சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

புரியவில்லை

                             சுப்ரபாரதிமணியன்




புரியவில்லை என்று சொல்கிறபோதே கற்றுத் தர முடியுமா என்றக் கேள்வியும் வந்து விடகிறது. ஆனால் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறவர்களிடம் இக்கேள்விகள் இருக்காது.
            புரியாமல் போய் விடுகிறது என்று எழுத்தாளர்களிடம் சொன்னால் அவர்கள் பதறித்தான் போய் விடுகிறார்கள். 'நான் என்னளவில் விளங்கிக் கொண்டதை சரியாகத்தான் வெளிப்படுத்துகிறேன். இதில் புரியாமல் போய் விடுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் நானாக இல்லை என்பது முக்யமாகி விட்டது. அய்யய்யோ நானும் உங்களுக்கும் புதிய வேண்டும் என்று ஆசைப்பட்டே எழுதுகிறேன். புரிகிற மாதிரி எழுதுகிறவர்களைப் போல என் எழுத்தும் புரிய வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி எழுத முடியவில்லையே என்று கூக்குரலும் இருக்கிறேன் என்று செய்ய" என்று புலம்புவார்கள்.
            எழுதுகிறவன் பெரும்பாலும் பத்திரிகைகளை மனதில் கொண்டு எழுத வேண்டியிருக்கிறது. பத்திரிகையின் தரமும், அவை வெளியிடும் படைப்புகளின் தரமும் அவனுக்கு. பல சமயங்களில் விரோதமாய் போய் அவனை வெகு தூரம் துரத்தி விடுகிறது.
            சம காலத்தைப் பிரதிபலிக்கச் செய்வதில் பத்திரிகைகளுக்கு பெரும் பங்கும் கடமையும் இருக்கிறது. இதில் சம காலத் தன்மையை எந்த விதத்தில் வெளிப்படுத்துவது என்பதில் பத்திரிகைகளின் கோணம் என்பது ஒன்று. செய்திகள், பரபரப்புக் கட்டுரைகள் என்று அவை விரித்துக் கொண்டு போகின்றன. இதையே கூட எழுத்தாளன் வேறு வகையில் படைப்புக்குள் கொண்டு வருகிறான். ஒருவரையொருவர் தவிர்த்து விட்டு பயணம் செய்து விட முடியாது. அப்படி தனித்தனியாக இயங்கும்போது வெளியில் பத்திரிகைக்கு மரியாதை இல்லாமல் போய்விடகிறது. தீவிர விசயங்களுக்கும், வாசகர்களுக்கும் இடைவெளி நிறைய என்று மலைகளைக் கொண்டு வந்து நிறுத்தி பிளவுபடுத்தும் பத்திரிகைகளை யாராவது தண்டிப்பார்கள். இலக்கிய தார்மீகக் கோபம் என்பது பத்திரிகைகளை மட்டும் சாம்பலாக்காமல் போய் விடுமா என்ன... சமகால அரசியலை, கலாச்சாரக் கூறுகளை உள் வாங்காதவனும் சமகால இலக்கியப் படைப்புகளையும் புரிந்து கொள்ளவும் இயலாது.
            தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற சமகால வடிவங்களில் முக்யமானது நாவல் என்று சொல்லலாம். நாவலாசிரியன் எழுதும் புதுக்களங்களால் அவனின் சாதாரண எழுத்தின் அர்த்தமே அனுபவமாகிறது. வெவ்வேறு தலைமுறை அனுபவங்களுக்கு ஏற்ப நாவல் தலைமுறை கடந்த அனுபவமாகிறது.
            பழமையின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரத்தைத் தேடும் படைப்புகள் சமூகவியல் சார்ந்ததால் இருந்தாலும் அறிவுத் தளம் சார்ந்ததாக இருந்தாலும் வெற்றி பெறும். புரிந்து படிக்கப்பட்டு உள்வாங்கப்படும். பெருமூச்சினூடே அடுத்த கல்லை எடுத்து வைத்து கட்டிடத்தை உறுதியாக்கும். ஞாபகத்தின் தொடர்ச்சிச் செயல் முறைமைகளும், வாழ்வியல் சிக்கல்களும், அனுபவங்களும் ஒரு படைப்பின் மூலம் புரிந்து கொள்ளப்படுகிற போது வாசகன் தன் உலகத்தின் வெறுமையைத் தவிர்த்துவிட்டு தன்னை விரிவாக்கிக் கொள்கிறான்.
            மீன் என்பதால்
            நீந்துகிறது
            நிறைய நீர்
            துள்ளி அலைகிறது அது.

            ஏதோ நிகழ்ந்து
            வடிகிறது குளம்
            நீந்த முடியாது மீன்

            மழை
            நிரம்பி வழிகிறது குளம்
            நீர்வெளி எங்கும்
            பாய்கிறது மீன்

            நீந்துவது
            நீரா... மீனா?
                        -க.வை. பழனிச்சாமி (உடலோடும் உயிர்)

            நீர், மீன் இவற்றுக்கு இடையில் நீந்துதல் என்னும் நிகழும் உறவின் ஓட்டம் போல், படைப்பும் தன்னைப் புதுப்பித்து புதுத் தலைமுறை அனுபவங்களை உள் வாங்கும்.



செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நடிகை நந்திதா தாஸ்:  ஊறுகாயா , பூவா புயலா
ஓங்கா - ஒடியா  பட அறிமுகம்  : புயலாய் மாறிய சிறுவன்
சுப்ரபாரதிமணியன்





நடிகை நந்திதா தாஸ் தமிழ்த் திரைப்பட உலகத்தைப் பொருத்த அளவில் ஊறுகாய். அவ்வப்போது தமிழ்த் திரைப்பட உலகம் அவரை பயன்படுத்திக்கொள்ளும். அவர் ஊறுகாய் அல்ல பூ அல்லது புயல் .பூ ஒன்று புயலானது என்றும் சொல்லலாம்.  நீர்ப்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால், அழகி என்று அவ்வப்போது தமிழில் தோன்றியுள்ளார்.

