சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 11 ஏப்ரல், 2015

புத்துமண் – நாவல்
ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்
------------------------------------------------------------------------------------------------------------
குளத்துமீனாகவிரும்புமாபாத்திரத்துமீன்?
ஜெயந்தி சங்கர்
-----------------------------------------------------------------------


பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல.
முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (அ.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (ப.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (ப.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர்.
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோத‌ புதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாக‌ வாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான்.
சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பல‌உவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(ப.30) 'வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்' என்கிறார். 'துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது' (ப.27) என்ற‌இன்னோர்உவமையையும்குறிப்பிடலாம்.
'மேலேயிருந்துவெளிச்சம்பரப்பிஅதுகீழேவருவதற்குள்களைத்துப்போய்விடுகிறமாதிரிவெளிச்சம்பலகீனமாகவேஇருந்தது' (ப.14) என்பதுபோலமிகச்சிலஇடங்களில்உவமையாகஇல்லாமல்உருவகமாகவேஆக்கியிருந்தால்அழகுகூடியிருக்கும்எனப்பட்டது.
ஒவ்வோர்அத்தியாயத்தின்தொடக்கத்திலும்வரும்சின்னஞ்சிறுதுணுக்குகவித்துவத்துடன்சின்னஞ்சிறுகதையாகநாவலுக்கு, அதுஎடுத்தாளும்சூழியலுக்குப்பொறுத்தமாகஇருக்கின்றன. பிரதிக்குசுவைகூட்டுவதுடன்நகரமையமாக்கல்கொண்டுவரும்அபத்தங்களை, அவலங்களைபுட்டுப்புட்டுவைத்துசிந்திக்கவைக்கின்றன. ஒடியன்லட்சுமணன்எழுதியஇருளர்கவிதைவரிகளாம்அவை. அந்நூலை, அந்தப்படைப்பாளியின்ஆக்கங்களைச்சுவைக்கும்ஆர்வத்தைத்தூண்டுகின்றன.அழகியபடிமமாகும்ஒற்றைஉதாரணம் ‍இதோ(ப.27) -
‘ஆட்டுக்குநல்லதீனிகிடைக்கவேண்டும்என்பதற்காகலஞ்சம்கொடுத்துரிசர்வ்காட்டில்மேய்க்கிறாள்கோசி. தான்நன்றாகமேய்ந்தாலும்அவளுக்குஎன்னலாபம்என்றுகேட்கிறதுஆடு. உனக்கும்இல்லாமல்காட்டுநரிக்கும்இல்லாமல்ரேஞ்சர்வீட்டுக்குவிருந்தாகப்போகிறேன். செம்போத்துகுறுக்கேபறக்கும்கெட்டசகுனமும்தெரிகிறது. எனவே, 'கோசிஎன்னைக்கொன்றுதின்னுஇப்பவே' என்கிறதுஅது.’
உலகம்நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவேஅதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள்திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில்சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சிவேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்குதிருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்என்றுபலவற்றைச்சொல்லிச்செல்கிறார்நூலாசிரியர்.சுப்ரபாரதிமணியன்இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமேதனிநாவலாகவிரியக்கூடியது.
வெ. ஜீவானந்தம்எழுதியஅசலானஒருகடிதத்தையும்இந்தநாவலில்நூலாசியர்எடுத்தாண்டிருக்கிறார். அதுநாவலின்கருப்பொருளுக்குவலுச்சேர்ப்பதாகஅமைகிறது.இதில்அசுரவளர்ச்சிஏற்படுத்தும்பக்க, பின்விளைவுகளைவிளக்கிபல்வேறுகேள்விகளைஎழுப்புகிறார்நூலாசிரியர். ஒவ்வொருகேள்வியும்உண்மைதோய்ந்தசவுக்கடி. நாவலின்மையமாகஇதைஉணரலாம்.
சந்தேகமேஇல்லாமல்பரவலானகவனம்பெறவேண்டியநாவல்புத்துமண்.

புத்துமண் – நாவல்
ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014
பக்கங்கள்; 118

