையானதே.  ஆசிரமத்திலிருந்து பாலியல் தொல்லைகளால் வெளியேறும் பெண் இணையதள நட்பால் ஒருவனிடம் மாட்டிக் கொள்ளும் அவலம்  ( பலி ) இந்த வன்முறையின் உச்சமாக உள்ளது. இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்களே என்று தயக்கமில்லாமலும் ஒரு கதை வடிவமைக்கிறது.நிராகரிக்கப்படும் தேசிய இனங்களின் சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். ( சிரியர்களின் விசா பிரச்சினை சான்று-சாறுண்ணி  ),. கதைகளோடு இயைந்து போயிருக்கிற முஸ்லீம் கலாச்சார வார்த்தைகள், தொன்மங்கள் இவரின் உரைநடையில் பலம் சேர்க்கிரது.  பல கதைகள் அரசியல் சமூகம் சார்ந்த விமர்சனங்களாக அமைந்துள்ளன. அதில் தமிழனும் அவனின் மொழி பற்றிய அக்கறையின்மை, சின்னத்திரை ஈர்ப்பு போன்றவை விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.தமிழ்மொழிபெயர்ப்பில் இருக்கும் தவறுகள்  கலாச்சாரக்குழப்பங்களாகி விடுகின்றன..பல இடங்களில் கவித்துவ வார்த்தைகள் மினுங்கி உள்ளிழுக்கின்றன. இக்கதைகளை தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ஆர். முத்துமணி. கேரளத்தில் வசிக்கும் தமிழர். நடைபாதை வியாபாரி.
         காலத்தால் மாற்ற முடியாத புண்கள் உண்டா ( சிண்ட்ரெல்லா )  என்று ஒரு கதை  கேட்கிறது. அவ்வகைப்புண்கள் மலையாளிகளின் பார்வையில் மலிந்திருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. 
( வெள்ளியோடனின் “ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு.
முதற்சங்கு பதிப்பகம், 19 மீட் தெரு , கல்லூரி சாலை , நாகர்கோயில் 1 (94420 08269 ) 88 பக்கங்கள் 70 ரூபாய்- )

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003




 .

புதன், 2 ஆகஸ்ட், 2017

Coimbatore Book fair :2017

Two books of Subrabharathimanian on English  translations releasing

1. The hunt –Shortstories ( Trans. Ramgopal )
2. The lower shadow –Poems (Trans. Rm .Shanmugam )
Releasing & Talks : Prof Dharini / Prithvraj/ Pro. Balakrishnan/ Chandrakumar
Welcome  - ( Kovai  illkiya santhippu )


வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் - ஆங்கில மொழிபெயர்ப்பில் -
கோவை புத்தக்க் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டது. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவன்ரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில்   வெளிப்படுத்தி வருகிறார். சமூக சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பய்ன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இயக்கிய ரசனை என்பதை மீறி சமூக சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது   என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.
The lower shadow –Poems (Trans. Rm .Shanmugam ) நூலை பேரா. தாரிணி வெளியிட்டுப்பேசினார். சுப்ரபாரதிமணியனின் படைப்புகளின் மையம் பல ஆண்டுகளாய் திருப்பூரும் அந்த நகரின் உழைக்கும்மக்களும். அவர்களின் வாழ்நிலையைப் பதிவு செய்வது அவரின் சமூக்க் கடமையாக்க் கருதுகிறார்.இதை நாவல்கள் போன்ற படைப்புகளில் மட்டுமின்றி அவ்வப்போது கவிதைகளிலும் வெளிப்படுத்துகிறார்.இத்தொகுப்பின் முதல் கவிதையில் கடவுளும் சாத்தானும் ஒரே புதை குழியில் இருப்பதைச் சொல்லும் கவிதை சுவாரஸ்யமானது. Paradise lost  ஞாபகம் வந்தது. குளிரூட்டுவான் பற்றிய கவிதை பல பரிமாணம் கொண்ட்து. சாதாரண மக்களின் அனுபவங்கள் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. சுமங்கலி அமங்கலி, தாய்மை போன்ற வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. அடிமைத்தனத்தில் இருக்கும் பெண்களின் விடுதலை சாவோ, தற்கொலையோ என்றாகி விடுகிறது.. உடல் ரீதியாக பலவீனமான பெண்  அடிமைத்தனத்திற்கு இன்னும் சுலபமாகி விடுகிறாள்.. எலியோ டைனோசரோ சித்ரவதைதான், பழிவாங்குபவனும் பழிக்கிரவனும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். பெண் குழந்தைகள் மேல் சுமத்தப்பட்ட சுமைகள் இன்னும் இறுக்கமானவை. கறுப்பு இலக்க்கியம் போல் இந்த வகை அடிமைப் பெண்களைப் பற்றி எழுதும் இலக்கியம் சுப்ரபாரதிமணியனுடையது. வேட்டையாடப்படும் உலகில் பெண் சாதாரணமாகத் தென்படுகிறாள்.எல்லா இடத்திலும் தென்படும் ஏழ்மை, சிக்கல்கள் அவளை இன்னும் தனிமைப்படுத்துகிறது இதை சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்  அவரின் படைப்புகளின் மூலம் . பிழைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பிழையான வாழ்வில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் படிக்க வைப்பது என்பதெல்லாம் பிராய்லர் கோழி வளர்ப்பதுபோல அவர்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் குழந்தைகள் படும் அவஸ்தையை எதிரொலிக்கிறது. இந்த அழுகிய மனங்களின் விளைச்சல் அழுகலாய்த் தானே இருக்கும்.
  