இந்திய மொழிகளில் பலவற்றில் நடித்து விட்டார். பூ புயலாகி நாசமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு ஒரியப்படத்தில் சமீபத்தில் நடித்திருக்கிறார். ஓங்கா என்ற ஒடியப்படத்தில்.இதில் வரும் ஒரு சிறுவன் வில்லெடுத்து இராமன் அவதாரமாய் நினைத்துப் புயலாகிறான்.

நந்திதா தாஸ் ஆதிவாசிப்பகுதியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை. ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாழக்கை கல்வியைச் சொல்லித் தருபவர் என்று சொல்லலாம். ஒரு பக்கம் மாவேயிச இயக்கத்தினர் அவரை தங்கள் இயக்கத்தில் இழுக்க முயற்சிக்கின்றனர். இராணுவத்தினருக்கோ அவர் உளவாளியா, தீவிரவாத இயக்கத்திற்குத் துணையாக இருப்பவரா என்ற சந்தேகம்.  அந்த ஒடிய மலைப்பகுதியில் பாக்சைட் கனிமத்திற்காக பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்து வெட்டி எடுத்துக் கடத்தப்படுகிறது. அதனால் தீவிர வாதம் காரணம் சொல்லி ஆதிவாசிகள் மிரட்டப்படும் சூழல்.வெளியேற்ற அவ்வப்போது எழும்பும் குரல்கள். ஆணைகள் ஓங்கா என்ற சிறுவன் பக்கத்து நகரத்திற்கு  ராமயாணம் நாடகம் பார்க்கச் செல்கிறான். குழந்தைகளை ஆசிரியை கூட்டிச் சென்ற போது அவன் போகவில்லை. சக மாணவனிடம் வழி கேட்டுப் போகிறான். கொட்டகையில் ஏமாற்றி நுழைந்து நாடகம் பார்த்து வெளியேறுகிறான். உடம்பு நீலமாய் ராமன். சீதையைக் காப்பாற்றுகிறார். இராவணனை வதம் செய்கிறார். ஓங்கா தானும் ராமனாகி விட்டதாக் எண்ணி உடம்பில் நீல நிறத்தை பூசிக்கொண்டு  கிராமத்திற்குத் திரும்புகிறான். ராமனே எல்லாம். பூமி தாய் போன்றது. அதை காப்பாற்ற வேண்டும் என எண்னுகிறான்.ஆனால் அந்த ஆதிவாசி பூமி கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் பல்வேறு நிறுவனங்களால் சூழப்பட்டிருப்பதை அந்த சிறுவன் அறிய மாட்டான்.அதற்குள் கிராமமே களேபரப்பட்டுப் போயிருக்கிறது.ஓங்காவை காணவில்லை என்று அவ்ன் பெற்றோர் தேடுகின்றனர்.ஆசிரியை இராணுவத்தால் கட்த்தப்பட்டு தீவிரவாதிகளுக்கு உளவாளியா, மணவர்களுக்குத் தீவிரவாதத்தைக் கற்றுக் கொடுக்கிறாயா என்று கேட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள்.தப்பி வருபவள்  சாவு நிலைக்குத் தள்ளப்படுகிறாள், ஆசிரியை கடத்தப்பட்ட்து போன்று ஒவ்வொரு ஆதிவாசிக்கும் நேரலாம் என்று மாவோயிஸ்டுகள் எழுச்சி பெறச் செய்கிறார்கள்.மாவோ கொரிலாக்கள் அக்கிராமத்திற்கு வரும் இராணுவத்துடன் சண்டை போட பலர் செத்து விழுகிறார்கள். ராமனாகத் திரும்பி வரும் ஓங்கா இந்தப் போரைக் காண்கிறான். அவனின் வில்லும் அம்பும் தன் ஆதிவாசி உறவுகளைக் காகும் என்று எண்ணுகிறான். ஆதிவாசி மக்களின் ஒரியாவும், இராணுவத்தினரின் இந்தியுமாக  அப்பகுதி மொழிகளால் பிரிக்கப்பட்டிருப்பதை இப்படம் காட்டுகிறது. அந்த இரு மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தயாரித்திருப்பவர்  மறைந்த ஓவியர் எம் எப் .உசேனின் பேத்தி .மாவோயிசத் தலைவராக  நடித்திருப்பவர் சீமா பிஸ்வாஸ்.
நந்திதா தாசின் அப்பா ஜதீன் தாஸ் ஒரு முக்கிய ஓவியர். டார்க் ஈஸ் பியூட்டிப்புல் என்ற சிகப்புத்தோல் கலாச்சாரத்திற்கெதிரான ஒரு அமைப்பில் நந்திதா சமீபகாலமாய் ஆர்வம் கொண்டுள்ளார். பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பு, பாலீன ரீதியான வேறுபாடு, இனவாதப் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அவரின் செயல்பாடுகளுக்காக யேல் பெல்லோ விருது அவருக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டது. மோடி ஒரு ஹிட்லரே என்ற அவரின் விமர்சனத்திற்காய் கடுமையாய் விமர்சிக்கப்பபட்டவர் நந்திதா தாஸ். பூ எப்போதும் சமூக நடவடிக்கைகளில் புயலாகி வருவதை ஆதிவாசிகளுக்கான் கல்வி தரும் ஆசிரியை பாத்திரத்தில் நடித்து வெளிபடுத்தியிருக்கிறார் நந்திதா தாஸ். 

நடிகை நந்திதா தாஸ்:  ஊறுகாயா , பூவா புயலா. ஒரு வெடிகுண்டாய் இருந்து கொண்டே இருக்கிறார் அவர்.