விலை; ரூ. 100.00
நாமும் கொத்தடிமைகள்தான்: சுப்ரபாரதிமணியன்  நாவல்

கோவை ஞானி


நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும்.
ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
பிறந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது/கூடாது. நிகழ்காலத்தை எப்படியோ நகர்த்தி ஆகவேண்டும். திருமணத்திற்கு வழி இல்லை என்றால் உடல் தினவை எப்படித் தீர்த்துக்கொள்ள முடியும். சோரம் போக வேண்டும். இதில் ஆண்களுக்கு இருக்கிற சில வாய்ப்புகளும், வசதிகளும் பெண்களுக்கு இல்லை. பெண்கள துயரப்பட வேண்டும். கருக்கலைப்பு என்பது எளிதான காரியம் இல்லை. எத்தனையோ சங்கடங்களுக்கிடையே செய்தாக வேண்டும். சின்னவயதில் படித்த கல்வி இப்பொழுது கை கொடுப்பது இல்லை. பெரிய படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும். தன்மானத்தைக் காத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் இன்றைய கூலி, உழைப்பு என்பது கொத்தடிமைத் தொழிலுக்கு மேம்பட்டதாக இல்லை. தன் வயிற்றைக் கழுவிக் கொள்ள, தன்னைச் சார்ந்தவர்களுக்கு 2 வேளை உணவாவது இட, இன்னொருவருக்கு கொத்தடிமைத் தொழில் செய்தாக வேண்டும். குடிநீர், சுகாதாரம் முதலிய வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத அல்லது குறைந்த அளவுக்கே இருக்கிற கொட்டடிகளில்தான் குடியிருந்தாக வேண்டும். பக்கத்தில் எங்காவது நூலகம் இருந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு கொஞ்சகாலம் அலைந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு, சிந்திப்பதற்கு, வெளியிடுவதற்கு இங்கு என்ன வாய்ப்புகள் கிடைத்துவிடும். கொஞ்சம் கவிதைகள் எழுதி, தானே வாசித்து மகிழலாம். நண்பர்கள் சிலரோடு வாசித்து மகிழலாம். மீறி மீறிப் போனால் ஒரு சிற்றிதழ் நடத்தலாம். அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். தன்னைக் கவிஞன் என்று கதாசிரியன் என்று சொல்லிக் கொள்ளலாம். தன்னைத் தானே இப்படி விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனபிறகு இதுவும் சாத்தியமில்லை.
சுருக்கமாகச் சொல்வது என்றால் இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார். கோவை போன்ற நகரங்களில் உள்ள பெரிய பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில 10, 15 கிலோமீட்டர் தள்ளி புதிய பஞ்சாலைகள் தொடர்ந்து எழுகின்றன. பஞ்சாலைகளோடு சேர்ந்து வரிசைகளாக கொட்டகைகள். சுமார் 20/30 அறைகள் கொண்ட கொட்டகைகள். ஒரு கொட்டகையில் ஒரு குடும்பம் தங்கலாம். கொட்டகை அளவு  14/10க்கு அடி பொதுவான கழிப்பறை. தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீர் வண்ணக் கலவையில் மாற தொலைவிலிருந்து நீர் கொண்டுவந்து விற்கிறார்கள். குடம் ஒரு ரூபாய். 8 மணி நேர வேலை என்ற கட்டுப்பாடு இப்போது இல்லை. முடிந்தால் 12/16 மணிநேரம் உழைக்க வேண்டும். பெண்களுக்கும் இரவு வேலை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வரலாம். இளம் பெண்களுக்கு திருமணத்திட்டம். 5 ஆண்டு தொடர்ந்து வேலை செய்தால் 5ம் ஆண்டின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் கிடைக்கும். அதுவரை நாள் ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் கூலி. அதற்குள் எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாது. யாராவது வாங்கி வைத்திருந்தால் அந்த அறைப் பெண்ணின் கற்பு பற்றி கேள்வி எழும். FM ரேடியோ வைத்துக்கொள்ளலாம். பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலை பார்த்தவர்களில் VRS பெற்றுக்கொண்டு கிடைத்த பணத்தை எப்படி எல்லாமோ செலவு செய்த பிறகு இந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வரலாம். தினக்கூலி மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும். தொழிலாளர் பிரிவு, தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இந்த சிறிய நாவலில் ஆசிரியர் சொல்கிறார். இத்தகைய நம் காலத்து வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஆசிரியரை வெகுவாகப் பாராட்டலாம். திருப்பூர் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் சூழ்ந்த எந்த ஒரு நகரத்திலும் தொழிற்சாலைக் கழிவுகளால் எத்தனையோ வடிவங்களில் சூழல் சீர்கேடு அதிகரித்து வரகிறது. புதியவகை நோய்களால் எல்லோரும் தாக்கப்படுகிறார்கள். திருமணத் திட்டத்தில், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு உறுதி இல்லை. அப்படியே கிடைத்தாலும் திருமண வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலம் இந்தப் பெண்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு இவர்கள் உடல்நலம் சீர்கெட்டுவிடுகிறது. 30 வயதிற்குள் இவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. தாயாகும் பெருமை இவர்களுக்கு இல்லை. இப்படி ஒரு அவலம் நம் காலத்திற்குரிய அவலம். இந்து மதம் பற்றி எவ்வளவோ பேசுகிறார்கள். புதிய கோயில்கள், கடவுள்கள் உற்பத்தி ஆகிறார்கள். புதிய கட்சிகளும், தொடர்ந்து உற்பத்தியாகின்றன. இந்தியா 2020ல் வல்லரசு ஆகிவிடலாம். யார் யாரோ காணும் வல்லரசு கனவுக்காக இவர்கள் தம் வாழ்வை இழந்த நொந்து சாக வேண்டும். இத்தகைய மக்கள் இந்தியாவில் எத்தனை கோடி பேர் இருப்பார்கள். இவர்களின் தொகை 50/60 கோடிகளுக்கு குறைவாக இருக்க முடியாது. இவர்கள் மூலம் எந்த இந்தியா ஒளிரமுடியும். இப்படி ஒர சோகத்தை இந்த நாவல் நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த சோகத்திலிருந்து நம்மால் மீள முடியாது. இந்த சோகத்தோடுதான் நாமும் வாழ்ந்தாக வேண்டும். இந்த சோகத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய முடியுமா? ஏதாவது செய்யத்தான் வேண்டும் படித்து சுவைப்பதோடு நாம் இருந்துவிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். இந்த மனிதர்களை இப்படி அழிவில் ஆழ்த்துவதில் நமக்குள்ள பங்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமக்கான நல்ல ஆடைகளை மட்டுமா இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
இதன் பின் நவீனத்துவ வடிவம் தேவைதானா?
