Puthiya
thalaimurai issue 5/19
பரவும் தீ : சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
சமீபத்தில்
பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு சிறுவன்
ராமுன்னி தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட போதுதான் எனக்கு அறிமுகமானான்.அவனின் அலறல்
சப்தம் என்னை அவனைப் பற்றி விசாரிக்கச் செய்தது. கேரளாவிலிருந்து இடம்பெயர்ந்த
சிறுவன் அவன் . குழந்தைத் தொழிலாளிதான் 14 வயது
அதையொட்டி
அந்த பனியன் தொழிற்சாலை ( வீட்டில் இருக்கும் நாலு நாலு பேர் மட்டுமே
அந்தத் தொழிற்சாலையில் வேலை ஆட்கள், முதலாளி என) யில் ஒரு தீத்தடுப்பு முயற்சிக்காக நண்பர்
பேசிக்கொண்டிருந்த போது இன்னொரு நண்பர் சிரித்தார் . ” நாலு பேர் இருக்கிற கம்பெனிக்கு பயர் சிறப்பு சர்வீஸ்
வேணுங்களா. ”
டாக்காவில்
நடந்த ஒரு தீ விபத்து ஞாபகம் வந்தது. அது திருப்புமுனை தீவிபத்து
திருப்பூர்
பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கி சென்று
கொண்டிருக்கிறது. அந்த இலக்கு 2020இல்
சாத்தியமாகும் என்று 5
ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது .ஆனால் தற்போது அடைந்துள்ள சில பின்னடைவுகளால்
அது இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி போய் உள்ளது.திருப்பூர் நிச்சயம் அதை
எட்டும்.
சமீப ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தியில்
திருப்பூருக்கு சவாலாக இருந்து வரும் நாடு வங்கதேசம் . திருப்பூருக்கு போட்டியாக
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக
இருந்திருக்கிறது வங்கதேசம். இந்த ஆண்டில்
சில பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது அதற்கு காரணம் வங்கதேசத்தின் அதிவிரைவு
முன்னேற்றம் அதிகப் பெண்களின் உழைப்பிலான பின்னலாடை ஏற்றுமதியில் என்பதால் உலக
நாடுகளின் கவனத்திற்கு அந்த நாடு சென்றது .ஆனால் உலக நாடுகள் நியாய வணிகம், கார்ப்ரேட் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றை
கருத்தில் கொண்டு பல கேள்விகளை
எழுப்புகிறது. சமீபத்தில் நடந்த சில பின்னலாடை தொழில் விபத்துகள் அவர்களின்
கவனத்திற்கு சென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில் ஐந்து பின்னலாடை தொழிலகங்களைக் கொண்ட ராணா
பிளாசா கட்டிடம் விபத்தில் இடிந்து போனது.
1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதே ஆண்டில்
டாக்காவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஆடைத் தொழிலில் பணிபுரிந்த நூற்றுக்கும்
மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனார்கள். இந்த இரண்டு
விபத்துகளுக்கு பின்னால் அங்குள்ள தொழிலாளர் நிலை குறித்து உலக நாடுகள் தங்கள்
கவனத்தை எடுத்துக் கொண்டன. தொழிலாளர் நலன்
பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு , பின்னலாடை தொழில் துறை இடப்பாதுகாப்பு , தொழில் இடம் ,தொழிலாளர்கள் வாழ இணக்கமானச் சூழல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அமைப்பு ரீதியான
மாற்றங்களுக்கு தயாராக வங்க தேசம் இல்லை.
