சுப்ரபாரதிமணியன்:
இலங்கைப்
பயணம் சில குறிப்புகள்
சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு
இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ்
இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில்
16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை
ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10
பேர் பரிசு பெற்றனர்.
- இலங்கைப்படைப்பாளிகள்
தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர்
மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக் ஜீவா முதல்
மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக
ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.
இலங்கையின் கடற்கரையும் சுற்றுச்சூழலும் இயறகை வளமும்
என்னை வெகுவாகக் கவர்ந்தன. -
-
யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்
- துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால்
பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம்
நடத்துகிறது
- துரோகத்தின் சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில்
பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள்
போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும்
கட்டப்படுகின்றன
துரோகத்தின் சாட்சியம் : 1
கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக
இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.
- கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித்
தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்
- சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர்
தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி
அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு
நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்
- கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக
நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும்
உள்ளது.
-
கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல்
விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த
பொற்காலமும் இருந்திருக்கிறது
- பிறரின் கண்டனம் 3
முல்லைவாய்க்காலுக்குப் போகாமல்
கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.
..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே
செக்கிங் வெகு அதிகம்
- இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில்
விளம்பரம்
- ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம்
பாஸ்பரஸ்
- கொழும்பு காலி கடற்கரை.தூர
-இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய
மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது.
தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக
இன்னும் இருந்து வருகிறது.wp
- அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே
பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான
மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை
வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும்.
ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி
அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும்
வரை, ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில்
உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp
பாதித்தது :
கிளினொச்சியில் சந்தித்த தாய்மார்கள்:
- இலங்கையில் காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர்
. அவர்களின் தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை கிளி நொச்சியில் பார்த்தேன்.
இந்த மதிப்பீடானது காணாமல்
போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு
ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு
கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம்
இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு
சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள்
கூறுகிறார்கள்.
லங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை
புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை
ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு
தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில்
தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை
கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே
இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி
தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு
மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல
அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி
அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர்
என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே
தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளம்
தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில்
நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கையில்:இலங்கை
போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும்
என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான்
அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா
தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை உண்டாகியுள்ளது.wp
- இலங்கை வவுனியா.பண்டாரவன்னியன் சிலை..இவரைப் பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு
நாவல் எழுதியிருக்கிறார் ரொம்ப சுமாராய்..முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார
வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ
மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட
வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு
வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட
வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற
முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில்
-
யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்
- துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால்
பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம்
நடத்துகிறது
- துரோகத்தின் சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில்
பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள்
போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும்
கட்டப்படுகின்றன
துரோகத்தின் சாட்சியம் : 1
கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக
இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.
- கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித்
தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்
- சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர் ப
தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே
நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு
வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக்
கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்
- கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக
நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும்
உள்ளது.
-
கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல்
விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த
பொற்காலமும் இருந்திருக்கிறது
- பிறரின் கண்டனம் 3
முல்லைவாய்க்காலுக்குப் போகாமல்
கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.
..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே
செக்கிங் வெகு அதிகம்
- இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில்
விளம்பரம்
- ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம்
பாஸ்பரஸ்
- கொழும்பு காலி கடற்கரை.தூர எல்லையில் 14மில்லியன் டாலர் செலவில் துறைமுக
நகரம் அமைக்கும் சீனா.99 ஆண்டு ஒப்பந்தம்.இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்.வி.புலிகளை ஏன் அழிக்க
உதவினோம் என்று நொந்து கொள்ளும் இந்தியா.
- வவுணியா..உணவுப்பட்டியலில் மிதிவெடி
என்ற பலகாரம் உள்ளது
-
அரசு ஆணை போர்டில் கொழும்பு.நீண்ட சுத்தமானக்
கடற்கரை.அசுத்தப்படுத்தினால் குறைந்தது 4 மில்லியன் அபராதம்.அதிகபட்சமாய்15 மில்லியன்.யோசிக்க..திருப்பூர் நொய்யல்..
- இன்று கொழும்பு தமிழ்ச் சங்க
நூலகத்திற்கு என் நூல்களை அன்பளிபபாக வழங்கியதைப் பெற்றுக் கொண்ட இலக்கிய பிரிவு
பொறுப்பாளர் சுகந்தியுடன்..
- யாழ்ப்பாணம் சந்தித்தேன்
.போர்க்காலத்தில் பாதிக்கப்படடவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் தன்னார்வலர்
அன்பு ராசாவின் இலக்கியப் பதிவுகள் நூல்களாய்..
- போர்க்காலத்தில் கை.கால்
சேதமடைந்தவர்களுக்கு செயற்கை உறுப்பு வழங்கும் தன்னார்வக்குழு வருடம் 300 பேருக்கு
வழங்குகிறது.
