சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 27 மே, 2019

*   திருப்பூர் சக்தி  விருது 2019  விழா  (பெண் படைப்பாளிகளுக்கான சிறந்த படைப்புகளுக்காக)                          *   பெண் படைப்புலகம் கருத்தரங்கு
... 2/6/19 ஞாயிறு மாலை.4 மணி..  பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,
திருப்பூர் சக்தி  விருது 2019  விருது பெறுவோர்
உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , .கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர்இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் கமலதேவி  உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி,         வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்
வருக ..


   தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
*   திருப்பூர் சக்தி  விருது 2019  விழா *   
... 2/6/19 ஞாயிறு மாலை.4 மணி..  பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,


தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன் 
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
சிறப்பு விருந்தினர்கள் : திருவாளர்கள் சுதாமா கோபாலகிருஷ்ணன், பித்தன் நடராஜன், கேபிகே செல்வராஜ்
திருப்பூர் சக்தி  விருது 2019   
விருது பெறுவோர் :
உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , .கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர்இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் கமலதேவி  உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி,         வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர், ஓவியர் ஏ .தர்ஷணி கோவை
* ஓவியக்கண்காட்சி இயற்கை ஓவியங்கள் “  மரம் அறிய..” .
ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி,   ஆகியோரின் ஓவியங்கள்
*   நூல் வெளியீடு :
சுப்ரபாரதிமணியன் “  திருப்பூர் “ ( திருப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகள்  தொகுப்பு - நிவேதா பதிப்பகம் சென்னை வெளியீடு , ரூ125  )
* நூல் அறிமுகம் .:  *
* சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் 100 “ –சி.ரவி .( திருப்பூர் பற்றிய கட்டுரைகள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். , திருப்பூர் மாவட்டம் வெளியீடு ரூ 100 )
* பெண் படைப்புலகம் கருத்தரங்கு : விருது பெறும் பெண் படைப்பாளிகள்
நன்றியுரை :தோழர்  சண்முகம் 

வியாழன், 23 மே, 2019

திருப்பூர் சக்தி  விருது 2019  

விருது பெற்றோர்: மதிப்பிற்குரியோர்
உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர்,  இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் ,  கமலதேவி  உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி,         வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர் ..ஓவியர்  ஏ. தர்சிணி கோவை
�. மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்

* இரண்டாம் நாள்  சில நல்ல அமர்வுகள் இருந்தது ஆறுதல்




இரண்டாம் உலகக் குழந்தை இலக்கிய மாநாடு : சுப்ரபாரதிமணியன்
 * தமிழில் வரும் சிறுவர் இலக்கிய நூல்கள் அரைகுறையானவை என்றார் இலங்கை ஓகே குணநாதன் . அவரின் அரைகுறை வாசிப்பில்..
* ரகசிய மாநாடு போல் இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பே இல்லாமல் முடிந்தது துயரமானது.
சென்றாண்டு கோலாலம்பூரில் இதன் முதல் மாநாடு நடந்தது. இரண்டாம் மாநாடு தமிழ்நாட்டில்... 10% கூட அதன் தீவிரத்தில் இங்கு இல்லை . பலரின் கருத்து இப்படி. மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்
* காட்சி வடிவத்திற்கு தமிழ்ச் சிறுவர் இலக்கியம் இடம் பெயர வேண்டிய சூழல் என்ன . ஒ்வியர் மருதுவின் சிறப்பான உரை.
* சென்றாண்டு கோலாலம்பூரில் இதன் முதல் மாநாடு நடந்தது. இரண்டாம் மாநாடு தமிழ்நாட்டில்... 10% கூட அதன் தீவிரத்தில் இங்கு இல்லை . பலரின் கருத்து மலேசியா பாலமுருகனின் 3 சிறார் நூல்கள் பற்றிிய மலேசியா குணநாதனின் சிறப்பான ஆய்வு திண்டுக்கல் மாநாட்டில்..இப்படி. மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்
* இரண்டாம் நாள்  சில நல்ல அமர்வுகள் இருந்தது ஆறுதல்