மணமுறிவைச் சந்திக்கும் ஒரு    பெண்ணின் அவஸ்தை
                  ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
                        சுப்ரபாரதிமணியன்
       ஆணின் துணையில்லாமல்  வாழ்வது பெண்ணுக்கு தரும் சிரமங்கள் அளவில்லாததுதான். தநதையின் இழப்பு அது போன்ற சமயங்களில்  பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில். நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும் வேதனை தருகிறவர்கள். விவாகரத்து முடிந்து விட்டால் போது  . நீதிமன்றத்திற்கு வந்து போகும் செலவாவது மிஞ்சுமென்று  ஏக்கப்படும் சில பெண்கள். குழந்தைக்காக விட்டுக்கொடேன் என்று ஏங்கும் சிலர்.சில உறவுகளை நகங்களை வெட்டுவது போல் வெட்டினால்தான் இரு தரப்பினரும் வாழ முடியும் என்ற கட்டாயம்  வரும்போது மட்டுமே வரும் கதாபாத்திரங்கள் சிலதும்கூட. .59 வய்து பெண்ணும் அங்கு காணப்படுகிறாள்.  தாம்பத்ய உறவுச் சிக்கல் அந்த வயதிலும் அவளுக்கு.. எட்டுமாத கர்ப்பதோடு வந்து நிற்கும் பெண் இன்னொருத்தி . அவள் கணவன் வேறு ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இவளைக் கை விட்டிருக்கிறான். சென்னை என்ற நகரம் பேச வைத்த கட்டாயங்களை இந்த பெண் பாத்திரங்கள் மூலம் காண்கிறோம்.ரத்னாவுக்கு தினேஷ்டனான உறவு கெட்டு விட்டது. விலகிப் போவது.. விவாகரத்து வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

  நாலாயிரம் பேர் வந்து வாழ்த்தும் போது கேட்பதில்லை உனக்குப் பிடித்திருக்கிறதா என்று. நாற்பது பேர் மத்தியில் பிரிவதற்கு சம்மதமா                       
என்று  கேட்டு இம்சைகள் பற்றி விரிவாகவே பேசுகிறார். இதுபோல் கல்யாணம், பந்தம் பற்றிய பல விவாதங்களை மஞ்சுளா  இந்நாவலில் வைக்கிறார்.ஒரு நாளில் இது போல் நாற்பது அய்ம்பது பெண்களை  காண்கிற போது பெண் அடைகிற மன உளைச்சிலை   ரதனா எதிர் நோக்குவதை இந்நாவல சித்தரிக்கிறது. இரண்டாவது கோட்டை என்று சொல்லப்படும் விதவைகளும், விவாகாரத்தானவர்களும்  தங்களீன் பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளும் இரண்டாவது கோட்டையின் வில்லன்கள் பற்றிய நிறைய யோசிப்புகள்  இருக்கின்றன.
   தாமதமாகும் விவாகரத்து வழக்குகள் பற்றிய நிறையக் கவலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் 3000 வழக்குகளே நிலுவையில் இருந்தன.இப்போது 20,000. - ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்யப்படும் வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இப்போது உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மனமொத்து விவாகரத்து கேட்பவர்களுக்கு உடனே விவாகரத்து தந்து விட வேண்டும் என்ற அறிவுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  திருமணத்திற்கு முன் தன் மனைவி கருக்கலைப்பு செய்தவர் என்பதற்காய் எனக்குத் தெரிந்த ஒருவர் விலக்கு கோரினார்.. தன் மனைவி அடிக்கடி த்லையைச் சொறிந்து கொண்டிருக்கிறாள். அது மன நோய்  என்று கோரினார். ஒருவர்.. கிறிஸ்துவ சட்டம் 1969, பார்சி திருமணச் சட்டங்கள் சரியான பாலியல் உறவு இல்லையென்றால   விலக்கு கோரலாம் என்கிறது.. கண்டதும் காதல். காதலித்ததும் கல்யாணம் என்று தொடர்வதே விலக்குகளுக்கு காரணம் என்கிறார்கள் சிலர்.அசைவக்காரர்கள் சைவத்துக்கு மாற முடியாமல் பல விலக்குகள் ( சைவ, அசைவ காதலர்கள் மத்தியில் இப்பிரச்சினை ) ரதனாவின் பிரச்சினையும் இது போன்றதே. .
                                                                        தன் அவஸ்தைகளிலிருது விலக ஓவியங்களின் மீதான் ஈடுபாட்டையும் அவள் மேற்கொள்கிறாள். அப்போதுதான் ஜான் என்ற ஓவியனைச் சந்திக்கிறாள்.
இன்னொரு புறம்  இறந்து போன  ஜகந்நாதனின் -அவள் அப்பா- கண்களை எடுத்துப் பொருத்தி நடமாடும் ஆணை சந்திக்க ரத்னா ஆசைப்பட்டு  ஒரு வகைத் தேடுதலை மேற்கொள்கிறாள். ஜகநாதனின் கண்கள் ஜான் என்ற் ஓவியம் வரைவதில் அக்கறை கொண்டவனுக்கு  பொருத்தப்பட்டிருப்பதை அவன் ஒரு விபத்தில்    இறந்த பின் தெரிந்து கொள்கிறாள் ரத்னா. அந்தக் கண்களை எடுத்து சலீம் என்ற ஒரு பையனுக்குப் பொருத்துகிறார்கள்.    சலீமின் பெற்றோர் மெக்கா சென்று விட்டுத் திரும்பும்போது வழியில் ஏற்பட்ட ஒரு மதக்கலவரத்தில் கொல்லப்பட சலீம் கண்பார்வையை இழந்தவன்.
  ரத்னாவின் மணமுறிவு பற்றிய மன அவஸ்தகளை விவரிக்கும் நாவலாக வளர்ந்து ஏதோ  மதச்சார்பின்மையை வலியுறுத்த வலிந்து கிறிஸ்துவ, முஸ்லீம் கதாபத்திரங்களை அறிமுகப்படுத்தித் தொடர்கிறது.இது வலிந்து சொல்லப்பட நாவல் தடம் புரண்டு போகிறது.  ரத்னாவுக்கு ஆறுதலாய் இருந்த சங்க இலக்கியப்பாடல்களும், வசன கவிதைகளும், திரைப்படப்பாடல்களும் உயிர்ப்புடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.   ஆறுதல் தருவதற்கு இந்தப் பாடல்கள் மட்டும் போதாதே. அதை மீறி வாழக்கை துணை ஒன்று தேவை என்ற ஏக்கம் தொனிப்பதை இந்நாவல் காட்டுறது நாவலின் முன்னுரையில் இது ஒரு பரிசுப் போட்டிக்கு எழுதப்பட்டதாகவும் பரிசு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் வெளிப்படுகிறது. போட்டிக்கதை பரிசென்றாலே  மத்ச்சார்பின்மையை வலியுறுத்துவதுதான் . என்ற பார்முலா தொடர்ந்து பரிசுக்காக எழுதிக் கொண்டிருக்கிறவர்களை பலியாக்குகிறது. இக்கதையும் அதில் பலியாகியிருக்கிறது. இல்லாவிட்டால் மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தையை சிறப்பாக இது வெளிக்கொணர்ந்திருக்கும்

