சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 31 மார்ச், 2016

நாளையும் புதிதாய் பிறப்போம் : சுப்ரபாரதிமணியன்
  இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது.
 இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய  பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும், அறிவுரை எண்ணத்தோடும் அவை வெளிப்பட்டுள்ளன கரையே( ற்)றுங் கருத்துக்கள் என்ற  இந்நூலில்... இந்நூலின் கடை வரி:: இன்று புதிதாய் பிறந்தோம், நாளையும் புதிதாய் பிறப்போம் என்கிறது. இந்நம்பிக்கையை இந்நூல் முழுக்க பார்க்க முடிகிற்து.

அதில் சில:
    குடும்பம் என்ற பல்கலைக்கழகத்திலிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம்.தந்தையிடம் தாய்மைப்பண்பு, ஆசிரியனிடம் தாய்மைப்பண்பு, அரசாள்வோரிடம் தாய்மைப் பண்பு வளர வேண்டும்- எல்லா உயிர்லும் ஒருமைப்பாட்டை காண பயிற்சி வேண்டும்.-உலக உயிர்த்திரளிடம் ஏற்படும் சகோதரத்துவத்தின் பழுத்த நிலையே அருள்- மேல் நாடுகளில் மது அருந்துவது உனவின் ஒரு பகுதியாக அமைகிறது. ஆனால் இங்கு அப்படி அல்ல. அதற்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கச் செய்வதற்காகவும், விளம்பர உத்தியாகவும் இத்தைய காட்சிகளை திரைப்படங்களில் அடிக்கடி புகுத்துகிறார்கள். பண்பாட்டு படுகொலை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுப்பது  நாகரீகம் என்று கருதி யாராவது நஞ்சகளை உண்பார்களா-இன்றைய மனிதனைப் பாதிக்கும் சுமைகளும் ஒன்றாகச் செய்திச்சுமை என்பதைக் குறிப்பார்கள். அந்த முறையில் துள்ளித் திரிகின்ற கள்ளமற்ற குழந்தைகளின் மூளையில் இளம் பருவத்திலிருந்தே  கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையாக எண்ணற்றச் செய்திக்குப்பைகளைத் திணிக்கத்தான் வேண்டுமா-இன்றைய மாணவர்கள் மனித வாழ்வில் இலட்சிய வேகம் நிரம்பிய காலம். சமூக முன்னேற்றம், சமூக வளர்ச்சி விளையும் வயல் நிலம் சமூக மாற்ற சிற்பிகள் மாணவர்களே. இன்றைய மாணவர்கள் இலட்சிய வீரர்களாக விளங்க வேண்டும்.- எம்மதமும் சம்மதம் என்ற நெறி நாம் பின் பற்ற வேண்டிய நன்னெறி அன்பு நெறி- வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல. நாம் கடலாக இல்லை என்றாலும் ஏரியாக இருக்கலாம். வெட்கப்பட வேண்டாம். மனம் என்ற தோணி இருக்க பயம் ஏன். இன்று புதிதாய் பிறந்தோம். நாளையும் புதிதாய் பிறப்போம்  - என்கிறார். இதில் உள்ள பல்வேறு கட்டுரைகளில்..
இதில் குறிப்பிடப்படும் விசயங்களை வெளிப்படுத்த இந்திய தத்துவ மரபு, புராணங்கள், வெளிநாட்டுக்கதைகள் என்று பலவற்றை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
அதிலிருந்து ஒரு கதை;
1966ல் நோபல் பரிசு பெற்ற போலிஷ் பெண் கவிஞர் விஸ்வாவா சிம்போர்ஸ்கா  எழுதிய உருவகக் கதை:
 மீனவர் சிலர் கடலிலிருது ஒரு சீசாவை கண்டெடுத்தனர். அதற்குள் ஒரு துண்டுத்தாள் இருந்த்து. அதை எடுத்து படித்துப் பார்த்தார்கள். “ யாராவது என்னைக் காப்பாற்றுங்கள். யாரும் இல்லாத் தீவில் கடல் கொண்டு வந்து என்னை ஒதுக்கி விட்ட்து. உதவி வரும் உதவி வரும் என்ரு நான் கரையில் காத்து நிற்கிறேன். விரைந்து வாருங்கள் இங்கே இருக்கிறேன் நான்
“ இதில் தேதியொன்றையும் காணோமே. உறுதியாக இப்போதே காலங்கடந்து விட்டிருக்கும் இந்த சீசா நீண்ட காலமாகக் கடலில் மிதந்து கொண்டிருந்திருக்க வேண்டும் “ என்றான் முதலாவது பேசிய மீனவன்.
“ இதில் இடம் எங்கே என்று சொல்லவில்லையே. எந்தக் கடல் என்றும் நமக்குத் தெரியாதே “ என்றான் இரண்டாவதாகப் பேசிய மீனவன்.
இப்போழுது ஒன்றும் காலங் கடந்து போய் விடவில்லை. அது ஒன்றும் தொலைவிலும் இல்லை.  இங்கே என்று சொல்லும் தீவும் எங்கேயும் உள்ளதுதான்”  என்றான் மூன்றாவது மீனவன்.
எல்லோருக்கும் சங்கடமாகப் போயிற்று . வாயடைத்து  நின்றார்கள். எல்லா பொது உண்மைகளின் கதையும் இதுதான்.

போலந்து மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்த பல படைப்புகள், மலையாளத்திலிருந்து பல படைப்புகள் ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சி. இராதா கிருஷ்ணனின் ஸ்பந்த மாபினிகளே நன்னி  நாவல் உட்பட)  இலக்கண ஆராய்சி நூலகள் ( உ வேசா இலக்கணப் பதிப்புகள், மலையாள் மொழியிலக்கண நூலாகிய பாஷா வ்யகரணம் உட்பட ) , சமூக நீதிப் போராட்டம் சம்பந்தமான நூலகள்  ( நாராயண குருவும் அய்யன் காளியும்  உட்பட ), தமிழ் மலையாளம் லெக்சிகோகிராபி நூல்கள் , நகுலன் கட்டுரைகள் போன்ற் தொகுப்பு நூல்களின் ஆசிரியரான பேரா. கி. நாச்சிமுத்து அவர்களின்   வெகு எளிமையான நூல் இது.
  ( கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
பேரா. கி. நாச்சிமுத்து   மொழி பண்பாடு ஆய்வி நிறுவனம், கோவை 30 விலை ரூ 70  )


-------------------------------------------------------------------------சுப்ரபாரதிமணியன், 8/2635  பாண்டியன் நக்ர், திருப்பூர் 641 602  /9486101003
கனவு இலக்கிய வட்டம்


 கனவு இலக்கிய வட்டம்  “ ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கதை எழுதும்    “ கதை சொல்லி.. “ போட்டியை நட்த்தி வருகிறது. இவ்வாண்டில் அப்போட்டிக்கு தமிழகம் முழுவதுமிருந்து 140 கதைகள் வந்திருந்தன. அதில் 20 கதைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ5000 பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு தபாலில் பரிசுகள் அனுப்பட்டன.

        திருப்பூர் பகுதி பள்ளிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு ஞாயிறு மாலை அன்று பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்  நடைபெற்றது. மருத்துவர் முத்துசாமி பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, பெருமாநல்லூர் பகுதிகளைச் சார்ந்த 13 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ஜோதி, முனைவர் ரங்கசாமி, அனிதா  உட்பட்டோர் கலந்து கொண்டனர். கதைகளை தேர்வு செய்த மனோகர், செல்வராஜ் கவுரவிக்கப்பட்டனர்.  கதை சொல்லும் பயிற்சி யைப் போல் கதை எழுதும் முறைகளை குழந்தைகள் கடைபிடிக்க வேண்டியது பற்றி பலரும் பேசினர் . கனவு இலக்கிய வட்டம்  “ சார்பில் சுப்ரபாரதிமணியன் நன்றி கூறினார்.

புகைப்படங்கள்: முகநூல் :Kanavu subrabharathimanian tirupur
செய்தி : சுப்ரபாரதிமணியன்



சனி, 26 மார்ச், 2016

கொலைக்களன்களின் மறு உருவாக்கம்:
----------------------------------------------------------------------------------------------------------------------------------
                   
                                       " ஏக்ட் ஆப் கில்லிங்  "  ஆவணப் படம்
                                        ---------------------------------------------------------------------
                                                             சுப்ரபாரதிமணியன்,

பொதுவுடமையாளர்கள், பொதுவுடமை ஆதரவாளர்கள், தங்களுக்குப் பணம் தர மறுப்பவர்கள் என்று  5 லட்சம் பேரை  1965ல்  இந்தோனொசியாவில் கொன்று குவித்தார்கள்.  தொடர்ந்து மனிதகுலம் இன, துவேச அழிப்பால் துயரங்களைத் தந்து வருவதைக் காணமுடிகிறது. இரண்டு உலக் யுத்தங்கள் முதல் முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிபர் சுகர்னோ தூக்கி எறியப்பட்டு  சுகர்தோவின் ஆட்சி வந்தது. அந்த வகை கொலைச் செயலுக்கு பலர் பயன்படுத்தப்பட்டனர்.  அதில் அன்வர் காங்கோ என்ற சுமித்ராவைச் சார்ந்தவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட ஆவணப்படம் இது.  அன்வர் காங்கோ மட்டும் தனிப்பட்ட முறையில் 1000 பேரைக் கொன்றிருக்கிறார். பொதுவுடமைக்காரர்கள் என்றில்லாமல் பொதுவுடமைக்காரர்கள் எனச் சந்தேகம் கொண்டவர்கள், தங்கள் மிரட்டலுக்கு அடிபணியாதவர்கள் என்று சகட்டு மேனிக்கு  கொலை செய்யப்பட்டார்கள். திரைப்படக் கொட்டகையில் நுழைவுச்சீட்டு விற்பவராக இருந்த அன்வர் அங்கு திரையிடப்பட்ட அமெரிக்கப் படங்களால் பெரிதும் கவரப்பட்டவர். அமெரிக்க படங்களின் கதாநாயகர்களாகவும்கிளிண்ட் ஈஸ்ட்வுட்டாகவும் தன்னை பாவித்துக் கொண்டு  அந்த கொடூரச் செயல்களைச் செய்திருக்கிறார். அவருக்குத் தேவை துப்பாக்கி கூட அல்ல . இரும்புக் கயிறு.

இந்தோனிசியாவில் 1965-67ல் நடந்த இந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்டக்குடும்பங்கள், உயிர் பிழைத்தவர்களை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்க இயக்குனர் ஜோஸ்யு ஓபன்ஹெய்மர்  திட்டமிட்டுருக்கிறார். ஆனால் 1000 கொலைகளைச் செய்த அன்வரின் செயல்களை மையமிட்டு அது மாறிப்போயிருக்கிறது.  அன்வர் கொலை செய்தவற்றை நிகழ்த்திக் காட்டுகிறார்.வெறும் இரும்ப்க் கயிறு. கழுத்தைச் சுற்றி இறுக்கி இரத்தமின்றி கொஞ்சம் அலறலுடன் கொலை செய்தலை மறு உருவாக்கம் செய்து காட்டுகிறார்.அவர் கொலைகளன்களுக்கு கூட்டிச் சென்று காட்டுகிறார். முன்பு செய்ததை நிகழ்த்திக் காட்டுகிறார். முதலில் எவ்வித குற்ற உணர்வும் இல்லை. ஆனால் இப்படம் உருவாக்கப்பட்ட இறுதி கணங்களில் குற்றவுணர்வு  அவரைப் பீடித்துச் சிரமப்படுத்துகிறது.  சாகும்போது கண்கள் வெறித்த நிலையிலான ஒருவரின் பார்வை அவரை இம்சிக்க ஆரம்பிக்கிறது.பான்காசியா இளைஞர் படையில் எப்போதும் சார்பும் ஆதரவும் கொண்டவர்.  அந்த அதிகார மிதப்பு அவரைக் குற்றம் குறித்த குற்றவுணர்வைக் குறைத்துக் கொண்டே இருக்கிறது. கொலைக்காலத்தில்   அவர்கள் சுயேச்சையானவர்கள்.சுதந்திரமானவர்கள். கொலைகளை சுலபமாகச் செய்கிறார்கள்.  தொழுகை நேரத்து அழைப்புகள் மட்டும் சில சம்யம் அதை ஒத்தி வைக்கிறது.  நட்த்திக் காடப்படும் போது அதை வேடிக்கைப் பார்க்கிற பெண்களும் குழந்தைகளும் கத்றுகிறார்கள். மயங்கி விழுகிறார்கள்.  கொலைகள சூழல் மட்டுமில்லாமல்  கொலையுண்டவ்ர்களின் முகங்களின் தோற்ற மாதிரிகள், கொலை செய்தவர்களின் முகத் தோற்றங்கள் முக வடிவமைப்பில், ஒப்பனையில்  கொண்டு வரப்படுவது  நிகழ்த்திக் காட்டப்படுகிறது.  ஒப்பனையில் அவர்களின் குரூர முகங்கள் வெளிப்படுகின்றன.  கொல்லப்பட்டு மூட்டைகளால், சிறு உருளைகளில் போட்டு மூடி தூக்கி எறியப்பட்டவர்களின் கதைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகைகொலை செய்த இன்னொருவர் இப்போதைய பத்திரிக்கை அதிபராக இருக்கிறார். பத்திரிக்கை மூலம் மனித உரிமை பற்றிப் பேசுகிறார்...
தொலைக்காட்ட்சிகளோ, பத்திரிக்கைகளோ தரும் செய்திகளின்  தன்மையின் பின் பெரும் அரசியல் இருக்கிறது. சமூகச் சூழலில் முதலாளித்துவத்தின் பார்வை  ஒளிந்து கொண்டே இருக்கிறது.  எந்தச் செய்தியை எப்படி வெளியீடுவது, எந்தப்பக்கத்தில் , சிறிய செய்தியாகவா, பெரிய செய்தியாகவா என்பதை  அவை தீர்மானிக்கும். முக்கியதுவமற்றதாக செய்திகளை மாற்றும் திறன்  கொண்டதும் கூட் நடைபெறுகிறது..முதலாளித்துவத்தின் லாப் வேடடை, எதிர்ப்பாளர்களைக் கொச்சைப்படுத்தும் தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் இதில் பெரும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குச்  சாதகமாக எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் சுலபமாக நடக்கிறது.இதை அந்தப் பழைய கொலைகாரரும் செய்கிறார் பெருமிதத்தோடு என்பதை அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆனால் அவர் நிகழ்த்திய கொலைகள் பற்றி அவருக்கு கொஞ்சமும் உறுத்தல் இல்லை.ஆதிக்கம் செலுதுதும் ஊடக நிறுவனங்களின் கைக்கூலியாக அவர் செயல்படுவது என  அவர் வாழ்க்கையை அடக்கிக் கொண்டிருக்கிறார்.

சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கும் விதமாய் இந்த நிகழ்வுகளிம் மறு உருவாக்கமும்  வீதிகளில் அலைந்து கொண்டும் , வாகனங்களில் சுற்றிக்கொண்டும் கொலையாளிகள்  பேட்டிகள் கொடுக்கிறார்கள். கொலைக்களன்கள் நகரம் முழுக்க நிறைந்திருக்கின்றன். அன்வர் இப்படி எடுக்கப்பட்டபடத்தின் சில பகுதிகளைத் தன் பேரப்பிள்ளைகளுக்கு போட்டுக் காட்டிப் பெருமை கொள்கிறார். அவர்கள் கேள்வி கேட்கும் வயதில் இல்லை. கேள்வி கேட்கும்  அறிவில் இல்லை.அதுவெ அன்வருக்குச் சாதகமாக இருக்கிறது.ஆனால் படத்தின்ல் இறுதியில் அவர் மனம் கொள்ளும் குற்றவுணர்வு இப்படம் பார்க்கிறவர்களையும் தொற்றிக் கொள்ளும்.
     இன்று ஆட்சி நடத்துபவ்ர்கள் இந்த வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள். இன்றும் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள இவையெல்லாம் அவசியம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தங்களின் முதிர்ந்த வயதுஅனுபவம் - இவையெல்லாம்  மீறி சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.  இவ்வ்கை வன்முறைகளும் கொலைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுவது  துயரமாகவே இருக்கிறது.
       
ஆரம்பக்காட்சிகளில் இடம் பெறும் பெண்களின் இந்தோனிசிய நடனக்காட்சிகளும் அருவிகளின் பின்னணியும்  அபத்தங்களை நகைக்க வைக்கிறது என்றே சொல்லலாம்.  நீளநீளமான காட்சி அமைப்புகள், படத்தின் மொத்த நீளம் இவையெல்லாம் உறுத்தவே செய்கின்றன.இப்படம் மனித உரிமைகள் குறித்த பல கேள்விக்ளை முன் வைப்பதால் பல உயரிய விருதுகளைப் பெற்றிருகிறது. இதன் தயாரிப்பாள்ர்களில்  ஒருவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்ஜோக் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

   திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும், திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும். என்கிறார் யமுனா ராஜேந்திரன்

இலக்கியப்பிரதியைத்தாண்டி சொல்லுக்கும் காட்சிக்குமான பதட்டத்தை இப்படப்பிரதி தந்து கொண்டே இருக்கிறது.

 ( சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com  )


பள்ளி மாணவர்களுக்கு...
சிறுவர் கதைகள் எழுதும் போட்டி நிறைவு

“ கதை சொல்லி ... “ விருது பரிசளிப்பு

27/3/16 : ஞாயிறு மாலை 6 மணி
தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர், திருப்பூர்

தலைமை: மருத்துவர் சு.முத்துச்சாமி

பங்கு பெறுவோர்: சுப்ரபாரதிமணியன், சரவணமூர்த்தி, மனோகரன், , கிருஷ்ணகுமாரி, வனிதா, பாண்டி செல்வம், ஜோதி
மற்றும்
கதை சொல்லும் மாணவ மாணவிகள்
வருக...

