சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருவள்ளுவர் தின விழா நிகழ்ச்சி: மக்கள் மாமன்ற நூலகத்தில் என் சாயத்திரை நாவல் எழுப்பிய வளர்ச்சியா சுற்றுச்சூழலா சார்ந்த கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் இருப்பதை பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரும் நிட்மா அமைப்பின் தலைவருமான அகில் ரத்தினசாமி அவர்களிடம் முன் வைத்தேன் * நொய்யல் நதியை சாயக்கழிவுகளால் நாங்கள் கெடுத்ததை கடந்த 5 ஆண்டுகளாக சரி செய்து வருகிறோம். 2023 ல் நொய்யல் மீண்டும் ஜீவநதி யாக மாறும்.. ஏற்றுமதி யாளர்கள் சங்க த் தலைவர் களில் ஒருவரான அகில் ரத்தின சாமி ௨ரை.இன்று மக்கள் மாமன்ற நூலகத்தில். திருவள்ளூர் தின நாள். தமிழன் னை சிலைக்கு பெரும் நிதியுதவி வழங்கினார் * சுப்ரபாரதிமணியன் 1.பிறந்த ஊர் செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம் 2 பிறந்த ஆண்டு, தேதி : 25/10/1955 3 பெற்றோர் பெயர் “ : பழனிச்சாமி ,பழனியம்மாள் ( நெசவாளர்குடும்பம் ) 4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள். ஆரம்பக்கல்வி : செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம் உயர்நிலைப்பள்ளி: திருப்பூர் பி எஸ் சி கணிதம் : திருப்பூர் அரசு கலைக்கல்லூரி எம் எஸ் சி கணிதம் : கோவை பூ சா கோ கலைகல்லூரி 5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்” சுகந்தி செப்டம்பர்11 , 1984 சுகந்தி மறைவிற்குப் பின் இரண்டாம் திருமணம் : கிரிஜா 6.குழந்தைகள் பெயர்: ஸ்ரீமுகி, சுபமுகி 7 தொழில்: தொலைத்தொடர்புத்துறை ( 2014ல் ஓய்வு) 30 ஆண்டுகள் பணி 8.முதல் படைப்பு. ” திருப்பூர் விழிப்பு இடது சாரி இதழ் “1977 சிறுகதை சுதந்திர வீதிகள் ( இந்தியாவின் அவசரகால கட்டம் சார்ந்த சிறுகதை ) 9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு - 1977 10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்- ஜெயகாந்தன், கிரா, ஜெயந்தன் 11.விருதுகள் : பட்டியல் இணைப்பு 12. நூல்பட்டியல் - [முடிந்தால்] இணைப்பு 13 கலை இலக்கியப் பெருமன்றம். உறுப்பினர் அரசியல் செயல்பாடுகள் இல்லை. 14: கனவு இலக்கிய இதழ் 36ம் ஆண்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது ( ஹைதராபாத்தில் ஆரம்பித்த இதழ் ) 14 உங்கள் இணையதளம் பற்றி,. அதன் வெளியீட்டு நாள் www.rpsubrabharathimanian.blogspot.com 2000
Subrabharathi Manian Notes on Tiruppur Book fair சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் 1 சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் புத்தகக்கண்காட்சியில் இருக்குமா என்று உள்ளூர் எழுத்தாளர் ஒருவர் கேட்டார். இலக்கிய நூல்கள் என்றால் கொஞ்சம் தெரியும். மற்ற நூல்கள் பற்றித் தெரியாது புத்தகக்கண்காட்சியில் வந்து தேடுங்கள் என்றேன். வந்தவர் பதட்டத்துடன் இருந்தார். புத்தகம் தேடவில்லை.மெல்ல பேசினார் “ ஒரு கோடி பணம் வரப்போகிறது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சமூகக் காரியங்களுக்காக தருகிறது . ஆனால் இடையில் உள்ள புரோக்கர் 40 சதம் அதில் எடுத்துக் கொள்வாராம். இலக்கிய அமைப்பு பேரில் தான் தருவார்களாம்.பதட்டமாக உள்ளது “ என்றார் என் பதில் : ஒரு கோடி ரூபாய் பெரிய தொகை உங்கள் வங்கிக்கணக்கில் திடீரென வந்தவுடன் காவல்துறைக்கு தகவல் வங்கியிலிருந்து போய் விடும் . அது மதமாற்றத்திற்கு பயன்படப் போகிறாதா. கலவரம் செய்ய உபயோகப்படுத்தப் போகிறார்களா. எந்த மதத்துக்காரன் அதைத் தருகிறான். புரோக்கர் எந்த மதத்துக்காரர் என்பதை உடனே காவல்துறை உங்களைப்பிடித்து தெரிந்து கொள்வார்கள் “ என்றேன் பத்து நாட்களாகி விட்டது . பணம் வந்து காவல்துறைக்கண்காணிப்பில் அவர் இருக்கிறாரா . தெரியவில்லை. கவிஞர் கனவு என்னானது தெரியவில்லை. * சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் 2 கொஞ்சம் புரட்ட , வாசிக்க சில புதிய நூல்கள் கிடைப்பதால் நேரம் கிடைக்கும்போது 7 கி மீ தள்ளியிருக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் போகிறேன். உயர்நிலைப்பள்ளியில் ஆன்லைன் வகுப்பால் பாதி சம்பளமே கிட்டும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் ஓரிரு நாட்கள் வந்து வேடிக்கை பார்த்தார். சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் அவரும் கேட்டார். எதுவும் படிக்க பொறுமை இல்லை என்று பரபரப்பாகவே இருந்தார். தியானம் செய்யுங்கள் .அல்லது மன நல ஆலோசகரைப் பாருங்கள் என்றேன் . இங்கும் அது சம்பந்தமாக சில நூல்கள் உள்ளன என்றேன். காசு கொடுத்து வாங்கணுமே என்றார். பிறகு காணவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் ஆரம்பித்ததில் வேதனை அவருக்கு தினம் ஒரு புத்தகம் பள்ளி மறுதிறப்பு சுப்ரபாரதிமணியன் செங்கை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகம். யுரேகா வெளியீடு. நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன் தொலைபேசித் துறையில் பணிபுரியும் திருப்பூர் வாசி. அந்நகரின் பிரச்சனைகளை தன் படைப்புகளின் வழியாக பதிவு செய்து வருபவர். இவருடைய நாவல் சாயத்திரை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பள்ளி மறு திறப்பு, பிறந்த தினம் ஆகிய இரண்டு கதைகளிலும் குழந்தைகளின் மன உலகை சிறப்பாக சொல்லியிருக்கிறார். கல்வி, அன்பு, கருணை இம்மூன்றும் குழந்தைப் பிராயத்தில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நற்பேறுகள். அவற்றை இந்த இரு கதைகளும் எளிய நடையில் பேசுகின்றன . விடுமுறை நாளில் வேலைக்குச் செல்லும் குழந்தை தொழிலாளியின் மன உணர்வை பிரதிபலிக்கும் கதை பள்ளி மறு திறப்பு. குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளின் மன உணர்வை பிரதிபலிப்பது பிறந்தநாள் கதை. இத்தொகுப்பில் உள்ள இந்த இரண்டு கதைகளிலும் குழந்தைகளின் மன உலகில் ஆசிரியர் ஆழ்ந்து சஞ்சரித்து இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது. தோழமையுடன் சீனி.சந்திரசேகரன் ReplyForward இனிய நந்தவனம் இதழ் 25ம் ஆண்டு மலர் வெளியீடும் அறிமுகமும் 26/1/22 :மக்கள் மாமன்ற குடியரசு தின நிகழ்வில்.. - அறிமுகம் * ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணியனின் அந்நியர்கள் நாவல் அறிமுகம் - பாராட்டு * சார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்குப் பாராட்டுரை... பொன் சண்முக சுந்தரம் தலைமை. சி. சுப்ரமணியம் மற்றும் மாமன்ற மாத இதழ் வெளியீடு.. கவிதை கள்.. வாசிப்பு.. * இனிய நந்தவன்ம் இதழ் 25ம் ஆண்டு மலர் வெளியீடும் அறிமுகமும் வருக. மதியம் 3_6 மணி. மக்கள் மாமன்ற நூலகம்.. திருப்பூர் நலமா. நாய்களைப்பற்றி எழுத்தாத எழுத்தாளர் இல்லை. உங்கள் கதை சுவாரஸ்யம் கனவு இப்போதுதான் அச்சுக்கு போயுள்ளது அடுத்த இதழ் வர 3/4 மாதங்களாகும் அந்த சமய்த்தில் இதைப்பயன்படுத்தலாமா. அல்லது 3 மாதங்கள் கழித்து வாங்கிக்கொள்ளட்டுமா புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் : கணவன்களுடன் வரும் பெண்மணிகள் தரும் ”அலப்பறை” தாங்க முடியாது. வீட்லதா குப்பையாக் கெடக்குதே. மறுபடியும் குப்பை சேக்கணுமா. போலாம் என்று நச்சரிப்பார்கள். ஜவுளிக்கடைகளில் கணவன்மார்கள் காட்டும் பொறுமையையும் நிதானத்தையும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதேயில்லை புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் : குழந்தைகளுடன் வரும் பெண்மணிகள் பொறுப்பானவர்கள். குழந்தைகளின் சிபாரிசை சரியாக கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். நிதானமாய் எது வேண்டும் என்று கேட்டு வாங்கித்தருவார்கள். தாங்களும் ஏதாவது வாங்கி குழந்தைகளிடம் காட்டி பெருமைப் படுவார்கள். ( அவர்கள் வாங்குவது சமையல் குறிப்புகள், கோலப்புத்தகங்கள் என்றாலும் ) புத்தகக் கண்காட்சியில் வசதியானவர்.. கேளிக்கை பொருட்டு நிறைய செலவு செய்வார். இவரின் இலக்கிய ஆர்வம் அறிந்த சிறுபத்திரிக்கையாளர் ஒருவர் தன் இலக்கிய இதழுக்கு திருப்பூரில் களம் அமைத்துக் கொடுப்பார் என்று மாதம் 10 பிரதிகளை 3 ஆண்டுகள் தொடர்ந்து அனுப்பினார். வசதியானவர் இலவசப்பிரதிகளாகத் தந்தார். நான் கேட்டபோது கூட காலணா இதுவரை அப்பத்திரிக்கைக் தரவில்லை என்றார். புத்தகக் கண்காட்சியில் ஒரு ரவுண்ட் பார்த்து விட்டு வந்தவர் வெளிநாட்டு நூலகங்களில், புத்தகக்கண்காட்சிகளில் இலவசப்புத்தகங்கள் என்று ஒரு ரேக் இருக்கும், அதெல்லாம் இங்கில்லையா என்றார். அடுத்த ரவுண்ட் அடிக்க நேரமில்லை அவருக்கு.ஏனெனில் அடுத்த ரவுண்ட் மது பானத்திற்கானது. அதற்கு நேரமாகி விட்டது அவருக்கு புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :2 முஸ்லீம் பெண் ஒருவர் இலக்கியம், பொது நூல்கள் என்று 3000 ரூபாய்க்கு புத்தகம் எடுத்தார்.பைப்பையிலிருந்து பணம் தேடி எடுத்தார். பக்கமிருந்த 15 வயது மகனிடம் மேல் பாக்கெட்டிலிருந்து இருக்கும்பணத்தைத் தேடி எடுத்து 50 ரூபாயை பாக்கெட்டில் வைத்து விட்டு 3000 ரூ சேகரித்துச் செலுத்தினார் . என் நைரா நாவல் உடப்ட என் சிலபுத்தகங்களும் வாங்கினார். நைரா முஸ்லீம் பெயரல்ல. நைஜீரியன் கரன்சி என்றேன்.சிரித்தார் பக்கமிருந்த நண்பர் முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்று பொதுப்புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது என்றார். நான் சமீபத்தில் சார்ஜா புத்தகக் கண்காட்சியில் கண்ட முஸ்லீம்சமூக மக்கள் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போனதைச் சொன்னேன் புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :3 மத்திய வயதுப்பெண் மலர்வைத்யம், சமையல் குறிப்புகள் என்று இரு நூல்கள் வாங்கினார். இதிலே இருக்கற மலர்களெ தேடிப்புடிபீங்களா அதெல்லாம் இல்லெ. படிச்சுப்பாக்க சமையல் குறிப்பு புத்தகம் பயன்படும். வீட்லே எல்லா சமையல் பொருட்களும் இருக்கும். இருக்கும். பனியன் கம்பனி வேலை. சமைக்கக் கூட நேரமில்லெ. இதுவும் படிச்சுப்பாக்கத்தான் புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :6 மகிழ்வுந்து.. . நாயை உள்ளேயே விட்டு பூட்டி விட்டு வந்த குட்டைப்பாவாடை இளம்பெண்மணி ” ஏன் இந்த ஓர வஞ்சனை. தமிழுக்கு இவ்வளவு பெரிய இடம். ஆங்கிலநூல்களுக்கு சிறு பகுதியா” என்றார். நாயுடன் கூடிய மங்கை அல்லது மங்கையுடன் கூடிய நாய் என்றமொழிபெயர்ப்பு ஞாபகம் வருதா என்றார் நண்பர் . அதுதான் A lady witha a dog புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :5 என் சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்யும் பெண்மணி 3 ஆண்டுகளைக்கடந்தும் இன்னும் ஆய்வை நிறைவு செய்யவில்லை. என் சுற்றுச்சூழல் நாவல்கள் ஒவ்வொன்றின் கதை சுருக்கம் தனித்தனியாகத் தேவை . எழுதித்தாருங்கள் என்றார். ஓடி வந்து விட்டேன் புத்தகக் கண்காட்சியில் சுவருக்குள் சித்திரங்கள், சுவரில்லா சித்திரங்கள் ..தியாகு எழுதின இதெல்லாம் இருக்கா. அவர் எழுத்து உங்களுக்கு எப்பிடிப் பிடிக்கும் அவரும் என்னை மாதிரிதா அரசியலா. தமிழ் தேச அரசியலா இல்லெ.. முன்னாள் கைதி.. மக்கள் மாமன்ற இதழுக்கு .. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு.... . சென்னையில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் . . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது
பேட்டி: பிரண்ட் லைன் Subrabharathi Manian. His writings espouse the cause of the poor. “THE greatest tragedy of Tirupur, the erstwhile bastion of the leftist and trade union movements in western Tamil Nadu, is that the class consciousness of the workers, more particularly the migrant labour in the garment industry, has been blunted and they are being pushed into the drudgery of a monotonous, dull and mechanical life,” says Subrabharathi Manian, a member of the Sahitya Akademi Advisory Board, who in his writings espouses the cause of the poor and the marginalised, particularly the migrant labourers in the garment industry. Talking to Frontline, he expressed anguish at reports on suicides and attempts to commit suicide by migrant workers and their family members. “Many migrant workers in the garment industry, who alienate themselves from the trade unions in a bid to earn more through hard work, ultimately slip into depression the moment they realise that they have been drawn into an illusory world of prosperity,” he said. According to him, the worst hit among the migrants are single parents and their children. He recalled how he, along with his parents, migrated to Tirupur five decades ago, when he was hardly 10 years old, from his native Segadanthaazhi village. For hundreds of families in Segadanthaazhi and a few other villages in the area, Tirupur's fledgling hosiery industry offered hope . Manian learnt a lot about the travails of migrant labourers when he was an employee of the Telecom Department in Hyderabad for eight years, until 1993. The labourers, most of them from southern Tamil Nadu looking for work in Andhra Pradesh, inspired his first novel, Matrum Silar (And a Few Others), in 1989. Issues such as inter-State river water disputes, which posed a formidable challenge to national integration, provoked him to pen Sudu Manal (Hot Sand) in 1992. When he returned to Tirupur in 1994 he was stunned by the growth of the knitwear industry, which had started earning foreign exchange to the tune of Rs.10,000 crore. But soon he was able to see the other side of the “Dollar City”, with 30,000 children employed in the hosiery industry. Beside, the release of untreated effluents into the Noyyal river, the lifeline of Tirupur, by dyeing units added to the agony of the farming community. As a socially conscious writer committed to socialism and democracy, Manian wielded his pen against the evil practice of child labour and the pollution of the Noyyal. His novel Saayathirai (The Coloured Curtain), published in 1994, described the devastating effect of effluents from dyeing factories on the cultural and economic life of the