சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

பெறுநர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர். சென்னை 0 13/6/26 வணக்கம் கோவையில் பதினொன்றாம் தேதி 11/6/26 தங்களை சந்தித்தது மகிழ்ச்சி தந்தது எழுத்தாளருடைய குறையை கேட்பதற்காக தாங்கள் நேரம் ஒதுக்கியது மகிழ்ச்சிக்கு தந்தது நான் அது சார்ந்து முகநூலில் எழுதிய குறிப்பை கீழே தந்துள்ளேன். நான் குறிப்பிட மறந்த ஒரு விஷயம் : எழுத்தாளர்கள் தமிழறிஞர்களுக்கு தமிழக அரசு முன்பு கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் நகர மேம்பாட்டு வாரியத்துள் உள்ள வீடுகளை எழுத்தாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை மீண்டும் இந்த அரசை கைக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் நன்றி சுப்ரபாரதிமணியன் திருப்பூர் முகநூலில் எழுதியது : தமிழக கல்வி அமைச்சரும் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருமான திரு ராஜ்மோகன் அவர்களின் அழைப்பு.. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து என்னை தமிழக கல்வி அமைச்சர் சந்திக்க விரும்புவதாக தகவல் தந்தார்கள் அவர்களே வண்டியனுப்பி கோவைக்கு அழைத்துச் சென்றார்கள் . கோவையில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்தேன் . போக்குவரத்து துறைக்கு நான் எழுதிய புகார் சம்பந்தமாக சரியான அறிவுறுத்தல்களும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றன.. எழுத்தாளர்கள் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் இந்த அரசு காப்பாற்றும் என்றார் தமிழக வளர்ச்சித் துறையின் சென்ற ஆட்சிகாலத்தில் நடந்த சாதனைகள். திட்டங்கள் ஆகியவை தொடர வேண்டும் .புத்தக கண்காட்சிகள் மாவட்டந்தோறும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.. எழுத்தாளர்கள் நலத்திட்டங்கள் முறையாக தொடர்பு பட வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன் . புத்தக கண்காட்சிகளை வேறு வடிவத்தில் சிறப்பாக நடத்த யோசனைகளை முன் வைத்திருக்கிறேன். நூலக ஆணை உட்பட அனைத்தும் சரியாக கவனிக்கப்படும் எழுத்தாளர்கள் கௌரவம் காக்கும் இந்த அரசு.. திருவள்ளுவர் கபிலர் மட்டும்தான் நமக்கான எழுத்தாளர்கள் இல்லை .இந்த காலத்து நவீன எழுத்தாளர்களும் நம் எழுத்தாளர்கள் தான் அவர்களின் போற்றுவோம் என்று குறிப்பிட்டார் பேருந்துகளில் தமிழறிஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தெரிவித்தேன். நகரப்பேருந்துகளில் தமிழறிஞர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழறிஞர்கள் பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு போக்குவரத்துத் துறைக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டு விட்டதால், எந்தவொரு பயணச்சீட்டு வழங்க வேண்டியதில்லை என்பதைப் போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தச் சொல்லுங்கள். இதனை, அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினால் கூட, அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கும் தெரிந்துவிடும்.செய்யுங்கள் என்றேன். துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.என்றார் அவரே பொன்னாடை தேடி எடுத்துப் போட்டு வாழ்த்துக்கள் சொன்னார்.. முதன்முதலாக ஒரு அமைச்சரை நான் சந்திப்பது இதுதான் முதல் தடவை
இலக்கியப் பிரதிகள் நாடகப் பிரதிகள் .. என் உரை ஈரோடு : 19/6/26 இலக்கியப் பிரதிகள் நாடகப் பிரதிகள் யாவதும் அவை மேடையறறப்படுவதும் குறைவாகவே தமிழ்ச் சூழலில் இருக்கிறது மலையாள, கன்னடச் சூழலை ஒப்பிடுகிற போது இலக்கியப் பிரதிகளை நாடகங்கள் ஆக்குவது என்பது குறைவாகத்தான் இருக்கிறது.. இன்னும் கூத்துப்பட்டறை போன்ற அமைப்புகளும் இதில் முயற்சிகள் செய்கின்றன.. வெளி ரங்கராஜன் அவருடைய சமீபத்திய முயற்சிகளையும் கூடச் சொல்லலாம். இது வங்காளத்திலும் கன்னடத்திலும் மலையாளத்திலும் அதிக அளவில் இருக்கிறது. ஜெயமோகனின் சில சிறுகதைகள் சமீபத்தில் திரும்பத் திரும்ப கேரளத்தில் மேடையேற்றப்பட்டன. சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் இந்த முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள் அப்படித்தான் சமீபத்தில் ஆதவன் தீட்சண்யாவின் கதையை மையமாகக் கொண்ட தொரட்டி மற்றும் தேவி பாரதியின் நீர்வழிப்படூம் நாவலை மையமாகக் கொண்ட ஈரோடு நாடகக்கொட்டகையின் முயறசிகள் போன்றவற்றை சொல்லலாம் ஆனால் எண்பதுகளில் திருப்பூரில் நடைபெற்ற இவ்வகை முயற்சிகளைப் பற்றி இன்றைக்கு இந்த தலைமுறைக்கு செய்தியாக கூட தெரியாது திருப்பூரில் நாடக முயற்சிகள் -சுப்ரபாரதிமணியன் எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது.பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன. இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் . இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன. இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன, ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன. பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. சமீபத்தில் கன்னடத்தில் இருந்து வந்த இரு இலக்கியப்பிரதிகள் ( கே. நல்லதம்பியின் மொழிபெயர்ப்புகள் ) மக்கள் மாமன்றத்தில் 2025 அரங்கேற்றப்ப்பட்டன. தேவி பாரதியின் நீர் வழிப்படூம் நாவலில் இருந்து சில காட்சிகள்.. நாடகம் இலக்கிய பிரதியும்.. நாடகப் பிரதியும் என் உரை . ஈரோடு நாடகைக் கொட்டகை நிகழ்வு
Tamil hindu \t சுப்ரபாரதி மணியன் ஒரு துண்டு ரயில் சிறுகதைகள் நெய்வேலி பாரதி குமார் . பாரதிக்குமாருடைய இந்த தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் இரண்டு பிரிவுகளாக உள்ளன ஒன்று பழைய விஷயங்களை, சரித்திரக் குறிப்புகளை அல்லது பழைய அபூர்வமான தருணங்களை எடுத்துக் கொண்டு அதன் சூழலையும் வாழ்வியல் மதிப்பையும் கதைகளாக மதிப்பிடுதல் ஒருவகை இன்னொரு வகைக் கதைகள் நிகழ்கால வாழ்வில் உள்ள அம்சங்கள் முதல் வகை கதைகள் நிறைய இதில் உள்ளன அவை பரிசும் பெறுகின்றன பெரும் பரிசு பெற தகுதியான கதைகள் கூட. சரித்திர குறிப்புகள் சார்ந்த கதைகளை எடுக்கிற போது அந்த காலகட்டத்தின் மொழியையும் சூழலையும் பற்றி நிறைய உழைத்து எழுதுகிறார் என்பது விசேஷமாக இருக்கிறது. அதற்கான மொழியையும் அப்போதைய சூழலுக்குத் தகுந்தபடி எடுத்துக் கொள்கிறார்.. பிறகு இன்றைய வாழ்நிலை சூழ்நிலையில் தீவிரவாத அனுபவங்களை சொல்லும் போதும் இந்த களத்திற்கு அவரின் மொழி சரியாக பயன்படுகிறது இவை எல்லாமே நிச்சயமாக அவருடைய அனுபவப் பரப்புக்குள் வந்த விஷயங்கள் அல்ல அவர் கண்டு கொண்ட விஷயங்கள் அல்ல .அதைத் தாண்டி கற்பனை என்ற எல்லையில் பல சாகசங்களை இந்த கதைகள் தொட்டிருக்கின்றன .அந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு எழுதும் போது சிறந்த கற்பனை வளமும் மொழிவளமும் கொண்டு இதை செதுக்குகிறார் அந்தந்தக் காலகட்டத்திற்கான குறிப்புகள் அங்கங்கே மறைந்து கிடக்கின்றன. அவர் பயன்படுத்தும் அந்த கால மொழியில் ஒரு தேர்ச்சி இருப்பது போல் உரைநடை வெளிப்பட்டு விடுகிறது. அந்தந்த காலகட்ட சம்பவங்களின் பின்னணியில் உள்ள மனிதர்கள் ..மனிதர்கள் சார்ந்த சாதி மதம் இவை பற்றி எல்லாம் கூட அவர் நிறைய உழைக்கிறார் தெரிந்து கொள்கிறார். அப்படி தெரிந்து கொள்வதை இந்த கதைகளில் பயன்படுத்தி இருக்கிறார் அப்படித்தான் பனையேறும் தொழிலாளர்கள் வாழ்க்கையாகட்டும், பஞ்சாபில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையாகட்டும், அடையாளம் இழந்து போன மனிதர்களின் முகங்களாகட்டும் எல்லாவற்றையும் காட்டுகிறார் . இந்த அனுபவப பரப்பு அவருக்கு தொடர்ந்து வாசிப்பின் மூலமும் தொடர்ந்து எழுத்தில் மூலம் தான் கைவரப்பட்டு இருக்க வேண்டும். பலர் அவரவர் சார்ந்த உலகங்களைத் தான் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.சலிப்பு தரும் சூழல் அது. ஆனால் படைப்பாளியின் சவால் அவன் வாழும் சூழலைத் தாண்டி வேறுசூழல்களை எடுத்துக் கொள்வது அதை கச்சிதமாக் காட்டுவது என்பது அரியதாக இருக்கிறது அந்த கற்பனையின் எல்லையும் மொழியின் வளமும் அது சார்ந்த நல்ல உழைப்பும் இந்த கதைகளை மேன்மையான கதைகளாக்க் காட்டுகின்றன . சரியான, தீவிரமான எழுத்தாளர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கம் முன்னுரையில் வெளிப்படுகிறது. தமிழ் சூழலின் அவலத்தையே அது காட்டுகிறது அதையே ஒரு சிறுகதையில் ஒரு எழுத்தாளர் மரணத்தை ஒட்டி சொல்லப்பட்டிருக்கிறது மனதை நெருடுகிறது . எழுத்தாளர்கள் நிலைமை தமிழில் மாறும் காலம் எப்போதோ என்று ஏங்க வைக்கிறது அந்த வகையில் இந்த கதைகளின் மேன்மையை யாரும் படித்து உணரலாம் ஜீரோ டிகிரி பதிப்பகம் சென்னை ரூபாய் 300 சுப்ரபாரதி மணியன்