Puthiya thalaimurai issue 5/19
பரவும் தீ  : சுப்ரபாரதிமணியன், திருப்பூர்

சமீபத்தில் பக்கத்து வீட்டிலிருக்கும்  ஒரு சிறுவன் ராமுன்னி தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட போதுதான் எனக்கு அறிமுகமானான்.அவனின் அலறல் சப்தம் என்னை அவனைப் பற்றி விசாரிக்கச் செய்தது. கேரளாவிலிருந்து இடம்பெயர்ந்த சிறுவன் அவன் . குழந்தைத் தொழிலாளிதான் 14 வயது
 அதையொட்டி   அந்த பனியன் தொழிற்சாலை ( வீட்டில் இருக்கும் நாலு நாலு பேர் மட்டுமே அந்தத் தொழிற்சாலையில் வேலை ஆட்கள்முதலாளி என) யில் ஒரு  தீத்தடுப்பு முயற்சிக்காக நண்பர் பேசிக்கொண்டிருந்த போது இன்னொரு நண்பர் சிரித்தார் . நாலு பேர் இருக்கிற கம்பெனிக்கு பயர் சிறப்பு சர்வீஸ் வேணுங்களா.
டாக்காவில் நடந்த ஒரு தீ விபத்து ஞாபகம் வந்தது. அது திருப்புமுனை தீவிபத்து
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த இலக்கு 2020இல் சாத்தியமாகும் என்று 5 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது .ஆனால் தற்போது அடைந்துள்ள சில பின்னடைவுகளால் அது இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி போய் உள்ளது.திருப்பூர் நிச்சயம் அதை எட்டும்.
 சமீப ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்கு சவாலாக இருந்து வரும் நாடு வங்கதேசம் . திருப்பூருக்கு போட்டியாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக இருந்திருக்கிறது  வங்கதேசம். இந்த ஆண்டில் சில பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது அதற்கு காரணம் வங்கதேசத்தின் அதிவிரைவு முன்னேற்றம் அதிகப் பெண்களின் உழைப்பிலான பின்னலாடை ஏற்றுமதியில் என்பதால் உலக நாடுகளின் கவனத்திற்கு அந்த நாடு சென்றது .ஆனால் உலக நாடுகள் நியாய வணிகம், கார்ப்ரேட் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றை கருத்தில்  கொண்டு பல கேள்விகளை எழுப்புகிறது. சமீபத்தில் நடந்த சில பின்னலாடை தொழில் விபத்துகள் அவர்களின் கவனத்திற்கு சென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில்  ஐந்து பின்னலாடை தொழிலகங்களைக் கொண்ட ராணா பிளாசா கட்டிடம் விபத்தில் இடிந்து போனது.  1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதே ஆண்டில் டாக்காவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஆடைத் தொழிலில் பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனார்கள். இந்த இரண்டு விபத்துகளுக்கு பின்னால் அங்குள்ள தொழிலாளர் நிலை குறித்து உலக நாடுகள் தங்கள் கவனத்தை எடுத்துக் கொண்டன.  தொழிலாளர் நலன் பாதுகாப்புதொழில் பாதுகாப்பு , பின்னலாடை தொழில் துறை இடப்பாதுகாப்பு , தொழில் இடம் ,தொழிலாளர்கள் வாழ இணக்கமானச் சூழல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு தயாராக வங்க தேசம் இல்லை.  தொழில், தொழிலாளர் பாதுகாப்புத்தன்மை ஆகியவற்றில் வங்கதேசம் பின்னடைந்து இருப்பதை உலக நாடுகள் கண்டறிந்தனர். அந்த வகையில் ஆடை ஏற்றுமதியில் வங்கதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது வங்கதேசம் ஆடை தொழில்துறை 84 சதவீத பங்கு வகிக்கிறது. ஆனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பதில் ( ஜிடிபி ) அதன் பங்களிப்பு குறைந்திருப்பது ஆரோக்கியமான நிலையல்ல  என்றும் கருதப்படுகிறது. காரணம் அங்கு உள்ள தொழிலாளர்கள் குறித்தத் தீவிரமான முறையிலான  அக்கறையின்மை, நதிகளின் சீரழிவு, சாயப்பட்டறைகளின் நிலத்தடி நீர் மாசு போன்றவை புதிய முதலீடு போடுவதற்கு உலகநாடுகள் தயங்கும்படி செய்தன. மற்றும் சர்வதேச நிறுவனங்களால் பின்னல் ஆடை  சார்ந்த விலை குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி வருவாயில் அங்கு குறைவு ஏற்பட்டு இருக்கிறது .தீவிபத்துகள் மற்றும் கட்டட பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு அளவுகோல்கள் அவ்வளவு தீவிரமாக  இல்லை என்றும் சொல்லப்படுகிறது. .நெருக்கடிமிக்க துறைமுகம்அது சார்ந்த தொழில் கட்டமைப்பு வசதி குறைபாடுகள் அங்கே நிறைய இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை கொண்டு சேர்க்கிற விதத்தில் பல வகை பின்னடைவுகளும் உள்ளன.தொழிலாளர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி மைய செயல்பாடுகள் தீவிரமாக இல்லாமல் அந்நிய முதலீட்டை குறைத்திருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசம் ஏதோ ஒரு வகையில் திருப்பூருக்கு போட்டியாக இருந்தது .ஆனால் சமீப ஆண்டுகளில் திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு அம்சங்கள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை ஒப்பிடுகையில்  அப்படி வங்கதேசத்தில் இல்லாததால் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவை  வரும் ஆண்டுகளில் திருப்பூர் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
ராமுண்ணி போன்ற இடம்பெயர்ந்த,, குழந்தைத் தொழிலாளிகளீன் உழைப்பில் தான் இந்த எதிர்பார்ப்பு உள்ளது.
 டாக்காவிற்கு  சில  ஆண்டுகள் முன் சென்றிருந்தேன் அங்கு தொழிற்பேட்டை என்று தனியே ஏதுமில்லாமல். பத்து மாடி, 15 மாடி என்று உள்ள  கட்டிடங்களில் சர்வ சாதாரணமாக பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்தியாவின் உற்பத்தியில் 90% என்பதால் இந்த டாக்கா  தீ விபத்து பற்றி சரியாக கவனத்தில் கொள்ள வேண்டியது தான்.அது போல் எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் என்று பக்கத்து வீட்டுக்கார்ர்களிம் சொன்னேன்.
 தமிழ்நாடு பல தொழிற்சாலைகளில் முன்னேறுகிறது .ஆனால் பாதுகாப்பு அம்சத்தை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறாகள் ..
 ரானா பிளாசில் பனியன் தொழிற்சாலைகள் வங்கிகள் வியாபாரக் கடைகள் இருந்திருக்கின்றன. லேசாக ஏற்பட்ட விரிசல் மாடுகளுக்கு சட்டெனப் பரவிவிட்டது. இடிய ஆரம்பித்தது.  நாலு மாடிக்கு மணிக்கு அரசு அங்கீகாரம் உள்ளது.  இன்னும் 5 மாடி கட்டிடம் அனுமதியில்லாமல் அதன்மேல் கட்டப்பட்டு இருந்தது.  அதில் ஐந்து பனியன் கம்பெனிகள் முக்கியமானவை. அவைகள் வால்மார்ட், பெனிட்டன் உட்பட ட பல முக்கிய பிராண்டுகள் தரும் ஆர்டர்களை  உற்பத்தி செய்பவை .
டாக்காவில் 2006ல் ஸ்வட்டர்  தொழிற்சாலையில் ஓர் முக்கிய விபத்து நடந்தது. பிறகு  2013இல் மிகப்பெரிய விபத்து கூட. கட்டிடம் இடிந்து மாண்டனர்.
 பெரிய பிராண்டுகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர் தயாரிப்பு சங்கிலியில் அக்கறை கொள்வதில்லை.  உள்ளூர்காரர்கள் அவர்கள் விரும்பும் பொருட்களை  உற்பத்தி செய்யபிராண்டுகள் அவர்களின் லேபிள்களை வைத்து வெளியிடுகின்றன . 52 விபரங்களுக்கு 52 பேஷன் ஷோ , 52 வகை வடிவமைப்பு ஆடைகளில் அக்கறை செலுத்துபவர்கள் குறுகிய காலத்தில் தங்களின் உற்பத்தையை நிறைவு செய்யும் தொழிற்சாலைகளையே விரும்புகின்றனர்
