சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 26 செப்டம்பர், 2019

               திருப்பூரியம்
எழுத்தாளர் திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் திருப்பூரை மையமாகக் கொண்ட படைப்புகள் பற்றிய திருப்பூரியம்  “ கருத்தரங்கிற்கு கட்டுரைகள் 5 பக்க அளவில்  அனுப்பலாம். தேர்வு பெறும் கட்டுரைகளுக்கு சன்மானமும், கருத்தரங்கில் கலந்து கொள்ள பயணப்படியும் வழ்ங்கப்படும் .உதாரணமாக சுப்ரபாரதிமணியனின் திருப்பூரை மையமாகக் கொண்ட படைப்புகள்  என்ற வரிசையில் சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், முறிவு , தேனீர் இடைவேளை, நீர்த்துளி, நைரா ,புத்துமண , தறிநாடா போன்றவற்றையும் திருப்பூர் 100 கட்டுரைகள் , திருப்பூர் மையமான சிறுகதைகள் , மந்திரச்சிமிழ் கவிதை தொகுப்பு போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம் . கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பது நல்லது.. tiruppur awards@gmail.com. டிசம்பர் 1க்குள் அனுப்புங்கள்
தபால் முகவரி :
பி ஆர் நடராஜன் ( திருப்பூர் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) 66, அண்ணா காலனி,
அங்கேரிபாளையம் சாலை, திருப்பூர் 641 603 ( 94434 27156  )


அண்டை வீடு : பயண அனுபவம் :
        திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த இலக்கு 2020இல் சாத்தியமாகும் என்று 5 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது .( 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்ற கன்வைப்பற்றி அப்துல் கலாம் அப்போது பேசிக் கொண்டிருந்தார் )ஆனால் தற்போது அடைந்துள்ள சில பின்னடைவுகளால் அது இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி போய் உள்ளது.திருப்பூர் நிச்சயம் அதை எட்டும்.
 சமீப ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்கு சவாலாக இருந்து வரும் நாடு வங்கதேசம் .அந்த நாட்டில் மேம்பட்டுள்ள  பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு சில ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பூரிலிருந்து வங்கதேசம் சென்றது. அந்த குழுவில் தொழிற்சங்க பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தன்னார்வ குழுவினர் என்று இருந்தனர் .அந்தக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன் .அந்த பயண அனுபவம் தான் இந்த நூல்.
திருப்பூருக்கு போட்டியாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக இருந்திருக்கிறது  வங்கதேசம். இந்த ஆண்டில் சில பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. அதற்கு காரணம் வங்கதேசத்தின் அதிவிரைவு முன்னேற்றம் அதிகப் பெண்களின் உழைப்பிலான பின்னலாடை ஏற்றுமதியில் என்பதால் உலக நாடுகளின் கவனத்திற்கு அந்த நாடு சென்றது .ஆனால் உலக நாடுகள் நியாய வணிகம், கார்ப்ரேட் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றை கருத்தில்  கொண்டு பல கேள்விகளை எழுப்புகின்றன. சமீபத்தில் நடந்த சில பின்னலாடை தொழில் விபத்துகள் அவர்களின் கவனத்திற்கு சென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில்  ஐந்து பின்னலாடை தொழிலகங்களைக் கொண்ட ராணா பிளாசா கட்டிடம் விபத்தில் இடிந்து போனது.  1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதே ஆண்டில் டாக்காவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஆடைத் தொழிலில் பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனார்கள். இந்த இரண்டு விபத்துகளுக்கு பின்னால் அங்குள்ள தொழிலாளர் நிலை குறித்து உலக நாடுகள் தங்கள் கவனத்தை எடுத்துக் கொண்டன.  தொழிலாளர் நலன் பாதுகாப்புதொழில் பாதுகாப்பு , பின்னலாடை தொழில் துறை இடப்பாதுகாப்பு , தொழில் இடம் ,தொழிலாளர்கள் வாழ இணக்கமானச் சூழல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு தயாராக வங்க தேசம் இல்லை.  தொழில், தொழிலாளர் பாதுகாப்புத்தன்மை ஆகியவற்றில் வங்கதேசம் பின்னடைந்து இருப்பதை உலக நாடுகள் கண்டறிந்தனர். அந்த வகையில் ஆடை ஏற்றுமதியில் வங்கதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது வங்கதேசம் ஆடை தொழில்துறை 84 சதவீத பங்கு வகிக்கிறது. ஆனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பதில் ( ஜிடிபி ) அதன் பங்களிப்பு குறைந்திருப்பது ஆரோக்கியமான நிலையல்ல  என்றும் கருதப்படுகிறது. காரணம் அங்கு உள்ள தொழிலாளர்கள் குறித்தத் தீவிரமான முறையிலான  அக்கறையின்மை, நதிகளின் சீரழிவு, சாயப்பட்டறைகளின் நிலத்தடி நீர் மாசு போன்றவை புதிய முதலீடு போடுவதற்கு உலகநாடுகள் தயங்கும்படி செய்தன. மற்றும் சர்வதேச நிறுவனங்களால் பின்னல் ஆடை  சார்ந்த விலை குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி வருவாயில் அங்கு குறைவு ஏற்பட்டு இருக்கிறது .தீவிபத்துகள் மற்றும் கட்டட பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு அளவுகோல்கள் அவ்வளவு தீவிரமாக  இல்லை என்றும் சொல்லப்படுகிறது. .நெருக்கடிமிக்க துறைமுகம்அது சார்ந்த தொழில் கட்டமைப்பு வசதி குறைபாடுகள் அங்கே நிறைய இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை கொண்டு சேர்க்கிற விதத்தில் பல வகை பின்னடைவுகளும் உள்ளன.தொழிலாளர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி மைய செயல்பாடுகள் தீவிரமாக இல்லாமல் அந்நிய முதலீட்டை குறைத்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசம் ஏதோ ஒரு வகையில் திருப்பூருக்கு போட்டியாக இருந்தது .ஆனால் சமீப ஆண்டுகளில் திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு அம்சங்கள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை ஒப்பிடுகையில்  அப்படி வங்கதேசத்தில் இல்லாததால் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவை  வரும் ஆண்டுகளில் திருப்பூர் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .அந்த வங்கதேசத்துப் பயணம் பின்னலாடைத் தொழில் சார்ந்த பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆதாரமாக  இருந்தது.
சுப்ரபாரதிமணியன், திருப்பூர். ( காவ்யா பதிப்பகம்  வெளியீடு, சென்னை ரூ100 )
* புவியரசு 89 வயதில்.....வாழ்த்துவோம்

