சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்
காலம் உருவாக்கிய எழுத்து :  இரா.  முருகவேள்
---------------------------------------------------------------------------------
இயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.

   இன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்கிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.
   சுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின்  சாயத்திரை  நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.
   அதன் பின்பு தொடர்ச்சியாக திருப்பூர் பிரதேசத்தின் சமூகப் பின்னணியை மிக ஆழமாக தனது எழுத்துகளின் பிரதிபலித்து வருகிறார் சுப்ரபாரதி மணியன்.
   அராஜமான முதலாளித்துவ உற்பத்தி உருவாக்கிய நகரம் திருப்பூர். யார் வேண்டுமானாலும் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து தொழில் தொடங்கலாம். பணத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். அல்லது போண்டியாகி அங்கேயே பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேரலாம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாழ்விழந்த விவசாயிகளும், இடையர்களும், மீனவர்களும் இங்கே வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக திரும்பிச் செல்கின்றனர். திருப்பூர் எல்லோருக்கும் சொந்தம் யாருக்கும் சொந்தமில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், கிராமங்களின் சட்ட திட்டங்களும், ஆண் பெண் உறவுமுறைகளும் இங்கே குழம்பிப் போகின்றன. டாலர் சிடி.
   இந்த வாழ்க்கை முறை இப்போது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு கிராமங்களுக்கும் பரவி வருகிறது. பழனிமலை அடிவாரத்தில் முருக நதிக் கரையோரம் (ஷண்முகநதி?) உள்ள ஒரு கிராமத்தின் கதைதான் ரேகை. தங்களுக்கே உரிய விதிகளைக் கொண்ட ஜோசியக்காரர்கள் பிரதானமாக  வாழும் கிராமம் அது. வெளியூர்க்காரர்கள் இரவே வந்து தங்கி ஜோசியம் பார்த்துச் செல்கின்றனர்.
  காலம் கிராமத்தைப் புரட்டிப் போடுகிறது. உலகமயமாக்கல் வாழ்க்கையைச் சிதறடிக்கிறது. விவசாயம் மாறிப் போகிறது. தாய் மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. முருகநதி சாக்கடையாக மாறிப் போகிறது. அதன் குழந்தைகள் திருப்பூருக்கும், கோவைக்கும், சென்னைக்கும் இடம் பெயர்கின்றனர். அதே நேரம் பிஹாரிகளும், ஒரியாக்காரர்களும் கரும்புத் தோட்ட வேலைக்கு பழையனூருக்கு வருகின்றனர். கம்ப்யூட்டர் ஜாதகம் வருகிறது. சாதியும், மதமும், போலீசும், பாலியல் தொழிலாளியான பரமேஸ்வரியும் கிராமத்தின் பிரிக்க முடியாத பாத்திரங்களாகிப் போகின்றனர்.

   சமூக நாடகங்கள் நடத்தும் சுப்பையா ஒரு வினோதமான ஆனால் தவிர்க்க முடியாத பாத்திரம். சற்றே துயரம் தோய்ந்த மனநிலையை உருவாக்கும் அந்தப் பாத்திரம் மிக அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. அற்புதமான திறமைசாலியான சுப்பையா தனது அரசியல் நோக்கங்களுக்காக மனைவி மக்களைப் பிரிந்து கொடும் வறுமையில் உழல்கிறான். சமரசம் செய்து கொள்ள மறுத்தாலும் அவனது திறமையை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. சமரசம் என்று  அறியாமலேயே செய்து கொள்ளப்படும் சமரசம் இது. ஏராளமான அறிவுஜீவிகளுக்கு நிகழ்ந்தது இதுதான். முன்னேறிச் செல்ல வழியில்லாமல், ஒருங்கிணைக்கும் கட்சி இல்லாமல் சம்பவங்களிலும், புராஜெக்ட்களிலும் வாழும் முற்போக்கு வாழ்க்கை. சமரசம் சுப்பையாவுக்கு எதையும் அள்ளிக் கொடுத்து விடுவதில்லை.
  ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் கழிகின்றன அவனது நாட்கள்.  அவனுக்கு பதில் சோமு ஆற்றைச் சுத்தம் செய்ய முனைந்து நிற்கிறான். லட்சியங்களை அடுத்த தலைமுறை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டும் காட்சி இது.