தொழில், தொழிலாளர் பாதுகாப்புத்தன்மை ஆகியவற்றில்
வங்கதேசம் பின்னடைந்து இருப்பதை உலக நாடுகள் கண்டறிந்தனர். அந்த வகையில் ஆடை
ஏற்றுமதியில் வங்கதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது வங்கதேசம் ஆடை தொழில்துறை 84 சதவீத பங்கு வகிக்கிறது. ஆனால் உள்நாட்டு மொத்த
உற்பத்தி என்பதில் ( ஜிடிபி ) அதன் பங்களிப்பு குறைந்திருப்பது ஆரோக்கியமான
நிலையல்ல என்றும் கருதப்படுகிறது. காரணம்
அங்கு உள்ள தொழிலாளர்கள் குறித்தத் தீவிரமான முறையிலான அக்கறையின்மை, நதிகளின் சீரழிவு, சாயப்பட்டறைகளின் நிலத்தடி நீர் மாசு போன்றவை புதிய
முதலீடு போடுவதற்கு உலகநாடுகள் தயங்கும்படி செய்தன. மற்றும் சர்வதேச நிறுவனங்களால்
பின்னல் ஆடை சார்ந்த விலை
குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி வருவாயில் அங்கு குறைவு ஏற்பட்டு இருக்கிறது
.தீவிபத்துகள் மற்றும் கட்டட பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு அளவுகோல்கள் அவ்வளவு
தீவிரமாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
.நெருக்கடிமிக்க துறைமுகம், அது சார்ந்த தொழில் கட்டமைப்பு வசதி
குறைபாடுகள் அங்கே நிறைய இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை
கொண்டு சேர்க்கிற விதத்தில் பல வகை பின்னடைவுகளும் உள்ளன.தொழிலாளர்கள்
திறன்மேம்பாட்டு பயிற்சி மைய செயல்பாடுகள் தீவிரமாக இல்லாமல் அந்நிய முதலீட்டை
குறைத்திருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசம் ஏதோ ஒரு வகையில்
திருப்பூருக்கு போட்டியாக இருந்தது .ஆனால் சமீப ஆண்டுகளில் திருப்பூரில் உள்ள
தொழில் பாதுகாப்பு அம்சங்கள், கட்டமைப்பு
வசதிகள் போன்றவை ஒப்பிடுகையில் அப்படி
வங்கதேசத்தில் இல்லாததால் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவை வரும் ஆண்டுகளில் திருப்பூர்
பயன்படுத்திக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
ராமுண்ணி போன்ற
இடம்பெயர்ந்த,, குழந்தைத் தொழிலாளிகளீன் உழைப்பில் தான் இந்த
எதிர்பார்ப்பு உள்ளது.
டாக்காவிற்கு
சில ஆண்டுகள் முன் சென்றிருந்தேன்
அங்கு தொழிற்பேட்டை என்று தனியே ஏதுமில்லாமல். பத்து மாடி, 15 மாடி என்று உள்ள
கட்டிடங்களில் சர்வ சாதாரணமாக பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்தியாவின்
உற்பத்தியில் 90% என்பதால் இந்த டாக்கா தீ விபத்து பற்றி சரியாக கவனத்தில் கொள்ள
வேண்டியது தான்.அது போல் எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் என்று பக்கத்து
வீட்டுக்கார்ர்களிம் சொன்னேன்.
தமிழ்நாடு பல தொழிற்சாலைகளில் முன்னேறுகிறது
.ஆனால் பாதுகாப்பு அம்சத்தை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறாகள் ..
ரானா பிளாசில் பனியன் தொழிற்சாலைகள் வங்கிகள்
வியாபாரக் கடைகள் இருந்திருக்கின்றன. லேசாக ஏற்பட்ட விரிசல் மாடுகளுக்கு சட்டெனப்
பரவிவிட்டது. இடிய ஆரம்பித்தது. நாலு
மாடிக்கு மணிக்கு அரசு அங்கீகாரம் உள்ளது.
இன்னும் 5 மாடி கட்டிடம் அனுமதியில்லாமல் அதன்மேல்
கட்டப்பட்டு இருந்தது. அதில் ஐந்து பனியன்
கம்பெனிகள் முக்கியமானவை. அவைகள் வால்மார்ட், பெனிட்டன் உட்பட ட பல முக்கிய பிராண்டுகள் தரும்
ஆர்டர்களை உற்பத்தி செய்பவை .
டாக்காவில் 2006ல் ஸ்வட்டர்
தொழிற்சாலையில் ஓர் முக்கிய விபத்து நடந்தது. பிறகு 2013இல்
மிகப்பெரிய விபத்து கூட. கட்டிடம் இடிந்து மாண்டனர்.
