சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
புதன், 22 டிசம்பர், 2010

பயணத் தொடர்:

1. பதற்றம்

பதற்றத்தில் ஆங்கிலத்தில்தான் கத்திக்கொண்டிருக்கிறேன் என்று உணர ஒரு நிமிடம் ஆயிற்று. எப்படி ஆங்கில பிசாசுள் அகப்பட்டேன் என்று தெரியவில்லை. சேவ் அலோசியஸ் அவரின் கைப்பை சோதனை முடிந்த திருப்தியில் தூரம் போய் உட்கார்ந்திருந்தார். அனைவரின் கல்கத்தா, டாக்கா விமான டிக்கெட்டுகளையும் ஒருங்கிணைத்து சரிபார்க்கிற வேலையில் இருந்தார். என் கைப்பையைக் காணவில்லை என்பதைத்தான் பதற்றத்துடன் ஆங்கிலத்தில் கத்திக்கொண்டிருந்தேன். தமிழில் ஏன் கத்தவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது.

கோவை விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனைக்காகச் சென்றதில் எனது பை மட்டும் திரும்பவில்லை. என்னவாயிருக்கும் என்று பதற்றமடைந்திருந்தேன். சற்று நகர்ந்ததும் அவினாசி பாஸ்கரன் என்ன என்று விசாரித்துவிட்டு சோதனையிடத்தில் இருந்த பெண்மணியிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் சரளமான இந்தி பேசியது ஆச்சர்யமளித்தது. அவர் ஏன் இந்தியில் பேசுகிறார். தமிழிலேயே கூட கேட்கலாம். அல்லது ஆங்கிலத்தில். ஆனால் சோதனையிடப் பெண்ணின் உடம்பும் முக வாகும் வடக்கத்திய தோற்றத்தைக் கொடுத்து இந்தியில் பேச வைத்திருக்குமா? சட்டென ஆங்கிலமும் அவருக்குக் கைகூடவில்லையா என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தப்பெண் கீழே கிடந்த என் கைப்பையைக் காட்டினாள். அதனுள் கைப்பேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் இருந்தன. பாஸ்கரன் மீண்டும் சரளமாக இந்தியில் பேசியதும் இந்த இளம்பெண் சோதனைக்கு மீண்டும் என் கைப்பையை அனுப்பினாள். அது மீண்டு வந்தபோது என் பையைத் திறக்கச் சொன்னாள். ஒரு புத்தகப் பண்டல் முழுமையாக உறையிடப்பட்டதாக இருந்தது. அதை சேவ் அலோசியஸ் என்னிடம் விமான நிலைய முகப்பில் கொடுத்திருந்தார். அதனுள் எனது தேநீர் இயைடவேளை நாவலின் திருமதி பிரேமா நந்தகுமாரின் மொழிபெயர்ப்பிலான ஞழவந ருறேசவைவவந« டுநவவநசளஞ ஆங்கில பிரதிகள் மற்றும்¬ கூ£ந டுயளவ ளுலஅடிலே என்ற எனது தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் பிரதிகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கோவை பாலகிருஷ்ணன்) இருந்தன. அவை இரண்டையும் சேவ் அலோசியஸ் வெளியிட்டிருந்தார். வங்கதேசம் செல்வதையொட்டி சில பிரதிகளை அவரிடம் கேட்டிருந்தேன்.சோதனைப் பெண் பண்டலைக் காட்டி என்னவென்று கேட்டார். கூ£ந ருறேசவைவந« டுநவவநசள பிரதியொன்று பையில் இருந்ததை எடுத்துக்காட்டினேன். Òஓ... எழுத்தாளரா... புத்தகமாÓ என்றாள்.

அந்த இரண்டு நூல்களுமே நடுப்பக்கத்தில் பின் அடித்த விதமான பைண்டிங் முறையில் இருந்ததால் காப்பர் ஒயர்களாகவும், அவற்றின் துண்டுகளாகவும் தெரிந்திருக்கிறது. பரிசோதனையில் குண்டுகளும், அபாயப் பொருட்களும் இப்படித்தான் ஒயர்களாகவும். துண்டுகளாகவும் தென்படுமாம். புத்தகங்கள் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட விதம் ஏதோ பல எலக்ட்ரானிக் கார்டுகளை ஒன்று சேர்த்து வைத்தவிதமாய் இருந்திருக்கிறது. அந்த பண்டல் புத்தகங்களது என்று தெரிந்ததும் கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. ஆசுவாசமாக இருந்தது. பதற்றம் குறைந்துவிட்டது.

