சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
புதன், 30 மார்ச், 2022

சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார் ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன் ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது குறிப்பிட்டார். சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் மேலும் பேசுகையில் இப்படிக்குறிப்பிட்டார்: ” ஓவியம் என்பது காட்சிப்படுத்துதல் குறிப்பாக ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு வார்த்தையை நாம் எழுத்தாகவும் அல்லது ஒலி வடிவிலும் கேட்பது அதை நம்மால் காட்சியாக சிந்திக்க முடியாது. ஆனால் ஆயிரம் வார்த்தைகளை எழுதி ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை ஐந்தே கோடுகளில் வெளிப்படுத்தி விட முடியும். குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெறும் அனைவரும் வலது முளையை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மதிப்பெண்களில் சிறந்து விளங்குகிறார்கள் தவிர படைப்பாற்றலையும் ஒளிர்வதில்லை. அதே சமயத்தில் வலது மூளையை பயன்படுத்தி அதிக அளவில் சிந்திப்பவர்கள் ஓவியம் இசை சிற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணமாக நமக்கு ஒரு வார்த்தையை அல்லது ஒரு வாக்கியத்தை புரிந்துகொள்வதற்கு அந்த வாக்கியத்தோடு இணைந்த படங்கள் உதவி செய்வது போல் வலது மூளை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் காட்சிப் படுத்திக் கொள்கிறார்கள் அந்த காட்சிப்படுத்துதல் என்பது அவர்கள் மூளைக்குள் ஒரு திரைப்படம் ஓடுவது போல பதிந்து விடுவதால் அதை வெளிப்படுத்துவதிலும் அவர்கள் ஒரு படைப்பாற்றல் மிக்க வெளிப்பாடாக வெளிப்படுத்துகிறார்கள்.உதாரணமாக வளது முளையை கண்டறிய எளிமையான ஒரு பயிற்சியை ஒரு வாரத்திற்கு ஏழு நாள் இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள் என்றால் அதற்கான விடையை 2 என்கிற என்னை 7 என்கிற என்னை பெருக்கி விடை காண்பவர்கள் பொதுவாக வழக்கமான இடது மூளையைப் பயன்படுத்துங்கள் என்று கொள்ளலாம். ஆனால் ஏழு கூட்டல் 7 என்கிற வகையில் பதில் சொல்லக் கூடிய மனிதர்கள் படைப்பாற்றல் மிக்க வலது மூளை பயன்படுத்தும் மேதைகள். இவர்கள்தான் ஓவியம் சிற்பம் இசை விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஆகவும் மாற்றி யோசிக்கும் திறன் மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் வகுப்பறையில் இவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுபவர்களாக இருப்பதால் இவர்கள் பள்ளி அளவில் புறக்கணிக்கப்பட்டு நல்ல கலைஞர்களாக வரவேண்டிய ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது. படைப்பாற்றல் மிக்க இந்த வகை மனிதர்கள் 70 சதவீத மதிப்பெண்களை தாண்டுவதில்லை. ஆனால் இடது மூளையை பயன்படுத்தும் மனிதர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றாலும்கூட வாழ்க்கையில் சிறு தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத மனிதர்களாக இருக்கிறார்கள். ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள் படிப்பில் தடுமாறுகிறாற மனிதர்கள் மிகச்சிறந்த ஆளுமைகளாக கலைஞர்களாக விஞ்ஞானிகளாக இன்றளவும் வாழும் பல மனிதர்களை பல ஆளுமைகளை நம்மால் பட்டியலிட முடியும் இன்று பத்மபூஷண் விருது பெறுகி சுந்தர் பிச்சை முதல் ஆகச் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட காலம் சென்ற கி ராஜநாராயணன் போன்றவர்களெல்லாம் எட்டாம் வகுப்பை கூட தாண்டுவதற்கு சிரமப்பட்டு இருந்தாலும்கூட படைப்பாற்றலில் உலகமே வியக்கும் அளவிற்கு எழுத்துத் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் சாதித்த வரலாறு இதற்கு சான்றாகும் எனவே கண்களால் படிப்பது காதுகளால் படிப்பது போன்ற படைப்பாற்றலை நமது ஐம்புலன்களையும் சமநிலையில் பயன்படுத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகம் புகைப்படம் என எல்லாத் துறையிலும் இந்த பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டால் இப்பொழுது கூட நம்மால் மிகப்பெரிய அளவில் கதை கவிதை கட்டுரைகளை உலக அளவில் எழுதி புகழ் பெற முடியும். அதற்கு வயதும் ஒரு தடை அல்ல. சார்ஜா புத்தக கண்காட்சியின் புக்கிஷ் விருது பெற்றவரும் அந்நியர்கள் என்ற நாவலை படைத்ததற்காக ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவலாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன் அவர்களை பாராட்டும் இந்த நிகழ்வில் எனக்கும் ஓவியம் குறித்து எனது பகிர்வை இங்கே பதிவு செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்” நிகழ்ச்சியில் மக்கள் மாமன்றத்தைச்சார்ந்த நிர்வாகிகள் சத்ருக்கன், சிவகுமார்பிரபு மற்றும் பலர் பங்கு பெற்றனர் . கவிதை வாசிப்பில் து சோ பிரபாகர், அருணாசலம், நாதன் ரகுநாதன், ஒற்றைக்கை மாயாவி மனோகர் உட்பட பலர் பங்குபெற்றனர். சென்றாண்டுசிறந்த நாவலுக்கான “ அந்நியர்கள் “ நாவலுக்காக சென்னை எழுத்து அறக்கட்டளை வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணீயன் அவர்களுக்குப் பாராட்டுதெரிவிக்கப்பட்டது. அந்நியர்கள் நாவலை பள்ளி ஆசிரியரும் கவிஞருமான பொன் சண்முகசுந்தரம் அறிமுகப்படுத்திப் பேசினார். சமீபத்தில் சார்ஜா புத்தக்க் க்ண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சத்ருக்கன் நன்றி கூறினார் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்டறை .... இகவிதை2022 கவிதை2022 தொகுப்புக்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது
*14/40 கொண்டை ஊசி வளைவு : சுப்ரபாரதிமணியன் நாவல் உயிர்மை பதிப்பகம் ரூ 150 அனுபங்களால் நிறைந்திருக்கிறது ஆண் பெண் ௨றவு சார்ந்த காதல் , காமம், .. தேடல் ஆகியவற்றின் விதவிதமான ரூபங்களாய் கதாபாத்திரங்களின் அனுபங்களால் நிறைந்திருக்கிறது இந்நாவல் சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும் , 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ்
“வஞ்சனை நாவல்” – பாலகுமரன் 22 வயது இளைஞரான பாலகுமரன் எழுதிய நாவல் முதல் பெரிய படைப்பாக வெளிவந்திருக்கிறது. 356 பக்கங்களில் கிறிஸ்தவ குடும்பப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். இந்த நாவல் சொல்லும் முறையிலும் விறுவிறுப்பான நடையிலும் சாதாரணமாக வாசிக்க ஏதுவாகிறது. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான எட்வின் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதன் மூலமாக இந்த நாவல் தொடங்குகிறது. கிறிஸ்தவ மதம் சார்ந்த சில அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் அவனை அன்னியபடுத்துகின்றன. அந்தச் சூழலில் வெகுவாக அன்னியமாகி விடுகிறான். அதற்கு மதவாதிகளால் சிறு தண்டனையும் அவனுக்கு கிடைக்கிறது. இடம் பெயரவேண்டி இருக்கிறது. ஆனால் முன்பே குடும்பச் சூழலில் அன்னியமானவன். குடிகார அப்பா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் அவனை அன்னியமாகித்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் அவனுடைய மனப் போராட்டங்களை இந்த நாவல் சொல்கிறது. ஆரம்பத்தில் இந்த நாவல் ஒரு கதையின் யுக்தி மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது. வேறு ஒரு கதை சொல்வதன் மூலமாக இந்த நாவல் ஆரம்பித்திருப்பது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது. நாவலில் இடையே வரும் உரையாடல்கள் மிகுந்த தீவிரத் தன்மையோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் பத்திரிக்கையாளர்கள், பாதிரியார்கள் இவர்கள் மத்தியிலான உரையாடல்கள் மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கிறது. தமிழ்ச் சூழல் இந்நாவலில் விவரிக்கப்படவில்லை. சுவாரசியமான உரைநடையும் எழுத்தும் சுலபமாக படிக்கத் தூண்டிய காரணத்தில் இந்த நாவலை சுலபமாக படித்துவிட முடியும். கிறிஸ்துவ எழுத்து என்பது தமிழில் நீண்ட காலம் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில் தீவிரத்களத்தில் இதற்கான உதாரணங்களை தேட வேண்டியதாக இருக்கிறது. அப்படி எழுதும் எழுத்தாளர்கள் கூட கிறிஸ்துவ பின்னணியை மேலோட்டமாக கொள்கிறார்கள். மதம் சார்ந்த நிறுவனம் சார்ந்த விமர்சனங்களை அதிகம் முன்வைப்பதில்லை. அந்த சூழலில் இந்த நாவல் சில கேள்விகளை எழுப்புவது விசேஷமாக இருக்கிறது. நாவலை சொல்லும் முறையில் வித்தியாசம் இருக்கிறது. எட்வின் இளமைப்பருவம், இளமையை தொலைத்து, அவனுடைய வாழ்க்கை, குடிகார தந்தை போன்ற சூழல் அவனை பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு பிரியம் தருகிற சில மனிதர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் திருமணம் ஆகிறது. அந்தச் சூழலும் சரியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழல் மத்தியில் கிறிஸ்துவ கதாபாத்திர தன்மையும் விவரிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஒரு கவிதை தொகுப்பு மட்டுமே முன்பு வெளியிட்டிருக்கிறார் பாலகுமரன். அதைத்தொடர்ந்து இந்த நாவலை வெகு குறுகிய காலத்தில் எழுதி இருப்பதாகத் தெரிவித்தார். இந்த நாவலின் வேகமும் சீரான உரைநடையும் வாசிப்புக்கு ஏதுவாக இருக்கிறது தமிழ்ச் சூழல் இல்லாத அந்நியத்தன்மை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து.... முயற்சிகளில் பாலகுமரன் பல சிகரங்களை எட்டக் கூடும் என்பதற்கு இந்த நாவல் உதாரணம்.. வஞ்சனை (நாவல்) பாலகுமரன் ரூபாய் : 300 பக்கங்கள் : 356
மூத்த திருப்பூர் எழுத்தாளருக்குப் பாராட்டு விருது திருப்பூரில் வசிக்கும் 86 வயது எழுத்தாளர் பொன்மணி அவர்களுக்கு திருப்பூர் வாசகர்கள் சார்பாக பாராட்டு தெரிவித்து விருது அளிக்கப்பட்டது இலக்கியக்கட்டுரைகள், கவிதை என்று 10 நூல்களை வெளியிட்டுள்ளார். இன்னும் பிரசுரமாகி,புத்தகமாக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்டக் கட்டுரைகள் உள்ளன அவரின் இலக்கியப்பணியைப் பாராட்டி ” கனவு இலக்கிய விருது” புதன் அன்று திருப்பூர் மாஸ்கோ நகர் அரசு பள்ளிக்கு எதிரில் நடைபெற்றக்கூட்டத்தில் வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ( ஓய்வு ) குமார் அவர்கள் கனவு இலக்கிய விருதை பொன்மணி அவர்களுக்கு வழங்கினார்.ஆசிரியர் செங்கனி, எழுத்தாளர்கள் அழகுபாண்டி அரசப்பன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கனவு இலக்கிய விருது கனவு இலக்கிய வட்டம் சார்பில் வழங்கப்பட்டது. செய்தி : 9486101003 சுப்ரபாரதிமணியன் எழுத்தாளர் பொன்மணி. வயது 86.இலக்கியக்கட்டுரைகள், கவிதை என்று 11 நூல்களை வெளியிட்டுள்ளார். இன்னும் பிரசுரமாகி,புத்தகமாக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்டக் கட்டுரைகள் அவரிடம் உள்ளன சமீப வருடங்களாய் திருப்பூரில் வசித்து வருகிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை கிளையில் முக்கியப் பொறுப்புகள் வசித்தவர் .