தமிழ் நால்களில் காலந்தோறும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த போதிலும், 80க்கு பிறகு பின் நவீனத்துவத்தின் வருகையோடு தீவிரமான சோதனை முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. நம் கால வாழ்வுக்குள் வந்து இருக்கிற நெருக்கடிகள். தகர்வுகள் முதலியவற்றை நுட்பமாக வெளிப்படுத்தும் முறையில் பின் நவீனத்துவம் நாவல் வடிவத்திலும் தகர்வுகள் முதலியவற்றை உள்ளடக்கிய சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தி உள்ளது. இத்தகைய போக்கின் தேவையை நாம் மறுப்பதற்கு இல்லை. இத்தகைய போக்கு ஒன்றுதான் தமிழ் நாவலுக்கு ஒரே வடிவமாக இருக்கமுடியும் என்பதையும் நம்மால் ஏற்க முடியவில்லை. மனிதனுக்குள் ஏற்பட்டுவரும் தகர்வை சித்திரிப்பதற்காக நாவல் வடிவத்தின் உள்ளும் தகர்வுதான் தேவை என்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. வாழ்க்கையில் மையம் அல்லது முழுமை இல்லைஎன்ற வாய்ப்பாட்டை வைத்து எதார்த்தவாதம் என்ற வடிவை முற்றாக ஒதுக்க வேண்டும் என்பதும் உண்மை இல்லை. நெருக்கடிகளும் தகர்வுகளும் கூட வாழ்வின் எதார்த்தங்கள் ஆகிவிடுகின்றன. எதார்த்தங்களைச் சித்திரிக்க படைப்பின் வடிவத்தை குழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் நவீனத்துவ சித்திரிப்புகள் என்பன தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் கவர்ச்சியாகப் பேசப்பட்டு வருவதில் இருந்து படைப்பாளிகள் தப்ப முடியவில்லை. சுப்ரபாரதிமணியனும் 'சாயத்திரை' நாவல் தொடங்கி இத்தகைய எழுத்து முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
'தேநீர் இடைவேளை' நாவலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி என்பதில் அய்யமில்லை. கோவை முதலிய பெரிய நகரங்களில் இருந்துவந்த பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில் சிறிய சிறிய பஞ்சாலைகள் தோன்றுகின்றன. உலகமயமாதல் என்ற போக்கின் விளைவாக இங்கெல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டன. கொட்டடிகளில் திருமணத்திட்டம் முதலிய பெயர்களில் தெற்கிலிருந்து வந்த பெண்கள, இளைஞர்கள் குடியேற்றப்படுகிறார்கள். குறைந்த கூலி, வசதிக் குறைவுகள் முதலியவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் தொழிற்சங்கம் ஏற்படுத்த முடியாது. 12 மணிநேரம் கட்டாய வேலை. பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட/நீங்கிய தொழிலாளிகள் இங்கு தினக்கூலிக்கு வந்து சேருகிறார்கள். இவர்களும் கொட்டடிகளில் அடைபடுகிறார்கள். கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும்தான் கொத்தடிமைகள் என்ற உணர்வைப் பெற முடியும். முதலாளிகளுக்குச் சேவகம் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம். நாளுக்கு நாள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராடுவதால் பயன் இல்லை. ரங்கநாதன் போல நாம் இல்லை என்றாலும் ரங்கநாதனின் அவலத்திற்குள் நாமும் இல்லாமல் இல்லை. அந்தோணி ராஜ் மாதிரி நாமும் ஷேக்ஸ்பியர் என்று மார்க்சியம் என்றும் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம். உலகம் நம்மிடம் இருந்தும் பறிபோய்க் கொண்டிருக்கிறது. செந்தில் மாதிரி நாமும் திண்டாட்டத்தோடுதான் வாழ்கிறோம். இப்படி எல்லாம் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக் கொண்டு இருக்கிறோம். சீரழிவுகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த முறையை நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் சுப்ரபாரதிமணியன் நமக்கு நன்மை செய்திருக்கிறார். நாம் அவரைப் பாராட்டலாம். ஒருவரையொருவர் பாராட்டுவதன் மூலம் நமக்குள் நிம்மதி ஏற்பட்டுவிடுமா? அப்படி ஒன்றும் ஏற்படாது.
இனி இந்த நாவலின் வடிவம் பற்றிப் பேசலாம். நாவலின் பக்க அளவு 75 மட்டும். 3 பகுதிகள். முதல் பகுதியில் 10 கடிதங்கள். 2 வது பகுதி அந்தோணிராஜ் டைரி குறிப்புகள்: 3வது பகுதி செந்திலின் டைரி குறிப்புகள். நம் காலத்தில் நமக்குள் ஏற்பட்டு இருக்கிற அவலத்தைச் சொல்வதற்கு இந்த நாவலின் இத்தகைய வடிவம் எப்படி பயன்படுகிறது. முதற்பகுதியில் உள்ள 10 கடிதங்களில் இடம் பெறுபவர்களின் வாழ்க்கையை நாவலின் மற்றப் பகுதிகளிலும் எதிர்பார்க்கிறோம். முதற் பகுதியில் இடம் பெற்ற ரங்கநாதன் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் தலைகாட்டுகிறார். முதற்பகுதியில் புத்தகங்கள் படிப்பதற்காக தேடி அலையும் செந்தில் 3வது பகுதியில் டைரி எழுதுகிறார். அந்தோணிராஜ். செந்தில் ஆகியோர் டைரிகளில் அவரவர்களின் சிந்தனைகள் தெளிவாகத் தரப்படுகின்றன. முதற்பகுதியில் இடம்பெற்ற நெருக்கடி மிகுந்த வாழ்வியல் 2/3ம் பகுதிகளில் அனேகமாக இல்லை. நாவல் அல்லது எந்த ஒரு படைப்புக்கும் மனித வாழ்வியல் மற்றும் இதன் நெருக்கடிகள்தான் சாரமாக அமைய முடியும். நாம் இப்படிக் கேட்கலாம். இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி இ.எம்.எஸ்யைப்பற்றி, மார்க்சைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் என்ற வடிவில் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படிக் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா? மல்லிகா முதலியவர்களின் வாழ்வைப்பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அனேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான். கொட்டடிகளை விட்டு வெளியில் சென்றபிறகு நோய் நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள். இந்தக் கதை ஏன் இன்னும் தொடர்ந்து சொல்லக்கூடாது? செந்திலுக்கோ, ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை. நாம் புரிந்து கொள்கிறோம். யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி வடிவத்தைச் சிதைப்பதன்மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? இப்படியெல்லாம் வாசகனைத் திணறடிப்பதன் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார்? ஒருவேளை நமக்குள்ளும் நாம் சிதைந்து கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதுதான் நாவலாசிரியரின் நோக்கம் என்றால் நம்மைப்போன்ற மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என்ற நம்மவரின் வாழ்க்கையை இந்த வாழ்க்கைக்குள் உள்ள நெருக்கடிகள், தகர்வுகள் பற்றிச் சித்திரிப்பதன் மூலம் நமக்குள்ளும் கூடுதலான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நம்மைக்காட்டிலும் வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் அவலங்களைச் சித்திரிப்பதன் மூலம் நம்மை எந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒருவேளை சுப்ரபாரதிமணியன் தனக்குள் இந்த அதிர்வுகளை இன்னும் போதுமான அளவுக்கு உணரவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வீடு தேடி வரும் சினிமா இயக்கம் அறிமுகக் கூட்டம்
------------------------------------------------------------------------
வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தை சென்னை பரிக்‌ஷா ஞாநி துவங்கியுள்ளார். இதன் அறிமுகக் கூட்டம் பாண்டியன் நகர் சக்தி பில்டிங்கில் புதன் அன்று மாலை நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் திருமதி கலாமணி கணேசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வீடு தேடி வரும் சினிமா இயக்கம் பற்றி அறிமுகப்படுத்திப் பேசினார். அதன் முதல் வெளியீடான                               ” விசாரணை’ என்ற முழு நீள நாடகம் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.கலாமணி பெற்றுக் கொண்டார்.


