சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 28 ஜனவரி, 2020

டாக்டர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவரின் நூல்கள் பற்றி  இக்கட்டுரை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் , நவம்பர் மாதக் கூட்டத்தில் படிக்கப்பெற்றது.  
டாக்டர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவரின் நூல்கள் பற்றி இக்கட்டுரை ..புதிய ஆங்கில நூல் என்சிபிஎச் வெளியீடு இம்மாதம் வந்துள்ளது 
( டாக்டர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவரின் நூல்கள் பற்றி  இக்கட்டுரை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் , நவம்பர் மாதக் கூட்டத்தில் படிக்கப்பெற்றது )
வெற்றிப்படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்
(30-13-3 : டாக்டர் விஜய கார்த்திகேயன் மூன்று சுயமுன்னேற்ற நூல்கள் )                   -- சுப்ரபாரதிமணியன் , திருப்பூர்
        சமீப ஆண்டுகளில் சுயமுன்னேற்ற நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. நம் அரசும், அரசியல்வாதிகளும்,தத்துவங்களும் தராத நம்பிக்கையை சுயமுன்னேற்ற நூல்கள் தருகின்றன போலும். ஆனால் அவை தரும் செய்திகளைத் தமிழ்ச்சமூகம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதை  அதிகமாய் விற்பனையாகும் அவ்வகை நூல்கள் நிரூபிக்கின்றன
சுயமுன்னேற்ற நூல்களில் காணப்படும் அறிவுரை மலைகளும், குட்டிக்கதைகளின் குவியல்களும் இன்றைக்கு தட்டையான நிலையிலிருந்து அந்நூல்களின் தன்மையை மாற்றி நாவல் வடிவத்தில் சொல்ல முயற்சிகள் வடிவெடுத்திருப்பது சுயமுன்னேற்ற நூல்களை வெளிப்படுத்தும் முறையில் புது அணுகுமுறையைக் கொண்டு வந்திருக்கின்றது.தரவுகளை முன் வைத்து எழுதப்படும் டாக்கு நாவல்களைப்போல்  சுயமுன்னேற்றக் குறிக்கோளுடன் கட்டமைக்கப்படும் இந்நாவல் வகைகளை செல்பி நாவல் என்றழைக்கலாம் என்று ஒரு வகையும் வந்துள்ளது.அதை விடுத்து இயல்பான இன்னொரு முறையும் பிரபலமாக உள்ளது.
ஒரே கல்லில் மூன்று மாங்காய்.:  டாக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களின் ஒரு சுயமுன்னேற்ற நூல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர். எண்களில் பலருக்கு பல எண்களைப் பிடிப்பதில்லை உதாரணமாக எட்டு ,ஒன்பது போன்றவை அதேபோல்  13. ,,,,13 மையமாகக் கொண்டு பல மூட நம்பிக்கைகளும் சொல்லப்பட்டு அந்த குருட்டு வழிகளும் தடுத்துக் கொண்டே இருப்பவர்கள்  இருக்கிறார்கள் .அந்த                                13 யை    மையமாக வைத்து மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக தலைப்பே அமைந்திருப்பது விசேஷமானது . இந்த 13 கட்டுரைகளிலும் 13 வகையான தத்துவ விசாரங்கள் இருக்கின்றன என்று சொல்லலாம்.  வீட்டு விளையாட்டு அனுபவங்கள் முதல் உலக அனுபவங்கள் ,உலக புத்தக விவரங்கள் வரை பல விஷயங்கள் இணைந்தவை. இந்த புத்தகத்தின் வெவ்வேறுவிதமான கட்டுரைகள் தலைப்பு நம்மை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தும் அவை: கணக்கு வழக்கு, கல்லானாலும் கம்ப்யூட்டர் ,வெச்சா குடுமி அடிச்சா மொட்டை ,சின்ன சின்ன விஷயங்கள் ஏன் ,இந்த ஓட்டம் தொட்டதெல்லாம் துலங்கும், நினைப்புதான் பொழப்பை கெடுக்கும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு ,தோல்வி படிக்கட்டுகள், மாங்காய் இங்கே இருக்கு கல் எங்கே இருக்கு.. இப்படி தலைப்புகளே வாசிப்பதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கின்றன .கணக்குப் போடுதல் என்பது திட்டமிடல் தான் அந்த திட்டமிடல் சரியாக அடங்கியபோது கணக்குக்கும் சரியான விடை கிடைத்துவிடுகிறது .வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி கணக்கு போடுவது திட்டமிடுவதும் கூட இப்படித்தான் என்கிறார் நூல்  ஆசிரியர் ,,.கடவுள் போட்ட கணக்கை மீறி மனிதர்கள் படும் வீரதீரமான  செயல்பாடுகள் அல்லது வெற்றிகள் பற்றியும் சொல்கிறார் .பல்வேறு ஆங்கில நூல்களின் ஆதாரங்களும் வழிகாட்டுதலும் இந்த சுயமுன்னேற்ற நூலுக்கு  ஒரு புதிய தளத்தை கொடுத்திருக்கிறது , என் புத்தகம்.. நான்தானே பிரதர் முடிவு பண்ணனும் என்று பளிச்சென்று சொல்லும் விஷயங்கள் என்றாலும் அந்த விஷயங்களுக்குள் நம்மையும் உறவாட அவர் அழைத்துக்கொண்டு போகும்போது தான் ஒரு முக்கிய விஷயமாக சொல்வதில் நான் யார் தெரியுமா இது நான் எழுதிய புத்தகம் தெரியுமா என்ற ஒரு பார்வை பல எழுத்தாளரிடம் இருக்கும் .ஆனால் அப்படி இல்லாமல் இது சாதாரணமாக ஒரு தேனீர் கடை பெஞ்சில் உட்கார்ந்து சகஜமாக உரையாடும் தொனியில் அமைந்திருக்கிறது. ,ஒரு கட்டுரையின் பின்பக்கத்தில் பின்குறிப்பு ஒன்று வந்திருக்கிறது.. இந்த புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டு கன்னாபின்னாவென்று சிரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இப்படித்தான் கண்ணா பின்னா என்று சிரிப்பதற்கான பல்வேறு ஆரோக்கியமான நகைச்சுவை விஷயங்களையும் இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது ..வாழ்க்கையை பாசிட்டிவான சிகரமாக மாற்ற நமக்கு மனிதர்களும் அற்புதங்களும்   முக்கிய தேவையாக இருக்கிறது என்பதை இதில் உள்ள பல கட்டுரைகள் சொல்லின. மாங்காய் இருக்கு கல் எங்கே இருக்கு என்று ஒரு கட்டுரை விடுதலை பெறுகிறது .