சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 30 டிசம்பர், 2011

















கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சுப்ரபாரதிமணியன்
இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது எதார்த்த நிலையில் நாம் இரண்டாம் நிலை இலட்சியமாகவே உள்ளது. எனவே கல்வி சார்பான கடமைகளை ஆற்றுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, அரசியல், இலக்கிய, கல்வி, பண்பாடு சார்பான அமைப்பினரும் ஒன்றிணைந்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இன்றைய உலகமய, தனியார் மய சூழலில் கல்விக் களத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி புரிதலை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் திருப்பூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள மத்திய அரிமா சங்க கட்டிடத்தில் 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க வாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விவாதத்தில் பேரா. கோச்சடை, நடேசன், கண.குறிஞ்சி, பொதியவெற்பன், நாகராஜன், பாண்டியராஜன், ஆறுமுகம், அய்யாவு, கண்ணன், அன்பரசு, பிரபாகரன், கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை திரு மூர்த்தி அவர்கள் செய்திருந்தனர்.இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை 1) தொடக்கக் கல்வியை நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக, தரமாக, சமமாக வழங்குவது மக்களாட்சி அரசின் கடமை. இதில் எள்ளவும் தனியாரின் பங்களிப்பு தேவையில்லை. எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009, மற்றும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் 2011 வலியுறுத்தும் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழைக் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவேண்டும் என்ற விதி நீக்கப்படவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதியும் நீக்கப்பட வேண்டும். மாறாக தேவையான நிதியை ஒதுக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளிகள் மூலமாக மட்டுமே அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கப்படவேண்டும். மேற்கண்ட திருத்தங்களை தமிழக அரசும் மத்திய அரசும் செய்ய வேண்டும்.2) உச்ச நீதிமன்றம் தீhப்;பளித்த பிறகும் இன்னும் சில தனியார் பள்ளிகள் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களை நடைபடுத்தவில்லை. மாறாக வேறு தனியார் நிறுவனங்களின் பாடநூல்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக கூடுதலாகப் புத்தகக் கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் இத்தவறுகள் கல்வித் துறையின் தீவிர கண்காணிப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும்.3) தாய்மொழி வழியிலேயே தரமான கல்வி வழங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஏற்கப்படவேண்டும்.4) தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள் முறைகேடான வழியில் பொதுத்தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற வகைசெய்யப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார்பள்ளி மாணவர்கள் அதிக விழுக்காட்டினர் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர். உயர்கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தீவிர கண்காணிப்பின் மூலம் தனியார் பள்ளிகளின் இத்தவறுகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.5) அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் விகிதாச்சார ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.6) ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் முழுநேர ஆசிரியர் பணியிடங்களாகவும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாகவும் நிரப்பவேண்டும். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதிகள் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும்.7) தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள முப்பருவ முறை வரவேற்கத்தக்க மாற்றமாகும். மேலும் வருங்காலத்தில் இம்முறைக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. மேலும் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில், சமூக நீதி, மனித உரிமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகள் பின்பற்றப்படவேண்டும்.8) மத்திய அரசு பாடத்திட்டத்தைப் (ஊடீளுஊ) பின்பற்றி புதிய தனியார் பள்ளிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. சமச்சீர் கல்வியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இக்கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய அரசின் பாடத்திட்டமும் எத்தகைய வேறுபாடும் இல்லாததாக மாற்றப்படவேண்டும்.9) தேசிய இனம் – மொழி வழி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இருக்க வேண்டும். இக்கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்க கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.10) அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தப்படவேண்டும். அரசுப் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மாணவர்கள் மூலம் செய்ய வைப்பதை தடுக்கவும், சுகாதார சீர்கேடுகளைக் களையவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொ.பாண்டியராஜன்மதுரை. 3

வியாழன், 22 டிசம்பர், 2011

தண்ணீர் யுத்தம்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

காணாமல் போன உள்ளாடை

காணாமல் போன உள்ளாடை

சுப்ரபாரதிமணியன்



பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. ஷாஜிகைலாஜின் இயக்கத்தில் பொதுவுடமைத் தத்துவவாதி ஏகேஜி பற்றின படத்தில் அவரின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றின பல்வேறு தகவல்கள் அதை ஒரு சிறந்த ஆவணப்படமாக்கியிருக்கிறது.”மதர்” என்ற படம் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த பாலியல் வன்முறை பற்றியது. தொண்ணூறுகளில் வட இந்தியாவின் பல இடங்களில் பெண்கள் மீதான வன்முறை நடந்தது. புவனேஸ்வரில் மரியா என்ற கிறிஸ்துவ கன்னியாஸ்திரி

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் கர்ப்பமடைந்தார் அவரை தேவாலயத்தைச் சார்ந்தவர்கள் தனியே பிரித்து வைத்து குழந்தையை பெற்றெடுக்க செய்கின்றனர் “ஆயிரம் நாட்களும் ,ஒரு கனவும்” கோக கோலா தொழிற்ச்சாலை ஒன்றுக்காக பிளாச்சி மடா என்ற கிராமத்தில் தொடர்ந்து நீர் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்ட குடி தண்ணீர் பஞ்சம், விவசாய நிலங்கள் பாதிப்படைந்ததை விவரிக்கிறது. “சாருலதாவின் பாக்கி ” என்ற படம்

சத்யஜித்ரேயின் சாருலதா கதாபாத்திரம் இருவர் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

மறைந்த இயக்குனர் பத்மராஜனின் மூன்று கதைகளை மையமாகக் கொண்டு “கபாந்தகதி ” என்ற நீளமான குறும்படம் வெளிவந்திருக்கிறது. 45 வயதே இருந்து மறைந்த பத்மராஜனின் இழப்பு மலையாளத் திரைப்பட உலகத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இயல்பான காதலும் காமமும் கொண்ட இருவர் பற்றிய ஒரு கதை தன் காதல் மனைவியை மீறி அவளின் மகள் மீது காமம் கொள்ளும் ஒருவனின் கதை என்று மூன்று பத்மராஜனின் கதைகளை இணைத்து ” கபாந்தகதி ” என்ற பெயரில் கீதா ஒரு குறும்படம் வெளியிட்டிருக்கிறார். அம்மா, மகள், காதலன் உறவுகளைச் சித்தரிக்கும் இப்படத்தின் ஒரு பகுதி சிறப்பாக உருவாகியுள்ளது. வேலையில்லாத இளைஞனின் காம எண்ணங்களின் வெளிப்பாட்டை கவிதைவரிகளோடு விஸ்தாரமாக்கியிருகிறார் கீதா. ஆண்,பெண் உறவுகள் பற்றிய அலசலாக இப்படம் அமைந்திருக்கிறது. இயக்குனராய் விளங்கிய பத்மராஜனின் இலக்கிய படைப்புகள் சிலவை குறிப்பிடத்தக்கவை. இவரின் முதல் நாவல் “நட்சத்திரங்களின் காவல்” கேரளா சாகித்ய அகாதமியின் பரிசைப் பெற்றது. இவரின் இயக்கத்தில் ” ஓரிடத்து பயில்வான்”, “மூணாம் பக்கம்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1986 வரை அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து வந்த பத்மராஜனின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களைப் பற்றின வாழ்க்கையை பொதுவாக்கியவை. பரதனின் ” பிரளயம்”, “பெருவெளி அம்பலம்” போன்ற படங்களில் திரைக்கதையில் இடம் பெற்றிருந்தார். பரதனுடன் இணைந்து கலைப்படங்களின் தீவிரத்தை ஒரு பாதையாக்கியவர், விளிம்பு நிலை மனிதர்கள், பாலிய அனுபவங்கள், ஓரினச்சேர்க்கைப் பெண்களின் காதல் போன்றவற்றையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

1991-ல் இவர் இயக்கி வெளியிட்ட ” நிஜன் கந்தர்வன்” என்ற படம் தோல்வியடைந்து. அவரின் மனைவி ராஜலட்சுமி தனக்கு கனவில் வந்த ஒரு விடயம் பற்றி பத்மராஜனிடம் தெரிவித்திருக்கிறார். சிந்து புராணத்தை மையமாகக் கொண்ட ஒரு கதை அது. கந்தர்வன் பூமிக்கு வரும் போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டதாகும் அது. கதைப்படமாக்கும் போது கதாநாயகனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது படப்பிடிப்பில் கதாநாயகி மயங்கி விழுந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். படம் வெளியான போது அதன் திரையிடலை காண கோழிக்கோடு சென்ற பத்மராஜன் திடுமென மரணமடைந்தார். நிஜன் கந்தர்வன் படம் அவரின் வாழ்க்கை சூழலை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. முக்கிய படைப்பாளி மரணத்தை வெறும் ஒளியாக்கி மறைந்து விடச் செய்தது.

“90 செ.மீ “என்ற படம் நரனிபுழா சனவாசாங் இயக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது துணிகளைத் துவைத்துக் காயப் போடுகிறார். ஒரு எல்.ஐ.சி முகவர் வந்து போகிறார். கணவர் இருக்கும் போது வரச்சொல்கிறார் அவளின் சிறிய உள்ளாடை ஒன்று காணாமல் போகிறது. கணவனும் மனைவியும் தேடுகிறார்கள். புதிதாக ஒன்றை வாங்கிவந்து மாட்டிக்கொண்டு மனைவி வெளியே கிளம்ப வேண்டியிருக்கிறது. எலி தூக்கிப் போயிருக்கலாம் என்ற அனுமானத்தில் எலிப்பொறி பெட்டியொன்றையும் வாங்கி வருகிறார். அதுவும் திருடு போய்விடுகிறது. கணவன் இரவில் கண்விழித்துப் பார்க்கிறான் எதுவும் அகப்படவில்லை கணவனும் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இறுதியாகக் கணவன் ” உள்ளாடை உடுத்த வேண்டாம்” என்று மனைவிக்கு ஆணையிடுகிறான்.

“பந்தி போஜனம்” என்ற குறும்படம் கோவில்களில் தலித் பிரவேசம் போன்றவை பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச்சார்ந்த ஒருவன் பணக்கார உயர்சாதிகாரர் சாதிப்பெயரைச் சொல்லி திட்டிவிடுகிறார்.இது நீதிமன்றத்தில் வழக்காடுகிறது தலித்தான ஒரு பப்ளிக் பராசிகியூட்டர் இந்த வழக்கைக் கையாள்கிறார். ஒரு மேல் சாதி வழக்கறிஞர் பெண் உட்பட மூன்று பெண் வழக்கறிஞர்கள் அந்த பப்ளிக் பிரசிக்கியுட்டரை ” மடக்குவதை” தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வருகிறார்கள். ஒரு நாள் மதிய வேளை உணவிற்கு வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். பப்ளிக் பிரசிக்கியுட்டர் தனது ஆண் உறவினர் உடன் வருகிறார். அவருக்கு பிடித்தமான மீன் மற்றும் அசைவ உணவுகளை மேல்சாதிப் பெண் விருந்து என்பதால் சாப்பிட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறாள். சாதியும், உணவு வகைகளும் அவர்களின் வாழ்க்கை முறையைக் காட்டிவிடுகிறது. நல்ல திருப்தியான விருந்து சாப்பிட்டதாக பப்ளிக் பிராசிக்யூட்டர் பெண் சொல்கிறாள். மாற்றாக அடுத்த விருந்தை அவள் வீட்டில் தரவேண்டும் என்றக் கட்டாயச் சிக்கல் அவள் மனதில் வருகிறது. ஓரளவு பப்ளிக் பிரசிக்கியுட்டரை “மடக்கி”"விட்டோம் என்ற நம்பிக்கையில் மற்ற மூன்று பெண் வழக்கறிஞர்களுக்கு வருகிறது. உயர்சாதிப் பெண் கட்டாயத்தால் தான் உண்ட அசைவ உணவை வாந்தியெடுக்கிறாள். வழக்கறிஞர்கள் நீதி மன்ற வளாக உணவு விடுதியிலேயே உணவு பற்றி பரிமாறிக் கொள்ளும் விடயங்கள் சுவாரஸ்யமானவை. தங்களின் சாதியமைப்பு, வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. பப்ளிக் பிரசிக்கியூட்டர் பெண் அசைவ உணவோ, தாழ்ந்த சாதிப் பெண் என்ற காரணத்தாலோதனியே தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அவர்களின் பேச்சில் தலித்களின் ஆலய பிரவேசம், சேரிகளில் நடபாட்டம் உட்பட பல சாதிப் பிரச்சனைகள் இடம்பெருகின்றன. உணவுப் பழக்கங்களை முன்வைத்து இந்த விசயங்கள் அலசப்படுவது சுவாரஸ்யத்தைத் தருகிறது. 2000 ஆண்டு கால தீண்டாமைக் கொடுமை அவர்களின் பேச்சில் குறுக்கிடுகிறது

கேரள குறும்படங்களில் முன்னனி நடிகர்கள் நடிப்பதும், பிரபலமான இயக்குனர்கள் இயக்குவதும் ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது, சமீபத்தில் சென்னையில் கமலஹாசன் நடத்திய ஒரு திரைக்கதைப் பட்டறையின் இறுதியில் சென்னையை மையமாக வைத்து 30 குறும்படங்கள் அவரின் மேற்பார்வையில் வெளிவரப்போவதாகவும், ஒரு குறும்படத்தை அவர் இயக்குவதாகவும் தகவல் தந்தார். பல குறும்படங்களின் வெளியீட்டு விழாக்கள் பிரபல தமிழ் இயக்குனர்கள் பங்கு பெறுகிறார்கள். நடத்தப்படும் குறும்படப் போட்டிகளுக்கு பிரபல இயக்குனர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள் என்பதே சிறு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது.

வெள்ளி, 11 நவம்பர், 2011

மலையாள நாளிதழில்

செவ்வாய், 8 நவம்பர், 2011

வேண்டுகோள் / எச்சரிக்கை

வேண்டுகோள்/எச்சரிக்கை

எனது மின்ன்ஞ்சல் முகவரியிலும், பெயரிலும் பல செய்திகள் பலருக்கு விசமத்தனமாக

அனுப்பப்பட்டுள்ளன. அதை நண்பர்கள் நிராகரிக்க வேண்டுகிறேன். மின்னஞ்சல் பெட்டி

ஊடுருவப்பட்டு களவாடப்பட்டுள்ளது.. இதை எச்சரிக்கையுடன் கையாளுமாறு கேட்டுக்

கொள்கிறேன். இதனால் ஏற்பட்டுள்ள மனச்சங்கடங்கள் குறித்து என வருத்த்த்தைத்

தெரிவித்துக் கொள்கிறேன்..




=சுப்ரபாரதிமணியன்

மீண்டும் முத்தத்திலிருந்து

சுப்ரபாரதிமணியன்

நீ யாராக மாற விருப்பம்
ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.
நான் புலியாக
வீரத்தின் சின்னமாக
ஆணின் ஆகுருதியாக…

நான் தென்றலாக
பூவாக எங்கும் உலாவி…

ஆடை களைந்து
ஆடிய ஆட்டத்தில்
உடம்பு சோர்ந்து விடவில்லை
என் பிரிய மீனே என்று கொஞ்சினான்
என் பிரிய காற்றே என்றாள் அவள்.

உடம்புகள் பிரிந்து
தனித்தனியாக்க் கிடந்த போது
புலியாக இருந்த்தாக அவன் சொன்னான்.
இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட.

நானும் தென்றலாக உலவி வந்தேன்
அப்புறம் புறாவாகவும், காடையாகவும் கூட.