people. Translated into English, Hindi, Malayalam and Kannada, the novel won the appreciation of the literary world. A recipient of the “katha” award for the ‘best short story writer' and the Tamil Nadu government's award for ‘best novel', he has authored 30 works, including seven novels, 13 short story collections and a travelogue. It was a sad reality that activists of different political parties in Tirupur were prepared to discuss everything under the sun but carefully skirted issues such as child labour, labour rights and protection of the environment. Marxism helped him to see things from a different perspective. Along with a few NGOs, he and his friends in the progressive literary circles launched an awareness campaign on child labour and environment protection. However, he made it clear that they were not opposed to industrial development or science and technology. They were disheartened by the lukewarm response from the people and the industry but saw light at the end of the tunnel in the form of pressure on the exporters from buyers. This forced the exporters to adopt mechanisms such as social audits, including ISO 9000 and Social Accountability 8000, to ensure labour standards and eco-friendly garments, he said. The media forced the government to intervene, he added. Though child labour was no longer in vogue in the big export units, it was still practised at the sub-contract level and by some of the units producing knitwear for the domestic market, said Manian. Exporters now responded to issues relating to pollution, and corporate social responsibility and fair trade practices were among the issues that were widely discussed in the town, said Manian. Large-scale influx of migrant workers added a new dimension to Tirupur's problems. These first-generation workers are mostly single men or women and they tire themselves out when still young. Manian said government agencies, exporters, trade unions, political parties and intellectuals should put their heads together to evolve a strategy to ensure that the garment labourers were treated humanely. Writers had a key role to play in this regard, he concluded. S. Dorairaj நன்றி
சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார் ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன் ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது குறிப்பிட்டார். சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் மேலும் பேசுகையில் இப்படிக்குறிப்பிட்டார்: ” ஓவியம் என்பது காட்சிப்படுத்துதல் குறிப்பாக ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு வார்த்தையை நாம் எழுத்தாகவும் அல்லது ஒலி வடிவிலும் கேட்பது அதை நம்மால் காட்சியாக சிந்திக்க முடியாது. ஆனால் ஆயிரம் வார்த்தைகளை எழுதி ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை ஐந்தே கோடுகளில் வெளிப்படுத்தி விட முடியும். குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெறும் அனைவரும் வலது முளையை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மதிப்பெண்களில் சிறந்து விளங்குகிறார்கள் தவிர படைப்பாற்றலையும் ஒளிர்வதில்லை. அதே சமயத்தில் வலது மூளையை பயன்படுத்தி அதிக அளவில் சிந்திப்பவர்கள் ஓவியம் இசை சிற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணமாக நமக்கு ஒரு வார்த்தையை அல்லது ஒரு வாக்கியத்தை புரிந்துகொள்வதற்கு அந்த வாக்கியத்தோடு இணைந்த படங்கள் உதவி செய்வது போல் வலது மூளை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் காட்சிப் படுத்திக் கொள்கிறார்கள் அந்த காட்சிப்படுத்துதல் என்பது அவர்கள் மூளைக்குள் ஒரு திரைப்படம் ஓடுவது போல பதிந்து விடுவதால் அதை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் ஒரு படைப்பாற்றல் மிக்க வெளிப்பாடாக வெளிப்படுத்துகிறார்கள்.உதாரணமாக வளது முளையை கண்டறிய எளிமையான ஒரு பயிற்சியை ஒரு வாரத்திற்கு ஏழு நாள் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றால் அதற்கான விடையை 2 என்கிற என்னை 7 என்கிற என்னை பெருக்கி விடை காண்பவர்கள் பொதுவாக வழக்கமான இடது மூளையைப் பயன்படுத்துங்கள் என்று கொள்ளலாம். ஆனால் ஏழு கூட்டல் 7 என்கிற வகையில் பதில் சொல்லக் கூடிய மனிதர்கள் படைப்பாற்றல் மிக்க வலது மூளை பயன்படுத்தும் மேதைகள். இவர்கள்தான் ஓவியம் சிற்பம் இசை விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஆகவும் மாற்றி யோசிக்கும் திறன் மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் வகுப்பறையில் இவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுபவர்களாக இருப்பதால் இவர்கள் பள்ளி அளவில் புறக்கணிக்கப்பட்டு நல்ல கலைஞர்களாக வரவேண்டிய ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது. படைப்பாற்றல் மிக்க இந்த வகை மனிதர்கள் 70 சதவீத மதிப்பெண்களை தாண்டுவதில்லை. ஆனால் இடது மூளையை பயன்படுத்தும் மனிதர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றாலும்கூட வாழ்க்கையில் சிறு தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத மனிதர்களாக இருக்கிறார்கள். ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள் படிப்பில் தடுமாறுகிறாற மனிதர்கள் மிகச்சிறந்த ஆளுமைகளாக கலைஞர்களாக விஞ்ஞானிகளாக இன்றளவும் வாழும் பல மனிதர்களை பல ஆளுமைகளை நம்மால் பட்டியலிட முடியும் இன்று பத்மபூஷண் விருது பெறுகி சுந்தர் பிச்சை முதல் ஆகச் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட காலம் சென்ற கி ராஜநாராயணன் போன்றவர்களெல்லாம் எட்டாம் வகுப்பை கூட தாண்டுவதற்கு சிரமப்பட்டு இருந்தாலும்கூட படைப்பாற்றலில் உலகமே வியக்கும் அளவிற்கு எழுத்துத் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் சாதித்த வரலாறு இதற்கு சான்றாகும் எனவே கண்களால் படிப்பது காதுகளால் படிப்பது போன்ற படைப்பாற்றலை நமது ஐம்புலன்களையும் சமநிலையில் பயன்படுத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகம் புகைப்படம் என எல்லாத் துறையிலும் இந்த பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டால் இப்பொழுது கூட நம்மால் மிகப்பெரிய அளவில் கதை கவிதை கட்டுரைகளை உலக அளவில் எழுதி புகழ் பெற முடியும். அதற்கு வயதும் ஒரு தடை அல்ல. சார்ஜா புத்தக கண்காட்சியின் புக்கிஷ் விருது பெற்றவரும் அந்நியர்கள் என்ற நாவலை படைத்ததற்காக ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவலாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன் அவர்களை பாராட்டும் இந்த நிகழ்வில் எனக்கும் ஓவியம் குறித்து எனது பகிர்வை இங்கே பதிவு செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்” நிகழ்ச்சியில் மக்கள் மாமன்றத்தைச்சார்ந்த நிர்வாகிகள் சத்ருக்கன், சிவகுமார்பிரபு மற்றும் பலர் பங்கு பெற்றனர் . கவிதை வாசிப்பில் து சோ பிரபாகர், அருணாசலம், நாதன் ரகுநாதன், ஒற்றைக்கை மாயாவி மனோகர் உட்பட பலர் பங்குபெற்றனர். சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்டறை .... இகவிதை2022 கவிதை2022 தொகுப்புக்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது
ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன் ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது குறிப்பிட்டார். சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் மேலும் பேசுகையில் இப்படிக்குறிப்பிட்டார்: ” ஓவியம் என்பது காட்சிப்படுத்துதல் குறிப்பாக ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு வார்த்தையை நாம் எழுத்தாகவும் அல்லது ஒலி வடிவிலும் கேட்பது அதை நம்மால் காட்சியாக சிந்திக்க முடியாது. ஆனால் ஆயிரம் வார்த்தைகளை எழுதி ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை ஐந்தே கோடுகளில் வெளிப்படுத்தி விட முடியும். குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெறும் அனைவரும் வலது முளையை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மதிப்பெண்களில் சிறந்து விளங்குகிறார்கள் தவிர படைப்பாற்றலையும் ஒளிர்வதில்லை. அதே சமயத்தில் வலது மூளையை பயன்படுத்தி அதிக அளவில் சிந்திப்பவர்கள் ஓவியம் இசை சிற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணமாக நமக்கு ஒரு வார்த்தையை அல்லது ஒரு வாக்கியத்தை புரிந்துகொள்வதற்கு அந்த வாக்கியத்தோடு இணைந்த படங்கள் உதவி செய்வது போல் வலது மூளை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் காட்சிப் படுத்திக் கொள்கிறார்கள் அந்த காட்சிப்படுத்துதல் என்பது அவர்கள் மூளைக்குள் ஒரு திரைப்படம் ஓடுவது போல பதிந்து விடுவதால் அதை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் ஒரு படைப்பாற்றல் மிக்க வெளிப்பாடாக வெளிப்படுத்துகிறார்கள்.உதாரணமாக வளது முளையை கண்டறிய எளிமையான ஒரு பயிற்சியை ஒரு வாரத்திற்கு ஏழு நாள் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றால் அதற்கான விடையை 2 என்கிற என்னை 7 என்கிற என்னை பெருக்கி விடை காண்பவர்கள் பொதுவாக வழக்கமான இடது மூளையைப் பயன்படுத்துங்கள் என்று கொள்ளலாம். ஆனால் ஏழு கூட்டல் 7 என்கிற வகையில் பதில் சொல்லக் கூடிய மனிதர்கள் படைப்பாற்றல் மிக்க வலது மூளை பயன்படுத்தும் மேதைகள். இவர்கள்தான் ஓவியம் சிற்பம் இசை விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஆகவும் மாற்றி யோசிக்கும் திறன் மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் வகுப்பறையில் இவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுபவர்களாக இருப்பதால் இவர்கள் பள்ளி அளவில் புறக்கணிக்கப்பட்டு நல்ல கலைஞர்களாக வரவேண்டிய ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது. படைப்பாற்றல் மிக்க இந்த வகை மனிதர்கள் 70 சதவீத மதிப்பெண்களை தாண்டுவதில்லை. ஆனால் இடது மூளையை பயன்படுத்தும் மனிதர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றாலும்கூட வாழ்க்கையில் சிறு தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத மனிதர்களாக இருக்கிறார்கள். ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள் படிப்பில் தடுமாறுகிறாற மனிதர்கள் மிகச்சிறந்த ஆளுமைகளாக கலைஞர்களாக விஞ்ஞானிகளாக இன்றளவும் வாழும் பல மனிதர்களை பல ஆளுமைகளை நம்மால் பட்டியலிட முடியும் இன்று பத்மபூஷண் விருது பெறுகி சுந்தர் பிச்சை முதல் ஆகச் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட காலம் சென்ற கி ராஜநாராயணன் போன்றவர்களெல்லாம் எட்டாம் வகுப்பை கூட தாண்டுவதற்கு சிரமப்பட்டு இருந்தாலும்கூட படைப்பாற்றலில் உலகமே வியக்கும் அளவிற்கு எழுத்துத் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் சாதித்த வரலாறு இதற்கு சான்றாகும் எனவே கண்களால் படிப்பது காதுகளால் படிப்பது போன்ற படைப்பாற்றலை நமது ஐம்புலன்களையும் சமநிலையில் பயன்படுத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகம் புகைப்படம் என எல்லாத் துறையிலும் இந்த பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டால் இப்பொழுது கூட நம்மால் மிகப்பெரிய அளவில் கதை கவிதை கட்டுரைகளை உலக அளவில் எழுதி புகழ் பெற முடியும். அதற்கு வயதும் ஒரு தடை அல்ல. சார்ஜா புத்தக கண்காட்சியின் புக்கிஷ் விருது பெற்றவரும் அந்நியர்கள் என்ற நாவலை படைத்ததற்காக ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவலாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன் அவர்களை பாராட்டும் இந்த நிகழ்வில் எனக்கும் ஓவியம் குறித்து எனது பகிர்வை இங்கே பதிவு செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்” நிகழ்ச்சியில் மக்கள் மாமன்றத்தைச்சார்ந்த நிர்வாகிகள் சத்ருக்கன், சிவகுமார்பிரபு மற்றும் பலர் பங்கு பெற்றனர் . கவிதை வாசிப்பில் து சோ பிரபாகர், அருணாசலம், நாதன் ரகுநாதன், ஒற்றைக்கை மாயாவி மனோகர் உட்பட பலர் பங்குபெற்றனர். சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்டறை .... இகவிதை2022 கவிதை2022 தொகுப்புக்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது
*14/40 கொண்டை ஊசி வளைவு : சுப்ரபாரதிமணியன் நாவல் உயிர்மை பதிப்பகம் ரூ 150 அனுபங்களால் நிறைந்திருக்கிறது ஆண் பெண் ௨றவு சார்ந்த காதல் , காமம், .. தேடல் ஆகியவற்றின் விதவிதமான ரூபங்களாய் கதாபாத்திரங்களின் அனுபங்களால் நிறைந்திருக்கிறது இந்நாவல் சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும் , 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ்
புதுச்சேரிக்கார்கள் : தொகுப்பு நூல் Rs 150 kaavya publications Chennai புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய பல கட்டுரைகளைக்கண்டபோது அவற்றை ஒரு தொகுப்பாக்க எண்ணம் வந்தது..அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் என்று சில படைப்புகளையும் சேர்த்துக் கொண்டேன் சுப்ரபாரதிமணியன் 19 நாவல்கள் உட்பட் 80 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன். கனவு என்ற இலக்கிய இதழை 36 ஆண்டுகளாக நடத்தி வருபவர். சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும் , 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய பல கட்டுரைகளைக்கண்டபோது அவற்றை ஒரு தொகுப்பாக்க எண்ணம் வந்தது..அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் என்று சில படைப்புகளையும் சேர்த்துக் கொண்டேன் என்கிறார்
மூத்த திருப்பூர் எழுத்தாளருக்குப் பாராட்டு விருது திருப்பூரில் வசிக்கும் 86 வயது எழுத்தாளர் பொன்மணி அவர்களுக்கு திருப்பூர் வாசகர்கள் சார்பாக பாராட்டு தெரிவித்து விருது அளிக்கப்பட்டது இலக்கியக்கட்டுரைகள், கவிதை என்று 10 நூல்களை வெளியிட்டுள்ளார். இன்னும் பிரசுரமாகி,புத்தகமாக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்டக் கட்டுரைகள் உள்ளன அவரின் இலக்கியப்பணியைப் பாராட்டி ” கனவு இலக்கிய விருது” புதன் அன்று திருப்பூர் மாஸ்கோ நகர் அரசு பள்ளிக்கு எதிரில் நடைபெற்றக்கூட்டத்தில் வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ( ஓய்வு ) குமார் அவர்கள் கனவு இலக்கிய விருதை பொன்மணி அவர்களுக்கு வழங்கினார்.ஆசிரியர் செங்கனி, எழுத்தாளர்கள் அழகுபாண்டி அரசப்பன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கனவு இலக்கிய விருது கனவு இலக்கிய வட்டம் சார்பில் வழங்கப்பட்டது. செய்தி : 9486101003 சுப்ரபாரதிமணியன்