( ஆதம்தாகம்- டாலி டேட்டா பதிப்பகம், சென்னை 1 - ரூ75 )

திங்கள், 20 ஏப்ரல், 2015

  கனவு இலக்கிய வட்டம்
புத்தக வெளியீடு , ஜெயகாந்தனுக்கு அஞ்சலி
     கனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கிய நிகழ்ச்சி வியாழன் அன்று மாலை பாண்டியன் நகர் அம்மா உணவகம் அருகில் உள்ள சக்தி பில்டிங்கில் நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் கலாமணி கணேசன் தலைமை தாங்கினார்.
  புதனன்று மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவரின் கலை இலக்கியப் படைப்புகள் நினைவு கூறப்பட்டன.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் ‘’ என்ற நாவலை ” முயற்சி”  அமைப்பின் செயலாளரும், ஆங்கிலத்துறைப் பேராசிரியருமான   ( ஓய்வு )பரமசிவம் வெளியிட தமிழ் மூதறிஞர் சொக்கலிங்கனார் பெற்றுக்கொண்டார்.கவிஞர் ஜோதி நூலை அறிமுகப்படுத்திப் பேசினார்.
திருப்பூரை மையமாகக் கொண்டது இந்த நாவல்      ( சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் “ நாவல்            - மறுபதிப்பு ). விலை ரூ 120/ எசிபிஎச் வெளியீடு, சென்னை ) இரு வேறு நிலைகளில் வாழும் இரு பெண்களின் உலகங்களைப் பற்றிச் சொல்வது.
 பேச்சில்:

பேராசிரியர் பரமசிவம்: திருப்பூர் பற்றிய படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும். ஒரு தொழில் நகரத்தைச் சார்ந்த பன்முகங்களை இது போன்ற படைப்புகளே சரியாகக் காட்ட முடியும்.
கவிஞர் ஜோதி:   பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை வாசிப்பதன் மூலம்,  மாற்றுச்சிந்தனைகளை உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.
சுப்ரபாரதிமணியன்: உலகமயமாக்கல் பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறவர்களாகவும், பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும் மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள் பகுத்தறிவின் துணை கொண்டே மாற்றியமைக்க முடியும்  .சமரசமற்ற சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.
சக்தி மகளிர் அறக்கட்டளையின் செயலாளர் விஜயா கனகராஜ் நன்றி கூறினார். திருமுருகன் பூண்டி சைவசித்தாந்த மடம்சார்ந்த , சக்தி மகளிர் குழுக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பெற்றனர்.  
  