வெவ்வேறு உருவங்களில்
திரிந்து விளையாடி
சுயம் பெற்றதாகச் சொல்லினர்.
தந்த முத்த்த்தில்
மீண்டும் விளையாட்டுக்கு திரும்பினர்
இன்னும் புலியாகவும், பூவாகவும்.
வேறு வேட்த்தில் திரும்பத்திருமப.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் 23 பேருக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கு.சி.பா.அறக்கட்டளையின் தலைவரும், செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி. ராமசாமி, பெங்களூர் மென்போருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ராம் கிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேளாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளார் கு.சின்னப்பபாரதி உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று ,எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில், பனிநிலவு நூலை எழுதிய லண்டனில் வாழும் இலங்கை எழுத்தாளர் ரா.உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு
இலக்கியப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள்
சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும்

பரிசு பெற்றவர்கள்
வெளிநாடு

1. வி. ஜீவகுமாரன்(டென்மார்க்)
2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)
3. சை. பீர்முகமது (மலேசியா)
4. நடேசன் (ஆஸ்திரேலியா)
5. தெணியான் (இலங்கை)
6. கே. விஜயன் (இலங்கை)
7. சிவசுப்ரமணியன் (இலங்கை)
8. தனபாலசிங்கம் (இலங்கை)
9. கலைச் செல்வன் (இலங்கை)
10. உபாலி லீலாரத்னா (இலங்கை)
11. புரவலர் ஹாசிம் உமர்


பரிசு பெற்றவர்கள்
தமிழ்நாடு
------

12. ஆர். எஸ். ஜேக்கப்
13. சுப்ரபாரதிமணியன்
14. ப. ஜீவகாருண்யன்
15. குறிஞ்சி வேலன்
16. மயிலை பாலு
17. லேனா தமிழ்வாணன்.
18. வெண்ணிலா
19. ஜீவபாரதி
பூங்குருநல் அசோகன்
20. டாக்டர். H. பாலசுப்ரமணியம் – டில்லி
21. என். சிவப்பிரகாசம்.


சுப்ரபாரதிமணியன்

புதன், 21 செப்டம்பர், 2011

"அப்பா" பற்றிய பழைய நினைவுகள்

==== RV ==============


https://siliconshelf.wordpress.com

சுப்ரபாரதி மணியனை எனக்குத் தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள்.) நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் சந்தித்திருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது விகடன் குமுதமே அங்கே கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் சிரமப்பட்டு வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கியபோது அவர் கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்த மாதிரி வெளிச்சம்! தமிழன் புஸ்தகம் வாங்குவதே அரிது. அப்படி வாங்கினாலும் சுஜாதாவை தாண்டுவது அதுவும் அந்தக் காலத்தில் மிக அரிது. அவருக்கு யாருடா இந்த பையன் சாயாவனம் எல்லாம் வாங்கறானே என்று ஒரு ஆச்சரியம். அவருக்குத் தெரியுமா நம்ம சுயரூபம்?

கஷ்டப்பட்டு ஒரு தமிழ் சங்கம் வேறு நடத்தினார். ஏதோ ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த பெரிய மனிதர் அறிவிக்கப்பட்டிருந்த டாபிக்கை விட்டுவிட்டு வேறு எதையோ பேசினார்.வந்த எரிச்சலில் நான் அவரது தமிழ் சங்கம் பக்கம் போகும் ஆசையை விட்டுவிட்டேன். இப்போது தோன்றுகிறது – புத்தகங்களை இரவல் வாங்கவாவது அவரை நாலு முறை போய் பார்த்திருக்கலாம். ஒரு புத்தகக் கண்காட்சியிலாவது கூடமாட ஏதாவது உதவி செய்திருக்கலாம். நல்ல மனிதர்களை பழக்கம் செய்து கொள்ளவே அப்போதெல்லாம் ஒரு வினோத தயக்கம்!

கண்காட்சியில் இவர் எழுதிய “அப்பா” என்ற சிறுகதை தொகுப்பை obligation-க்காகத்தான் வாங்கினேன். அப்போதெல்லாம் சுஜாதாதான் என் ஆதர்ச தமிழ் எழுத்தாளர். அவர் ஒரு முன்னுரை வேறு எழுதி இருந்தார். (அந்த முன்னுரையில் பாதி புரியவில்லை.) இவர் கொஞ்சம் dry ஆக எழுதும் எதார்த்தவாதக்காரர். எல்லா கதையும் சோகம் நிரம்பி இருக்கும், வீழ்ச்சி இருக்கும், நிறைய நுண்விவரங்கள் இருக்கும். வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் கதை கண்டுபிடிக்கும் பார்வை. அதையெல்லாம் ரசிக்கத் தெரியாத காலம். ஏதோ கொஞ்சம் சீரியஸாக படித்தாலும் மாதுரி தீக்ஷித் “ஏக் தோ தீன்” என்று ஆடிப் பாடுவதுதான் மிஸ் செய்யக்கூடாத ஒன்றாக இருந்த காலம். புத்தகங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாக இருந்தது. இரண்டு கதை படித்துவிட்டு இந்த மாதிரி அழுமூஞ்சிக் கதைகள் படிக்க பிடிக்காமல் பரணில் தூக்கிப்போட்டுவிட்டேன். ஒரு பத்து வருஷம் கழித்து புரட்டிப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர். சுஜாதா தன் முன்னுரையில் குறை சொல்லி இருந்த ஒரு கதை எனக்கு நல்ல கதை என்று பட்டது. அட என் ரசனை சுஜாதாவிடமிருந்து வேறுபடுகிறதே என்று வியந்தது நினைவிருக்கிறது. (சுஜாதாவின் முன்னுரை வேறு புரிந்துவிட்டது)

சமீபத்தில் மீண்டும் படித்தேன். கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்!

அப்பா: பற்றாக்குறை குடும்பம். சின்ன மகனோடு தங்கி இருக்கும் அப்பா. பெரியவனைப் பார்க்க வரும்போது ஒரு பியர் – இல்லை இல்லை பீர் – குடித்துக் கொள்வார். அவனிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கிக் கொள்வார். திடீரென்று தன் பேரனுக்கு நல்ல ஜட்டிகள் வாங்கி வருகிறார். பணம் எங்கே கிடைத்தது?

இன்னொரு முறை மௌனம்: ஐந்து மணமாகாத இளைஞர்கள் ஒரு போர்ஷனில், 35 வயது கணவன், 18 வயது இளம் மனைவி, 27 வயது கணவனின் தங்கை மூவரும் இன்னொரு போர்ஷனில். அவ்வளவுதான் கதை. இந்தத் தொகுப்பில் சுஜாதாவுக்கு பிடித்த கதை இதுதான். மிக subtle ஆக எழுதப்பட்டது.

இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்: திருமணத்தில் தலைப்பாகை கட்டிவிடும் தொழில் செய்பவர். ரெடிமேட் தலைப்பாகை வந்தால் என்னாவது?

நிழல் உறவு: மோர்க்காரியுடன் பந்தம் உள்ள குடும்பம். பல வருஷம் கழித்து மோர்க்காரியின் மகனை சந்திக்கிறார்கள். அவனுக்கு அம்மா மீது அலட்சியம். பந்தம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

சில வேறு தினங்கள்: கோழிச்சண்டை மட்டுமே தெரிந்த கொஞ்சம் பொறுப்பில்லாத அப்பா. அம்மா ஒரு நாள் அவரை எதிர்க்கிறாள். இந்த மாதிரி ஒரு கதை எழுத முடிந்தால்!

அடையாளம்: வேற்று ஜாதி மாப்பிளைத் தோழன். சுமாரான கதை.

அது ஒரு பருவம்: மொட்டைக் கடிதத்தால் கல்யாணம் நின்று போன அக்காவின் துயரம்.

கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்: கல்யாணத்தில் குடத்திலிருந்து மோதிரம் எடுக்கும் சடங்கு. கணவனே மூன்று முறையும் வெல்கிறான். மனைவிக்கு வருத்தம். இந்த சாதாரண நிகழ்ச்சியை மிக அருமையாக எழுதி இருக்கிறார்.

வெளிச்சமற்றவை: ஒரு ஏழை உறவுக்காரி தான் சார்ந்திருக்கும் குடும்பத்தினரால் படும் காயங்கள். நல்ல எழுத்து.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்: சுஜாதா இதைத்தான் சிறுகதை வடிவம் சரியாக வரவில்லை, தேவைக்கு அதிகமான விவரங்கள் என்று சொல்கிறார். எனக்கு அந்த விவரங்கள்தான் இந்த கதையை எங்கோ கொண்டு செல்கின்றன என்று தோன்றுகிறது. இந்த மாதிரி கதையைத்தான் ஒரு இருபது வருஷம் முன்னால் என்னால் ரசித்திருக்க முடியாது. ஜெயமோகன் இந்தக் கதையை தனக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ். ராமகிருஷ்ணனும் இதை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

கோடை: கடுமையான கோடை. எல்லாரும் வீட்டில் வெந்து சாகிறார்கள். ஒரு கூலிக்காரன் ஒரு மர நிழலில் கட்டில் போட்டு தூங்குகிறான். அவ்வளவுதான் கதை. இதிலும் ஒரு கதையைக் காண ஆழமான பார்வை வேண்டும்!

வெடி: கிணறு வெட்ட வெடி வைப்பவன் கொஞ்சம் இசகு பிசகாக மாட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கிறான். சிறுவன் லக்ஷ்மி வெடி வைப்பதைப் பார்த்து எனக்கும் ஒன்று கொடு என்று கேட்கிறான். மனிதருக்கு அபாரமான பார்வை!

உறுத்தல்: மாமன் மச்சான் சண்டை. மச்சான் போடா பொட்டைப் பயலே என்று சொல்லிவிடுகிறான். மாமன் நாடகத்தில் பெண் வேடம் போட்டவர்!

சாயம்: ஹோலி பண்டிகையில் மாட்டிக் கொள்ளும் தமிழன்.

இவரது பலம் எந்த ஒரு அற்ப நிகழ்ச்சியிலும் ஒரு கதைக் கருவை காண்பது. மத்தியான நேரத்தில் மரத்தடியில் தூங்குவதில் எல்லாம் ஒரு கதையைப் பார்க்க முடிகிறது. Subtlety கை வந்த கலை.

பலவீனம் கதைகளில் சுவாரசியம் குறைவாக இருப்பது. எந்தக் கதையும் விறுவிறு என்று போவதில்லை, சரளமான நடை இல்லை. அசோகமித்ரன் பாணியில் வேண்டுமென்றே சுவாரசியத்தை குறைத்து எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது. அசோகமித்ரன் பாணியிலேயே வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் கமெண்டரி கொடுப்பதைப் போல பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. அதுவும் ஒரு droning குரலில் அந்தக் கால ஆல் இந்திய ரேடியோ கமெண்டரி கேட்பது போல ஒரு feeling. உணர்ச்சி பொங்கும் சீன் என்று ஒன்று எந்தக் கதையிலும் கிடையாது. மேலும் sometimes he is too subtle. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையில் உள்ள subtlety சுஜாதா மாதிரி ஒரு தேர்ந்த வாசகருக்கே பிடிபடுவது கஷ்டம் என்றால் என் போன்றவர்கள் என்னாவது? இவர் ஒரு acquired taste என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலகுமாரன், தி.ஜா., ஜெயமோகன் போன்றவர்களை படித்துவிட்டு இவரை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமே. ஆனால் முயற்சி செய்து படியுங்கள், படிக்க படிக்க, அவரது subtlety பிடிபட பிடிபட கதைகளும் பிடித்துவிடும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்



by

https://siliconshelf.wordpress.com

திங்கள், 19 செப்டம்பர், 2011

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

=சுப்ரபாரதிமணியன்



இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிற மொழிக்கலப்பு இன்றியே இதழ்களில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர். பகுத்தறிவேஉ வாழ்தலையும், செந்னெறி போற்றுதலையும் வலியுறுத்தியவர்.

மொழியின் அழிவிற்கு மொழிக்கலப்பும், பிற மொழிகளின் ஊடுருவலும், திணிப்பும் காரணமாகின்றன. எனவேதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்று போராடினார். ஒரு தமிழ்ப் பேராசிரியர் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நிகழ்வு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இலக்குவனாருக்கு நேர்ந்த்து. இருமுறை சிறை, 14 வழக்குகள், கல்லூரி வேலை இழப்பும் அவரைத் தளரச்செய்யவில்லை. தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக், இசை மொழியாக, நீதி மொழியாக இருக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளை முன் வைத்து நடை பயணம் மேற்கொண்டு மாணவர்களை எழுச்சி பெறச் செய்தவர். இலக்குவனார் இந்தி எதிர்ப்புப்போராட்ட்த்தின் போது அவரது பங்களிப்பாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தை இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்திற்கு ஆற்றுப்படுத்தியதாலும் அதை மக்கள் எழுச்சியாக மாற்றி பெரும் கலககாரர் ஆனார்.அறிஞர் அண்ணா அவர்களும் “ இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்து விசை மதுரையில் பேராசிரியர் இலக்குவனாரிடம்தான் உள்ளது ”என்றார்.

தமிழைப் புறக்கணித்து மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப் போல தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். என்றவர், “ நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமயை நினைத்து நமது வீட்டுத்தலைவியை புறக்கணித்து விடலாமா., தமிழைகளில் சிலர் ஆங்கிலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வாறே உள்ளது “ என்றும் கூறினார்.

தானே தமிழ் இயக்கமாக் வாழ்நாளில் இயங்கியவர். “ என் வாழ்க்கையே தமிழ் நலம் நாடிய போர்க்களம். இளமையில் வறுமையோடு போர். சாதியோடு போர். சமயத்தோடு போர். மூடநம்பிக்கையோடு போர். போர், போர் என்றும் ஓயாத போர் “ என்றார். தமிழ் இயக்கமாக வாழ்ந்தவர்

தமிழ் மொழிச் சிதைவும், புறக்கணிப்பும் உச்சகட்டத்தில் இருக்கும் இன்றைய சூழலில் இலக்குவனார் மேற்கொண்ட கலகக்குரலும், போராட்டமும் இன்றைக்கு வெகு தேவையாகியிருக்கும் சூழல் தமிழுக்கு நேர்ந்திருப்பது துயரமானதே.. = சுப்ரபாரதிமணியன் (9486101003 )



( கோவையில் நடைபெற்ற பேராசிரியர் இலக்குவனார் பற்றிய “ சாகித்திய அக்காதமியும், கிருஸ்ணம்மாள் பெண்கள் கல்லூரியும் இணைந்து நடத்திய

ஒரு நாள் கருத்தரங்கின் பேச்சின் ஒரு பகுதி. பிற கட்டுரையாளர்கள்: திருவாளர்கள் சிற்பி பாலசுப்ரமணியன், முனைவர்கள் இளங்கோவன், மோகன், இராமகுருநாதன், மணலி சோமசுந்தரம், சந்திரா, மறைமலை இலக்குவனார், சூர்யகாந்தன் )


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மகிழ்ச்சிக்கான இரகசியம்

மகிழ்ச்சிக்கான இரகசியம்
===============================

இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு

ஒரு காலத்தில் துப்பறியும் நூல்கள் விற்பனையாவது போல இப்போது தன்னம்பிக்கை நூல்கள் விற்பனையாகின்றன. படைப்பிலக்கியம் தரும் மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வு பற்றிய தரிசனமும் இந்திய சமூகத்தின் அரசியல் நெறிமுறையிலிருந்து நழுவி விட்டதன் அடையாளமாக்க்க் கூட இதை ஒரு வகையில் கொள்ளலாம். வாசகர்கள் இன்றைக்கு பல்துறை சார்ந்த விடயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தன்னம்பிக்கை சார்ந்த துறைக்கும் அதிக அளவு வாசகர்கள் இருக்கிறார்கள்.

அவ்வகை நூல்களின் தொடர்ந்த வாசிப்பு அவர்களின் தினசரி
செயல்பாட்டினைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும் அந்த ரகசியத்தை கண்டடைகிற காரியத்தில் நூலின் ஆசிரியர் ரோண்டா பைரன் ஏடுபட்டிருக்கிறார். கண்டடைந்த ரகசியத்தில் பணம் சம்பாதித்தல், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல், சக உறவுகளை மரியாதையோடு நடத்துதல் , தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற ரீதியில் பயன்படுத்துவது பற்றிய ஆக்கபூர்வ முறைகள் இதில் தரப்பட்டுள்ளன. இந்த முறைகளை ஆசிரியர் ரோண்டா பைரனே வெளிப்படுத்தியிருந்தால் அது ஒரு வகை ’ தெய்வீக உபதேச கூட்ட முறையாகப் போய்விடும் என்று அவர் நூலசிரியர்கள் , மத போதகர்கள் , திரைப்படத்துறையினர் என்று பலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டும் துணைக்கழைத்தும் வெளியிட்டிருக்கிறார். கடவுள், ஜோதிடம், போன்ற விடயங்கள் நம்பிக்கையுடன் அணுகுவது போலவே இவர்கள் கூறும் “ ரகசிய முறைகளினை “ வெகு நம்பிக்கையோடு அணுகுகிற போதுதான் நூலில் தொடர்ந்து பக்கங்களை விரட்ட முடியும்.

இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதுவும் நெருக்கடியான நேரங்களில் பணம் வந்து கொட்டுவது, நம்பிக்கையோடு இருந்தக் காரணத்தினாலேயே புற்று நோய் உட்பட பெரும் வியாதிகள் தொலைந்து
போவதும் பற்றின பல குறிப்புகளை பகுத்தறிவோடும்

விஞ்ஞானக்கண்னொணோட்டத்தோடும் அணுகுகிறபோது இது போன்ற
நூல்களின் ஆதாரமே அடிபட்டுப் போகும் . அதையும் ஒரு புறம்
இப்புத்தகத்தோடு வைத்துக் கொண்டு அணுகுவது தொந்தரவு தரும்
விசயமே. இந்நிலையில் தெய்வ நம்பிக்கை போல் இவ்வகையான
புத்தகங்கள் ரகசியங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே என்ற ஒரே
நம்பிக்கையை வளர்த்துக் கொண்டாலே இது போன்ற ‘ இரகசியங்களை ‘ அணுக முடியும். அவ்வாறு நம்பாமலும் , பகுத்தறிவைப் புறக்கணிக்காமலும் இப்புத்தக வாசிப்பை மேற்கொண்ட எனக்கு இது ஒரு வெறும் புத்தகவாசிப்பே என்ற கருத்தைப் பதியச் செய்தது. அதன் மறுபுறமான பலன் தரும் ரகசிய முறைகளையும் கொஞ்சம் இதில் பார்க்கலாம்.

இவ்வகை நூல்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது அல்லது பணம் வந்து சேர்வது பற்றியே பெரும்பாலும் பேசும். பணம் வேண்டும் என்று சிந்திப்பதாலேயே பணம் வந்து விடும். பணத்தைக் கொண்டு வர மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறை பணத்தைப் பிறருக்குக் கொடுத்தல் என்பது பற்றியும் இவை பேசும். செல்வமும், ஆன்மீகமும் தண்ணீரும் எண்ணெயும் போல் ஊறிக் கிடக்க வேண்டும். இதற்கான ஈர்ப்பு விதியை படைப்பமைப்பின் சகலமும் சார்ந்திருக்கும் ஒரு போதும் பிறழாத மாபெரும் விதி என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மகிழ்ச்சியாகவும் பிரமாதமாகவும் ஒருவர் இருப்பதாகக் கற்பனைத்துக் கொள்வதே மகிழ்ச்சியின் அடிப்படையாக இருக்கிறது. வியாதி இருந்தாலும் அதை எண்ணத்தில் உதறித் தள்ளுவதை அடிப்படையாக்கக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஆற்றலால் முழுமையடைந்த காந்தமான ஒருவரும் எல்லாவற்றையும் உள்னோக்கி இழுத்துக் கொள்ள முடியும். பிரபஞ்சமே எண்ணத்திலிருந்து பிறப்பதால் பிரபஞ்சத்தையே எண்ணங்களால் மாற்ற முடிவதைப் பற்றியும் இதில் சொல்கிறார்கள். மேற்கத்திய சமூக அமைப்பும், நடைமுறைகளும் இதற்கு ஒத்துழைக்கும்படியாக இருக்கலாம். ஆனால் இந்திய நடைமுறைகளும், சூழல்களும் அவ்வாராக இருப்பதாக்ச் சொல்ல முடியாது.

இக்கணத்தில் சந்தோசமாக இருங்கள். மன மகிழ்வான உணர்வைப் இப்புத்தகத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்றால் “ இரகசியத்தின் “ முக்கியமான பகுதி உங்களுக்குள் கிடைத்து விட்டது என்று சொல்லலாம். என்று ஒரு முனைவரின் கூற்று இதில் இடம் பெற்றிருக்கிறது.

இப்புத்தகத்தின் கருத்துக்களை பங்களித்தோரின் பட்டியல் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. ‘ சிக்கன் சூப் பார் தி சோல் “ என்ற 10 கோடிப் பிரதிகள் விற்ற நூலின் ஆசிரியர் ஜான் கேன் பீல்டு முதல் முதல் மூன்று கோடிப்பிரதிகள் விற்ற ‘ மென் ஆர் ப்ர்ம் மார்ஸ், விமன் ஆர் பிரம் வீனஸ் ஆசிரியர் ஜான் கீரே வரை உள்ளார்கள். கற்கும் திறனில் குறைபாடு உடையவராக இருந்த ஜான் டிமார்டினி முதல் பில் ஹாரிஸ் போன்ற பெரும் பேச்சாளர் வரை இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் நடைபாதை ஓரம் வசித்த ஜோ விட்டாலே முதல் ப்ரோ ஆலன் உல்ப் போன்ற இயற்பியலாளர்கள் கூட இதில் இருக்கிறார்கள். அனைவரும் தேவ தூதுவர்களோ அல்லது மதப்பிரச்சாரக்காரர்களோ, மனோவியாதியின் ஒரு வகை எல்லைக் கோட்டைத் தாண்டியவர்களோ என்ற அய்யத்தை இந்நூலின் பல பக்கங்கள் யதார்த்த வாழ்வின் நடை முறைகளை சேர்த்து வைத்துப் பார்க்கிறபோது எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் வடிவத்தை திரைப்பட குறுந்தகடாக மூன்று ஆண்டுகள் கண்டபோது பிரமித்துப் போனேன். அந்த பிரமிப்பு மட்டுமே நம்பிக்கையை ஆழமாகத் தந்துவிட முடியாது என்று எண்ணுகிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர் பி.எஸ்.வி.குமாரசாமி பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம் பெறவில்லை.இன்றைக்கு குறிப்பிடத்தக்கதாக விளங்கும் “பூவுலகின் நண்பர்கள்” குழுவின் முன்னோடிகளில் முக்கியமானவராக விளங்கியவர். வெளிநாடு, வேறு துறை அக்கறை காரணமாய் இன்று மொழிபெயர்ப்பு துறையில் ஆழமான சுவடுகளில் பதித்து வருபவர் பாவ்லோ கொய்லோவின் “ சஹீர் “ போன்ற உலகப் படைப்பளிகளின் தலை சிறந்த நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர். எனவேதான் படைப்பியக்கச் செயல்முறை பற்றி அவர் மொழி பெயர்த்திருக்கும் பகுதிகள் சிறந்த இலக்கிய அம்சங்களுடன் விளங்குகின்றன.படைப்பியக்கச் செயல் முறைகளான கேளுங்கள், நம்புங்கள்,மற்றும் பெறுங்கள் என்பதை இந்த நூலின் மூலம் வலியுறுத்துகிறார். குமாரசாமியின் வாழ்க்கைச் செயல்பாட்டிலும் இதை சுலபமாக இனம் காண முடிவது ஆரோக்கியமானது.

- சுப்ரபாரதிமணியன்

விலை: ரூ295/- பக்கங்கள்: 210. மன்சுல் பதிப்பகம், போபால்
வெளியீடு: MANJUL PUBLISHING PVT.LTD.
2ND FLOOR: USHA PREET COMPLEX
42, MALVIYA NAGAR, USHA PREET COMPLEX,
BHOPAL-462003.

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர்- 641602.

செவ்வாய், 12 ஜூலை, 2011

சிங்கப்பூரில் புத்தர்

ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருக்கும் வரை சிங்கப்பூர் ஆச்சர்யங்களுக்குக் குறைவில்லைதான். 15 , 25 சிங்கப்பூர் டாலர் செலவழித்து ‘எந்திரன்’ படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் , நூறு டாலர் செலவழித்து தேக்காவிலும் மற்ற இடங்களிலும் அம்மன், முருகன் கோவில்களில் விசேச பூஜை செய்து திருப்தி அடைந்திருக்கின்றனர். ரஜினி தெய்வங்களுக்கு நன்றி சொல்கிறார். ரஜினி ரசிகர்கள் அவரை தெய்வம், புத்தர் என்று வர்ணிக்கிறார்கள். சிங்கப்பூர் தமிழர்களைச் சந்தித்து விட்டு தான் சூப்பர் ஸ்டார் சென்னை கிளம்ப வாக்குறுதி தந்திருக்கிறார். ஜெயகோ.

சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சர்யம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றைக் கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல பாலியல் உவ்வே சமாச்சாரங்களை மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து வரும் அவரின் மொழிபெயர்ப்பு உட்பட நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம் சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் ” வாழும் புத்தர் “ என்ற சமீபத்திய மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது ( வடக்கு வாசல் ஜூன் 2011 ) : “ நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும் முக்கிய நம்பிக்கை வைக்கவும் மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள் அவனை வணங்கும்போது தானும் தெய்வம்தான் என்றே எண்ணத் தலைப்படுகிறான். தெய்வமாக நடந்து கொள்ளவும் ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனை நம்பவும் பைத்தியமாக வழிபடவும் ஆரம்பிக்கலாம். மக்களுக்குத் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின. அவ்வருடங்கள் அபத்தங்கள் நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.” ரஜினியை ரசிகர்கள் மனிதனாயும், தெய்வமாயும் பார்க்க சமீப சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன.

சிங்கப்பூரின் திரைப்பட ஆர்வம் கொண்டவர்களால் எடுக்கப்பட்டு தமிழகம் உட்பட உலகம் முழுக்க வெளியிடப்பட்ட படம் ’சிங்கையில் குருசேத்திரம்,’வழக்கமான வணிகப் பட வரிசையில் அமைந்ததே. போதைப் பொருட்களைக் கடத்தும் ஒருவன் அத்தொழிலுக்கு அவனது சகோதரியையும், மனவளர்ச்சி குன்றிய குழந்தையையும் பயன்படுத்துகிறான். சகோதரி ஒரு நிலையில் காவல் துறையினரிடம் மாட்டி சிறைக்குச் சென்று விடுகிறாள். தொழிலுக்கும் தன் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்கும் உதவியாக தனது மாமாவை விரித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவர் தனது அப்பாவைக் கொன்றது, தாய், தம்பியைக் கடத்தியது உட்பட பலவற்றில் ஈடுபட்டிருந்தது தெரியவரும்போது அவரின் வியாபார மையங்கள் கலைந்து போக சூழ்ச்சி செய்வது பற்றி இப்படம் விவரிக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் இப்படத்தை மிரட்டலாக்கியிருக்கின்றன. வழக்கமான துப்பறியும் கதையாகவும் அமைந்துவிட்டது.

சிங்கப்பூர் என்பதே மிகப் பெரிய பொருட்களின் விற்பனைச் சந்தை-ஷாப்பிங் சென்டராக இருக்கிறது.அவ்வகை மால்களில் அடைக்கலமாகிற மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டபடம்.

“கான்ஷாப்பிங் “அதில் ரேணு என்ற தமிழ்ப் பெண் குழந்தையும் உண்டு. இதன் விரிவான அறிமுகத்தை கனவு 63ம் இதழில் எழுதியிருக்கிறேன்.

சிங்கப்பூரின் படங்களில் சமீப ஆண்டுகளில் கேன்ஸ் திரைப்பட உட்படுத்தலின் மூலம் பேசப்பட்ட படம் “ மை மேஜிக். “ 10 நாளில் எடுக்கப்பட்ட ஒன்றரை மணி நேர படம். பிரிக்ஹி என்ற இயக்குனரின் இப்படம் போஸ்கோ பிரான்சிஸ் என்ற மேஜிக் கலைஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. போஸ்கோ பிரான்சிஸ் மேஜிக் கலைஞனாகக் கூட நடித்திருக்கிறார். அவர் குடிகாரராகி தன் திறமைகளை வீணடித்துக் கொண்டிருப்பவர். அவரின் மகன் அவர் குடித்துவிட்டு எங்கோ கிடக்கிற போதெல்லாம் அவரைக் கூட்டிவந்து அவருக்கு உபசரிப்பு செய்கிறான். அவனின் திருமண வாழ்க்கையும் தோல்வியாகி அவனை அலைக்கழிக்கிறது. அவனது மனைவியிடம் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சுவதில் பொழுது கழிகிறது. அவன் மேஜிக் கலையின் தீ விழுங்குதல், கண்ணாடி மேல் நடத்தல், உடம்பில் கம்பிகளைச் செலுத்துதல் போன்றவற்றில் பயிற்சியும் எடுக்கிறான். ஆனால் தாதா கும்பலைச் சேர்ந்த இன்னொருவன் அவனின் முயற்சிகளைக் குலைக்கிறான் என்பதைப் படம் சொல்கிறது. தொலைந்து போய் தங்களை அடையாளம் கண்டடைகிற முயற்சியில் இம்மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். புத்தராய் தொலைந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.

திங்கள், 4 ஜூலை, 2011

Encyclopedia > Subrabharathimanian


NATION MASTER


Subrabharathimanian is one of the modern Tamil eminent wirters from Tirupur. Inspired by the mordern greatest Tamil patriotic poet Mahakavi Subramaniya Bharathiyaar and immense love towards Tamil he renamed himself as Subrabharathimanian. His writings are particularly based on living style and the problems being faced by the people of Tirupur. People in Tirupur are mainly from southern part of tamil nadu such as Madurai, Tirunelveli and its allied areas to work at knitting factories as labours. Due to knitting factories, air, water and land are being polluted severly. This has been the centeric in his works. Tamil is a classical language and one of the major languages of the Dravidian language family. ... Tirupur is a town in Tamil Nadu, south India. ... Mahakavi Subramaniya Bharathiyaar (or Bharathiyar )was born in the year 1882 in a small town called Ettaiyapuram of Tirunelveli District, Tamil Nadu (The region has been re-districted under Thoothukudi District, Tamil Nadu). ... Tamil is a classical language and one of the major languages of the Dravidian language family. ... Tirupur is a town in Tamil Nadu, south India. ... Madurai is situated on the banks of Vaigai River in Tamil Nadu, a southern Indian state. ... Tirunelveli is a city in Tamil Nadu state of southern India. ... Look up air in Wiktionary, the free dictionary. ... Water (from the Old English waeter; c. ... A LAND attack is a DoS (Denial of Service) attack that consists of sending a special poison spoofed packet to a computer, causing it to lock up. ...

He has been writing short and long fiction with high seriousness, dealing with the manner in which the thoughtless plundering of natural resources is leading India to a disastrous future. His concern for the marginalised and the poor is palpable in every one of his stories. He has won many awards including the prestigious Katha Award for the best short story writer from the President of India.
Among his five novels, CHAYATHIRAI has won uniform accolades and has been recently rendered into English. PINANKALIN MUGANGAL is another novel on the way the adolescence of the poor people is blasted in every way due to poverty and the increasing turn towards moral turpitude in our society. He has published 20 books including 10 short story collections and one travelogue.
UNWRITTEN LETTERS deals with pitiable segment of our society and uses the post-modernist technique of Spatial Form to convey how the mill workers lead a life of silent desperation.