நான் கண்ட தமிழீழம் ( முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்பும் ) ஓவியர் புகழேந்தி நூல் ... வரலாறே வழிகாட்டும் *சுப்ரபாரதிமணியன் ”எந்த ஒரு கலையும் வெறுமனே கலையாக இருக்க முடியாது. உணர்ச்சியும் உத்வேகமும் ஆழ்மனதில் பதிந்து இருந்தால் மட்டுமே அது கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படும் .கலை வடிவத்தின் ஊடாக வெளிப்படும் .கலை வடிவங்கள் மூலம் நாம் இழந்ததை , நாம் சிந்திய ரத்தத்தை கலையின் மூலம் நம்முடைய வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் ..நாம் இன்றைக்கு தோற்று இருக்கலாம் .பின்னடைவை சந்தித்து இருக்கலாம் .ஆனால் இந்த பின்னடைவும் தோல்வியும் நாம் இன்னும் முன் நோக்கி செல்வதற்கான ஒரு பாடமாக இருக்கவேண்டும் அதற்கு இந்த கலை வடிவங்களை பயன்படுத்த வேண்டும்., அடுத்தடுத்த நிலைக்கு ,அடுத்தடுத்த தலைமுறைக்கு இதன் மூலம் நம் வரலாற்றையும் வாழ்வையும் போராட்டத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் ” என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்த நூலில் இலங்கை பயணம் பற்றிய இரண்டு காலகட்டங்களின் அனுபவங்களை விரிவாகச் சிறந்த புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார் . நந்திக்கடல் போன்ற முக்கியமான இடங்கள் பற்றிய வர்ணனை ஒரு நாவல் தன்மையுடன் ஒரு சிறுகதை தரும் சிறப்பான அதிர்வுகளையும் கொண்டிருக்கிறது. நந்திக் கடல் சார்ந்த பகுதியை நாம் இப்படியும் முன் நிறுத்தலாம் என்பது தெரிகிறது .வள்ளிபுனம் செந்தளிர் இல்லம் ...போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணம் பற்றிய பகுதியில் யுத்தத்தின்போது இழந்த பெற்றோர்களின் குழந்தைகளை பற்றிய சித்திரங்கள் மனதை நெகிழ வைக்கின்றன . ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் ஒருமித்த எழுச்சிமிகு உறுதியான போராட்ட குரல் மட்டுமே உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் என்பதைக் காணாமல் போன தங்களின் குழந்தைகளைப் பற்றிய விவரிக்கும் பெற்றோருடைய கோணத்தில் இருந்து கொண்டே அந்த முகாமின் குரலாகும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் . உலகை உலுக்கிய செம்மணி படுகொலை பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றும் அதுசார்ந்த செம்மணி புதைகுழி பற்றிய புகைப்படங்களும் மனதை உலுக்குவதாக இருக்கிறது . அது போல் தலைவர் பிரபாகரின் வீட்டு கிணறும் முற்றமும் அது அழிக்கப்பட்டபின்பு உள்ள நிலையும் கூட .ஈழத்து பல பகுதிகளின் சிதைவுகள் நம்மை உறுத்துகின்றன .அவரின் ஒவ்வொரு இலங்கை பயணத்தின் போதும் கல்வி சுற்றுலா அனுபவங்கள் என்று நிறுத்திக்கொள்ளாமல் போராளிகளை சந்திப்பதும் அவர்களுடன் உரையாடும் போதும் அவர்கள் கலை இலக்கிய வடிவங்களில் ஆர்வம் கொள்ளச் செய்வதும் அவரின் முக்கிய பணியாக இருக்கிறது.அது போராளிகளை தன்னம்பிக்கையுடன் உத்வேககத்துடன் போராடச் செய்யும் தன்மை கொண்டது .போராளிகளுக்கு சண்டையின் தன்மை பற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறை பற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார் படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது ஒரு நம்பிக்கையாக இருப்பதையும் பதிவு செய்திருக்கிறார் “ எதிரியின் அழிவில் தான் எங்களது வெற்றியே தங்கியிருக்கின்றது எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டிருக்கும் ராணுவ வீரர் நடுவே உயிர் பிடுங்கப்படும் வரை என்பது போராளிகள் உயிருடன் இருப்பார்கள் .எனவே எதிரியின் அளவுக்கு வேகமாக செல்லுங்கள் .முடிந்தவரை எதிரிகளை வேகமாக எதிர்கொள்ளுங்கள் . அதன் மூலம் வெற்றியை பெறுங்கள் “என தலைவர் பிரபாகரன் போராளிகளுக்கு விளக்கிக்கொண்டு இருந்ததை அவர் நேரில் பார்த்த சாட்சிகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் . வட தமிழகத்தை போலல்லாது தென்தமிழகம் சிங்களக் குடியேற்றங்களும் ராணுவம் கொலை பசியாலும் ராணுவத்துடன் கூடிநின்ற சிங்கள முஸ்லிம் காடையர்களாலும் சிரமம் த ரப்பட்டது பற்றிய அவரின் சித்திரங்கள் எவ்வித பாவனையும் இல்லாமல் எளிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இலங்கையில் பல்வேறு வகையான மனிதர்களைச் சந்திக்கிறார் வேதனை கோபம் ஆற்றாமை அழுகை என்று பல்வேறு உணர்ச்சிகளோடு அவர்களுடன் உரையாடல் அமைந்திருப்பதை இந்நூலின்பல பகுதியில் காட்டுகின்றன .. தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்வது பாரிய குறைவாக உள்ளது என்று அவர் ஒரு இதழுக்கு கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் .அது போல் சில பேட்டிகள் இந்த நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டு அவரின் அரசியல் பார்வை தெளிவாகிறது. இலங்கை போராட்டம் சார்ந்த நிலைகளையும் மக்கள் வாழ்வினையும் பயண அனுபவங்களையும் கொண்டு ஓவியர் புகழேந்தி இதில் பதிவு செய்திக்கிறார் ..அந்த பதிவுகளை அவரின் பல ஓவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன .அந்த ஓவிய பதிவுகள் ஒரு நிரந்தர கல்வெட்டுகளாக மாறியிருக்கின்றன .ஓவியர் புகழேந்தியின் வாழ்க்கைப்பயணத்தில் ஓவியம் கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமில்லாமல் அரசியலும் முக்கிய பங்கு வகிப்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது தோழமை சென்னை சுப்ரபாரதிமணியன் ReplyForward
. திருப்பூர் மேகா பிரியதர்ஷினி என்ற எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவியின் கதைகள் / சுப்ரபாரதிமணியன் திருப்பூர் சிறுவர்களை தமிழில் எழுதவைப்பது சிரமம். கல்வித்திட்டப் பாடம் தாண்டி அவர்கள் சிந்தனை வெளிப்படுத்துவது இன்னும் சிரமம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் எழுத்துப் பயிற்சியும் கல்வி அக்கறையும் குறைந்துவருகிறது மேகா பிரியதர்ஷினி எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவி தொடர்ந்து அவரின் தந்தை எழுத்தாளர் அழகு பாண்டி அரசப்பனுடன் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் .பாடல்கள் பாடுகிறார் கதைகள் சொல்கிறார். இந்த அக்கறை அவரைத் தொடர்ந்து எழுதவும் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது .அழகு பாண்டி அரசப்பன் சிறுகதைகள் எழுதுவதற்கு மேகா பிரியதர்ஷினிதான் காரணம் என்பது தனிக்கதை சிறுவர் கதைகளில் அவர்களே எழுதும் ஈர்ப்பில் இயல்பில் இனிமையான மொழிநடையும் சின்ன சின்ன விடயங்களும் இருக்கும். அதைத்தாண்டி அவற்றில் பெரியவர்கள் பாதிப்பு என்கிறபோது மிகையான சம்பவங்களும் அதிகமான கற்பனையும் கூட கலந்து விடும். அதெல்லாம் இல்லாமல் ரேகா பிரியதர்ஷினி எட்டாம் வகுப்பிலேயே ஒரு தொகுப்பை முழுமையாக எழுதி இருக்கிறார். முதல் கதை மிகவும் முக்கியமான கதை அரவிந்தன் குமாட்டி என்றொரு படம் எடுத்திருக்கிறார் அதில் கிராமத்திற்கு வந்து போகும் ஒரு மந்திரவாதி குறும்பு செய்யும் குழந்தைகளை நாயாக மாற்றி விடுவார் .ஒரு நாயை மறுபடியும் சிறுவன் ஆக மாற்றாமல் அந்த கிராமத்தை விட்டு சென்று விடுவார் அடுத்த ஆண்டில்தான் மீண்டும் வருவார் .அந்த சூழலில் அந்த குழந்தையின் மன இயல்பையும் பெற்றோர்களைப் பற்றியும் அந்தப் படம் சொன்னது . 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம். சம்பந்தமில்லாமல் எனக்கு அந்தப் படம்தான் ஞாபகம் வந்தது .முதல் கதை அந்த மையம் மாதிரி ஒன்று. அருமையான கதை ஆனால் ரேகா பிரியதர்ஷினி அந்த படமெல்லாம் பார்க்க வாய்ப்பில்லை. மொட்டு, பூக்கள் மலரும் அனுபவம் பற்றிய ஒரு அருமையான கற்பனையை முதல் கதையிலேயே சொல்லியிருக்கிறார். அழகு பாண்டி அரசப்பன் தன் மகளின் கதை எழுதும், கதை சொல்லும் பாதிப்பே தன்னை சிறுகதைகள் எழுதி வைத்ததாக சொன்னது பெருமைப்பட வைத்தது எந்த வித திடுக்கிடும் சம்பவங்களும் அதிகம் இல்லாமல் இந்த கதைகளை வடிவமைத்திருக்கிறார், ஒரு பயணம் பற்றிய கதையில் அப்படித்தான் எளிமையான விஷயம், மழை சார்ந்த உணர்வுகள் அவரை பிரமிக்க வைத்து இருப்பதை கதையாக எழுதியிருக்கிறார். இன்றைய தலைமுறையில் கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவை மறந்து விட்ட சூழலில் அவற்றின் முக்கியத்துவத்தை சில கதைகள் உணர்த்துகின்றன. சிறுவர்கள் பெரும்பாலும் பேய்கதைகளையும், திகில் கதைகளை விரும்பி கேட்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் இவ் வகைக் கதைகள் நூல்கள் நிறைய வருகின்றன. ஆனால் ரேகா பிரியதர்ஷினி மூடநம்பிக்கை கற்பிதம் பற்றியக் கட்டுடைப்பை சரியாகவே தன் கருத்தை கதைகளில் வைத்திருக்கிறார் அழகு செயலில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார், திருடு போவது, மாணவர்கள் அதில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்து அவர்களை மாற்றுப் பாதைக்கு செல்ல வேண்டிய செலுத்தவேண்டிய அக்கறையும் அவரின் கதையில் இருக்கிறது, பிளாட்பாரத்தில் வசிக்கும் சிறுமிக்கு சட்டென மறுவாழ்வு கிடைக்கிறது, அது லாட்டரி சீட்டு பரிசு கொடுப்பது போலத்தான்,, ஆனால் அவ்வகை நேர்மறையான கற்பனைகூட சிறப்பாகத்தான் இருக்கிறது, தாவணி போடப்பயந்து பள்ளிக்கு போகாமல் இருந்த பாட்டியை பற்றிக் கதை எழுதுவதும் பிளாட்பார சிறுமி குறித்து கதை எழுதுவதும் ஆச்சரியப்படுத்துகிறது யூ டியூப் பார்த்துச் சமையல் செய்யும் போக்கு, அவற்றை விமர்சனம் செய்வது கிண்டல் செய்வது என்பதும் நல்ல விஷயமாக இருக்கிறது. வெற்றி பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற சிறுவர்க்கான அறிவுரைகளும் சரியாக கதைகளாக வந்திருக்கின்றன. அவர்கள் தரும் அறிவுரை பெரியவர்களை கவனத்திலெடுத்து அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. அதை இந்த கதைகளில் பதிவு