தீபா சரவணன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் மொழிபெயர்ப்பாளர்களுக்கு படைப்பிலக்கியம் செய்வதில் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் ..ஆனால் பல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு செய்வதும் அது உடனே ஏதாவது பத்திரிக்கையில் பிரசுரம்ம் ஆகிவிடுவதும் தங்கள் பெயர் வந்து விடுவதும் என்று ஆறுதல் படுகிறார்கள் .ஆனால் மொழிபெயர்ப்பு என்பது படைப்பு இலக்கியம் போலவே சிரமம் தரக்கூடிய ஒரு முயற்சியாகும் மொழி பெயர்பாபாளர்களில் பலர் அவர்களின் மொழிபெயர்ப்பு படைப்புகள் பிரசுர வாய்ப்புகள் கருதி அங்கேயே தங்கி விடுகிறார்கள் .அவர்கள் படைப்பிலைக்கியத்தில்அக்கறை கொண்டவராக இருந்தாலும் அந்த மதில் சுவரைத் தாண்டி வருவதில்லை அப்படி பல மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் படைப்பிலக்கிய முயற்சிகளை மறந்து விட்டு தொடர்ந்து அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்படி ஈடுபடுபவர்களை பார்க்கிற போது அவர்களின் முந்தைய படைப்பிலக்கிய முயற்சிகள் சிறப்பான வகைப்படும். அதிலிருந்து மீள வேண்டும் என்று நானும் சிலருக்கு அறிவுரை சொல்லி இருக்கிறேன் தீபா சரவணன் அவர்கள் அப்படி மொழிபெயர்ப்பு பணிகளை தொடர்ந்து செய்பவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கும் நிறைய செய்திருக்கிறார் அதேபோல அவரது முனைவர் பட்ட ஆய்வு கூட இரு மொழி சார்ந்த படப்பிலக்கிய ஒப்பீடாக இருந்திருக்கிறது அவர் இந்த மொழிபெயர்ப்பு பணியை மீறி படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவரின் இந்த தொகுப்பில் காணலாம் .அவர்களின் படைப்பு இலக்கிய முயற்சிகளை காணலாம் இந்த கதைகளில் சொல்லும் போது சில வடிவ மாற்றங்களை எடுத்துக் கொள்கிறார் வாரத்தின் எல்லா நாட்களிலும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளிலும் நடக்கும் நிகழ்வுகளை கதையாக்கி அந்த வார கடைசியில் அது முற்றுப்பெறுகிறது இன்னும் சில கதைகளில் நாடகப் பாணி போல காட்சி ஒன்று இரண்டு என்று அமைத்திருக்கிறார் இவை எல்லாம் வித்தியாசமான முயற்சிகளாக இருக்கின்றன. இக்கதைகளில் பெரும்பாலும் கல்வித் துறை சார்ந்தவர்களுடைய ணரர்பயணங்களும் அனுபவங்களும் இடம்பெறுகின்றன அப்படி அவர்கள் பயணம் செய்கிறபோது அது ண்பள்ளிக்கு.. கல்லூரிக்கு.. இருக்கலாம் வெளி ஊரிக இருக்கலாம் அப்படித்தான் எல்லை தாண்டி குஜராத் வரைக்கும் அவருடைய பயணம் நீட்டி செல்கிறது அனுபவங்களோட வரும் ஆறுதலை பெரிதாக எடுத்துப் பயணங்களும் இளைஞருடைய மனப்போக்கு கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் ..இவை ரமாணவர்களின் நோக்கில் .பெற்றோர் நோக்கில் பல கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்வித் துறை சார்ந்தவர் என்ற முறையில் அந்த அனுபவங்களை பல கதைகளில் விதைத்திருக்கிறார்.. எந்த பத்திரிகையில் வருவது என்று பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான பத்திரிகையிலே எழுதுகிறார் .தன் கதைகள் எளிமையாக இருந்தாலும் தீவிரமாக இருக்கிறதா என்பதில் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை இந்தக்கதைகள் சொல்கின்றன அவரின் முயற்சிகள் அவரின் மொழிபெயர்ப்பை தாண்டி அவருக்கு பலமாக அமைந்திருப்பதை இந்த தொகுப்பிலும் காண முடிகிறது 0 தீபா அவர்கள் கதை சொல்லும் உத்தியில் விரைவில் கதையை முடித்து விட முடியும் .ஆனால் அவர் அப்படி செய்யாமல் அவருடைய உத்தியில் அதை சில அடுக்குகள் கொண்டதாகவும் சில முடிச்சுகள் கொண்டதாகவும் மாற்றுவது விசேஷமாக இருக்கிறது குறிப்பாக சைக்கிள் கதை யைஎடுத்துக் கொண்டால் அதை சமீப விஷயங்களை மட்டுமே நிறைத்து முடித்திருக்க முடியும் ஆனால் பழைய காலத்து சைக்கிளில் இருந்து சைக்கிள் கடை வைத்திருந்த சித்தப்பாவிலிருந்து . பழைய சைக்கிள் அனுபவங்களை எல்லாம் கொட்டி அதை நல்ல வாசிப்புக்கு உள்ளாக்குவதும் நல்ல காட்சி ரூபமாக கொண்டு வருவதும் அந்த கதையை வேறு தளத்துக்கு கொண்டு போய் விடுகிறது இந்த சைக்கிள் கதையை அனுபவத்தை வேறு கதைகளும் நாம் காணலாம். சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
திருவனந்தபுரம் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003 திருவனந்தபுரம் என்றாலேயே இரண்டு மணி கள் ஞாபகம் வருவர் .ஒருவர் கலை இலக்கிய நடவடிக்கைகளிலும் தமிழ் சங்கத்திலும் ஈடுபாடு கொண்ட மணி. இன்னொருவர் பிரபல பத்திரிகைகள் துணுக்குகளும் சிறு செய்திகளும் எழுதிய மணி இரண்டாம் அவர் இப்போது இல்லை. முதலாம் அவர் எப்போவும் முதன்மையான செய்திகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் மற்றும் பிற தமிழ் கலை இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டில் அக்கறை கொண்டவர் மணி அவர்கள் அந்த அக்கறையின் வெளிப்பாடுகளாக கதை வட்டம் கவிதைகள் வட்டம் இவற்றை திறம்பட நடத்துபவர் மலையாள எழுத்தாளர்களுடன் சரியான தொடர்பில் இருப்பவர். அவ்வப்போது கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிவெளிக் கொண்டிருப்பவர் .அவருடைய ஆறாவது தொகுப்பாக இந்த தொகுப்பு வருகிறது இந்த தொகுப்பில் பொதுவான அம்சங்களாக நடுத்தர குடும்பங்கள் மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார்‌‌ சாதாரணமாகக் கஷ்டப்படும் பெண்கள் ஆண் பெண் உறவுகள் மற்றும் குடும்ப உறவுகள் இவற்றைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கிறார் .. குடும்ப உறவுகளும் ரத்த உறவுகளும் சுமூகமாக இருக்க வேண்டும் என்ற ஆவல் இவருக்கு இருக்கிறது .அதன் வெளிப்பாடாக பல கதைகளை பார்க்கிறோம் எல்லா கதைகளிலும் சாதாரண வெளிப்பாட்டு முறைதான்.‌ பொது உரைநடை மொழி தான் அதன் மூலமாக ஒரு தமிழ் சமூகத்தினுடைய சில அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது . பிரத்யேகமாக திருவனந்தபுரம் தமிழர்களின் நடவடிக்கைகள்.. வாழ்வியல் சார்ந்த அம்சங்களை இந்த கதைகளில் பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை ..என்றாலும் பொதுவான தன்மை கொண்டிருக்கின்றன .அந்த வகையிலே இவருடைய எழுத்தும் பணியும் முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்தில். தமிழ்ச்சங்க நடவடிக்கைகளில் மணியின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் . சுப்ரபாரதிமணியன் திருப்பூர் ReplyForward Add reaction
வாழ்த்துக்கள் ; பொள்ளாச்சி ஜெயகுமார் கடைசி பகுதி ஆரம்பத்தில் வந்திருந்தால் ஒரு சிறுகதையாக சீக்கிரம் முடிந்திருக்கும். ஆனால் பண்டிகை விசேஷங்களை அடுக்கிக் கொண்டு போய் கடைசியில் பூ கேட்பதை வைப்பது சிறப்பாக இருக்கிறது ஏழைகளின் சாமி கைகொடுக்கவில்லை . தாடிக்கொம்பு தீர்த்தம் எந்த பயனும் இல்லை சப்பரம் வழியில் எல்லோரும் கூடுகிறார்கள் சாமிநல்லா தெரியனும் என்று ஒதுங்குகிறார்கள் .வேப்பிலை தண்ணீர் தெளிக்கும் உரிமை சில குடும்பங்களுக்கு வாய்க்கிறது. ஓலை பட்டாசு இன்னும் மகிழ்ச்சிக்கு சென்றுக்கொண்டே இருக்கிறது. கலாச்சாரம் பட்டாசு போன்ற வடிவங்களில் இன்னும் மிச்சம் இருக்கிறது ஆத்துப்பாறையும் வண்ணார்களும் ஆறு நிலமையும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது .பெரு நெருப்பாக இருக்கிற பல விஷயங்கள் முடிந்து கொண்டிருக்கிறன .. பூசாரியின் அன்பு மகளின் காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ரொம்ப சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் ஒரு முழு பண்டிகையைப் பார்த்த நல்ல அனுபவம் அந்த மனிதர்களுடன் பேசிய அனுபவம் ..விளிம்பு மக்களுக்கான ஒரு சாய்வு எல்லாம் இந்த கதையை சிறப்பாக ஆக்கி இருக்கின்றன பாராட்டுக்கள் சிறப்பு குறுநாவல் இது. இப்படித்தான் அவரின் சமீபத்தியக் குறுநாவலைப் படித்து விட்டு ஜெயக்குமார் அவர்களுக்கு எழுதியிருந்தேன். 2 ஒரு ரோஜாவின் முள் குத்திவிட்டது என்பதற்காக எல்லா ரோஜாக்களையும் வெறுப்பதும், ஒரு கனவு நனவாகவில்லை என்பதற்காக எல்லா கனவுகளையும் கைவிடுவதும், ஒரு முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக எல்லா முயற்சிகளையும் கைவிடுவதும் பைத்தியக்காரத்தனம். ஒரு நண்பன் துரோகம் செய்துவிட்டான் என்பதற்காக எல்லா நண்பர்களையும் தண்டிப்பதும், யாரோ ஒருவர் உண்மையாக இல்லை அல்லது உங்களின் காதலை மதிக்கவில்லை என்பதற்காக காதலின் மீதான நம்பிக்கையையே இழப்பதும், ஏதோவொன்று தவறாக நிகழ்ந்துவிட்டது என்பதற்காக மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் தூக்கியெறிவதும் முட்டாள்தனம். எப்பொழுதும் இன்னொரு வாய்ப்பு, இன்னொரு நண்பன், இன்னொரு காதல், ஒரு புதிய பலம் உங்களுக்குக் கிடைக்கும். எப்பொழுதும் ஒவ்வொரு முடிவுக்கும், ஒரு புதிய தொடக்கம் இருக்கிறது. இதோ என் ரகசியம், மிக எளிமையான ரகசியம்: இதயத்தால் மட்டுமே ஒருவரால் சரியாகப் பார்க்க முடியும்; முக்கியமானவை எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. 3 பொள்ளாச்சி ஜெயக்குமார் அவர்களுடைய சமீபத்திய படைப்புகளை படித்த போது மேற்கண்ட ஒரு மேற்கோள்தான் ஞாபகம் வந்தது அப்படித்தான் அவர் இதயத்தால் எல்லாவற்றையும் அணுகுகிறார் .அப்படி இதயத்தால் அணுகி விளிம்பு நிலை மக்களைப் பற்றி பார்த்த பார்வையில் அவருடைய சிறுகதை ஒன்றை குமுதத்தில் படித்தேன் .அதை முன்பே கனவு இதழுக்கு அனுப்பி இருந்தார் கனவு மின்னிதழில் வெளிவரும் என்று தெரிவித்திருந்தேன் ஆனால் இடைவெளியில் குமுதத்தில் வெளிவந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது காரணம் இன்னும் அதிகமானவர்களை சென்றடைய ஒரு வழி என்று தோன்றியது மேலும் அப்படி விளிம்பநிலை மனிதர்களை பற்றி அவருடைய குரல் அதிகமான வாசகர்களைச்சென்றடைகிறது என்பது இன்னும் நல்ல செய்தியாக இருந்தது அந்த விஷயத்தில் அவர் தொடர்ந்து இதை செய்து கொண்டிருக்கிறார் அவர் முயற்சிகள் வெல்லும் அதன் பிரதிபலிப்பாக தான் அவருடைய இந்த குறுநாவலையயும் பார்க்கிறேன்.இனி உரை நடை படைப்புகளில் உச்சத்தை அவர் அடைவார். அவர் அப்படியே அடைந்த உச்சத்தின் வெளிப்பாடாகத்தான் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் உயர்ந்த விருது சென்ற ஆண்டு அவருக்கு கிடைத்தது அவர் பணி தொடரும் வாழ்த்துக்கள் ஜெயக்குமார் அன்புடன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003