விளம்பர இடைவேளை இல்லாமல் பாத்துக்குவாங்க பிரதர் என்று சொல்கிற ஒரு உரையாடல் தன்மையில் இந்த கட்டுரைகள். இந்த உரையாடல் தன்மை இந்த நூலுக்கு வாசகர்கள் எளிதாக நுழைந்து வெளிவரும், அதிலிருந்து உள்வாங்கி கொள்வதற்குமான பல்வேறு விஷயங்களை முன் வைத்திருக்கிறது, மந்திரம் பார்த்தா,, மந்திரம் நம் குறிக் கோள்கள் ஒவ்வொன்றும் சொல்லி எடுக்கும் என்று நினைத்தால் அது மந்திரக்கல் நம் மனசு தான் இந்த கல்லை வைத்து பதிமூன்று மாங்காய் என்ன எத்தனை மாங்காய்களை வேண்டுமானாலும் அடிக்கலாம். கல்லை மட்டும் குறச்சுராதீங்க என்று இந்த நூல் முடிகிறது என்பது வாசகப் பார்வையாக எடுத்துக் கொண்டு ஒரு நடுத்தர மக்களுக்கு எல்லாம் சுலபமாக கொண்டு செல்ல  முடிகிறது இதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.          இதன் விலை  ரூ120
அதுவும் இதுவும் டாக்டர் விஜய கார்த்திகேயன் இன்னொரு புத்தகம் .இந்த புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்களை மாற்றம் என்பது என்னிடமிருந்து என்ற ஆரம்பிப்பதால் என்னுடைய மையமாக கொள்ளலாம் என்கிறார் . மாற்றத்தை ஒவ்வொருவரும் நம்முடைய வழிகாட்டுதல்கள் நடத்தைகள் மூலம் உருவாக்கிக் கொள்வதற்கான அவசியத்தை அவர் கோடிட்டுக் காட்டுவதை  முகப்பிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.
 அதேபோல ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம் .தன்னம்பிக்கையே நம்பாதவன் இந்த உலகில் என்ன சாதிக்க முடியும் .தன்னம்பிக்கை வரும் போதுதான் உழைப்பு என்னும் அடுத்த கட்டத்திற்குப் போக முடியும் என்பதை இன்றைய தலைமுறை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது .இன்றைய தலைமுறையை முன்வைத்து அவர் பல கட்டுரைகளை இதில் தொகுத்திருக்கிறார் .அப்படித்தான் அவர் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு நிலையில் சமுதாயத்தைப் பற்றிய அனுபவங்கள் இந்த தொகுப்பில் நிறைந்திருக்கின்றன .இந்த தொகுப்பில் புதிய தலைமுறை இடைவெளி பற்றிய ஒரு செய்தியை மிக அழகாக சொல்கிறார். ஒரு மீன் வளர்க்கலாம் என்று ஒரு குழந்தையிடம் கேட்கிறபோது தினமும் கவனிக்கவேண்டும்.அதற்கெல்லாம் வாரந்தோறும் மீன் தொட்டியை சுத்தப்படுத்தலாம் பின் ஒருசில மீன்களுக்கு சண்டை வரும். அவற்றை விரட்டி விடலாம் சில மீன் குட்டி போடும் அவற்றைத் தனியே அடைத்து வளர்க்கலாம் .அது ஒரு தனி சுகம் என்கிறார் ஒருவர் .அதையெல்லாம் கேட்ட ஒரு  குழந்தை இதெல்லாம் நடக்க சுமார் ஒரு ஆண்டு ஆகும் .இதையே ஒரு மணி நேரத்தில் வீடியோ கேமில் முடித்து விடுவேன் என்று சொல்லிக்  காட்டுகிறது .அந்த குழந்தை மூலம் எப்படி இளைய தலைமுறை வெகு வேகமாக மாறியிருப்பதை பற்றிய பல தகவல்களை இந்த நூலில் சொல்லியிருக்கிறார். .உலகம் வேகமாக ஓடிட்டு இருக்கு மச்சி நாமும் சேர்ந்து ஓடணூம் . வேகம் பொறுமை நிதானம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இளைய தலைமுறை சொல்லுகிற அதே சமயத்தில் உரிமையும் கடமையும் எப்படி வெற்றிக்கு மையமாக இருக்கிறது என்பதை பல கட்டுரைகள் சொல்கின்றன.பல  முன்னேற்ற வெற்றியாளர்கள் முன்னேற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள்  குறிப்பிடும் புராணக்கதைகள் பற்றிய குறிப்புகளும் விவரங்களும் அதிகம் இல்லாமல் இந்த தொகுப்பு அமைந்திருப்பது ஒரு முக்கியமான தன்மை என்று சொல்லலாம் .பெரும்பாலும் சுயமுன்னேற்ற விஷயங்களை புராணக் கதைகளை முன்வைத்து நகர்த்துவது சிலரின் பாணியாக இருக்கிறது .அந்த பாணி ஓரளவு தவிர்க்கப்பட்டு இருப்பது இவருடைய முக்கியமான அம்சம் என்று சொல்லலாம். பிறர் பற்றிய வெறுப்பு எப்படி ஒரு வகையில் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது என்பதை ஒரு கட்டுரை சொல்கிறது .வெறுப்பு எவ்வாறு உந்து சக்தியாக மாறி வெற்றியினை தருகிறதோ அதுபோல வெற்றிக்குப்பின் ஒருவரின் வெற்றி பிறருக்கு வெறுப்பைத் தருகிறது .தனி ஒருவரின் வெறுப்பு இப்படியிருக்க தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அதனை ஏற்படுத்திய அந்த சமூகத்தின் மீது அதற்கு காரணமான இந்த சமூகத்தில் குறிப்பிட்ட தன் மீது வெறுப்பு என்பது தடையாக கொடுக்கப்படுகிறது என்பதை உளவியல் ரீதியாக சில கட்டுரைகளில் வெளிப்படுத்துகின்றன. இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களுக்கு அதில் மாறுபட்ட கருத்துக்களை விமர்சனமாக வருமாயின் அதை சகித்துக் கொள்வது எந்த இனத்திற்கும் இது எழுதிய எழுத்தாளருக்கு மரியாதை என்பதை ஒரு ஜனநாயக ரீதியான எண்ணமாக்கி இதை முன்வைத்திருக்கிறார். இது ஒரு முக்கியமான அம்சமாக கூட நாம் சொல்லலாம். உழைப்புக்கு அதிர்ஷ்டத்திற்கும்  சம்பந்தம் உண்டா என்ற ஒரு விவாதம் கூட இந்த புத்தகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது .மிகப்பெரிய வெற்றிகளை பெற சில சந்தோஷங்களை தியாகம் செய்வதில் தவறில்லை. அதற்குத் தேவை சுயக்கட்டுப்பாடு என்று அம்சங்களும் இன்றைய இளைய தலைமுறை மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது ( இதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது விலை ரூபாய் 120 )