வியாழன், 23 ஜூன், 2011

தற்கொலை நகரம்

: தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:

தாண்டவக்கோன்


1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில் அரசியல் கூட்டங்கள் நடப்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. திருப்பூர் மக்கள் உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். அதுதான் உலக அரங்கில் பனியன் பெருமையை உயர்த்தியது. இன்றைக்கு 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியைத்தரும் நகரமாக மாறியுள்ளதற்குக் காரணம் அந்த உழைப்புதான். வந்தாரை வாழ வைத்த பூமியாக திருப்பூர் மாறியதற்குக் காரணம் குறுகிய காலத்தில் எந்த வகையான வெளிநாட்டு ஆர்டராக இருந்தாலும் தூக்கம் இல்லாமல் உழைத்து சரக்கை விமானத்திலோ, கப்பலிலோ ஏற்றுமதி செய்து விடக்கூடியவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள். திருப்பூரின் இன்றைய 10 லட்சம் மக்கள் தொகையில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பனியன் தொழிலாளர்களாக உள்ளனர் இவர்களில் பெரும்பகுதியினர் தமிழகத்தின் தெற்கு மாவட்டஙகளிலிருந்து வந்தவர்களும், கேரளத்தினரும் என்ற பழைய நிலையோடு ஒரிசா, பீகார், நேபாளத்தினரும் கணிசமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பூருக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பது நீண்ட காலமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்த தொய்வின் காரணமாகும். முன்பு படிக்காத உழைப்பாளிகள் பனியன் உற்பத்தியாளர்களாக இருந்தனர். தொழில் நுட்பக் கல்வியும், மேலாண்மை படிப்பும் கொண்ட இன்றைய 2.
தலைமுறையினர் சுற்றுப்புறச்சூழலில் பிரச்சினைகளை கவனத்துடன் கையாளுகிறார்கள் . அதிகப்படியான சுத்திகரிப்பு நிலையங்கள் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இது தாமதமானதுதான் என்பதை நீதி மன்றத்தின் தீர்ப்பு சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசும் , கட்சிகளும் செய்ல்படுவது 4 லட்சம் மக்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கும். சாய்ப்பிரச்சினையை அரசியல் கட்சிகளும் அரசும் சரியாக கவனிக்காமல் இருப்பதாக எழுந்துள்ள பார்வை காரணமாக தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள எண்ணம் துரதிஸ்டமானது என்று ஆசியல் கட்சிகள் திகிலடைந்து போயிருக்கிறார்கள். “ என்கிறார் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.

திருப்பூரின் சுற்றுச்சுழல் பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை” நாவல் திருப்பூரின் சாயப்பிரசிச்னையையொட்டி எழுதப்பட்டு 1998ல் வெளியானது. ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகும் அது . “ 15 ஆண்டுகளுக்கு முன் அந்த நாவல் எழுப்பிய சுற்றுச்சூழல் குறித்த தார்மீக்க் கேள்விகள் இன்றைக்கும் எழுப்பப் படுவதன் அடையாளம் தான் நீதிமன்றத்தீர்ப்பும் சாயப்பட்டறைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது ஆகும். சாயம் குறித்த பிரச்சினைகள் இன்று உலகம் முழுக்க மனித உரிமைப்பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கும் நிலையில் புதிய உற்பத்தியாளர் தலைமுறை கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகத்தின் அம்சங்களாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதின் அடையாளமாகக் நிறைய சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிடுள்ளன.”

நவீன இலக்கியத்தின் அடையாளமான இவரின் “ கனவு” காலாண்டிதழ் இவ்வாண்டு இறுதியில் 25 ஆம் ஆண்டை தொடுகிறது என்பது பெரிய சாதனை. ”கனவு” இதழில் இன்றைய முக்கிய படைப்பாளிகள் பலர் எழுதி உள்ளனர். பல முக்கிய இளம் படைப்பாளிகளை கனவு உருவாக்கியிருக்கிறது. கனவு முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு 700 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. கனவு நடத்தி வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான “ கதை சொல்லி” நிகழ்ச்சிகள் முக்கியமானவை. 7 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 35 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் மூன்று குறும்படங்கள், சுமங்கலி திட்டம், குழந்தைத்தொழிலாளர் பிரச்சினை, சாயம் போன்றவாற்றை மையமாகக் கொண்டவை. திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளின் முக்கிய தளமாக விளங்குகிறது.
“ சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலைகளின் விகிதம் அதிகமாக இருக்கும் நகரம் திருப்பூர் என்று சமீபத்தில் எழுந்த சர்ச்சையையும் நடவடிக்கையையும் மீறி இப்போது முளைத்திருக்கும் சாயப்பட்டறைப் பிரச்சினையையும் திருப்பூர் சரியாகவே கையாண்டு மீளும். கடினமான உழைப்பும், கொங்கு நாட்டின் விருந்தோம்பல் குணமும் கொண்டு வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரிலிருந்து தற்காலிகமாக தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராக உள்ள ஒரு பகுதி மக்களின் நம்பிக்கை வீண் போகாது என்பதற்கு இன்னும் மூடப்படாமல் இயங்கிகொண்டிருக்கும் பெரும்பான்மையான பனியன் கம்பனிகள் காட்டிடுகின்றன. தற்கொலைமுயற்சிகளில் பனியன் தொழில் இருப்பதாய் காட்டப்படுவது துரதிஸ்டமே ”
மகாபாரதப் போருக்கு முன்னோட்டம் திருப்பூரில்தான் நிகழ்ந்ததாக ஆராய்ச்சிகள் உண்டு. விராடபுரமான தாராபுரத்திலிருந்து துரியோதனன் பிடித்துச் சென்ற மாடுகளைத் தடுத்தி நிறுத்தினான் அர்ஜீனன். அவனுடன் போர் செய்து வெற்றி பெற்று அர்ஜீனன் மாடுகளைத் திருப்பி அனுப்பியதால் திருப்பூர் எனப் பெயர் வந்ததாம். 25 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஊரில் பரப்பளவை வைத்துப் பார்த்தால் ஆசியாவின் அதிக பட்சமான பெட்ரோல் பங்குகள், அதிக பட்சமான டாஸ்மாக் கடைகள், அதிக பட்ச இரட்டை வாகன ஊர்திகள்,மற்றும் அதிக பட்சமான அந்நிய செலவாணி ரூ 15,000 கோடி. சாயப் பட்டறை பிரச்சினையை வைத்துப் பார்த்தால் பின்னலாடை ஏற்ருமதியில் அது எந்த வகையில் திருப்பு முனையாக இருக்கும் என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.என்கிறார்.

தாண்டவ்க்கோன் : thandavakon , tiruppur

thandavakkon@hotmail.com

ஞாயிறு, 12 ஜூன், 2011

அண்டை வீடு : பயண அனுபவம் சிலுவை


டாக்கா விமானநிலைய இமிகிரேஷன் சோதனையில் அலாரம் சப்தத்துள் முடங்கிப்போனார் ஜ.என்.டி.யூ.சி. தண்டபாணி. துப்பாக்கிக்குப் பயந்து கைகளைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டார். அலாரம் தொடர்ந்தது. கைபேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் வெளியேற்றி விட்டார். இன்னும் அலாரம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ கண்டுபிடித்தவர் போல அலாரத்திற்கான காரணமாக இடுப்பில் இருந்து ‘அரணாக்கயிறு’ என்று அரைஞான்கயிறைச் சுட்டியபடி கத்திக் கொண்டிருந்தார். திரும்பத் திரும்ப அரணாக்கயிறு என்றார், பிறகு தமிழ்நாடு தமிழ்நாடு என்றார். அரைஞாண்கயிறு பற்றிய விளக்கத்தை அவர் தொடங்குவதற்கு முன்பாகவே அவரைப் போகச் சொல்லி விட்டனர்.ஏதோ சிரிப்புடன் அவரை போகச் சொன்னார்கள் உலகத் தொழிலாளி வர்க்கம் இப்படித்தான் கைகளைத் தூக்கி கேட்பாரற்று, எங்களை கவனிக்க யாருமில்லையா என்று கதறுவதாகத் தோன்றுகிறது. உலகம் முழுக்க மலின உழைப்பு, குறைந்த கூலியில் தொழிலாளர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

தண்டபாணி டாக்காவில் நடந்த சில கூட்டங்களின் இடையே வெளியேறி வெளியே போய் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார்.

"என்னங்க, இங்க வந்திட்டீங்க?"

"எவ்வளவு நேரம்தா அவன் சொல்ற பொய்யைக் கேட்டுட்டு உக்காந்திட்டிருக்கிறது."


பொய்யும் புனைவும் லாபம் சம்பாதிக்க வார்த்தைகளைக் கொட்டியபடி முதலாளி வர்க்கம், கார்ப்பரேட் கம்பெனிகள் இருந்து கொண்டிருக்கின்றன. எட்டுமணி நேரஉழைப்பு என்பது 10மணிநேரம், 12மணிநேரம் என்றாகிவிட்டது. தினக்கூலிகள், பீஸ்ரேட் செய்பவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாய் தொழிலாளர் வர்க்கம் மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கிறது.

மே தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு முதிய தொழிற்சங்கத் தலைவர் அழைக்கப்பட்டார். அவர் சொன்னது: " எட்டு மணி நேர உழைப்புக்கு மே தினம். கொண்டாட்டம் எல்லாம். உங்க ஊர்லதா அது 12 மணி, 16 மணி நேரம்னு அதே கூலியில் போய்ட்டிருக்கே. இதிலே எதுக்கு மேதினம் கொண்டாடறது?"

வங்கதேசப் பின்னலாடையில் ஐந்து ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் ஒன்றுதான்: மலின உழைப்பு. இது உலகம் முழுவதும் தொடர்கிறது. எல்லா தொழில்களிலும், துறைகளிலும் தொடர்கிறது. வங்கதேச வங்கிகள் 100 மில்லியன் டாலர் பணத்தைப் பின்னலாடை ஏற்றுமதியில் முதலீடு செய்யப் போகின்றன. வரும் ஆண்டில், 1989 முதல் வெளிநாட்டு மூலதனப் பொருட்கள் பருத்தி உட்பட்டவை தருவித்துக் கொள்ளப் பெரும் உதவி செய்திருக்கிறது. 330 மில்லியன் டாலர் இதுவரை உதவி தந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் 3.5% வட்டியில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். வழக்கமான வட்டி விகிதமான 12% விட இது மிகவும் குறைவு. இவ்வகையான உதவிகள் போட்டியான சர்வதேச சூழலில் தங்கள் வியாபாரம் பெருக உதவும் என்கிறார்கள். 29 வணிக வங்கிகள் உதவத் தயாராக உள்ளன. தொடர்ந்த வெளிநாட்டு மூலதனங்கள் தொழிலை இன்னும் ஊக்குவிக்கும்.




ஆனால் தொழிலாளி வர்க்கம் கையறு நிலையில் உழைப்பைக் கொடுத்து விட்டு சாவுப்பெட்டியைத் தயார் செய்து கொள்கிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் என்று வர்த்தக தார்மீகக் கோட்பாடுகள் உலகளவில் மனித உரிமைகளாகப் பேசப்பட்டு வரும் இன்றைய நாட்களில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தினர் நவீனக் கொத்தடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகள், நிரந்தரப் பணி பாதுகாப்பு என்று எதுவும் கோராமல் தினக் கூலியாக நிரந்தர உருவம் எடுத்து வருகிறது. நவீன கொத்தடிமை முறையில் கோர முகம் பயஙகரமானதுதான். அது கார்ப்பரேட் உலகின் கவர்ச்சிகளையும், குரூரங்களையும் ஒருசேரக் கொண்டது.

"ஏலி ஏலி லாமா சபக்தானி" (தேவனே , என் தேவனே, ஏன் எங்களை கைவிட்டீர்).

ஞாயிறு, 29 மே, 2011

அண்டை வீடு : பயண அனுபவம்,

பலவீனமான பெண் குரல்கள்
--------------------------------









டாக்கா நகரின் நெரிசலான பகுதியொன்றில் நஜ்மா அகதர் என்ற பெண் தொழிற்சங்கத் தலைவரைத் திருப்பூரிலிருந்து சென்ற எங்கள் குழு சந்திக்கச் சென்றபோது அவர் எங்கள் குழுவில் பெண் பிரதிநிதி யாரும் இல்லாததைக் கண்டு, அதைக் காரணம் சொல்லி சந்தித்துப் பேச மறுத்தார். " இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. இதிலிருந்து வருபவர்களில் பெண் பிரதிநிதி ஒருவர் கூட இடம் பெறாதது வருத்தமே" எங்கள் குழுவில் தொழிற்சங்கத் தலைவர்கள், தன்னார்வக் தொண்டு அமைப்புக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என்று 12 பேர் ஆண்கள் இருந்தோம். வங்கதேசத்தின் பின்னலாடை வளர்ச்சியின் அபரிதமான தன்மையைக் கண்டு கொள்ளச் சென்றிருந்தோம்.

டாக்காவில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கணிசமாக இருக்கிறார்கள். விதேசி தொழிற்சாலைகள் என்பவற்றில் 5% தொழிலாளர்களே உள்ளனர். பங்களாதேஷ் பேக்டரிகள் எனப்படுபவை உள்ளூர் தொழிலாளர்களை மையமாக்க் கொண்டவை. இவற்றில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் பெரும்பாலும் அமெரிக்காவிற்குச் செல்கிறது. இங்கிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கும் 57% சதவீதம் உற்பத்தி நடக்கிறது. வால்மார்ட், டெக்கோ, ஹெச் அண்ட் எம் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்து வருகிறார்கள். கொரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். 120 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 55 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் பெண் பின்னலாடைத் தொழிலாளர்கள்.



24 தொழிலாளர் கூட்டமைப்புகள் இருந்தாலும் நேரடியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறைவாகவே இருக்கிறார்கள். மொத்தத் தொழிலாளர்களில் 3.5% மட்டும் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கை என்று வரும்போது பொய்யான வழக்குகள், தண்டனைகள் சுலபமாக கிடைத்து விடுகின்றன. BJPJ, BMJF, JSF போன்ற தொழிற்சங்கங்கள் அதிக அளவில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. BTUK என்ற பொதுவுடைமைக் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் இருந்தாலும் வலுவானதாக இல்லை. ஆளும் அலாமிலீக் கட்சியின் தொழிற்சங்கம் அரசுக்கு ஆதரவானத் திட்டங்களை முன் வைத்துப் பிரசாரம் செய்கிறது.









விவசாயத்தை முன்னணியாகக் கொண்ட நாடு என்பதால் தொழிற்சங்கத் தலைவர்கள் மிகவும் படித்தவர்களாக இல்லை. பொருளாதார நிலைகளில் பின்தங்கிய சமூகங்களிலிருந்து அந்த அனுபவங்களைப் பெற்றவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக வரும் வாய்ப்புகள் அரசியல் பலமுடையவர்கள் மத்தியில் தோற்றுப் போகிறது.

நேர்மையான தியாக உணர்வு மிக்க தொழிற்சங்கவாதிகள் குறைவாக இருப்பதும், பெண் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தும் முஸ்லிம் சட்டங்கள் இல்லாததால் பலவீனமாகவே உள்ளது. தற்போது பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொழிற்சங்கங்களிலும், அமைப்புகளிலும் அதிகரித்து வருகிறது என்கிறார்கள். ஆதிக்க மனப்பான்மை பெண்களை ஒதுக்கி விட்டிருக்கிறது. பெண்களுக்கான பிரத்யேக பிரச்சனைகளை முன் வைப்பது வெகு குறைவாக இருக்கிறது. 112 நாள் பிரசவ விடுமுறை தருகிறோம். மாதவிலக்கு சமயங்களில் கேர்ப்ரீ உள்ளாடை இலவசமாகத் தருகிறோம். பெண்களுக் கென்று தனியான தொழுகை செய்ய இடங்கள் உள்ளன என்று நெதர்லாந்து நாட்டிற்கு உற்பத்தி செய்து அனுப்பும் ஒரு பின்னலாடைத் தொழிற்சாலையினர் தெரிவித்தார்கள். பெண்களின் உரிமை குறித்த விழிப்புணர்வும், சமதன்மையும் குறைவாக இருப்பது பெண்களை வெறும் தொழிலாளர் நிலையிலேயே வைத்திருக்கிறது. பெண்களுக்கான சம்பளம் குறைவே என்பதால் இந்தியாவிற்குச் சென்று பணிபுரியும் 80 லட்சம் பெண்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது.

