சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 15 ஜனவரி, 2018

pongkal பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம்
1. பார்த்தேன்  :
Vietnam film : On the peaceful peak
Set in a traditional ceramic village in Ninh Thuan province, the people of the Cham Minority who have experienced ups an...
2. பார்த்தேன்  : Vietnam film
nostalgia for the countryside
“My name is Nham. I was born in the countryside…” The film starts by a brief introduction of the main character, leading the audiences to the scenery of the countryside in harvest time. This film was directed by the notable director Dang Nhat Minh, who had received lots of kudos from his colleagues in his famous film “Season of guava”. Mr Dang Nhat Minh, in “Nostalgia for the countryside” – adapted from a famous novel with the same name written by Nguyen Huy Thiep., continued to bring to audiences with an excellent masterpiece, portraying the picture of the rural area of Vietnam in the 1980s or so. The rural area in his film was picturesque, and peaceful, however, underlying many heart-rending stories, reflecting the plight in the countryside.

The storyline was very simple. Nham was the main character of
film the children of the village
3. பார்த்தேன்  : Vietnam film  The wild field
During the war with America in Vietnam, a young couple who have a little baby are trying to eke out a precarious existence in a small wooden hut on a marsh. One of the ways they assist in the war effort is to grow food for the north Vietnamese soldiers, fighting at some distance from their home. The Americans find out about this couple and start to search them out - particularly one American lieutenant who is single-minded in his determination to kill them. But in spite of the battles that this lieutenant causes and the presence of the war, in which even the woman will become directly involved, the real story is about the simple relationship between the man and wife, trying to care for each other with the horrors of fighting all around them. This film won a gold medal at the 1981 Moscow Film Festival.






தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.                                               திருப்பூர்  மாவட்டம்
* பிப்ரவரி  மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,

முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,

சிறப்பு விருந்தினர்கள்:எம்பரர் பொன்னுசாமி,                 ட்ரிபிளெக்ஸ் கே குப்புசாமி
தலைமை : ஏ.வி.பழனிச்சாமி

நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல்

* நூல்கள்   அறிமுகம்..:  *
உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் “ – பழ. நெடுமாறன் நூல் பற்றி   தோழர் வடிவேல்
 -   அந்தோனியா கிராம்சி – அறிமுகம் தோழர் ஓடை.துரையரசன்
* உரைகள் : படைப்பு அனுபவம்
- திசைகாட்டும் திருப்பூர் –பொதிகை சுந்தரேசன்
- தெற்கிலிருந்து ஒரு சூரியன் – திராவிட மணி
*இலக்கிய நூல்கள் அறிமுகம்: துருவன் பாலா
-அம்மாவின் கோலம் (ஜெயதேவன்)
-கண்மறைத்துணி ( சுப்ரா), கண்மறைத்துணி ( பிரதீபன் )
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : பரிசோதனை, தொக்கம்
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488




திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.                                       
*  ஜனவரி  மாதக்கூட்டம் . 7/1/18 மாலை.5 மணி..       பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர் நடைபெற்றது.

தலைமை : ஏ.வி.பழனிச்சாமி-பொருளாளர் .க.இ பெ.மன்றம்

சிறப்பு விருந்தினர்: கன்யாகுமரி கு.சிவராமன் எழுத்தாளர் சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் :;  
இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும் “ என்றார்.


* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்
திருப்பூர் பண்பாட்டு மையம் யோகி செந்தில் பேசுகையில் கல்வி அழுத்தத்தால் குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.  அரசுப்பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கான- ஆலோசனை  தனி வகுப்புகள் அவர்களின் மொழி தெரிந்த  ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்பட்டாலே அவர்கள் பள்ளிகளில் சரியாக இணைய வாய்ப்பு இருக்கிறது.பள்ளி வளாகமே அவர்களின் கல்விச்சூழலுக்கு ஆரோக்யமாய்  வழிவகுக்கும். இல்லாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் அவர்களைப் பார்ப்பது சுமுகமானதல்ல “ என்றார்.

* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில் கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல் பற்றி  தோழர் ந. சேகர் பேசினார்
* முதல் ( நாவல் ) அனுபவம் :
      கொங்கு நாவலாசிரியர் செந்தமிழ்வாணன் தன் சித்த முற்றம் நாவல்  பற்றிப் பேசினார். 
* உரைகள் : படைப்பு அனுபவம் என்பதில் எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்
மிலிட்டரி பொன்னுசாமி ( சீன டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள் நூல்)
எஸ்.ஏ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத் தொகுப்பு )
* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்
* பின்வரும் நூல்கள் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், கா.ஜோதி செய்தனர்.
- மனுஷ்யபுத்ரன் கவிதை நூல் ( அந்நிய நிலத்துப் பெண் )                   -சாருநிதேதிதா மொழிபெயர்ப்பு நூல் (ஊரின் மிக அழகான பெண் )
-பிருந்தா சாரதி கவிதை நூல் (பறவையின் நிழல் ),                             -சிங்கப்பூர் பிச்சினிக்காடு இளங்கோ கவிதைநூல் ( அங்குசம் காணா யானை)
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  வழங்கப்பட்டன. சசிகலா.,பிஆர்நடராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர்  2202488


 புதிய தலைமுறை வார இதழ் 11/1/18 இதழில் வெளிவந்துள்ளது..
 திருப்பூர் : பெருகும் புதுக்குழந்தைத் தொழிலாளர்கள்

                              சுப்ரபாரதிமணியன்

   ” நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நான் பீகாருக்குப் போனால் இந்த தமிழ் நோ யூஸ். இங்கு பீகாரி மொழி கற்றுக் கொடுங்கள் . கற்றுக் கொள்கிறேன். என்க்கு இந்தி இரண்டாம் பட்சம் . அதுகூடப் பரவாயில்லை. கற்றுக் கொள்ளலாம் . நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நானா கேட்டேன். இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள் . பனியன் கம்பனிக்குப் போய் சம்பாதிப்பேன்.. என்னைக் குழந்தைத் தொழிலாளி என்றெல்லாம் சொல்லாதீர்கள்

ஒன்பது வயது ரோஷனின் ரோஷமான குரல் இது . கல்வி கற்கும் வயது . திருப்பூருக்குஅவன் பெற்றோர் வேலைகாரணமாய்  இடம் பெயர்ந்து வந்ததால் தத்தளிக்கிறான்.ஏதாவது இணைப்புப் பள்ளியில் சேர தன்னார்வக்குழுவினர் முயலும் போது இந்தக் கேள்விகளைத்தான் கேட்கிறான்.

திருப்பூரின் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 100 குழந்தைகள் இப்படி பள்ளிக்கு வெளியே இருக்கிறார்கள். திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள்.     



போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத  தொழிலாளர்களாய் இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் இன்று பெருநகரங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் முக்கிய நகரம் திருப்பூர்



 திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

சாப்பாடு விசயத்தில் பெரிய அக்கறை கொள்வதில்லை. சப்பாத்தி( அதுவும் ஆட்டா மாவு போதும் ) , உருளைக்கிழங்கு சில கிலோக்கள் அவர்களுக்குப் போதும். தெருவோர வண்டிஉணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கான கல்வியைப் பற்றி அக்கறை கொண்டு  சேவ் என்ற தன்னார்வக்குழு திருப்பூரில் 15 இணைப்புப் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவற்றிலும் மற்றும்  தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பும் 9-14 வயதுக் குழந்தைகளையே இணைப்புப் பள்ளியில் ( ப்ரிட்ஜ் ஸ்கூல் ) சேர்க்கிறார்கள். மற்ற குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும்  5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப  அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.

நான் மேற்கு வங்காளத்திலிருந்து வந்தேன். எட்டாவது அங்கு படித்தேன். இங்கு வந்த பின் இணைப்புப் பள்ளியில் சேர்த்தார்கள். அய்ந்து முதல் எல்லா வகுப்புக் குழந்தைகளும் ஒரே வகுப்பில் இங்கு உட்கார வைக்கிறார்கள். எனக்குத் தேவை ஒன்பது வகுப்புப் பாடமெ தவிர . மீண்டும் அய்ந்தாவது முதல் ஆறாவது, ஏழாவது பழைஅய் பாடங்கள் அல்ல. ”   கப்பார்சிங் வங்காளத்தில் எட்டாவது படித்து வந்தான். அவன் பெற்றோர் இங்கு வந்ததால்  இங்கு படிப்பைத் தொடர முடியாததால் அவன் குழந்தைத் தொழிலாளியாக  பனியன் கம்பனிக்கு வேலைக்கு போகவே ஆசைப்படுகிறான். குழந்தைத் தொழிலாளர் சட்டம், கட்டாய்க்கல்விச் சட்டம் போன்றவையெல்லாம் அவனுக்குத் தெரியாது . இடம்பெயர்ந்து வந்துள்ள இந்தக்குழந்தைகளுக்கானப் பள்ளிகள் பற்றியத் திட்டங்கள் அரசிடம் இல்லை. இவர்களுக்காக இணைப்புப் பள்ளிகளை  நடத்தும் தன்னார்வக்குழுக்களிடம் போதுமான நிதி வசதி இல்லை. பனியன் முத்லாளிகளும் இதில் அக்கறை எடுப்பதில்லை.