ஒரு கப் காபி சாப்பிடலாமா .. உங்கள் வெற்றிக்கான 30 ரகசியங்கள்  “ என்பது டாக்டர் விஜய கார்த்திகேயன் இன்னொரு நூலாகும்.முன்பு ஒரு நூலில் பதிமூன்று ரகசியங்களை சொன்னவர் இந்த நூலில் 30 ரகசியங்களைச் சொல்கிறார். அனைத்தும் வெற்றிக்கானவை. அவை பெரும்பாலும் இது போன்ற சுய முன்னேற்ற நூல்களில் வெற்றிக்கான அம்சங்களை சொல்கிற போது உதாரணமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை மேற்கோளாகவும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து எடுத்துக்கொண்ட சில சம்பவங்களை எடுத்து விளக்குவதும் சகஜம் அப்படித்தான். இந்த நூலிலும் விளையாட்டு வீரர்கள் தென்படுகிறார்கள் அதில் ஒருவர் டென்னிஸ் வீரர் செர்பிய நாட்டைச் சேர்ந்தவர் நோவக் ஜோகோவிக் . 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு பதினெட்டாம் ஆண்டு வரை பாதி மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் .ஒரு காலத்தில் தோல்வியால் வெளியேறியவர் .மீண்டும்  வாழ்வில் எப்போது டென்னிஸ் விளையாட வேண்டும் என்று தெரியாதவர் என்ற நினைப்பில் வேதனைபடுத்திக் கொண்டவர். ஆனால் அவர் பின்னால் தொடர்ந்து விளையாட்டில் சாதனை புரிந்து அதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் ..இதில் குறிப்பிடப்படும் ஒரு அரசியல்வாதி பெண்மணியை எடுத்துக் கொண்டபோது நல்ல விஷயம் என்பது தெரிகிறது .மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி. அவரிடம் பிபிசி வானொலி ஒரு கேள்வியைக் கேட்கிறது . அது மிகப்பெரிய வெற்றிகளை குவித்து இவ்வளவு உயரத்தை அடைந்து விட்டீர்கள் ரகசியம் என்ன ..அவர் சொல்கிறார் என் பழக்கங்களை சரியாக பின்பற்றுவது தான் முக்கியமான காரணம்.. இது போல பல்வேறு விளையாட்டு வீரர்கள்,அரசியல்வாதிகள் ., சாதனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெற்றிக்கான படிகளாக அவர் சொல்கிறார் .மாற்றம் தன்னிடமிருந்து கிளம்ப வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் .அப்படித்தான் அவர் கோவை நகரில் பணியில் இருந்தபோது சில பகுதிகளில் கட்டடங்கள் மீது திறந்தவெளியில் வண்ணங்கள் மிகுந்த ஓவியங்களை வரைவதற்காக ஒரு முயற்சியை இத்தாலி நாட்டு சீட் ஆர்ட் வல்லுனர்களையும்  வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் துவங்கி நகரின் கலாச்சாரம் மக்களின் வாழ்வியல் முறை வெளிப்பாட்டிற்காக அதை பயன்படுத்தியதை உதாரணமாகச் சொல்லலாம். ஒரு காபி சாப்பிடுவது என்பது உடலுக்கு புத்துணர்வு தருவதாகவும் அப்படித்தான் 30 காபி அவ்வப்போது சாப்பிட்டு ஒரு பெரிய ஊக்க விஷயங்களை இந்த நூலில் அவர் தெரிவித்திருக்கிறார், இதை சப்னா புத்தக நிலையம் கோவை வெளியிட்டிருக்கிறது இதன் விலை ரூபாய் 100
சிறு வயதில் மருத்துவர், சிறு வயதில்  மாவட்ட ஆட்சியாளர் என்று சிகரம் தொட்டவர் சுயமுன்னேற்ற நூல்கள் மூலம் இளைய தலைமுறையினருக்கு அறிவுரைகள் சொல்ல தகுதியும் உள்ளது என்பது நிரூபணமாகிறது. இந்த மூன்று நூல்கள் மூலம் பல வெற்றிப்படிகட்டுகளை இளைய தலைமுறை உள்வாங்கிக்கொள்ள சாதனமாய் இந்நூல்கள் விளங்குகின்றன.

.. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /Tamil nadu  094861 01003
பிச்சிப்பூ : பொன்னீலன் நாவல் :சுப்ரபாரதிமணியன்
பேச்சு வழக்கு இயல்பிலேயே நாவல் முழுக்க சொல்லப்பட்டிருப்பது சிலருக்குத் தேன். சிலருக்கு பாகற்காய் பொறியல் . அதுவும் கன்யாகுமரி பேச்சு வழக்கில்.
நீண்ட கால சரித்திரத்தை உள்ளடக்கிய நாவல் 76 பக்கங்கள் தான்.. பிரிட்டிஸ் தர்மம், மனுதர்மத்திற்கிடையே மக்கள் அல்லல்படும் காலம் முதல் சர்க்கார் உத்யோகம் உயர்சாதிகளுக்கும் மதம் மாறினவர்களுக்குமட்டுமே என்றிருந்த காலம் முதல் இந்நாவல் தொடங்கி கேரளாவின் வைக்கம் போராட்டத்திற்கு பின்னான பெண்களின் எழுச்சியோடு முடிகிறது. கட்டுமுட்டான மட்டச்சாதி மனுஷர் உச்சச் சாதி மனுஷர் உட்காரக்கூடிய நாற்காலியில் உட்காரும் வழக்கறிஞர் நீதிபதி காலமும்  வருகிறது.மெல்ல மெல்ல சமூக சீர்திருத்தங்கள் மீட் அய்யர், வைகுண்டர் என நீள்கிறதும் பிச்சிப்பூ என்ற பெண் பங்கு பெறும் பெண்களீன் எழுச்சியும் முக்கியமானது. இவ்வளவு நீண்ட சரித்திரத்தை   மெக நாவல் கூட ஆக்கியிருக்கலாம். ஆனால் எல்லாவற்றிலும் சுருக்கம். சிறு சிறு அத்தியாயங்கள் . படிக்க சுவாரஸ்யமும் இயல்பும் தருகிறது.