கண்மணி சோபியா : நாவல் புவியரசு
யதார்த்தத் களத்திலிருந்து  அறிவியலுக்கு நாவல் சென்றடைவது இந்நாவலின் சிறப்பம்சம். நவீன யுகத்தை அது கொண்டு வந்துக்காட்டி அதிர்சியடையவும் செய்கிறது. 
ஒரு பெண்ணின் பழிவாங்கல் நடவடிக்கை என்ற அளவில் ஆரம்பப் பக்கங்கள் நகரும் போது ஏற்படும் அலுப்பு அது விஞ்ஞானம் சார்ந்த நாவலுக்கான தன்மையுடன் மாறும் போதும் தவளைப்பாய்ச்சலில்  வேறு தளத்தை எட்டி சுவாரஸ்யமாகிவிடுகிறது .குறைந்த கதாபாத்திரங்கள் மற்றும்  . மரபு நாவல் மொழிக்கான இறுக்கம் போன்றவை தாண்டி விஞ்ஞான நாவலுக்கான எளிமையான மொழியுடன் செல்கிறது .கதை சொல்லலில் வெகுஜனத் தன்மை வந்து விடுவது எல்லோரின் வாசிப்பிற்கும் உகந்ததாக்கிவிடுகிறது.. அறம் , பொது நீதி பற்றிய பல விவாதங்களை கதாபாத்திரங்கள் மூலம் முன்வக்கிற நேரத்தில் அதே விவாதங்களை வாசகர்கள் மத்தியிலும் கிளப்புவது வெற்றியாகும். இயந்திரம் வெற்றி கொள்வதோ, மனிதம் மனிதனிடம் மிஞ்சுவதோ சிறப்பசம்.
அதிஷா புவியரசை பெருமளவில் பாதித்திருப்பதை பல கூட்டங்களில் புவியரசின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.அதை இந்நாவலிலும் கண்டேன் .. கவிஞர் உரைநடையாளராக  மாறும் போது  ஏற்படும் அதீத கவித்துவம் என்பதெல்லாம் இதில் இல்லாமல் இருப்பது புவியரசு நல்ல உரைநடைக்காரர் கூட என்பதையும் சொல்கிறது.அவரின் மொழிபெயர்ப்புப் பணிகள், உரைநடையில் தொடர்ந்த வாசிப்பு என்பதெல்லாம்  அதற்கு முக்கிய காரணிகள் எனலாம். நாவல், வெகு இறுக்கம், நீளமானது  என்று தள்ளிபோகும் புதிய தலைமுறையையும் ஈர்க்கும்  உரைநடையில் ஒரு நாவல் என்பது பலம் . இது போன்ற அறிவியல் எழுத்து புது பலம்.
படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு என் இரு முறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர் புவியரசு அவர்கள். இப்போது அவருக்கு வயது 89 .அவரின் மொத்த நூல்களின் எண்ணிக்கை 100 யைத்தாண்டிவிட்டது 5 ஆண்டுகளுக்கு முன்பே           . - ( சுப்ரபாரதிமணியன் )                                ( ரூ150 நந்தினி , கோவை  9942232135)