வணக்கம். நலம் குறித்த விருப்பம். எனது புதிய நாவல் “ அந்நியர்கள் “ சென்றாண்டு எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கானப் பரிசு 1 லட்சம் பெற்ற நாவல்- பிரதி பெற என் வங்கிக்கணக்கில் ரூ250 செலுத்தி ( கூரியர் செலவுடன் ) என்இலக்கியப்பயணத்தில் பங்கு பெறுங்கள். வேறு சில நூல்கள் பெற கூடுதல் தொகையையும் அனுப்பலாம் G pay 9486101003 Subrabharathimanian A/c No; 1408522610. Central bank of india bank, ATL branch perumanallur road, Tiruppur IFCS no: CBIN0284145 MICR no; 6410 16104
நான் கண்ட தமிழீழம் ( முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்பும் ) ஓவியர் புகழேந்தி நூல் ... வரலாறே வழிகாட்டும் *சுப்ரபாரதிமணியன் ”எந்த ஒரு கலையும் வெறுமனே கலையாக இருக்க முடியாது. உணர்ச்சியும் உத்வேகமும் ஆழ்மனதில் பதிந்து இருந்தால் மட்டுமே அது கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படும் .கலை வடிவத்தின் ஊடாக வெளிப்படும் .கலை வடிவங்கள் மூலம் நாம் இழந்ததை , நாம் சிந்திய ரத்தத்தை கலையின் மூலம் நம்முடைய வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் ..நாம் இன்றைக்கு தோற்று இருக்கலாம் .பின்னடைவை சந்தித்து இருக்கலாம் .ஆனால் இந்த பின்னடைவும் தோல்வியும் நாம் இன்னும் முன் நோக்கி செல்வதற்கான ஒரு பாடமாக இருக்கவேண்டும் அதற்கு இந்த கலை வடிவங்களை பயன்படுத்த வேண்டும்., அடுத்தடுத்த நிலைக்கு ,அடுத்தடுத்த தலைமுறைக்கு இதன் மூலம் நம் வரலாற்றையும் வாழ்வையும் போராட்டத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் ” என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்த நூலில் இலங்கை பயணம் பற்றிய இரண்டு காலகட்டங்களின் அனுபவங்களை விரிவாகச் சிறந்த புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார் . நந்திக்கடல் போன்ற முக்கியமான இடங்கள் பற்றிய வர்ணனை ஒரு நாவல் தன்மையுடன் ஒரு சிறுகதை தரும் சிறப்பான அதிர்வுகளையும் கொண்டிருக்கிறது. நந்திக் கடல் சார்ந்த பகுதியை நாம் இப்படியும் முன் நிறுத்தலாம் என்பது தெரிகிறது .வள்ளிபுனம் செந்தளிர் இல்லம் ...போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணம் பற்றிய பகுதியில் யுத்தத்தின்போது இழந்த பெற்றோர்களின் குழந்தைகளை பற்றிய சித்திரங்கள் மனதை நெகிழ வைக்கின்றன . ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் ஒருமித்த எழுச்சிமிகு உறுதியான போராட்ட குரல் மட்டுமே உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் என்பதைக் காணாமல் போன தங்களின் குழந்தைகளைப் பற்றிய விவரிக்கும் பெற்றோருடைய கோணத்தில் இருந்து கொண்டே அந்த முகாமின் குரலாகும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் . உலகை உலுக்கிய செம்மணி படுகொலை பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றும் அதுசார்ந்த செம்மணி புதைகுழி பற்றிய புகைப்படங்களும் மனதை உலுக்குவதாக இருக்கிறது . அது போல் தலைவர் பிரபாகரின் வீட்டு கிணறும் முற்றமும் அது அழிக்கப்பட்டபின்பு உள்ள நிலையும் கூட .ஈழத்து பல பகுதிகளின் சிதைவுகள் நம்மை உறுத்துகின்றன .அவரின் ஒவ்வொரு இலங்கை பயணத்தின் போதும் கல்வி சுற்றுலா அனுபவங்கள் என்று நிறுத்திக்கொள்ளாமல் போராளிகளை சந்திப்பதும் அவர்களுடன் உரையாடும் போதும் அவர்கள் கலை இலக்கிய வடிவங்களில் ஆர்வம் கொள்ளச் செய்வதும் அவரின் முக்கிய பணியாக இருக்கிறது.அது போராளிகளை தன்னம்பிக்கையுடன் உத்வேககத்துடன் போராடச் செய்யும் தன்மை கொண்டது .போராளிகளுக்கு சண்டையின் தன்மை பற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறை பற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார் படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது ஒரு நம்பிக்கையாக இருப்பதையும் பதிவு செய்திருக்கிறார் “ எதிரியின் அழிவில் தான் எங்களது வெற்றியே தங்கியிருக்கின்றது எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டிருக்கும் ராணுவ வீரர் நடுவே உயிர் பிடுங்கப்படும் வரை என்பது போராளிகள் உயிருடன் இருப்பார்கள் .எனவே எதிரியின் அளவுக்கு வேகமாக செல்லுங்கள் .முடிந்தவரை எதிரிகளை வேகமாக எதிர்கொள்ளுங்கள் . அதன் மூலம் வெற்றியை பெறுங்கள் “என தலைவர் பிரபாகரன் போராளிகளுக்கு விளக்கிக்கொண்டு இருந்ததை அவர் நேரில் பார்த்த சாட்சிகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் . வட தமிழகத்தை போலல்லாது தென்தமிழகம் சிங்களக் குடியேற்றங்களும் ராணுவம் கொலை பசியாலும் ராணுவத்துடன் கூடிநின்ற சிங்கள முஸ்லிம் காடையர்களாலும் சிரமம் த ரப்பட்டது பற்றிய அவரின் சித்திரங்கள் எவ்வித பாவனையும் இல்லாமல் எளிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இலங்கையில் பல்வேறு வகையான மனிதர்களைச் சந்திக்கிறார் வேதனை கோபம் ஆற்றாமை அழுகை என்று பல்வேறு உணர்ச்சிகளோடு அவர்களுடன் உரையாடல் அமைந்திருப்பதை இந்நூலின்பல பகுதியில் காட்டுகின்றன .. தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்வது பாரிய குறைவாக உள்ளது என்று அவர் ஒரு இதழுக்கு கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் .அது போல் சில பேட்டிகள் இந்த நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டு அவரின் அரசியல் பார்வை தெளிவாகிறது. இலங்கை போராட்டம் சார்ந்த நிலைகளையும் மக்கள் வாழ்வினையும் பயண அனுபவங்களையும் கொண்டு ஓவியர் புகழேந்தி இதில் பதிவு செய்திக்கிறார் ..அந்த பதிவுகளை அவரின் பல ஓவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன .அந்த ஓவிய பதிவுகள் ஒரு நிரந்தர கல்வெட்டுகளாக மாறியிருக்கின்றன .ஓவியர் புகழேந்தியின் வாழ்க்கைப்பயணத்தில் ஓவியம் கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமில்லாமல் அரசியலும் முக்கிய பங்கு வகிப்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது தோழமை சென்னை சுப்ரபாரதிமணியன் ReplyForward
. திருப்பூர் மேகா பிரியதர்ஷினி என்ற எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவியின் கதைகள் / சுப்ரபாரதிமணியன் திருப்பூர் சிறுவர்களை தமிழில் எழுதவைப்பது சிரமம். கல்வித்திட்டப் பாடம் தாண்டி அவர்கள் சிந்தனை வெளிப்படுத்துவது இன்னும் சிரமம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் எழுத்துப் பயிற்சியும் கல்வி அக்கறையும் குறைந்துவருகிறது மேகா பிரியதர்ஷினி எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவி தொடர்ந்து அவரின் தந்தை எழுத்தாளர் அழகு பாண்டி அரசப்பனுடன் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் .பாடல்கள் பாடுகிறார் கதைகள் சொல்கிறார். இந்த அக்கறை அவரைத் தொடர்ந்து எழுதவும் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது .அழகு பாண்டி அரசப்பன் சிறுகதைகள் எழுதுவதற்கு மேகா பிரியதர்ஷினிதான் காரணம் என்பது தனிக்கதை சிறுவர் கதைகளில் அவர்களே எழுதும் ஈர்ப்பில் இயல்பில் இனிமையான மொழிநடையும் சின்ன சின்ன விடயங்களும் இருக்கும். அதைத்தாண்டி அவற்றில் பெரியவர்கள் பாதிப்பு என்கிறபோது மிகையான சம்பவங்களும் அதிகமான கற்பனையும் கூட கலந்து விடும். அதெல்லாம் இல்லாமல் ரேகா பிரியதர்ஷினி எட்டாம் வகுப்பிலேயே ஒரு தொகுப்பை முழுமையாக எழுதி இருக்கிறார். முதல் கதை மிகவும் முக்கியமான கதை அரவிந்தன் குமாட்டி என்றொரு படம் எடுத்திருக்கிறார் அதில் கிராமத்திற்கு வந்து போகும் ஒரு மந்திரவாதி குறும்பு செய்யும் குழந்தைகளை நாயாக மாற்றி விடுவார் .ஒரு நாயை மறுபடியும் சிறுவன் ஆக மாற்றாமல் அந்த கிராமத்தை விட்டு சென்று விடுவார் அடுத்த ஆண்டில்தான் மீண்டும் வருவார் .அந்த சூழலில் அந்த குழந்தையின் மன இயல்பையும் பெற்றோர்களைப் பற்றியும் அந்தப் படம் சொன்னது . 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம். சம்பந்தமில்லாமல் எனக்கு அந்தப் படம்தான் ஞாபகம் வந்தது .முதல் கதை அந்த மையம் மாதிரி ஒன்று. அருமையான கதை ஆனால் ரேகா பிரியதர்ஷினி அந்த படமெல்லாம் பார்க்க வாய்ப்பில்லை. மொட்டு, பூக்கள் மலரும் அனுபவம் பற்றிய ஒரு அருமையான கற்பனையை முதல் கதையிலேயே சொல்லியிருக்கிறார். அழகு பாண்டி அரசப்பன் தன் மகளின் கதை எழுதும், கதை சொல்லும் பாதிப்பே தன்னை சிறுகதைகள் எழுதி வைத்ததாக சொன்னது பெருமைப்பட வைத்தது எந்த வித திடுக்கிடும் சம்பவங்களும் அதிகம் இல்லாமல் இந்த கதைகளை வடிவமைத்திருக்கிறார், ஒரு பயணம் பற்றிய கதையில் அப்படித்தான் எளிமையான விஷயம், மழை சார்ந்த உணர்வுகள் அவரை பிரமிக்க வைத்து இருப்பதை கதையாக எழுதியிருக்கிறார். இன்றைய தலைமுறையில் கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவை மறந்து விட்ட சூழலில் அவற்றின் முக்கியத்துவத்தை சில கதைகள் உணர்த்துகின்றன. சிறுவர்கள் பெரும்பாலும் பேய்கதைகளையும், திகில் கதைகளை விரும்பி கேட்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் இவ் வகைக் கதைகள் நூல்கள் நிறைய வருகின்றன. ஆனால் ரேகா பிரியதர்ஷினி மூடநம்பிக்கை கற்பிதம் பற்றியக் கட்டுடைப்பை சரியாகவே தன் கருத்தை கதைகளில் வைத்திருக்கிறார் அழகு செயலில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார், திருடு போவது, மாணவர்கள் அதில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்து அவர்களை மாற்றுப் பாதைக்கு செல்ல வேண்டிய செலுத்தவேண்டிய அக்கறையும் அவரின் கதையில் இருக்கிறது, பிளாட்பாரத்தில் வசிக்கும் சிறுமிக்கு சட்டென மறுவாழ்வு கிடைக்கிறது, அது லாட்டரி சீட்டு பரிசு கொடுப்பது போலத்தான்,, ஆனால் அவ்வகை நேர்மறையான கற்பனைகூட சிறப்பாகத்தான் இருக்கிறது, தாவணி போடப்பயந்து பள்ளிக்கு போகாமல் இருந்த பாட்டியை பற்றிக் கதை எழுதுவதும் பிளாட்பார சிறுமி குறித்து கதை எழுதுவதும் ஆச்சரியப்படுத்துகிறது யூ டியூப் பார்த்துச் சமையல் செய்யும் போக்கு, அவற்றை விமர்சனம் செய்வது கிண்டல் செய்வது என்பதும் நல்ல விஷயமாக இருக்கிறது. வெற்றி பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற சிறுவர்க்கான அறிவுரைகளும் சரியாக கதைகளாக வந்திருக்கின்றன. அவர்கள் தரும் அறிவுரை பெரியவர்களை கவனத்திலெடுத்து அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. அதை இந்த கதைகளில் பதிவு செய்திருக்கிறார். வார்த்தைகள் மூலம் கட்டமைக்கப்படும் சிறுவர் உலகம் எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது அந்த மகிழ்ச்சியை தொடர்ந்து மேகா பிரியதர்ஷினி தன் படைப்பு செயல் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் செய்துவருவதை கவனித்திருக்கிறேன். அவர இத்தொகுப்பின் மூலம் இப்படி வெளிபட்டபோது பெரிய சாதனையாகப்படுகிறது வாழ்த்துவோம் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த துபாயில் வாழும் இஸ்மாயில் மெலடியின் “ புலம் பெயரும் மணல் துகள்கள்” கவிதை நூலை தூரிகா வெளியிட சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார் ( கனவு வெளியீடு ரூ60). மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி சுப்ரமணியன், சத்ருக்கன், சிவகுமார் பிரபு, நூலகர் வின்செண்ட் ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர். ” இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இன்றைய கொரானா பாதிப்புச் சூழல் வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது” என்று குறிப்பிட்டார். இயற்கையின் மீதும், பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள் ஞாயிறு அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சலீம் அலி சிறார் பறவைகள் கவனித்தல் மன்றத் தலைவர் துரிகா அவர்கள் பறவைகள் கவனித்தல் குறித்து உரை ஆற்றினார் . முன்னதாக அங்கு நடந்தக் கவிதைப்பட்டறையில் தமிழ்வளர்ச்சித்துறை முன்னாள் இணை இயக்குனர் குமார் , சுப்ரபாரதிமணீயன், து சோ பிரபாகர், அழகு பாண்டி அரசப்பன், நாதன் ரகுநாதன்., பொன் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பயிற்சி உரைகளை நிகழ்த்தினர் .கல்லூரி மாணவர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை எழுதும் பயிற்சி பற்றிய பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த துபாயில் வாழும் இஸ்மாயில் மெலடியின் “ புலம் பெயரும் மணல் துகள்கள்” கவிதை நூலை தூரிகா வெளியிட சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார் ( கனவு வெளியீடு ரூ60). மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி சுப்ரமணியன், சத்ருக்கன், சிவகுமார் பிரபு, நூலகர் வின்செண்ட் ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர். ” இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இன்றைய கொரானா பாதிப்புச் சூழல் வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது” என்று குறிப்பிட்டார். துரிகா அவர்கள் ஆற்றிய விரிவான உரையில்... மாபெரும் அதிசயம் ஒன்றின் மீதே அமர்ந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்வது நம் எதிர்காலத்திற்று மட்டுமல்ல., நம் நிகழ்காலத்திற்கும் நல்லது அல்ல. உலகம் என்னும் அதிசயம் உயிர்ச்சூழல்களான தாவரம், விலங்கு, நுண்ணியிர், பறவைகள், மனிதர்களால் மட்டும் நிரப்பப்பட்ட ஒன்றல்ல. உயிரற்ற சூழலான சூரிய ஒளி, நீர் நிலம் காற்று என ஏராளமான அதிசயங்களும் சேர்ந்தால்தான் சுகமாக இந்த பூமி சுழல் முடியம். உயிர்களை தாவரம், விலங்கு, நுண்ணுயிர் என மூன்றுப் பெரும் பிரிவுகளாகப் பார்க்கிறோம். ஒன்வொரு இனத்திலும் கோடிக் கணக்கில் உயிர் எண்ணிக்கைகளை காண்கிறோம். அவைகளுக்கு இடையே இருக்கும்சார்புத்தன்மையை நாம் புரிந்துகொண்டது மிக்குறைவே. இயற்கையின் வினோத ஏற்பாட்டினால் உயிர்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்னப்பட்டிருக்கின்றன. உணவுச் சங்கிலி சக்தியின் சுழற்சி போன்றவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. . இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது. சிட்டுக்குருவிகள் அருகி வர நமது வாழ்வியல் மாற்றமும் காரணம், தானியங்களை அறுவடை செய்வது முதல், போரடித்தல், தூற்றுதல், புடைத்தல், என திறந்த வெளி செயல்பாடுகளுக்கு மாற்றாக இயந்திர பண்ணைக்கருவிகளின் வருகையும், முற்றத்தில் சாம்பல் கொண்டு பாத்திரம் கழுவும்பொழுது சிதறும் பருக்கைகளை உன்ன வந்த காக்கைகள் தற்போது உணவு தேடி அலைவதையும் பார்க்க முடிகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் எண்ணிக்கை காடுகளில் குறைந்து வரும் இவ்வேளையில் மனிதனுக்கு காற்றில் பரவும் கிருமிகளால் நோய்த் தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறு கொசுக்கள் முதல், நோய் பரப்பும் பூச்சிகளை உண்டு வாழும் பறவைகள்தான் வரும் முன் நோய் தடுக்கும் காவலர்கள். அப்படிப்பட்ட பறவைகளை கணக்கெடுத்து காப்பது இன்றைய மனித குல தேவை. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை கவனித்தல் செயல்பாட்டாளர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களை கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம் பள்ளி மாணவர்களும் இதில் ஈடுபடலாம். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும். இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர். இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர். இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: 1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும். 2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்). 3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (18-19,20,21 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும். eBird இணையதளம் ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள். பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும். நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும் பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும். நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும். பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும். ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்). தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல். உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல் நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள். கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. என்று குறிப்பிட்டார் ReplyForward
இயற்கையின் மீதும், பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள் ஞாயிறு அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சலீம் அலி சிறார் பறவைகள் கவனித்தல் மன்றத் தலைவர் துரிகா அவர்கள் பறவைகள் கவனித்தல் குறித்து உரை ஆற்றினார் . முன்னதாக அங்கு நடந்தக் கவிதைப்பட்டறையில் தமிழ்வளர்ச்சித்துறை முன்னாள் இணை இயக்குனர் குமார் , சுப்ரபாரதிமணீயன், து சோ பிரபாகர், அழகு பாண்டி அரசப்பன், நாதன் ரகுநாதன்., பொன் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பயிற்சி உரைகளை நிகழ்த்தினர் .கல்லூரி மாணவர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை எழுதும் பயிற்சி பற்றிய பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த துபாயில் வாழும் இஸ்மாயில் மெலடியின் “ புலம் பெயரும் மணல் துகள்கள்” கவிதை நூலை தூரிகா வெளியிட சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார் ( கனவு வெளியீடு ரூ60). மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி சுப்ரமணியன், சத்ருக்கன், சிவகுமார் பிரபு, நூலகர் வின்செண்ட் ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர். ” இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இன்றைய கொரானா பாதிப்புச் சூழல் வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது” என்று குறிப்பிட்டார். துரிகா அவர்கள் ஆற்றிய விரிவான உரையில்... மாபெரும் அதிசயம் ஒன்றின் மீதே அமர்ந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்வது நம் எதிர்காலத்திற்று மட்டுமல்ல., நம் நிகழ்காலத்திற்கும் நல்லது அல்ல. உலகம் என்னும் அதிசயம் உயிர்ச்சூழல்களான தாவரம், விலங்கு, நுண்ணியிர், பறவைகள், மனிதர்களால் மட்டும் நிரப்பப்பட்ட ஒன்றல்ல. உயிரற்ற சூழலான சூரிய ஒளி, நீர் நிலம் காற்று என ஏராளமான அதிசயங்களும் சேர்ந்தால்தான் சுகமாக இந்த பூமி சுழல் முடியம். உயிர்களை தாவரம், விலங்கு, நுண்ணுயிர் என மூன்றுப் பெரும் பிரிவுகளாகப் பார்க்கிறோம். ஒன்வொரு இனத்திலும் கோடிக் கணக்கில் உயிர் எண்ணிக்கைகளை காண்கிறோம். அவைகளுக்கு இடையே இருக்கும்சார்புத்தன்மையை நாம் புரிந்துகொண்டது மிக்குறைவே. இயற்கையின் வினோத ஏற்பாட்டினால் உயிர்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்னப்பட்டிருக்கின்றன. உணவுச் சங்கிலி சக்தியின் சுழற்சி போன்றவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. . இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது. சிட்டுக்குருவிகள் அருகி வர நமது வாழ்வியல் மாற்றமும் காரணம், தானியங்களை அறுவடை செய்வது முதல், போரடித்தல், தூற்றுதல், புடைத்தல், என திறந்த வெளி செயல்பாடுகளுக்கு மாற்றாக இயந்திர பண்ணைக்கருவிகளின் வருகையும், முற்றத்தில் சாம்பல் கொண்டு பாத்திரம் கழுவும்பொழுது சிதறும் பருக்கைகளை உன்ன வந்த காக்கைகள் தற்போது உணவு தேடி அலைவதையும் பார்க்க முடிகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் எண்ணிக்கை காடுகளில் குறைந்து வரும் இவ்வேளையில் மனிதனுக்கு காற்றில் பரவும் கிருமிகளால் நோய்த் தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறு கொசுக்கள் முதல், நோய் பரப்பும் பூச்சிகளை உண்டு வாழும் பறவைகள்தான் வரும் முன் நோய் தடுக்கும் காவலர்கள். அப்படிப்பட்ட பறவைகளை கணக்கெடுத்து காப்பது இன்றைய மனித குல தேவை. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை கவனித்தல் செயல்பாட்டாளர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களை கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம் பள்ளி மாணவர்களும் இதில் ஈடுபடலாம். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும். இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர். இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர். இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: 1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும். 2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்). 3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (18-19,20,21 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும். eBird இணையதளம் ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள். பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும். நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும் பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும். நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும். பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும். ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்). தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல். உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல் நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள். கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. என்று குறிப்பிட்டார் ReplyForward
அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல் .. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின் சிறந்த நாவலுக்காக சுப்ரபாரதிமணியனின் ” அந்நியர்கள் “என்ற நாவல் பரிசு பெற்றிருக்கிறது (ரூபாய்250 கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு ) (
1098 : Novel Rs 150 Zero degree Publiing Published in English by Authours Press , Newdelhi சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது
மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் / சுப்ரபாரதிமணியன் சமீபத்தில் திருப்பூரைச் சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மேகா அவர்களின் சிறாவர் கதைகளை படித்து ஒரு முன்னுரை எழுதினேன். இப்போது இன்னொரு மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் பற்றி எழுதுவதும் இன்னொரு விதமான மகிழ்ச்சியாக இருக்கிறது கொரானா காலகட்டத்திற்குப் பிறகு குழந்தைகளின் எழுத்துத் திறனும் வாசிப்ப திறனும் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது குழந்தைகளின் எழுத்து பயிற்சியும் இல்லாமல் அல்லது குறைந்து போய்வட்டது. இந்த சூழலில் குழந்தைகள் தங்கள் அனுபவங்களை கதைகளாக எழுதுவது அவர்களுக்கு மொழி சார்ந்த பயிற்சியாகவும் இருக்கும். தங்களடைய அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதற்கான முயற்சியாக இருக்கும் முன்பெல்லாம் குழந்தைகள் கதைகள் என்ற பெயரில் பெரிய பெரியவர்கள் தான் அதிகம் எழுதுவார்கள். ஆனால் இன்று குழந்தைகளே நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் அவையெல்லாம் இன்னும் பெரிய விரிந்த பரப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் பாடப் புத்தகங்களைத் தாண்டி மொழி பயிற்சிக்காக எழுதுவதும் கதை அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதும் வாசிப்பும் மிகவும் அவசியம் எனப்படுகிறது .இந்த சூழலில் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து இந்த தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார் .அது ஆரோக்கியமான கதைகளாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி . விலங்குகள் பறவைகளை வைத்துக் கொண்டுதான் நீதிகளை அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்று இல்லை அப்படி சொல்வதில் இருக்கின்ற கற்பனை வளமும் முக்கியமானது ஆனால் இன்றைக்க சமூகத்தில் குழந்தைகள் பெண்கள் பெற்றோர், கல்வி பற்றியும் முக்கியமாகச் சுற்றுச்சூழல் பற்றியும் நமக்கு உள்ள பார்வை வெவ்வேறு வகைகளில் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது அப்படித்தான் அவர்கள் அதை எல்லாம் கவனித்து இன்றைக்கு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான மொழி என்பது குழந்தைகள் எழுதும்போதுதான் வசப்படும் அதைத் திரும்பத் திரும்ப படிக்கிறபோது பெரியோர்களுக்கும் வசப்படும் அப்படித்தான் எளிமையான மொழியில் சச்சினும் கதை சொல்லிக் சரிதாவும் இந்த நூலை எழுதி இருக்கிறார்கள்.நவீன தமிழ் இலக்கிய பங்களிப்பில் குடும்பமே ஈடுபடுவது அல்லது குழந்தைகளின் பங்கேற்புடன் பெரியவர்கள் ஈடுபடுவது என்பது மிக முக்கியமானது. அப்படித்தான் நான் சச்சின் உடைய பங்களிப்பையும் அவனுடைய பங்களிப்பையும் சரிதா ஜோவுடன் கவனிக்கிறேன். இவற்றில் சிறுவர்களுக்கான கற்பனை வளம் சிறப்பாக இருக்கிறது மேகத்தை பார்த்து வெள்ளைக்கிளி என்றும் வெள்ளை யானை என்றும் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடிகிறது. கனவுகளைப் பற்றி பல தகவல்கள் பெரியோர்களால் சொல்லப்படும். ஜாதக குறிப்புகளும் தினசரி கேலண்டர் குறிப்புகளும் நிறைய கிடைக்கும். ஆனால் அந்த கனவுகள் என்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வையை ஒரு கதை சொல்கிறது. இயற்கை சூழலும் வாழ்வும் என்றைக்கும் மனிதனை இயல்பாக இருக்க வைக்கும். ஆனால் இன்றைக்கு சூழல் மாறிவிட்டது இயற்கையிலிருந்து நாம் வெகுவாக தள்ளி இருக்கிறோம் அதனால் நிறைய சிரமப்படுகிறோம் அதில் இந்த கொரானா தொற்று முக்கியமானதாகும். நமக்கு எல்லாமே கிடைத்து விடுகிறது .ஆனால் இயற்கையோடு இணைந்த அனுபவங்கள் கிடைப்பதில்லை அப்படித்தான் மலர்களிலிருந்து தேனை எடுத்துக் கொள்ள வண்ணத்துப்பூச்சி விரும்புகிறது. நேரடியாக அதற்கு கிடைக்கும் தேன் என்பது அதற்கு தேவையில்லாமல் இருக்கிறது இந்த அனுபவம் மனிதனுக்கும் மிகவும் பொருத்தப்பட உள்ளதாக இருக்கிறது. இந்த கதைகளில் உரைநடைத் தன்மை என்பதை மீறி பேச்சுவழக்கில் கதைகளை எழுதியிருப்பதும் இன்னும் வாசகர்களை ஈர்ப்பு ஆக்குகிறது எல்லா உயிர்களுக்கும் இருக்கும் இயல்புகள் மனிதர்களைப்போல முக்கியமானவை என்று இக்கதைகள் சொல்லுகின்றன .காதலர் தினம் பற்றிய பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும் அன்பு நேசம் இவற்றை மையமாகக் கொண்ட காதலர் தினம் பற்றிய கதைகளும் கூட தனித்தன்மை பெற்று இருக்கின்றன. மழை என்ற அனுபவத்தை அல்லது நல்ல காற்றை அனுபவிப்பது அல்லது இயற்கை சூழலை வெளிக்காட்டுவது என்பதெல்லாம் மனிதனை இலகுவாகிவிடும் அப்படித்தான் இந்த சிறுகதைகள் நம்மைகை பிடித்து அழைத்துச் சென்று பல இடங்களைக் காட்டுபவை பல்வேறு விஷயங்களில் தவறான புரிதல்களைச் சுட்டிக்காட்டும் . கற்ற குழந்தைகளை வசீகரிக்கும் இந்த கதைகளை சரிதாவும் அவர் மகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள். சுப்ரபாரதிமணியன் திருப்பூர

திங்கள், 7 பிப்ரவரி, 2022