( ரூ70, என்சிபிஎச், சென்னை )
ஆவணப்படம் :  “ புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா
துரை. மாலிறையனார்
புதுவை யுகபாரதியின் இயக்கத்தில் ஆவணப்படம் : சுப்ரபாரதிமணியன்
   எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகள் குறித்த நினைவுகள் பற்றியக்  கட்டுரைகளும் படைப்புகளும் அவர்கள் மறைந்த பின்புதான் வெளிக்கொணர வேண்டும் என்பதில்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவை பதிவு செய்யப்படுவது அந்த படைப்பாளிக்கு கவரவம் தருவதாகும். அதுவும் இன்றைய புதிய தலைமுறையினர் பழைய தலைமுறை ஆளுமைகள் குறித்து அறிந்துகொள்ள இவ்வகை படைப்புகளும் ஆவணங்களும் முக்கியமாக இருக்கின்றன. அந்த வகையில் ஓர்  ஆளுமை குறித்த ஆவணப்படம் ஒன்றை புதுவை யுகபாரதி இயக்கியிருக்கிறார் . புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா துரை. மாலிறையனார் அவரின் வயது 80……
 50 க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார் .அதில் மரபு கவிதைநூல்களும் காவியங்களும் காப்பியங்களும் முக்கியமானவை .இன்றைய இளைய தலைமுறையும் கல்வி சார்ந்த மக்களும் மரபுக்கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார்கள் .இந்த சூழலில் மரபுக்கவிதையின் ஓசைநயம் அவற்றை பாடுவதில் உள்ள மெய்மறந்த அனுபவம், அவற்றில் நவீன கவிதையை அம்சங்களையே கொண்டுவருவது மற்றும் நெடும் கவிதைகள் அதன் நீட்சியாக காப்பியங்கள் ,காவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன, அதற்காக புதுவையை சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையனார் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து இந்த ஆவணப்படத்தை புதுவை யுகபாரதி உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பாளிகளின் குடும்பச்சூழல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராது .இன்னொரு பக்கம் அவர்களின் கேள்விக்கான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வார்கள் .இந்த சூழலில் கவிஞரின் துரை. மாலிறையனார்
கவிதை அனுபவம் ,வாழ்க்கை பற்றிய அவரின் குடும்பத்தினரும் ,அடுத்த தலைமுறையான பேரன் பேத்திகளும் கூட ஈடுபாட்டுடன் இந்த ஆவணப்படத்தில் பேசுவதை ஒரு முக்கிய அம்சமாக கொள்ளலாம் .பல இடங்களில் வெளிப்படும் மரபுக்கவிதைகள் அவற்றின் ஓசை கருதியும் எடுத்தாழும் பிரச்சனைகள் குறித்தும் அக்கறைக்கு உள்ளான கவிஞர் என்ற அளவில் தம் படைப்புகளை மட்டும் வெளிப்படுத்தாமல் பிற படைப்புகளை வெளிக்கொணர்வதில் முன்னிட்டு பல படைப்பாளிகளை முன்னிறுத்துவது , உருவாக்குவது என்பதை புதுச்சேரி தமிழ்ச்சங்கம் அமைப்பிலும் இக்கவிஞர் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்திருக்கிறார் என்பது இன்னும் குறிப்பிட வேண்டிய செய்தியாக இருக்கிறது .இதில் இடம்பெறும் பல தகவல்கள் ஆச்சரியத்துக்கும் கவனத்திற்கும் உரியன . ஒரு தகவல் உதாரணத்திற்கு... தமிழக அரசு இவரின் நூலொன்றை நூலக ஆணை திட்டத்தின் பிரகாரம் 12 ஆயிரம் பிரதிகள் பெற்றது என்பது. இது போல பல வியத்தகு தகவல்களை கூட இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் இந்த ஆளுமை குறித்த பல்வேறு நினைவுகளை அவர்களோடு பழகியவர்கள் ,அவருடைய பணி புரிந்தவர்கள், சக எழுத்தாளர்கள் என்ற வகையில் திருநாவுக்கரசு ,சுந்தரம் முருகன் ,தமிழ்மணி, உசேன் உட்பட பலர் பதிவு செய்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கவிஞர் பற்றிச் சொல்லி  இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. இந்த ஆவணப் படத்தின் ஆரம்பத்தில் திரையில் ஓடும் சிலவரிகள் கவனத்திற்குரியவை .ஏதோ மரபுக் கவிஞர்கள் அவர்களுக்கு வேறு என்ன தெரியும் என்ற வகையில் இருக்கும் சாதாரண பொய்யான கற்பிதங்களை உடைக்கின்ற விதமாய் ஒரு கவி ஆளுமை என்பவர் எப்படி பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமாக பலர் விளங்குகிறார்கள் அதை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக  இப்படம் இருப்பதை குறிப்பிடுகிறது . அந்த திரைவரிகள் இவை:  “ தமிழ் மொழி, தமிழ் இனம் குறித்து பாடி தமிழ் மரபையும் தமிழ்ப்பண்பாட்டையும் போற்ரிக்காத்துவரும் தமிழ்ப்புலவர்களுக்கு கவிதை என்றால் என்ன என்றும்  மிக நன்றாகத் தெரியும். அவர்களுக்குப் பெண்னீயம், தலித்ஹ்டியம், பின் நவீனத்துவ இலக்கிய அரசியல் மற்ரும் சமூக அரசியல் குறித்தான பார்வையும் சிந்தனையும் இருக்கிறது என மெய்ப்பிக்கும் சான்றாக வாழ்ந்து வருகின்ற தமிழ்மாமணி துரிஅ . மாலிறையனாரின் வாழ்வியல் ஆவணமே இப்படைப்பு. திருக்குறள், பாரதி மற்றும் பாரதிதாசனின் சில பாடல்கள், சங்க இலக்கியத்தில் ஏதோ ஒன்ற்ரண்டுப் பாடல்கள் என மனப்பாடம் செய்து கொண்டு தமிழ்ப்புலவர்களும் மரபுப் பாவலர்களும் தமிழ்..தமிழ்  என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதுகை, மோனை என்ற பெயரில் குட்டு, பட்டு, நட்டு, எட்டு என்று வீணுக்கு எழுதி புலவர்கள் என்று காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள்.  அவர்களுக்குப் பழம் பெருமை பேசுவதை விட்டால்  வேறு என்ன தெரியும். நவீன இலக்கியம் தெரியுமா . பெண்ணியம், தலித்தியம், பின் நவீனத்துவம்  என்றால் என்ன என்றாவது தெரியுமா என்று இன்றைய நவீன இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பகடி செய்யும் நிலை இருக்கிறது  ”   இதை புதுவை யுகபாரதி தன்னுடைய தொகுப்பின் மூலம் நிரூபணப்படுத்தி இருக்கிறார் ..காப்பியங்களும் காவியங்களும் எழுதுவது சாதாரண விஷயம் இல்லை .அதற்கான உழைப்பு பெரும் நாவலுக்கான உழைப்பும் பயிற்சியும் கொண்டது போலதாகும் .இப் படத்தில் பல இடங்களில் புதுவை பாரதி கவியுடன் உட்கார்ந்து உரையாடும் பின்புலம் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது .கவிஞர் துரை. மாலிறையனார்
 மதர் தெரசா பங்கு பெற்றிருக்கிற கூட்டத்தில் பேசும் ஒரு காணொளி கோப்பு இதில் ஒரு முக்கிய ஆவணமாக கொள்ளலாம். .மதர் தெரசா பற்றிய ஒரு காப்பியம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை மண்ணின் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் அடங்கிய தொகுப்பு படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுவது  புதுவை எழுத்தாளர் உலகம்  பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல அறிமுகமாக இருக்கிறது. இதுபோன்ற ஆளுமைகள் பற்றிய பல்வேறு விஷயங்களை முன்வைத்து அந்த தரவுகளையும் பதிவுகளையும் ஆவணப்படுத்தி வெளிக்கொணர்வது என்பது மிக முக்கிய கடமையாக இருக்கிறது .தன்னுடைய சமூக வாழ்க்கையில் தனி மனிதனாக இல்லாமல் , சமூக மனிதனாக சமூகத்தில் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் துரை. மாலிறையனார்
புதுவைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களின் உறவினர்கள் தொழில் முனைவோர்  தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போன்றோரும் இருக்கிறார்கள் தனிமனித எழுத்தாய் நின்றுவிடாமல் எழுத்தாளர்கள் சமூகத்தை உருவாக்க கூட தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் 17 வயதில் ஆசிரியர் பணி கிடைத்து இருக்கிறது அந்தப் பணியை சரியாக நிறைவு செய்தது அரசின் நல்லாசிரியர் விருது என்றவகையில் கவரப்பட்டு இருக்கிறார். பாரதிதாசன் தந்த மொழி இனம் சார்ந்த உணர்வுகளில் அவர்கள் அவரின் படைப்புகள் மையமாகக் கொண்டது என பள்ளி அவருக்கு தமிழுணர்வு தந்த அனுபவம் ஒரு முக்கிய விஷயமாக இருந்தது ஒரு பள்ளி கல்வி என்பது வெறுமனே இளம் வயதில் ஒரு பருவமாக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வு தந்த இடமாகவும் படைப்பிலக்கியத்தின் வாயிலாகவும் இருப்பதை சொல்லி இருக்கிறார். கவிஞர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் வாழ்க்கையில் சாதி கடந்த பல முயற்சிகளுக்கு துணை நின்றவர் தலித்தியம் பெண்ணியம் சார்ந்து அவர் கூறுகின்ற கருத்துக்கள் வேறுவகை பார்வையைக் கூட தருகின்றன. உதாரணத்துக்கு தலித்தியம் பற்றி சொல்கையில் அவர்களும் நாமே.. பின் ஏன் பிரிந்து பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் .பிரஞ்சு கல்வி புலமை பெண்ணியம் பிரஞ்சு  வரலாறு என்று பல பொருள் பற்றிப் பேசும் போது இந்த கேள்விகளை யுகபாரதி முன்வைத்திருக்கிறார் கவிஞர் பதிலளிக்கும் போது அந்த உப தலைப்பு குறித்த எழுத்துக்கள் திரையில் மின்னி ஞாபகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது ( 9751533634 )
தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதிமறுப்புத் திருமணம் போன்றவற்றை செய்திருப்பதும் பின்னால் இலக்கிய ரீதியான படைப்பாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற ஆவணப்படத்தின் மூலம் தான் இக்கவிஞரை நான் அறிந்துகொள்ள முடிந்தது. இதுபோல எத்தனையோ படைப்பாளிகள் தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள் .அவர்களை வெளியே வரவேண்டியது சக படைப்பாளியின் கடமையாக இருக்கிறது. அந்தக் கடமையின் தொடக்கமாக பல செயல்களை  பாண்டிச்சேரி நண்பர்கள் தோட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது.15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் திருப்பூரில் நடைபெற்ற ஒரு குறும்படப் பட்டறையில் புதுவை யுகபாரதி அவர்கள் பங்கு பெற்று பயிற்சி பெற்றிருக்கிறார் அவருடன் திருநாவுக்கரசு சுந்தர முருகன்  போன்றோரும் பங்கு பெற்றார்கள் ..அதன் தொடர் நிகழ்வாக அவர் எடுத்த குருவி தலையில் பனங்காய் போன்ற குறும்படங்களும் மற்றும் ............................
ஆவணப் படங்களும் நல்ல ஆவண பதிவுகளாக உள்ளன .அப்படி ஒரு பதிவை இந்த புதுவை கவிஞருடைய வாழ்க்கை மூலம் தந்ததற்கு யுக பாரதிக்கும் தயாரித்த புதுவை  நண்பர்கள் தோட்டம் இலக்கிய நண்பர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும் . புதுவை யுகபாரதி இது போன்ற இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டும்... சுப்ரபாரதிமணியன்