செய்திருக்கிறார். வார்த்தைகள் மூலம் கட்டமைக்கப்படும் சிறுவர் உலகம் எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது அந்த மகிழ்ச்சியை தொடர்ந்து மேகா பிரியதர்ஷினி தன் படைப்பு செயல் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் செய்துவருவதை கவனித்திருக்கிறேன். அவர இத்தொகுப்பின் மூலம் இப்படி வெளிபட்டபோது பெரிய சாதனையாகப்படுகிறது வாழ்த்துவோம் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த துபாயில் வாழும் இஸ்மாயில் மெலடியின் “ புலம் பெயரும் மணல் துகள்கள்” கவிதை நூலை தூரிகா வெளியிட சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார் ( கனவு வெளியீடு ரூ60). மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி சுப்ரமணியன், சத்ருக்கன், சிவகுமார் பிரபு, நூலகர் வின்செண்ட் ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர். ” இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இன்றைய கொரானா பாதிப்புச் சூழல் வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது” என்று குறிப்பிட்டார். இயற்கையின் மீதும், பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள் ஞாயிறு அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சலீம் அலி சிறார் பறவைகள் கவனித்தல் மன்றத் தலைவர் துரிகா அவர்கள் பறவைகள் கவனித்தல் குறித்து உரை ஆற்றினார் . முன்னதாக அங்கு நடந்தக் கவிதைப்பட்டறையில் தமிழ்வளர்ச்சித்துறை முன்னாள் இணை இயக்குனர் குமார் , சுப்ரபாரதிமணீயன், து சோ பிரபாகர், அழகு பாண்டி அரசப்பன், நாதன் ரகுநாதன்., பொன் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பயிற்சி உரைகளை நிகழ்த்தினர் .கல்லூரி மாணவர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை எழுதும் பயிற்சி பற்றிய பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த துபாயில் வாழும் இஸ்மாயில் மெலடியின் “ புலம் பெயரும் மணல் துகள்கள்” கவிதை நூலை தூரிகா வெளியிட சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார் ( கனவு வெளியீடு ரூ60). மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி சுப்ரமணியன், சத்ருக்கன், சிவகுமார் பிரபு, நூலகர் வின்செண்ட் ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர். ” இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இன்றைய கொரானா பாதிப்புச் சூழல் வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது” என்று குறிப்பிட்டார். துரிகா அவர்கள் ஆற்றிய விரிவான உரையில்... மாபெரும் அதிசயம் ஒன்றின் மீதே அமர்ந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்வது நம் எதிர்காலத்திற்று மட்டுமல்ல., நம் நிகழ்காலத்திற்கும் நல்லது அல்ல. உலகம் என்னும் அதிசயம் உயிர்ச்சூழல்களான தாவரம், விலங்கு, நுண்ணியிர், பறவைகள், மனிதர்களால் மட்டும் நிரப்பப்பட்ட ஒன்றல்ல. உயிரற்ற சூழலான சூரிய ஒளி, நீர் நிலம் காற்று என ஏராளமான அதிசயங்களும் சேர்ந்தால்தான் சுகமாக இந்த பூமி சுழல் முடியம். உயிர்களை தாவரம், விலங்கு, நுண்ணுயிர் என மூன்றுப் பெரும் பிரிவுகளாகப் பார்க்கிறோம். ஒன்வொரு இனத்திலும் கோடிக் கணக்கில் உயிர் எண்ணிக்கைகளை காண்கிறோம். அவைகளுக்கு இடையே இருக்கும்சார்புத்தன்மையை நாம் புரிந்துகொண்டது மிக்குறைவே. இயற்கையின் வினோத ஏற்பாட்டினால் உயிர்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்னப்பட்டிருக்கின்றன. உணவுச் சங்கிலி சக்தியின் சுழற்சி போன்றவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. . இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது. சிட்டுக்குருவிகள் அருகி வர நமது வாழ்வியல் மாற்றமும் காரணம், தானியங்களை அறுவடை செய்வது முதல், போரடித்தல், தூற்றுதல், புடைத்தல், என திறந்த வெளி செயல்பாடுகளுக்கு மாற்றாக இயந்திர பண்ணைக்கருவிகளின் வருகையும், முற்றத்தில் சாம்பல் கொண்டு பாத்திரம் கழுவும்பொழுது சிதறும் பருக்கைகளை உன்ன வந்த காக்கைகள் தற்போது உணவு தேடி அலைவதையும் பார்க்க முடிகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் எண்ணிக்கை காடுகளில் குறைந்து வரும் இவ்வேளையில் மனிதனுக்கு காற்றில் பரவும் கிருமிகளால் நோய்த் தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறு கொசுக்கள் முதல், நோய் பரப்பும் பூச்சிகளை உண்டு வாழும் பறவைகள்தான் வரும் முன் நோய் தடுக்கும் காவலர்கள். அப்படிப்பட்ட பறவைகளை கணக்கெடுத்து காப்பது இன்றைய மனித குல தேவை. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை கவனித்தல் செயல்பாட்டாளர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களை கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம் பள்ளி மாணவர்களும் இதில் ஈடுபடலாம். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும். இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர். இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர். இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: 1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும். 2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்). 3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (18-19,20,21 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும். eBird இணையதளம் ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள். பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும். நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும் பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும். நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும். பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும். ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்). தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல். உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல் நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள். கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. என்று குறிப்பிட்டார் ReplyForward
புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை : சி ஆர் ரவீந்திரன் அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல் .. சி ஆர் ரவீந்திரன் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின் சிறந்த நாவலுக்காக சுப்ரபாரதிமணியனின் ” அந்நியர்கள் “என்ற நாவல் பரிசு பெற்றிருக்கிறது மண்ணில் உயிர் வாழ்க்கை எங்கேயும் எப்போதும் ஓயாமல் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது .அதில் மனித இனம் தனது சிந்தனைத்திறன், தனது தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிறது .இந்த வாழ்க்கை தான் அதனுடைய வாழ்க்கை வரலாறாக படைப்புகளில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாறு நெடுகிலும் மனிதன் இயற்கையை முகர கற்றுக்கொண்டே இருக்கிறான் . அதில் முதன்மையான முயற்சியாக இருப்பது புலம்பெயர்தல் என்ற சிறப்பு மிகுந்த முயற்சி.. அந்த இடையறாத முயற்சியால் பன்முகத்தன்மை கொண்ட மனித வகைகள். ஒன்று கலந்து ஒருங்கிணைந்து வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன .இனம் நிறம் உருவம் மொழி மதம் என்று தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கிவருகிறது .தனது பாதுகாப்பிற்காக அதனுடைய தனித்தன்மையையும் ஒருங்கிணைந்த மனமும் முறைகளையும் காப்பாற்றிக் கொண்டே நிலப்பரப்பு முழுவதுமாக வாழ்க்கையை தொடர்கிறது. வாழ்க்கையில் நிகழும் சிக்கலான மனப் பிறழ்வை முதன்மைப்படுத்தி அவலமான வாழ்க்கையை சித்தரிக்கும் இலக்கியப் போக்கில் இருந்து மாறுபட்டு ஒரு யதார்த்தமான வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கும் சுப்ரபாரதிமணியன் பொதுவாக நிகழ்கால பிரச்சினைகளையே , இயற்கை சீரழிவுப் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டு இயங்கி வருபவர் அப்படித்தான் இந்த “அந்நியர்கள்” நாவலை வடிவமைத்திருக்கிறார் . சென்ற சில நூற்றாண்டுகளில் அரும்பியத் தொழில்நுட்பங்கள் வேகமாக பரவத் தொடங்கின அதன் விளைவாக நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கை முறை மிகப்பெரிய அளவிற்கு மாறிக்கொண்டிருக்கின்றது .அதனால் உலகளாவிய அளவில் மனிதர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள் அதைத் திருப்பூர் போன்ற தொழில் துறை நகரங்களில் பரவலான முறையில் வெளிப்படையாகக் காணலாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியில் குறிப்பாக பின்னலாடைத் தொழிலில் முதன்மையாக இருந்து வரும் இந்த தொழிலில் ஒரு சாராருக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது .10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செல்வாணியையும் தந்து வருகிறது .இந்தியத் துணைக்கண்டம் சாதி மத இன நிற மொழியில் மட்டும் அல்ல. கலாச்சார பண்பாட்டு வாழ்க்கையிலும் மாறுபடும் மக்களை தன் அளவில் கொண்டுள்ளது .