  சுப்பையாவுக்கு நேரெதிரான பாத்திரம் கோபால். கள்ளநோட்டு, திருப்பூரில் கடை, சென்னையில் கடை என்று கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு மேலேறும் எல்லாச் சமரசங்களும் செய்து கொள்ளும் பாத்திரம்.
    கொங்கு நகர்ப்புறங்களில் நாம் அன்றாடம் பார்க்க நேரிடும் எல்லோரையும் இந்த நாவலில் பார்க்கலாம். கடும் உழைப்பாளியான அமலம், கிருத்துவ போதகர், ஹஜ் செல்பவரின் நலனுக்காக பிரார்த்தனை நடத்தும் தேவாலயம் ... . . ..கேம்ப் கூலிப் பெண்கள் .. . . .

    இந்த நாவலை முழுமையும் இயல்புவாத நாவல் என்று சொல்லிவிட முடியாது. காலத்தைக் கடந்து செல்லும் போதும், உறவுகளை விவரிக்கும் போதும் சற்றே நான் லீனியர் பாணி கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருவிதமான மிஸ்டிகல் தன்மை கொண்ட, பழனிமலை அடிவாரத் கிராமத்துக்கும், ஜோதிடத்தை வாழ்கையாகக் கொண்ட கதை மாந்தர்களுக்கும் அந்தப் பாணி முழுவதும் பொருந்திப் போகிறது. அந்தந்தக் காலத்தில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் காலகட்டத்தைக் காட்ட ஆசிரியரால் ஒரு உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது சிறப்பு.

   மொத்தத்தில் நமது காலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இந்த நாவல். உண்மையான பாத்திரங்களை மிக அற்புதமாக நாவலோடு இழைத்திருப்பது புனைவுக்கும், உண்மைக்கும் இடையே ஊடாடும் தன்மையை அளிக்கிறது. அதே நேரம் சட்டையில்லாத சாமியப்பன், கௌசல்யா போன்ற உண்மைப் பாத்திரங்களை மிக நேர்த்தியாக நுட்பமாகக் கையாண்டிருப்பது ஆசிரியரின் சாதுர்யம்.

   தமிழில் சமூகப் பார்வையில் புனைவிலக்கியம் எழுதுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். இங்கு சாதியம் பற்றி, கேம்ப் கூலி முறைபற்றி, வட நாட்டுத் தொழிளாளர்கள் பற்றி பல ஆய்வுகள் இருந்திருந்தால் எழுத்தாளர் தனது புனைவுக்கான விவரங்களை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடியும். அவை இல்லாத சூழலில் எழுத்தாளரே ஆய்வாளரின் பணியையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எல்லாக் களப்பணிகளையும் அவரே செய்ய வேண்டியுள்ளது. எனவே பன்முகத்தன்மை கொண்ட, உழைப்புக்கு அஞ்சாத, ஊடுருவும் பார்வை கொண்ட ஒருவராலேயே சமூகத்தை உண்மையாகப் பிரதிபலிக்க முடியும்.
   சுப்ரபாரதி மணியன் அதை அற்புதமாகச் சாதித்திருக்கிறார்- மீண்டும் ஒருமுறை.  
- இரா.  முருகவேள் , கோவை
(  ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் )


புதன், 15 ஆகஸ்ட், 2018

திருப்பூர் 100
From Indian express :    Subrabharathi Manian s           ‘  The Wasteland’ Turns 100 Today
---------------------------------------------------------------------------------------------------------------------
A heap of broken images, where the sun beats,
And the dead tree gives no shelter, the cricket no relief,
And the dry stone no sound of water.
T.S. Eliot in The Waste Land
In the afternoon of the last day of Coimbatore Book Fair, writer Subrabharathi Manian was sitting alone at a lawn along the path to the exhibition hall. An author of a number of books and recipient of several awards, he drew a book from his jolna bag and presented this correspondent. The front jacket of the book depicted the image of a dark man in his white vest, illustrated by the city-based eminent artist Jeeva. On it, the title read ‘Tirupur -100’ 
“You know the knit city Tirupur has turned one hundred years today. However, these days, few people are interested to look back its development as a dollar city at the cost of its environment” Subrabharathi Manian worried.
An author of over 55 books in the genres of short stories, novels, poetry, travelogue and nonfiction, the Tirupur-based writer bagged the Tamil Nadu government’s best book award for his novel Saaya Thirai (Coloured Curtain) in 1998, which spoke on the unmindful devastation of Tirupur’s  environment caused by the dying factories of the city.   
His recent book ‘Tirupur -100’ does not celebrate Tirupur’s development as a dollar city, which earns a foreign exchange to the tune of Rs.30, 000 crore and provides job opportunities to a plenty of migrant labourers from different parts of India. Rather, the chapters in the book concentrate on how the city got its economic  ‘developments’ at the cost of its environment  with a number of dying factories discharging their effluents into river Noyyal.
“The book ‘Tirupur -100’ is a precursor for the one hundred year history of the knit-city. The once fast-flowing river Noyyal is now lying dead as a pool of sewage across Tirupur. With its ‘progress’, the city witnesses the thronging of migrant labourers from various parts of country. Therefore, the price of real estate plots in the wasteland has gone up beyond imagination” writes K.Subbarayan, State secretariat member of Communist Party of India and former MP in his foreword to the book.

