சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நடிகை நந்திதா தாஸ்:  ஊறுகாயா , பூவா புயலா
ஓங்கா - ஒடியா  பட அறிமுகம்  : புயலாய் மாறிய சிறுவன்
சுப்ரபாரதிமணியன்





நடிகை நந்திதா தாஸ் தமிழ்த் திரைப்பட உலகத்தைப் பொருத்த அளவில் ஊறுகாய். அவ்வப்போது தமிழ்த் திரைப்பட உலகம் அவரை பயன்படுத்திக்கொள்ளும். அவர் ஊறுகாய் அல்ல பூ அல்லது புயல் .பூ ஒன்று புயலானது என்றும் சொல்லலாம்.  நீர்ப்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால், அழகி என்று அவ்வப்போது தமிழில் தோன்றியுள்ளார்.

இந்திய மொழிகளில் பலவற்றில் நடித்து விட்டார். பூ புயலாகி நாசமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு ஒரியப்படத்தில் சமீபத்தில் நடித்திருக்கிறார். ஓங்கா என்ற ஒடியப்படத்தில்.இதில் வரும் ஒரு சிறுவன் வில்லெடுத்து இராமன் அவதாரமாய் நினைத்துப் புயலாகிறான்.

நந்திதா தாஸ் ஆதிவாசிப்பகுதியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை. ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாழக்கை கல்வியைச் சொல்லித் தருபவர் என்று சொல்லலாம். ஒரு பக்கம் மாவேயிச இயக்கத்தினர் அவரை தங்கள் இயக்கத்தில் இழுக்க முயற்சிக்கின்றனர். இராணுவத்தினருக்கோ அவர் உளவாளியா, தீவிரவாத இயக்கத்திற்குத் துணையாக இருப்பவரா என்ற சந்தேகம்.  அந்த ஒடிய மலைப்பகுதியில் பாக்சைட் கனிமத்திற்காக பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்து வெட்டி எடுத்துக் கடத்தப்படுகிறது. அதனால் தீவிர வாதம் காரணம் சொல்லி ஆதிவாசிகள் மிரட்டப்படும் சூழல்.வெளியேற்ற அவ்வப்போது எழும்பும் குரல்கள். ஆணைகள் ஓங்கா என்ற சிறுவன் பக்கத்து நகரத்திற்கு  ராமயாணம் நாடகம் பார்க்கச் செல்கிறான். குழந்தைகளை ஆசிரியை கூட்டிச் சென்ற போது அவன் போகவில்லை. சக மாணவனிடம் வழி கேட்டுப் போகிறான். கொட்டகையில் ஏமாற்றி நுழைந்து நாடகம் பார்த்து வெளியேறுகிறான். உடம்பு நீலமாய் ராமன். சீதையைக் காப்பாற்றுகிறார். இராவணனை வதம் செய்கிறார். ஓங்கா தானும் ராமனாகி விட்டதாக் எண்ணி உடம்பில் நீல நிறத்தை பூசிக்கொண்டு  கிராமத்திற்குத் திரும்புகிறான். ராமனே எல்லாம். பூமி தாய் போன்றது. அதை காப்பாற்ற வேண்டும் என எண்னுகிறான்.ஆனால் அந்த ஆதிவாசி பூமி கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் பல்வேறு நிறுவனங்களால் சூழப்பட்டிருப்பதை அந்த சிறுவன் அறிய மாட்டான்.அதற்குள் கிராமமே களேபரப்பட்டுப் போயிருக்கிறது.ஓங்காவை காணவில்லை என்று அவ்ன் பெற்றோர் தேடுகின்றனர்.ஆசிரியை இராணுவத்தால் கட்த்தப்பட்டு தீவிரவாதிகளுக்கு உளவாளியா, மணவர்களுக்குத் தீவிரவாதத்தைக் கற்றுக் கொடுக்கிறாயா என்று கேட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள்.தப்பி வருபவள்  சாவு நிலைக்குத் தள்ளப்படுகிறாள், ஆசிரியை கடத்தப்பட்ட்து போன்று ஒவ்வொரு ஆதிவாசிக்கும் நேரலாம் என்று மாவோயிஸ்டுகள் எழுச்சி பெறச் செய்கிறார்கள்.மாவோ கொரிலாக்கள் அக்கிராமத்திற்கு வரும் இராணுவத்துடன் சண்டை போட பலர் செத்து விழுகிறார்கள். ராமனாகத் திரும்பி வரும் ஓங்கா இந்தப் போரைக் காண்கிறான். அவனின் வில்லும் அம்பும் தன் ஆதிவாசி உறவுகளைக் காகும் என்று எண்ணுகிறான். ஆதிவாசி மக்களின் ஒரியாவும், இராணுவத்தினரின் இந்தியுமாக  அப்பகுதி மொழிகளால் பிரிக்கப்பட்டிருப்பதை இப்படம் காட்டுகிறது. அந்த இரு மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தயாரித்திருப்பவர்  மறைந்த ஓவியர் எம் எப் .உசேனின் பேத்தி .மாவோயிசத் தலைவராக  நடித்திருப்பவர் சீமா பிஸ்வாஸ்.
நந்திதா தாசின் அப்பா ஜதீன் தாஸ் ஒரு முக்கிய ஓவியர். டார்க் ஈஸ் பியூட்டிப்புல் என்ற சிகப்புத்தோல் கலாச்சாரத்திற்கெதிரான ஒரு அமைப்பில் நந்திதா சமீபகாலமாய் ஆர்வம் கொண்டுள்ளார். பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பு, பாலீன ரீதியான வேறுபாடு, இனவாதப் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அவரின் செயல்பாடுகளுக்காக யேல் பெல்லோ விருது அவருக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டது. மோடி ஒரு ஹிட்லரே என்ற அவரின் விமர்சனத்திற்காய் கடுமையாய் விமர்சிக்கப்பபட்டவர் நந்திதா தாஸ். பூ எப்போதும் சமூக நடவடிக்கைகளில் புயலாகி வருவதை ஆதிவாசிகளுக்கான் கல்வி தரும் ஆசிரியை பாத்திரத்தில் நடித்து வெளிபடுத்தியிருக்கிறார் நந்திதா தாஸ். 

நடிகை நந்திதா தாஸ்:  ஊறுகாயா , பூவா புயலா. ஒரு வெடிகுண்டாய் இருந்து கொண்டே இருக்கிறார் அவர்.