புத்து மண்ணும் ஜெயகாந்தனும்
------------------------------------------------------
” புத்து மண்
“ என் நாவல் பற்றி ஆயிஷா இரா நடராசன்(
புத்தகம் பேசுது) ஏப்ரல் இதழில்: படித்ததில் பிடித்தது 50 க்கு 50 பகுதியில்......
தொடர்ந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
குறித்த விவாதத்தைத் தந்து களமாக்கி கொண்ட சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் அவ்வாறான
ஒரு மனிதரின் குடும்ப வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம் அவரை மரியாதை இழந்த ஒருவராக்கி ‘ பிழைக்கத்
தெரியாதவராக’ தனிமைப்படுத்தி அவரது வாழ்வின் அர்த்தத்தைப் பாழாக்கும்
ஆபத்தைஎழுதிச் செல்கிறார்.சமூகத்தினரின் எந்த் ஆங்கீகாரமும் அற்ற ஒரு சூழலியப்
போராளி பற்றிய சித்தரிப்பு வாசிக்கும் போது கொடுத்த மன வலி நீங்க நாட்களாகும்.
( புத்து மண்-
சுப்ரபாரதிமணியன் நாவல் ரூ100 உயிர்மை பதிப்பகம், சென்னை )
ஜெயகாந்தன்
முரண்பாடுகளின் மூட்டை : தி
ஹிந்து தமிழ் பத்திரிக்கையில் ... காசு. வேலாயுதம்
---------------------------------------------------------------
திருப்பூரில் இரவு
இலக்கிய கூட்டம். அதில், சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ”நாவலை வெளியிட்டு ஜெயகாந்தன் பேசினார்.
. சாயக்கழிவுகளால் நொய்யல் நதி நஞ்சானது.
அதற்கு காரணமான தொழிற்சாலைகளை, தொழில்
முதலாளிகளை பற்றி கடுமையாக சாடினர் கூட்டத்தில் பேசியவர்கள்.
ஜெயகாந்தன்
பேசுகையில் பேச்சின் நிலை தலைகீழானது. ” 'சாயம் விஷம். வாஸ்தவம். ஆனால் சாயம்
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. வளர்ச்சியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் வளர்ச்சி
இல்லாவிட்டால் நாம் இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க முடியுமா? நமக்கு இப்படியொரு பொருளாதார வளர்ச்சி
வந்திருக்க முடியுமா? எனவே
கண்டுபிடிப்புகளை, வளர்ச்சிகளை
சாடாதீர்கள். வளர்ச்சியின் வளர்ச்சியினால் வரும் எதிர்வினைகளுக்கு மாற்று வினைகளை
எதிர்ப்பதற்கு பதில் அந்த நேரத்தை மாற்று விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க உதவுங்கள்.
அதைவிட்டு விட்டு விஞ்ஞானத்தையே கூடாது என்பதும், மறுப்பதும் எப்படி சரியாகும்?'”