சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 9 ஜனவரி, 2023

பத்திரிக்கை செய்தி கல்வித்துறை சார்ந்த நூல்களை எழுதும் திருப்பூர் ந.குமரன் அவர்களுக்கு ” கனவு விருது” அளிக்கப்பட்டது.11/12/22 ஞாயிறு மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற விழாவில் அந்த விருதை வழக்கறிஞர், எழுத்தாளர் சாமக்கோடா ரவி அவர்கள் வழங்கினார், விழாவிற்கு மக்கள் மாமன்ற நிறுவனத் தலைவர் சி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ந.குமரன் அவர்களின் கல்வி சார்ந்த நூல்கள் பற்றி கல்வியாளர் முத்துபாரதி விரிவாக பேசினார். குழந்தைகளின் திருக்குறள் சார்ந்த உரைகளும் அவர்களுக்கு பாராட்டுகளும் அஜந்தா நாராயணசாமி வழங்கினார். கவிதை வாசிப்பும் புத்தக அறிமுகங்களும் நடைபெற்றன. கனவு விருதைப் பெற்றுக் கொண்ட ந. குமரன் அவர்கள் பேசும்போது சென்னையில் அவர் சில புலனாய்வு இதழ்களில் பணியாற்றிய அனுபவத்தையும் அரசியல் சூழல்களை புரிந்து கொண்டது பற்றியும் கல்வி நூல்கள் எழுதும் அனுபவத்தையும் அவற்றை மாணவர்கள் சரியாக படித்து பயன்பெற வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவரின் கல்வி நூல்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை முதற்கொண்டு கடன் வசதி வரைக்கும் எல்லா விவரங்களும் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல சுய முன்னேற்றத்துடன் மாணவர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் அவர் அந்த நூல்களில் தகவல்கள் தெரிவிக்கிறார். மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது ந. குமரன் அவர்களுடைய நூல்களாகும். நகுமரன் அவர்களின் கல்வி நூல்கள் பணியை பலர் பாராட்டிப் பேசினர். ஆசிரியைகள், மல்லிகா , மைதிலி மற்ரும் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன் ,.வின்செண்ட்ராஜ், ஆனந்தன், மாரிமுத்து, தங்கவேல், நாதன் ரகுநாதன் உட்பட பலர் உரையாற்றினர்
வாழ்த்துகிறேன். கோவை பூ சா கோ கலை கல்லூரியில் முதுநிலை கணிதம் படித்தேன். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணிதம் படித்தேன். மற்றும் அங்கு அந்த காலத்து பியூசி கூட திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தேன். உள்ளூர் கல்லூரி என்பதால் எப்போதும் அந்த கல்லூரி தமிழ் துறையுடன் தொடர்பில் இருப்பேன். சென்றாண்டில் கூட மாணவருக்காக வகுப்பெடுப்பதற்காக பலமுறை சென்றிருக்கிறேன். நல்ல அனுபவமாக அமைந்தது. . தமிழ் துறை சார்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆர்வம் எடுத்துக் கொண்டு பல நிகழ்ச்சிகளை சென்றாண்டு நடத்தினார்கள். அதில் தீபன் போன்ற உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கருத்தரங்குகள் பற்றிச் சொல்லலாம். . என் திருப்பூர் மையமான படைப்புகள் பற்றி ” திருப்பூரியம் “ என்றொரு கருத்தரங்கையும் அவர்கள் நடத்தினார்கள். நானும் அந்த மாணவர்களின் படைப்புகளை தொகுத்து மின்னூல் ஒன்றை ” கனவு” சார்பாக வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளின் போது நான் விஜயராஜ் அவர்களை சந்தித்து இருக்கிறேன். கவனித்திருக்கிறேன். அவர் இந்த கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துகிற போது ஆர்வத்துடன் பங்கு பெறுவார். சமூக ஊடக விஷயங்களில் அக்கறை கொண்டு தீவிரமாக இருப்பார். நவீன படைப்புகள் பற்றி அவ்வப்போது பேசுவார். இப்போது அவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த கவிதை தொகுப்பும் வெளியிடுகிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் ஈடுபாடும், அக்கறையும் பாராட்டும்படி இருக்கிறது., அவருடைய கவிதைகளில் குடும்ப உறவுகள், அவரைச் சுற்றியுள்ள உறவுகள், இயற்கை சார்ந்த விஷயங்கள் பற்றி எல்லாம் மிகவும் கவலைப்படுகிறார். எந்த சிக்கலும் இல்லாமல் எளிய மொழியில் அவற்றையெல்லாம் எழுதுகிறார். கவித்துவமாய் பல விஷயங்கள் அவர் மனதில் இருந்து கழிகின்றன. திருப்பூர் கல்லூரியில் படிக்கிற மாணவர்களில் பெரும்பகுதியினர் பகுதி நேர வேலையாக பின்னலாடைத் துறை சார்ந்த வேலையை செய்கிறார்கள். படிப்பு முடிந்த பின்னால் அவர்களுக்கு வேலை தேடுவது சிரமமாக இல்லை. அதில் தீவிர அக்கறை எடுத்துக் கொள்வதில்லை .அவர்கள் கற்ற பின்னலாடை தொழில் சார்ந்த மீண்டும் இயங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விஜயராஜ் அவர்களுக்கு பின்னலாடை துறை சார்ந்த வேலை அனுபவங்கள் இருந்தால் கூட, அவர் கல்வியும், மேல் படிப்பும் மிக முக்கியம் என்று கருதி பின்னலாடை துறை சார்ந்த வேலைகளை ஓரளவு புறந்தள்ளிவிட்டு மேல் படிப்பு சார்ந்து தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் பல இடையூறுகளை கண்டறிந்து அதில் இருந்து மீண்டு தொடர்ந்து வருகிறார். இந்த வகையில் பல மாணவர்களுக்கு நான் இதுவரை சொன்ன அறிவுரைகளில் பின்னலாடைத் துறைகளுக்குள்ளே மட்டும் இருந்து விடாதீர்கள். அது சாதாரண தொழிலாளி ஆக்கிவிடும். அதிலிருந்து மீள்வதற்காக வேறு படிப்பு முயற்சிகளும் வேறு வேலை முயற்சிகளும், படைப்பிலக்கியத்தில் அக்கறையும், வாசிப்பில் அக்கறையும் இருந்தால் வாழ்க்கை இன்னொரு புதிய திசை காட்டும் என்ற அறிவுரையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன். விஜயராஜ் அவர்களுடைய முயற்சிகள் அந்த வகையில் இருக்கிறது. தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இருந்து விடுவிக்கிறவை.அவை தன்னுடைய தனி தன்மையுடையதாகக் கருதுகிறார். அந்த வகையில் அவருடைய இந்த கவிதை தொகுப்பு முயற்சிகள் ஆரம்பகாலப் படிக்கட்டுகள் என்று சொல்லலாம். தீவிரமான வாசிப்பும், எழுத்து பயிற்சியும் அவரை கவிதை மட்டும் அல்ல, வேறு உரைநடை இலக்கியம் சார்ந்தும் நிறைய சாதனைகளை செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அந்த வகையில் அவருடைய இந்த கவிதை முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து அவர் சாதனைகளை புரிய இது ஒரு சிறு ஆரம்பமாக இருக்கிறது, அவரை வாழ்த்துகிறேன். சுப்ரபாரதி மணியன், திருப்பூர்