செய்தி:
கனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் : கா. ஜோதி


விடியலை நோக்கி முடிவற்ற பயணம்: த.ஜெ.பிரபு நாவல்
500 பக்க நாவல் : ரூ 250 : வெளியிடு அவரே.(  J_raja.prabhu@yahoo.com )
வெவ்வேறு துறை சார்ந்த நாவல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் காலம் இது.பொறியியல் பேராசிரியர் ஒருவர் பொறியியல் துறை சார்ந்த கல்வி அனுபவங்களையும், கல்விப்படிப்பிற்குப் பின்னால்  பல மாணவர்களின் வாழக்கையின் தடம் புரள்வதையோ, புதிய திசைகளை நோக்கிச் செல்வதையோ இந்நாவல் எடுத்துரைக்கிறது எனலாம்.
ஆசிரியர் பாடத்திட்டம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டிருப்பவர். அதனால் மாணவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அதனால் மாணவர்களின் உலகத்தையும் துல்லியமாகத் தெரிந்திருப்பவர்,மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, விடுதி வாழ்க்கையை விரிவாகச் சொல்கிறார்.அக்காலத்தில் அவர்களின் அரசியல் அக்கறையையும், அரசியல் விவாதங்களையும் இந்நாவல் விரிவாகச் சொல்லியிருகிறது என்ற காரணத்தால் இது ஒரு அரசியல் நாவல் என்ற பரிமாணத்தை ஆரம்ப அத்தியாயங்கள் தந்து விடுகின்றன. பின்னர் அந்த மாணவர்களின் தனிமனித வாழக்கை பற்றிய பல்வேறு போக்குகளை மீதி அத்தியாயங்களில் சொல்கிறார்.ஆறு பாகங்கள் கொண்டது இந்நாவல்.
கல்லூரி வாழ்க்கையில் அரசியல் விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சோவியத் ரஷ்யா, சீனாவை முன்வைத்த த்த்துவர்த விவாதங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொதுவுடமை இயக்கம் சார்ந்த எழுச்சிகளும் வரலாறுகளும் மோதல்களும் விரிவாகவே சொல்லப்பட்டிருகின்றன.இதில் தீவிர வாதப்போக்கு எண்ணங்களும் உண்டு.இந்திய பொதுவுடமைக்கட்சிகளின் வரலாறு பற்றிய பல பதிவுகளையும் அக்கட்சிகளீன் போக்குகளையும் நடுநிலையோடு சொல்லியிருக்கிறார். இன்னொரு புறம் வழக்கமான மதம், ஆன்மீகம் சார்ந்த கட்சியினரின் வாதம், பிரதி வாதம் என்ற போக்கும் உள்ளது. ஏறத்தாள  50 ஆண்டுகளை உள்ளடக்கியதாக இந்நாவல் அமைந்துள்ளது.
கல்லூரி வாழ்க்க்கை முடிந்து மாணவர்கள் லவுகீக வாழ்க்கைக்குள் புகுகிற போது இருக்கும் சிக்கல்கள் , காதல் திருமணம் பிள்ளை குட்டி பெற்றுக் கொள்வது என்பதெல்லாம் சகஜமாகிவிடுகிறது.தன்நலம் சுயநலம் என்றப் போக்குகளில் மனிதர்களின் வாழ்க்கை ஓடுவதைக் காட்டுகிறார். இதில் பொதுவுடமை சார்ந்து கல்லூரியில் இயங்கியவர்கள் சாதாரண மனிதர்களாகிப்போவதும் நடக்கிறது. சொத்து சேர்க்கிறார்கள். வெளிநாடு போகிறார்கள். சவுகரியமாக இருக்கிறார்கள். இது அந்த இயக்கங்களை சார்ந்தவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் போக்கிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மறுபுறமான ஆன்மீக எண்ணங்களைக் கொண்டவர்கள்  வாழ்க்கையிலும் நிறைய தடுமாற்றங்கள் சங்கடங்கள். சிலர் மனநிலை மாறி பைத்தியத்திற்கு உள்ளாகிப்போவதும் நடக்கிறது.
இவற்றை விவரிக்கும் முறையில் எளிமையும் அனுபவ விஸ்தரிப்பும் பிரபு அவர்களின் தனித் தன்மையுடன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சொல்லப்பட்டிருப்ப்தே அவரின் தனித் தன்மை எனலாம். அனுபவ விவரிப்பு சார்ந்த எழுத்து முறை. எனவே செயற்கைத்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை. நதி நீரின் இயக்கம் போல் செல்கிறது. பல துறைகளில் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காண்கிறவர்கள் இதில் வருகிறார்கள். கம்யூசிசமும் ஆன்மிகமும் இணைந்து இந்திய ஆன்மீகம் பிரவகிக்க வேண்டும் என்று கனவு காண்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கனவுகளின் போக்கையும் சிதைவையும் சொல்கிறதில் பிரபு தேர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்,கல்வித்துறை சார்ந்த பாடநூல்களாகட்டும் , கல்வித்துறை சார்ந்த அனுபவ்ங்களை படைப்பாக்கும் முயற்சிளாகட்டும் நேர்மையும் இயல்பும் கலந்த முன்னுதாரணமாக  பிரபு தொடர்ந்து இயங்கி வருகிறார்  என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 



எழுத்தாளனின் கருத்து/படைப்பு சுதந்திரமும், திரைப்படமும்:
 திருப்பூர் அறம் வாசகர் வட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அறம் வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாதக்கூட்டம் : 12/4/15 மாலை 5 மணிக்கு மகாகவி வித்யாலயா, icici வங்கி அருகில் , அவினாசி சாலை,திருப்பூரில் நடைற்றது.
சத்யநாராயணன் தலைமை வகித்தார்.
” காலச்சுவடு” பதிப்பகம்  வெளியிட்ட இந்தி நாவலாசிரியர் நிர்மல் வர்மாவின் “ சிகப்பு தகரக்கூரை “ என்ற இந்தி நாவல் மொழிபெயர்ப்பு நூலை உதயம் பக்தவச்சலம் அறிமுகப்படுத்தி ஒரு இளம் பெண்ணின் வாழக்கை பூப்படைவது வரை விவரிக்கப்பட்டிருப்பதை இந்தியப் பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை விளக்கினார்.இதை மொழிபெயர்த்தவர் எம்.கோபாலகிருஷ்ணன்.
 எழுத்தாளனின் கருத்து/படைப்பு சுதந்திரமும், திரைப்படமும்: என்ற தலைப்பில்இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற “ கோர்ட்” மராத்தி படத்தை முன்வைத்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசினார். தமிழகச்சூழலை முன்வைத்து எழுத்தாளர்கள் மீதான வன்முறை மற்றும் எழுத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிப் பேசினார் .படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் போலவே எதிர் தரப்பில் உள்ளவர்களின் சுதந்திரத்தையும் எழுத்தாளர்கள் மதித்து எழுத வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார். கவிஞர்கள் ஜோதி, அழகுபாண்டி  அரசப்பன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
செய்தி : உதயம் பக்தவச்சலம் 98422 27505


         திருப்பூர் இணைய தள அணி              ( Tirupur Internet Team )
                            உலகப் புத்தக நாள் விழா 2015
------------------------------------------------------------------------------------------------------------------------------
22/4/15: புதன் இரவு 7 மணிக்கு .
ஆண்டவர் காம்ப்ளக்ஸ் முதல் மாடி, ஏகே நெட் கபே,
பாண்டியன் நகர், திருப்பூர்
தலைமை: சி. தேவராஜன்
வரவேற்பு: சிங்கை அருண் கார்த்திக்
சிறப்பு விருந்தினர்கள்: சுப்ரபாரதிமணியன், வைரவராஜா, ஜோதி
நூல் வெளியீடு:
சுப்ரபாரதிமணியன் தொகுத்த “ அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் ”
கனடாவில் வாழும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய 15 எழுத்தாளர்களின் கட்டுரைகள். ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் உட்பட 15 பேரின் கட்டுரைகள். தொகுப்பு : சுப்ரபாரதிமணியன்,
வெளியீடு : நற்றிணைப் பதிப்பகம், சென்ன்னை விலை ரூ80 : தொலை பேசி 28482818, 9486177208

( செய்தி வெளியீடு: திருப்பூர் இணைய தள அணி 9944222423 )