Subrabharathimanians books in e  books
Greetings from Emerald Publishers!

We are happy to inform you that the e-commerce platform of Emerald Publishers is now active.

Anyone in India can now buy the book directly from www.emeraldpublishers.com.

The link for your books
1. The Hunt is https://www.emeraldpublishers.com/hunt/

2. Sumangali is https://www.emeraldpublishers.com/sumangali/

As an inaugural offer, we are pleased to give a 20% discount for the book on the cover price.

We request to share this link with your friends and family, through social media.


Thanks & Regards

G. Olivannan
CEO
Emerald Publishers

--
Thanking You
With Kind Regards
Yours truly

Team Emerald

Publishing Associate
Emerald Publishers
15 A, First Floor, Casa Major Road
Egmore, Chennai - 600 008
Ph: +91-44-28193206, 9790860492
web: www.emeraldpublishers.com

தாய்மொழி தாய்ப்பால் போன்றது. நல்ல சுயசிந்தனையை  உருவாக்கும், வாழக்கையை உயர்த்தும். இன்றைக்கு வளரினப்பருவத்தினரின் போக்கும் நடவடிக்கைகளும் கவலை அளிக்கின்றன. அவர்கள் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இலக்கியப்புத்தக வாசிப்பு இருக்கும் என்பதை இளையதலைமுறையினர் உணர வேண்டும். குழந்தைகளைத் தொழிலாளியாக மாற்றும் சமூகம் அநாகரீகமானது.திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலையை பின்னலாடைத்துறையில்  உருவாக்க வேண்டும். அது முக்கிய சமூகப்பணியாக இருக்கும்என்று தி . வெ. விஜயகுமார் ( குழந்தைக் கல்வி இயக்குனர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக இயக்குனர் ) பேசினார்  
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* செப்டம்பர்     மாதக்கூட்டம் ...1/9/19 ஞாயிறு மாலை.5 மணி..                     பனியன்  தொழிலாளர் சங்கம், பழைய புஷ்பா திரையரங்கு, எவரெஸ்ட் ஓட்டல்  எதிரில், பெருமாநல்லூர் சாலை,திருப்பூர் நடந்தது.,