“The TASMAC outlets in Tirupur provide an annual revenue of Rs. 1100 crore to the government. The city provides a statistics of people consuming liquor for 3 crore everyday. On festival days, it doubles the above figure. It’s all due to the stressful life condition of the workers in the knit-city” worries Subrabharathi Manian 

Interestingly, the writer says that Tirupur was visited by Mahatma Gandhi for a number of times. Also, there are many social welfare organizations functioning in the name of the father of the nation.

“Still, the state-run TASMAC outlets have hampered access to the Gandhian path of non-alcoholism” says Subrabharathi Manian.

B. Meenakshi Sundaram

சனி, 11 ஆகஸ்ட், 2018

   “ திருப்பூர் -100 “

             திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை “ ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. “ விடி நைட் “ என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     “ திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
                             “ தீதும் நன்றும் “ நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது “ திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன.


                       இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி

தங்களன்புள்ள
கே.சுப்பராயன்
( முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
Rs 100 திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு.


புத்துமண் (நாவல்)  சுப்ரபாரதிமணியன்           உயிர்மை பதிப்பகம்  2015 ,சென்னை . 2015

 மதிப்புரை :     கி.நாச்சிமுத்து
  கி.நாச்சிமுத்து  ( ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு, )


                   சாயத்திரைபிணங்களின்முகங்கள் போன்றநாவல்கள் தண்ணீர்யுத்தம், குப்பைஉலகம்,மேகவெடிப்பு, நீர்ப்பாலைபோன்றகட்டுரைத்தொகுப்புகள்மூலம் சுற்றுச்சூழல்பற்றியஅக்கறைகொண்டபடைப்பாளியாகமுத்திரைபதித்த இலக்கியப்படைப்பாளியும்இதழாசிரியருமாகிய சுப்ரபாரதிமணியன் திருப்பூர்என்றஉலகமயமாதல்என்றஇராட்சதன்உருமாற்றிய   திருப்பூர் என்றஅழுக்குபுரியின்மனசாட்சியாகவலம்வருபவர் .
                        தனிமனிதவாழ்விலும்சமுகவாழ்விலும்ஊரின் வாழ்விலும்நாள்தோறும்நடந்தேறும்அவலங்களின்சாட்சியாகத்தன்னைவரித்துக்கொண்டுநிறைந்த சமுகஉணர்வோடுசமுகப்போராளியாகவிளங்கிவரும்எழுத்தாளரான சுப்ரபாரதிமணியனுடைய இலக்கியப்பணிகால்நூற்றாண்டிற்குமேற்பட்டது.அவருடையகைத்துணை போன்றுஅவர்கொண்டுவரும்கனவுஇதழ்தமிழ்ச்சிற்றிதழ்இலக்கியவரலாற்றில் தனித்துப்பேசப்படக்கூடியது.ஒருதனிமனிதன்இயக்கம்போல அதைப்பொருளாதார இலாபநட்டம்பார்க்காமல்நடத்திவருகிறசாகசம்நம்மைவியப்படையவைக்கிறது.
           அவருடையபடைப்பில்அண்மையில்வெளிவந்ததறிநாடாவும் புத்துமண்ணும் குறிப்பிடத்தக்கவை.