நீண்ட கனவும், அறச்சீற்றமும்:
------------------------------சுப்ரபாரதிமணியன் கதைகள்
       சுப்ரபாரதிமணியனின் பிரசுரமான சிறுகதைகள் எண்ணிக்கையில்  250 இருக்கும் என்று தோன்றுகிறது. அவை 15 தொகுப்புகளாகவும் இன்னும்  இரு புதிய  தொகுப்புகளுக்கான கதைகளாகவும் உள்ளன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட  15 கதைகளின் தொகுப்பு “ விமோசனம்” காவ்யா வெளியிட்டுள்ளது. 1978 அவரின்  முதல் சிறுகதை திருப்பூரிலிருந்து வந்த யுக விழிப்பு இலக்கிய இதழில் வெளிவந்தது. அப்புறம் 1984ல் “ நாலு பேரும் பதினைந்து கதைகளும் “ நூல் ...அவரின் முதல் தொகுப்பு  அப்பா.
இரண்டாம் தொகுப்பு “ மாறுதடம் “ முதற் கொண்டு “ ஓலைக்கீற்று “ தொகுப்பு வரை காவ்யாவே  வெளியிட்டுள்ளது.  அவரின் ஏழு நாவல்களில்
 “ சாயத்திரை” முதற்கொண்டு “ தேனீர் இடைவேளை “ வரையும்  கூட காவ்யா வெளியீடே..
      இவரின் ஆரம்ப காலக் கதைகளில்  வெகு யதார்த்தமான  அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும்  குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும்  சிறுகதைகளாயிருந்தன.  அவற்றையெல்லாம்  அவரின் அனுபவக் கதைகளாக்க்  கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது  நிறைய எழுத ஆரம்பித்தார்.
     செகந்திராபாத் வாழ்க்கையை இவர் மற்றும் சிலர் , சுடுமணல், நகரம் போன்ற நாவல்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் அந்த நாவல்களில் அகப்படாதவற்றை சிறுகதைகளாக எழுதியுள்ளார். ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றார்கள். அசோகமித்திரனின் எல்லைகள் கூட செகந்திராபாத் வாழ்க்கை பற்றி எழுதும் போது குறுகியிருந்தது என்று சொல்லலாம். அவர் இன்னும் செகந்திராபாத் வாழ்க்கை பற்றி எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரைப் போலவே சுப்ரபாரதிமணியனும் செகந்திராபாத்தில் இருந்த எட்டாண்டு கால  வாழ்க்கை அனுபவங்களையும், கவனிப்பையும் தொடர்ந்த சிறுகதைதகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.  நகரம் தரும் பல்வேறு பரிமாண அனுபவங்களையும்  கதைகளில் தந்திருக்கிறார். அதிலும் குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று  இங்கிலாந்து, அய்ரோப்பிய  நாடுகளுக்கு  பயணம் மேற் கொள்ள் ஆதாரமான “நகரம்” சிறுநாவல் கூட செகந்திராபாத்தை மையமாகக் கொண்டதே.( அவரின் அந்த வெளிநாட்டு பயண் அனுபவங்களை “ மண் புதிது “என்று காவ்யா வெளியிட்டுள்ளது.)
     செகந்திராபாத் வாழ்க்கைகுப் பின்னால் அவர் தன் சொந்த ஊரான திருப்பூர் வந்த பின்  பெரிய தொழில் நகரான திருப்பூரை மையமாகக் கொண்டு  “சாயத்திரையை” எழுதினார்.  அது ஆங்கிலம், இந்தி., கன்னடம், மலையாளம், வங்காளம் என மொழிபெயர்ப்பாகியுள்ளது.  அவரின் “ சாயத்திரை” முதற் கொண்டு “ தேனீர் இடைவேளை “ வரை காவ்யா வெளியிட்டுள்ளது. இந்த நாவல்கள் தரும் திருப்பூர்  வாழ்க்கையின் அனுபவங்களை மீறிய அவதானிப்புகளை இவரின் சிறுகதைகளின் பரப்பில் காணலாம்.  தொழில் நகரம் காட்டும்  உழைக்கும் விளிம்பு நிலை  மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். உலகமயமாக்கல்  ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும், குழந்தைகளையும்  சிதைத்து வருவதை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், மனித உரிமை பிரச்சினைகளும் அவர்களுள் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.  வாழ்க்கையையும், இலக்கியத்தையும் ஒரு சேர  கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்பட்டிருப்பதில்  அவருக்கு இணை யாருமில்லை.அவ்வளவு  விரிவான வகையில்  அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும்,பிரச்சினைகள் மீதும். கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும், விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை  அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது  கதை மாந்தர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் வெளிப்படுகின்றன, அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம்  சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாயும், அதிகபட்சமான சிறுகதைகளையும் வேறு யாரும் தமிழ் சூழலில் எழுதி இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் அக்கறை பற்றி நிறையவே சிறு கதைகளில் விவாதித்திருக்கிறார். இவரின் சாயத்திரை  நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. அந்நாவலில் அவர் எழுப்பின சுற்றுச்சூழல் பற்றினக் கேள்விகள் இன்னும்  தீர்வில்லாதவையாக உள்ளன. திருப்பூர் சாயப்பட்டறை பற்றிச் செய்திகள் வேள்விப்படுகிற ஒவ்வொருவரும் சாயத்திரையை மறந்து விட முடியாதபடிக்கு ஒரு படிமமாகவே அது நிலைத்து விட்டது.பயணங்கள் பற்றிய இவரின் கட்டுரைகள், நூல்கள் தவிர்த்து வெளிநாட்டு அனுபவங்களை மையமாக்க் கொண்ட இவரின் கணிசமான கதைகளும்  குறிப்பிட்தக்கவை.இவரின் கனவு இலக்கிய இதழ் இவ்வாண்டு வெள்ளி விழாவைத் தொட்டுள்ளது.செகந்திராபாத்தில் இருந்த போது அவர் ஆரம்பித்த்து. கடந்த 25 ஆண்டுகளில் ”கனவி’ல் இவர் பல புதிய  படைப்பாளிகளுக்கு  இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.. கனவில் வெளிவந்த இவரின் சிறுகதைகள் சொற்பமே.ஆனால் அவையும் ஏதோவொருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ( கனவு இதழில் முதல் இருபது ஆண்டுகளில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகளின் தொகுப்பை காவ்யா  வெளியிட்டு பெருமை சேர்த்தது.)
      அயலகத்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி இவரின் பயண அனுபவக்கட்டுரைகளைத்தவிர இடம் பெற்றுள்ள சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.செகந்திராபாத் சூழலில் அந்நியப்பட்ட தமிழன்களைப் போலவே இவர்களும் அன்னியப்பட்டே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
 பெண் பாத்திரங்களின் உருவாக்கத்தில் அவர் கொள்ளும் அக்கறையும், தேர்ச்சியும் ஆச்சர்யப்படுத்துபவை. கஸ்ட அனுபவங்களுக்குள் இவர் தன்னைத் தோய்த்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. செகந்திராபாபாத்தோ, திருப்பூரோ அவர் வெவ்வேறு களங்களுக்குள்ளும், இடங்களுக்குள்ளும் பயணிக்கிறார். போராடும் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுக் கொண்டே போகிறார். சொல்முறை உத்தி சாதாரண உரையாடல்களாலும், இறுக்கமான வாக்கிய அமைப்புகளாலும்  நிறைந்திருக்கிறது. சமூக மனிதர்களின் உளவியலுக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன.   வெவ்வேறு மையங்களுகு செல்வதாக்த் தோன்றினாலும் அவை மனிதம், அன்பு, சமூக விமர்சனம் என்ற வகையிலேயே அடைக்கலம் கொள்கின்றன. எழுத்தாளன் அவனின் அரசியலை வெளிப்படுத்தாமல் எங்கும் ஒளிந்து கொள்ள இயலாது.  தன் அரசியல் முகத்தை சுப்ரபாரதி மணியன் என்றைக்கும் ஒளித்து வைத்துக் கொண்டதில்லை. மாற்று அரசியல் குறித்த அக்கறையைஅவை சுட்டுகின்றன. அவரின் மார்க்சியம் சார்ந்த சார்பை அவரின் கட்டுரைகளில் இனம் கண்டு கொள்ளலாம். ஆனால் படைப்பாக்கத்தில் அவை கோரும் தத்துவ சார்பை எப்போதும் உரக்கத் தொனித்ததில்லை யதார்த்தம்  மீறிய மாயத்தன்மையை அவரின் சில கதைகளில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.   அவை பெரும் பாலும் கனவு நிலைகளில் வெளிப்படுகிறது. எந்த முன் தீர்மானமும் இன்றி கதைகள் நகரும் போது சொடுக்கப்படும் சாட்டையின் வீச்சை  சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மனிதத்துவத்திற்கு எதிராக நடக்கும் எல்லா விதமானக் கொடூரங்களையும் , அதீத செயல்களையும் அடையாளம் கண்டு கொள்கிறார். அடையாளப் படுத்துகிறார்.விளிம்புநிலை மக்களில் பொறுக்கிகள், எளிய பெண்கள், விலைமாதர்கள், ஆதிவாசிகள், சுற்றுச்சூழல்வாதிகள் என்று பலரை அடையாளம் கண்டு கொள்ளலாம். மையங்களைக் தகர்த்தெரிந்த  விளிம்பு நிலை மனிதர்கள் இவரின் கதைகளில் தென்படுகிறார்கள். குழந்தைகளின் அபூர்வ உலகத்தை  சரியாக மனதில் பிடித்துக் கொள்ளலாம்.  சாயம் அப்பிய முகங்களோடு அலையும் மனிதர்களும், தனியார் மையத்தை சகித்துக் கொள்ள முடியாமல் திணறுபவர்களும், பெரும்நகரத்தில் கை விடப்பட்டவர்களும், நகரம் உருவாக்கும்  உதிரித்தொழிலாளர்களும் கூட இக்கதைகளில் அழுத்தமாக இடம் பெற்றிருக்கிறார்கள்.    நம்முடன் உறவாட இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணமும் , நம்பிக்கையும் இவரின் கதாபாத்திரங்களோடு பயணிக்கும் போது  தென்படுகிறது. வாழ்க்கை எவ்வளவு வகையான  மனிதர்களை நம்மோடு இணைத்துக் கொண்டு செல்கிறது என்பது விசித்திரமானது.        ஒரு முதிய மனிதனின் அனுபவத்தோடும், இளைஞனின் துடுப்போடும்  உள்ள இக்கதைகளை  படிக்கும் எந்த வாசகனும் தமிழ்ச் சிறுகதை வாசகப் பரப்பின் விரிவை அடையாளம்  கண்டு கொள்வான்.சிறுகதைகள் மூலம் பிரமாண்டமாய் வெளிப்படும் ஆளுமை சுப்ரபாரதிமணியனுக்குள் இருப்பதை சரியாக உணர்ந்து கொள்வான்.      
                                                             -காவ்யா

