சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
திருவனந்தபுரம் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003
திருவனந்தபுரம் என்றாலேயே இரண்டு மணி கள் ஞாபகம் வருவர் .ஒருவர் கலை இலக்கிய நடவடிக்கைகளிலும் தமிழ் சங்கத்திலும் ஈடுபாடு கொண்ட மணி. இன்னொருவர் பிரபல பத்திரிகைகள் துணுக்குகளும் சிறு செய்திகளும் எழுதிய மணி இரண்டாம் அவர் இப்போது இல்லை.
முதலாம் அவர் எப்போவும் முதன்மையான செய்திகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்
திருவனந்தபுரம் தமிழ் சங்கம் மற்றும் பிற தமிழ் கலை இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டில் அக்கறை கொண்டவர் மணி அவர்கள்
அந்த அக்கறையின் வெளிப்பாடுகளாக கதை வட்டம் கவிதைகள் வட்டம் இவற்றை திறம்பட நடத்துபவர் மலையாள எழுத்தாளர்களுடன் சரியான தொடர்பில் இருப்பவர். அவ்வப்போது கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிவெளிக் கொண்டிருப்பவர் .அவருடைய ஆறாவது தொகுப்பாக இந்த தொகுப்பு வருகிறது
இந்த தொகுப்பில் பொதுவான அம்சங்களாக நடுத்தர குடும்பங்கள் மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார் சாதாரணமாகக் கஷ்டப்படும் பெண்கள் ஆண் பெண் உறவுகள் மற்றும் குடும்ப உறவுகள் இவற்றைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கிறார் ..
குடும்ப உறவுகளும் ரத்த உறவுகளும் சுமூகமாக இருக்க வேண்டும் என்ற ஆவல் இவருக்கு இருக்கிறது .அதன் வெளிப்பாடாக பல கதைகளை பார்க்கிறோம்
எல்லா கதைகளிலும் சாதாரண வெளிப்பாட்டு முறைதான். பொது உரைநடை மொழி தான் அதன் மூலமாக ஒரு தமிழ் சமூகத்தினுடைய சில அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது .
பிரத்யேகமாக திருவனந்தபுரம் தமிழர்களின் நடவடிக்கைகள்.. வாழ்வியல் சார்ந்த அம்சங்களை இந்த கதைகளில் பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை
..என்றாலும் பொதுவான தன்மை கொண்டிருக்கின்றன .அந்த வகையிலே இவருடைய எழுத்தும் பணியும் முக்கியத்துவம் பெறுகிறது.
எழுத்தில். தமிழ்ச்சங்க நடவடிக்கைகளில் மணியின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் .
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
ReplyForward
Add reaction