ஆசாதேசி அஸ்ஸாமிலிருந்து வந்த குழந்தை 7 வயது.  எனக்கு என் தாய் மொழிக்கல்விதான் தேவை .  தமிழில் நான் படித்து என்ன செய்யப்போகிறேன்.என்கிறாள். அஸ்ஸாம் , பீகார்,ஒடியா , வங்காளம் என்று பல மாநிலங்களிலிருந்து வந்து இங்கு இருக்கும்  குழந்தைகள் அவரவர் தாய்மொழிக்கல்வியையே விரும்புகிறார்கள்.

 தமிழகத்திற்கு வந்து இருக்கும்போது ஒரு பகுதியாக தமிழையும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ  கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்,



 பெற்றோர்  குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை  கொள்வதில்லை. கேட்டால் 3/6  மாதங்கள் இருப்போம் பிறகு போய் விடுமோம் என்கிறார்கள். அப்படித்தான் 3/6 மாதங்கள் இருந்து விட்டு ஊருக்குப் போய் விட்டு மீண்டும் வருகிறார்கள். வாடகை பிடிக்கிற இடத்தில் முன்பணம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். மீண்டும் அங்கேயே வர... இடையில் அவர்களுக்குத் தெரிந்தவர்களே தற்காலிகமாய் அங்கு குடியேறுகிறார்கள்.  குழந்தைகளை சற்றே வளர்ந்த குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு  பெண்களும் பனியன் தொழிற்சாலைகளுக்குப் போய் விடுகிறார்கள்.

இந்தக்குழந்தைகளின் கல்வி பற்றி அரசு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள  விடுதிகளில் இருந்து பொழுது போக்குவதைப் போல் குழந்தைகளும் பொழுதைப் போக்குகிறார்கள்.

பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் அடிப்படைக்கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.ஆனால் நடைமுறை சிக்கல் அவர்களைத் தடுமாற வைக்கிறது.கையைப் பிசைந்து நிற்கிறார்கள்.

வழக்கமாய் மொழி சார்ந்தச் சிக்கல்களால் அந்நியப்பட்ட இக்குழந்தைகள் சற்றே முரட்டுத்தனம் மிக்கவர்களாய் மாறி தனிமைப்படுகிறார்கள். இணைப்புப் பள்ளியிலோ, அரசுப்பள்ளியிலோ இந்தக் குழந்தைகளுக்குப் பெயர் முரட்டுக்குழந்தைகள். கொச்சையாக சிலர் தறுதலைகள் என்கிறார்கள் இரக்கமின்றி... ஆசிரியர்களும் அவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கைவிடுகிறார்கள். மீறினால் காவல்துறைய அணுகுகிறார்கள். இக்குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.  அரசுப்பள்ளிகளிலேயே இக்குழந்தைகளுக்கான தனி வகுப்புகள் அவர்களின் மொழி தெரிந்த  ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்பட்டாலே அவர்கள் பள்ளிகளில் இணைய வாய்ப்பு இருக்கிறது.பள்ளி வளாகமே அவர்களின் கல்விச்சூழலுக்கு ஆரோக்யமாய்  வழிவகுக்கும். இல்லாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் அவர்களைப் பார்ப்பது சுமுகமானதல்ல..

  இக்குழந்தைகளுக்கான இணைப்பு மொழியாக தமிழ் நடைமுறையில் இயலாததாக உள்ளது. இந்தியும் சரியான இணைப்பு இல்லை. காரணம் அவர்கள் 5 வெவ்வேறு மாநிலகுழந்தைகள் என்பதால் .

தொண்ணூறுகளில் 1 லட்சம் வரை இருந்த திருப்பூரின் குழந்தைத் தொழிலாளர் நிலை அரசின் கட்டாய்க் கல்வி, குழந்தைத் தொழிலாள ஒழிப்புச் சட்டங்கள் பின்னலாடை ஏற்றுமதித் துறையில் நடைமுறைப்பட்டதால்  ஒழிந்து போனது. இப்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.  பள்ளிக்குப்போகாத குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டிருந்தாலும் அவர்களும் குழந்தைத் தொழிலாளர்களே.