(  விலை ரூ 950 / 1200 பக்கங்கள். வெளியீடு  : காவ்யா, செ

சனி, 11 ஏப்ரல், 2015


புத்து மண்ணும் ஜெயகாந்தனும்
------------------------------------------------------
”  புத்து மண் “  என் நாவல் பற்றி ஆயிஷா இரா நடராசன்( புத்தகம் பேசுது) ஏப்ரல் இதழில்: படித்ததில் பிடித்தது 50 க்கு 50 பகுதியில்......
     தொடர்ந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விவாதத்தைத் தந்து களமாக்கி கொண்ட சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் அவ்வாறான ஒரு மனிதரின் குடும்ப வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம்  அவரை மரியாதை இழந்த ஒருவராக்கி ‘ பிழைக்கத் தெரியாதவராக’ தனிமைப்படுத்தி அவரது வாழ்வின் அர்த்தத்தைப் பாழாக்கும் ஆபத்தைஎழுதிச் செல்கிறார்.சமூகத்தினரின் எந்த் ஆங்கீகாரமும் அற்ற ஒரு சூழலியப் போராளி பற்றிய சித்தரிப்பு வாசிக்கும் போது கொடுத்த மன வலி நீங்க நாட்களாகும்.
( புத்து மண்- சுப்ரபாரதிமணியன் நாவல் ரூ100 உயிர்மை பதிப்பகம், சென்னை )