யாம் எந்தையும் இலமே:
முனைவர் தே ஞானசேகரனின் தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் நூல்  “ சுப்ரபாரதிமணியன்
       காவ்யா இதழில் முனைவர் தே ஞானசேகரன் அவர்கள் சாவிற்கு பின்னாலுள்ள சடங்குகளைப் பற்றி விரிவாக நீண்ட கட்டுரைகளை சென்றாண்டு எழுதியிருந்ததை ஞாபகம் கொண்டு அந்த கட்டுரையின் சடங்கு சார்ந்த விபரங்களும் விவரிப்புகளும் என்னை வெகுவாக கவர்ந்தவை அவரை சந்தித்தபோது சொன்னேன். அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த 1500 பக்க நாவல் “ சிலுவை “ ஆக்கத்தில் சில இடங்களில் அக்குறிப்புகள் பயன்பட்டன.. அவர் அவரின் தந்தையின் மரணத்தை ஒட்டி நடந்த சடங்குகளை ஒருங்கிணைத்து அந்த கட்டுரையை எழுதிய விவரங்களைத் தந்தார். அதேசமயம் அவர் தந்தை இறந்து  ஓராண்டு ஆன நிலையில் அவரின் தந்தை பற்றிய நினைவுக்  குறிப்புகளை “  தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் என்ற தலைப்பில் ஒரு நூல் ஆக்கி  அப்போதுதான் வெளிவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அதன் பிரதியை தந்தார்.
 தந்தை பற்றிய நினைவுகளை எழுதுவது என்பது பாசப் பிணைப்பில் இணைந்த ஒவ்வொரு மகனுக்கும் இயல்பான விஷயம் .நான் என் முதல் சிறுகதை தொகுப்பை அப்பா “  என்ற தலைப்பில் தான் வடிவிட்டிருந்தேன் .அதில் என் அப்பா பற்றிய நினைவுகளும் அவர் சேவல்கட்டு வித்தையில் பெரிய வீரனாக விளங்கியதும் அது குடும்பச் சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளும் என்று நான்கைந்து கதைகளை எழுதி இருப்பேன் .அக்கதைகளை எல்லாம் அவர் வாழும் காலத்தில் தான் நான் எழுதினேன் .அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது . நெசவாளி.அந்த கதைகள் அவரை சேர்ந்து இருக்குமா என்று கூட எனக்கு தெரியாது .சமீபத்தில்கூட திரைப்பட கவிஞர் வடிவரசி ஐயா 95 என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார் .அதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது . அவரின் தந்தை பற்றிய பல்வேறு நினைவுக் குறிப்புகளையும்  அவரின் விமானப் பயண ஆசை பற்றிய முத்தாய்ப்பான விஷயங்களையும் ஒரு முழு நூல் ஆகியிருந்தார் .சுதேசமித்திரனில் அவரின் தந்தை குறித்து அப்பா என்றொரு காவியம் படைத்திருக்கிறார். இப்படி அப்பாவைப்பற்றி பலர் எழுதிஇருக்கிறார்கள்
முனைவர் திரு ஞானசேகரன் அவர்கள் இந்த நூலில் அவரின் அப்பா இறந்த பின்னால் ஒரு நாள் அவரின் மன பாரத்தை இறக்கி வைப்பதற்காக ஒரே மூச்சில் எழுதி முடித்த கவிதைகள் பாணியிலான  முயற்சியில் தந்தை  பற்றிய பல சித்திரங்களை கொடுத்திருக்கிறார் .அவரின் நோய் பற்றி தெரிவித்தபோது சரியாகிவிடும் என்று சொன்னது நிரந்தரமாக விடை பெறுவது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை என்ற கவலையோடு தொடங்குகிறார் .அவரின் நுரையீரல் பழுதான செய்தியை அவர் மறைத்து இருக்கிறார் என்பது கூட ஒரு இடத்தில் குறிப்பாக சொல்கிறார் .குடும்பத்தில் உள்ள மகன்கள் மேல் அவர் கொண்ட பாசம் பற்ரி பல வரிகளில் கண்ணீர் ததும்ப சொல்லியிருக்கிறார் . “ எங்களின் நிழல் கூட வெயில் விழக்கூடாது என்று சூரியனையே வடிகட்டியவன் நீ என்ற வார்த்தைகளை அவர் குழந்தைகள்  மேல் கொண்டிருந்த பாசத்தை காட்டுகின்றன. “  மருமகளிடம் திட்டுவாங்க மாமனாராக விளங்கி  இருக்கிறார் ..நூறாண்டு இருப்பார் என்று கணித்து  போற்றியிருக்கிறார்கள். கையில் ஏதாவது ஒரு பத்திரிகை இல்லாமல் அவர் இருந்ததில்லை வேட்டை ராசி என்றபடி உயிரோடு திடீரென காட்சி தருகிறார் மழைக்காலங்களில் மீனோடு வருகிறவர் .   உங்க அப்பன் வெளிய போய் இருக்கு எதைக்கொண்டு வருமோ என்று அம்மா அடிக்கடி  சொல்கிறார். ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி   என்ற பழமொழி அந்த வீட்டில் தோற்றிருக்கிற அதிசயத்தைக்காட்டுகிறார் . அது  சரியாக காட்டப்பட்டிருக்கிறது பிறருக்கு கொடுத்து வாழ்வதே வாழ்வின் சிறப்பு என்று வாழ்ந்திருக்கிறார் .அடித்து வாழ்ந்திருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாக வளர்ந்திருப்போம் என்று மகன்கள் ஏங்கும் அளவுக்கு அவன் குழந்தைகளை அடித்ததே இல்லை .  அவர் வளர்த்த நாய் அவரின் உயிரற்ற உடல் பார்த்து அங்குமிங்கும் அலைந்து திரிந்து இருக்கிறது. இந்த காட்சி மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.
 ஒரு நொடி துணிச்சல் வெற்றி.. .வாழ்க்கையில் ..தாமதம் தோல்வி. என்று வாழ்க்கையில் இருந்தவர் .அவர் இறந்த பின்னால் அவரை வழியனுப்பிய விதங்கள் பற்றியும் ஞானசேகரன் காட்சிகளாகத் தருகிறார். அவரவர் விரும்பிய நொடியின் அசைவில் நீ விடைபெற்றது உனது விருப்பத்தேர்வு என்ற ஒரு கேள்வி கூட இவருக்கு இருக்கிறது .கடைசிப் பேரன் தாத்தாவுடன் விளையாட முடியுமா என்று உணர்ச்சிவசப்பட்டு கதறுவதும் ஒரு பக்கத்தில் பதிவாகியிருக்கிறது .அவருடைய குண நலன்கள் என்று வருகிறபோது பலவகை சித்திரங்களை ஒரு சிறுகதை எழுத்தாளன் பாணியில் பகிர்ந்திருக்கிறார் .என் அம்மாவின் பெருங்காதல் நீ வாழ்ந்த வாழ்க்கை பெருவாழ்வு என்று பெருமைப் படுகிறார் .கதை சொல்லியாக குழந்தைகளை மகிழ்வித்திருக்கிறார் .அழகு போட்டியாளர் போன்று உடல் அமைப்பில் கம்பீரமாக கொண்டிருக்கிறார் .நெல் விலை என்ன என்று கேட்டு விளைச்சல் பற்றிய விசனம் தரப்படுகிறது... நெல் வேளாண்மை செய்தால்தான் அப்பா விவசாயி இல்லை என்றால் வெறும் சாவி :  என்ற உழைப்பின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார். பாம்பு என்றால் படையும் நடுங்கும் ஆனால் பாம்பு விவசாயிகளின் நண்பன் என்பதை அவர் அனுபவத்தில்  காட்டியிருக்கிறார். குழந்தை பிறந்த போது ஆசிரியர் பெரிய அறிவாளியாக வரவேண்டுமென்று டாக்டரை சேனம் போட்ட சொன்னீர்கள்  நெகிழ்கிறார் . உணர்ச்சி மிகுந்தவற்றை  இந்த கவிதை வரிகளில் பார்க்கிறோம் .தோஷம் என்றும் இறந்து விடுவேன் என்றும் ஊரார் சொல்ல ஆசிரியர் இழந்துவிடாமல் இருக்க ஒரு வயதில் தங்கை மகளை பொம்மைகல்யாணம் செய்து வைத்த ஒரு வினோத சடங்கு பற்றி கூட இந்த நூலில் சொல்லியிருக்கிறார் .அந்த ஊரில் அப்போதைய காலத்தில் ஓயாமல் வெட்டும் குத்தும் சண்டையும் இருந்ததாம் .அந்த கலாச்சாரத்தில் மகனை வளர்க்கப் பிடிக்காமல் அம்மாவின் ஊருக்கு குடியேற்றினார் என்பது  ஒரு காட்சி.தொலைதூரப் பார்வையோடான அவரின் பல செயல்களில் இதுவும் ஒன்று.
 இந்த நூலின் முக்கிய இடங்களீல்  ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தை விவரிப்பது போல்  அவரின் தந்தை பற்றின சித்திரங்கள் இருக்கின்றன .சுருள் சுருளான தலைமுடி இரவில் விளக்கெண்ணை தேய்த்து  ஊறவைத்து காலையில் சுருள் ஆக்கி காமிக்கிற வித்தை..  டிராக்டர் ஓட்டும் போது பேண்ட் சட்டை  கருப்பு கூலிங்கிளாஸ் விவசாயி திரைப்படத்தில் எம்ஜிஆர் மாதிரி டிராக்டர் ஓட்டும் போது இருந்த அழகை அந்த ஆடை பிரதிபலிக்கிறது .வண்டி ஓட்டும் வித்தை அருமை .நாற்பது ஆண்டுகள் எந்த விபத்தும் ஏற்படாமல் டிராக்டர் வண்டியையும் பிற வண்டிகளையும் பயன்படுத்திய லாவகம் பற்றிச்  சொல்லப்பட்டிருக்கிறது. கவுசிகா நதி பற்றிய ஒரு சித்திரம் இந்த நூலிலும் இருக்கிறது. கவுசிகா  நதியின் பாதையில் சென்று பார்த்த அனுபவத்தில் அது மறைந்து போன நதியாக  மனம் வேதனைப்பட்டது .கண்ணீர் வடித்தேன்.
இந்த கவிதைப் பாணி நினைவுகளில் ஒரு பகுதியில் நாட்டுப்புற பாடல்களில் வடிவில் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பாக இருக்கிறது பக்கம் 14 .
பாகச் செடியிண்டே தே பாதித்சே நானிருந்தேன்
இந்தச் செடி அ றுக்க வந்தப்  பலிகாரன் எங்கிருந்தான்.
கோலச்செடியிண்டே கோளாறா  வச்சிருந்தேன்.
 இந்த கோலச் செடியருக்க வந்த
 அந்த கொலைகாரன் எங்கிருந்தான்
என்று ஆரம்பிக்கிற இந்த பகுதி இந்த நூலில் முத்தாய்ப்பாய் இருக்கிறது.
 நாட்டுப்புறவியல் சார்ந்த பல நூல்களை எழுதிய ஞானசேகரன் அதன் உணர்வில் சிலபக்கங்களை இந்நூலில் உருவாகியிருக்கிறார் .தன் தந்தை சார்ந்த நினைவுகளை ஒரே மூச்சில் பதிவு செய்திருப்பது ஒரு நூலாக இப்படி வெளிவந்திருக்கிறது .தந்தைகள் பற்றி பல சித்திரங்கள் தமிழ் இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. திரைப்படங்களிலும் காணக்கிடைக்கின்றன அம்மாக்களை போல அவை அதிகம் பேசப்படுவதில்லை .ஆனால் மகன்களின் வளர்ப்பிலும் வாழ்க்கையிலும் முக்கிய பங்கை தந்தைகள் செய்து வந்திருக்கிறார்கள் .அதன் காரணமாக தன் தந்தையை          சா தேவராஜ் பற்றிய நினைவுக் குறிப்புகளை வெறுமையின் இடைவெளியை நிரப்புவதற்காக இந்தப் பதிவை அவர் உருவாக்கி இருக்கிறார் .எழுத்து இந்த வகையில் வெறுமையை தகர்த்து மனபாரத்தை இறக்குவதை இந்த நூலின் அடையாளமாக தெரிகிறது .கலை இலக்கியம் சார்ந்த படைப்புகள் இப்படித்தான் வாழ்க்கையில் வெறுமை நிலையில் இருந்து வேறு தளத்திற்கு மனித உணர்வுகளை கொண்டு செல்வதன் அடையாளமாக இந்த நூல் விளங்குகிறது . தந்தை பற்றிய இலக்கியக்குறிப்புகளில்  இந்நூலுக்கும்  முக்கிய இடம் இருக்கிறது
( வெளியீடு காவ்யா பதிப்பகம், சென்னை ரூபாய் 100 )வியாழன், 23 ஜனவரி, 2020