என் கோமணம் நாவலும், மறைந்த இயக்குனர் செழியன் அவர்களும் சுப்ரபாரதிமணியன் செழியன் அவர்களை தில்லி கதா விருது நிகழ்வில் சந்தித்தேன் முதல் முறை. அதற்கு முந்தைய ஆண்டு சுப்ரபாரதி மணியன் ஜெயமோகன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களும் எம்டி வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் போன்ற மலையாள எழுத்தாளர்களும் தில்லியில் கதா விருது பெற்றார்கள் செழியன் உடன் இருந்த மூன்று நாட்கள் தில்லியின் சில பகுதிகளுக்கு சென்றபோது அவரின் புகைப்படங்களின் தீவிர தன்மையை தெரிந்து கொண்டேன். என்னையும் புகைப்படங்கள் எடுக்கும்படி அவரை கேட்டுக் கொண்டேன். ஆனால் தில்லியின் குளிருக்கு பாதுகாப்பாக நான் போட்டிருந்த கனத்த சொட்ட என்னை பெரும் குண்டனாகக் காட்டுவதால் சென்னைக்கு சென்ற பின்னால் தனியாக எடுத்துத் தருகிறேன் என்றார் ஆனால் சென்னையில் சந்திக்க இயலவில்லை. அந்த போட்டோஷீட் நடக்காமல் போனதை ஒரு முறை அவரே ஞாபகம் படுத்தினார். என் வழித்துணைகள் சிறுகதைத் தொகுப்பிற்கு ( அன்னம் மீரா வெளியீடு : ) நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார் அப்போது அவர் அன்னம் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்று அறிந்தேன். அந்த முன்னுரை யார் எழுதியது என்று அன்னம் மீராவின் புதல்வர் கதிரிடம் கேட்டபோது அவர் ஒரு வாசகர் என்று சொன்னார். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எப்போதாவது ஒரு நாள் அவரை சந்திப்போம் என்று அவரிடம் சொல்லி வைத்தேன். அதுதான் தில்லியில் நடந்தது. அந்த முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஊக்கமான வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. என் திரைப்படக் கட்டுரைகள் கொண்ட நூல் திரைவெளி ( அம்ருதா பதிப்பகம் வெளியீடு ) பற்றி அவர் எழுதியிருந்த விமர்சனம் இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளியானது. அதை நான் பல சமயங்களில் முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என் திரைக்கதை நூல்களை விரும்பிக் கேட்டுப் படித்தார் அதில் சிலவற்றை குறிப்பிட்டுச் சொன்னார் ஒருமுறை. என் கோமணம் நாவலை திரைக்கதையைப் படித்துவிட்டு அதன் மூல நாவலை படிக்க வேண்டும் என்றார். நான் அவருக்கு அதை அனுப்பி வைத்தேன். கோமணம் திரைக்கதை/ நாவல் பழனி பாதயாத்திரையை மையமாகக் கொண்டது அந்த பழனி பாதயாத்திரை கதையில் சில காட்சிகளில் வருகிற வீட்டிலிருந்து ஓடிப்போன காதலர்களை எடுத்து மையமாக்கி என் திரைக்கதையை அமைத்திருந்தேன். நாவலைப் படித்த பலரும் அந்த காதலர்கள் நாவலில் எங்கே வருகிறார்கள் என்று கேட்டு ஆச்சர்யப்பட்டார்கள் அந்த காதலர்களை எடுத்து அவர்களை துரத்தும் சாதி வெறி கொண்டப் பெற்றோர்களும் பாதையாத்திரையின் பயணங்களும் என்று திரைக்கதை அமைத்திருந்தேன் அது செழியன் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாவலின் ஒரு சிறு பகுதியை எடுத்து இப்படி ஒரு காதல் போராட்டம் ஆக்கி இருப்பது அவருக்குப் பிடித்திருந்தது ஆனால் அதற்கு பெரிய பட்ஜெட் ஆகும் என்று சொன்னார். இந்த ஆண்டில் அவரை அவரின் திரைப்படப் பள்ளி இயக்கும் குறைந்த செலவான படங்களின் பெயர் பட்டியலை மற்றும் அந்த இளம் இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்ட போது அதில் என் திரைக்கதைகள் ஏதாவது இடம்பெறும் என்ற நற்பாசை எனக்கு இருந்தது. அவரிடமும் தெரிவித்திருந்தேன். சென்றாண்டு சென்னைக்குப் போயிருந்த ஒருமுறை தகவல் சொன்னபோது சந்திப்புக்காக நேரமும் இடமும் குறிப்பிட்டு வரச்சொன்னார். கடைசி நேரத்தில் மருத்த்வமனைக்குச் செல்லும் வேலையால் ஒத்தி வைத்தார். அவருடனான சந்திப்பு நிகழவில்லை. அவர் சொன்ன என்னைப் புகைப்படங்கள் அடுக்கும் போட்டோ ஷீட் நடைபெறவேயில்லை. முன்பு கோவா திரைப்பட விழாவில் அவரின் டூ லெட் படத்தைப் பார்த்து ரசித்தேன். அவருக்கும் சிறந்தப் பாராட்டுகள் அந்த கோவா திரைப்ப்ட விழாவில் நிகழ்ந்தது. அவர் அதைப் பற்றிய ஒரு கடிதம் எழுதச் சொன்னார் எழுதினேன். அது பிரசுரமும் ஆனது ஒரு கட்டுரையாக. தொடர்ந்து என் படைப்புகளோடு- வழித்துணைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் முதல் இப்போதைய திரைக்கதை நூல்கள் வரை தொடர்ந்து கொண்டிருந்தார் நவீன இலக்கிய எழுத்தாளர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பதை ஆறுதலான விஷயம். அஞ்சலி... 0
ஹபீபீ திரைப்படமும் சுப்ரபாரதி மணியனின் சிலுவை நாவலின் கிறிஸ்துவ நெசவாளர்களும் சுப்ரபாரதி மணியன் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவன் என்ற வகையில் சிலுவை, சப்பரம், தறிநாடா என்ற நாவல்களும் சுமார் 30 சிறுகதைகளையும் என்ன நெசவாளக் குடும்ப அனுபவங்களையும் அவர்களின் வாழ்வியலையும் எழுதி உள்ளேன் சமீபத்திய படங்களில் ஹபீபீ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக அமைந்திருப்பதற்கு காரணம் இஸ்லாமிய வாழ்வியலை துல்லியமாக காட்டியது அது சமயம் நெசவாளர்களின் வாழ்வையும் நுணுக்கமாக காட்டியிருக்கிறார் சிலுவை நாவலில் ஒரு கிறிஸ்துவ குடும்பம். அது நெசவாளர் குடும்பம் என்பதை மையமாக வைத்து எழுதி இருந்தேன். 300 ஆண்டுகால கொங்கு வாழ்க்கையில் நெசவாளர்களின் பாரம்பரியமான தொழிலும் கிறிஸ்துவத்துக்கு நெசவாளர்கள் மதம் மாறியதும் பின்னால் தொழில் முறை மாற்றத்தின் காரணமாக விசைத்தறிக்குப் போவதும் என்ற ஆரம்பித்து ஒரு நெசவாளர் குடும்பத்தின் கதையை 300 ஆண்டுகளில் தந்திருக்கிறேன். 2000 ஆண்டு வரைக்கும் உலகமயமாமக்களின் விளைவுகளை என் கதாபாத்திரங்கள் சந்தித்திருக்கிறார்கள்.. இழந்து போனக்காதல் கதைகளையும் உள்ளடக்கியது. மீரா கதிரவன் அவர்களின் இந்த படத்தில் முஸ்லீம் வாழ்வில் பற்றிய நுணுக்கமான சித்திரங்கள் வந்திருக்கின்றன. கிராம நெசவாளர்கள் உலகமயமாக்களால் தொழில் மாற்றங்களின் மூலம் விசைத்தறிக்குப் போனதும் அவர்கள் குடும்பச் சிரமங்களும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டு இடங்கள் என்னையும் பெரிதும் பாதித்தன ஒன்று நெய்ததை முதலாளியிடம் கொண்டு போய் தரும் போது அவர் தரும் விமர்சனங்களும் அதனால் அந்த சிறுவனின் மனச்சிரமங்களும்…. இதை நானும் அனுபவித்து இருக்கிறேன் இரண்டாவதாக நெசவாளர் வீடுகளில் மழைக் காலத்தில் குறைபாடான ஓட்டின் வழியாக நீர் கசிந்து தறி குழிக்குள் சென்றுவிடும் அதே சமயம் அந்த பகுதியில் இருக்கும் நீர் ஊற்றுகள் காரணமாக நீர் தொடர்ந்து தறிக்குழிக்குள் ஏறி நீர் குழியாகி விடும். அந்த பகுதி மிக சிரமமாக நிலையுடன் இந்த பணத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான இடங்கள் நெசவாளர்களின் வாழ்க்கையில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருகின்றன. . குடும்பச் சூழ்நிலைகாரணமாக பெண்கள் கண்வன்மாருடன் சேர்ந்து நெசவில் ஈடுபடுவதை பல கதாபாத்திரங்கள் சொல்கின்றன. கஸ்தூரி ராஜாவின் மனைவியின் கால் பாதங்களில இவ்வகை நீருடன் இருந்து பழகி தான் ஏற்படும் புண்களின் விரிவானக் காட்சி சிரமம் தருகிறது. இழந்த காதலும் அதை நிமிர்ந்து செய்ய முடியாத காரணமான பகுதிகளை இந்த படத்தில் திறமையாக காட்டியிருக்கிறார் மீரா கதிரவன் அவர்கள் என் சிலுவை நாவலின் பாரம்பரிய நெசவும் அதில் ஒரு விதவைப் பெண் நெசவாளனை திருமணம் செய்து கொள்வதும் பின்னால் அந்த குடும்பம் கிறிஸ்தவ குடும்பமாக மாறுவதும் என்பது ஆரம்பமாக இருக்கிறது. பின்னால் தொழில்சார்ந்த சிரமங்களும் விசைத்தறிக்கு மக்கள் போவதும் பனியன் கம்பெனியின் நாடுவதும், பம்பர் கோரா பட்டு நெசவு மாறுவதும் என்று என் சிலுவை நாவல் கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன இஸ்லாமிய வாழ்க்கையை கூறுகளை நுணுக்கமாகச் சொன்ன மலையாள படங்கள் சாதாரணமாகி விட்டன ஆனால் அந்த தரத்தில் தமிழில் ஒரு