நிகழ்ச்சி அமைப்பு:


கனவு இலக்கிய வட்டம்,
8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

வெள்ளி, 25 மார்ச், 2016

                    கலைஞன் 60
                                                                                                  சுப்ரபாரதிமணியன்
கலைஞன் பதிப்பகம் தன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில் வெளியிட்டது. அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள் . பத்துப்பேர் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்கள்.50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தது. அதில் என் சிறுகதைத் தொகுப்பு ‘ குகைகளின் நிழலில் “ ஒன்று.
அந்தத் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். 2012ல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்த்து.அதன் பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது “ ஓ.. மலேசியா “ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன் . நூல் இன்னும் வெளியாகவில்லை. மலேசியப்பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் “ மாலு “( உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை ) . அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலை மறைவு வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன். அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய “ பால் மரக்காட்டினிலே “ நாவல்   மலேசியப்பின்னணி நாவல் ஆகும். “ ஓ.. மலேசியா ““ மாலு “ ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை  சில சிறுகதைகளாகவும் எழுதினேன்.அந்தச் சிறுகதைகள் ‘ குகைகளின் நிழலில் “ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால் முழுத்தொகுப்பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன். .
    கோலாலம்பூர் -அந்த விழாவில் தமிழகத்திலிருந்து சென்றவர்களில்மூத்த எழுத்தாளர்கள் கர்ணன், உதயை மு. வீரய்யன், ப.முத்துகுமாரசாமி மற்றும் பத்திரிக்கைகளைச்சார்ந்த தினமலர் கவுதம சித்தார்த்தன், தினமணி இடைமருதூர் மஞ்சுளா, குமுதம்  மணா, சங்கொலி அருணகிரி, தினமலர் மலர்வதி, தினகரன் பிரபு சங்கர்  , முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த கமலாலயன், உதய சங்கர், உமர் பாரூக், ம.காமுத்துரை மற்றும் எஸ். சங்கரநாராயன். சாருகேசி, பானுமதி பாஸ்கோ, ராகவன்தம்பி, உடுமலை ரவி , கவிப்பித்தன், பாரதிவசந்தன், சப்தரிஷி போன்றோரும் இடம் பெற்றிருந்தோம். வெளியிடப்பட்ட தங்கள் நூல்களின் அனுபவ்ங்களை எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.. மலேசியா கல்வித்துறையைச் சார்ந்த கிருஷ்ணன் மணியம், கும்ரன், மன்னர் மன்னர், மணி வாசகம்  போன்றோரின் உரைகளில் மலேசியா இலக்கியம் பற்றிய பல பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள முடிந்த்து. , மலாக்கா எழுத்தாளர்களின் 50 கவிதைகளை மொழிபெயர்த்து தமிழில் செம்பருத்தி தாமரை சந்திப்பு என்ற தலைப்பில் நூலாய் வெளியிட்ட்தையும் குறிப்பிடலாம்.கொங்கு நாட்டினரை விருந்தோம்பல் , உபச்சாரத்திற்கு பெருமை கொள்ளும் விதமாய் சொல்வார்கள். மலேசியா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது என்று சொல்லும் அளவு பலமான உபச்சாரம் இருந்தது.   அடுத்த்த் தொகுப்பில் மலேசியா அனுபவ  முத்திரையை அழுத்தமாகப் பதிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. “ பால் மரக்காட்டினிலே “ “ மாலு “ நாவல்கள் போல் 50 மலேசியா பின்னணி நாவல்கள் வெளிவரவேண்டும் என்ற விருப்பத்தை அந்த மாநாட்டில் நான் தெரிவித்தேன். அடுத்த குதிரைப்ப்யணத்திற்கு  கலைஞன் பதிப்பகம் தயாராகி வருகிறது.அதன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 தமிழ்க்கவிஞர்கள் பற்றிய  நூல்களை இவ்வாண்டில்  வெளியிட ஆயத்தம் செய்து வருவதைக்குறிப்பிடலாம்.