*   நூல்கள் வெளியீடு :
* சுப்ரபாரதிமணியன் தொகுத்த ” . ஓ.. சிங்கப்பூர் நூலை பேரா.கோகிலச்செல்வி வெளியிட குறும்பட இயக்குனர்கள் தீபன், ஜெயப்பிரகாஷ் பெற்றுக் கொண்டனர்.
* கோவை தெ.வி.விஜயகுமாரின் குழந்தைப்பருவத்து நினைவுகள் ‘’நூலை சேவ் பிரான்சிஸ் வெளியிட விஜயா பெற்றுக்கொண்டார்.
* சி.ந சந்திரசேகரனின் “  அம்பேத்கருடன் ஒரு நேர்காணல் நூலை வேனில் கிருஷ்ணமூர்த்தி வெளியிட கோவை மாணிக்கம் பெற்றுக்கொண்டார்.
.: 
* பாராட்டு : வி டி சுப்ரமணியன் அவர்களுக்கு –                                (   திரைப்படசங்கம் , கலை இலக்கியச் செயல்பாடுகள் )
* வே.சுந்தரகணேசன் அவர்களுக்கு ..
( ஓலைச்சுவடி பாதுகாப்பும், அவற்றின் புத்தகப்பதிப்பித்தலும் ) அளிக்கப்பட்டது.
* திருப்பூர் குறும்பட விருதுகள் 2019 வழங்குதல் நடைபெற்றது
விருது பெற்றோர் : துசோ பிரபாகர், ரா.தீபன், தி. ஜெயப்பிரகாஷ், ரா.ரமேஷ், இரா.சின்ராசு.. கோவை முஸ்தபா உரை. எஸ்பிபி பாஸ்கரன் இயக்கி வெளிவரத் தயாராக உ்ள்ள பிள்ளையார்புரம் இன்ஷா அல்லா திரைப்படம். பற்றி. .இது தோப்பில் மீரான் அவர்களின் கதை
* மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  துருவன் பாலா, துசோபிரபாகர், கதிர்வேல், அருணாசலம் வழங்கினர் ..
தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
மாத செய்தி மடல் வெளியீடு : தோழர்  இரா.சண்முகம்
    ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )


செய்தி : சண்முகம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488
உலகத் தமிழர்களின் கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாய்            வெளியீடு திருப்பூரில்
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா  மற்றும உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding".இதில்  திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது .இதன் வெளியீடு அறிமுகம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில்  ( NCBH. NBT )    திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்  முகப்பில் நடைபெற்றது. சென்னையைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மா ப கணேசன் வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சிக்கு பி ஆர் நடராஜன் (    ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) தலைமை வகித்தார். சண்முகம் (( திருப்பூர் மாவட்ட  தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை அளித்தார்..இந்த நூலின் தொகுப்பாளர் , மொழிபெயர்ப்பாளர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் அவர்கள்
பத்திரிக்கையாளர் மா ப கணேசன் பேசுகையில் தமிழில் 1960கள் வரை மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியம் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக வெளிவந்தன. அந்த வகையில் பல படைப்பாளுமைகள் பணிபுரிந்தனர் . அதற்குப்பின் தொயவு உள்ளது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளது ஆரோக்கியமானது. மொழிபெயர்ப்புத்துறை இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரும் பணியாக இன்றைய தொழில் நுட்ப உலகில் மலர்ந்துள்ளதை புதிய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்
“Unwinding".  ரூ 500 வெளியீடு
Emerald Publishers
15A, I Floor, Casa Major Road, Egmore,
Chennai 600008.
Ph: 044 - 28193206, 42146994
Mail: info@emeraldpublishers.com
https://www.emeraldpublishers.com

செய்தி : சண்முகம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488

Unwinding - ஒரு முன்னோட்டம்
-----------------------------------------------
தமிழ் சிறுகதை வடிவம் எடுத்து ஒரு நூற்றாண்டு கடந்திருக்கிறது. இத்தருணத்தில் உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding".
தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரச மரம்”, 1914-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முதல் அவ்வப்போது தமிழ்க் கதைகள் ஆங்கிலத்திலும் வந்து கொண்டிருந்தன. இப்போது ஒரு குறிப்பிடும் முயற்சியாக இந்நூல். இந்த அசாத்தியப் பணியை, கடும் சவால்களுக்கிடையில், சில வருடங்கள் கடந்தாலும், தளராமல் சாத்தியப்படுத்தியவர், சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) அவர்கள்.

