சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 27 மே, 2019

பட்டாம்பூச்சி தேவதை : சிறுவர் கதைகள் கன்னிகோவில் ராஜா --- சுப்ரபாரதிமணியன்

கன்னிகோவில் ராஜா அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கிய நூல்களை எழுதுவதிலும் அவற்றை வெளியீடுவதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார் .25க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை எழுதி இருக்கிறார் .அவரின் சமீப நூல் பட்டாம்பூச்சி தேவதை உலகக் குழந்தை எழுத்து  இரண்டாம் மாநாடு சமீபத்தில் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது .அந்த மாநாட்டின் போது வெளியிடப்பட்ட நூல் தான் பட்டாம்பூச்சி தேவதை. இந்தியா, இலங்கை மலேசியா சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பேராளர்கள்  கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியில் இந்த நூலை கன்னிகோவில் ராஜா அவர்கள் வெளியிட்டார்.
 இந்த நூலில் உள்ள பெரும்பான்மையான கதைகள் பிராணிகளும் விலங்குகளும் பறவைகளும் பங்கு வெறும் கதைகளாக இருக்கின்றன. ஒரே ஒரு கதையில் மட்டும் மனித கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன .பெரும்பாலும் எனக்கு இதுபோன்ற பிராணிகளும் விலங்குகளும் பறவைகளும் இடம்பெறும் கதைகளின் விவாதங்கள் பிடிப்பதில்லை. காரணம் சக மனித வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் இந்த விஷயங்கள் அவர்களுடைய உலகத்தில் சிறுவர்கள் இணைந்து வாழ்வது,  இவருடைய நடைமுறை அனுபவங்கள் இவற்றை எல்லாம் எழுத வேண்டிய நேரத்தில், காலத்தில் பறவைகளையும் விலங்குகளை வைத்து ஏன் எழுதுகிறார்கள் என்று நான் எப்போதும் கேள்விகளை எடுத்துக் கொள்வேன், ஆனால் பல கதைகளில் கன்னிக்கோவில் ராஜா பறவைகள் விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களை நியமித்து இந்த கதைகளை கூட கொண்டு சென்றிருக்கலாம் ,அப்படி நாம் உருவகித்தும் உருவாக்கியும் கொள்ளலாம்.ஆனால் பறவைகள் விலங்குகள் உடைய இயற்கை சார்ந்த அக்கறையும் விளையாட்டும் அதில் இருந்து பெறப்படுகிற அனுபவங்களும் கன்னிகோவில் ராஜாவுக்கு உவப்பாக இருக்கிறது. எனவே அவர்களைக் கொண்டே அந்தக் கதைகளை நகர்த்துகிறார். இந்த கதைகளை மனித கதாபாத்திரங்களைக் கொண்டு கூட அமைத்திருக்க  முடியும் ஆனால் தன்னுடைய பாணியாக அவர் இதை செய்து வருவது நல்ல விடயம் கூட . தொடர்ந்து அவரின் பல சிறுவர் கதைகளை தமிழ் தி ஹிந்து போன்ற பிரபல தமிழ் தினசரிகளிலும் இலக்கிய இதழ்களிலும் பார்க்க முடிகிறது. அவற்றை தொடர்ந்து கிடைக்கும் வகையிலும்  படிக்க முடிவதும் ஒரு ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்தக் கதையில் பஞ்சதந்திர கதைகள் ஈசாப் கதைகள் போன்றவற்றில் வரும் விலங்குகள் பறவைகளைப் போலவே அதிகமாக  அவற்றைக் கொண்டிருக்கிறது . அக்கா குருவி தம்பி குருவி என்று ஒரு கதை. இந்த கதையை மனிதர்களுடையதாகவும் அவங்களோடும் வெகுவாக பொருத்திப் பார்க்கலாம் நகரத்துக்கு சென்று அந்த வாழ்க்கை பிடிக்காமல் திரும்புகிறார்கள்  மனிதனைப் பற்றிய நகர  