பத்திரிக்கை செய்தி “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் :: பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று ” இலங்கையில் போர்க்காலங்களில் பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. .ஈழத் தமிழர்களின் உயிர் காத்த வீடு பதுங்கு குழி என்று சொல்லலாம் . பதுங்கு குழிக்கு போவதற்கு முன்னால் எல்லோரையும் வா வா என்று அழைக்கபடியே ஓடுவோம் .அங்கு ,நாய் ,பூனை, ஆடு மாடு ,கோழிகளும் பதுங்கிக் கொள்ளும் ,மாடுகள் உள்ளே போக முடியாத நிலையில் பதுங்கு குழி வாசலில் தலைகளை மட்டும் உள்ளே விட்டவாறு கத்திக் கொண்டே இருக்கும் வீதிகள் , பாடசாலைகள் , சந்தைகள், மருத்துவமனைகள்,கோவில்கள் என்று பதுங்கு குழிகள் இல்லாத இடமே இருக்கவில்லை .விமான சத்தம் அருகில் கேட்டதும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கொண்டு கட்டிப்பிடித்துக் கொள்வோம் அந்தப் பதுங்கு குழிக்குள் .. விமானம் போய்விட்டது என்று சொன்னதன் பிறகு பிடிகளை தளர்த்திக் கொள்வோம் ..அதன் பின்னர்தான் யார் யாரை கட்டிப்பிடித்தார் என்று தெரியும் ..அந்த விமானத்தின் சத்தத்தில் அதிர்வில் ஆண் பெண் வயது வேறுபாடு இன்றி அவர்களுக்கு தெரியாமல் மலம் சலம் கழித்து இருப்பார்கள். ..விமானம் போனபின்பு நாற்றம் வருது , நாற்றம் வருது என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் எங்கிருந்து வருது என்று யாருக்கும் தெரியாது ,வெளியே வந்ததன் பின்தான் தெரியும், அவரவர் உடம்பிலிருந்து தான் நாற்றம் என்று . இந்த சூழலிலும் வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்ட பின்னர் எதை தள்ளி போட முடியும் என்ற சூழலில் போர் தாக்குதல்களும் மக்களுக்கு பழகிப் போகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு வேலைகளை செய்ய மக்களும் பழகிக் கொண்டார்கள் . இந்த பதுங்கு குழு வாழ்க்கையோடு தான் நாங்கள் எல்லாம் கல்வி கற்க வேண்டி இருந்தது .கல்வி மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் அவசியம்” கூட்டத்திற்கு மக்கள் மாமன்ற தலைவர் சி சுப்பிரமணியன் தலைமை வகித்தார் ..உடுமலை சார்ந்த தோழன் ராசா ,இயல் .கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் .இன்சூரன்ஸ் குமார் அவர்கள் கனவு விருதை உடுமலை இளைய பாரதி அவர்களுக்கு வழங்கினார் . . முன்னதாக நாதன் ரகுநாதன் , ஆனந்தன் , தங்கவேல் ஆகியோர் பங்கு பெற்ற வழக்காடு மன்றம் சிறப்பாக நடைபெற்றது “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் ::
திருப்பூர் சக்தி விருது 2023 இவ்வாண்டிற்கான பெண் எழுத்தாளர்கள் நூல்களுக்கான “சக்தி விருது”க்கு 2019ம் ஆண்டு முதல் வெளிவந்த எல்லாவகை நூல்களின் இரண்டு பிரதிகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கக் கடைசி தேதி : பிப்ரவரி 15 , 2023 முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம் சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் 641 604 ( 95008 17499 / 99940 79600 ) (வரவேற்கும்..திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் / திருப்பூர் மக்கள் மாமன்றம் / கனவு )
ஒரு பேட்டியை நேரடியாகக் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமல் இப்படியும் ஆரம்பிக்கலாம்.. 0 சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : தொகுப்பில் சிங்கப்பூர் நகரம் மெல்ல இருட்ட துவங்குகிறது. தெருக்களில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வாகனங்கள் விரைவாகச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒழுங்கமைப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த உணவு விடுதிக்கு வந்து விடுமாறு திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தகவல் தெரிவித்து இருந்தார். நண்பர் ரெ. பாண்டியன் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணில். ரெ.பாண்டியன் அவர்கள் என்னுடன் வர முடியாத சூழலில் இருந்தார். அவர் அந்த உணவு விடுதிக்கு செல்வதற்கான பேருந்து அடையாளத்தையும் வழியையும் சொல்லித் தந்தார் .வழியை விசாரித்து பக்கத்தில் இருந்த ஒரு மலர் கடையை பார்த்தபடி அந்த உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நா. முத்துசாமி அவர்களின் கூத்து பட்டறை நாடகம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி அவர்களும் அரவிந்தன் அவர்களும் வந்திருந்தார்கள் சிங்கப்பூரின் புகழ் பெற்ற நாடகவியலாளர் இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தமிழ் முரசுக்கு பேட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். உணவு விடுதியில் வெளியில் போடப்பட்டிருந்த மேசைகளை பார்த்துக் கொண்டு அவற்றின் ஒழுங்கமைப்பை ரசித்துக்கொண்டு அந்த இடத்தின் உள்ளே நுழைகிறேன். உயரமான சுவர்கள், அதன் கூரை எல்லாவற்றையும் உட்கொண்டது போல் அமைதியாக இருந்தது. பச்சை நிற சட்டையும் நீல நிற பேண்டும் சிவப்பு நிற டையும் அணிந்த அந்த உணவு விடுதியின் பணியாளர்கள் என்னை வரவேற்றார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்து அங்கிருந்து நாற்காலி ஒன்றில் உட்கார ஆசைப்பட்டேன். அந்த நாற்காலி நல்ல அழுத்தமான மர வர்ணத்தை பூச்சாகக் கொண்டிருந்தது. அதிலிருந்த மூன்று சின்ன சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. கனிமொழி அவர்கள் உள்பகுதியில் இருந்து வந்து என்னை வரவேற்றார். அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட போது மிகவும் சவுரியமாக உணர்ந்து அடுத்த பக்கம் இருக்கும் சாலையைப் பார்க்க