சிறுகதை : சுப்ரபாரதிமணியன் எழுதப்பட்டது) மாம்சம் – தரை –மார்புத்துணி முத்தச்சி கதை : அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர் மெல்லப் பெருக்கெடுத்து அவள் வாயை நிறைத்தது. இன்னொரு துண்டு மாமிசத்தை படையலில் இருந்துப் பிரித்தெடுத்த செல்வ சாம்பன் அவளின் பூரித்த முகத்தைப் பார்த்தபடியே கொண்டு சென்றான். படையலில்., நைத்தியத்தில் மாமிசம் படைப்பது வழக்கமாகத்தான் இருந்தது. படையல் மாமிசத்தின் மணம் செல்வ சாம்பனின் நாசிகளையும் நிறைத்தது. பிராமணர்கள் ஒழுங்குடன் படையலைப் பார்த்தபடி நின்றிருந்தவர்கள் திடுக்கிட்டபடி செல்வசாம்பனைப் பார்த்தார்கள்.அவர்கள் உடம்புகள் அதிர்ந்து போனதுதால் வியர்வை ஒழுகியது. ” அடே என்னடா பிராமணன் நீ .. உனக்கு என்னடா அவசரம் “ வாயில் பெருக்கெடுத்த உமிழ்நீரை மாமிசத்துடன் சுவைத்தபடி அவனின் மனைவி தன் கர்ப்பமான வயிற்றைத் தடவிக்கொண்டாள். “ கர்ப்ப ஸ்திரி .. விரும்பினாள். அதுதான் “ “ அதற்கென்னடா அவசரம். சடங்குகள் சாஸ்திரங்கள் என்று உண்டல்லவா. அதை மீறி .” “ “ பசி.. ருசி.. கர்ப்பஸ்திரியின் விருப்பத்திற்கேற்ப ,, “ அவளின் விருப்பத்திற்கேற்ப இதைச் செய்கிறாயா. எங்கள் விருப்பத்தை நாங்கள் சொல்லட்டுமா. “ பிராமணர்கள் சூழந்து கொண்டார்கள். வாயில் உமிழ்நீர், முகத்தில் , உடம்பில் வேர்வை என்று ஒழுகித்தீர்த்த்து கர்ப்பஸ்திரிக்கு, முகத்தில் திகில் கூடிவிட்டது.சூழ்ந்திருந்த யாகப்புகை நறுமணத்துடன் கொட்டாரமெங்கும் நிறைத்திருந்தது.ஏதோ கோபமாய் விவாதித்துக் கொண்டார்கள், “ உன்னையும் உன் குடும்பத்தையும் பிராமணர்களாக வைத்திருக்க மறுக்கிறோம். இனி நீங்கள் பறையர்கள் . உங்கள் சாதியை நாங்கள் தாழ்த்திக் கொள்கிறோம். எங்களுடன் சகவாசம் வேண்டாம், நாங்கள் என்றும் பிராமணர்கள். நீ பறையன் இனி..பறையனாகக் கடவது ” கர்ப்பஸ்திரியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. மாமிசத்துண்டு நன்கு ருசிக்கப்பட்டு தொண்டைக்குழிக்குக் கீழ் சென்று விட்டது. இனியும் துப்ப முடியாது. வாந்தியெடுத்து அதை எடுத்து வீசியெறந்து விட்டோம். எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்க முடியாது. வலது கையை தொண்டையைப்பிடித்துக் கொண்டாள் கர்ப்பஸ்திரி. தொண்டையை நசுக்கிக் கொள்வதன் மூலம் அந்த மாமிசத்துண்டினை வெளியேற்றி விடலாம் என நினைப்பவள் போல் அழுத்தினாள். ‘உற்சவ முறிக்கலுக்கு அவளைக்கூட்டிக்கொண்டு போடா. உனக்குத் தகுந்த இடம்தான் அது . அந்த வெறியாட்டு உனக்கு உகந்த இடமாக இருக்கும்“உற்சவ முறிக்கலுக்கு ரொம்பநாள் இருந்தது ஞாபகம் வந்த்து அவனுக்கு. புரோகிதனான குறவன் அச்சடங்கில் ஆட்டை பலி கொடுத்து ஆட்டு ரத்த்த்தில் சோற்றைக் குழைத்து மாமிசமும் மதுவும் படைத்த் பின் சேயோனின் வேலை எடுத்து வேலனின் ஆசி பெற்று சாமியாடும்போது புரோகிதன் சொல்வதெல்லாம் வேலனின் உத்தரவாகிவிடும் பிறகு.. மலங்காவுகளில் உற்ச குருதி ஆடு, மாடு, கோழி என்று வெட்டி பலிக்கல்லில் இரத்த்த்தை ஓடச்செய்து வேடிக்கை பார்ப்பார்கள்.. அந்த விளையாட்டைத் தொடர்ந்து விடியற்காலையில் கொடிச்சிக்கல் கூடைகளில் நெல்லும் நெல்லுக்கு மேல் நாணயங்களும் வைத்துக் கோவிலுக்கு வெளியே இந்த நேர்ச்ச காழ்ச்சகள் செய்வார்கள், அப்போடு எல்லோருமாக சாதி வித்யாசம் பார்க்காமல் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிரார்த்தனை செய்த பின் தாழ்ந்த சாதியினர் மேல் சாதியினரிடமிருந்து விலகி நின்று அசுத்தம் ஏற்படாதவாறு இருக்கச் சொல்வார்கள். இநத்த் தீண்டாப்பாடு அகலத்தில் கோவில் பூசாரி சிலருடன் வந்து நெல்லையும் நாணயங்களையும் வேறு பாத்திரங்களுக்கு மாற்றிக் கொண்டு போவதுண்டு. ஒவ்வொரு கூடையிலும் கொஞ்சம் நெல்லும் சில நாணயங்களும் இருக்கும் அது ஊராளியின் பங்கு. கோவில் அதிகாரி பிராமணன் ஊராளன் .அதையெல்லாம் ஒரு பாத்திரத்தில் இட்டு ஊராளியும் மதுக்கடைக்கு வந்து மதுவை வாங்கி பாத்திரங்களில் விட்டுக் கும்பிடுகிறார்கள் இந்த உற்ச முறிக்கலுக்கு பின் குறவர்களின் உற்சவம் நடக்கும் . “ உற்சவம் முறிக்கலில் நடக்கும் உற்சவத்திற்கு உகந்தன் நீ போய்க்கோ . இனி எங்கள் ஆளில்லை நீ” இவ்வள்வு பெரிய தண்டனையா என்றிருந்தது அவனுக்கு. ஒரு அம்மாவின் கதை ஈயோய் .. ஈயோய் என்று ஏன் அம்மா நீ மெல்ல சப்தமெழுப்பிக் கொண்டிருக்கிறாய் அப்படி சத்தம் எழுப்பினேனா மகனே. ஆமாம் அம்மா .. ஈயோய் .. ஈயோய் என்றாய். அது இந்தப்பக்கம் வரும் போதெல்லாம் அப்படி சத்தம் எழுப்பி வழக்கமாகிவிட்டதால் அப்படியா ஆமாம் மகனே. வேறு சாதிக்காரர்கள் இந்ததப்பக்கம் செல்வதென்றால் ஈயோய் .. ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும். பிராமணன் பயணம் செய்தால் அவனுடன் வரும் ஆள் ஓய்.. ஓய் என்று சத்தமெழுப்பிச் செல்ல வேண்டும், வேறு சாதிக்காரன் என்றால் நாயர் என்ற் சொல்ல்லாம் நாம் பிராமணர்கள் இல்லையா அம்மா ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கிறோம். கோவில்களுக்கு பக்கத்திலிருக்கும் கோவிலைத்தொட்டுப்போகும் வீதிகள்தான் பாதைகளாக முன்பு இருக்கும் . மேல் சாதிக்காரர்கள் வந்து போகும் இடங்களாக கோவில்கள் இருந்தன. பிராமணர்கள் வந்து போகும் வீதிகளில் எப்போதும் அவர்கள் நடமாடுவதற்கென்றே எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும் . அந்த வழியே பிற சாதிக்காரர்கள் செல்ல தடை இருந்தாலும் அவசர காலங்க்ளில் செல்வர். செல்லும்போது ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும் ..பிற சாதிக்காரர்கள் பிராமணனின் பார்வையில் படாமலிருக்கவும் எச்சில் அவர்கள் பாதையில் படாமல் இருக்கவும் அந்த ஏற்பாடு. பிற சாதிக்காரர்கள் பிராமணர்களைப் பார்ப்பது பாவம் என்றிருந்தபோது ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும் .ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லும் சிலரையும் பார்க்க வேண்டியிருக்கும்.. முட்செடிகளும் மரங்களும் வளர்ந்த காவுகளில் வாழ்ந்தவளுக்கு இந்தப் பாதைகள் புதிரானவைதான். நாமெல்லாம் செல்வன்கள் இல்லையா அம்மா முன்னோர்கள் செல்வசம்பான் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்போதையப் பெயரில் மட்டும்தான் செல்வம் இருந்த்து. இப்போது செல்வன் இல்லை, பிச்சைப் பிழைப்புதான். இந்தப் பிச்சைப்பிழைப்பிற்காக உன்னோடு வரும் பையனையும் விறக்த்தான் கொண்டு செல்கிறோம். அந்தச் சிறுவனின் இடதுகை அவனை விடச் சிறிய ஒருவனின் தோளைப்பற்றிய படி இருந்தது. அவனின் பிடியிலிருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பவன் போல் அச்சிறுவன் இருந்தான் இவவை விற்கத்தான் வேண்டுமாஅம்மா.. நமக்குக் கிடைக்கிற கூலி பற்றாதா. அது சரிப்பட்டு வந்தால் இன்னொரு வீட்டுப் பிள்ளையை நாம் ஏன் விற்க வேண்டும் அ.வன் அம்மாவே கூட வந்து இதைச் செய்திருக்கலாம்..அவளுக்கு பெத்த மனம் பித்து. வர மறுக்கிறாள்.நாம் சங்ஙனாச்சேரி சந்தைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கூலியாம் கூலி.. அடிமைகள் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தாலும் ஊதியம் என்று தரப்படுதில்லை. இரவில் ஒரு வேளை உணவுக்காக நெல் மட்டுமே தரப்படும். . பகலில் பசியாற ஆண்டையில் வீட்டில் இருக்கும்போது ஏதாவது கிடைக்கும் . ஆணுக்கு மூணு நாழி நெல்தான். அவ்வப்போது போக்கஞ்சி கிடைக்கும் ஆண்டையின் வீட்டுக்கு அருகில்மண்ணில் குழி தோண்டி அந்தக் குழியில் வாழை இலையோ, பாக்கு மரத்தின் பாளையையோ வைத்து அதில் சிறிது போக்கஞ்சியும் குழம்பும் ஊற்றுவார்கள். குழிக்கு வெளியே முழங்காலிட்டு குனிந்து குடிக்க வேண்டும். . கஞ்சி கூப்பிட ஆண்டை கூப்பிடும் போதுதான் பக்கத்தில் போக வேண்டும் அதுவரைக்கும் ஆண்டைக்குத் தீட்டுப் படாமலிருக்க அடிமைகள் தூரத்தில் நிற்க வேண்டும். . அடிமை வேலைக்குப் போகாமலிருக்கக் கூடாது. அப்படி வேலைக்குப் போகாமலிருந்தால் அடி கிடைக்கும். அதுவும் மாட்டை அடிக்கப்பயன்படும் கம்பியோ, கட்டையோ அடிக்கப் பயன்பாடாகி விடும் அவர்களுக்கு.. அடி வாங்கியவன் எப்படியும் எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்க இயலாது என்றால் அவனால் முடியவில்லை என்று அங்கேயேக் கிடக்க விட்டு விடுவார்கள்.பசியால் துள்ளியப்டி கிடக்க வேண்டும். நானெல்லாம் அடிமையா அம்மா பதினைந்து வயதிற்குட்பட்டவர்கள் அடிமைகள்தான் அப்படியென்றால் என் கூட இருப்பவன் அவன் உன்னை விடச் சிறியவந்தானே .அ னும் அடிமைதான் . அவனும் குழியந்தானே அடிமைகள் வசித்தப் பகுதியில் குழந்தைகள் கிழிக்குள் இருப்பார்கள். குழந்தைகள் குழியிலிருந்து வெளியே ஏறி வர இயலாது. மரத்தடியால் குழியின் உட்புறங்களை அமைத்து குழந்தைகளை அதில் போட்டு விடுவார்கள். மூத்தப் பிள்ளைகள் அக்குழிகளூக்குக் காவல் இருப்பார்கள் .. பெரியவர்கள் ஆண்டிகளின் காடுகளில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குழியன்கள் என்றாகிப்போனார்கள். மாடம் நம்க்கில்லையா அம்மா நம்க்கெல்லாம் தரைதான். மாடம் எங்கே வாய்த்தது . தரவாடு கிட்டுமா அம்மா அது நாயர்களுக்குத் தானே. அவர்களும் நம்மை ஆள்பவர்கள்தானே வட்டச்சேரி அடிமைகள் சந்தையிலிருந்து பல பெண்கள் சமீபத்தில் அந்த ஊருக்கு விற்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாய் வந்து சேர்ந்தார்கள். சரியாகக் கூட சேர்ந்து வாடா என்ன செய்கிறான் அவன் முரண்டு பிடிப்பது போல் சிரமம் தருகிறான். வெட்டப் போடும் ஆடு போல் வர வேண்டியதுதானே அம்மா ஆமாம். இவனுக்கு என்ன வாய்க்கப்போகிறதோ என்னம்மா காணம் , பாடம் என்று எது இவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அதென்னம்மா ஆண்டான் எந்த உரிமையையும் மிச்சம் வைக்காமல் விற்று விடுவது ஜன்மம்.. குறிப்பிட்டத் தொகைக்கு கொடுத்து விட்டு திருப்பிக் கொடுக்கும்போது அடிமையை பழைய ஆண்டைக்கு விட்டுக் கொடுப்பது காணம் . அடிமையை மொத்தமாக குத்தகைக்கு விடுவது பாட்டம். இவனுக்குப் பாட்டம் வாய்க்கும். எவ்வள்வு காசுக்கு அம்மா ஆண் என்றால் எட்டு பணம் பெண் என்றால் நான்கு கிடைக்கும் . ஆண்டைக்கு அடிமையைக் கொல்லும் அதிகாரம் இருப்பது கெட்டதுதான். கொஞ்சம் ஒதுங்கியே வா. யார் மேல் பட்டும் விடாதே தாழ்ந்த சாதிக்காரன் ஒரு பிராமணனின் பார்வையில்பட்டால் அவனைச் சித்ரவதை செய்யலாம். பிராமணர்களின் சமீபம் செல்லக்கூடாதவன் பிராமணனிடமிருந்து தூரம் கடை பிடிக்கத்தவறினால் அவனது காலை வெட்டலாம். தொடக்கூடாத சூத்திரன் பிராமணனின் தகத்தில் அவனையும் அறியாமல் தொட நேர்ந்தால் அவனை முக்காலியில் கட்டி அடிக்க வேண்டும். ஆசனவாயில் பலமான நீண்டக் கமபை அடித்து ஊரார்கள் புழங்கக்கூடிய ஏதாவது ஒரு இடத்தில் நட்டு விட அவன் அந்தக் கம்பின் முனையில் கொஞ்சம் கொஞ்சமாய் திளைத்துச் சாக வேண்டியிருக்கும் பாம்பு இருக்கும் குடத்துக்குள் கை விட முடியுமா அம்மா அந்த விசப்பரிசோதனை எதற்கு. விச ஜந்துவுடன் கேள்விப்பட்டேன் அம்மா. கிச்சு முச்சு மூட்டுமோ விளையாட்டுப் பையனாக இருக்கிறானே என்று அவனின் முகத்தைப் பார்க்க தலையை நிமிர்த்தினாள். அவளின் குல தெயவமான் செல்வ சாம்பனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்றாள் மகளின் கதை : சாம்பனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்றாள். அந்த பிராமணனைக்கண்டதும் அவள் மார்பக்த்துணியை விலக்கிப் போட்டுக்கொண்டாள். இப்போது மார்பகம் திறந்த வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவளின் வலது கையை இறுக்கப்பிடித்த குழந்தை அவளின் திறந்த மார்பைப் பார்த்தது. தனக்குப் பாலூட்டும் அந்த நாட்களில் கூட ஏதாவது துணியை மார்பின் மீது போர்த்திதான் அவள் பாலூட்டுவாள். ஆனால் இது போல் கோவில்கள், வெளியிடங்களில் யாரையாவது பார்க்கிற போது அம்மாவுக்கு என்னாகிறது. மார்புத்துணியை விலக்கிக் கொள்கிறாள். ஒருதரம் கேட்டாள். “ உனக்கெல்லாம் இது புரிய ரொம்ப நாளாகும் பெண்ணே “ கோவில் வெகு சுத்தமாக இருந்தது. அரிசி மாவுக் கோலங்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவிக்கிடந்தன். வெயில் பளீரென்று வருகிற நேரங்களில் அரிசி மாவுக்கோலங்கள் சட்டென மறைந்து விடுவது போல் எறும்புகள் சூழந்து கொண்டு அவற்றைக்கடத்தி விடும். சிறு துளிகளை அவை ஜாக்கிரதையாகக் கடத்தி விடுவது ஆச்சர்யம் தந்தது. சூத்திரப் பென்கள் மார்பக்த்தை மறைத்து உடை உடுத்தவும் நகை அணியவும் வரி தர வேண்டியிருந்தது. முலைக்கரம் வரி கட்டுகிற அள்வு அவள் வசதியானவள் அல்ல. சூத்திரனை, பிராமணனைக்கண்டதும் அவள் மார்பக்த்துணியை விலக்கிப் போட்டுக்கொள்ளாமலிருந்தால் மார்பிலிருந்து துணியை மாற்றாமலிருந்தால் சூத்திரப் பெண்ணீன் மார்பகம் மன்னரின் கட்டளைப்படி அறுத்து எறியப்பட்டு விடும். அவளைப் போன்றவர்கள் சூத்திர்ர்களிடம்கிருந்தும் தப்ப முடியவில்லை. திருமண நாளில் கூலி வாங்க ஆண்டையின் வீட்டிற்குச் செல்லும்போது அவனின் விருப்பத்திஅற்கு உடன் பட மறுத்த முதல் பெண் அவள்தான். அது எங்கு போய் முடியுமோ என்று வீட்டில் சலசலப்பு இருந்தது. அதை பிரம்மபாவமாகக் கொண்டு விதி எழுதப்பட்டிருந்தது.. அது பிரம்மபாவம் பெண்ணே உடன்பட்டால் பாவம் தீர்ந்து விடுமா முதல் இரவு கூட பிராமணனுக்குத்தான் அர்ப்பணம் செய்ய வேண்டும் அய்யோ.. உடுத்த் உடையும் மேலே போர்த்ஹ்டிக் கொள்ள ஒரு மேல் முண்டும் ஒரு பெண்ணுக்குத் தரப்பட்டால் அந்தப் பெண் படுக்கைக்கு வந்து விட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது. உடன்படா விட்டால் என்னவாகும் கைகால்கள் வெட்டப்படலாம், காதுகளை அறுப்பார்கள், நாக்கை வெட்டுவார்கள், பல்லை அடித்து உதிர்ப்பார்கள், காளையோடு சேத்துக் கட்டி வயலி உழவுக்கு அனுப்புவது, பாமபு இருக்கும் குடத்துக்குள் கையை விடச்செய்வார்கள். அம்மா பாம்பு உள்ள குட்த்துக்குள் கையை விட்டால் குறுகுறுப்பாக இருக்குமே. குறுகுறுப்பா மிஞ்சும். கடி படும். பாம்பு கொத்தும். எங்கும் பூரணமாய் குளிர்ச்சி வந்து விட்ட்தைப் போல் தண்ணீர் ஊற்றிக் கழுவப்பட்டிருந்தது. இதைக்கழுவினப் பெண்கள் கூட மார்பினைத் திறந்து காட்டியபடிதான் வேலையைச் செய்திருப்பார்களா. பனியாதவர்கள் வயலில்காளையோடு சேர்த்து உழப்போகியிருப்பார்களா. அவள் யோசிக்க ஆரம்பித்தாள். பூஜைத்தட்டுடன் வந்த பிராமணப்பெண் ஒருத்தி வெள்ளை உடுப்பால் அவளின் மார்பை மூடியிருந்தாள். அவளின் கையிலிருந்த பழத்தைப் பார்தாள். அது உள் நாட்டில் விளைவதல்ல. பக்கத்தில் எந்தக் காட்டிலும் கிடைக்காது. ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்த பழம்தான். சிவப்பாய் உருண்டையாய். ஏலக்காயும் மிளகும் கொடுத்து மாற்றாகக் கூடப் பெற்றிருப்பார்கள். அவளின் தலைமுறை முந்நூறு ஆண்டுகளாய் சுவைக்காத பழம் அது என்று சொல்லிக்கொண்டான் . செல்வ பகவானே இதெல்லாம் என் மகளின் கண்களில் படுகிறதே .அவள் விரும்பி அதைக்கேட்டால் நான் எங்கு போவேன். எவனிடம் போய் என் மகளுக்காக நிற்பேன். ( ஜெ. அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு
தனிமனிதன் : சிந்து சீனு கதைகள் இது சிந்து சீனுவின் ஐந்தாம் சிறுகதைத் தொகுப்பு. குறுகிய காலத்தில் ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், இரண்டு கவிதைத்தொகுப்புகள் என வெளியிட்டிருக்கிற வேகத்திற்கும் படைப்பு மன நிலைக்கும் வாழ்த்துக்கள் சிந்து சீனுவின் கதைகள் வெகு எளிமையான வார்த்தைகளில், வெகு எளிமையான மனிதர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொல்பவை . இந்த எளிமை பல சமயங்களில் ஏமாற்றக்கூடியது. உதாரணமாய் அசோகமித்திரனின் கதைகள் வெகு எளிமையாக இருந்தாலும் சுலபமாகக் கடந்து போய் விடமுடியாதவை எளிமையான மனிதர்களைப்பற்றியச் சித்திரங்கள் என்பது நவீன கதைகளில் புறம் தள்ளும் விசயமாக பல சமயங்களில் நின்று விடுகிறது. எழுத்து வசீகரம், மொழி லாவகம், அறிவு ஜீவித்தனம் என்ற வகையில் கட்டமைக்கப்படும் சித்திரங்கள் பல சமயங்களில் சீட்டுக்கட்டுகோபுரம் போல் நொறுங்கிவிடக்கூடியவை. சிந்து சீனு எளிய வார்த்தைகளில் கட்டமைக்கும் மனித வாழ்வியல் சார்ந்த எண்ணங்கள் பெரும்பாலும் அறம் சார்ந்து கேள்வி கேட்பவை. நியாயம் கோருபவை. துப்புரவு தொழிலாளிகளின் துயர வாழ்க்கையைச் சொல்லும் போது அவர்களின் மரபு தொடர்கிற அவலம் ஒரு பெண் வாயிலாகச் செல்கிறது. சமையல் சிலிண்டர் சுமக்கும் தொழிலாளிகளைப்பற்றிச் சொல்லும் போது முதலாளித்துவ உலகில் வேலை பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பில்லாமல் தலைகளை வெட்டக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருதலைமுறையையேக் காண்கிறோம். வீட்டு விலங்குகள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் பாசமும் பிணைப்பும் வெள்ளையன் போன்ற கதைகளில் வெளிப்படுகிறது . வெற்று மூட நம்பிக்கையும் சடங்குகளும் இவரின் பார்வையில்விமர்சனத்திற்குரியவை என்பதை பல கதைகளில் தொடர்ந்து காட்டுகிறார். பரிகாரம் கதையில் அன்ன தானம் செய்பவனின் நேர்மையற்றத்தனம் காட்டப்படுகிறது .. தாதாவாக மிரட்டிக்கொண்டிருப்பவர்களுக்கான பதிலடி பிரியாணி கதையில் கிரிக்கெட் தளத்துடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. மூடர் நம்பிக்கை கதையில் அப்பா தரும் நம்பிக்கையும் சுதந்திரமும் ஒரு பெண்ணிற்கு பெரும் பேறாகிறது . புதிய தலைமுறையின் நம்பிக்கைக்கீற்றாக இளைஞர்களும் பெண்களும் பல கதைகளில் வருகிறார்கள். இந்த நம்பிக்கையை சிந்து சீனுவின் படைப்புலகமும் அவரின் அறிவியல் இயக்க செயல்பாடுகளும் மனிதர்களுடனான நேசமும் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது -சுப்ரபாரதிமணியன் (ரூ110 , லாவண்யா பதிப்பகம், வேலூர் / 6380154198 )