        புத்துமண் : மணியன்என்றசமுகஆர்வலர்போராளியைமையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது.இதில்தொழிலாளர்சுரண்டல்,சுற்றுச்சூழல்சுரண்டல்,சாதிய ஆதிக்கவெறியின்அட்டகாசம்,வறண்டுபோனமனிதாபிமானம்முதலியவற்றின்வெளிப்பாடுகளைஇலக்கியமாகப்பார்க்கலாம்.இதில்கதையைப்பிசிரு பிசிராகச்சொல்லியிருக்கிறார்.இதுஇன்றையசமுதாய ஆர்வலருடைய உடைபட்டவாழ்வின்பிரதிபலிப்புபோலஇருக்கிறது.இன்றையபோராளிஅரசின் அடக்குமுறைஆதிக்கசக்திகளின்வெறியாட்டம்இவற்றிற்குஇடையே தன் உடலையும்உயிரையும்பணயம்வைத்துத்தான்போராட்டத்தைமுன்னெடுத்துச் செல்லமுடியும்என்பதைமறைமுகமாகச்சொல்கிறது.இதுஒருவகையில்பாதி ஆசிரியரின்வாழ்வனுபவத்திலிருந்துஉருவானவைஎன்பதைப் படிப்பவர் எவரும்எளிதில்புரிந்துகொள்ளமுடியும்.
                        இடதுசாரிச்சிந்தனை,நாத்திகப்பகுத்தறிவு,சமுகசமத்துவஉணர்வு இவையேஇன்றைய நல்லஅறிவுவாதியின்அடையாளம்.இந்தஅடையாளத்துடன்கதையின் தலைவனைப்படைத்திருப்பதுமிகவும்நுட்பமானது.அப்படிவாழும்போதுதன் பகுத்தறிவுடன்ஒத்துப்போக இயலாதபெண்குலத்தின்  நெருக்கடியைத்தன்மகள்தான்காட்டியபகுத்தறிவுவழியில்நடைபோடமுடியாமல்சமகாலவாழ்வின்நெருக்கடிகளால்அலைப்புறுவதைப்படைப்பதன்மூலம்மிக அழகாகக்காட்டியிருப்பதுசுப்ரபாரதிமணியன்படைப்பின்வெற்றிஎனலாம்.
            மாதாகோயிலைஎரிப்பது தலித்துகளின்சமத்துவப்போராட்டத்தைகொலைமூலம்பழிதீர்த்துக்கொள்கிற ஆதிக்கசக்திகளின்அறுவறுக்கத்தக்கசெயல்கள் இந்தநாவலில்வெளிப்படையாகச்செய்திபோலச்சொல்லிநம்மனங்களில்புயலைக்கிளப்புகிறார்.சுற்றுச்சூழலைநச்சாக்கும்பணப்பேய்களின்ஈவிரக்கமற்றஅறிவீனமானசெயல்,சுமங்கலித்திட்டம்என்றபெயரில்ஏழைகளைச்சுரண்டும்கொத்தடிமைஈனம்,இரசாயனக்கழிவுமூலம்ஆறுமுதலியவற்றைநஞ்சாக்கும்தன்னலவெறி,நைஜீரியாபோன்றுவெளிநாட்டுமக்களால்ஏற்படும்விபரீதங்கள்மேலாளராகத் திருப்பூர்வந்தசிங்களவன்திமிர்ப்பேச்சுஆராய்ச்சிக்குவழிகாட்டும்ஆசிரியர்களின்கொழுப்புத்தனமானபேயாட்டம்என்றுதிருப்பூர்தன்பணக்காரப்பகட்டின் இன்னொருகோரமுகத்தைக்காட்டும்போதுபோதுமடாஇந்தமுன்னேற்றம்,இப்படியும் ஈட்டவேண்டுமாஇந்தசெல்வத்தைஎன்றேஓலமிடத்தோன்றுகிறது.

கதைசிலஇடங்களில்படர்க்கைவருணனையாகவும்சிலஇடங்களில் மணியனின்மனைவிசிவரஞ்சனி மகள்தேனம்மைஆய்வுமாணவிஜுலியாஎன்றபாத்திரத்தன்மைக்கூற்றுகளாகவும்அமைகின்றது.சிலஇடங்களில் சுற்றுச்சூழல்ஆர்வலர்ஜீவானந்தம்அவர்கள்கடிதமும்கதையைநகர்த்துகிறது. இன்னும்வீடும்உடலும்கூடப்பேசுகின்றன.உயில்சாசனம்குறுஞ்செய்திகள் உள்ளுர்க்குற்றச்செய்திகள்என்றுகதைக்குக்கிடைப்பவைஎல்லாம்உரமாகின்றன.இதுதமிழ்நாவல்எழுத்தில்புதுமையாகஉள்ளது.

