கனவு இலக்கிய வட்டம்
புத்தக வெளியீடு , ஜெயகாந்தனுக்கு அஞ்சலி
கனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கிய
நிகழ்ச்சி வியாழன் அன்று மாலை பாண்டியன் நகர் அம்மா உணவகம் அருகில் உள்ள சக்தி
பில்டிங்கில் நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் கலாமணி கணேசன் தலைமை
தாங்கினார்.
புதனன்று மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு
அஞ்சலி செலுத்தப்பட்டு அவரின் கலை இலக்கியப் படைப்புகள் நினைவு கூறப்பட்டன.
எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் ‘’ என்ற நாவலை ” முயற்சி” அமைப்பின்
செயலாளரும், ஆங்கிலத்துறைப் பேராசிரியருமான
( ஓய்வு )பரமசிவம் வெளியிட தமிழ்
மூதறிஞர் சொக்கலிங்கனார் பெற்றுக்கொண்டார்.கவிஞர் ஜோதி நூலை அறிமுகப்படுத்திப்
பேசினார்.
திருப்பூரை மையமாகக் கொண்டது இந்த நாவல் ( சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் “ நாவல் - மறுபதிப்பு ). விலை ரூ 120/
எசிபிஎச் வெளியீடு, சென்னை ) இரு வேறு நிலைகளில் வாழும் இரு பெண்களின்
உலகங்களைப் பற்றிச் சொல்வது.
பேச்சில்:
பேராசிரியர்
பரமசிவம்:
திருப்பூர் பற்றிய படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும். ஒரு தொழில் நகரத்தைச்
சார்ந்த பன்முகங்களை இது போன்ற படைப்புகளே சரியாகக் காட்ட முடியும்.
கவிஞர் ஜோதி: பெண்கள்
மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச்
சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை
வாசிப்பதன் மூலம், மாற்றுச்சிந்தனைகளை
உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.
சுப்ரபாரதிமணியன்: உலகமயமாக்கல் பெண்களையும் குழந்தைகளையும்
வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறவர்களாகவும்,
பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும் மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை
வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள் பகுத்தறிவின் துணை
கொண்டே மாற்றியமைக்க முடியும் .சமரசமற்ற
சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.
சக்தி மகளிர் அறக்கட்டளையின் செயலாளர் விஜயா
கனகராஜ் நன்றி கூறினார். திருமுருகன் பூண்டி சைவசித்தாந்த மடம்சார்ந்த , சக்தி
மகளிர் குழுக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பெற்றனர்.
செய்தி:
கனவு
இலக்கிய வட்டத்தின் சார்பில் : கா. ஜோதி