பிராண்டுகள் பொருட்களின் உற்பத்தியின் இறுதி கட்டத்தில் அக்கறை கொள்வது, பாலம் சம்பாதிப்பது என்றில்லாமல் அதன் தொடர் நிகழ்வுகளிலும்  பங்கேற வேண்டும் என்பது இன்றைய நியாய வணிகக் கொள்கையில் பெரும்பாலும் வலியுறுத்தப்படுவது,
இது பற்றி சில விசயங்களை இங்கு முன் வைக்கிறேன்.: ,
தொழிற்சாலை சூழல் சரியாக இல்லாத போது வேலை செய்ய மறுக்கும் உரிமையும், சுதந்திரமும் சில மேற்கத்தைய நாடுகளில் உள்ளனஇந்தியாவில் இது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
அரசும்  அவசர போக்கு கொண்ட தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் இடஞ்சல்களாக உள்ளன. பத்து மாடிக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வாங்கிக்கொண்டு 20 மாடிகள் கட்டுபவர்களின் தொழிலாள எதிர்ப்புக் கட்டமைப்பை  முதலாளிகள்  சாதாரணமாகவே உருவாக்குகிறார்கள் 
          தொழிற்சங்கங்கள் தன்னார்வ குழுவினர்கள் சாதக பாதகங்கள் ர்கள் தொழிற் கொள்கை உருவாக்கப்படும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
 பிராண்டுகள் சூழல்அறம், தொழில் அறம்  சார்ந்தவற்றில் அக்கறை கொள்ள வேண்டும்
தொழிலாளர் நலன் முன்னிட்டு அரசின் கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும்
அரசு ஊழியர்கள் அதை அமல்படுத்துவதில் சமரசமற்றஊழலற்றப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.
 குறைகளை களையும் குழுக்களின் நிர்வாக செயல்பாடுகள் அமைய வேண்டும்
பாதுகாப்பு நடவடிக்கைகள் ( விபத்து உடல் நலம் காப்ப்பில் )  முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
 ஜனநாயகரீதியாக கண் குழு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
 புரோக்கர்கள் அரசியல்வாதிகள் சாதி அக்கறை கொண்டவர்களை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லதல்ல
தொழில்துறை சார்ந்த தன்னார்வக் குழுக்களின் நடவடிக்கைகளால் பிராண்டுகள் வேறு நாட்டு வியாபார முயற்சிகளுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற கிசுகிசு ஒழிப்பில் முறையான நடவடிக்கை தேவை
 ஒரு இடத்தில் தண்ணீர் பானை வைத்தால் போதாதா. தொழிற்சாலையின் 10 இடங்களில் வைக்க வேண்டுமா என்பது முதற்கொண்டு மேம்பாட்டு நடவடிக்கைகள், அதிக செலவை வரவழைக்கும் என்பதை நினைத்து நடவடிக்கைகளை கைவிடுவது தொழில் முயற்சிக்கு மட்டும் முட்டுக்கட்டை ஆகும்.
 பதினேழு வயது தொழிலாளியோ, 120 நாள்  வேலை மட்டும் என்று சமரசப் பேச்சுக்கு, அவசரப்போக்கு தேவையில்லை .
அரசும் தொழிற் சங்கங்களும் மற்றும் அவற்றின்  பங்களிப்புதலையீடு இல்லாத  தொழில் உலகம்  பற்றிய கனவும்  எதார்த்த நடவடிக்கைகளும் பலருக்கு இருப்பது ஆச்சரியமே.
  அவசரநிலை நடவடிக்கைகள் என்பதை  தற்காலிகமானவை.  நிரந்தர தீர்வு  தொழில் மற்றும் தொழிலாளர்கள்  பாதுகாப்பு என்பதே  மிகவும் முக்கியம்
  தீபிடிக்கும் விபத்து ஒரு மாதிரிதான்.பின்னலாடையில்  250 பிராண்டுகள்  முன்னிலையில் இருப்பவை அவற்றில் 100 சூழல்அறம்வியாபார அறம் சார்ந்த கொள்கைகளில்  ஈடுபடுமானால்  தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு  முறையாகவே உருவாகிவிடும்
 ஒட்டுமொத்த தொழிலாளர்கள்  சமூகம்  மீள  வழி கிடைக்கும். ராமுண்ணிகளின் கதறல் கேட்காது.
( Subrabharathimanian.. subrabharathi@gmail.com
Fb: 1. Kanavu Subrabharathimanian Tirupur,
 2. subrabharathimanian palanisamy   :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com

: 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 )

ஞாயிறு, 12 மே, 2019

கா சு. வேலாயுதம்  “ சிட்டு செல்போன் 2.0.  “கட்டுரைத் தொகுப்பு
சுப்ரபாரதிமணியன்

சிட்டு செல்போன் 2.0 ஒரே மூச்சில்  ஒரு மணீ நேரத்துள் படித்தேன்.சுவாரஸ்யம்
2.0  சிட்டுகள் பற்றி இவ்வளவு பெரிய நூலா என்றிருந்தபோது 2.0  திரைப்படம் பற்றியும், சிட்டு உங்கள் வீட்டுச் சூழலில் வளர்ப்பில் ஏற்படுத்திய பாதிப்புகள்செல்போன் உங்கள் பணிப் பாதையில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்று ஒரு நாவல் தன்மையில் விவரித்திருந்தீர்கள்.     தெளிந்த நீரோட்டமான நடை. சமகால அரசியல், கொங்கு கலாச்சார அம்சங்கள் இணைந்த போக்கு..  ஒரு பத்திரிக்கையாளரின் பார்வையும் வேகமும் தெளிவாக இருந்தது. தாங்கள் பத்திரிக்கையாளனாக நாங்கள் படைப்பிலக்கியத்தில் இழந்தது பற்றிய  ஏக்கமும் வந்தது.
முத்தாய்ப்பாய் நிலங்கள் தனியுடமையாக இருக்கலாகதென முடித்திருப்பதில்  தங்களின் விசால பார்வையும் தத்துவார்த்த நிலைப்பாடும் தெரிந்தது.பல அடுக்குகள் . பல பரிமாணங்கள் என்று இந்நூல் விளங்குவதுதான் இதன் முக்கிய சிறப்பு
( ரூ  60. கதை வட்டம் கோவை வெளியீடு, 9944498033 )


* திருப்பூர் நூற்றாண்டு ஆனதை தமிழக அரசு, திருப்பூர் மாநகராட்சி கொண்டாட வேண்டும்.. .தவற விட்டு விட்டனர் . தமிழக அரசுக்கு தமிழ்ச்செம்மல் விருது. இந்திய ஜனாதிபதி விருது பெற்ற திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வேண்டுகோள்

* நூற்றாண்டை மறந்த திருப்பூர்
 திருப்பூர் நகராட்சி 1917 இல் உருவானது தற்போது மாநகராட்சி ஆக மாறியுள்ளது 2017இல் நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்க வேண்டும். திருப்பூர் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் “  திருப்பூர் 100 என்ற புத்தகம் வெளியிட்டேன். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு எந்த அமைப்புகளும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை .மாநகராட்சியும் அக்கறை எடுக்கத் தவறிவிட்டது என்று ஆதங்கப்படுகிறார் சுப்ரபாரதிமணியன்  