மொத்தத்தில்கதைசொல்லும்போதுஒருகோட்டுச்சித்திரம்போலத்தான் பாத்திரங்கள்துலங்குகின்றன.இன்னும்கொஞ்சம்வண்ணம்தீட்டியிருக்கலாமோ என்றுதோன்றுகிறது.இருப்பினும்நம்மைஉறக்கத்தைக்கெடுக்கிறபகுதிகள்நாவல்வாசகரிடம்ஏற்படுத்திவிடுகிறதுஎன்பதுஇந்நாவலின்வெற்றிஎன்றுசொல்லலாம்.

நாவலில்ஜோடனைகள்இல்லை.இயல்பாகவரும்உவமைகள்(போர்வைஅவர் எடுத்தவாக்கில்சிதைந்துவல்லுறவுசெய்யப்பட்டபெண்ணைப்போலக்கிடந்ததுபக் 1,பொங்கிவரும்பால்சட்டெனப்பாத்திரத்தின்மேல்பகுதியில்நுரையெனநழுவிப்போவதுபோல்சட்டைஉரிந்துகிடந்தது. பக் 10,சிதைந்துபோன முட்டைபோலஉடம்புகலகலத்துவிட்டது பக்.80)வருணனைகள்(13)துணுக்குச்செய்திகள்(கோபத்தைநெருப்பாகஇளைஞன்சாதுவுக்குஉணர்த்துவதுபக்.22),பொருத்தமானஅடைகள் (தீண்டாமைக்குஉதவும்பிளாஸ்டிக்கோப்பைகள்பக். 60புளிமரங்களின்அணிவகுப்பு பக்98)போன்றவைநாவல்பொருளின்ஆடம்பரமற்றயதார்த்ததிற்குஇணங்க அமைகின்றன.அத்தியாயத்தலைப்புகளில்அமையும்பழங்குடிமக்களின்குரல்களில்சொல்லப்பட்டிருக்கும்மேற்கோள்கள்இந்தநாவலுக்குஇணையானஒருகதையைகோட்டோவியமாகச்சொல்வதுபோலஉள்ளது.

சுற்றுச்சூழல்ஆர்வலராகஇருப்பவர் சமுகப்போராளியாகவும்இடதுசாரிக்கொள்கையாளராகவும் நாத்திகப்பகுத்தறிவுவாதியாகவும்விடுதலைச்சிந்தனையாளராகவும்மட்டுமே இருக்கமுடியும்என்றஉண்மையைஇந்நாவல்உணர்த்துகிறது.

அளவில்சிறியதாகஇருந்தாலும்இந்நாவல்எழுப்பும் காரம்நம்மைவேகச்செய்கிறது.இதைத்தந்தசுப்ரபாரதிமணியனுக்குநம்தலை முறைகளின்வணக்கம்.