சில வாகனங்கள் கண்களில் பட்டன. சிறு பொம்மை போல பல கார்கள் விரைந்து போனது. பல வாகனங்களின் இரைச்சலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது அதனால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று இன்னொரு பகுதிக்கு சென்ற போது சாலை நடமாட்டம் எனச் செல்லும் வாகனங்கள் இல்லாமல் சவுரியமாக இருந்தது. தமிழ் முரசு பத்திரிக்கை நிறுவனம் பற்றியும் தமிழ் முரசு பத்திரிக்கை சிங்கப்பூர் தமிழர்கள் வாழ்க்கையில் எப்படி முக்கியமான ஒரு பத்திரிக்கையாக, செய்தி ஊடகமாக இருக்கிறது என்பதையும் அவர் சொன்னார். அந்த பத்திரிகை பணி தனக்கு எப்படி பிடித்து இருக்கிறது என்று சொன்னார். வழங்கப்பட்ட தேநீருக்கு சர்க்கரை கட்டிகளை எடுத்து போட்டுக் கொண்டேன். ஆனால் இனிப்பு சுவை போதவில்லை அதே அளவு தான் கனிமொழி அவர்களும் சக்கரைக்கட்டிகளை போட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அந்த இனிப்பு சரியாக இருந்திருக்க வேண்டும். நான் மீண்டும் ஒரு சக்கரைக்கட்டியைப் போட்டுக் கொண்டேன். அவர் அதை பார்த்து தேநீர் சுவையாக இருக்கிறது அல்லவா என்றார். நான் இப்போது இன்னொரு சக்கரைக்கட்டையை போட்டுக் கொண்டதால் சுவை வந்து விட்டதால் ஆம் என்றேன். ( முன்பொரு முறை திருப்பூர் காலச்சுவடு நிகழ்ச்சியொன்றுக்கு வந்த போது இரவு உணவை கட்சிக்காரர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் உணவை வெகு அளவோடு எடுத்துக் கொண்டதையும் தேநீருக்காக சர்க்கரையை வெகுக் குறைவாகப் பயன்படுத்தியதும் கூட நினைவில் இருந்தது ) எங்கள் நேர்காணல் தொடங்கியது
சுப்ரபாரதி மணியன் நேர்காணல் கேள்விகள் மிலோ ராட் பாவிச் அவர்களுக்கானது... ( செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு இப்படி பதில் சொல்லி இருக்கிறேன் ) * உங்களுடைய செயல்கள், எதிர்வினைகள் எல்லாம் ஒரு குழந்தையினுடையது போலவே இருந்தன என்பதை கவனித்திருக்கிறேன் மிக முக்கியமான எழுத்தாளர் நீங்கள் என்ற உணர்வையே அவை தரவில்லை உண்மைதான் நான் பெரும்பாலும் சாமானிய மனிதனாகவே இருக்கவும், வழி காட்டவும் விரும்புகிறேன் அப்படித்தான் நான் குழந்தைகளுடன் கூட பழகுகிறேன். எங்கள் வீதியில் உள்ள குழந்தைகளை என் வீட்டிற்கு வாரம் ஒரு முறை அழைத்து கதை சொல்லவும், ,ஓவியங்கள் வரையவும், சிற்றுண்டி சாப்பிடவும் என்று இப்பொழுது பொழுதைக் கழிப்பது உட்பட பலவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னை மறப்பதற்கு வேறு ஒரு உலகத்தை காட்டுவதற்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் அப்படியே தான் நானும் இருக்க விரும்புகிறேன். * நீங்கள் ஏற்கனவே எழுதிய புத்தகங்கள் நீங்கள் மேலும் தொடர்ந்து எழுவதை தடுக்கின்றனவா அப்படி என்றும் ஒன்றும் இல்லை. ஆனால் பழைய புத்தகத்திலிருந்து மீண்டு நான் வெளிவர விரும்புகிறேன் திருப்பூரை பற்றி எழுதுகிற போது என் பழைய புத்தகங்கள் எப்படியோ இடைசஞ்சல்கள் ஆகி விடுகின்றன அவற்றை தான் தவிர்க்கவே விரும்புகிறேன் அவை என்னை தொடர்ந்து வருகின்றன. எழுதத் தடுப்பதில்லை ஆனால் வேறு களத்திற்கு போக தூண்டுகிறது * ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமும் முடிவும் இருக்கும்போது செவ்வியில் வழக்கில் உள்ள தொடக்கம் மற்றும் முடிவு பற்றிய கருத்தாக்கத்தை ஒடுக்குகிறோமோ, கைவிடுகிறோமா எல்லா படைப்புக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமோ முடிவோ இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்க வேண்டும் அது எப்படி முடிய வேண்டும் என்பதற்கான சுதந்திரங்கள் அந்த படைப்பு மையத்தில் தான் இருக்கின்றது *ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரே முடிவு தான் சாத்தியம் என நம்புகிறீர்களா? அப்படி எதுவும் இல்லை தொடங்கும் போது நான் வேறொரு மனிதன். முடிக்கும் போது வேறொரு மனிதனாக இருக்கிறபோது எப்படி ஒரே முடிவு சாதகமானதாக இருக்கும் . * இருப்பினும் சொல்கிறோம் பிறப்பிலிருந்து தொடங்கும் எதுவும் மரணத்தில் முடிகிறது என்று. ஆமாம் எல்லாம் பிறப்பிலிருந்து தொடங்கி மரணத்தில் முடிகிறதா ஒரு வழிப்பாதை தான் ஆனால் அதையே நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மரணம் இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தான் நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. • நம் வாழ்வின் கசப்பான நிதர்சனங்களை ஏற்று போராடும் ஆயுதமாக பேண்டஸியை கூறலாமா பேண்டஸி என்பது ஒருவகை தப்பித்தல் தான். அப்படியும் கூறிக் கொள்ளலாம் * உங்கள் பார்வையில் ஒருவர் உன்னதத்தை அடைய எந்த உண்மையை நோக்கி பயணப்பட வேண்டும் எதார்த்தமாக இருப்பது ,மனசாட்சியுடன் இருப்பது, உணர்வுடன் இருப்பது ஆகியவை உண்மையை நோக்கிய பயணத்தில் சரியாக இருக்கும். * பயம் நம்மை படைப்பாற்றலை நோக்கி இட்டு செல்கிறதா பதட்டம் இட்டு செல்கிறது என்று சொல்லலாம். பதட்டம் பயத்தை கொண்டு வந்து விடுகிறது. அதனால் பயமோ பதட்டமோ நிலை கொள்ளாமையும் படைப்பாற்றலை நோக்கி நகர்த்துகிறது என்று சொல்லலாம் * உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் பயம் ஏதாவது இருக்கிறதா நம்மை பற்றி ஏதாவது அவதூறுகள் வந்து விடுமோ. அப்படி நம்முடைய செயலும் சொல்லோ அமைந்து விடக்கூடாது என்ற பயம் தான் • நீங்கள் வியந்த முதல் எழுத்தாளரை உங்களுக்கு நினைவு இருக்கிறதா • நான் பார்த்து உயர்ந்த முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவருடைய உருவம், மேடையில் அவர் பேசுகிற தோரணை இதுதான் அவரை நினைக்க வைத்தது * உங்கள் எழுத்து நடைக்கு இந்த வாய்வழி பாரம்பரியம் எந்த அளவுக்கு முக்கியமாக அமைந்தது பெரும்பாலும் வாய்வழி பாரம்பரியம் மற்றும் சொல்லாடல்களில் பாரம்பரியம் என்பது என்னை பொறுத்தவரையில் பலவீனமாக தான் இருக்கிறது. என் கொங்கு