- வவுணியா டு யாழ்ப்பணம்.150கிமீ
அதிகமான வெகு நேரான a 9 நெடுஞ்சாலை பல பல ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டு..இருபுறமும் பச்சை
பசேல் வயல்கள்.ஒரு காலததுப் போர்க்கால பூமி
- வவுணியா.முகநூலிலிருந்து
வாசிப்பிற்கு புதிய தலைமுறை நகரவேண்டும்.லண்டன் உதயணன் உரையில்..
- இலங்கை கவிஞர் யோ.புரட்சி.1000கவிதைகள்
தொகுப்பு. 1000 கவிஞர்கள் 420 தமிழகக்கவிஞர்கள்.யோவ் புரட்சிதான் தம்பி
- வவுனியா.தமிழ்உதயாவின் 5கவிதைநூல்கள்
ஒரே நாளில் வெளியீடு.இத்தொகுப்புகளின் ஆக்கத்தில்
முருகதீட்சண்யா.தம்பி.இளம்பரிதியின் முத்திரைகள் அபாரம்
- கொழும்பில் மேமன்கவியுடன்..பின்நவினத்துவம்.பொதுவுடமைக்கட்சிகளின்
பலவீனம்..தமிழ்ஈழம் அழிப்பின் முன்னணி..என்று தொடர்ந்த உரையாடல்
இலங்கை.சு.சுழலை மாசு
படுத்தினால் 4 மில்லியன் அபராதம் .விபத்து இன்சுரன்ஸ்4 மில்லியன்.இலங்கையில் 4மில்லியன் சாதாரணத் தொகையா
-யாழ்ப்பாணம். கீரி மலை. இராணுவ ஆக்கிரமிபில்
இருந்து விலகியதால் மக்கள் நடமாட்டம் இப்போதெல்லாம். போர்க்காலங்களில் வீடுகளைக்
கைவிட்டுப் போனதால் அவை சிதைலமடைந்து கிடப்பது துயரமான காட்சி.நூற்றுக்கணக்கான
வீடுகள். இன்னும் யாழ் விமான நிலையம் கூட இராணுவ ஆக்கிரமிபில்
தான்.்ாயாழ்ப்பாணம்.கீரிமலை .கேணி புண்ணியஸ்தலமாக உள்ளது.அழகிய கடற்கரை... நீர் உள்ளே
வந்து ..
-
யாழ்ப்பாணம் .
நல்லூர் கந்தசாமி கோவில்.மேல் சட்டை போடாமல்தான் உள்ளே போகவேணும். தேங்காய் தட்டு
இல்லாமல் போனால்... ஒரு தேங்காய் விலை ரூ 150. தென்னை மர நோய், உற்பத்தி குறைவு . 75 ரூபாய்க்கு மேல் தேங்காயை விறகக் கூடாது என்று
அரசு உத்தரவு மீறி....இலங்கை இடியாப்பம் தேங்காய் சட்டினி இன்றி தொண்டையில்
இறங்குமா . கந்தா கருணை வை.
-
யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகம். மார்சிய விமர்சன அணுகுமுறையை வளப்படுத்திய அமரர்கள் கைலாசபதி, சிவத்தம்பி முதல் பலரின் நினைவைக் கிளப்பியது. போர்க்காலத்தில் முக்கிய
களம் இது
-யாழ்ப்பாண நூலகம். முழுக்க எரிக்கப்பட்டு
அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்டதைப் பார்த்துமார் அடைப்பு ஏற்பட்டு இறந்த
பாதிரியார் படம் இது. பின் புணரமைக்கப்பட்டுள்ளது.சுஜாதா அது எரிக்கப்பட்ட அடுத்த
வாரம் அதுபற்றி எழுதியிருந்த ஒரு கதை : ஒரு லட்சம் புத்தகங்கள்
- யாழ்ப்பாணம் தமிழ் நூல்கம். ,
துரோகத்தின் சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில்
பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல
பாலங்களைக்கண்டேன்
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து
பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ
மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட
வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு
வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை.
கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம்
முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.
பண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத்
திரிபும் .
-------------------------------------------------------------------------------------------
இலங்கையின்; வடபாகம்
நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை
மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின்
தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு
விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.
அத்துடன் இலங்கையில்
கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால்
வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால
பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் - செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக்
காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக்
காணமுடிகிறது.
இதை அண்மையில் இலங்கை
தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர்
இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை
இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில்
காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன்
(டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல
கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு
- உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என்
முறிவு நாவலுக்கும். தெளிவத்தை ஜோசப்பின் ஈழ நாவலுக்கும் கொழும்பில் பரிசளிக்கப்பட்டன.தெளிவத்தை
ஜோசப் முன்பு விஷ்ணுபுரம் விருது பெற்றதால் தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவர்