கா சு. வேலாயுதம் “ சிட்டு செல்போன் 2.0. “கட்டுரைத் தொகுப்பு
சுப்ரபாரதிமணியன்
சிட்டு செல்போன் 2.0 ஒரே
மூச்சில் ஒரு மணீ நேரத்துள்
படித்தேன்.சுவாரஸ்யம்
2.0
சிட்டுகள் பற்றி இவ்வளவு பெரிய நூலா என்றிருந்தபோது 2.0 திரைப்படம் பற்றியும், சிட்டு உங்கள் வீட்டுச் சூழலில் வளர்ப்பில் ஏற்படுத்திய பாதிப்புகள், செல்போன் உங்கள் பணிப் பாதையில்
ஏற்படுத்திய பாதிப்புகள் என்று ஒரு நாவல் தன்மையில் விவரித்திருந்தீர்கள். தெளிந்த நீரோட்டமான நடை. சமகால அரசியல்,
கொங்கு கலாச்சார அம்சங்கள் இணைந்த போக்கு.. ஒரு பத்திரிக்கையாளரின் பார்வையும் வேகமும்
தெளிவாக இருந்தது. தாங்கள் பத்திரிக்கையாளனாக நாங்கள் படைப்பிலக்கியத்தில் இழந்தது
பற்றிய ஏக்கமும் வந்தது.
முத்தாய்ப்பாய் நிலங்கள்
தனியுடமையாக இருக்கலாகதென முடித்திருப்பதில்
தங்களின் விசால பார்வையும் தத்துவார்த்த நிலைப்பாடும் தெரிந்தது.பல
அடுக்குகள் . பல பரிமாணங்கள் என்று இந்நூல் விளங்குவதுதான் இதன் முக்கிய சிறப்பு
( ரூ 60. கதை
வட்டம் கோவை வெளியீடு, 9944498033 )
* திருப்பூர் நூற்றாண்டு
ஆனதை தமிழக அரசு, திருப்பூர் மாநகராட்சி கொண்டாட வேண்டும்.. .தவற
விட்டு விட்டனர் . தமிழக அரசுக்கு தமிழ்ச்செம்மல் விருது. இந்திய ஜனாதிபதி விருது பெற்ற
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வேண்டுகோள்
* நூற்றாண்டை மறந்த திருப்பூர்
திருப்பூர் நகராட்சி 1917 இல் உருவானது தற்போது மாநகராட்சி ஆக மாறியுள்ளது 2017இல் நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்க வேண்டும். திருப்பூர் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் “ திருப்பூர் 100 “ என்ற புத்தகம் வெளியிட்டேன். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு எந்த அமைப்புகளும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை .மாநகராட்சியும் அக்கறை
எடுக்கத் தவறிவிட்டது என்று ஆதங்கப்படுகிறார் சுப்ரபாரதிமணியன்
* திருப்பூர் வரலாறு இளம் தலைமுறைக்கு சொல்பவர் யார் கேட்கிறார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
வரலாறு பல துறைகளுக்கு முன்னோடி மட்டுமல்ல படிப்பவர்களுக்கும் கூட பாடம். இன்றைய தலைமுறையினர் பலருக்கும் வரலாற்றின் மீது வெறுப்பு குறிப்பாக அது மதிப்பெண்களுக்காக படமாக இருப்பதால். பல நேரங்களில் ஆட்சி ஆளுவர்களுக்காக வரலாறு திரிக்கப்படுவதும் உண்டு. கதையல்ல நிஜம் என்று படித்தால் நிஜமல்ல கதை என்று சொல்லத்தக்க வரலாறுகளும் இருக்கின்றன. ஆனால் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு ஊரின் வரலாறு மண்ணுக்குள் புதைந்து இருக்கின்றன. அதன் ஓசையைக் கேட்காமலேயே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் புழக்கத்திலிருந்து எண்ணுகிறபோது கூறின நிஜம் பகிரப்படும் போது ஆச்சரியம் அதிர்ச்சி மகிழ்ச்சி வேதனை என்று உணர்ச்சிப் பிரவாகமாக மாறுவோம்
சென்னையின் வரலாற்றை முத்தையா தொகுத்து தோற்றுவித்தது போன்று கோவை திருப்பூர் உள்ளிட்ட நகரங்களின் வரலாறு உண்மைத் தன்மையுடன் முழுமையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இதை முன்னெடுத்து செய்பவர் யார் என்ற கேள்வி எழும் .அதே சமயம் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறோம் என்றால் இல்லை என்பதே பதில்.