ஒன்று கலந்து வாழும் வாழ்க்கை முறை மக்களை பல வகைகளிலும் பாதிக்கக்கூடிய வழிவகைகளை சிக்கலுக்கு உள்ளாகின்றன. வளர்ச்சியடையாத மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் மக்களை உடல் ரீதியாகவும், பாலியல் வன்முறை ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சுரண்டி வரும் தொழில் மற்றும் வாழ்க்கைச் சூழலில் குறிப்பாகப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் வாழ்க்கை நிலைமைகளை மட்டும் அல்லாமல் மற்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அடையாளப்படுத்துகிறது இந்த மையம் சார்ந்த தன்னுடைய இந்த புதிய முயற்சியை குறித்த தனது நோக்கத்தையும் பார்வையையும் இவர் வெளிப்படுத்துகிறார் துளசி என்ற வடநாட்டுப் பெண்ணின் கதை இது. அவள் வாழ்க்கையும் அவருடன் சேர்ந்த பிற இடம்பெயர்ந்து வந்த மக்களின் வாழ்க்கையையும் உள்ளூர் மக்களின் பார்வையில் இடம்பெயர்ந்தோர் சிரமங்களையும் இந்த நாவல் சொல்கிறது வளர்ச்சியின் வேகத்தை சாதாரண மனிதர்களின் பயணம் என்ற வகையில் நாவலில் சொல்லியிருக்கிறார்.. நாவல் முழுவதும் பல வகையான காட்சிகள் அடையாளப் படுத்தப் படுகின்றன அதைப்போலவே உள்ளூர் வெளியூர் மனிதர்களின் சந்திப்பு மூலம் வேறுபட்ட நடத்தை பழக்க-வழக்கங்கள் பலவகையான மனச்சிக்கல்கள் காட்டப்படுகின்றன. இந்த வகை யதார்த்தப் போக்கு வாசகனின் வாசிப்புக்கு மிகவும் ஏற்றதாகிறது. வாழ்க்கையின் அடித்தளத்தில் வாழ வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த , உள்நாட்டு பின்னலாடை தேவைகளை நிறைவு செய்து பெருமளவுக்கு கொண்டு செல்லும் மனிதர்களில் ஒருவர் மையமாகக்காட்டப்படுகிறார் துளசியின் பார்வையில் .அங்கங்கே காணப்படும் சிறிய , பெரிய நடை பாதையோர கடைகளில் பொருட்களை வாங்கி போட்டியிடும் மக்கள் கூட்டத்தில் வாங்கும் திறனை சித்தரித்திருக்கிறார். அவ்வப்போது நகரில் பல பகுதியில் காணப்படும் சாவுகள் பற்றிய சித்தரிப்புகளையும் நாவலில் இவர் பதிவு செய்திருக்கிறார் .பக்கம் . வழியில் யாராவது இப்படி சுலபமாக பிணமாக கிடப்பது சமீபத்தில் அதிகரிப்பதை அவர் அறிந்திருக்கிறார் ..பலவகைகளில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பெண்கள் சாலைகளில் கிடப்பார்கள் .கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எங்காவது கிராம ஓரங்களில் கிடப்பார்கள் சிதைந்த நிலையில் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக சிரமப்பட வேண்டியிருக்கிறது உ.டம்பும் முகமும் சிதைந்திருக்கும்போது அப்படி அடையாளம் காண்பதற்காக துளசியும் தேடிப் பார்த்திருக்கிறாள் .பாலியல் வன்முறைக்கு உள்ளான பல பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள் அவர்களின் உதவிக்கு சில சங்கங்களும் இருக்கின்றன .ஒரு புதிய சூழலில் சிரமம் ஏற்படுகிறது பெண்களுக்கு . இதைத்தவிர வேறு வழிமுறைகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை சட்டென காட்சி மாறிவிட்டது இப்போது புதிய காட்சியில் அவள் மட்டும் தனியாக இருந்தாள் அவளைச் சுற்றி வளைத்த நான்கு பேரையும் காணவில்லை தன்னோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தமோகினியையும் காணவில்லை .இது போல் பல மோகினிகள் நாவலில் முதலாளி தங்களை கொத்தடிமை போல நடத்தும் முறை யில்சில பெண்கள் வருகிறார்கள் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக , அதிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மாட்டுத் தொழுவத்தில் தங்கி இருப்பதாகவும் அது சொன்னது முகம் மறைக்கப்பட்ட அவரின் தோற்றம் குறித்து அந்த செய்தித்தாளில் செய்தி வழியாக இருந்தது என்று ஒரு பகுதி சொல்கிறது துளசியின் வாழ்க்கை தாறுமாறாகப் போவதை நாவல் காட்டுகிறது. அவள் ஒரு குறியீடு.அவளின் அலைதல் புலம்பெயர்தலின் ஒரு குறியீடாகிறது. இது போன்ற தொழிலாளர்கள் அவலம் நிறைந்த இந்த நாவல் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை சரியாகக் குறிப்பிடும் ஒரு முக்கியமான நாவலாக விளங்குகிறது. இந்த வாழ்வு ஒரு வேலைக்காக, சாப்பாட்டிற்காக ஆனால் இங்கே அவர்களின் திறமை, வாழ்க்கை உரிமைகள் தொலைந்த வாழ்க்கை பற்றியும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து முன்வைக்கிறது இந்த நாவலுக்குக் கிடைத்திருக்கும் பரிசு முயற்சியை தொடர்ந்து செய்துவரும் எழுத்து அறக்கட்டளையும் இதைப் பதிப்பித்த கவிதா பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள் (ரூபாய்250 கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு ) (சி ஆர் ரவீந்திரன் , 1/89பேரூர் செட்டிபாளையம் , கோவை) இந்த வாழ்வு ஒரு வேலைக்காக சாப்பாட்டிற்காக ஆனால் இங்கே அவர்களின் திறமையை வாழ்க்கை உரிமைகள் தொலைந்த வாழ்க்கை பற்றியும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையும் முன்வைக்கிறது ReplyForward
1098 : Novel Rs 150 Zero degree Publiing Published in English by Authours Press , Newdelhi சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது 1098 : மலை பூக்கள் ~ அகிலா.. (எழுத்தாளர், மனநல ஆலோசகர், ) இந்தியாவில் இருக்கும் 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 2007ல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கின்றது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் மனரீதியான பாதிப்புகள் போன்றவை குழந்தைகள் சந்திக்கின்ற சில வகையான பிரச்சனைகளாகும். இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, 50 சதவீத பாலியல் வன்முறைகள் குழந்தைகளின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வகுப்புத்தோழர்கள் ஆகியோரால் நிகழ்த்தப்படுகிறது. அரசின் POCSO (போக்சோ - பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டமானது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது. அக்குழந்தைகளைப் பாதுகாக்க பல விதிகளை நடைமுறைபடுத்துகிறது. அவ்வாறு பதியப்பட்ட வழக்குகளின் போதோ அதன்பிறகோ சம்பந்தப்பட்ட குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது, குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர் போன்றோர்அமர்த்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098 தான், இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. ‘மிருகங்கள்: சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோர், பாலியல் வன்முறையாளர்கள், மற்றும் பிற பாலியல் குற்றவாளிகள்’ (Predators: Paedophiles, Rapists, And Other Sex Offenders) என்ற நூலில், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான அன்னா சால்டர் (Anna Salter) அவர்கள், “குற்றம் செய்பவர்கள் நாம் கற்பனை செய்திருக்கும் அரக்கர்களைப்போல் ஒருபோதும் இருப்பதில்லை. பெரும்பாலும், அவர்கள் பிறரின் பார்வையில் ‘அழகான மற்றும் நன்கு விரும்பப்படும்’ ஆண்கள் மற்றும் பெண்களாக உள்ளனர். சிலநேரங்களில், அவர்கள் பொதுவில் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையான மனப்பாங்கினையும் காட்டலாம், இதனால் எல்லாரும் அவர்களை மதிக்கத்தொடங்குகிறார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் குழந்தைகளுடன் ஒத்துணர்வை உருவாக்க நேரத்தைச் செலவிடுகின்றனர், மேலும் அவர்களைத் துன்புறுத்துமுன் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறுகின்றனர்.” என்கிறார். இது ஓர் எச்சரிக்கை மணியாக பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள உதவும். சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது. ‘நேத்து ரொம்ப சிரமப்பட்ட போல இருக்கே வா நான் வந்து எப்படின்னு காமிக்கிறேன் அப்படின்னு ஒரு ஆணை கூட்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு பெண் பேனருக்கு பின்னால் சென்றார். எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன அப்படியே உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது .எங்காவது ஓடினால் நல்லது என்று தோன்றியது..’ என்ற அந்த சிறுமியை விபச்சாரத்துக்கு உட்படுத்தும் நிலையில் சுட்டப்படும் காட்சி மனதை நெருடுகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்கை கொள்ளவும் சமூகம், அதன் கட்டமைப்புகள் இட்டுச்செல்லவே விழைகின்றன. ‘இனிமேல் குளிக்கிற போது உடைகளை கழட்ட போதும் தன் பெண்குறியில் பக்கமிருந்து விசுவரூபமாய் ஏதாவது ஆவி வந்து தன்னை முகத்தில் அறையக் கூடும் என்று விநோதமாய் அவள் நினைத்தாள். அப்படி ஒரு ஆவி அவளை அறைவதற்குள் இதுபோன்ற உயரமான ஒரு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து விடுவது தான் ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்கும் .நிரந்தர நிவாரணமாக்க் கூட இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தாள்..’ என்னும் வரிகளும் சிறுமியின் மன உளைச்சலை எடுத்தியம்புகின்றன. உடல் குறித்த பெரிய அறிவொன்றும் ஏற்பட்டிராத வயதில், தன் உடலின் மீது கொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களின் வலியும் உளவியல் சார்ந்த பாதிப்பும் அச்சிறுமியின் உணர்வுகளில் வாழ்க்கைக் குறித்த அருவெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தி தற்கொலை சிந்தனையை உரக்க படிப்பிக்கிறது. இந்த நாவலில், வழக்காடு மன்றத்துக்கு சாட்சியங்கள் எத்தனை முக்கியம் என்பதையும் அவை வழக்கு விசாரணைக்கு வரும் கால அவகாசம் வரை அப்படியே இருப்பதில்லை என்பதையும் மனிதர்களின் ஞாபக அடுக்குகளில் இருந்து அந்த நினைவுகள் கலைந்துவிடுவதையும், கால ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையே வளரிளம் பருவத்தைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிடுவதையும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்நாவல் சிறுமியிலிருந்து அனுபவித்த துன்பம் கடந்து, வளரிளம் பெண்ணாய் குளிர்பிரதேசம் ஒன்றில் தேயிலை தோட்டத்து வேலைக்குச் சென்று புதுவாழ்வைத் தொடங்கும் சூழலை விவரிக்கும் வகையிலும், அங்கேயும் சாராயம் அருந்திய ஒருவனைக் காட்டி முடிக்கும்போது, சமூகத்தின் நிதர்சனமான முகம் என்பது சற்றும் வேறுபடவில்லை என்பதையே உணரமுடிகிறது. இருந்தும், பெண்ணின் மீள்தலும், அதன்பின் அவளின் நிலைகொள்ளுதலும் அவளிடமே இருப்பதாய், பெண்களாகிய அவர்கள் ‘மலையில் பூக்கும் பூக்கள்’ என இறுதியில் இயம்புகின்றன,கனம் நிறைந்த இப்படைப்பின் வரிகள். எழுத்தாளரும் நண்பருமான சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துமுறை, அனைவருக்கும் பரிச்சயமானதே.