இத்திட்டத்தின் கீழ் இனி தொடர்ந்து திரைப்டங்களும் குறும்படங்களும் குறுந்தகடுகளாக வெளியிட சென்னை பரிக்‌ஷா ஞாநியின் “ கோலம் அமைப்பு ”  திட்டமிட்டுள்ளது. நம் வாழ்க்கையை அர்த்தமாக்கும் பலகதைகள் படமாக்கப்பட வேண்டும்.. இது வணிகச் சூழலை மீறி நல்ல படங்கள் வர வழி வகுக்கும்.வணிக நோக்கில் எடுத்து வெளியிட முடியாமல் இருக்கும் திரைப்படங்கள்  இத்திட்டத்தில் வெளியிடப்படும் . கூட்டத்தில் கவிஞர் ஜோதி, பேச்சாளர் சொக்கலிங்கனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



        புத்துமண் – நாவல்
               ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்


மணியன் – பகாசுரர்களின் சனியன்

---------------------------------------------------
“அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த “புத்துமண்” என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. “புத்துமண்” அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக்” என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது “புத்துமண்” நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் முன்பு மணியன்களாக இருந்த பலபேர், நாளடைவிலோ அல்லது வெகு விரைவாகவோ “MONEYயன்” களாக மாறிவிடுவதுதான் காலக்கொடுமை. உண்மையில் இன்று மணியன்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு பெருமிதத்தையும், MONEYயன்” களாக மாறி உலா வந்துகொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் இந்த “புத்துமண்” இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
“நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பல நாவல்கள் படிக்கின்றோம், பாதிப்படைகின்றோம், சிலாகிக்கின்றோம், பரவசடைகின்றோம். ஆனால் உள்ளபடியே மனதளவிலும் உடலளவிலும் பதற்றப்பட வைக்கின்ற நாவல்களும் இருக்கின்றன. அத்தகைய பதற்றத்தை இந்தச் சிறு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் சுப்ரபாரதிமணியனின் வெற்றி, மகத்தான வெற்றி.
“எல்லாம் என் ஆசிரியர்
அனைவரும் என் குருநாதர்
பாரில் உள்ளதெல்லாம் எனக்குப்
பாடம் சொல்கிறதே…”
“புத்துமண்” நாவலும் பாடம் சொல்கிறது. இந்த மண் ஊர்தோறும் கொண்டு செல்லப்பட வேண்டிய சத்து மண்.
-தேனி விசாகன்-
புத்துமண் – நாவல்
ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014
பக்கங்கள்; 118
விலை; ரூ. 100.00


மொய்    சுப்ரபாரதிமணியன் சிறுகதை 


” என்ன  திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க”
“ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “
கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை மூக்கிலிருந்து தற்காத்துக் கொண்டார்   மணியன். .தனலட்சுமி பூச்சி பூச்சியாய் நெளியும் கணினி எழுத்துக்களைப் பார்த்து  நகர்ந்து விட்டாள்..அவளுக்கும்  மூக்குக்கண்ணாடிதான்  தெளிவு தரும்.
“ அதிகாரம் இருந்துச்சு திருடின்னீங்க.. இதிலே முடியுமா.. “
“ என்ன பெரிய அதிகாரம் போ... இப்போ இங்க இதிலெ சகஜம்ன்னு சொல்றாங்க. இங்க அதுக்கெல்லா புது டெக்னாலஜியெல்லா தேவை.” . கணினியின் மானிட்டர் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. மின்னஞ்சல்கள் வரிவரியாய் நின்றிருந்தன..


                            * *
   தபால்காரர் என்ற அதிகாரத்திலேயே கொஞ்சம் தபால்களை பிரித்துப் பார்த்திருக்கிறார் மணியன். படித்துமிருக்கிறார். சுவாரஸ்யமாய் தென்பட்டக் கடிதங்களை .பின்தொடர்ந்துமிருக்கிறார். செகடந்தாளி கிராமத்திற்கு அதிகபட்சமாய் நாற்பது தபால் வரும். எளச்சிபாளையம் தபால்காரர் விடூமுறை என்றால் இன்னும் இருபது கூடுதலாகும்.தொடக்கப் பள்ளி, பஞ்சாயத்துத் தலைவர் என்று முக்கியமானவை ஒற்றை இலக்கத்துள்  இருக்கும். அதெல்லாம் கவர்மெண்ட் சமாச்சாரங்கள். சுவாரஸ்மிருக்காது.அகவிலைப்படி உயர்வு, அரசு சாலை  போட ஒதுக்கும் தொகை, கழிப்பறை கட்டாமல் இருக்கக் காரணங்கள் கேட்டு கடிதம், புது தெரு விளக்கு ஏன்  இருக்க வேண்டும் என்ற நிபந்தனை என்றிருக்கும். 