மாலு :  நாவல்
சுப்ரபாரதிமணியன்
*மாலு ( மலேசிய வார்த்தை- ரப்பர் மரத்தில் ரப்பர் பால் இறக்க போடப்படும் கத்திக் கீறல்)

மரண தண்டனக்கு எதிரானக் குரலை - இடம்பெயர்ந்து சிரமங்களையும், மரண தண்டனையை எதிர் கொள்ளும் மலேசியாவிற்குச் சென்ற தமிழ் இளைஞர்களை - மையமாகக் கொண்டுள்ளது இந்த நாவல்,.  * இந்தியிலும் ஆங்கிலத்திலும் கூட  வெளியாகியிருக்கிறது .சுப்ரபாரதிமணியனின் 16 நாவல்களில் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உள்ளது. திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியனின் இன்னுமொரு குறிப்பிடத்தக்க நாவல் “ ரேகை “ rs 140

யக்குனர்  ஞான ராஜசேகரன் ( பாரதி, பெரியார் திரைப்படங்கள் )

சுப்ரபாரதிமணியனின்  மாலு

நான் இரு முறை மலேசியா சென்றிருக்கிறேன். அந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்திருக்கிறேன்.மலேசியாவைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இந்த நாவல் அமைந்துள்ளது என்பது இந்நாவலின் வெற்றி..மலேசிய தமிழர்கள் பற்றிய கூரிய பார்வையாக இது பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படத்தை ஒரு பண்பாடாக ஏற்றுக் கொண்ட சமூகம் அவர்களில் ஒரு பகுதியினர். அதுவும் பாமரத்தனமான தமிழ் திரைப்படத்தை.
    அப்பாசாமி என்ற பெரியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அலைவதுதன் மகன் திருச்செல்வத்திற்கு மலேசியாவில் வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை விலக்கக் கோரிநாவல் முழுக்க ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இன்னொரு பகுதி சுற்றுலா விசாவில் அங்கு சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் தங்கி அந்நாட்டு காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பித்து ரப்பர் தோட்டமொன்றில் அடைக்கலமாகிற விக்னேஷ் என்ற இளைஞனின் மனப்போராட்டங்களும் ஆகும். திருச்செல்வமும், விக்னேஷும் நண்பர்கள் .மலேசியாவிற்கு செல்ல ஆசைப்படும் குணசேகரன் என்ற இளைஞன் மலேசியா பற்றிய நூல்களைப் படிப்பதில் அவனுக்குப் பிடித்ததாய் குறிப்பிடப்படும் பகுதிகள் இன்னொரு பகுதியாகும்.மலேசிய தமிழர்களின் வாழ்க்கை, மலேசிய நாட்டு வரலாறு,தமிழர்களின் மனக்குமறல்கள் என்பதன் இலக்கியச் சாட்சியாக அப்பகுதிகள் அமைந்துள்ளன..ரப்பர் தோட்ட வீட்டிற்குள்  அடைபட்ட விக்னேஷின் இயங்காதத் தன்மை அவனை மன நோயாளியாக்கும் தனமையில் அலைக்கழிக்கிறது.கனவும், எண்ணங்களும் சிதிலமாக்குகிறது.சரியான பதிவேடுகள் இல்லாமல் சிறையில் அடைபட்ட தமிழர்களை அந்நாட்டுச் சிறையில் பார்த்திருக்கிறேன். அடையாளமற்ற மனிதர்கள் அவர்கள். அந்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் உழைத்திருந்தாலும் தமிழர்கள் அடையாளம் மறுக்கப்படுகிறவர்களாக இருப்பதை இந்நாவல் காட்டுகிறது.
இதில் அப்பாசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு தரவே முடிவதில்லை. மனு தர முடிவது சிரமமானதல்ல. பெற்றபின் காரியங்கள் நடக்குமா என்பது சந்தேகமான வேறு விசயம்.இலக்கியப்பிரதிகள் மூலம் குணசேகரன் கண்டடைவது எதிர்மறையான விசயங்களாய் இங்கு பதிவாகியிருக்கும் போது அவன் அங்கு செல்ல ஆசைப்படுவதாய் முடிவது குறையாகச் சொல்லலாம். மலேசிய தமிழர்களின் வாழ்க்கை இலக்கியப் பிரதிகளில் தமிழகத்தில் காணக் கிடைப்பது அபூர்வமாகி விட்ட சூழலில் இந்நாவல்  கூரிய  சமகாலப் பதிவாகும்.
* பொன்னுலகம் பதிப்பகம் முதல் பதிப்பு 2019


கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ திருப்பூர்
* ஆனந்த விகடனில் வெளிவந்த  என் ஒரு கேலிச்சித்திரத்தை சுப்ரபாரதிமணீயனிடம் காட்டினேன். அவர் பிற கார்டூன்களையும் கொண்டுவரச்சொல்லி மத்திய அரிமா சங்கத்தில் ஒரு வாரம் ஒரு கண்காட்சி நட்த்திய போது பலர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அங்கு சுப்ரபாரதிமணியன் குறும்படங்கள், உலக்த்திரைப்படங்கள் திரையிட்டு வந்ததைத் தொடர்ந்தேன்.  என் கலைப்பயணம் திருப்பூர் சபாபதி புரம் மத்திய  அரிமா சங்கத்தில் தொடங்கியது
முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார் உரையில்

* நொய்யலில் உப்பு அளவு 17000 ஆக இருந்தது ,முன்பு . இப்போது 900 க்கு குறைந்து விட்டது. திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களின் இவ்வகை சேவை சிறப்பானது. சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உரையில்
*
திருப்பூர் நொய்யல் சீராகுமா.. கவலை குறைந்தது. திருப்பூர் ஏற்றுமதி யாளர்களின் சமீபத்தில் நடவடிக்கைகளால் என்றார் ராம்குமார்

* தொழில் வளர்ச்சியில் அறியமையால்தான் சுற்றுச்சூழல் கேடும் நொய்யல் மாசுபாடும் ஏற்பட்டது. அதை சீர்செய்து வருகிறோம்.. கிளாசிக் போலோ சிவராமன் உரை.
* ..சுற்றுச்சூழலா. வளர்ச்சியா. . என் உரை...வனத்துக்குள் திருப்பூர் அமைப்பிற்கு விருதை வழங்கினேன்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி தொழில் நகரமான திருப்பூரில் 27/12 /19 lநடைபெற்றது. ஐ.கே.எப்.ஏ அரங்கில் .
இதில் பாப்பீஸ் நிறுவனத் தலைவர் சக்திவேல், திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், கிளாஸிக் போலோ இயக்குநர் சிவராம், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திருப்பூரின் முன்னோடிகள் உரையாற்றினர் .
மேலும், திருப்பூருக்கு பல்வேறு வகைகளில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், ’’வனத்திற்குள் திருப்பூர்’’ என்கிற சூழலியல் அமைப்பு, லக்ஸ் பின்னலாடை நிறுவன இயக்குநர் ராகுல் டோடி, முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார், தடகள வீரர் தருண் அய்யாசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன..
இந்த நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது..
Reply
Forward
2020 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சி                                      சுப்ரபாரதிமணியன் புதிய வெளியீடுகள்

* சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பாகம் 2 -
160 சிறுகதைகள் கொண்ட பெரிய தொகுப்பொன்றை காவ்யா பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது இது இரண்டாம் பாகமான மொத்த சிறுகதைகள் கொண்டத் தொகுப்பு.  .தொடர்ந்து சிறுகதைகளிலும் நவீனமான விசயங்களைக் கொண்டு சுப்ரபாரதிமணீயன் தீவிரமாக இயங்கி வருவதை இந்த இரண்டாம் பெரிய தொகுப்பு காட்டுகிறது..(  ரூ 650 , காவ்யா  )