பின்னலாடை மற்றும், தேயிலைத் தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலைக்கு நியமிப்பது சாதாரணமாக உள்ளது. திருப்பூரின் சுமங்கலி திட்டம் போன்றவை இங்கு உள்ளதா என்று சந்தேகம் கொள்ளும் அளவில் இளம்பெண்களே பின்னலாடை தொழிற் சாலைகளில் காணப்பட்டனர். திருப்பூரில் அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் 180ரூ, முன் அட்வான்சுத் தொகை, பல தொழிற்சாலைகளில் தங்குமிடங்கள், பக்கமிருக்கும் கிராமங்களிலிருந்து தொழிலாளர்களைக் கூட்டி வர பேருந்து வசதி ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும்போது வங்கதேசப் பெண்கள் நிலை பரிதாபகரமானது. இளம் பெண் களுக்கான தங்குமிடங்கள் பிரச்சினையாகின்றன. சரியான குடியிருப்புகள் இளம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.

பஜ்ரானாசிபா என்ற இளம் பெண், 28 வயது. டாக்கா பின்னலாடைத் தொழிலுக்கு வந்தவள் தங்க இடம் தேடி 30 வீடுகளுக்குச் சென்றபின் அய்ந்து பேர் தங்கும் ஓர் அறையில் கடைசியில் இடம் பிடித்திருக்கிறார். பெரும்பாலும் வீடு வாடகைக்குக் கொடுப்பவர்கள் இளம் பெண்களுக்கு வீடு தருவதில்லையாம். அதிக வாடகை. தங்கும் விடுதிகளின் தரம் மோசமாகவே இருக்கிறது.








" தனியே நான் தங்கியிருந்தபோது சிறுவர்கள் கற்களால் எங்களைத் தாக்கியிருக் கிறார்கள். வீதியில் நடக்கையில் கேலியும் கிண்டலும் சாதாரணம். வேலை முடிந்து நடு இரவில் இருட்டு அறையில் போய் முடங்கும் வரை எங்கள் உயிரும் உடம்பும் எங்களுடையதாக இருக்காது. இன்றைய பிரதமர் பெண்ணாக இருக்கலாம். மாறிமாறி பெண் பிரதமர்கள்தான் வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்திலுள்ள பெண்கள்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும் இங்கு. எங்கும். " என்றார்.பெண் சக்தியின் வடிவமானவள்தான். ஆனால் தொழிற்சாலை அமைப்புகளால் சக்கையாக்கப்பட்டவளும் கூட என்பதை வங்கதேசப் பெண்களும் உணர்த்தினார்கள்.

வியாழன், 19 மே, 2011

அண்டைவீடு: பயணஅனுபவம்: லஜ்ஜா

" லஜ்ஜா" நாவல் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்துக்கள் வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டதைப்பற்றி விவரித்தது. வங்கதேசத்தில் அரசால் லஜ்ஜா தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தஸ்லிமா கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெற்றார். 1995ல் நான் ஜெர்மன் பெர்லின் நகரில் தங்கியிருந்தபோது தஸ்லிமா அங்கு இருப்பதாகவும் சந்திக்கலாம் என்றும் சுசீந்திரன் சொல்லியிருந்தார். பின்னர் இயலவில்லை என்பது பற்றி என் முந்திய பயண நூலான "மண் புதிது"வில் குறிப்பிட்டிருந்தேன். 1998ல் அவரின் தாய் சுகவீனம் குறித்து அக்கறை கொண்டு வங்கதேசம் திரும்பினார் தஸ்லிமா. 2003ல் கல்கத்தாவிற்கு வந்தபோது அவரின் சுயசரிதை நூலை வங்கதேசம் தடை செய்திருந்தது. இந்தியாவில் அவர் வசிக்க விரும்பியதன் அடையாளமாய் அவரின் சில கவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். ஸல்மான் ருஷ்டி போல் அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு தொடர்ந்து மேற்கில் வாழ விரும்பாமல் பலமுறை பல நாடுகளில் நாடோடியாகத் திரிகிறார். அமெரிக்காவிலும் வாழ்ந்தார். வங்கதேசமும் வங்கமொழியும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதால் கல்கத்தாவிலோ,டாக்காவிலோ வாழவிருப்பம் கொண்டதைப் பல முறை தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் அடைக்கலமாகிற ஆசையை சில கவிதைகள் தெரிவிக்கின்றன. டாக்கா நகரம் பற்றிய சித்தரிப்புகளாக அவர் எழுதிய சில கவிதைகளை யமுனா ராஜேந்திரனின் மொழிபெயர்ப்பில் கீழே தந்திருக்கிறேன்.


டாக்கா நகரத்தின் பல்வேறு வீதிகளையும், முக்கிய இடங்களையும், மக்களின் வாழ்நிலையையும் இக்கவிதைகளில் இனம் கண்டு கொள்ளலாம். பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கவிதை ஒன்றும் உள்ளது.







1) சந்தேகம்





நான் இறந்தால் எனது பிணத்தை அங்கே விட்டுவிடுங்கள்

இறந்த சவங்களை எங்கே பரிசோதனைக்கு

உட்படுத்துவார்களோ அங்கே

மருத்துவக் கல்லூரியின் பிணவறையில்

எனது மானுடச் சட்டகத்தை கொடையாகத் தருகிறேன் என

நான் உறுதி சொல்கிறேன்

நான் இறந்த பின்னால்

என்னைக் கல்கத்தாவில் இருக்க விட்டு விடுங்கள்

நான் உயிருடனிருக்கும்போது இந்த நகரம்

என்னைக் கைவிடுவது என உறுதி எடுத்திருக்கிறது.

நான் இறந்த பிறகாவது

இவள் என்னை ஏற்றுக்கொள்வாளா?

2) சந்திப்பு




சிறைச்சாலைகளில் கூட

சில நெறிமுறைகளை அவர்கள் மதிப்பார்கள்

தம்மைக் காண வருபவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிப்பது என்பது

ஒரு நியதியாகச் சிறைச் சாலைகளில் இருக்கிறது

நான் ஒரு கைதி




பலவந்தமாக ஒத்துவராதவளாக ஆக்கப்பட்டிருக்கிறேன்

நண்பர்களோ உறவுகளோ இல்லாதவளாக


தினமும் நான் கோரிக்கை மனுவை அனுப்புகிறேன்

கைதிiயைப் போல எனக்குச் சலுகை தாருங்கள்

எனக் கேட்கிறேன்


இந்திய அரசாங்கம் பேசாது தவிர்க்கிறது.


3) இது எனது நகரம் இல்லை





என்னுடையது என ஒருபோதும் நான் சொல்லிக் கொண்ட

மாதிரியிலான நகரம் இல்லை இது

குள்ளநரித்தனமான அரசியல்வாதிகளுடையது இந்த நகரம்

பழிபாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,

சதை வியாபாரிகள்,

கூட்டிக் கொடுப்பவர்களின், பொறுக்கிகளின், வன்புணர்வாளர்களின்

நகரமேயல்லாது இது

என் நகரமாக இருக்க முடியாது


வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும்

ஊமை சாட்சிகளாயிருப்பவர்களுக்கானது இந்நகரம்

எனக்கானது இல்லை

அயோக்கியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்

அனாதரவாளர்கள் குறித்த உணார்ச்சியற்று

பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்

சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்

பிச்சைக்காரர்கள் மடிகிறார்கள்

தப்பித்தல்வாதிகளுடையது இந்த நகரம்

குறைந்தபட்ச இன்னல் என்றாலும்

அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது


அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்

பேய்களின் நகரம் இது

வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி

வீராவேசமாக இங்கு வாயடித்துக் கொண்டிருப்பார்கள்


முகத்துதிக்காரர்களின் நகரம் இது

தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்

சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது

இதனை இனி ஒருபோதும்

எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்

இனி ஒருபோதும்


பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்

மதவெறி அயோக்கியர்கள்

இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்


விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய

ஆண்களும் பெண்களும்தான்

இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன், சுதந்திர சிந்தனைகளுடன்,

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு

இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

இது எனது நகரம் இல்லை.


4) விளையாட்டு : மாற்றுச் சுற்று

அன்றொரு நாள் ரமணா பூங்காவில்

ஒரு பையன் ஒரு இளம் பெண்ணை

விலைபேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்

நானும் அய்ந்து அல்லது பத்து டாக்காவுக்கு

ஒரு வாலிபனை வாங்க விரும்பினேன்

நன்றாக சவரம் செய்து

மொழு மொழுவென்று இருக்கும் பையன்

நல்ல அழகான சட்டை அணிந்திருப்பவன்

நடுவகிடெடுத்துப் படிய வாரியிருப்பவன்

பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன்

அல்லது பிரதான சாலையில் நின்றிருப்பவன்

உடல்வாகு கொண்டவன்.


சட்டைக் காலரைப் பிடித்து அவனை

இழுத்து நான்

ரிக்‌ஷாவில் வீச வேண்டும்-

கழுத்திலும் வயிற்றிலும் கிச்சுக்கிச்சு மூட்டி

அவன் துள்ளுவதைப் பார்க்க வேண்டும்

அவனை வீட்டுக்குக் கூட்டிவந்து

குதிகால் உயர்ந்த செருப்பைக் கழட்டி

நன்றாக விளாச வேண்டும்.

அப்புறம் அவனை வெளியே துரத்தியடித்துச்

சொல்ல வேண்டும்:

ஒழிந்து போ தேவடியா மகனே.

நெற்றியில் பேண்ட் எய்டை ஒட்டிக் கொண்டு

அந்தப் பையன்கள் அதிகாலையில்

தெருவோரத்தில் நின்று

தங்களது சிரங்கைச் சொரிந்துகொண்டிருக்க

அவன்களது

புரையேறிய காயங்களிலிருந்து வழியும் மஞ்சள் சீழை

நாய்கள் நக்கிக்கொண்டிருக்க

அவர்களைப் பார்க்கும் பெண்கள் தங்கள்

கைவளையல்கள் நொறுங்கும் சப்தம்

கலகலவெனக் கேட்கும்படி சிரிக்கட்டும்

நிஜமாகவே நான் எனக்கு

ஒரு வாலிபனை வாங்க விரும்புகிறேன்



ஒரு புத்தம் புதிய மெருகு குலையாத

நெஞ்சில் முடி கொண்ட பையன்

ஒரு பையனை நான் வாங்கி

அவன் உடம்பு முழுக்க உதைப்பேன் அவனது சுருங்கிக் கிடக்கும்

விரையில் உதைத்துக் கொல்வேன்:

ஒழிந்து போ தேவடியா மகனே.


5) அவமானம் 7 டிசம்பர் 1992





சதிபதா தாஸ் அன்று காலை

அவனது வீட்டுக்கு தேநீருக்கு வருவதாகத் திட்டம்

மனம் நிறைந்தபடி

அரட்டை அடித்துக் கொண்டிருப்பதும்

செஸ் விளையாடுவது யோசனை

சதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்




இன்று அவன் வரவில்லை



குல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்

சதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து

பலவந்தமாக அவனைத்

தாக்கியது என்று செய்தி வந்தது


போனவர்கள் மண்ணெண்ணெயை

அறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்

மேசைகள், நாற்காலிகள், படுக்கைகள், அலமாரிகள்,

சட்டி பானைகள்

தட்டுமுட்டுச் சாமான்கள்

துணிமணிகள் புத்தகங்கள்

என எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்


அப்புறம் எல்லாத் தீக்குச்சிகளையும்

ஒருசேரக் கொளுத்தி

மண்ணெண்ணெய் தெளித்த எல்லா இடங்களிலும்

சுண்டி விட்டார்கள்.

தீப் பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்

வீட்டு முன்றலில் வெறித்தபடி நின்று

தாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸாரையும்

அதன் மேல்

வேற்றுமையற்ற வானத்தில் படியும்

கரும்புகையையும் பார்த்தபடி நின்றான்.



மாலையில் நான்

சதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்.


சதிபதா தாஸ் தனது மூதாதையரின்

சாம்பலின் மீதும்

சரிந்த கட்டைகளின் மீதும்

தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன் இரத்தம்

அவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது

மார்பிலும் முதுகிலும்

கறுத்த தழும்புகள் தெரிந்தன


அவமானத்தில் எனக்குக் கூசியதால்

என்னால்

அவனைத் தொட முடியவில்லை.


1.1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இத்துடன் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.


2.தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.

6) நேற்று ஒரு கெட்ட கனவினோடு



நேற்று பின் மாலையில்

பங்களா அகாதமியின் புல்வெளியில் நான்

ஒரு கெட்ட அவனைச் சந்தித்தேன்



அந்தக் கெட்ட கனவு

நிலக்கடலையைத் தின்று கொண்டு

தின்றுமுடித்த

கடலைத் தோலைத் தூக்கிப் போட்டு

நண்பர்களோடு குறும்பு பேசி

விளையாடிக் கொண்டிருந்தான்


அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்

மயங்கியபடி பார்த்தேன்

அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்

வைகறை நிறத்தைப் பார்த்தேன்


கஞ்சாப்புகை காற்றில் வட்டங்களாகச் சுருண்டு

எனது கழுத்துப் பட்டையில் கலந்தது

கனவில் கிறங்கிய எனது கண்களுக்குள்

புகை மண்டிய வானத்தினுள்

அதன் நெற்றி முகப்பில் நூறாயிரம் பொட்டுகளாக

சந்தனச் சாந்து விரிந்தது



திடீரென அந்தக் கெட்ட கனவு

எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னை இழுத்து

தனது கைகளுக்குள் இறுக்கினான்

முத்தமிடும் வேளையிலெல்லாம் எண்ணியபடி எனக்கு

முப்பத்தியொன்பது முத்தம் பொழிந்தான்


கெட்ட கனவின் மயிற்கற்றைகள்

வலிய காற்றில் அலைந்தன

அவனது சட்டைப் பொத்தான்கள் திறந்து கிடந்தன

நிலவொளியில் நனைந்து கிடந்த நான்

பின்னிரவில் வீடு வந்து சேர்ந்தேன்



அந்தக் கெட்ட கனவு

என்னுடன் ஒட்டிக்கொண்டு வழியெங்கும்

காதலைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தான்




அந்தக் கெட்ட கனவுக்கு

வெட்கமென்பது கிஞ்சிற்றும் இருக்கவில்லை

அந்த இரவு கழிந்தது

மறுநாள் பகலும் கழிந்தது

அவன் போகப் போகிறேன் என்று




ஒரு முறைகூடச் சொல்லவில்லை.

7) சட்டை தைக்கும் பெண்கள்


சட்டை தைக்கும் பெண்கள் சேர்ந்து நடக்கிறார்கள்

பங்களாதேஷ் வானத்தில் பறக்கும்

நூறு நூறு பறவைகள் போல



சட்டை தைக்கும் பெண்கள்

நள்ளிரவில் தங்கள் சேரிகளுக்குத் திரும்புகிறார்கள்

காசு பிடுங்குவதற்காகத் திரியும்

தெருப் பொறுக்கிகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்

தமது உடல்களை

அந்தப் பெண்களின் உடல்களின் மீது அழுத்தி

பொறுக்கிகள் இரவின் மிச்சத்தையும் திருடிச் செல்கிறார்கள்



உறக்கமற்ற இரவினையடுத்து

அதிகாலையில் மறுபடியும் அவர்கள் சேர்ந்து போகிறார்கள்

அவர்கள் கடந்து போகிறபோது ஆண்களுக்கு எச்சில் ஊறுகிறது

நடந்து கடந்ததும் துப்புகிறார்கள்

தம்மால் இயன்றவரை பெண்கள்

இவர்களை உதாசீனம் செய்கிறார்கள்

எவர்தரும் உணவையும் ஏற்றுக்கொள்வதில்லை

எவர்தரும் உடுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை

நடக்கிறார்கள்

நடந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள்


குருட்டு எருதுகள் போல

மேலே மேலே நடந்து செல்கிறார்கள்

ஏதுமற்றவர்கள் உள்ளவர்களைச் சார்ந்து நிற்கிறார்கள்


வானவில்லை அணிவிக்கத் தடுக்கப்பட்டு

அலைக்கழிய விதிக்கப்பட்டு

இருளின் கைகளின் பட்டு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு

நிலவொளிரும் இரவுகளை அனுபவிப்பதற்கு மாறாக

பயந்து பயந்து


உலக வானத்தில் பறக்கும் நூறு நூறு வங்காளிகளாக

சட்டை தைக்கும் பெண்கள் நடக்கிறார்கள்

நடந்து சென்று கொண்டேயிருக்கிறார்கள்.