படத்தை பார்ப்பது அரிதான சூழ்நிலையில் மீரா கதிரவன் அதை சாதித்து காட்டியிருக்கிறார். கஸ்தூரிராஜா போன்றவர்களின் தேர்வு நடிப்பில் இந்த படம் பல சிகரங்களைத் தொட்டிருக்கிறது. இதுபோன்றப் படங்களுக்கு ஏற்படும் பொருளாதார தடைகளோ அல்லது பட்ஜெட் சமாச்சாரங்களோ இதில் ஏற்படாது போல இந்த படத்தின் ஒளிப்பதிவும் திரைக்கதை அமைப்பும் விரிவாக இருப்பதும் முக்கியமானதாக இருக்கிறதும் மீரா கதிரவன் குழுவினருக்கு பாராட்டுக்கள்.. - சுப்ரபாரதிமணியன் Siluvai Rs 1200 NCBH , Chennai Book review எதிர்கால உணவு சுற்றுச்சூழலுக்கு எதிரானதா. சுப்ரபாரதிமணியன் கடைசியாக மலேசியாவிற்கு சென்ற போது முதல் முறையாகச் செயற்கை இறைச்சியைச் சாப்பிட்டேன் திருப்பூரைச் சேர்ந்த நண்பர் கோலப்பன் அங்கு அறை எடுத்துத் தங்கி ஜோசியம் பார்க்கும் வேலையை செய்து வந்தார். மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் திருப்பூரில் இருப்பார். மற்றபடி மலேசியா, சிங்கப்பூரில் தான் வசித்து வந்தார். அவருடனான சந்திப்பின் போது ஏதாவது உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று நல்ல அசைவ உணவு தருவதில் அக்கறை கொண்டிருந்தார் அப்படித்தான் ஒரு நாள் அழைத்தார் சென்று இருந்தேன். அந்த நாள் வெள்ளிக்கிழமை என்பதாலும் ஏதோ விரத நாள் என்பதாலும் நாம் இன்றைக்கு அசைவ உணவு சாப்பிட முடியாது என்றார். பரவாயில்லை என்றேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவருடைய சந்திப்பில் அசைவ உணவு தான் சாப்பிடுவேன் அவர் ஒரு சைவ உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் ஆனால் மாமிச கறிகள் அதிகம் இருப்பது போல தோற்றமளித்த ஒரு பிரிவுக்கு அழைத்துச் சென்றார். இங்கே மாமிச உணவின் சுவையுடன் செயற்கை அசைவ உணவு உள்ளது அதேபோல சுவை இருக்கும் சாப்பிடுங்கள் என்றார் அவர் வெள்ளிக்கிழமை என்பதால் விரதம் என்பதால் அன்றைக்கு அந்த செயற்கை இறைச்சி உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார் அப்போது தான் எனக்கு அந்த செயற்கை உணவு அறிமுகமானது. அந்த செயற்கை இறைச்சி வகை உணவுகளைப் பற்றி பாமயன் இந்த நூலில் சொல்லியிருக்கிறார் 0 aகாலநிலை மாற்றத்தின் விளைவான புவிவெப்பமாதல் பற்றி பேசுகிறபோது அசைவ உணவு கால்நடை வளர்ப்பும் அதன் முக்கியமான காரணங்களாக சொல்லப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் மாடுகள் போன்ற அசைபோடும் விலங்குகள் அதிக மீத்தேன் வெளியை வெளியிடுகின்றன என்கிறார்கள். அதேபோல அசைவ உணவு தயாரிக்க பயன்படும் மறை நீரின் அளவும் அதிகமாக இருக்கிறது .ஒரு கிலோ மாட்டு இறைச்சி உற்பத்திக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்பது நமக்கு தெரியும் எனவே இயற்கைக்கு குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது அந்த எதிர்கால உணவுகள் பற்றிப் பேசப்படுகிற.போது அது எப்படி இருக்கும் ..அவை செயற்கை இறைச்சி, ..தாவரம் அடிப்படையிலான புரதங்கள். பால் புரதங்கள் போன்றவை .செயற்கையான உணவுகள் - எதிர்கால உணவுகள் என்று உருவாகியுள்ளன ஆரம்ப மனித வாழ்க்கையின் காலத்தில் காட்டு உணவுகளை அதிகமாக பயன்படுத்தினோம். பிறகு வேளாண்மை சமூகம் வந்த பிறகு வேளாண்மை உணவுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பெரும் பெரும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அவை அதிகமான வெப்பம், அழுத்தம் கொடுத்து பதப்படுத்தப்படுதல் தூரங்களுக்கு பதப்படுத்துதல் இடப்பட்டு எடுத்து கொண்டு செல்லப்படுதல் ஆகிவை எதிர்கால உணவின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.என்கிறார் சுற்றுச்சூழலை பற்றி அசைவ உணவு அதிகம் பேசப்படுகிற போது சூழலில் கருத்துக்கள் செயறகை உணவு தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருக்கின்றன. வளர்ப்பு இறைச்சியின் அதிகப் பயன்பாடுகளை குறைப்போம் நுகர்வைத் தடுக்கும் மீத்தேன் வழி வெளியேற்றத்தை குறைக்கும் பெரிய அளவிலான கால்நடை வளர்ப்பு தேவையில்லாமல் போகும் என்று சூழலில் சார்ந்து எதிர்கால உணவைப் பற்றி சொல்கிறீர்கள் ஆதரிக்கிறார்கள் . ஆகவே உணவு என்ற கருத்தின் அடித்தளத்தை மாற்றுகின்றன . இன்றைய கருத்தாகங்கள் .. அவை எப்படி உள்ளன என்பது வெறும் ஊட்டகங்களா.. மண், தாவரங்கள். விலங்குகள் வேளாண்மை ஆகியற்றின் பங்களிப்பின்றி உருவாக்கப்படும் பொருளையும் உணவாக கருத முடியுமா.. தொழில்நுட்பம் மனிதனை பசியில் இருந்து விடுவிக்குமா அல்லது இயற்கையில் இருந்து மேலும் விடுவிக்குமா என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பாமயன் அவர்கள் இந்த நூலில் தந்திருக்கிறார் மாற்று உணவு என்பது பாதுகாப்பான உணவு என்றாக இருக்க வேண்டும் ரசாயன முறையில் நஞ்சு இல்லாத உணவாக இருக்க வேண்டும் உயிரியல் சூழலில் சமூகவகையில் ஒத்து செய்யும் உணவாக இருக்க வேண்டும் ஒவ்வொரு உணவும் சோதனையில் பாதுகாப்பானதாக மெய்ப்படும் நிலையில் அது இயற்கை முறை வேளாண்மையைச் சேதப்படுத்தினால் உள்ளூர் உணவு பண்பாட்டினை மாற்றுமேயானால் அல்லது உணவு நிறுவன கட்டுக்குள் கொண்டு சேர்க்குமேயானால் அந்த உணவை முழுமையாக பாதுகாப்பானது என்று கருத முடியாது என்று அவர் கருதுகிறார் மாற்று உணவில் செயற்கை இறைச்சி என்பது விலங்குகளின் இறைச்சி தயாரிக்கும் முறை ஒரு மாற்று அறம் என்று கூறப்படுகிறது .தொழிற்சாலை கால்நடை பல்கலைகள் காணப்படும் நெருக்கி அடைத்து வைத்தல் ஊக்கநீர் பயன்பாடு கட்டாயம் போன்ற கொடுமைகளையும் சுட்டிக்காட்டுகிறார். உலக அளவில் இறைச்சியை நுகர்வோர் அதிகமாகி வருகின்றனர். சைவ உணவுகளை தயாரிக்கும் நேரமும் பொறுமையும் மக்களிடம் இல்லை ஆகவே இந்த பின்னணியில் உருவாக்கப்படும் செயற்கை முறையைக் கொண்டு செய்யப்படும் இறைச்சி உலக உணவுத்துறையில் முக்கியமான புரட்சியாக இருக்கிறது பயிர்களில் இருந்து பெறப்படும் இறைச்சி கூட கோடிக்கணக்கான டாலர்களை முதலீடாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது சூழலியல் பார்வையில் உணவு என்பது வெறும் வேதியியல் மூலக்கூறுகளின் தொகுப்பு அல்ல அது உயிரினங்கள் நிலம், நீர் நுண்ணுயிர்கள் சமூகப் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் சிக்கலான உறவுகளில் வெளிப்பாடு , இந்த நிலையில் செயற்கை பால், ஆய்வக முட்டை போன்ற மாற்று உணவுகள் மனிதனை இயற்கையில் இருந்து மேலும் விலக்குமா? அல்லது இயற்கையை வளங்களின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் புதிய வாய்ப்பாக மாறுமா என்பது இன்னும் தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது .அதன் விடை தொழில்நுட்பத்தின் நெற்றியில் மட்டுமல்ல வரும் சமூகம் எதிர்காலத்திற்காக எந்த வகை உணவு முறையை தேர்ந்தெடுக்கிறது என்பதிலும் சுற்றுச்சூழலுக்கு அவை எந்த பாதிப்பை தருகிறார்கள் என்பதிலும் அடங்கியுள்ளது அசைவ உணவுகளில் கடல் உணவுகள் முக்கியமாக இருக்கின்றன கடலில் ஏற்படும் சூழலியல் நெருக்கடி அதிக அளவில் பேசப்படுகிறது. உலக அளவில் வரம்பற்ற மீன் பிடிப்பு காரணமாக பல மீன் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.விசைப் படகுகளை வைத்து மீன் பிடிப்பதால் கடல் நீர் ஆதாரங்கள் சேதமாகின்றன .அவை பிற கடல் உயிரினங்களையும் அழிக்கின்றனர் இந்த நிலையில் கடல் வெப்பமாக்கல், அமில மழை போன்ற காரணங்களால் பவலப் பாறைகள் அழிந்து பல நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன மனித தாய்ப்பால் கூட செயற்கையாக உருவாக்கப்படுகிறது .குழந்தை உணவு உருவாகுவதை தயாரிக்கும் பெரிய வியாபாரத்தில் இந்த மனித தாய்ப்பால் கூட இடம்பெற்றிருக்கிறது .தாய்மைப் பால், இறைச்சி உணவுகளில் தயாரிக்க பயன்படுத்தப்படும் சோயா போன்ற பயிர்களின் தொழில் மைய வேளாண்மை பெருமளவில் ஊக்குவிக்கிறது. அதேபோல செயற்கை இறைச்சி என்ற செயற்கை உணவு சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்ற அடையாளம் இந்நூலில் தரப்படுகிறது ஆனால் இந்த வகை இறைச்சி சுற்றுச்சூழலுக்கு தேவையானதா நல்லதா என்பதை பற்றிய வேறுபாடு ஆய்வுகள் இல்லாமல் இருக்கிறது சூழலியல் பார்வையில் உணவு என்பது வெறும் புரதம் கொழுப்பு மாவுகளின் தொகுப்பு அல்ல அது மண்ணில் நுண்ணுயிர்கள் தாவரங்கள் விலங்குகள் விவசாயிகள் சமூக உறவுகள் அவர்களின் பண்பாட்டு நினைவுகளின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாகும் ஒரு உணவின் மதிப்பு அதன் ஒற்றை அளவில் மட்டுமல்ல அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது ,யாரால் உருவாக்கப்படுகிறது, என்ன நிலப்பரப்புகளின் தொடர்புடையது ,எந்த சமூகத்தின் வாழ்வு முறையுடன் இணைந்துள்ளது என்பதில் உள்ளது என்கிறார் எதிர்கால உணவு இந்த விரிவான பொருளிலிருந்து சுருக்கப்பட்டு தயாரிக்கப்படும் பிரதம அல்லது உயிர் தயாரிப்பு என்கிற குறுகிய வரவிற்குள் அடைக்கப்பட்டு கூடும் .இதனால் உணவின் பண்பாட்டு சமூக சூழ்நிலையில் மேல் பரிமாணங்கள் புறக்கணிக்கப்படும். மக்கள் இயற்கையோடு இணைந்து உண்மையை உருவாக்க உயிரில் ஒரு பங்காளிகளாக இல்லாமல் தொழில்நுட்ப அமைப்புகளின் நுகர்வோராக மட்டுமே மாற்றப்படும் என்ற அச்சம் இன்று உள்ளதை பாமயன் விளக்குகிறார். செயற்கை உணவுகள் தயாரிக்கப்படும் நாடுகளில் உள்ள அதிகமான முதலீடுகள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு . மனித உழைப்பு நிராகரிக்கப்படுவது பற்றிய அச்சத்தையும் இந்த நூல் தருகிறது.. ஒவியங்கள் , அட்டவணைகள், குறிப்புச் சித்திரங்கள் ஆகியவை பிரசுரம் ஆகியிருக்கும் பக்கங்கள் தெளிவாக இல்லை. இந்த நூலில் வேர்கள் ராமலிங்கத்தின் தொடர்ந்த பங்களிப்பும் மகிழ்ச்சி தருகிறது… . உணவு இயந்திரம் ( செயற்கை உணவு , ஆய்வக இறைச்சி , உணவு இறையாண்மை ) பாமயன் கட்டுரைகள் …தாளாண்மை வெளியீடு ரூபாய் 120 )
“ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில் சுப்ரபாரதிமணியனின் “ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில் “ என்ற சிறுகதை ஆண்டின் சிறந்த சிறுகதையாக சென்னை இலக்கியச் சிந்தனையின் பரிசு பெற்றது. அது தோழர் எஸ்வி ராஜதுரை அவர்களால் நடத்தப்பட்ட “ இனி “ என்ற இலக்கியப் பத்திரிகையில் வெளியானது முதலில் இலக்கியச் சிந்தனை அதை சிறந்த மாதச் சிறுகதையாக தேர்வு செய்திருந்தது. பிறகு அந்த ஆண்டின் முடிவில் அதை ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்வு செய்து பரிசு தந்து. சிறப்பு அளித்தது . அந்த இலக்கியச் சிந்தனை விழா அமைப்பாளர்கள் பழைய நிதியமைச்சர் பா,சிதம்பரம், லட்சுமணன், பாரதி போன்றவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது அப்போது சுப்ரபாரதிமணியன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். அந்த சிறுகதை தமிழர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சங்களைக் கொண்ட நெசவாளர் திருமணச் சடங்கு பற்றியக் கதையாகும் இப்போது அந்தக் கதையை அவர் ஒரு திரைக்கதையாக்கி இருக்கிறார். அது இந்த நூலில் இணைக்கப்பட்டிருக்கிறது அது நெசவாளர் சமூகத்தை சேர்ந்த கதை என்பதால், அதே னெ நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கதையும் கூட இணைக்கப்பட்டு இருக்கிறது . ஆகவே ஒரு சிறுகதையும் இரு திரைக்கதைகளும் என்ற ஒரு வடிவத்தில் இது இடம் பெற்று இருக்கிறது சுப்ரபாரதி மணியன் இதுவரை 30 நாவல்கள் மற்றும் 15 திரைக்கதை நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.. அவரின் திரைக்கதை நூல்கள் தமிழ்த் திரைப்பட நூல்களின் பட்டியலில் முக்கியத்துவமும் பெருகிறது அன்புடன், எத்திராஜ் திருப்பூர்
சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் திரைக்கதைகள் நூல் அறிமுகம் (இயற்கை எனும் இளையக்கன்னி ) கோவை புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளில் 26/7/26 ஞாயிறு மாலை நடைபெற்றது. ஓவியர் ஜீவா, ஓவியர் வி. ராஜ கோபால் , ஓவியர் சித்ரன் ரகுநாத், பொன்சுதா , நம் பதிபப்கம் இவள் பாரதி, தொல்லியலாளர் பேரா. ராஜேந்திரன், வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டார்கள், தூரிகை சின்னராஜ், வாகை துரைசாமி, ஓவிய ஆசிரியர் குமாரசாமி , ஆகியோரும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னை நம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.ரூ 330 விழா ஏற்பாடுகளை வாகை துரைசாமி, தூரிகை சின்னராஜ் செய்திருந்தார்கள். தூரிகை சின்னராஜ் எழுதிய “ குழந்தைகள் கிறுக்கல்கள், கோடுகள், கோட்பாடுகள் “ என்ற நூலை ஓவியர் ஜீவானந்தம் வெளியிட்டார். ஓவிய உலகம் பற்றி உரையாற்றினார். இது ஒரு கனவு வெளியீடு ரூ130 ஓவியர் ராஜகோபால் இருபத்திதைந்து ஆண்களுக்கு முன்னால திருப்பூரில் நடைபெற்ற குழந்தைத் தொழில் ஓவியக்கண்காட்சியில் மனோகர், மருது, ஜீவா, புகழேந்தி உட்பட பதினைந்து ஓவியர்கள் பங்கு பெற்ற ஓவிய முகாம் பற்றிய நினைவலைகளைப் பேசினார். இயற்கை எனும் இளையக்கன்னி. Book talk சுப்ரபாரதி மணியன் - சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய தனது நாவல்கள் மூன்றை – திரைக்கதை வடிவத்தில் தந்திருக்கிறார். புத்தகம் தரும் தகவல்கள்.. இயற்கை எனும் இளையக்கன்னி. நிலங்கள் பழையபடி அதன் மூதாதையரான பழங்குடிகளுக்குத் தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அவர்களை கலங்கடிக்கிறது. அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது அங்கு தாங்கள் வளர்த்த மரங்களை எதற்காக அப்படியே விட்டுச் செல்வது என்று வெட்டி காசாக்கி விட்டு அங்கிருந்து காலி செய்ய எண்ணி மக்கள் மரங்களை வெட்ட மரங்களற்ற அந்தப்பகுதி சூடான பகுதியாகிறது. *** சாயத்திரை சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது. ஒரு லட்சம் கோடி அன்னிய செலவாணி வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் சாயக்கழிவுகள், நதிநீர் மாசு என்பதை பற்றிய பார்வைகள் திருப்பூர் விளிம்பு நிலை மனிதர்களின் நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. கஸார்கள் : பெரும் வல்லரசுகள் அல்லது பெரும் மதங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட நிச்சயமற்ற எதிர்காலத்துடன் கூடிய சிறுபான்மை மக்களின் குறியீடு. சுற்றுச்சூழலில் நச்சாக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோருமே கஸார்களே- செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிச் எழுதிய புகழ் பெற்ற நாவல் “ கஸார்களின் அகராதி *** பூமிக்கு மனிதன் தலைவனா ? இப்போது உலகம் வெப்பமய சூழலில் எல்லாம் தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. தீவில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்போகிறது. உலகம் முழுக்க வெப்பமய சூழலில் பல தீவுகள் மற்றும் அவற்றில் உள்ள பள்ளிகள் காணாமல் போகின்றன.. "நாடோடி காற்று" காட்டுப்பகுதி. மக்கள் ஆடு, மாடு மேய்த்தும் சிறு அளவில் விவசாயம் செய்தும் வருகிறார்கள். கால்நடைகள் மாமிசத்திற்காக கடத்தப்படுவது, கொல்லப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி தருகிறது. பாறுக்கழுகுகள் - இறந்த கால்நடைகளை தின்னும். கால்நடைகளுக்கு வைத்தியமுறையில் தர்ப்படும் மருந்துகள் ரசயானக்கலப்பாகி அவை இறக்கும் போதும் பாறுக்கழுகுகள் உண்கின்றன. ஆனால் ரசாயனக்கலப்பால் அவை சாகின்றன. குறைந்து வருகின்றன. இதை அறிந்து விசனப்படும் மக்கள் ரசாயனம் உபயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மூவகை பாறு கழுகுகளும் (வெண்முதுகு பாறுக்கழுகு, கருங்கழுத்து பாறுக்கழுகு, செம்முகப் பாறுகழுகு) இறந்த பிராணிகளை சாப்பிட்டு தான் வாழுது.அதையும் நாம கவனிக்கனும். .. நன்றி. Virdunagar Muthukumar nam publication Chennai.. rs 330 9566110745 ReplyForward Add reaction
படைப்பாளி உண்மைத் தேடுதலைக் கை விடும்போது ….சுப்ரபாரதிமணியன் காலம் பண்பாட்டு வெளி இவற்றில் பயணம் செய்கிறவன் படைப்பாளி . கலாச்சார வெளியும் சமூகவெளியும் இணைந்து தான் அவன் படைப்புகள் உருவாகின்றன. மன உழைப்பை செலுத்தி அவன் படைப்பை உருவாக்குகிற போது பண்பாட்டு வெளியில் தான் அறிந்த மனிதர்களை கொண்டு வருகிறான் அவனுக்கு தெரிந்த நிலம், வெளி, காலம் அந்தப் படைப்புகளில் முக்கிய பங்களிப்பை செய்கின்றன பண்பாட்டு வெளியில் மனித பண்பாட்டு நடத்தைகளை ஆவணப்படுத்தும் முக்கிய முயற்சிகளை அவன் எடுக்கிறான் அவற்றில் சமகாலத் தன்மை என்பது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் அந்த வழக்காற்றுகளில் நிகழ்த்துவதும் எழுத்தின் மூலம் பதிவு செய்வதும் முக்கியமாக இருக்கிறது.. படைப்பாளி மனித மனங்களை உயிரூட்டுகிறார். பார்வையாளன் அந்த ஆற்றலில் திளைத்து தன் வாழ்க்கையும் கொஞ்சம் திரும்பி பார்க்கிறார் என்ற கணம் படைப்பாளியின் தனித்த மனதில் இயங்காமல் பார்வையாளனையும் மனதில் கொண்டு தான் இயங்குகிறது .அப்படி இயங்குகிற போது அது கடந்த காலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டி இருக்கிறது கடந்த காலத்தின் நீட்சியை நிகழ்வு காலமாகவே பார்க்கிறான். மக்களின் அனுபவங்கள் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் முக்கியமானவை. மக்களின் பண்புகள் அவை கோபமோ மகிழ்ச்சியோ எழுச்சியின் உச்சகட்டமோ எப்படியும் படைப்புகளில் வெளிவந்து தான் தீர்கின்றன காலத்தில் பொழுதுகள் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது பகல் வெளிச்சம் கொண்டு சூரியனின் இயக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கிறது அதேபோல் மகிழ்ச்சியும் நிகழ்கால பண்பாடுகளும் வளர்வதற்கு நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் படிமங்களாக பகலாக பிரகாசிக்கிறது. இரவு வந்ததும் மனிதன் தான் பட்ட கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறதை அந்த இருட்டு காண்பித்து விடுகிறது. பின் மாலை பகலும் இரவும் கலந்த ஒரு நிழலாக இருக்கிறது. அங்கு சோகமும் மகிழ்ச்சியும் வேறு பண்புகளும் கூட ஆடி வருகின்றன. ஆகவே பகலிலும் இரவிலும் பின் மாலையிலும் பின் இரவிலும் முன் விடியலிலும் என்று அவன் படைப்புகளும் கூட பல பண்புகளை காட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கின்றன எனக்கு ஒரு எல்லைக்கோடு தென்பட்டது அந்த எல்லைக்கு ஓட்டி அந்தபுறம் பேண்டசியும் சர்ரியலிசமும் என நடமாடிக்கொண்டிருந்தார்கள் சிலர் நான் இந்த எல்லையிலேயே, யதார்த்த எல்லையிலேயே நின்று நான் அநீதி மனிதர்களை அறிந்த மனிதர்களை அவர்களின் பண்புகளையும் அனுபவங்களையும் நான் அறிந்த காலத்திலும் வெளியிலும் பரப்பிக் கொண்டிருக்கிறேன் பம்பரம் விடுதல் என்பது ஒரு சின்ன சாசக விளையாட்டு தான் அவற்றை சுழலவைக்க கயிற்றை சரியாக சுற்ற வேண்டும் எவ்வளவு சுற்று கயிறு சுற்றப்படுகிறது, போகிறது என்பது முக்கியம் குறைந்த சுற்றுகள் என்றால் அந்த பம்பரம் கொஞ்ச நேரம் சுழன்று நின்று விடும். அதிக சுற்று கயிறு என்றால் ரொம்ப நேரம் ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது படைப்பு என்று வருகிற போது பம்பரம் சுற்றுவது போன்ற ஒரு செயல்பாடு இருந்து சுற்றுகிறது அது எவ்வளவு தூரம் சுற்றும் எவ்வளவு நேரம் சுற்றும் தெரியாது ஆனால் அது சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழிகிறது.. காலம் எழுத நிறைய அனுபவங்களைத் தந்து கொண்டேயிருக்கிறது இந்தக் காலம் மனிதப் பண்புகளை மனதில் கொண்டு ஒரு விளையாட்டாகவே இலக்கியம் இருந்து கொண்டிருக்கிறது சுற்றுகிறது அது எவ்வளவு தூரம் சுற்றும் எவ்வளவு நேரம் சுற்றும் தெரியாது ஆனால் அது சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழிகிறது. இந்த காலம் மனிதப் பண்புகளை மனதில் கொண்டு ஒரு விளையாட்டாகவே இலக்கியம் இருந்து கொண்டிருக்கிறது. அந்த விளையாட்டிலும் நேர்மையும், உண்மைத்தன்மையும் அவசியமாகிறது படைப்பாளி உண்மையைத் தேடுதலைக் கைவிடும்போது அது படைப்புத் தோல்வியில் செல்லும் விளைவுகளை உண்டாக்கும். உண்மையைத் தேடும் படைப்பளிகளை இந்த அமைப்பு இந்த விருதுகள் மூலம் அடையாளம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. ( ஏற்புரைக்காக எழுதியது ) Vankam
“ ஸ்மைல் ப்ளீஸ் “ “ ஸ்மைல் ப்ளீஸ் “ இந்த புதினத்தைப் படிக்கையில் எனக்கு தோன்றியது : சிந்தியுங்கள் ப்ளீஸ் : என்ற சொற்களே. கதாநாயகன் தென் இந்தியா முழுவதும் பந்தாடப்படுகிறான். இது ஒரு வாழ்வு. ஸ்போர்ட்ஸ் வாழ்வு. அவன் தலித் என்பதால். இலக்கியம் பத்தாம் நூற்றாண்டு மன்னர் பெருமை காட்டுவது அல்ல. நமது கால மக்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை காட்டுவதே நீதி சார்ந்த இலக்கியம். ஆம் இலக்கியத்திலும் அநீதி சார் இலக்கியம் நீதி சார் இலக்கியம் உள்ளது. அந்தப் பணியைத் திறம்பட செய்துள்ளார் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள். இந்த தலித் அனுபவங்களைக் கொண்ட நாவல் தமிழ் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். அவரின் முப்பது நாவல்களில் இதுவும் ஒரு வைரக் கிரீடம். - ராமன் முள்ளிப்பள்ளம் (Rs 300 NCBH )
கோத்தகிரியில் 2026 ஆம் ஆண்டில் ஜீன் மாதம் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பை ஓசை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது அப்போது கோத்தகிரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்த ராஜு அவர்கள் அயல் தாவரங்கள் நீலகிரி பகுதியில் பல பாதகங்களைச் செய்து கொண்டிருப்பதும் அதை தடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் அரசுக்கும் தோட்டக்கலை துறைக்கும் பலமுறை எழுதியிருப்பதாகச் சொன்னார். அதன் தொடர் நடவடிக்கையாக சிலர் இடங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கருநொச்சி நீர் நொச்சி போன்றவை வேர்களில் பிடிமானம் கொள்ள மிகச்சிறந்த புது செடிகள் வழங்கப்பட்டு வருவதை பற்றி சொன்னார். ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் நீங்கள் நீண்ட காலம் நிலைத்து கரையில் பாதுகாக்கும் நீர்மருது நடப்பட்டிருப்பதை சொன்னார். இந்தப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது என்பதாலும் வெண் மருது போன்றவை நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இவை எல்லாம் நீலகிரி பகுதியில் அங்கேயே வழங்கப்படுகின்றன என்ற தகவலையும் சொன்னார். மலைச்சரிவுகள் மற்றும் பாறைகள் நிறைந்த வறண்ட காடுகளை மீட்டெடுக்க புரசை என்ற ஒரு அபூர்வமான மரம் பயன்படுகிறது. இதன் பவள ஆரஞ்சு நிற குழாய் வடிவ மலர்கள் காடுகளில் நீர்ச் சுழற்சியை காக்கின்றன என்று சொன்னார். அதேபோல இயற்கையான பூச்சிக்கொல்லி பண்பைக் கொண்ட வேம்பு மரம் மிக வேகமாக வளர்ந்து பசுமை பாரத்தை உருவாக்கி அழகாக காட்சியளிக்கும் என்று சொன்னார் இவை எல்லாம் அயல் தாவரங்களின் பாதிப்பை பற்றி சொல்லும் போது அவர் குறிப்பிட்டதாகும். அயல் தாவரங்களை எதிர்த்து ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்திருப்பதையும் சொன்னார், ஆயுதம் தாவரங்கள் இந்தியாவிற்கு ஆரம்ப போர்ச்சுக்கீசியர்கள் மூலமாக வந்திருக்கிறது. மிளகாய், முந்திரி, அன்னாசி போன்றவை அவர்களால் இங்கு கொண்டு வந்து நடப்பட்டிருக்கின்றன காகிதக்கூழ் உற்பத்திக்காகவும் பிறகு தேவைக்காகவும் அப்படி பல மரங்கள் நடப்பட்டிருக்கின்றன அப்படித்தான் சீமைக் கருவேலம், யூகாலிப்டஸ் அறிமுகமாகியுள்ளன மண்ணரிப்பை தடுக்க நிழல் தருவதற்காக தங்கநிறப் பூக்களுக்காக குல்முகர், ரெயின் ட்ரீ தூங்குமூஞ்சிமரம் போன்றவை நடப்பட்டு இருக்கின்றன.அந்த வகை மரங்களும் புதுச்செடிகளும் காடுகளை அழிக்கும் முக்கிய நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக இன்று மாறிவிட்டன முன்பு சிறு தேவைகளுக்காக நடப்பட்ட இந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சவும் பயன்படுத்தப்படுவதால் கிணறுகளின் நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்று விடுகிறது. உள்ளூர் விலங்குகளுக்கு உணவு தேவைக்காக இவை எந்த வகையிலும் பயன்படாது.. மண்ணில் விழும் அவற்றின் இலைகள் பக்குவமடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் .அவை உள்ளூர் தாவரங்களை விதைகளை முளைக்க விடாமல் தடுத்து மண்ணின் தன்மையை மாற்றி விடுகின்றன. ஆகவே இதைமாற்றிக் கொள்ள நாவல் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பலர் சொல்லி இருக்கிறார்கள் காடு வளர்ப்பில் ஒரே வகையான மரங்களை நடுவது சாதகமானது அல்ல. காட்டின் வெவ்வேறு அடுக்குகளுக்கு வெவ்வேறு மரங்கள் தேவை. அப்போதுதான் சரியான சுற்றுச்சூழல் உருவாகும் முன்பு நாம் வளர்த்த மருதம் நாவல் கடம்பு பூவரசு புன்னை மரம் ஆகிவை ஆற்றுக் கரைகளில் நடப்பட்டு மண்ணையும் பூமியும் இறுக வைக்கும் தன்மை கொண்டவதால் இப்போதும் தேவையாக இருக்கின்றன நீரின் கரைகளில் அதன் அமைப்புகளை மாற்றக்கூடிய மற்றும் கரைகளை பலமாக ஆக்கக்கூடிய பல தாவரங்கள் இருக்கின்றன அவை நீரை சுத்திகரிப்பது மட்டுமில்லாமல் மீன்கள், தவளை போன்ற உயிரினங்களையும் வாழ வைக்கின்றன பாதுகாப்பான இனப்பெருக்க சூழலை உருவாக்கவும் இயற்கை ரீதியான பாதுகாப்பை உருவாக்கவும் நம் பழமையான மரங்கள் தாவரங்கள் இன்னும் உதவியாக இருக்கின்றன . அவை அயல் தாவரங்களின் பாதிப்பைச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. க் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பின் விவரங்களைப் பற்றி நீரியல் பொறியாளர் லீலா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிற ஒரு பகுதி மேலேங்கே தரப்பட்டிருக்கிறது. கீழே சென்றாண்டின் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பு பற்றிய என் குறிப்புகள் இப்படி உள்ளன, 0 திணைக்கோட்பாடு பற்றிய இரண்டு நாள் வால்பாறை கருத்துப் பட்டறை சுப்ரபாரதிமணியன் என் மொழிபெயர்ப்பிலான “ சுற்றுச்சூழல் பிரார்த்தனை “ சிறு நூல் வெளியீடு/ அறிமுகம் நடைபெற்றது. பூவுலகின் நண்பர்கள்அமைப்பின் சென்னை வெற்றிச்செல்வன், தாளாண்மை ஆசிரியர் பாமயன், ஓசை காளிதாஸ், அவை நாயகன் போன்றோர் பிரதிகளைப் பெற்றனர் ( கனவு வெளியீடு ரூ20 / 9486101003) திணையியல் கோட்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் முதல்படியாக அமைந்தது இந்த சந்திப்பு . என் உரையில்: 1 வால்பாறை காடம்பாறை பகுதி மின் உலகம் பற்றிய அமரர் திருப்பூர் குழந்தைவேலு நாவல் மின்சார வேர்கள் பற்றி 2. என் 14/40 கொண்டை ஊசி வளைவு அட்டகட்டி நாவல் பற்றிய அனுபவம் 3.வளர்ச்சி என்னும் மாயை..பாமயன் குறிப்பிட்டதையொட்டி என் சாயத்திரை நாவல் அனுபவம் 4. சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட சுற்றுச்சூழல் மரணங்கள், கொலைகள் சார்பான என் அனுபவங்களைக் கொண்ட ”புத்துமண்” இரு பதிப்புகள் வந்துள்ளன. ( உயிர்மைபதிப்பகம்., என் சி பி எச் ) பற்றியும் . 