             திருப்பூர் இலக்கிய விருது 2016

(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு).
2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் அனுப்புங்கள் :

முகவரி

94, எம் ஜி புதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம்,பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர் 641 604 ( 221 221 0 )

கடைசி தேதி : 1/5/2016
 Srisuganthi2014@gmail.com


திருப்பூர்  இலக்கிய விருது 2015:   (

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)


பரிசு பெற்றோர்:


1.நாவல் : .. பொன்னுசாமி நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி இலங்கை அகளங்கன்
4. கவிதை:               எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் :      சொட்டுத்தண்ணீர் இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன்                         இந்தி மொழிபெயர்ப்புகள்


அயலகப்பரிசுகள்  பெற்றப் படைப்பாளிகள்:

1.ஜெயந்தி சங்கர் ( ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2.மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3.சிங்கை டாக்டர் லட்சுமி ( ஆய்வு நூல் )
4. நடேசன் ( சிறுகதைத் தொகுப்பு )
                   





புதன், 23 மார்ச், 2016

புத்துமண்நாவல்
               ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்


மணியன் பகாசுரர்களின் சனியன்

---------------------------------------------------
அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன் ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த புத்துமண் என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. புத்துமண் அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக் என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது புத்துமண் நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் முன்பு மணியன்களாக இருந்த பலபேர், நாளடைவிலோ அல்லது வெகு விரைவாகவோ “MONEYயன் களாக மாறிவிடுவதுதான் காலக்கொடுமை. உண்மையில் இன்று மணியன்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு பெருமிதத்தையும், MONEYயன் களாக மாறி உலா வந்துகொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் இந்த புத்துமண் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பல நாவல்கள் படிக்கின்றோம், பாதிப்படைகின்றோம், சிலாகிக்கின்றோம், பரவசடைகின்றோம். ஆனால் உள்ளபடியே மனதளவிலும் உடலளவிலும் பதற்றப்பட வைக்கின்ற நாவல்களும் இருக்கின்றன. அத்தகைய பதற்றத்தை இந்தச் சிறு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் சுப்ரபாரதிமணியனின் வெற்றி, மகத்தான வெற்றி.
எல்லாம் என் ஆசிரியர்
அனைவரும் என் குருநாதர்
பாரில் உள்ளதெல்லாம் எனக்குப்
பாடம் சொல்கிறதே…”
புத்துமண் நாவலும் பாடம் சொல்கிறது. இந்த மண் ஊர்தோறும் கொண்டு செல்லப்பட வேண்டிய சத்து மண்.
-தேனி விசாகன்-
புத்துமண்நாவல்
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014
பக்கங்கள்; 118
விலை; ரூ. 100.00



சென்னை:  தமிழ் புத்தக நண்பர்கள்
                   22வது புத்தக விமர்சனக்கூட்டம்
* 29/3/16 மாலை 6 மணி

“ புத்துமண் “ சுப்ரபாரதிமணியனின் நாவல் பற்றி
விஜய்மகேந்திரன் பேசுகிறார்
.( “ புத்துமண் “  உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு )

ஏற்புரை: சுப்ரபாரதிமணியன்

மற்றும்
ரவி தமிழ்வாணன், அகிலன் கண்ணன், சாருகேசி ..
* டேக்  செண்டர், 69, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை
வருக..