குழந்தைகள் பாட நூல்களைக்கிழிப்பதுண்டு குறும்புத்தனத்தால். பாட நூல்களே இல்லாமல் குழந்தைகள்  கிழிபட்டுக் கொண்டிருக்கும் புதுக் குழந்தைத் தொழிலாளர்கள் என்னும்  புது அவலம் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் நிலையால் மீண்டும் உருவாகி விட்டது. ஒரு வகையில் அகதிகளின் இன்னொரு முகம் இது.



ஞாயிறு, 7 ஜனவரி, 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.     
                                  
*  ஜனவரி  மாதக்கூட்டம் . 7/1/18 மாலை.5 மணி..       பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர் நடைபெற்றது.

தலைமை : ஏ.வி.பழனிச்சாமி-பொருளாளர் .க.இ பெ.மன்றம்

சிறப்பு விருந்தினர்: கன்யாகுமரி கு.சிவராமன் எழுத்தாளர் சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் :;  
இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும் “ என்றார்.


* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்
திருப்பூர் பண்பாட்டு மையம் யோகி செந்தில் பேசுகையில் கல்வி அழுத்தத்தால் குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.  அரசுப்பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கான- ஆலோசனை  தனி வகுப்புகள் அவர்களின் மொழி தெரிந்த  ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்பட்டாலே அவர்கள் பள்ளிகளில் சரியாக இணைய வாய்ப்பு இருக்கிறது.பள்ளி வளாகமே அவர்களின் கல்விச்சூழலுக்கு ஆரோக்யமாய்  வழிவகுக்கும். இல்லாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் அவர்களைப் பார்ப்பது சுமுகமானதல்ல “ என்றார்.

* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில் கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல் பற்றி  தோழர் ந. சேகர் பேசினார்
* முதல் ( நாவல் ) அனுபவம் :
      கொங்கு நாவலாசிரியர் செந்தமிழ்வாணன் தன் சித்த முற்றம் நாவல்  பற்றிப் பேசினார். 
* உரைகள் : படைப்பு அனுபவம் என்பதில் எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்
மிலிட்டரி பொன்னுசாமி ( சீன டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள் நூல்)
எஸ்.ஏ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத் தொகுப்பு )
* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்
* பின்வரும் நூல்கள் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், கா.ஜோதி செய்தனர்.
- மனுஷ்யபுத்ரன் கவிதை நூல் ( அந்நிய நிலத்துப் பெண் )                   -சாருநிதேதிதா மொழிபெயர்ப்பு நூல் (ஊரின் மிக அழகான பெண் )
-பிருந்தா சாரதி கவிதை நூல் (பறவையின் நிழல் ),                             -சிங்கப்பூர் பிச்சினிக்காடு இளங்கோ கவிதைநூல் ( அங்குசம் காணா யானை)
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  வழங்கப்பட்டன. சசிகலா.,பிஆர்நடராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.


சனி, 6 ஜனவரி, 2018

கோவா சர்வதேச திரைப்பட விழா 2017:
------------------------------------------------------------
  சில பிணங்களும் சில சான்றிதழ்களும்: சுப்ரபாரதிமணியன்