* திருப்பூர் வரலாறு இளம் தலைமுறைக்கு சொல்பவர் யார் கேட்கிறார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்    
                  வரலாறு பல துறைகளுக்கு முன்னோடி  மட்டுமல்ல படிப்பவர்களுக்கும் கூட பாடம். இன்றைய தலைமுறையினர் பலருக்கும் வரலாற்றின் மீது வெறுப்பு குறிப்பாக அது மதிப்பெண்களுக்காக படமாக இருப்பதால். பல நேரங்களில் ஆட்சி ஆளுவர்களுக்காக வரலாறு திரிக்கப்படுவதும் உண்டு. கதையல்ல நிஜம் என்று படித்தால் நிஜமல்ல கதை என்று சொல்லத்தக்க வரலாறுகளும் இருக்கின்றன. ஆனால் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு ஊரின் வரலாறு மண்ணுக்குள் புதைந்து இருக்கின்றன. அதன் ஓசையைக் கேட்காமலேயே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் புழக்கத்திலிருந்து எண்ணுகிறபோது கூறின நிஜம் பகிரப்படும் போது ஆச்சரியம் அதிர்ச்சி மகிழ்ச்சி வேதனை என்று உணர்ச்சிப் பிரவாகமாக மாறுவோம்
சென்னையின் வரலாற்றை முத்தையா தொகுத்து தோற்றுவித்தது போன்று  கோவை திருப்பூர் உள்ளிட்ட நகரங்களின் வரலாறு உண்மைத் தன்மையுடன் முழுமையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இதை முன்னெடுத்து செய்பவர் யார் என்ற கேள்வி எழும் .அதே சமயம் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறோம் என்றால் இல்லை என்பதே பதில்.
சென்னை மாநகரின் வரலாற்றை கால முறைப்படி தொகுத்த வரலாற்று பெரியவர் எஸ் முத்தையா கடந்த 21 ஆம் தேதி காலமானார் தமிழகத்தின் தலைநகரம் உலக அளவில் பிரபலமான மாணவராக இருந்தபோதும் வரலாறு முறைப்படி கொகுக்கப்படவில்லை என்று பலரது உள்ளத்தில் இருந்த ஆதங்கத்தை போக்கியவர் 1981 மெட்ராஸ் டிஸ்கவர் இந்த புத்தகத்தை எழுதினார் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி தமிழக மக்கள் ஏராளமானோர் படித்த  நூலாகும் .தமிழகத்திலுள்ள ஒவ்வொரு நகரங்களில் பின்னணியிலும் பலராலும் அறியப்படாத வரலாறு இருக்கிறது இந்த வரலாறு மண்ணின் மைந்தர்களால் விரட்டப்பட்டு புத்தக வடிவில் ஆவணம் ஆக்கப்படுவது குறைவென்றால் அது செயற்கை கலப்பின்றி உண்மைத் தன்மையுடன் இருப்பது என்பது அதைவிட அரிதானதாக இருக்கிறது
         கோவை திருப்பூர் உட்பட பல  மாவட்டங்கள் மற்றும் நகரங்களின வரலாறு பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன
இது குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கேட்டபோது அவர் கூறியதாவது கூறியதாவது : மண்ணின் பெருமையை வரலாற்றையும் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்வதற்கு இத்தகைய நூல்கள் அதிக அளவில் வெளிவரவேண்டும் .கோவை திருப்பூர் உள்ளிட்ட உள்ளிட்டவற்றின் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன கோவையில் ஆண்டுதோறும் இதற்கென நிகழ்ச்சிகள் கூட நடத்தப்படுகின்றன. இதில் பழைய புகைப்படங்கள் இடம் பெற்ற கண்காட்சிகளும் நடைபெறுகின்றன .கவியன்பன் பாபு ,இளங்கோவன்,  மீனாட்சிசுந்தரம் வேனில்  கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கோவையில் வரலாறு சார்ந்து எழுதியிருக்கிறார்கள் புலவர் செந்தலை கவுதமன் சூலூர் வரலாற்றை தொகுத்து எழுதியுள்ளார். நான் எழுதிய 16 நாவல்களில் பத்து நாவல்கள் திருப்பூரின் வரலாற்றை சுமந்து நிற்பவை. இதேபோல் 250 சிறுகதைகளில் பெரும்பாலானவை திருப்பூரின் பின்னணி கொண்டவை திருப்பூர் குறித்து குப்புசாமி என்பவர் நூலாக எழுதியிருக்கிறார் .எழுத்தாளர் சிவதாசன் எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. இவர் திருப்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதி குறித்து மட்டும் தனியாக புத்தகம் எழுதியிருக்கிறார். இவை மண்ணில் பெருமையைப் பேசுகின்றன, இது போன்ற புத்தகங்கள் இன்னும் வெளிவர வேண்டும் இதுபோன்ற வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடுவதில் கோவையில் காட்டும் ஆர்வம் தொழில் நகரான திருப்பூரில் இல்லை என்பது குறைபாடு இவ்வாறு சுப்ரபாரதிமணியன் கூறினார் .
நூற்றாண்டை மறந்த திருப்பூர்
 திருப்பூர் நகராட்சி 1917 இல் உருவானது தற்போது மாநகராட்சி ஆக மாறியுள்ளது 2017இல் நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்க வேண்டும். திருப்பூர் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் “  திருப்பூர் 100 என்ற புத்தகம் வெளியிட்டேன். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு எந்த அமைப்புகளும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை .மாநகராட்சியும் அக்கறை எடுக்கத் தவறிவிட்டது என்று ஆதங்கப்படுகிறார் சுப்ரபாரதிமணியன்  dinamalar  29/4/19
8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003