1. ” சுப்ரபாரதிமணியன் படைப்புக்கலை ”
என்ற
ஒருநாள் கருத்தரங்க கட்டுரை தொகுப்பு திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுப்ரபாரதிமணியன்
படைப்புகள் பற்றிய கருத்தரங்க விழாவில்
வெளியிடப்பட்டது. .அதில் 36
கட்டுரைகள் இடம்
பெற்றுள்ளன
இந்நூலில் சிங்கப்பூர் சீனா மலேசியா கனடா இலங்கை
போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் ஆய்வாளர்கள்
என ஏழு பேரின் கட்டுரைகள் சிறப்பம்சமாக இடம்பெற்றுள்ளன. தமிழகத்திற்கு வெளியே
டெல்லி ஆந்திரா புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து நான்கு பேராசிரியர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு பரந்த
நிலப்பரப்பில் இருந்து கட்டுரையாளர்கள் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளை வெவ்வேறு
கோணத்தில் திறம்பட அணுகியிருக்கிறார்கள் .நெசவாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள்,
புலம்பெயர் தமிழர்கள் நகரமயமாதல் உலகமயமாதல் சுற்றுச்சூழல் கேடு, பெண்களை
சுரண்டும் சுமங்கலி திட்டம், முதிர்கன்னி போன்ற பெண்ணியச் சிந்தனைகள், மணல் கொள்ளை
கனிமக் கொள்ளை போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் ஆய்வு தளங்களாக
அமைந்துள்ளன
சுப்ரபாரதிமணியன்
என்ற ஒரு படைப்பாளியின் பன்முகப் பரிமாணங்களை ஒரே இடத்தில் காண்பதற்கான வாய்ப்பை
தந்த ஒரு சிறந்த நூலாக இது விளங்குகிறது .பேராசிரியர் ராமபாண்டி அவர்கள்
தொகுத்திருக்கிறார்
2.
“ புதினங்கள் கோட்பாட்டியல் அணுகுமுறை “ எனும் பேராசிரியர் ராம பாண்டி அவர்களிண் நூலில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் சடங்கியல்
கோட்பாடு ,ஆவியுலக கோட்பாடு கலவர கோட்பாடு போன்ற கோட்பாடுகளை கொண்டு விரிவாக
ஆராய்ந்துள்ளார்.
இது ஒரு புதிய ஆய்வு முறையை தமிழ் இலக்கிய
தளத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது, கோட்பாட்டு அணுகுமுறையில் ஆய்வு மேற்கொள்ளும்
இளம் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் பயன்தரக்கூடிய ஒரு சிறந்த நூலாகும், பேராசிரியர்
அவர்களின் இலக்கிய முயற்சிகளில் இது முக்கியமான நூலாகும்
சுப்ரபாரதிமணியன்