கோவா சர்வதேச திரைப்பட விழா சர்ச்சைகளுடன் ஆரம்பித்தது. விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட எஸ்.துர்கா’ ( மலையாளம் ) நியூட்’( மராத்தி ) ஆகிய இரு திரைப்படங்களையும் நீக்கியது பிஜேபி அமைச்சரகம். ’ ..தேர்வுக்குழு, நீதிபதிகள் மூவர் தங்கள் பெறுப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து விலகிக் கொண்டார்கள். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்மிக உயரிய விருதைப்பெற்ற மலையாளப் செக்சி துர்காஎன்ற மலையாளப் திரைப்படத்தை எஸ்.துர்காஎன்று பெயரிடுமாறு சென்சார் நிர்ப்பந்தித்தது . பின்னர் தடை. .இயக்குனர் நீதிமன்றத்திற்குச் சென்று திரையிட அனுமதியை உடனே பெற்றாலும் கடைசிவரை திரையிடவில்லை. எஸ். துர்க்கா-கடவுள் பெயர், நியூட் போன்ற பெயர்களே பிஜேபியை உறுத்தி அலைக்கழித்தது..துர்க்கா படத்தை எடுத்த சனல்குமார் சசிதரனின் படம் 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இடம்பெற்றிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டப்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரையிடாதது சென்சார் போர்டு, அரசின் தலையீடுகள் பற்றிய  சர்ச்சையைக்கிளப்பியது.
விழாவின் துவக்கவிழா படமாக அமைந்த மஜித்மஜீதின் ஈரான் இயக்குனரின் Beyond clouds -படம் முழுக்க பம்பாயில் எடுக்கப்பட்டது. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் சலவைத் தொழில் செய்யும்  ஒரு பெண் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்ற ஒரு தமிழனைக் கொல்வதும், அந்தத் தமிழ்க்குடும்பத்தின் அல்லாடலும் இதில். யாருமற்ற , ஆதரவற்ற முதிய வயது பெண், இளம் பெண் , ஒரு சிறுமி உட்பட மூவரைக் கொண்டது அந்தத் தமிழ்க்குடும்பம்.கொலைசெய்த இளம் பெண்ணின் தம்பியை ஒண்டி அந்தத் தமிழ்க்குடும்பம் ஒதுங்கியதும் படத்தில் இருந்த குறைபாடுகளும் அப்படத்தை இன்னும் சர்ச்சைக்குறியதாக்கியது.மலையாளிகள் தொடர்ந்து தமிழர்களை கேவலப்படுத்தும் பாத்திரங்களை படங்களில் அமைப்பது போல் ஈரான் இயக்குனரின் அணுகுமுறையும் இப்படத்தில்  பார்க்கப்பட்டது.
இடம்பெற்ற தமிழ்ப்படம் மனுஷங்கடா இதன் இயக்குனர் அம்சன்குமார் பல ஆவணப்படங்களையும் கி.ராஜநாராயணின் கதை ஒன்றை மையமாக்க் கொண்டு ஒருத்தி என்ற திரைப்பட்த்தையும் எடுத்தவர்.  பொதுப்பாதையில் தலித் பிணத்தை எடுத்துச் செல்ல பிரச்சினையின் போது நீதிமன்றம் உத்தரவு தந்தாலும்  அதை அமலாக்க கவல்துறை அக்கறை எடுக்காமல் காவல்துறையினரே பிணத்தை எடுத்துச் சென்று உண்மை புதைத்த நிகழ்வை படமாக்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி , மருத்துவம் போன்றவற்றில் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் பிணத்தைப் புதைக்க கூட உரிமை இல்லாததை மனித உரிமைப்பிரச்சினையாக்கியிருக்கிறார் இயக்குனர். இதில் கதாநாயகனாக கோலப்பன் என்ற கதாபாத்திரத்தில் அம்சன்குமாரின் மகன் ஆனந்த் நடித்திருக்கிறார்.. சமத்துவம் இறப்பிலும் தரப்படுவதில்லை. தப்பாட்டத்திற்கும் கூட ஊர் விலக்கம் செய்யும் கொடுமை. உள்ளூர் நிலைமை தெரியாமல் நீதிமன்றம் ஆணை போட்டிருப்பதாக உள்ளூர் நிர்வாகம், காவல்துறை சொல்லிக்கொள்கிறது. நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கேட்கையில் மூன்று நாட்கள் பிணம் வீட்டில் கிடக்கிறது. பிணத்தை காவல்துறை எடுக்க முயற்சித்தபோது வீட்டினுள் பிணத்தை வைத்து கொண்டு காப்பதும், காவல்துறையினரின் அத்துமீறலைக்கண்டித்து வீட்டினுள் இருப்பவர்கள் மண்ணெணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வதும் கொடுமையாகவே உள்ளது. உள்ளூர் நிர்வாகம் இறுதியில் ஒத்துக்கொண்டு பொய் சொல்லி பிணத்தை வெளியே எடுத்து வரச்செய்து புதைத்து விடுகிறது. வீட்டில் இருப்போரையும் கைது செய்து விடுகிறது.. அடுத்த நாள் பால் ஊற்றும் சடங்கிற்கு முள்பாதையில் அலைந்து திரிந்து செல்லும் கதாநாயகன் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்று தெரியாமல் அல்லாடும் வேதனையுடன் படம் முடிகிறது.  ,அமரர் இன்குலாப்பின் மனுஷ்ங்கடா பாடல் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. சமரசம் உலாவும் இடமே என்ற பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலும் இடையில் சேர்க்கப்பட்டு பிணமான பின்னும் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தை இப்ப்டம் முன்வைத்திருக்கிறது.