5. வெப்பம் முதலான என் நாவல்களை முன்வைத்து சூழலியல் நூல்களின் அறிமுகம் இருந்தது. நாள்: செப்டம்பர் - 27, 28 (சனி. ஞாயிறு) இடம்: கானுயிர் பயிற்சி நிலையம், வால்பாறையில் நிகழ்வுகள் நடைபெற்றன,அது பற்றிய ஓசைக்குறிப்பு : இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட ஏமாற்றம், மனக் கலக்கம் ஆகியவற்றால் ‘உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது’ என்ற பார்வை அனைவருக்கும் ஏற்பட்டது. குறிப்பாக சிந்தனையாளர்களிடமும் ஏற்பட்டது. இதன் விளைவாக மீநடப்பியல் (சர்ரியலிசம்) முதலிய சிந்தனை இயக்கங்கள் தோன்றியன. பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிரான கருத்துக்களை மீநடப்பியல் சிந்தனை கொண்டிருந்தது. மனோவியல் முறையில் தீர்வுகளைத் தேடத் தொடங்கினர். ஒட்டு மொத்தத்தில் நிலையற்ற உலகத்தில் வாழ்வது கடினம் என்பதும், நம்பிக்கையற்ற வாழ்க்கை என்ற கருத்தும் வேரூன்றி வளர்ந்தன. அதேபோன்றதொரு மனநிலை இன்றைய சமூகத்தில் காணப்படுகிறது. காலநிலை மாற்றம், சூழல் சீர்கேடுகள், கோப்பெரு நிறுவனங்களின் பொருளியல் முற்றாளுமை. விளிப்பு நிலைக்குத் தள்ளப்படும் பெருந்திரள் மக்கள், போர்களால் அழியும் காஜா, உக்ரைன் உயிர்களைக் காப்பாற்ற வழியில்லாமல் கைபிசையும் நிலை என்று வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் கோட்பாட்டு அறிவியல் போதுமான தகவல்களோடு பூவுலகின் நெருக்கடிநிலையை விளக்கி வருகிறது. உலகின் பண்பாட்டு மரபுகளுக்கும் நவீனமயமாக்கத்திற்கும் இடையிலான மோதல் பெருகி வருகிறது. பெரும்பான்மை மக்களின் விழுமியங்களும், சமூகத்தில் அவர்களின் பங்கும் குறைமதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவர்களை ஏதிலிகளாக மாற்றுகின்றன பொருளியலை மட்டும் முன்வைத்து வளர்ந்து வரும் சமூகம் கிட்டத்தட்ட வாழ்வின் ஒவ்வொரு கூறுகளையும் நிலையற்றதாக மாற்றுவதற்கான சான்றுகளும், தகவல்களும் வெள்ளம்போல் பாய்கின்றன. குறிப்பாக பெருகிவரும் சூழலியல் அச்சுறுத்தல்கள், அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியுமா? அடுத்த தலைமுறைகளுக்கான இடம் இருக்குமா? என்ற அச்சத்தை உருவாக்குகின்றன. எல்லை மீறிய தொழில்நுட்பத்தின் விரிவாக்கம், அதற்கு ஆதரவான கூக்குரல்கள் யாவும் மனித குலத்தின் இருப்பிற்கான வழிகளையும் பண்பாட்டு வாழ்வுரிமைகளையும் முன்னர் கற்பனை செய்ய முடியாத எல்லைகளுக்கு அப்பால் நெருக்கித் தள்ளுகின்றன. அறத்திற்குப் புறம்பான பாதையை வகுத்துச் செல்லும் இந்த பொருள்மய உலகத்திற்கான மாற்றாக, இயற்கையைச் சுரண்டி உயிர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த மாந்தர் முதன்மைப் போக்கிற்கு மாற்றாக திணைக் கோட்பாடு எழுந்து நிற்கிறது. இது புதிய கருத்தோ, சிக்கலான கருத்தோ அல்ல, பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடாக வகுத்தளித்து வைக்கப்பட்டுள்ள தொல்காப்பிய நெறிகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் நிலத்தில் வாழ்ந்த தொல்லறிஞர்களின் முன்வைப்பாக இருந்த அறவியல் சிந்தனைகளை இன்றைய புரிதல்களோடு முன்னெடுக்கும் முயற்சிதான் ‘திணையியம்’ என்ற மெய்யியல் கோட்பாடு. இது சூழலியல், பொருளியல், அரசியல், பண்பாட்டியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் தன் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இன்றைய வளர்ச்சி என்னும் பெரும் வேட்டை, இந்த உலகின் கடைசி மரமும் அழிக்கப்பட்ட பின்பும் அதன் வேர்களைச் சுரண்ட முனையப் போகிறது. கடைசிச் சொட்டு நீரும் உறிஞ்சப்பட்ட பிறகும் நீரின் மீதான வேட்டை நிற்கப்போவதில்லை. ஆக மனிதர்களின் இருப்பு மட்டுமல்ல மற்ற உயிர்களின் இருப்பும் பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது. இன்றைய பொருளியல் உலகம், வரம்பற்ற வளர்ச்சி, நுகர்வு என்பதை வழிமுறையாகவும் லாபத்தை நோக்கமாகவும் கொண்டு தனது காய்களை நகர்த்துகிறது. உழைப்பின் பங்கை எந்திரங்கள் மூலம் பதிலீடு செய்ய முனைகிறது. ஈவிரக்கமற்ற போட்டிக்கு உந்தித் தள்ளுகிறது. அனைத்துத் துறைகளிலும் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. சந்தை என்பது அறநெறிகளுக்கும், அன்பிற்கும் எதிராக மாறி வருகிறது. அரசியல் என்பது கோப்பெரு நிறுவனங்களும் அரசாங்கங்களும் இணைந்து கைகோர்த்து இயக்கும் ஆட்சிமுறையாக மாற்றம் பெற்றுள்ளது. கொல்லைப்புற வழியாக கோப்பெருநிறுவனங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வது நடைமுறையாக உள்ளது. எனவே அரசியல் என்பது பெருநிறுவனம் தாங்கும் அமைப்பாக மாறிவிட்டது. இதன் விளைவாக பரந்துபட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எண்ணற்ற துயர் மிக்கதாக மாறுகிறது. குடிநீரும், மூச்சுக் காற்றும், கல்வியும், மருந்தும் அவர்களுக்கு எட்டாக்கனியாகிறது. மதம், சாதி என்று அணி திரட்டல் உருவாகி, உண்மையான சிக்கல்கள் திசை திருப்பப்பட்டு அவை பெரும் மோதல்களாக உருப்பெறுகின்றன. திறமை, கடின உழைப்பு, நேர்மை போன்ற விழுமியங்கள் கரையத் தொடங்குகின்றன. பண்பாட்டுத் தளத்தில் எடுத்துக் கொண்டால் அன்பு, தோழமை போன்ற பண்பு நலன்கள் மறைந்து போட்டியும் பொறாமையும் விரிவடைகின்றன. ஆக ஒட்டுமொத்த வாழ்வியல் பணத்திரட்டலை அடிப்படையாக மாறியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த அனைத்துச் சிக்கல்களுக்கும் வேராக இருப்பது மெய்யியல் குறைபாடு என்பதை உணர முடியும். மனிதனை மையமாக வைத்த மாந்தர் முதன்மைப் பார்வை அனைத்து வளங்களும், வசதிகளும் மனிதர்களுக்கு மட்டுமே என்ற நோக்கில் செல்நெறிகளை வகுக்கின்றனர். இயற்கையின் தாங்குதிறன், வளங்களின் போதாமை பற்றிய பார்வை இல்லை. வளர்ச்சி என்பதே விடுதலை என்று கருதுகின்றனர். ஆனால் வளர்ச்சிக்கு எல்லை உண்டு. இந்தப் பூவுலகம் தொடர்ந்து இருந்து பயன்தர வேண்டுமாயின் இயற்கைநேயச் சிந்தனை உருவாகிட வேண்டும். இயற்கை என்பது ஒரு பொருளல்ல, அஃது ஓர் உயிர், அது தாய்மை. எல்லா உயிர்களையும் ஈன்ற அன்னை. இயற்கை எப்படி நமக்குத் தருகிறோ, அதுபோல இயற்கைக்கும் நாம் திருப்பித் தருதல் வேண்டும். மனிதன் தன்னுடைய அறிவாணவத்தால் இயற்கையை அத்துமீறிச் சுரண்டி வருகிறான். அனைத்து உயிர்களுக்குமான இயற்கை மனித இனத்துக்கானதாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் மனிதன் இயற்கையிடமிருந்து தனிமைப்பட்டுள்ளான். பிறகு மனிதர்களுக்குள்ளும் தனிமைப்பட்டு அந்நியமாகியுள்ளான். தலைமுறைகளும் அந்நியமாக்கப்பட்டுள்ளனர். யாரெல்லாம் தொழில் நுட்பத்தைக் கையில் வைத்துள்ளார்களோ, அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக, இயற்கையை சுரண்டுபவர்களாக உள்ளனர். இந்த ஆதிக்கம் இயற்கையும் மனிதனையும் பிளவுபடுத்தியுள்ளது. பொருளாக்கம் என்பது லாபத்தை தருவதாக அறியப்படுகிறது, ஆனால் பொருளாக்கத்தின் உடன் விளைவாக மாசு என்பதும் உருவாகிறது. இதுவரை பொருளாக்கம் பற்றிச் சிந்தித்தவர்கள் மாசுபாட்டின் பங்கைப் பற்றி விளக்கவில்லை. எனவே ஒரு புதிய பார்வை தேவையாக உள்ளது. பொருளாக்கச் செயல்பாட்டில் மாசுபாட்டின் பங்கு அளப்பரியதாக மாறியுள்ளது. பூவுலகின் பல உயிர்கள் காணாமல் போய்விட்டன. இந்த அறமற்ற போக்கு நாளை மனிதத் தலைமுறைகளையும் பூவுலகில் இருந்து அப்புறப்படுத்தலாம். இந்த அழிவைச் செய்யும் உரிமையை இன்றைய தலைமுறைக்கு யார் கொடுத்தது? எல்லாத் தலைமுறைகளும் இந்த மண்ணில் வாழ்வதற்கான அறம் பற்றி திணைக் கோட்பாடு விளக்குகிறது. பொருளாக்கத்திற்கும் நுகர்வுக்கும் அறம் அடிப்படையாக வேண்டும். அதைப் பற்றித்தான் திணை வாழ்வியல் பேசுகிறது, ‘பயன் கிடைத்தாலும் மரங்கள் சாகும்படியாக மருந்தும் எடுக்கக் மாட்டார்கள் மக்கள், உடல்வலிமை குன்றும்படியாக பெரிய தவத்தையும் செய்யமாட்டார்கள் அறிஞர்கள், நாட்டின் வளங்கள் அழியும்படியாக பொருள் திரட்ட மாட்டார்கள் ஆட்சியாளர்கள்’ ‘மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர்’ (நற்: 226) திணை வாழ்வியல் என்பது இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை உருவாக்கும் முறையியல் ஆகும். நீர், நிலம், காற்று, வானம், வெப்பம் என்ற பூதங்களனைத்தையும் ஒருங்கிணைத்து அனைத்து உயிர்களின் வாழ்க்கைக்குமான தேவைகளை நிறைவாக்கும் கோட்பாடு ஆகும். இயற்கையைச் சிதைக்காமல், மாசுபாடுகளை உருவாக்காமல், இன்றைய தலைமுறைகளுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் தலைமுறைகளுக்கான தேவைகளையும் நிறைவாக்கும் முறையிலான வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கிய நெறியாகும். இதைப் பற்றிய விரிவான உரையாடலுக்கு இந்த சந்திப்பு வழி வகுத்தது. பண்டைய தமிழர்கள் இயற்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் வாழ்வியல் உருவானது தொல்காப்பியர் முதலாக சங்க இலக்கியங்கள் வரை பல இடங்களில் திணையியல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் ஆதி மெய்யில் தான் திணையியல் என்று விளக்கப்பட்டுள்ளது. பிற பண்டை சம்பவங்களில் இல்லாத இந்த கருத்தாக்கம் உலகத்துக்கு பண்டைய தமிழர்கள் கொடுத்த கொடை .இன்றைய சமூகம் சிந்திக்கும் சித்தர்களுக்கு தீர்வு தரும் கோட்பாடாக திணையியல் கோட்பாடு இருக்கும் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு இணக்கமாக இருக்கும் அதுவரை சிக்கல் இல்லை அந்த இணக்கத்தை சிதையும் போது சிக்கல்கள் தோன்றுகிறது என்று பாமயன் குறிப்பிட்டார். சில துளிப்பாக்கள் மனதில் வந்ததை எழுதி வைத்தேன். 1 திரும்பும் வழி தீர்மானிக்க முடிவதில்லை காட்டின் பாதை 2. காட்டை அறியாமல் காடிற்குள் போகாதே விலங்குகளை அறியாமல் அவற்றை நெருங்காதே 3. அடிபட்ட இருவாச்சி உறைந்து கிடந்த வர்ணங்கள் .4. பறந்த போனது இருவாச்சி வானவில் பளிச்சிட்டு மறைந்தது பலமுறை 5. இப்படியும் போகலாம் அப்படியும் போகலாம். வழி சொன்னார் காட்டுவாசி. காட்டுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் கூடத்தான் சுலபமாகக் கடக்கலாம் பலதை. 6. கொட்டித்தீர்த்தன தேனீக்கள் பல செயற்கைச் சிந்தனைகள் மீதானத் தாக்குதல்கள் - சுப்ரபாரதிமணியன்