ஜெயகாந்தன் முரண்பாடுகளின் மூட்டை : தி ஹிந்து தமிழ் பத்திரிக்கையில் ... காசு. வேலாயுதம்
---------------------------------------------------------------
திருப்பூரில் இரவு இலக்கிய கூட்டம். அதில், சுப்ரபாரதிமணியனின்         ” சாயத்திரை ”நாவலை வெளியிட்டு ஜெயகாந்தன் பேசினார்.
 . சாயக்கழிவுகளால் நொய்யல் நதி நஞ்சானது. அதற்கு காரணமான தொழிற்சாலைகளை, தொழில் முதலாளிகளை பற்றி கடுமையாக சாடினர் கூட்டத்தில் பேசியவர்கள்.
ஜெயகாந்தன் பேசுகையில் பேச்சின் நிலை தலைகீழானது. ” 'சாயம் விஷம். வாஸ்தவம். ஆனால் சாயம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. வளர்ச்சியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் வளர்ச்சி இல்லாவிட்டால் நாம் இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க முடியுமா? நமக்கு இப்படியொரு பொருளாதார வளர்ச்சி வந்திருக்க முடியுமா? எனவே கண்டுபிடிப்புகளை, வளர்ச்சிகளை சாடாதீர்கள். வளர்ச்சியின் வளர்ச்சியினால் வரும் எதிர்வினைகளுக்கு மாற்று வினைகளை எதிர்ப்பதற்கு பதில் அந்த நேரத்தை மாற்று விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க உதவுங்கள். அதைவிட்டு விட்டு விஞ்ஞானத்தையே கூடாது என்பதும், மறுப்பதும் எப்படி சரியாகும்?'”




புத்துமண் – நாவல்
ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்
------------------------------------------------------------------------------------------------------------
குளத்துமீனாகவிரும்புமாபாத்திரத்துமீன்?
ஜெயந்தி சங்கர்
-----------------------------------------------------------------------


பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல.
முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (அ.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (ப.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (ப.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர்.
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோத‌ புதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாக‌ வாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான்.
சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பல‌உவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(ப.30) 'வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்' என்கிறார். 'துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது' (ப.27) என்ற‌இன்னோர்உவமையையும்குறிப்பிடலாம்.
'மேலேயிருந்துவெளிச்சம்பரப்பிஅதுகீழேவருவதற்குள்களைத்துப்போய்விடுகிறமாதிரிவெளிச்சம்பலகீனமாகவேஇருந்தது' (ப.14) என்பதுபோலமிகச்சிலஇடங்களில்உவமையாகஇல்லாமல்உருவகமாகவேஆக்கியிருந்தால்அழகுகூடியிருக்கும்எனப்பட்டது.
ஒவ்வோர்அத்தியாயத்தின்தொடக்கத்திலும்வரும்சின்னஞ்சிறுதுணுக்குகவித்துவத்துடன்சின்னஞ்சிறுகதையாகநாவலுக்கு, அதுஎடுத்தாளும்சூழியலுக்குப்பொறுத்தமாகஇருக்கின்றன. பிரதிக்குசுவைகூட்டுவதுடன்நகரமையமாக்கல்கொண்டுவரும்அபத்தங்களை, அவலங்களைபுட்டுப்புட்டுவைத்துசிந்திக்கவைக்கின்றன. ஒடியன்லட்சுமணன்எழுதியஇருளர்கவிதைவரிகளாம்அவை. அந்நூலை, அந்தப்படைப்பாளியின்ஆக்கங்களைச்சுவைக்கும்ஆர்வத்தைத்தூண்டுகின்றன.அழகியபடிமமாகும்ஒற்றைஉதாரணம் ‍இதோ(ப.27) -
‘ஆட்டுக்குநல்லதீனிகிடைக்கவேண்டும்என்பதற்காகலஞ்சம்கொடுத்துரிசர்வ்காட்டில்மேய்க்கிறாள்கோசி. தான்நன்றாகமேய்ந்தாலும்அவளுக்குஎன்னலாபம்என்றுகேட்கிறதுஆடு. உனக்கும்இல்லாமல்காட்டுநரிக்கும்இல்லாமல்ரேஞ்சர்வீட்டுக்குவிருந்தாகப்போகிறேன். செம்போத்துகுறுக்கேபறக்கும்கெட்டசகுனமும்தெரிகிறது. எனவே, 'கோசிஎன்னைக்கொன்றுதின்னுஇப்பவே' என்கிறதுஅது.’
உலகம்நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவேஅதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள்திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில்சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சிவேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்குதிருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்என்றுபலவற்றைச்சொல்லிச்செல்கிறார்நூலாசிரியர்.சுப்ரபாரதிமணியன்இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமேதனிநாவலாகவிரியக்கூடியது.
வெ. ஜீவானந்தம்எழுதியஅசலானஒருகடிதத்தையும்இந்தநாவலில்நூலாசியர்எடுத்தாண்டிருக்கிறார். அதுநாவலின்கருப்பொருளுக்குவலுச்சேர்ப்பதாகஅமைகிறது.இதில்அசுரவளர்ச்சிஏற்படுத்தும்பக்க, பின்விளைவுகளைவிளக்கிபல்வேறுகேள்விகளைஎழுப்புகிறார்நூலாசிரியர். ஒவ்வொருகேள்வியும்உண்மைதோய்ந்தசவுக்கடி. நாவலின்மையமாகஇதைஉணரலாம்.
சந்தேகமேஇல்லாமல்பரவலானகவனம்பெறவேண்டியநாவல்புத்துமண்.

புத்துமண் – நாவல்
ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014
பக்கங்கள்; 118

விலை; ரூ. 100.00