பெரிய பிராண்டுகள் தங்களுக்கு தேவையான பொருட்களை
வாங்குகின்றனர் தயாரிப்பு சங்கிலியில் அக்கறை கொள்வதில்லை. உள்ளூர்காரர்கள் அவர்கள் விரும்பும் பொருட்களை உற்பத்தி செய்ய, பிராண்டுகள் அவர்களின் லேபிள்களை வைத்து
வெளியிடுகின்றன . 52 விபரங்களுக்கு 52 பேஷன் ஷோ , 52 வகை வடிவமைப்பு ஆடைகளில் அக்கறை செலுத்துபவர்கள்
குறுகிய காலத்தில் தங்களின் உற்பத்தையை நிறைவு செய்யும் தொழிற்சாலைகளையே
விரும்புகின்றனர்
பிராண்டுகள்
பொருட்களின் உற்பத்தியின் இறுதி கட்டத்தில் அக்கறை கொள்வது, பாலம் சம்பாதிப்பது என்றில்லாமல் அதன் தொடர்
நிகழ்வுகளிலும் பங்கேற வேண்டும் என்பது
இன்றைய நியாய வணிகக் கொள்கையில் பெரும்பாலும் வலியுறுத்தப்படுவது,
இது பற்றி சில
விசயங்களை இங்கு முன் வைக்கிறேன்.: ,
தொழிற்சாலை
சூழல் சரியாக இல்லாத போது வேலை செய்ய மறுக்கும் உரிமையும், சுதந்திரமும் சில மேற்கத்தைய நாடுகளில் உள்ளன, இந்தியாவில் இது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
அரசும் அவசர போக்கு கொண்ட தொழிற்சங்கங்களும்
தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் இடஞ்சல்களாக உள்ளன. பத்து மாடிக் கட்டிடங்கள் கட்ட
அனுமதி வாங்கிக்கொண்டு 20 மாடிகள்
கட்டுபவர்களின் தொழிலாள எதிர்ப்புக் கட்டமைப்பை
முதலாளிகள் சாதாரணமாகவே
உருவாக்குகிறார்கள்
தொழிற்சங்கங்கள் தன்னார்வ குழுவினர்கள் சாதக
பாதகங்கள் ர்கள் தொழிற் கொள்கை உருவாக்கப்படும் போது கவனத்தில் கொள்ளப்பட
வேண்டும்.
பிராண்டுகள் சூழல்அறம், தொழில் அறம்
சார்ந்தவற்றில் அக்கறை கொள்ள வேண்டும்
தொழிலாளர் நலன்
முன்னிட்டு அரசின் கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும்
அரசு ஊழியர்கள்
அதை அமல்படுத்துவதில் சமரசமற்ற, ஊழலற்றப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.
குறைகளை களையும் குழுக்களின் நிர்வாக
செயல்பாடுகள் அமைய வேண்டும்
பாதுகாப்பு
நடவடிக்கைகள் ( விபத்து உடல் நலம் காப்ப்பில் )
முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜனநாயகரீதியாக கண் குழு நடவடிக்கைகள்
வெளிப்படையாக இருக்க வேண்டும்
புரோக்கர்கள் அரசியல்வாதிகள் சாதி அக்கறை
கொண்டவர்களை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லதல்ல
தொழில்துறை
சார்ந்த தன்னார்வக் குழுக்களின் நடவடிக்கைகளால் பிராண்டுகள் வேறு நாட்டு வியாபார
முயற்சிகளுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற கிசுகிசு ஒழிப்பில் முறையான நடவடிக்கை
தேவை
ஒரு இடத்தில் தண்ணீர் பானை வைத்தால் போதாதா.
தொழிற்சாலையின் 10 இடங்களில் வைக்க வேண்டுமா என்பது முதற்கொண்டு
மேம்பாட்டு நடவடிக்கைகள், அதிக
செலவை வரவழைக்கும் என்பதை நினைத்து நடவடிக்கைகளை கைவிடுவது தொழில் முயற்சிக்கு
மட்டும் முட்டுக்கட்டை ஆகும்.
பதினேழு வயது தொழிலாளியோ, 120 நாள் வேலை
மட்டும் என்று சமரசப் பேச்சுக்கு, அவசரப்போக்கு
தேவையில்லை .
அரசும் தொழிற்
சங்கங்களும் மற்றும் அவற்றின் பங்களிப்பு, தலையீடு இல்லாத தொழில் உலகம்
பற்றிய கனவும் எதார்த்த
நடவடிக்கைகளும் பலருக்கு இருப்பது ஆச்சரியமே.
அவசரநிலை நடவடிக்கைகள் என்பதை தற்காலிகமானவை. நிரந்தர தீர்வு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு என்பதே மிகவும் முக்கியம்
தீபிடிக்கும் விபத்து ஒரு
மாதிரிதான்.பின்னலாடையில் 250 பிராண்டுகள்
முன்னிலையில் இருப்பவை அவற்றில் 100 சூழல்அறம், வியாபார அறம் சார்ந்த கொள்கைகளில் ஈடுபடுமானால்
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு
முறையாகவே உருவாகிவிடும்
ஒட்டுமொத்த தொழிலாளர்கள் சமூகம்
மீள வழி கிடைக்கும். ராமுண்ணிகளின்
கதறல் கேட்காது.
(
Subrabharathimanian.. subrabharathi@gmail.com
Fb: 1. Kanavu
Subrabharathimanian Tirupur,
2. subrabharathimanian palanisamy :
blog: www.rpsubrabharathimanian.blogspot.com
: 8/2635
Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 )