காப்பியக்களன்கள்
கருத்தரங்கு : கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் 3/2020
சிலப்பதிகாரம்
முதல் சேக்கிழார் வரை அருமையான சில
உரைகள். உயர்நிலைப்பள்ளி/கல்லூரிப் பாட்த்திட்டங்களில் காப்பியங்களின்
சிறுபகுதிகளைப் படித்து மறந்து விட்டாச்சு.
காப்பியக்களன்கள் கருத்தரங்கு அக்காப்பியங்களை நினைவு கொள்ள நல்ல வாய்ப்பு
.
தெ.
ஞான சுந்தரம் : வால்மீகியை கடந்த கம்பன்... அருமையான உரை . தமிழ்ப்பண்பாடு
சார்ந்து வால்மீயின் பிரதியிலிருந்து மாற்றம் செய்த கம்பனின் போக்குகள் பற்றி
விவரித்தார். அருமை.
ராணுவப்பயிற்சியும்
கட்டாய ராணுவ சேவையும் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது ஓன்று
சேக்கிழார் காலத்தில் இருந்ததை பெரிய புராணம் பேசுகிறது என்றார் பழ .முத்தப்பன்
அரசியலில்
மதத் தலைவர்களுக்கு இருந்த அதிகார முக்கியத்துவம் பற்றிப் பெரிய புராணம் பேசுகிறது
என்றார் பழ .முத்தப்பன்… அப்படியா சேக்கிழார் அய்யன்மீர் .
ராணுவப்பயிற்சியும்
கட்டாய ராணுவ சேவையும் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பது ஓன்று
சேக்கிழார் காலத்தில் இருந்ததை பெரிய புராணம் பேசுகிறது என்றார் பழ .முத்தப்பன்
சீவகனின்
யாத்திரை : சீவகசிந்தாமணி பற்றி பாண்டி
சேதுபதியின் 15 நிமிடத்துக்குள்ளான அருமையான உரை. சீவகசிந்தாமணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பற்றி இருக்கும் பல விசயங்களைச் சொன்னார். தீயிலிருந்து யானைகளைக்
காப்பாற்றல். பயணக்குறியீடாய் பல
சுற்றுச்சூழல் பற்றிய குறிப்புகள் அருமை
ஆனந்த
குமார். மொழிபெயர்ப்பு செயல்பாடு பண்பாட்டுப் பனுவல். மறு உற்பத்தியாக்கம்,
அரசியல் அதிகாரம் உட்பட பல உள்ளுறை செயல்பாடுகள் பற்றிய நல்ல உரை.
சிற்பி:
கா. செல்லப்பனார் அவர்களின் சேக்ஸ்பியர்
இளங்கோ ஒப்பீட்டு ஆய்வு நூல் அவரின் முனைவர் பட்டக் கையேடு தமிழில் ஒரு
சாதனை..ஒப்பிட்டு இலக்கியத்தில் பெரிய மைல் கல் அது
கா.செல்லப்பன்
: சிலப்பதிகாரம் பெரும் காப்பியம் அல்ல என்போர் சிலர் .அறம் , பொருள் இன்பம் பற்றி
பேசி, வீடு பற்றிப் பேசாததால் அப்படியொரு
நிராகரிப்பு உண்டு
கண்ணகி:
தமிழ் இலக்கிய மரபில் ஒரு சாதனை. தமிழ் தேசியக்காப்பியம் சிலப்பதிகாரம்.. .கண்ணகி..Domestic heroin , political warrior ,
not regional god.. national symbol
இன்றைய
பெண்ணியவாதிகள் கொண்டாடும் பெண் தன் உடலால் பேசுகிறாள் என்பதற்கு கண்னகி ஒரு
உதாரணம், கண்ணகி மார்பை அறுத்து உடலால் பேசினாள். அடிமைப்படுத்தப்பட்ட பெண் உடல் பேசியது. கண்ணகியின் உடல் மொழிக்கு
முக்கியத்துவம் தந்தவர் இளங்கோ அடிகள்.
டாக்டர்
நல்லா பழனிச்சாமி: KMCH director கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்
கம்பனின்
கல்லறையைப் புதுப்பித்து சீராக்கும் வேலையில் ஈடுபடப்போகிறேன்., சேக்ஸ்பியரின்
கல்லறையப் போலாக்க வேண்டும் என்பது ஆசை.
முனைவர்
குப்புசாமி( தமிழ்த்துறைத் தலைவர் ) கோவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்: காதலிக்க சீவகசிந்தாமணீ படியுங்கள் . அதனை உணர
அதைப் படிக்கலாம். காதலிக்காமல் இருக்கவும் அதைப்படிக்கலாம்