ஒரு மாதத்திற்கு மேலாக வங்கதேசம் பயணத்தையொட்டி பதட்டம் வந்துவிட்டிருந்தது. அலுவலகத்திலிருந்து பெறப்படவேண்டிய என்ஓசி தரப்படாமல் இருந்தது. சில புரிதல்களுக்காக அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டு சங்கடமளித்துக் கொண்டிருந்தது. எனது முந்தின வெளிநாட்டுப் பயணங்களில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சிங்கபூர், இந்த தாமதமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கவில்லை. வழக்கமாய் கணக்கியல் துறையும், கண்காணிப்புத் துறையும் ஆட்சேபணைகள் எழுப்பாதபோது சுலபமாகக் கிடைத்துவிடும். இந்த முறை பயணப்படுகிறதுக்கு முதல்நாள் கூட உத்தரவாதமாய் எதுவும் தெரியவில்லை. எங்கள் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்திடம் என்ஓசி தரப்படாததன் காரணத்தைக் கேட்டிருந்தார். கோவை அலுவலக மேலாளரை இறுதியாகச் சந்திக்கச் சொன்னார் பாஸ்கியும், கோவை வி.சுப்ரமணியனும் மேலாளரிடம் எனது பயணத்திட்டத்தையும் விபரங்களையும் தந்தேன். நான் எழுத்தாளர் என்ற விபரக் குறிப்புகளையும் தந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு திருப்தியடைந்தார். அந்த வாரம் குசடிவே டு¬நே பத்திரிகையில் (அக்டோபர் 8, 2010) னுச¬எந« வடி னநளயிசை என்ற தலைப்பில் திருப்பூர் தொழில் வளர்சியினூடாக அது தற்கொலைக் களமாகியிருப்பதைப் பற்றி வந்த கவர் ஸ்டோரி 24 பக்கக் கட்டுரையில் எனது பேட்டி ய§ஜிலீமீ ஷிவீறீமீஸீt ஜிக்ஷீணீரீமீபீஹ் என்ற தலைப்பில் வந்திருப்பதையும் மேலாளரிடம் காட்டினேன். அவர் கீழ் மட்டத்திலிருந்து கோப்பு வரவில்லை, விசாரிப்பதாகச் சொன்னார். காத்திருந்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு வந்த கைப்பேசி அழைப்பில் மாலையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்கள். ஆறுதலாக இருந்தது. மாலைவரை கோவையில் காத்திருந்து வாங்கிச்செல்ல எண்ணியிருந்தேன். மாலையில் சென்னை மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்று வந்தபின்தான் தரமுடியும் என்றார்கள். தொழிற்சங்க தலைவர் புறப்படுங்கள் பிறகு பார்க்கலாம் என்றார்.

சான்றிதழ் இல்லாமல் கிளம்பி விட்டால் துறை சார்ந்த நடவடிக்கைக்கு வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டுப் பயணத்தை இந்த திகிலுடன் சுவாரஸ்யப்படுத்த முடியாது. சேவ் அலோசியஸிடம் இதை தெரிவித்தால் சங்கடமே. கோவை, கல்கத்தா, டாக்கா, போக வர விமான டிக்கெட்டுகள், டாக்காவில் தங்கும் விடுதியின் முன்பதிவு விபரங்கள் ஆகியவற்றைத் தந்திருந்தார். எப்படியும் கிளம்பி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

அலுவலக ரீதியான நடவடிக்கை என்றால் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பது மனதிலிருந்தது. பதற்றத்துடனே வெளிநாட்டுப் பயணம் என்பதில் விமான நிலைய கைப்பை சோதனையும் அமைந்துவிட்டது.

சென்னை விமானத்திற்காக காத்திருந்தோம். சிஎஸ்டிஈ பாஸ்கரன் அடுத்தவாரம் திருப்பூரில் நடைபெற உள்ள கல்வி உரிமை மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததை ஞாபகப்படுத்தினான். பழ.விசுவநாதன் அவர்கள் கனவு சார்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தேன். கல்வி உரிமை சட்டம் பற்றி விரிவாய் சொல்ல ஆரம்பித்தார். திக்ஷீஷீஸீt லிவீஸீமீ என் பேட்டியைப் படித்தார். அதையொட்டி திருப்பூரில் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தேன்.
கடைசி அத்தியாயங்களில் கல்வி உரிமை பற்றியும், திருப்பூரின் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றியும் விரிவான கட்டுரைகளையும், பிரண்ட்லைன் என் பேட்டியின் தமிழாக்கத்தையும் இணைத்திருக்கிறேன்.

வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச் சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்து கொண்டும், அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப்பற்றி எடுத்துரைக்கிறார். பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “ புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப்போராட்டம் தீவிரம் பெற்ற பின்பு வெளிவந்த படங்கள் பற்றிய விரிவானப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப்போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னும் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற மனிதர்களின் உளவியல் சிக்கலை இக்கட்டுரைகள் முன் நிறுத்துகின்றன. முடிந்து போய் விட்ட விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவை முன்னிறுத்தும் இந்நூல் புனைவுப்படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் ஆகியப் பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முப்பதாண்டு கால உக்கிரமான போரில் பாதிக்கப்பட்ட கிராமப்புற சிங்கள் ஆண் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுருக்கும் சிக்கல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து மனித அவலத்தை எவ்வித இன் பாகுபாடுமின்றி முன் வைத்திருப்பதில் ராஜேந்திரனின் அக்கறையை நேர்மையாகக் கொள்ளலாம். இலங்கையின் தெற்கிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள் ஆண்கள், பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இடம் பெயர்கிறார்கள். சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபிரிவதற்காக இளம் பெண்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வது போலவே வளைகுடா நாட்டுவீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த இடம் பெயர்வில் அவர்கள் எதிகொள்ளும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சொல்லும் படங்களை ராஜேந்திரன் விரிவாக எடுத்துரைக்கிறார்.

.

விடுதலைபுலிகளுக்கும் இலங்கைப்படையினருக்குமான மோதல் குறித்த படங்களை முன் வைத்து தமிழரது கோரிக்கை நியாயங்களை ஒட்டி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சிங்கள இயக்குனர்களின் பார்வையும் வெளிப்படுகிறது.

250க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் இயக்கம் அவற்றில் சமூக நிலைபற்றிய பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறது. விடுதlலைப்புலிகளால் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட முழு நீளப் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை மையமாகக் கொண்ட சாகசப்படங்களாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ஹாலிவுட் போர்ப்படங்கள் தமிழ்த்துணைத்தலைப்புகளுடன் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. ஈழமக்களின் வாழ்க்கை அவலம் குறித்த ’ஆணிவேர் ‘ போன்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று ஈழத்திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் செய்தியை அழுத்தமாக முன் வைத்திருக்கிறது. திரைப்படம் குறித்தப் பயிற்சி வகுப்புகளுக்காக புலிகள் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக இயக்குனர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஈழத்திற்கான திரைப்படத்துறை , திரைப்பட கலாச்சார இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

ஈழப்போராட்டம் தமிழ்த்திரைப்பட சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பல படங்களை முன்நிறுத்திப் பேசுகிறார். அவற்றில் அரசியல் நீக்கப்பட்ட கட்டாயத்தன்மையின் அவலம் குறித்தும் சொல்கிறார். “ கன்னத்தில் முத்தமிட்டால் “ முதற்கொண்டு ‘ சையனைட் ‘ முதலானவை அதற்கு பலியாகியுள்ளன. ஈழத்தமிழர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையூடே சிங்கள தேசியம் தன்னை வளர்த்துக் கொண்ட்தையும் ஈழத் தமிழ் மக்களின் கலாச்சார ஒடுக்குமுறை சிக்கலுக்கு மத்தியில் சிங்களவர்களின் உணர்ச்சி குறிப்பிட்த்தக்கது என்கிறார். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஈழத்தமிழர்களின் தனித்தப் பண்புடனான ஆதார திரைப்பட உருவாக்கத்தை தடுத்திருக்கிறது என்பதும் இந்நூலில் கவனிக்கத்தக்கதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்றுள்ள நிலை பற்றி வருத்தத்துடனே எடுத்துரைக்கிறார். இனி குறும்படங்கள் அங்கிருந்து வராது. தமிழகத்திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் விரக்தியிலும், மவுனத்திலும் கையாலாகத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்பிக்கை தரும் ஈழம் பற்றிய படங்கள் வர வாய்ப்பில்லை. இதற்கு விதிவிலக்கான உதாரணமாக நம்பிக்கை விதைகளைக் கொண்டு நார்வே நாட்டு சுபாஷின் சமீபத்திய ‘ வன்னி எலிகள்’ குறும்படம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“ ஒரு ஜோடி எலிகள் வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்மின் கூடாரங்களில் அலைந்து திரிகின்றன. அகதிகளின் கூக்குரல். பசி ஓலத்தில் சிறுவர் சிறுமிகள். இளைஞர்கள் மீதான சித்ரவதை. பாலியல் வல்லுறவால் கதறும் பெண்கள். கைத்துப்பாக்கிகள் எல்லாவற்றுக்கும் நிரந்தரப்புள்ளி வைக்கின்றன. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள் எலிகளைப் போலவே மனிதர்களும் வேட்டையாடி அழிக்கப்படுகிறார்கள். எலிகள் ஒழிந்த உலகம் என்பது சாத்யமேயில்லை “


” புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ யமுனா ராஜேந்திரன் நூல்

ரூ 140/ உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18

---------------- சுப்ரபாரதிமணியன் ----------------
( subrabharathi@gmail.com )