செவ்வாய், 22 மார்ச், 2016

காலநதியின் சகபயணிகள்:
. முத்துலிங்கத்தின்உண்மை கலந்த நாட்குறிப்புகள்நாவல் குறித்து..        
                                                          சுப்ரபாரதிமணியன்
 சிறுகதைகள் என்பது நாவலின் சில பகுதிகள்.தொடர்ச்சியோ, தொடர்ச்சியின்மையோ அதை நாவல் என்ற கட்டமைப்ப்பில் கொண்டு வந்து விடும்.எட்டு நாவல்கள் எழுதி விட்டேன். மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேனீர் இடைவேளை, ஓடும் நதி, நீர்த்துளி  என்று . நாவல் எடுத்துக் கொள்ளும் கால அளவும்,அதன் பிரசுர இடைவெளியும் சங்கடப்படுத்தும். சிறுகதையென்றால் சீக்கிரம் பிரசுர வசதி இருக்கிறது. அதை விட கவிதை எழுதுவதும், பிரசுரமும் சற்றே சீக்கிரம் நிகழ்பவை. நாவலின் சில பகுதிகளாவது பிரசுரமாக வாய்ப்புகள் குறைவு.பிரசுரத்தில் பெயரைப் பார்க்கிற ஆசை நாவல் எழுதும் விசயத்தில்  சீக்கிரம் நிறைவேறாது. ஆனால் . முத்துலிங்கம் அவர்களின் பல சிறுகதைகள் நாவலின் பகுதிகளாக சுலபமாக அமைந்து விடுவது எதேச்சையானதா, இல்லையா என்பது குழப்பம்பிரசுரவாய்ப்பிற்கும், நல்ல வசதி என்பது போல் அவருக்கு அமைந்து விடும். இந்த நாவலில் கூட அதுதான் வாய்த்திருக்கிறது. இதில் உள்ள பல பகுதிகளை சிறுகதைகள் என்ற வகைமையில் முன்பு படித்தவை.ஆனால் அவற்றுக்கு உள்ள தொடர்பு பற்றியும் யோசிக்க வைத்து விடுபவை.இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான முத்தாய்ப்பு  அம்சங்கள் கொண்டது.கடந்த காலத்தின் கூறுகளாக அமைந்திருக்கின்றன.இதை ஒரு நாவல் வடிவம் என்றும் கொள்ளலாம்.நவீன நாவலின் வடிவத்தை எப்படி வேண்டுமானாலும்  வடிவமைத்துக்கொள்ளலாம்.
     நினைவலைகளிலிருந்து எதையாவது எழுதினாலும், பழைய விசயமாக இருந்தாலும் அதில் சமகால ஊடுருவலாக ஏதாவது விசயம் அமைந்து விடுவது  குறிப்பிடத்தக்க விசயமாக இதில் எடுத்துக் கொள்ளலாம்.சமகாலத்தைத் துடைத்தெறிந்து விட்டு  பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விடமுடியாததுதான்.
     வயது அல்லது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் என்றபடிதான் இந்தக்கிரமம் அமைந்திருக்கிறது. இளமை. படிப்பு, வேலை, திருமணம், வெவ்வேறு வேலைகள், முதுமை  என்ற கட்டமைப்பில்தான் இந்த வெவ்வேறு பகுதிகளும் அமைந்திருக்கின்றன.இந்தப் பகுதிகளின் இணைப்பிற்கான கண்ணிகளையும் இதில் அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.கிணற்றுத்தவளையாக இருக்கும்  மனிதனின் ஒரே மாதிரி அனுபவங்களையும், பல நாடுகளில் வேலை பார்த்த, சுற்றிய அனுபவங்களையும்  வேறு படுத்திப்பார்க்க இதில் பல அடையாளங்கள் இருக்கின்றன.காலம் முன்னோக்கித்தான் ஓடும்.அதை பின்னோக்கி தள்ள முடியாது. நாங்கள் காலம் என்ற நதியில் பயணித்துக்
                                    2
கொண்டிருக்கிறோம் என்கிற முத்துலிங்கம் நம்மையும் சக பயணியாக இதில் அழைத்துச் செல்கிறார்.பலரை அறிமுகப்படுத்துகிறார். பல கலாச்சார அம்சங்களை சொல்லித்தருகிறார்.
       எல்லோரையும் போல  சின்ன வயதின் கிராம அனுபவங்களிருந்துதான் ஆரம்பிக்கிறார். அம்மாக்களும் தொலைந்து போகமுடியும்  என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறதுஆசிரியர்களின் உடைகள் பற்றி வியப்பு என்றைக்கும் குறையாது. நம்முடைய பொருளாதார நிலைக்கு, அவர்களின் உடைகள்  ஆடம்பரமானவை. வியந்து கொள்ளச் செய்பவை என்பது தெரிகிறதுஅந்த வயதில் வரும் சங்கீத ஆசை, பேச்சுப் போட்டி, பாடல் ஆர்வம், என்ர்று தொடர்கிறது.இசைப்பருவம்  கொடுக்கும் மிதப்பிற்கு அளவு இல்லை.காதல் என்பது விட்டு விடுமா என்ன..  பல்கலைக் கழக நுழைவுத்தேர்வு முதல், படிப்பு சம்பந்தமான பல விசயங்கள் தென்படுகின்றன. அப்புறம் வேலை என்று வந்து விட்டபின் ஊர் ஊராக , நாடு நாடாகச் சுற்றுகிறார். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான அனுபவங்களைக் கொண்டு வருகிறது. கொழும்பில் அதிக நாள் வேலை நிமித்தமாய்  இருக்க முடிவதில்லை.   ஆப்பிரிக்க நியமனத்தின் போதான சாவுகள் சங்கடப்படுத்துகின்றன. அதிகமாய் ஆப்பிரிக்க அனுபவங்கள் ஆக்கிரமிக்கின்றனபாக்கிஸ்தான் அனுபங்களும் அதிகம். பாக்கிஸ்தானில் முத்துலிங்கம்  இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். இந்த அனுபவங்களிம் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் கனவு இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு   வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள்  என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போலகுரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் சுருங்கிப்போய் விட்டன. சியராலியோன், சூடான், அமெரிக்கா சோமாலியா, என்று கனடாவில் போய் ஒரு துண்டு நிலம் வாங்குவரை நாடு சுற்றல் அவருக்கு இருந்து கொண்டே இருக்கிறது.இந்த வகையில் நாடுகளைச் சுற்றும் போது கூர்ந்து கவனிப்பதும், அவதானிப்பதும், அக்கறையும் அவரின் அனுபவங்களைச் சுவராஸ்யமிக்க படைப்புகளாக  மாற்றும் ரசவாதம்  அற்புதமாகக் கைகூடி வந்து விடுகிறது அவருக்கு. நாடுகளைச் சுற்றுவதாலேயே அவை மனதில் பதிந்து விடாது. எங்கள்  திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அன்னியச் செலவாணி பின்னாலாடையால் சம்பாதிக்கிறது. எங்களூர் முதலாளிகள்  வெளிநாடுகளுக்கு போவதும், வருவதும் சகஜம். ஆனால் அங்கு பார்த்ததை கோர்வையாகச் சரியாகச் சொல்லவோ, ஒரு பக்கம் எழுதி விடவோ அவர்களால் முடிவதில்லை.பேசும் போது என்ன பார்த்தீர்கள் என்று கேட்டால் கேளிக்கைச் சமாச்சாரங்கள், பாலியல் விசயங்கள் சிலவற்றைச் சொல்வார்கள். அவ்வளவுதான். போய் வந்ததாக பொய் சொல்கிறாரோ என்ற சந்தேகம் கூட வந்து விடும்.
                                 