‘கனவு’ சிற்றிதழை கடந்த 34 வருடங்களாகத் திறம்பட நடத்திவருபவர். திருப்பூர் மற்றும் அதன் பின்னலாடை தொழில், கலாஸ் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள், நொய்யலில் கலக்கும் சாயத்தண்ணீர், தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக் கழிவுகள் போன்ற சமூக பிரச்சனைகளைக் களம் கண்டு எழுதிக்கொண்டிருப்பவர். அவரின் நாவல்களான நெசவு, சாயத்திரை, கோமணம், வேட்டை, சுடுமணல் என்பதான எழுத்துகள் அனைத்தும் சமூக சீரமைப்பின் மீதான அவரின் பார்வை, சகமனிதர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்ட தன்மை போன்றவற்றை சத்தமிட்டுச் சொல்லத் தவறியதில்லை. ‘1098’ என்ற இந்த நாவலும் அவரின் முந்தைய நாவல்களைப் போன்றதே. குழந்தைகளின் பாலியல் வன்முறைகள் சார்ந்த சமூக அவலநிலையை எடுத்தியம்பத் தவறவில்லை. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கொடுக்கப்படும் போக்சோ சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் நலச்சங்கங்களின் சீரிய பணியும், மகிளா வழக்காடு மன்றங்கள் குறித்தும் அதிகமான விழிப்புணர்வு நம் சமூகத்துக்குத் தேவையான ஒன்றாய் இருக்கிறது. அதை இந்த நாவல் பூர்த்தி செய்திருக்கிறது. நண்பர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துகளால் சுற்றியிருக்கும் சமூகம் மேன்மேலும் பயனடைய என் வாழ்த்துகள். ~ அகிலா.. எழுத்தாளர், மனநல ஆலோசகர், கோவை. +91 9443195561 artahila@gmail.com 1098 : Novel Rs 150 Zero degree Publiing Published in English by Authours Press , Newdelhi
மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் / சுப்ரபாரதிமணியன் சமீபத்தில் திருப்பூரைச் சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மேகா அவர்களின் சிறாவர் கதைகளை படித்து ஒரு முன்னுரை எழுதினேன். இப்போது இன்னொரு மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் பற்றி எழுதுவதும் இன்னொரு விதமான மகிழ்ச்சியாக இருக்கிறது கொரானா காலகட்டத்திற்குப் பிறகு குழந்தைகளின் எழுத்துத் திறனும் வாசிப்ப திறனும் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது குழந்தைகளின் எழுத்து பயிற்சியும் இல்லாமல் அல்லது குறைந்து போய்வட்டது. இந்த சூழலில் குழந்தைகள் தங்கள் அனுபவங்களை கதைகளாக எழுதுவது அவர்களுக்கு மொழி சார்ந்த பயிற்சியாகவும் இருக்கும். தங்களடைய அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதற்கான முயற்சியாக இருக்கும் முன்பெல்லாம் குழந்தைகள் கதைகள் என்ற பெயரில் பெரிய பெரியவர்கள் தான் அதிகம் எழுதுவார்கள். ஆனால் இன்று குழந்தைகளே நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் அவையெல்லாம் இன்னும் பெரிய விரிந்த பரப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் பாடப் புத்தகங்களைத் தாண்டி மொழி பயிற்சிக்காக எழுதுவதும் கதை அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதும் வாசிப்பும் மிகவும் அவசியம் எனப்படுகிறது .இந்த சூழலில் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து இந்த தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார் .அது ஆரோக்கியமான கதைகளாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி . விலங்குகள் பறவைகளை வைத்துக் கொண்டுதான் நீதிகளை அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்று இல்லை அப்படி சொல்வதில் இருக்கின்ற கற்பனை வளமும் முக்கியமானது ஆனால் இன்றைக்க சமூகத்தில் குழந்தைகள் பெண்கள் பெற்றோர், கல்வி பற்றியும் முக்கியமாகச் சுற்றுச்சூழல் பற்றியும் நமக்கு உள்ள பார்வை வெவ்வேறு வகைகளில் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது அப்படித்தான் அவர்கள் அதை எல்லாம் கவனித்து இன்றைக்கு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான மொழி என்பது குழந்தைகள் எழுதும்போதுதான் வசப்படும் அதைத் திரும்பத் திரும்ப படிக்கிறபோது பெரியோர்களுக்கும் வசப்படும் அப்படித்தான் எளிமையான மொழியில் சச்சினும் கதை சொல்லிக் சரிதாவும் இந்த நூலை எழுதி இருக்கிறார்கள்.நவீன தமிழ் இலக்கிய பங்களிப்பில் குடும்பமே ஈடுபடுவது அல்லது குழந்தைகளின் பங்கேற்புடன் பெரியவர்கள் ஈடுபடுவது என்பது மிக முக்கியமானது. அப்படித்தான் நான் சச்சின் உடைய பங்களிப்பையும் அவனுடைய பங்களிப்பையும் சரிதா ஜோவுடன் கவனிக்கிறேன். இவற்றில் சிறுவர்களுக்கான கற்பனை வளம் சிறப்பாக இருக்கிறது மேகத்தை பார்த்து வெள்ளைக்கிளி என்றும் வெள்ளை யானை என்றும் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடிகிறது. கனவுகளைப் பற்றி பல தகவல்கள் பெரியோர்களால் சொல்லப்படும். ஜாதக குறிப்புகளும் தினசரி கேலண்டர் குறிப்புகளும் நிறைய கிடைக்கும். ஆனால் அந்த கனவுகள் என்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வையை ஒரு கதை சொல்கிறது. இயற்கை சூழலும் வாழ்வும் என்றைக்கும் மனிதனை இயல்பாக இருக்க வைக்கும். ஆனால் இன்றைக்கு சூழல் மாறிவிட்டது இயற்கையிலிருந்து நாம் வெகுவாக தள்ளி இருக்கிறோம் அதனால் நிறைய சிரமப்படுகிறோம் அதில் இந்த கொரானா தொற்று முக்கியமானதாகும். நமக்கு எல்லாமே கிடைத்து விடுகிறது .ஆனால் இயற்கையோடு இணைந்த அனுபவங்கள் கிடைப்பதில்லை அப்படித்தான் மலர்களிலிருந்து தேனை எடுத்துக் கொள்ள வண்ணத்துப்பூச்சி விரும்புகிறது. நேரடியாக அதற்கு கிடைக்கும் தேன் என்பது அதற்கு தேவையில்லாமல் இருக்கிறது இந்த அனுபவம் மனிதனுக்கும் மிகவும் பொருத்தப்பட உள்ளதாக இருக்கிறது. இந்த கதைகளில் உரைநடைத் தன்மை என்பதை மீறி பேச்சுவழக்கில் கதைகளை எழுதியிருப்பதும் இன்னும் வாசகர்களை ஈர்ப்பு ஆக்குகிறது எல்லா உயிர்களுக்கும் இருக்கும் இயல்புகள் மனிதர்களைப்போல முக்கியமானவை என்று இக்கதைகள் சொல்லுகின்றன .காதலர் தினம் பற்றிய பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும் அன்பு நேசம் இவற்றை மையமாகக் கொண்ட காதலர் தினம் பற்றிய கதைகளும் கூட தனித்தன்மை பெற்று இருக்கின்றன. மழை என்ற அனுபவத்தை அல்லது நல்ல காற்றை அனுபவிப்பது அல்லது இயற்கை சூழலை வெளிக்காட்டுவது என்பதெல்லாம் மனிதனை இலகுவாகிவிடும் அப்படித்தான் இந்த சிறுகதைகள் நம்மைகை பிடித்து அழைத்துச் சென்று பல இடங்களைக் காட்டுபவை பல்வேறு விஷயங்களில் தவறான புரிதல்களைச் சுட்டிக்காட்டும் . கற்ற குழந்தைகளை வசீகரிக்கும் இந்த கதைகளை சரிதாவும் அவர் மகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள். சுப்ரபாரதிமணியன் திருப்பூர
பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி உலக மகளிர் தினத்தையொட்டி கொங்கு பகுதியைச் சார்ந்த 12 பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை திருப்பூர் ஸ்ரீ விவேகானாந்தா சேவாலயம் அமைப்பைச் சார்ந்தவரும் கல்வியாளருமான ஜோதிலட்சுமி திறந்து வைத்தார். பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி இந்நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி ஓவியர் சின்ன ராஜ் பேசினார். எட்டுத்திக்கும் என்றத் தலைப்பில் எட்டு இடங்களில் நடக்கவிருக்கும் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சியின் முதல் இடம் திருப்பூராகும். பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி ” பெண்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தவர்கள். இந்த நூற்றாண்டில் அவர்கள் எழுச்சி பெற்று கலைஇலக்கியம் மற்றும் தொழில்த்துறைகளில் முன்னேறி வருகிறார்கள் . தங்கள் எண்ணங்களை ஓவியங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களின் ஓவியங்கள் உணர்ச்சிக்குவியலாக இருக்கும். அன்பின் வெளிப்பாடாக தாய்மை எண்ணங்களுடன் இருப்பது சிறப்பாகும் “ என்று கல்வியாளரும் திருப்பூர் காட்டன் வேலி பள்ளி நிர்வாகியுமான கவிப்ரியா ராஜீ அவர்கள் சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார், பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி ஓவியர் அங்காளீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.. பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெண்மைய ஓவியங்கள் இலக்கியப்படைப்புகளின் இன்னொரு பரிமாணமாய் விளங்குவதை தன் சிறப்புரையில் குறிப்பிட்டார். நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சியில் * சுப்ரபாரதிமணியனின் இரு நாவல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்: The Notch, 1098 * அழகு பாண்டி அரசப்பனின் “ ஒரு குத்துப் பருக்கை “ ( சிறுகதைத் தொகுப்பு ) * பொன் சண்முகசுந்தரத்தின் “ வகுப்பறை “ ( கவிதைத் தொகுப்பு) ஆகியவை இடம் பெற்றன. மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி.சுப்ரமணியன், சிவகுமார் பிரபு, வின்செண்ட் ராஜ் மற்றும் கவிஞர்கள் முத்து மீனாட்சி, லதாஹரி உட்பட பலர் பங்கு பெற்றுப் பேசினர் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி உலக மகளிர் தினத்தையொட்டி கொங்கு பகுதியைச் சார்ந்த 12 பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சி திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை திருப்பூர் ஸ்ரீ விவேகானாந்தா சேவாலயம் அமைப்பைச் சார்ந்தவரும் கல்வியாளருமான ஜோதிலட்சுமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி ஓவியர் சின்ன ராஜ் பேசினார். எட்டுத்திக்கும் என்றத் தலைப்பில் எட்டு இடங்களில் நடக்கவிருக்கும் பெண் ஓவியர்கள் ஓவியங்கள் கண்காட்சியின் முதல் இடம் திருப்பூராகும். ” பெண்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தவர்கள். இந்த நூற்றாண்டில் அவர்கள் எழுச்சி பெற்று கலைஇலக்கியம் மற்றும் தொழில்த்துறைகளில் முன்னேறி வருகிறார்கள் . தங்கள் எண்ணங்களை ஓவியங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களின் ஓவியங்கள் உணர்ச்சிக்குவியலாக இருக்கும். அன்பின் வெளிப்பாடாக தாய்மை எண்ணங்களுடன் இருப்பது சிறப்பாகும் “ என்று கல்வியாளரும் திருப்பூர் காட்டன் வேலி பள்ளி நிர்வாகியுமான கவிப்ரியா ராஜீ அவர்கள் சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார், ஓவியர் அங்காளீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெண்மைய ஓவியங்கள் இலக்கியப்படைப்புகளின் இன்னொரு பரிமாணமாய் விளங்குவதை தன் சிறப்புரையில் குறிப்பிட்டார். நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சியில் * சுப்ரபாரதிமணியனின் இரு நாவல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்: The Notch, 1098 * அழகு பாண்டி அரசப்பனின் “ ஒரு குத்துப் பருக்கை “ ( சிறுகதைத் தொகுப்பு ) * பொன் சண்முகசுந்தரத்தின் “ வகுப்பறை “ ( கவிதைத் தொகுப்பு) ஆகியவை இடம் பெற்றன. மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி.சுப்ரமணியன், சிவகுமார் பிரபு, வின்செண்ட் ராஜ் மற்றும் கவிஞர்கள் முத்து மீனாட்சி, லதாஹரி உட்பட பலர் பங்கு பெற்றுப் பேசினர் செய்தி : சுப்ரபாரதிமணியன் 9486101003
The hindu tamil Book review section ? From subrabharathimanian தாங்கள் 45 ஆண்டுகளாக எழுதி வருகிறீர்கள். தி இந்து 30 என்று குறைத்து குறிப்பிட்டிருக்கிறது என்று வேலூர் சிந்து சீனு தொலைபேசியில் இன்று இந்து தினசரி பார்த்துவிட்டு பேசினார் ஆம். என் முதல் சிறுகதை 1977ல் திருப்பூர் சி பி எம் கட்சித் தோழர்கள் நடத்திய விழிப்பு இலக்கிய இதழில் வெளியானது.சுதந்திர வீதி கள் தலைப்பு. நெருக்கடி கால நிலையில் ஒரு கால்பந்தாட்ட வீரருக்கு ஏற்பட்ட காவல் துறை அத்துமீறல் பற்றிய கதை அது. அதற்கு முன்பு கோவை பூசாகோ கல்லூரியில் எம் எஸ் சி படித்த போது தமிழ் த் துறை நடத்தி ய புதுவெள்ளம் மாணவர் இதழில் சிலது எழுதினேன் 2 சி பி எம் தோழர் கணேசன் விழிப்பு இதழ் சி பி எம் கட்சியினர் இதழ் அல்ல என்று குறிப்பிடுகிறார். கட்சி தோழர் கள் சிலர் இருந்தனர் என்று கூறினார் ஆம்.. அதன் ஆசிரியர் குழுவில் கோவை சி ஆர் ரவீந்திரன். கோவை ஞான பாரதி. பேன்டம் நடராஜன். பாவெல் துரை ஆகியோர் இருந்தனர்..பாவல் மறைந்து விட்டார் சமீபத்தில். கட்சி வட்டாரம் தாண்டி பல வெவ்வேறு வகை இடதுசாரி ப்படைப்பாளிகள் அதன் எழுதினார் கள். நானும் பல கதைகள் எழுதினேன். செம்மலர் பத்திரிகை யும் கட்சியும் விழிப்பு இதழுக்கு கருப்பு கொடி காட்டி நிறுத்த வைத்தனர் என்று பரவலாக ப் பேசப்பட்டது 3 செம்மலர் பத்திரிகை யும் கட்சியும் விழிப்பு இதழுக்கு கருப்பு கொடி காட்டி நிறுத்த வைத்தனர் என்பதை இரு சி பி எம் தோழர்கள் மறுத்திருக்கின்றனர். விழிப்பு பொருளாதாரச் சிரமங்களால்தான் நிறுத்தப்பட்டது. கட்சித் தலையீட்டால் அல்ல என்று குறிப்பிட்டனர் “
புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல் சி ஆர் ரவீந்திரன் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின் சிறந்த நாவலுக்காக சுப்ரபாரதிமணியனின் ” அந்நியர்கள் “என்ற நாவல் பரிசு பெற்றிருக்கிறது மண்ணில் உயிர் வாழ்க்கை எங்கேயும் எப்போதும் ஓயாமல் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது .அதில் மனித இனம் தனது சிந்தனைத்திறன், தனது தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிறது .இந்த வாழ்க்கை தான் அதனுடைய வாழ்க்கை வரலாறாக படைப்புகளில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாறு நெடுகிலும் மனிதன் இயற்கையை முகர கற்றுக்கொண்டே இருக்கிறான் . அதில் முதன்மையான முயற்சியாக இருப்பது புலம்பெயர்தல் என்ற சிறப்பு மிகுந்த முயற்சி.. அந்த இடையறாத முயற்சியால் பன்முகத்தன்மை கொண்ட மனித வகைகள். ஒன்று கலந்து ஒருங்கிணைந்து வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன .இனம் நிறம் உருவம் மொழி மதம் என்று தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கிவருகிறது .தனது பாதுகாப்பிற்காக அதனுடைய தனித்தன்மையையும் ஒருங்கிணைந்த மனமும் முறைகளையும் காப்பாற்றிக் கொண்டே நிலப்பரப்பு முழுவதுமாக வாழ்க்கையை தொடர்கிறது. வாழ்க்கையில் நிகழும் சிக்கலான மனப் பிறழ்வை முதன்மைப்படுத்தி அவலமான வாழ்க்கையை சித்தரிக்கும் இலக்கியப் போக்கில் இருந்து மாறுபட்டு ஒரு யதார்த்தமான வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கும் சுப்ரபாரதிமணியன் பொதுவாக நிகழ்கால பிரச்சினைகளையே , இயற்கை சீரழிவுப் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டு இயங்கி வருபவர் அப்படித்தான் இந்த “அந்நியர்கள்” நாவலை வடிவமைத்திருக்கிறார் . சென்ற சில நூற்றாண்டுகளில் அரும்பியத் தொழில்நுட்பங்கள் வேகமாக பரவத் தொடங்கின அதன் விளைவாக நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கை முறை மிகப்பெரிய அளவிற்கு மாறிக்கொண்டிருக்கின்றது .அதனால் உலகளாவிய அளவில் மனிதர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள் அதைத் திருப்பூர் போன்ற தொழில் துறை நகரங்களில் பரவலான முறையில் வெளிப்படையாகக் காணலாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியில் குறிப்பாக பின்னலாடைத் தொழிலில் முதன்மையாக இருந்து வரும் இந்த தொழிலில் ஒரு சாராருக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது .10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செல்வாணியையும் தந்து வருகிறது .இந்தியத் துணைக்கண்டம் சாதி மத இன நிற மொழியில் மட்டும் அல்ல. கலாச்சார பண்பாட்டு வாழ்க்கையிலும் மாறுபடும் மக்களை தன் அளவில் கொண்டுள்ளது .ஒன்று கலந்து வாழும் வாழ்க்கை முறை மக்களை பல வகைகளிலும் பாதிக்கக்கூடிய வழிவகைகளை சிக்கலுக்கு உள்ளாகின்றன. வளர்ச்சியடையாத மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் மக்களை உடல் ரீதியாகவும், பாலியல் வன்முறை ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சுரண்டி வரும் தொழில் மற்றும் வாழ்க்கைச் சூழலில் குறிப்பாகப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் வாழ்க்கை நிலைமைகளை மட்டும் அல்லாமல் மற்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அடையாளப்படுத்துகிறது இந்த மையம் சார்ந்த தன்னுடைய இந்த புதிய முயற்சியை குறித்த தனது நோக்கத்தையும் பார்வையையும் இவர் வெளிப்படுத்துகிறார் துளசி என்ற வடநாட்டுப் பெண்ணின் கதை இது. அவள் வாழ்க்கையும் அவருடன் சேர்ந்த பிற இடம்பெயர்ந்து வந்த மக்களின் வாழ்க்கையையும் உள்ளூர் மக்களின் பார்வையில் இடம்பெயர்ந்தோர் சிரமங்களையும் இந்த நாவல் சொல்கிறது வளர்ச்சியின் வேகத்தை சாதாரண மனிதர்களின் பயணம் என்ற வகையில் நாவலில் சொல்லியிருக்கிறார்.. நாவல் முழுவதும் பல வகையான காட்சிகள் அடையாளப் படுத்தப் படுகின்றன அதைப்போலவே உள்ளூர் வெளியூர் மனிதர்களின் சந்திப்பு மூலம் வேறுபட்ட நடத்தை பழக்க-வழக்கங்கள் பலவகையான மனச்சிக்கல்கள் காட்டப்படுகின்றன. இந்த வகை யதார்த்தப் போக்கு வாசகனின் வாசிப்புக்கு மிகவும் ஏற்றதாகிறது. வாழ்க்கையின் அடித்தளத்தில் வாழ வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த , உள்நாட்டு பின்னலாடை தேவைகளை நிறைவு செய்து பெருமளவுக்கு கொண்டு செல்லும் மனிதர்களில் ஒருவர் மையமாகக்காட்டப்படுகிறார் துளசியின் பார்வையில் .அங்கங்கே காணப்படும் சிறிய , பெரிய நடை பாதையோர கடைகளில் பொருட்களை வாங்கி போட்டியிடும் மக்கள் கூட்டத்தில் வாங்கும் திறனை சித்தரித்திருக்கிறார். அவ்வப்போது நகரில் பல பகுதியில் காணப்படும் சாவுகள் பற்றிய சித்தரிப்புகளையும் நாவலில் இவர் பதிவு செய்திருக்கிறார் .பக்கம் . வழியில் யாராவது இப்படி சுலபமாக பிணமாக கிடப்பது சமீபத்தில் அதிகரிப்பதை அவர் அறிந்திருக்கிறார் ..பலவகைகளில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பெண்கள் சாலைகளில் கிடப்பார்கள் .கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எங்காவது கிராம ஓரங்களில் கிடப்பார்கள் சிதைந்த நிலையில் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக சிரமப்பட வேண்டியிருக்கிறது உ.டம்பும் முகமும் சிதைந்திருக்கும்போது அப்படி அடையாளம் காண்பதற்காக துளசியும் தேடிப் பார்த்திருக்கிறாள் .பாலியல் வன்முறைக்கு உள்ளான பல பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள் அவர்களின் உதவிக்கு சில சங்கங்களும் இருக்கின்றன .ஒரு புதிய சூழலில் சிரமம் ஏற்படுகிறது பெண்களுக்கு . இதைத்தவிர வேறு வழிமுறைகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை சட்டென காட்சி மாறிவிட்டது இப்போது புதிய காட்சியில் அவள் மட்டும் தனியாக இருந்தாள் அவளைச் சுற்றி வளைத்த நான்கு பேரையும் காணவில்லை தன்னோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தமோகினியையும் காணவில்லை .இது போல் பல மோகினிகள் நாவலில் முதலாளி தங்களை கொத்தடிமை போல நடத்தும் முறை யில்சில பெண்கள் வருகிறார்கள் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக , அதிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மாட்டுத் தொழுவத்தில் தங்கி இருப்பதாகவும் அது சொன்னது முகம் மறைக்கப்பட்ட அவரின் தோற்றம் குறித்து அந்த செய்தித்தாளில் செய்தி வழியாக இருந்தது என்று ஒரு பகுதி சொல்கிறது துளசியின் வாழ்க்கை தாறுமாறாகப் போவதை நாவல் காட்டுகிறது. அவள் ஒரு குறியீடு.அவளின் அலைதல் புலம்பெயர்தலின் ஒரு குறியீடாகிறது. இது போன்ற தொழிலாளர்கள் அவலம் நிறைந்த இந்த நாவல் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை சரியாகக் குறிப்பிடும் ஒரு முக்கியமான நாவலாக விளங்குகிறது. இந்த வாழ்வு ஒரு வேலைக்காக, சாப்பாட்டிற்காக ஆனால் இங்கே அவர்களின் திறமை, வாழ்க்கை உரிமைகள் தொலைந்த வாழ்க்கை பற்றியும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து முன்வைக்கிறது இந்த நாவலுக்குக் கிடைத்திருக்கும் பரிசு முயற்சியை தொடர்ந்து செய்துவரும் எழுத்து அறக்கட்டளையும் இதைப் பதிப்பித்த கவிதா பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள் (ரூபாய்250 கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு )
திருப்பூரின் மூத்த எழுத்தாளர்களுக்குப் பாராட்டு திருப்பூரைச் சார்ந்த மூத்த எழுத்தாளர்களுக்கு வியாழன் மாலை புது ராமகிருஷ்ணாபுரம் அரசு பள்ளிக்கு எதிரில் நடந்த கூட்டத்தில் திருப்பூர் இலக்கிய நண்பர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது திருப்பூரைச் சார்ந்த மூத்த எழுத்தாளர்கள் மு. குழந்தை ( வயது 86 ), பழ விசுவநாதன் ( வயது ( 81 ) ஆகியோருக்கு ” கனவு விருதை “ எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வழங்கிப் பாராட்டினார் மு. குழந்தை ( வயது 86 ) கவிதைகள் ,சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 16 நூல்கள் எழுதியுள்ளார் கரூரில் ஆசிரியராகப்பணி புரிந்து ஓய்வு பெற்றவர் பழ விசுவநாதன் ( வயது ( 81 ) ராணுவத்தில் பணிபுரிந்தும் திருப்பூர் போன்ற பல் வேறு நகரங்களில் நகராட்சிப் பொறியாளராகப் பணிபுரிந்தும் ஓய்வு பெற்றவர் .. இலக்கிய விமர்சனக்கட்டுரைகள் எழுதியிருப்பவர் . இந்த விருது வழங்கும் கூட்டத்தினை கனவு இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. செய்தி : சுப்ரபாரதிமணியன் 9486101003
முயற்சிகள் வெல்லட்டும் பெரும்பாலும் இயற்கைப் பின்னணியே ஹைக்கூவின் மையமாக இருக்கிறது. இயற்கையின் மீதும் மானுடத்தின் வீதம் எழுத்தாளர்கள் தாங்கள் கொண்டிருக்கும் விருப்பத்தை சுருக்கமாக வெளியிடுகிறார்கள். இயற்கையைத் தழுவிய எண்ணங்கள் தொடர்ந்து ஹைக்கூவில் இடம்பெற்றுவருகின்றன ஆனால் அந்த அடிப்படைகளை மீறி தற்சமயம் தமிழில் வரும் ஹைகூக்கள் உள்ளன .பல்வேறு மீறல்களை கொண்டிருக்கின்றன இயற்கையை மனிதன் வெற்றி கொள்ள முடியாது என்பதை இன்றைய சுற்று சூழல் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பது நம் அடிப்படையாக இருக்கிறது. அந்த எண்ணங்களை விஜயன் அவர்கள் தொடர்ந்து தன் படைப்புகள் மூலமாக சொல்லி வருகிறார் அதைத் தாண்டி சுயமுன்னேற்ற சிந்தனைகள், தினசரி வாழ்க்கையின் சிலகணங்கள், காதல் காயங்கள், முகநூல் காயங்கள் என்று பல்வேறு விஷயங்களை கடுகைத் துளைத்து கடலை புகுத்துவது போல் ஹைக்கூ பாணியில் விஜயன் அவர்கள் இந்த தொகுப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிதை என்பது வாழ்க்கையோடு இணைந்தது. நிழல்போல் தொடர்ந்து வருவது அதுவும் வாழ்க்கை அனுபவங்களோடு இணைந்து சொல்வதில்தான் எழுத்தாளர் வெற்றி இருக்கிறது. அந்த வெற்றியை தொடர்ந்துக் கைக்கொள்ளும் விஜயன் அவர்கள் இந்த நூலிலும் அதை காட்டியிருக்கிறார் அவர் தொடர்ந்து வேறு வடிவங்களிலும் முயற்சி செய்யவேண்டும் முயற்சி செய்து வருகிறார் அதை புத்தக வடிவில் ஆக்கவேண்டும் அவருடைய முயற்சிகள் வெல்லட்டும் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 1 மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோட்டில் 19.03.2022 ..அன்று சித்தார்த்தா பள்ளியில் நடைபெற்றது . ஜெயபாரதி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மருத்துவர் ஜீவா பற்றிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன் மருத்துவர் ஜீவாவுடன் 50 ஆண்டு தோழமை எனக்குண்டு. ஆரம்பத்தில் பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள், திரைப்பட இயக்கம் போன்றவற்றில் ஆரம்பித்தது.இது தொடர்ந்தது. 90களில் ஊட்டியில் எழுத்தாளர்களுக்கான சுற்றுச்சூழல் முகாம் இணைந்து செயல்பட்டேன் . ( இந்த மாதிரி முகாம்கள் பல்வேறு காலகட்டங்களில் இணைந்தோம். திண்டுக்கல் சிறுமலையில் முகாம் இறுதியான ஒரு நிகழ்வு) அதைத் தொடர்ந்து நான் எழுதிய “ சாயத்திரை “ நாவல் அந்த முகாமின் இன்னொரு வடிவம் என்று மகிழ்ச்சியடந்தார். நமக்குத் தேவை வளர்ச்சியா , சுற்றுச்சூழல் பாதுகாப்பா என்ற கேள்வியை “ சாயத்திரை” நாவல் எழுப்பியதை அவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். சாயத்திரை ஆங்கிலப்பதிப்பு வெளியீட்டிற்கு திருப்பூர் வந்தார். வங்காளம், கன்னடம், இந்தி, மலையாளப் பதிப்புகள் வந்த போது செய்தியைப் பகிர்ந்து கொண்டேன் “ புத்துமண் “ என்ற ஒரு நாவலை சுற்றுசுச்சூழல் பிரச்சினைகள் குறித்துப் போராடிய அவரின் கரூர் நண்பர் ஒருவரை மையமாகக் கொண்டு எழுதினேன்.அதில் ஜீவாவின் “ நாம் குளத்து மீனா , பாத்திரத்து மீனா “ என்ற அவரின்கடிதத்தைப் பயன்படுத்தினேன். முதல் பதிப்பு உயிர்மை பதிப்பகம். இரண்டாம் பதிப்பு என் சி பி எச் வெளியிட்ட போது அவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். மகிழ்ச்சியடைந்தார். சுற்றுச்சூழல் போராளிகளை கவனப்படுத்துவது அவசியம் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பார் .அவரைச் சந்திப்பது அடிக்கடியும் இயல்பாகவும் நடக்குக் காரணமாக இருந்தது திருப்பூரில் அவரின் பொதுவுடமை இயக்கத் தோழர்களோடு அவருக்கு இருந்தத் தொடர்புதான் அவருடனான தொடர்ந்த சந்திப்புக்கும் என் சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளுக்கும் வழிகோலியது மற்றும் அந்ந்தியூர் அன்புராஜ், நாடக இயக்குனர் ராம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர் . 2. 21/3/22 அன்று கோத்தகிரி கே பி எஸ் கல்லூரியில் ஜீவா நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. பேரா சு சுஜாதா, கோத்தகிரி ராஜி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் உரை ஆற்றினர் .
தொகுப்பாசிரியர் : ப.கண்ணையா அணுகுமுறை அறிஞர் என்ற அரிய பட்டத்தைப் பெற்றுள்ள நண்பர் ப.கண்ணையா அவர்கள், அப்பழுக்கற்ற தமிழ்த் தொண்டர். இலக்கிய இலக்கணங்களைக் கற்றுள்ள தமிழறிஞர்களிடம் இல்லாத தமிழ்ப் பற்று கொண்டவர் , நடத்துனராகத் தன் வாழ்க்கை முழுவதும் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு அளவிடற்கரியது. இன்றும் தொடர்கிறது. மாதந்தோறும் பல நிகழ்ச்சிகளைக் கொண்ட இலக்கியக் கூட்டத்தைத் தனித்து நின்று சிறப்பாக நடத்துகின்றவர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளையும் வளர்க்கின்ற பண்பாளர். ‘மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி’ என்ற பழமையான நூல் உட்பட பல அரிய நூல்களின் பயனை உணர்ந்து, தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்லுள்ளத்தோடு பெரும் பொருட் செலவில் மீண்டும் பதிப்பித்து வழங்கி வரும் பெருந்தகை ஆவார். அவர் உலகம் சுற்றும் வாலிபர். .பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருபவர். அவர் பயணம் செய்த நாடுகள், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, பினாங்க், லங்காவி, பாங்காக், பட்டயா, ஆங்காங், மக்காவ், கம்போடியா, பர்மா, அந்தமான், துபாய், ஷார்ஜா, சைனாவில் ஷங்காய், பீஜிங் ஆகியவை. தான் சென்ற நாடுகளோடு தமிழர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து தனக்குக் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ‘கடல் கடந்து வாழும் தமிழர்கள்’ என்ற நூலைத் தமிழுலகத்திற்குத் தந்துள்ளார். அஃது ஓர் அறிய முயற்சி! அது போல் இந்த நூலும் முக்கியமானத் தொகுப்பு நூலாகும். - தமிழமுதன்
அந்திமகாலத்தில் வெளிச்சக்கீற்றுகள் அந்திமம் :. ப. சகதேவன் நாவல் : சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதியை சேரந்த நாவலாசிரியர் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார் இந்த நாவலின் தலைப்பு சொல்வது போலவே அவர் அந்திமத்தில் இருப்பதாக கருதுகிறார் .ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார் ..இந்த ஓய்வு வாழ்க்கையை கூடுதல் போனதாகவே கருதுகிறார் இந்த சூழலில் பெங்களூர் சார்ந்த அவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் பற்றியும் கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை பற்றியும் இந்த நாவலில் எழுதியிருக்கிறார் . பெங்களூர் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கை இந்த நாவலின் பல பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன அதேபோல பெங்களூரில் வளர்ச்சியும் வளர்சிதை மாற்றங்களும் இணையாக வந்து செல்கின்றனர் சகாதேவன் எழுத்துக்களில் வழக்கமாக இருக்கும் கிண்டல் துளியும் சற்றே நகைச்சுவையும் நாவல் முழுக்க நகைக்க வைக்கின்றன இந்த கிண்டல் குடும்ப வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் அதிகமாக இருக்கிறது .சக மனிதர்கள் மீதான நேசத்தை கூடிக்கொண்டே போகிறது ஒரு தனி மனித வாழ்க்கையின் விசாரமும் அவரின் குடும்பமும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன . கொங்கு மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து முதல் பெங்களூர் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து வரை பல்வேறு அனுபவங்களின் சித்தரிப்பு இந்த நாவல் தனிமனித ஆர்வலர்களால் நிறைந்த இந்த நாவல் பெங்களூர் வாழ் தமிழர்கள் பற்றிய வேறு வகையான சிக்கல்களையும் அடையாள நெருக்கடி நிலையையும் அதிகமாக பேசவில்லை .அந்நகரின் 50 ஆண்டுகாலம் சரித்திரத்தில் பல முக்கிய சம்பவங்கள் சில கோடுகளாக வரையப்பட்டிருக்கின்றன ஆனால் அவை மெலிதான கோடுகளாக இருக்கின்றன .தனிமனித வாழ்க்கையின் அனுபவங்கள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன நாவலாசிரியர் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமியின் பரிசு பெற்றவர் ஒரே ஒரு நாவல் மொழிபெயர்ப்பு செய்தார் .. இது ஒரே ஒரு நாவல் முயற்சி ஆகக்கூடாது . அவரின் படைப்பிலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும் அபூர்வமாக தென்படும் கட்டுரைகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகள் தொடர வேண்டும் அவர் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளில் இருக்கிறார் என்பதுவும் ஆறுதலை தருகிறது சுப்ரபாரதிமணியன் திருப்பூர் ( யாவரும் பதிப்பகம் வெளியீடு விலை ரூ 550)