தடை சிறுகதை : சுப்ரபாரதிமணியன் வீட்டு விலங்குகள் தடை செய்யப்பட்ட நாளிலும் சூரியன் பிரகாசமாக தகித்துக்கொண்டிருந்தான் .மதிய நேரம். எப்போதுமில்லாத பரபரப்பில் சுரேந்திரனின் வீடு இருந்தது. சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தக்காவல் துறைக்காரர் கையிலிருந்த பூனை மியாவ் என்றபடித் தலையைத் திருப்பி அவரைப்பார்த்தது. அதன் குரலில் அபயம் கேட்கும் பிச்சைக்காரத்தனம் இருந்தது. “ இந்த வீட்டில் தடை செய்யப்பட்டதா இது இருந்தது. வேறெ எதையும் காணம். விட்டிருவமா. இன்னமும் தேடுவம் “ பூனையின் மியா கதறலும் சற்றே திமிறிக்கொண்டிருந்ததும் அந்தக் காவல்துறைக்காரருக்கு எரிச்சலைக்கிளப்பியதை அவரின் முகம் தெரிவித்தது. அவரின் காலடியில்பட்டு உருண்ட பிளாஸ்டிக்குவளையின் உருளல் சத்தம் பலரைத் திரும்பிப்பார்க்கச் செய்தது. சுரேந்திரன் குடும்பத்தினர் உடம்பைக்குறுக்கிக்கொண்டு வீட்டினுள் அடைந்து கிடந்தார்கள். அவரின் எட்டு வயதுக்குழந்தை உள்ளேயிருந்து ஓடி வந்து கேட்டைக்கடந்து செல்லும் காவல் துறைக்காரரை ஏக்கத்துடன் பார்த்தது. தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அவரவர் வேலையைப்பார்த்தபடி பூனையின் மியாக்கதறலையும் எட்டு வயதுப்பெண்ணின் ஏக்கமானப்பார்வையையும் நிராகரித்து நகர்ந்து கொண்டிருந்தார்கள் நகரத்தில் வீட்டு விலங்குகள் வைத்திருக்கக்கூடாது என்ற தடைச்சட்டம் அமுலுக்கு வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. யாரும் அவற்றைக்கொண்டு ஒப்படைக்கவில்லை .காவல்துறையும் அவர்கள் கால் போனப்போக்கில் ஏதாவது வீடுகளுக்குச் சென்று வீட்டிலிருக்கும் விலங்குகளைக் கைப்பற்றி தங்களின் வாகனத்தில் போட்டுக் கொண்டு போய் சிறைச்சாலையின் ஒரு பகுதியில் அடைத்து வைத்தனர். வீட்டு விலங்குகளென்றால் நாய், பூனை, எருமை, மாடு என்பவை அடங்கும். தடைச்சட்டம் அமலுக்கு வந்ததில் எலீசர் வீட்டில் நடந்த சம்பவம் காரணமாக இருந்தது. * எலிசர் வீட்டில் வாடகைக்கு இருந்த இருளப்பன் போதைக்கடத்தலில் மாட்டியிருந்தான். அவனின் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க எலிசர் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். . அவர் யேசுவே என்ன சோதனை என்று அலறிக்கொண்டிருந்தார். . இருளப்பன் பற்றி எதுவும் தெரியாது . வாடகைக்கானப் போர்சன் நாலைந்து மாதங்களாய் காலியாகக் கிடந்தது. இருளப்பன் குறிப்பிடத்தக்க தனியார் நிற்வனத்தில் வேலை செய்வதாகச் சொன்னான். அவர் கேட்ட மூன்று மாத அட்வான்ஸ் பணத்தை உடனே கொடுத்து விட்டான். பதினைந்தாயிரம் என்பது அரசில் ஓய்வு பெற்றவருக்கு பெரிய தொகை. அவன் ஒற்றை ஆள் என்பதில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் , கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்வதில் சிக்கனம் இருக்கும் என்பதால் உடனே சம்மதித்து விட்டார். இரண்டு மாதங்கள்தான் முழுசாய் வாடகை வாங்கியிருந்தார், அலிசர் யேசுவுக்குப்பயப்படுவது போல் வசவுக்கும் பாவ புண்ண்யங்களுக்கும் பயப்படுபவர் . அவருக்குத் துணையாக சீசர் என்ற நாய்க்குட்டியும் நயனதாரா என்ற பூனைக்குட்டியும் வீட்டில் இருந்தன . ஆவர் மனைவியை அவர் துணையாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர் ஒரு சீக்காளி. அவளுக்கு சேவை செய்வதில் அலுப்பு வந்து விட்டது அவருக்கு. ஓய்வு வாழ்க்கையை மனைவிக்கு சேவகம் செய்வதில் அவர் கழித்து வந்தார் என்பதால் அந்த அலுப்பு. யேசுவுக்குச் சேவை செய்து காலத்தைக்கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். அவரின் துரதிஷ்டம் இப்படியாகிப்போயிற்று. இருளப்பன் வாடகை வீட்டுக்காரனாக வந்து சேர்ந்ததும் அவரின் துரதிஷ்டத்தில் சேர்ந்து போனது . இருளப்பன் பற்றிய விசாரணைக்கு காவல்றையின் கீழ்மட்ட அதிகாரி ஒருவர் வந்தார். நாற்காலியில் சவுகரியமாக அவரை உட்கார வைத்து அவரை நன்கு உபசரித்தார் எலிசர். உள்ளூர பயம். உடம்பு சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது அவருக்கு. இருளப்பனைபற்றி விசாரணைத்துவங்கியதும் உடம்பு சோடியம் குறைபாடு உள்ளவனின் சிரமங்கள் போல் நடுங்க ஆரம்பித்தது. இருளப்பனின் ஆதார் கார்டு., வாக்காளர் அடையாள அட்டைப்பிரதிகள் மேல் நம்பிக்கை வைத்து வாடகைக்குக் கொடுத்ததாகச் சொன்னார்.. கேள்விகள் சற்றுத் தாறுமாறாக ஆரம்பிக்கவே எலிசர் உடம்பின் நடுக்கம் அதிகமானது. அப்போதுதான் சீசர் அவரைக்காப்பாற்றும் பொருட்டு சற்றே குலைக்க ஆரம்பித்தது. காவ்லதுறைக்காரரின் கேள்விகள் அதிக பட்சமாய் மிரட்டுவது போலிருக்க சீசரின் குரல் சற்றே உயர்ந்தது. எலிசரை எச்சரிக்கை செய்யும் விதமாய் பேசியவரை நோக்கி மெல்ல நகர்ந்தது. காவல்துறைக்காரர் எழுந்து நின்று சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைச் சொன்னபோது அவர் மேல் சீசர் பாய் ஆரம்பித்தது. அந்த அறையின் வலது மூலையில் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நயனதாரா ஏதோ விபரீதம் என்பதாய் எண்ணி எஜமானனைக்காப்பாற்ற சற்றே முன்னேறி அவர் மேல் பாய ஆரம்பித்தது. அவர் வேறு வழியில்லாமல் அறையை விட்டு அவசரமாய் வெளியேற துரத்திச் சென்று சீசரும் நயனதாராவும் அவர் மேல் பாய்ந்தன. அவரின் வேகம் அதிகமாகி அந்த வீட்டு முகப்பு கேட்டை முன்புறம் பூட்டி விட்டு வெளியே போனவர் தெருவில் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். சீசர் கேட்டை உலுக்கியபடி வெளியே வர முயற்சித்தது. சட்டென மதில்சுவரில் மீது ஏரி உட்கார்ந்து கொண்ட நயனதாரா இன்னும் உறுமியது. காவல்துறைக்காரர் அப்போதுதான் தன் கைகளைப்பார்த்தார். சற்றே கீறல்கள். கொஞ்சம் ரத்தத் துளிகள் தென்பட்டன. கீறியது யாராக இருக்கும். . நிச்சயம் எலிசராக இருக்க மாட்டார் அடுத்த நாள் பெரும் படையுடன் காவல்துறை வந்து சீசரையும் நயனதாராவையும் பிடித்துக் கொண்டு போனது . நயனதாராவைப் பிடிப்பதற்கு அவர்கள் சிரமப்பட்டார்கள் அறைக்குள் அங்குமிங்குமோடியடி வேடிக்கை காட்டியது. கொஞ்சம் ஈறும் பல்லும் தெரிய உறுமியது.. கடைசியில் அவர்கள் விரித்த வலைக்குள்தான் மாட்டியது.. காவல்துறைக்காரர் ரத்தம் சிந்தியதால் இனி வீட்டு விலங்குகள் வளர்க்க அனுமதியில்லையென்ற அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. வீட்டு விலங்குகளை ஏவி விட்ட குற்றத்திற்காக் 123456 சட்டத்தின் கீழ் எலிசர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது . * காவல்துறை உடுப்பு இல்லாமலேயே ஒரு வீட்டில் பூனையை கைது செய்து வந்ததாகச் சொல்லியபடி இன்னொருவர் வந்தார். . பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து வரும் நடுத்தரவயதுப் பொண்னொருத்தி அவர் கையில் இருந்த பூனையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். “ என்னமோ தாகமா இருக்கும் போல இருக்கு. பூனைக்கு கொஞ்சம் தண்ணி குடுங்க “ “ வெறும் பூனை இல்லே .. புஸ்ஸி..” “ அமாமா. புஸ்ஸி நல்லாத்தா இருக்கு அந்தப்பேர். நயனதாரா பூனை கூட இப்போ எங்க கஷ்டடியிலதா “ ஒரு வீட்டுப்பூனை ஏதோ சிரமம் கொடுக்க அதைச் சாக்கில் போட்டு மொத்து மொத்தென்று அடித்த அந்தப்பெண் கவனித்திருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அது வீர் என்று ஏதோ சத்தம் போட்டது. பின்னால் அடங்கிப்போய் விட்டது. இந்தப்பூனைக்கு அப்படி எதுவும் ஆகி விட வேண்டாம் என்று நினைத்தாள். குடத்தில் இருந்த நீரைச்சாய்த்து உள்ளங்கையில் வைத்து பூனையின் வாய் அருகில் கொண்டு சென்றார். “ இந்தப் பூனையை சுலபமாத்தா பிடிச்சிட்டேன். ஆனாஅந்த வீட்லே இருந்த குழந்தைக அழுத அழுகையெத்தா சகிக்க முடியலே. அதுங்களோடப் பெட்டாமா “ “ அய்யோ பாவம், குழந்திகளுக்கு எவ்வள்வு நஷ்டம் ‘ ” இதெச் சாப்பிட்டா எந்த பெரிய நோயெல்லாம் போயிருமாமா . கொரானா கூட “ “ சார் இந்தக்கதையெல்லாம் பரவிடப்போகுது. அப்புறம் எந்த வீட்டிலியும் பூனைக இருக்க முடியாது. அப்பபுறம் எலிகளெ எப்பிடி ஒழிக்கிறதாமா “ அந்தப்பெண்ணின் வீட்டில் எலித்தொல்லை அதிகம்தான். பல சமயங்களில்பாத்திரங்களை உருட்டி விட்டுப் போய் விடுகிறது. அவள் முன்பு குடியிருந்த வீட்டில் இப்படி இரவுகளில் பாத்திரங்கள் கீழே விழுவதும் உருள்வதும் நடந்திருக்கிறது. அந்தப்பெண்ணின் மாமியார் ஏதோ ஆவி நடமாடுகிறது என்று பயந்திருக்கிறள். அப்படி பாத்திரங்கள் உருளும் சமயங்களில் எழுந்து உட்கார்ந்து கைக்கூப்புவார். கண்களில் நீர் வழிய மன்றாடுவார். “ நாஙக் இந்த இட்த்தை விட்டு போயர்றம். எங்களெ ஒண்னும் பண்ணாதே “ . மாமியார் அப்படி வேண்டியபிறகு பாத்திரங்கள் உருள்வது குறைந்து விட்டதாம், அப்புறம் அந்த வீட்டையும் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள் . * எலிசர் ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விட்டார். சீசரும் நயனதாராவும் சிறையில் கிடப்பது அவருக்கு இம்சையாகத்தான் இருந்திருக்கிறது. எலிசருக்கு வீட்டு விலங்குகளை காவல்துறையினர் கைப்பற்றியோ கைது செய்தோ கொண்டு போவதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்,. “ சார் ஜெயில் எல்லாம் போயிட்டு வந்திட்டீங்க. இந்தப்ப்பிரச்சினையிலெ ஜெயிலுக்குப்போன மொதல் ஆள் நீங்க தான் “ பக்கத்து வீட்டு கொண்டப்பன் கேட்டார் “ அந்த அனுபவமெல்லா எப்பிடி. பின்னி ஒரு காலத்திலெ இதெ வச்சு உங்களுக்கு பெரிய மரியாதை கிடைக்கும் . சிறை சென்ற தியாகின்னு கூட “. கொண்டப்பன் வாயில் புகையிலையைப்போட்டு அதக்கிக்கொண்டிருப்பார். அவர் அவ்வப்போதும்பீடிதான் குடிப்பார். கொரானா காலத்தில் சிக்கனம் கருதி சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறியவர் பின்னால் பீடியை நிரந்தரமாக்கி விட்டார். “ வீட்டு விலங்கிலெ மாடு எருமையெல்லா வராதா எலிசர் “ “ வரும்கறாஙக். சிட்டியிலெ சில இடங்களேள்லே எருமைக இருக்கு. அதெல்லா எங்க சீசரும் நயந்தாராவும் எனக்காகப் போராடின மாதிரி கொமபெச்சீவிட்டு முட்ட வந்த இந்தப் போலீஸ்காரங்களுக்கும் ராணுவத்துக்க்காரங்களுக்கும் சிரமம்தானே “ ’” நிச்சயமா . அப்புறம் மாடு எருமைகளுக்கெல்லா கொம்பு இருக்கக்கூடாது . அறுத்தெறிங்கன்னு சட்டம் வந்திரும் “ “ அதுகளோட கொம்புகளே அறுத்தெறிய அது படற கஷ்டம் நினைக்கறப்போ சங்கடமா இருக்கு சார் ” கொண்டப்பன் வீட்டில் மாடி வீட்டுத் தோட்டம் ஒன்று இருந்தது. ஒருநாள் வீட்டு விலங்குகளைக் கைப்பற்றவோ கைது செய்யவோ வந்த காவல்துறை அதிகாரி கொண்டப்பனின் மாடி வீட்டுத் தோட்டத்திற்கு விஜயம் செய்தார், “ வீட்டு விலங்குகளைப் பிடிக்கப்போகும்போது அவை கீறி சிரமம் செய்கின்றன. அவற்றின் நகங்கள் கைகளி உடம்பில் பதிந்து விடுகின்றன. அது விசமாக மாறாமல் இருக்க உங்கள் வீட்டு மாடி வீட்டுத் தோட்டத்தில் ஏதாவது மூலிகைகள் இருக்கிறதா “ என்றார். . “ . நாங்கள் தொட்டிச்செடி போல் வளர்க்கும் கொஞ்சம் கீரைகளும் தொட்டாச்சிணுங்கிச் செடிகளு இதற்குப் பயன்படாது அய்யா “ என்று திருப்பி அனுப்பி விட்டார். “ “ இருந்தாலும் மூலிகை ஆராய்ச்சித்துறையினர் கவனத்திற்கு இதைக்கொண்டு செல்வேன் “ மூலிகைகளை அவர் தேடியது போலவே எங்காவது கொண்டு சென்று இந்த வீட்டு விலங்குகளை குறிப்பாக நாய்களையும் பூனைகளையும் அடைத்து வைப்பதை விட அவற்றை உணவுப்பொருளாகப் பயன்படுத்தலாமா என்பது பற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஓடிக்கொண்டிருந்தன. வடகிழக்கு மாநிலத்தைச்சார்ந்தக் கட்டிடத் தொழிலாளிகள் நாய் உணவை சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தனர் என்பது பலரும் அறிந்த செய்திதான். நாய்கள் காணாமல் போய் விட்டால் அவர்களையே பலர் கை காட்டினர் . கைகால் நடுக்கம், உடம்பு தடுமாறலுக்கு பூனைக்கறி நல்லது என்ற வதந்தியும் பரவிக்கொண்டிருந்தது. மாட்டுக்கறியை வைத்திருப்பவர்களை அடித்தேக்கொல்லலாம் என்ற எழுதப்படாத சட்டம் வடநாட்டில் நடைமுறையில் இருந்தது.அது பலருக்கு உவப்பாக இருந்தது தென்னாட்டிலும் அது வர வேண்டும் என்று பலர் வேண்டிக்கொண்டிருந்தார்கள். “பூனை சாப்பிடப்பழகலாம் “ என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தது. புளு கிராஸ், ரெட் கிராஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அந்த இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புக்குரலும் எழுப்பிக்கொண்டிருந்தனர். * எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன. இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட மாட்டார்களா . அவர்களுக்கு இயேசு ஆசி செய்ய மாட்டாரா “ என்பது தான் எலிசரின் சமீபமான கவலையாக இருந்தது. அந்தக்கவலையுடன் வாசலில் நின்று வேடிக்கிஅ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சிறைக்குச் சென்று வந்தவர் என்ற வகையில் அவரை தியாகியாக நினைத்து மரியாதி செய்து கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். தெற்ர்குத் தெரு குறுக்குச் சந்தில் இருந்து கவல்துறை உடௌப்புடன் ஒருவர் ஓடி வந்து எலிசரைக்கடந்து சென்றார். வீட்டுவிலங்குகளை ப் பிடிக்க ஒரு வீட்டிற்குச் சென்ற போது அந்த வீட்டில் இருந்த எரூது ஒன்று காவல்துறைக்காரரை விரட்டி மொண்ணையானக் கொம்பால் குத்தி ரத்தம் வழிய செய்து விட்டதாம். அவர் உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருந்தார். • இனி வீட்டு விலங்குகளைப்பிடிக்கும் முயற்சியில் எருமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொலைக்காட்சியில் அவசரச் செய்தி வழக்கமான டொய் டொய் சத்தத்துடன் வெளியாக ஆரம்பித்தது.