இந்தஇடத்தில்சுற்றுச்சூழல்பற்றியசிலமாற்றுச்சிந்தனைகளைவெளியிடுவது பொருத்தம்எனநினைக்கிறேன். சுற்றுச்சூழல் மாசூட்டுகின்றவற்றில்தொழிற்சாலைஆலைக்கழிவுமுக்கியஇடம்பெறுகிறதுஎன்பதில் ஐயமில்லை.முன்னேற்றம்வளர்ச்சிஎன்பதற்குநாம்கொடுக்கிறவிலையோபெரிது.அதைவிடமனிதனைப்போன்றநாசகாரக்கும்பல்வேறுயாரும்இல்லை.மக்கள்தொகைகட்டுக்கடங்காமல்போனால்இந்தஉலகம்தாங்காது .சுற்றுச்சூழல்தாங்காது.முதலில்இதைநாம்கட்டுப்படுத்தவேண்டும்.இதில் இன்னும்தீவிரம்வேண்டும்
அடுத்ததுநலக்கேடுஇன்றிக்குப்பைகொட்டாதுசுற்றுப்புறத்தின்தூய்மையைக்கெடுக்காதுமக்களைவாழப்பழக்கவேண்டும்.ஆற்றிற்குப்போதல்குளத்திற்குப்போதல்கொல்லைக்குப்போதல்வெளிக்குப்போதல்என்றசொற்றொடர்கள்தமிழர்கள்சுற்றுப்புறச்சூழல்உணர்வோசுகாதாரஉணர்வோஇன்றிஅழுக்கோடுவாழ்ந்தபண்பாட்டினர்எனபதைக்காட்டுகிறது.சங்கஇலக்கியத்தில்காட்டுவழிநடந்தவர்கள்காட்டில் சாப்பாட்டுப்பொதிகளைஅப்படியேஇன்றைக்குபிளாஸ்டிக்பைகளைப்போடுவதுபோலப்போட்டுச்சென்றார்கள்என்பதைஇலக்கியம்காட்டுகிறது.அப்படிப்போட்டசோற்றுப்பொட்டலப்பொதிகள்காற்றில்பறந்து ஒலிஎழுப்பும்போதுதன்பெண்மான்குரல்எனக்கருதி ஆண்மான்விளிபயிற்றியதாம்.

உறுகண்மழவர்உருள்கீண்டிட்ட
ஆறுசெல்மாக்கள்சோறுபொதிவெண்குடை
கனைவிசைக்கடுவளிஎடுத்தலின், துணைசெத்து
வெருள்ஏறுபயிரும்ஆங்கண்,
கருமுகமுசுவின்கானத்தானே.(அகம் 121 .12 -16)

பட்டினப்பாலையில்அட்டில்சாலைசோற்றுக்கழிவுநீரைத்தெருவில்ஆறுபோல்விட்டுஅதுஏறுபொருதுசேறாகிப்தேரோடிப்புழுதிகிளம்பிநீறாடியகளிறுகள்போலக்கட்டடங்கள்மாசடைந்தனவாம்.

புகழ்நிலைஇயமொழிவளர,
வறநிலைஇயவகனட்டிற்,
சோறுவாக்கியகொழுங்கஞ்சி,
யாறுபோலப்பரந்தொழுகி,
யேறுபொரச்சேறாகித்,
தேரோடத்துகள்கெழுமி,
நீராடியகளிறுபோல,
வேறுபட்டவினையோவத்து,
வெண்கோயின்மாசூட்டும் (பட்டினப்பாலை 42-50)
இதைப்புலவன்செழுமையின்அடையாளமாகக்காட்டுகிறான்.நாமோதமிழர்கள்இரண்டாயிரம்ஆண்டுகளாகச்சுற்றுப்புறத்தைப்பேணியஇலட்சணத்தைக்காட்டுகின்றனஇந்தஇலக்கியப்பதிவுகள்பாருங்கள்என்கிறோம்.
                        அதுபோலவேசுற்றுலாஎன்பதைநாம்ஊக்குவிக்கவேண்டியதில்லை.அப்படியே இருந்தாலும்சுற்றுச்சூழலுக்குஊறுவிளைவிக்கஇயலாதகடுமையானகட்டுப்பாடுகளைவிதித்துநடைமுறைப்படுத்தலாம்.சுற்றுச்சூழல்என்பதுவணிகர்கள்பயனடைகிறதுறை.அவர்கள்அந்தநோக்கில்தான்அதைஊக்குவிப்பார்கள்.ஆனால்அதுகடுமையானசுற்றுச்சூழல்விதிக்குட்பட்டேநடைபெறவேண்டும்.சமயச்சுற்றுலாவுக்கும்இதுபொருந்தும்.தீர்த்தயாத்திரைஎன்றபெயரில்ஆண்டாண்டாகநாம்செய்தசுற்றுப்புறநாசம்சொல்லிமுடியாது.அதற்கும்நாம்கட்டுப்பாடுகள்கொண்டு வரவேண்டும்.கங்கையைக்காவிரியைபொருநையைநொய்யலைக்கூவத்தைச் சீரழிக்கும்நாம்சுற்றுச்சூழல்நாசகாரிகளின்தலைமக்கள்அல்லவா?
            அதுபோன்றேஅணைக்கட்டுகள்கட்டிஆற்றின்இயற்கைநீர்ஓழுக்கைநிறுத்திநாகைகீழ்த்தஞ்சைபோன்றஆற்றின்கடைமடைப்பகுதிகளைப்பாலைவனமாக்குதல்ஆறுகளைஇணைத்தல்என்றமுன்னேற்றப்பாசாங்கல்இயற்கையைச்சிதைத்தல்போன்றவற்றையும்கட்டுக்குள்கொண்டுவரவேண்டும். அளவுக்குமீறியசெயற்கைஉரங்கள்பூச்சிகொல்லிகள்பயன்படுத்துதல்மரபுமாற்றப்பயிர்கள்இன்னும்மீதேன்வாயுத்திட்டம்நியூட்டிரினோதிட்டம்அணுக்கழிவைக்கொட்டும்திட்டம்ஆகியவற்றையும்பார்க்கவேண்டும். இதைஅறிவியல்கண்கொண்டுபார்த்துத்தீர்வுகள்காணுவதுபோலவேகழிவறைகட்டிப்பயன்படுத்தும்தனிமனிதசுகாதாரம்சுற்றுச்சூழல்தூய்மைநேர்த்திபோன்றவற்றிலும்அறிவியல்அணுகுமுறைகளைப்பயன்படுதவேண்டும்.முன்னேற்றத்தைத்தடுக்காமல்சுற்றுச்சூழலையும்பாதுகாக்கும்முறைகளைஇன்றையஅறிவியல்கட்டாயம்தரும்.சந்திதெருப்பெருக்கும்சாத்திரம்கற்போம்என்றபாரதியின் குரலுக்குச்செவிமடுப்போம்.சுப்ரபாரதிமணியன்தட்டிஎழுப்பும்மனச்சாட்சியின்குரலுக்கும்செவிகொடுப்போம்.         