  உமா பெயரில் வந்த கடிதங்களில் சுவாரஸ்யம் இருந்ததைக் கண்டு கொண்டார். எதேச்சையாய் கடிதக் கவர் ஒன்று  ஒட்டப்படாமல் இருந்ததை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவசரத்தில் ஒட்டாமல் விட்டிருப்பார்கள் போல. சகஜமான நலம் விசாரிப்புதான். எதிர் தரப்பில்  வேலை அமைந்து விட்ட சந்தோசத்தை அக்கடிதம் சொன்னது. உமா பட்டப்படிப்பு, ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு வீட்டிலிருக்கிறவள். அவள் அப்பாவிற்கு நிலம், விவசாயம் , தென்னந்தோப்பு கொஞ்சம் என்று உண்டு.
 படித்து விட்டுக் கடிதத்தை ஒட்டி பத்திரமாக  உமாவிடம் சேர்த்திருந்தார்.
“ என்னமா  லெட்டர் “
‘” டீச்சர் டிரையிங் பேட்ச் மேட். “
“ பொண்ணூதானே.”
“ ஆமாப்பா. மேரி ஏஞ்சல்.. “
“ கிறிஸ்துவங்கதா நெறைய படிப்பாங்க. டீச்சர்கள்ல அவங்கதா அதிகம் “
   ஆனால் அக்கடிதம் எழுதியது  ஏஞ்சல் இல்லை. தேவதை இல்லை. தேவன்தான். பெயரும் கூட தேவன். தேவதைக்கு தேவைப்பட்ட தேவன். அப்பாவின் கேள்விக்கு  மேரி ஏஞ்சல் என்று பொய்யாய் பெயர் சொன்னது காதில் விழுந்தது மணியனுக்கு., அதுவே  அதன் பின் உமா பெயருக்கு வந்த கடிதங்களை சற்றே உற்று நோக்க வைத்தது. பிரித்தும் பார்க்கவும், படிக்கவும் வைத்தது.
   கொஞ்சம் எச்சிலைத் தொட்டு இழுத்தால் பிரிந்து விட்டன தேவனின் கடிதங்கள். அல்லது கொஞ்சம் நீராவியில் பிடித்தால் கழண்டு கொண்டன. மறுபடியும்  அரிசி சோற்றுப் பருக்கையையோ , பசையையோ வைத்து சுலபமாக ஒட்டி  நல்ல போஸ்ட் மேனாக கடிதங்களை கொண்டு சேர்த்தார்.
     பின்னால் வந்த தேவன் கடிதங்களில் சுவாரஸ்யங்கள் கூடிக்கொண்டே இருந்தன. தேவனும் உமாவும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். தேவனுக்கு வேலை கிடைத்து விட்டது. அவளும் ஏதாவது   வேலை  கிடைத்தால் போய் விடுவாள். பட்டிக்காடு ரொம்பவும் போர் அடிக்கிறது.நூலகத்திற்கு கூட 5 கி.மீ தாண்டி கருமத்தாம்பட்டிதான் போகவேண்டும். அண்ணன்  வெள்ளிகிழமை சோமனூர் மீனாம்பிகா திரையரங்கில் படம் மாற்றுகிற நாளில் சோமனூர் போகிற போது தினத்தந்தி வாங்கி வருவான். மற்றபடி அவன் வாரப்பத்திரிக்கைக்கு மாறுவானா என்று உமா காத்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சி, கைபேசி  அதிகம் வராத  காலம். பஞ்சாயத்துத் தலைவர்  வீட்டில்தான்  தரை வழி தொலை பேசி கூட  இருந்தது..
     கடிதங்களில் உமா பெரும்பாலும் தன் தனிமையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.தேவன் நகர வாழக்கையின் சுவாரஸ்யங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தான்.    ” கல்யாணராமன் “ படத்தில் கமலஹாசனின் பல்லு ரோல் சிறப்பாக இருந்ததையும் சொல்லியிருந்தான் ஒரு கடிதத்தில். “ பதினாறு வயதினிலே” இன்னொரு தரம் பார்ப்பதற்க்கும் கூட சோமனூர் தான் உமா போக வேண்டியிருந்தது,அதுவும் அது வரும் சமயம்தான்.
    மெல்ல மெல்ல காதல் வார்ததைகள் கூடிக் கொண்டு வந்த போதுதான் அந்த அதிர்ச்சித் தகவலை உமா கடிதத்தில் சொன்னாள்: செம்மாண்டாம் பாளையத்தில் தென்னந்தோப்பு வைத்திருப்பவன் தன்ராஜ். பட்டப்படிப்பு படித்தவன்.  குடிகாரன் என்ற பட்டமும் அவனுக்கு இருக்கிறது, தென்னந்தோப்பும், தென்னங்கள்ளும், தன்ராஜிம் பிடிக்கவில்லை அவளுக்கு, பட்டம், ஆசிரியைப் பயிற்சி எல்லாம் வீணானானாலும் பரவாயில்லை  இப்போதே குடிகாரன் என்ற பட்டப் பெயர் உள்ளவனோடு திருமணம் செய்து கொண்டு காலம் தள்ள முடியாது. அவனைத் திருத்துவதும் கஷ்டம். காரணம் அவர்களின் தலைமுறையே குடியில் சம்பந்தப்பட்டது, திருத்த முடியாது என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
   “ நான் என்ன பண்ணட்டும் “ ஒரு கடிதத்தில் தேவன் கேட்டு விட்டான்.
“ அடப்பாவி மனுஷா .மனசே பறிகுடுத்துட்டனே ..புரியலையா .. செரின்னா கூட குடிகாரனுக்கு வாழ்க்கைபடறதிலே விருப்பமில்லே. அவங்க அப்பனே குடிச்சு குடல் கருகி அவங்கம்மாவை விதவையாக்கியவன்தான் “
  கடிதங்கள் தினந்தோறும் என்றானபோது உமாவே பெரும்பாலும் வந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டாள். மணியன் சோமனூரிலிருந்து வரும் கடிதங்களைப் பிரித்து உமாவின் கடிதங்களை தனியே வைத்து விடுவான். தனலட்சுமி இல்லாத நேரம் பார்த்து மாலையில் அவற்றைப் படிப்பான்.” திருட்டு தபால் படிக்கறவனும், திருட்டு சகவாசம் வெச்சிட்டிருக்கறவனும் ஒண்ணுதா “ என்று மறைமுகமாய் ஒருதரம் தனலட்சுமி சொன்னபின் உசாராகி விட்டான்.ஆனாலும் தனலட்சுமிக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
      தேவன் கடைசியில்  நாள் குறித்து விட்டான். “ உன்னாலே முடியாதுன்னு சொன்னப்புறம் நான் கண்ணெ மூடிட்டு இருக்கறது நாம பழகனதுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கு. வெள்ளிக்கிழமை உஙக ஊருக்கு  சாயங்காலம் வர்ற எஸெமெஸ் பஸ்சிலே வந்திருவேன். அது எளச்சிபாளையும் போயிட்டு திரும்பி வர்றப்போ நீயும் ஏறிக்க. வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலுக்கு வர்றதா சொல்லிட்டு வந்திரு. சந்தேகப்படற மாதிரி  இல்லாமெ வெறும் கையோட வா. பாத்துக்கலாம் “.  அந்தக் கடிதம் வெள்ளிக்கிழமை காலையில்தான் வந்திருந்தது, தனலட்சுமி  ஊரில் இல்லாத தைரியத்தில்  உடனே பிரித்துப் படித்தவன் அவசரம் கருதி பசையால் நன்கு ஒட்டி உமாவிடம் உடனே சேர்த்து விட்டான்.
“ இன்னிக்கு தபால் காரர் சீக்கிரம் வந்துட்டாரா அம்மினி “ என்று கேட்டபடி  உமா தகப்பன்  ஒரு மரத்துத் தென்னங்கள்ளுக்காகக் கிளம்பினார். அவருக்கு எளப்பு சீக்கு உண்டு. ஒரு மரத்து  கள்ளை ஒரு மண்டலம் குடித்தால் சரியாகிவிடும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள்.  உமா ரொம்பவும் பதற்றமாகத்தான் இருந்தாள்.
  சாயங்காலம்  எஸெமெஸ் பேருந்து  வந்ததும் கவனித்தார் மணியன்.. தேவன் அழகாகத்தான் இருந்தான். உமாவுக்கு நல்ல  ஜோடி. இருவரும் நல்ல  உயரம்..தேவனைப் பார்த்து  மணியன் சிரித்தார், தேவன் பயந்து போயிருப்பது தெரிந்தது. 
எஸெமெஸ் பேருந்து  எளச்சிபாளையம் போய் விட்டுத் திரும்பியபோது உமா வந்து விட்டாள். அம்மன் கோவில் விபூதி குங்குமம் அவள் நெற்றியில் மினுங்கியது.
சுற்றிலும் பார்த்துக் கொண்டே பேருந்தில் ஏறி  நான்காவது வரிசையில் உமா உட்கார்ந்து கொண்டாள். தேவன் சற்றே பயம் நீங்கியவன் போல் கடைசி வரிசையில் ஒடுங்கி உட்கார்ந்தான். மணியனைப் பார்த்ததும் தேவனின் முகம் இருளடைந்தது.இந்த ஆள் அடிக்கடி தென்படுகிறானே என்ற விசனம்.
  உமாவின் பக்கம் சென்ற மணியன் அவள் கையில் அய்நூறு ரூபாய் நோட்டொன்றை வைத்து அழுத்தினார். ” மகராசியா இரு அம்மா “  மெல்லிய குரலில் சொன்னார். அவள் பயத்தை உள்ளடக்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்க எத்தனித்தவள் பின் தயங்கி மவுனமானாள். தேவன் மணியனின் முகத்தை  இருளுடன் பார்த்தான்   