சென்னை மாநகரின் வரலாற்றை கால முறைப்படி தொகுத்த வரலாற்று பெரியவர் எஸ் முத்தையா கடந்த 21 ஆம் தேதி காலமானார் தமிழகத்தின் தலைநகரம் உலக அளவில் பிரபலமான மாணவராக இருந்தபோதும் வரலாறு முறைப்படி கொகுக்கப்படவில்லை என்று பலரது உள்ளத்தில் இருந்த ஆதங்கத்தை போக்கியவர் 1981 மெட்ராஸ் டிஸ்கவர் இந்த புத்தகத்தை எழுதினார் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி தமிழக மக்கள் ஏராளமானோர் படித்த நூலாகும் .தமிழகத்திலுள்ள ஒவ்வொரு நகரங்களில் பின்னணியிலும் பலராலும் அறியப்படாத வரலாறு இருக்கிறது இந்த வரலாறு மண்ணின் மைந்தர்களால் விரட்டப்பட்டு புத்தக வடிவில் ஆவணம் ஆக்கப்படுவது குறைவென்றால் அது செயற்கை கலப்பின்றி உண்மைத் தன்மையுடன் இருப்பது என்பது அதைவிட அரிதானதாக இருக்கிறது
கோவை திருப்பூர் உட்பட பல மாவட்டங்கள் மற்றும் நகரங்களின வரலாறு பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன
இது குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கேட்டபோது அவர் கூறியதாவது கூறியதாவது : மண்ணின் பெருமையை வரலாற்றையும் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்வதற்கு இத்தகைய நூல்கள் அதிக அளவில் வெளிவரவேண்டும் .கோவை திருப்பூர் உள்ளிட்ட உள்ளிட்டவற்றின் வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன கோவையில் ஆண்டுதோறும் இதற்கென நிகழ்ச்சிகள் கூட நடத்தப்படுகின்றன. இதில் பழைய புகைப்படங்கள் இடம் பெற்ற கண்காட்சிகளும் நடைபெறுகின்றன .கவியன்பன் பாபு ,இளங்கோவன், மீனாட்சிசுந்தரம் வேனில் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கோவையில் வரலாறு சார்ந்து எழுதியிருக்கிறார்கள் புலவர் செந்தலை கவுதமன் சூலூர் வரலாற்றை தொகுத்து எழுதியுள்ளார். நான் எழுதிய 16 நாவல்களில் பத்து நாவல்கள் திருப்பூரின் வரலாற்றை சுமந்து நிற்பவை. இதேபோல் 250 சிறுகதைகளில் பெரும்பாலானவை திருப்பூரின் பின்னணி கொண்டவை திருப்பூர் குறித்து குப்புசாமி என்பவர் நூலாக எழுதியிருக்கிறார் .எழுத்தாளர் சிவதாசன் எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. இவர் திருப்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதி குறித்து மட்டும் தனியாக புத்தகம் எழுதியிருக்கிறார். இவை மண்ணில் பெருமையைப் பேசுகின்றன, இது போன்ற புத்தகங்கள் இன்னும் வெளிவர வேண்டும் இதுபோன்ற வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடுவதில் கோவையில் காட்டும் ஆர்வம் தொழில் நகரான திருப்பூரில் இல்லை என்பது குறைபாடு” இவ்வாறு சுப்ரபாரதிமணியன் கூறினார் .
நூற்றாண்டை மறந்த திருப்பூர்
திருப்பூர் நகராட்சி 1917 இல் உருவானது தற்போது மாநகராட்சி ஆக மாறியுள்ளது 2017இல் நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்க வேண்டும். திருப்பூர் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் “ திருப்பூர் 100 “ என்ற புத்தகம் வெளியிட்டேன். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு எந்த அமைப்புகளும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை .மாநகராட்சியும் அக்கறை
எடுக்கத் தவறிவிட்டது என்று ஆதங்கப்படுகிறார் சுப்ரபாரதிமணியன் dinamalar 29/4/19
8/2635 Pandian nagar, Tirupur 641 602
/094861 01003