பகுதி பேச்சையே நான் ஒழுங்காக உருவாக்கிக் கொண்டு பதிவு செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன் * உங்களைத் தூங்க வைக்கும் அளவிற்கு எழுதும் எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா இருக்கிறார்கள். வாக்கியங்கள் புரியாமல் அவற்றின் ஒருங்கிணைப்பு ஒரு அர்த்தத்திற்கு கொண்டு செல்லாமல் எழுதும் நவீன எழுத்தாளர்களை வாசிக்க முயன்று அப்படித்தான் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறேன். *ஒரு எழுத்து பிரதி எப்போது ஒரு வாசகனை அலுப்படையச் செய்கிறது வாசகன் அந்த எழுத்தாளருடைய பிரதி சார்ந்த அனுபவங்களை எப்போது தானும் கண்டிருக்க வேண்டும் அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டும் அல்லது அந்த தளத்தில் அவன் சென்று இயங்குவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் அப்படி இருக்கிற போது பிரதி வாசகனை அலுப்படைய வைக்காது. * அழகை பார்த்து எப்போதாவது அலுப்படைந்திருக்கிறீர்களா? இல்லை. அழகு என்பது புத்துணர்ச்சி ஊட்டுவது. அது ரசித்து மறந்து போவதல்ல. திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டிருப்பது * நீங்கள் எழுதும் போது வாசகனைப் பற்றி நினைப்பதுண்டா நிச்சயமாக இல்லை. என் எழுத்தில் என் அனுபவங்களும் உரையும் மொழியும் தான் முதன்மை படுகிறது. யாரை நோக்கி எழுதப்படுகிறது என்பதல்ல. * ஒருவர் எந்த காரியம் செய்தாலும் அதில் அவரை சிறப்பானவராக எது ஆக்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கிறீர்களா? தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது மனசாட்சியுடன் இருப்பது உணர்வு ரீதியாக இயங்குவது இதுதான் சிறப்பாக்கும் என்று நினைக்கிறேன் • உங்கள் தேசத்தை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பல நாடுகளை சுற்றி பார்த்தவன் என்ற முறையில் நம் நாடும் மிக உயர்ந்த நாடுதான் இயற்கை வளமும் அழவும் கொண்டது தான். ஆனால ஊழலும் அதிகாரமும் பல்வேறு தளங்களில் செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது இதெல்லாம் இல்லாமல் நியாயமான வாழ்க்கையோடு கூடிய அணுகு முறையில் நம் நாட்டைப் போல அழகான நாடு வேறு இல்லை என்று தான் நினைக்கிறேன் • ஒரு பெரும் எழுத்தாளர் பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் • எழுத்தாளன் சூழலால் உருவாக்கப்படுகிறாள் அவன் பிறப்பதாக இருந்தால் அவன் யாரிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று தெரியவில்லை * ஒருவர் உங்களுடைய நாவல்களை படிக்கும்போது அவை ஒழுங்கமைக்கப்பட்ட மனம் கொண்ட ஒரு கணிதவியலாளரின் படைப்புகள் போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றதே இருக்கலாம். காரணம் நான் அடிப்படையில் ஒரு கணிதவியல் மாணவன். முதுகலை கணிதம் படித்தவன். ஆகவே அப்படி ஒரு தோற்றம் வந்துவிடலாம். * பொதுவாக ஒரு எழுத்தாளர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் அவருடைய கடமை என்ன. உலகின் நிலவும் குழப்பங்களுக்கு ஒரு ஒழுங்கமைப்பை எந்த வகையிலும் அவர் பங்களிக்கிறாரா எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் மனசாட்சியாக எழுதுகிறார். அதன் மூலமாக நல்ல சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். சமூகத்தில் இருக்கிற ஒழுங்கமைப்பு என்பதில் அவர் அக்கறை கொண்டு செயல்படுகிறார். அந்த வகையில் தான் அவரை எழுத்தின் பயன்பாடு இருக்கிறது. * ஒரு நாவலை எழுதி முடிக்கு முன்பே அந்த நாவலைத் தொடர வேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா அப்படி பல சமயங்களில் அலுப்பு ஏற்பட்டிருக்கிறது ஆனால் அதை முடிப்பதில் தான் சவால் இருக்கிறது என்று தொடர் வேண்டி இருக்கிறது * கனவுகள் காண இயலாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா அப்படி என்றால் வாழ்க்கை இல்லாமல் தான் போகும். கனவு என்பது ஓரிரு விஷயங்கள் பற்றிய ஆசையாக இருக்கிறது ஆனால் நிஜமான கனவாக தூக்கத்தில் வந்து போகவே இந்த அர்த்தத்தில் இருப்பதில்லை • கனவு காணுதல் வாழ்க்கைக்கு அவசியமா தேவை • தேக்கத்திலிருந்து விடுபட கனவுகள் காண்பது தேவையாக இருக்கிறது அல்லது கனவில் இருந்து ஓடுவது தேவையாக இருக்கிறது. கனவில் இருந்து இன்னொரு கனவுக்கு ஓடுவது. பிறகு நிஜத்திற்கும். • நமது இருப்பின் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா • நம் இருப்பின் காரணம் இயற்கையாகவே நாம் பிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்பதால் தான். அந்த இருப்பை நியாயப்படுத்த நாம் ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில் நாம் எதுவும் செய்கிறோம். நான் கொஞ்சம் எழுதுகிறேன். * உங்களுடைய பார்வையில் ஒரு மாபெரும் எழுத்து என்பது ஒரு மாபெரும் ஆன்மாவால் அல்லது ஒரு மாபெரும் மனத்தால் மட்டுமே எழுதப்படக்கூடியதா அப்படி மாபெரும் ஆன்மா, மாபெரும் மனிதன் என்று எதுவுமே இல்லை. நியாயத்துடன் எதார்த்தத்துடன் அவன் பதிவு விட போது அது மாபெரும் எழுத்தாக அமைந்து விடுகிறது * உங்கள் கூற்றின்படி ஒரு திறமையான எழுத்தாளரின் படைப்பை படித்து புரிந்து கொள்ள ஒரு வாசகன் திறமை மிக்கவனாக இருக்க வேண்டுமா ஆமாம் திறமை என்பது வாசிப்பு திறமை தான். வேறு மொழி சார்ந்த அல்லது அறிவு சார்ந்த திறமை என்று எதுவும் தேவையில்லை . * திறமை என்பதை நீங்கள் வரையறுத்துக் கூற முடியுமா. அதன் அளவுகோல் என்னவென்று நான் சொன்னது போல வாசிப்பும் தொடர்ந்து வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருப்பதும் அறிவு சார்ந்த தேடல்களும் என்று இந்த அளவுகோல்களை கொள்ளலாம் * எடுத்துருவில் வாசிப்போரா அல்லது செவி வழி கேட்க விரும்புவோரா யாரை நோக்கி உங்கள் படைப்புகளை செலுத்துகிறீர்கள் எழுத்தாளர் என்ற வகையில் என் எழுத்துக்களை வாசிப்பவரை