                                 * * *
“ திருட்டுத்  தபால் இல்லை நிஜ தபால் ஒண்ணு வந்திருக்கு தனம் “
மின்னஞ்சலைப் பார்த்தபடி சொன்னார் மணியன்.
“ நம்ம பையனெ திருட்டுப் பையன்ம்பீங்க . அவனா எழுதியிருக்கான்.”
“ நம்ம பையன் மணி  மணீயானவன்  உமாவோட பையன் எழுதியிருக்கான். அமெரிகாவில கம்யூட்டர் என்சினீயராமா... செகடந்தாளியை வுட்டு பதினஞ்சு ஊர் வேலைக்குன்னு மாறி வந்து வயசான காலத்திலே இங்கிருக்கோம். நம்மள உமா பையன் கண்டுபுடிச்சு இ மெயில் அனுப்பி இருக்கான்”
“ யாரு உமா “
‘ திருட்டுக்கடிதாசில்லே அது மாதிரி சுவாரஸ்யமா இருந்ததில்லேன்னு சொல்வனே .  அந்த உமாவோட பையந்தா.”
“ என்ன திருட்டு கடுதாசி படிச்ச தபால்காரனுக்கு அவன் வந்து  ஒதை குடுக்கப்போறானா “
“ எங்கமாவுக்கு மொய் குடுத்து ஆசீர்வாதம் பண்ணுன  ஒரே ஆள் நீங்கதா.  இங்க அமெரிகாவிலெ ஏதாச்சும்  விசேசம்னா வர்ற நம்ம கொங்கு நாட்டுக்காரங்க கொழந்தைக கிட்ட ஏதாச்சும் குடுக்கறப்பொ இந்தா மொய்ம்பாங்க., எங்க அம்மாவை வாழ்த்தி  மொய் குடுத்த ஒரே ஆள் நீஙகதா. உங்களெ அடுத்த தரம் கோயமுத்தூர்  வர்றப்போ பாக்க வருவேன். போன வாரம் எம்பொண்ணுக்கு பொறந்த நாளன்னிக்குத்தா உஙக மொய் பத்தி அம்மா சொன்னாங்கன்னு  எழுதியிருக்கான். உங்க ஆசிர்வாதம் தா அவங்கள அந்த பட்டிக்காடெ வுட்டுத் துரத்தியிருக்கு. இல்லீன்னா எங்கம்மா என்ன ஆகியிருப்பாங்கன்னு எழுதியிருக்கான் அந்த   அமெரிக்கப்பையன் ..போன் நெம்பர் கேட்டிருக்கான். அவங்கம்மா போன் பண்றன்னு சொன்னாங்களாமா   “
“ உங்க மொய் ஆசிர்வாதம் நல்லாத்தா இருக்கு.”  
     எப்போதோ கேட்டக் குரலை மீண்டும் கேட்க  ஆவலாக இருந்தாள் தனலட்சுமியும்.


புதன், 8 ஏப்ரல், 2015

திருக்குறள் ஞான மடம் தலைவர் திருப்பூர் வருகை

* திருக்குறளில் தாலி பற்றி எதுவும் சொல்லப்படவில்லை
* மலையாளத்தில் அற நூல்கள் இல்லை
* திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்
=========================================================

    கேரளா-  பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்  தலைவர் சிவானந்தர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி திருப்பூர் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோயிலில் 24/3/15 அன்று மாலை நடந்தது. விழாவிற்கு சன்மார்க்க சங்கத் தலைவர் அவினாசிலிங்கம் தலைமை தாங்கினார்.அருள்நிதி முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.டிட்டோனி முத்துச்சாமி, நீறணிபவளக்குன்றன், தொலைபேசி பொறியாளர் பழனிச்சாமி, kavinjar கவிஞர் ஜோதி , வாழ்க வளமுடன் இயக்கத்தினர்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலகத் திருக்குறள் வாழ்வியல் மையம், திருப்பூர் கிளை  இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிலரின் பேச்சிலிருந்து..