( இக்கவிதைகள் ‘ உயிர்மை’ பதிப்பக வெளியீட்டு நூலில் இடம் பெற்றுள்ளன)

subrabharathi@gmail.com

புதன், 18 மே, 2011

புதன், 11 மே, 2011

அண்டை வீடு: பயண அனுபவம் பாதுகாப்பு

பத்து வருடங்களுக்கு முன்னால் தள்ளு ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த நான் சிகரெட் குடித்ததற்காக கீழே இறக்கி விடப்பட்டேன். அந்த ஏழ்மையான ரிக்ஷாக்காரர் என்னை கேவலமாகத்தான் திட்டினார். இன்று அதே டாக்கா வீதிகளில் பேண்ட், சர்ட் போட்டு நடக்கிறேன். மாறுதல்தான். இது கல்வி அல்லது காலம் தந்த முன்னேற்றம்" இப்படிச் சொல்பவர் முப்பத்தைந்து வயது பெண்மணி. பெண்களுக்கான கல்வி என்பது சற்றே முன்றனேற்றமடைந்தள்ளதுதான் வங்கதேசத்தில். " மதர்சா பள்ளிகளில் படிக்கும் வீடுகளற்ற அனாதைக் குழந்தைகளில் இருக்கும் பெண் குழந்தைகள் முகமும் பயப்பட வைக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் எப்படியிருக்குமோ"

இங்குள்ள பள்ளிகளை ஆங்கில வழிக்கல்விக் கூடங்களை, வங்காள மொழி கல்விக் கூடங்கள், மதரசா கல்விக் கூடங்கள் என்று பிரிக்கலாம். இவற்றில் மதரஸாவில் இஸ்லாமிய அடிப்படை விஷயங்களை அராபிக் மொழியில் கற்றுத் தருகிறார்கள். வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் குடும்பங்கள் இல்லாமல் போன இளம் வயதினர் அங்கு உள்ளனர்.. உள்நாட்டுப் போர்களால் கைவிடப்பட்டவர்கள் என பெரும்பாலும் அனாதைகளாய் மதரஸா பள்ளிகள் நிரம்பி வழிகின்றன. அரசு சலுகை பெற்ற பள்ளிகள், அரசாங்கப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற பிரிவுகள் இருகின்றன. வழக்கமாய் ஆங்கிலத்தை முதன்மைபடுத்தும் பள்ளியில் கட்டண விகிதம் அதிகமாகவே இருக்கிறது. மேல்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக அப்பள்ளிகள் இருக்கின்றன.

இலவசக்கல்வி 10 வயது வரை இருக்கிறது. சிலருக்கு மான்ய உதவியும் இருக்கின்றன. தெற்காசியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள நாடு. ஏழை வங்காளநாட்டில் தன்னார்வக் குழுக்கள் நடத்தும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளிகள், மாலைநேரப் பள்ளிகளும் கணிசமான அளவு இயங்கி வருகின்றன. 1980களுக்கு ப் பிறகு ஆங்கிலக் கல்விக்கான மவுசு அதிகரித்து வருகிறது. 1992ல் தனியார் பல்கலைக் கழகங் களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டன.

34 அரசுப் பல்கலைக்கழகங்களும், 54 தனியார் பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன. டாக்காவில் பிரதான வீதிகளில் தென்படும் தனியார், அரசு பல்கலைக்கழகங்களின் கட்டிடங்கள் முனிசிபல் காம்ப்ளக்ஸ் போன்று நெருக்கமானவே அமைந்திருக்கின்றன. தனியார் பல்கலைக் கழகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 65% ஏதாவது வேலை என்று தேடிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் தனியார் வேலைதான். பின்னலாடை, ஜவுளித்துறை தொழிலை ஏற்றுக் கொள்கிறார்கள். 12% வேலையற்றவர்களாக இருக்கிறார்கள். பங்களாதேஷ் யுனிவர்சிட்டி ஆப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி, டாக்கா யுனிவர்சிட்டி,இண்டிபெண்டட் யுனிவர்சிட்டி, BRAC தன்னார்வக் குழு பல்கலைக்கழகம் போன்றவை புகழ் பெற்றவை.

" கேடட் காலேஜ்" என்றொரு அங்கம் கல்வித் துறையில் இருக்கிறது. இதில் ராணுவப் படிப்பு கட்டாயம் மாதிரி, பிரைவேட் ஆங்கிலப் பள்ளி என்ற ஆங்கிலத்தைப் பிரதானமாகக் கொண்ட பள்ளிகள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன( தமிழ்நாட்டில் 2010ல் அரசு கொண்டு வந்துள்ள மாதிரிப் பள்ளிகள் பற்றி ஞாபகம் வருகிறது. இந்த மாதிரிப் பள்ளிகள் பிற்பட்ட மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். வெவ்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளி வடிவமைக்கப்படும், தேர்ந்த கல்வி இதன் நோக்கமாம். ஆனால் ஆங்கில வழிக் கல்விதானாம். தமிழகத்துக் கல்வியாளர்கள் பலர் இதை எதிர்த்துள்ளனர்).

மதர்சா பள்ளிகளின் வீச்சு மக்கள் மத்தியில் ஊடுருவி உள்ளது. சாப்பாடு, தங்குமிடம் உட்பட் அனைத்தும் இலவசம். 12 வது கிரேடு "அலிம்"முடிந்து 3 வருட பட்டப்படிப்பு உள்ளது. தீவிரவாதிகளை உருவாக்கும் பள்ளிகளாய் மற்றவர்களால் இப்பள்ளிகள் கணிக்கப் படுகின்றன. எல்லாவற்றிலும் மதிப்பெண் பெற குருட்டு மனப்பாட முறையேஇருக்கிறது.. தேர்வும், தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இஸ்லாமியப் பள்ளிகளில் இஸ்லாமிய அரசியல் ஒரு முக்கிய பாடம்.அரசியல் பாடம் படிப்பவர்களில் பெண்கள் கணிசமாக இருக்கிறார்கள்.



"மூன்று சக்கர ரிக்ஷாவில் இரும்புக் கதவுள்தான் உட்கார்ந்து இளம் பெண்கள் போக வேண்டி இருக்கிறது. திருட்டு ப்பயம். வன்முறை கூட.. ரிக்க்ஷாக்களுக்கு இரும்புக் கதவுகளைப் போட்டிருக்கின்றனர். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கல்வி முறை இல்லைதான்" என்பது பெண்களின் அபிப்பிராயமாக இருக்கிறது

வியாழன், 5 மே, 2011

அண்டை வீடு : பயண அனுபவம்

" மல்லையா விமானப் பயணிகளைச் சரியாக கவனிக்க வேண்டுமென்றால் பீர்பாட்டிலோ, ஒயின் பாட்டிலோ கூடத்தரலாம். இப்படி விமானப் பயணத்தின்போது வெறும் சாண்ட்விச்சைத் தர வேண்டியதில்லை. ஒரு காபியோ டீயோ கூட இல்லாமல் 100 மில்லி தண்ணீர் மட்டுந்தானா, பக்கத்து இருக்கையில் இருந்த எல்.பி.எப்ஃ தொழிற்சங்கத்தைச் சார்ந்த பாலசுப்ரமணியன் அலுத்துக் கொண்டார். ‘கிங்பிஷரில்’ பயணத்தின்போது வெறும் சாண்ட்விச் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் நடுவில் வைத்து வழங்கப்பட்டது. ஒரு வகை அலுப்புடன் பழைய தின்பண்டத்தைப் பார்ப்பது போல் பலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.



இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் வழங்கப்படும் உணவின் தரம் சாதாரணமாகிவிட்டது என்று பொதுவாகக் கருதுகிறார்கள்.( சிங்கப்பூர் - சென்னை பயணத்தில் ஒரு தரம் பல ஆண்டுகளுக்கு முன்னால் உணவின் தரம் திருப்தியாக இல்லை என்று சொன்னபோது அந்த விமானத்தில் பயணிகளாக இருந்தவர்களைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு முஸ்தபா கடை பொருட்களுடனும், லுங்கி வேட்டியுடனும் திரும்பும் தொழிலாளர்களாகயிருந்தனர்.) விமானக் கட்டணம் குறைவாக இருப்பதன் காரணமாகவும், குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் உணவு தரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது அல்லது உணவின் தரம் சாதாரணமாகிவிட்டது அல்லது காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொள் என்று விதி மாற்றப்பட்டது என்றார்கள். உணவு விநியோகம் செய்ய பணிப்பெண்கள் தேவை. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தை மனதில் கொண்டு சம்பளக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்றார் அலோசியஸ். ஆள்குறைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற ரீதியில் உணவு தரப்படுவது குறைந்து விட்டது.








ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்களில் ‘பரிசுக் குலுக்கல்’ அமோகமாக நடக்கிறது. பயணிகளுக்குத் தரப்படும் அட்டையில் என்ணைச் சுரண்டினால் குறிப்பிட்ட எண்ணுக்கு ஏதாவது குறிப்பிட்ட தொகை செலுத்தி பரிசுப் பொருள் பெறலாம்.( இதேரீதியில் முன்பெல்லாம் கிராமங்களில் பலர் ஏமாந்து தில்லி கம்பெனிகள் பார்சலில் காகிதங்களையும், செங்கல்லையும் அனுப்புவதை பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்). சுரண்டுபவர்களுக்கு ஏகதேசம் ஏதாவது பரிசு கிடைத்து விடுகிறது. செலுத்தும் பணத்திற்கு உகந்தது என்ற அபிப்ராயம் வருமளவு பரிசுப் பொருள் கைக்கடிகாரம், காதணி என்று இருக்கிறது. சின்னதாய் ஏலம் என்ற அளவில் அட்டையையும் தருகிறார்கள். சூட்கேஸ், டிராவல் பேக், காமிரா, ரகசிய பதிவு செய்யும் பேனா என்று ஏலத்திற்கான பொருட்களையும் பட்டியலிட்டு, அழகாக அச்சிட்டுத் தருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாக அட்டையில் எழுதிக் குறிப்பிட்டாலும் " வா, வந்து பொருளைப் பெற்றுக் கொள்" என்று விமானப் பணிப்பெண் வந்து அழகாய் சொல்லி விட்டுப் போகிறாள்.இன்னும் குறைத்துப் போட்டிருக்கலாம் என்ற அபிப்ராயமும் வந்து விடுகிறது.



எங்கள் குழுவில் மொத்தம் 15 பேர் இருந்தோம். டாக்கா உள்ளூர் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த பய்ஜ் உட்பட பலர் பெண் பிரதி இல்லாததைக் குறையாகச் சொன்னார்கள். எங்கள் குழுவை க் கவனித்த ஒரு தன்னார்வக் குழுத் தலைவர் சொன்னார்: " உங்கள் குழுவில் பெண்களே இல்லை. எங்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதிநிதிக் குழுக்களில் எங்கள் பிரதமர் பெண்மணி முதலிடத்தில் இருப்பார். எங்கள் குழுக்கள் இவ்வளவு சிறியதாக இருக்காது. 80-90 பேர் கொண்ட பெரிய குழுக்களாக இருக்கும். விமானத்தில் பாதியை இடம் பிடித்துக் கொள்வர். பெரிய குழு சாதாரணம். விரைவில் அது 100 என்பதை எட்டலாம்".

வங்கதேசத்திலிருந்து 40 லட்சம் பயணிகள் சென்றாண்டு வெளிநாடு சென்றிருக்கிறார்கள். இது சென்றாண்டை விட 80 சதவீதம் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் பெரிய சாதனை என்கிறார்கள். என்றாலும் உள்ளூர் வங்கிகள் விமான சேவைக்காக கடன் கொடுப்பதில் வெகுவாகத் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம், விமானக் கோளாறுகளும் விபத்துகளும், பெரிய முதலீடும். உள்ளூர் விமான சேவை அதிகரித்திருக்கிறது. இடம்பெயர்வு தொழிலாளர்கள் அதிகம் பயணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு 10 வங்கிகள் ‘பீமன்’ என்ற விமான சேவை நிறுவனத்திற்கு 800கோடி ரூபாய் அடுத்த ஆண்டுகளில் புதிய ஜெட் விமானங்கள் வாங்கத் தந்துள்ளன. யுனைடெட் ஏர்வேஸ், ஜிஎம்ஜி போன்றவை இதுபோல் பெரும் பண உதவி பெற்றுள்ளனர். விமானங்களை இயக்குவது முழுக்க கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது. விமானஓட்டி கணினி மேற்பார்வையிடும் வேலை செய்கிறார். இவ்வாண்டின் மிக மோசமான மங்களூர் விபத்தில் ‘கறுப்புப் பெட்டி’ விமானஓட்டியின் நெடுநேர குறட்டைச் சப்தத்தைப் பதிவு செய்திருக்கிறது.



பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் புகைவண்டி போல ஒரு மணிநேரம் தாமதமாகக் கிளம்பியதால் டாக்காவில் நாங்கள் பிடிக்க வேண்டி இருந்த ஜெர் ஏர்வேஸ் விமானத்தைக் கோட்டை விட்டோம். இமிகிரேஷ்ன் செக்கிங் முடிந்து, போடிங் பாஸ் தந்துவிட்டாலும் நேரமாகிவிட்டது என்று காலையில் கிளம்பிக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த விமானம் மத்தியானம்தான். அதற்கு அபராதம் கட்ட வேண்டியிருந்தது. வெளியிலும் செல்ல முடியாது. செக்யூரிட்டியில் இருந்த ஒரு மலையாளி அதிகாரி முகஜாடையையும், மொழிப் பரிமாற்றத்தையும் புரிந்துகொண்டு நால்வரை வெளியேகொண்டு போய் சாப்பிட்டு விட்டு மற்றவர்களுக்கு பொட்டலங்கள் வாங்கி வர அனுமதி தந்ததால் வெளியே சென்றுவிட்டு வந்தோம். எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது என்ற சிக்கல் இருந்தது. சர்வதேச விமான நிலையம். உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் தோழமையுடன் குளிர்ந்த தரைப்பரப்பில் பொட்டலங்களை விரித்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் அதைக் கூர்ந்து கவனித்தபடி கிண்டல் அடித்தார்: " சர்வதேச விமான நிலையம் இந்திய புகை வண்டி நிலையம் போலாகிவிட்டது. சர்வதேச விமான நிலையத்தை இந்தியர்கள் சர்வதேச புகைவண்டி நிலையம் ஆக்கிவிட்டார்கள்."

Subrabharathi@gmail.com

சனி, 30 ஏப்ரல், 2011

கிணிகிணி:மாமா எங்க இருக்கீங்க

அண்டைவீடு : பயண அனுபவம்

டாக்கா விமான நிலையத்தில் இறங்கியதும் நண்பர்கள் வெளிநாட்டுத் தொலைபேசி வசதிக்காகப் பரபரத்ததைக் கண்டேன். ‘பங்களாலிங்க்’ என்ற தனியார் மொபைல் நிறுவன விளம்பரம் முகப்பில் எல்லோரையும் வரவேற்றது. அதன் இளம் பெண் ஒருத்தி தன் வலது கையினால் இதயத்தை தொடும் காட்சி கவர்ச்சிகரமான படமாகியிருந்தது. அதனருகில் நின்று நானும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். கல்கத்தா வரை தொலைத் தொடர்பு இருந்ததும் சட்டென மாயமாகி விட்டதையும் கண்டு தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறையில் பரபரத்துக் கொண்டனர்.அதிமுக தலைவர் ஆனந்தன் முன்பே சர்வதேச இணைப்புப் பெற்றிருந்தாலும் இன்னும் ஒரு இணைப்பைப் பெற்றுக் கொண்டார். டாக்கா விமான நிலையத்தில் இறங்கியதும் இந்திய சேவை துண்டிப்பு.பாஸ்போர்ட், 2 புகைப்படங்களுடன்’ பங்களாலிங்’ சேவையில் உட்படுத்திக் கொண்டனர். ஒரு மணிநேர விமானப் பயணம் அவர்களின் உலகத்தையே துண்டித்துவிட்டது என்ற பயபீதியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

‘சேவ்’ அலோசியஸ் சர்வதேச அழைப்பு வசதி எப்போதும் கொண்டவர். காலை மாலை, இரவு, உணவு இடைவேளை என்று அவர் வீட்டிலிருந்து அழைப்புகள். மனைவி, மகன், மகளிடமிருந்து வந்து கொண்டேஇருக்கும்."அட்டன்டென்ஸ்" கொடுத்துக் கொண்டே இருப்பார்.