இரக்கம் : சுப்ரபாரதிமணியன் சசியின் கையிலிருந்த சிறு அட்டைத்துண்டைக்கூர்ந்து பார்த்தாள் அன்னபூரணி. அவள் முகம் இருளடைந்து தொங்கிப்போயிற்று. அவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் த்தும்பியது “ என்னடி இது “ தப்பு நடந்து போச்சக்கா “ “ அடி பாவி மகளே இப்பிடி வந்து நிக்கறியாடி .. யாரு காரணம் . இந்தவீட்லே இருக்க விட்டதுதானா தப்பு “ “ அவசரப்படாதேக்கா.. உனக்கு அதிர்ச்சிதா உடனே என்னோட நல்லா சிரிச்சுப் பேசறது பாவா நெனப்புலே வர்றாரா. அதெல்லா இல்லெ ..இது க்கு என் பாய் பிரண்ட்தா காரணம் “ “ அய்யோ இதெ நான் உங்க பாவாகிட்ட மொத்ல்லே எப்பிடி மறைக்கிறது . குளியலறைக்குள் சட்டென நுழைந்த அன்னபூரணி சசி கண்ணாடியைப்பார்த்தபடி நின்று கொண்டு பிரகன்ன்சி கிட்டைப்பார்த்துக்கொண்டிருந்ததைப்பார்த்து அதிர்ந்து போனாள். அது இரட்டைக்கோடுகளைக்காட்டியது. சசி முன்னதாக் சிறுநீர் சொட்டுக்களை அதில் விட அது இரண்டு கோடுகளைக்காட்டியது. ஒற்றைக்கோடாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள். ஆனால் அது அவளுக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. காலையில் நானே பால் வாங்கப்போறன் என்று சசி கடைக்குக் கிளம்பிய பாவாவிடம் சொல்லி விட்டு சென்றாள். மருந்துக்கடையில் பிரகன்ன்சி கிட்டை வாங்கினாள். அவசரகதியில் குளியறைக்குள் நுழைந்து சோதிக்க ஆரம்பித்து விட்டாள் சசியின் உடம்ப்பில் வியர்வை வழிந்தோடியது. வலது மூலையில் கிடந்த பாவாவின் அழுக்குத்துணிகள் அருவருப்பூட்டின.சுவரில் தெரிந்த திட்டுத்திட்டான அழுக்கு அக்கா எவ்வளவு வேலையைத்தான் செய்வாள் என்ற யோசனையைத் தந்தது . அவளின் தனியார் நிறுவன வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் போய் விடுகிறது எப்பவாவது ஞாயிறில் அருணோடு கொஞ்ச நேரம் இருக்க முடிகிறது. மற்றபடி அருணைச்சந்திப்பது அவளின் மதிய உணவு இடைவேளையில்தான் . இன்றைக்கு அலுவலகம் புறப்படுகிற கதியில் தான் ஏனோ இதைப்பரிசோதனை செய்து விட வேண்டும் என்று நினைக்க வைத்தது அவளின் உடல் சோர்வு.. அருணுடன் இருந்த ஒரு இரவின் அரை மணி நேரம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. எந்த மருத்துவ மனைக்கும் இந்த நேரத்தில் இதற்கெல்லாம் சென்று விட முடியாது. முதலில் கொரானா பரிசோதனை . பிறகுதான் மற்ற பரிசோசதனைக்குப் போவார்கள். பலருக்குத் தெரிந்து விடும் மருத்துவ மனைக்குப் போவதை விட பிரகன்ன்சி கிட்டை வாங்கிச்சோதிப்பது எவ்வளவோ மேல் என நினைத்தாள். அதுவும் முப்பது ரூபாய்க்குக் கிடைத்தது. உடம்பில் பூரான் ஊறுவதைபோல் அருணுடன் இருந்த அந்த இரவின் கொஞ்ச நேரம் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. பூரான் அழுத்தமாகவே உடம்பைப்பதம் பார்த்து விட்டது. அப்பா அம்மா இறந்த பின்னால் அக்காவோடு சேர்ந்து கொண்டாள். பாவாவும் அவளை மகளைப்போலத்தான் நடத்தினார். ” எப்பிடி ஆச்சு சசி “” “ என்னமோ ஆயிருச்சுக்கா. சந்தேகப்பட்டேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து வெளியே தெரியாமெப் பண்ணீக்கலாம் அக்கா “ “ முடியுமா ‘’ “ முடியும் அக்கா. மொதல்லே பாவாவுக்கு சந்தேகம் வராமெப்பாத்துக்கணும் “ “ ” அய்யோ நல்ல மனுசன் அவரு. இதெப்பாத்ததும் சட்டுன்னு அவர் ஞாபகம்தா வந்துச்ச்சு. எவ்வள்வு கேவலமா நெனச்சம்ன்னு இருந்துச்சு .பொம்பளெ மனசு பின்னே எப்பிடி நெனைக்கும். எப்படி நடந்து. ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா. சிட்டிப்பொண்னு. சிட்டி இதியெல்லாம் சொல்லிக்குடுக்கலியா ”” எப்பிடியோ அயிருச்சுக்கா. என்னை விட நீதா நிதானமா இருக்கணும் . ஏன்னா நீ பாவாவுக்கும் மத்ஹ்டவங்களுக்கும் பதில் சொல்ற எடத்திலெ இருக்கே ” அந்த ஞாயிறில் மாலையில் திருவேற்காடு அம்மன் கோயிலில் பார்க்கலாம் என்று அருண் சொல்லியிருந்தான். கொஞ்சம் அரட்டை.. ஓட்டலில் சாப்பாடு என்று பொழுது போனது. கொஞ்சம் மழைத் தூற ஆரம்பித்திருந்தது, மெல்லக்கிளம்பி விட நினைத்து வண்டியை ஓட்டினான் அருண். சட்டென வழுக்கிக்கொண்டு வந்து ஒரு காரில் மோதி விழுந்து விட்டான் . கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த ஒருவன் வண்டிகீழே விழுந்து கிடக்க மெல்ல எழுந்து நிற்க முயற்சித்த அருணைப்பார்த்தான். அவன் எழுந்து நிமிர்ந்து நின்றதும் ஓங்கி அறை வைத்தான், சசி கார்தான் மோதி விட்டது சண்டையாகப்போகிறது என்று நினைத்தாள். ஆனால் கார்க்காரன் முந்தி விட்டதைப்போல் கையை ஓங்கி விட்டான். அருண் கார்க்காரன் மேல் வசவைப்பொழிவான் என்று நினைத்திருந்த போது இப்படியாகி விட்டது . அடித்த கையோட கார்க்காரன் முன்புறத்தில் ஏதாவது கீறல் ஆகியிருக்கிறதா என்று நோட்டமிட்டபடி காரின் உள்ளே சென்று விட்டான் . அருணின் கண்களில் கதகதவென்று நீர் தளும்பியது. பைக்கிலிருந்து விழுந்த வேகத்தில் ஏதாவது காயம் ஆகியிருக்கிறத என்று தேட ஆரம்பித்தாள். மீண்டும் வண்டியில் உட்கார்ந்து ஓட்டுவதில் அவனுக்குச் சிரமம் இருந்தது.கொஞ்சம் நின்று போகலாம் என்றாள். ” பிளாட்டுக்குப் போயிடு அருண் . நான் ஆட்டோ புடீசிட்டு போயிடறன் “என்றாள் சசி. அருணும் அவனின் அறைக்குள் சென்றபோது அவனின் முகம் உடம்பு வலியை வெளிப்படுத்தியது போல் சுருங்கியது. படுக்கையில் கிடக்கக் கூட சிரமப்பட்டான். கொஞ்ச நேரம் அவனுடன் இருந்த அப்போதுதான் நெருக்கமாக இருக்க வேண்டியாகிவிட்டது அவளுக்கு. “ அருண் படற அவஸ்தெயெப்பாத்து இரக்கப்பட்டுட்டேன் அக்கா அதுலெ வந்த வினைதா “ “ ஆம்பளைகளெப்பாத்து இரக்கப்படக் கூடாது ..இரக்கப்படக்கூடாது சசி “
தோழர் தேனரசன்: சுப்ரபாரதிமணியன் ” வாசலிலே மரண நெடி வாழ்ந்ததை மனத்திரையில்…. தன்னை இழந்துலகு பெறும் தத்துவத்தின் ஞானம்.. ..ஓ” தோழர் தேனரசன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருந்தபோது பல சமயங்களில் அவரின் இந்த கவிதை வரிகளை மனதில் கொண்டுவந்திருக்கிறேன் சென்ற ஆண்டு இரண்டு வானம்பாடி இயக்கக் கவிஞர்களைச் சந்தித்தேன் .ஒருவர் சக்திக் கனல். மெலிந்த உடல் ஆனால் திடமான மன பலம் . உடல்நலக்குறைவு எதுவுமில்லை உற்சாகமாக இருந்தார். சந்தித்த இன்னொருவர் தோழர் தேனரசன் .அவரின் உடல்நலக்குறைவு மனதில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது “ இந்த மழை போதாது இன்னுமிது பொழியட்டும் “ என்று கவிதை காட்டும் வாழ்க்கையாகட்டும், வாழ்க்கை அனுபவம் ஆகட்டும் எல்லாவற்றையும் வரவேற்றவர் உடல்நலக்குறைவால் தொடர்ந்து இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது தமிழ் கவிதையில் அந்நிய உலோக வாசனை கமழும் சூழலில் நம் மண் வாசனையை முழுக்க “ மண் வாசலில் ”கொண்டுவந்தவர் . ” மழை விழுந்தால் சேறாகும் அது மண்வாசனை ” என்று சொன்னவர் ஆனால் நோய் விழுந்து அவருடைய உடல் சேறாகி விட்டது என்பதை பல சமயங்களில் கண்டிருக்கிறேன் “ நான் எந்த நான்” என்று அவர் கவிதையில் கேட்பார் அந்த தத்துவ விசாரத்தை அவர் என்றும் மனதில் கொண்டிருந்தார் ஆனால் மனிதநேயத்துடன் கவிதையையோ மனிதர்களையோ அணுகுவதுதான் அவருடைய சிறந்த பாதையாக இருந்திருக்கிறது .அதுவே அவரின் “ நானாக ”விளங்கியிருக்கிறது “ வியப்புகளின் விளிம்பு எல்லை ஆனந்தங்களின் பரிபூரணம் அனுபவங்களின் மகோன்னதம் “ என்று கவிதையை வரித்துக் கொண்டவர் தொடர்ந்து நாங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பதை பற்றிச் சொல்லுகிற போது ஆனந்தம் கொள்வார் .அப்படி அவர் ஆனந்தம் கொள்வதற்கே நிறைய எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றும். “ நில்லும் எனக்கினி நேரமில்லை நீண்ட வழி போக வேண்டும் அம்மா ”என்ற அவரின் ஒரு கவிதை சொல்வது எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது . அந்த நீண்ட வழியை காட்டியவராகத்தான் தோழர் தேனரசன் இருந்தார், “ காலம் என்னைக் கவிஞனாய் சமைத்தது கவிதைகளால் நான் ஒரு காலத்தை விதைத்துவிட்டேன் “ என்று சொன்னவர். புதிய எழுத்தாளர்களின் தலைமுறையில பலர் கவிதை வித்துக்களை தூது விட்டு சென்றிருக்கிறார் . பொள்ளாச்சி இளம் கவிஞர்கள் பட்டாளமே அதற்கு அடையாளம் “வந்துபோகும் சுகதுக்கங்கள் அலை போல வாழ்க்கைக் சத்தியமாய் நிற்கும் கடல் போல” என்று கவிதையில் சொன்ன தோழர் தேனரசன் ”காணும் இயற்கையை கேட்கப் பழகியதால் கணக்கில்லாத ஞானம் கைவசமாகும் ” என்று வழி காட்டியவர் .அந்த ஞானத்தை கவிதை இயக்கம், பள்ளி செயல்பாடுகள், சமூக அக்கறைகளில் தொடர்ந்து காட்டியவர் மரண பிச்சை என்ற அவர்களுடைய கவிதை ஒன்றில் இடம் பெற்றிருக்கிற எலும்புக்கூடு தோற்றம்தான் அவரைப் பற்றிய நினைக்கிற கடந்தப் பல ஆண்டுகளில் மனதில் வந்து நின்றது ”பச்சை அரும்புக்கு பாடம் ஆகிறதே “ என்று மரணத்தைப்பற்றி சொல்லியிருப்பார். கொரானா தொற்று காலத்தில் அப்படி ஒரு மரணம் அவருக்கு வாய்த்தது என்பது நினைத்துப் பார்க்கையில் சங்கடம் தருவதாக இருக்கிறது ”இந்த மழை போதாது இன்னும் இது பொழியட்டும் ” என்ற ஆசையை நாம் இலக்கிய தளத்தில் விதைத்துக் கொண்டு இருப்போம். அது அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்