சுகந்தி சுப்ரமணியனின் படைப்புலகம்  “ நூலை ( டிஸ்கவரி புக் பேலஸ் ) அகிலா, பொன் இள்வேனில் ஆகியோர் அறிமுகப்படுத்திப் பேசினர். அவை நாயகன், அம்சப்ரியா, பேரா. செல்வி, கந்த சுப்ரமணீயன், ராம்ராஜ், ம.நடராஜன் , கொடீசியா இயக்குனர் சவுந்திர்ராஜன் உட்பட் பலர் நூல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.சோலைமாயவன், புன்னகை ரமேஷ் குமார் கவிதை நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன .அம்சப்ரியா நன்றி கூறினார்
1987.subrabharathi@gmail.com


Tail piece :

The Hunt is a collection of short stories. The title story describes the working conditions of women who come to Thiruppur from rural areas in search of work. Caught in the nets of the ‘hunters’ in the bus –stands and railway stations, they were thrown into the banian companies and cotton mills where life is intolerably miserable. Another story in the collection, The Sharon Style exposes yet another kind of ‘ hunt’ that is prevalent not only in Tiruppur but throughout Tamilnadu. Fanned by the fire of caste fanaticism, to save the honour of their own caste, people consider inter-caste marriage, a
blemish on their honour. The so called caste- guards hunt those people who have an inter-caste marriage and brutally murder them. Many a young plant withers in this caste storm. The story, Avathaar portrays the menace of child- marriage that is still alive today in some parts of the State and the helplessness of those good souls who try to stop them.( 9486101003 )
                       
                                       





d---
10,000 பிரதிகள் விற்பனை
சுப்ரபாரதிமணியனின் குப்பை உலகம் நூல் பற்றி


தினமணிஆசிரியர் வைத்திய நாதன் தினமணியின் தமிழ் மணி யில்::
சுப்ரபாரதிமணியன் திருப்பூரில் இருந்து கொண்டு தமிழ் கூறு நல்லுலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது அறச்சீற்றம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அவர் எழுப்பும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், செவிட்டு உலகம் அதைக்கேட்க மறுக்கிறது. அதனாலென்ன.. அவர் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார். இருப்பார்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பை குப்பை உலகம்என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எல்லாப் பிரச்சனைகளையுமே இந்தக் கட்டுரைத் தொகுப்பு தொட்டுக்காட்டுகிறது.. தொட்டுக் காட்டுகிறது என்றா சொன்னேன், இல்லை. நம்து மூளையில் உரைப்பது போல சுட்டிக் காட்டுகிறது.
பாதரசத்தின் உற்பத்தியில் பாதி அளவு மின்னணு பொருட்களின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. பாதரசம் நிலத்தடி நீரில் கலந்து குடிநீராக சுலபமாக வீட்டுக்குள் வந்து சேருகிறது. இரத்தத்தில் சிறுகச்சிறுக சேர்கிறது.மூளை , சிறுநீரகம், , கல்லீரல் போன்றவற்றை மெல்ல மெல்ல பாதிக்கிறது. மனிதனின் நினைவுகளை பாதிக்கிறது. கருவுறுதல், இனப்பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது” . இப்படி மின்குப்பைகளால் பாதிப்பு, பிளாஸ்டிக்குகளால் பாதிப்பு, துரித உணவால் பாதிப்பு என்று ஏற்படுவதுடன் உலகம் குப்பையாகிக் கொண்டே வருகிறது.
சுப்ரபாரதிமணியனின் இந்தப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலராகி விடுவார்கள். நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை செலுத்துபவரா. ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அய்ந்து இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளியுங்கள். அவர்களை இந்தப் பிரச்சினை பாதிக்குமேயானால் அய்ந்து பேருக்கு அதேபோல் வாங்கிப் பரிசளிக்க பணியுங்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை நாம் தமிழகத்தில் செய்து விடலாம்,( ரூ 50 , வெளியீடு : சேவ் அமைப்பு, 5 அய்ஸ்வர்யா நக்ர், கே என்பி காலனி, தாராபுரம் சாலை, திருப்பூர் 98422 13011 )
இதன் மறுபதிப்பு சூழல் அறம் என்ற தலைப்பில் என்சிபிஎச் வெளியீடாக வந்துள்ளது.

10,000 பிரதிகள் விற்றிருக்கின்றன என்றார் நேற்று தோழர் கணேசன் அவர்கள் . மண்டல மேலாளர் என்சிபிஎச் திருப்பூரில் கணகாட்சித் திறப்பு விழாவின் போது ..28/7/17




-------------------------------------------------------------------------------------------------