கேரளா பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்  தலைவர் சிவானந்தர்:
திருவள்ளுவரை  குருவாகவும் திருக்குறளை வாழ்க்கை நெறியாகவும் ஏற்று வாழும் 30 ஆயிரம் குடும்பங்கள் கேரளாவின் 14 மாவட்டங்களில் 50 பஞ்சாயத்துக்களில் உள்ளன.திருவள்ளுவருக்கு கோவில் கட்டி கும்பிட்டு அவரை 40 ஆண்டுகளாகப் பின்பற்றுகிறோம்.மலையாளம் ஒரு கூட்டு மொழிதான்.மலையாளத்தில் அற நூலகள் இல்லை. சுவாரஸ்யமான நாவல்கள், படைபிலக்கியங்கள் உண்டு. மலையாளத்தில் தாய் மொழி தமிழ். ஆதி மொழி தமிழ். பொதுவான பண்பாட்டைப்பற்றி அறிந்து கொள்ள திருக்குறள் போல் சிறந்த நூல் எதுவுமில்லை.  எனவேதான் திருக்குறள் வாழ்வியல் மொழியாகிறது. வேத காலம் முதல் உடமைப் பொருளாகவே பெண்கள் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் தாய் ஆற்றலை, இறை ஆற்றலை, இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது திருக்குறள்.திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். இதை இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மத்திய அரசை எங்கள் ஞான மடம் வலியுறுத்தி வருகிறது.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்:
எல்லாக் காலத்திற்குமான அற நெறி இலக்கியமாக திருக்குறள் இருக்கிறது. ஆதி காவியம் என்ற அளவில் அது ஒரு இலக்கிய பொக்கிசம். இப்போது தாலி பற்றிய சர்ச்சை தமிழ்ச் சூழலில் விவாதமாகியிருக்கிறது. திருக்குறளில், பழைய இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்புகள் இல்லை.ஆணும்பெண்ணும் அன்பால் இணைந்து வாழும் அன்புலகம் பற்றி பேசுவது திருக்குறள் . அதில் சடங்குகள், சம்பிரதாயங்கள்  பற்றிய வலியுறுத்தல் இல்லை. மொழியின் உட்ச பட்ச தேர்ச்சியோடு எல்லாக் காலத்திற்கும்  பொருத்தமான அற நெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கிற இலக்கியம்தான் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அமர  நூலாகும். 
               உலகத் திருக்குறள் வாழ்வியல் மையம் செயலாளர்  மருத்துவர் தன்மானன் நன்றியுரை வழங்கினார்.

நடிகை நந்திதா தாஸ்: ஊறுகாயா , பூவா புயலா ஓங்கா - ஒடியா பட அறிமுகம் : புயலாய் மாறிய சிறுவன்


சுப்ரபாரதிமணியன்




நடிகை நந்திதா தாஸ் தமிழ்த் திரைப்பட உலகத்தைப் பொருத்த அளவில் ஊறுகாய். அவ்வப்போது தமிழ்த் திரைப்பட உலகம் அவரை பயன்படுத்திக்கொள்ளும். அவர் ஊறுகாய் அல்ல பூ அல்லது புயல் .பூ ஒன்று புயலானது என்றும் சொல்லலாம்.  நீர்ப்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால், அழகி என்று அவ்வப்போது தமிழில் தோன்றியுள்ளார்.

இந்திய மொழிகளில் பலவற்றில் நடித்து விட்டார். பூ புயலாகி நாசமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு ஒரியப்படத்தில் சமீபத்தில் நடித்திருக்கிறார். ஓங்கா என்ற ஒடியப்படத்தில்.இதில் வரும் ஒரு சிறுவன் வில்லெடுத்து இராமன் அவதாரமாய் நினைத்துப் புயலாகிறான்.

நந்திதா தாஸ் ஆதிவாசிப்பகுதியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை. ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாழக்கை கல்வியைச் சொல்லித் தருபவர் என்று சொல்லலாம். ஒரு பக்கம் மாவேயிச இயக்கத்தினர் அவரை தங்கள் இயக்கத்தில் இழுக்க முயற்சிக்கின்றனர். இராணுவத்தினருக்கோ அவர் உளவாளியா, தீவிரவாத இயக்கத்திற்குத் துணையாக இருப்பவரா என்ற சந்தேகம்.  அந்த ஒடிய மலைப்பகுதியில் பாக்சைட் கனிமத்திற்காக பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்து வெட்டி எடுத்துக் கடத்தப்படுகிறது. அதனால் தீவிர வாதம் காரணம் சொல்லி ஆதிவாசிகள் மிரட்டப்படும் சூழல்.வெளியேற்ற அவ்வப்போது எழும்பும் குரல்கள். ஆணைகள் ஓங்கா என்ற சிறுவன் பக்கத்து நகரத்திற்கு  ராமயாணம் நாடகம் பார்க்கச் செல்கிறான். குழந்தைகளை ஆசிரியை கூட்டிச் சென்ற போது அவன் போகவில்லை. சக மாணவனிடம் வழி கேட்டுப் போகிறான். கொட்டகையில் ஏமாற்றி நுழைந்து நாடகம் பார்த்து வெளியேறுகிறான். உடம்பு நீலமாய் ராமன். சீதையைக் காப்பாற்றுகிறார். இராவணனை வதம் செய்கிறார். ஓங்கா தானும் ராமனாகி விட்டதாக் எண்ணி உடம்பில் நீல நிறத்தை பூசிக்கொண்டு  கிராமத்திற்குத் திரும்புகிறான். ராமனே எல்லாம். பூமி தாய் போன்றது. அதை காப்பாற்ற வேண்டும் என எண்னுகிறான்.ஆனால் அந்த ஆதிவாசி பூமி கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் பல்வேறு நிறுவனங்களால் சூழப்பட்டிருப்பதை அந்த சிறுவன் அறிய மாட்டான்.அதற்குள் கிராமமே களேபரப்பட்டுப் போயிருக்கிறது.ஓங்காவை காணவில்லை என்று அவ்ன் பெற்றோர் தேடுகின்றனர்.ஆசிரியை இராணுவத்தால் கட்த்தப்பட்டு தீவிரவாதிகளுக்கு உளவாளியா, மணவர்களுக்குத் தீவிரவாதத்தைக் கற்றுக் கொடுக்கிறாயா என்று கேட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள்.தப்பி வருபவள்  சாவு நிலைக்குத் தள்ளப்படுகிறாள், ஆசிரியை கடத்தப்பட்ட்து போன்று ஒவ்வொரு ஆதிவாசிக்கும் நேரலாம் என்று மாவோயிஸ்டுகள் எழுச்சி பெறச் செய்கிறார்கள்.மாவோ கொரிலாக்கள் அக்கிராமத்திற்கு வரும் இராணுவத்துடன் சண்டை போட பலர் செத்து விழுகிறார்கள். ராமனாகத் திரும்பி வரும் ஓங்கா இந்தப் போரைக் காண்கிறான். அவனின் வில்லும் அம்பும் தன் ஆதிவாசி உறவுகளைக் காகும் என்று எண்ணுகிறான். ஆதிவாசி மக்களின் ஒரியாவும், இராணுவத்தினரின் இந்தியுமாக  அப்பகுதி மொழிகளால் பிரிக்கப்பட்டிருப்பதை இப்படம் காட்டுகிறது. அந்த இரு மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தைத் தயாரித்திருப்பவர்  மறைந்த ஓவியர் எம் எப் .உசேனின் பேத்தி .மாவோயிசத் தலைவராக  நடித்திருப்பவர் சீமா பிஸ்வாஸ்.