நான் விரும்புகிறேன். ஆனால் செவி வழியாக தரும்போது அதை இன்னும் சரியான பதிவாக மனதில் இருந்து கொள்ளும். * ஒரு பெரும் கிரேக்க எழுத்தாளர் ஒருமுறை சொன்னார் நான் எனது கதையின் முடிவை கண்டறிய வேண்டும் அது நடந்து விட்டால் மற்றவை தாமாகவே ஒழுங்கமைந்து விடும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை நான் கதையை முடிவு கண்டடையாமல் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். சூழலும் அறிவும் நீள்கிற சம்பவங்களும் சுற்றி இருப்பவையும் என்னை முடிவை கண்டறிய வைக்கின்றன * நீங்கள் நாவல் எழுதும்போது முந்தைய நாள் நிறுத்தி இடத்திலிருந்து தான் துவங்குவீர்களா. ஆமாம் அப்படித்தான் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வேறு ஒரு இடத்தில இருந்து ஆரம்பித்து கொண்டு போய் எழுதுவது அதை வேறொரு வடிவ நாவலாக மாற்றலாம் ஆனால் அதற்கான வாசல்கள் எனக்கு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன் * ஒரு புத்தகம் சுவாசிக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அது எழுதுபவன் அனுபவிப்போடு செய்திருக்கலாம். ஆனால் வாசகன் அதை எப்படியோ படித்து முடிகிறபோது ஒரு புத்தகம் இயல்பாக இருக்கிறது உயிரோடு இருக்கிறது சுவாசிக்கிறது என்று சொல்லலாம். * திறமையற்ற வாசகர்கள் படிக்கும் போது ஒரு மாபெரும் எழுத்தாளர் காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளதா இருக்கிறது. திறமையற்ற வாசகர் அதை புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும் போது அவன் வாசிப்பதில் அர்த்தமில்லை * இந்த புதிய தலைமுறை எந்த வகையில் வேறுபட்டது விதவிதமான எழுத்துக்களைத் தருகிறார்கள். வெவ்வேறு வகையான துறை சார்ந்த எழுத்துக்கள் வருகின்றன மலைக்க வைக்கும், பிரமிக்க வைக்கும் அனுபவங்களை எல்லாம் கொண்டு எழுதி இருக்கிறார்கள். * தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் வளர்ச்சியும் புத்தகங்களின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளதா அப்படித்தான் சொல்லலாம் ஆனால் புத்தகங்கள் வீழ்ச்சி அடையவில்லை என்று திரும்பத் திரும்ப நாம் உரத்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் நாம் புத்தகங்கள் மத்தியில் இருக்கிறோம். அவற்றின் மத்தியில் இருந்து கொண்டு அவற்றை நாம் பழிக்க முடியாது. * உங்களுக்கு தீர்வு கிடைத்ததா என் படைப்பு தீர்வை நோக்கி நகர்கிறது. தீர்வை சமூகம் வழங்குகிறது அல்லது அரசியல்வாதி வழங்குகிறார் அரசியல்வாதி வழங்க நெடுங்காலம் தான் எடுத்துக் கொள்கிறது . * தற்போது உருமாற்றம் அடைந்து வரும் கலை வடிவங்கள் எவை கலை வடிவங்கள் தன்னைத்தானே மீறுவதும் உருமாற்றம் அடைவதும் சாதாரணம்தான்.. இலக்கியம் முதல் திரைப்படம் வரைக்கும் எல்லாம் வடிவளவில் உருமாற்றங்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. தொடர்ந்து அவை தங்களுடைய வடிவங்களை மாற்றிக் கொள்ளும் ( உன்னதம் ஜூலை 2017 இல் வெளிவந்த செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் சிறப்பதழில் அவருக்கு தொடுக்கப்பட்ட கேள்விகளை வைத்துக்கொண்டு நான் பதில் கொடுத்திருக்கிறேன்)
பேட்டி தொகுப்புரை: பொன். குமார் அன்புள்ளங்களுக்கு வணக்கம்! எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் இலக்கிய உலகில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எண்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர் . கனவு என்னும் சிற்றிதழை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பவர். தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு படைப்புகள் மூலம் குரல் எழுப்பி வருபவர். சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும் என்பதிலும் பெருமுனைப்பு கொண்டவர். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர். சுப்ரபாரதி மணியன் தன் இலக்கியப் பயண காலத்தில் பல்வேறு நேர்காணல்களைச் சந்தித்துள்ளார். பேட்டிகள் தந்துள்ளார். அவரின் நேர்காணல்கள்/ பேட்டிகள் இங்கு முதன்முறையாக ' புலி வாலை பிடித்த கதைகள்' என்னும் தலைப்பில் தொகுக்கப்படுகின்றன. எழுத்தாளரின் முதல் நேர்காணலை எடுத்தவர் கனிமொழி கருணாநிதி. சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழுக்கான நேர்காணல் இது. சிறியதாயிருந்தாலும் சிறப்பான நேர்காணல். கனவு இதழ் குறித்தே மூன்று கேள்விகள். கனவு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, கனவு எந்தளவு வெற்றிப் பெற்றது, கனவை எந்த திசையில் கொண்டு செல்லப்படுகிறது என கனவு இதழ் குறித்த பதில்களில் கனவு இதழ் மீதான அவரின் ஆர்வமும் இலட்சியமும் வெளிப்படுகிறது. கனவு இதழுக்காக தொடர்ந்து சந்திக்கும் பொருளாதார இழப்பை ஒருவித மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஒரு தனி மனிதராக கனவு இதழைத் தொடர்ந்து நடத்தி வருவது அவரின் இலட்சியப் பிடிப்பைக் காட்டுகிறது. ' எழுத்தாளனுக்கென்று தனியாக சமூகக் கடமை என்றிருக்கிறதா?' என்றொரு கேள்வியை எழுப்பியுள்ளது புதுப்புனல். இது சுப்ரபாரதி மணியனுக்கான கேள்வி மட்டுமல்ல. எல்லா எழுத்தாளருக்குமானது. இதற்கான பதிலை மிக விரிவாகக் கூறியுள்ளார். " ஒற்றைக் குரலாகத்தான் எழுத்தாளனின் படைப்பை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒற்றைக் குரல் இல்லை. பல ஆண்டுகளாக சமூகம் பற்றின அவதானிப்பின் ஒட்டு மொத்தமான அனுபவக் குரல் தனிப்பட்ட உணர்ச்சி என்ற வகையில் அது தென்பட்டாலும் வாசகன் தன்னை அதில் உணர்ந்து கொள்வதில் ஒற்றைக் குரலின் வீச்சும், தீவிரமும் தெரிந்து கொள்கிறான். ஆனால் குரல் கொடுக்க முடியாதவர்களின் குரலாக அவன் வெளிப்படுகிறான் என்பது இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் உண்மையானது. இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது " என பதிலளித்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமையை உணர்த்தியுள்ளார். இது அனைத்து எழுத்தாளர்களின் குரலாக ஒலித்துள்ளது. கோடுகள் இதழிலான நேர்காணல் மிக நீளமானது. மற்றும் விரிவானது. ஓர் எழுத்தாளர் என்பதையும், இலக்கியம் என்பதையும் தாண்டி கேட்கப்பட்ட ஒரு கேள்வி" சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது எதற்காக?". இட ஒதுக்கீட்டை ஓர் அம்சம் என்று குறிப்பிட்டவர் இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பதற்கான ஒரு அளவுகோல் தான் என சரியான பதில் தந்து சமூக நீதி குறித்து தன் பார்வையை தீர்க்கமாக தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நாவல்களில் பெரும்பாலும் திருப்பூர் களமாக இருக்கும். திருப்பூர் மக்கள் பாத்திங்களாக இருப்பர். இது குறித்து ஒரு கேள்வியை பேசும் புதிய சக்தி எஸ். செந்தில்குமார் எழுப்பியதற்கு சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதும் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதுமே காரணம் என்கிறார். படைப்புகள் மூலம் பேசப்பட்டதாலே ஓரளவு வெற்றியும் கிட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்கள் கொள்கையில் கடை பிடித்தல், மனித உரிமை பிரச்சனைகளாக மாறியது, நலத்திட்டங்கள் உருவானவை ஆகியவை படைப்பின் மூலம் கிடைத்த வெற்றி என்கிறார். இனிய உதயம் இதழுக்காக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனை நேர்கண்டவர் பொன். குமார். ' ஒரு படைப்பாளியின் இலட்சியம் விருது பெறுவதா? மக்களிடம் கொண்டு படைப்புகளை சேர்ப்பதா?' என்னும் கேள்விக்கு ' வாசகனிடம் படைப்புகள் கொண்டு சேர்ப்பதில் தான் படைப்பாளியின் லட்சியம் இருக்க வேண்டும்' என்று ஒரு தெளிவான பதிலைக் கூறியுள்ளார். ஒரு படைப்பாளியின் இலட்சியம் என்ன என்பதை, எதுவாக இருக்க வேண்டும் என்பதை படைப்பாளர்களுக்கு உணர்த்தியுள்ளார். இலக்கியம் சோறு போடுமா என்றொரு கேள்வி எல்லோரிடமும் உண்டு. இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலருக்கே இலக்கியம் சோறு போடுகிறது. இதை கருத்தில் கொண்டு அம்ருதா இதழுக்காக நேர்கண்ட பாலு சத்யா தொடுத்த வினாவிற்கு " வணிக எழுத்தை மட்டும் நம்பி வாழலாம். பரபரப்பான மலின ரசனையுடன் செய்யப்படும் விசயங்கள் விற்பனையாகும். தீவிர எழுத்து சோறு போடாது. புலி வாலை பிடித்த கதைதான். நிராகரிப்பின் வலியும் தீவிரமாய் எழுதுகிறவனை மனநோயாளிக்கும்" என தீவிரமாய் எழுதும் எழுத்தாளனின் நிலையைத் தெரிவித்துள்ளார். வணிக எழுத்தே சோறு போடும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளார். தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் புலி வாலை பிடித்தவர்கள் என்று தானும் புலி வாலை பிடித்த ஓர் எழுத்தாளரே என்கிறார். ஓர் எழுத்தாளனின் மன அழுத்தங்களை, மன உணர்வுகளை, மன வலிகளை, கடந்து வந்த கடும்பாதைகளை வெளிப்படுத்த நேர்காணல்கள் ஒரு நல்ல வாய்ப்பு. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் தான் எதிர்கொண்ட கேள்விகளை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தன்னையும் தன் வாழ்வையும் தன் படைப்புகள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். ஓர் எழுத்தாளன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்த முடியாததை, எழுத்தில் சொல்ல முடியாததை நேர்காணல்கள் கொண்டு வருகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் படைப்புலகம் தாண்டி அவரின் வாழ்வுலகத்தைக் காட்டுகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் நேர்காணல்கள் என்பவை படைப்புக்கு சமம் என்கிறார். இத்தொகுப்பிற்கு மிக பொருத்தமாக ” புலி வாலை பிடித்த கதைகள்” என தலைப்பிட்டுள்ளார். ஒரு நிராகரிப்பின் வலி தெரிகிறது. அனைத்து நேர்காணல்களையும் வாசிக்கும் போது எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் வாழ்வைக் கூறும் ஒரு படைப்பாகவே உள்ளன. விருதுகளுக்காக படைக்காமல் சமூகத்திற்காக படைத்திடும் சுப்ரபாரதி மணியனுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். அ. மார்க்ஸ் நேர்காணல்கள், த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், ஆ. சிவசுப்ரமணியன் நேர்காணல்கள், அ. முத்துலிங்கம் நேர்காணல்கள், ச. தமிழ்ச் செல்வன் நேர்காணல்கள், அ. ராமசாமி நேர்காணல்கள், மாலன் நேர்காணல்கள், எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், நாஞ்சில் நாடன் நேர்காணல்கள், சாரு நிவேதா நேர்காணல்கள், அப்பணசாமி நேர்காணல்கள், பாவண்ணன் நேர்காணல்கள், ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள், ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள், அழகிய பெரியவன் நேர்காணல்கள், சுரேஷ் குமார் இந்திர ஜித் நேர்காணல்கள், ஷோபா சக்தி நேர்காணல்கள், சேரன் நேர்காணல்கள், புகழேந்தி நேர்காணல்கள் என வாழும் படைப்பாளிகளின் நேர்காணல்கள் பல வந்துள்ளன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் புலி வாலை பிடித்த கதைகள் என்னும் இந்நேர்காணல்கள் தொகுப்பு மிக தாமதமாகவே வருகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நேர்காணல்களை தொகுத்து ஒரு தொகுப்பாக்கி வழங்க ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார். பெருமையாக இருக்கிறது. அதற்காக அவருக்கு என் நன்றி. பதிப்பகத்திற்கும் வாசித்து விமர்சிக்கும் தங்களுக்கும் நன்றி. என்றும் அன்புடன் பொன். குமார் 21 /15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு சேலம் 636006 9003344742 Kaavya books rs 120