* மாலு :  நாவல்
மரண தண்டனக்கு எதிரானக் குரலை - இடம்பெயர்ந்து சிரமங்களையும், மரண தண்டனையை எதிர் கொள்ளும் மலேசியாவிற்குச் சென்ற தமிழ் இளைஞர்களை - மையமாகக் கொண்டுள்ளது இந்த நாவல்,.  * இந்தியிலும் ஆங்கிலத்திலும் கூட  வெளியாகியிருக்கிறது .சுப்ரபாரதிமணியனின் 16 நாவல்களில் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உள்ளது. திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியனின் இன்னுமொரு குறிப்பிடத்தக்க நாவல் “ ரேகை “(  ரூ  140 பொன்னுலகம் பதிப்பகம் )
*             பூமிக்கு மனிதன் தலைவனா? – சுற்றுச்சூழல் கட்டுரைகள்

         . .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டி வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதையும்  மறுக்கும்  சூழலியல்  கோட்பாட்டை  இயற்கையாளர்கள்  முன்வைத்து  எழுதியும்  போராட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகைப்போராட்டங்களை தொடர்ந்து பிரதிபலிப்பவை சுப்ரபாரதிமணியனின் சூழலியல் வகை எழுத்து. .aaஅவரின் புனைவிலக்கியப்பட்டியலில் இருக்கும் 17 நாவல்கள் உட்பட 70 நூல்களில் சூழலியல் சார்ந்த  போராட்டத்தை  “  சாயத்திரை  “ நாவல் முதற்கொண்டு புத்து மண் “ உட்பட நாவல்களும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.  அதன் இன்னொரு அடையாளம் இந்த நூல் .
உயிர்மை பதிப்பகம் வெளியீடுரூ 150
* புத்துமண் நாவல் : 

பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையே
நவீன சூழலியம் ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது.  . நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவே அதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள் திணறுகின்றன.புத்துமண் என்ற இந்தநாவலில் சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும் மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும் கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சி வேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்கு அந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, பற்றி இந்நாவல் பேசுகிறது ..வெளியீடு;  என்சிபிஎச் ரூ 125

                                             பூமிக்கு மனிதன் தலைவனா?


     மனிதனின் பேராசை இயற்கையைச் சுரண்டி சூழல்களைத் தொடர்ந்து நாசம் செய்து கொண்டிருக்கிறது .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டி வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதையும்  மறுக்கும்  சூழலியல்  கோட்பாட்டை  இயற்கையாளர்கள்  முன்வைத்து  எழுதியும்  போராட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்கள் . .
மனிதர்களை மையம் கொண்டிருக்கிற இந்த வகை அணுகுமுறையை இந்தச் சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன. பூமி மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளும். தங்களுக்காக இயற்கையை மாற்றி கொள்ளலாம்.  அது ஒருவகையில் எப்போதாவது பெரிய அளவில் கேட்டை உருவாக்கும். .அப்படி கேடுகளை உருவாக்கிக் கொண்டு  பிறகு மனிதனை பாதுகாத்துக்கொள்ள புது வரையறைகளை  உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுவதை சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன..அப்படி பெரிய அளவிலான கேடுகளை உலக அளவில் இன்றும் கண்டு வருகிறோம்.
  அப்படியொரு சூழலியல்  கருத்துலகப் போராட்டத்தை  “  சாயத்திரை  “ நாவல் முதற்கொண்டு மூன்று நாவல்களும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இந்த வகையில்  மன எழுச்சியின் வடிவங்களாக இதுவரை வெளியிட்டுள்ளேன். அதில் இரண்டு நாவல்கள் உயிர்மை வெளியிட்டவை. தண்ணீர் யுத்தம் போன்ற சூழலியல் கட்டுரைத் தொகுப்புகளை உயிர்மை  முன்பு வெளியிட்டுள்ளது.
இந்நூலின் கட்டுரைகள் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்டு முக்கிய சுற்றுச்சூழல் சார்ந்த இதழ்களில் வெளியானவை. என் நூல்களில் அதிக அளவில் விற்பனையானவை சுற்றுச்சூழல் சார்ந்த படைபுகள் என்பது ஒரு செய்தி .இதை வெளியிடும் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும்  உயிர்மை பதிப்பக நணபர்களுக்கும் நன்றி. நன்றி

சுப்ரபாரதிமணியன் , 
                       ” இளைஞர்களுக்கு திசை காட்டி நல்ல இலக்கியம் “
பொன்னீலன் உரையில் “ மனிதர்களில் படைப்பாளிகளும் கலைஞர்களும் ஒளிந்திருக்கிறார்கள். சமூக உணர்வுள்ளவர்கள் சமூக மனிதர்களின் நிலையைப் பெறுகிறார்கள். எழுத்தாளனால் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.  சமூகத்திற்காக எவன் அழுகிறானோ அவனே எழுத்தாளன் ஆகிறான். . சமூக அதிர்வுகளின் வெளிப்பாடே படைப்பும் இலக்கியமும். சமூக அதிர்வுகளைக் கண்டு கொள்ள  இன்றைய இளைஞர்கள் நவீன இலக்கியம் படிக்க வேண்டும். அது அவர்களுக்கு திசைகாட்டியாக அமையும்  “ என்றார்
                                        பொன்னீலன் 80 “
தோழர் எழுத்தாளர்  பொன்னீலன் அவர்களின் 80 வயதையொட்டி வாழ்த்தும் பாராட்டும்  நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது . சுப்ரபாரதிமணியன்,        எம். இரவி  ஆகியோர் அவரின் படைப்புகள் குறித்துப் பேசினர் .
ஏற்புரை  நிகழ்த்தினார்: தோழர் பொன்னீலன் அவர்கள் .
தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )

ஆவணப்படம்  அறிமுகம் :
 புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா
துரை. மாலிறையனார் புதுவை யுகபாரதி இயக்கம்
கீழ்க்கண்ட நூல்கள் அறிமுகம்  : துருவன் பாலா, காதர் நிகழ்த்தினர்
 முனைவர் தே ஞானசேகரனின் தந்தை இல்லாத என் வீட்டு முற்றம்  கவிதை நூல் 
-முனைவர் ஆர்.கார்த்திகேயனின்  நான்கு நூல்கள் ( திரைப்பாடம், நம் மக்கள் நம் சொத்து, வேலையைக்காதலி,மனசு போல வாழ்க்கை )
* மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  தொடர்ந்தன..
நன்றியுரை: தோழர்  சண்முகம் ( தலைவர் , க இ  பெ. மன்றம் )தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488


புத்தாண்டு திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 52ம் சிறப்புச்  சந்திப்பு
திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 52  ம்  புத்தாண்டு சிறப்புச் சந்திப்பு  புதன்    மாலை ,  செரீப் காலனி வாழ்க வளமுடன் இல்லத்தில் நடைற்றது , நேசனல் சில்கஸ், நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர் அருணாசலம் தலைமை தாங்கினார்..
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள்.. வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இலக்கியத்தில், நாவல்களில்  காட்டப்பட்டுள்ளன. அவை இடம் பெயர்வு இலக்கியங்கள் .உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இடம்பெயர்ந்த இலக்கியங்களில் இடம்பெற்று  வருகிறது  .”  என்று சுப்ரபாரதிமணியன் குறிப்பிட்டார்
சுப்ரபாரதிமனீயன்  “ இடம் பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பிலும் , தொழிலதிபர் ரவி        “ பயணத்தால் விரியும் வாழக்கை அனுபவங்கள்என்ற தலைப்பிலும் அவரின் சமீபத்திய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா பயண அனுபவம் பற்றியும் , கண்ணதாசன் கவித்துவம் பற்றி ரெத்தினமும் பேசினர் .நடராஜ் செட்டியார் ஜிவல்லர்ஸ் லோகநாதன், நீறணி பவளக்குன்றன், பசுமை ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்
...லட்சுமணன்  நன்றி கூறினார்

.