என்னுரை : அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களின் சீரிய முயற்சியால் பல நூல்கள் பதிப்பு பெறுகின்றன. அரிய நூல்களுக்கும் இந்தவகையில் பதிப்பு வாய்ப்புகள் ஏற்படுகின்றன அந்த வகையில் என்னுடைய இந்த நூலுக்கு அவர் ஆதரவு தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய நூல்கள் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றி ஓரளவுக்கு முழுமையான பார்வையைத் தரும் இவ்வகை தொகுப்பு கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் வெகுவாக பயன்படுவதாக இருக்கும். ஒரு படைப்பாளியின் பல்வேறு படைப்புகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் அந்த படைப்புகளை தேடிப்பிடிக்க உதவி செய்வதாகும் அமையும். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டிற்கு ஆதரவுக்கரம் கொடுத்திருக்கிறார் . அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்கள்.. கட்டுரையாளர்கள், அவற்றை வெளியிட்ட இதழ்கள், மற்றும் அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பயில்கின்ற மாணவர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் அன்புடன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
தீபன் என்ற தீவிரமானத் திருப்பூர் குரல் சுப்ரபாரதிமணியன் இளம் நண்பர் ரா. தீபன் அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பதிலும் அவர்கள் சார்ந்த வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற எண்ண நடவடிக்கைகளும் கொண்டு நெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர் .அதன் ஆதாரமாக மார்க்சிய தத்துவத்தின் மீது அக்கறை கொண்டு தத்துவார்த்த நூல்களை தொடர்ந்து படிக்கவும் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயலும் நடவடிக்கைகளும் கொண்டவர். அந்த வகையில் அவரின் எண்ண எழுச்சிகளை சிறு சிறு கவிதைகளாக அவ்வப்போது எழுதி வெளியிட்டிருக்கிறார்.. தொகுப்பாகவும்,பின்னர் அந்தக் கவிதைகள் ஒரு நூலாய் வந்திருக்கிறது .அதன் தொடர்ச்சியாக உரைநடைக்கும் நுழைந்தவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் .அந்தக் கதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது . வழக்கம் போல் அவரின் அக்கறை கவிதைகள் ஆனாலும், சிறுகதைகள் ஆனாலும் அது சாதாரண மக்கள் பற்றியதாகவே இருக்கிறது, அவர் எழுதும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளில் கூட விளிம்புநிலை மக்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களின் போராட்டங்களைப் பற்றியும் அவர்களுக்கான விடுதலை பற்றியும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர் அந்த மாதிரியான திரைப்படங்களை தேடி பார்ப்பவர். குறும்படங்களும் வெளியிட்டுள்ளார் இந்த நூலில் கதை மாந்தர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்கள் .சாதிய, வர்க்க வேறுபாடுகளும் சாதிய அடுக்குகளும் சக மனிதனை எப்படி அந்நியப்படுத்துகிறது என்பது பற்றிய அக்கறை இந்தக் கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் சேரியில் வாழக்கூடிய ஒரு சாதாரண கழிவுநீர் சார்ந்த தொழிலை செய்யக்கூடிய ஒருவனைப் பற்றிய வாழ்க்கையையும் அவன் மனைவி காவேரியையும் ஒரு கதையில் பாத்திரங்களாக கொண்டுவந்திருக்கிறார் .ஆண்டான் அடிமை பிரச்சனை எப்படி ஊறிப் போயிருக்கிறது என்று அந்த கதையை ஆரம்பிக்கிறார் .கணவன் இறந்த போன பின்னால் அவள் மீது வைக்கிற பாலியல் சீண்டல்கள், தினசரி வாழ்க்கையை சிரமங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார் .அவள் தற்காலிகமாக வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ரசாயன பொருட்கள் தலையில் கொட்டிப்போக பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் தொழிலாளர் சங்க தலைவர் அந்த நிறுவனத்திலிருந்து கொஞ்சம் பணம் பெற்று விலகிக் கொள்கிறார். அவர் மாறி மாறி வேலைக்கு முயல்கிறார் அவர் வேறு வேலை கூட செல்ல முடியாத சிரமங்களையும் கடைசியில் எல்லோரும் அலட்சியப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு செல்ல வேண்டிய நிலையும் சொல்லப்பட்டிருக்கிறது கணவனின் தொழில் சார்ந்த விஷயங்களும் அதேபோன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்வதும் எதேச்சையாக நிகழ்ந்ததாக இருந்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அதுதான். ஒரு எழுத்தாளனின், கவிஞனின் முயற்சிகளில் அவன் ஏமாற்றப்படுவதை ஆட்டோ கவிஞர் என்ற கதையில் சொல்லியிருக்கிறார், எனக்கு தெரிந்த சில இலக்கியவாதிகளையும் அந்தக் கதைகளில் கண்டேன் தஸ்கான் என்ற கதையில் பழைய பொருள்களை சேகரிப்பதும் அதன் மூலமாக படுக்கையில் கிடக்கும் அம்மாவை காப்பாற்றுவதும் அவனுக்கு நிர்ப்பந்தமாக இருக்கிறது. அவனின் கனவு ஒரு சொந்த மிதிவண்டி. அது கூட கிடைப்பதில்லை .அம்மா இறந்து போகிறாள் கைகளில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக அவனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி அவனிடமிருந்த மிதிவண்டி பறிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற விளிம்புநிலை மக்களின் ஆதாரமாக இருக்கிற சிறுசிறு விஷயங்களும் அவர்களை விட்டு நழுவிப் போவதை இது போன்ற கதைகளில் சொல்கிறார். பல கதைகளில் மருத்துவமனைகளில் விளிம்பு நிலை மக்கள் படும் சிரமங்களையும் அவர்களுக்கு சரியாக மருத்துவ உதவி கிடைக்காத விஷயத்தையும் விமர்சனமாக வைக்கிறார் .ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ராசப்பன் பற்றி கூட இவரால் எழுத முடிகிறது. வேறு வேலை இல்லை. கொஞ்சம் சொத்து இருக்கிறது இந்த சொத்தை பிடுங்கிக் கொள்ள பெரிய கூட்டமே இருக்கிறது சொத்துடமை என்பது எல்லா பகுதியிலும் மனித உயிர்களை, உறவுகளை பிரிக்க விஷயமாக இருக்கிறது இந்த கதையிலும் அதுதான் ராசப்பனுக்கு நிகழ்கிறது அவன் சாதாரணமானவன் அவனை இன்னும் சாதாரணமானவன் என்று அலட்சியப்படுத்தும் சமூகமும் சொத்துரிமை பற்றிய கேள்வியும் இந்த கதைகளில் அடங்கியிருக்கிறது மண்டபம் போன்ற கதைகளில் இருக்கிற குறியீட்டுத் தன்மை மிக முக்கியமானது. மண்டபம் கதையில் நடக்கிற விஷயங்களை ஒரு கூட்டுக்குடும்பத்தில், பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிற ஒரு காம்பவுண்டில், கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ எங்குமே நடக்கக் கூடியதுதான் அதனால்தான் அதை ஒரு குறியீடு என்று சொன்னேன், அங்கு நடக்கின்ற வர்க்க முரண்பாடு விஷயங்கள், சாதிரீதியான சுரண்டல்கள் சாதி நிலையிலிருந்து சாதாரண மக்களை பார்ப்பது எல்லாம் சரியாக வெளிப்படுகிறது ஆனால் அவர்கள்தான் உழைப்பின் அடிப்படையாக இருப்பரைச் சிறப்பாக சொல்கிறார் .இந்த மண்டபம் போன்ற குறியீடுகளை இந்த கதைகளில் பலவற்றில் காணலாம். இவரின் பார்வையில் இன்றைய சுற்றுச்சூழல் கேடும் அதிலிருந்து மக்கள் மீள வேண்டிய அவசியமும் தொடர்ந்து காணப்படுகிறது அப்படித்தான் மரம் சார்ந்த ஒரு கதை .இயற்கை வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனிதர் ஒரு மரத்தினை பாதுகாக்க வேண்டிய எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது ஆனால் அந்த மரத்தை சுற்றி நடக்கிற சமூகவிரோத செயல்களை விரிவாகச் சொல்கிறார் .இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டிய மனிதன் இதுபோன்ற இயற்கை செல்வங்களை சுரண்டுவது, தவறாக பயன்படுத்துவது அடையாளமாக இந்த கதை செல்கிறது ரசாயனப் பொருட்களை ஊற்றி அந்த மரம் பட்டு போக செய்ய வைக்கிறார்கள் .இடி விழுந்து தீ பிடித்துக் கொள்கிறது இந்த நிலைய பார்க்க அவனுக்கு மனம் சிரமமாகி விடுகிறது சாவு வரைக்குமான பயத்தையும் கொடுத்திருக்கிறது. பெரும் நகரம் சார்ந்த கிராமிய வாழ்க்கை கதாபாத்திரங்களை இந்த சிறுகதைத் தொகுப்பில் நாம் காணலாம் அந்த மனிதர்களெல்லாம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்கள். அவருடைய பிரச்சனைகளை நாம் கூர்ந்து கவனிப்பது இல்லை ஆனால் தீபன் போன்ற எழுத்தாளர்கள் சமூக நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன்மூலம் விளிம்புநிலை மக்கள் பற்றிய விடுதலைக் குரலை மெலிதாக எழுப்புகிறார்கள். இந்த முயற்சி முக்கியமானதாகத் தோன்றுகிறது காரணம் 12 மணி நேரம் /15 மணி நேரம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இவ்வகை மனிதர்களைக் கூர்ந்து பார்த்து அவர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அவரின் அக்கறை இது போன்ற படைப்புகளை தொடர்ந்து உருவாக்கும் வேகத்தைக் கொண்டிருக்கும் திருப்பூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் படைப்பாளிகள் சிறப்பாக உருவாகிக் கொண்டிருப்பதின் அடையாளமாய் இன்றைய இளைய தலைமுறையில் தீபன் அவர்கள் விளங்குகிறார். அவரின் இன்னொரு அழுத்தமானத் தடமாக அவரின் சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன வாழ்த்துக்கள் சுப்ரபாரதிமணியன்