                                    3
எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத  வித்தை தமிழுக்கு பெரிய கொடை.
     இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாதுஇதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறதுஇவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும்  பக்குவம் தெரிகிறதுஅரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில்  நல்ல பதிவாகி விடுகிறதுவேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது.       ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின்  கண்களில் மின்னுகிறதுமேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால்  சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள்  சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள்  கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும்  மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான  நிறைய விசயங்கள். இவற்றில்  நீங்கள்  ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால்  அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும்  வாக்குமூலத்தைப்  புறம் தள்ளி விட்டு  அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக   தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாதுமறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறதுஇதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோநைரோபிப் பெண்ணோ  அனுதாபத்துடனும்  எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லைஎன்று ஒரு இடத்தில் எழுதுகிறார்பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்ணகளை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு  இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில்  குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோஇந்த  நாட்களைக் கடத்துவது என்பது
                                          4                                           இல்லாமல்  ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும்.  .கலை  இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க  இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும்  என்று தோன்றுகிறதுபடைப்பாளியின் ஆயுளை முன் வைத்து படைப்பின் அமரத்தன்மை பற்றியும் இந்த சமயத்தில் நிறைய யோசிக்கலாம் என்று படுகிறது.கவிதைகள் சாயலில் தாளில் அடிக்கோடிடும் பல நூறு வரிகள் இந்த நாவலில் உள்ளன. கவிதையை உணர்ந்து புரிந்து  கொண்டபின்  உற்சாகத்தின் துள்ளலோ, துக்கத்தின் சாயலோ அகப்படுவதிப் போல இந்த வரிகள் மனதில் நின்று விடுகின்றன. இந்த வகைச் சாயல் அனுபவங்கள் ஆழ் மனதைச் சீண்டும் இணக்கமானதாக நமக்கும் வெவ்வேறு களங்களில் நேர்ந்திருக்கிறது. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் பல நிகழ்வுகள். இருப்பிற்கும் இல்லாமைக்கும் இடையில் அவை. இந்த இடவெளியிலான உறவுகள், அன்பு, சடங்குகள், குடும்பம், சாவு என்ற வலி முடுச்சுகள் இருக்கின்றன. இந்த முடுச்சுகளின் அர்த்தத்தை இந்த நாவலின் அனுபவங்கள் விளக்குகின்றன. நிலையற்ற பிம்பங்களாய் அலைந்து திரியும் அனுபவங்கள்  இதில்  நிரந்தரப்பதிவாகின்றன.  
{உண்மை கலந்த நாட் குறிப்புகள்.முத்துலிங்கம் நாவல்/ உயிர்மை பதிப்பகம் வெளியீடு, 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. விலை  ரூ 175}
                                                subrabharathi@gmail.com