உணர்வு இக்கோணத்தில் நாம் படித்து இருக்கிறோம். அந்த வரிசையில் விலங்குகள் கூட நகரத்திற்குச் சென்று அந்த வாழ்க்கை அளவுகளில் ஒத்துக் கொள்ளாகாமல் வெளியேறுவது என்பது இந்த கதையில் இருக்கிறது. பிறகு ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் அபாயம்  பற்றியெல்லாம் ஒரு கதை சிறப்பாக பேசுவதில் இந்தத் தொகுப்பிற்கு ஒரு சமகாலத்தன்மை வந்துவிடுகிறது. இந்த நூல்களில் சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் , அப்புறம் அறம் சார்ந்தவை பல இடங்களில் பரவி கிடக்கின்றன .வெளிப்படையான அறிவுரையாக இல்லாமல் அவை வெகு பூடகமாக சொல்லப்பட்டிருப்பதால் இந்த கதைகளின் முக்கியமான அம்சமாக கொள்ளலாம். இவருடைய பல கதைகள் இதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும்  பலருடைய தொகுப்புகளை மிகவும் கவர்ச்சிகரமான இதே வகையில்  உருவாக்குகிறார் என்பதும் முக்கியம்.பானைகளின் நீர்ப்பந்தல், வீடு திரும்பிய அணில் , அணில் கடித்த கொய்யா போன்றவை முக்கியமான கதைகளாகும் .பெரும்பாலும் தமிழ் சிறுவர் கதைகள் நூல்களில், பிரதிகளில்  வார்த்தைக்குவியல்கள் அதிகமாக இடம் பெறுவது வழக்கம் .ஆனால் இன்றைய நவீன சிறுவர் கதைகளில் குழந்தைகளுடைய அனுபவ எழுத்துக்கள் வார்த்தைக்குவியல்கள் தன்மையை விட உருவங்களும் காட்சிரூபங்களும் மிக முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் அதை புரிந்து கொண்டு ஒவ்வொரு பக்கத்திற்கும் ஓவியங்கள்.. அந்த ஓவியங்களில் முழுமையாக இல்லாமல் சிறு சிறு சித்திரங்களாக வடிவமைப்பது.. எழுத்தை பெரிய எழுத்தாக வடிவமைத்திருப்பது ஆகியவை சிறுவர்கள் இதனை படிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. பிறகு உள்ளே செல்லும் பொருளடக்கப் பகுதியில் ஒவ்வொரு பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் பட்டியலில் சிறு சிறு ஓவியங்களில் தலைப்பும் கவர்ச்சியாக உள்ளே செல்லும் வசதியுடன் தற்போது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது இந்த நூலில். இந்த முழு நூலும் சில  கதைகளையே  பிரதானமாகக் கொண்டும் சில அவர்களுடைய சுலமான வாசிப்புக்காகவும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான்  இவருடைய சிறப்பாக சொல்லலாம். இந்த கதைகள்  எல்லாம் படித்துவிட்டு குழந்தைகள் வெறும் வாசகர்களாக மட்டுமின்றி அவர்கள் கதைசொல்லிகளாக மாறக்கூடிய நிறைய வாய்ப்புகளையும் இயல்பாகத் தருகிறது . கன்னிகோவில் ராஜா வை ஒரு கதை சொல்லியாக பள்ளிகளிலும் வெளியிடங்களிலும் இந்த சிறார் கதைகள் எல்லாம் சொல்லியிருக்கிறார். இதைப் படிக்கிற சிறார்களும் கதைசொல்லியாக மாறுவார்கள் என்ற பரிமாணம் தான் இந்த புத்தகம் ந்திருக்கிற சிகரமாகும். தொடர்ந்து கன்னிகோவில் ராஜா சிறுவர் கதைகளின் முயற்சிகளில் அக்கறையோடு இருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவர் நாவலிலும் முத்திரை பதிக்க வேண்டும்  இதை சென்னையில் உள்ள பாவை மதி  பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது
 ( 2019 இதன் விலை ரூபாய் 110..)-- சுப்ரபாரதிமணியன்