முதல் பேட்டி / சுப்ரபாரதி மணியன் . குழந்தைத் தொழில் எதிர்ப்பு சம்பந்தமாக ஒரு உலகப்பயணத்தை நோபல் பரிசு பெற்ற டெல்லி வாழ் சமூகப்போராளி கைலாஷ் சத்யார்த்தி அவர்களும், திண்டுக்கல் பால்பஸ்கரும் ஏற்பாடு செய்த போது என்னையும் இணைத்துக் கொண்டார்கள். அதற்காய் வெகு சிரமப்பட்டு நான் பணிபுரிந்து வந்தத் தொலைத்தொடர்புத்துறையில் அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் அப்பயணம் அமையாததால் சிங்கப்பூர் சென்றேன். என் முதல் பேட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழ் முரசு பத்திரிகைக்காக சிங்கப்பூரில் எடுத்த பேட்டி தான். அப்போது நான் சிங்கப்பூர் உலக புத்தக கண்காட்சிச் சென்றிருந்தேன். ரெ. பாண்டியன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். ‘ கனிமொழி கருணாநிதி அவர்களின் நேர்காணலின் சூழல் விவரிக்கப்பட்டிருப்பது விசேசமாக அமைந்தது. செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு பதில் சொல்லி இருக்கிறேன் ஒரு பகுதியில்
உயிர்மை பதிப்பகம் வெளியீடு ” திசையொன்று.. ” நாவல் அனுபவம் - சுப்ரபாரதி மணியன் நான் பயணிப்பதில் ஆர்வம் கொண்டவன். அவற்றை பதிவு செய்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டவன் குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஜெர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றது என்னுடைய முதல் வெளிநாட்டு பயணமாக அமைந்தது. அதன் பின்னால் சுமார் 20 நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி இருக்கிறேன். பல நூல் வடிவம் பெற்று இருக்கின்றன அந்த வகையில் சென்றாண்டின் மத்தியில் ஜோடான் பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து நாடுகளுக்கு சென்று வந்ததை கூட ஒரு நூலாக்கி இருக்கிறேன். பயணங்கள் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆசுவாசம் கொள்ளச் செய்கின்றன அந்த வகையில் தான் சமீபத்தில் நான் சென்று வந்ததில் கேரளா அட்டப்பாடியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஹம்பி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இது போன்ற ஒரு பயணம் மூணார் சென்றிருந்தபோது கிடைத்த அனுபவங்களை ஒரு நாவலாக இதில் பதிவு செய்திருக்கிறேன். பயண அனுபவங்களை நாவலாக்கிற முதல் முயற்சியாக நான் இதை செய்திருக்கிறேன் மூணாறுக்கு பல நண்பர்களுடன் சென்றேன், தம்பதிகள் ஆண்கள், பெண்கள் தனியாக வந்தவர்கள் உட்பட ஒரு திருநங்கை கூட எங்களுடைய குழுவில் இருந்தார். அந்த பயண அனுபவத்தில் மூணாறில் தங்கிய அனுபவங்கள், சக பயணிகளுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள் இவைதான் இந்த நாவலின் மையமாக இருக்கிறது, முக்கியமாக ஒரு தம்பதிய,ர் ஆனால் கணவருக்கு சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லை, குழந்தை இல்லை என்பதால் அவரின் மனைவியிடம் இருந்து பிரிந்து இருக்கிறார் இருவரும் இந்த பயணத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள் ஆனால் அந்த பயணம் ஒன்றும் அவர்களை சேர்த்து விடவில்லை, அதில் அவன் தவித்துப் போகிறார் இந்த நிலையில் இருந்து தன்னை ஏதாவது விடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், இந்த யதார்த்த தளத்தில் இருந்து வேறு நிலைக்குப் பயணப்பட்டு இருக்கிற உயர் நிலைகளை பற்றியும் தெரிந்து கொள்கிறார். வழக்கமான இயந்திரத்தனமான வாழ்க்கை மீறி உழைப்பு மட்டுமே உதவி செய்யும் என்று நம்புகிற ஒரு உலகம். இயற்கையை நேசித்து இயறகை உணவுடன் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு முகாமிடம் என்பது போல சில லட்சிய இடங்களும் அவரின் அனுபவங்கள் என வந்து விடுகின்றன. கதாபாத்திரங்கள் என்று சொன்னால் கூட வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் இளைஞர்கள், இளைஞிகள், தம்பதியர்கள் வெவ்வேறு வேலைகளில் இருந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பணியாளரகள் என்று இவர்கள் உலகத்துக்குள் இருக்கிற மனித உறவுகளைப் பற்றி இதில் விரிவாகவே பேசி இருக்கிறேன். தீங்கொன்று இருக்கிறபோது அதற்கு விடிவென்று இருக்கும் அல்லவா. அப்படித்தான் இந்த இறுதியில் நடைபெறுகிற ஒரு விபத்து கூட அதனுடைய அடையாளமாக இருக்கிறது பயணங்கள் எப்போதும் நம்மை ஆசுவாசப்படித்துக் கொள்ளும் வாழ்க்கையை உயர்வு கோணத்தில் பார்க்கச் செய்யும். அப்படி ஒரு திசையில் நான் பயணித்த சின்ன அனுபவம் தான் இந்த திசையொன்று என்ற இந்த நாவல். இந்த நாவலில் வரக்கூடிய இளம் பெண்கள் முகநூலிலும் சமூக ஊடங்களிலும் திளைக்கிறார்கள் .வயதானவர்கள் தங்கள் காலத்தை கடத்துவதை சுவையாக எண்ணுகிறார்கள். அதற்கு இந்த பயணம் சிலருக்கு பயன்படுகிறது. யார் யாரையோ தேடி யாரோ அலைகிறார்கள். அப்படியும் சில கதாபாத்திரங்கள். தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிற போது போதை பழக்கத்திற்கு ஆளாகிற ஒரு இளைஞனும் அவனை பாதுகாக்கிற அவன் தந்தையும இவர்களோடு இருக்கிறார்கள் நான் நான்கு ஐந்து நாட்கள் பயணித்த பயணத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறேன் திசை எட்டு மட்டுமல்ல., பதினாறு மட்டுமல்ல, இன்னும் பல திசைகள் உள்ளன, அதில் ஒரு திசையை இந்த நாவல் காட்டியிருக்கிறது சுப்ரபாரதி மணியன் ( ரூ 180, உயிர்மை பதிப்பகம் வெளியீடு , சென்னை 0