அவர்களின் அழைப்பு அவரைக் கட்டுப்படுத்துவது போல இருக்கும். ‘சர்வதேச அழைப்பு வசதி பெறவில்லையா’ என்று அவர் என்னிடம் கேட்டார். மகள் கல்லூரி விடுதியில் இருப்பவர். அங்கு கல்லூரியில் கைபேசி தடைசெய்யப்பட்ட ஒன்று. அவரே கல்லூரி விடுதி பொதுதொலைபேசியில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டால்தான் உண்டு. கல்லூரி விடுதிக்கு நான் அழைக்க முடியாது. எனவே புதுவசதி தேவையில்லை என்றேன். கைபேசி இல்லாமல் வரும் நாட்கள் பழகிப்போவது ஆறுதலாகவே இருந்தது.

150 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வங்காள்தேசத்தில் 58 மில்லியன் மக்கள் கைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள். "டிஜிட்டல் பங்களாதேஷ் 2021" என்ற திட்டம் வங்கதேசத்தில் அனைவரும் கைபேசி வசதி செய்ய வழிவகுக்கிறார்களாம்.( அப்போது 2021ல் இந்தியா வல்லரசு தானே!). 32 மில்லியன் கைபேசி சந்தாதாரர்களாக இருந்தவர்கள் இப்போது 58மில்லியன் ஆகி இருக்கிறார்கள். 34% மொத்த வசதியில் இங்கு. 2012ல் 70 மில்லியன் ஆகிறது.


வங்கதேசத்தில் கைபேசி சேவை வெகுதாமதமாகத்தான் ஆரம்பித்தது. உள்ளூர்ப்பிரச்சினைகள், உள்நாட்டு சிக்கல்கள், அரசியல் தடுமாற்றங்கள், சில விசயங்களில் பொது மக்களின் நிதானமில்லா பரபரப்பு நிலை இவையே தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள் ‘சிட்டிசெல்’ என்ற நிறுவனம் 1997ல் கைபேசி சேவையைத் துவக்கியது. ‘இரமீன் சேவை’ அதிரடியாக வந்து அதை நிலைகுலைய வைத்தது. ஆப்கான் தேசத்தில் நிலைபெற்ற ‘டெலிய சொன்னீரா’ வின் சேவை மிக முக்யமான வருகையாக இருந்தது. 1980வரை ஏகபோக நிறுவனமாக இருந்த பசிபிக் டெலிகாம் சர்வீஸ் ஆதிக்கம் வீழ்ந்துவிட்டது.

சிட்டிசெல் என்ற ஹாங்காங் நிறுவனம் நிலைபெற்றுவிட்டது. கிரமீன், டெலிகாம் மலேசியா, பங்களாதேஷ் லிமிடெட், ஏகே டெலிகாம் கைபேசி சேவை கொடுத்துக் கொண்டிருக்கும் மற்ற நிறுவனங்களாகும்.

இந்தியாவின் பாரதி, ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகியவையும் இங்கு சேவையைத் தொடர்கின்றன. 10% கைபேசி சேவை உயர்வு என்பது 1.3% பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக புள்ளி விபரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு மூலதனங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன.



பங்களாதேஷ் டெலிகம்யூனிகேசன் சட்டம் 2010 சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேல் அதிக வரிச்சுமை செலுத்துவதாகவும், அவர்களுக்கு பாதகமாய் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகவங்கி கூட பங்களாதேஷ் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் ‘புதிய சட்டம் முதலீட்டைக் குறைக்கும். பெரிய அளவில் சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும்’ என்று இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பணம் சேர்க்கும் உத்தியென்றும், பெரிய அளவில் ஊழலை உருவாக்கும் என்றும் கருத்துள்ளது. ஊழல் தேசத்தில் இதை விட வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள். அதேசமயம் டிஜிட்டல் பங்களாதேஷ் 2021 திட்டத்தைச் சீர் குலைக்கும் என்கிறார்கள்.

"வாட்சன், கம் கியர், ஐ வாண்ட் யூ" என்பது தான் கிரஹம்பெல் தொலைத் தொடர்வு வழியாய் அனுப்பிய முதல் செய்தி. வங்கதேசம், பாகிஸ்தான், கைபேசி சேவை "குண்டு வெடி, வன்முறை செய்" என்று உலகம் முழுவதும் தீவிரவாதத்தைப் பரப்பும் கிளைச் செயல்களில் பெரிதும் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. ‘டிஜிட்டல் பங்களாதேஷில்’ தீவிரவாதமும் தீவிரமாகும்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அரசியல் தப்புத் தாளங்கள்

அண்டைவீடு : பயண அனுபவம்

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாள் கூட்டம் அன்று என்பதை டாக்கா செய்தித்தாள்களின் இன்றைய செய்திகள் நிகழ்ச்சியில் படித்தேன். கட்சித் தலைவர் என்ற முறையிலோ, பிரதமர் என்ற முறையிலோ அவருக்கு வாழ்த்து சொல்லி எவ்வித விளம்பரங்களைச் செய்தித்தாட்களிலோ, ப்ளக்ஸ் பேனர் விளம்பரங்களாகவோ டாக்காவில் தென்படாதது ஆச்சர்யம் தந்தது. விசாரித்தபோது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதான ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியவை முன்னர் ஏதோவொருவகையில் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த தின நாட்களிலும் இதேபோல் கடைபிடிக்கப்படுவதால் எல்லாம் அடக்கி வாசிக்கப்படுவதாகச் சொன்னார்கள். ராணுவ முறையிலான கட்டுப்பாடுகள் இதற்கு உதவுகின்றன. தேர்தல் காலத்திலும் இந்த வகையான கட்டுப்பாடுகள் தேர்தல் வன்முறையைத் தவிர்க்க உதவுகின்றன என்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில் கூட ஷேக் ஹசீனா கட்சியின் தேர்தல் பிரச்சார சின்னமான விளக்கோ, எதிர்க்கட்சியினரின் படகோ சிறுசிறு கட்அவுட்டுகளாகப் பொறிக்கப்படும் அவ்வளவுதான் என்கிறார்கள்.

இவ்வாண்டு தமிழகத்துத் தேர்தல்களில் தேர்தல் கமிசன் எடுத்த கெடுபிடிகள் காரணமாக தெருக்களில் கட்சிக்கொடிகளும், தட்டிகளும், அலங்கார வளைவுகளும் இல்லாத்து போலவே டாக்கா நகரத் தெருக்கள் சுத்தமாக இருந்தன.

ஷேக் ஹசீனா சமரசவாதியாகவும் இந்தியாவுக்கு ஓரளவு விசுவாசியாகவும், அமெரிக்காவுக்கு இரட்டை மடங்கு முழு விசுவாசியாகவும் விளங்குகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னால் ராணுவப்படையினர் நடத்திய கலகத்திற்குப் பின் அவரின் கெடுபிடி குறைந்திருக்கிறது. ஷேக் ஹசசீனா ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்கள் ஆன நிலையில் சென்றாண்டு பிப்ரவரி 25ல் துணை ராணுவ படைத் தலைமையகம் உள்ள பில்கானாவில் ராணுவ ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றபோது அதைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள் தலைமை இயக்குனர் ஷகில் அகமதையும், அவரது மனைவியையும், ராணுவக் குடும்பத்தினர் 140 பேரையும் ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொன்று பிணங்களைப் பெரிய குழி வெட்டிப் புதைத்தனர். இராணுவ சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகள், வெவ்வேறு அலவன்சுகள் குறைவானது என்ற எதிர்ப்பின் தொடர்ந்த அடையாளத்தின் முக்கிய நிகழ்வாக அதை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் மாபியா கூட்டாளிகள் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ ஷேக் ஹசீனாவைச் சுட்டு இராணுவ ஆட்சி நடத்த திட்டமிட்ட சதி திட்டமிட்டது. தோல்வியடைந்துவிட்டது. நிலைமை தீவிரமானால் இந்தியா இராணுவ படை விமானங்களை அனுப்பி ஹசீனாவை மீட்டு வர திட்டங்கள் இருந்திருக்கிறது.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இஸ்லாமிய தாலிபான்களின் எதிர்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. வங்கதேசத்தில் தாலிபான் தாக்குதல் நடவடிக்கைகள் அவ்வப்போது நிகழ்கின்றன. 1971ல் வங்கதேசம் பிறப்பெடுத்தபின்பு ஷேக் முஜிபிர் ரஹ்மான் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் விசுவாச ராணுவ கும்பலால் கொல்லப்பட்டார். பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி ஜியா உர் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியாவும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹ்சீனாவும். மாறி மாறி பிரதமர் பதவிகளை வகித்து வருகிறார்கள். 1971ல் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்கும் மசோதா நிறைவேற்றியும் அது நடைமுறைக்கு வரவில்லை.

முந்தின பாகிஸ்தான் அதிபர் சர்தானி போன்றவர்கள் போர்க்குற்ற விசாரணையை நிறுத்தச் சொல்லி ஷேக் ஹசீனாவுக்கு மிரட்டல் விடுத்ததால் அது கைவிடப்பட்டது.

அமெரிக்காவும் இஸ்லாமிய அமைப்புகளைத் தத்தெடுத்து வெறிச்செயல்களை பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் நிகழ்த்தி வருகிறது. பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையையொட்டி உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மெளலானா பஸ்லுல்லா என்பவர் தலைமையிலான அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இதை அமெரிக்காவே ஊக்குவித்து வருகிறது.

வடமேற்கு எல்லைப்புற ஸ்வாட் சமவெளி பாகிஸ்தானின் ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இச்சமவெளியை மையமாகக் கொண்டு நடந்து வரும் சுற்றுலா வருமானம் இத்தாக்குதல்களால் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த மகாணத்தில் இருந்து 5 இலட்சம் மக்கள் வங்கதேசத்திற்கும் அகதிகளாக வந்திருக்கின்றனர்.

இந்த அகதிகளால் ஷேக் ஹசீனாவுக்கு தலைவலிதான். அரசியல் விமர்சனங்கள் அவரையே ‘அரசியல் அகதி’ என்றழைக்கின்றன.

வியாழன், 14 ஏப்ரல், 2011

வாகன நெரிசல்

அண்டைவீடு : பயண அனுபவம் :



டாக்காவிலிருந்து 29கி.மீ. தொலைவிலான பழைய பானம் நகரைப் பார்க்கச் செல்வதற்கு நான்குமணி நேரம் பிடித்தது. தினமும் இந்த அனுபவம்தான் எங்களுக்கு. டாக்கா நகரத் தெருக்களின் வாகன நெரிசல் பயமுறுத்தக் கூடியதாக இருந்தது.

பானம் நகரம் 13ம் நூற்றாண்டு வரை இந்துக்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன் பின் முகலாயரின் ஆட்சிக்கு வந்த பின் நிகழ்ந்த வியாபாரப் பரிமாற்றங்கள் அதைத் தலைநகராக்கியிருக்கிறது. துணிகளுக்குப் பெயர் பெற்ற நகரமாகியிருக்கிறது. இப்போது கூட அங்கு செல்லும் யாத்திரிகர்களை வழிகாட்டிகள் துணிக்கடைக்குத்தான் அதிகம் கூட்டிச் செல்கிறார்கள். வங்கதேசத்தின் நாராயண கஞ்ச் மாவட்ட்த்தில் சிட்டகாங் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. இங்கு வசித்து வந்த இந்துக்கள் 1965ல் இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின்போது இந்தியாவிற்குச் சென்று விட்டதால் வேறு யாரும் குடியேறாமல் பிரமாண்டமான 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அவற்றின் 500 வருட பாரம்பரியத்தையும், பழமையையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்து போய் சிதிலங்களாக நிற்கின்றன. பழம் மசூதியொன்றும், நாட்டுப்புறவியல் அம்சங்கள் கொண்ட கண்காட்சியும் , நடந்து சென்று இளைப்பாறக்கூடிய தோட்டங்களும் முக்கியமானவை.





டாக்காவின் வாகன நெரிசலுக்குக் காரணமாக பலவற்றைச் சொல்லலாம். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதான சாலையின் " பேபி டாக்ஸி" என்ப்படும் இரட்டை என்ஜின் குட்டி வாகனங்கள். இவை தரும் புகையும் புழுதியும் அபரிமிதமானவை. ஒரு பேபி டாக்ஸி 30 சாதாரணக் கார்களுக்குச் சமம். அவ்வளவு சுற்றுச்சூழல் சிரமம் தருபவை. அவற்றை மாற்றும் திட்டத்தில் பச்சாசை டாக்ஸிகள் சூற்றுச்சூழல் கேடற்றவை என்று சிலதை அரசும் வீதிகளில் ஓட விட்டிருக்கிறது. கால்களில் மிதித்துச் செல்லும் ஏழு லட்சம் ரிக்சாக்கள் நகரில் ஓடுகின்றன. இவற்றில் அய்ம்பது சதவீதத்திற்கு மேற்பட்டவை அனுமதி பெறாதவை. இவை பெரும்பாலும் ஆண்களால் ஓட்டப்படுபவை.

பின்னலாடைத் தொழிலாளர்களில் 80% பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களை ரிக்சா மிதிக்க இட ஒதுக்கீடு செய்து கொண்டவர்கள் போல என்று எங்கள் குழு தலைவர் அயெண்டியூசி தண்டபாணி கூறினார் (அங்கங்கே தொழிலதிபர்களைச் சந்திக்கிற கூட்டங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு வெளியேறிவிடுவார் அல்லது போலாம் என்று அவசரப்படுத்துவார். காரணம் கேட்டால் பொய் சொல்லறத எத்தன நேரந்தான் கேட்டுகிட்டிருக்கிறது என்பார்).

சுத்திகரிக்கப்படாத பெட்ரோல் உபயோகத்தின் அபரிமிதம், டீசல் விநியோகத்தில் குறைபாடுகள், முறையான கட்டமைப்புகளுடன் தொழிற்சாலைகள் அமையாதது, சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்கள் என்கிறார்கள். இவை தரும் சப்தக் கேடு நாராசமாகிறது. டாக்கா வீதிகளில் நாள் முழுக்க ரிக்சாக்களின் மணியடிச் சப்தங்கள் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். 45% ரிக்சாக்களால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. ரிக்சாக்களுக்கு இணையாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களால் வீதிகள் நிரம்பி வழிகின்றன. புதிதாய் வருகிற கார்களை 5 வருடம் கழித்துதான் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தால் வீதிகளில் ஓடும் வெளிநாட்டுக் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தொலைபேசித்துறை, மின்துறை போன்றவற்றின் தொடர்ந்த குழிதோண்டும் செயல்பாடுகள், முறையில்லாத பார்க்கிங், கி.மீட்டர் கணக்காக வீதிகளில் தொங்கிச் செல்லும் கேபிள் இணைப்புகளின் ஒயர்களை சரிசெய்வோரின் கூச்சல், வீதியோரத்து மினி ஒர்க்சாப்புகள் ,நடைபாதை மீறி தாறுமாறாய் செல்லும் மக்களின் இயல்பு நெரிசலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. வங்கதேசம் முழுவதும் 5 மெட்ரிக் டன் வாகனங்கள் இருக்கிறதென்றால் டாக்காவில் மட்டும் 1 மெட்ரிக் டன் வாகனங்கள் ஓடுகின்றன.




அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள் நகரை ஸ்தம்பிக்கச் செய்கின்றன. டிராபிக் ஜாம் ஏற்படும் போது ரிக்சாக்காரர்களும் , கார்காரர்களும் அவற்றை தண்ணீர் ஊற்றிக் கழுவுவது, சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு அந்த நேரத்தை வீணாக்காமல் ஒதுக்குகிறார்கள். டிராபிக் ஜாம் நேரங்களில் எங்கள் வாகனத்தின் சுற்றிலும் நெருக்கும் ரிக்சாக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களின் பொழுதுபோக்காக இருந்தது.

திங்கள், 11 ஏப்ரல், 2011

நம்பி வந்தோரை ஏமாற்றாது .............திருப்பூர்

ஆனந்த விகடனில் ........


புதன், 6 ஏப்ரல், 2011

பருத்திக்காடு” – நூல் வெளியீடு

திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர்


படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது.



சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர்



ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர்



சங்கத் தலைவர் சொக்கலிங்கம், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர்



ஜீவானந்தம், வழக்கறிஞர் மோகன், டாப்லைட் வேலு, ஆகியோர் பிரதிகளைப்



பெற்றுக் கொண்டனர்.


வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்..


எழுத்தாளர்கள்



மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், காரை. சந்திரசேகர்,



ஆசீர்வாதம் மற்றும் புத்தக கண்காட்சி அமைப்பாளர் கே.ஆர். ஈஸ்வரன்,



கலைவாணி சோமு, ராம மூர்த்தி, நிஷார் அகமது பழ.விஸ்வநாதன் உட்பட



பலர் முன்னணி வகித்தனர். பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்








பருத்திக்காடு- திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2010 : பங்கு பெற்ற


படைப்பாளிகள்:


சிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/ சுந்தர் அனர்வா/


மகுடேஸ்வரன்/ ஆதலையூர் சூரியகுமார்/



குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/ ஆர்.பி.ராஜநாயகம்/



காரை சந்திரசேகரன்/ தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/



கிரிஜா சுப்ரமணியம்/ ஆலம்/ காயாதவன்./ ஆர்.ஆர். பாலகிருஷ்ணன்/


ரவி மகேஷ்/ ஆசிர்வாதம்/ திருப்பூர் டி.குமார்/ டாக்டர் செலவராஜ்/


நாகேஷ்வரன்/ டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா/ சிவக்குமார் பிரபு/


நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/


ஆர்.காளியப்பன். விலை ரூ 70/




பிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.
















” கனவு” இலக்கிய கூட்டம்





“கனவு” இலக்கிய வட்ட மார்ச் கூட்டம் ஓஷோபவனில்


நடைபெற்றது. வழக்கறிஞர் சுகன்யா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்


செல்வராஜ் முன்னிலை வகித்தார். சுப்ரபாரதிமணியன் திருப்பூர்


படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான ” பருத்திக்காடு” ( வெளியீடு: கனவு


பதிப்பகம், திருப்பூர், பக்கங்கள் 144, விலை ரூ.70) நூலை அறிமுகப்படுத்தி


பேசினார். நாவலாசிரியர் தி. குழந்தைவேலு “ தந்திர கவசம்” என்ற


அவருடைய புதிய நாவலின் அனுபவங்களை விளக்கினார். சிவதாசன்


“ தென் கொங்கு” என்ற உடுமலை ‘துரை அங்குசாமி’ எழுதிய நூலை


அறிமுகப்படுத்தினார். வழக்கறிஞர் சி.ரவி, கவிஞர்கள் ரத்தினமூர்த்தி , ஜோதி,


ஆகியோர் இன்றைய திருப்பூர் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


பற்றி பேசினார்.



செய்தி: சி.ரவி


வழக்கறிஞர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அண்டைவீடு: பயண அனுபவம்: புது எழுத்து

தற்கால வங்கதேச எழுத்து எப்படி இருக்கிறது என்று அறிய் ஆங்கிலத் தொகுப்புகளைத் தேடினேன். "Contemporary short stories in Bangladesh" என்ற University press limited வெளியிட்ட நூல் ஒன்று கிடைத்தது. பல்வேறு வகையான பிரச்சினைகள் தீவிரமாக ஆட்கொண்டிருக்கும் நாட்டின் படைப்புகளின் விஸ்தாரத்தை அதில் சரியாகவே அறிந்துகொள்ள முடிந்தது. 25 கதைகளைக் கொண்ட அத்தொகுப்பை நியாஜ் ஜாமன் என்பவர் தொகுத்திருந்தார். அதில் காணப்பட்ட சில கதைகளின் மையங்கள் பற்றி:

" பாக்லி மற்றும் ஒரு ஸ்டாப்வாட்சும் 400கலோரிகளும்" கதை பெண்களின் நிறைவேறாத பாலியல் ஆசைகளை மையமாகக் கொண்டவையாகும். தங்களை அடையாளம் கண்டுகொள்வதும் உணர்ந்து கொள்வதும் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர அவர்களுக்கு உதவுகிறது.

அல்முகமது என்ற சமீபத்திய கவிஞர் ஒருவரின் சிறுகதை "தி கார்மெண்ட் பிளட்." இது போல திருமணம் நிறைவேறாத பெண்ணின் பாலியல் அனுபவங்களையும், கிராம அனுபவங்களையும் சொல்கிறது.

" யாரும் என்னைப் பார்க்க வரவில்லை" என்ற ஹாசன் அஜிஜில் ஹக்கின் சிறுகதை குழப்பமும், சிக்கல்களும் நிறைந்த 1971ம் ஆண்டின் வஙகதேச விடுதலைப் போருக்குப் பின்னதான காலத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் போரில் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் கவனிக்கப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் போன துயரத்தை இது மையமாகக் கொண்டது.

வங்கதேசத்திலிருந்து பிற நாடுகளுக்குப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வேலை தேடிப் போகிறவர்களின் அனுபவங்களை மூன்று கதைகள் சொல்கின்றன.

அமெரிக்கன் விசா பெற்றபின்பு ஒருவனுக்குக் கிடைக்கும் மரியாதையும் கெளரவமும் பற்றி ‘டு லிவ் தி பேண்டஸி’ என்ற கதை சொல்கிறது. அதே சமயம் இன்னொரு கதை அமெரிக்கா சென்றபின் ஒரு வங்கதேசத்துக்காரனுக்கு ஏற்படும் அனுபவங்களையும் அவன் வங்கதேசத்துக்குத் திரும்பி வந்தபின் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சொல்கிறது. செலினா ஹுசைனின் கதை மலைவாழ் பிரதேச மக்களின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறது. சுதிப் என்ற வங்காள இளைஞன் அவனின் பெண் நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மூலம் சோர்வான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். நினைவுகளும், காதல் அனுபவங்களும் அவனை வேறு எங்காவது செல்லத் துரத்திக் கொண்டே இருக்கிறது. மலைப்பிரதேசத்தில் இருக்கும் நண்பனின் வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து வர எண்ணி மலைப்பிரதேசத்திற்குச் செல்கிறான்.

மலைப்பிரதேச மக்கள் ராணுவத்தினரின் அடக்குமுறைக்கும், கொடுமைக்கும் எதிராக ஒன்றுதிரண்டு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அங்கு சென்றபின் அறிகிறான். நிலத்தை விட்டு விரட்ட எத்தனிக்கப்படுகிறான். நண்பனின் சகோதரி ராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்.

சக மலைவாசி மனிதர்களின் விரும்பத்தகாத செயல்களும் அவனை வருத்துகிறது. அவனின் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்து சம்பிரதாயங்களை எள்ளி நகையாடும் ஒரு கதையும் இதிலிருக்கிறது.ஜர்னா என்பவரின் கதையில் இரு இந்துக் குடும்பத்தின் சிதையும், மறுமலர்ச்சியும் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு முதிய தாயின் சஞ்சலங்களால் இக்கதை நிரம்பி உள்ளது. அவனின் மூத்தமகள் புஷ்பா மாமியாரின் தொல்லைகளும், தொந்தரவும் மீறி அம்மாவிடம் வந்து அடைக்கலமாகிறாள். பின்னர் அவளின் தனிமை தொந்தரவாக மாறுகிறது. சகோதரனின் நண்பனுடன் உறவும் பரிமாற்றமும் ஏற்படுகிறது. அவனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடத் துடிக்கிறாள். அவளின் இளைய சகோதரியின் திருமணத்தை இது பாதிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனாலும் புஷ்பா வெளியேறிவிடுகிறாள். அம்மா மிகுந்த சிக்கல்களுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள். பின்னர் அம்மா, புஷ்பா மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்தபின் ஆறுதல் அடைகிறாள். சனாதன விஷயங்கள் அவளைப் புறம்தள்ளி இருப்பதை உணர்ந்து கொள்கிறாள்.

அல்முகமது, ரிஜியா ரஹ்மான், சலீகா செளத்ரி போன்ற புகழ்பெற்ற முதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளோடு இளைய தலைமுறையைச் சார்ந்த நஸ்ரென் ஜாஹென், ஜானாஜ் முன்னி, அஹ்மது முஸ்தபா கமல் போன்ற இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

வங்கதேச மக்களின் நவீன வாழ்க்கைச் சிக்கல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த வங்கதேச எழுத்தாளர்களின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. வங்கதேச ஆன்மாவின் யதார்த்தத்தை இவை கொண்டிருப்பது இதன் பலமாக இருக்கிறது.

வங்கதேசத்தில் இந்திப் படங்களைத் திரையரங்குகளில் திரையிட தடை இருக்கிறது. அவை வங்கதேசப் படங்களைப் பாதிப்பதால் இந்தத் தடை. ஆனால் வங்கதேசத்தில் இந்திய தொலைக்காட்சி வரிசைகள் பெரும்பான்மையானவற்றை அங்கு ஒளிபரப்ப கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அனுமதியளித்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். ஆனால் மேற்கு வங்காளத்தில் வங்கதேச தொலைக்காட்சி வரிசைகள் கிடைப்பதில்லை. சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

கல்கத்தாவின் கல்லூரி சாலையிலும், காபிஹவுஸ் வட்டாரங்களிலும் வங்கதேச இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்பது குற்றச்சாட்டாகவே இருக்கிறது. ஒரு சில கடைகளிலே அபூர்வமாகக் கிடைக்கின்றன. பிரிக்கப்படாத வங்காளத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார அம்சங்கள் வலுவானவையாக இருந்தன. இந்தியாவிற்கு முன்னோடியாக அவை அமைந்திருந்தன. கோபாலகிருஷ்ண கோகலே (1866-1915) முன்பு சொன்னதாக ஒரு வாசகம் உண்டு: " வங்காளம் இன்று சிந்திப்பதை, இந்தியா நாளை சிந்திக்கும்"

நமது இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் கல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக (1772-1912) இருந்திருக்கிறது. தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சுபாஷ் போஸ், எம்,என் ராய், அப்துல் ஹ்சிம் போன்றவர்கள் முன்னணித் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். கலாச்சாரத் தளத்தில் ராஜா ராம்மோகன் ராய், பக்கிம் சந்திர சட்டோபாத்யாய மைல்கள் மதுசூதன் தத், சரத் சட்டோபாத்யாய, ராவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல், சத்யஜித்ரே, அப்பாஸ் உதின் போன்றோர் இருந்திருக்கிறார்கள்.

தில்லியைத் தலைநகராகக் கொண்ட நடைமுறைகளும், இந்துக் கலாச்சார மேலாண்மையும் 1947 பிரிவினைக்குப் பிறகு இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. பாகிஸ்தானான பிறகு வங்காள கலாச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்புக் கலாச்சாரமாக சில சமயங்களில் வடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருத தாக்கத்தை உடைத்தது, அராபிக், உருது பிரயோகத் தாவலும் முக்யமானவை. ஆனால் சுதந்திர இந்தியா வங்கதேசம் மலர்வதற்குக் காரணமான பின்பு கலாச்சார நடவடிக்கைகள் ஆரோக்யமாகவே இருந்திருக்கின்றன. முஸ்லிம் பெரும்பான்மை வங்காளிகளின் மேற்கு வங்காளமும் கலாச்சாரப் பிரிவினைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளன.

வங்கதேசத்தின் பிரபலமான எழுத்தாளர்கள் சம்சூர் ரஹ்மான், ஹிமாயுன் அகமத், தஸ்லிமா நஸ்ரின், செளகத் அலி, ரியாஜ் ரஹ்மான், அல் முகமது, நிர்முலெந்து கூன் ஆகியோரின் புத்தகங்களைக் கல்கத்தாவில் பெறுவது சிரமமாக இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தின் புத்தக சந்தைகளில், நியூ மார்க்கெட், நில்கத் பகுதி, டாக்கா நகரின் புத்தகக் கடைகளில் இந்திய வங்காள எழுத்தாளர்கள் சுனில் கங்கோபாத்யாய, சிர்சிந்து முகோபாத்யாய, சமரேஷ் மஜும்தார், புத்ததேவ் குக, சஜிப் சட்டோபாத்யாய ஆகியோரின் புத்தகங்கள் கிடைக்கின்றன என்கிறார்கள். டாக்கா சந்தையில் இந்திய வங்காள மொழிப் புத்தகங்களின் ‘பைரட்’ பிரதிகள் கிடைப்பதே அவற்றுக்கான வரவேற்பைச் சொல்வதாகப் பேச்சு அடிபட்டது.

இதேபோல் பாகிஸ்தான் எழுத்தாளர்களின் புத்தகங்கள் இந்தியாவில் கிடைப்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான் எழுத்தாளர்கள், பாகிஸ்தானில் வளர்ந்து பிற நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள், குழந்தை வயதிலேயே பாக்கிஸ்தானை விட்டு வெளியேறிய எழுத்தாளர்கள் என்று பலவகையான பாகிஸ்தான் எழுத்தாளர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வகைக்கு உதாரணமாக சிலர் தென்படுகிறார்கள். நடீம் அஸ்லாம் குழந்தைப் பருவத்தை பாகிஸ்தானில் கழித்தவர். அவரின் முதல் புத்தகம் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட்து. ஹனிப் குரோஸி பாகிஸ்தானில் வாழ்ந்தவரல்ல; தாரிக் அலி பாகிஸ்தானில் வாழ்ந்தவர். இங்கிலாந்தில் நெடும் காலம் வாழ்பவர்.

ஆங்கிலத்திலான பாகிஸ்தானி நாவல் என்பது மும்தாஜ் ஷான்னாவாஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது எனலாம். 36 வயது மும்தாஜ் ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். பாகிஸ்தான் பிரிவினை பற்றிய நாவலான கையெழுத்துப் பிரதியிலான அது அவரின் மறைவிற்குப் பிறகு 1950ல் அவரின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் ஆட்சிமொழியான உருதுவின் ஆட்சி நீடித்தது.சதாத் மாஸ்டோ, இண்டசார் ஹுசைன், அப்துல்லா ஹுசைன் போன்ற உருது எழுத்தாளர்கள் உலகப்புகழ் பெற்றனர். அஹ்மத் அலியின் டுவிலிட் இன் டில்லி 1911ம் ஆண்டின் தில்லியின் முஸ்லிம்கள் வாழும் பகுதியைப் பற்றியதாக இருந்தது. முஹல்களின் வீழ்ச்சியும், ஆங்கிலேயர்களின் வருகையும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது இங்கிலாந்து பதிப்பகம் ஒன்றால் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. அலி 1947ல் டெல்லியில் பிறந்தவர். பிறகு நாடு கடந்து பாகிஸ்தானில் வாழ்ந்தவர். 1980 வரை ஆங்கில நாவல்கள் இங்கிலாந்து, அமெரிக்கா எழுத்தாளர்களாலே எழுதப்பட்டன். பாகிஸ்தான் ஆங்கில நாவலான பாப்சிசித்வாவின் ‘தி குரோ ஈட்டர்ஸ்’ பாகிஸ்தானின் பார்ஸி இனமக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய ஆங்கில நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக விளங்கியது. 1997ல் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட 50 ஆண்டு பாகிஸ்தான் எழுத்தாளர்களின் ஆங்கில் எழுத்து முக்கியமானதாகும்.

"CONTEMPORARY SHORT STORIES IN BANGLADESH" தொகுப்பையும் இவ்வரிசையில் முக்கியமானதாகக் கொள்ளலாம்.