கோவா திரைப்பட விழா திரைப்படங்களில் சிறந்ததாக அமைந்தபடம்   ஆன் பாடி&சோல்’. On body and soul –hungary .ஹங்கேரி இல்திகோ என்யாடியின் இத்திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் உயரிய விருதான தங்கக்கரடிவிருதைப்பெற்றது.
மாடுகளை கொன்று மாட்டுக்கறி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஆண் ஒருவரும் ஒரு பெண்ணும் தினமும் இரவு ஒரே மாதிரியான கனவுகள் காண்கிறார்கள்.மான்களாயும் காட்டில் அலைவதாயும். தங்கள் கனவுகளை பறிமாறிக்கொள்ளும் போது வாய்ப்பு கிடைக்கிறது இப்படி ஒரு அழகான கற்பனையை படமாகியுள்ளார். புதிய உளவியல் பார்வையோடு  இல்திகோ என்யாடி’. அணுகியிருக்கிறார் இந்த பெண் இயக்குனர்.

பணக்கார, சாதிய ஆதிக்க சக்திகள் அதிகார வர்க்கத்தின் துணையோடு ஒருவனை தொடர்ச்சியாக வேட்டையாடுகிறது. அவன் அதில் மீளமுடியாத அவலம் எ மேன் ஆஃப் இண்டக்ரிட்டி’.அவர்கள் கையிலெடுத்த லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை அவனும்  கையிலெடுக்கும் ஒருவனின்  வாழ்க்கையை மிக உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இரானிய திரைப்படம் எ மேன் ஆஃப் இண்டக்ரிட்டி’.இன்றைய தமிழக அரசியல் சூழலில்  வைத்துப் பார்க்கத்தகுந்த அபடம் இது.
 ‘எ பெண்டாஸ்டிக் வுமன்’. A fantastic  woman .சிலி நாட்டு திரைப்படத்தை இயக்கியவர் செபாஸ்டின் லேலியோ’.பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்ற திரைப்படம் இது.50 வயதைக்கடந்த  கோடீஸ்வர தொழிலதிபரின் காதலியாக வாழ்ந்த இளம் திருநங்கையின்வாழ்க்கையை மிக நுட்பமாக சித்தரிக்கிறது.
பிறந்த நாளை தன் திருநங்கை காதலியுடன் சிறப்பாக கொண்டாடி விட்டு, தனிமையில் உடலுறவுக்குப்பின சிரமம்  ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விடுகிறார்..கோடீஸ்வரரின் உறவினர்கள் , ‘திருநங்கையைஇறுதி அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கிறது.தடையை மீறி தன் காதலனுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தச் சென்று அவமானப்படுகிறார்.. காவல்துறை, மற்றவர்கள் பார்வையில் அவர் இன்னும் திருநங்கையாக அங்கீகரிக்கப்படாத நிலை.   அவர் எ பெண்டாஸ்டிக் வுமனாக’  விடுதியில் செய்யும் வேலையில் இருந்து பாடகியாக வேறு உருவம் எடுப்பது படத்தின் இன்னொரு சிறப்பம்சம்
திருநங்கையாக நடித்தவரின் அழகு,, இனிமையான குரல் ஆரம்பக்காட்சிகளில் அவரை ஒரு பெண்ணாகவே நம்ப வைத்தது.இப்பட விழாவில் சிறந்த பட்த்திற்கான பரிசைப் பெற்ற் பீட்ஸ் பர் மினிட் Beats per Minute –french  படமும் ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள், அவர்களின் உரிமைக்கான போராட்டத்தையும் சித்தரித்தது. திருநங்கையின் வாழ்க்கையை மிக உன்னதமாக சித்தரித்த இன்னொரு ஜப்பானிய திரைப்படம் க்ளோஸ்-நிட்’.close knit .இயக்குனர் நாகோவ் ஓகிகாமிஒரு பெண்ணாக இருப்பதால் மிக நுட்பமாகவும், விரிவாகவும்,உண்மையாகவும் திருநங்கையின் வாழ்க்கை விவரித்திருந்தார் .சிறுமியொருத்தியை   தவிக்க விட்டு விட்டு தாய் ஓடிப்போய் விடுகிறாள்.வளர்க்கிறார் தாய்மாமன்.தாய்மாமனின் காதலி ஒரு திருநங்கை.திருநங்கையிடமிருந்து, அந்தச்சிறுமிக்கு ஒரு தாயிடமிருந்து கிடைக்காத அன்பு, கிடைக்கிறது.