Tamil hindu article பாலியல் சமத்துவம் / இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்.. சுப்ரபாரதிமணியன் நான் வசிக்கும் வீதியில் உள்ள அரசு அலுவலக பெண்மணி ஒருவர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றில் பொருட்களை வாங்கிக் குவித்த பின்னால் பணம் செலுத்துவதற்காக அவர் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து, நிறைய ரூபாய் நோட்டுகளை சேர்த்து பதட்டமாக இருந்தார். பணம் குறைவாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். அவரை அணுகி எதற்கு இப்படி ரூபாய் நோட்டுகளை தேடி அலுத்துப் போகிறீர்கள். ஜி பேயில் அனுப்ப வேண்டியது தானே என்றேன். ” எனக்கு ஜி பே கணக்கு இல்லை. என் ஏடிஎம் கார்டு கூட என் கணவரிடம் தான் நெடுங்காலமாக உள்ளது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. . இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ மின்மையின் அடிப்படையில் இருக்கின்றன. ” . நீ ஒழுங்கா இருந்தா எதுக்கு இதெல்லாம் நடக்குது. நீ இப்படி எல்லாம் டிரஸ் போடணுமா, எதுக்கு ராத்திரில கண்ட நேரத்தில் வெளியே போவது “ என்பது தான் இது சார்ந்து வைக்கப்படுகிற புகாரின் மீது எதிர் வினையாக இருக்கிறது. எது நடந்தாலும் அது பற்றிய பதிவுகள் காவல்துறையிடமோ அல்லது அரசு சார்ந்த நிறுவன புகார் பட்டியலில் 75 சதவீதம் அவை பதிவு செய்யப்படுவதில்லை. குடும்பத்தின் கட்டுமானம், குடும்பத்தின் அமைதி கருதி அவை பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யும் புகார்கள் தாண்டி பின்னரும் வேறு செயல்பாடுகள் இல்லாமல் முடங்கி போயிருக்கிறார்கள். பெண்கள் கணவரிடமிருந்து ஏடிஎம் பெற இயலுவதில்லை பல சமயம்.ஒரு அரசு அலுவலர் பெண் கூடத் தயங்குகிறார். தன் மீறல் சார்ந்து. கணவர் அடித்தால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவர் அடிப்பது கூட நல்லதுக்கு தான் என்று நம்பும் பெண்கள் ஏகதேசம் இன்றும் இருக்கிறார்கள். வீட்டிலும் வேலை செய்யும் இடங்களிலும் வெளியிலும் பெண்களுக்கான அவமதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே சூப்பர் மார்க்கெட்டில் அன்று பார்த்த சக ஊழியர் பெண் நோக்கி இன்னொரு ஆண் சைகை மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது அவரை கொச்சைப்படுத்துகிற விஷயம் என்பது தான் எனக்கு புரிந்தது.. இவ்வாறு மனரீதியாக துன்புறுத்தல்களும், சைகை மூலமாக சொல்லுவதும், பிறரைப் பற்றி தேவையில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதும், கேலியாக புனைப்பெயரை வைத்துக்கொண்டு அழைப்பதும்., தேவையில்லாத செய்திகள் சொல்வதும், வசவுகள் மூலமாக வேலை செய்யாமல் முடக்குவதும் பெண்கள் மத்தியிலும் ஆண்கள் செய்யக்கூடிய அதிகார தொனி தான் தென்படுகிறது. . வேலைக்கு போகாதே, கெட்டுப் போகாதே என்று சொல்கிற பழைய தலைமுறையும் என்றும் இருக்கிறது, வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன மதவாதிப் பெரியோர்கள் கூட இருக்கிறார்கள். நாங்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோம். அதோடு சரி என்னுடைய பங்களிப்பு குடும்பத்தில் முடிந்து விடுகிறது என்கிறார்கள். ஏன் இவையெல்லாம் புகார் செய்யப்படுவதில்லை என்ற கேள்விக்கு ” படிச்சிருந்தா தெரியும். தைரியம் வரும் அதனால எங்க குழந்தைகளை படிக்க வைக்கிறோம் “ என்று சொல்கிற பெண்கள் இருக்கிறார்கள். . கமலஹாசன் தேவர்மகன் திரைக்காட்சியில் சொல்வது போல இதெல்லாம் வேண்டாம்பா. புள்ள குட்டிகளை படிக்க வையுங்கள் என்பதைப் போலத்தான் கடைசியாக அந்த பெண்மணிகள் சொல்லிப் போகிறார்கள். ஆனால் வெளியே போகாதே என்று கட்டுப்படுத்திய காலங்கள் போய், வெளியே போய் பிரச்சனைகள் என்ன இருக்கிறது என்று சந்தித்து விட்டு வா என்று சொல்லும் புதிய தலைமுறை பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.. இவருடைய உரிமைகளும் பேச்சும் 33% பஞ்சாயத்து வரைக்கும் தான் வந்திருக்கிறது. 50 சதவீதம் என்று சொன்னதெல்லாம் இன்னும் சட்டமாக கூட முறைப்படுத்தப்படவில்லை. சட்டப்படுத்துகிற இடங்களில் அதற்காக வைத்திருக்கிற குழுக்களின் சம்பிரதாயமாகவே நடக்கிறது, பாலியல் புகாரோ பாலியல் சமத்துவம் பற்றிப் பேசுகிற பெரும்பான்மையானக் குழுக்கள் கூட சம்பிரதாயமாக நடந்து கொள்கின்றன. ஒரு குழுவின் அறிக்கை தருவதற்காக தயாரிக்கப்படுகிற விஷயங்களில் கையெழுத்து போடுகிறவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்,” வா. ஒரு காபி சாப்பிடு, கையெழுத்து போட்டு போ ”என்ற ரீதியில் தான் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகின்றன, மற்றபடி அறிக்கை தயார் தான். சமீபத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று பாலியல் பாதிப்புக்கு உள்ளானது. அந்த குழந்தையின் பதற்றத்தை அம்மா தெரிந்து கொண்டார். புகார் அளித்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த குழந்தை ..ஆனால் மருத்துவர், காவல்துறை அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் எல்லாமே அந்த குழந்தையின் கற்பனை அது என்று சொல்லி நிராகரித்தார்கள். எந்த நிலையிலும் இதை ஒரு வழக்காக மாற்றுவது என்பதிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தையின் கற்பனை அது என்று எல்லோரும் வாதித்து அந்த குழந்தையின் அம்மாவை நிராகரித்தார்கள். அந்த பெண்மணி காயப்பட்டு போய் ஒதுங்கிக் கொண்டார். திருமணங்களில் பெண்களும் மெட்டி போடுகிறார்கள் ஆண்களும் மெட்டி போடுகிறார்கள். ஆனால் பெண்கள் போடும் மெட்டி காலம் முழுக்க காலில் இருக்க வேண்டி இருக்கிறது. ஆண்கள் போடும் மெட்டி சடங்குகளுக்காக இருக்கிறது. திருமணச் சடங்குகள் முடிந்து அவை கழட்டி எறியப்படும். அப்படித்தான் பாலின சமத்துவம் சார்ந்த கேள்விகள் கூட அலட்சியப்படுத்தப்படும். நம் தமிழ் கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிற போது பெண்களை நோக்கி சகி சகி என்ற வார்த்தைகளை சொல்வார்கள். சகியே என்று அழைப்பார்கள். இப்போது அரசாங்கம் சகி என்ற பெயரில் தான் பாலின சமத்துவம் சார்ந்த உதவும் எண் 181 என்று நிறுவி இருக்கிறது.. இன்னொருவர் இப்படித்தான் ஒரு சகி என்பது பற்றி ஒரு கவிதை எழுதி காண்பித்தார். குரூரமாக இருந்தது “ கூட்டுப் பாலியல் புகார் தர காவல் நிலைக்குச் சென்றாள் அந்த கன்னி. காவல் நிலையத்தில் இருப்பவர்கள் அவள் மேல் தொடுத்தது கூட்டு பாலியல் தாக்குதல்” SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003