தேவானை நாவல் ; ஜவாஹர் பிரேமலதா சுப்ரபாரதிமணியன் 9486101003 நெசவாளர் சமூகம் பற்றிய நாவல்கள் தமிழில் தொ மு சி ரகுநாதன் அவர்களின் பஞ்சும் பசியும் முதற்கொண்டு என்னுடைய சப்பரம், தறிநாடா போன்ற நாவல்கள் வரை பல படைப்புகள் வந்திருக்கின்றன.. இவற்றில் பெரும்பான்மையானவை மூன்றாவது நபரின் அனுபவமாக எழுதப்பட்டவை.. அதுவும் பெண்களின் அனுபவம் சார்ந்தும், பெண்களை மையப்படுத்தியதாக இந்நாவல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நெசவாளர்கள் சம்பந்தமான முழுமையானஒரு நாவல் தேவானை வெளிவந்திருப்பது தமிழ்ச்சூழலில் கவனிக்கப்படவேண்டிய ஆகும் , இந்த நாவல் 1950 லிருந்து 75 வரைக்கும் சுமார் 25 ஆண்டுகளுகளுக்கான காலத்தை களனாகக் கொண்டிருக்கிறது. சேலம் பகுதிவாழ் நெசவாளர்கள் இந்த கதாபாத்திரஙகளாக இருக்கிறார்கள். .நெசவு தொழில் பெருமையும் பாரம்பரியமும் கொண்டது . அந்த தொழில் மெல்ல தன் சிறப்பை இழந்து நசிந்து போவதையும் விசைத்தறி வருகையும் அதன் பின்னான எதிர்வினைகளுமாக வெளிவந்திருக்கிறது ஒரு முக்கியமான காலகட்டத்தை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது .நெசவு நலிவடைகிற போது நெசவாளிகளில் சிலர் நாடக ஆர்வத்தினால் நாடகத் துறைக்கு செல்கிறார்கள். அங்கும் கஷ்டப்படுகிறார்கள் .சிலர் அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்கிறார்கள் .வேறு வேலைக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள் .கொஞ்சம் படித்து வேலைக்காக முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து பெண்கள் அந்தத் தொழிலுக்கு உதவுகிறார்கள் ..ஆண்களின் சிரமங்களில் பங்கேற்கிறார்கள் .பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே அவர்களை வெளியே அனுப்புகிற பழக்கம் இல்லாமல் அவர்களை தறி குழிக்குள் போட்டு நெசவாளிகள் என ஆக்குகின்ற கட்டாய சூழல் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது . அப்போது ஆண்களும் பெண்களும் சமையல் வேலைக்கும் போகிறார்கள். நெசவு வேலையில் முக்கியமானது புட்டா போடுகிற, ,படம் போடுகிற வேலை. கலை நுணுக்கங்கள் கொண்டது . ஆனால் அந்த படம் போடும் வேலையில் அதிக நேரத்தையும் காலத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும் போது கூட போதுமான அளவு கூலி தருவதில்லை என்பது ஒருவகை சுரண்டல் நெசவாளர்களை கூலியைக் குறைத்துக் கொடுப்பதும் பாவு தராமல் பல நாட்கள் இழுத்து அடிப்பதும் வேறு வகையான சுரண்டல். .குடும்பமே நெசவுத் தொழிலில் ஈடுபட வேண்டியிருக்கும். குடும்பமே பாவு போடுவதிலிருந்து புட்டா போடும் வேலை வரைக்கும் செய்ய வேண்டியிருக்கிறது .அதை முதலாளிகளின் இடத்தில் கொண்டு போய்சேர்க்கிற வரைக்கும் பலரும் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு குடும்பம் உழைத்து ஒரு வேட்டியும் சேலையும் நெய்யப்படுகிறது .ஆனால் அதைத் தாண்டி பருத்தியிலிருந்து ஒரு சேலை நெய்ய பட 1350 பேர் உழைப்பு தேவையாக இருக்கிறது என்ற விவரம் பலருக்கு அதிசயமாக படலாம் .ஆனால் அதுதான் உண்மை .சிறுமுகை காரப்பன் போன்றவர்கள் இது போன்ற விஷயங்களை பல கட்டுரைகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள் ஒரு சேலை நெய்ய இவ்வளவு பேரா என்ற ஆச்சர்யம் வரும். .அதான் உண்மை என்கிறார் வேலையில்லாமல் போகிற போதும் தறி அவர்களின் குலசாமி ஆக இருக்கிறது. எப்போதும் அது குல சாமிதான் .” உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு ஊர்சுற்ற மாட்டுக்கும் ஒருபடி கொள்ளு “ என்ற ரீதியில்தான் நெசவாளர்களும் அதை சார்ந்த மற்றவருடைய வாழ்க்கையும் அமைந்து இருக்கிறது இதில் நிற்கதி ஆகிறவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களை. காப்பாற்ற வேண்டியவர்கள் தெருவில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.. இந்த அவலம் இந்த நாவலில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது இந்த ஆசிரியர் நெசவுத் தொழிலோடு வெகுவாக சம்பந்தப்பட்டவர் என்பதால் நெசவுத் தொழில் குறித்த நுணுக்கமான விவரிப்புகள நாவல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன தறி நெய்கிறவனுக்கு சரியாக தூங்கு இடம் என்று இல்லாமல் பல சமயங்களில் தறிக் குழி அல்லது தறிமேடு தான் படுக்கைகென ஆகிப் போகிறது தலைமுறை இடைவெளி என்பது இருந்து சிதைந்த போனபின் வருகிற விசைத்தறியில் கைத்தறி அழிகின்றது. அப்போது கைத்தறி நெசவாளர்கள் இன்னும் நிலை குலைந்து போகிறார்கள். .கைத்தறி மற்றும் விசைத்தறி ஓசை மாறுபாடாக இருக்கிறது விசைத்தறி ஓசை நாரசமாக இருக்கிறது பலருக்கு .நெசவு நசிந்து போகிற சூழலில் அரசாங்கம் ஏற்படுத்துகிற கூட்டுறவு சங்கங்கள் வருகின்றன ஆனாலும் அவற்றிலும் ஊழல்கள் இருக்கின்றன .தனியார் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்துகிற பாதிப்பு அந்த ஊழலை இன்னும் பெரிதாகிக் கொண்டே போகிறது விசைத்தறி வந்தபின் சாக்கடை ஓட்டமும் சாயநீரின் ஓட்டம் அதிகரித்து நீர்நிலைகள் எல்லாம் கெட்டு விடுகின்றன . எல்லா வகை ஜாதிகளும் செய்யக்கூடிய தொழில். அவர்கள் அப்படித்தான் பலரும் அந்த தொழிலில் இணைந்து வேலை செய்கிறார்கள் ஆனால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகிறபோது சிரமப்படுகிறார்கள் . வயதானவர்கள் மட்டும் நெசவு செய்கிறார் இளைய தலைமுறை அதை நிராகரித்து விடுகிறது விசைத்தறி சேலையை தொட்டுப் பார்க்கக் கூட விரும்பாத பழைய தலைமுறை தங்கள் வாழ்க்கை தொலைந்து போவதை எண்ணி பிறரை சபிக்கிறார்கள் கைத்தறி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் படாமல் வறுமையும் அவர்களை வாட்டுகிறது. இதன் மத்தியில் சொந்தமாக தறி வைத்திராத கூலி நெசவாளர்களின் வாழ்க்கை சிரமமாக இருக்கிறது. சுய அடையாளம் இழந்து போகிறார்கள் இப்படி ஒரு பகுதி போகிறது. இன்னொரு பகுதி இயற்கை சார்ந்த விஷயங்கள் முக்கியமானவை.. இந்த மலைகளுக்கு செல்வது .,மலைக்குச் சென்று நீர் அருந்துவது மூலிகைகளைக் கொண்டு வருவது என்பதெல்லாம் கூட நெசவாளர்களின் பொழுதுபோக்காகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவும் இருக்கிறது ஆனால் ஆங்கிலேயர்கள் வந்தபின்னர் ஏரிகள் தூர்ந்துபோய் பலரின் ஆக்கிரமிப்பில் அவை நீர்நிலைகள் என இல்லாமல் போகின்றன சாயப்பட்டறைகள் நீரை கெடுத்துவிடுகிறது. நீர் நிலைகளை காப்பது அந்த நீர் நிலைகளை உபயோகிக்கிற பொதுமக்களுடைய கடமையாக இருக்கிறது .அப்படித்தான் வண்ணார்கள் எனப்படும் மக்கள் எப்படி நீர் நிலைகளைக் காக்க கவனமாக இருக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்புகள் ஆச்சரியமாக இருக்கிறது .அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் நீர் நிலைகளை வணங்கியும் தொழுதும் பாதுகாக்கும் பொதுமக்கள் அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் ஆனால் காலப்போக்கில் இவை மறைந்து விடுவதும் சாயப்பட்டறைகள் வரும்போதும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி விடுவதும் நீர் மாசுபாடு அடைவதும் சொல்லப்படுகிறது குமிழி போன்ற குளங்கள் மூடப்பட்டு விடுவதும் ஏரிகளின் வரலாறை ஞாபகத்தில் கொண்டு வருவதும் அவை காப்பாற்ற முடியாமல் போனதும் ஒரு முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது .பஞ்சாங்கங்களில், காலண்டரில் இடம்பெறும் மழை என்பது வெறும் செய்தியாக பல சமயங்களில் நின்று விடுகிறது மணிமுத்தாறு நதியில் விளைவிக்கப்பட்ட முத்து கோட்டை மாரியம்மனின் அலங்காரத்தில் அவளின் மூக்கில் அணிகலனாய் பிரகாசித்த காலங்கள் உண்டு. ஆனால் அந்த மணிமுத்தாறு சாக்கடையாக, சாயக் கழிவுகள் ஓடக்கூடிய இடமாக மாறிவிடும் அவலத்தை இந்த நாவல் சொல்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்திற்கு வருவதும் வானொலி வந்து மக்களை கவரப்படுவதும் இந்த நாவலில் இன்னும் சில முக்கிய பகுதியானவையெனக் கொள்ளலாம் . நெசவின் நலிவு காரணமாக வேலையை இழந்த சிலர் நாடகத்திலிருந்து திரைப்படத்திற்குப் போகிறார்கள் நாடகத்தில் கோமாளி வேசம் போடும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என்கிறார்கள் ஆனால் அவர்களே திரைப்படங்களுக்கு போய் கொஞ்சம் காசு சம்பாதிக்கிற போது மரியாதை வேறு வகையில் கிடைக்கிறது .இந்த வகையில் எல்லா பாரங்களையும் பெண்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான் இதில் வருகிற சாமிநாதன் என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மனைவி தேவானைம் அமைந்து விடுகிறாள் .அவள் ஆரம்பத்தில் ஒரு குழந்தையை காப்பாற்றுகிற செயலின் மூலம் நாவலில்அறிமுகப்படுத்தப் படுகிறார் .ஆனால் தொடர்ந்து அவள் அந்த குடும்பத்தை காப்பாற்றுகிறார் .பெரிய பாரமும் அவளுக்குள் அமிழ்ந்து விடுகிறது இன்னொரு கதாபாத்திரமான பூபதி தறி நெசவு விஷயத்தில் திறமையானவன். நாடகங்களில் கோமாளி வேஷம் போட்டு வந்தான் .ஆனால் அவருடைய மனைவி அடைகிற கஷ்டங்கள் தொழில் சார்ந்த கஷ்டங்களாக ள் ஆகவே அமைந்துவிடுகின்றன புவனா என்ற கதாபாத்திரம் தற்கொலைக்கு முயன்றது. ஆனால் அதில் இருந்து மீண்டு படிக்கிறாள். ஆனால் அவர் தொடர்ந்து படிப்பதும் பெரிய அரசாங்க அதிகாரியாக வருவதும் அதன் மூலமாக நெசவாளர் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு வருவதுமக இந்த நாவல் முடிவடைகிறது மாடன் தியேட்டர்ஸ், சினிமா தொழில் சார்ந்த அறிமுகங்கள், திராவிட இயக்கங்களின் வளர்ச்சி அதிலும் குறிப்பாக திமுகழக சார்ந்த இயக்க வளர்ச்சி சேலம் இரும்பு தொழிற்சாலை சார்ந்த வாய்ப்புகள் என்று இந்த நாவல் பல்வேறு பரிமாணங்களை கொண்டு இருக்கிறது ,சிறுசிறு சங்குகள், சம்பிரதாய்ங்கள், குடுமப்க்காரியங்கள் என்று நுணுக்கமாக பலவை இடம் பெற்றுள்ளன. புவனா , தேவானை போன்ற கதாபாத்திரங்கள் மூலம் பெண்களுடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டு அவர்கள் நெசவாளர் சமூகத்தின் முக்கிய தூண்களாகவும் எப்படி மாறுகிறார்கள் என்பதை காட்டுவதன் மூலம் இந்த நாவல் பெண்மைய சிந்தனையின் முக்கிய கூறுகளை கொண்டு பெண்ணை சீரழிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நெசவாளர் சார்ந்த வாழ்க்கையோடே நீர்நிலைகள் சார்ந்தும் நீர்மேலாண்மை சார்ந்தும் பல விஷயங்கள் இந்த நாவலில் பேசப்படுகின்றன. ஏரிகளும் குளங்களும் சாதாரண பொதுமக்களின் உபயோகத்திற்கும் அவர்கள் பாதுகாத்து வளர்ப்பதற்கும் இருப்பதும் பின்னால் ஆக்கிரமிப்பும் சுற்றுச்சூழல் கேடும் அவற்றையெல்லாம் இல்லாமல் போகும் இயற்கைக்கு மாறாக நடக்கும் செயல்கள் எல்லாம் இன்றைக்கு கொரானா காலம் வரை விரோதமாக வநது முடிந்திருக்கிறது இந்த பெரும் தொற்று காலம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை சொல்கிறது. இந்த நாவலில் வரும்மழை ஏற்றமும் மலை சார்ந்த சிறு தெய்வங்களின் வழிபாடும் நீர்நிலைகளை காக்க வேண்டிய அவசியமும் சொல்லப்படுகிற போது மனிதன் தொடர்ந்து இயற்கையைத்துன்புறுத்தி வருவதற்கு எதிராக ஒரு முக்கிய குரலாகும் இந்த நாவல் அமைந்திருக்கிறது ( பிரேமா புக்ஸ் , ரூ 400 சேலம் 94884 17411 )
நாராயணபுரம் நாவல்; ராஜாஜி ராஜகோபால் சற்றே பெரிய நாவல் . கனடாவாசி . ஒரு இலங்கைகிராமத்து குடும்ப வாழ்க்கை மூன்று தலைமுறைகளுடன் நடமாடுகிறோம். இயல்பான கிராம சூழல் வளர்ப்பு வாழ்க்கை. விடுதலை இயக்கங்கள் போராட்டம். சிங்கள ராணுவம் அமைதிப்படை காலங்கள். பிறகு போர்க்காலம். இந்த சூழல்களில் ஒரு குடும்பத்து மனிதர்களின் வாழ்க்கை. கோவிலும் விவசாயமும் அழகான வர்ணனைகளால் உயிர்பெறுகிறது. புலிகள் இயக்க செயல்பாடுகள் பற்றி நிறையவே உள்ளன. புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி குடும்பத்தில் இணைய விரும்பும் பெண் ஒருத்தி . நித்யா என்ற காதலி , பாடகி காதலை இழந்து இம்சப்படுபவள் . கதாநாயகனை மணந்து வாழ்க்கையை ஓட்டும் திலகா இன்னொரு முனை. இந்தப்பெண்கள் என்னை பாதித்தார்கள் 1983 இனக்கலவரம் தொடங்கி சுமார் 25 ஆண்டுகளின் பதிவுகள்.குடும்ப நாவலாகவே மேலோங்கி நிற்கிறது முதல் நாவலுக்கு வாழ்த்துக்கள் Discovery book palace Chennai rs 500 சுப்ரபாரதிமணியன்