அந்தச்சிறுமியை முறைப்படி தத்தெடுத்து வளர்க்க திட்டமிடுகையில் தாய் திரும்பி வந்து உரிமை கோருகிறாள்.அச்சிறுமியின் ஊசலாட்ட்ம் சொல்லப்பட்டிருக்கிறது பல்ரையும் கவர்ந்த ஒரு காட்சி. திருநங்கையை கேலி செய்த ஒருவரின் மீது கோப்ப்படுவாள்  சிறுமி..கிண்டல்,கேலி செய்பவர்களைப்பார்த்து கோபமே வராதா?’ என சிறுமி கேட்கையில்,‘வரும்...ஆனால் கோபத்தை முழுங்கி விட்டு வீட்டில் வந்து நிட்டிங்செய்வேன்.உல்லனில் நிட்டிங் செய்து ஆண் குறிபோல உருவாக்குவேன்.இது போல் நூற்றியெட்டு  உல்லன் ஆண் குறிகளைசெய்து தீயிட்டு கொளுத்த வேண்டும்என்பார்
த யங் கார்ல்மாக்ஸ்திரைப்படம் . The young Karl marx –germay                                 மார்க்ஸ் - ஏங்கல்ஸ் நட்பு, மார்க்ஸ் - ஜெனி காதல், ஏங்கல்ஸ் - மேரி காதல் என தொடங்கி மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட்து வரை மார்க்சின் வாழ்க்கையை அணுகி இருக்கிறது இத்திரைப்படம். ஏங்கில்ஸ் முன்ன்னிலைப்படுத்தப்படுவது, ஜென்னியின் அறிvu ஜீவித்தனமான முகமும் இதன் முக்கிய அம்சங்கள்.
பிஜேபி தற்சமயம் படேல் , அம்பேத்த்கார் ஆகியோரை கையில் டுத்துக் கொண்டு செயல் படும் போது  அடுத்து கவிஞர் ரவிந்திரநாத் தாகூரையும் எடுத்துக் கொள்ளா போகிறதோ என்ற சந்தேகத்தை சிலருக்கு  விழாவின் இறுதியில் தாகூர் பற்றிய முக்கியப்படத்தை  திரையிட்டதால் ஏற்பட்டது. Thinking of him –argentina .காரல் மார்க்ஸ் படத்தில்   குறுக்கிட அது முயலவில்லை. அமிதாபச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தந்ததும் ஒரு பெரிய தூண்டில் முயற்சியாவே பார்க்கப்பட்டது. அஞ்சலி திரைப்படங்களில் ஜெயலலிதாவின் முக்கியத்துத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது, தமிழ்ரசிகர்கள் விசிலடித்து வரவேற்று படத்தைப் பார்த்தார்கள். இவ்விழாவில் கேரளா பிரதிநிதிகள் அதிகம் கலந்து கொண்டார்கள். அடுத்தபடியாக தமிழர்கள்.பக்கத்து மாநிலத்து மாராத்திப்படங்கள் அதிகம் திரையிடப்பட்டாலும் அவர்களின் பிரதிநிதிப்பங்களிப்பு குறைவாகவே இருந்தது..அதிக அளவில் ரஷ்யன், ஈரான், கனடா  படங்களும் இடம்பெற்றன.
I dream in another language –netherland அழிந்த ஒரு மொழியை பேசுபவர்களில் இரண்டு பேர் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களிடம் அந்த மொழி பற்றிய பதிவுகளைச் செய்ய செல்லுமொரு இளைஞனின் காட்டு வாழ்க்கை அப்படத்தில் .அந்த இருவரும் சிறு வயதில் நண்பர்கள். ஓரின சேர்க்கையில் நணபர்கள். ஆனால் அதில் ஒருவன் காதல் செய்து திருமணம் செய்து கொள்வதால் ஏமாற்றப்படுவதால் அந்தப்பகை கடைசிகாலம் வரை  தொடர்கிறது.
 இந்தி நடிகர் சாருக்கானின் அமர்க்களமான துவக்கவிழாவின் உரை            பலரையும் கவர்ந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்திய சமூகத்தில்  நிலவும் கதை சொல்லும் முறை திரைப்படங்களிலும் தொடர்கிறது.குடும்ப, புராண , வாழ்வியல் கதைகளைப் பகிர்ந்து கொள்வதில் திரைப்படங்களின் பங்கை இளைய தலைமுறையினரும் அறிந்த்திருக்கிறார்கள்.கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் அனுபவம் மொழிகள், நாடுகளைக் கடந்தது. இந்த மாயாஜாலத்தை இளை தலைமுறையினர் வாழக்கையை  பகிர்ந்து கொள்வதில் முகியத்துவம் பெருகிறது “  என்று அவர் குறிப்பிட்டதை இவ்விழாவின் படங்கள் நிரூபித்தன.

.. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003



 திருப்பூர் : பெருகும் புதுக்குழந்தைத் தொழிலாளர்கள்

திங்கள், 1 ஜனவரி, 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.                                               திருப்பூர்  மாவட்டம்

* ஜனவரி  மாதக்கூட்டம் .7/1/18 மாலை.5 மணி..        

      பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்
முன்னிலை:  கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,
சிறப்பு விருந்தினர்: திரு. துரைசாமி ( புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம்)
தலைமை : ஏ.வி.பழனிச்சாமி


* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில் கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல் பற்றி  தோழர் ந. சேகர்
* உரைகள் : படைப்பு அனுபவம்
மிலிட்டரி பொன்னுசாமி ( சீன டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள் நூல்)
சு.வெங்குட்டுவன் ( இசையோடு வாழ்பவன் –கவிதை நூல் )
எஸ்.ஏ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத் தொகுப்பு )
ஆனந்தகுமார் ( முதல் தமிழகம் – குமரிக்கண்டம் நூல் ஆய்வு)
* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- உரைகள்
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்


* நூல்கள் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், கா.ஜோதி
- மனுஷ்யபுத்ரன் கவிதை நூல் ( அந்நிய நிலத்துப் பெண் )                   -சாருநிதேதிதா மொழிபெயர்ப்பு நூல் (ஊரின் மிக அழகான பெண் )
-பிருந்தா சாரதி கவிதை நூல் (பறவையின் நிழல் ),                             -சிங்கப்பூர் பிச்சினிக்காடு இளங்கோ கவிதைநூல் ( அங்குசம் காணா யானை)
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488



கனவு இலக்கிய வட்டம் நூல்கள் அறிமுகம்

-----------------------------------------------------
கனவு இலக்கிய வட்டம் “ டிசம்பர்  மாதக் கூட்டம்  பாண்டியன்நகர் அம்மா உணவகம் அருகிலான சக்தி மகளிர் அறக்கட்டளை அலுவலகத்தில் ஞாயிறு அன்று மாலை  நடைபெற்றது. செல்வம்  தலைமை  தாங்கினார். பாட்டாளியின் பார்வையில்..மார்க்சீய மெஞ்ஞானம் “  ஜார்ஜார்ஜ்பொலிட்சரின் தத்துவ நூல் பற்றிய uuஉரை ஆற்றினார் கவிஞர் ஜோதி.
போருக்குப் பின்னதான ஈழமக்கள் வாழ்க்கை.: .இலங்கைப் பயணம் குறித்த தன் அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார் சுப்ரபாரதிமணியன்  கூட்டத்தில் நூல் அறிமுகத்தில் : ஈழ எழுத்தாளர்களின் நூல்கள் இடம்பெற்றன.1. மேமன்கவியின் கவிதைத் தொகுப்பு, 2.ஜீவகுமாரனின் நாவல் 3. கே எஸ் சிவகுமாரனின் திரைப்படக்கட்டுரைகள் இடம்பெற்றன. கல்வியாளர் ருக்மணி, கருப்பசாமி, நடராஜன், தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகி மருத்துவர்  முத்துசாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்
செய்தி : ஜோதி .கா ( கனவு இலக்கிய வட்டத்திற்காக )
சுப்ரபாரதிமணியன்:
இலங்கைப் பயணம் சில குறிப்புகள்

சுப்ரபாரதிமணியனின் முறிவு நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் முறிவு நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர்.
- இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக் ஜீவா முதல் மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.
இலங்கையின் கடற்கரையும் சுற்றுச்சூழலும் இயறகை வளமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன-
- யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்
- துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது
- துரோகத்தின் சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன
துரோகத்தின் சாட்சியம் : 1