சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் திரைக்கதைகள் நூல் அறிமுகம் (இயற்கை எனும் இளையக்கன்னி ) கோவை புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளில் 26/7/26 ஞாயிறு மாலை நடைபெற்றது. ஓவியர் ஜீவா, ஓவியர் வி. ராஜ கோபால் , ஓவியர் சித்ரன் ரகுநாத், பொன்சுதா , நம் பதிபப்கம் இவள் பாரதி, தொல்லியலாளர் பேரா. ராஜேந்திரன், வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டார்கள், தூரிகை சின்னராஜ், வாகை துரைசாமி, ஓவிய ஆசிரியர் குமாரசாமி , ஆகியோரும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சென்னை நம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.ரூ 330 விழா ஏற்பாடுகளை வாகை துரைசாமி, தூரிகை சின்னராஜ் செய்திருந்தார்கள்.
தூரிகை சின்னராஜ் எழுதிய “ குழந்தைகள் கிறுக்கல்கள், கோடுகள், கோட்பாடுகள் “ என்ற நூலை ஓவியர் ஜீவானந்தம் வெளியிட்டார். ஓவிய உலகம் பற்றி உரையாற்றினார். இது ஒரு கனவு வெளியீடு ரூ130
ஓவியர் ராஜகோபால் இருபத்திதைந்து ஆண்களுக்கு முன்னால திருப்பூரில் நடைபெற்ற குழந்தைத் தொழில் ஓவியக்கண்காட்சியில் மனோகர், மருது, ஜீவா, புகழேந்தி உட்பட பதினைந்து ஓவியர்கள் பங்கு பெற்ற ஓவிய முகாம் பற்றிய நினைவலைகளைப் பேசினார்.
இயற்கை எனும் இளையக்கன்னி. Book talk
சுப்ரபாரதி மணியன் - சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய தனது நாவல்கள் மூன்றை – திரைக்கதை வடிவத்தில் தந்திருக்கிறார். புத்தகம் தரும் தகவல்கள்..
இயற்கை எனும் இளையக்கன்னி.
நிலங்கள் பழையபடி அதன் மூதாதையரான பழங்குடிகளுக்குத் தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அவர்களை கலங்கடிக்கிறது. அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது அங்கு தாங்கள் வளர்த்த மரங்களை எதற்காக அப்படியே விட்டுச் செல்வது என்று வெட்டி காசாக்கி விட்டு அங்கிருந்து காலி செய்ய எண்ணி மக்கள் மரங்களை வெட்ட மரங்களற்ற அந்தப்பகுதி சூடான பகுதியாகிறது.
***
சாயத்திரை
சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது.
ஒரு லட்சம் கோடி அன்னிய செலவாணி வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் சாயக்கழிவுகள், நதிநீர் மாசு என்பதை பற்றிய பார்வைகள் திருப்பூர் விளிம்பு நிலை மனிதர்களின் நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.
கஸார்கள் : பெரும் வல்லரசுகள் அல்லது பெரும் மதங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட நிச்சயமற்ற எதிர்காலத்துடன் கூடிய சிறுபான்மை மக்களின் குறியீடு.
சுற்றுச்சூழலில் நச்சாக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோருமே கஸார்களே- செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிச் எழுதிய புகழ் பெற்ற நாவல் “ கஸார்களின் அகராதி
***
பூமிக்கு மனிதன் தலைவனா ?
இப்போது உலகம் வெப்பமய சூழலில் எல்லாம் தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. தீவில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்போகிறது. உலகம் முழுக்க வெப்பமய சூழலில் பல தீவுகள் மற்றும் அவற்றில் உள்ள பள்ளிகள் காணாமல் போகின்றன..
"நாடோடி காற்று" காட்டுப்பகுதி. மக்கள் ஆடு, மாடு மேய்த்தும் சிறு அளவில் விவசாயம் செய்தும் வருகிறார்கள். கால்நடைகள் மாமிசத்திற்காக கடத்தப்படுவது, கொல்லப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி தருகிறது.
பாறுக்கழுகுகள் - இறந்த கால்நடைகளை தின்னும். கால்நடைகளுக்கு வைத்தியமுறையில் தர்ப்படும் மருந்துகள் ரசயானக்கலப்பாகி அவை இறக்கும் போதும் பாறுக்கழுகுகள் உண்கின்றன. ஆனால் ரசாயனக்கலப்பால் அவை சாகின்றன. குறைந்து வருகின்றன. இதை அறிந்து விசனப்படும் மக்கள் ரசாயனம் உபயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மூவகை பாறு கழுகுகளும் (வெண்முதுகு பாறுக்கழுகு, கருங்கழுத்து பாறுக்கழுகு, செம்முகப் பாறுகழுகு) இறந்த பிராணிகளை சாப்பிட்டு தான் வாழுது.அதையும் நாம கவனிக்கனும்.
..
நன்றி.
Virdunagar Muthukumar nam publication Chennai.. rs 330 9566110745
ReplyForward
Add reaction