புலம் பெயர்ந்தவர்களின் கதைகளையும் உள்ளடக்கி, உலகத் தளத்தில், உலகத் தரத்தில், தமிழ் சிறுகதைத் தொகுப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பில் அற்புதமாக வந்திருக்கிறது.திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது
முதல் முத்தான கதையே அ. முத்துலிங்கத்தினுடையது (Appadurai Muttulingam). கிரேக்க எல்லையில், அந்நாட்டு காவலரிடம் மாட்டிக் கொள்ளும் இலங்கைத் தமிழன்... துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து.. ஜெர்மனி, இத்தாலி... என தன் பயண வாழ்க்கைக் கதையைச் சொல்ல, அதைக் கேட்டுக் காவலர் மலைக்க, நமக்கும் அந்நிலையே.
கடைசி வரி திருப்பத்தை தன் கதையின் மூலதாரமாய் வைக்கும் சத்யராஜ்குமாரின் (Sathyarajkumar Krishnasamy) அமெரிக்க மண்ணின் கதை, அசல் ஆங்கிலக் கதையாகவே புலப்படுகிறது.
சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் வேறு வேறு. சிலவற்றை ஜெயந்தி சங்கரே மொழிபெயர்த்திருக்கிறார். சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஒருவரே. குறிப்பாக இரா. முருகன் (EraMurukan Ramasami) தன் இளைப்பாறுதல் (http://www.eramurukan.in/?p=3191) கதையைத் தானே மொழிபெயர்த்துத் தர, அதுவே “Unwinding". இந்நூலிற்கு மிகப் பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.
இது போன்றவை மொழி பெயர்ப்பின் சூட்சுமங்களையும், தர்மங்களையும் மிக அழகான பாடங்களாய்த் தருகின்றன. மொழிபெயர்ப்பின் போது, மூல மொழியின் சில பத்திகள், இலக்கு மொழிக்குத் தக்கபடி சுருங்கவோ, விரியவோ செய்யும். உதாரணமாக, Unwinding-ல், ஜப்பானிய புராஜெக்ட் மேனேஜர் தன் குழுவினரிடம் கடந்த இரவின் கலவியைக் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்... தமிழில் ஒரு வரி மிகுந்தாலும் விரசமாகிவிடும். ஆனால் ஆங்கிலத்தில் முறுவலிக்கும் விதமாய் சில வரிகளைச் சேர்த்திருக்கிறார் இரா. முருகன். இது ஒரு பால பாடம்.
மூல மொழியின் ஜீவனை, இலக்கு மொழியில் அப்படியே தருவிப்பது பெரும் பணி. ஒவ்வொரு கதையின் ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு பதத்தையும் சரிபார்த்தல் பெரும் சவால். அதற்கான போராட்டங்களை சளைக்காமல், சலிக்காமல் செய்து சாத்தியப்படுத்திய ஜெயந்தி சங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.( காஞ்சி ரகுராம் )
ரூ 500 வெளியீடு:
-----------------
Emerald Publishers
15A, I Floor, Casa Major Road, Egmore,
Chennai 600008.
Ph: 044 - 28193206, 42146994
Mail: info@emeraldpublishers.com
https://www.emeraldpublishers.comபுத்துமண் நாவல் :  சுப்ரபாரதிமணியன்


பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையே
நவீன சூழலியம் ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது.  
                      நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்ற பலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டு வளர்ச்சியைபொருளீட்டுவது என்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயே கட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறது.
முதன்மைப்பாத்திரம் அரசங்கப்பத்வியிலிருந்து ஓய்வு பெற்ற  மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்                             ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவித அச்சுறுத்தல்கள்.மனைவியும் மகளும் கூட அவரிடமிருந்து விலகி நிற்பவர்கள் .பத்திரிக்கையில் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்ரி எழுதுகிறார். வழக்குப் போடுகிறார். போராடுகிர்வர்களுக்கு  ஆதரவு தருகிறார்.
நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனை அடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மை  அவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில் மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும் தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்  அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
ஒரு கிராமம்..செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டது மணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாக யார்யார்காலடியிலோ உட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டது குறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில் தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால் எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதை சமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை ச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (கேள்வியைஎழுப்புகிறார் .
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும் நாவலின் வடிவம்
.’
உலகம் நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவே அதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள் திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில் சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சி வேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்கு திருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள். இறுதியில் தனிமைப்படுகிறார். மகள் திருமணம் செய்து கொண்டு போய்விடுகிறாள். மனைவி இறந்து போகிறார். மணீயனும் ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து விட்டு இறந்து போகிறார்.அவருக்குத் தெரிந்த தன்னார்வக்குழு இளைஞன் அவருக்கு அஞ்சலிக்கூட்டம் நட்த்த எண்ணுகிறான்..சுற்றுச்சூழல் பற்ரிப் பேசிய ஒருவனின் கதை இது.
இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமே தனி உலகம்
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை.
 நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும் என்ற
மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவலின் மணியன் கதாபாத்திரம் சொல்கிறது    

         இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம்     பற்றி இந்நாவல் பேசுகிறது
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014 பக்கங்கள்; 118
விலை; ரூ. 100.00