நொய்யலை வரைவோம் 0 பெரியபாளையம் தொல்லியல் சிறப்பு வாய்ந்த ஈஸ்வரன் கோயில் சென்று நேரடி ஓவியங்கள் வரைந்த தமிழ் அந்தாதியின் முதல் முயற்சிக்குப் பின் அடுத்த நேரடி ஓவியம் வரையும் நிகழ்வு ... 0 திருப்பூர் நொய்யலை மையமாக வைத்து சுப்ரபாரதிமணியன் எழுதிய ” சாயத்திரை “ நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆவதை ஒட்டி “ நொய்யலை வரைவோம் “ நிகழ்ச்சி நொய்யல் கரைகளில் இருந்து நொய்யலை வரைகிற வித்தையைச் செய்யலாம்,. சிறந்த ஓவியங்களுக்கு,, 10 பேருக்கு பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும்,. அதைத் தவிர பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை “ 30 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்தது சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளி வந்திருக்கிறது. இந்த நாவலில் இருந்து சில பகுதிகளை வரையலாம் அல்லது நொய்யல் நதிக்கரையில் இருந்து நொய்யலை வரையலாம். ஓவியம் வரையத் தேவையானப் பொருட்களுடன் வாருங்கள். கூடுமிடம் :: : சுற்றுச்சூழல் பூங்கா முகப்பு, பார்க் வீதி, நொய்யல் கரை திருப்பூர் நாள் ;23/8/26.. மாலை 4 மணிக்கு தொடர்புக்கு ::ஆர். எத்திராஜ் 96778 91584 நிகழ்ச்சி அமைப்பு : கனவு, திருப்பூர்
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கிய ஆ.மாதவன் நினைவு இலக்கிய விருது ஏற்புரை ..சுப்ரபாரதிமணியன் ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது பின்னால் நான் எழுத ஆரம்பித்தபோது அவர் தொடர்ந்து என் கதைகளை பற்றிக் குறிப்பிட்டு எழுதினார்.. தீபம் இதழில் இருவரும் நிறைய எழுதினோம். எழுத்தாள நண்பர் ஆனார். தொடர்ந்து தொடர்பில் இருந்தபடி அவரை வாசித்துக் கொண்டிருந்தேன்.. திருவனந்தபுரம் வரும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். சாலை பஜாரில் உள்ள அவரின் செல்வி ஸ்டோரில் பாத்திரங்கள் மத்தியில் அவரையும் பார்ப்பேன். இலக்கியம் சார்ந்த பல நல்ல உரையாடல்களை கண்டு கொண்டிருக்கிறேன். வழக்கமாக ஊடவே நகுலன், நீலபத்மநாபன் ஆகியோரைச் சந்திப்பதும் வழக்கம். திருவனந்தபுரம் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் என்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது கனவு இதழ் நாற்பது ஆண்டுகளாக வருவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.. அந்த கனவு இதழில் சில சிறுகதைகளை ஆ மாதவன் எழுதினார். முதல் 25 ஆண்டுகளில் வந்த கனவுப் படைப்புகளை காவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் அவரின் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது பின்னால் அவர் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் நடத்தும் கேரள தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது பல சிறுகதைகளையும் நான் எழுதி இருக்கிறேன். அப்போது தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் கேரளா தமிழ் இதழில் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கான அங்கீகாரம் வாசகப்பரப்பும் குறைவாகவே இருந்தது. அந்த காலத்தில் ஜெயமோகன் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதை நிறுவிய போது முதல் விருதை ஆ.மாதவன் அவர்களுக்கு அளித்தார். .அதற்கு முன்னால் திருப்பூர் தமிழ்ச்சங்கம் அவருக்கு விருது அளித்த போது அவர் வரவில்லை .அவர் சார்பாக நான் விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினேன். அவர் படைப்புகளைப் பற்றி… . பின்னால் திருப்பூர் வந்த திருவனந்தபுரம் பேராசிரியர் நயினார் அவர்கள் வசம் ஆமாதவன் அவர்களின் விருதுக் கேடயத்தை தந்தேன்க் பேச்சில் பேராசிரியர் நயினார் அவர்கள் ஆமாதவனுக்கு திருப்பூர் விருது தந்ததையும் இப்போது அவர் பெயரிலான விருது எனக்குத்தரப்படுவது பற்றியும் சொன்னார். ஆ மாதவன் படைப்புகளை புதுமைப்பித்தனுக்கும், ஜீ நாகரானுக்கும் இடைப்பட்ட எதார்த்தவாதப் படைப்பாளி என்று சொல்வார்கள். திருவனந்தபுரம் வாழ் தமிழர்களின் குறிப்பாக விளிம்பு நிலை மக்களையும் பற்றி அதிகம் எழுதினார் மொழிபெயர்ப்புகளையும் செய்தார். ஜி நாகராஜன் அவர்களைப்பற்றி அசோகமித்திரன் அவர்கள் விரல் என்ற ஒரு கதையை எழுதி இருக்கிறார். அந்த கதையில் ஜி நாகராஜன் முழு ஆளுமையை காட்டி இருக்கிறார் அப்படித்தான் அவர்களுடைய முழு ஆளுமையை ஒரு மலையாள சிறுகதையில் கண்டு கொண்டேன்.. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கிய ஆ.மாதவன் நினைவு இலக்கிய விருது ஏற்புரை - II ..சுப்ரபாரதிமணியன் பரிதி பதிப்பகம்டாக்டர் ராஜிவ் குமார் திருவனந்தபுரம் வருகை பற்றி கேட்டபோது ஆ மாதவன் இலக்கிய விருது பெற வந்திருக்கிறேன் என்று சொன்னேன் உடனே அவர் கடையில் இருந்த அவரின் சிறுகதைகளின் தொகுப்பான பெரிய நூலை ஒன்றை எடுத்து அதில் ஆ மாதவன் அவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் வேதுகலம் என்ற கதையை முழுக்க படித்துக் காண்பித்தார். நானும் கிள்ளி பாலம் சுப்பிரமணியம் என்ற திருவனந்தபுரம் எழுத்தாளரும் அவர் அந்த கதையை விவரிக்க முழுக்க்க் கேட்டோம்..( கில்லிப்பாலம் சுப்ரமணியன் தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் எழுதுபவர் இப்போது ஆங்கிலத்தில் கூட அவரின் கதைகளை வெளியிட்டு இருக்கிறார் ) அந்த வேது கலம் சிறுகதையில் டாக்டர் ராஜீவ்குமார் அவருடன் கொண்டிருந்த நட்பை பற்றிச் சொல்லுகிறார். சாலை பஜாரில் செல்வி ஸ்டோரில் பாத்திரங்களுக்கு மத்தியிலும், வியாபாரப் பொருள்களுக்கு மத்தியிலும் ஒரு இலக்கியவாதியாக அவர் தெரிந்து கொண்டிருந்தார். பாத்திரங்களுக்கும் பல பெயர்கள் இருந்தன பல கதாபாத்திரங்களை புராண ,இதிகாச விஷயங்களில் இருந்து கூட சூட்டி இருக்கிறார் .அவருடைய தொடர்பில் மனிதநேயமும் நட்பும் வெளிப்படும் விதத்தினை விவரித்திருக்கிறார். பின்னால் அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.. பின்னர் சாலை பஜார் போகும் ராஜிவ் குமார் அவர் கடை இருந்த இடத்தில் பழைய சாமான்கள் விற்கும் ஒரு கடை வந்திருப்பதைப் பார்க்கிறார். பல பழைய சாமான்கள் நிரநிது கிடக்கின்றன. உள்ளே போய் பார்த்தால் அந்த வேதுகலம் பாத்திரம் இருக்கிறது ஆமாதவன் இருந்தபோது அந்த வேதுகலம் பாத்திரம் அவரை வாங்கு வாங்கு என்று சொல்லுமாம். இப்போதும் அந்த வேதுகலம் பாத்திரம் அங்கு இருக்கிறது. பெண்களின் பிரசவ காலங்களில் சுடுநீர் வைத்து மூலிகைகளை போட்டு ஒத்தடம் கொடுக்கும் வேலைக்கு அந்த வேதுகலம் பாத்திரம் பயன்படும்.. அந்த பாத்திரத்தை அவர் பார்க்கிறார். அந்த பாத்திரத்தை முன்பு ஒரு திருடன் திருடிக் கொண்டுச் சென்றிருக்கிறான் இரவில் அதை திருடினான். தங்கமாக மினுமினுத்தது. தங்கத்தில் ஒரு பாத்திரம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக அதை வைத்திருக்கிறான். ஆனால் பகலில் அது மீண்டும் ஒரு சாதாரண பாத்திரமாக மாறிவிடுகிறது. அந்த அலுமினியைப் பாத்திரத்தால் என்ன பயன் என்று அவன் பழைய சாமான்கள் விற்கும் கடைக்குப் போட்டு விடுகிறான். அது தான் இப்போது அந்த கடையில் இருப்பதை ராஜீவ்குமார் பார்க்கிறார். இந்த கதை ஆ மாதவன் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே ராஜீவ்குமார் அவர்கள் எழுதியிருக்கிறார் சாதாரண மக்களுக்கு அலுமினிய பாத்திரமாக மின்ன, அவர் எழுத்தாளர்கள் மத்தியில் தங்க பாத்திரமாக மினிங்கிக் கொண்டிருப்பதை அந்த கதை சொன்னது. ஆ மாதவனுடைய முழுமையான ஆளுமையை தெரிந்து கொள்ள இந்த கதை போதுமானதாக இருக்கிறது. அவருடைய கேரள தமிழ் ஆசிரியர் காலத்தில் வெளியீடு செய்த சிறுகதைகள் கவிதைகள் போன்றவற்றை கேரள திருவனந்தபுரம் தமிழ் சங்கம் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும். அது அவர்கள் அவருக்குச் செய்யும் சரியான அஞ்சலியாகக் கூட அமையும். தமிழின் முக்கியமான எழுத்தாளராக விளங்கிய ஆ.மாதவன் பேரில் தரப்படும் இந்த விருதை பெறுவதில் நானும் பெருமை கொள்கிறேன் 0 சுப்ர பாரதி மணியன் திருப்பூர்