   --கி.நாச்சிமுத்து ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு
Subrabharathi Manian
‘The Wasteland’ Turns 100 Today

A heap of broken images, where the sun beats,
And the dead tree gives no shelter, the cricket no relief,
And the dry stone no sound of water.
T.S. Eliot in The Waste Land

In the afternoon of the last day of Coimbatore Book Fair, writer Subrabharathi Manian was sitting alone at a lawn along the path to the exhibition hall. An author of a number of books and recipient of several awards, he drew a book from his jolnabag and presented this correspondent. The front jacket of the book depicted the image of a dark man in his white vest, illustrated by the city-based eminent artist Jeeva. On it, the title read ‘Tirupur -100’  
“You know the knit city Tirupur has turned one hundred years today. However, these days, few people are interested to look back its development as a dollar city at the cost of its environment” Subrabharathi Manian worried.
An author of over 55 books in the genres of short stories, novels, poetry, travelogue and nonfiction, the Tirupur-based writer bagged the Tamil Nadu government’s best book award for his novel Saaya Thirai (Coloured Curtain) in 1998, which spoke on the unmindful devastation of Tirupur’s  environment caused by the dying factories of the city.    
His recent book ‘Tirupur -100’ does not celebrate Tirupur’s development as a dollar city, which earns a foreign exchange to the tune of Rs.30, 000 crore and provides job opportunities to a plenty of migrant labourers from different parts of India. Rather, the chapters in the book concentrate on how the city got its economic ‘developments’ at the cost of its environment  with a number of dying factories discharging their effluents into river Noyyal.
“The book ‘Tirupur -100’ is a precursor for the one hundred year history of the knit-city. The once fast-flowing river Noyyal is now lying dead as a pool of sewage across Tirupur. With its ‘progress’, the city witnesses the thronging of migrant labourers from various parts of country. Therefore, the price of real estate plots in the wasteland has gone up beyond imagination” writes K.Subbarayan, State secretariat member of Communist Party of India and former MP in his foreword to the book.
“The TASMAC outlets in Tirupur provide an annual revenue of Rs. 1100 crore to the government. The city provides a statistics of people consuming liquor for 3 crore everyday. On festival days, it doubles the above figure. It’s all due to the stressful life condition of the workers in the knit-city” worries Subrabharathi Manian  
Interestingly, the writer says that Tirupur was visited by Mahatma Gandhi for a number of times. Also, there are many social welfare organizations functioning in the name of the father of the nation.
“Still, the state-run TASMAC outlets have hampered access to the Gandhian path of non-alcoholism” says Subrabharathi Manian.
B. Meenakshi Sundaram


Photos: Special arangement