நந்திதா தாசின் அப்பா ஜதீன் தாஸ் ஒரு முக்கிய ஓவியர். டார்க் ஈஸ் பியூட்டிப்புல் என்ற சிகப்புத்தோல் கலாச்சாரத்திற்கெதிரான ஒரு அமைப்பில் நந்திதா சமீபகாலமாய் ஆர்வம் கொண்டுள்ளார். பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பு, பாலீன ரீதியான வேறுபாடு, இனவாதப் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அவரின் செயல்பாடுகளுக்காக யேல் பெல்லோ விருது அவருக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டது. மோடி ஒரு ஹிட்லரே என்ற அவரின் விமர்சனத்திற்காய் கடுமையாய் விமர்சிக்கப்பபட்டவர் நந்திதா தாஸ். பூ எப்போதும் சமூக நடவடிக்கைகளில் புயலாகி வருவதை ஆதிவாசிகளுக்கான் கல்வி தரும் ஆசிரியை பாத்திரத்தில் நடித்து வெளிபடுத்தியிருக்கிறார் நந்திதா தாஸ். நடிகை நந்திதா தாஸ்:  ஊறுகாயா , பூவா புயலா. ஒரு வெடிகுண்டாய் இருந்து கொண்டே இருக்கிறார் அவர்.

வெள்ளி, 13 மார்ச், 2015

திருப்பூர் படைப்பாளிகள் தொகுப்பு : இவ்வாண்டு “ டாலர் நகரம் “


அன்புடையீர், வணக்கம்.

 2015 ஏப்ரலில் சித்திரைக்கனியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள் மற்றும் கனவு இலக்கிய வட்டம் இணைந்து வெளியிடும் தொகுப்பு நூலுக்கு தங்களின் மேலான ஆதரவைக் கோருகிறோம். இந்நூல் தரமாக வெளிவர தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் பங்கு பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1. சென்றாண்டுகளில் திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு நூல்கள் ”பருத்திக்காடு ” , “ பருத்தி நகரம் “ ‘’ பனியன் நகரம் ’‘ வெளிவந்ததை நினைவு படுத்துகிறோம்.

கதை, கவிதை, கட்டுரைகள் என்று பன்முகத்தன்மையுடன் இந்நூல் அமைய உள்ளது. இதில் தாங்கள் விளம்பரங்கள் தந்து திருப்பூர் படைப்பாளிகளின் படைப்புச் சிறப்பையும்,மேன்மையையும் வெளிக்கொணர உதவக் கோருகிறோம்....காசோலையை KANAVU, திருப்பூர் என்ற பெயருக்கு அனுப்பலாம்.

2. உங்களின் படைப்புகளை ( கதை/ கவிதைகள்/ கட்டுரை/) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். .........2.... பக்க அளவில் இருக்க வேண்டும். பக்கம்அதிகம் இருந்தால் படைப்பாளியின் கருத்து பெறாமலே சுருக்கப்படும்.எனவே நீங்களே குறிப்பிட்ட பக்க அளவில் அனுப்புவதுநல்லது.மார்ச் 30ம் தேதிக்குள் அனுப்பவும். ஆண்டுதோறும் இத்தொகுப்பு விளம்பரங்கள், நன்கொடைகள், பிரதிகள் விற்பனை மூலமே கொண்டு வரப்படுகிறது . அதற்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

விளம்பரக் கட்டணம்: உள் வர்ணபக்கம்: ரூ 3000*உள்பக்கம் : ரூ 1000.,அரைப்பக்கம்: ரூ 600

அன்புடன், தொடர்புக்கு: சி.ரவி 9994079600 வழக்கறிஞர்சுகன்யா 9043463257* சுப்ரபாரதிமணியன்(9486101003) கவிஞர் ஜோதி 9025526279 . ========================================================================================================

கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.
அவினாசி புத்தகக் கண்காட்சியில் மகாராஜா பெறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவன் கவியரசனின் ஓவியங்களூடன்.தன்னிச்சையாக ஓவியம் கற்றுக் கொண்டிருக்கிறார். நிறைய வரைகிறார், அவற்றை நெகட்டி ஆர்ட் என்கிறார். கேமிரா நெகட்டி மோடில் ஓவியங்களின் வேறு நிறங்கள் காணப்படுகின்றன. இது என்ன புதுசாய்..எப்படியாயினும் வாழ்த்துக்கள்.
அவினாசி புத்தகக் கண்காட்சியில் மகாராஜா பெறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவன்  கவியரசனின் ஓவியங்களூடன்.தன்னிச்சையாக ஓவியம் கற்றுக் கொண்டிருக்கிறார். நிறைய வரைகிறார், அவற்றை நெகட்டி ஆர்ட் என்கிறார். கேமிரா நெகட்டி மோடில்  ஓவியங்களின் வேறு நிறங்கள் காணப்படுகின்றன. இது என்ன புதுசாய்..எப்படியாயினும் வாழ்த்துக்கள்.தலைப்பு